கால் முறிவுக்கு அதிசய சிகிச்சை! கிழவிக்காக திரும்பிப்போன ரயில்!! (Post No.6920)

WRITTEN BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 23 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 10-14 am

Post No. 6920

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

கோவில் செங்கலில் வெளிநாட்டுக்காரர் உருவம் (Post No.6919)

Pictures of Heliodorus Pillar in Madhya Pradesh

WRITTEN BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 23 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 8-13 am

Post No. 6919

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

brick with foreigner’s face, Singauli, M.P,

foreigner face in Thanjavur Temple

மரங்களை நடுவோம்; பூமியைக் காப்போம்! (Post No.6918)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 23 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 7-42 am

Post No. 6918

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்பட்டன. 10-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட பத்தாம் உரை இங்கு தரப்படுகிறது.

மரங்களை நடுவோம்; பூமியைக் காப்போம்!

ச.நாகராஜன்

மரங்களை நடுதல் ஒரு பெரிய அறமாக பாரதத்தில் கருதப்பட்டதோடு அந்த அறத்தை மாமன்னர்கள் தவறாது செய்தனர்; ஆயிரக்கணக்கான நிழல் தரு மரங்களை ஆங்காங்கே நட்டனர்.

ஒரு மரத்தை நடுவதால் ஏற்படும் பயன்கள் யாவை?

மரங்கள் உயிர் வாழத் தேவையான சுவாசிக்கும் காற்றைத் தருகிறது; ஆக்ஸிஜனைத் தருகிறது. வெள்ளப் பெருக்கெடுத்தோடும் போது வெள்ளப் பெருக்கை மரங்கள் தடுக்கின்றன. அதனால் நிலச்சரிவுகளும் மண் அரிப்பும் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. ஏராளமான விலங்குகளும் பறவைகளும் மரங்களைத் தங்கள் உறைவிடமாகக் கொண்டு உயிர் வாழ்கின்றன. மரங்கள் கனிகளையும் காய்களையும் வழங்குகின்றன. கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பொருளாகவும் இன்னும் இதர பல வித வழிகளிலும் மனித குலத்திற்கு உதவுகின்றன.

பூமியின் நுரையீரலே மரங்கள் எனலாம். அவைகள் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் இதர நச்சு வாயுக்களே பூமி வெப்பமயமாதலுக்கான முக்கிய காரணம்.ஆகவே பூமியை நிரந்தரமாக வாழ்விக்கும் அரிய செயலை மரங்கள் செய்கின்றன.

மண்வளத்தை உறுதி செய்வதும் மரங்களே.

மரங்களை நடும் அரிய பணியைச் செய்து மனித குலத்திற்கு அரிய முன்னுதாரணமாகப் பலரும் திகழ்கின்றனர். இரு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.   

ஃபெலிக்ஸ் ஃபின்க்பெய்னர் (Felix Finkbeiner)  என்ற இளைஞர் இளம் வயதிலிருந்தே மரம் நடுவதில் ஆர்வம் கொண்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் பேசும் போது அவர்க்கு வயது ஒன்பது தான். ப்ளாண்ட் ஃபார் தி ப்ளானெட் (Plant for the Planet) என்ற மரம் நடும் இயக்கத்தை ஆரம்பித்து கோடிக் கணக்கில் மரங்களை நட்டார். பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் 150 மரங்களை நடுவது என்ற கணக்கில் அவர் மரங்களை நட்டு வருகிறார். உலக மக்களுக்கு உத்வேகம் ஊட்டுகிறார்.

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள உலகின் மிகப்பெரும் நதித் தீவான (River Island) மஜுலி தீவானது (Majuli Island) வறண்டு அழியும் நிலையில் இருப்பதைப் பார்த்தார் ஜாதவ் பயெங் (jadav Payeng) என்னும் இளைஞர். அதைச் சுற்றி ஓடும் பிரம்மபுத்திரா நதியானது தீவின் ஓரங்களை அரிப்பதைக் கண்ணுற்ற அவர் 1979இலிருந்து நூற்றுக் கணக்கான மரங்களை அங்கு நட ஆரம்பித்தார். தீவில் மிகப் பெரும் காட்டை உருவாக்கிய அவர் 15000 மக்களை வாழ வைத்ததோடு யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகளுக்கான ஒரு பூங்காவையும் அமைத்தார். உத்வேகமூட்டும் இவர்கள் வழியில் அனைவரும் சென்றால் பூமி பசுமை பூமியாக மாறும் இல்லையா?

***

இலங்கைக்கு இலவச சுற்றுலா!- பகுதி 1 (Post No.6917)

COMPILED BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 22 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 21-15

Post No. 6917

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

1951-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட தமிழ் விழா மலரில் இலங்கைத் தமிழர் பற்றி நல்ல, அருமையான கட்டுரைகள் உள்ளன. அதில் ஒன்று இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலங்கள் பற்றியதாகும். நாற்பதுக்கும் மேலான சுற்றுலாத் தலங்கள் வரிசைக் கிரமத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. கட்டுரையை எழுதியவர்-முதலியார், குல.சபாநாதன்

அவர் குறிப்பிடும் 40+++ இடங்கள்:-

கதிர்காம முருகன் கோவில்

தெய்வந்துறை

முன்னேஸ்வரம்

சீதை தொடர்புள்ள புனிதத் தலங்கள்:-

அசோகவனம்

நுவரெலியா மலைப் பிரதேசம்

ஹக்கல பூந்தோட்டம்

ராவணன் மனைவியின் ஊர் மாந்தை

திருக்கேதீஸ்வரம்

மருத மடு கத்தோலிக்க ஆலயம்

தலைவில்லு சந்தனமாதா கோவில்

இலங்கையின் பழைய தலைநகர் அநுராதபுரம்

மிஹிந்தலை

தம்புல்ல குகைக் கோயில்

சிகிரியா குகை ஓவியம்

பொலன்னருவ

கல்விகாரை

மின்னேரி

ஸ்ரீபாதமலை 7353 அடி உயரம்- எல்லா மதத்தினரும் வணங்கும் மலை.

இரத்தினபுரி

கண்டி திருவிழா

தாலத மாளிகை/ புத்தர் பல்

மட்டக்களப்பு- பாடும் மீன்கள்

அமிர்தகழி

கொக்கட்டுச்சோலை

திருக்கோயில்

கல் ஓயா- கல் முனை

கண்ணகி வழிபாடு

திருகோணமலை

கன்னியாய் வெந்நீர் ஊற்று

யாழ்ப்பாணம்

சிங்கை நகர்

நல்லூர் கந்தசாமி கோயில்

புத்தூர்

வல்லிபுரம்

மாவிட்டபுரம்

வல்வெட்டித்துறை

நகுலேஸ்வரம்

கிழாலி

நயினா தீவு

கொழும்பு (தலைநகர்)

விபீஷணன் ஆலயம், களனி கங்கை

to be continued…………………..

Train went back for an Old Lady! (Post No.6916)

COMPILED BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 22 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 18-59

Post No. 6916

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

MEDICINES ANECDOTES

An old lady, on her way to a summer resort, kept pestering the train conductor to tell her when they would reach Ellenville.

Finally, harried by her constant questioning, he pleaded with her to bother him no more, that he would tell her as soon as they reached the town. Becoming busy with all his duties, the train reached and passed Ellenville with the conductor all about the old lady.  Suddenly recollecting her anxiety about the place, he backed up the train and as it pulled into the little station, he hurried out and told the woman, “Here you are now- in Ellenville. I will help you with your baggage.”

“Oh, thank you, “replied the old lady. “Never mind, I am not getting off here. My daughter just told me that when I got to Ellenville, it would be just about time to take another of my pills”

Xxx

Secret cure!!

Many years ago an English sailor who had broken his leg was advised to send to the Royal Society on account of the remarkable manner in which he had healed the fracture. He did so. His story was that, having fractured the limb by falling down from the top of a mast, he had dressed it with nothing but tar and oakum, which had proved so wonderfully efficacious that in three days he was able to walk just as well as before the accident. This remarkable story naturally caused some excitement among the members of the society. No one had previously suspected tar and oakum of possessing such miraculous healing powers. Several letters accordingly passed between the Royal Society and the humble sailor, who continued to assert most solemnly that his broken leg had been treated with tar and oakum, and with these two applications only. The society might have remained puzzled for an indefinite period had not the man remarked in  a post script to his last letter:

“ I forgot to inform your honors, by the way, that the leg was a wooden one!”

oakum

/ˈəʊkəm/

Learn to pronounce

noun

  1. loose fibre obtained by untwisting old rope, used especially in caulking wooden ships.

Xxx

Cure for Gout?

“Pray Dr Abernethy, what is the cure for gout? Asked an indolent, luxurious citizen of the famous doctor.

“Live on six pence aa day, and earn it!” wass the pithy answer

Xxx subham xxx

மதுரை அருகில் அதிசய நந்தி உருவம் கண்டுபிடிப்பு (Post No.6915)

WRITTEN BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 22 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 9-02 am

Post No. 6915

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

தமிழ் நாடு ரிஷிகள் பூமி! (Post No.6914)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 22 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 7-59 am

Post No. 6914

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

ஞான ஆலயம் ஆகஸ்ட் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

ரிஷிகள் பூமி!

ச.நாகராஜன்

ரிஷி என்றால் சுயநலமின்றி தெளிவான திருஷ்டியுடன் உள்ளதை உள்ளபடி காண்பவர் என்று பொருள். த்ரஷ்டா என்று அவர்களைக் கூறுவது வழக்கம். சூஷ்ம திருஷ்டி மூலம் வாழ்க்கையின் நுட்பங்களைக் காண்பதும், அந்தர்திருஷ்டி மூலம் ஒருவரின் அந்தக்கரணத்தை அறிந்து அவரது நடத்தையின் ஆதிகாரணத்தை அறிவதும், திவ்யதிருஷ்டி மூலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலத்தை அறிவதும் ரிஷிகளின் இயல்பு. மந்த்ர திருஷ்டா என்றால் என்றுமுள்ள மந்திரங்களைத் தங்கள் தவத்தால் கண்டு உலக நன்மைக்காகத் தருபவர் என்று பொருள்.

வசிஷ்டர் விஸ்வாமித்திரர், யாக்ஞவல்க்யர் உள்ளிட்டோர் ப்ரம்ம ரிஷிகள், ஜனகர் போன்ற அபூர்வமான பிரம்மஞானம் உடைய ராஜாக்கள் ராஜ ரிஷிகள் என்ற வரிசையில் சேர்வர். நாரதர் போன்றோர் தேவரிஷிகளாவர்.

ரிஷிகள் எண்ணிலடங்கார். பாரத தேசம் முழுவதும் ரிஷிகளின் காலடித் தடம் படாத இடம் இல்லை எனலாம். அதிலும் தமிழகத்தை ரிஷிகளின் பூமி என்றே சொல்லலாம். இங்கு அடிக்கு அடி ஒரு ரிஷியின் அபூர்வமான அற்புதமோ அல்லது ரிஷி சம்பந்தப்பட்ட சம்பவமோ நடந்திருக்கிறது.

ஆதி காவ்யமான வால்மீகி முனிவரின் ஆசிரமம் இன்று சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடில் உள்ள குறுங்காலீஸ்வரர் ஆலயம் இருந்த இடத்தில் பண்டைய காலத்தில்  இருந்தது. அங்கு தான் சீதையும் லவ குசரும் வாழ்ந்தனர் என்பது எத்துணை அபூர்வமான செய்தி.

சென்னையில் உள்ள திருவான்மியூரில் வான்மீகி முனிவருக்கான சிறு ஆலயம் ஒன்று உள்ளது. மார்க்கண்டேய மஹரிஷியின் கட்டளையின் பேரில் வான்மீகர் இங்கு வந்து வழிபட்டமையால் வான்மியூர் என்ற திருநாமத்தைப் பெற்றது திருவான்மியூர்.

   திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் பிரசித்தி பெற்ற தலம். புரு என்னும் முனிவரின் யாகத்தின் பயனாகப் பிறந்த சாலிஹோத்ரர் என்னும் ரிஷி இங்கு தான் தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்கு உணவு படைத்த பின்னரே தான் உண்ணும் பண்பைக் கொண்ட இந்த முனிவரிடம் பெருமாளே வயோதிகராக வந்து உணவு பெற்றார். பசி தீராமல் முனிவரின் பங்கையும் சேர்த்து உண்ட பெருமாள், படுக்க இடம் எது என்ற பொருளில்,’படுக்க எவ்வுள்’ என்று கேட்டதால் இந்த ஊரின் பெயர் எவ்வுள்ளூர் என்று ஆகி இப்போது திருவள்ளூர் ஆகி விட்டது.

     அகத்திய முனிவருக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கத் தேவையே இல்லை.அகத்தியருடன் தொடர்பு கொண்ட திருத்தலங்கள் எத்தனை எத்தனையோ!

மான் பூசித்த தலமான அகத்தியான் பள்ளியில் தான் அகத்தியர் பர்ணசாலை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். வேதாரண்யத்தில் ஈஸ்வரனின் கல்யாண கோலத்தைத் தரிசிக்க வந்த போது இங்கு இப்படி தங்கியதால் இந்த ஊருக்கு அகத்தியான் பள்ளி என்ற பெயர் ஏற்பட்டது.

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் அகத்தியர் மற்றும் 49 சங்கப் புலவர்களின் திருவுருவங்கள் உள்ளன. அகத்தியர் பளிங்குத் துண்டு ஒன்றைக் கலைப்பீடமாக இங்கு வைத்தார் என்று திருவையாற்றுப் புராணம் கூறுகிறது.

அகத்தியருக்குக் கல்யாண கோலமாக, ஸ்வாமி தரிசனம் தந்த தலங்களாக அமைந்துள்ளவை: நல்லூர், திருமணஞ்சேரி, திருவீழிமலை, ருத்திர கங்கை, அம்பல், திருமறைக்காடு, இடும்பாவனம், பாபவிநாசம் ஆகியவவை.

மார்க்கண்டேய மஹரிஷியின் ருத்ராக்ஷம் அழுந்தியுள்ள தலம் திருக்கடையூர். சிவனைத் தழுவிக் கொண்ட தலம் என்பதாலும் காலனைச் சிவபிரான் கடிந்து கொண்ட தலம் என்பதாலும் இது மிகவும் பிரசித்தி பெற்றது.

அத்திரி மஹரிஷி இருந்த தலம் இரும்பைமாகாளம். அவர் பூஜித்த தலம் சிவசைலம்.

    தப்பளாம்புலியூர் என்னும் மண்டூகவியாக்கிரபுரத்தில் தான் மாண்டூக ரிஷிக்கு தரிசனம் கொடுத்த நிகழ்வு நடந்தது.

வியாக்ரபாதர், பதஞ்சலி ரிஷிகளுடன் தொடர்பு கொண்ட முக்கிய தலங்களாக விளமர், ருத்ரகங்கை, புலியூர் உள்ளிட்ட ஏராளமான தலங்கள் தமிழகத்தில் உள்ளன.வியாக்ரபாதருக்கு அருளிய தலம் திருவெண்காடு.

வியாக்ரபாதர் தமிழில் புலிக்கால் முனிவர் என்ற பெயரால் பெரிதும் போற்றப்படுகிறார். வண்டு முதலியன பூக்களிலிருந்து மதுவை எடுப்பதால் அதன் தூய்மை போய்விடுகிறது என்று கருதிய வியாக்ரபாதர் தூய்மையானவை தானா என்று மலர்களை நன்கு ஆராய கூர்மையான கண்களை வேண்டி புலிக் கண்களையும் மரங்களின் மீது ஏறிப் பறிக்க புலிக்கால்களையும் பெற்றார். ஆகவே வியாக்ரபாதர் என அழைக்கப்பட்டார்.

     ஒன்பது தலங்கள் நவவியாக்கிரபுரம் என அழைக்கப்படுகின்றன.

அவையாவன : 1) பெரும்பற்றப்புலியூர் 2) திருப்பாதிரிப்புலியூர் 3) கானாட்டாம்புலியூர் 4) ஓமாம்புலியூர் 5) தப்பளாம்புலியூர் 6) அத்திப்புலியூர் 7) முனிபுலியூர் 8) சிறுபுலியூர் 9) பெரும்புலியூர். இந்த ஒன்பது புலியூர்த் தலங்களும் ஒவ்வொரு விதத்தில் புகழ் பெற்றவை.

பதஞ்சலி ரிஷியும் வியாக்ரபாதரும் சிதம்பரத்தில் நடராஜரின் ஆனந்த தாண்டவம் காணத் தவமிருந்தனர். அவர்களது தவத்தை மெச்சியே நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி அருள் பாலித்தார்.

வியாக்ரபாதரின் ஜீவ சமாதி திருப்பட்டூரில் உள்ளது.

ஸனகாதி நால்வர் பூஜித்த தலங்களோ ஏராளம் – திருவாவடுதுறை, திருக்கோழம்பம், திருநல்லம், திருக்கோகர்ணம் உள்ளிட்ட தலங்கள்.

தத்தாத்ரேய மஹரிஷி பூஜித்த தலங்கள் : திருவிடைமருதூர், சிவசைலம்.

48000 மஹரிஷிகள் ஒன்றாகச் சேர்ந்து பூஜை செய்த தலங்கள் : பெருஞ்சேரி, வழுவூர், தாருகாவனம்.

காளஹஸ்தி முதல் இராமேஸ்வரம் வரையும், காவேரி தீரத்தில் ஸமுத்ரம் முதலாக கரூர் வரையும், ஒவ்வொரு திடலிலும், தலங்களிலும் இருக்கும் லிங்கங்கள் எல்லாம் ரிஷிகளால் அவை ஆரண்யமாக இருந்தபோது ஸ்தாபிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டவை. காட்டுப் பகுதிகளிலும் வயல்வெளிகளிலும்  அவ்வப்பொழுது கிடைக்கும் இவை இப்படி பூஜிக்கப்பட்டவையே. இவை இன்னும் கிடைத்துக் கொண்டே தான் இருக்கும்; அவ்வளவு சிவ லிங்கங்கள்!!

ஸப்தரிஷிகளும் சேர்ந்து பூஜித்த தலங்கள் :  திருத்தவத்துறை,ரிஷியூர், நல்லூர் ஆகிய தலங்கள்.

பழைய காலத்தில் தான் ரிஷிகள் இருந்தனர் என்பதில்லை; இன்றைய நவீன அறிவியல் யுகத்திலும் அவர்கள் ஆங்காங்கே தோன்றி அதிசயிக்க வைக்கின்றனர்; அருள் பாலிக்கின்றனர்.

காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த மஹா பெரியவாள் இதற்குச் சிறந்த உதாரணம்; அடுத்து திருவண்ணாமலையில் ஆன்மீக அரசோச்சிய ரமண மஹரிஷி ரிஷிக்கான இலக்கணத்தை சம காலத்தவருக்குக் காண்பித்தவர்; இதே போல சேஷாத்ரி மஹரிஷி உள்ளிட்ட பலரையும் நாம் பட்டியலிடலாம். ஆக அருள் பூமிக்கு ரிஷிகள் பஞ்சமே இல்லை; நாம் தான் அவர்களைப் பக்தியுடன் வணங்கி அருள் பெற வேண்டும்.!

    ஆன்மீக பூமியாக விளங்கிய தமிழகத்திலேயே பக்தி பிறந்ததாக பக்தி தேவதை தானே கூறுவதை பாகவதம் தெரிவிக்கிறது.

   ஆக பக்தித் தாயகமான தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் கூட்டம் கூட்டமாக ரிஷிகள் தவம் இருந்து அருள் பெற்ற வரலாறுகள் ஏராளமாக இருப்பதில் வியப்பில்லை. தமிழகத்தை ரிஷிகள் பூமி என்று சொல்லித் திருப்திப்படுவதோடல்லாமல் அவர்கள் எங்கெல்லாம் அருள் பெற்றார்களோ அந்த இடங்களில் எல்லாம் நாமும் வழிபட்டு உய்யலாம்; அவர்களின் ஆன்மீக சக்தி அங்கு இருப்பதால் சிறிய முயற்சிக்கும் நாம் பெரும் பயனை அடையலாம் என்பதே சத்தியமாகும்!

வாழ்க ரிஷிகள் பூமி; ரிஷிகளை வணங்கிப் பெரும் பேறு பெறுவோம்!

***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி21819 (Post No.6913)

WRITTEN BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 21 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 21-41

Post No. 6913

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே

1. –6- இலங்கையில் சீதை இருந்த இடம்

5-2- சங்கீதம், நாடகம், ஓவியம் முதலியன

6.- 3- பெண்கள் குழாய் அல்லது கிணற்றடியில் பேசுவது

7. -3- இதை ஆன்மீகவாதிகள் குரங்கு என்பர்; நிலையில்லாதது;

8.-2- கை, கால்களால் காட்டும் தகவல்

கீழே

1.- 5– ரேடியோ கேட்க இது தெரிந்திருக்க வேண்டும்

2.—3– துயரம்; வருத்தம்

3.—3– தடி; அல்லது தினை வகை தானியம்

4.—5–மரியாதை தெரிவித்தல்; துதி பாடல்

9./ -5-=கீழிருந்து மேலே செல்க. கல்யாணம்

Xxx subham xxx

Swami’s Cross word 21819 (Post No.6912)

WRITTEN BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 21 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 14-47

Post No. 6912

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Known Sanskrit words are used in this crossword. Most of the Indian languages use them.

ACROSS

1.- 7 LETTERS-THREE WORLDS

5. – 4- DEBT

6.- 4–BLACK COLOUR BIRD; VAHANA OF SANI

7.- 7–SENSE ORGAN

10.– 4—HARE;RABBIT

11. –7– GRANDFATHER OF KUNTI’S FATHER SHURA

12.- 5–CALF

13. -4- FOREMOST, CHIEF

14.- 4–PART

DOWN

1.- 8–ANOTHER NAME OF VISWARUPA; THREE HEAD MAN

8.- 6–ORANGE

2.- 5–GOD WHO HAS MORE HYMNS IN THE VEDAS

9- 6–LORDSHIP; ONE OF THE 8 SIDDHIS

3. -4– BODY

4.- 5–SKY

6a.-5—GARDEN

–SUBHAM–

இமய மலை ஏரி மர்மம்-உலகப் பத்திரிக்கைகள் அலசல் (Post No.6911)

WRITTEN BY LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 21 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 9-40 am

Post No. 6911

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–