NUMBER TEN IN HINDU AND OTHER CULTURES (Post No.7252)

Ten Avatars of Vishnu

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 NOVEMBER 2019

Time  in London – 9-37 AM

Post No. 7252

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

TEN BOOKS/MANDALAS OF RIG VEDA:

The Books are called Mandalas (10)

The chapetrs or sections are called Anuvakas(85)

The hymns are called Suktas (1017 –with appendix 1028)

1st Mandala- Various seers’ hymns are in this book

2nd Mandala- Sage Grtsamada

3rd mandala- Sage Visvamitra

4th Mandala- Vamadeva

5th Mandala- Atri

6th Mandala- Bharadwaja

7th Mandala- Vashista

8th Mandala- Kanva and Angiras comosed the hymns

9th Mandala- Hymns pertaining to Soma

10th Mandala- Several poets

Hymns are mainly religious-in praise of Vedic Gods

But secular poems are also there.

XXXX

TEN INCARNATIONS IN ONE STATUE

50. TEN INCARNATIONS OF VISHNU

Matsya avatar- Incarnation as Fish

Kurma Avatar- Incarnation as Tortoise

Varaha Avatar- Incarnation as boar

Narasimha avatar- Incarnation as Man-Lion

Vamana Avatar- As a short man

Parasurama Avatar- Incarnation as Rama with a dagger

Rama Avatar- Incarnation as King Rama

Krishna- Incarnation as Krishna

Balarama/Buddha- Incarnation as Balaram/Buddha

Kalki- Yet to come ;on a white horse

 Balarama is replaced by the Buddha in some of the listings

Avatar means reincarnation. God says in the Bhagavad Gita that he would come to earth whenever there is decline in righteousness to destroy the evil and protect the good people. Other than these ten there were many more avatars. One tradition maintains that there were 18 and another 24 Avatars.

XXX

BATTLE OF TEN KINGS IN RIG VEDA

The Dasarajna or the Battle of the Ten Kings, is an important historical event alluded to in various hymns of the Rig Veda.

Sudas was the king of Bharata Kingdom. He belonged to Trstu family. At first Visvamitra was their priest. He led him to victorious campaigns on the banks of Vipas and Sutudri. Later there was some misunderstanding and Vasistha was appointed as the priest and Visvamitra was sacked. Thereupon a long and bitter rivalry ensued between the two priests and, in revenge, Visvamitra led ten kings against the Bharata kingdom.

The ten kings were from the kingdoms of Puru, Yadu, Turvasa, Anu and Drhyu, Alina, Paktha, Bhalanas, Siva and Visvanin.

In the bloody and decisive battle on the banks of River Parusni, the Bharats emerged victorious, utterly routing the ten kings. The kings of Anu and Druhyu kingdoms were drowned, while Purukutsa, King of the Puru Kingdom met his death.

XXX

TEN SIKH GURUS

Ten commandments from the Bible

–SUBHAM–

பத்து சந்யாசிகள் பிரிவு (Post No.7251)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 NOVEMBER 2019

Time  in London – 8-20 AM

Post No. 7251

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தைப் (நீயே கடவுள்/ தத் த்வம் அஸி) பின்பற்றும் சந்யாசிக்கள் பத்து சிறப்புப் பெயர்களைக் கொண்டிருப்பர். சிருங்கேரி மடத்திலுள்ள சங்கராச்சார்யார்களின் பெயர்கள் ‘பாரதி’ என்றும் காஞ்சி மடத்தின்  சங்கராச்சார்யார்களின் பெயர்கள் ‘சரஸ்வதி’ என்றும்  இருக்கும். இதுபோல மொத்தம் பத்து சிறப்பு அடைமொழிகள் உண்டு. அவையாவன

பாரதி, சரஸ்வதி, புரி, தீர்த்தர், ஆஸ்ரம, வன, ஆரண்ய, கிரி, பர்வத, சாகர என்ற பின்னொட்டுகள் (suffix) மடாதிபதிகளின் பெயருடன் சேர்க்கப்படும். எடுத்துக் காட்டாக காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர இந்திர சரஸ்வதி என்றும், அவருக்கு அடுத்தவர் ஜய இந்திர சரஸ்வதி என்றும் , அடுத்து வந்தவர் விஜய இந்திர சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஏனைய மடங்களின் சிறப்பு பின்னொட்டுகள் (SUFFIX OR EPITHETS):-

துவாரகா பீடாதிபதிகள் – ஆஸ்ரம அல்லது தீர்த்த

கோவர்தன மடாதிபதிகள் – வன அல்லது ஆரண்ய

பத்ரிநாத் ஜோதிர் மடாதிபதிகள் –  கிரி, பர்வத, சாகர

பல பெயர்களிலும் இயற்கை அம்சங்கள் (காடு, மலை, நீர்நிலை, ஊர், காட்டிலுள்ள குடிசை) ஒட்டிக்கொண்டு இருப்பதை நோக்கவும். அல்லது சரஸ்வதி (பாரதி) பெயர் இருக்கும்.

xxx

சீக்கிய மதத்தின் பத்து குருமார்கள்:–

குருநானக், அங்கத, அமர்தாஸ், ராம்தாஸ், குரு அர்ஜுன் தேவ், ஹரிகோவிந்த, ஹரி ராய், ஹரி கிருஷ்ண, குரு தேஜ்பகாதூர், குரு கோவிந்த சிம்மன் (பாரதியாரால் பாடப்பட்டவர்)

xxxx

உபசாரங்கள் பத்து

இறைவனைப் பூஜிக்கையில் 32 வகை உபசாரங்கள் செய்ய வேண்டும்; அதில் பாதி 16 (ஷோடஸ); அதுவும் முடியாவிடில் குறைந்தது 10 உபசாரம் செய்வர்; அவையாவன-

அர்க்யம், பாத்யம், ஆசமனம், ஸ்நானம், வஸ்த்ரம், கந்தம், புஷ்பம், தீபம், தூபம் நைவேத்யம்.

இதுவும் முடியாதவர்கள் தினமும் பூப்போட்டு ஏதேனும் பழத்தைப் படைக்கலாம் (நைவேத்யம் செய்யலாம்).

Xxxx

தச இந்திரியம்

ஆக்கிராணம், உபத்தம், சட்சு, சிங்குளம், சுரோத்திரம், தொக்கு, பாணி, பாதம், பாயுரு, வாக்கு.

xxx

காவிய குணங்கள் பத்து–

செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி

Xxx

ரிக் வேதத்தில் பத்து ராஜாக்கள்

தச ராக்ஞ யுத்தம் எனப்படும் பத்து அரசர் போர் ரிக் வேதத்தில் பல கவிஞர்களாலும் பாடப்பட்ட போர்- இது ஒரு முக்கிய வரலாற்று நிகழ்ச்சி. அந்த பத்து ராஜாக்கள் யாவர்:–

அனு, த்ருஹ்யு, புரு, துர்வாசு, யது, பக்த, பலானஸ், அலின, விசானின், சிவ (சிம்யூ, வைகானஸ் என்ற பெயர்கள் அவர்களில் சிலருடைய மாற்றுப் பெயர்கள்). இவர்கள் அனைவரும் வசிஷ்டரைக் குருவாகக் கொண்ட சுதாஸைத் தாக்கினர். சுதாஸ் வெற்றி வாகை சூடினார்.

xxx

பிரம்மாவின் பத்து புத்திரர்கள்

மரீசி, அத்ரி, ப்ருகு, ஆங்கிரஸ, நாரத, புலஸ்த்ய, புலஹ, க்ரது, ப்ரசேதஸ், வசிஷ்ட

பிரம்மாவுக்கு பத்து சரீர புத்ரர்களும் பத்து மானஸ புத்ரர்களும் இருப்பதாகப் புராணங்கள் பகரும்.

—subham–

சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி (Post No.7250)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 23 NOVEMBER 2019

Time  in London – 6-48 AM

Post No. 7250

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019 இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019 பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 3

ச.நாகராஜன்

சாயி நாமம் மதுரம் மதுரம்

சாயி ரூபம் திவ்யம் திவ்யம்

சாயி மஹிமா அற்புத சரிதம்

சதா நினைப்போம் சாயி நாமம் – ச.நாகராஜன்

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில், பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரையின் தொடர்ச்சி …

பெண்களும் வெளியில் சென்று பணம் சம்பாதித்தால் பணப் பிரச்சினையை தீர்க்க முடியும் ஆனால் வீட்டை எடுத்துக் கொண்டால் அங்கு பல பிரச்சினைகள் இருக்கும். தைரியத்திற்கும் உறுதிக்கும் பெண்களே உருவகங்கள்.  மனத்திட்பத்துடன் அனைத்துக் கஷ்டங்களையும் எதிர்கொண்டு குடும்பத்தின் கௌரவத்தை அவர்கள் காக்கின்றனர். க்ரிஹிணி என்ற சொல்லின் கௌரவத்திற்கேற்ப அவர்கள் வாழ்கின்றனர்.

ஞானத்தை அடைய மனிதன் சத்தியத்தின் வழியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சத்யம் ப்ரூயாத்

ப்ரியம் ப்ரூயாத்

ந ப்ரூயாத் அஸத்யம் அப்ரியம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

(உண்மையைப் பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள்; விரும்பத்தகாத அஸத்தியத்தைப் பேசாதீர்கள்)

இந்த மூன்றும் ஒழுக்கம், தர்மம், ஆன்மீக மதிப்புகளை முறையே குறிக்கிறது.

அனைத்துமே சத்தியத்தில் அடங்கியிருக்கிறது.

நீங்கள் கடவுளைத் தேடி கோவில்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.

ஸத்தியமே கடவுள்.

எங்கும் பரந்திருப்பது அது. அது எல்லோருக்கும் அளவில்லாத வளத்தை அளிக்கிறது. ஆகவே ஸத்தியத்தின் வழியில் நடப்பீர்களாக. தர்மத்தை கைக்கொண்டு நடப்பீர்களாக. ஞானத்தைப் பெறுங்கள்.

இந்த சாதனைக்கு சரியான உணவை எடுத்துக் கொள்வதே முதல் படியாகும்.

அன்னம் ப்ரம்மம்.

அன்னமே ப்ரம்மத்தின் வடிவம் என்பதை நினவில் கொள்ளுங்கள்.

ரஸோ விஷ்ணு.

உடலெங்கும் பரவுகின்ற அன்னத்தின் சாரமே விஷ்ணு சொரூபம்.

போக்தா தேவோ மஹேஸ்வர:

உணவை எடுத்துக் கொள்பவரே சிவன் – அதுவே சிவ தத்துவம் ஆகும்.

இந்தப் புனிதமான உணர்வுகளை மனிதன் கொள்ளும் போது அவன் சிவனாகவே ஆகிறான்.

துறவுக்கே சிவன்

சிவன் முழு தியாகத்திற்கும் துறவுக்கும் அடையாளச் சின்னமாகிறார்.

இந்த உலகில் ஒவ்வொருவரும் தேஹாபிமானம் கொண்டிருக்கிறார். ஆனால் சிவனுக்கோ தேஹாபிமானம் இல்லை. அவருக்கு ஆத்மாபிமானம் ஒன்றே இருக்கிறது (ஆத்மாபிமானம் – அனைவர் மீதும் அன்பு)

(இங்கு பாபா ஒரு தெலுங்குப் பாடலைப் பாடுகிறார்)

தெலுங்குப் பாடல் :

ஜடாமகுடத்துடன் சந்திரனை அவர் தலையில் கொண்டிருக்கிறார்.

ஜடாமகுடத்தினிடையே கங்கை பாய்ந்தோடுகிறது.

அவரது ஒளி பொருந்திய ஞானக் கண் நெற்றியின் நடுவில் இருக்கிறது.

அவரது இளஞ்சிவப்பான கழுத்து நீல வண்ணம் பொருந்திய மலராக இருக்கிறது.

அவரது உடல் முழுவதும் விபூதி பரவியிருக்கிறது.

அவரது நெற்றி ஒரு குங்குமப் பொட்டுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

அவரது சிவப்பு உதடுகள் வெற்றிலைச் சாரால் ஒளி விடுகிறது. வைரம் பதிக்கப்பட்ட தங்கத் தோடுகள் அவரது காதுகளில் அசைந்தாடுகின்றன. அவரது முழு உடலும் தெய்வீக் ஒளியுடன் பிரகாசிக்கிறது.

(தெலுங்குப் பாடல் முடிகிறது)

ஒரு முறை பார்வதி சிவபிரானை அணுகி தமக்கென ஒரு இல்லம் வேண்டுமென்ற தனது ஆசையைக் கூறினார். பார்வதி கூறினார் :” எம்பிரானே! திருவோடேந்தி வீடுதோறும் பிக்ஷைக்காக அலைகிறீர்கள்.  நமக்கென ஒரு இல்லம் வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை. இருக்க ஒரு சரியான உறைவிடம் இல்லாமல் நாம் எப்படி வாழ்வது?”

சிவபிரான் அவரை சமாதானப் படுத்தினார் இப்படி :” பாரவதி! வீட்டைக் கட்டுவதால் என்ன பிரயோஜனம்?  நாம் அதற்குள் நுழைவதற்கு முன்பேயே எலிகள் அதைத் தமது வீடாக ஆக்கிக் கொள்ளும். எலிகளைக் கட்டுப்படுத்த ஒரு பூனை தேவைப்படும்.  பூனைக்குப் பால் கொடுக்க ஒரு பசு தேவைப்படும். இப்படியாக நமது தேவைகள் பெருகிக் கொண்டே போகும். நமக்கு மன அமைதி போய்விடும். ஆகவே அப்படிப்பட்ட ஆசைகளைக் கொள்ள வேண்டாம்.”

அவர் துறவின் திருவுருவம். முழுத் துறவு ஒருவரை ஞானத்திற்கு அழைத்துச் செல்லும். இதுவே மனித குலத்திற்கு சிவன் தரும் உபதேசம்.

ஞானம் என்பது என்ன? சிந்தனை, சொல், செயல் இந்த மூன்றிலும் தூய்மையாக இருப்பதே ஞானம். உங்கள் உடல், மனம், செயல் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான், ‘மனித குலத்தைச் சரியாகப் படிக்க மனிதனைப் படிக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது.

இதன் அர்த்தம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இணைந்திருப்பதே மனிதத்வம் என்பதாகும்.

இது மிக எளிமையானது. பின்பற்றுவதற்கு சுலபமானது.

ஆனால் யாருமே இந்த வழியில் நடக்க முயற்சியை எடுப்பதில்லை.

கங்கை அருகிலே பாய்ந்து கொண்டிருந்தாலும் யாருமே அதில் குளித்து உடலைச் சுத்தம் செய்து கொள்வதில்லை.

மக்கள் தங்களுக்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.

இது முழு சோம்பேறித்தனம்; தமோ குணத்தின் அடையாளம்.

இந்த விலங்குத் தன்மையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும், மனிதத்வத்தை அபிவிருத்தி செய்து தெய்வீக அளவிற்கு உயர வேண்டும்.

  (உரை தொடர்கிறது)

***

அவன் கண்ட உண்மை! (Post 7246)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 22 NOVEMBER 2019

Time  in London – 6-37 AM

Post No. 7246

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

by ச.நாகராஜன்

அவன் ஒரு பிராமணன்.

வேதம் படித்தவன்.

உபநிஷதம் படித்தவன்.

இதிஹாஸ புராணம் படித்தவன்.

கை நிறையக் காசுள்ளவன்.

தங்கக் காசுகளும் வெள்ளிக் காசுகளும் கை நிறையப் புரண்டன.

ஆனால் அவன் வேதத்தை மதித்தானில்லை.

ஓம்கார நாதத்தை ஓதினானில்லை.

சங்கீதத்தை ரசித்தானில்லை.

மனைவி மீது எரிந்து விழுந்தான்.

மகன் மகளைத் திட்டினான்.

அண்டை அயலாரை விரட்டினான்.

எதிர்ப்பட்டவரிடம் சண்டை போட்டான்.

அனைவரும் அயர்ந்து போயினர்.

அவனிடம் வெறுப்பு. காழ்ப்பு.எரிச்சல்.

இந்த சூழ்நிலையில் அவன் கைப்பணம் கரைந்தது.

வெள்ளியும் தங்கமும் போன இடம் தெரியவில்லை.

சாப்பாட்டுக்கு வழியில்லை.

சண்டையிட ஆளில்லை.

மனைவி மக்கள் ஒதுங்கினர்.

பசி, தாகம்!

அந்த அந்தணன் நடந்தான்.

மலைப் பாதை ஆரம்பம்.

அதுவரை நடந்தான்.

களைப்போ களைப்பு.

அங்கிருந்த வழிகாட்டிக் கல்லைப் பார்த்தான்.

 மேலே போக வழி என்பது போல

அம்புக்குறி ஒன்று அதில் பொறித்திருந்தது.

பொறி தட்டியது அவனுக்கு.

அந்தக் கல் சுமைதாங்கிக் கல் போலத் தோன்ற

அதன் மீது அவன் அமர்ந்தான்.

இளைப்பாறினான்.

களைப்பாறினான்.

மெல்ல எழுந்தான்.

மேலே போகும் பாதை.

வனாந்தரம் தான்.

பறவைகள் கீச்சிட்டன.

அதன் ஒலி அமர கானமாக இருந்தது.

அவன் உற்றுக் கேட்டான்.

என்ன அருமையான கீத ஒலி.

அவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

அடடா,என்ன அழகு!

என்ன ஒரு பசுமை!

அருகில் இருந்த வனத்தோட்டம்

அருகில் சென்றான்.

மாம்பழங்கள்.

பழுத்த வாழைப்பழங்கள்.

வா வா என்று அழைத்தன.

உண்டான், மகிழ்ந்தான்.

அட என்ன ஒரு ருசி!

அருகில் ஒரு தடாகம்.

மானச சரோவர் போலத் தோற்றம்.

பளிங்கு போன்ற நீர்.

கையால் அள்ளிக் குடித்தான்.

அமிர்தமும் தோற்றது.

மேலே நடந்தான்.

யோசித்தான்.

என்ன காரணம், இதற்கெல்லாம்?

கர்மா? ஊஹூம்!

தர்மம் ? ஊஹூம்!

அவனே தான் இவன்!

இவனே தான் அவன்!

என்ன மாற்றம்?

ஆஹா! ஞானம் உதித்தது.

உபநிடதம் கை கொடுத்தது!

மனம்! மனமாற்றம்!

ஏமாற்றம் போனது.

பார்வையில் மாற்றம்!

பழுதெலாம் போச்சு!

ஆனந்தம் உதித்தாச்சு!

பல நாட்கள் சுற்றினான்.

அங்கு புத்துணர்வு கொண்டான்.

புதிய உறவு கொண்டான்.

மலை, அணில், குயில், தோட்டம்,

துரவு, தடாகம், தாமரை .. ஆனந்தம்.

ஒரு நாள் ஊர் நோக்கி நடந்தான்.

அனைவரும் பயந்தனர்.

வந்துட்டான்…டா!!

ஆனால் அவன் சிரித்தான்.

அவனை நோக்கி எள்ளி நகையாடினர்.

அவன் அவர்களைப் பார்த்து நகைத்தான்.

அவனை ஏசினர். அவன் சிரித்தான். ரசித்தான்.

மனைவி உறுமினாள். மக்கள் பொருமினர்.

அவன் இலேசாகச் சிரித்தான்.

மனம்… மனம்.. இலேசாக இருந்தது.

மன ஏவ மனுஷ்யானாம்!

காரணம் பந்த மோக்ஷயோ:

மனமே மனிதன்! அவனது உறவுக்கும்

துறவுக்கும் அதுவே காரணம்!

உண்டென்றால் உண்டு!

இல்லையென்றால் இல்லை!

உறவென்றால் உறவு!

துறவென்றால் துறவு!

ஆனந்தம் பரமானந்தம்.

பிரம்மானந்தம்!

அனைவரும் அவனைப் பார்த்தனர்.

அதிசயம் கொண்டனர்.

அந்த அந்தணனா இவன்?

இவனா அவன்!

எப்படி இப்படி ஒரு மாற்றம்?

உங்களிடம் நல்ல ஒரு தோற்றம்!

சொல்லுங்கள்!

அவன் சிரித்தான்; மெல்லச் சொன்னான்.

மனமே எல்லாம்! மனமே மார்க்கம்!

மனமே சொர்க்கம்; மனமே நரகம்!

மனம்.. மனம்.. மனம்.

பாடியவாறே தன் வழி போனான்.

மேலே போகும் வழியை நோக்கி

அவன் ந.. ட.. ந்.. தா…ஆ..ஆ..ன்!

***

மைக்கேல் ஜாக்சன் (1958-2009) (Post No.7249)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 22 NOVEMBER 2019

Time  in London – 16-19

Post No. 7249

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

தினமணியில் 1992ல்  நான் ,   மைக்கேல் ஜாக்சனைப் பற்றி எழுதிய  கட்டுரையையும், 1991-ல்  பி.பி.ஸி. தமிழோசையில்  நான் ஒலிபரப்பிய விஷயத்தையும் இணைத்துள்ளேன். லண்டன் பி.பி.ஸி.யிருந்து நான் 5 ஆண்டுகளுக்கு ஒலிபரப்பிய கேள்வி பதில் பகுதி 1991-ல் புஸ்தகமாக அச்சிடப்பட்டது.

மைக்கேல் ஜாக்சன் பிறப்பு – 1958

இறப்பு – 2009

–subham–

QUEEN ANUPAMA INSPIRED FAMOUS DELWARA TEMPLE AT Mt. ABU (Post No.7248)

Delwara (Dilwara) Jain Temple at Mt Abu in Rajasthan

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 22 NOVEMBER 2019

Time  in London – 15-31

Post No. 7248

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

Queens and Princesses- Part 2


1.Mayanalla or Minaladevi was the daughter of Jeyakeshin, King of Kadamba Dynasty in Karnataka. Her son was Siddharaja Jayasimha, 1094-1143 CE. She is known from records as a ruler.


2.Naikidevi
She was the mother of Bala Mularaha. When Ghuri Mohammed invaded Gujarat, Mularaja was a child . Keeping him on her lap Naikidevi fought and defeated the invaders.

3.Anupama of Gujarat


Like Kuntavai inspired Rajaraja to build the grandest temple in Thanjavur in Tamil Nadu, Anupama inspired her husband Tejapaala to build the famous Delaware temple on Mt Abu (Rajasthan). Tejapaala and Vastupala were brothers and shrewd politicians. Many famous temples of Gujarat were built by the Pala brothers. Anupama advised them in running the administration.

(Wikipedia add:–Vastupala was married to Lalita and Vayajalladevi (or Sokhuka or Saukhyalata). Tejapala was married to Anupama and Suhavadevi (also spelled Suhadadevi). Anupama was a daughter of Dharaniga, a counselor to the brothers, and his wife Tribhuvanadevi)

Gupta Queen


Prabhavati Gupta was the daughter of Chandragupta Vikramaditya. She was the Chief Queen of Rudrasena of Vakataka dynasty, 376 CE

Queens of Orissa


Bhaumakaras ruled the lower parts of Orissa between the ninth and eleventh centuries. We know at least six queens in their regime.


Queen Tribhuvana Mahadevi


King Lalitahara’s wife and daughter of Rajamalla, a southern Naga Chief. She ruled the country for several years because her son was a little boy when her husband died.


Queen Tribhuvana Mahadevi II
Wife of King Shubakara IV. Her real name was Prithvi Mahadevi. Daughter of King of Kosala.

Queen Gauri Mahadevi
and

Dandi Mahadevi

After the death of King Shubakara, four queens occupied the Bhaumakara throne. They ruled between 1011 and 1018

Queen Bakula Mahadevi

And

Dharma Mahadevi – She is the last known ruler of Bhumakaras in Orissa

Xxx

Heroic queens of Kashmir

Didda of Kashmir ruled between 958 and 1003 CE. She was daughter of King Simharaja. She was married to Kshemagupta. Diidda dominated over him and so he was called Diddakhsema.

Centuries later another lady Kotadevi (1338 CE) adorned the throne of Kashmir.

Silla was another heroic woman of Kashmir who led the defeated forces of her king to safety. But she was killed later in a fighting.

Alexander the great killed the king of Swat region. His name was Asakenos (Aswaka?) according to Greek writers. When he died in battle his wife or mother Kleopis (Kripi in Sanskrit) defended the fort and died in the ensuing battle according to Curtius, Greek writer.

–to be continued

இசையில் எண்-10, குளியல் முறைகள் பத்து வகை (post No.7247)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 22 NOVEMBER 2019

Time  in London – 7-45 AM

Post No. 7247

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

தூயவராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்! – 2 பாபா பிறந்த நாள் செய்தி (Post No.7245)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 22 NOVEMBER 2019

Time  in London – 5-18 AM

Post No. 7245

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019 -பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 2

ச.நாகராஜன்

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில், பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரையின் தொடர்ச்சி …

அன்னம் பிரம்மா; ரஸோ விஷ்ணு: போக்தா தேவோ மஹேஸ்வர: (அன்னம் பிரம்மா; சாரம் விஷ்ணு; அதை எடுத்துக் கொள்பவர் மஹேஸ்வரன்)  என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த மூன்றும் உடல், மனம், செயல் ஆகிய மூன்றையும் முறையே குறிக்கிறது.

மனஸ்யேகம் வாசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மன:

(எவருடைய எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் ஒன்றாக இருக்கிறதோ அவர்களே மஹாத்மாக்கள்)

சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இருப்பதே ரிதம்.

இவை பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன் ஆகியோரை பிரதிநிதித்வம் செய்கின்றன.

ஆகவே ஒவ்வொருவரும் இந்த மூன்றில் தூய்மையை அடைய முயற்சிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு சிம்னி கண்ணாடியை எடுத்துக் கொள்வோம்.

அதை ஒரு விளக்கின் மேல் பொருத்தும் போது, சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் ஒரு மெல்லிய கரும் புகைப் படலம் கண்ணாடியில் படிந்திருபப்தைப் பார்க்கிறோம்.

இதன் பயானாக வெளிச்சம மங்கலாக ஆகிறது.

கண்ணாடியை நன்கு சுத்தம் செய்யும் போது தான், வெளிச்சத்தைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

நீங்கள் செய்ய வேண்டியது இதைத் தான்!

கண்ணாடியில் படிந்திருக்கும் மெல்லிய கரும்புகைப் படலத்தை உங்கள் மனதில் உருவாகும் அகங்காரத்துடன் ஒப்பிடலாம்.

உங்கள் மனதில் உள்ள அகங்காரத்தினால் திவ்ய ஞான ஜோதியை உங்களால் பார்க்க முடியவில்லை.

அகங்காரம் உங்கள் மனதில் எப்படி நுழைகிறது?

உண்மையின் வழியை நீங்கள் விடும் போது அது நுழைகிறது.

உங்களுடைய உண்மையான சொரூபத்தை நீங்கள் உணராமல் இருக்கும் போது நீங்கள் அகங்காரம் கொண்டவராக ஆகிறீர்கள்; உலகியல் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் உருவாக்குகிறீர்கள். அகங்காரத்தை விரட்ட, உலகியல் சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். அகங்காரத்தை அகற்றாமல் ஞானத்தைப் பெறுதல் இயலாது.

ஆத்மாவின் ஒளி பொருந்திய பிரகாசத்தின் காட்சியை அடைய அகங்காரம் என்னும் கரும்புகைப் படலத்தை உங்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டும்.  இதுவே உபயபாரதியின் உபதேசம்.

பெண்களுக்கு  ஆன்மீக அறிவைக் கொடுத்தவாறே அவர் கங்கை நதிக்கரையோரம் ஒரு ஆசிரமத்தில் வசித்து வந்தார். பல பெண்மணிகள் அவரது சிஷ்யைகள் ஆயினர். ஒவ்வொரு நாள் காலையும் அவர்கள் கங்கை நதிக்குச் சென்று நீராடுவர்.

செல்லும் வழியில் பிரம்ம ஞானி என்று மக்களால் அழைக்கப்படும் ஒரு சந்யாசி வாழ்ந்து வந்தார்.

ஒரு சின்ன மண்குடத்தின் மீது அவருக்கு மிகுந்த ஒட்டுதல் இருந்தது, அதில் தான் அவர் நீரை நிரப்பி வைத்திருப்பார்.

ஒரு நாள் அந்த மண்குடத்தைத் தலையணையாக வைத்து அவர் படுத்திருந்தார்.

தனது சிஷ்யைகளுடன் அந்த வழியே சென்ற உபயபாரதி அந்தக் காட்சியைப் பார்த்து, “ஞானம் அடைந்தவராக இருந்த போதிலும் அவரிடம் ஒரு சிறிய குறை இருக்கிறது. உலகைத் துறந்து விட்ட போதிலும் தலையணையாக உபயோகித்து தன்னுடைய மண்குடத்தின் மீது அவர் ஒட்டுதலுடன் இருக்கிறார்.” என்று குறிப்பிட்டார்.

இதைக் கேட்ட சந்யாசி கோபம் கொண்டார். உபயபாரதியும் அவரது சிஷ்யைகளும் கங்கையிலிருந்து திரும்பி வரும் போது தான் அந்த மண்குடத்தின் மீது ஒட்டுதலாக இருக்கவில்லை என்பதைக் காண்பிக்க

 அந்த மண்குடத்தைச் சாலையில் தூக்கி எறிந்தார்.

இதைப் பார்த்த உபயபாரதி சொன்னார்; “ நான் அவரிடம் அபிமானம் என்ற ஒரு குறை தான் இருக்கிறது என்று நினைத்தேன். இப்போது அவரிடம் இன்னொரு குறையும் இருப்பதை உணர்கிறேன். அகங்காரமும் அவரிடம் இருக்கிறது. அபிமானத்துடன் அகங்காரமும் இருக்கும் ஒருவர் எப்படி ஞானியாக முடியும்?”

அவரது கூற்று சந்யாசியின் கண்ணைத் திறந்தது.

உபயபாரதி நாடெங்கும் பயணித்து ஞான மார்க்கத்தை உபதேசித்தார்;  பரப்பினார்.

பெண்கள் இயல்பாகவே விஞ்ஞானம், சுஞ்ஞானம், ப்ரஜ்ஞானம் ஆகியவற்றின் திருவுருவங்கள். அவர்கள் அனைத்து நற்குணங்களின் பெட்டகங்கள். ஆனால் கலியுகத்தின் தாக்கம் காரணமாக, பெண்கள் இழிவாகப் பார்க்கப்படுகின்றனர். இது ஒரு மகத்தான தவறு.  அவர்களுக்குரிய மரியாதையுடன் அவர்கள் நடத்தப்பட வேண்டும். இன்று பெண்கள் ஆண்களுக்கு ஈடாக வேலைகளைச் செய்யப் போட்டி போடுகிறார்கள். என்றாலும் அப்படிச் செய்வதற்கு முன், அவர்கள் தங்கள் இல்லத்தின் தேவைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தெலுங்குப் பாடல்

“எல்லாப் பெண்மணிகளும் வேலை பார்க்கச் சென்று விட்டால், இல்லங்களை யார் பார்த்துக் கொள்வார்கள்?

கணவனும் மனைவியும் இருவரும் அலுவலகம் சென்று விட்டால், வீட்டை யார் பராமரிப்பார்கள்?

பெண்கள் இதர குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சென்று விட்டால், அவர்கள் குழந்தைகளுக்கு யார் கற்றுக் கொடுப்பார்கள்?

ஆண்களைப் போலப் பெண்களும் தங்கள் கையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு சென்றால், சமையலறையில் யார் வேலை பார்ப்பார்கள்?

சம்பாதிப்பது சில பணப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும், ஆனால் அது எப்படி வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்?

நீங்கள் தீவிரமாக இதைச் சிந்தனை செய்து பார்த்தால் அலுவலகம் செல்லும் பெண்மணிகளுக்கு சந்தோஷமே இல்லை.”

   தெலுங்குப் பாடலை பாபா பாடினார்.

            பாபாவின் உரை தொடரும்

****

‘டம், டம், டம்’ குறுக்கெழுத்துப் போட்டி211119 (Post No.7244)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 21 NOVEMBER 2019

Time  in London – 19-27

Post No. 7244

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

எங்கேடம்டம்டம் – என்று சொல்லிக்கொண்டே எட்டு சொற்களையும் ஒரே `தம்`-மில் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

1. – ராமாயணத்தில் கம்பர் எழுதியது ஆறுதான்; ஏழாவதை அவர் எழுதவில்லை.

2. – முட்டை என்றும், பிரபஞ்சம் என்றும் பொருள்;

3. – இதை வைப்பதற்கென்றே — சாலை உண்டு;

4. – தலையில்லாத உடல்; திட்டுவதற்குப் பயன் படும் சொல்.

5. இறந்தார்க்குப் படைப்பது;

6. – போலீஸாருக்கு அழுவது;

7. – சிவனுக்கு இது மட்டும் நீல நிறம்;

8. – மாம்பழத்தை முழுதாகக் கடித்தால் ஒரு ருசி. இப்படித் — போட்டு சாப்பிட்டால் தனி ருசி.

ANSWERS

1.கா ண்டம், 2.அ ண்டம், 3.ப ண்டம், 4.மு ண்டம்,

5.பி ண்டம், 6.த ண்டம், 7.க ண்டம், 8.து ண்டம்

–subham–

SWAMI’S CROSS WORD 211119 (Post No.7243)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 21 NOVEMBER 2019

Time  in London – 17-39

Post No. 7243

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000