

WRITTEN BY KATTUKKUTY
Post No. 9086
Date uploaded in London – – 29 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து வாரம் தோறும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 28-12-2020 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.
புத்தி தரும் புதன்
Kattukutty
கிரகங்களில் மிகச்சிறியதும், சூரியனுக்கு மிக அருகில் உள்ளதுமான கிரகம்
புதன். சொல்லாற்றலாலும், புத்தியினாலும் உலகத்தின் போக்கையே மாற்றக் கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்த புதனை வணங்கி ஆரம்பிக்கின்றேன்……

முதலில் புதனின் காரகத்தைப் பார்ப்போம்
புதன் வித்யாகாரகன், கல்விக்குஅதிபதி அதாவது அறிவுச் சுரங்கம் ஞான காரகன் விவேகத்தின் வேந்தன்,புதிய கண்டு பிடிப்புகளுக்கு
ஆதாரமாக இருப்பவன், கதைகளுக்கும், கவிதைகளுக்கும்
உரியவன், வரும் காலத்தை கணக்கிட்டுக் கூறும் ஜோதிடத்தின் அதிபதி லாஜிக், பேச்சு, பத்திரிக்கை, போன்றவற்றிர்க்கு அதிபதி,
நகைச்சுவை நாயகன் ……ஞாபக சக்தி நாயகன் நுண்ணறிவின் ஆணி வேர்…….
நுண்ணறிவு என்றால் creative brain உடையவர்கள்.
இந்த உலகில் அதிக I Q உடையவர்களில் மிக முக்கியமானவர்களுள்
லியர்னாடோ டா வின்சி -யின் I Q 220 இது வரையிலும் இந்த எண்ணிக்கையை யாருமே மிஞ்ச வில்லை….இரண்டாவதாக்
ஸர்ஐசக் நியூட்டன் – 200 தாமஸ் ஆல்வா எடிசன்-150,
ஐன்ஸ்டீன் – 162 இதற்கு காரணம் புதனே!!! தொலை நோக்கு பார்வை, கணித த்தில் புலி, சிற்பக் கலை வல்லுனர்,
உறவுகளில் தாய் மாமன், உடலில் நரம்புகளுக்கு அதிபதி!!!
மிகப் பழமையான ரிக் வேத த்தின் 5 வது காண்டத்திற்கு அதிபதி.
ரோமர்கள் இவரை “தூதுக் கடவுள்” அதாவது “மெர்குரி”
என்று அழைத்தனர்
புதனின் வேறு பெயர்கள்
கணக்கன், அறிஞன், சௌம்யன், விகட கவி, புத்தி தாதா, மதிமகன்
தேர்பாகன்,அருணன், தூதுவன், சிந்தை கூரியன், சாமன், தனப்ரதன்
கொம்பன்
புதனின் வரலாறு
தட்ச ப்ரஜாபதி, சந்திரனின் அழகில் மயங்கி தன் 27 நட்சத்திர பெண்களை சந்திரனுக்கு மண முடித்தான். சிவனருளால் கிரக பதவியையும் பெற்றான்.இதனால் ஆணவம் அதிகமாகி, குருவின்
மனைவியாகிய தாரை எனபவளைக் கவர்ந்து அசுர குருவினிடம்
சேர்ந்து கொண்டார்.கோபமடைந்த தேவர்கள் அசுரர்களிடம்
போர் செய்தனர்.பார்த்தார் பிரும்ம தேவன். பஞ்சாயத்து செய்து
போரை நிறுத்தி, தாரையை மீட்டு குருவிடம் ஒப்படைத்தார்.
தாரை கர்ப்பமாக இருத்ததால்ஏற்றுக் கொள்ளவில்லை குரு……
அந்த சமயம் தாரைக்கு அழகான ஆண் மகன் பிறந்தான்.அழகும்.
ஒளியும் பொருந்திய அந்த குழந்தைக்கு “புதன்” என்று
பெயரிட்டனர்.
சந்திரனின் மனைவிகளில் ஒருவரான ரோகிணி அந்தக் குழந்தையை
அன்புடன் வளர்த்து வாலிபனாக்கினாள். வாலிபனான புதன் தன்
வரலாறை அறிந்து தன் தந்தை சந்திரனை வெறுத்தார். மேலும்
திருமணம் செய்துகொண்டு புத்திரனைப் பெறுவதையும் வெறுத்தார்.
தந்தையான சந்திரனையும் தாயான தாரையையும் வெறுத்து இமய
மலைச்சாரலில் ஒரு ஆஸ்ரமத்தை அமைத்துக்கொண்டு யாருடைய
உபதேசமும் பெறாமல் நாரயணனனைகுறித்து கடுமையான தவம் செய்தார்.நாராயணனின் வரம்பெற்று எல்லாக் கலைகளிலும்
சுயமாகவே தேர்ச்சி பெற்றார்.
புதனுக்கு சாபம்
இமய மலையில் கௌரிதடாகம் என்ற ஒரு இடத்தில் ஆஸ்ரமம்
அமைத்து கொண்டு, தனக்கு வரவேண்டிய எல்லா சொத்து சொந்த பந்தகளை ஒழித்து தவ வாழ்க்கையை மேற் கொண்டார்.
சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று அழகாக இருந்த அவரை தேவ
கன்னிகை தன்னை திருமணம் செய்து கொள்ளமாறு வற்பறுத்தினாள்.
தாய் தகப்பனின் தவறான வாழ்க்கையைக் கண்டும், தன் பிறப்பின் இழி நிலையை நினைத்தும் புதன் அவளுக்கு இணங்க மறுத்தான்.
அத் தேவகன்னிகை புதனை அலியாக மாறுமாறு சபித்தாள். தாய் தந்தை, அதிகாரங்கள் அனைத்தையும் வெறுத்து தவத்தினில்சிறந்து
சகல கலைகளையும் சுயமாகவே கற்ற எனக்கு ஏன் இந்த சாபம் என எண்ணிய புதன், நாராயணனைக் குறித்து தவம் செய்தார். நாராயணன் தோன்றி சிவனை நோக்கி தவம்செய்யச் சொன்னார்
சிவன் தோன்றி அலி சாபத்தை மாற்றி மீண்டும் ஆணுருவாக
திரு வெண் காடு என்னும் ஸ்தலத்திற்கு போய் அங்குள்ள மூன்று குளங்களில் குளித்து தன்னை வழிபட்டால் அலித்தன்மை
நீங்கும் என்றார். புதனும் அவ்வாறு செய்து தன் அலித்தனமை
நீங்கப் பெற்றார்.தன் போன்ற நிலை தன் குழந்தைக்கும் வரக்கூடாது
என்ற எண்ணத்தில் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்ற
மன உறுதியுடன் மீண்டும் கௌரி தடாகம் அருகில் உள்ள ஆஸ்ரமத்தில் தவம் செய்ய ஆரம்பித்தார்.

புதனின் தவம்
இது இவ்வாறு நிற்க, சூரியனின் புதல்வனான வைவஸ்வத மனுவுக்கு
புத்திரன் இல்லாத காரணத்தினால் வசிஷ்ட முனிவரின் ஆலோசனையினால் புத்திர காமேஷ்டி யாகய் செய்து பத்து
புத்திரர்களைப் பெற்றான். அவர்களில் மூத்த புத்திரனான இளன் என்பவனுக்கு பட்டம் கட்டினார் வைவஸ்வத மனு. அந்த இளன் என்ற
அரசன் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள அஸ்வ மேத யாகம்
செய்தான்.
இனிமேல் விட்லாச்சார்யா படத்தை விட மிஞ்சும் காட்சிகள் வருகின்றன.40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாய மோகினியிலிருந்து
ஜகன் மோகினி வரை பார்த்திருப்பார்கள்.
அப்படி செய்து வருகையில், புதன் ஆஸ்ரமத்தின் சற்று தூரத்தில் உள்ள கௌரிதடாகத்தில் குளித்தான், களைப்புற்ற அவனது குதிரையும் குளித்தது. குளத்திலிருந்து வெளியே வந்து பார்த்த பிறகு
தான் தெரிந்தது தானும் தன் குதிரையும் பெண்ணுருவாக மாறி
இருப்பது…….. இளன் அலைந்து திரிந்து தூரத்தில் உள்ள புதன் ஆஸ்ரமத்திற்கு சென்று கதறி அழுது காரணத்தைக் கேட்டான்.
பார்வதியும் பரம சிவனும் தினசரி குளிக்கும் குளமாம் அது…..
முனிவர்களும் தவசிகளும் சிவ பார்வதி தரிசனம் பெற அங்கு
அடிக்கடி கூடியதால் தன் “ப்ரைவசி “ போய் விடுகிறது. அதனால்
யார் யாரெல்லாம் அந்த குளத்தில் குளிக்கிறார்களோ அவர்கள் பெண்ணாக மாறக் கடவது என்று பார்வதி சாபமிட்டாள்.
அந்த குள்த்தில் மட்டுமல்ல எப்போதும் பெண்கள் குளிக்கும்போது
பாரக்கக் கூடாது. பால் மாறி விடும் ஜாக்கிரதை!!!
இளன் என்ற ஆண் இளையாக மாறியதால் சிவனிடம் சென்று கதறி
அழுது வேண்டினாள். என்மனைவியின் சொல்லை நானே மாற்ற
முடியாது. ஆகையால் ஒருவருடம் ஆணாகவும், ஒரு வருடம் பெண்ணாகவும் இருக்க வரம்தருகிறேன்……. என்றார் சிவன்!
இளை புதன் ஆஸ்ரமத்திலிருந்து அவனுக்கு பணிவிடை செய்து
புரூரவன் என்ற குழந்தையுப் பெறுகிறாள்.இப்படியாக போகிறது
புதனின் கதை…….
ஜாதகத்தில் புதன் நீசமானாலோ, கெட்டஸ்தானத்தில் இருந்தாலோ
கெட்ட கிரக சேர்க்கையினாலோ வரக்கூடிய வியாதிகள்
ஞாபகமறதி, புத்தி மந்தம், நரம்புத் தளர்ச்சி,நரம்பு சம்பந்தமான
எல்லா நோய்களும், வலிப்பு, தாய் வழி சொந்தங்களின் பரம்பரை
நோய்கள்,சுய இன்ப வேட்கை, ஓரினச்சேர்க்கை, அலியாக மாற
துடித்தல் அல்லது மாறுதல்- பரிகாரம் கீழே காண்க

MERCURY விஞ்ஞான விவரங்கள்
சூரியனிடமிருந்து புதனின் தூரம். ஒரு கோடியே 60 லட்சம்
கிலோ மீட்டர்கள்
சூரியனைச் சுற்றிவர எடுத்துக்
கொள்ளும் நாட்கள். 88 நாட்கள்
தன்னைத்தானே சுற்றிக் கொள்ள
எடுத்துத்து க் கொள்ளும் நேரம் – 24 மணி நேரம்
பூமிக்கு சந்திரனைப்போல நிலவு கிடையாது.
புதன் பற்றிய மற்ற விவரங்கள்
மனைவியின் பெயர்- இளா என்ற ஞான தேவி
மகன். புரூரவன்
உப கிரகம் -அர்த்தப் பிரகரணன்
லிங்கம் -பெண் அலி
ஜாதி -வைசியர்
அதிகாரம் – இளவரசன்
அவஸ்த்தை – சிறுவன்
காரகம் – தாய் மாமன்,வித்யா காரகன்
வித்தை – கணிதம், ஜோதிடம்
அதி தேவதை – விஷ்ணு
ப்ரத்யதி தேவதை – நாராயணன்
கோத்திரம் – ஆக்னேய கோத்ரம்
தேசம் – மகத தேசம்
வாகனம் – குதிரை
பறவை – கிளி( ஜோதிட அதிபதி புதன் அதனால்தான்
புதனின் பறவையை வைத்தே கிளி ஜோஸ்யம் பார்க்கிறோம்)
வடிவம் – அம்புக் குறி
நாடி – வாத நாடி
குணம் – தாமசம்
திக்கு – வட கிழக்கு
ருது – சரத் ருது
பூதம் – நிலம்
தாது – நரம்புகள்,தோல்
நிறம் – பச்சை
ரத்தினம் – மரகதம்
மலர் -வெண் காந்தள்
தானியம்- பச்சைப் பயறு
ராகம் ஸ்ரீ ராகம்
சமித்து – நாயுருவி
சுவை – உவர்ப்பு
எழுத்து -அ
நோய் -வாதம்
உலோகம் – பித்தளை
வேதம் – ரிக் வேத த்தின் 5-ம்பகுதி
ஸ்வரம் – ஸ
ஆட்சி – மிதுனம், கன்னி
உச்சம் – கன்னி
நீசம் – மீனம்
பார்வை – 7, முழு,4,8 முக்கால், 5,9 அரை பார்வை
பகை – சந்திரன்
நட்பு – சூரியன், சுக்கிரன்
சமம் – செவ்வாய் குரு, சனி
நட்சத்திரங்கள் -ஆயில்யம், கேட்டை, ரேவதி
திசா காலம் – 17 வருடங்கள்
பரிகார ஸதலங்கள். திருவெண்காடு, மதுரை ஸ்ரீ மீனாட்சி.
வைணவ நவ திருப்பதிகளில் – புளியங்குடி
நவ கைலாச சிவ ஸ்தலங்களில் – தென் திருபேரை
சென்னையில்உள்ள நவகிரக ஸ்தலங்களில் கோவூர

புத காயத்திரி
ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புதப் பரசோதயாத்
புத ஸ்லோகம்
ப்ரியங்கு கலிகாஸ்யாமம்ரூபேணப் பிரதிமம் புதம்
ஸௌம்யக் ஸௌம்யோ குணாபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்
பழமொழி – பொன் கிடைத்தாலும், அதாவது செல்வம் எவ்வளவு
கிடைத்தாலும் புதன் கிடைப்பது அரிது , அதாவது அறிவு கிடைப்பதுஅரிது.
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு–
மேற்கண்ட ஸ்தலங்களுக்கு விஜயம் செய்து புத்தாண்டில்
புதனை வணங்கி அறிவும்ஆற்றலும் பெற ஞான மயம் அன்பர்களை வேண்டி கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன்

நன்றி, வணக்கம்
****
TAGS— புதன் , விவரங்கள், புத்தி , புதன்