
Post No. 9823
Date uploaded in London –6 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கட்டுரையின் இரண்டாவது பகுதி இது. முதல் பகுதி ஜூலை 2-ம் தேதி இங்கு வெளியானது
ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் முதல் 25 கவிதைகளில் காணப்பட்ட திருக்குறள் கருத்துக்களைக் கண்டோம். திருவள்ளுவ மாலை பாடிய பல கவிஞர்கள் திருக்குறளை தமிழ் வேதம், தமிழ் மறை என்று போற்றியதையும் நாம் அறிவோம்.
இதோ மேலும் சில ரிக் வேதத் துதிகளில் திருக்குறள் கருத்துக்கள் :-
(மூன்று எண்களில் முதல் எண் ரிக் வேத மண்டலத்தையும், இரண்டாவது எண் துதியையும், மூன்றாவது எண் துதியிலுள்ள மந்திரத்தின் எண்ணையும் குறிக்கும்)
XXX
தந்தை, தாய், மகவு இவர்களிளிடையே உள்ள அன்பையும் பாசத்தையும் பல குறள்களில் காண்கிறோம்.
மழலைச் சொல் என்பது குழல், யாழ் இனிமையை வீட மிகவும் இனிமையானது; குழந்தைகள் அளாவிய உணவு அமிர்தத்துக்கு இணையானது.; ஈன்ற பொழுது தாய் பெரிதும் உவப்பாள் ; அதைவிட அவன் சான்றோன் என்று கேட்கும்போது இன்னும் மகிழ்வாள்.; ஒரு மகனை சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை. அவன் நல்ல புலமை பெற்று பிரபல ம் ஆகும்போது இத்தைகைய மகனைப் பெற அவனது பெற்றோர்கள் என்ன நோன்பு அனுஷ்டித்தார்களோ ; ஆள் சக்கைப்போடு போடுகிறானே என்று பல குறள்களில் வள்ளுவர் பாடுவதைக் காண்கிறோம். இதே போல ரிக் வேதம் முழுதும் எங்களுக்கு நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும், வீரர்கள் பிறக்க வேண்டும் என்று ரிஷி முனிவர்கள் பாடுகின்றனர்.
ஒரு எடுத்துக்காட்டு இதோ :-
RV 1-26-3
அக்கினியே! போற்றத் தகுந்த நீ எனக்குத் தந்தை போன்றவன்; நான் உனக்கு மகன் .நீ எனக்கு பந்து/ உறவினன்; நீ எனக்கு நண்பனுக்கு நண்பன் போன்றவன்.
ஒரே இரண்டு வரி மந்திரத்தில் கடவுளை தந்தை போன்றவன்; சொந்தக்காரன், நண்பன் என்றெல்லாம் அழைப்பது உறவு நெருக்கத்தையும் அவர்கள் மீதான அன்பையும் காட்டுகிறது.
RV 1-91-20
சபைக்குரியனும், தந்தைக்குப் புகழைத் தருபவனுமான புதல்வனை
சோமன்/சந்திரன் தருகிறான் – ரிக் வேதம்
ஒப்பிடுக :- இவன் தந்தை என்நோற்றான் கொல் – குறள்
குறள் 70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]
பரிமேலழகர் உரை
தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி – கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் – தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல்
XXX
1-26 பாடியது ரிஷி சுனச்சேபன்
கருமிகள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதை வள்ளுவர் ஆதரிக்கிறார். கையை முறுக்கி தாடையை நொறுக்கு; கரும்பு போல கசக்கினால்தான், கருமியிடமிருந்து காசு வரும் என்கிறார் வள்ளுவர்.
கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு
அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)
பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.
இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் (1078)
பொருள்: சான்றோர்கள் சொன்ன மாத்திரத்திலேயே பிறர்க்கு உதவி செய்வர். கயவர்கள் மட்டும் கரும்பு போல் கொன்று பிழிந்தால்தான் பயன்படுவார்கள்.
இதோ ரிக் வேதக்கருத்து
RV 1-36-16
அக்கினியே உன்னுடைய எரிக்கும் சுவாலைகளால் தானம் அளிக்காத எல்லா பகைவர்களையும் மண் பாண்டங்களைத் தடியால் அடிப்பது போல அடித்து நொறுக்கு என்கிறார் கோரனின் புதல்வன் ரிஷி கண்வன் பாடுறார்.
RV 1-84–8
அவியளிக்காதவனை – கருமியை – தன் காலால் காளானை மிதிப்பது போல எப்போது மிதிப்பான் ? எங்கள் துதிகளை இந்திரன் எப்போது கேட்பான்?
XXX
RV 1-90-9
அடி அளந்தான் என்று விஷ்ணுவின் வாமன- த்ரிவிக்ரமாவதாரத்தை வள்ளுவர் போற்றுகிறார்.
‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று ஆண்டாளும் பிற ஆழ்வார்களும் விஷ்ணுவைப் பாடுகிறார்கள்.
விஷ்ணு மூன்றடியால் உலகை அளந்த விஷயம் ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது.
கம்பீரமான கால டியுள்ள விஷ்ணு எங்களைக் காப்பாற்றுவானாகுக.- ரிக் வேதம் -RV 1-90-9
மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு (610)
“தன் அடியினால் உலகத்தை அளந்த இறைவன் தாவிய
நிலப்பரப்பு முழுவதையும், சோம்பல் இல்லாத மன்னன் ஒரு சேர அடைதல் கூடும்.”
xxxx
1-48-12
உஷா தேவியே, வானிலிருந்து எல்லா தேவர்களையும் சோமத்தைப்பருக அழைத்து வா..
முதல் பகுதியிலேயே கண்டடோம் – வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 50
XXX
முதல் நூறு பாடல்களைக் கண்டோம் .
தொடரும் ……………………………….

tags – தமிழ்வேதம்-2, ரிக் வேதம் , தமிழ்மறை
K S Venkataraman
/ July 7, 2021அன்பார்ந்த ஐயா,
ரிக் வேதம் உலகிலேயே மிகப்பழமையானது என்பதும், மேனாட்டு அறிஞர்களே தவிர்க்க
இயலாமல் கி.மு 1500க்கு முன் என்று ஏற்றுக்கொண்டிருப்பதும், திலகர் கி மு 6000
என்ற கருத்தைக் கொண்டிருந்தார் என்பதும், திருக்குறள் கி.மு 300-கி.பி
300க்குட்பட்ட சங்ககாலத்திலோ அல்லது பிறகோ தோன்றியது என்பதும் தாங்கள்
அறியாததா?
திருக்குறளில் வேதக்கருத்துக்கள் காணப்படுவது உலகறிந்த உண்மை. இதன் பொருள்
திருவள்ளுவர் ஒரு வேத விற்பன்னர் என்பதுதான். வேதத்தில் திருக்குறள்
கருத்துக்கள் உள்ளன என்று சொல்வது ஏற்புடையதாகத் தெரியவில்லை. தயவுசெய்து மறு
பரிசீலனை செய்யுங்கள்.
K S Venkataraman
Tamil and Vedas
/ July 7, 2021POINTED NOTED. THANKS..