
Post No. 11,387
Date uploaded in London – – 23 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதரும் தமிழும்! – 1
ச.நாகராஜன்
அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.
முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.
பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.
அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.
1) திருப்பரங்குன்றம்
வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்
பாடல் எண் 14 – சருவும் படி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வளமான தமிழைப் பயில்கின்றோர் பின்னால் திரிகின்றவன்
2) திருச்செந்தூர்
தமிழினி தென்காற் கன்றிற்
றிரிதரு கஞ்சாக் கன்றைத்
தழலெழ வென்றார்க் கன்றற் புதமாகச்
சிவ வடி வங்காட் டுஞ்சற் குருபர
பாடல் எண் 26 அவனி பெறுந்தோட்டம் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தமிழ் போல் இனிய இளம் தென்றல் காற்றில் உலாவும் மன்மதனாம் லக்ஷ்மி மகனை, அன்று அற்புதமாக நெருப்பை எழுப்பி வென்ற சிவபிரானுக்கு பேரின்ப உண்மையாம் மங்களப் பொருளைக் காட்டிய சற்குருபரனே!
3) திருச்செந்தூர்
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழைரு
செவி குளிர இனியதமிழ் பகர்வோனே
பாடல் எண் 28 : அறிவழிய மயல் பெருக எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிவனுக்கு ஒப்பான பொதியமலையைச் சார்ந்த முனிவனான அகத்தியனின் உள்ளம் மகிழ அவனது இரண்டு செவிகளும் குளிர இனிய தமிழை ஓதியவனே!
4) திருச்செந்தூர்
தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே
பாடல் எண் 52 : கொடியனைய எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தமிழில் வல்லவனே! உயர்ந்த பரம் பொருளாகிய சங்கரன் வணங்கும் தம்பிரானே!
5) திருச்செந்தூர்
புகலரியதாம் த்ரி சங்கத்
தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சிப்
புவியதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர்
புனிதம் இலி மாந்தர் தங்கள்
புகழ் பகர்தல் நீங்கி நின் பொன்
புளக மலர் பூண்டு வந்தித் திடுவேனோ
பாடல் எண் 60 : தகர நறை பூண எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சொல்வதற்கு அரியதாம் முச்சங்கத்து தமிழ் நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில் வாழ்ந்தும் பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும் புனிதமில்லாத மக்களிடம் போய் அவர்களைப் புகழ்ந்து பேசுதலை விட்டு விட்டு உனது அழகிய இன்பம் தருகின்ற திருவடி மலர்களை மனதில் கொண்டு துதிக்க மாட்டேனோ?
6) திருச்செந்தூர்
தகைக்கும் தனி திகைக்கும் சிறு
தமிழ்த் தென்றலி னுடனேநின்
றெரிக்கும் பிறையெனப் புண்படு
மெனப் புன்கவி சிலபாடி
இருக்கும் சிலர்
பாடல் எண் 64 : தரிக்குங்கலை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தனிமையில் நின்று திகைக்கின்றேன். மெல்லிய இனிய தென்றல் காற்றுடன் வந்து சந்திரன் நின்று கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன் என்றெல்லாம் புன்மையான கவிதைகள் சிலவற்றை மனிதர்கள் மீது பாடி சில புலவர்கள் வீணே இருக்கின்றனர்.
தமிழ்த் தென்றல் – இனிய தென்றல்
7) திருச்செந்தூர்
மழுக்கைக் கொண்ட சங் கரர்க்குச் சென்று வண்
தமிழ் சொற் சந்தமொன்று அருள்வோனோ
பாடல் எண் 71 : நிதிக்குப் பிங்கலன் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மழுவைக் கையில் ஏந்தியவருமான சங்கரற்கு குருவாகச் சென்று வளமான தமிழ்ச் சொற்களால் வேதப் பொருளை ஓதியவனே!
8) திருச்செந்தூர்
துணைச் செம்பொற் பதத்து இன்புற்று
எனக்கென்று அப் பொருள் தங்கத்
தொடுக்கும் சொல் தமிழ் தந்து இப்படி ஆள்வாய்
பாடல் எண் 79 :பருத்தந்த எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உனது இரண்டு செம்பொன் பாதங்களில் இன்புறச் செய்து எனக்கு எப்போதும் அப்பெரும் பொருள் நிரம்பத் தங்கும்படியாகத் தொடுக்கப்படும் தமிழ்ச் சொற்களைத் தந்து இப்போதே ஆண்டு அருள்வாய்!
9) திருச்செந்தூர்
முந்து தமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொழு நீடு பாடிப் பாடி
முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி உழலாதே
பாடல் எண் 91 : முந்து தமிழ் மாலை கோடிக் கோடி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மொழிகளில் முந்தியுள்ள தமிழ் மொழியில் பாமாலைகளை கோடிக் கோடிக் கணக்கில் சந்தப் பாக்களின் வகையில் நீண்டனவாகப் பாடிப் பாடி அழிகின்ற மக்களின் வீட்டு வாசல்கள் எங்கே உள்ளன என்று தேடித் தேடி அலையாமல்…
10) திருச்செந்தூர்
வாய்ப்புற்ற தமிழ் மார்க்கத் திண் பொருள்
வாய்க்குச் சித்திர முருகோனே
பாடல் எண் 93 : மூப்புற்றுச் செவி கேட்பற்று எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வாய்ப்புள்ள தமிழின் அகத்துறையின் உறுதியான பொருளை உண்மை இதுவே என ருத்திரசன்மனாக வந்து அழகுறத் தெளிவாக்கிய முருகப் பெருமானே!
விளக்கம் : இந்தப் பாடல் விளக்கும் சம்பவம் இது:
மதுரையில் சொக்கநாதர் இயற்றிய இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்கு நக்கீரர் ஒரு உரையை எழுதினார். அந்த உரையே சிறந்த உரை என்று சங்கப் புலவர்களிடையே முருகனே ருத்திரசன்மனாக வந்து நிலை நாட்டினான்.
இதைத் திருவிளையாடல் புராணத்தில் விளக்கமாகக் காணலாம்.
***
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
புத்தக அறிமுகம் – 95
அறிவியல் அதிசயங்கள் (பாகம் 2)

பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. சூரியனிலிருந்து பூமியை நகர்த்தப் போகிறார்களா?
2. சூரியனில் வெடிப்பு – பூமியைப் பாதிக்குமா?
3. நிலவில் குண்டு போட அமெரிக்கா திட்டம்
4. பூமி ஒரு குக்கிராமம்
5. புதிய கோணத்தில் பூமியின் வளர்ச்சி….
6. சூடாகும் பூமி
7. ஓஸோன் துளை பெரிதாகிறது
8. விண்வெளிச் சாலை
9. விண்கலத்தின் ஓட்டுநர் அறை எப்படி இருக்கும்?
10. ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களை அழைத்த நாஸா.
11. விண்வெளியில் குப்பை கூட்ட லேசர் விளக்குமாறு
12. விண்வெளி ஜோதி
13. வானிலையை மாற்றும் நட்சத்திர ரகசியம்
14. சிரியஸ் நட்சத்திரம்
15. அமெரிக்காவில் சுனாமி ஆபத்து
16. அண்டார்டிகா ஆபத்து
17. அண்டார்டிகா பனி நெடுஞ்சாலை
18. பனி மனிதன் இருக்கிறானா?
19. பனி மனிதன் இருக்கிறான்
20. முதல் மனிதன் தோன்றியது எங்கே?
21. தூக்கம் விளக்கும் ரகசியங்கள்
22. ஒரு நாளைக்கு 26 மணி நேரம் ஆக்குவது எப்படி?
23. அரிய வகை மரம்
24. நோய் தீர்க்கும் மூலிகைகள்
25. சிகரெட்டும் போதைப் பொருளே
26. அபாயத்தில் மனித குலம்
27. லோகி பேர்ட்
28. ஆயிரம் கண்டுபிடிப்புகளைத் தந்த அபூர்வ மேதை
29. காலப் பயணம்
30. மூளையை நூறு விழுக்காடு முழுவதுமாகப் பயன்படுத்த ஏழு
அதிசய வழிகள்
31. சித்திரவதை
32. வியர்வை ஊசி!
33. பெண்களைக் கவரும் நீலக் கண்கள்
34. டெலிவிஷனிலிருந்து விஷப்புகை
35. செயற்கைப் பெண் இயந்திரம் தயார்
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
This amazing book consists of incredible phenomenon and peculiar astonishing facts from all over the world. Interesting to read about the use of Laser Cannons to sweep up the galaxial garbage and also America’s plan to bomb the moon and galaxial road. The statistical analysis of imagining the earth as a tiny city excites the readers wondrously. This book also contains segments such as igloo men, first man of the world and time travel etc.
உலகின் பல்வேறு அதிசய நிகழ்வுகளையும், வித்தியாசமான செய்திகளையும் உள்ளடக்கியுள்ளது இந்நூல். விண்வெளியில் குப்பையைக் கூட்ட லேசர் விளக்குமாறு தேவைப்படும் எனும் செய்தி அதிசயிக்க வைக்கிறது. நிலவில் குண்டு போட அமெரிக்கா எடுத்திருக்கும் திட்டம், விண்வெளிச் சாலை போன்றவை பிரமிக்க வைக்கின்றன. பூமியை ஒரு குக்கிராமமாகக் கற்பனை செய்தால் எப்படி இருக்கும் என ஒரு புள்ளியியல் விவரணை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இன்னும் பனிமனிதனைப் பற்றிய செய்திகள், உலகின் முதல் மனிதனைப் பற்றிய சேதிகள், காலப்பயணம் என பலதரப்பட்ட விஷயங்களையும் தன்னுள் கொண்டுள்ளது இந்நூல்.*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் அதிசயங்கள் -பாகம் 2’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*