பாரதியார் கண்ட  அழகான காடு (Post No.11,535)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,535

Date uploaded in London – 12 December 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

இயற்கையை  வருணிப்பதில் பாரதியார் வெகு சமர்த்தர். மலைபுயல் காற்று வந்தே மாதரம் பாடலில் நாட்டின் இயற்கை வள வருணனை ஆகியவற்றைப் படித்தோரும் கூட பாரதியார் ஒரு அழகான காட்டை வருணித்திருப்பதைக் கவனித்து இருக்க மாட்டார்கள். ஏனெனில் அது கண்ணன் என் காதலன் வருணனைக்குள் புதைந்து போய்விட்டது. அழகான மலர்கள்பழங்கள் நிறைந்த மரங்களுடன் சிங்கம்புலிமான் என்று பல மிருகங்களையும் ,நிலத்தில் இலைகளுக்கிடையே மறைந்துள்ள மலைப்பாம்பிம்பியும் நமக்கு காட்டுகிறார். அதை ஆங்கில மொழிபெயர்ப்புடன் படிக்கும் போது அதன் பொருள் மேலும் அழகுடன் மிளிர்கிறது

கண்ணன் என் காதலன் – 3

(காட்டிலே தேடுதல்)

ஹிந்துஸ்தானி தோடி – ஆதி தாளம்
ரஸங்கள்: பயாநகம், அற்புதம்


திக்குத் தெரியாத காட்டில் – உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.

Kannan My Beloved

The Search in a Forest

Looking for you in a forest

O how tired and lost was I1.     மிக்க நலமுடைய மரங்கள்; – பல
     விந்தைச் சுவையுடைய கனிகள்; – எந்தப்
     பக்கத்தையும் மறைக்கும் வரைகள்; – அங்கு
     பாடி நகர்ந்து வரு நதிகள்; – ஒரு (திக்குத்)

Goodly trees all around

Laden with wonderful fruits

Bamboo enclosures arow

Streams that made music like lutes2.     நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், – எங்கும்
     நீளக் கிடக்குமிலைக் கடல்கள், – மதி
     வஞ்சித் திடுமகழிச் சுனைகள், – முட்கள்
     மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள், – ஒரு (திக்குத்)

Flowers that set hearts aflame

Oceans of scattered leaves

Wide and tempting pools

And bushes with thorny sheaves3.     ஆசை பெறவிழிக்கும் மான்கள், – உள்ளம்
     அஞ்சக் குரல்பழகும் புலிகள், – நல்ல
     நேசக் கவிதைசொல்லும் பறவை, – அங்கு
     நீண்டே படுத்திருக்கும் பாம்பு, – ஒரு (திக்குத்)

Long eyed and lovely gazelles

Tigers rehearsing their roar

Birds with their friendly lays

And pythons stretched on the floor


4.     தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் – அதன்
     சத்தத் தினிற்கலங்கும் யானை – அதன்
     முன்னின் றோடுமிள மான்கள் – இவை
     முட்டா தயல்பதுங்குந் தவளை – ஒரு (திக்குத்)

Lions striding like kings

Elephants a tremble to hear them

Young does scattering in front

And frogs that wouldn’t go near them5.     கால்கை சோர்ந்துவிழ லானேன் – இரு
     கண்ணும் துயில்படர லானேன் – ஒரு
     வேல்கைக் கொண்டுகொலை வேடன் – உள்ளம்
     வெட்கங் கொண்டொழிய விழித்தான் – ஒரு (திக்குத்)

Foot sore and weary I stumbled

My eyes through the gloom ceased to peer

When suddenly stood there before me

A hunter with a spear and a leer!6.     “பெண்ணே, உனதழகைக் கண்டு – மனம்
     பித்தங்கொள்ளு” தென்று நகைத்தான் -“அடி
     கண்ணே, எனதிருகண் மணியே – உனைக்
     கட்டித் தழுவமனம் கொண்டேன்.

My girl with your ravishing beauty

You have driven me crazy he said

Darling the apple of my eye

I must hug you and take you to bed7.     சோர்ந்தே படுத்திருக்க லாமோ? – நல்ல
     துண்டக் கறிசமைத்துத் தின்போம் – சுவை
     தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் – நல்ல
     தேங்கள் ளுண்டினிது களிப்போம்!”

How come you are tired and lost?

Good meat let us prepare and eat

I will fetch you delicious fruits

And toddy divinely sweet8.     என்றே கொடியவிழி வேடன் – உயிர்
     இற்றுப் போகவிழித் துரைத்தான் – தனி
     நின்றே இருகரமுங் குவித்து – அந்த
     நீசன் முன்னர் இவை சொல்வேன்.

So spoke that grim eyed hunter

His stare put my poor soul a stretch

On the rack with folded hands

I said these words to that wretch9.     “அண்ணா உனதடியில் வீழ்வேன் – எனை
     அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா – பிறன்
     கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை – உன்றன்
     கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ?”

My brother I fall at your feet

With evil words don’t frighten me

A woman, another man’s wife

Is it right that you should even see10.     “ஏடீ, சாத்திரங்கள் வேண்டேன்; – நின
     தின்பம் வேண்டுமடி, கனியே! – நின்றன்
     மோடி கிறுக்குதடி தலையை, – நல்ல
     மொந்தைப் பழையகள்ளைப் போலே!”

Have done I want no preaching

It is pleasure I seek of your body

Your dalliance makes my head whirl

My dear like frothy old toddy11.     காதா லிந்தவுரை கேட்டேன் – ‘அட
     கண்ணா!’ லென்றலறி வீழ்ந்தேன் – மிகப்
     போதாக வில்லையிதற் குள்ளே – என்றன்
     போதந் தெளியநினைக் கண்டேன்.

I heard those words and screaming

Kannan I swooned in my fear

Not many moments since then

I awake and find you here12.     கண்ணா! வேடனெங்கு போனான்? -உனைக்
     கண்டே யலறிவிழுந் தானோ? – மணி
     வண்ணா! என தபயக் குரலில் – எனை
     வாழ்விக்க வந்த அருள் வாழி!

O Kannan,where is that hunter?

Was it he that screamed, fell a swoon?

My jewel come to rescue me

How beautiful is your boon!

Translated by Professor P S Sundaram

—subham—

Tags-பாரதி பாடல்,  ஆங்கில மொழிபெயர்ப்பு ,கண்ணன் என் காதலன் 3, பாரதியார் கண்ட  அழகான காடு

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: