
Post No. 11,552
Date uploaded in London – 16 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
மழை பெய்யக் காரணம் என்ன?
கடலிலுள்ள நீரை சூரிய ஒளி சூடாக்குகிறது. அது ஆவி ரூபத்தில் மேலே சென்று மேகமாகிறது. பின்னர் உரிய சூழ்நிலை ஏற்படுகையில் மழையாகப் பொழிகிறது. இதெல்லாம் விஞ்ஞானம். அப்படியுள்ள மேகம் எப்போது புயல் உருவில் வந்து அழிக்கும் ;பருவ மழை உருவில் வந்து காக்கும் என்பதை இன்றும் விஞ்ஞானிகளால் சொல்ல முடியவில்லை. ஆண்டுதோறும் அமெரிக்காவைச சுற்றியுள்ள இடங்களை சூறாவளிகள் தாக்கி கோடிக் கணக்கில் சேதம் உண்டாக்குகின்றன. இந்தியாவில் புயல் மழை வெள்ளத்தில் கோடிக்கணக்கான டன் தானியங்கள் வீணாகின்றன . இவைகளையெல்லாம் கண்ணோட்டமிட்ட கிருஷ்ண பரமாத்மா, வள்ளுவர், அவ்வையார் ,விவேக சிந்தாமணி எழுதிய பெயர் தெரியாத ஆசிரியர், சதகம் எழுதிய அம்பலவாணர் வெவ்வேறு காரணங்களை முன்வைக்கின்றனர். அவைகளில் இழையோடும் கருத்து தர்மம் இருக்கும் இடத்தில் மழை பெய்யும். மன்னவர் ஆட்சி நேர்மையாக இருந்தால் பயிர் செய்யாமலே தானியம் விளையும் Magic மாஜிக்- மாயாஜாலம் பற்றி வள்ளுவனும் கதைக்கிறான்.

1.ஒப்பிடுக
நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10 மூதுரை
பொருளுரை:
நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீர் வாய்க்கால் வழியாகச் சென்று அருகாமையிலுள்ள புற்களுக்கும் கசிந்து பசுமையைத் தரும்.
அதுபோல, நீடித்த இவ்வுலகத்தில் நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவரது நற்குணத்திற்காகப் பெய்யும் மழை, உலகத்தில் உள்ளோர் அனைவருக்கும் பெய்து நன்மை பயக்கும்.
Xxxxx

2.இதோ வள்ளூவன் எழுதிய குறள்:–
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)
தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் ‘பெய்’ என்றால் மழை பெய்யும்..
மநு நீதி நூலிலும் (9-247) நல்ல மன்னவன் ஆட்சியில் பருவ மழை தவறாது என்கிறார்.
9-247- நல்ல மன்னன் நாட்டில் நிலங்கள் தானாக விளையும் .(வள்ளுவனும் குறளில் 545, 559, 560 சொல்லும் அதிசயம்; காளிதாசனும் இந்த அதிசயத்தை விளம்புவான்
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்–குறள் 559
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
xxx
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு–குறள் 545
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
Xxxx
3. பகவத் கீதை 3-14
अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसंभवः।
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः॥3-14॥
அந்நாத்³ப⁴வந்தி பூ⁴தாநி பர்ஜந்யாத³ந்நஸம்ப⁴வ:|
யஜ்ஞாத்³ப⁴வதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்³ப⁴வ: ||3-14||
பூ⁴தாநி அந்நாத்³ ப⁴வந்தி = உயிர்கள் அன்னத்தால் உண்டாகின்றன
பர்ஜந்யாத் அந்ந ஸம்ப⁴வ: = மழையால் உணவு தோன்றுகிறது
பர்ஜந்ய: யஜ்ஞாத்³ ப⁴வதி = மழை வேள்வியால் ஆகிறது
யஜ்ஞ: கர்ம ஸமுத்³ப⁴வ: = வேள்வி செய்கையினின்று பிறப்பது
xxx
कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम्।
तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्॥१५॥
கர்ம ப்³ரஹ்மோத்³ப⁴வம் வித்³தி⁴ ப்³ரஹ்மாக்ஷரஸமுத்³ப⁴வம்|
தஸ்மாத்ஸர்வக³தம் ப்³ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி²தம் ||3-15||
கர்ம ப்³ரஹ்மோத்³ப⁴வம் = செய்யும் கர்மங்கள் பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர்
ப்³ரஹ்ம: அக்ஷரஸமுத்³ப⁴வம் வித்³தி = பிரம்மம் அழிவற்ற பரமாத்மாவில் தோன்றுவது
தஸ்மாத் ஸர்வக³தம் ப்³ரஹ்ம = ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம்
நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி²தம் = எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது
ஆக வேள்வியே மழைக்கு காரணம். வேள்வி என்பது யாகம் மட்டும் என்பதல்ல.அறநெறி வாழ்வும் வேள்வியே
xxx

4.அறப்பளீசுர சதகம் பாடல் 24
24. ஒன்றுக்கொன்று ஆதரவு
வானவர் பிதிர்க்கள்முச் சுடர்மூவர் கோள்கட்கும்
வாழ்வுதரும் உதவி புவனம்
வளம்மிக்க புவனம் தனக்குமேன் மேல்உதவி
வாழ்பெற் றிடுமன் னராம்!
தேனமர் நறுந்தொடையல் புனைமன்ன வர்க்குதவி
சேர்ந்தகுடி படைவர்க் கம்ஆம்;
சேர்குடி படைக்குதவி விளைபயிர்! பயிர்க்குதவி
சீர்பெற வழக்கு மழையாம்!
மேனிமிர் மழைக்குதவி மடமாதர் கற்பொன்று;
வேந்தர்தம் நீதி யொன்று
வேதியர் ஒழுக்கம்ஒன் றிம்மூன்று மேயென்று
மிக்கபெரி யோர்உரை செய்வார்
ஆனமர் நெடுங்கொடி உயர்த்தனம் இறைவனே!
அதிபனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆன் அமா நெடுங்கொடி உயர்த்த எம் இறைவனே – ஏறு
எழுதிய நீண்ட கொடியை உடைய எம் தலைவனே!, அதிபனே – அரசனே!,
அருமை ………… தேவனே!, வானவர் பிதிர்க்கள் முச்சுடர் மூவர்
கோள்கட்கும் வாழ்வு உதவி தரும் புவனம் – அமரரும் தென்புலத்தாரும்
ஞாயிறு திங்கள் தீ என்னும் முச்சுடரும் பிரமன் திருமால் உருத்திரன்
என்னும் முத்தலைவரும் ஒன்பது கோள்களும் வாழ்வதற்கு உதவிசெய்வது
இவ்வுலகம், வளம்மிக்க புவனம் தனக்கு மேன்மேல் உதவி வாழ்வு
பெற்றிடும் மன்னர் ஆம் – செழிப்பு மிகுந்த உலகத்திற்கு மேலும் மேலும்
துணையாவார் வாழ்விற் செழித்த அரசர்கள் ஆவர், தேன் அமர் நறு
தொடையல் புனை மன்னவர்க்கு உதவிசேர்ந்த குடிபடை வர்க்கம் ஆம் –
தேன் பொருந்திய மணமலர்த்தார் அணிந்த அரசர்கட்குத் துணை
அரசரைச் சார்ந்த குடிகளும் படையும் ஆகிய குழுவாகும், சேர் குடி
படைக்கு உதவி விளை பயிர் – கூடிய குடிகளுக்கும், படைகளுக்கும்
துணையாவது விளைந்த பயிராகும், பயிர்க்கு உதவி சீர்பெற வழங்கும்
மழை ஆம் – பயிருக்குத் துணையாவது சிறப்புறப்பெய்யும் மழையாகும்,
மேல் நிமிர் மழைக்கு உதவி – வானத்தில் ஓங்கிப் பரவிப் பெய்யும்
மழைக்குத் துணையாவன, மடமாதர் கற்பு ஒன்று – இளமங்கையின் கற்பு
ஒன்றும், வேந்தர் தம் நீதி ஒன்று – அரசர்களின் முறைமை ஒன்றும்,
வேதியர் ஒழுக்கம் ஒன்று – அந்தணரின் ஒழுக்கம் ஒன்றும், இம்
மூன்றுமே என்று மிக்க பெரியோர் உரை செய்வார் – (ஆகிய) இவை
மூன்றுமே என்று சிறந்த சான்றோர் செப்புவார்.
(வி-ரை.) ஆன் : ன் : சாரியை. உயர்த்தல் : அடையாளமாக
வானிற் பறக்கும்படி உயர்த்திக் கட்டுதல். ஒன்பது கோள்கள் : ஞாயிறு,
திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது.

5. விவேகசிந்தாமணி
“வேதம் ஓதிய வேதியர்க் கோர்மழை
நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே”
என்னும் விவேகசிந்தாமணியின் கருத்து இங்கு வந்துள்ளது.
(க-து.) அரசரும், அந்தணரும் மாதரும் ஒழுக்கந்தவறாது
இருப்பின் உலகியல் ஒழுங்காக நடைபெறும்.
அவர்கள் மூவரும் ஒழுக்கம் தவறினால் மாதம் மும்மாரி பெய்யும் மழை வருடம் மும்மாரியாக மாறி வறட்சி ஏற்படும்
அரிசி விற்றுடும் அந்தணர்க்கோர் மழை
வரிசை தப்பிய மன்னருக்கோர் மழை
புருஷனைக் கொன்ற பூவையர்க்கோர் மழை
வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே!
Xxx
6. BHARATI
.முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்—ஓதுவார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்:
இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார்—இவர்
ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார் (பாரதி பாடல்- மறவன் பாட்டு)
Xxxx
7.ஆண்டாள்
ஓங்கி உலகலந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
………..
என்று ஆண்டாள் திருப்பாவை பாடினார்
-subham—-
TAGS–மழை , நல்லாட்சி , கற்பு, நல்லார் ஒருவர் உளரேல் , அறப்பளீசுர சதகம் , கீதை, குறள்