‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ பற்றி மேலும் ஒரு சம்பவம் (Post No.11619)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,619

Date uploaded in London – –  3 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வள்ளல் சீதக்காதி பற்றி தமிழர்கள் அனைவரும் அறிவர். செத்தும் கொடுத்தான் சீதக்காதி சம்பவத்தையும் பலரும் கேட்டிருப்பார்கள் . ஒருவர் சீதக்காதி இறந்த பின்னரும் அவர் சமாதிக்குச் சென்று வருத்தமுற்றபோது சமாதியின் உள்ளிருந்து சீதக்காதியின்  ஒரு கை வெளியே  நீட்டியதாகவும் , அதிலுள்ள விரல் மோதிரத்தை அவர் எடுத்துக்கொண்டதாகவும் ஒரு கதை உண்டு.

(இது பற்றியும் சீதக்காதி யார், அவர் சமாதி எங்குள்ளது என்பது பற்றியும்  முன்னரே ஆங்கிலம்,தமிழ் இரண்டிலும் இங்கே பதிவுகள்  ஏற்றப்பட்டுள்ளன )

இப்போது அதிகம் அறியாத ஒரு சம்பவத்தைக் காண்போம்.

நம் நாட்டில் ஏற்பட்ட ஒரு கொடிய பஞ்சத்தைப் பற்றி  ஜே எஸ் சாண்ட்லர் என்ற மேனாட்டார் பின்வருமாறு எழுதியுள்ளார் :

“மறவர் நாட்டில் (சேதுபதி நாடு) தோன்றிய பஞ்சம் கி.பி. 1678-ம் ஆண்டிலிருந்து 1685-ம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. புலிக் கூட்டங்கள் எங்கும் சுற்றி அலைந்தன. நூறு பேர் உள்ள ஒரு கூட்டத்திலும் ஒரு புலி புகுந்து ஒருவரைத் தாக்கித்  தூக்கிக்கொண்டு போய்விடும். ஒரு ஊரில் ஒரு சில நாட்களுக்குள் எண்ணற்ற ஆடுகள் கொல்லப்பட்டதுமல்லாமல் எழுபது மனிதர்களும்  மறைந்துவிட்டார்கள் . பீதியால் கலங்கிய மக்கள் இரவு நேரத்தில் தங்கள் வீடுகளை சுற்றி நெருப்பு வளர்த்துக் கொண்டு தூங்கினர். .இரவில் வெளியூர்ப் பயணம் செய்வதில்லை. பகலில் செல்வதும் பாதுகாப்பற்றதாய் இருந்தது.

மதுரை நகரம் பொலிவிழந்து காணப்பட்டது புலிகளும் ஓநாய்களும் நகரில் அச்சமின்றி உலவித் திரிந்தன .வெட்டுக்கிளிகள் பயிர்களை மொய்த்துத் தின்றுவிட்டன .நாடு முழுதும் நச்சுப் பூச்சிகள்  பரவின.இறந்துவிட்டவர்கள் புதைக்கப்படாமல் ஆற்றின் கரைகளிலே எறிந்து விடப்பட்டிருந்தனர் .

இப்பஞ்ச காலத்தில்  வாழ்ந்த சீதக்காதி வள்ளல், மக்கள் துயரைக் கண்டு மனம் புண்பட்டார். தம் மரக்கலங்களை நெல் விளையும் பிரதேசங்களான கோதாவரி தீரம், வங்காளம் முதலிய பிரதேசங்களுக்கு அனுப்பி, தனியங்களைக் கொள்முதல் செய்து பாண்டி நாட்டில் இறக்குமதி செய்தார். அவருடைய காரியக்காரர் , வந்த நெல்லை நல்ல விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அது பலிக்கவில்லை . களஞ்சியங்களில் குவிந்த நெல்லை வள்ளல், வாரி வாரி ஏழைகளுக்குத் தானமாக வழங்கினார். அவருடைய காரியக்காரர் (Agents) குறுக்கிட்டும், அவர் விற்பனை செய்ய மறுத்துவிட்டார் . மக்களின் துயரைத் துடைத்த சீதக்காதியின் அன்னதானத்தை , படிக்காசுப் புலவர் பாடியுள்ளார்,

ஓர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்

கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்

ஆர்தட்டினும் தட்டுவராமலே அன்னதானத்துக்கு

மார்தட்டிய துரைமால் சீதக்காதி வரோதயனே •

பொன்னுக்குப் பதிலாக நெல்லைச் சமமாக விற்கின்ற கொடிய பஞ்ச காலம்; அக்காலத்திலும் கூட இலவசமாக நெல்லை, ஏழைகளுக்கு வழங்கிய சீதக்காதியை தமிழ் கூறு நல்லுலகம் என்றும் மறக்காது

(இந்த சம்பவத்தை தமிழில் உணவு பற்றி புஸ்தகம் எழுதிய ஏ.கே செட்டியார் தந்துள்ளார்.1967-ம் ஆண்டு மதுரை TVS  டி .வி. எஸ் . நிறுவனத்தார் வெளியிட்ட நல்ல புஸ்தகம் அது.)

வள்ளல் சீதக்காதியை இழந்து வருந்திய புலவரின் …

https://tamilandvedas.com › வள்…

3 Apr 2020 — சீதக்காதி மறைந்ததைக் கேட்டு பெரிதும் வருந்திய இன்னொரு புலவர் நமச்சிவாயப் …

Seethakathi | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › see…

2 Dec 2013 — A Tamil Muslim Miracle! சீதக்காதி, தனசெகரன் போட்டோ. Picture of Seethakkathi arch at Keelakkarai. Hits so far 210,636

–சுபம்–

Tags- சீதக்காதி, பஞ்சம் , நெல் தானம், படிக்காசுப் புலவர்,ஜே எஸ் சாண்ட்லர்

மேவார் இளவரசர் கரன் சிங்கின் குதிரை! (Post.11,618)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,618

Date uploaded in London –  3 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

சுப்ரக் – மேவார் இளவரசர் கரன் சிங்கின் குதிரை!

ச.நாகராஜன்

அடிமை வம்சத்தின் முதல் அரசனான டெல்லி சுல்தான் குத்புதீன் அய்பக் ஓடுகின்ற குதிரையிலிருந்து கீழே விழுந்து இறந்தான் என்று நாம் கேட்டிருக்கிறோம்.

இது உண்மையில் சாத்தியம் தானா? ஒரு ராணுவ தளகர்த்தர், அதுவும் 11 வயதிலிருந்தே குதிரை மீதிருந்து பல்வேறு போர்களைச் சந்திக்க ஆரம்பித்தவன் ஓடுகின்ற குதிரையிலிருந்து கீழே விழுந்து இறப்பானா?

கேள்வி சரியான கேள்வி தான். விடையைப் பார்ப்போம்.

குத்புதீன் ராஜஸ்தானத்தைக் கொள்ளையடிக்க ஆரம்பித்த போது மேவார் அரசனை அவன் கொன்றான். இளவரசன் கரன் சிங்கை சிறைப்பிடித்தான். கொள்ளையடித்த செல்வத்துடனும், இளவரசருடனும் அவரது குதிரையான சுப்ரக்கையும் தன்னுடன் எடுத்துச் சென்றான்.

லாகூரில் கரன்சிங் குத்புதீன் பிடியிலிருந்து தப்பப் பார்த்தார். ஆனால் அப்போது சிறைப்பிடிக்கப்பட்டார்.  குத்புதீன் அவரது தலையை வெட்ட ஆணையிட்டான். அது  மட்டுமல்ல, இன்னும் அவமானப்படுத்தும் விதத்தில் இளவரசரின் தலையை போலோ விளையாட்டில் விளையாடவும் உத்தரவிட்டான்.

இளவரசரின் தலையை வெட்டும் தினத்தன்று வெட்டும் இடத்திற்கு, குத்புதீன் சுப்ரக் குதிரையின் மீது ஏறி வந்தான்.  சுப்ரக் தனது எஜமானனான கரன் சிங்கைக் கண்டவுடன் ஆக்ரோஷத்துடன் கட்டுப்பாடின்றி கனைத்து துள்ளிக் குதித்தது.

இதனால் குத்புதீன் குதிரை மேலிருந்து கீழே விழுந்தான். சுப்ரக் குத்புதீனை தனது காலால் உதைத்துத் தள்ளியது.

அதன் நீளமான குளம்புகள் குத்பூதின் மார்பிலும் தலையிலும் பலமாக உதைக்கப்படவே அவன் அந்த இடத்திலேயே இறந்தான்.

அனைவரும் விக்கித்துப் பிரமித்து விட்டனர். சுப்ரக் கரன்சிங்கை நோக்கி ஓடியது. ஒரே குழப்பம். இதைப் பயன்படுத்திய கரன்சிங், சுப்ரக் குதிரை மீது பாய்ந்து ஏறினார். குதிரை பறந்தது.

அதன் வாழ்க்கையின் மிக நீண்ட ஓட்டத்தை சுப்ரக் செய்தது!

மூன்று நாட்கள் நிற்காமல் தொடர்ந்து அது ஓடியது. கடைசியில் மேவார் கோட்டையின் வாயில் கதவருகில் வந்து நின்றது.

கரன் சிங் சுப்ரக் மேலிருந்து கீழிறங்கும் போது அது அசைவற்றுச் சிலை போல நின்றது.

கரன்சிங் அன்போடு தன் கரங்களால் சுப்ரக்கின் தலையைத் தடவிக் கொடுத்தார். ஆனால் சுப்ரக் கீழே விழுந்தது. கரன் சிங் திகைத்துப் போனார்.

தனது எஜமானனைக் காப்பாற்றி அவரை அவரது நாட்டிற்கு பத்திரமாகக் கொண்டுவந்த சுப்ரக் கீழே விழுந்து இறந்து விட்டது.

சுப்ரக்கின் கதை சாதாரணமான எஜமான விசுவாசம் என்பதையும் தாண்டிய ஒன்று.

இந்த உண்மைச் சம்பவங்கள் எல்லாம் நமது புத்தகங்களில் இடம் பெறாதே!

சுப்ரக்கைப் பற்றி நீங்களாவது இதைப் படிக்கும் முன்னர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

 ஜெய் ஹிந்த்!

 ஆதாரம் : (Courtesy – Commodore Amerendra nath Awasthi)

Thanks to : Truth weekly Vol 90 No 33  dated 9th December 2022

***

“I have always imagined that Paradise will be a kind of library.”― Jorge Luis Borges (Post No.11,617)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,617

Date uploaded in London – –  2 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Jorge Luis Borges is an Argentine short story writer

I agree with Jorge. Do you agree with him?

Here are a few books on DANCE and MUSIC out of 90 books written by me:

STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS 

CONTENTS

1.Rare book on 30 Devadasis of Tamil Nadu

2.STORY OF TAMIL DEVADASIS -PART 1, INTRO AND PARAVAI

3.STORY OF TAMIL DEVADASIS -PART 2;

 TIRUVARUNAI PANNIIRAAYIRUVAR,  PON ANAIYAAR

4.STORY OF TAMIL DEVADASIS -PART 3;

 MANIKKA VALLI, MANANTHAI

5.STORY OF TAMIL DEVADASIS- PART 4;

 MANIKKA NACHIYAR AND GNANAVALLI

6.STORY OF TAMIL DEVADASIS – Part 5 :

 KONDI AMMAL

7.STORY OF TAMIL DEVADASIS – PART 6;

KALIDASA-VILASAVATHY, KALAMEGHAM-MOHANANGI

8.STORY OF TAMIL DEVADASIS- 7 ;

MANONMANI, ABHIRAMI, CHINTAMANI RATNAM

9.STORY OF TAMIL DEVADASIS- 8 ;

SILAMBI, ANJANAKSHI, SHENBAKAVADIVU

10.STORY OF TAMIL DEVADASIS – Part 9,

SOMI, VELLAI AMMAL, MADHAVI and MANIMEGALAI

11.STORY OF TAMIL DEVADASIS- PART 10;

SEERKAZI KANIKA, AMPOR SILAMBI & PUNGODAI

12.STORY OF TAMIL DEVADASIS—PART 11 ;

MADANA SUNDARI, MADANABISHEKAM

13.STORY OF TAMIL DEVADASIS – Part 12 ;

VELLAIAMMAL, KAMALAAMBIKAI

Part Two

14.Dance in the Vedas!

15.More about Bharatanatya in the Vedas!

16.Interesting titbits about Natyashastra of Bharata Muni

17.More Interesting Titbits about Natyasastra of Bharata

18.Colour  for  Actors  and  Ornaments  in  Natyashastra

19.Matavi’s 11 types of Classical Dance

20.How Dance & Drama came to Earth?

21.Watching  Dance is Equal to Studying Vedas;

Sin will Run Away!

22.Origin of Drama in India, No connection with Greece!

23.The Ideal Dancer: Kalidasa

24.Classical Indian Dance Vs Dance in the West

25.Deva Dasis: Dancing Girls of Hindu Temples

26. Nineteen Dance Dramas in the Rig Veda

27.Bharata Muni statue unveiled in Delhi

28.Origin of Drama in Ancient India and Egypt

29.Drama, Puppet Show, Folk Theatre in Tamil and Sanskrit Literature

XXXX

Interesting  Anecdotes from the World of Music

CONTENTS

1.Superstition in World of Music !

2.True Art is Never Made to Order

3.Musician who pledged a Raga!

4.A MUSICAL RAGA IN THE NAME OF TWO FAMOUS GIRLS

5.Interesting Anecdotes from the World of Music

6.Saint who went to Heaven with A Flute in Hand!

7.Ganges and Coovam Rivers in Carnatic Music!

8.How did Rare Indian Animal ‘Asunam’ become extinct?

9.Rain Miracles : Rain by Fire and Music!

10.Mystic No.7 in Music ! ORIGIN OF SAPTA SWARAS

11.Acoustic Marvel of Madurai Temple

(Please see Items 25 and 26 as well)

12.Haha and Huhu: Famous Musicians!

13.Bhumi Dundhubi: Drums in Rig Veda and Sangam Tamil Poems

14.Veena and Tamil Yaaz in the Rig Veda

15.Interesting Story about Music in Purana!

16. Music Wonders: Mozart and Nietzsche

(Composer Gounod, George Gershwin, Caesar Frank’s Anecdotes)

17.Beethoven Decomposing!

18.My Violin Never Fails Me-Paganini

19.Most Famous Violin ‘Thief!’

20.Hindu Music in Panini’s Grammar Book

21.Papanasam Sivan’s Contribution to Sanskrit Language; London Festival Report

22.Indian Music and Western Music

23.‘Vat a devil is dat?’ – Handel Angry!

(Mozart, Brahms, Handel Anecdotes)

24.Music will Make You Fat: Rock Music that grows on Plants

25.Musical Pillars in Hindu Temples

26.MORE ABOUT MUSIC PILLARS IN HINDU TEMPLES

27. MUSIC IN SAMA VEDA

****************************

To get the books

PLEASE GO to Pustaka.co.in;

then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

 tags: My books, on Dance and Music

Where is God Hiding? तिलेषु तैलं விறகில் தீயினன் Appar and Upanishad reveal (Post No.11,616)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,616

Date uploaded in London – –  2 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

Appar alias Tirunaavukkarasar was a great Shiva devotee and saint who lived in the seventh century, a contemporary of another great saint Tiru gnaana Sambandar. Both lived during the reign of the great Pallava king Mahendravarman. Appar’s devotional poems are included in the 4th, 5th and 6th parts of Thevaaram.

His similes about the obscurity of god are similar to Shvetashvatara Upanishad

Appar  says,

Like the fire in the wood, like the ghee in the milk,

the great gem like Brilliant Lord is standing obscured.

installing the pole of relationship, with the rope of

feeling, when gyrated vigorously, It (it) would appear in front.

Notes:

1. God is very much with each one of us, however

not explicit. When one chooses the right process

and pursues God with passion and perseveringly

tries, the Gracious God shows up.

Xxx

We may compare it with the Upanishad mantra

Sloka : 1.15-16

तिलेषु तैलं दधिनीव सर्पि-

रापः स्रोतःस्वरणीषु चाग्निः ।

एवमात्माऽत्मनि गृह्यतेऽसौ

सत्येनैनं तपसायोऽनुपश्यति ॥ १५॥

सर्वव्यापिनमात्मानं क्षीरे सर्पिरिवार्पितम् ।

आत्मविद्यातपोमूलं तद्ब्रह्मोपनिषत् परम् ॥ १६॥

tileṣu tailaṃ dadhinīva sarpi-

rāpaḥ srotaḥsvaraṇīṣu cāgniḥ .

evamātmā’tmani gṛhyate’sau

satyenainaṃ tapasāyo’nupaśyati .. 15..

sarvavyāpinamātmānaṃ kṣīre sarpirivārpitam .

ātmavidyātapomūlaṃ tadbrahmopaniṣat param .. 16..

As oil exists in sesame seeds, butter in milk, water in river- beds and fire in wood, so the Self is realized as existing within the self, when a man looks for It by means of truthfulness and austerity-when he looks for the Self, which pervades all things as butter pervades milk and whose roots are Self- Knowledge and austerity. That is the Brahman taught by the Upanishad; yea, that is the Brahman taught by the Upanishads.

Xxx

Another translation

Like oil in sesame seeds, like butter in cream, like water in springs, like fire in firesticks, so dwells the Lord of Love, the Self, in the very depths of consciousness. Realize him through truth and meditation.

The Self is hidden in the hearts of all, as butter lies hidden in cream. Realize the Self in the depths of meditation—the Lord of Love, supreme Reality, who is the goal of all knowledge.

Shvetashvatara Upanishad 1.15–16; translation by Eknath Easwaran

Xxx

Another translation by R E Hume of the above passage

As oi in sesame seeds, as butter in cream

As water in river beds and as fire in the friction sticks

So is the soul apprehended in one’s own soul

If one looks for Him with true austerity

–SVETASVATARA UPANISHAD, P.396, THE THIRTEEN PRINCIPAL UPANISHADS, R E HUME

XXX

Appar’s Tamil poem

விறகில் தீயினன் பாலிற் படு நெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் னிற்குமே.

—-திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை, (திருக்குறுந்தொகை)

Xxx

Sri Ramakrishna Paramahamsa explains it in simpler terms:

“You see many stars in the sky at night, but not when the sun rises. Can you therefore say that there are no stars in the heavens during the day? Because you cannot find God in the days of your ignorance, say not that there is no God.”

xxx

 There are pearls in the deep sea, but you must hazard all the perils to get them. If you fail to get at them  by a single dive, do not conclude that the sea is without them. So also in the quest for the Lord, if your first attempt to see him proves fruitless, do not lose heart. Persevere in the attempt, and you are sure to realise Him at last.

–subham—

 Tags- God, oil in sesame, churning milk, in firewood, Svetasvatara Upanishad, Appar, Tevaram

நரகத்துக்கு யார் யார் போவார்கள்? மேலும் ஒரு பட்டியல் (Post.11,615)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,615

Date uploaded in London – –  2 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

யார் யார், எந்த எந்த, நரகத்துக்குப் போவார்கள் என்று மனு நீதி நூல், புறநானூறு, திருப்புகழ், பகவத் கீதை  முதலிய நூல்கள் செப்பியதை முன்னர் கண்டோம் . தமிழ் நூல்கள் நரகம்நிரயம் அளறு முதலிய சொற்களைப்  பயன்படுத்தி நரகத்தை நம் மனக்கண் முன் வைக்கின்றன

இதோ கம்பன் தரும்  பட்டியல் :-

உய்ய,’நிற்கு அபயம்’என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்

கையனும், ஒருவன் செய்த உதவியில் கருத்து இலானும்,

மை உறு நெறியின் நோக்கி மாமறை வழக்கில் நின்ற

மெய்யினைப் பொய் என்றானும்மீள்கிலா நரகின் வீழ்வார்.         6.4.115

பொருள்

நான் உய்யுமாறு உன்னைச் சரண்புகுந்தேன்   என்று   வந்த  ஒருவனுடைய உயிரினைத்   தன்னுயிராகக் கருதிப்   பேணிக் காப்பாற்றாத   கீழ்மகனும், நன்றி மறந்தவனும்,   சிறந்த வேத நெறிப்படி நின்றொழுகும்   உண்மை   நெறியைப்  பொய் என்று கூறுபவனும்; மீண்டு  வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவர்.

xxx

விவேக சிந்தாமணி எழுதிய ,பெயர் தெரியாத ஆசிரியர்,  வேறு ஒரு பட்டியலை நம் முன் சமப்பிக்கிறார்

தந்தையுரை தட்டினவன் தாயுரை இகழ்ந்தோன்,

அந்தமறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன்,

சந்தமுறு வேதநெறி மாறினவர் நால்வர்,

செந்தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர்.

பொருள்

தந்தை சொல் மீறி நடந்தவன், தாயின் சொல்லை இகழ்ந்து பின்பற்றாது இருப்பவன், அழிவில்லாத மெய்ஞான குருவின் உபதேசத்தை மறந்தவன், வேதநெறிப்படியான வாழ்க்கையிலிருந்து விலகியவன் ஆகிய நால்வரும் நரகத்தின் வாயிலில் சென்று சேர்வது உண்மை (நிச்சயம்).

xxxx

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -6 (written on 23 January 2013)

நரகத்துக்கு போவோர் பட்டியல்

யார் யார் நரகத்துக்குப் போவார்கள் என்ற பட்டியலைத் தருகிறார் அருணகிரிநாதர்:

ஓதுவித்தவர் கூலிகொடாதவர்

மாதவர்க்கு அதிபாதகமானவர்

ஊசலில் கனலாய் எரி காளையர்         மறையோர்கள்

ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள்

ஆர்தனக்கும் உதாசினதாரிகள்

ஓடி உத்தமர் ஊதிய நாடினர் இரவோருக்கு

ஏதும் இத்தனை தானம் இடாதவர்

பூதலத்தினில் ஓரமதானவர்

ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள்

ஏகசித்த தியானமிலாதவர்

மோகமுற்றிடு போகிதம் ஊறினர்

ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரக உழல்வாரே

பொருள்: குரு தட்சிணை கொடுக்காதவர்கள், தவ வலிமை மிக்க பெரியோர்களுக்கு ஊறுவிளைவிப்போர், காம வெப்பத்தில் நெருப்பாய் எரியும் இளையோர், வேதம் அறிந்த பார்ப்பனர் ஊர்களுக்கு கெடுதி செய்வோர், எல்லோரையும் உதாசினம் செய்து பேசுவோர், உத்தமர்களின் செல்வத்தை ஏமாற்றிப் பறிப்போர், பிச்சை கேட்போருக்கு தானம் இடாதவர், பூவுலகில் பாரபட்சமாகப் பேசுவோர், சிவனையும் விஷ்ணுவையும் கும்பிடுவோரை கேலி செய்வோர், ஒரு முகப் பட்ட மனத்துடன் தியானம் செய்யாதவர்கள், மோகத்தில் மூழ்கி காமத்தில் திளைப்பவர்கள், இன்னர்கள் இத்தனை பேரும் ஏழுவகை நரகங்களில் துன்புறுவார்கள்.

இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேண்டுவோர் கௌமாரம்.காம்  –இல் திரு கோபாலசுந்தரம் அவர்களின் அற்புதமான மொழிபெயர்ப்பைப் படிக்கவும்.

Xxx

MY OLD ARTICLES ON HELL நரகம், நிரயம், அளறு

புறநானூற்றில் நரகம்! திருக்குறளில் நரகம்!! (Post …

https://tamilandvedas.com › புறந…

18 Nov 2017 — ஒருவனுக்கு நாசத்தை விளைவிக்கும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன; …

21 வகை நரகங்கள் – மனு எச்சரிக்கை! மநு நீதி நூல்

https://tamilandvedas.com › 21-வக…

·

19 Sept 2018 — ஸ்லோகம் 82 முதல் தலை முடியைத் தொடுதல் பற்றிய விதிகளைச் சொல்லி எவை எவை …

நரகத்துக்கு போவோர் பட்டியல் | Tamil Brahmins …

https://www.tamilbrahmins.com › நர…

நரகத்துக்கு போவோர் பட்டியல் Picture of Skanda/Kartikeya/Murugan in Cambodia (from Wikipedia) திருப்புகழ் …

November | 2017 | Tamil and Vedas | Page 9

https://tamilandvedas.com › 2017/11

18 Nov 2017 — ஒருவனுக்கு நாசத்தை விளைவிக்கும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன; …

நரக வாசல் – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › நர…

10 Nov 2018 — ஆக நல்ல வழி, கெட்ட வழி என்பதை எவரும் நினைவிற்கொள்ள வசதியாக ஆன்றோர்கள் …

–subham— tags-நரகம், அளறு, நிரயம் , பட்டியல், விவேக சிந்தாமணி 

மனு நீதி மன்னர்களின் ஒளி, எட்டு திக்கிலும் பிரகாசிக்கும்: அம்பலவாணர் கூற்று (11,614)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,614

Date uploaded in London – –  2 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அறப்பளீசுர சதகப் பாடல் 43-ல்  மனு நீதிப்படி  ஆட்சி செய்யும் மன்னர் ஒளியும் அறிஞர்களின் பேரொளியும் சூரியன் ஒளியும் எட்டு திக்கிலும் பரவும் என்கிறார் அம்பலவாணர். ஒவ்வொரு படியாக ஒளியின் அளவையும் ஒப்பிடுகிறார். மாணிக்கம் ஒளிமிக்கது. அதைவிட ஒளியுடையது மின்மினி உமிழும் புழுக்கள். அதை விட  ஒளிமிக்கது விளக்கு; அதைவிட ஒளியுடையது வர்த்தி. ஞாயிற்றினுக்கும்,மனுநீதி மன்னர்க்கும் ,வீரமுடைய அறிஞருக்கும், மேலே சொன்ன எல்லாவற்றையும் விட  ஒளி இருக்கும்; அது எட்டு திக்கிலும் பிரகாசிக்கும் என்கிறார் அம்பலவாணர்  .

xxxx

இதோ கம்பனை ஒப்பிட்டுப் பார்ப்போம்

  ஆரண்ய காண்ட, அகத்தியப் படலத்தில் கம்பன் மனு நீதி பற்றிக் கூறுகிறான்:–         

வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும்

தாழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார்

ஆழி உழவன் புதல்வ ஐயம் இல்லை மெய்யே

ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான்.

பொருள்:–

“தசரத சக்ரவர்த்தியின் திருமகனே! நீ இங்கே தங்கினால் வேதங்கள் வாழும்; மனு நீதி வாழும்; அறம் வாழும்; இன்று வரை அரக்கரால் தாழ்வடைந்த தேவர்கள் (இமையோர்) உயர்வர்; அரக்கர்கள் (தானவர்கள்) தாழ்வு அடைவார்கள். இதில் சந்தேகமே இல்லை; அதனால் நீ இங்கேயே தங்கு” என்று இராமபிரானிடம் அகத்தியன் பகர்ந்தான்.

Xxxx

கிஷ்கிந்தா காண்டத்தில் நிறைய இடங்களில் மனு நீதியைப் பாராட்டும் பாடல்கள் வருகின்றன; சில பாடல்களை மட்டும் காண்போம்:–

இராமனை வாலி குறைகூறும் பாடல் இதோ:-

அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறுஓர்

குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ

இரக்கம் எங்கு உகுத்தாய் என்பால் எப்பிழை கண்டாய் அப்பா

பரக்கழி இது நீ பூண்டால் புகழையார் பரிக்கற்பாலார்

பொருள்:-

ஐயா! அரக்கர் செய்த தீமைக்காக குரங்குகளின் மன்னனைக் கொல்லுமாறு மனுநீதி கூறிற்றோ? நினக்கே உரித்தான அருளை எங்கு விட்டாய்? என்னிடத்தே என்ன பிழையைக் கண்டாய் பெரும்பழியை உன்னைப் போன்றவர் ஏற்றால் புகழை ஏற்க வல்லவர் வேறு எவர் உளர்?

இதற்கு இராமன் அளித்த பதில்:– 

தக்க இன்ன தகாதன இன்ன என்று

ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள

மக்களும் விலங்கே மனுவின் நெறி

புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே

(எது சரி, எது சரியில்லை என்று தெரியாத மக்கள் விலங்குகளே; மனு நீதிப்படி நடக்கும் விலங்கும்கூட தேவர்களுக்குச் சமம்)

இன்னொரு பாடலில் இராமனைப் புகழும் கம்பன்,

மனுநீதியான் என்ற அடைமொழியைச் சூட்டுகிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் “மனு நூலில் சொன்னபடி அறநெறி தவறாது நடப்பவனான இராமன்” என்று வியாக்கியானம் செய்கின்றனர்.

இதை வலியுறுத்தும் ஒரு பாடலும் கிஷ்கிந்தா காண்டத்தில் உண்டு: 

நஞ்ச மன்னவரை நலிந்தாலது

வஞ்சமன்று மனு வழக்காதலால்

அஞ்சில் ஐம்பதில் ஒன்றறியாதவன்

நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய் 

பொருள்:-விஷம் போன்ற கொடியவரைத் தண்டித்தால் அது கொடுமை இல்லை ஏனெனில் அது மனு நீதியில் சொல்லப்பட்டதாகும் ஆகையால இதனை வயதிலும் 50 வயதிலும் அறியாத சுக்ரீவனிடம் எடுத்துச்சொல்வாயாக என்று இராமன் கோபத்துடன் கூறியது கிட்கிந்தைப் படலத்தில் வருகிறது.

இங்கே இன்னும் ஒரு அழகையும் கண்டு ரசிக்கலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற தமிழ்ப் பழமொழியையும்  கம்பன் நமக்கு நினைவு படுத்துகிறான்  யோகாசனம் பயிலுவோர் ஐந்து வயது முதல் பழக வேண்டும். ஐம்பது வயதில் உடம்பு வணங்காது ; பல்லக்கு மூங்கில் வேண்டுவோர் மூங்கிலை  இளமை நிலையிலேயே வளைத்து வைப்பர் ; பல ஆண்டுகளுக்குப்பின்னர் பல்லக்கு செய்ய அதைப்  பயன்படுத்துவார்கள்.

Xxx

மனு நீதி நூலில் பிற்காலத்தில் சூத்திரர்களுக்கு எதிராக நுழைக்கப்பட்ட 40, 50 பாடல்களை நீக்கிவிட்டால் கம்பனும் கல்வெட்டுகளும் மனு நீதியைப் புகழ்ந்தது ஏன் என்பது விளங்கும்

Xxx

அறப்பளீசுர சதகம் 45ஆவது பாடலில் எதை, யார் செய்தால்  சிறப்பாக இருக்கும் என்கிறார்:

நல்ல  செயலானாலும் கெட்ட செயலானாலும் பெரியோர் செய்தால் சிறப்பு.;

பெரிய அரசியல் தலைவர்கள் தெருக்கூட்டினால் பத்திரிக்கையாளர் புகைப்படம், வீடியோ படம் எடுப்பர்

காம சம்பந்தமான செயல்களை பருவ மங்கையர் செய்தால் பிரபல மடையும் ; இதை சினிமாக்காரிகள் வாழ்வில் பார்க்கிறோம். அவர்கள் விளம்பரத்துக்குப் போஸ் கொடுத்தால் அதற்கும் கோடி ரூபாய் கிடைக்கும்

வாரி வாரி வழங்கிய வள்ளல்களுக்கு உயர்விலும் தாழ்விலும் புகழ் மங்காது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி கதையில் இதைக் கேட்கிறோம்

போர் வீரர்களுக்கு விழுப்புண்கள் அதிகமானால் மேலும் அழகுதான். புறநானூற்று வீரத்தாய் கதையில் இதை அறிகிறோம்

தவறி விழுந்தாலும் யானையிலிருந்து விழுந்தால் பெருமைதான்;  நாயின் மேலிருந்து விழுந்தால் நகைப்புக்கு உள்ளாவோம் .

தமிழ் கூட குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும் என்போம்.

ஏதேனும் ஒருவகையில் உயர்ந்த நிலைக்குப் போய் விட்டோருக்கு தாழ்வே கிடையாது.

xxxxx

 அறப்பளீசுர சதகம் 43, 44, 45    

அறப்பளீசுர சதகம் 43. ஒளியின் உயர்வு

செழுமணிக் கொளி அதன் மட்டிலே! அதினுமோ

     செய்யகச் சோதம் எனவே

  செப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி! அதனினும்

     தீபத்தின் ஒளிஅ திகமாம்!

பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!

     பகல்வர்த்தி அதில்அ திகமாம்! ப

  ாரமத் தாப்பின்ஒளி அதில் அதிகமாம்! அதிலுமோ

     பனிமதிக் கொளிஅ திகம்ஆம்!

 மிக்கவொளி திசைதொறும் போய்விளங் கிடும்என்ன

     விரகுளோர் உரைசெய் குவார்!

அழல்விழிகொ டெரிசெய்து மதனவேள் தனைவென்ற

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அழல் விழிகொடு எரிசெய்து மதனவேள் தனைவென்ற

அண்ணலே – தீவிழியினாலே காமனை எரித்து வென்ற பெரியோனே!,

அருமை ……. தேவனே!,

செழுமணிக்கு அதன்மட்டிலே ஒளி – நல்ல

மாணிக்கத்துக்கு அதன் அளவிலேதான் ஒளியுண்டு, அதினும் செய்ய

கச்சோதம் எனச் செப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி – அம்மணியைக்

காட்டினும் சிவந்த மின்மினியெனக் கூறப்படும் புழுவுக்கு மிகுதியான ஒளி

உண்டு, அதனினும் தீபத்தின் ஒளி அதிகம்ஆம் – அந்த மின்மினியினும்

விளக்கின் ஒளி மிகுதியாகும், தீபத்தின் பழுதுஇலாத் தீவர்த்தி அதிகம்

ஆம் – விளக்கினும் குற்றமற்ற தீவர்த்தியின் (ஒளி) மிகுதியாகும், அதில்

பகல்வர்த்தி அதிகம் ஆம் – அதனினும் பகல்வர்த்தி(யின் ஒளி)

மிகுதியாகும், அதில் பார மத்தாப்பின் ஒளி அதிகம் – பகல்வர்த்தியினும்

பெரிய மத்தாப்பின் ஒளி மிகுதியாகும், அதிலும் பனிமதிக்கு ஒளி அதிகம்

ஆம் – மத்தாப்பினும் குளிர்ந்த திங்களின் ஒளி மிகுதியாகும், விழைவுதரு

பரிதிக்கும் மனுநீதி மன்னர்க்கும் வீரவிதரணிகருக்கும் – விருப்பம் ஊட்டும்

ஞாயிற்றினுக்கும் செங்கோல் அரசர்க்கும் வீரமுடைய அறிஞருக்கும்,

மிக்கஒளி திசைதொறும் போய்விளங்கிடும் என்ன விரகு உளோர்

உரைசெய்குவார் – பேரொளி எட்டுத்திக்கினும் சென்று விசும் என்று

அறிவுடையோர் கூறுவர். 

Xxx

           அறப்பளீசுர சதகம் 44. நன்று தீதாதல்

வான்மதியை நோக்கிடின் சோரர்கா முகருக்கு

     மாறாத வல்வி டமதாம்!

  மகிழ்நன் றனைக்காணில் இதமிலா விபசரிய

     மா தருக் கோவி டமதாம்!

மேன்மைதரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்

     மிக்கபேர்க் கதிக விடமாம்!

  வித்தியா திபர்தமைக் கண்டபோ ததிலோப

     வீணர்க்கெ லாம்வி டமதாம்!

ஈனம்மிகு புன்கவி வலோர்க் கதிக சபைகாணில்

     ஏலாத கொடிய விடமாம்!

  ஏற்றமில் லாதபடு பாவிகட்க றமென்னில்

     எந்நாளும் அதிக விடமாம்!

ஆனதவ யோகியர்கள் இதயதா மரையுறையும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆன தவயோகியர்கள் இதய தாமரை உறையும் அண்ணலே

– ஆக்கம்பெற்ற தவயோகியரின் உளத்தாமரைமலரில் வாழும் பெரியோனே!

அருமை …….. தேவனே!,

சோரர் காமுகருக்கு வான்மதியை நோக்கிடின்

மாறாத வல்விடமது ஆம் – திருடருக்கும் காமநோயாளருக்கும் வானத்தில் திங்களைப் பார்த்தால் நீங்காத கொடிய நஞ்சு ஆகும். இதம்இலா விபசரிய

மாதருக்கு மகிழ்நன்தனைக் காணில் விடமது ஆம் – நன்மையில்லாத

தீயொழுக்

கப் பெண்டிருக்குக் கணவனைப் பார்த்தால் நஞ்சுபோல் இருக்கும்,

சுரரோகம் மிக்கபேர்க்கு மேன்மைதரு நல்சுவை பதார்த்தமும் அதிகவிடம்

ஆம் – வெப்புநோய் மிகுந்தவர்கட்கு உயர்ந்த இனிய சுவைமிக்க கறிகளும் மிகுந்த நஞ்சாகும், அதிலோப வீணர்க்குஎலாம் வித்தியாதிபர் தமைக்

கண்டபோது விடமது ஆம் – மிகுந்த ஈகைப் பண்பிலாத வீணர்கள்

யாவருக்கும் கலைவல்லோரைக் கண்டபோது நஞ்சாகும், ஈனம்மிகு புன்கவி

வலோர்க்கு அதிக சபை காணில் ஏலாத கொடியவிடம் ஆம் – இழிவு

மிக்க புன்கவிவாணருக்குப் பேரவையைக் கண்டாற் பொறுக்கமுடியாத தீய நஞ்சாகும், ஏற்றம் இல்லாத படுபாவிகட்கு அறம் என்னில் எந்நாளும்

அதிகவிடம் ஆம் – மேன்மையில்லாத பெரும் பாவிகளுக்கு அறம்

என்றால் எப்போதும் பெருநஞ்சு ஆகும்.

     Xxxxx

அறப்பளீசுர சதகப்  பாடல் 44-ல் யாருக்கு எது பாகற்காயாகக் கசக்கும் என்ற பட்டியலை அம்பலவாணர் தருகிறார் :-

திருடர்களுக்கும் காம வேட்டை ஆடுவோருக்கும் — நிலவு ஒளி பிடிக்காது.

தீய ஒழுக்கமுள்ள பெண்களுக்கு – கணவனே பாகற்காய்தான் ;

நோயுள்ளோருக்கு நல்ல கறிவகை – கசப்பானதே;

கருமிகளுக்கு கலைஞர்கள் வந்தால் பாகற்காய்;

போலி கவிஞர்களுக்கு சபையே கசப்புதான் ;

பாவிகளுக்கு தர்மம் என்றால் நஞ்சு போன்றதே

இவை அனைத்தும் உலகம் அறிந்த உண்மைகளே.

xxx

      அறப்பளீசுர சதகம் 45. தாழ்வும் உயர்வுபெறும்

வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்

     மேன்மையோர் செய்யில் அழகாம்!

  விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்

     விழைமங்கை செய்யில் அழகாம்!

தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்து

     சாரிலோ பேர ழகதாம்!

  சரீரத்தில் ஓரூனம் மானம்எது வாகிலும்

     சமர்செய்து வரில்அ ழகதாம்?

நகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்

     நாளும்அது ஓர ழகதாம்!

  நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர்

     நகைசெய்தழ கன்றென் பர்காண்!

அகம்ஆயும் நற்றவர்க் கருள்புரியும் ஐயனே!

     ஆதியே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அகம்ஆயும் நல்தவர்க்கு அருள்புரியும் ஐயனே –

உள்ளத்திலே ஆராயும் நல்ல தவத்தினர்க்கு அருள்செய்யும் தலைவனே!,

ஆதியே – முதல்வனே!, அருமை …….. தேவனே!, வெகுமானம் ஆகிலும்

அவமானம் ஆகிலும் மேன்மையோர் செய்யில் அழகுஆம் – பெருமதிப்புச்

செயலானாலும் இழிவுச் செயலானாலும் பெரியோர்கள் செய்தால்

அழகுதரும். விரகமே ஆகிலும் சரசமே அகிலும் விழைமங்கை செய்யில்

அழகுஆம் – காமநோயானாலும் காமக்கூட்டம் ஆனாலும் விரும்பத்தக்க

மங்கைப் பருவப் பெண் கொடுத்தால் அழகு ஆகும், வெகு தருமங்களைச்

செய்து தகுதாழ்வு வாழ்வு சாரில் பேரழகு ஆம் – மிக்க அறங்களைப்

புரிந்து தக்க தாழ்வாயினும் வாழ்வாயினும் பெற்றால் மிகுந்த அழகு ஆகும்,

சமர்செய்து சரீரத்தில் ஓர் ஊனம் மானம் எதுவாகிலும் வரில் அழகது

ஆம் – போர்புரிந்ததால் உடம்பில் ஏதாயினும் காயமாவது பெருமையாவது உண்டானால் அழகு ஆகும். நகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்

அதுநாளும் ஓர் அழகது ஆம் – மலைபோன்ற மதயானையின்மேல்

ஏறினாலும் தவறி வீழ்ந்தாலும் அச்செய்கை எப்போதும் ஓரழகாக இருக்கும்,

நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர் நகைசெய்து அழகு அன்று என்பர்

– நாயின்மேல் ஏறினாலும் தவறி வீழ்ந்தாலும் பார்த்தபேர் நகைத்து

அழகாகாது என்று கூறுவர்.

–subham—

Tags- அறப்பளீசுர சதகம் 43, 44, 45. மனு நீதி, மன்னர்களின் ஒளி,   பிரகாசிக்கும்,  அம்பலவாணர்

அருள்வாயே! – 8 (Post No.11613)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,613

Date uploaded in London –  2 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதர் தொடர்! 

அருள்வாயே! – 8

(65 முதல் 74 முடிய)

ச.நாகராஜன் 

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

65) காஞ்சீபுரம்

   அவமே யான்

    திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து

     தெளியமோ க்ஷத்தையென்று அருள்வாயே

பாடல் எண் 352 –   ‘அறிவிலாப் பித்தர்‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  இப்படி காலத்தை நான் வீணாகக் கழித்துத் திரியும் போக்கினால் வருகின்ற அபவாதத்தை அகற்றி, அன்பு கூர்ந்து நான் தெளிவு பெறுவதர்கான மோக்ஷ இன்பத்தை என்று எனக்கு அருளப் போகிறாய்?

66) திருவானைக்கா

சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய

   திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய

      துரிசற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே

பாடல் எண் 362 –   ‘குருதி புலால் என்பு‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  அறிவிலியாய், பயனில்லாது, ஆசைகளை எழுப்புவதுமாய் உள்ள ஆணவக்காரர்களுடன் கூட்டுறவில் ஆழ்ந்து வருந்திய குற்றம் அற்றுப் போவதற்கும், ஆனந்தமான பேரின்ப வீட்டை யான் கண்டு கொள்வதற்கும் நீ அருள்வாயாக.

67) திருவருணை

அலமரும் வினைவாழ்வும்

சலில லிபியன சனனமு மலமல

   மினியு னடியரொ டொருவழி படஇரு

     தமரபரிபுர சரணமு மவுனமு மருள்வாயே

பாடல் எண் 368 –   ‘அருவை மிடையென‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :   வேதனையும் அஞ்சுதலும் உண்டாக்கும் வினைக்கு ஈடான வாழ்வும் நீர் மேல் எழுதிய எழுத்துக்கு நேரான பிறப்பும் போதும், போதும். இனியேனும் உன் அடியாரோடு நானும் ஒருவழிப்பட்டு (உன்னுடைய) இரண்சு ஒலி செய்யும் சிலம்புகள் அணிந்த திருவடியையும், மௌன உபதேசத்தையும் அருள்வாயாக.

68) திருவருணை

குலவினை களையுங்

  கழல்தொழு மியல்தந் தருள்வாயே

பாடல் எண் 389 –   ‘விரகொடு வளை‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :   முந்தை ஊழ்வினைகளைத் தொலைக்கும் திருவடிகளைத் துதிக்கும் ஒழுக்கத்தைக் கொடுத்து அருள் புரிவாயாக.

69) திருவருணை

எரிவாய் நரகிற் புகுதா தபடிக்

  கிருபா தமெனக் கருள்வாயே

பாடல் எண் 393 –   ‘அருமா மதனை‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :   நெருப்பு கொளுத்தும் (கும்பிபாக) நரகத்தில் புகாத வண்ணம் உனது இரு திருவடிகளைத் தந்து அருள்வாயாக.

எரிவாய் நரகம் என்பது கூடாசலம்கும்பிபாகம்அள்ளல்அதோகதிஆர்வம்பூதிசெந்து ஆ ஏழு நரகங்களில் ஒன்று. இது கும்பிபாகம் என அழைக்கப்படும். பாவம் செய்தோரைக் குயச் சூளையில் சுடுவது போல வாட்டும் நரகம் இது.

70) திருவருணை

பறிமாதர்

  தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்

     சோதியொளிப் பாதமளித் தருள்வாயே  

பாடல் எண் 395 –   ‘ஆனை வரிக்கோடு‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :   பொருளை அபகரிக்கும் விலைமாதர்களின் வஞ்சகத்தில் பட்டு, ஏழு நரகத்தில் சேருதற்கு உரியவனும், தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய் அஎன்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிவாயாக.

71) திருவருணை 

 சமராகிய மாரனெ டுக்குங் கணையாலே

   தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே 

பாடல் எண் 397 –   ‘இமராஜன் நிலாவது‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  காமப்போருக்கு என்றே மன்மதன் தொடுக்கும் மலர்ப் பாணங்களாலே, உன்னைப் பிரிந்து தனியே தவிக்கும் மான் போன்ற இப்பெண் உயிர் சோர்ந்து போகாமல் இருக்க ஏதேனும் ஒரு வழி கூறி அருள்வாயாக.

 இந்தப் பாடல் அகத்துறையில் நாயக-நாயகி பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காகப் பாடியது. இப்பாடலில் வரும் சந்திரன்தென்றல் காற்றுமன்மதன்மலர்க் கணைகள்ஊர்ப் பெண்களின் ஏச்சு ஆகியவை தலைவியின் பிரிவுத் துயரைக் கூட்டுவன.

72) திருவருணை 

அடியேன் முன்

   கருணைபொ ழிந்து முகமும லர்ந்து

    கடுகிந  டங்கொ டருள்வாயே

பாடல் எண் 401 –   ‘இருவினை அஞ்ச‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  என் முன்னே கருணை மிகக் காட்டி மலர்ந்த முகத்தோடு வேகமாக நடனம் செய்தவாறு வந்து அருள் புரிவாயாக.

73) திருவருணை

    ஊடாடி யவரோடு முழலாதே

      ஊராகத் திகழ்பாத மருள்வாயே

பாடல் எண் 418 –   ‘கோடான மடவார்கள்‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  (விலைமாதர்களுடன்) ஈடுபட்டுப் பழகினவனாக அவர்களுடன் திரியாமல், (எனக்குச் சொந்த) ஊர் போல் இருப்பிடமாக விளங்கும் உன் திருவடியைத் தந்தருள்வாயாக.

74) திருவருணை 

இறையோ னிடமாய் விளையா டுகவே

    யியல்வே லுடன்மா அருள்வாயே

பாடல் எண் 421 –   ‘சிவ மாதுடனே‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  சிவபிரானிடத்தில் வேண்டி, யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக.

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

                                             ***.                                  தொடரும்

British Massacre of Sikhs, Sinhalese, and Zulus (Post No.11,612)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 11,612

Date uploaded in London – –  1 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

This is part 3 of British Atrocities

 Sathnam Sanghera has compiled lot of information from many books about British atrocities and exploitation around the world.

 British slaughtered Sikhs, Sri Lankans and Zulu s like birds. They themselves have said it. It is not outsiders report.

Here is what we read in his book Empireland, published in 2021 by Viking

 “In Empires of Sikhs, Patwant Singh estimates that the first seventy years of eighteenth century saw around 200,000 Sikhs killed. But I accept it was British colonialists who did most to entrench and propagate this view of Sikhs in the world, and who in their obsession with classification, accentuated the boundaries between the Sikhs and other religious groups in India”.

Xxx 

“In 1914, it was not only Britain which took on the Germans and their allies, but the entire British empire. Over three million men from across the empire and Commonwealth supported the British army.

 In the Second World War, the number of imperial soldiers was just as significant , including 1,440,500 troops from India, 629,000 from Canada, 413,000 from Australia,136,000 from South Africa, 128,500 from New Zealand and more than 134,000 from other colonies. But after the war, all the empire troops were packed off back home in unseemly haste and the huge celebratory Peace March that took place in London in July 1919 did not include any of those non- British troops”.

 (So ungrateful. Later politicians also gave a completely different picture, leaving the non- whites out).

 Xxx

 Sanghera gives many incidents where Sikhs and other Indians were attacked in Wolverhampton in England.

 Wolverhampton MP Enoch Powell was the one who cast a huge shadow not only over local Wolverhampton politics but over national politics too. In 1968 he made the infamous ‘Rivers of Blood’ speech. He feared that ‘ in this country in 15 or 20 years the Blackman will have the whip hand over the white man’.

Xxxx

 3000 Sikhs massacred 

There turn out to be many more demonstrations of anti- Sikh racism beyond what happened at Jallianwalla Bagh. Here during the Battle of Gujarat ( 1849), an encounter during the Second Anglo Sikh War we see Britons dehumanising Sikhs, losing just 96 men in the course of slaughtering 3000 Sikhs, an officer of the ninth Lancers remarking in the process that enemies running for their lives were of course shot, with Sikhs hiding in trees providing great sport for our men, who were firing up at them as at so many rooks…..down they would come like a bird head downward, and bleeding most profusely.

Here in the Indian Pavilion of the 1851 Crystal Palace exhibition in London, we have Sikhs being described as lacking a ray of intelligence. Here in 1871, deputy commissioner J L Cowan summarily executing 68 Namadhari Sikh prisoners ,in a form of collective punishment following on attack on the small Muslim principality of Malerkota in Punjab ; the method he chose was to fire the victims from canons, meaning that their body parts were so scattered they could not be retrieved for funeral rites.

Xxx 

10,000 Zulus massacred 

William Gladstone , who served four times as Prime Minister of Britain ,between 1868 and 1894, complained that in South Africa 10,000 Zulus had been slaughtered for no other offence than their attempt to defend against your artillery with their naked bodies, their hearths and homes, their wives and families.

Xxx 

10,000 Sinhalese massacred 

Jan Morris’ Pax Brittanica trilogy extends to well over 1500 pages, Lawrence Jame’s Rise and Fall of the British Empire comprises 736 of densely printed text, are recommended by many.

The stories they tell are so violent it is not conducive to sleep to go to bed reading about, how in 1818, the British were responsible for f the deaths of 10000 people in the course of battling the Kandyan kingdom of Ceylon, how the 1838 Myall Creek massacre saw up to fifty indigenous Australians , including women, children, aged, being brutally murdered by a group of colonist cattle ranchers, or how the Hola camp for Mau Mau rehabilitation in Kenya was so brutal that eleven prisoners were beaten to death by guards under the watch of a British prison official.

 To be continued……………………..

வாராத செல்வத்தைப் பெற, தீராத நோயைத் தீர்க்க வழி (Post No.10,611)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,611

Date uploaded in London – –  1 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு அருமையான தேவாரப் பாடல் அப்பர் பாடிய ஆறாம் திருமுறையில் உள்ளது. அதை D K ஜெயராமனின் குரலில், மோகன ராகத்தில் ,கேட்கையில் மேலும் சிறப்படைகிறது. அவர் பாடிய ஊரின் பேரைக் கேட்டாலோ தீராத நோய் எல்லாம் தீர்ந்து விடும்; வாராத செல்வம் எல்லாம் வந்து விடும் என்கிறார் அப்பர் பெருமான்.

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் 

    பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்

வாராத செல்வம் வருவிப் பானை

    மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்

தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்

    திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட

போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்

    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  

பொருள் :

ஆயிரம் நாமங்கள் பாடி தேவர்களாளல் போற்றப்பட்ட பெருமானை,

கிடைக்கப்பெறாத செல்வமாகிய வீடு பேறு இன்பத்தை தனது அடியவர்களுக்கு கிடைக்க செய்பவனை,

தீராத நோய்களையும் தீர்ப்பவனை, திரிபுரங்கள் திக்கெட்டும் எரிகையில் போரிட்டு அதனை வென்றவனை,

வைத்தீஸ்வரனை இத்தனை நாள் போற்றிப் பாடாமல் இருந்து விட்டேனே  என்று புலம்புகிறார்  அப்பர்.

(புள்ளிருக்கு வேளூரான்- வைத்தீஸ்வரன் கோவில் மூலவர் ; தாயார் : தையல்  நாயகி)

XXX

இதில் தெரியவரும் அரிய செய்திகள் :

அப்பர் பெருமான் காலத்திலேயே சிவ பெருமானுக்கு ஸஹஸ்ரநாமம் இருந்திருக்கிறது.

திருமாலும் பன்றியாய்ச்

    சென்றுணராத் திருவடியை

உருநாம் அறியஓர்

    அந்தணனாய் ஆண்டுகொண்டான்

ஒருநாமம் ஓருருவம்

    ஒன்றுமில்லாற்கு ஆயிரம்

திருநாமம் பாடிநாம்

    தெள்ளேணங் கொட்டாமோ- என்று மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் பாடுகிறார்

Xxxx

இரண்டாவது அரிய செய்தி :–புள்ளிருக்கு வேளூர் என்பதற்கு தல புராணம் தரும் தகவலை திருஞான சம்பந்தரும் வேறு ஒரு பாடலில் உறுதி செய்கிறார் . புள்= ஜடாயு, சம்பாதி என்ற இரண்டு புள் (பறவைகள்), ருக்கு வேதம், வேள் /முருகன், ஊர்/ சூரியன் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் பெற்றது .

இதை சம்பந்தர் தேவாரத்தில் காண்கிறோம் :

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்

உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்

தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்

புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.

Xxx

மூன்றாவது அரிய செய்தி :– சிவபெருமான், நோய் தீர்க்கும் கடவுள் ஆகும். சம்ஸ்க்ருதத்தில் வைத்தீஸ் வரன் என்று பெயர். முன்காலத்தில் தமிழ்ப் பெயர்கள் மட்டுமே இருந்ததென்றும் பின்னர் சிலர் அதை ஸம்ஸ்க்ருத்திற்கு  மாற்றிவிட்டனர் என்றும் பலரும் புலம்புவர். அதைத் தகர்த்து  எறிகிறது அப்பரின் அருள்வாக்கு :

மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்

தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்

இது பிறவிப்பிணியைத் தீர்க்கும் வரி என்றாலும் பொருந்தும். உடலில் வரும் நோய்களைப் போக்குவார் என்றாலும் பொருந்தும். ஏனெனில் இந்தக் கோவிலில் மட்டும் நோய் தீர்க்கும் மருந்து உருண்டை — புற்று மண் – பிரசாத மாகக் கிடைக்கிறது. அத்தோடு உப்பும் மிளகும் கிடைக்கிறது. ஆக அப்பர் பாட்டில் வரும் மருந்து என்பது இதையும் குறிக்கும்.

மருந்து என்ற சொல் பல் இடங்களில் அமிர்தத்தையும்– சாவா மருந்து — குறிக்கும். அதைத் தரும் தன்வந்திரி சந்நிதி, இந்தக் கோவிலில் இருப்பது நோய் தீர்க்கும் தலம் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ருத்ரம் போன்ற யஜுர் வேத மந்திரங்களிலேயே இறைவனை பேஷஜம் /மெடிசின் MEDICINE , பிஷக் /டாக்டர் DOCTOR என்று ரிஷிகள் அழைத்துள்ளனர்

Xxx

நாலாவது அரிய செய்தி :–இந்தத் தலத்தின் புனித மரம் வேம்பு ஆகும். தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் மரம் வேப்ப மரம் என்பதைச்  சொல்லத் தேவையே இல்லை .

Xxx

ஐந்தாவது அரிய செய்தி :-இது அங்காரக க்ஷேத்திரமும் ஆகும்.. அந்த செவ்வாய்க்கு உரியவனான் முருகப்பெருமான் செல்வ முத்துக் குமாரசாமி என்ற பெயரில் இங்கு கொலு வீற்றிருப்பது குறிப்பிடத்  தக்கது.

எங்கள் குல தெய்வமான வைத்தீஸ்வரனை வணங்கச் செல்லுகையில், நாங்கள் ஐந்து அர்ச்சனைத் தட்டுகள் வாங்கி வைத்யநாத சுவாமி, தையல் நாயகி என்னும் பாலாம்பிகை, அங்காரகன், செல்வ முத்துக் குமரன், தன்வந்திரி ஆகிய அனைவர்க்கும் அர்ச்சனை செய்வோம்.

Xxx

ஆறாவது அரிய செய்தி:-

வைத்தீஸ்வரன் கோவில் குளமும் மிகப்பெரியது; பார்ப்பதற்கு அழகானது; மீன்கள் .தவளைகள் வசிக்காத குளம் என்ற பெருமையுடைத்து. கோபுரமும் குளமும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாதது.

XXX

ஏழாவது அரிய செய்தி:-

ஊரின் பெயரும் கோவிலின் பெயரும் ஒன்று. இப்படி இருப்பது சில இடங்களில் மட்டுமே ; காண்க- வைத்தீஸ்வரன் கோவில்

பாலாம்பிகே ச வைத்யே ச பவரோக ஹரேதி ச

ஜபேந் நாம த்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம்

என்ற ஸ்லோகத்தையும்

XXX

நோய்கள் விலக:

ஓம் நமோ பகவதே வாசுதேவாய

தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய

சர்வாமய வினாசாய

த்ரைலோக்ய நாதாய

ஸ்ரீமஹாவிஷ்ணவே நமஹ என்ற ஸ்லோகத்தையும் சொல்லி பயன் அடைவோமாக .

தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வந்து நம் உடலில் உள்ள ஸர்வ ஆமய = எல்லா நோய்களையும் தீர்த்துவிடுவார்.

பேராயிரம்பரவி – திருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர்

https://www.youtube.com › watch

6:36

… 6.54.8 தலம்: புள்ளிருக்கு வேளூர் பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் …

YouTube ·  · 15 Nov 2020

XXX

ENGLISH TRANSLATION OF THEVRAM OF APPAR BY

SEKKIZAR ADIPPODI DR T N RAMACHANDRAN

Alas, alas I have wasted many, many days not hailing

Him of Pullirukkuvelur! He is the Lord whom Devas

Hail with a thousand names; unto the servitors who part not

From Him. He secures the wealth of salvation; becoming

Mantra, Tantra and Medicine too. He cured the malady

Well-nigh impossible to cure; He is the martial one who held

The strong bow with which He gutted with fire

The triple hostile towns.

xxx

following is from shaivam.com

Praising thousands of names hailed by celestials, 

for the never separating devotees the One Who brings

the non-attainable wealth, Being the mantra, tantra 

and medicine Capable of curing even the incurable 

diseases, the Warrior Who held the mighty bow in hand 

burning the three cities, that Lord, the One in 

puLLirukku vELUr (vaiththIswaran kOvil),

without praising Him, oh I wasted so many days !

–subham—

tags-அப்பர் தேவாரம் , பேராயிரம் பரவி, வைத்தீஸ்வரன் கோவில், புள்ளிருக்குவேளூர் , தன்வந்திரி, நோய்கள் தீர 

லண்டன் டாக்டர் நாராயணனின் மார்கழிக் கவிதைகள் (Post.11,543-part 5)  

WRITTEN BY Dr A. Narayanan, London

Post No. 11,543- Part 5

Date uploaded in London – 1 January 2023              

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்கழித்திங்கள் 13

    கொக்காய் தோன்றிய கொடிய அரக்கனின்

    கூறிய அலகுகள் கூடிய வாய் பிளந்தழித்தோனும்

    கொடுங்கோல் கொற்றவன் இலங்கை சீமான் சிரங்கள்

    கொய்தது புறங்கையறியாப் புகழோன் பேர் பாட

    கூடமொன்றில் குழுமிய கெழுவுடைய மங்கையர் 

    குரு சாய்ந்து சுக்கிரனெழ திறந்த வானில் புட்கள் கூவிட

    மான் விழியும் மலர் போல் கண்களுமுடைய பாவையே!

    நீண்ட நித்திரை நின் கண் வளர நீராடாது பள்ளி இருந்து   

    நீலவண்ணனின் லீலையனுபவம் கண்ட கனவினை கூடி

    எம்முடனும் பகிர வேண்டின  நங்கை வாழியே

    வெண்ணெயுண்ட வாயாலே

    மண்ணையுண்டு மண்டலத்தை 

    கண்டத்தில் காட்டியோனே

    மண்ணுலக மங்கையொருத்திக்கு 

    கண்ட இடமெலாம் கண்ணனாக

    கண்ணனெங்கே கோதையங்கே    

     நாராயணன்

Xxx

மார்கழித்திங்கள் 14 

புறக்கடை வாவியுள் மலர்ந்த செங்கழுநீரும்

கூம்பிய ஆம்பலும் புலர்ந்த காலையில்   

காவி ஆடை மேனி தழுவிய வெண் பல்

மாதவர் ஊதிய சங்குடன் ஊர் கோயிலடைய

தோழிகளெம்மை முன்போதெழுப்ப

செப்பிய வாக்கு சப்பிட்டுப்போக

நாணமின்றி துயிலும் நங்கை நீ!

செங்கமலக்கண்ணும் சங்குமாழியும்

ஏந்திய தடக்கையோன் புகழ் பாட

எழுந்தெம்முடன் சேர்வாயென அழைத்த

ஆயிழையின் அணியியலோ திருப்பாவை

மறையுள் நிற்கும் மாயவனே

சிறையுள் பிறந்த மாதவனே

குறையொன்றில்லா கோவிந்தனே

முறையாக கோபியரின் கோபாலனே

உறைவதோ அவனுள்ளம் கோதையே

நாராயணன்  

Xxx

மார்கழித்திங்கள் 15

எம் தோழியே ! கிளி போல் சொன்னதைச்   

சொல்லும் இள நங்கையே! இன்னுமா உறக்கமென

வாயில் நின்ற தோழி மாரின் உரப்பலோடு கனிந்த

மொழியில் கூவியழைத்தோர் திறனறிந்துமிழைத்த       

தவற்றுக்குத் தானே காரணமென புறந்தோன்றிப் 

போந்தாருடன் பொருந்தி,கடுங்கண் களிரின்

கழுத்தைத் திருகியும் மாறா மாற்றானையும்

மாய்த்த மாயனைப் போற்றிப் பாடப் பாவைகளம்    

புக்கிய பெரு நங்கை வாழியே

ஆயிழையாள் ஆழ்வான் கை தவழ்ந்து

ஆயன் மாயன் தூயோனே அவளுள்ளுறைந்து

ஆயிரம் நாமமும் மேலும் பல பேருடையானை

ஆறைந்து பாசுரங்களாய் தொடுத்த பாமாலையே          

ஆதியும் அந்தமுமில்லாதோனை ஆனந்தத்தில்     

ஆழ்த்திய ஆண்டாளின் திருப்பாவை.

நாராயணன்

XXX

மார்கழித்திங்கள் 16

நாயகனான நந்தகோபனின் கோயிலும் 

நீண்டோங்கிய கொடிமரமும் தோரண

நெடு வாயிலும் காப்போர்களே!  நேற்றே 

நிரை வாய் அறை பறை தர மொழிந்த

குறையிலா மாயன் மணிவண்ணனைத்

துயிலெழப் பாட தூயோராய் வந்த ஆயர்

சிறுமியரெமக்கு ஆயன் அறை வாய் மூடிய

சீரான மணிக்கதவு தாள் திற வென வேண்டிய

சரணநெறியறிந்த சிறுமியர்கள் வாழியே.               

                    (16 முடிவு) 

xxx

அலரும் கன்றின் அரும்பசி நீக்க

ஆவின் மடி கனத்து முலை சொரிய

அம்மாவின் முலை தீண்டாப் பருகிய

பாலில் கடும்பசி தீர்ந்த கன்று போல்

காலின் சிலம்பொலிக்கக் கை வளை 

குலுங்கிய வேய்ங்குழலோனை கோதையின்

கலையாப் பூங்குழலில் வீசிய நறுமணம்

தொலைவிலுள்ளத் தேனீ போலீர்த்தது

நீரும் சோறும் உடுக்கையுமுற்றார்க்குப் பற்றுமளவு       (மார்கழித்திங்கள் 17)

ஈன்ற ஆயர் கோமான் நந்த கோபரே எழுவீரோ

வஞ்சியர் குலக்கொழுந்தும் குலதீபமான 

ஆய்ச்சியர்குல அரசி யசோதையே எழுவீரோ

ஆகாயத்தினூடே ஓங்கி உலகளந்து அமரர்க்கும்

அதிபதியோனே உறங்காதெழுவீரோ

அன்றைய இளையோனே இன்று முத்தோனாய்

கன்றோட்டிடும் கண்ணனுடன் பிறந்த பலராமா

எழுவீரோ வென குலத்தோருக்குப் பள்ளி

எழுச்சிப் பாடிய நிலமங்கை வாழியே                                           17

கோடி தேவர்கள் கூடி வந்தாலும்

நாடிய நாரணனைத் தேடிய கோதை

சூடிய மாலையோடு வாடிய முகத்தில்

பாடிய பாக்களைப் பழரசமாய் பருகிட

ஓடி வந்தானோ ஓங்கி உலகளந்தோன்

நாராயணன்

 —-to be continued…………………………