தொல்காப்பியத்தில் ஜோதிடம் (Post No.11,751)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,751

Date uploaded in London – –  6 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தமிழர்களின் மிகப்பழைய புஸ்தகம் என்று கருதப்படும் தொல்காப்பியத்தில் இந்திரன், விஷ்ணு, வருணன், துர்க்கை, பலராமனின் பனைக்கொடி , அறம்,பொருள், இன்பம் , அக்நி பகவான் , யமன் , பிராமணர்களின் வேதம் பற்றிய குறிப்புகள் இருப்பதை பல கட்டுரைகளில் தொகுத்து அளித்தேன். சங்க இலக்கிய  நூல்களில் 200 ஜோதிடக் குறிப்புகள் உள்ளன. தொல்காப்பியம் இலக்கண நூல் என்ற போதிலும் அதிலும் ஜோதிடம் பற்றி, தொல்காப்பியர் குறிப்பிடத் தவறவில்லை.

நிமித்தம் என்பது நல்லன தீயன நிகழப்போவதை அறிவிக்கும் அறிகுறிகள் என்பதை பகவத் கீதையிலும் அர்த்த சாஸ்திரத்திலும் வராஹ மிஹிரரின் பிருஹத் ஸம்ஹிதாவிலும் காண்கிறோம். இந்த ஸம்ஸ்க்ருதச் சொல் குறைந்தது 3000 ஆண்டுப் பழமை உடைய சொல் .(Full details are given at the end of this article.)

த்ருண தூமாக்கினி என்ற பிராமணன் ஆகிய தொல்காப்பியர் இந்தச் சொல்லை பயன்படுத்தியதில் வியப்பு ஒன்றுமில்லை .

எச்சரிக்கை

GOOD BOOK WITH OLD COMMENTARY

பழைய நூல்களில் மிகவும் விஷமத்தனமான, திசை திருப்பும் உரைகள் மிக்கது தொல்காப்பிய நூலாகும். இதனால் இந்த நூல் பற்றி தற்காலத்தியர் கூறுவதை ஒதுக்கிவிட்டு பழங்கால உரைகாரர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் உரைகளையே அடிப்படையாக ஏற்று பொருள் கொள்ள வேண்டும்.

திராவிடத் திருடர்களை இனம் காண, நமக்கு மிகவும் உதவி செய்வது தொல்காப்பிய பொருளதிகாரம் ஆகும். எந்த இரண்டு திராவிடங்களும் ஒரே மாதிரி உரை எழுதவில்லை; NO TWO CLOCKS AGREE; கற்பனை சிறகடித்துப் பறக்க உரை எழுதியுள்ளனர். புது உரை காண்பதில் எந்தத் தவறும் இல்லை. இது பழைய உரைகள் சொல்வது; இது என் கருத்து என்று எழுதியிருந்தால் அவர்களை மன்னிக்கலாம்..

xxx

தொல்காப்பியத்தில் காணப்படும் ஜோதிடச் சொற்கள் :-

நிமித்தம் – தொல் . பொருளதிகாரம்

3-16-2; 39–2; 88-17; 101-1;175-3; 263-2

இது தவிர சங்க இலக்கியத்தில் இதைக் காணமுடியாது. இது ஸம்ஸ்க்ருதச் சொல்.

திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பிய நூல்கள் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மொழியியல் அடிப்படையில் நான் நிரூபித்துள்ளேன். ஆனால் தொல்காப்பியர் காலம் , இளங்கோ சொல்லும் சிலப்பதிகார நிகழ்ச்சிகள் ஆகியன காலத்தால் முற்பட்டவை.

இதை மேலும் ருசுப்பிக்கும் வண்ணம் நிமித்தம் என்ற சொல் சிலப்பதிகாரத்தில் மட்டுமே வருகிறது .

நிமித்தம் என்ற சொல்லுக்குச் சோதிட ரீதியிலும் பொருள் சொல்லலாம். சாதாரணமாகவும்  பொருள் சொல்லலாம்.

என்ன நிமித்தம் அங்கு சென்றனை? என்றால் என்ன காரணத்துக்காக அங்கு போனாய் ? என்பதாகும்.

மற்றும் ஒரு பொருள்— வரும்பொருள் உரைக்கும் ஜோதிட அறிகுறியாகும் .பழந்தமிழ் உரைகாரர்கள் ஜோதிட விளக்கங்களையும் ஆங்காங்கு கொடுத்திருப்பதால் அவற்றையே நாம் ஏற்க வேண்டும்.

மிகத்  தெளிவான குறிப்பு

அச்சமும் உவகையும் எச்சம் இன்றி

நாளும் புள்ளும் பிறவற்றில் நிமித்தமும்

காலங் கண்ணிய வோம்படையுளப்பட 

ஞாலத்து வருஉ நடக்கையது –1037

பொருள்

நாளானாலும் புள்ளானாலும் பிற நிமித்தத்தான் வரும் அச்சமும் உவகையும் காலக் கணிப்பால் அறிந்து கூறும்  பாதுகாப்புரையாகிய …………..

நல்ல நிமித்தமானால் உவகை/சந்தோஷம் ; தீய நிமித்தமானால் அச்சம்.

Xxxx

இந்த சூத்திரத்தில் நாள் (பஞ்சாங்கத்தில் நல்ல நாள் பார்ப்பது), புள் (பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பது, நிமித்தம் (ஜோதிட ரீதியில் விளக்கம் காண்பது) ஆகியன அனைத்தும் வந்து விடுகிறது.

புள் என்றால் பறவை; சம்ஸ்க்ருதத்தில் சகுந்த, சகுன என்றால் பறவை. அதை ஒட்டி சகுன சாஸ்திரம் எழுந்தது. சங்க இலக்கியத்திலும் புள் என்ற சொல்லை சகுனம் என்ற பொருளில் பயன்படுத்தினர்.

பிரபல பஞ்சாங்கங்களில் இன்றும் பஞ்ச பட்சி சாஸ்திர படத்தையும் விளக்கத்தையும் காணலாம். வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகியவற்றைக் கொண்டு ‘வருவது’ உரைத்தனர்.

Xxxx

இதே 1037 சூத்திரத்தில்

பிறந்த நாள் வயின் பெருமங்கலமும்

சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலமும்

என்ற வரிகளில் மன்னர்கள் பிறந்த நாள் , பட்டாபிஷேக நாள் ஆகியவற்றை கொண்டாடிய செய்தியும் உள .

xxxx

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்

துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை

பொருள் . களவியல் – சூத்திர எண் 1081

களவொழுக்கத்தின் கண்ணே முகூர்த்தமும் நாளும் துறந்து ஒழுகும் ஒழுக்கம் தலைவன் மாட்டு இல்லை.

துறப்பானாயின் தலைவி மாட்டு அவனது அன்பு குறைந்தது என்ற குற்றம் உண்டாகும்.

Xxx

குடையும் வாளும் நாள்கோள் அன்றி

மடையமை ஏணி மிசை மயக்கம் -சூத்திரம் 1014

வெண்கொற்றக்குடையை  நல்ல நாளில் அனுப்பல் ;

வெற்றிபெறும் வாளை  நல்ல நாளில் செலுத்தல்

மன்னர் படை எடுப்பு , பயணம் எல்லாவற்றிற்கும் நல்ல நாளை கணக்கிட்டே செய்தனர் தமிழ் மன்னர்கள் .

xxx

அறிவன்

தொல் 3-74-4

முக்காலமும் அறிந்தவர் அல்லது சொல்ல வல்லவர் . இந்த சொற்

பிரயோகமும் பிற்கால நூல்களிலேயே  அதிகம் காணப்படுகிறது

தொல்காப்பியத்தில் இது ஜோதிடரையே குறித்தது என்பதை உரைகாரர்கள் வாயிலாக நாம் அறிகிறோம்

மறுவில் செய்தி மூவகைக்காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்

நாவிரு வழக்கில் தாபதப் பக்கமும்

பாலறி மரபில் பொருநர் கண்ணும்

தொல் . புறத்திணை 16சூத்திர எண் 1021

இதில் அறிவன் என்பதை முனிவர் என்று நச்சினார்க்கினியரும் ஜோதிடர் என்று இளம்பூரணரும் விளக்குவார்கள்.

இரண்டிலும் மூவகைக் காலமும் அறிந்தவர் என்ற பொருள் வந்துவிடுகிறது இன்றும் கூட பிரச்சனை என்று வந்தால், வருங்காலத்தை அறிய எல்லோரும் சாமியார் அல்லது ஜோதிடரைத்தான் அணுகுகின்றனர்.

இது தவிர அறிவர் என்ற சொற் பிரயோகமும் தொல்காப்பியத்தில் உள்ளது . அங்கு ஜோதிடர் அல்லது அறிவுரை வழங்குவோர் என்று உரைகாரர்கள் பொருள் காண்பர் .

காலம் , தேசம்/தேயம் என்ற ஸம்ஸ்க்ருதச்  சொற்களையும் கவனிக்கவும்; இப்போதும் கால, தேச, வர்த்தமானம் என்ற சொல் தொடரைப் புழக்கத்தில் காணலாம்.

xxxx

அறிவர் —

தொல் .3-152-1; 191-3; 491-4; 498-1

இவை தவிர குறுந்தொகை 190, புறநானூற்றில் 399 இரண்டே இடங்கள்

தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

பாணன் பாட்டி இளையர்  விருந்தினர்

கூத்தர் விறலியர் அறிவர்

யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப – பொருள் – கற் 52 சூத்திர எண்- 1139

தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணர், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் என்போர் கணவன்- மனைவி ஊடலைத் தீர்க்கும் தூதுவர் ஆவர்.

இங்கும் முனிவர் அல்லது ஜோதிடர் என்ற பொருள் கொள்ள முடியும்.

xxxx

கணியன்

பொதுவான பொருள் – கணக்கு செய்பவன். மணி அறிவிப்பானை  நாழிகைகைக் கணக்கர் என்பர். இன்னொரு பொருள் ஜோதிட ரீதியில் கணக்குப்  போட்டு வருங்காலம் உரைப்போன். .இச்சொல்லையும் புகழ்பெற்ற யாதும் ஊரே யாவரும் கேளிர் — தத்துவப் பாடலின் ஆசிரியர் பெயரிலும் — கணியன் பூங்குன்றன் மற்றும் கணி மேதாவியார் பெயர்களில் காணலாம்.

xxxx

FOLLOWING IS TAKEN FROM WISDOM LIBRARY WEBSITE

Sanskrit dictionary

Nimitta (निमित्त).—[ni-mid-kta Tv.]

1) A cause, motive, ground reason; निमित्तनैमित्तिकयोरयं क्रमः (nimittanaimittikayorayaṃ kramaḥ) Ś.7.3.

4) A mark, sign, token.

6) An omen, prognostic (good or bad); निमित्तं सूचयित्वा (nimittaṃ sūcayitvā) Ś.1; निमित्तानि च पश्यामि विपरीतानि केशव (nimittāni ca paśyāmi viparītāni keśava) Bhagavadgītā (Bombay) 1.31; R.1.86; Manusmṛti 6.5; Y.1.23;3.171.

XXXX

Jyotisha (astronomy and astrology)

[«previous (N) next»] — Nimitta in Jyotisha glossary

Source: Wisdom Library: Brihat Samhita by Varahamihira

Nimitta (निमित्त) refers to “portents”, according to the Bṛhatsaṃhitā (chapter 5), an encyclopedic Sanskrit work written by Varāhamihira mainly focusing on the science of ancient Indian astronomy astronomy (Jyotiṣa).—Accordingly, “If there should be both lunar and solar eclipses in one month, princes will suffer both from dissensions among their own army and from wars. […] If during the eclipse, there should occur portents [i.e., nimitta], meteoric fails, dust storms, earthquakes, universal darkness or thunderbolt, the eclipse will re-occur after six, twelve, eighteen, twenty-four, thirty, or thirty-six months respectively”.

XXXX

Arthashastra (politics and welfare)

[«previous (N) next»] — Nimitta in Arthashastra glossary

Source: Brill: Śaivism and the Tantric Traditions (artha)

Nimitta (निमित्त) refers to “(divine) omens”, according to the Arthaśāstra verse 1.9.9-10.—Accordingly, “He should appoint as chaplain a man who comes from a very distinguished family and has an equally distinguished character, who is thoroughly trained in the Veda together with the limbs, in divine omens (daiva-nimittadaive nimitte), and in government, and who could counteract divine and human adversities through Atharvan means. He should follow him as a pupil his teacher, a son his father, and a servant his master”.

XXXX

—subham—-

Tags- தொல்காப்பியம் , ஜோதிடம், நாள், புள், சகுனம், ஓரை,நிமித்தம், அறிவன், கணியன், nimitta

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: