நோய்கள், காசு பறிக்கும்  டாக்டர்கள் பற்றி அருணகிரிநாதர்!-9 (Post.15,388)


Written by London Swaminathan

Post No. 15,388

Date uploaded in Sydney, Australia –  3 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அரிய செய்திகள்- 9

அருணகிரி நாதர் சொல் அழகும்பொருள் வளமும்- Part 9

அறமும் நிறமும் அயிலும் மயிலும் … தர்மமும், செந்நிறமும்,

வேலும், மயிலும்,

அழகும் உடைய பெருமாளே. … அழகும் உடைய பெருமாளே.

***

நோய்கள், டாக்டர்கள் பற்றி

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்

     விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு

          சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி …… யணுகாதே

தலமிசை யதற்கான பேரோடு கூறியிது

     பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்

          சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் …… விதியாதே

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்

     வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண

          முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க …… ளிருபாதம்

உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்

     வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ

          உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை …… வரவேணும்

அலைகட லடைத்தேம காகோர ராவணனை

     மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை

          அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு …… மருகோனே

அறுகினை முடித்தோனை யாதார மானவனை

     மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்

          அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் …… வருவோனே

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை

     யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்

          பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு …… மணவாளா

பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்

     வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்

          பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

டயாபடீஸ் நோய் வரக்கூடாது

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் … தலைவலிவசிய

மருந்தால் வரும் நோய், மஞ்சட்காமாலை, ரத்தசோகை, ஜுரம்,

விழிவலி வறட்சூலை காயாசு வாசம் … கண்வலிவறள் என்ற

வயிற்றுவலி, காசநோய், மூச்சுப்பிடிப்பு,

வெகுசலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே …

நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், உலகமாயையால் வரும்

விகாரமான பிணிகள் முதலியவை என்னை அணுகாதவண்ணம்,

காசு பறிக்கும் டாக்டர்கள்

தலமிசை யதற்கான பேரோடு கூறி … பூமியில் அந்த நோய்கள்

நீங்குவதற்காக சில வைத்தியர்களிடம் சொல்லி,

யிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் … இது

நீங்குவதற்குப் பரிகாரம் யாதெனக் கேட்டால், காது கேளாததுபோலச் செல்பவர் சிலர்,

சரியும் வயதுக்கேது தாரீர்சொலீரெனவும் விதியாதே …

சாகப்போகும் வயதாகிவிட்டதே உமக்கு, எவ்வளவு பணம் தருவீரெனக் கேட்பவர் சிலர் என்று பிறர் கூறும்படியான விதியை என் தலையில் எழுதாமல்,

****

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் … ஊக்கக்குறைவு

இன்றி, விருப்பமுடன் பெரிய பூந்தோட்டத்தில் பூத்த மணமுள்ள

மலர்களை,

வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம் … விதவிதமாகப்

பறித்துத் தொடுத்து மாலை வகைகளில் ஆபரணங்கள் போல் அமைத்து

உனதடியி னிற்சூடவேநாடு மாதவர்கள் இருபாதம் …

உன்னடியில் சூட்டுதற்கு விரும்பும் சிறந்த தவசிரேஷ்டர்களின் இரு

பாதங்களையும்

உளமது தரித்தே வினாவோடு பாடியருள் … மனத்தினில்

தரித்தே, ஆய்ந்த அறிவுடன் பாடி, உன்னருளால்

வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ … உன்னை

வழிபடுவதற்கு, என்மீது அன்பு கூர்ந்து, உன் திருவடிகளைத் தந்துதவ

உரகமது எடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும் …

பாம்பைத் தூக்கி எறிந்து ஆடும் மயிலின் மீது வந்தருள வேண்டும்.

*****

மஹா கோர ராவணன்

அலைகடல் அடைத்தே மகாகோர ராவணனை … அலைகடலை

அணையிட்டு அடைத்து, மகா கோரமான ராவவணனுடைய

மணிமுடி துணித்து ஆவியேயான ஜானகியை … மணிமுடிகளை

அறுத்துத்தள்ளி, உயிருக்கு ஒப்பான சீதாதேவியை

அடலுடன் அழைத்தேகொள் மாயோனை மாமனெனு

மருகோனே … தன் தோள்வலியால் அழைத்துக்கொண்ட மாயவனான திருமாலை மாமன் என்று அழைக்கும் மருகனே,

****

அறுகினை முடித்தோனை யாதார மானவனை … அறுகம்புல்லை

சடையில் முடித்தவனும், உயிர்கட்கெல்லாம் ஆதாரமானவனும்,

மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் … மழு, மான்

இவைகளை ஏந்தியவனும், மகா காளி வெட்கும்படியாக முன்னர்

அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும்

வருவோனே … சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை,

சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே,

****

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை … பல கலைகளைப்

படித்து ஓதும் கவிஞர்களின் நாவிலே வாசம் செய்கின்ற

இருசரண வித்தார வேலாயுதா … இரு திருவடிகளை உடைய

வித்தகனே, வேலாயுதனே,

உயர்செய் பரண்மிசை குறப்பாவை … உயரத்தில் கட்டப்பட்ட

பரணின் மீது இருந்த குறப்பெண் வள்ளியின்

தோள்மேவ மோகமுறு மணவாளா … தோள்களைத் தழுவ மிக்க

ஆசை கொண்ட மணவாளனே,

பதுமவயலிற் பூகமீதே வரால்கள் துயில் வருபுனல்

பெருக்காறு … தாமரை மலர்கின்ற வயலிலும், பாக்கு மரங்களின் மீதும், வரால் மீன்கள் உறங்கும்படி வரும் நீர்ப்பெருக்கை உடைய ஆறாகிய

திருப்புகழில் பூகோள பாடம்

காவேரி சூழவளர் பழநிவரு … காவேரி சூழ விளங்கும் பழநியில் எழுந்தருளிய,

****

பழனி மலையைச் சுற்றி ஓடும் நதி

பழனி மலையைச் சுற்றி ஓடும் முக்கிய நதி சண்முக நதி ஆகும். இது அமராவதி ஆற்றின் துணையாறாகும், மேலும் இந்த நதி பழனி மலைச் சரிவுகளில் உற்பத்தியாகி, பழனி நகரத்திற்கு அருகில் உள்ள சக்தி கிரி மற்றும் சிவகிரி மலைகளுக்கு அருகில் பாய்கிறது.

நதியின் பெயர்: சண்முக நதி (Shanmuganathi).

உற்பத்தி: பழனி மலைச் சரிவுகள் (Palani Hills).

இது அமராவதி ஆற்றின் ஒரு துணையாறு அது  இறுதியில் காவிரியில் கலக்கிறது.

பாயும் இடம்: பழனி முருகர் கோயில் அமைந்துள்ள அடிவாரத்தில் இந்த நதி பாய்கிறது.

மேலும், பழனி மலைப்பகுதிகள் Vaigai மற்றும் Amaravathi ஆறுகளின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் விளங்குகிறது

****

கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே. … பச்சைக் கற்பூர மணம்

கமழும் அலங்கார ஆடம்பரனே, தேவர்களின் பெருமாளே.

***

பெரிய புராணக் கதை , சோழநாட்டின் பெருமை

நாத விந்து கலாதீ நமோநம … லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய

தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,

வேத மந்த்ர சொரூபா நமோநம … வேதங்கள், மந்திரங்கள்,

இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி,

ஞான பண்டித ஸாமீ நமோநம … பேரறிவுக்குத் தலைவனான

தெய்வமே, போற்றி, போற்றி,வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம … பல கோடிக்கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி

போக அந்தரி பாலா நமோநம … (அனைத்து உயிர்களுக்கெல்லாம்)

இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி

நாக பந்த மயூரா நமோநம … தன் காலினால் பாம்பை அடக்கிக்

கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி,

பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம … எதிரிகளான

சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி,

கீத கிண்கிணி பாதா நமோநம … இசை ஒலி எழுப்பும்

சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி,

போற்றி

தீர சம்ப்ரம வீரா நமோநம … மிகவும் பராக்ரமசாலியான

போர்வீரனே, போற்றி, போற்றி,

கிரிராஜ … மலைகளுக்கெல்லாம் அரசனே,

தீப மங்கள ஜோதீ நமோநம … திருவிளக்குகளின் மங்களகரமான

ஒளியேபோற்றிபோற்றி,

தூய அம்பல லீலா நமோநம … பரிசுத்தமான பரவெளியில் லீலைகள்புரிபவனே, போற்றி, போற்றி,

தேவ குஞ்சரி பாகா நமோநம … தேவயானையை மணாட்டியாகப்

பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி,

அருள்தாராய் … உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக.

சோழநாட்டின் பெருமை

ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார

நீதியும் … தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம்,

ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத … கருணை, குருவின்

திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்),

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை … ஏழு உலகங்களில்

உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும்

சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும்

நாயக … சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்

ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே,

வயலூரா … வயலூருக்குத் தலைவா,

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை … தன்மீது அன்புவைத்த

திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை

சேர்தல் கொண்டவரோடே முனாளினில் … நாடியவராய்,

அவருடன் முன்பொருநாள்,

ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி … ஆடலில் சிறந்த,

விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)

ஆதி அந்தவுலாவாசு பாடிய … ஆதி உலா எனப்படும் அழகிய

(கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய

சேரர் கொங்குவை காவூர் நனாடதில் … சேரர் பெருமானாம்

சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து

வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்

ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. … திரு

ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு

கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.

இது திருக்கற்குடி‘ அல்லது உய்யக்கொண்டான்‘ என்று வழங்கப்படும். திருச்சிக்கு அருகில் வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது.

** கொங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் ஆண்டார். அவர் சைவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் நண்பர். சிவபிரான் சுந்தரரை கயிலைக்கு அழைத்தபோதுசுந்தரர் தமது நண்பரும் உடன்வர வேண்டுமென விரும்பினார். சேரமான் குதிரையில் ஏறி கயிலைக்கு விரைந்து சென்றார். சுந்தரர் இன்னும் வராததால் கயிலையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சேரமான் ஆதி உலா‘ என்ற பாடலைப் பாடகயிலையின் கதவுகள் திறந்தன. சுந்தரருடன் சேரமான் கயிலைப் பதம் சேர்ந்தார். – பெரிய புராணம்.

***

பல்லக்கில் பவனி வரும் போலிப் புலவர்களின் தோற்றம் !

நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு(ம்) நெருடு கவி

கொண்டு வித்தை பேசிய … வேதப் பொருள் என்றால் ஒரு சிறிதும்

தெரியாமல், தினமும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இயற்றிய

நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா … போலிக்

கவிகள் சில அற்பச் சொற்களைக் கற்று, ஆடம்பரமான பட்டப் பெயர்களை வைத்துக்கொண்டு,

நெளிய முது தண்டு சத்ர(ம்) சாமர(ம்) நிபிடம் இட வந்து …

(தூக்குவோர்களுடைய முதுகு) நெளியத் தக்கக் கனத்த பல்லக்கு, குடை, சாமரம் (இவைகள் பரிசாகப் பெற்று) நெருங்கும்படியாக (உலவிக் கொண்டு) வந்து,

கைக்கு மோதிர நெடுகி அதி குண்டல ப்ரதாபமும்

உடையோராய் … கையில் மோதிரமும், (காதில்) நீண்டு தொங்கும் ஒளி மிக்க குண்டலங்களைத் தாங்கிய சிறப்பும் உடையவர்களாய்,

முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து

இருக்குமோ எனில் … அவர்களது முகமானதுஒரு செய்யுளும்

வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய நூல்களும் விளக்கக் கூடுமோ என்று கேட்டால்,

முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி முறியும்

அவர் தங்கள் வித்தை தான் இது … அவை ஒன்றும் தெரியாததால்

வெட்கத்தால் (முகம்) வெளுத்து, இறுதியில் மனம் குலைந்து

போனவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம்.

முடியவு(ம்) உனை நின்று பத்தியால் மிக மொழியும் வளர்

செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே … (இத்தகைய கல்வி

போதும்,) இது முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒரு வழியில்நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக.

To be continued……………………………

Tags- திருப்புகழில் ,அருணகிரி நாதர், சொல் அழகும்பொருள் வளமும்- Part 9, அரிய செய்திகள்-டாக்டர்கள்நோய்கள்காவேரிசோழநாடுபோலிப்  புலவர்கள்

எந்தச் செயலையும் யோசித்துச் செய்! (Post No.15,387)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,387

Date uploaded in London – 2 February 2026 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்!

எந்தச் செயலையும் யோசித்துச் செய்! 

ச. நாகராஜன் 

க்ருதஸ்ய கரணம் நாஸ்தி ப்ராகேவாத: பரீக்ஷியதாம் |
அவிசிந்த்ய க்ருதம் சர்வம் பச்சாத்தாபாய கல்பதே || 

செய்த ஒரு செயலை எப்போதுமே திரும்பப் பெற முடியாது. ஆகவே ஒரு செயலை முன்னதாகவே யோசித்துச் செய்ய வேண்டும். சரியான ஆலோசனை இன்றி செய்யப்படும் அனைத்துச் செயல்களுமே பின்னால் மன வருத்தத்திற்கு இட்டுச் செல்லும். 

க்ருதஸ்ய கரணம் நாஸ்தி ம்ருத்ஸ்ய மரணம் ததா |
கதஸ்ய ஷோஸனா நாஸ்தி  ஹ்ரேதத் வேதவிதாம் மதம் || 

செய்த ஒரு செயலை எப்போதுமே திரும்பப் பெற முடியாது. இறந்தது மீண்டும் உயிர் பிழைத்து மரணத்தை அடைய முடியாது. எது இழக்கப்பட்டதோ அதை நினைத்து வருத்தப்பட முடியாது. இதுவே வேதத்தைக் கற்றறிந்தோரின் பார்வையாகும்.

கும்பம் நிர்மாதி சக்ரேண கும்பகாரோ ம்ருதா முவி |

ததைவ கர்மசூத்ரேண பலம் தாதா ததாதி ச ||

பூமியிலிருந்த களிமண்ணை எடுத்து தனது சக்கரத்தில் ஒரு குயவன் பானையைச் செய்கிறான். அதுபோலவே படைப்பானது (அதாவது விதியானது) கர்ம விதியின் படி  கர்ம பலனைத் தருகிறது.

கும்ப: பரிமிதம்ப: பிபத்யசௌ கும்பசம்பவோப்மோதிம் |

அதிரிச்யதே  சுஜன்மா கஸ்சித் ஜனகம் நிஜேன சரிதேன ||

ஒரு பானையானது குறிப்பிட்ட அளவே தண்ணீரை எடுத்துக் கொள்கிறது. ஆனால் கும்பத்திலிருந்து பிறந்த கும்பமுனியானவர் (அதாவது அகத்தியர்) முழுக் கடலையுமே குடித்து விட்டார். ஒரு நல்ல மகனானவன் தனது செயல்களால் தந்தையையே மிஞ்சுகிறான்.

கும்பா: பயோநிதிபயோஹரணப்ரவூத்தா

  நித்யம் வஹந்தி கில யே விபலதமத்வம் |

சித்ரம் க்ஷணாதிஹ ததேகசமுத்பவேண

   சந்தர்ஷிதா நிகில வாரிதிபானலீலா ||

கடலிலிருந்து நீரை எடுக்கப் பயன்படுத்தப்படும் பானையானது பயனற்ற விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், என்ன ஆச்சரியம், அதிலிருந்து பிறந்த ஒருவர் விளையாட்டு லீலையாக கடலையே குடித்து விட்டார்!

அகத்திய முனியைப் புகழ்ந்து பாடப்பட்ட சுபாஷிதம் இது!

குமுதேஷ்வதிகம் பாந்தி பதிதாஷ்சந்த்ரமய: |

அதிப்ரக்ருஷ்ட சீலேஷு குலேஷ்விவ சம்ருத்தய: ||

வெள்ளை நிற குமுத மலர்களின் மீது படும் சந்திர கிரணங்கள் அதன் பிரகாசத்தைக் கூட்டுகின்றன. அது போலவே மிக மிக ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவர்களின் நடத்தை மிக அதிகமாகப் பாராட்டப்படுகிறது.

**

Two more Beautiful Temples in Sydney that I Visited(Post No.15,386)

Written by London Swaminathan

Post No. 15,386

Date uploaded in Sydney, Australia –  2 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

During my previous two trips to Sydney, I covered Shiva, Murugan (Skanda/ Kartikeya), Venkateswara, and Nantien Buddhist temples. During this third trip, I decided to cover rest of the temples. So, I went to Ganapathy (Vinayakar) temple and a Shakti temple in the past few weeks. My son told me that there are two more temples in an industrial area one next to another. Who will say we don’t want two birds in one stone. So, we rushed there in car on 31 January 2026 to get two mangoes in one stone.  We were not disappointed.

In a vast industrial area with trucks and cranes, two small temples peeped out. First, we entered the Sydney Durga temple.

Surprise! Surprise!

Wes aw Tamil poet Tiruvalluvar statue next to Sarasvati Devi statue in the temple complex. When we moved a little further, we saw Tamil poet Ilango’s statue, the author of the most famous Tamil epic Silappadikaram.

Then we climbed several steep steps to see a huge hall with Goddess Durga in the main shrine. From the temple posters we came to know that it is run by Sri Lankan Tamils. On either side of the main shrine Lord Ganesh and Lord Skanda/ Murgan occupied two small shrines.

The unique feature of the temple is the eight beautiful Lakshmi statues (Ashta Laksmi) in the corridor. Apart from them, there are Navagrahas and other minor deities. There were four priests looking after the visiting devotees. In total only 25 devotees were inside the huge Mandapa. So, we had good Darshan (viewing) of Gods. It has a divine atmosphere.

There is a canteen outside where one can buy Tamil snacks.

Shirdi Saibaba Temple

Just a few doors away, is the Shirdi Sai Temple. Again, we climbed  a number of steps to see a huge hall with Shirdi Sai baba occupying the Main shrine. A beautiful and melodious divine song was going on air. It created more divine atmosphere. About 15 people with one priest were there. Lord Ganesh, Siva and Hanuman are in smaller shrines. The unique feature of the temple is a Siva Linga where one can do Abisheka. Water pots are placed near it. We did Abishek (bathing of the God) with Mrtyunjaya Mantra from the Yajurveda.  Here also one canteen is operating.

Both the temples must be visited by the devotees. There is good scope for big Puja, ceremonies and Dhyana (meditation).

After visiting Sai Mandir, we came back to Tamil Durga temple and bought hot Idli, Vadai, Sambhar, Chutney and Masala Tea.

***

Here are the addresses of both the Temples:

Sydney Sri Durga Amman Temple

21, Rose Crescent Regents Park, NSW 2143

Phones – (02) 9644 6682, (02) 9746 n9724

www.sydneydurgatemple.org

e mail – sydneydurga@gmail.com

***

Sai Mandir Sydney

25, Rose Crescent Regents Park, NSW 2143

Phone- 1500 524 724

saimandir@gmail.com

—subham—

Tags- Sydney Sri Durga Amman Temple, Sai Mandir Sydney, Tamil statues, Tiru Valluvar, Ilango, Ashta Lakshmi statues, london swaminathan, Australia

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் -Part 8 (Post No.15,385)

Written by London Swaminathan

Post No. 15,385

Date uploaded in Sydney, Australia –  2 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 8

இவை அனைத்தும் பழனி மலை முருகன் பற்றிய பாடல்களில் உள்ளவை!

சென்னை  வசவு  கஸ்மாலம் !

குரம்பை மல(ம்) சலம் வழுவளு நிணமொடு … சிறு குடிலாகிய

இந்த வீடு – உள்ளே இருப்பது மலமும், மூத்திரமும், கெட்ட

வழுவழுப்பான கொழுப்பும்,

எலும்பு அணி சரி தசை இரல் குடல் … எலும்பும், அடுக்காகச்

சரிந்துள்ள தசைகளும், ஈரலும், குடலும்,

நெதி குலைந்த செயிர் மயிர் குருதியொடு … முறையின்றி

சிக்குற்ற மயிர்களும், இரத்தம் முதலியவைகளுடன்,

இவை பல கசுமாலம் … இவற்றோடு கெட்ட அழுக்குகள்

நிறைந்ததுமான,

பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்திலுள்ள கஸ்மலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் பிற்காலத்தில் சென்னை வணிகர்கள் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் பயன்படுத்தும் வசை மொழியாக மாறிவிட்டது .

श्रीभगवानुवाच ।

कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम् ।

अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन ॥ २-२॥

கஸ்மலம் – மதிமயக்கம்தீய எண்ணம்

śrībhagavānuvāca

kutastvā kaśmalamidaṃ viṣame samupasthitam

anāryajuṣṭamasvargyamakīrtikaramarjuna 2-2

The Blessed Lord said: Whence is this perilous condition come upon thee, this dejection, un-Aryan-like, heaven-excluding, disgraceful, O Arjuna?

śrībhagavānuvāca = the Supreme Personality of Godhead said; kutaḥ = wherefrom; tvā = unto you; kaśmalaṃ = dirtiness; idaṃ = this lamentation; viṣame = in this hour of crisis; samupasthitaṃ = arrived; anārya = persons who do not know the value of life; juṣṭaṃ = practiced by; asvargyaṃ = which does not lead to higher planets; akīrti = infamy; karaṃ = the cause of; arjuna = O Arjuna.;

Sanskrit dictionary

[«previous (K) next»] — Kashmala in Sanskrit glossary

Kaśmala (कश्मल).—a. [Uṇ 1.16.] Foul, dirty, disgraceful, ignominious;

தவறான அழுக்கானஅவமானத்தை உண்டாக்கும்அசிங்கமான

मत्सबंधात्कश्मला किंवदन्ती स्याच्चेदस्मिन्हन्त धिङ् मामधन्यम् (matsabaṃdhātkaśmalā kiṃvadantī syāccedasminhanta dhiṅ māmadhanyam) Uttararāmacarita 1.42.

-lam 1 Dejection of mind, lowness or depression of spirits; delusion (moha); यदाश्रौषं कश्मलेना- भितन्ने (yadāśrauṣaṃ kaśmalenā- bhitanne) Mahābhārata (Bombay) 1.1.181. कश्मलं महदाविशत (kaśmalaṃ mahadāviśata) Mb; कुतस्त्वा कश्मल- मिदं विषमे समुपस्थितम् (kutastvā kaśmala- midaṃ viṣame samupasthitam) Bhagavadgītā (Bombay) 2.2.

***

துயரம் அழியவினைகள் ஒழிய மனம் பக்குவம் அடைய

மனது துயரற வினைகள் சிதறிட … மனத்தின் துன்பங்கள்

ஒழியவும், வினைகள் சிதறிப் போகவும்,

மதன பிணியொடு கலைகள் சிதறிட … காமநோயும் அவைகளை உண்டாக்கும் கலைகளும் என்னிடமிருந்து நீங்கவும்

மனது பதமுற வெனது தலைபதம் அருள்வாயே … என் மனம் பக்குவப்படவும், எனது தலையில் உனது திருவடிகளைச் சூட்டி அருள்வாயாக.

****

மதுரையில் விபூதி செய்த அற்புதம் !

பறித்த தலைத் திருட்டு அமணக் குருக்கள் அசட்டு

உருக்கள் இடைப் பழுக்கள் உகக் கழுக்கள் புகத் திரு நீறு

பரப்பிய தத் திருப்பதி புக்கு … ரோமத்தை விலக்கிய தலையையும் கள்ள நெஞ்சத்தையும் உடைய சமணக் குருக்களாகிய அறிவில்லாதவர்களின் விலா எலும்புகள் முறிந்து விழ, (அவர்கள்), கழு மரங்கள் ஏறும்படி விபூதியைப் பரவ வைத்த அந்த மதுரையம்பதிக்குச் சென்று,

அனல் புனலில் கனத்த சொ(ல்)லைப் பதித்து எழுதிப்

புக(வி)ட்ட திறல் கவி ராசா … நெருப்பிலும் நீரிலும் பெருமை

வாய்ந்த (தேவாரத்) திருப் பதிகத்தைப் பொறித்து எழுதப்பட்ட

ஏடுகளைப் புகவிட்ட ஞான வலிமையுடைய (சம்பந்தராக வந்த)

கவியரசனே,

(அனல் வாதம்புனல்வாதம் என்ற இரண்டு போட்டிகளிலும் சம்பந்தர் வென்ற திரு விளையாடல் புராண கதைகள்)

செறித்த சடைச் சசித் தரி அத் தகப்பன் மதித்து உகப்பன்

எனச் சிறக்க எழுத்து அருள் கருணைப் பெருவாழ்வே …

நெருங்கி அடர்ந்த சடையில் சந்திரனைத் தரித்த அந்தத்

தந்தையாகிய சிவ பெருமான் பாராட்டி மகிழ்வான் என்று சிறப்புறும் வகையில் பிரணவத்தின் பொருளை உபதேசித்து அருளிய கருணைச் செல்வமே,

திகழ்ப் படு செய்ப்பதிக்குள் எனைத் தடுத்து அடிமைப்

படுத்த அருள் திரு பழநிக் கிரிக் குமரப் பெருமாளே. …

விளக்கமுறும் வயலூரில் என்னைத் தடுத்து ஆட்கொண்டு

அடிமை ஆக்கிய அருளாளனே, அழகிய பழனி மலையில்

உறையும் குமரப் பெருமாளே.

***

கும்பு பம்பு சொம்பு தெம்பு

கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு

தொழில் வினை புரிபவர் … கொஞ்சுதலும், கெஞ்சிக் கேட்பதும்

செய்தும், வஞ்சகமாக, சமாதானம் வரும்படி, ஒப்பற்ற செயல்களைப் புரியும் (விலை) மாதர்.

விரகாலும் கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர்

தரு கொடியவர் கடியவர் … சூழ்ச்சியாலும், கும்பல் கூடியிருத்தலும், வேடிக்கையும், அழகும், ஆணவமும் (இக்குணங்கள்) தம்முள் குடிவளர்த்துள்ள பொல்லாதவர்கள். கடுமையானவர்கள்.

***

கலிசை பக்தர் யார்?

வீறு கலிசை வரு சேவகனது* இதயம் மேவும் முதல்வ …

விளங்குகின்ற கலிசை என்னும் பதியில் வாழ்கின்ற சேவகனுடைய மனத்தில் வீற்றிருக்கும் முதல்வனே,

வயல் வாவி புடை மருவு வீரை வரு பழநி ஞான மலையில்

வளர் பெருமாளே. … வயல்களும் குளங்களும் பக்கங்களில்

பொருந்தியுள்ள வீரை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளவனும், பழனியாகிய ஞான மலையில் வீற்றிருப்பவனுமான பெருமாளே.

(மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர். இவர் அருணகிரியாரின் நண்பர்,முருக பக்தர்வீரைநகரில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்).

***

சிவன் செய்த ஐந்து வீரச் செயல்கள்

பகலைப் பல் சொரியத் தக்கன் பதி புக்கு அட்டு அழல்

இட்டுத் திண் புரம் மட்கிக் கழை வில் புட்பச் சரனைச் சுட்டு

அயனைக் கொத்திப் பவுரிக் கொள் பரமர்க்குச் சற்குரு

ஒத்துப் பொருளைக் கற்பித்து அருள்வோனே … சூரியனின்

பற்களைத் தகர்த்தும்தக்ஷன் தலை நகரில் சென்று அங்கே அவன் தலையில் நெருப்பு இட்டு கொன்றும்வலிய திரி புரங்களை அழித்தும்கரும்பு வில்லும் மலர்க் கணையும் உடைய மன்மதனைச் சுட்டு எரித்தும்பிரமனுடைய தலையை அரிந்தும் திருநடனம் புரிகின்ற பரமசிவனுக்கு சற்குருவாய் அமைந்து பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே,

***

கண்ணன் செய்த செயல்கள்

இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம்

அளித்திட்டு அண்டர்கள் எண்படு சூரை அழித்துக்

கொண்டு அருள் ஒரு பேடி இன்கன தேரை நடத்தி …

இந்திரனது காவலில் இருந்த இருண்ட காண்டவ வனத்தில்

(இருந்த அரக்கர்களை எரி ஊட்டியும்)செவ்விய பூமி முதல் அண்ட கோளத்தில் இருந்தவர்களை (அவுணர்களின் துன்புறுத்தலிலிருந்தும்) காப்பாற்றியும்தேவர்களின் எண்ணத் தக்க துன்பத்தை நீக்கி,nஅவர்கள் நாட்டைத் திரும்பித் தந்து அருளியும்ஒப்பற்ற பேடியாகிய*அர்ச்சுனனுடைய அழகிய தேரை (சாரதியாய்) நடத்தியும்,

செம் குரு மண்டல நாடும் அளித்துப் பஞ்சவர் இன்புறு

தோழ்மை உடைக் கத்தன் திரு மருகோனே … செம்மையான

குரு மண்டல நாட்டைப் பாண்டவர்களுக்குத் தந்து அப்பாண்டவர் ஐவரின் இன்புறு நட்பைப் பூண்டிருந்த தலைவனான திருமாலின் அழகிய மருகனே,

(பாண்டவரின் வனவாசத்தின் கடைசி ஆண்டில் அர்ச்சுனன்

ஒரு பேடி உருவில் அஞ்ஞாதவாசம் புரிந்தான்.)

***

விருதா ! = வெட்டிப்பயல்உதவாக்கரை

சிவனார் மனங்குளிர … சிவபிரானது மனம் குளிரும்படியாக

உபதேச மந்த்ரம் … ஓம் என்ற மந்திரத்தின் விளக்க உபதேசத்தை

இருசெவிமீதி லும்பகர்செய் … அவரது இரு செவிகளிலும் சொன்ன

குருநாதா … குருநாதனே,

சிவகாம சுந்தரிதன் … சிவகாம சுந்தரியாம் பார்வதியின்

வரபால கந்த … மேன்மையான மைந்தனே, கந்தனே,

நினசெயலேவி ரும்பி … உனக்குச் செய்யும் தொண்டினையே விரும்பி

உளம் நினையாமல் … உள்ளத்தில் நினைக்காமல்,

அவமாயை கொண்டு … கேடு விளைவிக்கும் மாயையின் வசமாகி,

உலகில் விருதாவ லைந்துழலும் … உலகிலே வீணாக அலைந்து

திரியும்

அடியேனை அஞ்சலென வரவேணும் … அடியேனை அஞ்சாதே

எனக் கூறி அருள்வதற்கு நீ வரவேண்டும்.

அறிவாக மும்பெருக … அறிவு மனத்திலே பெருகி வளரவும்,

இடரான துந்தொலைய … துன்பங்களெல்லாம் தொலையவும்,

அருள்ஞான இன்பமது … நின்னருளால் பெறக் கூடிய ஞான

இன்பத்தை

புரிவாயே … தந்தருள்வாயாக.

***

நவரத்தினமும் நவநதிகளும் !

நவ நதிகள் குமு குமு என வெற்புத் திரள் சுழல … ஒன்பது

நதிகளும்* குமுகுமு என்று கலங்கவும், மலைக் கூட்டங்கள்

சுழற்சி உறவும்,

அகில முதல் எழு புவனம் மெத்தத் திடுக்கிடவும் … பூலோகம்

முதலான ஏழு உலகங்களும் மிகவும் திடுக்கிடவும்,

நவ மணிகள் உரகன் உடல் கக்கத் துரத்தி வரும்

முருகோனே … பாம்பின் உடலினின்று ஒன்பது** மணிகள்

வெளிப்படவும், அசுரர்களைத் துரத்தி வரும் முருகனே,

ஒன்பது நதிகள்:

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, கோதாவரி,

காவேரி, சோணை, துங்கபத்திரை.

ஒன்பது மணிகள்:

வைரம், வைடூர்யம், முத்து, பவளம், நீலம், மரகதம், கோமேதகம், புஷ்பராகம், மாணிக்கம்.

***

அனுமன், விபீஷணன்

பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து …

சூரியனுடைய மகனான சுக்ரீவனின் அரண்மனை வாயில் மந்திரியாகிய அனுமானுடைய உதவியுடன் நேராகப் பணிந்து

பரி(வு) தக அழையா முன் வந்து பரிவாலே பரவிய

விபீஷணன் … (ஸ்ரீராமர்) தன்னை அன்புடனும் தகைவுடனும்

அழைப்பதற்கு முன்னமேயே தானே பணிவுடன் சென்று,

பக்தியுடன் சரணாகதி அடைந்த விபீஷணன்

***

ஐந்து வகைச் சக்திகள்

ஒருமாது சேர்பஞ்ச வடிவி … ஒப்பற்ற பெண்ணரசிபஞ்ச*

சக்திகளின் கலவையான வடிவழகி,

மோகி யோகங்கொள் மவுன ஜோதி … சிவத்தின் காதலி,

சிவயோகத்தில் மேவிய மெளன நிலையுடையார் காணும் ஜோதி

வடிவினாள் ஆகிய உமா தேவியார்

சேர்பங்கின் அமல நாதன் அருள்பாலா … சேர்ந்திருக்கிற

இடது பாகத்தை உடையவருமான, தூய்மையே உருவான தனிப்

பெரும் தலைவராம் சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரனே,

(* இறைவி ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற ஐந்து சக்திகளாய் உள்ளாள்.)

To be continued …………………………………

Tags- நவ மணிகள் பஞ்ச, ஐந்து சக்திகள், நவ நதிகள்,  விபூதி, கலிசை, விருதா, கஸ்மாலம், அருணகிரிநாதர், அரிய செய்திகள் -Part 8, சொல் அழகும், பொருள் வளமும், திருப்புகழ்

S Nagarajan Articles index for JANUARY 2026 (Post.15,384)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,384

Date uploaded in London – 1 February 2026 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

S Nagarajan Articles index JANUARY 2026

1-1-26 15327 அபூர்வ தீபாவளி மகான் ஸ்வாமி ராமதீர்த்தர்!   (20-10-25  

            கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

1-1-26 15329 S Nagarajan Articles index DECEMBER 2025

5-1-26 15332 ஆலயம் அறிவோம் – திருவாலங்காடு (ஞானமயம் 4-1-25

           அன்று இடம் பெற்ற உரை)

6-1-26 to 13-1-26 leave

14-1-26 15334 வேற்று கிரக மனிதர்கள் உண்டா?  SETI- யின்

          ஆராய்ச்சி!  (23-10-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

15-1-26 15336 ஏ ஐ  (A I) மாப்பிள்ளை! (23-12-25 கல்கிஆன்லைன் இதழ்

            கதை)

16-1-26 15338 ஆனந்தரைப் புரிந்து கொண்டால் புத்தரைப் புரிந்து

            கொள்ளலாம்! (29-10-25 தீபம் இதழில் வெளியான கட்டுரை)

17-1-26 15340 உலகையே மாற்றும் மனித ரொபாட்! (27-10-25

           கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

18-1-26 15342 அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பு – ஶ்ரீ  

            சத்ய சாயிபாபா அருளுரை (11-11-25 கல்கிஆன்லைன்

            இதழ் கட்டுரை)

19-1-26 15344 விமானத்திற்குள் வந்த மின்னல் பந்து! (2025 நவம்பரில் 

            கல்கிஆன்லைன் இதழில் வெளி வந்த கட்டுரை)

20-1-25 15347 12 வயது வானவியல் ‘விஞ்ஞானி’ கண்டு பிடித்திருக்கும்

           இரண்டு புதிய குறுங்கோள்கள்! (17-11-25 கல்கிஆன்லைன்

           இதழ் கட்டுரை)

21-1-26 15350 2026ம் ஆண்டில் … உடல்நல மேம்பாட்டிற்கான

            அருமையான பரிந்துரைகள்!

22-1-26 15352 மூன்று உலகங்களிலும் அதிர்ஷ்டசாலி யார்? (சுபாஷிதம்)

23-1-26 15355 மாவீரர் நேதாஜி!

24-1-26 15358 சாயிபாபா உருவாக்கிய நிரந்தராக்னியான துனியும்

            அவரது ஷீர்டி வாசமும் (கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

25-1-26 15361 நைமிசாரண்யமும் தண்டகாரண்யமும்!

26-1-26 15364 இல்லறத்தான் சிறப்பு! (சுபாஷிதம்)

27-1-26 15367 உள்ளங்கை சொல்லும் உங்கள் வாழ்க்கைப் பயணம்!    

         (29-11-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

28-1-26 15370 விண்வெளியில் புத்தருக்கு ஒரு விஹாரம்! (26-11-25

            கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

29-1-26 15374 இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய

             செய்தியைத் தெரிந்து கொள்வோமா? (13-11-25

             கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

30-1-26 15377 குரு பூர்ணிமா அன்று ஷீர்டி சாயிபாபா கொடுத்த

             கட்டளை! (13-11-2 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

31-1-26 15381 புண்ணியம், பாவம் என்பவை எவை? வள்ளலார் பிரான்

            அருளுரை!

**

சிட்னி நகரில் வள்ளுவர் சிலை, இளங்கோ சிலைகளுடன் தமிழ்க்கோவில்! (Post No.15,383)

Written by London Swaminathan Surprise !

Post No. 15,383

Date uploaded in Sydney, Australia –  1 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  


மேலும் இரண்டு பெரிய, அழகிய கோவில்களுக்கு எனது விஜயம்

ஆஸ்திரேலியாவில், குறிப்பாக சிட்னி நகரிலுள்ள, எல்லா கோவில்களையும் பார்க்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டேன் . இதுவரை சிட்னி சிவன், முருகன், கணபதி, வெங்கடேஸ்வரா , துர்கா உள்பட ஐந்து கோவில்களுக்குக் சென்றுவிட்டேன் இன்னும் சில கோவில்கள் இருப்பதாகவும் இரண்டு கோவில்கள் அடுத்தடுத்து இருப்பதாகவும் என்னுடைய மகன் சொன்னவுடன் நேற்று  ஜனவரி கடைசி நாளன்று (31-1-2026) காரில் விரைந்தோம்.

பெரிய கோவிலின் போர்டில் துர்கா தேவஸ்தானம் என்று எழுதியிருந்தது; அது தமிழ்த் தென்றலோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. காரை நிறுத்திவிட்டு கோவில் வளாகத்துக்குள் காலடி வைத்தோம்.

சர்ப்ரைஸ்! சர்ப்ரைஸ்Surprise ! Surprise ! 

திருவள்ளுவர் சிலை! அருகில் கலைவாணி (சரஸ்வதி)  சிலை!! மிகவும் சந்தோசம் ஏற்பட்டது ; காமெரா ‘கிளிக்’ ‘கிளிக்’ என்றது .

சிறிது நகர்ந்தோம் ; மேலும் சர்ப்பிரைஸ்!

சமண மதத் துறவி கோலத்தில் இளங்கோ அடிகள் ! கீழே ஆங்கிலத்தில் விளக்கம்.

இதை அடுத்து இருப்பது ஷீரடி பாபா கோவில்.

இரண்டு கோவில்களும் பக்கா இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் இருக்கிறது . கோவிலைக் கண்டுபிடிப்பது எப்படி என்று என் மகன் முன்கூட்டியே சொல்லிவிட்டான்; எந்த இடத்தில் நூற்றுக் கணக்காண டிரக்குகளும், லாரிகளும், பளுதூக்கும் கிரேன்களும் தென்படுகிறதா அங்கேதான் இரண்டு கோவில்களும் உள்ளன என்றான்; ஆகையால் லாரிகளைப் பார்த்தவுடன் கோவிலைத் தேடினோம். சிறிய கோபுரம் எங்களை எட்டிப்பார்த்தது . ஆனால் இரண்டு கோவில்களும் பிரம்மாண்டமான அமைதி தவழும் அற்புதக் கோவில்கள். 

துர்கா கோவில் வளாகத்தில் கார்களை நிறுத்தலாம் . மலை போல படிகள் ஏறிச் செல்ல வேண்டும்  . பெரிய சந்நிதியில் துர்கா தேவி;  இரு புறமும் கணபதியும் முருகனும் குடிகொண்டுள்ள சிறிய சந்நிதிகள். மூன்று நான்கு பட்டர்கள் பக்தர்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர் உபயதாரர்களுக்கான பூஜையை ஒருவர் செய்துகொண்டிருந்தார் . மொத்தத்தில் சுமார் 25 பேர் இருந்தோம்; ஆகையால் நல்ல தரிசனம்

இந்தக் கோவிலின் சிறப்பு நவக்கிரகம், சிவன் போன்ற தெய்வங்களுடன் அஷ்ட லட்சுமியையும் அழகாக பெரிய சிலைகளாக வடித்துள்ளனர்.  கோவிலைச் சுற்றி பெரிய திறந்த வெளிப் பிரகாரம் தமிழ் நாட்டுக் கோவில்களை நினைவு படுத்தியது. கோவிலுக்குள் தெய்வீக    சூழ்நிலையை, சாந்நியத்தை, உணர முடிந்தது.

சில சீன பக்தர்களும் வந்திருந்தனர் ஏனையோர் தமிழ் பக்தர்கள்தான் .

கோவிலுக்கு வெளியே வந்தோம் பெரிய கான்டீன் மண்டபம் தென்பட்டது. சூடான  இட்லி,  வடைகளை விலைக்கு வாங்கிச் சாப்பிட்டோம் . மசாலா டீயும் கிடைத்தது

ஷீரடி சாய் பாபா கோவில்

ஆனால் அதற்கு முன்னால் அடுத்த கோவிலுக்கும் சென்று ஷீரடி பாபாவை வழிபட்டோம். மீண்டும் படிகள் ஏறிச் செல்ல வேண்டும் . பிரம்மாண்டமான மண்டபத்தின் முக்கிய சந்நிதியில் ஷீரடி பாபா சிலை ; இனிமையான வேற்று மொழிப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது; நல்லDivine Atmosphere தெய்வீக அட்மாஸ்பியர்! ஒரு வடக்கத்திய அர்ச்சகர் இருந்தார். ஒரு பத்து பேர் உட்கார்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.

கணபதி, அனுமார், சிவன் மூர்த்திகளும் இருந்தன.  கோவிலின் சிறப்பு சிவலிங்கத்துக்கு நாமே ஜலத்தினால் அபிஷேகம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது; நாங்களும் ஓம் நமசிவாய மற்றும் திரயம்பக (மிருத்யுஞ்சய) மந்திரம் சொல்லி அபிஷேகம் செய்தோம்.

இங்கும் வெளியே கான்டீன் உள்ளது மெனு மட்டும் பார்த்துவிட்டு இட்லி வடை சாப்பிட தமிழ்க் கோவிலுக்குத் திரும்பிவந்தோம்.

இரண்டு கோவில்களும் பார்க்க வேண்டிய கோவில்கள். பூஜைகள், தியானம் செய்ய உகந்த கோவில்கள். கூட்டம் இல்லை என்பதும் மிக உயர்ந்த பிரம்மாண்டமான மண்டபங்கள் என்பதும் இரண்டு  கோவில்களுக்கும் உள்ள சிறப்பு .

இதோ முகவரிகள்:

Sydney Sri  Durga Amman Temple

21, Rose Crescent Regents Park, NSW 2143

Phones – (02) 9644 6682, (02) 9746 n9724

www.sydneydurgatemple.org

e mail – sydneydurga@gmail.com

***

Sai Mandir Sydney

25, Rose Crescent Regents Park, NSW 2143

Phone- 1500 524 724

saimandir@gmail.com

Following Pictures are from Sri Durga Temple

Temple Doors

MY OLD BOOK
அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா- book title

பொருளடக்கம்

1.ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!

2.ஆஸ்திரேலியாவின் வினோத விலங்குகள்

3.மருந்து மரங்கள்

4.உலக அதிசயம்: ஆஸ்திரேலிய பவளப்  பாறைகள் !

5.ஆஸ்திரேலியா முழுதும் தங்கக் குவியல், ரத்தினக் குவியல்

6.ஆஸ்திரேலியாவில் அய்யர் மலை

7.ஆஸ்திரேலிய மியூஸியத்தில் அரிய ரத்தினங்கள்

8.பழங்குடி மக்களின் வினோத ஆயுதங்களும் இசைக் கருவிகளும்

ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரத்தில் ‘அக்னி’

9.ஆஸ்திரேலிய பழங்குடிகள் மொழிகளில் தமிழ்ச் சொற்கள்

10.ஆஸ்திரேலியாவில் 50 இந்துக் கோவில்கள்

நான் பார்த்த ஆஸ்திரேலியக் கோவில்கள்

11.பத்தாயிரம் கடற்கரைகள்

12. சிட்னி நகர ஆபரா ஹவுஸ்

13. கொண்டையுள்ள காக்காட்டு; சிரிக்கும் பறவை கூகாபர்ரா;  கோமாளிப் பறவை!

14. பிரிஸ்பேன் நகர அதிசயங்கள்!

15.ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை, கார் விலை குறைவு !

16.பாரமேட்டா நதியில் படகு சவாரி

17.ஆஸ்திரேலிய பாலைவன அதிசயங்கள்! பத்து லட்சம் ஒட்டகங்கள்

18. டால்பின் பார்க்க நெல்சன் வளைகுடாவுக்கு எனது பயணம்

19.பத்து புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நகரங்கள்

20. டாஸ்மேனியா தீவு, அடிலெய்ட், டார்வின், பிரிஸ்பேன் நகரின் சிறப்புகள்

21.அதிசய ஆர்டீஷியன் ஊற்றுக் கிணறுகள்

22.ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் இந்துக்களா?

23.ஆஸ்திரேலிய நீல மலைக்கு (Blue Mountains) எனது பயணம் 

24.ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் ! ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமிழர்களா?

25.ஆஸ்திரேலியாவில் அழகான சிவன் கோவில்

26.சிட்னி நூலகத்துக்கு விஜயம்

27.ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் யார் ?

28.சிட்னி ஆர்ட் காலரிக்கு விஜயம்

29.ஆதிவாசி மொழிச் சொற்கள்

30.சிட்னி தாவரவியல் பூங்காவுக்கு எனது பயணம்     

31.ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்!

******

அட்டைப்படத்தில் சிட்னி ஆபரா ஹவுஸ்  

–subham–

சிட்னி ,மேலும் இரண்டு பெரிய அழகிய கோவில்கள, லண்டன் சுவாமிநாதன் விஜயம், துர்கா கோவில், சாய் மந்திர், இளங்கோ, வள்ளுவர் சிலைகள்