என்ற இருபத்திரண்டாவது அத்தியாயத்தில் விஸ்வகர்மா நளனுடைய அன்னைக்கு அளித்த வரம் பற்றிய இன்னொரு குறிப்பையும் காண்கிறோம்.
நளன் ஶ்ரீ ராமரிடம் தன்னைப் பற்றி விரிவாகக் கூறுகிறான்.
“நான் விஸ்தாரமான சமுத்திரத்தின் மீது தந்தையினது சாமர்த்தியத்தை உபயோகித்து அணையைக் கட்டுவேன். மந்தர மலையில் விஸ்வகர்மாவினால் எனது அன்னைக்கு கொடுக்கப்பட்ட வரமாகிய (அனுக்ரஹமாகிய) நான் அவரது ஔரஸ புத்திரன். விஸ்வகர்மாவிற்குச் சமமானவன்” என்று இப்படி நளன் கூறுகிறான்.
மம மாதுர்வரோ தத்தோ மந்தரே விஸ்வகர்மணா!
ஔரஸஸ்தஸ்ய புத்ரோஹம் சத்த்ருஷோ விஸ்வகரமணா ||
யுத்த காண்டம் 22ம் அத்தியாயம் ஸ்லோக எண் 50
மந்தரே – மந்தர மலையில்
விஸ்வகர்மணா – விஸ்வகர்மாவினால்
மம – எனது
மாது: – அன்னைக்கு
தத்த: – கொடுக்கப்பட்ட
வர: – வரமாகிய (அனுக்ரஹமாகிய)
அஹம் – நான்
தஸ்ய – அவரது
ஔரஸ – ஔரஸ\
புத்ர: – புத்திரன்
விஸ்வகர்மணா – விஸ்வகர்மாவிற்கு
சத்ருஷ: – சமமானவன்
நளன் மேலும் அடக்கமாகக் கூறிக் கொள்கிறான்:”சமுத்திரராஜன் உள்ளது உள்ளபடி சொன்னான். ஆகவே நான் நினைப்பூட்டப்பட்டவனாக ஆகிறேன். அன்றியும் பிறரால் சொல்லப்படாதவனாய் எனது குணங்களை நானே சொல்லிக் கொள்ள மாட்டேன். சமுத்திரத்தின் மீது சேதுவை கட்ட நான் வல்லமை உள்ளவன். ஆகவே இப்பொழுதே வானரோத்தமர்கள் சேதுவைக் கட்டட்டும்.”
இதனால் திருப்தி அடைந்த ராமர் அணை கட்ட ஆணை இட்டார். உடனே வானரர்கள் மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்று மரங்களைப் பெயர்த்து இழுத்து வந்தனர்.
சேது அணை கட்டுவதானது ஆரம்பம் ஆயிற்று.
இந்த ஸ்லோகத்தில் விஸ்வகர்மா நளனது அன்னைக்கு வரம் கொடுத்த செய்தி மட்டும் உள்ளது. நளனது அன்னையைப் பற்றியோ அல்லது எதற்காக எப்பொழுது இந்த வரம் கொடுக்கப்பட்டது என்பன போன்ற விவரங்கள் இல்லை.
நளனது அன்னை வரம் பெற்ற செய்தியை மட்டும் இங்கு நாம் அறிகிறோம்.
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த
பெருமாளே. … வளப்பம் மிக்க குன்றக்குடி* ஊரைக் காத்து,
பரிசுத்தமானஅவ்வூர் மலை மீது வீற்றிருக்கும் பெருமாளே.
*****
இறைவனின் எட்டு குணங்கள்
உன் அடி வயலி நகர் முருக செரு உயல் ப(ன்)னிரு கர
குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப
அருளாதோ … உனது திருவடிகளை, வயலூரில் வீற்றிருக்கும்முருகனே, போருக்கு உற்ற பன்னிரண்டு கைகளை உடையவனே,குமரனே, பொருந்திய சிறந்த எட்டு குணங்களை* உடையவனே, குன்றக்குடி என்னும் தலத்துக்குத் தலைவனே, எனக்கு அருள் செய்திடாயோ?
……………….
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு
டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி
டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி …… என
தாளம் தொகுதி … மேற்கூறிய தாளங்களின் கூட்டத்தில்
வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட(ம்)
மத்தளம் இனம் பட்ட டக்கை பறை பதலை பல திமிலை
முதல் அதிர … பல முரச வாத்தியங்கள, கரடிகை, டமரு, முழவு தவில்,தம்பட்டம், மத்தள இனம் பட்ட டக்கை, பறை, பதலை, பல திமிலை,முதலிய வாத்தியங்கள் அதிர்ச்சியான ஓசைகளைச் செய்ய,
* இறைவனின் எண் குணங்கள்:
1. தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினன் ஆதல்,
3. இயற்கை உணர்வினன் ஆதல்,
4. முற்றும் உணர்தல்,
5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,
6. பேரருள் உடைமை,
7. முடிவிலா ஆற்றல் உடைமை,
8. வரம்பிலா இன்பம் உடைமை.
***
தாமோதரன் பெயர் ஏன் ?
தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு தான் ஏறி
விளையாடும் ஒரு போதில் … தாம் ஆசையுடன் கறந்த பாலைத்
தேடி உரலுடன் ஏறி விளையாடும் ஒரு பொழுதில்,
தாயாக வரு (ய)சோதை காணாது களவாடு தாமோதரன்
முராரி மருகோனே … தாயாக (அங்கு) வந்த யசோதை (அந்தப்)
பாலைக் காண முடியாதபடி திருடிய தாமோதரன்* (ஆகிய) திருமாலின் மருகனே,
மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது … சிறந்த லக்ஷ்மி
போன்ற மாது, காட்டில் வளர்ந்த மாது, மேகம் தவழும் (வள்ளி)
மலையில் வாழ்ந்த மாது ஆகிய வள்ளி
மாலாகி விளையாடும் புய வீரா … ஆசை பூண்டு விளையாடுகின்ற
புயங்களை உடைய வீரனே,
வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் …
விண்ணோர்களும் புகழும் நாட்டில் தேனாறு பக்கத்தில் சூழ்ந்து வரும்
மாயூர கிரி மேவும் பெருமாளே. … மாயூர கிரி எனப்படும் குன்றக்
* அசோகவனத்தை அழித்து, பின்பு இலங்கையை நெருப்புக்கு இரையாக்கி, கதிர்காமத்துக்கு அருகில் உள்ள மாணிக்க கங்கை நதியில் முழுகி கதிர்காம வேலனை வழிபட்டு அனுமார் முருகனின் அருள் பெற்றார்.
பராசக்தியிடம் பாரதி கேட்டவை
காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்
1
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.
2
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
***
வள்ளி பிறந்த கதை
அடவியிருடி அபிநவ குமரியடிமையாய … காட்டில் சிவமுனிவர்
உருவத்தில் தவத்திலிருந்த ரிஷியின்அற்புதப் புதுமையான குமாரி* வள்ளிக்கு அடிமையாகிச் சென்று
புனஞ்சென்று அயர்வோனே … அவள் இருந்த தினைப்புனத்துக்குப்
போய், தளர்ச்சி அடைந்தவனே,
அவசமுடன் அ ததி திரிதரு கவியாள … மயக்கத்துடன் ஒருநாள்
காட்டிலே திரிந்து கொண்டிருந்த கவியாகிய பொய்யாமொழிப் புலவரை ஆண்டருள**
பேசினாலும், ஏழைக்கு இரங்கும் பெருமாளே. … இந்த ஏழையினிடத்தில் கருணை காட்டும் பெருமாளே.
* சிவமுநிவராக உருவெடுத்த திருமால் காட்டில் தவம் செய்த போது திருமகள் மானின் உருக்கொண்டு எதிர்ப்பட, முநிவர் திருஷ்டி மான் மீது பட்டு, மான் கருவுற்று வள்ளிக்கிழங்குக் குழியில் பெண் குழந்தையை ஈன்றுவிட்டு ஓடியது. வேடர் தலைவன் குழந்தையைக் கண்டு வள்ளி எனப் பெயரிட்டான்.
** சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து, காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
–SUBHAM—
TAGS-பாரதியாரும் அருணகிரியும், வரங்கள் , திருப்புகழில் அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் Part 43 வள்ளி பிறந்த கதை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்
ஐந்து விஷயங்களில் வெற்றியை படிப்படியாகத் தான் அடைய முடியும்!
ச. நாகராஜன்
சில அருமையான சுபாஷிதங்கள் இதோ:
சாதுக்கள் மகிமை!
ஷைலே ஷைலே ந மாணிக்யம், மௌக்திகம் கஜே கஜே |
சாதவோ ந ஹி சர்வத்ர, சந்தனம் ந வனே வனே ||
மாணிக்கமானது ஒவ்வொரு மலையிலும் காணப்படுவதில்லை.
முத்தானது ஒவ்வொரு யானையின் தலையிலும் கிடைப்பதில்லை.
சந்தன மரமானது ஒவ்வொரு காட்டிலும் வளர்வதில்லை.
சாதுக்கள் ஒவ்வொரு தெரு முனையிலும் காணப்படமாட்டார்கள்.
ஆன்மீக லாபத்தைத் தரும் மகான்கள் அரிதாகவே காணப்படுவர்.
ஒவ்வொரு தெருவிலும் இருக்க மாட்டார்கள். இது எது போல என்றால் மாணிக்கம், முத்து, சந்தனமரம் ஆகியவை அரிதாகவே கிடைப்பது போலத் தான்!
நிலையை இழந்தால் மதிப்பை இழப்பர்!
ஸ்தானப்ரஷ்டா: ந சோபந்தே, தந்தா: கேஷா நகா நரா: |
இதி சஞ்சிந்த்ய மதிமான் ஸ்வஸ்தானம் ந பரித்யஜேத் ||
பல், கேசம், நகம் ஆகியவை தனது மதிப்பை அது இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் வெளியே இருக்கும் போது பெறுவதில்லை.
அதே போலவே தனது நிலையிலிருந்து நழுவிய மனிதர்களும் உரிய மதிப்பைப் பெறுவதில்லை. இதை மனதில் இருத்தியவாறு புத்திசாலிகள் தங்களது சரியான இடத்தை விட்டு விடக் கூடாது.
இதை வள்ளுவரின் ஒரு குறளுடன் ஒப்பிடலாம்.
“தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை”
(குறள் 964)
நல்ல குலத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஒழுக்கம் தவறிவிட்டால் தலையிலிருந்து கீழே விழுந்த மயிரைப் போல மதிக்கப்படமாட்டார்கள்.
நரைத்த தலை, முகச் சுருக்கங்கள் ஆகியவை அரசர்கள், மந்திரிகள், வைத்தியர்கள்,மகான்கள் ஆகியோருக்கு பெரும் மதிப்பைத் தரும். ஆனால் அதுவே விபசாரிகள், மல்யுத்த வீரர்கள், பாடகர்கள், வேலைக்காரர்கள் ஆகியோருக்கு இழிவைத் தரும்.
படிப்படியாக வெற்றியை நோக்கிச் செல்லும் ஐந்து விஷயங்கள்!
ஷனை: பந்தா: ஷனை: கந்தா: ஷனை: பர்வதமஸ்தகே |
ஷனை: வித்யா ஷனை: வித்தம் பஞ்சைதானி ஷனை: ஷனை: ||
நீண்ட தூரத்தை மெதுவாகத் தான் கடக்க வேண்டும்.
கந்தல் துணியைச் சீராக்க மெதுவாகத் தான் தைக்க வேண்டும்.
மலைச் சிகரத்தை அடைய மெதுவாகத் தான் ஏறி அடைய வேண்டும்.
வித்யையை அடைய மெதுவாகத் தான் கற்க வேண்டும்.
செல்வத்தைச் சேர்க்க மெதுவாகத் தான் சேர்க்க முடியும்.
இந்த ஐந்திலும் வெற்றி என்பது மெதுவாக, படிப்படியாகத் தான் அடைய முடியும்.
பணக்காரனையும் ஏழையையும் ஒப்பிட முடியுமா?
ஶ்ரீமந்த: ஷ்ரமவந்த: ச நைவ துல்யா: கதாசன |
பாந்தி ரத்நோபலை: ஏகே ஷ்ரமவாரிகணை: பரே ||
ஒரு பணக்காரனையும் ஒரு தொழிலாளியையும் சரியாகவே ஒப்பிடவே முடியாது.
Date uploaded in Kumbakonam, India – 12 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Athi Varadar festival in Kumbakonam featuring the rare, once-in-12-years public viewing of the idol ended on tenth March 2026. Over 500,000 devotees had the darshan standing in the long queue for hours.
Here are the key details from the news reports (as of March 2026):
12-Year Cycle: Unlike the 40-year cycle in Kanchipuram, the Athi Varadar idol at the Varadharaja Perumal Temple in Kumbakonam is brought out from its underground chamber once every 12 years.
Current Event (2026): The idol was brought out for public worship in March 2026, marking the end of its 12-year seclusion.
Duration: The special darshan, which includes rituals like Thailakappu (oil anointing) and Oonjal Sevai (swing ritual), is scheduled for a limited period, often spanning about 10 days, attracting thousands of devotees.
Location: The temple is located on Brahmman Koil Street in Kumbakonam.
In a spiritually significant event, the sacred Athi Varadar idol will be brought out from the underground chamber of the Varadharaja Perumal Temple in Kumbakonam after a gap of 12 years. The rare occasion drew devotees not only from Tamil Nadu but also from Andhra, Telangana, Kerala and a few North Indian states.
The Athi Varadar idol, carved from the sacred athi (fig) tree, is preserved in a subterranean chamber within the temple premises as part of a long-standing tradition. According to temple customs, the idol is taken out only once every 12 years for a brief period of public worship. Along with the main deity, Sri Devi and Bhoodevi are also part of the ceremonial display.
During the special darshan period, which lasted for ten days, elaborate rituals and poojas were conducted in accordance with Agama traditions. Ceremonies such as Thailakappu (oil anointing), Pushpa Alankaram (flower decoration), and Oonjal Sevai (swing ritual) were performed with devotional fervour.
Temple authorities made extensive arrangements to manage the surge in devotees, including regulated darshan timings and security measures. The event transformed Kumbakonam into a major spiritual hub, as devotees gathered to witness and participate in this rare and auspicious tradition.
Only one incident was reported ;a devotee passed away while waiting in the long queue for the darshan on March 10, 2026.
( The Athi Varadar idol in Kumbakonam is distinct from the more famous, larger Athi Varadar idol in Kanchipuram, though both are made of fig wood.)
***
Adi Varaha Perumal /Vishnu Temple
I visited Adi Varaha Perumal /Vishnu Temple (aadi varaaha perumaal) on 10th March 2026 and had good darshan. It is a small temple compared to Sarngapani and Chakrapani Vishnu temples. It is very near the famous Kumbeshwar Siva Temple.
God/Moolavar : Sri Adhi Varaha Perumal
Goddess/Thayar : Sri Ambujavalli
It has no tall tower. but instead there is an Arch which is East facing. On top of the Welcome Arch Sri Varaha Perumal is seen along with few other Gods. There is a gold plated Dwajasthambam, a Bali Peedam and a Garudalwar who faces the Moolavar Sannadhi. It is about 800 years old.
Thayar/Goddess Ambujavalli is in a separate shrine in a sitting posture with abhaya varada hastam.
According to Sthala Purana/ local history,Demon Hiranyaksha took Bhumadevi deep inside the earth. Bhumadevi prayed to Maha Vishnu to rescue her. Maha Vishnu took the Varaha avatar, dug the earth with his nose, and brought her back. Hence, Maha Vishnu of this temple is called Adhi Varaha Perumal Temple. Varaha means boar. It I one of the Ten Avatars/Dasavatar.
This Temple is one of the five Templescelebrating Mahamaham festival that is held once in 12 years. Inside the Sanctum Sanctorum Adhi Varaha Perumal can be seen along with His Consort Bhoomadevi on His Lap and Adisesham can be seen in a standing posture.
This is a Vadakalai temple with Nigamantha Desikan shrine inside the temple.
One of the special features of the temple is a rare Prasad/Food offering. A root called Korai Kizangu is used in the food offering to God here. Since the God is in the form of Boar, this is considered appropriate offering.
Korai Kizhangu, or Nut Grass (Cyperus rotundus), is a traditional Ayurvedic and Siddha tuberous root known for its diverse medicinal, skincare, and hair removal properties. It is used to treat skin infections, improve skin texture, boost immunity, and aid digestion, often consumed as a powder or used as a topical paste.
Date uploaded in Kumbakonam, India – 12 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கும்பகோணத்தில் அத்திவரதர்– ஐந்து லட்சம் பேர் தரிசனம்
கும்பகோணம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரை நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்; பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரை ஐந்து லட்சம் பேர் தரிசனம் தரிசனம் செய்தனர். 10-ம் தேதி வரை அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் சந்நிதிக்கு கிழக்கில் உள்ள பாதாள அறையில் அத்தி மரத்தாலான சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ளது.இந்தச் சிலையை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுவது வழக்கம். அதன்படி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சிலை வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.. இதற்கான ஏற்பாடுகளை சவுராஷ்டிரா தர்மபரிபாலன கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்.
****
கும்பகோணம் ஆதிவராகர் கோயில் ஒரு பழமையான வைணவத் தலம். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது ;மூலவர் சாளக்கிராம மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்புஜவல்லி தாயார் மற்றும் வராகதீர்த்தம் இத்தலத்தின் சிறப்பு.
மூலவர்: ஆதிவராகப் பெருமாள்.
பூமியைப் பாதாள உலகிற்குள் இருந்து மீட்ட ஆதிவராகர், மகாமகம் நிகழ்வதற்கு முன்பே தோன்றியவர் என்பதால் இவரை ‘ஆதிவராகர்’ என அழைக்கின்றனர். இங்கு வழிபடுவது ஞானம், அறிவு மற்றும் செல்வத்தை அளிக்கும் .
திருவிழாக்கள்: மாசிமகம், ஆவணி பவித்ரோத்ஸவம், நவராத்திரி மற்றும் கருட சேவை சிறப்பாக நடைபெறும்.
பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகளை நைவேத்தியமாகப் படைக்கும் வழக்கம் இக்கோயிலில் உள்ளது. கும்பகோணத்தின் மையப்பகுதியில், சக்கரபாணி கோவிலுக்கு தென்மேற்கில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது, மிகப் பழமையான ஆதிவராகப் பெருமாள் கோவில். இதன் அருகிலேயே வராக விநாயகராகிய கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலும் உள்ளது. இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
உலகில் முதலில் தோன்றிய இடம் ‘வராகபுரி’ என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர்;. மாசிமகத் திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். மூலவர் ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்றபடி இருக்கிறார். உற்சவர் ஆதிவராகர், தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். சுவாமி முன்பாக ‘வராக சாளக்கிராமம்’ உள்ளது. இதில் சங்கு, சக்கர ரேகைகள் உள்ளன.
வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் வராகப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். ஒருசமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி, பூமாதேவி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தில் வராகமூர்த்தியாக அருள்புரிகிறார்.
கோரைக்கிழங்கு மாவுருண்டை பிரசாதம்
தினமும் ஆதிவராகப் பெருமாளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது, கோரைக்கிழங்கு மாவுருண்டையை நைவேத்யமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குரிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு. இந்தக் கிழங்கை பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வைப்பர். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். பூமியை மீட்டு வந்த பெருமாள் என்பதால். பூமிக்கு கீழே விளையும் கிழங்கு கலந்த நைவேத்யம் இவருக்கு படைக்கப்படுகிறது.
ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்தக் கோவிலுக்கு நான் மார்ச் மாதம் பத்தாம் தேதி (2026) சென்றேன்.
–subham—
Tags- கோரைக்கிழங்கு பிரசாதம், கும்பகோணம், அத்தி வரதர், ஆதிவராஹருர், கோயில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை
* குருடிமலை கோயமுத்தூருக்கு அருகில் துடியலூர் ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ளது.
***
பங்கேருகனும் மருள சென்று ஏயும் அமரருடை சிறை மீள
செண்டு ஆடி அசுரர்களை … தாமரை மலரில் வாழும் பிரமனும்
மயங்கி அச்சமுற, சென்று முறையிட்ட தேவர்களுடைய சிறையை
நீக்கி, அசுரர்களைச் சிதற அடித்து,
ஒன்றாக அடியர் தொழும் தென் சேரி கிரியில் வரும்
பெருமாளே. … யாவரும் ஒன்று கூடி அடியார்கள் அனைவரும்
தொழுது வணங்க, தென் சேரி கிரியில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* செஞ்சேரிமலை என்று இப்போது வழங்கப்படும் இத்தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்லடத்துக்கு தெற்கே 12 மைலில் உள்ளது.
***
முதலை உண்ட பாலகனை சுந்தரர் மீட்ட கதை
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையில் … கொங்கு நாட்டில்
உயிர் மீளப்பெற்று வளர்ந்த தென்கரை நாட்டில் (திருப்புக்கொளியூரில்*)
அப்பரருள் கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே …
(அவிநாசி என்னும்) சிவபெருமான் அருள்பெற்று (* முதலை உண்ட பாலனது உடலில் மீண்டும் உயிர் பொருந்திய) ரகசியப் பொருளை எனக்கு அருள் புரிவாயாக.
குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றி பெறு … யானைமுகப்
பெருமானுக்கு இளையவனாம் கந்தன் என்ற வெற்றிப் புகழ் பெற்ற
கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே. … கொங்கணகிரி
என்னும் மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* கொங்கணகிரி கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகே உள்ளது. திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார்,
வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.
இந்த ரகசியப் பொருளை எனக்கும் அருள்க என்று
அருணகிரியார் வேண்டுகிறார்.
***
மனத்தின் போக்கு :அருணகிரி வருத்தம்
பாட்டி லுருகிலை … மனமே, நீ பாட்டின் பொருளை அறிந்து
உருகுதல் இல்லை,
கேட்டு முருகிலை … பாட்டின் பொருளைச் சொல்லக் கேட்டும்
உருகுதல் இல்லை,
கூற்று வருவழி பார்த்து முருகிலை … யமன் வரும் வழியைக்
கண்டும் இறைவனிடம் பக்தியால் உருகுவதில்லை,
பாட்டை யநுதினம் ஏற்றும் அறிகிலை … கஷ்டங்களை தினமும்
அனுபவித்தும் உண்மைப் பொருளை நீ அறிவதில்லை,
தினமானம் பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை …
நாள்தோறும், பாம்பை அணிந்த சிவபிரான் அருளும் மோக்ஷ
இன்பத்தை விரும்புவதும் இல்லை,
நாக்கின் நுனிகொடு ஏத்த அறிகிலை … நுனி நாக்காலாவது
இறைவனைப் போற்றும் துதி சொல்ல அறிகின்றாய் இல்லை,
பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது … பாழ்பட்ட இந்தப் பிறப்புக்களிலே மீண்டும் பிறப்பெடுத்து உழலும் மனமே,
நல் வழிபோக மாட்டம் எனுகிறை … நீ நல்ல வழியிலே
போகமாட்டேன் என்று சொல்கிறாய்.
கூட்டை விடுகிலை … உடல் சிறையாகிய இந்தக் கூட்டை
விடுகின்றதாக நீ இல்லை,
ஏட்டின் விதிவழி யோட்டம் அறிகிலை … ஏட்டில் உனக்கென
எழுதிவைத்த தலைவிதி எந்த வழியிலே உன்னைச் செலுத்துகிறது என்று நீ அறிகின்றிலை,
பார்த்தும் இனியொரு வார்த்தை அறைகுவன் இதுகேளாய் …
உன் நிலைமையைப் பார்த்தும் சும்மா இருக்க முடியாமல் நான் இனி உனக்கு ஒரு நல்வார்த்தை கூறுகிறேன் – இதை நீ கேட்பாயாக.
வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் …
அவனது திருப்புகழை ஓதி அவனைத் துதிக்க உனக்கு நல்ல வாக்கையும் உன் உள்ளத்தில் நல்ல தரிசனத்தையும் அவன் உனக்கு அருள்வான்.
அடியார்க்கும் எளியனை வாழ்த்த … அடியார்களுக்கு அவன்
வெகு எளியனானவன். அவனை வாழ்த்தினால்
இருவினை நீக்கு முருகனை மருவாயோ … நல்வினை தீவினை
இரண்டையுமே விலக்கும் முருகனை நீ இனி சிந்திப்பாயாக.
ஆட்டி வடவரை வாட்டி … உலகையே ஆட்டி வைப்பவரான
சிவபிரான் வடக்கில் உள்ள மேருமலையை வருத்தி வில்லாக வளைத்து,
அரவொடு பூட்டி திரிபுர மூட்டி … வாசுகி என்ற பாம்பை நாணாகக்
கட்டி, திரிபுரத்தில் தீ மூட்டி,
மறலியின் ஆட்டம்அற சரண் நீட்டி … யமனுடைய ஆணவம்
அழியும்படி பாதத்தை நீட்டி அவனை உதைத்துத் தள்ளி,
மதனுடல் திருநீறாய் ஆக்கி … மன்மதனுடைய உடலைச்
சாம்பலாகும்படி எரித்து
மகமதை வீட்டி யொருவனை ஆட்டின் முகமதை நாட்டி …
தக்ஷனின்* யாகத்தை அழித்து, அந்த தக்ஷனைக் கொன்று ஆட்டின் தலையை அவனது உடலின் மீது பொருத்தி,
* தக்ஷன் சிவபிரானின் மாமனார். சிவனையும் தன் மகள் தாக்ஷாயணியையும் மிகவும் அவமதித்து தக்ஷன் செய்த யாகத்தை சிவபிரான் வீரபத்திரர் உருவத்தில் வந்து அழித்து, தக்ஷனைக் கொன்று, ஆட்டுத்தலையை அவனது உடலில் பொருத்தினார். யாகத்துக்கு வந்த சரஸ்வதியின் முகத்தில் கோபத்துடன் காயம் ஏற்படுத்தினார் – கந்த புராணம்.
** தீர்த்தமலை சேலம் மாவட்டத்தில் மொரப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கில் 17 மைலில் உள்ளது.
***
கோம்பை நாய்கள் பற்றி
பாந்த(ள்) முடி மீது தாந்த திமி தோதி தாஞ் செகண சேசெ
என ஓசை … (காளிங்கன் என்ற) பாம்பின் முடியின் மேல் தாந்த
திமிதோதி தாஞ் செகண சேசெ என்ற இவ்வாறான தாள ஒத்துக்களோடு ஓசைகளை
பாங்கு பெற தாளம் ஏங்க நடமாடும் பாண்டவர் சகாயன்
மருகோனே … அழகாகத் தருகின்ற தாளம் ஒலிக்க நடனம்
ஆடியவனும், பாண்டவர்களின் துணைவனுமாகிய கண்ணனுடைய
மருகனே,
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி
திகழ் சோலை … பூக்களும் தளிர்களும் விளங்கும் வேங்கை மரங்களும்,
பலா மரங்களும், அழகிய வாழை மரங்களும் கோடிக் கணக்காகத் திகழும் சோலைகளுடன்,
பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும்
பெருமாளே. … அழகிய குளமும், உலவித் திரியும் கோம்பை* நாய்களும்
இருக்கும் பூம்பறையில்** வீற்றிருக்கும் பெருமாளே.
* கோம்பை – செந்நிறமான உயர் ஜாதி நாய்கள். மதுரை மாவட்டத்தில் உள்ளன. காவலுக்கு ஏற்றவை.
** பூம்பாறை கொடைக்கானலுக்கு மேற்கே 12 மைலில் வராககிரி மீது உள்ளது.
கோம்பை அல்லது பாலிகர் நாய் என்பது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நாய் இனமாகும் பாரம்பரியமாக காவல் மற்றும் பாதுகாப்பிற்காக வளர்க்கப்படும் .
கோம்பை நாய்கள் அகலமான, குட்டையான, தசைநார், சக்திவாய்ந்த மற்றும் தடகள நாய்களாக விவரிக்கப்படுகின்றன, அவை பொதுவாக வெளிர் பழுப்பு முதல் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் மெல்லிய, கருப்பு, முகமூடி போன்ற முகவாய் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
மிகவும் புத்திசாலியாகவும், தங்களுக்குப் பரிச்சயமானவர்களிடம் மிகவும் விசுவாசமாகவும், பாசமாகவும் இருக்கும் .
தேனி மாவட்டத்தில் தோன்றிய இந்த இனம் கோம்பை நகரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது .
–subham—
Tags- கோம்பை நாய்கள், திருட்டுப் புலவர்கள், மனத்தின் போக்கு, முதலை , சுந்தரர் மீட்ட கதை, அருணகிரிநாதர் , அரிய செய்திகள் Part 42
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Four Crores verses in one day?!
S. Nagarajan
The Tamil literature is a vast treasure, and it is not possible to learn all this literature in one lifetime.
Avvaiyar is a great female poet of Sangam period. She is belonging to the first century BCE.
She was respected by one and all in the Tamil country. She travelled widely from one point of the country to the other point inspiring people with her fantastic poems.
All the kings were delighted to have Avvaiyar in their court. They used to ask several questions and used to get amazing answers.
Once Avvaiyar went to Pandiyan kingdom and the king welcomed her with respect.
When the court assembled one mischievous person asked Avvaiyar, “You are great! Could you compose four crores’ poems in one day?”
All were stunned on hearing this mischievous question.
But Avvaiyar laughed, “Why not? I will recite four crores poem tomorrow.”
Everybody was worried how Avvaiyar could compose four crores’ verses in one day.
Avvaiyar took rest and there was no action on her part to compose any poem.
Next day when the court assembled the King asked, “Madam, have you got four crores’ poems? There is no cart to carry all the four crore palm leaves contain the verses?’
Avvaiyar unfolded her small bag and took one palm leaf, and said, “This is enough to answer the question raised by the person yesterday.”
All were eagerly looked her face.
She started reading her poem from the palm leaf.
The poem consisted of four lines.
She read one by one.
Not stepping into the place of those who is not respecting you is equals to a crore.
Not taking food in those persons’ home who have not invited you with whole heart is equals to a crore.
To get a friendship of person from a noble lineage even by giving one crore equals to a crore.
Not allowing your tongue swerving from truth even one is offering crores and crores to you equals to a crore.
Everyone was wonderstruck on hearing this four crores poem. The person asked for four crores only. But Avvaiyar used many crores in her verse and the king was so pleased that he bows down before Avvaiyar.
Even to this day, the four-crore poem is very famous in Tamil World. And Avvaiyar is being honored by every Tamil speaking people till this day.
In 1991, a 20.6-kilometer-wide crater in Venus was named after her by the international Astronomical Union.
Her famous quote, “What you have learned is a mere handful; What you have not learned can be compared to the size of the world” is included in NASA’s Cosmic Questions Exhibit.
Date uploaded in Kumbakonam, India – 11 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
I was fortunate to have good darshan at Kumbesshwar Shiva temple and Nageswara Shiva temple in Kumbakonam. I visited Kumbeshwar temple for the fourth time in the past four years. This time I went there specifically to thank the Lord and the priest for retrieving my lost passport. During my visit in 2025, my British passport was pickpocketed by someone. Finding no money in the passport bag, he threw it into the temple flower heap. The priest saw that while clearing the flowers and gave it to his wife to find the owner. She found me after a great effort and spending much time. After a few hours of phoning people, she googled swaminathan from London, and all my books appeared in google and amazon. Then she found the publisher Pustaka.co.in and phoned the proprietor. He is a good friend of my brother in Bengaluru. When my brother phoned me the good news, I booked a taxi to and from Chennai and reached Kumbakonam just before midnight. I thanked the priest and his wife and travelled back to Chennai to catch my flight to London. When I gave some money as a token of thanks, they refused to take it and asked me to donate it to the temple. It was almost midnight and the temple was closed. This time on 5-3-2026, I went to Kumbeshwar temple and put the money in the temple Hundi thanking both lord Shiva and the priest family.
Kumbheswar is the God who gave the name to the town. Here are the salient features:
The Adi Kumbeswarar Temple in Kumbakonam is at least 1400-year-old Shiva temple ;it is the site for the Mahamakam Festival held every 12 years. The big Mahamakam tank is near the temple.
Temple features a unique, sand-mixed lingam created by Lord Shiva and houses a rare, ancient stone Nagaswaram
Deity: Lord Shiva as Adi Kumbeswarar and Parvati as Mangalambigai Amman.
Significance: It is the primary temple in Kumbakonam, linked to the pot of nectar in Hindu mythology.
Features: It showcases Chola and Nayak architecture, including a 1400-year-old legacy.
Cultural Reference: it has rare statue of Jvaradeva/Jurakareśvara and a stone Nagaswaram.
The Siva Linga is slightly tilted at the top towards left.
It has four towers in four directions; The tallest is the eastern tower, with 11 stories and a height of 128 feet (39 m) .
The sixteen-pillared hall built during the Vijayanagara period has all the 27 stars and 12 zodiacs sculpted in a single stone.
During cosmic dissolution, a pot containing nectar (Amirta) was floating and lord Siva came in the disguise of a hunter and pierced the pot with an arrow, thereby making the nectar to flow through it’s nostril on all sides. Hence this place is named Kudamooku (kuda – pot; mooku – nostril or tip). Kudam in Sanskrit is Kumbham. The Kumbeswarar (Linga) is on the form of conical lingam. That gave the name Kumbha konam.
***
Special Features of Nageshwar Shiva Temple
The presiding deity is revered in the 7th-century Tamil Tevaram. The temple is one of the earliest of all Chola temples. Shiva in the guise of Nagaraja, the serpent king.
Sun rays fall directly on the deity during April-May.
WHITE FIGURE- PADAKACHERI SWAMI WHO RENOVATED THE TEMPLE IN 1920S.
Key Details of Nageshwar Temple, Kumbakonam:
Deity: Lord Shiva is worshipped as Nageswaran, Naganathar, or Koothandavar.
Architecture: Known as Kudandai Keezhkkottam, the temple is a masterpiece of Chola engineering, with the main sanctum constructed in the shape of a chariot.
Astronomy & Light: The temple is designed so that sun rays fall on the central lingam for three days in the Tamil month of Chithirai (April/May).
Significance: It is one of the 12 temples associated with the Mahamaham festival.
Legend: It is believed that the serpent king Adisesha worshipped Shiva here. Another legend features kings and sages worshipping here to overcome obstacles.
Specialty: It is a major spot for relieving Rahu dosham, with special prayers held on Mondays and Thursdays.
The temple complex is famous for its intricate carvings and its role as a key historical site representing the Chola dynasty’s architectural prowess.
The temple has numerous shrines, with those of Nageswarar, Pralayamkathanathar and Periyanayagi being the most prominent..
This place has been referredto in Tevaram written by Saint Tamil poet of 7th Century CE, Thirugnana Sambanthar. So it is older than 1400 years.
The temple had been a centre of learning as seen from the inscriptions in the temple. The inscriptions indicate specific subjects like Purvamimansa styled as Pravahakarma. There were also provisions made for feeding and maintaining for teachers and students
–subham—
Tags- Famous Shiva Temples in Kumbakonam, Kumbeshwar, Nageshwar, Stone Nadaswara, Stone Chariot, Mahamakam Tank, Festival, Adishesan, Snake worship, PICTURES BY LONDON SWAMINATHAN
வல்லி மணவாளா … முத்து நிற வல்லிக் கொடி போன்றவளும்,
அழகிய சித்ர நிற வல்லியும், முக்தி தரவல்ல விண்ணுலக வல்லியுமான தேவயானையின் மணவாளனே,
பட்டம் மன்னு அ(வ்) வல்லி மட்ட மன்ன வல்லிவ பட்ட
துன்னு கொல்லி மலை நாடா … வழியில் அமைக்கப்பட்டிருந்த
மோகினிப் பெண், மது மயக்கம் போல மயக்கம் தரும் மோகினிப் பெண்** ஆகிய கொல்லிப் பாவை இருக்கும் நெருங்கிய காடு அடர்ந்த கொல்லி மலை*** நாடனே,
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை
வல்ல பெருமாளே. … பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி
இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய மயிலைச்செலுத்த வல்ல பெருமாளே.
** இது கொல்லி மலையில் உள்ள ஒரு பெண்வடிவப் பதுமை. மோகினி வடிவம் உடையது. முனிவர்களைத் துன்புறுத்த வரும் அசுரர்கள் அப்பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர் விடும்படி தேவ தச்சன் ஆக்கி வைத்தது.
*** கொல்லிமலைக்குச் சதுரகிரி என்றும் பெயர் உண்டு. நாமக்கல் அருகே உள்ளது.
அம் புகல் வருகவே நின்று குழலூதுங் கையன் … அழகிய புகும்
இடத்துக்கு வரும்படியாக, நின்று குழலூதிய கண்ணனாகிய திருமால்
மிசையேறு உம்பன் நொய்யசடையோன் எந்தை …
(முன்பொருநாள்) ரிஷபமாகிய போது அதன் மீது வாகனமாக*2 ஏறிய பெரியவரும், தாழ்ந்த சடையருமாகிய எங்கள் தந்தை சிவபிரான்
கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா … கை குவித்துத்
தொழ, உண்மையான ஞானத்தை உபதேசித்த ஒளிமிக்க வேலாயுதனே,
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமேசென்று … தினைக்
கொல்லையில் வாழ்ந்திருந்த வள்ளியின் புனத்தில் சென்று,
கொள்ளைகொளு மாரன்கையலராலே … உயிரைக் கொள்ளை
கொள்ளும் மன்மதனின் கை மலர் அம்புகளின் செயலாலே,
கொய்துதழையேகொண்டு செல்லுமழவாகந்த … தழைகளைக்
கொய்து சென்ற*3 கட்டழகுக் கந்தனே,
கொல்லிமலை மேனின்ற பெருமாளே. … கொல்லிமலை*4 மீது
நின்றருளும் பெருமாளே.
(*1) ஆறங்கம் – வேத புருஷனுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அவை: சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், ந்ருத்தம், ஜ்யோதிஷம், கல்பம் – இவை முறையே நாசி, வாய், கால், காது, கண், கை என்பர்.
(*2) சிவபிரான் திரிபுரத்துக்கு போரிடக் கிளம்புமுன்பு விநாயகரை வேண்டாததால் அத்தேரின் அச்சு முறிந்தது. அப்போது திருமாலே சிவனுக்கு ரிஷப வாகனமாக வந்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.
(*3) தமிழ்நாட்டில் குறிஞ்சி நிலப் பெண்கள் தழையை உடுத்திக் கொள்வர். அகத்துறையில் தழை கொண்டு சேரல் என்ற ஒரு துறை உண்டு. அதன்படி தலைவன் தலைவிக்கு உடுக்கத் தழை கொண்டு செல்ல வேண்டும். வள்ளிக்காக முருகன் தழை கொண்டு சென்றது குறிப்பிடப்படுகிறது.
***
ஞான மலை எங்கே இருக்கிறது ? மேலும் ஒரு புதிர்
திருப்பதியில் முருகன், சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனத்தில் முருகன் என்றெல்லாம் புதிர் போட்ட அருணகிரிநாதர் ஞானமலை குறித்தும் புதிர் போடுகிறார்.
* அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது. தம் வாழ்க்கைத் துன்பத்தை நினைத்து உயிர் விடத் துணிந்ததையும், முருகன் அவருக்கு பாத தீக்ஷை தந்து யோக அநுபூதி அருளிய திறனையும் இங்கு விளக்குகின்றார்.
–subham—
Tags- சேவல், அருணகிரி வருணனை, ஞான மலை, தழை உடை,கொல்லிப் பாவை, தர தர திருப்புகழ், Part 41
Date uploaded in Kumbakonam, India – 11 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கும்பகோணத்தில் இரண்டு சிவன் கோவில்கள் பிரசித்தமானவை . கும்பகோணத்துக்குப் பெய கொடுத்த கும்பேஸ்வரர் சிவன் கோவிலும் நாகேஸ்வரர் சிவன் கோவிலும் புகழ் பெற்றவை . கும்பேஸ்வரர் கோவிலுக்கு நான்காவது முறையாக 5-3-2026 ல் சென்றேன் . முந்தைய கட்டுரைகளில் விவரமாக எழுதியுள்ளேன். சென்ற முறை லண்டனிலிருந்து வந்து தரிசித்தபோது எனது பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டினை யாரோ பிக்பாக்கெட் அடித்து கோவில் பூக்குவியலில் எறிந்துவிட்டனர் . அதை எடுத்த குருக்கள் அவருடைய மனைவியின் கையில் கொடுக்கவே, அவ்வாறு மிகவும் நேரம் செலவழித்துக் கஷ்டப்பட்டு லண்டன் சுவாமிநாதன் என்ற பெயரில் புஸ்தகங்கள் இருப்பதைக் கண்டு அதன் வெளியீட்டாளருக்கு போன் செய்தார். அவர் எனது அண்ணனின் நண்பர் என்பதால் எனக்குத் தகவல் கிடைக்கவே சென்னையிலிருந்து டாக்சியில் வந்து, நள்ளிரவுக்கு முன்னர் பாஸ்போர்ட்டினைப் பெற்றுக்கொண்டு குருக்களுக்கும் அவர் மனைவிக்கும் நன்றி தெரிவித்துவிட்டு பணம் கொடுத்தேன்; வாங்க மறுத்துவிட்டு அதைக் கோவிலுக்கு கொடுத்து விடுங்கள் என்றார். நள்ளிரவில் கோவில் பூட்டியிருந்ததால் இப்போது கோவிலுக்குச் சென்று உண்டியலில் காணிக்கை செலுத்தி இறைவனுக்கும் குருக்களுக்கும் மனதார நன்றி செலுத்தினேன் . அத்தோடு நாகேஸ்வரர் கோவிலுக்கும் சென்றேன் .
(கும்பேஸ்வரர் கோவில் பற்றி எழுதிய கட்டுரைகளின் இணைப்புகள் கீழே உள்ளன)
***
நாகேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்
கோவிலின் கோபுரத்தில் ஒரு உருவத்தைக் காணலாம் . வேறு எங்கும் காண முடியாத வடிவம் இது . இந்தக் கோவிலை செப்பனிட்டுக் கும்பாபிஷேகம் செய்த பாடகச் சேரி ராமலிங்க சுவாமிகளின் உருவம் அது. அவர் கழுத்தில் பித்தளைச் சொம்பினை மாட்டிக்கொண்டு பிச்சை எடுத்து கோவில் கோபுரத்தில் முளைத்திருந்த புல்பூண்டுகளை அகற்றி கும்பாபிஷேகம் செய்த மகான் ஆவார். அப்பர் பெருமான் செய்த அரும்பணியைப் போன்றது இது .
கோவிலின் ஐந்து நிலைக் கோபுரத்தில் இவரைத் தரிசிப்பதோடு கோவிலுக்குள் உள்ள சந்நிதி ஒன்றிலும் தரிசிக்கலாம்.
இன்னுமொரு சிறப்பு சித்திரை மாதத்தில் மூன்று நாட்களுக்கு கோவிலுக்குள் சூரிய ஒளி புகும் வண்ணம் திட்டமிடப்பட்ட பொறியியல் சிறப்பு ஆகும்
இங்குள்ள இறைவன் இறைவியின் சிறப்புகள்
இறைவன் நாமம் – நாகேஸ்வரர்
இறைவியின் நாமம் -பெரியநாயகி
இந்தக் கோயிலை அப்பர் பெருமான் பாடியுள்ளதால் குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இது பிரபலமாகியது தெளிவாகிறது
கும்பகோணம் பகுதியில் இரண்டு முக்கிய நாகேஸ்வரர் கோவில்கள் உள்ளன, இரண்டும் பாடல் பெற்ற ஸ்தலங்கள். ஒன்று திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவில் (கும்பகோணம் நவக்கிரக கோவில்களில் ஒன்று), மற்றொன்று கும்பகோணத்தின் மையத்தில் உள்ள இந்த கோவில்.
இந்தக் கோயில் குடந்தை கீழ்கோட்டம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
பிரம்மா அனைத்து உயிரினங்களின் விதைகளையும், வேதங்கள் மற்றும் புராணங்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக வைத்திருந்தார், இது அமிர்த கலசம் என்று அழைக்கப்பட்டது. பிரளயம் தொடங்கிய போது, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழித்தது. பிரம்மா தயாரித்த கும்பமும் இடம்பெயர்ந்து, பல ஆண்டுகளாக வெள்ள நீரில் மிதந்தது. இறுதியாக, அது ஒரு இடத்தில் குடியேறியது. சிவபெருமான், வேட்டைக்காரன் வேடத்தில், தனது வில் மற்றும் அம்பினால் கும்பத்தை உடைத்தார். கும்பத்தை அலங்கரிக்கும் வில்வம் இலைகள் விழுந்த இடம் இது (இங்கு சிவன் வில்வவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.).
நாகர்களின் அரசனான ஆதிசேஷன் தன் 1000 தலைகளில் பூமியின் பாரத்தை சுமந்தான். கருணை உள்ளம் கொண்ட இறைவன் அவர் மீது இரக்கம் கொண்டு, எந்த நேரமும் தனது ஒற்றைத் தலையில் பூமிச் சுமையை சுமக்கும் ஆற்றலை அவருக்கு வழங்கினார். ஆதிசேஷனால் லிங்கம் நிறுவப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டதால், இறைவன் நாகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
நடராஜ மண்டபம் ரத அமைப்பில் உள்ளது. இரு புறங்களிலும் உள்ள கல் (தேர்ச்) சக்கரம் உள்ளது. இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத் தேர்மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெயர் ’ஆனந்தத் தாண்டவ நடராஜ சபை’. சாரங்கபாணி கோவில் ரதம் போலக் காட்சிதருகிறது .
சிவகாமி வடிவில் அம்பாள், நடராஜப் பெருமானின் பிரபஞ்ச நடனத்திற்கு தாளம் போடுவதும், விஷ்ணு புல்லாங்குழல் வாசிப்பதும் வேறெங்கும் காண முடியாத காட்சிகள் .
மகாகாளிக்கும் வீரபத்ரருக்கும் எதிரெதிரே தனித்தனி சன்னதிகள் உள்ளன, சிவனும் காளியும் நடனத்தில் போட்டி போடுவது போல் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன., சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலையின் அற்புதத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தமிழ் மாதமான சித்திரையில் (ஏப்ரல் – மே) சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது விழும் வகையில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
தீர்த்தவாரி திருவிழாவின் போது இறைவன் மகாமகக் குளத்திற்கு வருகை தருகிறார்.
தமிழகத்தில் உள்ள நான்கு நாகர் கோயில்கள் : கும்பகோணம் நாகேஸ்வரர் ,கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம், புதுக்கோட்டை அருகேயுள்ள பேரையூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோயில் .
நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.
***
பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்
பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் (1876-1949) கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்து வலங்கைமானுக்கருகில் உள்ள பாடகச்சேரியில் தனது 12 வயதிலிருந்து வாழ்ந்தவர்; இவர் திருவொற்றியூரில் சமாதி அடைந்தார்.
வெள்ளை வெளேர் என்று வேட்டி அணிந்திருப்பார். ஒரு பித்தளைச் செம்பைக் கயிற்றில் கட்டியிருப்பார். அவருடைய இடுப்பில் தொங்குகிற பாத்திரத்தில் அனைவரும் தங்களால் முடிந்த சில்லறையைப் போட்டுவிடுவர்.
நாகேஸ்வரர் கோயில் கோபுரத்தில் மரம் செடிகள் முளைத்து அது பிளப்புண்டு கிடப்பதைப் பார்த்து மனம் வருந்தி அந்த கோபுரத்தை சீரமைக்க உறுதி கொண்டார். தனிநபராக அவர் சிறுகச்சிறுகப் பொருள் சேர்த்து, அக்கோயிலை திருப்பணி செய்து 1923ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துவைத்தார்.
***
அப்பர் பெருமான் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
ஆறாம் திருமுறை
பதிகம் – 75
காவிரி தென்கரைத் தலங்களில் இருபத்து ஏழாவது தலம் – திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்
1 Apr 2023 — கோவிலில் கலை விழா நடந்து கொண்டிருந்தது. நிறைய டான்ஸ்; நிறைய கைதட்டு. கொஞ்சம் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டே கோவில் யானையின் சேட்டைகளையும் புகைப்படம் எடுத்தேன். சந்நிதிக்குள் நுழைந்தோம் . என்னைப் போன்ற தஞ்சை மாவட்டத்தில் பிறந்த …Read more
21 Nov 2025 — ஆதி கும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் டிசம்பர் முதல் நாள் தேதி நடைபெறவுள்ளது. … கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மை திருக்கோயிலான ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள …Read more
21 Mar 2025 — … சுவாமிமலை, கும்பகோணம் ராமசுவாமிகோவில், கும்பேஸ்வரர் கோவில் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். அப்போது பாஸ்போர்ட் பையில் மலேசியா பத்துமலை முருகன் கோவில் தங்க வர்ண கீ செயின் இரண்டினை நண்பர்களுக்கு கொடுக்க வைத்திருந்தேன்.Read more
3 Mar 2023 — பிப்ரவரி 10 ஆம் தேதி (2023) லண்டனிலிருந்து சென்னைக்குச் சென்றேன் நேற்று மார்ச் 2ம் தேதி லண்டனுக்குத் திரும்பினேன் . சுமார் 20 நாட்களில் நாற்பது +++ கோவில்கள், ஆஸ்ரமங்கள் , அதிஷ்டானங்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்து.Read more