ஷீர்டியில் வாழ்ந்து வந்த சாயிபாபா பக்தர்களுக்குப் பல விதமாக அனுக்ரஹம் செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் அற்புதம் தான்! பக்தர்களின் பிரமிப்பு தான்!
ஆனால் யாருக்கு ப்ராப்தி இருக்கிறதோ அவர்களுக்குத் தான் அவரது ஆசியும் அதனால் ஏற்படும் பலனும் கிடைக்கும்.
தகுதி இல்லாதவர்களின் அனுபவம் அவரிடம் வேறு விதமாக இருக்கும்.
செல்வந்தர் ஒருவர் பாபாவிடம் ஒரு நாள் வந்தார்.
அவர் பாபாவிடம் கேட்டார்: “பாபா! எனக்குக் கடவுளைக் காட்டுங்கள். பிரம்மத்தைக் காட்டுங்கள் வெகு தூரத்திலிருந்து நான் இதற்காகவே உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். எல்லோரும் நீங்கள் உடனே பிரம்மத்தைக் காட்டுவீர்கள் என்று சொல்கிறார்கள்”
பாபா: ஒ! பயமே வேண்டாம். நான் உடனே உனக்கு பிரம்மத்தைக் காட்டுகிறேன். அதுவும் மிகத் தெளிவாகக் காட்டுகிறேன். உலகில் ஏராளமானோர் பணம், அதிகாரம், புகழ், ஆரோக்கியம் இவற்றிற்காக அலைகிறார்கள். ஆனால் பிரம்மத்தைப் பார்க்க விரும்புபவர்கள் மிகவும் அரிதாகவே இருக்கிறார்கள்.
பின்னர் பாபா பிரம்மத்தைப் பற்றிச் சற்று விளக்கினார். பிரம்மமே பிரபஞ்சத்தின் அடிப்படை காரணம். அதை உணர்வதற்காக பிறவி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், அதற்காக ஒரு குரு அவசியம் தேவை என்பதை எல்லாம் அவர் நன்கு விளக்கினார்.
பின்னர் அவர் அருகிலிருந்த ஒரு பையனிடம் நந்தியாலிடம் போய் நான் ஐந்து ரூபாய் கடனாகக் கேட்டேன் என்று சொல்லி வாங்கி வா என்றார். நந்தியால் ஒரு மார்வாடி.
வெளியே சென்ற பையன் திரும்பி வந்து மார்வாடி, அவரிடத்தில் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார் என்று கூறினான். பாபா அவனை அந்த கிராமத்தில் இருந்த பல பணக்காரர்களிடம் பணத்தை வாங்கி வர அனுப்பினார். ஒரு இருபது நிமிடம் கழிந்தது. ஆனால் பணம் வரவில்லை.
அதற்குள் அங்கு அவரிடம் வந்த செல்வந்தர் பொறுமையை இழந்தார். இங்கு இனியும் நேரத்தை வீணாக்குவது சரியில்லை என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் கடனாக தன் கையிலிருந்து ஐந்து ரூபாயை பாபாவிற்குக் கொடுத்தால் அது திருப்பி வருமா என்ற சந்தேகம் அவருக்குள் எழுந்தது. ஷீர்டிக்கு வந்து திரும்புவதற்கு அவர் ஒரு டோங்காவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த டோங்காகாரர் வேறு அவசரப்படுத்துவார் என்று அவருக்குத் தோன்றியது.
அவர் பாபாவிடம்> “நீங்கள் எனக்கு பிரம்மத்தைக் காண்பிக்கப் போகிறீர்களா, இல்லையா?” என்று கேட்டார்.
உடனே பாபா கூறினார்: “அட! நான் இப்போது செய்து கொண்டிருப்பதெல்லாம் அதற்காகத் தான்! இங்கு உட்கார்ந்திருக்கும் போதே நீ கடவுளைப் பார்ப்பதற்காகத் தான் இவற்றையெல்லாம் செய்கிறேன். உனக்கு ஒன்றும் புரியவில்லையா?
செல்வந்தர் தனக்குப் புரியவில்லை என்றார்.
பாபா: நான் ஐந்து ரூபாய் கேட்டேன். அதாவது ஐந்து விஷயங்களை சரணாகத் தரும்படி கேட்டேன். 1) ஐந்து பிராணன்கள் அதாவது உயிர்ச் சக்திகள் 2) ஐந்து புலன்கள் 3) மனம் 4) புத்தி 5) அகங்காரம். பிரம்மத்தை அடையும் சாலை சற்று கஷ்டமானது. எல்லோராலும் அதில் பயணப்பட முடியாது. பணம், கௌரவம், அதிகாரம் ஆகிய தடைகள் இருக்கக்கூடாது. அப்படியானால் பிரம்மம் பிரகாசமாகத் தெரியும்.
பாபா அந்த செல்வந்தர் தன் பையில் 250 ரூபாய் வைத்திருந்தாலும் தன் குருவுக்கு ஐந்து ரூபாய் கூடக் கொடுக்கத் தயங்கினார் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
ஆனால் குருவிடமிருந்து விலையே இல்லாத பிரம்மத்தை இலவச பரிசாக பெற அவர் விரும்புகிறார்! எவ்வளவு பேதைமை அது!
வெட்கப்பட்ட செல்வந்தர் அங்கிருந்து நகர்ந்தார் என்று சொல்லவும் வேண்டுமோ!
இதே போல இன்னொரு சமயம் ஒருவர் பிரம்மஞானத்தைப் பெற விரும்பி பாபாவிடம் வந்தார். ஆனால் அவர் உலக இன்பங்களைத் துறக்கத் தயாரில்லை. அவரை அங்கே காத்திருக்கச் சொன்ன பாபா கடனாக ஒரு தொகையை வாங்கி வருமாறு ஒருவரை மார்வாடி ஒருவரிடம் அனுப்பினார். ஆனால் அவரிடம் பணம் இல்லை என்று பதில் வந்தது.
இன்னும் பலரிடமும் அவரை அனுப்பினார். பலன் இல்லை. கடைசியாக அணுக்க பக்தரான நானா சாஹிப்பிடம் அதைக் கேட்டார்.
உடனே அவர் முதலில் பணம் கேட்டு இல்லை என்று பதில் வந்த மார்வாடியிடம் பணம் கேட்டு ஒரு துண்டுச் சீட்டை அனுப்பினர். உடனே கேட்ட பணம் வந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரம்ம ஞானம் வேண்டியவர் பாபாவிடம் தான் வேண்டியதை நினைவு படுத்தவே பாபா, “உனக்காகத் தான் இத்தனையையும் நான் செய்து கொண்டிருக்கிறேன். பாபா மார்வாடியிடம் பணம் கேட்ட போது அது கிடைக்கவில்லை. ஆனால் நானா கேட்டபோது உடனே அது கிடைத்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது?
யார் தகுதி உடையவர்களோ அவர்களுக்குத் தான் தேவையானது கிடைக்கும். தகுதியுள்ளவர்கள் மட்டுமே அதைப் பெறுவார்கள்” என்றார்!
கடவுளின் அருளைப் பெற ச்ரத்தா மற்றும் சபூரி (நம்பிக்கை மற்றும் பொறுமை)வேண்டும் என்பதே அவரது முக்கிய உபதேசம்.
இப்படி 634க்கும் மேற்பட்ட சம்பவங்களையும் உபதேச உரைகளையும் ஶ்ரீ B.V. நரசிம்ம ஸ்வாமி அவர்கள் எழுதிய ஷிர்டி சாயிபாபா பற்றிய நூலில் காணலாம்.
Date uploaded in Sydney, Australia – 5 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
20ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 20
புகழ்பெற்ற பத்து ஆஸ்திரேலிய நகரங்கள் தொடர்ச்சி…………
டாஸ்மேனியாTasmania மாநில தலை நகரம் ஹோபார்ட் Hobart
ஆஸ்திரேலியாவின் தென்புறத்தில் உள்ள தீவு டாஸ்மேனியா ஆகும். இந்தத் தீவு இயற்கை அழகும் புதுமைகளும் நிறைந்த இடம். தலை நகர் ஹோபார்ட்டும் இயற்கை வனப்பு மிக்கது . டெர்வெண்ட் என்னும் நதியும் வெல்லிங்டன் மலையும் இந்த Mount Wellington and the flow of the wide River Derwent) வட்டாரத்தை அலங்கரிக்கின்றன. நாட்டின் இரண்டாவது பழைய நகரம் இது. நிலத்துக்கடியிலுள்ள மியூசியத்தில் புதிய பழைய ஓவியங்களைக் காணலாம். நகரத்தின் சனிக்கியமை கிழமை மார்க்கெட்டும் புகழ்பெற்றது . இதை சாலமங்கா மார்க்கெட்Salamanca Market என்று அழைக்கிறார்கள்.
மலையைச் சுற்றிப்பார்ப்பதும், நதியின் கரையிலுள்ள தாவரவியல் பூங்காவைப் Royal Tasmanian Botanical Gardens. பார்ப்பதும் இயற்கை ஆர்வலர்களுக்கு இன்பம் பயக்கும் .
டாஸ்மேனியா தீவு கப்பல் காட்டும் தொழிலுக்கு பெயர்பெற்ற இடம். இங்குள்ள கடல்சார் மியூசியமும்(Maritime Museum of Tasmania )இதன் வரலாற்றை விளக்கும் . ஊரைச் சுற்றிப்பார்ப்போர் டாஸ்மான் பாலத்தையும் கண்டு வியப்பார்கள் (Tasman Bridge. It is among the world’s first box-girder cantilever bridges to have been built).
டாஸ்மான் பாலம்
டாஸ்மேனியா தீவு முழுவதையும் நோக்கினால் அங்குள்ள மழை வனக் காடுகளையும் அவைகளுக்குள் உள்ள தேசீய பூங்காக்களையும் குறிப்பிட வேண்டும். தீவுக்கே உரித்தான டாஸ்மேனியன் டெவில் என்ற பிராணி, பிளாட்டிபஸ், அங்குமிங்கும் பறந்து திரியும் மயில்கள் முதலியவற்றைப் பார்த்து மகிழலாம். ஹோபார்ட் நகரிலிருந்து அரைமணி நேரத்துக்குள் செல்லக்கூடிய (Bonorong Wildlife Sanctuary ) வனவிலங்கு பாதுகாப்பிடம் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இடமாகும்
மொழியியல் வல்லுனர்களுக்குப் பல புதிர்களைப்போடும் இடம் இந்தத்தீவு ; பல பெயர்ளைன் பொருள் என்ன, அவற்றின் மூலம் என்ன என்று அறிஞர்கள் விவாதத்தித்த வண்ணம் இருக்கின்றனர்.
*****
அடிலெய்ட் Adeleide நகரத்தின் சிறப்புகள்
நாட்டின் தென் கோடியிலுள்ள முக்கிய நகரம் இது. சிட்னிக்கும் அடிலெய்டுக்கும் இடையிலுள்ள தூரம் ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல். இந்த நகரிலுள்ள தாவரவியல் பூங்கா, சென்ட்ரல் மார்க்கெட் ஆகியன பார்க்க வேண்டிய இடங்கள்; ஒயின் மதுபானப்பிரியர்களுக்கும் பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன.
சுமார் பத்துமைல் தொலைவிலுள்ள Kangaroo Island கங்காரு தீவில் கோவாலா , கங்காரு முதலிய மிருகங்களையும், கடலில் வாழும் சீல் முதலியவற்றையும் காணலாம்.
அடிலெய்ட் ஓவல்(Adelaide Oval )ஸ்டேடியம் கிரிக்கெட், கால்பந்து, ரக்பி, டென்னிஸ் போட்டிகள் நடைபெறும் இடம் ஆகும். இதன் கூரை மேல் ஏறி இறங்குவது ஒரு தனிச் சிறப்பு ஆகும்; அதற்குக் கட்டணம் உண்டு.
மூன்று நாள் ரயில் பயணம்
இந்த நகரம் வேறு ஒரு சுற்றுலாப் பயணத்துக்கும் பெயர் பெற்று இருக்கிறது அது கான் ரயில் பயணம் (Three days on board The Ghan train). இந்தியாவில் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீரூக்குப் போவது போல அடிலெய்ட் என்னும் தென் கோடி முனையிலிருந்து வடகோடி டார்வின் நகருக்குச் செல்ல கான் ரயில் ஓடுகிறது அந்தக் காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு ஓட்டகத்தைக் கொண்டுவந்த ஆப்கானியர் பெயரான கான் இதற்குச் சூட்டப்பட்டுள்ளது . டார்வின் நகரிலிருந்து புறப்பட்டும் அடிலெய்டுக்கு வரலாம். இந்தப் பயணம் முடிய மூன்று நாட்கள் ஆகும் ; ஆஸ்திரேலிய கண்டத்தைக் குறுக்காக கடந்து செல்லும் இந்த ரயில் பாதையின் நீளம் 2,979kilometres (1,851 miles); நட்ட நடுவில் அலிஸ் ஸ்ப்ரிங்ங்ஸ் Alice Springs,என்னும் ஊரும் வரும் அனகிகிருந்துதான் ஆஸ்திரேலிய பழங்குடி ஆதிவாசிகளின் உளூரு மலைக்குச் செல்ல வேண்டும் இந்துக்களுக்கு கைலாய மலை போல ஐயர்ஸ் ராக் என்றும் உளூரு என்றும் அழைக்கப்படும் புனித மலை உள்ளது.
உலகின் மிக நீண்ட ரயில் பயணங்களில் ஒன்று இது .
****
டார்வின் நகரின் சிறப்புகள்
டார்வின் நாட்டின் வடகோடி நகரம். வடக்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலை நகர் இங்கும் ஆதிவாசி மற்றும் நவீன ஆஸ்திரேலிய கலைப்பொருள், ஓவியக் கண்காட்சியகங்கள் இருக்கின்றன நீர் விளையாட்டுப் பூங்காக்களும், தெரு ஓரக் கடைகளும் மார்க்கெட்டுகளும் இருக்கின்றன.
நகருக்கு வெளியே கடற்பயணங்களின் மூலம் பல சுற்றுலாத் திட்டுகளை அடையலாம் இங்கிருந்து விமானம் மூலமாக காக்காடு தேசீய பூங்காவுக்கும் Kakadu National Park Scenic Flight &Yellow Water Cruise (by plane) செல்லலாம்.
காக்காடு தேசீய பூங்கா
*****
பிரிஸ்பேன் Brisbane, the capital city of Queensland
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரம்; ஒலிம்பிக் போட்டி நடைபெறப்போகும் (2032 Summer Olympics .) நகரம் வண்ண வண்ண கட்டிடங்களும் பிரிஸ்பேன் நதியும் நகருக்குப் பெருமை சேர்க்கின்றன. எல்லா இடத்துக்கும் இலவச படகு சவாரி செய்யலாம் டிராம் பஸ் வசதிகளும் உண்டு அறிவியல் மியூசியம், கலைப்பொருள் ஓவிய மியூசியம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்
City Hopper ferry service in Brisbane, Australia is free. The City Hopper is a free inner-city ferry that runs along the Brisbane River. சிட்டி ஹாப்பர் என்னும் இலவச படகு எட்டு இடங்களில் நிற்கும். நகரின் வரைபடத்தை வைத்துக் கொண்டு பார்ர்க்க வேண்டிய இடங்கள் னைத்தையும் பார்த்துவிடலாம் .
Look for a red sign on the front and side of the ferry to identify it as a free City Hopper
The City Hopper runs every 36 minutes from 6 AM to midnight, seven days a week
The City Hopper stops at eight locations, including Eagle Street Pier, Kangaroo Point, and South Bank Parklands
பிரிஸ்பேன் சிட்டி ஹால் முக்கிய சுற்றுலா இடம்.
(Brisbane City Hall was built in the early 1900s and comprises around two acres, complete with 573 rooms and the largest copper dome in Australia). 573 அறைகளும் தாமிரக் கூரையும் உள்ளன. இது இரண்டு ஏக்கர் பரப்பில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது
நகரிலிருந்து சற்று தொலைவாகப் பயணம் செய்து கோவாலா விலங்குப் பாதுகாப்பகம் Lone Pine Koala Sanctuary. , கடலில் குடியேறிச்செல்லும் திமிங்கிலக் கூட்டம் ஆகியவற்றையும் காணலாம். humpback whale migration திமிங்கில கூட்டத்தைக் காண்பது ஆண்டில் சில June and November, மாதங்களின் மட்டுமே சாத்தியம் . நதியின் கரை ஓரமாக நடந்து செல்லுவது மனதுக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் அளிக்கும்.
****
முக்கியக் குறிப்பு
ஐயர்ஸ்ராக்/ உளூரு என்னும் ஆதிவாசி மலை , பெரும் பவளத்திட்டு, பிரிஸ்பேன் நகரம் , பாரமேட்டா நதிப் பயணம் , ஆபரா ஹவுஸ் ஆகியன பற்றி முன்னரே எழுதிய விரிவான கட்டுரைகளில் நிறைய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன ; அவற்றினையும் காண்க.
—subham-
Tags —ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் அனைத்தையும் பாருங்கள் Part 20, புகழ்பெற்ற, பத்து, நகரங்கள் , பிரிஸ்பேன், அடிலெய்டு, டார்வின், டாஸ்மேனியா , ஹோபார்ட்
Date uploaded in Sydney, Australia – –5 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
2-2-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசரிக்கப்படுகிறது.
அபிராமி பட்டர் – 2
இன்றும் திருக்கடையூரில் அபிராமி பட்டர் வாழ்ந்த வீட்டைக் காணலாம். அங்குள்ள மேல் வளாகத்தில் உள்ளது அபிராமி பட்டரின் வீடு. ஒவ்வொரு வருடமும் தை அமாவாசை அன்று அங்குள்ள ஆலயத்தில் அபிராமி பட்டரின் விழா சிறப்பாக நடைபெறுகிறது.
அபிராமி அம்மை நவரத்தின அங்கி அணிந்திருக்க அம்பிகை முன் அபிராமி அந்தாதி பாடப்படும். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் தங்கக் காசு சமர்ப்பிக்கப்பட்டு தீப ஆராதனை நடைபெறும்.
79வது பாடலின் முடிவில் கொடிமரத்திற்கு அடியில் பௌர்ணமி நிலவு தோன்றுவது போன்ற நிகழ்வு நடைபெறும். கோவிலின் அனைத்து விளக்கும் அணைக்கப்பட்டு இருளில் பௌர்ணமி நிலவு ஒளியுடன் காணப்படுவது போன்ற திருவிழா அம்பிகையின் திருவிளையாடலைக் காட்டும் விழாவாக அமையும்.
அபிராமி அந்தாதி ஏராளமான சிறப்புகளைக் கொண்டதாகும்.
உதிக்கின்ற என்று ஆரம்பித்த அந்தாதி உதிக்கின்ற என்ற அதே சொல்லோடு முடிந்தது.
அந்தாதியின் நூறாவது பாடல் இது. உதிக்கின்றவே என்று முடிவதைப் பார்க்கலாம்.
குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்
விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,
உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.
ஒவ்வோரு பாடலின் இறுதி அடியில் வரும் சொல்லே அடுத்த பாடலின் முதல் அடியில் வரும் முதல் சொல்லாக அமைந்தது. இது தமிழ் யாப்பு இலக்கணப்படி அந்தாதி என வழங்கப்படுகிறது.
ஶ்ரீ வித்யா உபாசகர் என்பதால் அம்பிகையின் பெருமையையும் ஏராளமான அம்பிகையின் மகிமையைக் குறிக்கும் பெயர்களையும் ஆதில் ஆழப் புதைந்து கிடக்கும் இரகசியங்களையும் அவரது பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
“மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே” என்று அவர் கூறுவதிலிருந்து அவரது எளிமையான பக்தி வெளிப்படுகிறது.
இந்த நூலை ஆயிரக்கணக்கானோர் இன்றும் பாராயணம் செய்து வருவது கண்கூடு.
அபிராமி அன்னையைத் தொழுது துதிப்பதால் என்னென்ன நலன்கள் ஏற்படும் என்பதை அவரே ஒரு பாடலில் கூறுகிறார்:
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. (பாடல் எண் 69)
இது மட்டுமின்றி நூலின் பயனாக இதை ஓதுபவர்க்கு ஒரு தீங்கும் வராது என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே…
அபிராமி அந்தாதியுடன் அபிராமி பட்டர், அபிராமியம்மை பதிகம், கள்ள விநாயகப் பதிகம், அமுதகடேசர் பதிகம், கால சங்காரமுர்த்தி பதிகம் உள்ளிட்ட நூல்களையும் இயற்றியுள்ளார்.
இவர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் சொற்சுவையுடனும் பொருள் சுவையுடனும் அமைந்திருக்கும்.
அபிராமியம்மை பதிகத்தில் உள்ள ஒரு பாடல் அபிராமி அம்மையைத் தொழுவார்க்குக் கிடைக்கும் நலன்களைப் பட்டியலிடுகிறது.
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
அபிராமி அந்தாதியில் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் நாமங்கள் பலவற்றைக் காணலாம்.
அகிமாலினி, அம்பிகை, சாம்பவி, சாமளை, பராசக்தி, மாதங்கி, வாராகி, உள்ளிட்ட பல நாமங்களை இந்த அந்தாதியில் காண முடிகிறது.
அபிராமி அந்தாதிக்கு நல்ல உரை தந்து உதவியவர் திரு கி.வா.ஜகந்நாதன் அவர்கள்.
இதற்கு எளிய தமிழில் கவிஞர் கண்ணதாசன் ஒரு விளக்கவுரையை அளித்துள்ளார்.
இவற்றைப் படிப்பது அபிராமி அன்னையின் மகிமையை அறிந்து கொள்ள பெரிதும் உதவும்.
காலம் காலமாக தன்னைத் தொழுகின்ற அனைவருக்கும் அனைத்து நலன்களையும் தரும் அபிராமி அன்னை ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர, வேண்டிக் கொண்டு என் உரையை முடிக்கின்றேன்.
ஆஸ்திரேலியாவின் தலை நகர் கான்பெர்ரா– எப்படி இந்தியாவில் டில்லி தலை நகராகவும் ஒரு தனி மாநிலமாகவும் (யூனியன் பிரதேசம்) இருக்கிறதோ , அதே போல கான்பெரா தனி பகுதி ; எந்த மாநிலத்தின் கீழும் வராது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தலை நகர் – சிட்னி நகரம்
குயீன்ஸ்லாந்து- மாநிலத் தலை நகர் – பிரிஸ்பேன்
விக்டோரியா -மாநிலத் தலை நகர் மெல்போர்ன்
டாஸ்மேனியா -மாநிலத் தலை நகர் ஹோபர்ட்
வடக்கு ஆஸ்திரேலியா-மாநிலத் தலை நகர் டார்வின்
மேற்கு ஆஸ்திரேலியா -மாநிலத் தலை நகர் பெர்த்
தெற்கு ஆஸ்திரேலியா -மாநிலத் தலை நகர் அடிலெய்ட்
இவை தவிர சுற்றுலா காரணமாக கேர்ன்ஸ், கோல்டுகோஸ்ட்,அலீஸ் ஸ்பிரிங்க்ஸ் நகரங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இவை தவிர சுமார் இருநூறு ஊர்கள் சுற்றுலா மையங்களாகத் திகழ்கின்றன.
4 Greater Perth ( Western Australia) பெர்த் 2,309,338
5 Greater Adelaide (South Australia) அடிலெய்ட் 1,446,380
6 Australian Capital Territory –(Canberra)கான்பெர்ரா 466,566
7 Greater Hobart (Tasmania) ஹோபர்ட் 253,654
8 Greater Darwin (Northern Territory)டார்வின் 150,736
பசிபிக் மஹா சமுத்திரம் அலைவீசும் கிழக்கு கடற்கரையை ஒட்டியே பெரும்பாலான நகரங்களும் அதிக மக்கட்தொகையும் உளது.
London Swaminathan in Sydney Opera House
சிட்னி நகரின் சிறப்பு
லண்டனுக்கு முதலிடம்; சிட்னி நகருக்கு பத்தாம் இடம்
2025 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த 10 நகரங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
மார்க்கெட் ஆராய்ச்சி நிறுவனமான Ipsos, உலகின் சிறந்த நகரங்கள் 2025 அறிக்கையை வெளியிட்டுள்ளது .
உலகெங்கிலும் உள்ள நகரங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம், மக்கள் ஒருவருக்கொருவர் காட்டும் பரிவு,பாசம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதி, ஆரோக்கியத்துக்கான ஆஸ்பத்திரி வசதிகள், மக்களின் பாதுகாப்பு ஆகியனவும் கருத்தில் கொள்ளப்பட்டன.
30 நாடுகளைச் சேர்ந்த 22,000 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் உலகின் தலைசிறந்த நகரம் பிரிட்டனின் லண்டன் என்று சர்வே கூறுகிறது.
இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரம் , மூன்றாவது இடத்தைப் பிரான்சின் பாரிஸ் பிடித்தன
4..டோக்கியோ, 5.சிங்கப்பூர் , 6.ரோம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
7.மாட்ரிட், 8.பார்சிலோனா, 9.பெர்லின் அடுத்து வந்துள்ளன
ஆஸ்திரேலியாவின் சிட்னி 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. சிட்னி நகரின் சிறப்புகள் — ஆபரா ஹவுஸ், பாண்டி கடற்கரை, ஹார்பர் பிரிட்ஜ், பால்மோரல் கடற்கரை.
Attractions such as the iconic Harbour Bridge, Sydney Opera House and stunning beaches such as Bondi and Balmoral were listed as reasons Sydney is so beloved both locally and globally.
சிட்னியில் பார்க்க வேண்டிய இடங்கள்
Sydney Harbour Bridge
ஆபரா ஹவுஸ்
ஹார்பர் பிரிட்ஜ்
பாண்டி பீச்
டார்வின் ஹார்பர்
பால்மோரால் கடற்கரை
ஆஸ்திரேலிய மியூஸியம்
பாரமேட்டா நதியில் படகு சவாரி
இந்து மதக் கோவில்கள்
*****
நாட்டின் தலை நகர் கான்பெர்ரா
Parliament House
London Swaminathan on a ferry in Nelson Bay, Australia
தலை நகர் காபெர்ரா திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட நகரம் ஆகும்; ஆஸ்திரேலிய பார்லிமென்ட் கட்டிடம், போர் நிநினைவுச் சின்னம் தேசீய பியூசியம் நேஷனல் காலரி மற்றும் போர்ட்ரைட் காலரி ஆகியன பார்க்க வேண்டிய இடங்கள்.
ஆஸ்திரேலியாவின் தேசீய நூலகத்தில் லடச்சக்கணக்காக புஸ்தகங்கள் ஆவணங்கள் உள்ளன அருகில் லேக் பார்லி கிரிப்பின் ஏரி உளது டிட்பின்பில்லா இயற்கை வனப்பு பாதுகாப்பிடம் இருக்கிறது . இந்த நகரத்தின் மார்கெட்டுகளும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன .
சிட்னி நகரிலிருந்து மூன்றே மணி நேரத்தில் காரில் போய்விடலாம் சிறிய நகரம் என்பதால் ஒரே நாளிலும் பார்த்துவிட்டுத் திரும்பலாம்
.****
மெல்போர்னில் என்ன இருக்கிறது ?
மெல்போர்ன் நகரின் பெயரைச் சொன்னவுடனேயே கிரிக்கெட்டும் டென்னிஸும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அந்தப் போட்டிகள் மட்டுமின்றி கார் ரேஸ் , குதிரைப் பந்தயம் முதலியவையும் நடைபெறுகின்றன. இந்த நகரம் நாட்டின் கலாசாரத் தலைநகரமும் கூட. நாட்டின் மிகப்பெரிய ஆஸ்திரேலிய ஓவியங்கள், கலைப்பொருட்கள் இடம்பெறும் காட்சி சாலைகளும் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக 5000 காப்பிக்கடைகள் இருப்பது மெல்போர்னின் தனிச் சிறப்பு ஆகும். சந்து பொந்துகளிலும், பாலங்களுக்கு அடியிலும் கூட காப்பிக் கடைகளும் , கள்ளுக் கடைகளும் உணவு விடுதிகளும் காணப்படும்.
இந்த ஊரில் கால்நடையாகச் சுற்றிப் பார்க்கும் வாக்கிங் டூர்களில் சேர்ந்தால் நகரின் முழு மகிமையையும் தெரிந்து கொள்ளலாம்..
****
ஆஸ்திரேலிய நகரங்கள் : கேர்ன்ஸ் Cairns
வடகோடியில் உள்ள கேர்ன்ஸ் நகரம் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் முக்கியமான இடம்; ஏனெனில் உலக அதிசயங்களில் ஒன்றான 1500 மைல் நீளமுள்ள பெரும்பவளத் திட்டினைக் காண இங்கிருந்து செல்வதுதான் எளிது. அதற்கான எல்லா வசதிகளும் உள. ஒரு கப்பலில் பயணிகளை ஏற்றிச் சென்று ஒரு தீவில் இறக்கிவிட்டு அணி அணியாக சிறிய கண்ணடிப்படகுகளில் கொண்டு செல்லுவார்கள்; அதாவது The Great Barrier Reef in glass bottomed boats கீழே கண்ணாடி பொருத்தப்பட்ட படகுகள்; அதன் மூலம் பவளத் திட்டுகளையும் அதனிடையே பாய்ந்து ஓடும் வண்ண மீன்களையும் கண்டு களிக்கலாம் . இது தவிர கடலுக்கடியில் முழ்கி மீன்களோடு நீந்தும் வசதிகளும், பல நீர் விளையாட்டுகளும் இருக்கின்றன.
இதே இடத்தில் இன்னும் ஒரு இயற்கை அதிசயமும் உள்ளது ஒரு பகுதியில் அடர்ந்த மழை வனக்காடுகள் இருக்கின்றன பையில் கனம் (பணம் ) இருந்தால் ஹெலிகாப்டரில் 45 நிமிடங்களுக்குப் பறந்து சென்று கடலையும் கானகத்தையும் ஒருங்கே காணலாம்; ஒரு முறை நீராவி ரயில் மூலமாகச் சென்றால் அந்த ரயில் 15 குகைகளையும் 93 வளைவுகளையும் , பல பாலங்களையும் கடந்து செல்லும். அங்கே நீர்வீழ்ச்சிகளையும் காணலாம் கூராண்டா என்றும் டையின்ட்ரீ மழை வனக்காடுகள் என்றும் இந்த இடத்தை அழைக்கிறார்கள்; திரும்பி வரும்போது கேபிள் காரில் (கம்பி வழி ரயில்) வரலாம். the Kuranda Scenic Railway;, it navigates 15 tunnels, 93 curves and difficult bridges across dense rainforest, waterfalls and steep ravines in just under two hours. On the way down, jump aboard the Skyrail Rainforest Cableway.
இந்தப் பயணத்துக்கு இரண்டு மணி நேரம் ஆகும் . அந்த நகரில் ஒரு நாளாவது ஹோட்டலில் அறை எடுத்து தங்க வேண்டும்.
****
மேற்கு ஆஸ்திரேலிய பெர்த் நகரம்
சிட்னிக்கு நேர் எதிர்ப்புறத்தில் 2500 மைல் தொலைவில் பெர்த் உளது ; இங்கும் இந்தியர்கள் அதிகம் வாழ்கின்றனர் இப்போதுள்ள மூன்று கோவில்களோடு மேலும் ஒரு மிகப்பெரிய ராமர் கோவில் இங்கு உருவாகிறது .150 ஏக்கரில் அதிக உயரமுள்ள அமைப்புடன் இது விளங்கும் .
ஸ்வான் நதியில் Swan River மூன்று மணி நேரம் படகு சவாரி செய்யலாம்; ப்ரீமாண்ட்டில் என்னும் துறைமுக நகரில் இருபது மீட்டர் தொங்கு பாலம் suspension பிரிட்ஜ் உளது; கடல் அலைகளை போல தோற்றமளிக்கும் வேவ் ராக் என்னும் அலைகள் பாறை Wave Rock இங்குள்ள இயற்கை அதிசயம் ஆகும். கடற்கரையில் உலாவலாம். கப்பலில் சென்று திமிங்கிலங்களை காணலாம்.
நகருக்குள் தாவரவியல் பூங்கா இருக்கிறது . முக்கிய மியூசியங்களும் இருக்கின்றன
வெள்ளைக்காரர்கள் இந்த டத்தை ஆக்ரமித்து ஸ்காட்லாந்திலுள்ள நகரின் பெயரினைச் சூட்டினர்; அதற்கு 45,000 ஆண்டுகளுக்கு முன்னரே நூங்கார் என்ற பெயருள்ள ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் இங்கு வாழ்ந்தனர் .
TO BE CONTINUED ……………………………….
Tags- ஆஸ்திரேலியா, வாருங்கள், அதிசயம் அனைத்தையும் பாருங்கள்! Part 19, பத்து முக்கிய,புகழ்பெற்ற ,ஆஸ்திரேலிய நகரங்கள் , மக்கட்தொகை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2-2-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசரிக்கப்படுகிறது.
அபிராமி பட்டர் – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருக்கும் திருமதி லக்ஷ்மி அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
அற்புதமான எல்லாம் வல்ல பராசக்தியின் மகிமையை தன் வாழ்நாளிலே உணர்ந்ததோடு அதை உலகிற்கும் பாக்கள் வாயிலாகத் தந்த அபிராமி பட்டரைப் பற்றி இன்று சற்று சிந்திப்போம்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் அபிராமி பட்டர்.
இவரது இயற் பெயர் சுப்ரமண்ய ஐயர்.
சோழநாட்டில் உள்ள திருக்கடையூரில் அந்தணர் குலத்திலே பிறந்தவர் இவ\ர்.
ஶ்ரீ வித்யா உபாசகராக இருந்த இவர் திருக்கடையூரில் அருள் பாலித்து வந்த அபிராமி தேவியைத் தவறாது வழிபட்டு வந்தார்.
இவரது வாழ்விலே ஒரு அரிய சம்பவம் நடைபெற்றது.
அந்தக் காலத்தில் தஞ்சையை மகராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி நன்கு ஆண்டு வந்தார். சிறந்த தெய்வ பக்தி கொண்ட அவர் ஒரு முறை திருக்கடையூருக்கு வருகை புரிந்தார். தை மாதத்தில் அவர் வந்தது ஒரு அமாவாசை தினத்தன்று. மன்னரின் வருகையால் பரபரப்புடன் இருந்த திருக்கோவிலில் அன்னையின் பக்தியில் மூழ்கி பரவசமாக இருந்த அபிராமி பட்டர் மன்னரைக் கவனிக்கவில்லை. இதைப் பார்த்த சரபோஜி மன்னர், இவர் யார் என்று கேட்க, இவர் தெய்வ பக்தியில் மூழ்கிய ஒரு பித்தர் என்று அங்கிருந்தோர் பதில் உரைத்தனர்.
தரிசனம் முடிந்த வேளையில் அபிராமி பட்டரை நோக்கிய மன்னர்.”இன்று என்ன திதி என்று கேட்டார். அம்பிகையை ஒளி வெள்ளமாகவே வழிபட்டு வந்த பட்டர் எதிரில் இருந்த ஜோதிமயமான அன்னையின் திவ்ய சொரூபத்தில் மூழ்கியவாறே, “இன்று பௌர்ணமி” என்றார்.
இதைக் கேட்டுத் திடுக்கிட்ட மன்னர் அங்கிருந்து செல்லும் போது, ‘இன்று பௌர்ணமி நிலவை நான் காணவில்லையெனில் இவர் தண்டிக்கப்படுவார்” என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்றார்.
மன்னர் சென்றவுடன் சுய நினைவு திரும்பியவுடன் நடந்த அனைத்தையும் அறிந்தார் அபிராமி பட்டர்.
சொல்லவொண்ணா வேதனையில் ஆழ்ந்த அவர் தன்னை ஊரும் உலகமும் பித்தர் என்று எண்ணி அப்படியே சொல்கின்றனரே என்று எண்ணினார். இப்படித் தவறாகக் கருதப்படும் தன்னை அம்பிகையே காத்தருள வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர் அம்பிகைக்கு முன்னால் ஒரு பெரிய குழியை வெட்டச் சொன்னார். அதில் விறகுகளை அடுக்கி தீயை மூட்டினார். தீ கனல் விட்டு கொழுந்தெரிந்தது. குழிக்கு மேல் ஒரு விட்டத்தைக் கட்டி நூறு கயிறுகளால் கட்டப்பட்ட உறி ஒன்றையும் அவர் நிறுவினார்.
அம்பிகையின் சந்நிதிக்கு எதிரில் இருந்த அந்த உறியில் அமர்ந்த அவர் செந்தமிழ் துதிப் பாடல்களைப் பாடலானார். அம்பிகையின் தரிசனம் தரும் வரை பாடுவது இல்லையேல் உயிரை விடுவது என்ற முடிவில் அவர் உதிக்கின்ற செங்கதிர் என்று முதல் பாடலைத் தொடங்கினார்.
ஒவ்வொரு பாடல் முடிவிலும் அம்பிகை தரிசனம் தரவில்லை எனில் நூறு கயிறுகளில் ஒன்றை அவர் அறுத்தார்.
நூறு பாடல்களிலும் அம்பிகை தரிசனம் தரவில்லை எனில் எரிதழல் புகுவதென்ற அவர் நிலைப்பாட்டைக் கண்ட அனைவரும் திகைத்தனர்.
இப்படி ஒவ்வொரு பாடலாக அவர் பாட அம்பிகையின் தரிசனம் கிடைக்காத நிலையில் அவரும் ஒவ்வொரு கயிறாக அறுத்து வந்தார்.
எழுபத்தொன்பாவது பாடல் மலர ஆரம்பித்தது.
விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே
என்ற பாடலை அவர் பாடிய உடன் அபிராமி அம்மை பட்டருக்குக் காட்சி அளித்தாள். வானமெங்கும் ஒளி வெள்ளம் பரவ அந்த அமாவாசை தினமானது அம்பிகையின் அருளால் பௌர்ணமியைப் போலத் திகழ்ந்தது.
நடந்தது அனைத்தையும் அறிந்த மன்னர் ஆச்சரியப்பட்டு அபிராமி பட்டரின் மன்னிப்புக் கோரினார். அத்துடன் மட்டுமின்றி தனது மானியமாக நிலம் உள்ளிட்டவற்றை அவருக்கு அளித்தார். அது இன்று வரை அவரது சந்ததியினரிடம் இருந்து வருகிறது.
‘அந்தாதியைத் தொடர்ந்து பாடுக’ என்று அருளி அன்னை மறையவே நூறு பாடல்களையும் பாடி முடித்தார் பட்டர்.
அது அபிராமி அந்தாதி என்ற பெயரைக் கொண்டு உலகில் பரவ ஆரம்பித்தது.
Date uploaded in Sydney, Australia – 3 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல் 2-2-2025 (Post No.14,170)
(Collected from popular newspapers and edited by me)
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைவாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ; பிப்ரவரி இரண்டாம் தேதி ; 2025-ம் ஆண்டு
முதலில் மஹா கும்பமேளா செய்திகள்
மகா கும்பமேளா நடைபெறும் பகுதியை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றும் வரும் கும்பமேளாவில் கலந்துகொள்ள நாளுக்குநாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் மேற்கொள்ளப் பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.
மகா கும்பமேளாவில், மவுனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட, பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஜனவரி 29 ஆம் தேதி நாளான மவுனி அமாவாசை மிக முக்கிய நாளாகும் ; அன்று அளவுக்கு அதிகமான கூட்டம் ஒரே இடத்தில் கூடியதால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் வீதம் உதவித்தொகை அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர் .
ஜனவரி 29 ஆம் தேதி வரை மொத்தம் 20 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் நீராடியுள்ளதாகவும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
பக்தர்கள் திரிவேணி சங்கமத்தை நோக்கி வராமல், அருகிலுள்ள நீர்நிலைகளிலேயே புனித நீராடுமாறும் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டார். அதன்பின், அங்குள்ள படித்துறையில் அமர்ந்து பூஜை செய்தார். இதையடுத்து, தன் குடும்பத்தினருடன் துறவியரை சந்தித்து ஆசி பெற்றார்.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமம் பகுதியில் கடந்த 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. இது, அடுத்த மாதம் 26ம் தேதி நிறைவடைகிறது.
விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா NATIONAL AEROMAUTICS AND SPACE ADMINISTRATION என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விண்வெளி வீரரான டான் பெட்டிட் பகிர்ந்துள்ளார். இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
*****
திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணி போராட்டம்!
திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணி போராட்டம்!
திருப்பரங்குன்றம் மலையை காக்க, வரும் 4ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு, உடன்குடியில் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்து வரும் 4-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு, உடன்குடியில் இந்து முன்னணியினர் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்தும் துண்டுபிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
******
நடிகை மம்தா குல்கர்னி துறவறம்; பாபா ராம்தேவ் அதிருப்தி!
பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் ஏற்றது குறித்து கருத்து தெரிவித்த யோகா குரு ராம்தேவ், தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மம்தா குல்கர்னி, 50. இவர், தமிழில் ஷோபா சந்திரசேகரன் இயக்கிய ‘நண்பர்கள்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். ஹிந்திப் படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்த அவர் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளும் இருந்தன.
போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க வெளிநாட்டில் இருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பினார். சில தினங்களுக்கு முன், இவர் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு துறவறம் ஏற்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.அது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட அகாராவின் மகா மண்டலேஸ்வர் பதவியும் வழங்கப்பட்டது. இது பற்றி யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது:
‘இதுநாள் வரை உலக இன்பங்களை எல்லாம் அனுபவித்தவர்கள், திடீரென ஒரே நாளில் துறவிகளாக மாறி விட்டார்கள். மகா மண்டலேஸ்வர் பட்டமும் பெற்று விட்டார்கள். ”துறவி ஆவதற்கு, பல ஆண்டுகள் ஆன்மிகம் குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரே நாளில் யாரும் புனிதராக முடியாது– என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறினார்.
****
இந்துக்கள் விழா பற்றி காங்கிரஸ் கட்சி கிண்டல் , கேலி
உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்ப மேளாவில் கோடிக்கணக்கானோர் புனித நீராடி வரும் நிலையில், அரசியல் தலைவர்களும் புனித நீராடி வருகின்றனர். மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் புனித நீராடியுள்ளனர். இதற்கிடையே, பாஜக தலைவர்கள் மகா கும்ப மேளாவில் புனித நீராடுவதை விமர்சிக்கும் வகையில், கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேகேள்வியெழுப்பினார்.மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கார்கேவின் கருத்து தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யும் அதன் தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது;ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சனாதன நம்பிக்கையின் அடையாளமாக இருந்து வரும் மகா கும்பமேளாவுக்கான மக்களின் மரியாதையை காங்கிரஸ் கேலி செய்கிறது. கங்கைத் தாய் பற்றிய கார்கேவின் கருத்துகளால் கோடிக்கணக்கான மக்கள் வேதனையடைந்துள்ளனர். சனாதனத்துக்கு எதிரான இத்தகைய கருத்துக்கள் வெட்கக்கேடானது. கருத்துக்களுக்காக நாட்டிடமும், சனாதனத்தை நம்பும் ஒவ்வொரு நபரிடமும் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்ற மதங்களுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களை உங்களால் வெளியிட முடியுமா? இப்தார் விருந்தில் பங்கேற்பதன் மூலம் வறுமை ஒழிந்துவிடுமா என்று நீங்கள் கேட்க முடியுமா? காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவரும் எப்படி இதுபோன்ற சனாதன எதிர்ப்பு சிந்தனையை கொண்டிருக்க முடியும் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் ” என்று பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யும் அதன் தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா கூறினார். *******
அயோத்தி வருகையை ஒத்தி வையுங்கள்: ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள்
அயோத்தி ராமர் கோவில் வருவதற்கு திட்டமிடும் பக்தர்கள், தங்கள் பயணத்தை 15 முதல் 20 நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அயோத்தி ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள், அயோத்தி ராமர் கோவிலுக்கும் வருவதால், கூட்டம் அதிகரித்துள்ளது. நெரிசல் தவிர்க்க, அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நீண்ட துாரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது
.நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள், சிரமம் இன்றி பாலராமரை தரிசிப்பதற்காக, அருகேயுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்கள் அயோத்தி வருகையை, 15 முதல் 20 நாள் தள்ளிப்போட வேண்டும். வசந்த பஞ்சமிக்கு பிறகு வந்தால் சிரமம் இன்றி தரிசனம் பெறலாம்.இவ்வாறு அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
*****
கைலாஷ் – மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம் – இந்தியா, சீனா முடிவு!
இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை மற்றும் கைலாஷ் – மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்தாண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் சந்தித்து கொண்டதாகவும், அப்போது இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட ஒப்பந்தத்தை தற்போது அமல்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்க இருநாடுகளும் முடிவெடுத்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தொடர்ந்து, 2025 கோடை காலம் முதல், கைலாஷ் – மானசரோவர் யாத்திரை தொடங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக இரு நாடுகளை சேர்ந்த நிபுணர் குழுவும் விரைவில் சந்தித்து நடைமுறைகளை வகுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*****
தைப்பூச விழாவில் இலவச தரிசனம்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான சிறப்பு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளதாக தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் 2025ம் ஆண்டிற்கான தைப்பூச திருவிழாவின் 7ம் நாள், தைப்பூச திருநாளான பிப்ரவரி 11ம் தேதி அன்று தங்க தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 12ம் தேதி தங்க குதிரை வாகன ஊர்வலமும், பிப்ரவரி 14ம் தேதி தெப்ப உற்சவமும் நடத்தப்பட்டு, தைப்பூச திருவிழா நிறைவு செய்யப்படும்.
*****
கோயில்களை நிர்வகிக்க சனாதன வாரியம் — விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு
புதுடெல்லி: ஜன. 26: நாடு முழுவதிலும் உள்ள கோயில்களை நிர்வாகிக்க சனாதன வாரியம் அமைக்க வேண்டும் எனத் துறவிகள் கோரியுள்ளனர். அகில இந்திய அகாடாக்கள் பரிஷத்தின்(ஏஐஏபி) இந்த கோரிக்கைக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் (V H P) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வஃக்பு வாரியம் போல், சனாதன வாரியம் அனைத்து மாநிலங்களிலும் அல்லது தேசிய அளவில் அமைக்க வேண்டும் எனத் துறவிகள் கோரியுள்ளனர்.
பாஜகவின் தோழமை அமைப்பான விஹெச்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது உள்ள முறைப்படி கோயில்களின் நிர்வாகக் குழுக்களே போதுமானவை என விஹெச்பி கருதுகிறது.
.இது குறித்து விஹெச்பியின் தேசியத் தலைவரான அலோக் குமார் கூறுகையில், நம் நாட்டில் வஃக்பு வாரியமும், சனாதன வாரியமும் தேவை இல்லை. கோயில்களை எந்த அரசும் கட்டுப்படுத்தக் கூடாது என்பதே எங்கள் கொள்கை ஆகும்” எனத் தெரிவித்தார்.
****
பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை: கவர்னர் பெருமை
:”பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை,” என, கவர்னர் ரவி தெரிவித்தார்.
சுப்பு சுந்தரம் எழுதிய, ‘காசி கும்பாபிஷேகம்’ நுால் வெளியிட்டு விழா, சென்னை மயிலாப்பூரில் நடந்தது. கவர்னர் ரவி நுாலை வெளியிட்டு பேசியதாவது:
ஆயிரம் ஆண்டுகளாக, பாரத நாடு ஆன்மிக தலமாக இருந்து வருகிறது. கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு, முஸ்லீம் படையெடுப்பாளர்களால் காசிக்கு அச்சுறுத்தல்இருந்தது. ஆன்மிகப் பணிகளில் நகரத்தார் சமூகம் முக்கிய பங்காற்றுகிறது. நாட்டின் பல ஆன்மிக தலங்களில், அவர்களின் சேவை இன்றளவும் தொடர்கிறது.
பொருளாதாரத்தை வளர்ப்பதில், நாட்டில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது. தார்மீக வழியில் பொருளாதாரம் வந்ததாக இருக்க வேண்டும்.
சுய நலத்திற்காக மட்டுமே பொருளாதாரம் என, இருந்து விடக் கூடாது. பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை. சுதந்திரத்துக்கு பின்பு தான் நாம் குடும்பமாக இருக்கிறோம். பாரத ராஷ்ட்ரா என்பது தார்மீக கொள்கைகளால் ஆனது என்று கவர்னர் ரவி கூறினார்.
விழாவில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
****
தை அமாவாசை; முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
தை அமாவாசையை முன்னிட்டு ஏராமான பக்தர்கள் தமிழகம் முழுவதும், தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தை அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் காவேரி சங்கமத் துறையில் ஏராளமானோர் புனித நீராடினர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அரிசி, காய்கறிகள், தானியங்களை தானமாக கொடுத்து வழிபாடு நடத்தினர்.
· திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள் முக்குளத்தில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
· திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
· கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் கடலில் நீராடினர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
*****
சபரிமலை நடை பிப்ரவரி 12-ஆம் தேதி திறப்பு
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு, ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் மகரஜோதி தரிசனம் நிறைவடைந்து ஜன., 20ல் நடை அடைக்கப்பட்டது. மாசி மாதாந்திர பூஜை பிப்., 12ல் நடை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை திறந்திருக்கும். இந்த நாட்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கி உள்ளது. பக்தர்கள் sabrimalaonline.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
xxxxxx
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை – தரங்கம்பாடி நெடுஞ்சாலையில் இது 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலிலிருந்து வடக்கில் 15 கிலோமீட்டர் தொலைவிலும் இது உள்ளது/
தல விருக்ஷம் : பிஞ்சிலம் என்னும் ஜாதிமல்லிகைக் கொடி
திருமால் உள்ளிட்ட தேவர்கள் தூய இடத்தில் உண்ண வேண்டும் என்று அமுத கடத்தை இங்கு கொண்டு வந்து வைத்தனர். அதனால் இது கடபுரி அல்லது கடவூர் என்ற பெயரைப் பெற்றது.
இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என்பதை அவர் தனது தந்தையார் மிருகண்டு முனிவர் மூலம் அறிய தலந்தோறும் சென்று சிவபிரானைத் தொழுது வந்தார். பதினாறு வயதாகும் போது 108வது தலமாக திருக்கடவூரில் அவர் சிவனைத் தொழும் சமயம் காலம் முடிந்ததால் எருமை வாகனத்தில் ஏறி வந்த எமன் மார்க்கண்டேயரை அவர் பூசிக்கும் சிவபிரானுடன் பாசக் கயிறை வீசி சேர்த்து இழுத்தார். உடனே சிவபிரான் கால சங்கார மூர்த்தியாக வெளிப்பட்டு எமனை உதைத்து தள்ளினார். மார்க்கண்டேயருக்கு சிரஞ்சீவியாய் என்றும் பதினாறாய் இருப்பாயாக என்று அருள் பாலித்தார்.
இங்கு ஞான உபதேசம் பெற விரும்பிய பிரம்மா சிவனை வழிபட அவர் ஒரு வில்வ விதையினைக் கொடுத்து, ‘இது விதைத்தவுடன் ஒரு முகூர்த்த காலத்தில் எங்கு விளைகின்றதோ அங்கு எம்மை வழிபடுவாயாக’ என்று கூறி அருளினார். இத்தலத்தில் விதை முளைக்க இங்கேயே இருந்து பிரம்மா வழிபட சிவன் அவருக்கு ஞானோபதேசம் செய்தருளினார். ஆகவே இத்தலத்திற்கு வில்வ வனம் என்ற பெயர் ஏற்பட்டது.
அடுத்து மார்க்கண்டேயர் அமிர்தகடேசருக்கு பிஞ்சிலம் எனப்படும் ஜாதிமல்லிகையுடன் கங்கை நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்ததால் இது பிஞ்சிலவனம் என்னும் பெயரைப் பெற்றது.
அமிர்தலிங்கத்தினை பூசித்த பிரமன் உள்ளிட்டோர் அமிர்தத்தைக் காணாமல் திகைத்தனர். உடனே சிவபிரான் விநாயகப் பெருமானைத் துதியுங்கள் என்று அருள் பாலிக்க ஒளிந்து இருந்த கணபதி அவர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலித்தார். அவர்களும் அமுதப் பெருக்கினை உண்டனர். இங்குள்ள கணபதி சோர கணபதி அல்லது கள்ள வாரணப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.
புலத்திய மஹரிஷி இங்கு மார்க்கண்டேயரைக் காண வந்தார். அப்போது அமிர்தலிங்கேஸ்வரரை பூஜித்து ஒரு விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார். இவரை பூஜித்தவர்கள் புண்ணியமடைவர் என்பதால் இவருக்கு புண்ணியவர்த்தனர் என்ற பெயர் ஏற்பட்டது.
அகத்திய முனிவர் இங்கு பூஜித்து பாவத்தைப் போக்க அருளியதால் இறைவனுக்கு பாப விமோசனர் என்ற பெயர் ஏற்பட்டது.
இங்கு எமனுக்கு உற்சவத் திருமேனி – சந்நிதி உள்ளது.
இங்கு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரப் பாடலகளைப் பாடி அருளியுள்ளனர். அப்பரும் திருஞானசம்பந்தரும் ஒரு சேர இங்கு எழுந்தருளியது இன்னொரு சிறப்பாகும். இன்னும் பல அருளாளர்களும் பாடல்களைப் படைத்துள்ளனர்.
இத்தலமே மிருகண்டு மஹரிஷி அவதரித்த தலமாகும்.
இங்கு தான் குங்குலிய கலய நாயனார், மற்றும் காரி நாயனார் ஆகியோரும் அவதரித்தனர். அவர்களுக்கு இங்கு திருவுருவச் சிலைகள் உள்ளன.
இந்தத் தலத்தின் அம்பிகையின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவர் அபிராமி பட்டர் ஆவார். தஞ்சையை ஆண்டு வந்த முதலாம் சரபோஜி மன்னர் ஒரு தை அமாவாசை தினத்தன்று இத்தலத்திற்கு வந்தார். அங்கு அம்பிகையின் நினைவில் இருந்த அபிராமி பட்டரிடம் இன்று என்ன திதி என்று கேட்க அவர் பௌர்ணமி என்று பதில் கூறினார். இதனால் வெகுண்ட அரசன் திரும்பிச் செல்ல பின்னர் நடந்ததை அறிந்த அபிராமி பட்டர் மனம் வருந்தி அம்மனின் முன் ஒரு ஆழமான குழியை வெட்டி அதில் விறகை அடுக்கித் தீ மூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டம் அமைத்து நூறு கயிறுகளால் உறி ஒன்றையும் கட்டி அதில் ஏறி அமர்ந்து அபிராமி அந்தாதியை இயற்றிப் பாடலானார். ஒவ்வொரு பாடலை முடித்தவுடன் ஒரு கயிறை அறுக்கலானார். எழுபத்தொன்பதாவது பாடலை அவர் பாட அன்னை அவருக்குக் காட்சி அளித்தாள். கோடி நிலா சேர்ந்தது போல் ஒளி வெள்ளம் பெருக, “நீ சொன்னதை மெய்ப்பித்து விட்டேன்” என்று கூறி அம்பிகை அருள் பாலித்தாள். அபிராமி பட்டரின் நூறு பாடல்களும் அற்புதமான பாடல்களாகும்.
இந்தத் திருக்கோவிலில் 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அமிர்த கடேஸ்வரரும் அபிராமி அம்மையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.