Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 3
ச.நாகராஜன்
இன்னும் ஒரு முக்கியமான புத்தகம்
ACQUARIAN GOSPEL OF JESUS THE CHRIST
By
LEVI
Published by
DEVORREST & CO
Los Angeles , U.S.A
இதில் 21 முதல் 35 முடிய 15 அத்தியாயங்கள் இந்தியாவிலும் திபெத்திலும் ஏசு கிறிஸ்து வாழ்ந்த சரித்திரத்தை விரிவாக விளக்குகிறது.
இதுவரை நாம் மேலே இரு அத்தியாயங்களில் கூறியவற்றை அப்படியே இங்கு காணலாம்.
அதில் இல்லாத சில புதிய விவரங்களும் இதில் தரப்படுகிறது.
அவற்றில் சில:
ஏசு ஒரிஸாவின் அரசு இளவரசனான ராவணா என்பவருடன் இந்தியாவிற்கு வந்தார். ராவணா பாலஸ்தீனத்திற்கு வணிகம் சம்பந்த்மாகச் சென்றவர்.
ஏசுவின் குரு பரத அராபா (Barata Araba). இவர் ஏசுவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அவருக்கு ஹிந்து வேதங்கள் உள்ளிட்டவற்றைக் கற்பித்தார்.
வித்யாபதி என்பவர் கபிலவாஸ்து கோவிலின் தலைமை புரோகிதர் மற்றும் ஒரு பெரிய மகான் ஆவார். அவர் ஏசுவை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
ஏசு அலெக்ஸாண்ட்ரியாவில் மகான்களின் சங்கத்தில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இந்தியாவிலிருந்தும் கூடப் பல மகான்கள் கலந்து கொண்டனர்.
ஏசு ஹிந்து வேதங்களையும் அவெஸ்தாவையும் பெரிதும் விரும்பினார்.
The Bible In India – Hindu Origin of Hebrew and Christian Revealation
By
M. Louis Jacolliot
இந்தப் புத்தகமும் பல உண்மைகளைக் கூறுகிறது.
இந்தியப் பெரியார் ஆன சாது T.L. வாஸ்வானி
East and West Series No 91, January 1995 (Published by Mira Institute, Poona)-ல் ஏசு இந்திய யோகிகளுடன் இந்தியா வந்ததைக் குறிப்பிடுகிறார். இங்கு அவர் புத்தமதம் மற்றும் வேதங்களைக் கற்றார். அவர் பூரிக்கும் வந்தார். அங்கு கடலுக்கும் கோவிலுக்கும் இடையே உள்ள ஒரு பெரிய தோட்டத்தில் ஒரு நல்ல அமைதியான இடத்தில் தங்கினார்.
இது தவிர, இன்னும் பல அதிகாரபூர்வமான இந்தியாவில் வெளியிடப்பட்ட வெளியீடுகள் கிறிஸ்து இந்தியாவிற்கு வந்ததை உறுதிப் படுத்துகின்றன.
பவிஷ்ய மஹா புராணம் ஏசுவை யுஸ் யூசூப் (Yus Yusuf)
என்ற பெயரால் குறிப்பிடுகிறது. அவர் ராஜா சாலிவதனுடன் உரையாடல் நிகழ்த்தியதையும் அது குறிப்பிடுகிறது.
இந்த எழுத்தாளர் 11-11-1975 அன்று ஜகந்நாத் பூரிக்கு சென்றிருந்த சமயம் ஶ்ரீ சதா சிவ ரத்ன சர்மா, தலைவர், முக்தி மண்டல், பூரி,
அவரிடம் ஒரு சம்ஸ்கிருத கைப்பிரதியைக் காண்பித்தார். சாது டிப்னி என்ற அது பனை ஓலையில் எழுதப்பட்ட ஒன்று. கிறிஸ்டா என்று அது ஏசு கிறிஸ்துவைக் குறிப்பிடுகிறது.
அவரும் அவரது பக்தர் சாது சுந்தர் தாஸும் மோஹல்லா ஜெய் டோடா என்ற கோவிலில் வாழ்ந்து அங்கேயே படித்ததாகவும் ஓலைச் சுவடி குறிப்பிடுகிறது.
சாது வாஸ்வானி இவை அனைத்தையும் குறிப்பிடுகிறார்.
அது ஒரு சிதிலமான கட்டிடம். பழைய காலத்தில் அங்கு ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அங்கு பழங்காலத்து நாணயங்கள் வேறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
உள்ளூர் கிறிஸ்தவர்களில் பலர், ஏசு அங்கு பூரியிலிருந்த போது தங்கியதாகவும் அந்த இடத்தில் இப்போது Sisters oldners blessed Sacraments Convent School Puri
கட்டப்பட்டிருப்பதாகவும் கருதுகின்றனர்.
ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு பெண்மணி அங்கு பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துகிறார். அதில் ஹிந்துக்களும் கூட கலந்து கொள்கின்றனர்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் திபெத்திய கைப்பிரதி இன்றும் லாமாக்களிடம் இருக்கிறது. அதனுடைய போட்டோ காபி
UNKNOWN LIFE OF JESUS CHRIST என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆதாரம் & நன்றி:
The Vedic Path – April 1976.
Reproduced in Ideas / Exchange, Jullunder, Issue no 197, 198 & 199.
9. A person born when the Moon passes through the asterism of Viśākhā will be jealous of another’s prosperity, will be a niggard, wall be of bright appearance and of distinct speech, will be skilled in the art of earning money, will be disposed to bring about enmity between persons. A person born when the Moon passes through the asterism of Anurādhā will be rich, will live in foreign lands, will be unable to bear hunger and will be inclined to move from place to place.
xxxx
ज्येष्ठासु न बहुमित्रः सन्तुष्टो धर्मकृत्प्रचुरकोपः । मूले मानी धनवान् सुखी न हिंस्रः स्थिरो भोगी ॥ १० ॥
jyeṣṭhāsu na bahumitraḥ santuṣṭo dharmakṛtpracurakopaḥ | mūle mānī dhanavān sukhī na hiṃsraḥ sthiro bhogī || 10 ||
10. A person born when the Moon passes through the asterism of Jyeṣṭhā will have very few friends, will be cheerful, virtuous and of irascible temper. A person born when the Moon passes through the asterism of Mūla will be haughty, rich, happy, not disposed to injure other men, of firm views and will live in luxury.
xxxx
इष्टानन्दकलत्रो वीरो दृढसौहृदश्च जलदेवे । वैश्वे विनीतधार्मिकबहुमित्रकृतज्ञसुभगश्च ॥ ११ ॥
11. A person born when the Moon passes through the asterism of Pūrvāṣāḍha will have an agreeable wife, will be proud and will be attached to friends. A person born when the Moon passes through the asterism of Uttarāṣāḍha will be obedient, will be learned in the rules of virtue, will possess many friends, will be grateful, will return favours received and will be generally liked.
12. A person born when the Moon passes through the asterism of Śravaṇa will be prosperous and learned, will have a liberal-minded wife, will be rich and of wide-spread fame. A person born when the Moon passes through the asterism of Dhaniṣṭhā will be liberal in his gifts, will be rich, valiant, will be fond of music and will be a niggard.
xxxx
स्फुटवाग्व्यसनी रिपुहा साहसिकः शतभिषक्सु दुर्ग्राह्यः । भद्रपदासूद्विग्नः स्त्रीजितधनपटुरदाता च ॥ १३ ॥
13. A person born when the Moon passes through the asterism of Śatabhiṣaj will be harsh in his speech, will be truthful, will suffer grief, will conquer his enemies, will thoughtlessly engage in works and will be of independent ways. A person born when the Moon passes through the asterism of Pūrvabhādrapada will suffer from grief, will place his wealth at the disposal of his wife, will be of distinct speech, will be skilled in earning money and will be a niggard.
14. A person born when the Moon passes through the asterism of Uttarabhādrapada will be an able speaker, will be happy, will possess children and grand-children, will conquer his enemies and will be virtuous. A person born when the Moon passes through the asterism of Revatī will possess perfect limbs, will be of amiable manners, will be deeply learned, will never covet the property of other persons and will be rich.
[Note—The effects described in this chapter will fully come to pass if the Moon be powerful.]
— subham—
tags- What is Your Birth Star? prediction, Brhat Samhita, Varahamihira, Part 2
ரமணர் பற்றி எவ்வளவோ நூல்கள் வந்துவிட்டன; அவர் சமாதி அடைந்தோ 75 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி 30-12-1879 TO 14-04-1950
இன்னும் புதிய நூல்களா ? ஆமாம் அஹம் ஸ்புரணா – ஆத்ம ஞானத்தின் ஒளிக்கீற்று என்ற புதிய நூல் புதிய விஷயங்களுடன் வெளி வந்துள்ளது.
எப்போது?
2023ம் ஆண்டு
யார் வெளியிட்டது ?
ஒப்பன் ஸ்கை பிரஸ் OPEN SKY PRESS
அஹம் ஸ்புரணா என்றால் என்ன பொருள் ?
ஸ்புரணா என்றால் துடிப்பு. நான் என்னும் துடிப்பு என்பதே தலைப்பு
என்ன புதிய விஷயங்கள் உள்ளன?
1936 ஆம் ஆண்டு கஜபதி ஐயர் என்பவர் திருவண்ணாமலையிலுள்ள ரமணாஸ்ரமத்துக்கு வந்தார். ஆங்கில இலக்கியத்தல் புலமை பெற்றவர். அவர் ஆச்ரமத்தில் தங்கிய ஆறு மாத காலத்தில் ரமணரின் உரையாடல்களை அப்படியே குறிப்பு எடுத்து வைத்திருந்தார். அந்தக் குறிப்பேட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை அப்படியே ஆங்கிலத்தில் புஸ்தகமாக வெளியிட்டார்கள்.
அதை பெங்களூரு சந்தானம் நாகராஜன் அப்படியே தமிழில் அற்புதமாக மொழிபெயர்த்து தந்துள்ளார்.
சந்தானம் நாகராஜன், இளம் வயதிலேயே மதுரை சொக்கப்ப நாயக்கன் தெருவிலுள்ள ரமணர் வீட்டிற்குச் சென்று தியானம் செய்தவர் . நமது பிளாக்கில் எண்ணற்ற ரமணர் கட்டுரைகளை எழுதியவர். அப்படி ஆழம் இருந்ததால் மொழிபெயர்ப்பில் தெளிவும் இருக்கிறது . . ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேச மஞ்சரி , காஞ் சி பரமாசார்யாரின் (1894- 1994) தெய்வத்தின் குரல் போல எளிதில் ரமணர் உரைகளைப் படித்துவிடமுடியாது ; ஏனெனில் உயர்ந்த தத்துவ விசாரணையை அவர் திரும்பத் திரும்ப சொல்கிறார் . நான் யார் என்று சிந்திக்கச் சொல்கிறார். இந்தக் கருத்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு பதில் வழியாக வரும்
xxxx
இந்தப் புஸ்தகத்தில் ஒரு தனிச் சிறப்பு
எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் நீங்கள் படித்து புதிய விஷயங்களை அறியலாம். தொடர்ச்சியாக படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படி படித்தாலும் அதிலும் பலனுண்டு.
எத்தனை பக்கங்கள் ?
362+ அட்டைகள்
விலை என்ன?
புஸ்தகத்தில் விலை குறிப்பிடப்படவில்லை.
எத்தனை அத்தியாயங்கள் ?
ஐம்பதுக்கும் மேலான அத்தியாயங்கள்
1936 ஜூலை 6 முதல் 1936 செப்டம்பர் 30 வரையில் ஆஸ்ரமத்தில் என்ன நடந்தது என்ற சுவையான விஷயங்களை அறிய முடிகிறது.
xxxx
வேறு என்ன உள்ளன ?
ரமணரின் , அவர்களுடைய சீடர்களின், அற்புதமான படங்கள் உள்ளன . காஞ்சிப் பெரியவர் பால் பிரன்டன் ( PAUL BRUNTON ) என்பவரை ரமணரிடம் அனுப்பியதும் அவர் A SEARCH IN SECRET INDIA செர்ச் இந்த சீக்ரெட் இண்டியா என்ற புகழ்மிக்க புஸ்தகத்தையும் நாம் அறிவோம். அவருடைய படமும் உள்ளது.
ஒபன் ஸ்கை பிரஸ் இயக்குனர் ஜான் டேவிட் எழுதிய முன்னுரையில் புஸ்தத்தின் தேவை, அதை உருவாக்கும்போது ஏற்பட்ட இடர்ப்பாடுகள் ஆகியவற்றை எடுத்துரைத்துள்ளார். அதைப் படித்தவுடன் புஸ்தகத்தின் மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் கூடி விடுகிறது. புஸ்தகத்தை தமிழில் மொழிபெயர்த்த பெங்களூரு நாகராஜன், மற்றும் தட்டச்சு செய்து உதவிய பலருக்கும் நன்றியுரை கூறியிருக்கிறார்.
கஜபதி ஐயர் 1948ம் ஆண்டு தான் எடுத்த குறிப்புகளுடன் ரமண மகரிஷியை சந்தித்தார். உடனிருந்த ராஜேஸ்வராநந்தாவும் புஸ்தகமகாக அது வெளியாவதற்கு ஆதரவு தெரிவித்தார்.
பகவான் ரமணர் சிரித்தவாறே சொன்னார் ,
பார் இந்தக் குழந்தை எவ்வளவு அழகாக எல்லாவற்றையும் எழுதி இருக்கிறது .
ரமணர் அனுமதியின்றி குறிப்பு எடுத்ததை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தபோதும் பரவாயில்லை என்று ஒரே வரியில் ‘அப்ரூவல்’ கொடுத்துவிட்டார் பகவான்.
திருவண்ணாமலை அதிதி ஆஸ்ரமத்தின் நிறுவனர் சுவாமி ஹம்சானந்தா எழுதிய அழகான முன்னுரையில் இந்தப் புஸ்தகத்தில் பெருமையை எடுத்துரைக்கிறார் . இதில் உள்ள விஷயங்களை ஐயப்படவேண்டியதில்லை என்று அவரும் முத்திரை குத்தியுள்ளார்
புஸ்தகம் முழுவதையும் சுருக்கித் தருவது மதிப்புரையாகாது ; ஆகையால் இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் தருகிறேன்
16 ஜூலை 1936
காலமும் விஞ்ஞானமும்
காலம் பற்றி அருமையாக விளக்கும் ரேவதி-காகுத்தமி கதை (THEORY OF TIME DILATION) இதில் உள்ளது. 1930-களில் ஐன்ஸ்டீனின் கொள்கைகள் பெரிதும் விவாதிக்கப்பட்டதால் ரமணர் இதுபற்றி பேசியிருக்கலாம்.
இன்னும் ஒரு சுவையான விஷயம் !
ஒரு சின்னப்பையன் ஆஸ்ரம தியான மண்டபத்தில் பம்பரம் விளையாடினான் . எல்லோருக்கும் அது தொல்லை தந்தது. பையனின் அப்பா, உடனே நிறுத்து என்று அதட்டினார். அப்பா, இந்த பம்பரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது; அது ஆடி முடித்தவுடன் நன் இனிமேல் விளையாடவில்லை என்றான். தந்தைக்கோ கடும் கோபம். அவனை அப்படியே தூக்கித் தாயின் மடியில் அமர்த்திவிட்டுப்போன்னார் . தாயும் சிறுவனுக்கு நல்ல வார்த்தை சொல்லி தூங்க செய்துவிட்டார். இத்தனையையும் ரமணரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
சற்று நேரத்திற்குப் பின்னர் சிறுவனின் தந்தை ரமணரிடம் சென்று பல தத்துவக் கேள்விகளைக் கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திருந்தார். ரமணர் சொன்னார்: உன் கேள்விக்கு உன் மகனே பதில் சொல்லிவிட்டானே (பம்பரம் ஆடி முடியும் வரை காத்திரு) என்றார். அவரவர் பூர்வ ஜென்ம கருமவினை (ஆடி அடங்கும் வரை) ஆடி முடியும் வரை பலன் கிடைக்காது. முயற்சி செய்வதில் தவறில்லை .
இப்படி பல சுவையான நிகழ்வுகளும் புஸ்தகத்தில் இருப்பதால் மேலும் மேலும் படிக்கத் தூண்டுகிறது . அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டிய நூல் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை.
In social media and magazines, we see lot of predictions based on this and that. Most of them are concocted by modern astrologers to cheat people and make money. They may connect a plant or herb or a gem or a colour and say you are lucky or unlucky. But those cunning guys never give the source of such fake predictions. But if something comes from the mouth of Varahamihira, one of the greatest astrologers cum astronomers, then we must listen to him. He was so humber and say that he compiled all the information from old Hindu books; that means wht he says is at least 2000-year-old.
World famous Varahamihira beats Leonardo Da Vinci and Thomas Alva Edison who were attributed thousands of things and inventions. If one reads Brhat Samhita (Encyclopaedic work) and Brhat Jataka (Astrology book) written by Varahamihira in Sanskrit, they will know that all the science were flourishing in ancient India 2000 years ago.
Here is a list of 27 stars and the general character of people born under them . every Hindu knows his or her birth star. But a knowledgeable person will easily understand the 7.951 billion people on earth can’t be divided into 27 groups for the sake of predictions! Moreover each star is subdivided into 4 more parts; that means there may be variations among the people with same birth star.
For instance, myself and my wife have Uthradam as birth star, but we fall under different Hindu zodiac signs (Dhanur and Makara Rasis).
So take this bit as general predictions and not precise:
Note: this chapter appears as chapter-16 of Bṛhat-jātaka as well.
1.A person born when the Moon passes through the asterism of Aśvinī will be fond of ornaments, will be of fine appearance, of amiable manners, skilled in work and intelligent. A person born when the Moon passes through the asterism of Bharaṇī will be successful at work, truthful, free from diseases, able and free from grief.
2. A person born when the Moon passes though the asterism of Kṛttikā will be a glutton, fond of the wives of other men, of bright appearance and of wide-spread fame. A person born when the Moon passes through the asterism of Rohiṇī will be truthful, will not covet the property of other men, will be of cleanly habits, of sweet speech, of firm views and of fine appearance.
3. A person born when the Moon passes through the asterism of Mṛgaśīrṣa will be of no firm views, will be able, timid, of good speech, of active habits, rich and will indulge in sexual pleasures. A person born when the Moon passes through the asterism of Ārdrā will be insincere, of irascible temper, ungrateful, troublesome and addicted to wicked deeds.
(Arudra is Shiva’s Star)
xxxx
दान्तः सुखी सुशीलो दुर्मेधा रोगभाक्पिपासुश्च । अल्पेन च सन्तुष्टः पुनर्वसौ जायते मनुजः ॥ ४ ॥
4. A person born when the Moon passes through the asterism of Punarvasu will be devout and of patient habits, will live in comfort, will be good natured, quiet, of wrong views, sickly, thirsty and pleased with trifles.
5. A person born when the Moon passes through the asterism of Puṣya will have a control over his passions, will be generally liked, will be learned in the Śāstras, will be rich and will be fond of doing acts of charity. A person born when the Moon passes through the asterism of Āśleṣā will not be attentive to the work of other men, will be a promiscuous eater, will be sinful, ungrateful and skilled in deceiving other men.
6. A person born when the Moon passes through the asterism of Maghā will have numerous servants, will worship the Devas and the Pitṛs, and will be engaged in important works. A person born when the Moon passes through the asterism of Pūrvaphālguni will be of sweet speech, will be liberal in his gifts, will be of wandering habits and will serve under kings.
7. A person born when the Moon passes through the asterism of Uttaraphālguni will be generally liked, will earn money by his learning and will live in comfort and luxury. A person born when the Moon passes through the asterism of Hasta will be of active habits, full of resources, shameless, merciless, a thief and a drunkard.
8. A person born when the Moon passes through the asterism of Citrā will wear clothes of various colours and flowers, and will be of beautiful eyes and limbs. A person born when the Moon passes through the asterism of Svāti will be of a mild and quiet nature, will control his passions and desires, will be skilled in trade and merciful, will be unable to bear thirst, will be of sweet speech and will be disposed to do acts of charity.
Also read my article
Panini’s Interesting Titbits on 27 Stars (Post No.7900)
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
மூலிகை Part 27
xxxx
ச
278. பிரமியத்திற்கு
சந்தன மூலம், அதாவது சந்தன மறைத்து வேரின் பட்டையை ஆப்பிளில் அரைத்துக் காய்ச்சி யுண்டுவந்தால் மேகம்- பிரிமியம் தீரும். தேகத்தில் அழகுண்டாகும் .
இதுவுமது
சந்தன மூலத்தைக் கிஷாயம் வைத்து உண்டுவந்தால் மேற்கூறியவியாதிகள் தீரும்.
இதுவுமது
சந்தன அத்தர் முதல் தரமானது அரைக்கால் ரூபாயிடையெடுத்து ஒரு செவ்விளநீரைக் கண்திறந்து அதில் விட்டு நன்றாய்க் குலுக்கி சாப்பிடவும். இப்படி மூன்று வேளை சாப்பிட்டால் கொடூரமான வெள்ளையுடனே தீரும்..
XXXX
அஸ்தி காங்கை தீர
சதையொட்டி இலையாய்ப் பாலில் அரைத்துக் கலக்கி உண்டு வந்தால் வெட்டை எரிவு காந்தல் இவை தீரும்.
xxx
வண்டு கடி சொறி தேமல் தீர
சரக்கெண்ணெய் மூலத்தைப் பாலில் அரைத்து கலக்கி உண்டு வந்தால் வண்டு கடி சொறி தேமல் விஷ நீர் முதலியவை தீரும்.
xxxx
பித்த குன்மசாந்தி
சத்திசாரணை மூலத்தை பால் விட்டரைத்து பில்லை தட்டியுளர்த்திப் பொடி செய் து கொஞ்ச ம் சீனி கலந்து வைத்துக்கொண்டு திருக்கடிப் பிரமாணம் நெய்யிலாவது தேனிலாது உண்டுவந்தால் பித்த குன்மம் சாந்தியாகும் . பத்தியமில்லை
xxxx
மேக சூட்டுக்குத் தைலம்
சவுரிப் பழம் 2- மிளகு 1 பலம் இதுகளை பசும்பால் விட்டரைத்து கால்படி நல்லெண்ணெயிற் கரைத்துக் காய்ச்சி வடித்து தலை முழுகி வந்தால் மேக சூடு சாந்தியாகும் .
xxxx
மேக வியாதிக்கு
சங்கம் குப்பிச் சாற்றை தனியாயாவது ஆமணக்கெண்ணெய்யுடன் கழண்டாவது கலந்தாவாவது , காலையில் ஒரே வேளை யாக சுமார் ஓன்றரைப் பலத்திற்கு குறையாமல் கொடுத்துவந்தால் இரண் டொரு தடவை வலம் உதையும் . கண்டமாலை – மேகவெள்ளையிவை சாந்தியாகும் .
சடாமாஞ்சியை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு தலை முழுகி வந்தால் மயிர் வளரும். சற்று வாசனையுள்ளதா கவுமிருக்கும் .
xxxx
மாந்தங்களுக்கு
சதா ப்பிலையை சித்தாமணக்கெண்ணெயுடன் காய்ச்சியாவது , மேற்படி இலைச் சாற்றைத் தனியாயாவது குழந்தைகளுக்கு உபயோகித்து வந்தால் மாந்தம் அணுகாது .
xxxx
கபம் அல்லது சிரசு நோய்
சதக்குப்பையை சூரணி த்து சக்கரை கூட்டி திருகடியளவுண்டுவந்தால் கபம் – சிரசு நோய் – செவி நோய் – பீனிசம் – மூலக்கடுப்பு- இவை சாந்தியாகும்.
xxxx
தாது நஷ்டத்திற்கு
சண்பக மொக்கைக் கிஷாயம் செய்து , பால் சக்கரைபோட்டு உட் கொ ண்டுவந்தால் அஸ்தி சுரம் – பித்த சுரம் – கண் அழலை – மேகம் இவை தீரும் ; தாது கட்டும் .
xxxx
நாடியிருக
சத்தி சாட்டரணை மூலத்தைச் சூரணித்து சக்கரை கலந்து திருகடியளவு உண்டுவந்தால்மேகம் விப்புருதி தீரும்.
விந்து உண்டாகும் .
xxxx
290. வயிற்று நோவுக்கு
சப்பாத்தி சமூலத்தைக் கொண்டுவந்து எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி பிரசவ வேதனை போன்ற வயிற்று நோவுக்கு க் கொடுக்கப்படும் .
xxxx
தகுந்த ஆகாரம்
சவ்வரிசியை அரை அவுன்ஸுயெடுத்து நாலு திராம் தண்ணியில் போட்டு 2 மணிநேரம் ஊறிய பின் அடுப்பிலேற்றி கால் மணி நேரம் வேகவைத்து அதன்பின்பு பசும்பாலும் சக்கரையும் கலந்து இறக்கி வாசனைக்காக கொஞ்சம் ஜாதிக்காய் தூளாவது கருவாப்பட்டை தூளாவது கலந்து சாப்பிட்டால் கொடிய ரோகம் இருமல் இவைகளால் அவஸ்தைப்படும் பலவீனமுடையவருக்கு நல்ல பலனையுண்டுபண்ணும் . கைகால் அசதி நீங்கும். இது எத்தனை தடவை வேண்டுமானாலும் அவ்வப்போது செய்து கொடுக்கலாம்.
xxxx
சக்கரை வேம்பு இலை
காயசித்தியாகும் கட்டிய சிலேஷ்மமறும்
தூயவிந்துநாதமிவை சுத்தியாம் — தூய்வதற்கு
எத்திக்குங் கிட்டும் இலையருந்தில் வாயெல்லாம்
தித்திக்கும் வேம்பதையே தேடு
பொருள்
சக்கரை வேம்பு — இஃ து தூயவர்களுக்கு எ த்திக்கிலும் கிடைக்கும் .இந்த சக்கரை வேம்புயிலையை விடாமல் மண்டலக் கணக்காய்த் தின்றுவந்தால் காயசித்தியாகும்; இரத்தம் இருகும் . சுக்கில சுரோணிதங்கள் சித்தியாகும். இதைத் தின்றால் வாய் தித்திக்கும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 2
ச.நாகராஜன்
மேலே கண்ட கடிதத்தில் உள்ள வாசகங்கள் பூரி ஜகந்நாத்திலிருந்து கலிலியில் உள்ள தனது அம்மாவிற்கு ஏசு எழுதியவை. இரு பக்கங்கள் கொண்ட இந்தக் கடிதம் நூலில் பக்கம் 184-185இல் அப்படியே தரப்பட்டுள்ளது.
இன்னொரு கடிதத்தில், “ஜோஜப் தனது புத்த போதனைகள் மற்றும் ஹிந்து கொள்கைகள் பற்றிய கல்வியை இந்தியாவில் முடித்த பின்னர்
அவர் திபெத்தில் உள்ள லாஸாவிற்குச் சென்றார் என்கிறது. அங்கு அவர் பிரசித்தி பெற்ற புத்த துறவியான மெங்கெட்ஸேயை (Mengtse) தரிசித்தார் என்றும் கூறுகிறது.
புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கிறிஸ்துவின் கடிதமும் அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களும் அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் அவை பதிவும் செய்யப்பட்டுள்ளது என்கிறார். அவர் குறிப்பிட்ட ஆவணங்களை சரி பார்க்கும் விதமாக ரோஸிக்ரூசியன் ஆர்டரில் உள்ள பழைய ஆவணங்களுடன் ஒப்பிடுகிறார்.
இந்த ஆவணங்கள் மிகப் பழங்கால தேவாலயங்களில் உள்ளன.
Essene Brotherhood – ன் Essene Records (page 178) 1500 ஆண்டுகள் பழமையான குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய ஆவணங்கள் இவை.
சத்திய பிரமாணம் செய்யப்பட்டு வெளியில் யாருக்கும் சொல்லக் கூடாது என்று ரகசியமாகக் காக்கப்பட்டவை இவை.
இதே போலவே UNKNOWN LIFE OF JESUS CHRIST BY Prof. G.L. Christie of Paris University and V.R.Gandhi (published by Indo American Book Co, Chicago, U.S) கீழ்க்கண்ட விஷயங்களைக் குறிப்பிடுகிறது:
Notovitech நோடோவிட்ச் என்ற ஒரு ரஷியர் 1880-ல் லடாக்கிற்கும் திபெத்திற்கும் சென்றார். அங்குள்ள லாமாக்கள் மத்தியில் ஜீஸஸ் என்ற பெயர் கூறப்படுவதைக் கண்டு அவர் வியந்தார்.
விசாரித்துப் பார்த்ததில் ஏசு ஆன்மீகக் கல்வியை அங்கு கற்றது பற்றிய விவர்ங்கள் அடங்கிய பதிவுகளை அங்குள்ளவர்கள் அவருக்குக் காண்பித்தனர். இருபதாம் வயதில் அவர் அங்கு இருந்ததையும் பின்னர் இந்தியாவில் 5 அல்ல்து 6 வருடங்கள் இருந்ததையும் அவை சுட்டிக் காட்டின.\
சில பக்கங்களின் போட்டோகாப்பிகளை எடுத்த அவர் தன்னுடன் அதைக் கொண்டு சென்றார். ஹிமிஸ் வம்சத்தைச் சேர்ந்த அந்த ஆவணங்களை தனது புத்தகத்தில் தந்துள்ளார்.
ஹிந்து கொள்கைகளில் அறிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு ஏசு தனது 13-ம் வயதில் இந்தியாவை நோக்கி வந்தார். தத்துவம், ஆன்மீகம், சாஸ்திரங்கள் பற்றி, ஹிந்து மதம் அந்தக் காலத்திலேயே மிக பிரபலமாக இருந்தது. திருமணத்தைத் தவிர்த்து (பக் 64) சிந்து வழியே செல்லும் ஒரு கூட்டத்துடன் சேர்ந்து அவர் பயணப்பட்டார்.
மிகுந்த புத்திகூர்மை உடைய ஏசு பாலி மொழியைக் கற்றார். (பக் 70) அவர் இமயமலைப் பகுதிக்குச் சென்றார்.
நூலில் 58 முதல் 98 பக்கங்கள் முடிய அவர் இந்தியாவில் இருந்தது பற்றிய ஏராளமான விவரங்கள் தரப்படுகின்றன.
பூரி ஜகந்நாத்தில் உள்ள மடாலயத்தில் அவர் ஐந்து வருடங்கள் புத்தரின் போதனைகளை நன்கு கற்றார்.
இதில் பல புத்தகங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
ஏசு ராஜ்கீரிலும் வாரணாசியிலும் கூட கல்வி கற்றார்.
அடுத்து இன்னும் ஒரு முக்கியமான புத்தகத்தைப் பற்றிப் பார்ப்போம்
பண்டிகைகள் – 1 மே தினம்; 4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம்; 10- அட்சய திருதியை; 12 ஆதி சங்கரர் ஜெயந்தி; 22 வைகாசி விசாகம், நரசிம்மர் ஜெயந்தி; 23 புத்த பூர்ணிமா,28 அக்னி நட்சத்திரம் முடிவு
அமாவாசை- 7; பெளர்ணமி – 23;
ஏகாதசி உண்ணா விரத நாட்கள் – 4, 19
முகூர்த்த நாட்கள் — 3, 5, 6, 13, 19, 26
xxx
மே 1 புதன் கிழமை
வேலைக்காரர்கள் மூன்று விதம்; உத்தமம், மத்யமம், அதமம்; அவர்களுக்கு தரத்திற்கு ஏற்ப வேலை கொடுக்க வேண்டும் 1.112.1. கருட புராணம்
XXXX
மே 2 வியாழக் கிழமை
தங்கத்தின் தரத்தை உரை கல்லில் உரசியும், வெட்டியும், தகடாக அடித்தும் , உருக்கியும் 4 விதங்களில் பரிசோதிக்கிறோம். வேலைக்கார்களையும் தோற்றம், நடத்தை, குலம் , செய்யும் வேலைகளைக்கொண்டு பரிசோதிக்க வேண்டும் 1.112.3.
XXXX
மே 3 வெள்ளிக் கிழமை
1.112.4. கஜானாவுக்கு அதிகாரியாக நியமிக்க வேண்டியவருக்கு நல்லொழுக்கம், நேர்மை, நல்ல குணங்கள், அழகு, , இனிமையாக பழகும் சுபாவம் இருக்க வேண்டும் .
XXXX
மே 4 சனிக் கிழமை
1.112.5. நகைகளின் மதிப்பு ஜொலிப்பு முதலியவற்றை அறிந்தவரை நகைகளை மதிப்பிட அதிகாரியாக நியமிக்கிறோம்; அது போல வீரர்களின் பலம், பலவீனத்தை அறிந்தவரைத்தான் தளபதியாக நியமிக்க வேண்டும்.
XXXX
மே 5 ஞாயிற்றுக் கிழமை
1.112.6. கண்காணிக்கும் அதிகாரிக்கு பிறரின் எண்ணத்தை அறியும் சக்தி இருக்க வேண்டும்; ஒருவரின் நடை உடை பாவனைகளைக் கவனித்து உரிய நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
XXXX
மே 6 திங்கட் கிழமை
1.112.8. அரசனின் தூதர் அஞ்சாமல் பேசுபவராகவும் புத்தி சாலியாகவும், குறிப்பறிந்து ஒழுகுபவராகவும் கடுகடுப்பானவராகவும் இருத்தல் அவசியம்.
xxxx
மே 7 செவ்வாய்க் கிழமை
1.112.14. கெட்டவனின் வாயும் பாம்பின் வாயும் ஒன்றுதான். இருவருக்கும் இரட்டை நாக்குகள். பயங்கர வலியைஉண்டாக்கும் .
XXXX
மே 8 புதன் கிழமை
1.112.15. அறிவாளியாக இருந்தாலும் கெட்டவனை அணுகக் கூடாது; பாம்பின் தலையில் ரத்தினம் இருந்தாலும் யாரும் அணுகுவதில்லையே
XXXX
மே 9 வியாழக் கிழமை
1.113.7. பாம்புப் புற்று, தேன் , நிலவு , பிச்சை இடுதல் இவைகள் வளரந்து கொண்டே வரும்
XXXX
மே 10 வெள்ளிக் கிழமை
1.113.8. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் எடுத்தாலும் கண் மை குறையும்; காலமும் அப்படித்தான் குறைந்து கொண்டேவருகிறது.;ஆகையால் நேரத்தை வீணடிக்காமல் தர்மம் செய்ய வேண்டும்
XXXX
மே 11 சனிக் கிழமை
1.113.9. காம எண்ணமுள்ள மனிதன் காட்டுக்குள் சென்று தவம் செய்தாலும் 100 இடையூறுகள் வரும். ஐம்புலன்களை அட்டக்கத் தெரிந்தால் வீடே தபோவனம் ஆகி விடும்
XXXX
மே 12 ஞாயிற்றுக் கிழமை
1.113.10. உண்மை என்பது குணத்தைப் பாதுகாக்கும் ; அறிவு என்பது படிக்கப் படிக்கப் பெருகும்; குடம் என்பது தேய்க்ககத் தேய்க்க மெருகு ஏறும். குடும்பம் என்பது நன்னடத்தையால் பெருமை பெறும்
XXXX
மே 13 திங்கட் கிழமை
1.113.11.சொந்தக்காரர்களிடம் போய் பணம் கொடுங்கள் என்று கெஞ்சசுவதைவிட, விந்திய மலையில் வசிக்கலாம் ; உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்கலாம்; பாம்புகளிடையே வசிக்கலாம் ; நீர்ச் சூழலில் குதிக்கலாம் .
xxxxx
மே 14 செவ்வாய்க் கிழமை
1.112.13. கணக்குப்பிள்ளையோ எழுத்தரோ, தலைமை அதிகாரியோ யாரானாலும் சோம்பேறியாக இருந்தால் அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் .
xxxx
மே 15 புதன் கிழமை
1.113.32. பாம்பை விரட்டினால் கிணற்றுக்குள் போய்விடும்; யானையை மரத்தில் கட்டிவிடலாம் ; எலியை விரட்டினால் பொந்துக்குள் போய்விடும்; ஆனால் கர்ம வினை இதைவிட வேகமானது; எங்கும் தப்பித்து ஒளிய முடியாது
XXXX
மே 16 வியாழக் கிழமை
1.113.39. எப்போதும் கெடுதி செய்பவன் கெட்ட எண்ணங்களால் மரத்துப் போய்விடுகிறான். 100 குடம் ஜலத்தால்கூட அவனை சுத்தம் செய்ய முடியாது .
XXXX
மே 17 வெள்ளிக் கிழமை
1.113.34. நியாயமாக சம்பாதித்த பணம் நிலைத்து நிற்கும்; குணத்தால் மேலும் வளரும்; ஆகையால் முதலில் குணத்தை நாடுங்கள் ; உலகப் புகழ் பெறலாம் .
XXXX
மே 18 சனிக் கிழமை
1.113.17. தாய் என்பவள் லட்சுமி; தந்தை என்பவர் விஷ்ணு; அப்படியும் மகன் கெட்டவனாக இருந்தால் யாரைத் தண்டிக்க முடியும்?
XXXX
மே 19 ஞாயிற்றுக் கிழமை
1.114.19. பொய் சொல்லி நண்பனாக்கிக் கொள்வோரும் பாவங்களைச் செய்து நல்லவன் போல காட்டுபவனும் மற்றவர்களை கண்ணீர் சிந்தவைத்து சம்பாதிப்பவனும் ; கொடுமை செய்து பெண்களை திருமணம் செய்வோரும் புத்திகெட்டவர்கள் .
xxxx
மே 20 திங்கட் கிழமை
1-113-41. சாது என்பவர் யார் ? கோபத்தில் கொடிய சொற்களை உதிர்க்கமாட்டார்; பாராட்டும்போது கர்வம் அடையமாட்டார்; இகழும்போது துன்பம் அடைய மாட்டார்.
xxxx
மே 21 செவ்வாய்க் கிழமை
1.113.20. ஒரு மனிதன், அவன் செய்த செயலிலிருந்து தப்பிக்கவே முடியாது; வானத்தில் தூக்கி எறியமுடியாது; கடலில் மூழ்கடிக்க முடியாது; அவனுடைய அம்மாவே பிடித்து தன்னிடம் வைத்து பாதுகாத்தாலும் விளைவுகளிலிருந்து தப்பிக்கவே முடியாது.
XXXX
மே 22 புதன் கிழமை
1.114.18. சிறுவர்களுக்கு இனிப்பு கொடுப்பவர்கள், நல்லோரிடம் பணிவானவர்கள், பெண்களுக்கு செல்வம் தருவோர், இறைவனை தவத்தால் போற்றுவோர் , மக்களுக்காக உழைப்போர் — ஆகியோரே அறிவாளிகள்.
XXXX
மே 23 வியாழக் கிழமை
1.114.16. மதில் சுவருள்ள கோட்டையில் பெண்களை அடைத்து வைக்கலாம்.ஆயினும் நீண்ட கூந்தல் இல்லாதவரை அவர்களை யார் கவனிக்கப் போகிறார்கள்; நீண்ட கூந்தலை வைத்தே தப்பித்துவிடுவார்கள் .
XXXX
மே 24 வெள்ளிக் கிழமை
1.114.14. பிராமணன் இலக்கண வித்தகனாக இருப்பதில் அதிசயமில்லை; நல்ல நிர்வாகம் செய்யும் அரசன், குணவானாக இருப்பதில் அதிசயமில்லை; ; அழகான பெண், கற்பிலிருந்து விலகுவதில் அதிசயமில்லை; ஏழைகள் பாவங்களை செய்வதிலும் அதிசயமில்லை;.
XXXX
மே 25 சனிக் கிழமை
1.113.14. பீமன், அர்ஜுனன் முதலியோர் இளவரசர்கள்தான்; சூரியன், சந்திரன் போல பிரகாசமானவர்கள்; கிருஷ்ணனால் பாதுகாக்கப்பட்டவர்கள் ஆயினும் அவர்களை கிரகங்கள் ஆட்டிப்படைத்தன.
XXXX
மே 26 ஞாயிற்றுக் கிழமை
1.114.13 தீ, தண்ணீர், பெண்கள், அரச குடும்பம் ஆகியவற்றை எல்லோரும் உதவிக்கு அணுகுவார்கள்; ஆயினும் அவர்கள் திடீரென்று உயிரைப் பறித்து விடுவார்கள்.
XXXX
மே 27 திங்கட் கிழமை
1.113.19. தீதும் நன்றும் பிறர் தர வாரா; நாமே நமக்கு வருவித்துக் கொள்வதுதான்; யாரிடம் பிறக்கப்போகிறோம் என்பதை தேர்ந்தெடுப்பதும் நாமே (கர்ம வினை).
xxxx
மே 28 செவ்வாய்க் கிழமை
1.113.21. பலசாலி ராவணனும் காலத்தின் கோலத்தால் அழிந்தான்;திரிகூட மலையி ல் கோட்டை; கடலே அவனுக்கு அகழி.சிப்பாய்களோ ராக்ஷஸர்கள்; அவன் பின்பற்றிய சாஸ்திரமோ உசனஸ்/ சுக்ரன் கவி கொடுத்தது. அப்படியும் காலதேவன் அவனை முடித்துவிட்டான்.
xxxx
மே 29 புதன் கிழமை
1.114.10. ஆண்கள் காணப்படாதவரைதான் பெண்கள் கற்புக்கரசிகள் ;ஒரு மனிதனுடன் வசிக்கும்போது வேறு மனிதனை பெண்கள் அன்பாகப் புகழ்வார்கள்
XXXX
மே 30 வியாழக் கிழமை
1.114.22. நம்பத்தகாதவர்களிடம் நம்பிக்கை வைக்காதே; நண்பர்களிடம் கூட ரகசியங்களை சொல்லாதே ; அவனுக்கு கோபம் வந்தால் ரகசியங்களை அம்பலப்படுத்திவிடுவான்.
xxxx
மே 31 வெள்ளிக் கிழமை
1.114.21. தேவையான பொருள்கள்/ சூழ்நிலை இருந்ததால் மட்டும் ஒருவன் சந்நியாசி ஆகிவிடமாட்டான். மதுபானம் அருந்தும் பெண் கற்புக்கரசியாக இருக்க முடியுமா ?
–subham–
Tags- மே 2024 காலண்டர் , மேலும் 31 , கருட புராண, பொன்மொழிகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 1
ச.நாகராஜன்
ஏசு கிறிஸ்து இந்தியாவில் இருந்தாரா என்ற சர்ச்சைக்குரிய விஷயம் பற்றி பல்லாண்டுகளாக விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இது பற்றிப் பலரும் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்துள்ளனர்; நடத்தில் வருகின்றனர்.
ஜி.எம்.ஜகதியானி (G.M. Jagatiani) என்பவர் 1983-ம் ஆண்டு ஒரு சிறிய புத்தகத்தை பிரசுரித்தார். அதில் அவர் கீழ்க்கண்ட விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
Jesus Christ’s Life in India
By
R.R.Sakesana M.A., LLb, DL, SC
டாக்டர் ராதாகிருஷ்ணன் தான் எழுதியEasterm Religions And Western Thought என்ற நூலில் 165-ம் பக்கத்தில், “புதிய ஏற்பாடு ஏசுவின் வரலாற்றை 13-ம் வயது வரை தருகிறது. ஜான் தி பேப்டிஸ்ட் – ஐ உபதேசிக்கும் வரை அடுத்த 17 ஆண்டுகள் அவர் எங்கிருந்தார் என்பதைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. பல மரபு வழிச் செய்திகள் அவர் இந்த இடைப்பட்ட காலத்தில் கிழக்கே விஜயம் செய்தார் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் இவற்றிற்கு ஆதாரம் இல்லை.” என்று எழுதியுள்ளார்.
இந்த எழுத்தாளர் ராதாகிருஷ்ணன் பார்வைக்கு கிறிஸ்துவின் பயணங்கள் பற்றியும் அவர் இந்தியாவில் கல்வி கற்றதைப் பற்றியும் பல புத்தகங்கள் வெளி வந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார்.
தனது 25-2-1974 தேதியிட்ட கடிதத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவருக்கு இது பற்றிய ஆய்வுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பல புத்தகங்களில் குறிப்பிடத் தகுந்த ஒரு புத்தகம் :
The Mystical Life of Jesus
By
Spencer Lewis Ph.D.
Published by
The Supreme Grand Lodge of Amore,
San Jose,
California,
USA
அதில் சில பகுதிகள்:
சிறுவனாக இருந்த ஏசு கூட ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் பலருடன் கூட்டமாக ஜகந்நாத்திற்கு மிகக் குறுகிய வழியைத் தேர்ந்தெடுத்துச் செல்லலானார். அது இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்தது. அதன் இன்றைய பெயர் பூரி. பல நூற்றாண்டுகளாக அது புத்த மதத்தின் ஒரு மையமாகத் திகழ்ந்தது.
இந்தப் பயணத்திற்கான காலம் ஒரு வருடம்.
ஏசு பூரியில் ஒரு வருடம் கல்வி கற்கலானார். லாமாக்களின் உபதேசங்களில் அவர் நல்ல தேர்ச்சி பெற்றார். அவர்களை ஜெருசலத்திற்கு வருமாறும் அழைத்தார். (பக்கம் 181)
ஏசு கங்கை நதிக் கரையில் உள்ள வாரணாசியில் பல மாதங்கள் தங்கி இருந்தார். ஹிந்து மகானும் பெரிய சிகிச்சையாளருமான உத்ரகர் (Udrka) என்பவரிடம் ஹிந்து மருத்துவ சிகிச்சை முறைகளைக் கற்றார். பின்னர் ஏசு மீண்டும் பூரிக்கு வந்தார், அங்கு மதம் மற்றும் தத்துவம் பற்றி இரு வருடங்களுக்கும் மேலாகப் பயின்றார். அங்கு அவர் ஒரு ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.
ஏசுவுக்கு ஒரு துயரமான செய்தி வந்தது. அவரது தந்தையார் கலீலியில் (Galilee) இறந்து விட்டதாகவும் அவரது தாயார் மிகவும் துயருற்று வருந்துவதாகவும் அவரை யாராலும் தேற்ற முடியவில்லை என்றும் வந்த செய்தியால் ஏசு துயரமுற்றார்.
இந்த காலகட்டத்தில் தான் இளம் ஜோசப் முதல் முறையாக தெளிவான வார்த்தைகளால் சொன்னவை ஆவணப் படுத்தப்பட்டது.
அது இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அவர் ESSENE தூதுவர்களுக்கு ஆறுதல் செய்தியாக அனுப்பிய கடிதம் இது:-
“அன்புள்ள அம்மா, வருத்தப்பட வேண்டாம். தந்தையும் நன்றாகவே இருப்பார். நீங்களும் நன்றாக இருப்பீர்கள். நான் வரும் வரை பொறுத்திருங்கள். தங்கத்தினாலும் ரத்தினங்களாலும் செய்யப்பட்டவற்றை நீங்கள் பார்த்திருப்பதை விட நான் கொண்டு வரும் சிறப்பான பரிசுகளைப் பார்க்கப்போகிறீர்கள். எனது சகோதரர்கள் உங்களை நன்கு கவனிப்பார்கள் என்றும் உங்கள் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்வார்கள் என்றும் நம்புகிறேன். உள்ளத்தாலும் உயிராலும் உங்களுடன் எப்போதும் இருக்கும் உங்கள் மகன் ஜோசப்