Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிருகதீஸ்வர மாஹாத்மியம் நூல் தரும் 16 சோழ மன்னர்கள் பற்றிய விவரமும் ஐம்பதினாயிரத்து நூறு க்ஷேத்ர விவரங்களும்!
ச.நாகராஜன்
பிருகதீஸ்வர மாஹாத்மியம் ஒரு அரிய நூல். தஞ்சாவூர் மஹாராஜா சரபோஜியின் சரஸ்வதி மஹால்- இன் அரிய வெளியீடாக இது 1985ஆம் ஆண்டு வெளியானது. (நூல் வேண்டுவோர் சரஸ்வதி மஹால், தஞ்சாவூரைத் தொடர்பு கொள்ளலாம்). அரிய இந்த நூலைத் தயாரிக்க ஒரே ஒரு சுவடிக் கட்டு மட்டுமே இருந்தது. அதை வைத்து இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
பிருகதீஸ்வரரின் மாஹாத்மியம் பற்றி அரிய பல தகவல்களை இந்த நூல் தருகிறது. மொத்த அத்தியாயங்கள் 30.
நூலின் இறுதியில், இருபத்தொன்பதாவது அத்தியாயத்தில் சூத முனிவர் 16 சோழ மன்னர்களைப் பற்றிய தகவல்களைக் கூறுகிறார். கடைசி, 30ஆம்- அத்தியாயத்தில் ஐம்பதினாயிரம் க்ஷேத்திரங்களைப் பற்றிய ஒரு அரிய குறிப்பு கிடைக்கிறது.
16 சோழ மன்னர்களைப் பற்றியும் ஐம்பதினாயிரம் க்ஷேத்ரம் பற்றிய குறிப்பையும் மட்டும் இந்தக் கட்டுரை வாயிலாக அனைவருடனும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
16 சோழ மன்னர்களைப் பற்றிய விவரங்கள் :
சூத முனிவர் கூறுகிறார்:
குலோத்துங்கனுக்கு இறைவன் சோழ மன்னன் என்ற பட்டம் கட்டி அவனுக்கு செல்வம் நல்கினான். இவன் மைந்தன் தேவ சோழன்.
தேவ சோழன் பல சிவாலயங்களைக் கட்டினான். இதனால் சிவப்பேற்றையடைந்தான். இவன் மைந்தன் சசிசேகர சோழன்.
சசிசேகர சோழன் : இவன் காவிரியின் இரு மருங்கிலும் கரையை திடமாக எழுப்பினான். மேலும் காவிரியின் குறுக்கே அணை எழுப்பினான். இவன் மகன் சிவலிங்க சோழன்.
சிவலிங்க சோழன் : பல சிவாலயங்களை எழுப்பினான். நீதி வழுவாது பசுங்கன்றினுக்கு தனது மகனைத் தேர்க்காலிட்டு நீதி காத்தவன். இவன் மைந்தன் வீர சோழன்.
வீர சோழன் : காவிரிக்கரையில் பல ஆலயங்களைக் கட்டியவன். இவன் மகன் கரிகால சோழன்.
கரிகால சோழன் : பெருங்கோயிலைக் கட்டியவன். இவன் மகன் பீம சோழன்.
பீம சோழன் : இவன் தஞ்சையில் சங்கரநாராயணர் கோவிலையும் மற்றும் பல ஆலயங்களையும் எழுப்பியவன். இவன் மகன் ராஜேந்திரன்.
ராஜேந்திர சோழன் : இவன் புயவலிமையால் பாண்டியர், சேரர்களை வென்றவன். இவன் மகன் வீரமார்த்தாண்டன்.
வீரமார்த்தாண்ட சோழன் : இவன் பல சிவாலயங்களையும், வைஷ்ணவ ஆலயங்களையும் கட்டுவித்தான். கொங்கணேசர் ஆலயத்தைக் கட்டினான். இவனுக்குப் புகழ்ச்சோழன் பிறந்தான்.
புகழ்ச்சோழன் : இவன் முருக பக்தன். (மேல வீதியில் உள்ள) முருகன் ஆலயத்தைக் கட்டினான். மற்றும் எட்டு சக்திகளின் ஆலயங்களையும் கட்டினான். இவன் மகன் ஜய சோழன்.
ஜய சோழன் : இவன் தனது முன்னோரைப் போல பல ஆலயங்களைக் கட்டினான். இவன் மகன் கனக சோழன்.
கனக சோழன் : இவனது ஆட்சிக் காலத்தில் திருவலஞ்சுழியில் காவிரி நீர் பாதாளத்தில் ஓடி மறைந்தது. இதனால் மக்கள் வருந்தினர். அதற்குரிய பரிகாரங்களைச் செய்தான். திருவலஞ்சுழி விநாயகர் ஆலயம் கட்டுவித்தான். இவன் மகன் சுந்தர சோழன்.
சுந்தர சோழன் : மறையோனைக் கொன்றதால் ஏற்பட்ட “பிர்மஹத்தி” தோஷத்தை திருவிடைமருதூர் என்னும் பதியில் போக்கிக் கொண்டான். இடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலயம், திருபுவனம் பயஹரேசர் ஆலயம் முதலிய பல ஆலயங்களை எடுத்தான். இவன் மகன் கால காலன்.
கால கால சோழன் : திருப்பனந்தாளில் குனிந்திருந்த லிங்கத்தை நிமிர்த்தியவன். பல ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தவன். இவன் மகன் கல்யாண சோழன்.
கல்யாண சோழன் : சிதம்பரத்திலுள்ள கோபுரத்தையும், ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டியவன். இவன் மகன் பத்ர சோழன்.
பத்ர சோழன் : இவன் தனது முன்னோர்களைப் போலவே பல ஆலயங்களைக் கட்டினான்.
இப்படியாக பதினாறு சோழ மன்னர்கள் சிவாலயத் திருப்பணியைச் செய்தார்கள். இதனால் இவர்கள் அனைவரும் சிவ கணங்களாக என்றும் திகழ்கின்றனர். அந்த சிவ கணங்களின் சரித்திரமே மேலே கூறியவை. இவர்களின் சரித்திரத்தைக் கேட்டவர்கள் இகத்தில் பல சுகங்களையும் பரத்தில் சிவப்பேற்றையும் அடைவார்கள்.
அடுத்து முப்பதாவது அத்தியாயம் க்ஷேத்திரங்களைப் பற்றி விவரிக்கிறது.
அந்த அத்தியாயம் இதோ:-
சூத முனிவர், ஏனைய முனிவர்களுக்கு காவிரி தென்கரை ஸ்தலங்களையும், சிவ க்ஷேத்திரங்களைப் பற்றியும், புகழ் வாய்ந்த தீர்த்தங்களைப் பற்றியும், முனிவர்களால் பிரதிஷ்டை செய்த ஸ்தலங்களைப் பற்றியும், சுயம்பு ஸ்தலங்களைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறார்.
ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம் மேற்படி ஸ்தலம், தீர்த்தம், யாவை என்று கேட்க, சிவபெருமான் காவிரிக்கும் சேதுக்கரைக்கும் இடையில் உள்ள ஸ்தலங்களைப் பற்றிக் கூறினார் :
சிவ க்ஷேத்ரம் – 23,000
விஷ்ணு க்ஷேத்ரம் – 1,000
முருகன் க்ஷேத்ரம் – 6,000
விநாயகர் க்ஷேத்ரம் – 5,000
காளி க்ஷேத்ரம் – 1,000
நடராஜர் க்ஷேத்ரம் – 100
துர்கை க்ஷேத்ரம் – 3,000
சாஸ்தா க்ஷேத்ரம் – 11,000
ஆயின் இவை அனைத்திலும் நான் வாஸம் செய்கிறேன் என்றும், முக்தி க்ஷேத்திரங்களைப் பற்றியும், தீர்த்தங்களைப் பற்றியும் சிவ பெருமான் பார்வதிக்கு விரிவாகக் கூறுகிறார்.
ஆக இந்தப் பட்டியலில் ஐம்பதினாயிரத்து நூறு க்ஷேத்ரங்களைப் பற்றி அறிகிறோம்.
இந்த நூலைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இன்னொரு கட்டுரை வாயிலாகக் காண்போம்.
***
Index
பிருகதீஸ்வர மாஹாத்மியம்
சரஸ்வதி மஹால் வெளியீடு, 1985
முப்பது அத்தியாயங்கள்
16 சோழ மன்னர் பற்றிய விவரங்கள், அத்தியாயம் 29
ஐம்பதினாயிரத்து நூறு க்ஷேத்ரங்கள் பற்றி சிவன் பார்வதிக்குக் கூறுவது, அத்தியாயம் 30
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கில நாவல்களைப் படிப்போருக்கு ஜேன் ஆஸ்டின் JANE AUSTEN என்ற நாவல் ஆசிரியை நன்றாகவே தெரியும். மேலும் அண்மைக்காலத்தில் அவருடைய எம்மா EMMA புதினமும், ப்ரைட் அண்டு ப்ரிஜடீஸ் PRIDE AND PREJUDICE புதினமும்டெலிவிஷன் தொடர்களில் சக்கைப் போடு போட்டதால் அம்மணியின் புகழ் மேலும் பரவிவிட்டது.
பெண் எழுத்தாளர்களில் 200 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ் கொடி நாட்டினார் ஜேன் . சாமான்ய மக்களை , நம்பத் தகுந்த வகையில் வருணித்தவர் இவர்.ஜேன் எழுதிய நாவல்களில் அழகிய இளம் கதாநாயகிகளை சந்திக்கலாம். அவர்கள் தங்கள் சுற்றுவட்டாரத்தில் பீடும் பெருமையும் காட்டி அகந்தையுடன் வலம் வருவதையும் காணலாம். வான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து நடை போடுவதை அவருடைய கதாநாயகிகள் சித்தரிக்கின்றனர்.
ஜேன் ஆஸ்டின் ஒரு பாதிரியாரின் மகள் . தெற்கு இங்கிலாந்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவர். பெரும்பாலும் வீட்டிலும் கொஞ்சம் பள்ளிக்கூடங்களிலும் கல்வி கற்றார். அக்காலப் பெண்களிடையே இது நல்ல படிப்பு என்றும் சொல்லலாம்.
அவருடைய குடும்பத்தினர் புஸ்தகப் புழுக்கள். வாசிப்பதே அவர்களின் பொழுதுபோக்கு. சர்ச்சிலும் நாடகங்களை நடித்துக் காட்டினார்கள் .
ஜேன் திருமணம் செய்துகொள்ளவில்லை. பெற்றோருடனே வசித்தாள் . அதிகம் பயணம் செய்ததும் இல்லை. லண்டன் மற்றும் பாத் BATH ஆகிய இரு நகரங்களுக்கே சென்றார் .41 வயதில் இறந்தார்.
நண்பர்களுடனும், உறவினர்களுடனும் கொண்ட தொடர்புகள் மூலம், நிலம் வைத்திருக்கும் பணக்காரர்கள், நாட்டுப்புற மதப் பிரச்சாரகர்கள், மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பற்றி அறிந்ததை புதினங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்.
14 வயதிலேயே லவ் அண்ட் ப்ரண்ட்ஷிப் LOVE AND FRIENDSHIP என்ற நாவலை எழுதினார். சில நூல்கள் வெளியாவதற்கு முன்னரே எதையும் எதிர்பார்க்காமல் நாவல்களை எழுதி முடித்தார். 35 வயது ஆனபோதுதான் சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி SENSE AND SENSIBILITY நாவல் அச்சாகியது. தன்னுடைய உண்மைப் பெயரை அப்போது வெளியிடாமல் ரஹசியம் காத்தார். ஏனெனில் அக்காலத்தில் எழுத்து த் தொழில் ஆண்களின் உடைமையாக இருந்தது. ஒரு பெண் எழுதியதாகத் தெரிந்தால் என்ன சொல்வார்களோ ஏது செய்வார்களோ என்ற அச்சம் அவரிடம் குடிகொண்டது.
EMMA எம்மா என்ற நாவலும் ப்ரைட் அண்ட் ப்ரிஜடீஸ் PRIDE AND PREJUDICE என்ற நாவலும் இவருக்கு பெரும்புகழ் சம்பாதித்துத் தந்தன.
ப்ரைட் அண்ட் ப்ரிஜடீஸ் நாவலில் ஒரு யுவதியும் ஒரு இளைஞனும் ஒருவரை ஒருவர் வெறுத்து, பின்னர் காதல் வலையில் விழுகின்றனர். எம்மா என்னும் புதினத்தில் ஒரு கர்வமும் பிடிவாத குணமும் உள்ள இளம்பெண் , இறுதியில் காதல் என்னும் உணர்வினால் கனிவு அடைகிறாள். அவளுடைய கர்வமும் அஹம்காரமும் காதலுக்கு அடிமை ஆகின்றன. எல்லா நாவல்களும் சுபம் ஆகவே முடியும். இறுதியில் கல்யாண மேளம் கொட்டும்.
அவளுடைய நாவல்களை விமர்சிப்பவர்கள் அதிலுள்ள வறட்டு, அறுவை ஜோக்குகளை கவனித்துள்ளனர். ஆனால் உன்னத நடையையும் பாராட்டத் தவறவில்லை. சின்னச் சின்ன தப்பு அபிப்ராயங்கள் எப்படி பூதாகார உருவெடுக்கும் என்பதையும் குடும்பப் பொறுப்புகளுக்கும், மன உணர்வுகளுக்கும் இடையே நடக்கும் மோதல் களையும் அவருடைய நாவல்களில் படித்து ரசிக்கலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருவாசகம் என்னும் தேன்! -2
ஞானமயம் ஆனி மக நாளன்று (13-7-2021) மாணிக்கவாசகரின் குருபூஜை நாளையொட்டி சிவஞான சிந்தனை மணிவாசகர் குருபூஜை தினத்தை உலகளாவிய விதத்தில் சிறப்பாக இணையதள வழியே கொண்டாடியது. இந்த விழாவில் திருவாசகம் என்னும் தேன் பற்றி ஆற்றிய உரை:- Second Part
திருவாசகத்தில் 51 அதிகாரங்களில் 658 பாடல்கள் உள்ளன. திருவாசகத்தால் மகிழ்ந்த சிவபிரான் ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று கூற திருக்கோவையார் 400 பாடல்களாக மலர்ந்தது. ஆக இந்தப் பாடல்களில் 51 அதிகாரத்தில் உள்ள பதிகங்களில் 21798 சொற்களும் திருக்கோவையாரில் 11805 சொற்களும் ஆக மொத்தம் 33603 சொற்கள் நம்மிடம் இன்று உள்ளன. சிவனே தமிழ் என்பதால் அவனே இதை அருளினான். ஆக இந்த 33603 சொற்களில் உள்ள சொல் ஒவ்வொன்றும் உயிர் காக்கும் அமிர்தத் துளியாகும். ஒவ்வொரு சொல்லும் தேனென இனிக்கிறது.
யஜுர் வேதத்தில் நடு நாயகமாக உள்ளது ஸ்ரீ ருத்ரம். இந்த ஸ்ரீ ருத்ரத்தில் நடு நாயகமாக வகிப்பது நமசிவாய என்னும் மந்திரம். இதைத் தொடர்ந்து உச்சரிப்பவர் சிவனாகவே ஆகிறார். ஸ்ரீ ருத்ரம் ஓதுவது என்பது அனைவராலும் முடியாது. ஆனால் திருவாசகத்தை யார் வேண்டுமானாலும் ஓதலாம். நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க, இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று உளமுருகிப் பாடும் போது நெஞ்சில் சிவபிரான் நம்மை விட்டு நீங்காத
நிலை தானே வந்து அடையுமல்லவா!
புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்ன
டிகள் கண்டு இன்று வீடு உற்றேன் என்கிறார் மாணிக்கவாசகர்.
இன்று அறிவியல் ஒத்துக் கொள்ளும் மறுபிறவித் தத்துவம் இந்து மதத்தின் தனிப் பெரும் ரகசியத் தத்துவம் ஆகும். REINCARNATION எனப்படும் மறுபிறவித் தத்துவத்தை ஐயான் ஸ்டீவன்ஸன் நூலில் 20 cases suggestive of Reincarnatin என்பதில் காண்கிறோம். எட்கர் கேஸ் என்ற முற்பிறவி கூறும் திறன் படைத்த அறிஞர், 2000 பேருக்கு அவர்களுடையமுன் பிறப்பு விவரங்களைக் கூறி இருக்கிறார். அதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். அறிவியல் அறிஞர்கள் மறுபிறப்பு உண்டு என்பதை நிரூபித்து விட்டனர். ஆனால் மீண்டும் மீண்டும் பிறக்கிறோமே அந்தப் பிறப்பை அறுக்கும் வழியை மணிவாசகர் ‘மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்’ என்பதால் நமக்குச் சொல்லியருளி நல் வழியைக் காண்பிக்கிறார்.
திருவைந்தெழுத்து – அதாவது நமசிவா
ய – ஓரெழுத்தொரு மொழி ஐந்து சேர்ந்த ஒரு தொடர் மொழி ஆகும்.
இதில் ந என்பது நடப்பு ம என்பது மறைப்பு சி என்பது சிறப்பு வ என்பது வனப்பு. யா என்பது யாப்பு. இதில் யா குறுகி ய என்று ஆனது. வ நீண்டு வா என்று ஆனது.
சிறப்பு வனப்பு ஆகிய இரண்டும் சேர்ந்து சிவ என்று ஆனது.
அருட்பிரகாச வள்ளலார் சிவாய நம என்பதை விளக்கி அருளும் போது சி என்பது பதி என்றும் வா சத்தி என்றும் ய என்பது ஜீவன் என்றும் ந என்பது திரோதை என்றும் ம என்பது மாயை என்றும் குறிப்பிடுகிறார். நமசிவாய என்ற பஞ்சாக்ஷரத்தால் ஏம சித்தியும் தேக சித்தியும் உண்டாகும். ‘சிவாய நம’ எனச் செப்ப, செம்பு பொன்னாயிடும் என்ற திருமூலர் வாக்கையும் ‘சிவாய நம் என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை’ என்ற அவ்வையார் வாக்கையும் அவர் பிரமாணமாகச் சுட்டிக் காட்டுகிறார்.
சிவ நாமத்தின் மகிமையை முற்றிலுமாகச் சொல்லவே முடியாது. நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற சொற்களில் இவ்வளவு அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன.
மனிதனைப் பாதிப்பவை ஐந்து மலங்கள் அதாவது பஞ்ச மலங்கள் ஆகும்.
ஆணவம் என்பது அறிவை மயக்கும். கன்மம் என்பது ஆன்மாவுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கும். மாயை என்பது தநுகரண புவன போகங்களைத் தோற்றுவிக்கும். மாயேயம் என்பது தநுகரண புவன போகங்களாய் வந்து பொருந்தும். திரோதாயி என்பது மலத்தின் வழி நின்று அறிவை மறைக்கும். ஆக இவையே பஞ்ச மலங்களாகும்.
இவையே பிறப்புக்குக் காரணம். இந்த பஞ்ச மலங்களை நீக்க வல்லது பஞ்சாக்ஷரமே. பஞ்ச மலங்களை நீக்க வல்லான் ஒருவனே. சிவனே அவன். ஆகவே,
‘பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெம்மான்’, ‘பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க’, மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி, என்று போற்றி பஞ்ச மலங்களை அறுத்து பிறப்பை அறுக்கும் மன்னவனை, தென்னவனை, தென்னாடு உடைய சிவனைப் போற்றுங்கள் என்கிறார் அவர். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று உருகிப் பாடுகிறார் அவர்..
திருவாசகம் படிப்பது என்பது அமிர்தத் துளிகளை அன்றாடம் பருகுவது போன்ற ஒரு அரும் செயலாகும்.
மணிவாசகருக்கும் இறைவனுக்கும் நடந்த யார் சதுரர் என்ற ஒரு போட்டி பற்றி அவரே விளக்குகிறார். இருவருக்கும் நடந்த போட்டியில் தானே வென்றதாகவும் அவர் உறுதி கூறி அதை நிலைப் படுத்துகிறார்.
மாணிக்கவாசகர் தர்க்கரீதியாக, ஆணித்தரமாக தன் தீர்ப்பை வாசிக்கிறார் இப்படி:
தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னை
‘இது உண்மையா’ என்கிறார் மாணிக்கவாசகர். ‘ஆம் உண்மை தான்; நீ உளம் உருகி என்னைக் கேட்டாய், நான் என்னைத் தந்தேன்’ என்கிறார் சிவபிரான்.
சங்கரா யார் கொலோ சதுரர்
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றது ஒன்று என்பால்
காலமும் கணக்கும் நீத்த காரணன், கற்பனை கடந்த ஜோதி நீ என்னிடம் வந்து விட்டாய்; என்னிடம் இருந்து எதை நீ பெற்றாய்? ஒன்றே ஒன்றைச் சொல் பார்ப்போம்! யார் கொலோ சதுரர்?!
சிவன் புன்னகை மலர்ந்து தலை அசைக்கிறார், உனது நீதி சரிதான் என்று,
தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச் சங்கரா யார் கொலோ சதுரர்
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே
கடைசி வரியில் நான் வெற்றி பெற்றாலும் உனக்கு என்ன கைம்மாறு என்னால் செய்ய முடியும்? ஜீவ சொரூபம் போகச் செய்து சிவ சொரூபமாக என்னை ஆக்கி விட்டாயே இதற்கு என்னால் பிரதியாக என்ன செய்ய முடியும் என்று உள்ளம் உருகி காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கக் கூறுகிறார்.
இதைப் படிக்கும் போது நமக்குப் புல்லரிக்கிறது. கண்ணீர் மல்குகிறது.
இப்படி ஒரு சுவை மிக்க அமிர்தப் பாடலை வேறெங்கும் பார்க்க முடியுமா? மூன்று இடங்களிலே அவர் சதுர என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இந்த இடத்தில் வரும் சதுரர் என்ற சொல்லை அவர் பயன்படுத்திய விதமும் இடமும் சொல்லும் விதமும் ஒப்புமை காண முடியா ஒரு அற்புதக் கவிச் செல்வமாகும்.
திருவண்டப் பகுதியின் முதல் நான்கு வரிகளைப் பார்ப்போம்:
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.
என்ன அற்புதமான ஒரு காட்சியை அழகான தமிழில் தருகிறார் மாணிக்கவாசகப் பெருமான்.
பல கோடி அண்டங்கள்! பால்வீதி மண்டலத்தைப் பற்றிப் பேசும் விஞ்ஞானிகள் அடடா, பல பல கோடி பால் வீதி மண்டலங்கள் உள்ளன. அவைகளைக் கொண்டிருப்பது போல இருப்பது ஒரு பிரபஞ்சம் மட்டும் அல்ல – ஒரு universe அல்ல நாங்கள் கண்டு அறிவதுmultiverse பல் பிரபஞ்சங்கள் என்கின்றனர். இந்த பிரபஞ்சங்களும் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்காக உள்ளன ஒரு மிலிமீட்டர் இடைவெளியில் உள்ளன என்கின்றனர்.
Nature, Scientific American, Live Science ஆகிய அறிவியல் இதழ்களில் இது பற்றிப் படிக்கும் போது வியப்பும் திகைப்பும் பிரமிப்பும் ஏற்படுகிறது. மல்டிவர்ஸ் பற்றி முதலில் கூறிய ஹ்யூ எவரெட் (Hugh Everett) என்ற விஞ்ஞானியை இன்று அனைவரும் வியந்து பாராட்டுகின்றனர்.
இவர்கள் இன்று சொல்வதை அன்றே நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன என்று சுருங்கச் சொல்லி விளக்கி விட்டார் அவர்.இன்று 13-7-2021 LiveScience இதழில் வெளிவந்துள்ள கட்டுரை சுவாரசியமான ஒன்று. மனிதனின் உடம்பில் உள்ள அணுக்களைக் கணக்கிட்ட விஞ்ஞானிகள் அவை மொத்தம் – 7 ஆக்டில்லியன் – 7 octillion, or 7×10^27 (7 followed by 27 zeros), –என்று கணக்கிட்டுள்ளனர். காலக்ஸிகள் மட்டும் நாம் கண்ணால் பார்க்கின்ற பிரபஞ்சத்தில் 10^12 உள்ளனவாம். (10^12 galaxies in the observable universe) சரி, பிரபஞ்சம் அணு மயம் என்றால் எத்தனை அணுக்கள் உள்ளன?
இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய, அணு தரும் தன்மையில் ஐயோன் காண்க, ஐயா போற்றி, அணுவே போற்றி என்று இப்படி எல்லாம் திருவண்டப்பகுதியிலும், போற்றித் திருவகவலிலும் கூறுகிறார் மாணிக்க வாசகர்! அதாவது சூரியக் கதிரில் பல துகள்களைப் பார்த்து நாம் ‘சே, இவை தூசி’ என்பது போல அகிலாண்டங்கள் கோடானு கோடியும் சிவபிரானுக்குத் தூசியாம் என்கிறார் இப்படி.
விஞ்ஞானிகள் இன்று தரும் கட்டுரையில் நாம் காண்கின்ற பிரபஞ்சத்தில் உள்ள அணுக்கள் எத்தனை என்றால் அவற்றின் எண்ணிக்கை இது தான் – ஒன்றுக்குப் பக்கத்தில் 82 சைபர்களைப் போட்டுக் கொள்ளுங்கள் என்று விடையைத் தருகின்றனர். ட்ரில்லியன், ஜில்லியன், ஆக்டில்லியன் என்று சொல்லிக் கொண்டே போக வேண்டியது தான். நாம் பார்க்கின்ற இடத்தில் மட்டுமே இவ்வளவு அணுக்கள் என்றால் கோடானு கோடி பிரபஞ்சங்களில் எத்தனை அணுக்கள்? அறிவியல் அறிஞர்களுக்குத் தலை சுற்றுகிறது. ஆனால் மாணிக்கவாசகருக்கு இறைவன் தரும் காட்சி அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சியாக அமைகிறது.
அளக்க முடியாதது; ஆனால் வளப்பெரும் காட்சி என்கிறார்.
திருவண்டப் பகுதி போல உலகில் இன்னொரு பாவைப் பார்க்க முடியுமா என்ன?
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார். திருவாசகம் நம்மை பக்தி சிகரத்தின் உச்சியில் ஏற்றும். சிவஞான அறிவைப் பெருக்கும். ஆயிரக்கணக்கில் அருமையான ரகசியங்களையும், நாம் உய்த்துணர்வதற்கான வழிகளையும அருளும்.
மாணிக்கவாசகரின் பொன்னடி போற்றுவோம். அவர் பெருமை பேசுவோம். திருவாசகத் தேனை அள்ளி அள்ளிக் குடிப்போம். அதன் பயனையும் பெறுவோமாக.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
90,000 கடிதம், 500 புஸ்தகம் — அவர் பெயர் ஐசக் அஸிமோவ்
விஞ்ஞான கற்பனைக் கதைகளை (Science Fiction) எழுதுவதில் உலகில் கொடிகட்டிப் பறந்தவர் ஐசக் அஸிமோவ் ISAAC ASIMOV . ரஷ்யாவில் பிறந்து சிறு வயது முதல் அமெரிக்காவில் வளர்ந்த விஞ்ஞானி.
புதினங்கள் (Novels) பலவகை- காதல் கதைகள், பயங்கரக் கதைகள், பேய்-பிசாசு கதைகள், கொலை- துப்பறியும் கதைகள், சோக வாழ்வுக் கதைகள் என பலப் பல. சமீப காலத்தில் உருவான ஒரு வகை, அறிவியலைப் பயன்படுத்தி என்ன என்ன அதிசயங்கள் நடக்கலாம் , என்ன என்ன குற்றங்கள் நடக்கலாம் என்ற புதிய வகை ஆகும். பெரும்பாலும் வெளி உலக வாசிகள் (E.T.)வருகை, அங்கே நாம் பயணித்தல் (Inter Galactic Travel) , வெளி உலக வாசிகளுடன் போர் (Space War) என்று பல அதீத கற்பனைக் கதைகள் (Science Fiction) . இவற்றில் பெரும் வெற்றி அடைந்தவர் ஐசக் அஸிமோவ் .
ஐசக் அஸிமோவ் பிறந்த தேதி – ஜனவரி 2, 1920
இறந்த தேதி – ஏப்ரல் 6, 1992
வாழ்ந்த ஆண்டுகள் – 72
எழுதிய மற்றும் ‘எடிட்’ செய்த புஸ்தகங்கள் எண்ணிக்கை – 500
எழுதிய கடிதங்கள் – 90,000
விஞ்ஞான புனைக்கதைகளை (Science Fiction) எழுதுவதில் 50 ஆண்டுக் காலத்துக்கு எழுதுவோர் போட்டி இன்றி புகழ் ஈட்டியவர் . ரஷ்யாவில் பிறந்த அவர், மூன்று வயதில் பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறி எட்டு வயதில் , அமெரிக்கக் குடி மகன் ஆனார்.
சிறுவனாக இருந்த பொழுதே அஸிமோவ் விஞ்ஞான விஷயங்களை ஆர்வத்தோடு பயின்றார். கார்ட்டூன் புஸ்தகங்களை படிப்பதற்கு அவருடைய தந்தை அனுமதி மறுத்தார். ஆனால் ஒரு புஸ்தகத்தில் கதைகளுக்கு முன்னர் விஞ்ஞான (Science Wonder Stories) என்ற சொல் இருந்ததால் அதை தந்தை அனுமதித்தார்.
அந்தப் புஸ்தகம் முழுதும் அறிவியலை அடிப்படையாகக் கொண்ட கதைகளே இருந்தன. ஐசக்கும் அவைகளில் மயங்கியனார் . கிட்டத்தட்ட அத்தகைய புஸ்தகங்களுக்கு அடிமை ஆனார்.
17 வயதில் முதல் அறிவியல் கற்பனைக் கதையை எழுதினார். அதைப் படித்த அவருடைய தந்தை பிரபல சஞ்சிகையொன்றுக்கு (Prestigious Magazine) அனுப்பும்படி சொன்னார். அவரும் அவ்வாறே செய்தார் . அனால் பெருத்த ஏமாற்றம்; அந்தக் கதை வெளியாகவில்லை. ஆயினும் அந்த இதழின் ஆசிரியரான ஜான் கேம்ப் பெல் (John campbell) என்பவரைச் சந்தித்துப் பேசினார். அவர் இவருக்கு நல்ல யோசனைகளை வழங்கி நீண்ட காலத்துக்கு வழிகாட்டியாக இருந்தார். பின்னர் பல கதைகளையும் வெளியிட்டார்.
பள்ளிக்கூடத்தில் அசிமோவுக்குப் பிடித்த பாடம் அறிவியல்தான். 1948ம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் (Ph.D) பட்டம் பெற்றார் 1949 முதல் 30 ஆண்டுகளுக்கு பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயோ கெமிஸ்ட்ரி (Bio Chemistry in Boston University) எனப்படும் உயிர் வேதியல் பாடத்தைக் கற்பித்தார்.
முப்பது வயதிலேயே பெப்பிள் இன் தி ஸ்கை (Pebble in the Sky) என்ற முதல் நாவலை வெளியிட்டார். ரோபோ(I, Robot) என்னும் இயந்திர மனிதன் பற்றிய புனைக் கதைகளை அதே ஆண்டில் வெளியிட்டார். 400 புஸ்தகங்களுக்கு மேல் அவர் வெளியிட்டார்.
ஆயினும் பெரும்பாலானவை பாமர மக்களுக்கு விஞ்ஞான விந்தைகளை விளக்கும் புஸ்த கங்கள் தான்.புதினங்கள் எவ்வளவு புகழ் சேர்த்தனவோ அவ்வளவு புகழை விஞ்ஞானப் புஸ்தகங்களும் சேர்த்தன. அவருக்கு அறிவியலென்பது அத்துப்படி ஆனதால் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் அதன் மூலம்
என்னென்ன அற்புதங்கங்கள் நிகழும் என்று அறிவித்தார். படங்கள் மூலம் காட்டினார். பல்வேறு விருதுகளையும் ஐசக் அசிமோவ் வென்றார். அவரது படைப்புகள் பல டெலிவிஷன் நிகழ்ச்சிகளுக்கும் திரைப்படங்களுள்ளும் அடிகோலின .
அவருடைய முக்கிய புஸ்தகங்கள்:
1950- PEBBLE IN THE SKY
1950 – I.ROBOT
1951 – THE STARS , LIKE DUST
1951- 53 – FOUNDATION (3 VOLUMES)
1954- THE CAVES OF STEEL
1957- THE NAKED SUN
1969- NIGHTFALL AND OTHER SSTORIES
1972- THE GODS THEMSELVES
1976- THE BICENTENNIAL MAN
1986- FOUNDATION AND EARTH
–SUBHAM
Tags- ஐசக் அஸிமோவ் , விஞ்ஞான கற்பனைக் கதை, Science Fiction) Isaac Asimov,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக்வேதத்தில் சூரிய கிரகணம்– மீண்டும் ஆய்வு
உலகிலேயே மிகப் பழைய புஸ்தகமான ரிக் வேதத்தில் சூரிய கிரஹணம் பற்றி அத்ரி முனிவர் பாடியதை பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினேன். இப்போது மேலும் சில விவரங்களைக் காண்போம்.
சூரிய கிரஹணம் பற்றி வரும் குறிப்புகளைக் கொண்டு ரிக் வேதத்தின் காலம் கி.மு.3000, அதாவது சிந்து- சரஸ்வதி நதிக்கரை நாகரீகத்துக்கு முந்தையது என்று உமாபதி சென் நிரூபித்ததை முன்னர் கண்டோம். அதே போல, மஹாபாரதப் போரில் ஜெயத்ரதனுடன் நடந்த சண்டையில் இன்று மாலை சூரியன் மறைவதற்குள் உன் தலை நிலத்தில் சாயும் என்று அர்ஜுனனை சூளுரைக்கவைத்தார் கிருஷ்ணன் ; அன்று சூரிய கிரஹணம் என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும். மாலையில் பூரண சூரிய கிரஹணம் ஏற்படவே ஜயத்ரதன் சண்டை முடிந்துவிட்டது என்று அசட்டையாக இருந்த பொழுது, அர்ஜுனனை ஏவி, ஜயத்ரதன் தலையைத் துண்டித்து சுக்கு நூறாக சிதற வழிவகுத்தார் கிருஷ்ணன்.
மஹாபாரதப்போர் 18 நாட்கள்தான் நடந்தன. அது அமாவாசையன்று துவங்கியது. சூரிய கிரஹணங்கள் அமாவாசையிலும் சந்திர கிரஹணங்கள் பவுர்ணமியில் மட்டுமே நடக்கும் என்பது உலகறிந்த விஞ்ஞான உண்மை. அப்படியிருக்க ஜயத்ரதன் இறந்த அன்று எப்படி மீண்டும் அமாவாசை வரமுடியும்? என்று கேட்டோருக்கும் விளக்கம் உண்டு.
மஹாபாரதப் போர் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவில்லை. இடையிடையே போருக்கு விடுமுறை கொடுக்கப்பட்டது . அதாவது போர்ச் சேதங்களை அகற்றவும், காயமடைந்தோரை குணப்படுத்தவும் இடையிடையே ‘லீவு’ எடுத்துக்கொண்டனர். அந்தக் காலத்தில் தர்ம யுத்தம் நடந்ததால் மாலை சூரிய அ ஸ்தமனத்துக்குப் பின்னர் போர் செய்ய மாட்டார்கள். ஆயுதம் இல்லாதவரைத் தாக்க மாட்டார்கள். புற முதுகு காட்டி ஓடுவோரைக் கொல்ல மாட்டார்கள். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் எவரும் வராத இடங்களில் மட்டுமே போர் நடைபெறும். சமயச் சடங்குகள், பண்டிகைகளை அனுஷ்டிக்க இடையிடையே போர் நிறுத்தப்படும் என்பனவெல்லாம் மஹாபாரதம், ராமாயணம் ஆகியவற்றினை ஊன்றிப் படிப்போருக்குத் தெரியும். ஆக, மகா பாரத யுத்தத்தில் இரண்டு அமாவசைகள் வந்ததும் அதில் ஒரு நாள் பூரண சூரிய கிரஹணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரஹணம் என்பதில் வட்டமான சந்திரனோ சூரியனோ நிழலின் கீழ் வருகையில் யாரோ அதை விழுங்குவது போல இருக்கும்; பாமர மக்களுக்கு நிழல் விஷயங்களை விளக்குவது கடினம் என்பதால் “பாம்பு விழுங்குகிறது” என்று சொன்னார்கள். ஆனால் இந்து மத அறிஞர்களுக்கு கிரஹண சாஸ்திரம் அத்துப்படி என்பதை வேதங்களில் வரும் குறிப்பிலிருந்து அறிய முடியும். பூரண சூரிய கிரஹணம் என்பது ஏழு நிமிடங்களுக்கு மேல் நீடிக்க முடியாது.
ஓரிடத்தில் அத்ரி முனிவர் நாலு மந்திரம் ஓதி முடிப்பதற்குள் சூரியன் மீண்டும் வெளி வந்ததை எப்படி ரிஷி முனிவர் பாடினார் என்ற அற்புதத்தைக் கீழே காணுங்கள்.
ரிக்வேதம் 5-40-5/6/7/89
பாடியவர் ரிஷி பெளமோ அத்ரி
சூரியனே! அசுரனின் புதல்வனான ஸ்வர்பானு , உன்னை இருளால் போர்த்தியபோது , தான் எந்த இடத்தில் நிற்கிறான் என்பதை அறியாமல் , கலங்கி நிற்கும் ஒருவனைப் போல, உலகங்கள் தோன்றின.
இந்திரனே நீ ஸ்வர்பானுவால் சூரியனின் கீழே பரப்பப்பட்டிருந்த மாயைகளை விலக்குங்கால் அத்ரி, இருளால் மறைக்கப்பட்டு தன் செயல்களில் தடைப்பட்டிருந்த சூரியனைத் தனது துரீய பிரம்மத்தால் கண்டான்.
அத்ரியே துரோகி , பசியால் உணவை விரும்பி, பயங்கரமான இருளோடு உனக்குரிய என்னை புசிக்காமல் இருப்பானாகுக. நீ மித்திரனாய் இருக்கிறாய். உன்னுடைய செல்வம் சத்தியம் ஆகும். நீயும் அரசனான வருணானும் சேர்ந்து என்னைக் காப்பாற்றுங்கள் .
பிறகு பிராமணனான அத்ரி , கற்களை சேர்த்து சோமத்தைப் பிழிந்து, தேவர்களை ஏத்தி வணக்கத்தோடு , அவர்களை போற்றி , சூரியனுடைய கண்ணை வானிலே ஸ்தாபித்தான் . அவன் ஸ்வர்பானுவின் மாயைகளை க் கலைத்தான்.
அத்ரி புதல்வர்கள் , அசுரப் புதல்வனான ஸ்வர் பானுவால் ஏவப்பட்ட இருளால் மறைக்கப்பட்ட சூரியனை மீட்டர்கள். அவைகளை விடுவிக்க வேறு எவராலும் இயலவில்லை
1. COME thou to what the stones have pressed, drink Soma, O thou Soma’s Lord,
Indra best Vrtra-slayer Strong One, with the Strong.
2. Strong is the stone, the draught is strong, strong is this Soma that is pressed,
Indra, best Vrtra-slayer, Strong One with the Strong.
3. As strong I call on thee the Strong, O Thunder-armed, with various aids,
Indra, best Vrtra-slayer, Strong One with the Strong.
ரிக் வேதத்தில் மேலும் பல இடங்களில் சூரிய சந்திர கிரஹணம் பற்றிய குறிப்புகள் உள . சந்திரனுக்கு ஒளி கிடையாது, அது சூரிய ஒளியையே பிரதி பிலளிக்கிறது என்பதையும் வேதகால ரிஷிகள் அறிவர். பிற்காலத்தில் காளிதாசன் முதலிய ஸம்ஸ்க்ருதக் கவிஞர்களும் இதைப் பாடியுள்ளனர்
ரிக் வேதம் 1-84-15ம் சூரியகிரஹணத்தையே குறிக்கும் என்பது ஆன்றோர் கருத்து –
சலனமாகும் சந்திர மண்டலத்தில் மறைக்கப்பட்டுள்ள துவஷ்டாவின் — கற்பிப்பவனின் ஒளியை சூரியனுடைய கதிர்கள் என அவர்கள் இப்போது அறிந்தார்கள் –1-84-15
13. With bones of Dadhyac for his arms, Indra, resistless in attack,
Struck nine-and-ninety Vrtras dead.
14. He, searching for the horse’s head, removed among the mountains, found
At Saryanavan what he sought.
15. Then verily they recognized the essential form of Tvastar’s Bull,
Here in the mansion of the Moon.
16. Who yokes to-day unto the pole of Order the strong and passionate steers of checkless spirit,
With shaft-armed mouths, heart-piercing, health-bestowing?
को अद्य युङकते धुरि गा रतस्य शिमीवतो भामिनो दुर्ह्र्णायून | असन्निषून हर्त्स्वसो मयोभून य एषां भर्त्यां रणधत स जीवात || क ईषते तुज्यते को बिभाय को मंसते सन्तमिन्द्रं को अन्ति | कस्तोकाय क इभायोत राये.अधि बरवत तन्वे को जनाय || को अग्निमीट्टे हविषा घर्तेन सरुचा यजाता रतुभिर्ध्रुवेभिः | कस्मै देवा आ वहानाशु होम को मंसते वीतिहोत्रः सुदेवः || तवमङग पर शंसिषो देवः शविष्ठ मर्त्यम | न तवदन्यो मघवन्नस्ति मर्डितेन्द्र बरवीमि ते वचः || मा ते राधांसि मा त ऊतयो वसो.अस्मान कदा चना दभन | विश्वा च न उपमिमीहि मानुष वसूनि चर्षणिभ्य आ ||
16 Apr 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). பாக்யா … ஆனால் முழு சூரிய கிரகணம் என்பதோ அற்புதமான ஒரு விஷயம்” – நீல் டி க்ராஸ் டைஸன் … 1133 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி சூரிய கிரகணம் ஒன்று … புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் …
31 Mar 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … சூரிய கிரகணம் பற்றி அறிவியலும் ஆன்மீகமும் ஒரு சேர ஆர்வம் கொண்டிருப்பது வியப்பான செய்தி. சூரிய கிரகண காலத்தில் பொதுவாக பாரதம் முழுவதும் யாரும் … புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் …
2 May 2015 — சந்திரனின் மீது படும் சூரிய ஒளியே அதன் பிரகாசத்துக்கு … ரிக்வேத கால இந்துக்கள் இந்த நாட்டில் தோன்றிய குதிரைகள் … சூரிய, சந்திர கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வணத்திலும் உள.
8 Dec 2017 — Solar eclipses narrated in the Veda cannot be overlooked. In passage 10-138-4 of the Rig Veda, it is said Indra ‘maseva suryo vasu puryam …
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞானமயம் ஆனி மக நாளன்று (13-7-2021) மாணிக்கவாசகரின் குருபூஜை நாளையொட்டி சிவஞான சிந்தனை மணிவாசகர் குருபூஜை தினத்தை உலகளாவிய விதத்தில் சிறப்பாக இணையதள வழியே கொண்டாடியது. இந்த விழாவில் திருவாசகம் என்னும் தேன் பற்றி ஆற்றிய உரை:-
திருவாசகம் என்னும் தேன்! -1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.நமஸ்காரம்.
SPEAKER BENGALURU S. NAGARAJAN
இன்று மாணிக்கவாசகரின் குரு பூஜை நாள். சிவஞான சிந்தனையை உலகெலாம் உள்ள அனைவரும் பெறவும், தரவும் ஒரு அருமையான வாய்ப்பை இணைய வாயிலாக வழங்கி இருக்கிறார் லண்டன் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி. அவர்களுக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். திருவாசகத்திற்கு விளக்கமோ அர்த்தமோ கூறுவதற்கு எனக்குத் தகுதி இல்லை என்பது நிதர்சனமான உண்மை. ஏனெனில் பண்டு தொட்டு பெரியோர்கள் திருவாசகத்தை விளக்க பெரும் ஆதீனகர்த்தர்களும், சைவப் பெரியோர்களும், குறிப்பாக அதைப் பாடம் கேட்டுப் பொருளுணரும் சைவப் பெரியோர்களும் மட்டுமே தகுதியானவர்கள் என்று சொல்லி வந்திருக்கின்றனர்.
மஹாமஹோபாத்யாய உ.வே.சுவாமிநாதையர் ஒரு சுவாரசியமான சம்பவத்தை தனது நல்லுரைக் கோவை நூலின் நான்காம் பாகத்தில் குறிப்பிடுகிறார். திருச்சியில் இருந்த பட்டாபிராம பிள்ளை என்ற டெபுடி கலெக்டர் தமிழின் பால் மிக்க பற்றுள்ளவர். தக்க பண்டிதர்களை பல நூல்களுக்கும் உரை எழுதச் சொல்லி வேண்டுவது அவர் பழக்கம். இப்படி அவரது அரும் முயற்சியினால் பல உரை நூல்கள் வெளி வந்தன. அப்போது திருவானைக்காவில் பெரும் தமிழறிஞர் திரு தியாகராஜ செட்டியார் வாழ்ந்து வந்தார். தியாகராஜ செட்டியார் மீதுள்ள மதிப்பின் காரணமாகவும் அவரது ஆழ்ந்த தமிழறிவின் மீது கொண்ட வியப்பினாலும் அவரை திருவாசகத்திற்கு உரை எழுதச் சொல்லி பல முறை பட்டாபிராம பிள்ளை வற்புறுத்திய போது அவர் மறுத்தார். மீண்டும் மீண்டும் அவர் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.. ஒரு நாள் காவிரி ஆற்றில் குளித்து விட்டு பாலத்தின் மீது களைப்புடன் அவர் நடந்து வருகையில் எதிரில் வந்த அந்த நண்பர் திருவாசக உரை எழுத வேண்டும் என்பது பற்றி வழக்கம் போலக் குறிப்பிடவே, தியாகராஜர், “அதற்குப் பெரும் தகுதி அல்லவா வேண்டும், வேதம், உபநிடதம், யோக சாஸ்திரம் உள்ளிட்ட அனைத்தும் அல்லவா படித்திருக்க வேண்டும், இன்னும் வற்புறுத்தினால், இதோ இந்த ஆற்றில் குதித்து விடுவேன். பட்டாபிராம பிள்ளை வற்புறுத்தியதால் தியாகராஜ செட்டியார் ஆற்றில் வீழ்ந்து உயிரை விட்டார் என்ற அவப் பெயர் உமக்கு வரும்” என்று சொல்ல நண்பர் பயந்து போய், இனிமேல் இது பற்றி உங்களிடம் கேட்க மாட்டேன் என்றாராம். ஆக பெரும் பண்டிதர்களும் கூட விளக்க முடியா மாணிக்க வாசகரின் திருவாசகம் எப்படிப்பட்ட அரிய இறை நூல் என்பது நமக்குத் தெரிய வருகிறது.
மணிவாசகர் சொல்லச் சொல்ல திருச்சிற்றம்பலமுடையான் தன் கையால் எழுதிய பெரும் வாசகத்தை மனம் உருகிப் படிக்கலாம்; அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவன் அருளைப் பெறலாம்!
ஆனால் திருவாசகத்தின் விளக்கவுரையை மேற்கொள்ளாது அதன் பெருமையை எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசலாம் அல்லவா!
அந்தத் தொண்டர் தம் திருக்கூட்டத்தில், சிவனடியாரின் அடியானாக, திருவாசகத்தின் அருமை பெருமை பற்றிப் பேச யானும் ஒருவன் என்று இங்கே உங்கள் முன் வந்துள்ளேன். இணையம் வழியாக உலகத்தை எட்டிப் பார்த்து அவர் தம் பெருமையைப் பேச, இன்று மணிவாசகப் பெருமானின் குருபூஜை தினத்தை விட வேறு எந்த நாள் தான் சிறப்பாக இருக்க முடியும்.
திருவாசகப் பெருமை
திருவாசகப் பெருமையைப் பற்றி சிவப்பிரகாச சுவாமிகள் அருளியுள்ள அருளுரையைப் படித்தாலேயே நமக்கு அந்தப் பெருமை புரியும்.
விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்
காரணன் உரையெனும் ஆரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்தது என்குவீர் ஆயின்
வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சு நெக்கு உருகி நிற்பவர் காண்கிலேம்
திருவாசகம் இங்கு ஒரு கால் ஓதின்
கருங்கல் மனமும் கரைந்து உகக் கண்கள்
தொடுமணற் கேணியின் சுரந்து நீர் பாய
மெய்ம்மயிர்ப் பொடிப்ப விதிர்விதிர்ப்பு எய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே!
ஆக ‘வேதத்தை ஓதி நெஞ்சுருகி விழி நீர் பெருக்கும் அன்பரைக் காணேன்; ஆனால் திருவாசகம் ஓதி உளம் உருகும் நல்லோரைப் பார்க்கிறேன். ஆகவே திருவாசகம் அன்பர்க்கு எளிது; யார் வேண்டுமானாலும் அதை ஓதலாம்’ என்கிறார் அவர்.
அடுத்து அருட்பிரகாச வள்ளலார் திருவாசகத்தை அனுபவித்து ஓதி அதன் பொருளை உணர்ந்து ஆனந்தம் அடைந்தவர். அவர் கூறுகிறார்:
வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ் சுவை கலந்தென்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
என்கிறார் அவர்.
திருவாசகத்தை ஓதும் முறையை அவர் மிக அருமையாக இப்படி விளக்கியுள்ளார்.
பாடுபவர், தான் கலந்து பாட வேண்டும்; ஊன் கலந்து, உயிர் கலந்து பாட வேண்டும். அப்போது தான் திருவாசகப் பெருமை புரியும்.
பழைய காலம் போல ஓரிடத்திற்குச் சென்று தினமும் பாடம் கேட்டுப் பொருளுணரும் வசதி இன்றைய உலகில் உலகெங்கும் பரவியுள்ள தமிழ் அன்பர்களுக்கு இல்லை; ஆகவே தான் இணைய வழியாகப் பொருளுணர்ந்த பெரியோர் தம் உரை கேட்க விழைகிறோம். காலப் போக்கில் சுவடிகள் படிப்பது மாறி அச்சுப் பதிப்புகள் வரவே கற்றறிந்த பெரியோர் பலர் உரைகளைத் தர ஆரம்பித்தனர்.
திருவாசகத்தை நன்கு உணர்ந்த பெரியோர்கள் நாற்பது பேர் உரைகளை எழுதியுள்ளனர். அவர்களது உரைகள் நமக்குப் பொருள் விளங்க உதவி புரியும்.
1835ஆம் ஆண்டில் செந்தமிழ்ப் புலவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் கற்றறிந்த சில வித்வான்களுடன் மூலத்தைப் பரிசோதித்து முதல் பதிப்பை வெளியிட்டார். பின்னர் பல நல்ல பதிப்புகள் வந்து விட்டதால் திருவாசகம் எங்கும் கிடைக்கும் ஒன்றாக ஆகி இருக்கிறது.
GNANAMAYAM FOUNDER SRI KALYANASUNDARA SIVACHARYA
1897இல் ப.வாசுதேவ முதலியார் பல வித்வான்கள் எழுதிய உரையை வெளியிட்டார். 1933இல் கா.சுப்பிரமணியப் பிள்ளை ஒரு உரையை எழுதினார். 1954இல் சீகாழித் தாண்டவராயர் ஒரு உரையை வெளியிட அதன் அருமையையும் பெருமையையும் உணர்ந்த அன்பர் பலர் அதைப் படித்து திருவாசகத்தை நன்கு அனுபவித்தனர். திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ச.தண்டபாணி தேசிகர் 1964இல் ஒரு அற்புதமான உரையை வெளியிட்டார். அதன் பின்னர் 1968இல் சுவாமி சித்பவானந்தர் ஒரு உரையை வெளியிட்டார். மிக விரிவான இந்த உரை இன்றளவும் அனைத்து அன்பர்களாலும் வாங்கப்பட்டு படிக்கப்பட்டு வருகிறது.
இந்த உரைகளை இன்று படிக்க வேண்டிய அவசியம் ஒன்று உள்ளது. ‘சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து’ என்று மணிவாசகப் பெருந்தகை சொல்வதால் சொல்லிய பாட்டில் உள்ள, அந்தப் பொருளை உணர பெரியோர்களின் உரையை நாட வேண்டி இருக்கிறது. முடிந்த போதெல்லாம் இன்று இப்போது இங்கு கேட்பது போல் அவர் தம் உரைகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.
வடமொழியும் தென்மொழியும் கற்று அதில் வல்லார்கள் வேதக் கருத்தையும் உபநிடதக் கருத்தையும் பிட்டுப் பிட்டு வைக்கும் போது திருவாசகத்தில் இல்லாதது ஒரு வாசகத்திலும் இருக்காது என்ற அனுபவ உண்மையை அவர்களின் விளக்கம் நமக்குத் தருகிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your
40 வயதுக்குள் 50 புஸ்தகம் எழுதிய அமெரிக்க நாவல் ஆசிரியர் ஜாக் லண்டன்
இயற்கையின் கோர தாண்டவத்தையும் எதிர்த்து நின்று மனிதர்களும் மிருகங்களும் எவ்வாறு வெற்றிபெறுகின்றன என்பதை கதைகளில் சித்தரித்தவர் JACK LONDON ஜாக் லண்டன். இவர் வெள்ளைக்காரர்கள்தான் உயர்ந்தவர்கள் என்றும் , கடவுள் இல்லை என்றும் நம்பியவர் . ஆயினும் இவை இரண்டும் இவரது புகழுக்குத் தடைக் கற்களாக நிற்கவில்லை. 40 வயதுதான் வாழ்ந்தார். அதற்குள் 50 புஸ்தகங்களை வெளியிட்டு புகழுடன் மறைந்தார் .
பிறந்த தேதி – ஜனவரி 12, 1876
இறந்த தேதி – நவம்பர் 22, 1916
வாழ்ந்த ஆண்டுகள் – 40
பனி மூடிய அலாஸ்கா ALASKA போன்ற இடங்களிலும் மனிதர்களும் ஓநாய் போன்ற பயங்கர நாய்களும் குன்றாத உற்சாகத்துடன் எப்படி முன்னேறுகின்றன என்று தி கால் ஆப் தி வைல்ட் THE CALL OF THE WILD முதலிய நாவல்களில் காட்டுகிறார்.
எவருக்கு உடலிலும் உள்ளத்திலும் பலம் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே வாழ வேண்டும் FITTEST SHOULD SURVIVE , வெள்ளை நிற தோல் உடையோர் WHITE PEOPLE ARE SUPERIOR மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற கொள்கையுடையவர். அமெரிக்காவில் குடியேறிய சீனர்களை மஞ்சள் ஆபத்து YELLOW PERIL என்று வருணித்தார்.
சான்பிரான்சிஸ்கோ SFC நகரில் பிறந்தார். கலிபோர்னியாவில் ஓக்லாந்தில் OAKLAND வளர்ந்தார்.அவருடைய தாய் முறையான திருமணம் இன்றி இவரை ஈன்றெடுத்தார் ; தந்தை வீட்டைவிட்டு ஓடிப்போனார். உள்ளத்தில் கதைகள் ஊற்றெடுத்தாற் போல வரவே 50 புஸ்தகங்களை எழுதித் தள்ளினார்,
ஓக்லாண்ட்டில் துறைமுக தொழிலாளர் கும்பலில் சேர்ந்து பணிபுரிந்து 17 வயதில் கப்பல் ஏறினார். இந்த கடல் பயண அனுபவம் இரண்டு நாவல்களுக்கு அடித்தளமாக அமைந்தது. வீடற்றோர் போல HOBO பொது இடங்களில் தூங்கும் நாடோடி போலவும் வாழ்ந்தார். இதனால் அடிக்கடி சிறை செல்ல நேரிட்டது. இறந்த சிறைவாசங்கள் , தன் வாழ்க்கையில் முன்னேற உதவுவதாவும் எழுதினார் .
பள்ளிக்கல்வி முடிப்பதற்குள் உணவுப் பொருள்களை டின்களில் அடைக்கும் ஆலைகளிலும் CANNERIES , லாண்டரிகளிலும் LAUNDERIES வேலைசெய்தார். 24 வயதான போது , முதல் கதைத்தொகுப்பை வெளியிட்டார்
1897-98-ம் ஆண்டுகளில் தங்கம் கிடைக்கும் இடங்களை நோக்கி மக்கள் கூட்டம் வெறி பிடித்தார் GOLD RUSH போல ஓடியது. அந்த தங்க வேட்டைக்காக இவரும் கனடாவுக்குச் சென்றார். மக்கள் எளிதில் வசிக்கமுடியாத இடங்களில் போராட்ட வாழ்வு நடத்தியது, பின்னர் இரண்டு புகழ் மிகு படைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது . உடல் வலு உள்ளோரே வாழத் தகுதி உடையோர் மற்றவர்கள் செத்து மடியட்டும் என்ற கொள்கை உடையவர் என்றாலும் ஏழைகள் படும் துன்பத்தினையும் ஒரு (PEOPLE OF THE ABYSS) சில நாவல்களில் வடித்தார். சமூகத்தில் தீண்ட தகாதவர்கள் போல ஒதுக்கப்பட்டவர்களைப் பற்றி இவர் எழுதி வெற்றி பெற்றது பிற்கால எழுத்தாளர்களுக்கு கருப் பொருளாக அமைந்தது. கடலோடியாக இவர் நடத்திய வாழ்வு SEA WOLF ஸீ வுல்ப் என்ற நாவலுக்கு வழிவகுத்தது. எழுத்து மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்த எழுத்தாளர் என்று பெயர் எடுத்த போதிலும் அற்பாயுசில் உயிர் நீத்தார்; ஜான் லண்டன், கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார்.
அவரது படைப்புகள்:
1900 – THE SON OF THE WOLF
1902 – CRUISE OF THE DAZZLER
1903 – CALL OF THE WILD
1903- PEOPLE OF THE ABYSS
1904- SEA WOLF
1906 WHITE FANG
190 – THE ROAD
1908 – IRON HEEL
1909 – MARTI EDEN
1910- BURNING DAY LIGHT
இவரது நாவல்களையும், கதைகளையும் வைத்து பல திரைப்படங்கள் , டெலிவிஷன் தொடர்கள் வந்துள்ளன. கானகத்தின் குரல் என்ற தலைப்பில் ஜாக் லண் டனின் கால் ஆஃப் தி வைல்ட் நாவலும் வெளியிடப்பட்டுள்ளது.
–SUBHAM-
tags -40 வயது, 50 புஸ்தகம், நாவல் ஆசிரியர், ஜாக் லண்டன் ,Jack London,