LONDON CALLING TAMILS 6-6-2021 (Post No.9705)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9705

Date uploaded in London – –8 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

6-6-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer –-

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON ABHU HILL  TEMPLES,8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR & MRS ANUSHA MURALI, MISS SRUTHI RANJANI MURALI-10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY RANI SRINIVASAN

–25 MINUTES

பாரதியும் கண்ணதாசனும்- SECOND PART Talk by  KAVIRI MAINTHAN காவிரி மைந்தன்  – 15 minutes  

APPR.65 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags– broadcast662021

ஸ்பானிய நாவல் ஆசிரியர் மிகேல் டெ செர்வான்டிஸ் (Post.9704)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9704

Date uploaded in London – –8 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

 CERVANTES   1547-1616

மிகேல் டெ செர்வான்டிஸ் MIGUEL DE CERVANTES SAAVEDRA ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர். DON QUIXOTE என்பது இவர் எழுதிய புகழ்பெற்ற கதை.

   செர்வான்டிஸ் (CERVANTES) இன் தந்தை ஊர் ஊராகச் சென்று மருத்துவ வேலை செய்து வந்தார். இதனால் அவர் அரிதாகவே பள்ளிக்கூடம் சென்றார். ஆனால் அவருக்கு படிப்பில் பெரும் ஆர்வம். தனக்குத்தானே ஆசிரியராக இருந்து கற்றார்.

    செர்வான்டிஸ் 22 வயதில் ரோம் நகருக்குச் சென்றார். அங்கு படைவீரராகச் சேர்ந்து துருக்கியர்களை எதிர்த்து போரிட்டார். இந்தப்போரில் இருமுறை உடலில் காயங்கள் ஏற்பட்டன. கிட்டத்தட்ட இடது கையை இழந்தார். ஸ்பெயினுக்குத் திரும்புச் செல்கையில் இவரது கப்பலை மூர் இனத்தவர்கள் கைபற்றினர். 5 ஆண்டுகளுக்கு இவர் கைதியாக இருந்தார். இறுதியில் இவரது குடும்பத்தினர் தேவையான பணத்தை சம்பாதித்து இவரை மீட்டு வந்தனர்.

     ஸ்பெயின் திரும்பியபோது இவருக்கு வயது 30. கையில் ஒரு பைசா காசு இல்லை. எழுத்தின் மூலம் வயிற்றுப் பிழைப்பு நடத்த முடிவு செய்தார். மூன்று நாடகங்கள் எழுதினார். ஆனால் கிடைத்த பணமோ மிகமிகக் குறைவு. பின்னர் திருமணம் செய்து கொண்டார்.

     ஒரு வயிற்றுக்கே சோறில்லாமல் அலைந்த இவர் இப்போது 2 வயிறுகளுக்கு எங்கே போவார்? போதாக்குறைக்கு ஒரு போர்ச்சுகீசியப் பெண்ணையும் காதலித்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கவே அதையும் செர்வான்டிஸ் வளர்த்து வந்தார்.

     வறுமை அவரை வாட்டவே தொழிலை மாற்றினார். இங்கிலாந்தின் மீது படை எடுக்கப் புறப்பட்ட ஸ்பானிய கடற்படைக்கு உணவு மதுபானம் அனுப்புவது இவரது தொழில். இதில் சிறிது பணம் கிடைத்தாலும் இவரது வங்கி திவாலகவே கிடைத்த பணமும் போய்விட்டது.

     தென் அமெரிக்க கண்டத்திற்குப் புறப்பட எண்ணினார். இதற்காக காத்திருந்த காலத்தில் புத்தகம் எழுதினார். வீரம், காதல் ஆகியவற்றை இவர் நையாண்டி செய்து எழுதிய டான் க்விக்ஸாட்  நகைச்சுவை நாவலாகப் புகழ்பெற்றது. இறுதிவரை தென் அமெரிக்கா செல்லும் திட்டம் நிறைவேறவே இல்லை. டான் க்விக்ஸாட் (DON QUIXOTE ) எழுதி முடித்த ஓராண்டில் அவரது கதையும் முடிந்தது.

tags- Cervantes,,செர்வான்டிஸ்

–subham–

கருகிய காலன் ‘கரிகாலன்’ படைத்த உலக சாதனை (Post No.9703)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9703

Date uploaded in London – –  –8 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கருகிய காலன் கரிகாலன் தான்; ஆனால் ஓடி உலக சாதனை படைத்தான் அவன்!

ச.நாகராஜன்

அமெரிக்காவில் கான்ஸாஸ், அட்லாண்டாவில் பிறந்தவன் அந்தச் சிறுவன். அவனுக்கு எட்டு வயது ஆகும் போது ஒரு கோரமான விபத்து அவனுக்கு ஏற்பட்டது. பள்ளிக்கு மற்ற எல்லோரும் வரும் முன்னர் சென்று, பழைய கால  அடுப்பை மூட்டி அறையைச் சற்று கதகதப்பாக வைக்க வேண்டியது அவனது பொறுப்பாக இருந்தது. ஆனால் மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெட்ரோலை விட்டதால் பள்ளி தீப்பிடிக்க அதில் மாட்டிக் கொண்டான் அந்தச் சிறுவன். பற்றி எரியும் பள்ளியைப் பார்த்த அனைவரும் ஓடோடி வந்தனர். அவனைக் காப்பாற்றினர். டாக்டர் அவனது கருகிக் கிடந்த கால்களை வெட்டி எடுத்து விட வேண்டும் என்றார். ஆனால் அவன் அதற்குத் தயாராக இல்லை; ஆகவே அவனது பெற்றோர் அந்த அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ளவில்லை. டாக்டர்களோ இனி அவனால் நடக்கவே முடியாது என்று கூறினர்.

மூட்டில் சதையே இல்லை. இடது காலில் பாதம் வரை ஒரே கருகல் தான்! இப்படி இருப்பதை விட அவன் சாவதே மேல் என்பது டாக்டர்களின் மேலான கருத்தாக இருந்தது. ஆனால் அவன் சாவதற்குத் தயாராக இல்லை. மன உறுதியுடன் தன் நிலையை எதிர்கொண்டான். ஒருவாறாக உயிர் பிழைத்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். வீட்டிற்கு வந்த அவனுக்கு அன்னை காலில் மசாஸ் செய்து வந்தாள். படுக்கையிலிருந்து வீல் சேருக்கு மாறினான் அவன்.

ஒரு நாள் அவனது தாயார் அவனை வீல் சேரில் வைத்து வீட்டிற்கு வெளியே முற்றத்திற்கு அழைத்து வந்தாள். அவன் தன்னை வீல்சேரிலிருந்து விடுவித்துக் கொண்டு கீழே விழுந்தான். மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து வீட்டைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த வேலியைப் போய்த் தொட்டான். மெதுவாக வேலியைப் பிடித்துக் கொண்டு எழுந்திருந்தான். இப்படி வேலியை பிடித்துக் கொண்டு நாள் தோறும் சற்று மெதுவாக நடந்து பார்த்தான். நாளடைவில் வேலியைப் பிடித்துக் கொண்டே வீடு முழுவதும் சுற்றி வந்தான்.

தினசரி மசாஜ், அவனது மன உறுதி, விடா முயற்சி ஆகியவற்றின் காரணமாக படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும் நடக்கவும் அவனால் முடிந்தது. பிறகு சற்று மெதுவாக ஓடிப் பார்த்தான். தன் பள்ளிக்குச் செல்ல ஆசை பிறக்கவே, பள்ளிக்கு ஓடிச் சென்றான். ஓடுவது அவனுக்கு இப்போது மிக மிகப் பிடித்திருந்தது. ஓடினாலேயே ஒரு ஆனந்தம்!

ஓடி ஓடி ஒரு நாள் அவன் மாடிஸன் ஸ்குயர் கார்டனில் (Madison Square Garden) உலகின் ஒரு மைல் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றான்,

1933இல் ஜேம்ஸ் இ.சல்லிவன் அவார்டைப் பெற்றான்.  அமெரிக்காவின் தலைமை விளையாட்டு வீரனாக ஆனான்.

அந்தப் பையன் தான் உலகில் தலை சிறந்த ஓட்டப் பந்தய வீரனான டாக்டர் க்ளென் கன்னிங்ஹாம் (Dr Glenn Cunningham)

1500 மீட்டர் ஓட்டத்தில் 1932 ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட கன்னிங்ஹாம் நான்காவதாக வந்தார். 1936இல் ஒலிம்பிக்கில் அதே போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தார். நான்கு நிமிடத்தில் ஒரு மைலை ஓடிக் கடந்து ரிகார்டு சாதனை செய்ய வேண்டுமென்று அவருக்கு ஆசை. 1934இல் அவர் ஒரு மைலை 4.06.8 நிமிடத்தில் ஓடி முடித்தார்.

கன்னிங்ஹாம் ஐயோவா பல்கலைக் கழகத்தில் மாஸ்டர் டிகிரியைப் பெற்றார். பின்னர் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பிஹெச்.டியை முடித்து டாக்டர் பட்டம் பெற்றார். 1940இல் அவர் ஓய்வு பெற்றார். அவரும் அவரது மனைவியும் பத்தாயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவினர்.

டாக்டர் க்ளென் கன்னிங்ஹாமின் வாழ்வானது, முயற்சியால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கான ஒரு எடுத்துக் காட்டு வாழ்வு. அவர் ஒரு மைல் ஓட்டத்தில் உலக சாதனையை முறியடித்தார் – அவரால் நடக்கவே முடியாது என்று அறுதியிட்டு உறுதி கூறிய டாக்டர்களின் சொற்களை முறியடித்து!

க்ளென் கன்னிங்ஹாம் பிறந்த தேதி 4-8- 909; அவர் மறைந்த நாள்: 10-3-1988.

முயற்சி திருவினை ஆக்கும் என்பது கன்னிங்ஹாம் உலகிற்குத் தரும் செய்தி!

***

tags- கருகிய காலன், க்ளென் கன்னிங்ஹாம்

பாரதியாருக்கும் சம்பந்தருக்கும் ‘ஐடியா’ கொடுத்த ரிக் வேதம் ! (Post No.9702)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9702

Date uploaded in London – –7 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

இந்தியாவின் அடிப்படையே வேதம், அந்த அஸ்திவாரத்தின் மீதுதான் இந்து மதம் நிற்கிறதது என்று ஆன்றோரும் சான்றோரும்  பன்யாசங்களில் சொல்லக் கேட்டிருப்போம். இது முழுக்க முழுக்க சமயம் தொடர்பான விஷயம் என்று எண்ணியிருந்தேன்; அது தவறு; சமயத்துக்கு மட்டுமின்றி இந்தியாவின் ஒவ்வொரு பழக்க வழக்கத்துக்கும் ரிக் வேதமே அடிப்படை என்பது முதல் மண்டலத்தைப் படித்து முடிப்பதற்கு முன்னேரே தெளிவாகிவிட்டது.

இதோ நான் கண்ட அற்புத விஷயங்கள்!

பாரதியார் கடன்வாங்கிய உத்தி

பாரதியார் பாடல்களில் எல்லோரும் மிகவும் ரசித்த பாடல்கள்

கண்ணன் என் தோழன்

கண்ணன் என் தாய்

கண்ணன் என் தந்தை

கண்ணன் என் சேவகன்

கண்ணன் என் அரசன்

கண்ணன் என் சீடன்

கண்ணன் என் சற் குரு

கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை

கண்ணன் என் காதலன் – 5 பாட்டுக்கள்

கண்ணன் என் காந்தன்

கண்ணன் என் ஆண்டான்

கண்ணம்மா  என் குழந்தை

கண்ணம்மா  என் காதலி – 6 பாடல்கள்

கண்ணம்மா  எனது குலதெய்வம்

என்று 23 பாடல்களைக் காண்கிறோம் ; இவ்வாறு கண்ணன் அல்லது கண்ணம்மாவை  பல்வேறு வகையில் உறவு கொண்டாடும் எண்ணம் எப்படி அவருக்கு வந்தது என்று எண்ணிப் பார்த்து வியப்பதுண்டு..

நாரத பக்தி சூத்திரம் முதலியவற்றில் இறைவனை குருவாக, தோழனாக, தலைவனாக பார்க்கும் பாவனைகள் இருந்த போதிலும் அதற்கும் முன்னதாகவே ரிக் வேதத்தில் இந்த அணுகுமுறை இருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

ரிக் வேதத்தில் உஷா என்னும் காலைப்பொழுதை , அருணோதய சமயத்தை வருணிக்கும் பாடல்கள் மிகவும் இயற்கை ரசனை மிக்கவை. அதில் உஷை என்னும் செக்கர்வானத்தை சகோதரி, காதலி, மனைவி, தாய், தோழி என்று வேத கால கவிகள்/ ரிஷிகள் வருணிக்கின்றனர்.

இதே போல அக்கினி தேவனையும் தூதன் , அறிஞன், நண்பன், தலைவன், தொண்டன்  என்று வருணிக்கின்றனர்.

கம்யூனிஸ்டுகள் எல்லோரையும் காம்ரேட்ஸ்/ தோழர்களே’ COMRADES என்று அழைப்பது போல ரிஷிகளும் தோழர்களே! வாருங்கள் நாம் அனைவரும் பாடுவோம் என்று சொல்லிக் கூடுகின்றனர்.

முதல் மண்டலத்தில் 191 துதிகளிலேயே எனக்கு இவ்வளவு விஷயங்கள் கிடைத்துவிட்டன. பத்து மண்டலங்களிலும் உள்ள ஆயிரத்துக்கும் மேலான துதிகளைப் படித்து முடிக்கையில் இன்னும் பு தி ய விஷயங்கள் கிடைக்கக்கூடும் .

சம்பந்தர்,  மற்றும் அவருக்குப் பின்னர் வந்த தேவார , திருவாசக, திவ்யப் பிரபந்த பாடகர்கள், தங்கள் பெயரைச் சொல்லி பாடலில் முத்திரை வைக்கின்றனர்  அவருக்கு முன்னால் இப்படி பதிகத்துக்குப் பதிகம் தங்கள் பெயரை எவரும் சொன்னதாகத் தெரியவில்லை. பாரதியார் வேதம் படித்தது போலவே சம்பந்தரும் வேதம் படித்தவர்தான் . பல பாடல்களில் ருக் வேதம் என்று அவரே குறிப்பிடுகிறார். இப்படி பாடலின் இறுதியில் தன பெயரை வைத்து முத்திரை வைக்கும் வழக்கத்தை அவருக்கும் ரிக் வேதமே கற்பித்து இருக்க வேண்டும்.

குத்ஸ ஆங்கீரசன், அகஸ்தியர் போன்றோர் பாடிய  துதிகளில் அவர்களுடைய பெயரைச் சேர்த்துப் பாடினார்கள். சில ரிஷிகள் கடைசி வரிகளை ஒரே மாதிரியாக அமைக்கின்றனர். ஆக இப்படி பாட்டில் தன அச்சை, முத்திரையைப்  பதிக்கும் வழக்கத்தை ரிக் வேத காலத்திலேயே காண்கிறோம். வேதத்தின் பழமையை மிஞ்சக் கூடிய நூல் எதுவுமில்லை.

புரந்தரதாசர் முதல் பக்த மீரா வரை, தியாகராஜர் முதல் முத்துசாமி தீட்ஷிதர் வரை எல்லோரும் தான் இயற்றிய கிருதியாக்  கண்டுபிடிக்க வசதியாக தனது பெயரையோ ஒரு சொல் தொடரையோ சேர்க்கின்றனர்.

இதை ரிக் வேதத்தில் நிறைய காணலாம்.

சில எடுத்துக்காட்டுகள்

குருகுஹ – முத்து சுவாமி தீட்சிதரின் முத்திரை

மீரா கே பிரபு கிரிதர் நாகர — மீராபாய்

கபீர் கஹதா – கபீர் பாடல்கள்

தியாகராஜர், புரந்தரதாஸர், ஜெயதேவர் போன்றோர் தன பெயரை கடைசி வரியில் சொல்லிவிடுவார்கள்.

xxx

பல்லவி, அனுபல்லவி

பல்லவி, அனுபல்லவி, சரணம் என்றெல்லாம் தற்காலப் பாடல்களில், கிருதிகளில், சாஹித்யங்களில் காண்கிறோம். இதையும் அ கஸ்தியர் மந்திரங்களில் , து திகளில் காணலாம். முதல் மண்டலத்திலுள்ள அவரது 26 துதிகளும் கடைசி வேண்டுதல்  ஒன்றாகவே இருக்கிறது.

சில ரிஷிகளின் மந்திரம் ஒவ்வொன்றும்  ஒரே மாதிரி முடிவதைக்  காண்கிறோம் .

Xxx

பஞ்ச தந்திரக் கதைகள்

ஈசாப் என்ற கிரேக்க அடிமை மிருகங்கள் வரக்கூடிய இந்தியாவின் கதைகளைப் பயன்படுத்தினான். அதே போல இந்து மதக் கதைகளை, நாடோடிக் கதைகளைத் திருடி அதில் பொதி சத்துவர் என்ற பெயரை நுழைத்து புத்த ஜாதகக்க தைகளை பெளத்தர்கள் எழுதினார்கள். அதற்கு முன்னரே உபநிஷதங்களில், ராமாயண, மஹாபாரத இதிகாசங்களில் பிராணிகள் பேசும் கதைகள் இருக்கின்றன. இவைகளுக்கும் மூலம் ரிக் வேதம்தான். காடை என்னும் பறவையை ஓநாயின் வாயிலிருந்து அஸ்வினிதேவர்கள் காதத கதை ரிக் வேதத்தில் வருகிறது. அற்புத மூலிகையான சோம லதையை மலையிலிருந்து பருந்துகள், கழுகுகள் கொண்டு தரும் அபூர்வ விஷயங்களும் முதல் மண்டலத்திலேயே கிடைக்கினறன. ஏனைய மண்டலங்களில் அஸ்வினி தேவர்களின் தேரை அன்னப் பறவைகள் இழுப்பதாகவும், மான்கள், இழுப்பதாகவும் வருகிறது. சாண்டா கிளாஸ் கதை போன்ற ரதங்கள் அப்போதே இருந்தன என்றே தோன்றுகிறது!

tags- பல்லவி, மிருகங்கள், முத்திரை, ரிக் வேதம் 

xxxsubhamxxx

Sarasvati (for School Children)- Post No.9701

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9701

Date uploaded in London – –7 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(Please see earlier posts in this series (Ganesh/Pillayar, Skanda/Murugan, Shiva, Parvati, Vishnu, Lakshmi)

Sarasvati is the Goddess of Wisdom. She is also the goddess of Speech and Learning. She is the most favourite goddess of all students. They worship her for good achievements and success into their studies.

She is the wife of Brahma, the God of Creation. Her other names are Vak Devi

She is presented in pure white colour. Her favourite flower is white white lotus and her favourite bird or her Vahana is white swan. She is seated on a white lotus surrounded by swans and lotuses. She is the goddess of all arts. Her hands always play on Veena, the Hindu musical instrument. She wears a white sari

Vedic Hindus named a mighty river Sarasvati. Sarasvati has four hands. She holds Vedas in her left-hand, a rosary in the other hand . With the other hand s she plays on Veena.

She has a shrine in all the temples . There are lot of stories about her helping the un

Learned people. If she writes in anyone’s tongue then that person becomes a great scholar. A tamil saint by name Kumaraguruparar was born dumb. But after worshipping Sarasvati he gained the power of speech. He managed to compose even poems in Tamil. It is called Sakala Kala Valli Malai.

If someone is very good in writin or speaking people believe Srasvati wrote in his or her tongue. The meaning is Sarasvati is resdiing in that person.

Great Tamil poet Bharati, greatest of the Indian poets Kalidasa are some examples.

Bharati also meant Sarasvati. Many Sanyasis’ names in the Shankara Mutts end with Bharati or Sarasvati. Their speeches are great.

In Tamil Nadu there is a temple for Sarasvati in Kothanallur; Saradambal, another name for Sarasvati, is in Sringeri in Karnataka.

Please recite the attached sloka/hymn everyday before you start your reading or writing work.

सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।

विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥

Sarasvati Namastubhyam Varade Kaama-Ruupinni |

Vidya Aarambham Karissyaami Siddhir-Bhavatu Me Sadaa ||

Meaning:

Salutations to Devi Saraswati, Who is the giver of Boons and fulfiller of Wishes,

I begin my Studies, Please bestow on me success always.

The meaning is that I should understand everything correctly and follow it or use it successfully in my life.

You may also recite the simple Mantra when you see Sarasvati statue in the temple or in your Prayer room:-

Jaya Sarasvati Jaya Sarasvati Jaya Sarasvati Paahimaam

Sri Sarasvati Sri Sarasvati Sri Sarasvati  Rakshamaam

Xxx

Two verses from Sakala kalaa valli maalai in Tamil

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருக பணித்தருள்வாய் வட நூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகலகலா வல்லியே.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே

XXX

FOR MORE PICTURES OF SARASVATI, PLEASE VISIT…….



Sakalakalavallimalai | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › sakalakalavallimalai

  1.  
  2.  

1 Oct 2014 — 1322; Dated 1st October 2014. Sakala Kala Valli Malai by Tamil Poet Kumaragurupara Swami. Author of the poem Kumaraguruparar Life History …



சகலகலாவல்லிமாலை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

  1.  

1 Oct 2014 — Saraswati stamp issued during World Hindi Conference. (With English Translation of Sakala Kala Valli Malai). Compiled by London …

–subham–

TAGS- SARASVATI, SCHOOL CHILDREN

இதாலிய கவிஞர் பொகாஸியோ (Post No.9700)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9700

Date uploaded in London – –7 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

BOCCACCIO

ஜியோவன்னி பொக்காசியோ GIOVANNI BOCCACCIO ஒரு இதாலிய எழுத்தாளர் – கவிஞர். பொக்காஸியோவின் THE DECAMERON டெகமெரான் என்னும் நூல் மறுமலர்ச்சி (RENAISSANCE) காலத்தில் தோன்றிய அழகான நூல்.

     1313இல் பிறந்த ஜியோவன்னி பொக்காஸியோ 1375இல் இறந்தார்.

     பிளாரன்ஸ் FLORENCE நகரத்தின் பணக்கார வணிகரின் மகன் இவர். ஆனால் அவரது தந்தை மிகவும் கண்டிப்பான பேர்வழி. மகனை எழுத்துத் துறையில் ஈடுபடுத்த விருப்பமில்லை. ஆகவே சட்டம் பயில்வதற்காக பொக்காஸியோவை நேபிள்ஸ் நகரத்திற்கு அனுப்பினார். பின்னர் அவர் ANJOU நகரில்  ROBERTஇன் அரசபையில் நீதிமன்ற உறுப்பினர் COURTIER ஆனார்.

அங்கு மன்னரின் அழகிய மகள் M மரியா தெ அக்வினோவைக் ARIA D’ AQUINOவைக்  கண்டு காதல் கொண்டார். இந்த பெண்ணையே முக்கிய கதாபாத்திரமாக வைத்து டெகமெரான் நூலை எழுதினார். இந்த நூலில் பியா மேட்டா (சிறிய ஒளிப் பிழம்பு) FIAMETTA என்ற கதாபாத்திரம் அவரது காதலி !

     1340இல் பொக்காஸியோவின் தந்தையின் வியாபாரம் நொடித்துப் போனது. பொக்காஸியோ ஊர் திரும்ப நேரிட்டது. 1341இல் அவர் டெகமெரான் எழுதிய போது இதாலியில் பிளேக் (BLACK DEATH) நோய் பரவியிருந்தது.

 பிளேக் நோயிலிருந்து தப்பிக்க ஒரு நண்பர் குழு ஒரு கிராமத்திற்குச் செல்கின்றனர். பொழுது போவதற்காக ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கின்றனர். இவ்வாறு நூறு கதைகள் நிறைந்தது இந்த

டெக்காமெரான் DECAMERON  நூலாகும். இவைகளில் சில துயரக்கதைகள். இன்னும் சில நகைச்சுவையானவை. இந்த புத்தகம் இவருக்குப் பெரும் புகழை ஈட்டித்தந்தது. இவரை போப்பாண்டவர் பல இடங்களுக்கு தூதுவராக அனுப்பினார்.

     அவருக்கு வயது ஆக ஆக மதப்பற்று அதிகரித்தது. நோயும் ஏற்பட்டது. CERTALDO என்னும் இடத்திற்குச் சென்று நிம்மதியாய் வாழ்ந்தார். இறுதி நாட்களை அமைதியாகக் கழித்தார். 1374இல் இவரது அருமை நண்பரும் இதாலியப் பெருங்கவிஞருமான PETRARCH இறந்த செய்தி வந்தது. அதற்கடுத்த ஆண்டு இவரும் இறந்தார்.

ஆயிரத்தொரு இரவுகள் என்ற அராபிய கதைத்தொகுப்பு ஸம்ஸ்க்ருதத்திலுள்ள பிருஹத் கதா மாதிரியில் அமைந்தது என்பதை பலரும் அறிவர். அதாவது இந்த மாதிரியை வைத்து அவரவர் நாட்டிற்கு ஏற்ப கதாபாத்திரங்களையும் சூழ்நிலையையும் மாற்றி புனைப்பட்ட கதைகள்

. இதே போல சம்ஸ்க்ருதத்தில் உள்ள தச குமார சரித்திரம் என்ற நூலை முன்மாதிரியாக வைத்து எழுதப்பட்டது இத்தாலிய மொழி

டெக்காமெரான்  நூல். அதை எழுதியவர் பொக்காசியோ .

–subham–

Tags–   ஜியோவன்னி பொக்காசியோ , டெகாமெரான், பொக்காஸியோ

PLEASE JOIN US TODAY MONDAY 7-6-2021

7-6- 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MTS

Talk by S.RAMACHANDRAN SUNDARESAN on his Vedic Hymn Translation– 20 mts

Profile of S.Ramachandran, Chennai

Essarci

Dob 04/03/1954

Native  Dharmanallur      cuddalore district

Qn  MA MPhil LLB

writer in Tamli and english

 retired from BSNL,  Settled in Chennai

AUTHORED SO FAR

2 books in English  poem and prose

28 books in Tamil      

novels short stories, poems, essays, and translation    

Got Tamilnadu state award for novel 

Netuppukku ethu urakkam

Got SBI writers award  for novel   kanavumeippadum 

Got Trupur Tamil sang Award  NLC honour for writers  Salem tharaiyaar virudhu   NCBH ETTAYAPURAM Bharathi vizaa parisu  SIKARAM AWRD  kambam  Bharathiyar sangam parisu  Etc etc.

Essarci@yahoo.com

xxx

Talk by Harihara Sreenivasa Rao, Bengaluru on

“A Few Hydrological Expressions in Sri Puranadara Dasara Sahitya-12 mts

ASHTAPATHI -17 BY LONDON SRI BALA SUBRAHMANYAN,London -6 mts

Talk by K Ganesan on Dharma sastra–- 12 MINUTES

Abhangam song by Mrs Daya Narayanan,London – 5 mts

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

TOTAL TIME- APPR. 70 MINUTES

Xxxxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES TO HIS CREDIT AND FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- publicity7621,

தினமும் நிறம் மாறும் லிங்கம்! அசலேஷ்வர் மஹாதேவர் கோவில்! (Post.9699)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9699

Date uploaded in London – – 7 JUNE   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 6-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!

ஆலயம் அறிவோம் – பகுதி 32

சிவனொடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை

புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்

தவனச் சடைமுடித் தாமரையானே

திருமூலர் திருவடி போற்றி!   ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரே ஒரு மலைப்பகுதியான ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள அபு மலைத் தலமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் ஜெய்பூரிலிருந்து 276 கிலோமீட்டர் பயணித்து தோல்பூர் மாவட்டத்தை அடைந்து அங்கிருந்து 60 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் பயணித்தால் அடையும் தலமாகும். அபுரோடு பேருந்து நிலையத்திலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது.

அபு என்றால் அற்புதம் என்று பொருள். அற்புதா என்று இருந்த பெயர் காலப்போக்கில் மாறி அபுவாகி விட்டது. இங்கு தான் அசலேஷ்வர் மஹாதேவரின் கோவில் அமைந்துள்ளது.  இந்த ஆலயம் ஏராளமான சிறப்புக்களைக் கொண்ட ஒரு ஆலயமாகும். சிவபெருமான் லிங்க வடிவில் அமைந்து அருள் பாலிக்கிறார். அவரது திருநாமம் அசலேஷ்வர் மஹாதேவ். இந்த லிங்கம் காலை நேரத்தில் சிவப்பு நிறமாகவும்  உச்சிப் பொழுதில் அடர்ந்த குங்குமப் பூ நிறமாகவும் மாலை சற்று நிறம் மங்கியும் ஆக இப்படி ஒரே நாளில் மூன்று நிறங்களைக் கொண்டிருக்கும் அதிசயம் வாய்ந்தது. ஸ்வயம்புவாகத் தோன்றி அமைந்துள்ள இந்த லிங்கத்தின் அடியை யாராலும் காண முடியவில்லை. பாதாளத்தில் இது செல்கிறது. அசலம் என்றால் அசைக்க முடியாத என்ற பொருள் உண்டு.

இந்தக் கோவிலை முகலாயர்கள் ஐந்து முறை கொள்ளையடிக்க முயன்றபோது இங்கிருந்து தேனீக்கள் எண்ணற்ற அளவில் தோன்றி முகலாயப் படையை விரட்டி அடித்தன.  ஏராளமான ரிஷிகளும் மகான்களும் தவம் புரிந்த பூமி என்பதால் நிறைய புராண வரலாறுகள் இதற்கு உண்டு. வசிஷ்டர் தனது மனைவி அருந்ததியுடனும் தெய்வீகப் பசுவான நந்தினியுடனும் இங்கு வாழ்ந்து வந்தார்.

ஒரு முறை நந்தினி இங்குள்ள மலையிலிருந்து பெரும் பள்ளத்தில் வீழ்ந்து விட்டது. ஆகவே சிவனை நோக்கித் தவம் புரிந்து பள்ளத்தை நிரப்ப அருள் புரியுமாறு வசிஷ்டர் வேண்ட, அந்தப் பள்ளத்தை நிரப்ப சிவபிரான் அற்புதா என்ற ஒரு நாகத்தை உருவாக்கினார். பாம்பால் நிரப்பப்பட்ட அந்தப் பிரதேசம் பாம்பு போல மாறியது. பாம்பு, பக்கத்தில் உள்ள மலைப்பாறைகளை அசைத்துப் பிடுங்கியதால் அந்தப் பகுதி நடுநடுங்கியது. உடனே சிவபிரான் தன் கால் பெருவிரலால் அந்த இடத்தை அழுத்தவே நடுக்கம் நின்றது. அதனால் அது அற்புத மலை என்று பெயர் பெற்றது.

வசிஷ்டர் இங்கு பசுவின் சிலை ஒன்றின் வாயிலிருந்து வெளிவரும் நீரூற்றைக் கொண்ட கோமுக் எனப்படும் இடத்தில் வேள்விகளை இயற்றி

வந்தார். அற்புதா என்ற நாகத்தை அடிப்படையாகக் கொண்டு இன்னும் பல வரலாறுகளும் சொல்லப்படுகின்றன. கௌதம முனிவர் தன் மனைவியான் அகல்யாவுடன் இங்கு வசித்து வந்தார். அவரது சீடரான உதங்கர் குருகுலம் முடிந்த சமயத்தில் குரு தக்ஷிணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது அகல்யா, சௌதேசர் என்ற முனிவருடைய மனைவியின் காதில் அவர் அணிந்திருந்த குண்டலங்கள் தனக்கு வேண்டும் என்று கேட்டார். அதைப் பெற்றுத் திரும்பிய உதங்கர் திரும்பி வரும் போது இந்தப் பகுதியில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அவர் உறங்கும் போது அந்த மரத்தில் இருந்த அற்புதன் என்ற பாம்பு அந்தக் குண்டலங்களைக் கவர்ந்தது. விழித்து எழுந்த உதங்கர் குண்டலங்களைக் காணாமல் மலையரசனாகிய இமயவானை வேண்ட அவனும் தன் மகனை அனுப்பிக் குண்டலங்களை மீட்டு உதங்கருக்கு அளித்தான். உதங்கர் அகல்யாவிடம் குண்டலங்களைத் தர அகல்யா பெரிதும் மகிழ்ச்சியுற்றாள். இதனாலும் இந்த இடம் அற்புதா என்ற பெயரைப் பெற்றது.

அற்புதா என்ற நாகம் இங்குள்ள நந்தி தேவரைக் காப்பாற்றியதால் இது அற்புதா மலை என்ற பெயரைப் பெற்றது என்ற ஒரு வரலாறும் உண்டு.

இந்தக் கோவிலில் அமைந்துள்ள பிரம்மாண்டமான நந்தியின் சிறப்பும் தனி தான். நந்தியின் சிலை 4 டன் எடை கொண்ட தங்கம், வெள்ளி, தாமிரம் , வெங்கலம், துத்தநாகம் ஆகிய பஞ்சலோகங்களின் கலவையால் விசேஷமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் ஏராளமான மிக முக்கியமான ஜைனத் தலங்களும் உள்ளன.

இந்த மலையில் உள்ள பாறைகள் இயற்கையாகவே பல விலங்குகளைப் போல அமைந்து காணப்படுகின்றன. தேரையைப் போல உள்ள ஒரு பாறை தேரைப் பாறை என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள நக்கி ஏரி தெய்வீகமானதாகக் கருதப்படுகிறது. பாஷ்கலி என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப் படுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பிரம்மாவின் ஆணையால் தேவர்கள் இங்கு வந்து தங்கள் நகத்தால் கீறி இந்த ஏரியை உருவாக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. நக்கி என்றால் நகம் என்று பொருள்.

அபு தலமானது சக்தி பீடங்களில் ஒன்றாகும். அபுமலையில் அமைந்துள்ள சக்தியின் கோவில் ஆதார் தேவி கோவில் ஆகும். அபு ரோடிலிருந்து வடக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் இது உள்ளது. செங்குத்தான மலைப்பாறை வழியே சென்றால் மலைக் குகையில் உள்ள ஒரு சிறு துவாரத்தின் வழியே சென்று கோவிலை அடையலாம். நவராத்திரி விழாக் காலங்களில் துர்க்கை எனப் போற்றப்படும் இந்த அம்மனை வணங்கி வழி பட ஏராளமான மக்கள் திரள்கின்றனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அசலேஷ்வர் மஹாதேவரும் ஆதார் தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி

ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோன் ஆகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு   

வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!

நன்றி வணக்கம்                                                         

                                           ***

 Tags-  நிறம் மாறும் லிங்கம் , அபு மலை, அசலேஷ்வர் , அற்புத நந்தி

மனம் என்னும் மகோன்னத சக்தி பற்றிச் சொல்லும் லவணன் கதை! (Post.9698)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9698

Date uploaded in London – –  –7 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோக வாசிஷ்டம்

மனம் என்னும் மகோன்னத சக்தி பற்றிச் சொல்லும் லவணன் கதை!

ச.நாகராஜன்

வசிஷ்ட மஹரிஷி மனதின் மகோன்னத சக்தி பற்றி  ஸ்ரீ ராமருக்கு விவரிக்கலானார். அதை நன்கு அவர் புரிந்து கொள்ளும் பொருட்டு லவணன் என்ற மஹராஜனின் கதையைக் கூறலானார்.

      லவணன்  என்ற மஹராஜன் தன் தேசத்தைச் சிறப்பாக அரசாண்டு வந்தான். ஒரு நாள் அவன் அரசவையில் ஒரு மாயாஜால நிபுணன் வந்தான். அவன் தனது வித்தையைக் காட்ட அனுமதி கேட்டு அரசவையினர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரசனை மனோவசியம் செய்தான். தனது கையிலிருந்த மயிலிறகுகள் கொண்ட மந்திரக் கோலை அவன் அசைத்தான். அவ்வளவு தான், அரசன் ஒரு ஆழ்ந்த உறக்கநிலைக்குச் சென்றதை அனைவரும் பார்த்தனர். சிறிது நேரம் கழித்தது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து திகைப்புடன் எழுந்த மன்னன் என்ன நடந்தது என்பதை விளக்கினான்.

       மன்னனின் கீழ் பணியாற்றிய ஒரு படைத்தலைவன்  அவனுக்கு ஒரு அழகிய குதிரையைப் பரிசாகத் தந்தான். அதன் மீது மன்னன் ஏறி அமர, அது வாயு வேகம் மனோவேகமாகப் பறக்கலாயிற்று. அது வேகமாக ஓடி ஒரு அடர்ந்த வனப்பகுதியை அடைந்தது. மன்னன் குதிரையின் வேகத்தைக் கண்டு தாள முடியாமல் அதனிடமிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்று நினைத்தான். குதிரை ஒரு மரக்கிளையின் வழியே ஓடும் போது மரக்கிளையைப் பிடித்துக் கொண்ட அரசன் குதிரை வெகு தூரம் ஓடிய பிறகு கீழே குதித்தான். அவன் காட்டில் அங்குமிங்கும் சுற்றி அலைந்தான். ஒரே தாகம், பசி.

     என்ன செய்வதென்று தெரியாத நிலையில் ஒரு சண்டாளப் பெண்மணி அருகில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தன் தந்தைக்காக உணவு எடுத்துச் செல்வதைக் கண்டான். அவளிடம் சென்று உணவில் ஒரு பகுதியைத் தருமாறு கேட்டான். அவளோ ஒரு நிபந்தனை விதித்தாள். தன்னை அவன் மணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டால் மட்டுமே தன்னால் உணவு தர முடியும் என்று அவள் சொன்னாள். அரசன் அதற்கு இணங்கினான். அரசனுக்கு உணவு வழங்கிய அந்தப் பெண்மணி அவனைத் தன்னுடன் தந்தை இருக்குமிடம் அழைத்துச் சென்றாள். தந்தை சம்மதம் தர அவனை மணந்தாள்.

       சண்டாளர்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்ற அரசன் அவர்கள் வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டி இருந்தது. மாமிசம் முதலிய அவர்களது உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டியதாயிற்று. காலக் கிரமத்தில அந்தப் பெண் முதலில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். பின்னர் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். குடும்பம் பெரிதானது. அரசனுக்கு வயது கூடிக் கொண்டே போனது. 

      ஒரு சமயம் அந்தப் பகுதியில் பெரிய பஞ்சம் வந்து அனைவரையும் வாட்டியது.எவ்வளவோ கஷ்டப்பட்டு பார்த்தும் அவனால் தன் குடும்பத்தைப் பராமரிக்க முடியவில்லை. அவர்களைப் பராமரிக்க முடியாமல் போனதால் அவன் எரியும் நெருப்பில் குதித்து உயிரை விட்டான்.

     இந்தக் கணத்தில் திடீரென்று லவணனுக்குச் சுய உணர்வு வந்தது. அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எப்படி இது சாத்தியம் என்று எண்ணலானான். உடனே தான் கனவில் கண்ட வனாந்திரப் பகுதிக்கு நிஜமாகவே சென்றான். அப்படி ஒரு பகுதி அவன் கனவில் கண்டது போலவே இருந்ததை ஆச்சரியத்துடன் அவன் பார்த்தான். தான் கனவில் கண்டபடியே பொருள்களும், இதர அம்சங்களும் இருந்தன. அத்துடன் மட்டுமல்லாமல் தனது மாமனார் மாமியாரையும் அவன் பார்த்தான். மிக கோரமாக இருந்த அவர்களையும் அவலட்சணம் பிடித்த அவர்களது மகளையும் அவன் பார்த்தான். அவளைத் தான் தனது பசியைத் தணிக்க வேண்டி அவன் மணம் புரிந்து கொண்டிருந்தான்.

     கதையில் வரும் சம்பவங்களைச் சில நிமிடங்களிலேயே அனுபவித்து விட்டான் லவணன். ஆனால் அவையோ கனவு கண்ட சமயத்தில் நெடுங்காலம் நடந்தவை.

     கதையைக் கூறி முடித்த வசிஷ்டர் இதன் தத்துவத்தை விளக்கலானார். மனம் என்பது மகோன்னத சக்தி கொண்ட ஒன்று. காலம், வெளி என்ற உண்மைகளுக்கு உட்பட்டு பல காலம் நடந்த சம்பவங்களை ஒரு சில நிமிடங்களிலேயே அரசன் அனுபவிக்க மனத்தின் அனுபவங்களே காரணம்.

      லவணன் ஒரு காலத்தில் அப்படிப்பட்ட வனப்பகுதிக்குச் சென்று அவர்களையோ அல்லது அவர்களைப் போன்று ஒத்து இருப்பவர்களையோ பார்த்தும் இருக்கலாம். கணப்பொழுதில் அவன் அவற்றை மறந்திருந்தாலும் மனப் பதிவுகள் அவனை விட்டு நீங்காமல் இருந்திருக்கும்.

     உலகம் என்னும் வனத்தில்  இரையாகும் மிருகங்கள் போல வலையில் சிக்கித் தடுமாறுபவை மனிதர்களின் மனங்களே. எவன் ஒருவன் இதை விசாரத்தினால் அறிந்து கொள்கிறானோ அவன், மேகம் விலகிய சூரியன் போல ஆன்மாவின் ஒளியைப் பெற்றவன் ஆகிறான்.

     அருமையான இந்தக் கதை யோக வாசிஷ்டத்தில் உத்பத்தி பிரகரணத்தில் இடம் பெறுகிறது

****

tags- மனம் , சக்தி, லவணன் கதை,

உலக இந்து சமய செய்தி மடல் 6-6-2021 (Post .9697)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9697

Date uploaded in London – –6 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஜூன் 6 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் ராணி ஸ்ரீனிவாசன் Rani Srinivasan

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது ராணி ஸ்ரீனிவாசன் Rani Srinivasan

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

Xxxx

கோவில் அர்ச்சகர், பணியாளர்களுக்கு உதவித்தொகை துவக்கம்

கொரோனா நெருக்கடி காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மாதச் சம்பளமின்றி திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகையாக 4000 ரூபாய் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாதச்சம்பளம் ஏதுமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு 4000 ரூபாய் தொகையும், 10 கிலோ அரிசியும், மளிகைப் பொருள் தொகுப்பும் வழங்கப்படும்.

கொரோனா நோய் தொற்று காலத்தில் திருக்கோயில்களில் பக்தர்கள் வருகை இல்லாததால் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு 4000 ரூபாய் உதவித் தொகையும், 1000 ரூபாய் மதிப்பிலான 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பும் வழங்கும் திட்டம் ஜூன் அன்று முதல்வர் முக.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14,000 திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திருக்கோயில் வாயிலாக உரிமம் பெற்றவர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Xxxx

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறையில் தீ விபத்து! – பக்தர்கள் அதிர்ச்சி


கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியும், வருத்தமும் அடைய செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில். அம்மன் புற்று வடிவில் சுயம்புவாக தோன்றி காட்சி அளிப்பது இக்கோயிலின் சிறப்பு. இக்கோயிலின் மாசி கொடை விழாவின்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி புனிதப்யாத்திரையாக வந்து அம்மனை தரிசிப்பார்கள். பின்னர் இருமுடியில் கொண்டுவரும் பொருட்களில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள். இந்த கோயிலின் கருவறையின் மேல்பகுதி கேரள பாரம்பர்ய கட்டடக்கலையின்படி ஓடு வேயப்பட்ட கூரை அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலில் புதன் கிழமை காலை பூஜைகளும், தீபாராதனையும் நடைப்பெற்றது. சுமார் 7 மணியளவில் திடீரென கருவறை கூரையில் தீ பிடித்தது. கோயில் குருக்களும் பணியாளர்களும் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் மேற்கூரை முழுவதும் தீ படர்ந்தது. தீ எரிவதை பார்த்த அப்பகுதி பெண் பக்தர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன்,
தீ விபத்தில் சேதம் அடைந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலை பார்வையிட்ட பின் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கோயில்களை சரிவர பராமரிக்க மாட்டார்கள். ஆனால் கோயில் வருமானத்தை கொண்டு வேறு செலவு செய்வார்கள். இனி அரசு இப்படி செய்யாது என்று நம்புகிறேன். அறநிலையத்துறை ஹிந்து கோயில்களில் இருந்து வெளியேற வேண்டும். கோயில் நிர்வாகத்தை பக்தர்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

மண்டைக்காடு கோயிலில் தீவிபத்து ஏற்படும் வரை அலட்சியமாக இருந்த அதிகாரிகள், பூஜாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள பாரம்பரிய முறைப்படி செயல்படும் இந்த கோயிலை பழமை மாறாமல் அப்படியே புதுப்பிக்க வேண்டும். மேற்கூரை எரிந்த நிலையில் தங்க தகடுகளால் ஆன மேற்கூரை அமைக்க வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Xxxx

கைலாசா மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி- நித்யானந்தா குற்றச்சாட்டு


திருவண்ணாமலையை சேர்ந்த   நித்யானந்தா   சாமியார் பெங்களூரில் ஆசிரமம் நடத்தி புகழ் பெற்றார். நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள கூறப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார்.

குற்றச்சாட்டில் சிக்கிய சாமியார் நித்யானந்தா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.இந்த கைலாசா நாடு எங்கு இருக்கிறது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அங்கிருந்து பேசுவது போன்று நித்யானந்தா அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நித்யானந்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:-

கைலாசா நாட்டின் மீது ‘பயோ வார் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்காமலேயே சிலர் ‘‘மர்ம விதை’’களை அனுப்பி வைத்துள்ளனர். கைலாசா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவே இது தெரிகிறது.

“என்னை பல பேர் பல்வேறு வழிகளில் தாக்கியதாலேயே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன். சனாதன இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாக பயங்கரவாதத்தை விதைகள் மூலம் அனுப்பும் கொடிய சதி நடக்கிறது” –இவ்வாறு நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா எங்கிருந்து வீடியோ வெளியிடுகிறார் என்பதிலும் மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

Xxxxx

கோவிட் ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் 

ஆந்திராவில், கோவிட் நோயாளிகளுக்கு ஆனந்தய்யா என்ற மருத்துவர் வழங்கிய மருந்துக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது.


ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டணத்தை சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி வந்தார். இதனை பெறுவதற்கு தினமும் ஆயிரகணக்கானோர் குவிந்தனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெற்று சென்றனர்.


இந்த மருந்தை ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். இதில் பக்க விளைவு ஏதும் இல்லை என நிரூபணம் ஆனது. இதனையடுத்து இந்த மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால், கண்ணில் விடப்படும் சொட்டு மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Xxxxx

சவூதி அரேபிய கல்வித்திட்டத்தில் ராமாயணம், மஹாபாரதம்

சவூதி அரேபியா ராமாயணம், மஹாபாரதம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவற்றைத் தனது கல்வித்திட்டத்தில் சேர்த்துள்ளது!

இனிமேல் அங்கு குழந்தைகளுக்கு ராமாயணம், மஹாபாரதம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவையும் கற்பிக்கப்படும்.

மத சம்பந்தமான பாட புத்தகங்களில் புத்தமதம், இதரமதங்கள் பற்றிய பாடங்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும். இளவரசர் முஹம்மது பின் சல்மானின் வழிகாட்டுதலின் படி 2030 தொலைநோக்கு காட்சி பற்றிய ஆவணத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

இளவரசர் சல்மான் தனது தொலைநோக்கு காட்சியின் படி அதிரடி மாறுதல்களுடன் எப்படி தனது அரசு செயல்படப் போகிறது என்பது குறித்து பரவலான மாறுதல்களை கொள்கை ரீதியாக செய்து வருகிறார்.

உலகை இளைய தலைமுறையினர் எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக, ஆங்கில மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சவூதியைச் சேர்ந்த யோகா மாஸ்டர் நௌபஃப் அல்மொர்வாய், ஏப்ரல் 15 தேதியிட்ட தனது ட்வீட்டில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டில் ஹிந்து மதம் புத்தமதம் பற்றிய வினாத்தாளைக் காண்பித்துள்ளார். சவூதி அரேபியாவில் யோகாவைப் பரப்பியதற்காக அல்மொர்வாய்க்கு பத்ம ஸ்ரீ விருது 2018இல் வழங்கப்பட்டது.

Xxxxx

பாபா ராம்தேவ் கருத்து கூற தடை விதிக்க முடியாது: டில்லி நீதிமன்றம்

அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில், ‘பாபா ராம்தேவ் கருத்துக் கூற தடை விதிக்க முடியாதுஎன, டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது கடைப்படிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வியடைந்து விட்டன. அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தாலும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம். இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு, ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்என, யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார்.


இதனால் பாபா ராம்தேவிற்கு எதிராக டில்லி மருத்துவ கவுன்சில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், ‘அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து வெளியிட பாபா ராம்தேவிற்கு தடை விதிக்க முடியாது. அவர் கூறிய கருத்துகள் அடிப்படை சுதந்திரத்தின் கீழ் வரக்கூடியதுஎனக் கூறி, வழக்கை ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஆனால், ஜூலை 13ம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணை வரை எந்தவிதமான ஆத்திரமூட்டும் அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்று ராம்தேவிடம் கூறுமாறு உயர் நீதிமன்றம் வழக்கறிஞரைக் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

xxxxxxxxxxxxxxx

பணிக்காக மதம் மாறியவர்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

பல்கலைக்கழகங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பணி நியமனம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கபட்டால் சம்மந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வி தகுதி இல்லாமல் நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பின்னர் தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற கவுதமன் என்பவரின் நியமனத்தையும், பதவி உயர்வையும் ரத்து செய்யக் கோரி  ரமேஷ், ராம்குமார், கனகராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ‘‘தன் கல்வித்தகுதி சான்றிதழை பல்கலைக்கழக விசாரணையின் போது கவுதமன் தாக்கல் செய்யவில்லை.  உரிய கல்வி தகுதி பெறாத அவரது நியமனமும், பதவி உயர்வும்  சட்டவிரோதமானது. தகுதியில்லாத கவுதமனை ஓய்வுபெற அனுமதித்தது தவறானது. அவரை நியமனம் செய்ய பரிந்துரைத்த தேர்வுக் குழுவிற்கு எதிராக பாரதியார் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பணி நியமனம் செய்யும் போது வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும்.  

கல்வி நிறுவனங்கள் பணிநியமனத்துக்கான நேர்முகத் தேர்வுக்கு முன், விண்ணப்பதாரர் பெயர், கல்வி தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விபரங்களை பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகை மற்றும் இணையதளங்களில் வெளியிட வேண்டும். பணியாளர் தகுதி குறித்த கேள்வி எழும்போது அது குறித்து  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்தி அது குறித்து முடிவெடுக்க வேண்டும். நேர்முகத்தேர்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் யாரேனும் சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்டால் அதனை விரைந்து ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கிய ஊதியத்தை தேர்வுக் குழு உறுப்பினர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

போலி ஆவணங்கள் அல்லது சான்றுகள் அளித்து விண்ணப்பதாரர்கள் பணியில் சேர்ந்து  இருப்பதாக கண்டறிந்தால் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியங்களை அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் கீழ்  பல்கலைக்கழகங்களில் பணி நியமனம் பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

xxxxxxxxxxxxxxxxxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர்

ராணி ஸ்ரீனிவாசன்

நன்றி, வணக்கம்

tags- உலக, இந்து சமய, செய்தி மடல் 6-6-2021,