No Thief, No Miser, No illiterate in my Kingdom- Asvapati of Kekaya (9482)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9482

Date uploaded in London – –11  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

There is a beautiful verse in Chandogya Upanishad which describes the ancient Hindu society.

This was the condition that existed at least 3000 years ago in India.

“Within my realm (Janapada ) there is no thief

No misser, nor a drinking man

None altarless, none ignorant,

Nno man unchaste , no wife unchaste.”

–Asvapati of Kekaya

The same ideals are described in several discourses of the Mahabharata. The Vidura Niti in the

Mahabharata is a summary of those ideals of virtue and common sense which were cultivated by the Janapada citizens.

Panini mentioned it with the word Vainayika 5-4-34. It is in the Santi parva of 68-4 of Mahabharata.

The Vainayika functions of the Janapada state are described at length in the epic in a chapter

in Santi parva 68.1-61 where we see

‘Yadi raja na paalayet’.

Dharma is the base on which the society rests. We see it inUdyoga parva of the epic.

‘Namo Dharmaya mahate dharmo dharayati prajaha’- Udyoga parva 137-9

Panini uses ‘Dhaarmika’, ‘Dharmam charati’ 4-4-41

‘Charati’ means habitual moral conduct or practice of virtue. Dharma denoted both justice and virtue.

This ideal is embodied in the famous words of king Asvapati of Kekaya which he uttered in the presence of such citizens who were householders possessing magnificent mansions (Mahasala), supplied with all the luxuries that Janapada life would provide, but who still chose the Path of virtue and learning (Maha strotriya ).

Source book- India as known to Panini by VS Agrawala

Xxx

Kambar in Ramayana

Kambar in Ramayana also describes such a society

When Kambar describes the conditions of the people in Ayodhya, he says,

“There is no untimely death because there is no crime;

There is no anger because everyone behaves”

He continued in another verse,

“No one donated anything because there is no one to accept it;

No one’s valour is seen because no one came for a fight;

There is no truth visible because no one spoke a lie;

Every one is learned and so there is elementary education!

This is only a rough translation. In short people had no needs. Every one is happy

and the society is peaceful.

Valmiki also says the same in his Ramayana( Please see the link below for my old article)

Ayodhya | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ayodhya

  1.  

9 Jul 2014 — “Ayodhya was founded by Manu, a lord among men. The city’s thoroughfares

extended for sixty miles. It had massive gates and numerous …

—-subham—

tags- Asvapati, Kekaya, Chandogya Upanishad, No thief

உலக இந்து சமய செய்தி மடல் 11-4-2021 (Post No.9481)

KASI VISWANATHAR TEMPLE

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9481

Date uploaded in London – –11  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று APRIL   11 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

Xxxx

அரசின் கட்டுப்பாட்டில் இருந்து 51 கோயில்கள் விடுவிப்பு: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு

உத்தரகண்டில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதாக அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார்.

உத்தரகண்டில் புதிய முதல்வராக பொறுப்பேற்ற தீரத் சிங் ராவத், சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின்போது, ‘சார் தாம் தேவஸ்தானம்’ மேலாண்மை மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு கவர்னர் பேபி ராணி மவுரியா, ஒப்புதல் வழங்கியதை அடுத்து, மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார். இதில், பத்ரிநாத், கேதர்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி உள்ளிட்ட கோயில்களும் அடங்கும்.


‘உத்தரகண்ட் மாநிலம் போன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களையும், அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது:உத்தரகண்ட் மாநில அரசு, 51 கோவில்களை, அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துள்ளது. இது, மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில், அரசு கட்டுப்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கோவில்கள், மீண்டும் சமூகத்திடமே வழங்கப்பட்டுள்ளன. இது, மிகப்பெரிய முன்னேற்றம்.கோவில்கள், பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை, உத்தரகண்ட் அரசு உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது


உத்தரகண்ட் அரசின் அறிவிப்பை பாரதீய ஜனதா கட்சி  மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி வரவேற்றுள்ளார்.

XXXX

காசி கோவில் பகுதியில் தொல்பொருள் ஆய்வு   நடத்த நீதிமன்றம் உத்தரவு

வாரணாசியில், விஸ்வ நாதர் கோவில் – ஞானவாபி மசூதி அமைந்துள்ள வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பாரதீய ஜனதா கட்சி  ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர், வி.எஸ்.ரஸ்தோகி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

வாரணாசியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காசி விஸ்வநாதர் கோவில், முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் இடித்து தள்ளப்பட்டது. அங்கு, மசூதி கட்டப்பட்டுள்ளது. இது வரலாற்று பூர்வமான உண்மை.

முகலாயர் ஆட்சி முடிந்த பின்,மசூதிக்கு அருகே, விஸ்வநாதர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. அதனால், காசி விஸ்வநாதர் கோவில், ஞானவாபி மசூதி வளாகத்தை, ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த வளாகத்தில், தொல்பொருள் ஆய்வு நடத்தினால், விஸ்வநாதர் கோவில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கும். அந்த வளாகத்தில் தான், கோவிலை இடிக்கும் போது இருந்த, விஸ்வநாதர் லிங்கமும் புதைக்கப்பட்டுள்ளது. என கூறப்பட்டு இருந்தது.



தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள, மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல ஆண்டுகளாக, இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.  தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கான செலவை, மாநில அரசு ஏற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதை வரவேற்று பலரும் சமூகவலைதளமான டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து தான் ஞான வாபி மசூதியை கட்டினார் என்பதை பலரும் சுட்டிக்காட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்

XXXXX

ஆஞ்சநேயர் பிறப்பிடம்: யுகாதி வருடப்பிறப்பில் ஆதாரங்கள் வெளியிடப்படும்

ஆஞ்சநேயர் பிறப்பிடம், திருமலையில் உள்ள அஞ்னாத்திரி மலைத் தொடர் என்பதற்கான ஆதாரங்களை, தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி அன்று வெளியிட உள்ளதாக, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் குடியிருக்கும் திருமலை, ஆஞ்சநேயரின் பிறப்பிடமாகவும் அடையாளம் காணப்பட உள்ளது. இதுகுறித்து பல புராண இதிகாசங்களை ஆராய்ந்து அறிய, ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை, திருமலை தேவஸ்தானம் அமைத்தது. அவர்களும், பல புராணங்கள், கிரந்தங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து உள்ளனர்.


அதன்படி, ஆஞ்சநேயர், சேஷாசல மலையில் உள்ள அஞ்னாத்திரியில் பிறந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு தகவல்களை, வரும், 13ம் தேதி தெலுங்கு வருட பிறப்பான யுகாதி அன்று தேவஸ்தானம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.

ஆஞ்சனேய பக்தர்கள் இதை ஆவலுடன்  எதிர்பார்த்து நிற்கின்றனர். ஏற்கனவே வேறு சில மாநிலங்கள்  தங்கள் மாநிலத்தில்தான் அநுமன் பிறந்தான் என்று அறிவித்துள்ளன . தகவல் வெளயான பின்னர் ஞான மயம் குழு அதை  விரிவாக வெளியிடும் .

XXXX

கொரோனா பரவல் – புகழ்பெற்ற கோவிலில் தரிசனம் முழுவதும் ரத்து!!

கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சீரடி சாய் பாபா கோவிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோவிலும் ஏப்ரல் 30ம் தேதி வரை மூடப்படுகிறது

ஆந்திரத்திலுள்ள திருப்பதி பாலாஜி கோவிலிலும் இலவச தரிசனம் ரத்தாகிறது

ஏப்ரல் 11 ஆம் தேதி இரவுடன் இலவச தரிசனம் முடிவடையும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. மேலும் நாளொன்றுக்கு 300 ரூபாய் டிக்கெட் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

xxxx

காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை கட்டமைக்க மத்திய அரசு திட்டம்

அயோத்தியிலிருந்து, காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை, உத்தர பிரதேசத்தில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பாரதீ ய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட ம் என்ற இடத்துக்கு முதலில் சென்றார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலிருந்து, சித்ரகூட்டிற்கு ராமர் சென்ற பாதையை, ‘ராம் வன் காமன் மார்க்என்ற பெயரில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.அயோத்தியிலிருந்து, 210 கி.மீ., துாரத்தில் உள்ள சித்ரகூட்டிற்கு, பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜெத்வாரா, ராஜாபூர் வழியாக தனிப்பாதை கட்டமைக்கப்பட உள்ளதுஎன, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமாயணத்தில், ராமபிரான், 14 ஆண்டுகள் காட்டில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பல பகுதிகள், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளன.  மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வர்; காங்கிரசைச் சேர்ந்த பாஹெல் ஆகியோரும், தங்கள் மாநிலங்களில் ராமர் காட்டுக்கு சென்ற பாதையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

XXXX

மதுரை சித்திரை திருவிழா ரத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாத திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்.

கடந்தாண்டு கொரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற இருந்த சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.

கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா பரவல் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. எனவேதான் கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரை சித்திரை திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டைப்போல் கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடைபெறும்.” என்றார்.

XXXX

‘கோயில் அடிமை நிறுத்து’ இயக்கம்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவு

 கோயில் அடிமை நிறுத்துஇயக்கத்திற்கு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மனிதனை நல்வழிப்படுத்துவதில் முக்கிய கேந்திரங்களாக கோயில்கள் உள்ளன. கோயில் கட்டுவதற்கு பூமியை தேர்ந்தெடுத்தல் துவங்கி சூரியன், சந்திரன் இருக்கும் வரை அங்குள்ள விக்ரகங்கள் சக்தியுடன் விளங்க வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் மிகவும் அக்கறை செலுத்தியுள்ளனர்.

கோயில்களை முழுமையாக பராமரிக்க முடியாத நிலை தற்போது நிலவுகிறது. நம்முடைய பெருமைகளை காப்பாற்றுவதில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. காவிரி அன்னையை பாதுகாக்கவும், திருக்கோயில்களை பராமரிக்கவும் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தற்போது பெரும் முயற்சி எடுத்து வருகிறார். 3 கோடி மக்களை ஒருங்கிணைத்து இந்த திருக்கோயில் அடிமை நிறுத்துஇயக்கம் மூலம் விமோசனம் அளிக்க முயற்சிக்கிறார்.


தர்ம சிந்தனை உள்ள பெரியவர்கள், ஆன்மிக அறிஞர்கள், சாஸ்திரம் அறிந்தவர்கள், பக்தர்கள், பொதுமக்கள், ஆன்றோர், சான்றோர் பொறுப்பில் கோயில்கள் வர வேண்டும். எந்த நோக்கத்திற்காக கோயில்கள் உருவாக்கப்பட்டனவோ அவற்றை நவீன அறிவியல் உதவி கொண்டு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். திருப்பதி நிர்வாகம் போன்று கலை வளர்க்கும், கல்வி வழங்கும் நிலையங்களாக கோயில்கள் மாற வேண்டும்.

கோயில்களை பாதுகாக்க துவங்கப்படும் இந்த முயற்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்

xxxxx

கீதா பிரஸ்தலைவர் காலமானார்

கீதா பிரஸ்தலைவர் ராதேஷியாம் கெம்கா, 87 வயதில் , காலமானார்.உத்தர பிரதேச மாநிலம் கோ ர க்பூரில், 1923 முதல் செயல்பட்டு வரும் அச்சகம், கீதா பிரஸ்.

பகவத் கீதை, ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் உள்ளிட்ட ஹிந்து மத புத்தகங்களை அச்சடித்து, குறைந்த விலையில், கீதா பிரஸ் விற்பனை செய்து வருகிறது. கீதா பிரஸ் தலைவர் ராதேஷியாம் கெம்கா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர் இறந்தார். அவரது மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் 38 ஆண்டுகளுக்கு கல்யாண் என்ற பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தி வந்தார் .

xxxx

இன்னும் ஒரு துயரச் செய்தி

சைவ உலகில் புகழ் பெற்ற சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி என் ராமச்ச ந்திரன் காலமானார்.வழக்கறிஞ ராக  வாழவைத் துவங்கியபோதும் தமிழ் இலக்கிய சேவை மூலம் பிரபலமாகி டாக்டர் பட்டம் பெற்றார். சைவ சமயத் துறையில் பெரும் புலமை பெற்ற அவர் சைவ நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இரு மொழிகளிலும் சொற்பொழிவாற்றி தமிழுக்கும் சைவத்துக்கும் சேவை ஆற்றினார். பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் பாடல்கள் அப்பர் தேவாரம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். லண்டனுக்கு பல முறை விஜயம் செய்த அவர், இங்கு வாழும் தமிழ் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.

கீதா பிரஸ் உரிமையாளர் ராதேஷியாம் குடும்பத்துக்கும் டாக்டர் டி .என் ஆர் . குடும்பத்துக்கும் ஞான மயம் குழுஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவிக்கின்றது

XXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags-Tamil Hindu, News Roundup, 11421

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 11-4-2021 (Post No.9480)

KASI TEMPLE AND MOSQUE

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9480

Date uploaded in London – –11  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

– Read by SUJATHA RENGANATHAN .

XXXX

Kashi Vishwanath Temple-Gyaana vaapi Mosque Complex Case

A Varanasi civil court on Thursday ordered the Archaeological Survey of India  to ‘survey’ the Gyaana vaapi Mosque located next to the Kashi Vishwanath Temple after petitioners representing the temple claimed that the land on which the mosque stood actually belonged to them.

The petition was opposed by the Gyanvyapi Mosque management committee, Anjuman Intazamia Masazid, 

The Varanasi court’s order upends the Places of Worship Act of 1991, which declared that “the religious character of a place of worship existing on August 15, 1947, shall continue to be the same as it existed on that date” and that “no suit, appeal or other proceeding with respect to … such matter shall lie on or after such commencement in any court, tribunal or other authority.”

The law was passed in the wake of the agitation underway at the time by Hindutva groups for various mosques – including the Babri Masjid in Ayodhya, the Gyanvapi mosque in Varanasi and the Idgah in Mathura – to be converted into temples.

The bench also dismissed the defendants’ argument that revenue records proved the mosque was not on disputed property.

In addition to a physical survey by the ASI, the court also ordered that a five-member committee be constituted comprising experts in archaeology. Two of the members should ideally be from the minority community, the court said.

The temple side’s petitioner, Vijay Shankar Rastogi, along with four others, claims that the Gyanvapi Mosque came up in 1669 after Mughal emperor Aurangzeb pulled down a portion of the 2,000-year-old Kashi Vishwanath Temple. Rastogi said he has filed the petition in his capacity as the next friend of the Ancient Idol of Swambhu Lord Vishweshwar.

Waqf Board to move Allahabad HC against verdict ordering ASI survey of Varanasi’s Gyanwapi mosque

Central Waqf Board chairperson Zufar Ahmad Farooqui said that the order was ‘questionable’ because no evidence has been produced before the court that suggests that there was a prior existing temple at the site of the mosque. He said on Thursday that it would challenge in the high court the Varanasi court order on the disputed premises claimed both by the Kashi Vishwanath temple and the Gyana waapi mosque.

XXXX

RAM SETU CASE

In the mean time another case also hit the headlines of news papers

The Supreme Court on Thursday directed that the plea seeking National Heritage Status for Ram Sethu be listed on April 26th before the “next Chief Justice of India  NV RAMANA who is set to hold office of the Chief Justice of India with effect from 24th April. A three-judge Bench of CJI Bobde, Justice Bopanna and Justice Ramana will hear the case

xxxx

Siddhivinayak temple and  Shirdi Sai Baba temple shut

Amid the rising COVID-19 cases in Maharashtra, the Shri Saibaba Sansthan Trust  has decided to shut Sai Baba temple in Shirdi, Maharashtra from  April 5, 2021. The temple will remain closed till April 30, 2021. Mumbai’s Siddhivinayak temple will also remain closed till further orders.

Along with the Sai temple, the Prasadalaya and the Bhakta Niwas will also be closed for devotees. During this time, the Puja recitation and all the programs in the temple will be done through the pandits who worship in the temple.

COVID-19 hospital and other hospitals started by the Trust will remain operational while the temple remains closed.

Xxx

Balaji Temple  to stop free darshan from April 12

Tirumala Tirupati Devasthanams  has decided to temporarily suspend issuance of free Sarva Darshan tokens to devotees under current booking system from 12th of this month. It has taken this decision following Covid-19 cases rising once again across the country as well as in the temple city.

In a statement on Wednesday, TTD made it clear that Slotted Sarva Darshan (SSD) tokens will be issued at Bhudevi complex and Vishnu Nivasam in Tirupati only till the evening of April 11.

“There has been a spurt in Coronavirus cases in Tirupati city again. Since thousands of devotees wait at Bhudevi complex and Vishnu Nivasam for SSD tokens, the prospect of Covid-19 cases multiplying is likely. Hence, the temple body has decided to temporarily suspend issuance of free darshan tokens,” a temple official explained.

Xxxx

Uttarakhand to free 51 Hindu Temples from Govt control

In a landmark decision, Uttarakhand Chief Minister Tirath Singh Rawat has announced to free 51 temples and shrines including Badrinath, Kedarnath, Yamunotri, and Gangotri from government control.

The newly appointed CM has overturned the decision taken by his predecessor Trivendra Singh Rawat.

Uttarakhand Chief Minister Tirath Singh Rawat has decided to free 51 Hindu Temples from government control.

The decision comes after intense protests against the decision by the state government to takeover the administration of the Temples earlier.

The BJP in Tamil Nadu had also promised that a separate board of saints and scholars will be appointed to manage the administration of the state should they come to power.

The current decision by the Uttarakhand CM came after a meeting with a Visva Hindu Parishad delegation.

Uttarakhand CM took this big decision on his birthday, the 9th of April.

xxxx

Travancore Devaswom Board to launch probe in death of Temple elephant 

The Travancore Devaswom Board (TDB) has decided to launch a probe in the death of  ‘Ambalappuzha Vijayakrishnan’, a 51-year-old elephant, who was allegedly mistreated by its mahouts and the Board officials.

The Board in its meeting on Friday entrusted P Bijoy, TDB’s Vigilance SP, the task of probing the incident.

The Devaswom Board also suspended two mahouts, Pradeep and K A Ajeesh, pending enquiry after prima facia it was ascertained that there were lapses from their side. G Baiju, Deputy Devaswom Commissioner, Harippad, has been shifted from his post in connection with the elephant’s death on Thursday.

The animal of late had been having health ailments. Despite its delicate health, the TDB officials allowed the mahouts to parade the animals in a temple festival after the board’s veterinarian deemed it was fit for the ordeal. However, the Animal rights activists flayed the decision and pressurized the TDB to bring the elephant back before the temple festival.

Xxx

Muslim man’s library with 3,000 copies of Bhagavad Gita torched by miscreants in Karnataka

In a tragic incident, miscreants have allegedly set ablaze a public library run by a 62-year-old daily wage labourer that had a collection of 11,000 books including three thousand copies of Bhagavad Gita, in Mysuru on Friday.

Syed Isaaq had become a popular face among the residents of Rajiv Nagar and Shanti Nagar in the city as he took up a bold step of setting up a library giving free access to all the residents in the region for the last 10 years.

“At 4 am, a man residing next to the library informed me that there was a fire inside. When I rushed to the library which is just a stone’s throw away distance, I could only see them being reduced to ashes,” said Isaaq in teary eyes.

 Every day, over 100-150 people would visit his library. Issaq would purchase over 17 newspapers including the ones in Kannada, English, Urdu and Tamil.

 “The library had over 3,000 exquisite collections of Bhagavad Gita, over a 1,000 copies of Quran and Bible besides thousands of books of various genres which I sourced from donors,” he says.

Though he did not spend money from his pocket, he used to spend nearly Rs 6,000 for the maintenance of the library and on the purchase of newspapers.

Following this incident, Issaq approached the Udayagiri police station and lodged a complaint against the miscreants. Police have filed an FIR under the IPC section 436 and have launched an operation to nab the culprits.

However, the incident has not deterred Issaq. “I will not cow down. I will rebuild the library from the scratch”.

“I was deprived of education and I want to ensure that others should not face my plight. I want people to learn, read and speak Kannada and will rebuild it again,” he said.

Xxx

Gita Press president Radheshyam Khemka passes away at 87

The president of Gita Press, Radheshyam Khemka, passed away in Varanasi following a brief illness, his family members said last Sunday.

He was 87. Khemka died last week Saturday afternoon and his last rites were performed at the Harishchandra Ghat, they said.

He was under treatment at a private hospital in Ravindrapuri.

Prime Minister Narendra Modi condoled the death of Khemka, noting he remained active in various social services throughout his life.

Modi noted that Khemka took Sanatan literature to the masses.

In Gorakhpur, a prayer meeting was organised at the Gita Press and all its employees attended it, the press’ product manager Lal Mani Tripathi said.

Khemka for 38 years was the editor of the prominent ‘Kalyan’ magazine printed at the press.

His last edited the magazine’s April 2021 issue.

In total, Khemka has edited 38 yearly special issues of the magazine and 460 normal issues of ‘Kalyan’, according to the press’ officials.

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath condoled the demise of Khemka.

Xxxx

Dr T N R is no more

Gnanamayam team regrets to announce the demise of Sekkizaar Adippodi Dr T N Ramachandran who was a great Tamil scholar. He was an authority on Tamil Saivite literature. He has edited lot of Tamil books and translated Bharati poems, Pattinathar verses and Thevaram hymns into English. Though he was a lawyer by profession he was awarded doctorate for his contribution to Tamil language. He has visited London many times and addressed the gatherings here in Sri Lankan and South Indian associations.

xxxxx

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND


 tags- Hindu News 1142021

 

காஞ்சீபுரம் காமாக்ஷி ஆலயம் (Post No.9479)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9479

Date uploaded in London – – 11 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 11-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!

கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி துஷ்ட விநாஷினி காமாக்ஷி |

ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே சமஜன ஸதயே காமாக்ஷி ||

 ஸ்ரீ மஹா பெரியவாள் சரணம்!   ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சப்மோக்ஷபுரிகளில் நடு நாயகமாகத் திகழ்வதும், பஞ்ச பூத தலங்களில் பிருதிவி தலமாகத் திகழ்வதும், சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்வதும், 108 வைஷ்ணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழ்வதுமான காஞ்சீபுரம் ஆகும். ஏகாம்பரேஸ்வரர் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளிட்ட ஏராளமான கோவில்களைக் கொண்டுள்ள இந்த நகரம், சைவ வைஷ்ணவ ஒற்றுமை காட்டும் சிறந்த தலமும் ஆகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள இது சென்னையிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு, நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி என்ற சம்ஸ்கிருத ஸ்லோகம், நகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம் என்று கூறுகிறது. காஞ்சீபுரம் என்றவுடனேயே நம் கண் முன் தோன்றுவது காமாக்ஷி அம்மன் திருவுருவமே! 51 சக்தி பீடங்களில் பிரதானமான காமராஜ பீடம் என்றும் ஸ்ரீ  காமகோடி பீடம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

காமங்களை அதாவது விருப்பங்களை பூர்த்தி செய்யும் அக்ஷி – கண்களை உடையவள் என்ற பொருள் பட காமாக்ஷி என்று துதிக்கப் பெறும் இந்த அன்னையைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உள்ளன.

ஸ்ரீ  காமாக்ஷி தேவி தன் வலது கண்ணால் பிரம்மாவையும் இடது கண்ணால் மஹா விஷ்ணுவையும் கடாக்ஷித்து அருளி ப்ரம்மாவிற்கு ‘கா என்று கூறப்படும் சரஸ்வதியையும் விஷ்ணுவிற்கு ‘மா என்று கூறப்படும் லக்ஷ்மியையும் தன் கண்களிலிருந்து கிடைக்கும்படி அருளிச் செய்ததால் காமாக்ஷி என்ற பெயரைப் பெற்றாள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. காமாக்ஷி தேவி காஞ்சியில் பிலாகாச ரூபத்திலும், ஸ்ரீ சக்ர வடிவத்திலும் சதுர்புஜங்களோடு  காயத்ரி மண்டபத்தில் கொலுவீற்றிருக்கிறாள். இங்கு அன்னை பராசக்தி, காமாக்ஷியாக தோன்றிய வரலாற்றை புராணம் நன்கு விவரிக்கிறது.

முன்னொரு காலத்தில் பந்தகாசுரன் என்னும் அசுரன் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து வரங்கள் பல பெற்று தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் துன்பங்களைத் தொடர்ந்து செய்து வந்தான். எல்லையற்ற துன்பம் அனுபவித்த அனைவரும் சிவனிடம் தஞ்சம் புகுந்து தம்மைக் காத்தருளுமாறு வேண்ட, பிரம்மாவிடமிருந்து பல வரங்கள் பெற்ற இவனிடமிருந்து அனைவரையும் காக்கும் வல்லமை கொண்டவள் பராசக்தியே, என்பதை நன்கு உணர்ந்த சிவபிரான், தேவர்களை வடக்கே கோமுகம் என்ற இடத்தில் உள்ள பிலத்தினுள் நுழைந்து தெற்கே காஞ்சிபுரத்தில் உள்ள பிலத்தின் வழியே வெளி வந்து, அன்னையை வழிபடுவதே அவர்கள் துன்பத்தைப் போக்கும் என்று கூறி அருள் பாலித்தார். அதன்படியே தேவர்கள் வடக்கே உள்ள பிலத்தினுள் நுழைந்து, தெற்கே காஞ்சியில், பில துவாரம் வழியே வெளி வந்தனர். அங்கே காமகோடி பீடத்தின் அருகே உள்ள ஒரு செண்பக மரத்தில், கிளி வடிவம் கொண்டு அன்னையை வழிபட ஆரம்பித்தனர்.

தேவர்களின் துன்பத்தை அறிந்த தேவி அவர்களுக்கு அருள் புரிய மனம் கொண்டு மிகுந்த கோபத்துடன் பிலத்திலிருந்து வெளிப்பட்டாள். கைலாயத்தில் பந்தகாசுரன் நித்திரை செய்வதை அறிந்த தேவி, அவனது கண்டத்தில் ஒரு பாதத்தையும் மார்பில் மற்றொரு பாதத்தையும்  வைத்து, 18 புஜங்களுடன் 18 ஆயுதங்களைத் தரித்து, பைரவ ரூபிணியாகத் தோன்றி, அவனது தலையை அறுத்து, சிகையைப் பிடித்து, ஐந்து வயது கன்னிகையாகத் தோன்றி, காமகோடி பீடமாகிய பிலத் துவாரத்தை வந்து அடைந்தாள். கன்னிகை கையில் இருந்த அசுரனின் தலையைக் கண்ட தேவர்கள் பயந்து மயங்கி வீழ்ந்தனர். உடனே அவர்கள் பயத்தைப் போக்கும் வண்ணம் அதி சுந்தர திருமேனியுடன், சர்வாலங்கார பூஷிதையாக, பட்டாடை உடுத்திய சிறு பெண் போல, தேவி தேவர்களுக்குக் காட்சி அளித்தாள். தேவர்கள் மகிழ்ந்து தேவியை வணங்கிக் கொண்டாடினர். தேவி அவர்களிடம் ஒரு பெரும் பள்ளம் தோண்டி பந்தகனைப் புதைத்து ஜெயஸ்தம்பத்தை நாட்டுமாறு பணித்தாள். இன்னும் இதன் விரிவான வரலாற்றைப் புராணம் தொடர்கிறது.

காமாக்ஷியின் நான்கு கரங்களில் ஒன்றில் கரும்பினால் ஆன வில்லும் இன்னொன்றில் புஷ்பங்களால ஆன அம்புகளும் உண்டு. மீதி இரு கரங்களில் பாசமும் அங்குசமும் உண்டு. காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் அம்பிகைக்குத் தனி சந்நிதி கிடையாது. ஏனெனில் அங்கு இருக்கத் தக்க சக்திகள் அனைத்தும் காமாக்ஷியிடம் கலந்திருப்பதே காரணம் ஆகும். ஸ்ரீ சங்கர பகவத்பாதர் இங்கு ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து ஸ்ரீசக்ர வடிவத்தில் ஆலயத்தை புதுப்பித்தார். அங்கு சர்வக்ஞ பீடத்தை ஸ்தாபித்து, பீடாரோஹணம் செய்தார். தன் பணியை முடித்த அவர் காமாக்ஷியின் சந்நிதியில் விதேஹ கைவல்யம் அடைந்தார். ஆதி சங்கரரின் மறு அவதாரமாகத் தோன்றி 68வது பீடாதிபதியாக இருந்து அருள் பாலித்த மஹா பெரியவாளும் காஞ்சிபுரத்தையே தன் அருளாட்சியின் தலை நகரமாகக் கொண்டிருந்தது குறிப்பிடத் தகுந்தது. மஹா பெரியவாளின் அதிஷ்டானமும் காஞ்சியில் உள்ளது.

இங்கு ராஜகோபுரத்தின் வழியே நுழைந்து மதிலைக் கடந்து சென்றதும் உயர்ந்த த்வஜ ஸ்தம்பமும் பலிபீடமும் உள்ளன. உள்ளே சுக்ரவார மண்டபம் உள்ளது. அதை அடுத்து விக்ன நிவாரண கணபதியையும் துர்வாச முனிவரையும் தரிசிக்கலாம். 24 காயத்ரி அக்ஷரங்களை அனுசரித்து இங்கு 24 தூண்களைக் கொண்டுள்ள காயத்ரி மண்டபத்தில், கொலு வீற்றிருக்கும் ஸ்ரீ காமாக்ஷி அம்மனை தரிசித்தோர், இந்தப் பிறவி எடுத்த பெரும் பயனை அடைந்தவர் ஆவர். மூல காமாக்ஷிக்கு வலப்புறம் தவக் கோலத்தில், தபஸ் காமாக்ஷி காட்சி தருகிறாள்.

கச்சி என்று இலக்கியம் புகழும் இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மொத்தம் 17 பதிகங்களையும் அருணகிரிநாதர் 44 பாடல்களையும் பாடி அருளியுள்ளனர். ஆழ்வார்கள்   மங்களாசாஸனம் செய்து அருளியுள்ள தலமும் இதுவே தான்! காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபட்டு வரும் அன்னை காமாக்ஷி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.  காமாக்ஷி தேவி சரணம், ஆதி சங்கர பகவத்பாதர் சரணம்.மஹா பெரியவாள் சரணம் குரு ப்ரஹ்மா குரு விஷ்ணுர் குருர் தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம: திருஞானசம்பந்தர் அருள் வாக்கு:            

மதி ஆர் கச்சி, நதி ஏகம்பம், விதியால் ஏத்தப் பதி ஆவாரே!       நன்றி, வணக்கம்!

tags- காஞ்சீபுரம் ,காமாக்ஷி ,ஆலயம்,

புராணத்துளிகள் – கன்னியின் கைவளை தந்த உபதேசம் (Post No.9478)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9478

Date uploaded in London – –  –11 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.

புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 5 கட்டுரை எண் 9382 வெளியான தேதி 15-3-2021

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 6

ச.நாகராஜன்

18. ஐந்து அதர்மங்களை விலக்க வேண்டும்!

ஸ்ரீ நாரதர் யுதிஷ்டிரருக்குக் கூறுகிறார்:-

யுதிஷ்டிர மன்னவனே! விதர்மம், பரதர்மம், ஆபாஸ தர்மம், உபமா தர்மம், சல தர்மம் ஆகிய இந்த ஐந்து (அ)தர்மங்களும் அதர்மம் ஆகிற மரத்தின் கிளைகளாகும். தர்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவன் இவற்றை அதர்மங்களைப் போலத் துறக்க வேண்டும்.

எதைத் தர்மம் என்கிற புத்தியுடன் செய்தாலும் தன் வர்ணாசிரம தர்மங்களுக்குத் தடை நேருமோ அதை விதர்மம் என்பார்கள்.

க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தர்மத்தை, பிராமணர்கள் செய்வார்களாயின் அது அவர்களுக்குப் பர தர்மம் ஆகும்.

வேதத்திற்கு இணங்காத ஆகமங்களில் சொல்லப்பட்ட பாஷண்ட தர்மம் உபமா தர்மம் ஆகும். பிறரை வஞ்சிப்பதற்காகச் செய்யும் தர்மமும் உபமா தர்மமே.

சாஸ்திரங்களில் உள்ள சப்தங்களுக்கு வேறு பொருள் கூறிச் செய்யும் தர்மம் சல தர்மம் ஆகும். செய்தோம் என்கிற பேருக்குச் செய்யும் தர்மமும் சல தர்மமே. (எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால்) கோ தானம் செய்தோம் என்கிற பேரில் சாகக் கிடக்கும் பசுவைத் தானம் செய்தல் ஆகும்.

தம்முடைய இஷ்டப்படி  நான்கு ஆசிரமங்களிலும் சேராமல் தனியே ஏற்படுத்திக் கொள்கிற அவதூதாஸ்ரமம் முதலியன ஆபாஸ தர்மமாம்.

     இவற்றை விலக்க வேண்டும் என்ற இந்தப் பகுதி ஸ்ரீமத் பாகவதத்தில் ஸப்தம ஸ்கந்தத்தில் 15ஆம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.

*

19. பிரம்மத்தின் இலக்கணம்!

தேவியானவள் பர்வதராஜனை நோக்கிக் கூறுவது:-

இனி பிரம்மத்தின் இலக்கணத்தைக் கேட்பாயாக! இந்த பரமாத்மாவுக்கு ஜனனம், மரணம் இல்லை. கர்ம ஜனனமும் கிடையாது.

இது நித்யமானது. சாஸ்வதமானது. அனாதி.

சரீரம் இம்சிக்கப்பட்டாலும் இது இம்சிக்கப்படுவதில்லை.

எவன் ஒருவன் இந்த ஆத்மா இம்சைப்படுவதாக நினைக்கின்றானோ, எவன் ஒருவன் இது இம்சிக்கப்பட்டதாக நினைக்கின்றானோ இந்த இரண்டு பேரும் தெரிந்தவர்கள் அல்லர்.

இது ஒருவரைத் துன்பம் செய்வதுமில்லை;ஒருவனால் துன்பப்படுவதும் இல்லை.

அணுவுக்கு அணுவாயும், மஹத்துக்கு மஹத்தாயும் இருக்கின்ற இந்த பரமாத்மா, சகல பிராணிகளுடைய இதய குகையில் வைக்கப்பட்டிருக்கிறது.

அத்தன்மையதான இந்த பரமாத்மாவை துக்கரஹிதனாக இருக்கின்ற ஜீவாத்மா ஆனவன் அந்த பிரம்மத்தின் பிரசாதத்தினாலே,  அப்பரமாத்மாவினுடைய மஹிமைகளைத் தானும் உடையவனாகின்றான்.

இந்த ஆத்மாவை ரதமுடையவனாக அறிவாய்!

(எப்படி எனில்) சரீரம் ரதமாகவும், சாரதி புத்தியாகவும், இந்திரியங்கள் குதிரைகளாகவும், மனம் கடிவாளமாகவும், விஷயங்கள் சஞ்சரிக்கும் இடமாகவும் கொண்டு இந்திரியங்களோடும் மனதோடும் கூடி விஷயானுபவங்களை ஆன்மா அனுபவிக்கிறதாகச் சொல்லுகின்றபடியால் அந்த விதமாகவே அறியக் கடவாய்.

  • இந்தப் பகுதி ஸ்ரீமத் தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 34ஆம் அத்தியாயத்தில் வருகிறது.

                       *

20. கன்னியின் கைவளை தந்த உபதேசம்!

ஒரு பிராமணன் யது மன்னனுக்குக் கூறுவதில் ஒரு பகுதி இது:-

“ஒரு சமயம் பெண் ஒருத்தி தாய் தந்தை முதலியோர் வெளியில் சென்றிருந்த சமயம் தன்னை  மணம் பேசி முடிக்கும் பொருட்டுத் தன் வீட்டிற்குச் சிலர் வந்திருப்பதைக் கண்டு தானே அவர்களை வரவேற்று பூஜித்தாள். அந்தப் பெண் வந்தவர்களின் உணவுக்காக சாலி என்னும் தானியத்தை தான் ஒருத்தியாகவே குத்திக் கொண்டிருக்கையில்  அவள் கையில் இருந்த சங்கு வளையல்கள் பேரொலி செய்தன. அப்பொழுது கூரிய புத்தியை உடைய அந்தப் பெண் அப்படி நெல்லைக் குத்துவது கீழான செயல் என்றும், இது வந்தவர்களுக்குத் தெரியுமாயின், “ஓ! இவள் தானே நெல்லைக் குத்துகிறாளே! இவளுக்கு உறவினர் யாரும் இல்லையோ! இவள் ஏழை தான்! என்று நினைப்பார்கள் என்றும் ஆகையால் அந்தச் செயல் தனக்குத் தகாது என்றும் நினைத்து வெட்கமடைந்து தன் கைகளில் இருந்த  வளையல்களை ஒவ்வொன்றாக உடைத்துக் கொண்டு வந்து, இரண்டிரண்டாக வைத்துக் கொண்டாள். அப்பால் மறுபடியும் நெல்லைக் குத்த ஆரம்பித்தாள். அவ்விரண்டு வளைகளிலிருந்து மீண்டும் ஒலி எழும்பலாயிற்று. பிறகு அந்த இரண்டு வளையல்களில் ஒன்றை உடைத்து ஒரே ஒரு வளையலை மட்டும் இரு கரங்களில் அணிந்தாள். இப்போது சப்தம் எழவில்லை.

லோக தத்துவங்களை அறிய வேண்டும் என்னும் கருத்துடன் நான் பல்வேறு இடங்களில் சுற்றிக் கொண்டிருக்கையில் அந்தக் கன்னியை நான் பார்த்து அவளிடமிருந்து இந்த உபதேசத்தைக் கற்றுக் கொண்டேன். இதில் என்ன

உபதேசம் என்றால், சொல்கிறேன், கேள்!

ஓரிடத்தில் பலர் சேர்வார்களாயின் கலகம் உண்டாகும். இருவர் சேர்ந்தாலும் கூட ஒருவருக்கொருவர் பேச்சு நேரிடும். ஆகையால் கலகமும் பேச்சும் நேராதிருக்கும் பொருட்டு, கன்னியின் கைவளை போல் தனியனாகவே திரிய வேண்டும். கன்னியின் கைவளையிலிருந்து இந்த விஷயத்தை நான் தெரிந்து கொண்டேன்.

               இந்தப் பகுதி ஸ்ரீமத் பாகவதத்தில் 11ஆம் ஸ்கந்தத்தில் 9ஆம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.

***

tags-புராணத்துளிகள் , கன்னி, கைவளை ,

PLEASE JOIN US TODAY SUNDAY 11-4-2021

11-4-2021 SUNDAY

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER -3 MINUTES LONDON

Prayer -Mrs Deeptha Mhadev, California, USA- 3

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN from Begaluru ON Kanchi Kamakshi Amman TEMPLE-8 MTS

Thiruppugaz Amirtham –MRS JAYANTHI SUNDAR & MRS JAYASHREE MAHADEVAN -10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–25 MINUTES (from London)

BENGALURU S. NAGARAJAN’S TALK Ashtaka Hymns  in Tamil  —  10 MINUTES

APPR.60 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- TWO PM  LONDON (BST)  TIME which is  6-30 PM INDIAN TIME;

DAYS- SUNDAYS and  MONDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

 tags- publicity 11-4-2021

பகவத் கீதையில் எந்திரங்கள் ! (Post No.9477)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9477

Date uploaded in London – –10  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பகவத் கீதையில் எந்திரங்கள் !

உபநிஷத காலம் முதலே நமக்கு எந்திரங்கள், உலோககங்களைப் பிரித்தெடுத்து ஆயுதங்கள் உபகரணங்கள் செய்தல் பற்றிய அறிவு மிகவும் இருந்துள்ளது.

முதலில் எது எது எந்தக் காலம் என்பது பற்றிய ஒரு சிறு குறிப்பு :காமாலைக் கண்களும், கோல் பார்வையுமுடைய……………………………………………..

tags — பகவத் கீதை, எந்திரங்கள், உபநிஷதங்கள்  , உலோககங்கள்

Machines and Mirrors in Bhagavad Gita (Post No.9476)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9476

Date uploaded in London – –10  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Newspaper cutting dated 11-1-1982

Sir

In his book ‘The Six Systems of Indian Philosophy’, Max Muller has translated the conversation between Svetaketu and his father Aruni, extracted from the first Khanda of Chadogya Upanishad as follows:–

Father to Svetaketu–

Svetaketu! as you are conceited, considering yourself well read and stubborn, my dear son, have you ever asked for that instruction by which we hear what is not heard, by which we perceive what is not perceived, by which we know what is not known?

What is that instruction, Sire? He asked.

The father replied

My dear son, as by one clod of clay all that is made of clay is known, the difference being only the name, arising from speech, the truth being that all is clay.

And as , my dear son, by one nugget of gold, all that is made of gold is known, the difference being only the name , arising from speech, the truth being that all is gold.

And as my dear son, by one pair of nail scissors, all that is made of steel (Karshana ayasam) is known, the difference being only the same, arising from speech, the truth being all that is steel— thus my dear son, is that instruction.

This Upanishad is said to belong to Sama Veda . All the Vedic Upanishads are supposed to be prior to the age of the great epics Ramayana and Mahabharata. If what is interpreted by Max Muller is correct, we have to believe that all the metals, especially gold and steel were widely in use at that time. Of course, Ramayana and Mahabharata do mention the use of mechanical devices prevalent at those times.

In Bhagavad Gita 61st sloka of chapter 18, Sri Krishna , says as follows

The Lord dwells in the hearts of all beings, O Arjuna, and by his Maya causes all beings to revolve as though mounted on a machine (18-61).  The concept of a revolving machine to be mounted upon should lead us to believe that mechanics at that time was much advanced.

Similarly Gita also mentioned mirror and the effect of rust on it- Karma yoga 3- 38;. The 2-67th sloka of Sankhya yoga also compares the roving senses to be carried away as the ‘wind carrying a ship on water’.

It is generally said that the industrial revolution has dawned upon when man discovered the wheel to start with. If that be the case the references about mechanics in the Vedic period are a pointer to the factor that our history and culture developed in the long course of time along with development in mechanics and other discoveries, including sophisticated clothing like silks.

We come across reference to Padukas and also umbrellas in different places and in varying contexts in the epics. Paduka gained that much of importance when Bharata ruled the country with Sri Ram’s Padukas, treating them as symbolic representation of Rama. Umbrellas appear as royal status symbol in almost all places. But there appears to be no reference to anywhere about spectacles . Does it mean that eye sight those days needed no assistance or help even after advanced old age? Or is it a later necessity which has become unavoidable for the present age when we are born and brought up in artificial bright lights?

R G Prabhu, Kodungallur, 11-1-1982

–subham–

tags– wheel, mirror, metals, machines 

நடந்தவை தான் நம்புங்கள்! – 14: மூன்று விளையாட்டு வீரர்கள்!(9475)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9475

Date uploaded in London – –  –10 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள்! – 14

ச.நாகராஜன்

மூன்று விளையாட்டு வீரர்கள்!

1  

நீ பாதி, நான் பாதி, நண்பா!

1916ஆம் ஆண்டு பெர்லினில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. ஜப்பானைச் சேர்ந்த இரண்டு போல் வால்ட் வீரர்கள் (Poe Vaulters) அதில் கலந்து கொண்டனர். ஷுஹெரி நிஷாடா மற்றும் சுயி ஓ (Shuhei Nishada and Sueo Oe) என்ற பெயருடைய அந்த இரு வீரர்களும் ஒரே உயரத்தைத் தாண்டினர். முதல் இடத்தைப் பிடித்தவர் எர்ல் மெடோஸ் (Earl Meadows) என்பவர். அவர் தங்க மெடலைத் தட்டிச் சென்றார். அடுத்தாற் போல இந்த இரு வீரர்களும் இரண்டாவதாக இருந்தனர். இருவரும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டனர். நிஷிடாவே வெள்ளி மெடல் பெற இரண்டாவதாக அறிவிக்கப்படலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். மூன்றாவதாக வெங்கல மெடலை சுயி ஓ பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இருவரும் ஜப்பானுக்குத் திரும்பினர்.

அங்கு உண்மையிலேயே யார் இரண்டாவது இடத்தைப் பெறத் தகுதியானவர் என்று பார்த்து விடலாம் என்று எண்ணினர். இருவரும் மீண்டும் மீண்டும் முயன்ற போதும் கூட ஒரே உயரத்தையே தாண்டினர். இறுதியாக இருவரும் தங்கள் வெள்ளி மற்றும் வெங்கல மெடல்களை ஒரு பொற்கொல்லரிடம் கொடுத்துப் பாதியாக வெட்டச் சொன்னார்கள். பிறகு அதை ஒட்டச் சொன்னார்கள். எப்படி என்றால் ஒட்டிய புதிய ஒலிம்பிக் மெடலில் ஒரு பாதி வெள்ளி, மறு பாதி வெங்கலம். இப்படி  ஒரு தனித்துவம் மிக்க ஒலிம்பிக் மெடல்கள் இவை தாம்!

2

19 ஒலிம்பிக் மெடல் வென்ற ‘கவனக்குறைவு வியாதி கொண்ட வீரர்!

மைக்கேல் பெல்ப்ஸ் (Michael Fred Phelps) உலகம் இதுவரை கண்டிராத அபூர்வ நீச்சல் வீரர். ஒரு ஒலிம்பிக் விளையாட்டில் 8 தங்க மெடல்களை ஒருவர் வெல்லக் கூடும் என்பதை யாராலும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. அவர் அதைச் செய்து காட்டினார். அமெரிக்கரான பெல்ப்ஸ்

30-6-1985 அன்று பிறந்தவர்.

2008ஆம் ஆண்டு பீகிங் ஒலிம்பிக்கில் 8 தங்க மெடல்களை அவர் வென்றார். இவரது சாதனைப் பட்டியல் மிக நீண்ட ஒன்று.

மொத்தம் 28 ஒலிம்பிக் மெடல்களை அவர் வென்றார். அதில் 23 தங்க மெடல்கள்! இதில்  முக்கியமான விஷயம் என்னவெனில் அவர்  7 வயது

சிறுவனாக இருந்த போதே ஏடிஹெச்டி (ADHD – Attention Deficit Hyper activity Disorder – கவனக்குறைவு மிகை இயக்கக் குறைபாடு ) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சையும் பெற்றார். ஆனால், அவர் தான் எடுத்துக் கொண்ட விஷயத்தில் மிகவும் ஒருமுனைப்பட்ட சக்தியைக் காண்பித்து ஒவ்வொரு போட்டியிலும் வென்றார்.

மன வியாதி கொண்டாலும் கூட ஒருவர் சாதித்துக் காட்ட முடியும் என்பதை நிரூபித்த அவர் தனக்கென ஒரு வெற்றி பார்முலாவை உருவாக்கிக் கொண்டிருந்தார். அதாவது நீச்சல் போட்டி ஆரம்பமாகும் முன்னரேயே தான் வெற்றி பெற்றதாக மனக் கண்ணில் கண்டு அதை அப்படியே நிஜமாக்கிக் காட்டுவார்.  ஒரு குறிக்கோளை எண்ணினால் அதை அடைய வெறி கொண்டால் போதும் வெல்லலாம் என்பதே அவரது வெற்றி பார்முலா!

3

ஃபுட் பால் மேட்ச் டிக்கட் வாங்க நின்று கொண்டிருந்தவரை  ‘வாங்க வேண்டாம் என்று தடுத்தார் அவர் நண்பர்.

‘ஏன் என்று கேட்டார் டிக்கட் வாங்கப் போனவர்.

‘ஏனென்றால் விளையாட்டு ஆரம்பிக்கும் முன்னாலேயே எனக்கு என்ன ஸ்கோர் என்று தெரியும் என்றார் நண்பர்.

ஆச்சரியப்பட்டுப் போய், “அப்படியா, என்ன ஸ்கோர்? என்று கேட்டவருக்கு வந்தது பதில்.

“0-0”

tags– நடந்தவை -14:, விளையாட்டு வீரர்கள்,

—subham—

எலி கடிக்குது நெசவு நூலை ! கவலை கடிக்குது என் மனதை ! –ரிக்வேதம் ( Post No. 9474)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9474

Date uploaded in London – –9  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எலி கடிக்குது நெசவு நூலை ! கவலை கடிக்குது என் மனதை !

TRUE HINDUS AND TRUE TAMILS NEVER DELETE THE AUTHOR’S NAME AND BLOG’S NAME

BY LONDON SWAMINATHAN

உலகிலேயயே பழமையான நூல் ரிக்வேதம் ; ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்கா தர திலகரும் கி.மு 4500 க்கு முந்தையது என்று வான சாஸ்திர ரீதியில் காட்டினார்கள். வில்சன் முதலானோர் கி.மு.2000 என்றனர். மாக்ஸ்முல்லர் முதலில் கி.மு 1200 என்று சொல்லி மற்ற அறிஞர்களிடம் செமை அடி வாங்கிய பின்னர் இது கி.மு. 1500 க்கு முந்தையது; எவரும் இதன் காலத்தைக் கணிக்கவே முடியாது என்று சொல்லி ‘ஜகா’ வாங்கினார்.

துருக்கி-சிரியா எல்லையில் பொகஸ்கொய்  (Bogazkoy Inscription) என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் படிவ கியூனிபார்ம் கல்வெட்டும் ரிக் வேத தெய்வங்களை அதே வரிசையில் குறிப்பிடுவதால் தொல்பொருட் துறை ஆதாரமும் கிடைத்துவிட்டது. இப்போது சந்தேகப் பேர்வழிகளும் , இந்து மத விரோதிகளும் கூட  கி.மு 1700 என்று கதைக்கத் துவங்கியுள்ளனர்!

ரிக் வேதம் அற்புதமான கவிதைத் தொகுப்பு ஆகும். அதிகமான உவமைகள் தாய்க்கும் தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள அன்பு, பாசம், நேசம் குறித்துப்  பேசுகின்றன .

ஒரு சில உவமைகளை இப்போது படித்து ரசிப்போம்.

***

புலவர்/ ரிஷி காதினன் விசுவாமித்திரன் பாடுகிறார் :–

நதிகள் இடையே உரையாடலாகவும் , இந்திரன் மீதான துதியாகவும் இந்தப் பாடல் அமைந்துள்ளது

“ஏய் , புலவா ! மறந்துவிடாதே;, நீ எங்களுடன் நடத்திய உரையாடலை மறந்து விடாதே! வருங்கால சந்ததியினர் இதைப் போற்றி பாடப்போகிறார்கள் .

“புலவரே , கவிதைகள் /சூக்தங்கள் மீதுள்ள உன் ஆர்வத்தை எங்களுக்கும் சொல் ; மனிதர்களுக்கு இடையில் எங்களைத் தாழ்த்தி, மட்டம்தட்டிப் பாடி விடாதே ; உனக்கு வணக்கம்” . இவ்வாறு நதிகள் சொல்கின்றன.

உடனே விசுவாமித்திரர் பாடுகிறார் …

நதி சகோதரிகளே! உங்களைப் பாடுகிறேன் ; அன்போடு கேளுங்கள்; நான் தொலை தூரத்திலிருந்து தேரில் வந்து இருக்கிறேன். நீங்கள் தாழ்ந்து வணங்குங்கள்  சுலபமாய் உங்களைத் தாண்ட உதவுங்கள் . உங்கள் நீரோட்டம் என் தேர்ச் சக்கரத்தின் அச்சுக்கும் கீழே இருக்கட்டும்.”

உடனே நதிகள் பதில் சொல்கின்றன

“புலவா , நீ சக்கரம் உடைய தேரோடு வந்திருப்பதை நாம் அறிவோம். . நீ தொலைவிலிருந்து வந்ததாகச் சொன்னதையும் நாங்கள் செவி மடுக்கிறோம்

நாங்கள் குழந்தைக்கு  பாலூட்டும் தாய் போலவும் , காதலன் கட்டி அணைக்க வசதியாக தாழத்தணியும் இளம் அழகி போலவும் உனக்கு உதவி செய்வோம்”.

ரிக் வேதம் 3-33-8/9

இப்படி உரையாடல் நீடிக்கிறது

இதுபற்றி வேதங்களுக்கு பாஷ்யம் எழுதிய சாயனர் ஒரு கதையும் சொல்கிறார் :-

இங்கே விபாஸா , கதுத்ரி என்ற இரண்டு நதிகள் பாடப்படுகின்றன. விசுவாமித்திரர் ஒரு மன்னர். அவர் நிறைய செல்வத்தை ஈட்டிக்கொண்டு இவ்விரு நதிகளும் கூடும்  இடத்திற்கு வந்தபோது இதைப் பாடினார் . இது கவிதை அழகு மிகவும் நிறைந்தது .

விபாஸ என்பது இப்போது பியாஸ் என்று அழைக்கப்படுகிறது. இதை வியாஸ நதியின் மரூஉ என்றும் செப்புவர். கதுத்ரி என்பது அமிர்தசரஸ் நகரின் தெற்கில் பாயும் நதியாக இருக்கலாம் என்றும் யூகிப்பர்

கவிதையை முழுதும் படித்து அனுபவியுங்கள் !

***

என் கருத்துக்கள் :–

என்ன அற்புதமான கவிதை ! இயற்கை பற்றிய வருணனையும் காதலன்-காதலி அன்பும், தாய்ப்பால் ஊட்டும் தாயின் அன்பும் உவமைகளாக வருகின்றன. எந்த அளவுக்கு   வேத கால இந்துக்கள் பாசமும் நேசமும் கொண்டனர் என்பதை இந்தப் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.

அது மட்டுமல்ல; வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று எழுதிய அழுக்கு மூஞ்சிகளின் முகத்தில் கரி பூசுகிறது . எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கவிதையை “எதிர்கால மக்கள் பாடப்போகிறார்கள்” என்று நதியின் கூற்றாக புலவன் சொன்னது எவ்வளவு உண்மையாயிற்று! ஹெர்மன் ஜாகோபி, திலகர் கணக்குப்படி 6500 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கட்டுரையை நாம் ரசித்துக் கொண்டு இருக்கிறோம். ‘பொய்யா நாவுடையோர் புலவர்’ என்பது மெய்யாகிப் போயிற்று . இதற்கு இணையான கவிதையை நான் எங்கும் படித்ததில்லை ( லண் டன் சாமிநாதனாகிய நான் 27,000+++ வரிக ளையுடைய 18 சங்க கால நூல்களையும், எட்டு ஆண்டுகளுக்கு, இரு முறை வாசித்துள்ளேன். அவற்றின் மீது நூற்றுக் கணக்கான கட்டுரைகளை இதே பிளாக்கில் எழுதியுமுள்ளேன்)

‘பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்றும், ‘அம்மையே அப்பா ! ஒப்பிலா மணியே’ என்றும் மாணிக்கவாசகர் பாடியது இந்த வேத மந்திரத்தைப் பயின்றதால் தானோ!

xxxx

ஐயோ ஐயோ எலி கடிக்குது நெசவு நூலை !

இன்னொரு கவிதையையும் பார்ப்போம். இது நெசவாளர் உவமையைத் தருகிறது. வேத கால இந்துக்கள் என்ன தொழில் செய்தனர் என்பது மிக நீண்ட பட்டியல். ஆனால் அவர்களை நாடோடி என்று சொன்னவர்களுக்கு ‘செமை அடி, மிதி அடி’ கொடுக்கும் பாடல் இது. கவலையில் வாடிய ஒரு புலவனின் புலம்பல். நம்மில் எவருக்கேனும் கவலை இல்லாத வாழ்வு இருந்து இருக்கிறதா ?

கவசன்  ஐலுசன் என்ற புலவர் விஸ்வே தேவர்களை — பல கடவுளரை — நோக்கிப் பாடுகிறார் …

ரிக் வேதம் 10-33-3

“என்னுடைய இருபுற விலா எலும்புகளும் சக்களத்திகளைப் போல ( இரட்டை மனைவி) நோவு கொடுக்கின்றன. என் மனமோ வேடனால் அச்சுறுத்தப்பட்ட பறவை போல படபடக்கிறது நோயும் பசியும், வெறுமையும் என்னை வாட்டுகின்றன.; கவலைகள் நூலைக் கடித்துக் குதறும் எலிகளைப் போல என்னை தின்கின்றன. இந்திரனே, மகவானே, சதக்ரதுவே! ; எங்களுக்கு நிறைய செல்வத்தைத் தந்து ஒரு தந்தை போல கவனித்துக்கொள்.” 

இதைப் படிக்கும்போது சங்க காலக் கவிதைகளில் வரும் வறுமையில் வாடிய பாணர்கள் நினைவுக்கு வரும். எல்லா காலங்களிலும் மனித குலத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்தன. கிருஷ்ண பரமாத்மா மாளிகையில் வசித்தபோது, அவருடைய கிளாஸ்மேட்  classmate குசேலர்/ சுதாமா குடிசையில் வறுமையில் சோற்றுக்கு ‘லாட்டரி அடித்ததை’ , ‘தாளம் போட்டதை’ நாம் அறிவோம். அதே போல இந்த நெசவாளர்  காலனி குடும்பமும் வறுமையில் வாடிற்று ; அப்பாவைப் போல  என்னைக் கவனித்துக் கொள் என்ற உவமை அக்கால குடும்பங்களில் நிலவிய  பாச பந்தங்களை எடுத்துக் காட்டுகிறது .

இப்படி எவ்வளவோ கவிதைகள் உள்ளன  கவிதை வேட்டையைத் தொடர்வோம் .

நெசவாளர் இடையே, வறுமையில் வடிய புலவர் போலும் அல்லது அவர்களுடைய வறுமையை பிரதிநிதித்வப் படுத்த(to represent the poor weavers)  பாடினார் போலும் !

கவலைங்களும் வறுமையும் மறையட்டும்!!

–subham–

TAGS- எலி, கடிக்குது ,நெசவு, கவலை ,ரிக்வேதம், நூல், மனது ,