உலக இந்து சமய செய்தி மடல் 11-4-2021 (Post No.9481)

KASI VISWANATHAR TEMPLE

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9481

Date uploaded in London – –11  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று APRIL   11 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

Xxxx

அரசின் கட்டுப்பாட்டில் இருந்து 51 கோயில்கள் விடுவிப்பு: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு

உத்தரகண்டில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதாக அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார்.

உத்தரகண்டில் புதிய முதல்வராக பொறுப்பேற்ற தீரத் சிங் ராவத், சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின்போது, ‘சார் தாம் தேவஸ்தானம்’ மேலாண்மை மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு கவர்னர் பேபி ராணி மவுரியா, ஒப்புதல் வழங்கியதை அடுத்து, மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார். இதில், பத்ரிநாத், கேதர்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி உள்ளிட்ட கோயில்களும் அடங்கும்.


‘உத்தரகண்ட் மாநிலம் போன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களையும், அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது:உத்தரகண்ட் மாநில அரசு, 51 கோவில்களை, அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துள்ளது. இது, மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில், அரசு கட்டுப்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கோவில்கள், மீண்டும் சமூகத்திடமே வழங்கப்பட்டுள்ளன. இது, மிகப்பெரிய முன்னேற்றம்.கோவில்கள், பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை, உத்தரகண்ட் அரசு உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது


உத்தரகண்ட் அரசின் அறிவிப்பை பாரதீய ஜனதா கட்சி  மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி வரவேற்றுள்ளார்.

XXXX

காசி கோவில் பகுதியில் தொல்பொருள் ஆய்வு   நடத்த நீதிமன்றம் உத்தரவு

வாரணாசியில், விஸ்வ நாதர் கோவில் – ஞானவாபி மசூதி அமைந்துள்ள வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பாரதீய ஜனதா கட்சி  ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர், வி.எஸ்.ரஸ்தோகி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

வாரணாசியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காசி விஸ்வநாதர் கோவில், முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் இடித்து தள்ளப்பட்டது. அங்கு, மசூதி கட்டப்பட்டுள்ளது. இது வரலாற்று பூர்வமான உண்மை.

முகலாயர் ஆட்சி முடிந்த பின்,மசூதிக்கு அருகே, விஸ்வநாதர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. அதனால், காசி விஸ்வநாதர் கோவில், ஞானவாபி மசூதி வளாகத்தை, ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த வளாகத்தில், தொல்பொருள் ஆய்வு நடத்தினால், விஸ்வநாதர் கோவில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கும். அந்த வளாகத்தில் தான், கோவிலை இடிக்கும் போது இருந்த, விஸ்வநாதர் லிங்கமும் புதைக்கப்பட்டுள்ளது. என கூறப்பட்டு இருந்தது.



தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள, மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல ஆண்டுகளாக, இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.  தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கான செலவை, மாநில அரசு ஏற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதை வரவேற்று பலரும் சமூகவலைதளமான டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து தான் ஞான வாபி மசூதியை கட்டினார் என்பதை பலரும் சுட்டிக்காட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்

XXXXX

ஆஞ்சநேயர் பிறப்பிடம்: யுகாதி வருடப்பிறப்பில் ஆதாரங்கள் வெளியிடப்படும்

ஆஞ்சநேயர் பிறப்பிடம், திருமலையில் உள்ள அஞ்னாத்திரி மலைத் தொடர் என்பதற்கான ஆதாரங்களை, தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி அன்று வெளியிட உள்ளதாக, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் குடியிருக்கும் திருமலை, ஆஞ்சநேயரின் பிறப்பிடமாகவும் அடையாளம் காணப்பட உள்ளது. இதுகுறித்து பல புராண இதிகாசங்களை ஆராய்ந்து அறிய, ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை, திருமலை தேவஸ்தானம் அமைத்தது. அவர்களும், பல புராணங்கள், கிரந்தங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து உள்ளனர்.


அதன்படி, ஆஞ்சநேயர், சேஷாசல மலையில் உள்ள அஞ்னாத்திரியில் பிறந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு தகவல்களை, வரும், 13ம் தேதி தெலுங்கு வருட பிறப்பான யுகாதி அன்று தேவஸ்தானம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.

ஆஞ்சனேய பக்தர்கள் இதை ஆவலுடன்  எதிர்பார்த்து நிற்கின்றனர். ஏற்கனவே வேறு சில மாநிலங்கள்  தங்கள் மாநிலத்தில்தான் அநுமன் பிறந்தான் என்று அறிவித்துள்ளன . தகவல் வெளயான பின்னர் ஞான மயம் குழு அதை  விரிவாக வெளியிடும் .

XXXX

கொரோனா பரவல் – புகழ்பெற்ற கோவிலில் தரிசனம் முழுவதும் ரத்து!!

கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சீரடி சாய் பாபா கோவிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோவிலும் ஏப்ரல் 30ம் தேதி வரை மூடப்படுகிறது

ஆந்திரத்திலுள்ள திருப்பதி பாலாஜி கோவிலிலும் இலவச தரிசனம் ரத்தாகிறது

ஏப்ரல் 11 ஆம் தேதி இரவுடன் இலவச தரிசனம் முடிவடையும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. மேலும் நாளொன்றுக்கு 300 ரூபாய் டிக்கெட் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

xxxx

காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை கட்டமைக்க மத்திய அரசு திட்டம்

அயோத்தியிலிருந்து, காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை, உத்தர பிரதேசத்தில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பாரதீ ய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட ம் என்ற இடத்துக்கு முதலில் சென்றார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலிருந்து, சித்ரகூட்டிற்கு ராமர் சென்ற பாதையை, ‘ராம் வன் காமன் மார்க்என்ற பெயரில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.அயோத்தியிலிருந்து, 210 கி.மீ., துாரத்தில் உள்ள சித்ரகூட்டிற்கு, பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜெத்வாரா, ராஜாபூர் வழியாக தனிப்பாதை கட்டமைக்கப்பட உள்ளதுஎன, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமாயணத்தில், ராமபிரான், 14 ஆண்டுகள் காட்டில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பல பகுதிகள், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளன.  மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வர்; காங்கிரசைச் சேர்ந்த பாஹெல் ஆகியோரும், தங்கள் மாநிலங்களில் ராமர் காட்டுக்கு சென்ற பாதையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

XXXX

மதுரை சித்திரை திருவிழா ரத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாத திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்.

கடந்தாண்டு கொரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற இருந்த சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.

கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா பரவல் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. எனவேதான் கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரை சித்திரை திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டைப்போல் கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடைபெறும்.” என்றார்.

XXXX

‘கோயில் அடிமை நிறுத்து’ இயக்கம்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவு

 கோயில் அடிமை நிறுத்துஇயக்கத்திற்கு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மனிதனை நல்வழிப்படுத்துவதில் முக்கிய கேந்திரங்களாக கோயில்கள் உள்ளன. கோயில் கட்டுவதற்கு பூமியை தேர்ந்தெடுத்தல் துவங்கி சூரியன், சந்திரன் இருக்கும் வரை அங்குள்ள விக்ரகங்கள் சக்தியுடன் விளங்க வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் மிகவும் அக்கறை செலுத்தியுள்ளனர்.

கோயில்களை முழுமையாக பராமரிக்க முடியாத நிலை தற்போது நிலவுகிறது. நம்முடைய பெருமைகளை காப்பாற்றுவதில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. காவிரி அன்னையை பாதுகாக்கவும், திருக்கோயில்களை பராமரிக்கவும் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தற்போது பெரும் முயற்சி எடுத்து வருகிறார். 3 கோடி மக்களை ஒருங்கிணைத்து இந்த திருக்கோயில் அடிமை நிறுத்துஇயக்கம் மூலம் விமோசனம் அளிக்க முயற்சிக்கிறார்.


தர்ம சிந்தனை உள்ள பெரியவர்கள், ஆன்மிக அறிஞர்கள், சாஸ்திரம் அறிந்தவர்கள், பக்தர்கள், பொதுமக்கள், ஆன்றோர், சான்றோர் பொறுப்பில் கோயில்கள் வர வேண்டும். எந்த நோக்கத்திற்காக கோயில்கள் உருவாக்கப்பட்டனவோ அவற்றை நவீன அறிவியல் உதவி கொண்டு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். திருப்பதி நிர்வாகம் போன்று கலை வளர்க்கும், கல்வி வழங்கும் நிலையங்களாக கோயில்கள் மாற வேண்டும்.

கோயில்களை பாதுகாக்க துவங்கப்படும் இந்த முயற்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்

xxxxx

கீதா பிரஸ்தலைவர் காலமானார்

கீதா பிரஸ்தலைவர் ராதேஷியாம் கெம்கா, 87 வயதில் , காலமானார்.உத்தர பிரதேச மாநிலம் கோ ர க்பூரில், 1923 முதல் செயல்பட்டு வரும் அச்சகம், கீதா பிரஸ்.

பகவத் கீதை, ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் உள்ளிட்ட ஹிந்து மத புத்தகங்களை அச்சடித்து, குறைந்த விலையில், கீதா பிரஸ் விற்பனை செய்து வருகிறது. கீதா பிரஸ் தலைவர் ராதேஷியாம் கெம்கா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர் இறந்தார். அவரது மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் 38 ஆண்டுகளுக்கு கல்யாண் என்ற பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தி வந்தார் .

xxxx

இன்னும் ஒரு துயரச் செய்தி

சைவ உலகில் புகழ் பெற்ற சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி என் ராமச்ச ந்திரன் காலமானார்.வழக்கறிஞ ராக  வாழவைத் துவங்கியபோதும் தமிழ் இலக்கிய சேவை மூலம் பிரபலமாகி டாக்டர் பட்டம் பெற்றார். சைவ சமயத் துறையில் பெரும் புலமை பெற்ற அவர் சைவ நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இரு மொழிகளிலும் சொற்பொழிவாற்றி தமிழுக்கும் சைவத்துக்கும் சேவை ஆற்றினார். பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் பாடல்கள் அப்பர் தேவாரம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். லண்டனுக்கு பல முறை விஜயம் செய்த அவர், இங்கு வாழும் தமிழ் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.

கீதா பிரஸ் உரிமையாளர் ராதேஷியாம் குடும்பத்துக்கும் டாக்டர் டி .என் ஆர் . குடும்பத்துக்கும் ஞான மயம் குழுஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவிக்கின்றது

XXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags-Tamil Hindu, News Roundup, 11421