உலக இந்து சமய செய்தி மடல் 15-8-2021 (Post No.9979)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9979

Date uploaded in London – 15 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை AUGUST 15  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

நேயர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்

XXXX

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்-

58 பேருக்கு பணிநியமன ஆணை



அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 1972ல் சட்டம் கொண்டு வந்தார். தற்போதைய திமுக அரசு இதனை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சி எடுத்தது.


இதையடுத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணையை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 14- ஆம் தேதியன்று, வழங்கினார்.

மேலும் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், ஓதுவோர் உள்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.

தமிழில் அர்ச்சனை புதிதல்ல‘ : ஹிந்து அறநிலையத் துறை கமிஷனர் விளக்கம்

‘கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் முறை, புதிதாக வந்ததல்ல’ என, ஹிந்து அறநிலையத் துறை கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார்.


‘கோவில்களில், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய, சட்ட உரிமை உள்ளதா’ என்று கேள்வி எழுப்பிய, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவருக்கு, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் அளித்துள்ள பதில்: தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம், புதிய திட்டம் இல்லை. இத்திட்டம், 1974ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 1996ல் புத்துயிர் பெற்றது. 1974, 1998 ஆண்டுகளில், இத்திட்டத்தை எதிர்த்து, பல வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில், 1992ல் புகார்தாரர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சார்பில் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, கோவில்களில் ஆகம விதிப்படி சமஸ்கிருத வழிபாடு உள்ளது. அதேநேரம், ஒப்பற்ற தமிழ் பக்தி இலக்கியமான தேவாரம், திருவாசகமும் ஏற்கப்பட்டது. தமிழில் அர்ச்சனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இருப்பினும், ஆகம ரீதியான அர்ச்சனைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோருக்கு, அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Xxxx

பொங்கல் வைத்து தலையில் சுமந்து அம்மனுக்கு படைத்த கவர்னர் தமிழிசை

தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை, பொங்கல் வைத்து தலையில் சுமந்து, அம்மனுக்குப் படைத்து வழிபட்டார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராகவும் உள்ளார். தமிழகத்தில் ஆடிப் பண்டிகை கொண்டாடுவது போல் தெலங்கானாவில் “போனாலு” என்ற கலாச்சாரப் பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் நிறைவு விழா ஆடி அமாவாசை அன்று நடக்கும். அந்நிகழ்வில் பங்கேற்க ஆளுநர் தமிழிசை தெலங்கானா சென்றுள்ளார்.

தெலங்கானா ராஜ்பவனில் ஆடி அமாவாசையன்று நடைபெற்ற போனாலு திருவிழாவில் பெண்கள் பொங்கல் வைத்து, தலையில் சுமந்து சென்று அம்மனுக்குப் படைத்து வழிபட்டனர்.

அதையடுத்து அவர் பாரம்பரிய முறைப்படி போனாலு பூஜையில் பங்கேற்றார். அவர் ராஜ்பவனில் பொங்கல் வைத்து, அதைத் தலையில் சுமந்து சென்று அம்மனுக்குப் படையலிட்டு வழிபட்டார்.

xxxxxxx

காஷ்மீரில் கீர்பவானி துர்கா கோவிலில் ராகுல் வழிபாடு

காஷ்மீர் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று, கந்தர்பல் மாவட்டத்தின் துல்முல்லாவில் உள்ள கீர்பவானி துர்கா கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார். அத்துடன் ஹஸ்ரத்பல் தர்காவிலும் பிரார்த்தனை செய்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமதுவின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காஷ் மீருக்கு வந்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை ராகுல் காந்தி திறந்து வைத்து தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.  

XXXX

முதல்வர் மனைவி திருமலையில் வழிபாடு

திருப்பதி/திருமலை பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, ஆகஸ்ட் 8ம் தேதி  காலை குடும்பத்தினருடன் வழிபட்டார்.

ஆகஸ்ட் 7-ம் தேதி  இரவு குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர், காலை, ‘வி.ஐ.பி., பிரேக்’ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், வேத ஆசீர்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து, தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கினர்.

xxxxx

திருப்பதி கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ. 55.5 கோடி

திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.55 கோடியே 58 லட்சம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

ஜூலை மாதம் கிடைத்த வருமானம் குறித்து திருமலை, திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 5 லட்சத்து 32 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஜூலை மாத உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.55 கோடியே 58 லட்சம் கிடைத்தது. இ.உண்டியல் மூலமாக ரூ.3 கோடியே 97 லட்சம் கிடைத்தது. 35 லட்சத்து 26 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

7 லட்சத்து 13 ஆயிரம் பக்தர்களுக்கு தறிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கி உள்ளனர். 

Xxxx

வங்க தேசத்தில் அட்டூழியம்; 4 இந்துக் கோவில்கள் சூறை

வங்கதேசத்தில் நான்கு ஹிந்து கோவில்களை சூறையாடியதாக 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ருப்ஷா உபசிலா மாவட்டம் ஷியாலி நகரில், இரு மதத்தினர் இடையே சமீபத்தில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு கும்பல் அங்குள்ள ஹிந்து கோவிலுக்குள் புகுந்து கடவுள் சிலைகளை சேதப்படுத்தியது. இதையடுத்து ஷியாலி புர்பபரா பகுதிக்குச் சென்ற கும்பல் ஹரி மந்திர், துர்கா மந்திர், கோவிந்தா மந்திர் ஆகிய கோவில்களில் புகுந்து அங்கிருந்த கடவுள் சிலைகளை சூறையாடியது. அப்போதும் வெறி அடங்காமல் ஹிந்து சமூகத்தினரின் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தினர். இந்த வன்முறை தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து இமாம் மவுலானா நசிமுதின் கூறியதாவது:மசூதியில் தொழுகை நடக்கும்போது சிலர் பஜனை பாடல்கள் பாடி வந்தனர். அவர்களிடம் தொழுகை நடக்கும் போது பஜனை வேண்டாம் என்றேன். அப்போது ஒருவர் என்னை தள்ளியதால் வாய்த் தகராறு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டை ருப்ஷா உபாசிலா பூஜா உத்ஜபன் பரிஷத் பொதுச் செயலர் கிருஷ்ண கோபால் சென் மறுத்துள்ளார். ”இமாமை யாரும் தள்ளவில்லை. வாய்த் தகராறு முடிந்த பின் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர் கள் இங்கு வந்து கோவில்கள், கடைகள், வீடுகளை சூறையாடினர்,” என்றார்.

Xxxxxxx

ராமர் கோவில் கட்டுமானத்தை பக்தர்கள் பார்க்க அனுமதி

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, அடித்தளம் அமைக்கும் பணி 60 சதவீதம் முடிந்து விட்டது.

கோவிலின் கட்டுமான பணிகளை பார்க்க அனுமதிப்பது என ராமர் கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

இதற்காக, தற்காலிக கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு சுவர் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில், துவாரங்களுடன் கூடிய 15 அடி அகல இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. அந்த வேலிக்கு பின்னால் இருந்தபடி, கட்டுமான பணிகளை பக்தர்கள் பார்க்கலாம்

என்று அறக்கட்டளை நிர்வாகி சம்பத்ராய் தெரிவித்தார்.

Xxxx

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் முக்தி அடைந்தார்


77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் , உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர்  பொருத்தப்பட்டது.

மதுரை ஆதீனத்தின் உயிர் வெள்ளிக் கிழமை இரவில் பிரிந்தது.

தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு தமிழக முதல்வர்.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

XXXX

மதுரை ஆதீனத்தின் புதிய 293வது குருமகா சன்னிதானம் தேர்வு.

ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் நியமிக்கபட்டுள்ளார். சிலநாட்கள் சென்ற பின்பு ஆதினப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.

xxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

 tags- Tamil hindu, Newsroundup, 1582021

உலக இந்து சமய செய்தி மடல் 25-7-2021 (Post No.9893)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9893

Date uploaded in London –25 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 25 -ஆம் தேதி —  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

அரசு கட்டுபாட்டிலிருந்து  கோவில்களை  விடுவிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்

அரசு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களை விடுவிக்க வழிவகுக்கும் சட்டத்தை இயற்றக்கோரி, மத்திய அரசை, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

ஹரியானாவின் பரிதாபாதில் நடந்து முடிந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில், இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது:தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு கட்டுப்பாட்டின்கீழ் பல கோவில்கள் உள்ளன.கோவில்களில் யார் பூஜை செய்ய வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை, அரசு ஏன் தீர்மானிக்க வேண்டும்?

எனவே, அரசு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களை ஹிந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.அதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதேபோல் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்படுவதை தடுக்கும் கடுமையான சட்டத்தை இயற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

XXXX

இந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த பாதிரியார் கைது

இந்து கடவுளை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை கண்டித்து அருமனையில் அருமனை கிறிஸ்தவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை, முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்து கடவுள், , பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என பலர் குரல் எழுப்பினர்.

இந்நிலையில் சென்னைக்கு காரில் 4 பேருடன் தப்பி செல்கிறார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை கருப்பாயூரணி அருகே சோதனை நடத்திய போது ஒரு காரில் பாதிரியார் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் கைது செய்தனர்.


சென்னை சென்று வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.



பாதிரியாருக்கு உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து அவர் பாளையம்கோட்டை சிறையிலுள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கடைசியாக வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

xxxx

உடுப்பி அருகே ரூ.2 கோடியில் விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழில் அதிபர்

உடுப்பியில் ஒரு கிறிஸ்தவ தொழில் அதிபர் ரூ.2 கோடி செலவில் விநாயகர் கோவிலை கட்டி அந்த கோவிலை இந்து பக்தர்களுக்கு அர்ப்பணித்து சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டி உள்ளார். 

அதுபற்றிய விவரம் வருமாறு:-

உடுப்பி மாவட்டம் சிருவா பகுதியை சேர்ந்தவர் கேபிரியல் நாசரேத் (வயது 77). இவர் தொழில் அதிபர் ஆவார். கேபிரியலின் தந்தை பேபியன் செபஸ்டின் உயிரிழப்பதற்கு முன்பு கேபிரியலுக்கு 15 சென்ட் நிலத்தை கொடுத்து இருந்தார். பின்னர் உடல்நலக்குறைவால் செபஸ்டினும், அவரது மனைவி சபீனாவும் உயிரிழந்து இருந்தனர்.

ரூ.2 கோடி செலவில்….

இந்த நிலையில் தனது தந்தை, தாயின் நினைவாக 15 சென்ட் நிலத்தில் ஒரு விநாயகர் கோவிலை கட்ட கேபிரியல் முடிவு செய்தார். அதன்படி ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோவிலையும், அதன் அருகே அர்ச்சகர் தங்க ஒரு வீட்டையும் கேபிரியல் கட்டி முடித்தார்.அந்த கோவிலுக்குள் 36 அங்குலம் விநாயகர் சிலை உள்ளது. பின்னர் அந்த கோவிலை இந்து பக்தர்களுக்கு அவர் அர்ப்பணித்தார். இந்த கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு கேபிரியலின் நண்பர்களான சதீஷ் ஷெட்டி, ரத்னாகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

நண்பர்களுக்காக…

இதுகுறித்து கேபிரியல் கூறும்போது, நான் கடந்த 1959-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்ததும் வேலைக்காக மும்பைக்கு சென்றேன். மும்பையில்  சித்தி விநாயகர் கோவிலுக்கு தினமும் செல்வேன். அப்போது எனக்கு சொந்த செலவில் விநாயகர் கோவில் கட்ட வேண்டும் என்று ஆசை வந்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சிருவாவுக்கு வந்த நான் கோவிலை கட்ட முடிவு செய்து தற்போது கட்டி முடித்து இந்து நணபர்களுக்கு அர்ப்பணித்து உள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

XXXX

கோவில் யானை பராமரிப்பு; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


-கோவில் யானைகளை பெரிய இடங்களில், இயற்கை சூழலில் பராமரிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழக கோவில்களில் 34 யானைகள், புதுச்சேரியில் உள்ள கோவிலில் ஒரு யானையும் பராமரிக்கப்படுகிறது. அறநிலையத் துறையின் அலட்சியத்தால், 2016 முதல், 2019 வரை, மூன்று கோவில் யானைகள் இறந்தன.

உடல் பருமன், காலில் ஏற்படும் பிரச்னையால், யானைகள் இறக்கின்றன.கோவில் யானைகளை நடை பயிற்சிக்கு கூட்டிச் செல்வதில்லை; முறையான உணவு வழங்கப்படுவது இல்லை., கோவில் அருகில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில், யானைகளை பராமரிக்க வேண்டும். ஆண் யானைக்கு துணையாக, பெண் யானையையும் பராமரிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், விசார ணைக்கு வந்தது. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Xxxx

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ 37 கோடியில் தொங்கு பாலம்

கன்னியாகுமரி; சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 140 மீட்டர் தூரத்திற்கு கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் தொங்கு பாலம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே 140 மீட்டர் தூரத்திற்கு தொங்கு பாலம் அமைக்கப்படும்

இதற்காக ரூ.37 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவே பாலம் அமைக்க வேண்டியிருப்பதால் சென்னை ஐஐடி பேராசிரியர்களின் கருத்துகளையும் கேட்டுள்ளோம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சுற்றுலா மாளிகை கட்டப்படும்.

xxxxxxx

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள்



திருப்பதியின்புனிதத் தன்மை, இயற்கை சுற்றுச்சூழலையை பாதுகாக்கவும் தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. ஆயினும் பக்தர்கள் பலர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கொண்டு வருகின்றனர்.


அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் உடைமைகள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் இருந்தால் அங்கேயே அப்புறப்படுத்த ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் பக்தர்கள் பயன்படும் வகையில் குடிநீர் தொட்டி ஆங்காங்கே அமைக்கப் பட்டுள்ளது. அதன் அருகில் கோப்பைகள், டம்ளர்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை தினசரி சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே பக்தர்கள் குடிநீர் தேவைக்காக அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.

Xxx

திருப்பதியில் DRONE டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம்: தேவஸ்தானம் முடிவு

திருப்பதி கோயிலை Drone டுரோன் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், டிஆர்டிஓD R D O தயாரித்துள்ள டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

தொழில்நுட்ப செயல் விளக்க கூட்டம், கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 6 ம் தேதி நடந்தது. முப்படை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு துறை தலைவர் கோபிநாத்தும் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து, அந்த drone டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை வாங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அத்துமீறி வரும் டுரோன்களை கண்டுபிடித்து, அதனை தடுத்து நிறுத்தி அழிக்கும் வகையில், டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ தயாரித்து உள்ளது. 4 கி.மீ., தூரத்தில் வரும் டுரோனை கண்டறியும் இந்த தொழில்நுட்பம், அதன் தொலைதொடர்பு வசதியை துண்டித்து 3 கி.மீ., தொலைவில் அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒரு அமைப்பின் விலை தற்போது ரூ.25 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை தயாரித்து உள்ள டிஆர்டிஓ, அதனை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திடம் வழங்கி உள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டியின் ஆலோசனையை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த தொழில்நுட்பத்தை வாங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Xxxxx

உலகம் முழுதும் இந்திய பாரம்பரிய கலை: குரு பவுர்ணமி விழாவில் சத்குரு JAGGI VASUDEV பேச்சு

”ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்கள் இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வார்கள்,” என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு JAGGI VASUDEV தெரிவித்தார்.

குரு பவுர்ணமியை முன்னிட்டு, சத்குருவின் சிறப்பு சத்சங்கம் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில், ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் இசை, நடனம் மற்றும் களரி நிகழ்ச்சி நடந்தது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு JAGGI VASUDEV பேசியதாவது:


மனிதர்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருப்பதற்கு ஏராளமான சாகசம் செய்கின்றனர். துன்பம், இன்பம், கோபம், அமைதி என மனித அனுபவங்கள் அனைத்தும் நமக்குள் இருந்து தான் வருகிறது.

ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், சிறு வயதில் இருந்தே, இசை, நடனம், களரி போன்றவற்றில், தங்கள் வாழ்வை முதலீடு செய்துள்ளனர். 24 மணி நேரமும் இந்த கலைகளுடன், வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கற்ற கலைகளை, தற்போது மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க தயாராகிவிட்டனர். அதற்காக, ‘புராஜக்ட் சம்ஸ்க்ருதி’ என்ற திட்டம், இந்த குரு பவுர்ணமி நாளில் துவங்கப்பட்டுள்ளது. இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வர். இவ்வாறு, JAGGI VASUDEV  தெரிவித்தார்.

Xxxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

tags-Tamil Hindu, News roundup, 25721

உலக இந்து சமய செய்தி மடல் 4-7-2021 (Post.9815)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9815

Date uploaded in London –4 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 4-ஆம் தேதி —  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXX

ராம ஜென்ம பூமி நில பேரத்தில் ஊழல் இல்லை – சுவாமி கோவிந்த தேவ கிரி அறிவிப்பு

ராம ஜென்ம பூமி கோவில் வளாகத்துக்கு நிலம் வாங்கியதில் ஊழல் இருப்பதாக சில கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன. அவர்களை, ஆதாரம் இருந்தால் வழக்கு தொடருங்களேன் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் சவால் விட்டது. இதுவரை எந்த அரசியல் கட்சியும் கோர்ட்டில்  ராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு எதிராக வழக்கு தொடரவில்லை

இதற்கிடையில் ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர ட்ரஸ்ட் பொருளாளர் சுவாமி கோவிந்த தேவ் கிரி வியாழக்கிழமை நிருபர்களைச் சந்தித்தார்.; கடந்த மூன்று நாட்களில் நில பேரம் தொடர்பான எல்லா பத்திரங்களையும் நுணுகி ஆராய்ந்ததாகவும் எந்த ஊழலும் நடக்கவில்லை என்பது உறுதியானது என்றும் கூறினார். இருந்தபோதிலும் எல்லா நடவடிக்கைகளும் பகிரங்கமாக நடத்தப்படும் என்றார் தன்னுடன் மேலும் இரண்டு ட்ரஸ்ட் மெம்பர்களையும் வைத்துக்கொண்டு மூன்று நாட்களுக்கு பத்திரங்களை ஆராய்ந்ததாகவும் ஊழல் புகார் சொன்னவர்கள் ஆதாரம் இல்லாமல் பேசி இருக்கின்றனர் என்றும் சொன்னார்.

புகார் கொடுத்தவர்கள் நாங்கள் கொடுத்த விலையைவிட குறைவான விலையில் நிலம் வாங்கித் தந்தால் அவர்களுக்கு என்றென்றும் நன்றிக கடன்பட்டவர்களாக இருப்போம் என்றும் சுவாமி கோவிந்த தேவ் கிரி கூறினார்

XXXX

வேறு ஜாதி திருமணத்திற்கு தடை: காஷ்மீர் சீக்கியர்கள் கோரிக்கை

ஜம்மு – காஷ்மீரில், வேறு ஜாதி திருமணங்களுக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என, சீக்கியர்கள் கோரியுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரில், சீக்கிய மதத்தை சேர்ந்த நான்கு பெண்கள், சமீபத்தில் முஸ்லிமாக கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சீக்கிய ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜக்மோகன் சிங் ரெய்னா, ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

ஜம்மு – காஷ்மீரில் மத மாற்ற சம்பவங்கள் தொடர்வதால், மதமாற்ற தடுப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதேபோல் இங்கு, வேறு ஜாதியினரை திருமணம் செய்து கொள்வதை தடுக்கவும் சட்டம் இயற்ற வேண்டும். இதுபோன்ற சட்டங்கள், மத மற்றும் இன நம்பிக்கை உள்ளோரை காப்பாற்றுவதாக அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.

காஷ்மீரில் நடந்த கட்டாய மத மாற்றக் கல்யாணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஜம்மு காஸ்மீர் மற்றும் டில்லியிலுள்ள சீக்கியர்கள் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சீக்கிய மதத் தலைவர்களும் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களும் அடங்கிய குழு மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா, கிஷன் ரெட்டி ஆகியோரைச் சந்தித்து மனுவும் கொடுத்தனர்.

XXX

ராம்தேவ் பேசியது என்ன? விபரம் கேட்கிறது கோர்ட்!

யோகா குரு ராம் தேவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது

அலோபதி மருத்துவத்துக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, ‘ராம்தேவ் பேசியது தொடர்பான உண்மையான முழு பதிவை தாக்கல் செய்ய வேண்டும்’ எங்கே’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

யோகா குருவான பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அவர் மீது, இந்திய மருத்துவர் சங்கத்தின் பல கிளைகள் சார்பில் பீஹார், சத்தீஸ்கர் என, பல மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.



 

இந்த வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, டில்லிக்கு மாற்றக்கோரியும், அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரியும், ராம்தேவ் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது.’ராம்தேவ் பேசியது தான் என்ன; பேச்சின் முழு பதிவை தாக்கல் செய்ய வேண்டும்’ என, அமர்வு குறிப்பிட்டது. நாளை ஜூலை-5ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

XXXX

நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

சொந்தமாக கோயில் கட்டி சிறப்பாக கும்பாபிஷேகம் செய்து முடித்திருக்கிறார் நடிகர் அர்ஜூன்.

நடிகர் அர்ஜுன் சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார். அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த கோவிலை கட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் கொய்ரா என்ற கிராமத்தில் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்று சிலையை வடித்து, 22 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக்கில் ஏற்றி கெருகம்பாக்கத்துக்கு கொண்டு வந்தனர்.

சில விஷேச பூஜைகள் நத்தப்பட்டபின்னர்  கடந்த சில நாட்களுக்கு  கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்த அர்ஜுன், தனது யூ-டியூப் சேனல் மூலம் நேரடி ஒளிப்பரப்பை செய்தார். பின்னர் அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலினும் கும்பாபிஷகத்தில் கலந்து கொண்டார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ராகவேந்திரர் கோவிலை கட்டி உள்ளார்.

நடிகர் அர்ஜூனும் சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார்.

XXXX

2 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டுக்கு அனுமதி: திருத்தணி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் 63 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருக்கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவில் தமிழக அரசின் கொரோனா கால ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி மூடப்பட்டது. ஆனாலும் தமிழக அரசின் உத்தரவின் பேரில், திருக்கோவிலில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று வந்தது.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருவதை முன்னிட்டு, முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளித்தது., திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்பணி செய்யப்பட்டது.

காலை 6 மணி முதல் இந்த கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய வந்தனர். 63 நாட்கள் கழித்து முருகப்பெருமானின் தரிசனத்தைக் காண பக்தர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

XXXXXX

இதோ தினமலர் நாளேட்டிலிருந்து ஒரு செய்தி

சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர்; டுவிட்டர் பதிவு தூசு தட்டிவருணனை

ஈஷா நிறுவனர் சத்குரு, ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட, ‘மண்புழு ஓர் ஹிந்து’ என்ற டுவீட்டை தற்போது பகிர்ந்து, கேலியாக பதிலளித்து, அவரை வம்பிழுத்துள்ளார், தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்.

கடந்த 2015ம் ஆண்டு, சத்குரு டுவிட்டரில், ‘ஹிந்து என்பது புவியியல் அடையாளம். ஒரு யானை ஆப்ரிக்காவில் இருந்தால், அது ஆப்ரிக்கன். இந்த நிலத்தில் (இந்தியா) ஒரு மண் புழு இருந்தால், அது ஹிந்து’ என, பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவை தற்போது பகிர்ந்து, பதிலளித்துள்ள அமைச்சர் தியாகராஜன், ‘ஆப்ரிக்கா ஒரு கண்டம், இந்தியா ஒரு நாடு, குடியரசு (நிலம் என்பது இங்கு இந்தியாவைக் குறிக்கிறது).

இந்து என்பது மதம், நம்பிக்கை. யானை என்பது முதுகெலும்புள்ள பாலுாட்டி, மண்புழு முதுகெலும்பற்றது, நிலத்தில் வாழக்கூடியது. அதுபோல, ‘சார்லடன்’ என்பதற்கு, தன்னிடம் இல்லாத சிறப்பு அறிவையோ, திறமையையோ இருப்பதாக போலியாகக் கூறிக்கொள்ளும் பகட்டுக்காரர் எனப் பொருள். பன்முக பகட்டுக்காரர்’ என, குறிப்பிட்டுள்ளார் தியாகராஜன்.



தியாகராஜன் அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், சத்குருவை தொடர்ந்து விமர்சித்து வந்தார். திடீரென சில வாரங்கள் அவரை விமர்சிக்காமல் அமைதி காத்தார். தற்போது மீண்டும், பழைய, அதுவும் ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய டுவிட்டை தோண்டி எடுத்து, விமர்சித்து வம்பிழுத்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், கோவாவை விமர்சித்தது தொடர்பாக, அமைச்சர் தியாகராஜனுக்கும், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனுக்கும், டுவிட்டரில், ‘வார்த்தைப்போர்’ வெடித்தது. அப்போது, ‘பிறவிப் பொய்யர்’ என வானதியை விமர்சித்தார். தற்போது சத்குருவை, ‘பன்முக பகட்டுக்காரர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

XXXX

சித்ர கூடத்தில் முக்கிய ஆர். எஸ். எஸ். கூட்டம்

ராமாயணப் புகழ் சித்ரகூடம் மத்திய பிரதேசத்தில் உள்ளது.அங்கு ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் முக்கியக் கூட்டம் ஜூலை 9ம் தேதி முதல் ஐந்து நாட் களுக்கு நடைபெற உள்ளது.

இது அகில பாரதீய பிரா ந்த  பிரச்சாரகர்  கூட்டம். இதில் ஆர்.எஸ். எஸ். தலைவர்கள் நாட்டை எதிநோக்கியுள்ள முக்கிய பிரச்சனைகளை அலசி ஆராய்வார்கள். அருகிலுள்ள உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில முக்கிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு மாநில சட்ட சபைத்  தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் அரசு எதிர்நோக்கும் பிரச்சனைகளை கூட்டம் விவாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

 tags- Tamil Hindu, News round up, 472021,

உலக இந்து சமய செய்தி மடல் 25-4-2021 (Post No.9532)

Anjaneya Birth Place Research Committee

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9532

Date uploaded in London – –25 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று APRIL   25 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

Xxxx

திருமலையில் பிறந்தார் அனுமன்: ‘திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

திருப்பதி :’திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம்’ என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் நேற்று அறிவித்தது.

ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம், திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.



இதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளி தர சர்மா தலைமையில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது. இக்குழுவினர், நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தி, தங்கள் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், ‘திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தொடர்பான விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய, 20 பக்க கையேடும் நேற்று வெளியிடப்பட்டது.ராமநவமி தினமான April 21  திருமலை திருக்கோவிலில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது முன்னிலையில், இந்த அறிவிப்பை தேஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர்.

இந்தப் பணிக்காக ஆய்வு செய்யப்பட்ட, 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கர்நாடகாவின் ஹம்பி என்ற இடம் தான், ஹனுமனின் பிறப்பிடம் என, இதுநாள் வரை கருதப்படுகிறது.மேலும், ஜார்க்கண்டில் உள்ள அஞ்சன் மலைப்பகுதி; குஜராத்தில் உள்ள நவ்சாரி; ஹரியானாவின் கைத்தல்; மஹாராஷ்டிராவின் திரியம்பகேஸ்வர் அருகில் உள்ள அஞ்சனேரி உள்ளிட்ட இடங்களும், அனுமனின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.

வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ‘திருமலையின் அஞ்சனாத்ரியில் பிறந்த அனுமன், அங்கிருந்து, 363 கி.மீ., தொலைவில் உள்ள ஹம்பிக்கு சென்றிருக்கலாம்’ என கூறப்படுகிறது. திருமலை தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு, புராண, இதிகாச ஆய்வாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

Xxx

திருப்பதியில் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 90 நாட்கள் வரை தரிசிக்கலாம்



கொரோனா 2-ம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்தது.


ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்துள்ளது.


ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவர்கள் 90 நாட்களுக்குள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


ஆன்லைன் மூலம் வாடகை அறை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு அறை பெறுவதை தேவஸ்தானம் எளிதாக்கி உள்ளது.


திருப்பதியில் உள்ள அலிபிரி பாதாள மண்டபம், சோதனை சாவடி, ஸ்ரீவாரிமெட்டு உள்ளிட்ட இடங்களில் வாடகை அறை ரிசிப்ட் ஸ்கேன் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு பக்தர்கள் ஸ்கேன் செய்து கொண்டால், திருமலைக்கு செல்லும் முன் அவர்கள் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு துணை விசாரணை அலுவலக எண் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.

அதன்பின்னர் பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்திற்கு செல்லாமல் நேராக துணை விசாரணை அலுவலகத்திற்கு சென்று தங்களின் அறையை பெற்றுக் கொள்ளலாம்.


திருப்பதியில்  ஒரே நாளில் 25,695 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12,253 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.21 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.

xxxxx

அமர்நாத் பயணம் முன்பதிவு நிறுத்தம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.

:கொரோனா தொற்று பரவல் காரணமாக, அமர்நாத் பனிலிங்க கோவில் புனிதப் பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள இமய மலையில், 12 ஆயிரத்து, 730 அடி உயரத்தில், அமர்நாத் பனிலிங்க குகைக் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கு இணையதளம் வாயிலாக, ‘ஆன்லைன்முன்பதிவுகள் செய்யப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான அமர்நாத் பயணம், வரும், ஜூன், 28ல் துவங்கி, ஆகஸ்ட், 22 வரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது.

இதற்கான முன்பதிவுகள், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு – காஷ்மீர் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றின் கிளைகள் மற்றும், ‘ஆன்லைன்வாயிலாக, சமீபத்தில் துவங்கியது.கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அமர்நாத் பனிலிங்க புனித பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக, ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியம் அறிவித்தது.நிலைமை கட்டுக்குள் வந்த பின், முன்பதிவு மீண்டும் துவங்கப்படும்என, அறிவிக்கப்பட்டுள்ளது.

XXX

இந்திய பக்தர்கள் கைலாசா நாட்டுக்கு வர தடை: நித்தியானந்தா அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், இந்திய பக்தர்கள் தனது கைலாசா தீவிற்கு வர அனுமதி இல்லை என சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

பல்வேறு வழக்குகளில் சிக்கி சர்ச்சைக்கு உள்ளானவர் சாமியார் நித்தியானந்தா. இவர், இந்துக்களுக்காக கைலாசா என்னும் தனித் தீவு நாட்டை  உருவாக்கியுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல்,  தன்னுடைய நாட்டுக்கு  தனி ரிசர்வ் வங்கி, கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டு அதிர்ச்சியளித்தார். கைலாசா வர விரும்புபவர்களுக்கு இலவச விமான சேவை வழங்கி கூட்டி செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், இன்று வரை அந்த கைலாசா தீவு நாடு எங்கு இருக்கிறது என்பதற்கான விடை மட்டும் கிடைத்தபாடில்லை.

கைலாசா எங்கு உள்ளது என்பது நித்தியானந்தாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக இருப்பதால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தியா செல்ல பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதேபாணியில் நித்தியானந்தாவும், இந்திய பக்தர்களுக்கு கைலாசா நாட்டிற்கு வர தடை விதித்துள்ளார். கடந்த 19ம் தேதியிட்டு, நித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பாணையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Xxxx

உடுப்பி சிரூர் மடத்தின் மடாதிபதியாக 16 வயது சிறுவன் நியமனம்

உடுப்பி மாவட்டத்தில் உள்ள, அஷ்ட மடங்களில் ஒன்றான சிரூர் மடத்தின் மடாதிபதியாக 16 வயது சிறுவன் அனிருத் நியமிக்கப்பட்டு இருக்கிறான். அவனுக்கு அடுத்த மாதம் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

  கர்நாடக மக்களால் வேதாந்தி, தத்துவவாதி என்று போற்றப்படும் மத்வாச்சாரியாரால் உடுப்பி மாவட்டத்தில் 8 மடங்கள் அமைக்கப்பட்டன. அவை பெஜாவர், பலிமாறு, அடமாறு, புத்திகே சோதே, கனியூறு, சிரூரு, கிருஷ்ணபுரா ஆகிய 8 மடங்கள் ஆகும். இந்த 8 மடங்களையும் சேர்த்து ஒன்றாக அஷ்ட மடங்கள் என்று மக்கள் அழைக்கின்றனர். இந்த அஷ்ட மடங்களில் பெஜாவர் மடம் தான் தலையாய மடம் என்று கூறப்படுகிறது.

  இந்த அஷ்ட மடங்களில் ஒன்றான சிரூரு மடத்தின் மடாதிபதியாக லட்சுமிவரதீர்த்த சுவாமி இருந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து இந்த மடத்தின் பொறுப்பை சோதே மடத்தின் மடாதிபதி நிர்வகித்து வந்தார்.

16 வயது சிறுவன்

  இந்த நிலையில் சிரூர் மடத்தின் மடாதிபதியாக வித்யோதயா பள்ளி மாணவனான 16 வயதே நிரம்பிய   அனிருத் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் துளு மொழி பேசும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரூர் மடத்தின் மடாதிபதியாக அனிருத் நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து உடுப்பியில் சோதே மடத்தின் மடாதிபதி விஸ்வவல்லப தீர்த்த ஸ்ரீபாதரு சுவாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  அனிருத், தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலா பகுதியைச் சேர்ந்தவர். இவர் சிரூர் மடாதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கான பட்டாபிஷேக விழா அடுத்த மாதம்(மே) 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை உத்தர கன்னடா மாவட்டம் சோதே மடத்தில் நடக்கிறது.

  அதற்கு முன்பாக இவர் அஷ்ட மடங்களிலும் சன்னியாசம் பெறும் நிகழ்ச்சி நடைபெறும். இது அஷ்ட மடங்களின் சம்பிரதாய முறைப்படி நடக்கிறது. அஷ்ட மடங்களின் யாகம விதிகளின்படி சன்னியாசம் பெற்ற பிறகு அனிருத்துக்கு மடம் சார்பில் பெயர் சூட்டப்பட்டு, அவர் சிரூர் மடத்தின் மடாதிபதியாக பதவி ஏற்பார். 

மடாதிபதியாக நியமிக்கப்படுபவருக்கு வயது ஒரு பிரச்சினை இல்லை. ஒருவரின் அறிவுக்கூர்மை, மனிதாபிமான தன்மை, ஒழுக்கம் உள்ளிட்டவற்றை கவனித்துதான் அந்த பதிவி அவருக்கு வழங்கப்படுகிறது–  இவ்வாறு அவர் கூறினார்.

Xxxxx

ராமேசுவரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

ராமேசுவரம் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமா ஸ்கந்தர் சன்னதிக்கு முன்பாக பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் ஏப்ரல் 14ம் தேதி கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதி முன்பாக பஞ்சாங்கம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சாங்கத்தை கோவிலின் சர்வ சாதகம் சிவமணி வாசித்தார். அப்போது வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் இடம்பெற்ற தகவல்கள் வருமாறு:-

இந்தியாவுக்கு வடகிழக்கில் உள்ள நாடுகளான தென் கொரியா, ஜப்பான், சீனா, மங்கோலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் காய்ச்சல் நோய் அதிகமாக பரவும். விளையாட்டு வீரர்களுக்கு விபத்து நடைபெறும். தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் விலை ஏற்றம், இறக்கமாக சரிவை சந்திக்கும்.


புதிய வைரஸ் நோய் தொற்று நோயாக பரவி வர நேரும். இதனால் உலகத்தை ஆட்டிப்படைக்கும். உலகமே ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும். மூலிகை மருத்துவம் மூலம் தான் புதிய வைரஸ் நோயை அழிக்க முடியும்.

விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். காபி, ஏலக்காய், மிளகு போன்ற மலைப்பகுதியில் விளையும் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவற்றின் விளைச்சல் அதிகமாக இருக்கும். நல்ல வியாபாரமும் இருக்கும். தேனீ, வண்டு, வவ்வால், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளால் பயிர் விளைச்சலுக்கு சேதம் ஏற்படக்கூடும்.

புகழ் பெற்ற பழைய கட்சியே ஆட்சியை பிடிக்க நேரிடும். பழைய கட்சிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது.

இந்த ஆண்டு வரலாறு காணாத மழை பொழியும். இந்த ஆண்டு சென்னையை புயல் பலமாக தாக்கும்.


அயல் நாடான பாகிஸ்தான் 3 நாடுகளாக பிரிய நேரும். நேபாளத்தை இந்தியாவுடன் இணைக்க நேரும். சீனா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும். அண்டை நாடான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் மீது சண்டை போட நேரம் பார்த்துக் கொண்டே இருக்கும். விவசாய உபகரணங்களின் விலை கடுமையாக உயரும். ராக்கெட் ஏவுகணையை தயாரித்து இந்தியா வெற்றி அடையும்.

மருத்துவத்தில் பெரும் முயற்சி செய்து ெதாற்று நோய்க்கான மருந்தை இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பார்.

இவ்வாறு பஞ்சாங்கத்தில் தகவல்கள் இடம்பெற்று இருந்தது.

Xxxxx

கேரளாவில் எளிமையாக நடந்தது ‘திருச்சூர் பூரம்’ விழா

கேரளாவின் பாரம்பரிய பெருமை மிக்க, ‘திருச்சூர் பூரம்திருவிழா  திருச்சூறில் ஏப்ரல் 23ம் தேதி எளிமையாக நடந்தது.


கேரளா மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், எல்லா ஆண்டும் சித்திரை மாதம் பூரம் நட்சத்திர நாளில், ‘திருச்சூர் பூரம்’ திருவிழா நடக்கிறது.

ஏப்ரல் 23ம் தேதி கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல்படி, மக்கள் கூட்டமின்றி விழா நடந்தது. அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. காலை 7:00 மணியளவில், கன்னிமங்கலம் சாஸ்தா, யானை மீது எழுந்தருளி தெற்கு கோபுர நடை வழியாக நுழைந்து, வடக்குநாதரை வணங்கினார்.

தொடர்ந்து, திருவம்பாடி கிருஷ்ணர், பாறமேக்காவு பகவதி அம்மன், செண்டை மேளம் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எழுந்தருளினர். இதன்பின், வடக்குநாதர் கோவில் வளாகத்தில், ‘இலஞ்சித்தறை மேளம்’ என அழைக்கப்படும், செண்டை மேளம் இசைக்கப் பட்டது.திருவம்பாடி மற்றும் பாறமேக்காவு கோவில் விழா குழுவினர் நடத்தும், ‘குடை மாற்றம்’ நிகழ்ச்சி, இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக நடந்தது.

திருவம்பாடி கோவில் சார்பில் ஒரு யானையும், பாறமேக்காவு பகவதி அம்மன் கோவிலின், 15 யானைகளும் அணிவகுத்தன. யானைகளின் மீது அமர்ந்தவர்கள் முத்துமணி மாலையுடன் கூடிய, வண்ண குடை மாற்றினர்.இரவில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.

Xxxxx


இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ராஜாமணி நியமனம்

கோவை மாவட்ட முன்னாள் கலெக்டராக இருந்த ராஜாமணி ஐஏஸ்., தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை, தமிழக தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்தார்.

சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கலெக்டர் ராஜாமணி மற்றும் போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோர் மீது எதிர்கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தன. இதனையொட்டி, இருவரையும் இட மாற்றம் செய்வதுடன், தேர்தல் அல்லாத பணியில் நியமிக்கும்படி, தேர்தல் கமிஷன்  உத்தரவை பிறப்பித்தது. புதிய கலெக்டர் மற்றும் கமிஷனரை நியமிக்கவும், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டது.

தற்போது ராஜாமணிக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

XXXX

ராமேசுவரம் கடல், தீர்த்த கிணறுகளில் புனித நீராடலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் தடுப்பு தொடர்பாக அரசின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-



ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா தலமான தனுஷ்கோடிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று அரியமான், காரங்காடு, ஏர்வாடி கடற்கரை பகுதிகளுக்கும் ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகள் சுற்றுலாத்துைற கட்டுப்பாட்டிற்குள் வராது என்பதால் சமூக இடைவெளியுடன் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள்.

XXX

எல்லோருக்கும் மஹாவீரர் ஜயந்தி வாழ்த்துக்கள்

24 ஆவது தீர்த்தங்கரர் ஆன சமண முனிவர் மஹாவீரர் ஜெயந்தி இன்று நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது . இன்று.சத்யம், அஹிம்சை ஆகியவற்றைப் போதித்த மஹாவீரர் பிறந்த தினம் ஆகும்.

 அனைத்து மக்களுக்கும் மஹாவீரர் பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகுக

XXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்…………………………

நன்றி, வணக்கம்

tags–Tamil Hindu, News roundup, 25421

உலக இந்து சமய செய்தி மடல் 18-4-2021 (Post No.9507)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9507

Date uploaded in London – –18 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று APRIL   18 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

Xxxx

மஹா கும்பமேளா  2 வாரங்களுக்கு முன்னரே முடியும்

உத்தர்கண்ட்டின் ஹரித்துவாரில் நடக்கும் கும்பமேளாவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும், 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்.



உத்தரகண்டின் ஹரித்வாரில் துவங்கி, பல மாவட்டங்களில், 1,650 ஏக்கர் பரப்பளவில், கும்பமேளா நிகழ்ச்சி நடந்து வருகிறது. கங்கை நதியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

பாதயாத்திரையாக வந்து, புனித நீராடிய சாதுக்கள் மீது, மாநில அரசு தரப்பில், ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் துாவப்பட்டன. இது தவிர, கங்கையின் பிற இடங்களில் லட்சக்கணக்கானபக்தர்கள் புனித நீராடினர். மாநில அரசு தகவல்களின்படி, ஒரே நாளில்  17.31 லட்சத்திற்கும் மேற்பட்டபக்தர்கள் கங்கையில் புனித நீராடினர்


ம.பி.,யை சேர்ந்த மகா நிர்வானி அஹாராவின் தலைவர் கபில் தேவ், கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து 13 அகாதாக்களின் அமைப்பான நிரஞ்சனி அகாதா அமைப்பு, கும்பமேளாவை முடித்து கொள்வதாக அறிவித்து உள்ளது. புனித நீராடலுக்கு வந்த 30 சாதுக்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ட்வீட் செய்தி ஒன்றில் இதுவரை இரண்டு புனித நீராடல்கள் நடந்து விட்டதால் இனி வரும் புண்ய ஸ்னானங்களை அடையாளபூர்வமாக வைத்துக்கொண்டு முடிப்பது நல்லது என்று கருத்து தெரிவித்துள்ளார். சாதுக்களின் நலன் அறிவதற்காக அவர்களை தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலன் விசாரித்ததாகவும் ட்வீட் செய்துள்ளார்.

பெருமளவில் புனித நீராடல்களைக்  கைவிடவேண்டும் என்பதே இதன் கருத்து என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் கும்ப மேளா போன்ற விழாக்கள் நடைபெறாத மாநிலங்களிலும்  கூடுதலாக வைரஸ் நோய் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

XXXX

சீனாவில் சம்ஸ்கிருத மொழி பிரபலம்’

சீனாவில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக சம்ஸ்கிருத மொழி பிரபலமாக இருப்பதாக அந்நாட்டில் உள்ள புகழ் பெற்ற பீக்கிங் பல்கலைக்கழக பேராசிரியா் வாங் பாங்வெய் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

பண்டைய இந்தியாவில் இருந்து பெளத்த மதத்துடன் சம்ஸ்கிருத மொழியும் சீனா வந்து சோந்தது. சீனாவில் சம்ஸ்கிருத மொழி குறித்த ஆய்வுகள், கற்பித்தல் பணிகளுக்கு 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளது.

இந்தியாவில் இருந்து பெளத்த மதம் சீனா வந்த பின்னா், சீன பெளத்த துறவிகள் இந்தியாவின் பண்டைய நூல்களை சீன மொழிக்கு மொழிபெயா்த்தனா். அப்போது முதல் சீனாவில் சம்ஸ்கிருத மொழியை படிப்பதும், சம்ஸ்கிருத ஆய்வுகளும் தொடங்கின. சீன அரசா்கள், அறிஞா்கள் மீது சம்ஸ்கிருதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஹிந்து, பெளத்த மதங்கள், பண்டைய இந்திய மருத்துவம், வானவியல், கணிதம் உள்ளிட்டவற்றை சீனா்கள் கற்பதற்கு சம்ஸ்கிருதம் முக்கிய மொழியாக இருந்தது.

நான்காம் நூற்றாண்டைச் சோந்த காஷ்மீா் பிராம்மணரான குமாரஜீவா என்னும் அறிஞா் சீனாவில் தங்கியிருந்தபோது பெளத்த சூத்திரங்களை சீன மொழியில் மொழிபெயா்த்தாா். அது அவருக்கு ‘சீனாவின் தேசிய ஆசிரியா்’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

இந்திய, சீன பண்பாட்டு நாகரிகங்களுக்கு இடையே உறுதியாக அடித்தளமிட்ட எண்ணற்ற சம்ஸ்கிருத அறிஞா்களில் அவரே முதன்மையானவா். மரியாதைக்குரிய அறிஞராகவும் சிறையிலுமாக அவா் 23 ஆண்டுகள் சீனாவில் கழித்தாா்.

இந்தியாவை பற்றி அறிந்துகொள்ள ஆா்வம் காட்டுவோா் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வருகிறது. சம்ஸ்கிருதம் அதற்கு சிறந்த வழியாகும். பல அரிய பண்டைய சம்ஸ்கிருத நூல்கள் சீனாவில் உள்ளன.

இவை இந்தியாவில் கூட கிடைக்குமா என்பது சந்தேகமே. சீன அரசா்கள், அறிஞா்கள் மீது சம்ஸ்கிருதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . பீகிங் பல்கலைக் கழகத்தில் 100 ஆண்டுகளாக சம்ஸ்க்ருதம் கற்பிக்கப்படுகிறது என்றார்

நூறாண்டுகளாக பீக்கிங் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது என்றாா்.

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த பாஹியான், யுவாங் சுவாங் ஆகிய யாத்ரீகர்கள் சம்ஸ்க்ருதம் கற்றனர் என்றும் அவர் சொன்னார் ஸீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்திய தூதரகத்தில் அவர் சென்றவாரம் பேசினார் லிட்டில் குரு என்னும் கல்வி கற்க உதவும் அப்ளிகேஷன் – மென்பொருள் — அறிமுக நிகழ்சசியில் பேராசிரியர் வாங்கி உரையாற்றினார்

XXXXX

ஆஞ்சநேயர் பிறப்பிடம் குறித்து வரும் 21-ம் தேதி ஆதாரம் வெளியிடப்படும் : திருப்பதி தேவஸ்தானம் தகவல்

ஆஞ்சநேயர் பிறப்பிடம் அஞ்சனாத்திரி மலை என்பதற்கான ஆதாரங்கள் ஏப்ரல் 13 யுகாதி வருடப் பிறப்பன்று  வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது  இப்போது  அதனை 21-ம் தேதி மாற்றி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி வெங்கடாசலபதி  கோவில் உள்ள சேஷாசல மலைத் தொடரில் அஞ்சனாத்திரி மலை உள்ளது. இந்த அஞ்சனாத்திரி மலை ஆஞ்சநேயரின் பிறப்பிடம் என்பதற்கான அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக பல புராணம் மற்றும் இதிகாசங்கள் ஆய்வு செய்யப்பட்டது.  மேலும் இது சம்மந்தமாக ஆய்வு செய்ய 6 பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைத்தது.

அவர்கள் பல புராணங்களை ஆராய்ந்து தகவல்களை சேகரித்துள்ளனர்.  அதன்படி ஆஞ்சநேயர் அஞ்சனாத்திரி மலையில் பிறந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை தெலுங்கு வருட பிறப்பன்று பக்தர்களுக்கு ஆதாரத்துடன் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

தற்போது அதை மாற்றி தேவஸ்தானம் சார்பில் வருகிற 21-ம் தேதி ராமநவமி அன்று ஆஞ்சநேயர் பிறப்பு குறித்த ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று  அறிவித்தது .

இதனிடையே கர்நாடக மக்களுக்கு இந்தச் செய்தி கவலை தந்துள்ளது .கர்நாடகத்திலுள்ள ஹம்பி, பெல்லாரி பகுதியே கிஷ்கிந்தா என்று கண்டறியப்பட்டதால் அங்குதான் அவர் பிறந்தார் என்று கர்நாடகம் கூ றிவருகிறது

ஆந்திரம் கர்நாடகம் ஆகிய இரு மாநில ஆ ஞ்சனேய  பக்தர்களும் ராம நவமி அன்று வெளியாகப் போகும் செய்தியை ஆவலு டன் எதிர் பார்த்து நிற்கின்றனர்

xxxx

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், APRIL 11  இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார்.

கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார். அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்றார்.

தலையில் இருமுடி கட்டுடன், 18ம் படி வழியாக சென்று, ஸ்ரீகோவில் முன் தலையில் இருமுடி கட்டுடன் நின்றபடி தரிசனம் செய்தார்

.தந்திரி கண்டரரு ராஜீவரரு, அவருக்கு பிரசாதம் வழங்கினார்.  இரவு சன்னிதானத்தில் தங்கிய கவர்னர், இன்று காலை மாளிகைப்புறம் கோவில் அருகே, சந்தன செடிகளை நட்ட பின், திருவனந்தபுரம் செ ன் றார்.


கொரோனா கட்டுப்பாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட வி.ஜ.பி., தரிசன வழியாக செல்லாமல், பக்தர்களின் வரிசையில் சென்று தரிசனம் செய்தார். கவர்னர் வருகையை ஒட்டி, சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

XXX

சிவன் கோயிலில் முஸ்லிம் எம்.எல்.ஏ., – கைது செய்ய பா.ஜ., எம்.பி., கோரிக்கை

 காங்., எம்.எல்.ஏ., இர்பான் அன்சாரி என்பவர் ஜார்கண்டிலுள்ள வைத்தியநாதர் கோயிலில் பூஜை செய்ததற்காக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க., எம்.பி., ஒருவர் கோரியுள்ளார்.



ஜார்கண்டின் தியோகர் மாவட்டத்தில் ஏப்.,17  சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த வாரம் காங்., எம்.எல்.ஏ., இர்பான் அன்சாரி என்பவர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியநாத ஜோதிர்லிங்க ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார். ஹிந்து சடங்குகளை செய்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் ஜார்கண்ட் பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே, ஹிந்துக்களின் உணர்வுகளை அன்சாரி புண்படுத்திவிட்டதாக கூறினார்.


மேலும் அவர் கூறியதாவது: அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்துக்கு செல்வேன். அன்சாரி சிவ பக்தர் என்றால் முதலில் ஹிந்து மதத்தை பின்பற்றவும், பின்னர் பூஜை செய்யவும். பாபா வைத்தியநாத கோயிலின் கருவறைக்குள் முஸ்லிம்கள் நுழையவோ, பூஜை செய்யவோ அனுமதி கிடையாது. மெக்காவில் ஹிந்துக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா? அதே நிலை தான் வைத்தியநாதர் கோயிலிலும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள காங்., எம்.எல்.ஏ., அன்சாரி, ‛இடைத்தேர்தலை ஒட்டி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க துபே முயற்சிக்கிறார். அவரது அனைத்து செயல்களையும் மக்கள் புரிந்துகொள்வார்கள். பாபா நகரி எனது பிறப்பிடம். நான் இந்த கோயிலுக்கு வழக்கமாக வருகை புரிபவன். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் மெகா கூட்டணி இடைத்தேர்தலில் வென்ற பிறகும் பூஜை செய்வேன். என்னை யார் தடுக்கிறார்கள் பார்க்கிறேன். சிவன் யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. அனைவருக்குமானவர். அவர் மீது எனக்கும் நம்பிக்கை உண்டு,’ என்றார் இர்பான் அன்சாரி.

Xxxx

ராமர் கோவில் நன்கொடை: 15 ஆயிரம் காசோலைகள் திரும்பின

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷ் வசூலித்த, 22 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 ஆயிரம் காசோலைகள் பல்வேறு காரணங்களால் திரும்பிவிட்டன.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டது.இதுவரை, 5,000 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படுகிறது. இறுதி தொகை, அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், வங்கி காசோலைகளாக வசூலிக்கப்பட்ட, 15 ஆயிரம் காசோலைகள், கணக்கில் பணம் இல்லாதது உட்பட, பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திரும்ப வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காசோலைகளின் மதிப்பு, 22 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதில், 2,000 காசோலைகள் அயோத்தியில் பெறப்பட்டவை என கூறப்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திரும்பி வந்த காசோலைகளை, திரும்ப வங்கியில் செலுத்தவும் திட்டமிடப்பட்டு வருவதாக, ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

xxxx

மதுரை சித்திரை திருவிழா:

மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத்  திருவிழா கொடி ஏற்றத்துடன்  தொடங்கியது . மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இணையதளத்தில் மட்டுமே பார்க்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவிழாவின் முக்கிய அம்சமாக ஏப்ரல்  22ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. 23ம் தேதியன்று மீனாட்சி அம்மன் திக் விஜயம் நடைபெறும் .

ஏப்ரல் 24 திருக்கல்யாணம் முடிந்த பிறகு சாமி அம்மனை மணக்கோலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. . 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், ஏப்ரல் 25 தேரோட்டம் நடைபெறும்.

அழகர் கோயில் திருவிழா :
இதே போல சித்திரை திருவிழாவின் மற்றுமொரு முக்கிய பங்கு வகிப்பது அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரை விஜயம் செய்யும் நிகழ்வு. இதில் தல்லாகுளம் எதிர்சேவை, வைகையாற்றில் இறங்குதல்,மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், தசாவதார நிகழ்வு, வண்டியூர் கோயில் செல்லுதல் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் அழகர் கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Xxxx

புராண கதையில் நடிக்க சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா

சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக சமந்தா நடிக்கிறார். விசுவாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்த சகுந்தலைக்கும் துஷ்யந்த மன்னனுக்கும் காதல் மலர்கிறது. துருவாச முனிவர் சாபத்தினால் அந்த காதலை துஷ்யந்தன் மறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பல கஷ்டங்களை தாண்டி இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பது கதை.

இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை டைரக்டு செய்தவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சமந்தாவை தேர்வு செய்தனர்.

இந்த படத்தில் நடிக்க சமந்தா ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ரூ.3 கோடி வாங்கிய சமந்தா சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும் தான் நடிக்கும் முதல் புராண படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறார்.

Xxxx

முஸ்லிமாக புதைக்கப்பட்ட ஹிந்து; சவுதி அரேபியாவில் நடந்த குளறுபடி

சவுதி அரேபியாவில், முஸ்லிம் என தவறாக கூறி, அந்த மத வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்ட ஹிந்துவின் உடல், இந்தியாவுக்கு விரைவில் எடுத்து வரப்படும்’ என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மேற்காசியாவைச் சேர்ந்த சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த சஞ்சீவ் குமார், 51, என்பவர், சில மாதங்களுக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். துாதரக அதிகாரி ஒருவர், சஞ்சீவ் குமார், ஒரு முஸ்லிம் என, இறப்பு சான்றிதழில் தவறாக குறிப்பிட்டதால், இந்த குளறுபடி நடந்ததாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும், இந்திய துாதரகம், அவரது மனைவி அஞ்சு சர்மாவுக்கு கடிதம் எழுதியிருந்தது.

அஞ்சு சர்மா, ‘ஹிந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்வதற்காக, கணவரின் உடலை இந்தியாவுக்கு எடுத்து வர உத்தரவிட வேண்டும்’ என, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்ப்போது, வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ”சவுதி அரேபிய அரசு, சஞ்சீவ் குமார் புதைக்கப்பட்ட இடத்தை கண்டு பிடித்துள்ளது. விரைவில் உடல் இந்தியா எடுத்து வரப்படும்,” என, தெரிவித்தார்.

Xxxx

திருப்பதி கோவில்களில் யுகாதி பண்டிகை விழா

ஆந்திரா, தெலுங்கானாவில் ஏப்ரல் 13ம் தேதி  செவ்வாய்க்கிழமை யுகாதி பண்டிகை விழா நடந்தது. திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதி  கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜசாமி கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில் ஆகியவற்றில் யுகாதி பண்டிகை விழா நடந்தது .

தாட பள்ளியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் பஞ்சாங்க  படனம் நடந்தது. ஆந்திர மாநில அரசாங்க ஜோதிடர் கப்பகந்துலு சுப்பராஜ சோமயாஜுலு பஞ்சா ங்கத்தை வாசித்தார் . திருப்பதி- திருமலை அர்ச்சகர்கள் உளப்பட பலரும் மந்திரிகளும் பஞ்சாங்க படனத்தில் பங்கேற்றனர் . ஆந்திர முதல் அமைச்சருக்கும் , ஆந்திர மாநிலத்துக்கும் நல்ல எதிர்காலம் இருப்பதாக கிரஹ நிலைகளை சுட்டிக்காட்டி சிரவணம் செய்தார் சோமையாஜுலு. ஆந்திர முதலமைச்சர் அரசாங்க ஜோதிடரையும் அர்ச்சகர்களையும் கவுரவித்தார்

xxxx

பாக்.,கில் கோவில் இடிப்பு; சீரமைக்க ரூ.3.48 கோடி


பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட ஹிந்து கோவிலை சீரமைக்க, கைபர் பக்துன்க்வா மாகாண அரசின் சார்பில், 3.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணம் கராக் மாவட்டம் டெர்ரி கிராமத்தில், பழமை வாய்ந்த ஹிந்து கோவில் மற்றும் ஸ்ரீ பரமன்ஸ்ஜி மஹராஜ் சமாதி ஆகியவை உள்ளன . இவற்றை தீவிரவாத முஸ்லிம் அமைப்பினர், கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம் இடித்து சேதப்படுத்தினர். இதற்கு இந்திய  மத்திய வெளியுறவு அமைச்சகம், கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


இதையடுத்து, ‘கோவில் மற்றும் சமாதி சீரமைப்பு பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும்’ என, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கைபர் பக்துன்க்வா மாகாண அரசின் சார்பில், சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டன. இதற்கிடையே, கைபர் பக்துன்க்வா மாகாண ஹிந்துக்கள் அமைப்பினர், கடந்த மாதம் நடத்திய கூட்டத்தின் முடிவில், கோவிலை இடித்த முஸ்லிம் அமைப்பினரை மன்னிப்பது என, முடிவு செய்தனர்.

சீரமைப்பு பணிகளுக்காக, கைபர் பக்துன்க்வா மாகாண அரசு தற்போது, 3.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

xxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags- Tamil Hindu, newsroundup18421,

உலக இந்து சமய செய்தி மடல் 11-4-2021 (Post No.9481)

KASI VISWANATHAR TEMPLE

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9481

Date uploaded in London – –11  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று APRIL   11 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

Xxxx

அரசின் கட்டுப்பாட்டில் இருந்து 51 கோயில்கள் விடுவிப்பு: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு

உத்தரகண்டில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதாக அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார்.

உத்தரகண்டில் புதிய முதல்வராக பொறுப்பேற்ற தீரத் சிங் ராவத், சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின்போது, ‘சார் தாம் தேவஸ்தானம்’ மேலாண்மை மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு கவர்னர் பேபி ராணி மவுரியா, ஒப்புதல் வழங்கியதை அடுத்து, மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்துவந்த 51 கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார். இதில், பத்ரிநாத், கேதர்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி உள்ளிட்ட கோயில்களும் அடங்கும்.


‘உத்தரகண்ட் மாநிலம் போன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களையும், அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது:உத்தரகண்ட் மாநில அரசு, 51 கோவில்களை, அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துள்ளது. இது, மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில், அரசு கட்டுப்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கோவில்கள், மீண்டும் சமூகத்திடமே வழங்கப்பட்டுள்ளன. இது, மிகப்பெரிய முன்னேற்றம்.கோவில்கள், பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை, உத்தரகண்ட் அரசு உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது


உத்தரகண்ட் அரசின் அறிவிப்பை பாரதீய ஜனதா கட்சி  மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி வரவேற்றுள்ளார்.

XXXX

காசி கோவில் பகுதியில் தொல்பொருள் ஆய்வு   நடத்த நீதிமன்றம் உத்தரவு

வாரணாசியில், விஸ்வ நாதர் கோவில் – ஞானவாபி மசூதி அமைந்துள்ள வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பாரதீய ஜனதா கட்சி  ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர், வி.எஸ்.ரஸ்தோகி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

வாரணாசியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காசி விஸ்வநாதர் கோவில், முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் இடித்து தள்ளப்பட்டது. அங்கு, மசூதி கட்டப்பட்டுள்ளது. இது வரலாற்று பூர்வமான உண்மை.

முகலாயர் ஆட்சி முடிந்த பின்,மசூதிக்கு அருகே, விஸ்வநாதர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. அதனால், காசி விஸ்வநாதர் கோவில், ஞானவாபி மசூதி வளாகத்தை, ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த வளாகத்தில், தொல்பொருள் ஆய்வு நடத்தினால், விஸ்வநாதர் கோவில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கும். அந்த வளாகத்தில் தான், கோவிலை இடிக்கும் போது இருந்த, விஸ்வநாதர் லிங்கமும் புதைக்கப்பட்டுள்ளது. என கூறப்பட்டு இருந்தது.



தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள, மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல ஆண்டுகளாக, இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.  தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கான செலவை, மாநில அரசு ஏற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதை வரவேற்று பலரும் சமூகவலைதளமான டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து தான் ஞான வாபி மசூதியை கட்டினார் என்பதை பலரும் சுட்டிக்காட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்

XXXXX

ஆஞ்சநேயர் பிறப்பிடம்: யுகாதி வருடப்பிறப்பில் ஆதாரங்கள் வெளியிடப்படும்

ஆஞ்சநேயர் பிறப்பிடம், திருமலையில் உள்ள அஞ்னாத்திரி மலைத் தொடர் என்பதற்கான ஆதாரங்களை, தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி அன்று வெளியிட உள்ளதாக, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் குடியிருக்கும் திருமலை, ஆஞ்சநேயரின் பிறப்பிடமாகவும் அடையாளம் காணப்பட உள்ளது. இதுகுறித்து பல புராண இதிகாசங்களை ஆராய்ந்து அறிய, ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை, திருமலை தேவஸ்தானம் அமைத்தது. அவர்களும், பல புராணங்கள், கிரந்தங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து உள்ளனர்.


அதன்படி, ஆஞ்சநேயர், சேஷாசல மலையில் உள்ள அஞ்னாத்திரியில் பிறந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு தகவல்களை, வரும், 13ம் தேதி தெலுங்கு வருட பிறப்பான யுகாதி அன்று தேவஸ்தானம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.

ஆஞ்சனேய பக்தர்கள் இதை ஆவலுடன்  எதிர்பார்த்து நிற்கின்றனர். ஏற்கனவே வேறு சில மாநிலங்கள்  தங்கள் மாநிலத்தில்தான் அநுமன் பிறந்தான் என்று அறிவித்துள்ளன . தகவல் வெளயான பின்னர் ஞான மயம் குழு அதை  விரிவாக வெளியிடும் .

XXXX

கொரோனா பரவல் – புகழ்பெற்ற கோவிலில் தரிசனம் முழுவதும் ரத்து!!

கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சீரடி சாய் பாபா கோவிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோவிலும் ஏப்ரல் 30ம் தேதி வரை மூடப்படுகிறது

ஆந்திரத்திலுள்ள திருப்பதி பாலாஜி கோவிலிலும் இலவச தரிசனம் ரத்தாகிறது

ஏப்ரல் 11 ஆம் தேதி இரவுடன் இலவச தரிசனம் முடிவடையும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. மேலும் நாளொன்றுக்கு 300 ரூபாய் டிக்கெட் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

xxxx

காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை கட்டமைக்க மத்திய அரசு திட்டம்

அயோத்தியிலிருந்து, காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை, உத்தர பிரதேசத்தில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பாரதீ ய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட ம் என்ற இடத்துக்கு முதலில் சென்றார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலிருந்து, சித்ரகூட்டிற்கு ராமர் சென்ற பாதையை, ‘ராம் வன் காமன் மார்க்என்ற பெயரில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.அயோத்தியிலிருந்து, 210 கி.மீ., துாரத்தில் உள்ள சித்ரகூட்டிற்கு, பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜெத்வாரா, ராஜாபூர் வழியாக தனிப்பாதை கட்டமைக்கப்பட உள்ளதுஎன, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமாயணத்தில், ராமபிரான், 14 ஆண்டுகள் காட்டில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பல பகுதிகள், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளன.  மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வர்; காங்கிரசைச் சேர்ந்த பாஹெல் ஆகியோரும், தங்கள் மாநிலங்களில் ராமர் காட்டுக்கு சென்ற பாதையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

XXXX

மதுரை சித்திரை திருவிழா ரத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாத திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்.

கடந்தாண்டு கொரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற இருந்த சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.

கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா பரவல் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. எனவேதான் கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரை சித்திரை திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டைப்போல் கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடைபெறும்.” என்றார்.

XXXX

‘கோயில் அடிமை நிறுத்து’ இயக்கம்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவு

 கோயில் அடிமை நிறுத்துஇயக்கத்திற்கு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மனிதனை நல்வழிப்படுத்துவதில் முக்கிய கேந்திரங்களாக கோயில்கள் உள்ளன. கோயில் கட்டுவதற்கு பூமியை தேர்ந்தெடுத்தல் துவங்கி சூரியன், சந்திரன் இருக்கும் வரை அங்குள்ள விக்ரகங்கள் சக்தியுடன் விளங்க வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் மிகவும் அக்கறை செலுத்தியுள்ளனர்.

கோயில்களை முழுமையாக பராமரிக்க முடியாத நிலை தற்போது நிலவுகிறது. நம்முடைய பெருமைகளை காப்பாற்றுவதில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. காவிரி அன்னையை பாதுகாக்கவும், திருக்கோயில்களை பராமரிக்கவும் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தற்போது பெரும் முயற்சி எடுத்து வருகிறார். 3 கோடி மக்களை ஒருங்கிணைத்து இந்த திருக்கோயில் அடிமை நிறுத்துஇயக்கம் மூலம் விமோசனம் அளிக்க முயற்சிக்கிறார்.


தர்ம சிந்தனை உள்ள பெரியவர்கள், ஆன்மிக அறிஞர்கள், சாஸ்திரம் அறிந்தவர்கள், பக்தர்கள், பொதுமக்கள், ஆன்றோர், சான்றோர் பொறுப்பில் கோயில்கள் வர வேண்டும். எந்த நோக்கத்திற்காக கோயில்கள் உருவாக்கப்பட்டனவோ அவற்றை நவீன அறிவியல் உதவி கொண்டு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். திருப்பதி நிர்வாகம் போன்று கலை வளர்க்கும், கல்வி வழங்கும் நிலையங்களாக கோயில்கள் மாற வேண்டும்.

கோயில்களை பாதுகாக்க துவங்கப்படும் இந்த முயற்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்

xxxxx

கீதா பிரஸ்தலைவர் காலமானார்

கீதா பிரஸ்தலைவர் ராதேஷியாம் கெம்கா, 87 வயதில் , காலமானார்.உத்தர பிரதேச மாநிலம் கோ ர க்பூரில், 1923 முதல் செயல்பட்டு வரும் அச்சகம், கீதா பிரஸ்.

பகவத் கீதை, ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் உள்ளிட்ட ஹிந்து மத புத்தகங்களை அச்சடித்து, குறைந்த விலையில், கீதா பிரஸ் விற்பனை செய்து வருகிறது. கீதா பிரஸ் தலைவர் ராதேஷியாம் கெம்கா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர் இறந்தார். அவரது மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் 38 ஆண்டுகளுக்கு கல்யாண் என்ற பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தி வந்தார் .

xxxx

இன்னும் ஒரு துயரச் செய்தி

சைவ உலகில் புகழ் பெற்ற சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி என் ராமச்ச ந்திரன் காலமானார்.வழக்கறிஞ ராக  வாழவைத் துவங்கியபோதும் தமிழ் இலக்கிய சேவை மூலம் பிரபலமாகி டாக்டர் பட்டம் பெற்றார். சைவ சமயத் துறையில் பெரும் புலமை பெற்ற அவர் சைவ நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இரு மொழிகளிலும் சொற்பொழிவாற்றி தமிழுக்கும் சைவத்துக்கும் சேவை ஆற்றினார். பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் பாடல்கள் அப்பர் தேவாரம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். லண்டனுக்கு பல முறை விஜயம் செய்த அவர், இங்கு வாழும் தமிழ் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.

கீதா பிரஸ் உரிமையாளர் ராதேஷியாம் குடும்பத்துக்கும் டாக்டர் டி .என் ஆர் . குடும்பத்துக்கும் ஞான மயம் குழுஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவிக்கின்றது

XXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags-Tamil Hindu, News Roundup, 11421

உலக இந்து சமய செய்தி மடல் 4-4-2021 (Post No.9456)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9456

Date uploaded in London – –4 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

இன்று APRIL   4-ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும்இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும் .

Xxxx

XXXX

மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வேட்டி,சட்டையில் பிரதமர் மோடி வந்தார்.  மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் மோடிக்கு  கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

வெளியே காத்திருந்த மக்களை பார்த்து கை அசைத்துவிட்டு, கிழக்கு கோபுரம் அம்மன் சன்னிதி வழியாக உள்ளே சென்றார். பொற்றாமரைக்குளத்தின் பின்னணியில், தெற்கு கோபுரம் இருப்பதை கண்டு ரசித்தார். அவருக்கு, கருமுத்து கண்ணன், கோவில் சிறப்புகளை விளக்கினார். 8:52 மணிக்கு அம்மனை தரிசித்தார். அவரது பெயரில், அர்ச்சனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, முக்குறுணி விநாயகர் சன்னிதி வழியாக, சுவாமி சன்னிதிக்கு இரவு, 9:05 மணிக்கு சென்றார். அங்கும் அர்ச்சனை செய்யப்பட்டது. கோவில் விழாக்கள், குறிப்பாக, சித்திரை திருவிழாவின் சிறப்புகள் குறித்து பிரதமரிடம் கருமுத்து கண்ணன் கூற, ஆர்வமாக கேட்டார்.

கோவில் வருகை பதிவேட்டில் தமிழகம், மதுரையின் சிறப்புகள் மற்றும் கோவிலின் முக்கியத்துவம் குறித்து குறிப்பு எழுதினார்.பி ரசாதமாக விபூதி தரப்பட்டது.இரவு, 9:17 மணிக்கு தரிசனம் முடிந்து, பசுமலை, ‘கேட் வே’ ஓட்டலுக்கு ஓய்வு எடுக்கச்சென்றார்.

சீன அதிபரின் வருகையின் போது மாமல்லபுரத்தில் வேட்டி, சட்டையுடன் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் வருகையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

XXXX

ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு திருமலையில் மீண்டும் பணி

திருப்பதி- திருமலை தேவஸ்தானத்திலிருந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு, மீண்டும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கோவிலில், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த அர்ச்சகர்களின் வம்சாவளியினருக்கு மட்டுமே, கோவிலில் சேவை செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.

வைகாசன ஆகம பரம்பரையைச் சேர்ந்த 4 பேர் பரம்பரை முறையில் அர்ச்சகர்களாக இருந்து வந்தனர்.   இவர்கள் ரமண தீட்சிதலு, சீனிவாச தீ ட்சிதலு, நாராயண தீட்சிதலு மற்றும் நரசிம்ம தீட்சிதலு ஆவார்கள்.

இவர்கள் நால்வருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு வயதைக் காரணம் காட்டி கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது.  இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இவர்கள் அனைவரும் இங்கு ஊதியத்துக்காக மட்டும் பணி புரிவதில்லை என அர்ச்சகர்கள் சார்பில்தெரிவிக்கபட்டது.


இந்த குடும்பங்களைச் சேர்ந்த அர்ச்சகர்களை, இரண்டு குடும்பங்களுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்களில் ஒருவர் தலைமை அர்ச்சகராகவும் செயல்படுவார். தலைமை அர்ச்சகரின் தலைமையில், ஏழுமலையான் கைங்கரியங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 தங்கள் குடும்பங்கள் ஏழுமலையான் சேவைக்கே அர்ப்பணிக்கப்பட்டதால், தாங்களால் இயன்ற வரையில் சேவை செய்யும் வாய்ப்பு வழங்க வேண்டும் என, ஆந்திர அரசிடம் முறையிட்டனர்.

கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட இரண்டு அர்ச்சகர்கள் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி கண் டனர் . பரம்பரை அர்ச்சகர் விஷயத்தில் அரசாங்க உத்தரவு செல்லுப டியாகாது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமான செயல் என்று ஹைக்கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அர்ச்சகருக்கு சார் பான இந்த உத்தரவை கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக நிறைவேற்றாது இருந்த ஆந்திர அரசு இப்போது திடீர் உத்தர வரைப் பிறப்பித்துள்ளது . இது குறித்து பரம்பரை அர்ச்சகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன்படி, தலைமை அர்ச்சகராக பணியிலிருந்து ஓய்வு பெற்ற ரமண ரமண தீட்சிதலு , மீண்டும் அதே பணியில் நியமிக்கப்பட உள்ளார்.

XXXXX

திருப்பதி பக்தர்கள் முடி காணிக்கை சீனாவுக்கு கடத்தல்?

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தலைமுடி, சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இங்குள்ள திருப்பதியில்,. இந்த கோவிலை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.இங்கு, பக்தர்கள் மொட்டை போட்டு காணிக்கையாக அளிக்கும் தலைமுடி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ‘ஆன்லைன்’ வாயிலாக ஏலம் விடப்படுகிறது. ரூபாய் 125 கோடி இதன் வாயிலாக, கடந்த ஆண்டு மட்டும், கோவில் நிர்வாகத்துக்கு, 125 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த பிப்., 7ம் தேதி, வடகிழக்கு மாநிலமான மிசோரமின் சங்டே என்ற இடத்தில், சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை, அசாம் ரைபிள்ஸ் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.அந்த வாகனங்களில், 120 பைகளில் தலைமுடி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவை, திருப்பதி கோவிலில் இருந்து எடுத்து வரப்படுவதாக, அதில் இருந்த நபர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடப்பதாகவும், இது தொடர்பாக, கோவில் நிர்வாகம் மற்றும் மாநில அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ., கோரியுள்ளது.

திருப்பதி கோவிலில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படும் தலைமுடி, தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர், தாய்லாந்து வழியாக, சீனாவுக்கு கடத்தப்பட்டு, ‘விக்’ WIGS தயாரிக்க பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.’இந்த கடத்தலுக்கு, தேவஸ்தான அறக்கட்டளை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். மிசோரமில் கைப்பற்றப்பட்ட தலைமுடியின் மதிப்பு, 2 கோடி ரூபாய் இருக்கும்’ என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இது குறித்து விளக்கம் அளித்த, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:மிசோரமில் கைப்பற்றப்பட்ட தலைமுடியின் மதிப்பு, 18 லட்சம் ரூபாய் இருக்கும். மேலும், அந்த தலைமுடிகள் தரம் பிரிக்கப்படாதவையாக உள்ளன. திருமலை கோவில் அறக்கட்டளையை பொறுத்தவரை, தலைமுடியின் நீளம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் முதல் தரம், இரண்டாம் தரம் என, தரம் பிரிக்கப்பட்ட பிறகே ஏலம் விடப்படும்.

தி ருமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கிருந்து அவ்வளவு எளிதாக தலைமுடியை யாரும் கடத்திச் செல்ல முடியாது. வீண் விளம்பரங்களுக்காகவே, சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில், தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு ஊடக நிறுவனம் உட்பட, ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.. திருப்பதி லோக்சபா தொகுதிக்கு, இம்மாதம், 17ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, இந்த தலைமுடி கடத்தல் விவகாரம், பிரசாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

XXXX

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு எதிரொலி: இலவச தரிசன டிக்கெட் குறைப்பு; திருப்பதி தேவஸ்தானம் அதிரடி

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் எண்ணிக்கையை தேவஸ்தானம் அதிரடியாக குறைத்துள்ளது. இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி  நிருபர்களிடம் கூறியதாவது:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட் 22 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்கப்படும். பக்தர்கள் அதிகம் கூடும் அன்ன பிரசாத கூடம், வைகுண்டம் காத்திருப்பு அறை, தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா ஆகிய இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

திருமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி கொண்டு வர வேண்டும். அறைகள் ஒதுக்கீடு செய்ய கூடிய மையங்களில் உடல் வெப்பநிலை கணக்கிடக்கூடிய THERMAL SCANNING தர்மல் ஸ்கேனிங் பரிசோதனை செய்யப்படும். தரிசனத்திற்கு செல்லக்கூடிய வைகுண்டம் காத்திருப்பு அறை மற்றும் கோயிலுக்குள் தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிருமி நாசினிகளை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும்  13ம் தேதி யுகாதி ஆஸ்தானம் 6ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம், 8ம் தேதி அன்னமாச்சார்ய நினைவு தினம், 9ம் தேதி பாஷ்யகார்ல உற்சவம் ஆகியவை நடைபெறும். 18ம் தேதி ராமானுஜ ஜெயந்தி, 21ம் தேதி ராமநவமி ஆஸ்தானம், 24 முதல் 26ம் தேதி வரை வசந்த உற்சவம் நடைபெற உள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

XXX

ஆண்டாள் கோவிலில் புஷ்ப யாகம்

தமிழ் நாட்டில் ஸ்ரீ வில்லிப் புத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகு 108 மலர்களால் ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து  புஷ்ப யாகம் நடைபெற்றது. மல்லி, முல்லை, ரோஜா, தாமரை உள்ளிட்ட 108 வகையான மலர்களால் புஷ்பயாகம் நடைபெற்றது. இதையொட்டி ஆண்டாளும், ெரங்கமன்னாரும் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.


புஷ்ப யாகத்தை காண விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

XXXX

3 மொழிகளில் தயாராகும் ராமாயண கதையில் ராமராக மகேஷ் பாபு

ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கில் ஶ்ரீ ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர். தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் ராமாயண கதை படமாகி வருகிறது. இதில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடிக்கின்றனர். சயீப் அலிகான் ராவணனாக வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் 3-டி தொழில் நுட்பத்தில் இன்னொரு ராமாயண படமும் தயாராகிறது. பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அதிக பொருட் செலவில் 3 பாகங்களாக இந்த படத்தை எடுக்க இருப்பதாகவும் ராமராக ஹிருத்திக் ரோஷனும் சீதையாக தீபிகா படுகோனேவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது ஹிருத்திக் ரோஷனுக்கு பதில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். ராமர் கதாபாத்திரத்துக்கு மகேஷ்பாபுவின் முகம்தான் பொருத்தமாக உள்ளது என்று அவரை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தை நிதிஷ் திவாரி,  ரவி உடையார் ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள்.

XXXX

பழநி ராஜ அலங்கார முருகன் படம்: ஸ்டாலினுக்கு பரிசு

தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, ராஜ அலங்காரத்துடன் காணப்படும் பழநி முருகன் புகைப்படத்தை, பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வழங்கியது.

பழநி மக்களிடம், ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். அப்போது, பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பழனி, செல்வகுமார், ஹக்கீம் ராஜா, சந்திரசேகர் உள்ளிட்டோர் சந்தித்து, ராஜ அலங்காரத்துடன் காணப்படும் முருகன் படத்தை, ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினர்.

பின், மனு ஒன்றையும் வழங்கினர். அம்மனுவில், தி.மு.க., ஆட்சி அமைத்ததும், பழநியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. திருத்தணியில், வெள்ளி வேல் பரிசளிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு, பழநியில் முருகன் படம் பரிசாக கிடைத்துள்ளது.

XXXXX

முத்துமாரியம்மன் கோயில் விழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கமுதி முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த MARCH 19ம் தேதி வெள்ளிக் கிழமை கொடி ஏற்றத்துடன் துவங்கிய இத்திருவிழா 16 நாள் திருவிழாவாக நடைபெற்ற.து

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். இன்று அக்கினி சட்டி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், பால்குடம், பூப்பெட்டி, கரும்பாலை தொட்டில், பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கியமாக, ஏராளமான பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.

இவ்வாறு பூசுவதால் உடலில் உள்ள நோய்கள் தீரும் என்பது ஐதீகம். விழாவை காண சென்னை, காரைக்குடி, மதுரை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் க்ஷத்திரிய நாடார் உறவின் முறை செய்தது.

XXXX

கோவில்களில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மனம் திருந்தி பணத்தை உண்டியலில் போட வந்தபோது சிக்கினர்.

மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே எம்மகரே பகுதியில் பப்புசாமி கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கோவிலில் உண்டியல் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து பாண்டேஸ்வர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர். 

இந்தநிலையில் பப்புசாமி கோவிலுக்குள் 2 பேர் வந்தனர். அவர்கள், தாங்கள் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என்று கோவில் உண்டியலில் பணத்தை காணிக்கையாக போட்டனர். இதனை கவனித்த கோவிலில் இருந்தவர்கள், என்ன தவறு செய்தீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது 2 பேரும், அவர்களிடம் ஜோகட்டே பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகீம், அப்துல் தவ்பீக் ஆகிய நாங்கள் இந்த கோவில் உள்பட பல கோவில்களில் உண்டியல் பணத்தை திருடுவதை தொழிலாக வைத்து இருந்தோம். 

தற்போது நாங்கள் 2 பேரும் மனம் திருந்தி திருட்டு தொழிலை கைவிட்டுவிட்டு கோவிலில் மன்னிப்பு கேட்டு திருடிய பணத்ைத உண்டியலில் போட வந்தோம் என்றனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், பாண்டேஸ்வர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலில் திருடி வந்த 2 பேர், மனம் திருந்தி திருடிய கோவில் உண்டியலில் பணத்தை போட வந்தபோது சிக்கிய ருசிகர சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

XXXXX

ஈஸ்டர்’ உரையில் ‘ஹோலி’யை குறிப்பிட்ட அதிபர் ஜோ பைடன்

ஈஸ்டர்’ பண்டிகையை முன்னிட்டு, உரை நிகழ்த்திய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹிந்துக்களின், ‘ஹோலி’ பண்டிகையை குறிப்பிட்டு பேசினார். கிறிஸ்துவர்களின் ஈஸ்டர் பண்டிகையை

முன்னிட்டு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: ஈஸ்டர் கொண்டாட்டத்திற்காக, நானும், நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடனும், ஆவலுடன் காத்திருக்கிறோம். நாங்கள் இருவரும், கொரோனாவுக்கான தடுப்பூசியை ஏற்கனவே செலுத்திவிட்டோம். வரும் ஈஸ்டர் தினத்தன்று, எங்கள் குடும்பத்தினர் சிலர், தடுப்பூசியை செலுத்திக்கொள்ள இருக்கின்றனர்.ஹிந்துக்களின் ‘ஹோலி’ பண்டிகை, கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையும் நெருங்கி வருகிறது. இது, கொண்டாட்டத்திற்கான நேரம் மட்டும் அல்ல, அனைத்து சமூக மக்களுடன் ஒன்றிணைவதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும் ஆண்டு.முக்கியமில்லாதோர் என யாரும் இல்லை. அனைவருமே முக்கியமானவர்கள் தான்.

கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும். அது மிகவும் பாதுகாப்பானது. அதை மக்களிடம் நிரூபிக்கவே, அமெரிக்க அதிபராகிய நான், தொலைக்காட்சிக்கு முன், எனக்கான முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

XXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர்

 வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றிவணக்கம்

 tags – Tamil Hindu, News Roundup4421

உலக இந்து சமய செய்தி மடல் 21-2-2021 (Post No.9291)

TIRUPATI MASS WEDDING

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9291

Date uploaded in London – –21 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று பிப்ரவரி -21 ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

Xxx

அசோக் சிங்கள் குடும்பத்தினர் 11 கோடி ரூபாய் நன்கொடை

ஸ்ரீராம ஜன்ம பூமி போராட்டம் என்றால் உடனே நம் மனதில் தோன்றும் பெயர் அசோக் சிங்கள். ஸ்ரீராம ஜன்ம பூமிக்காகவே வாழ்ந்தவர்.. அவர் வாழ்நாளில் அது நிறைவேறாமல் போய்விட்டது

அசோக் சிங்கள் குடும்பத்தினர் அயோத்தியில் புதிய ராமர் ஆலயம் கட்டிட 11 கோடி ரூபாயை அளித்தனர். முதலில் 6 கோடி ரூபாயை அளித்தனர். இப்போது மேலும்  ரூ.5 கோடிக்கான காசோலையை அரவிந் சிங்கள் உதய்பூரில் வழங்கினார்.

xxxx

ராம ஜன்ம பூமிக்கு 50 லக்ஷம் நிதி:

குஜராத் மாநிலம் சூரத் மாநகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி பாவிகா ராம ஜன்ம பூமி ஆலய கட்டிடப் பணிக்காக ரூ.50 லக்ஷம் நிதி சேகரித்துத் தந்துள்ளார். இவர் ஒரு பாடகி. ராமாயணத்தை தனது இனிய குரலில் பாடி பக்தர்களிடம் இருந்து இந்த நிதியை திரட்டியுள்ளார்.

xxxx

சென்னை முஸ்லிம் தொழிலதிபர் ரூ.1 லட்சம் நன்கொடை

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தன்னார்வலர்களுடன் இந்து முன்னணி உறுப்பினர்கள் இணைந்து அவரை அணுகியபோது, தொழிலதிபர் டபிள்யூ எஸ் ஹபிப் ரூ.1,00,008-க்கு காசோலையை நன்கொடையாக அளித்து நிதி திரட்டுபவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்

முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் மத நல்லிணக்க நட்பை வளர்க்க விரும்புகிறேன். நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள். இந்த நம்பிக்கையுடன் நான் இந்த தொகையை நன்கொடையாக அளித்தேன்” என்று தொழிலதிபர் ஹபீப் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

Xxx

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது. பிரசித்தி பெற்ற பொங்கலிடும் நிகழ்ச்சி பிப்ரவரி 27 ம் தேதி

நடக்கிறது.

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா அம்மனுக்கு காப்பு கட்டு சடங்குடன் பிப்ரவரி 19  தொடங்கியது. மேல் சாந்தி பிரம்மஸ்ரீ ஈஸ்வரன் நம்பூதிரி காப்பு கட்டி விழாவை தொடங்கி வைத்தார்.


இந்த விழா 28-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் தினமும் பள்ளி உணர்த்தல், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் , தீபாராதனை,  உஷ பூஜை, , களபாபிஷேகம், , பந்தீரடி பூஜை, , உச்ச பூஜை,  நடை அடைப்பு, மாலை 5 மணிக்கு நடை திறப்பு அத்தாள பூஜை, நடைபெறும் இரவு 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

விழாவின் சிகரமான பொங்கல் வழிபாடு 27-ந் தேதி காலை 10.50 மணிக்கு நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கல் படைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது


1997, 2009 ஆகிய ஆண்டுகளில் பொங்கலிடுவதில் உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையாக கொண்டாட கோவில் அறக்கட்டளை தீர்மானித்து உள்ளது.

Xxxxxxxx

கோவில் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு?.. ஆக்கிரமிப்பாளர்கள் யார்?.. அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

கோவில் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு என அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்; இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில், அதாவது கோவிலுக்கு சொந்தமான இடங்கள், அவற்றின் கட்டண விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பட்டியல் வைக்கவும், பூஜை கட்டணங்கள், வாடகை விவரம், நன்கொடை, செலவினங்கள், ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கோவில் சொத்துக்களை கண்டறிய அடையாள குழுவும், பரிசீலனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நில குத்தகை மற்றும் வாடகைதாரர்கள் குடியிருப்போர் அனுபவத்தில் உள்ளோர், ஆகியோரிடம் இருந்து வரவேண்டிய 297.63 கோடி ரூபாய் பாக்கியை கேட்டு 42,818 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதில் 14,026 பேரிடம் இருந்து 32.49 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர்கள் யார்?, சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? என்பது தொடர்பான முழு விவரங்களையும், 10 மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Xxxx

திருக்கோவில் தொலைக்காட்சி: அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

திருக்கோவில் தொலைக்காட்சி தொடங்க அறநிலையத் துறையின் பொது நல நிதியை பயன்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் விழாக்களை ஒளிபரப்புவதற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் என்ற பெயரில் தொலைக்காட்சி ஒன்றை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 8.75 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், இந்து சமய அறநிலையத் துறையின் பொதுநல நிதியை கொண்டு தொலைக்காட்சி தொடங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், பொதுநல நிதியை கோவில்களை சீரமைக்கும் பணிகளுக்கு மட்டுமே செலவிட முடியும். இதுபோன்று தொலைக்காட்சி தொடங்குவதற்கு செலவு செய்ய முடியாது. ஒருவேளை தொலைக்காட்சித் தொடங்குவதாக இருந்தால், அதுதொடர்பாக மக்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  பிப்ரவரி 18,  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருக்கோவில் தொலைக்காட்சிக்கு அறநிலையத் துறையின் பொது நல நிதியை பயன்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Xxxx

துர்கா பூஜையில் ரூ.32 ஆயிரம் கோடியில் படைப்பு தொழில்கள்

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை திருவிழாவை ஒட்டி உருவாகும் படைப்புத் தொழில்களின் மதிப்பு ரூ.32,377 கோடி என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் துர்கா பூஜை மிகவும் பிரசித்திப் பெற்றது. ஒருவாரம் நடக்கும் இந்தத் திருவிழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, பொம்மைகள் தயாரிப்பு என படைப்புத் தொழில்கள் அதிகம் உருவாகும். துர்கா பூஜையை ஒட்டி உருவாகும் படைப்புத் தொழில்களின் பொருளாதார மதிப்பை ஆய்வு செய்வதற்கென்று மேற்குவங்க மாநிலம் அரசு குழுவை அமைத்தது. பிரிட்டிஷ் கவுன்சில், ஐஐடி காரக்பூர், இங்கிலாந்தில் உள்ள ராணி மேரி பல்கலை ஆகியவற்றில் உள்ள நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.


இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்; ‛துர்கா பூஜையை ஒட்டி உருவாகும் படைப்புத் தொழில்களின் பொருளாதார மதிப்பு ரூ.32,377 கோடி என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஏழு நாட்கள் நிகழும் பண்டிகையில் இது மிகப் பெரிய தொகை. இது மாலத்தீவின் ஜிடிபிக்கு ஒப்பிடத்தக்கது. துர்கா பூஜை திருவிழாவை உலகின் தலைசிறந்த திருவிழாக்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும்,’ எனக் கூறினார்.

Xxxx

திருப்பதி கோவிலுக்கு ஊறுகாய் நன்கொடை

இதோ ஒரு சுவையான செய்தி ; நாக்கில் உமிழ் நீரை சுரக்க வரும் செய்தி! திருப்பதி பாலாஜி கோவிலிருந்து வந்திருக்கிறது

திருமலை, திருப்பதி தேவஸ்தானத்திற்கு, 12.65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊறுகாய், நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. திருமலை, திருப்பதி தேவஸ்தான அன்னதான அறக்கட்டளைக்கு, ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் சிராபூரைச் சேர்ந்த, ‘விஜயா புட் ப்ராடெக்ட்ஸ்உரிமையாளர் ராமு, 12.65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊறுகாயை நன்கொடையாக அளித்தார்.அதில், 4,500 கிலோ எடையுள்ள, ஏழு ரக ஊறுகாய்கள், 300 கிலோ மஞ்சள் பொடி, 200 கிலோ மிளகாய் காரம், 300 கிலோ புளியோதரை பொடி ஆகிவையும் அடங்கியுள்ளது.

Xxx

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழைகளுக்கு இலவச திருமணம்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் கோவில்களுக்கு பசு மற்றும் கன்றுகளை வழங்கும் கோ மாதா திட்டத்தை அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி தொடங்கி வைத்தார்.



பின்னர் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெகன்மோகன் ரெட்டி வழிகாட்டுதலின்படி திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் மத நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதன் ஒரு பகுதியாக கார்த்திகை மாதத்தில் கோவில்களுக்கு பசு வழங்கும் கோமாதா திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது.

தேவஸ்தானம் சார்பில் கல்யாண மஸ்து திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இலவசமாக திருமணங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்துவதற்காக 3 முகூர்த்த நாட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மே 28, அக்டோபர் 30, நவம்பர் 17 ஆகிய தேதிகளில் திருமணம் நடத்தப்பட உள்ளது.

இதற்காக திருப்பதியில் இயங்கி வரும் விசாரணை மையத்தில் தகவல்களை பெற்று ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யும் தம்பதிகளுக்கு தங்க தாலி, பட்டு வஸ்திரம், பூ மாலை, தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படும்.

மணமகன் வீட்டார் சார்பில் 10 பேரும், மணமகள் வீட்டார் சார்பில் 10 பேர் என திருமண விழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் வெளியீடு


திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, மார்ச் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட் 20-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதேபோல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலை, திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி ஓய்வெடுக்க, 20-ந்தேதி மாலை 3 மணியளவில் காலியாக உள்ள அறைகளின் விவரம் ஆன்லைன் மூலமாக ெவளியிடப்படுகின்றன.

எனவே அறைகள் தேவைப்படும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாட்களில் திருமலை, திருப்பதிக்கு வந்து, தாங்கள் முன்பதிவு செய்த அறைகளில் தங்கி ஓய்வெடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம்.

Xxxx

விநாயகருக்கு அவமரியாதை புது சர்ச்சையில் ரிஹானா

விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ள, பிரபல பாப் பாடகி ரிஹானா, மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளார்.

தன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரிஹானா, ஹிந்துக் கடவுள் விநாயகர் உருவத்துடன் கூடிய, ‘டாலர்’ அணிந்துள்ளதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல பாப் பாடகி ரிஹானா, டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவரைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்த, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க், பொய் தகவல்களை வெளியிட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில், புதிய படத்தை, ரிஹானா வெளியிட்டுள்ளார். அதில், மேலாடை ஏதும் அணியாமல், குட்டையான, ‘ஷார்ட்ஸ்’ எனப்படும், கால்சட்டை மட்டும் அணிந்துள்ளார்
ஹிந்து கடவுள் விநாயகரை அவமதித்துள்ளதாக, அவருக்கு பலரும் சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்து, கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

Xxxx

உலக நாடுகளுக்கு குருவாக வேண்டும் இந்தியா! ஆர்.எஸ்.எஸ்., தலைவர் அழைப்பு

”உலகையே குடும்பமாக கருதும் சிந்தனையால், உலக நாடுகளுக்கு குருவாக இந்தியா விளங்கி வந்தது. அதை மீட்டெடுக்க ஆர்.எஸ்.எஸ்., இயங்கி வருகிறது,” என்று, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசினார்.

கோவை, ‘கொடிசியா’ கண்காட்சி அரங்கில் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், கோவையின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் பிப்ரவரி 19 பேசியதாவது:உலக நாடுகளில் வித்தியாசமானது நம் நாடு. நம் முன்னோர் ஏராளமான நல்ல விஷயங்களை பொக்கிஷமாக தந்துவிட்டு சென்றுள்ளனர்.

வேறுபாடுகள் பல இருந்தாலும், நம் நாடு அனைத்துத் துறையிலும் முதன்மையாக விளங்கியது.நாடு உன்னதமான நிலையை அடைவதற்கு, தனிமனித நிர்மாணம் மட்டுமே தீர்வு என்பதை உணர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை, கேசவ் பலராம் ஹெட்கேவர் துவங்கினார்.


உலக நாடுகளுக்கு எல்லாம், வேறு நாடுகளை கைப்பற்றுவதில் தான் ஆர்வம் இருந்தது. ஆனால், உலகையே குடும்பமாக கருதும் சிந்தனையே இந்திய தேசத்துக்கு இருந்தது. அதனால் தான், உலக நாடுகளுக்கு குருவாக இந்தியா விளங்கி வந்தது. மீண்டும் அந்த நிலையை அடைய, ஆர்.எஸ்.எஸ்., பணியாற்றி வருகிறது. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்

Xxxx

உறவுகளின் மேன்மையை உணர்த்திய ஹிந்து குடும்ப சங்கமம்

விவேக பாரதி’ மற்றும் ‘ராஷ்ட்ர சேவிகா சமிதி’ இணைந்து நடத்திய, ‘ஹிந்து குடும்ப சங்கமம் -2021’ என்ற நிகழ்ச்சி, சென்னையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்துவது, தம்பதியர் இடையே புரிதல் மேம்படுவது, சமுதாயத்தை உயர்த்த குடும்பத்தின் பங்களிப்பை புரிய வைப்பது உள்ளிட்ட நோக்கங்களுடன், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கு கோலப் போட்டி, சிறுவர் – சிறுமியருக்கு பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

இசை, உரை, நடனம் ஆகியவற்றுடன் விடுகதை, பாரம்பரிய அந்தாதி பாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. ‘கொரோனாவிற்கு பின் குடும்ப வாழ்க்கை’ மற்றும் ‘கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பின் தாக்கம்’ ஆகிய தலைப்புகளில், கலந்துரையாடல் நடந்தது.

இதைத் தொடர்ந்து, ஆர்.பி.வி.எஸ்.மணியன் தொகுத்த, ‘இனியதொரு ஹிந்துக் குடும்பம், சில உரத்த சிந்தனைகள்’ என்ற, புத்தக வெளியீடு நடந்தது.இதில், ‘விஜய பாரதம்’ இதழைச் சேர்ந்த வி.ஆனந்த் புத்தகத்தை வெளியிட, ஓய்வு பெற்ற எஸ்.பி.ஐ., வங்கி ஊழியர் கே.லட்சுமி
நாராயணன் பெற்றுக் கொண்டார்.அதன் பின், குறு நாடகம் அரங்கேறியது.

நிகழ்ச்சியின் நிறைவாக, ‘நம் பண்பாட்டை காப்பாற்றப் போவது நம் குடும்பங்களே’ என்ற தலைப்பில், ஆர்.பி.வி.எஸ்.மணியன் சொற்பொழிவு நடந்தது.நிகழ்ச்சியில், விவேக பாரதி செயலர் மங்கையர்க்கரசி, ஒருங்கிணைப்பாளர் சந்திரமவுலி, ராஷ்ட்ர சேவிகா சமிதி மாநகரச் செயலர் வித்யா ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர்.

Xxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன…………………………..

செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி,

வணக்கம்

TAGS – TAMIL HINDU , NEWS ROUNDUP, 21221