வார்த்தை பழசு, அர்த்தம் புதுசு!!! (Post No.8911)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8911

Date uploaded in London – – 10 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வார்த்தை பழசு, அர்த்தம் புதுசு!!!

Compiled by Kattukutty

தாய் – ந்த குற்றத்தையும் மன்னித்து விடும் நீதி மன்றம்.

தாய்தகப்பன் – காதலர்களின் இதயங்களை மாற்றும் டாக்டர்கள்!!!

பட்டம் – படித்தவர்கள் கையில் மட்டுமல்ல படிக்காதவர் கையிலும்!!!

மனச்சாட்சி – மனிதனை நெறிப் படுத்தும் உள் துறை அமைச்சர்.

மனம் – 1) மனித கம்ப்யூட்டரின் “டிஸ்க்

               2) ஆ(சா)பாசம் நிறைந்த ஆழ்கிணறு.

புதுக் குறள் – கற்க கசடற கற்பவை கற்ற பின்

                       வாங்குக அப்பாவிடம் வசை.

லிப்ஸ்டிக் – வறுமையின் நிறம் மட்டுமல்ல இந்த

                      வாய் “மை”யின் நிறமும் சிவப்புதான்!!!

பிப்ரவரி – ஆங்கிலத் தாயின் குறை நாள் குழந்தை!!!

காந்தி – பிராந்திக் கடையில் காந்தி !!! ரூபாய் நோட்டாக !!

காந்தி அஞ்சல் தலை – எத்தனை குத்துக்கள் உன்முகத்தில்…..

இறந்தும் நிரூபிக்கிறாய் நீ அஹிம்ஸாவாதி என!!!

சுதந்திரம் – வாங்கவும் உயிர் போனது, வாங்கியும் உயிர் போகிறது…..

லஞ்சம் – தன் மானம் அடமானம் வைக்கப் பட்டு பெறப்படும

         சன்மானம்……

பிச்சை – அரசியல்வாதியாக கையேந்தினால் “நிதி”

அன்னிய நாட்டில் நம்நாடு கையேந்தினால் “கடன் ஒப்பந்தம்”

ஆன்மீகவாதி கையேந்தினால் “அருள் உதவி”

அப்பாவி கையேந்தினால் “பிச்சை”

தேர்தல் வாக்குறுதி – I S I முத்திரை முத்திரை குத்தப்பட்ட

அப்பட்டமான “பொய்”!!!

வானம் 

அரசியல்வாதியால் வாங்க முடியாத “புறம் போக்கு”இடம்!!!

பயிரிட முடியாத பாலை!!!

அழகு 

ஆர்ப்பாட்டம் இல்லாத அசத்தல் !!!

கண்ணும் மனமும் கலந்து வழங்கும் தீர்ப்பு!!!

ஆடவரை அலைக்கழிப்பதெற்கென்றே ஆண்டவனால் பெண்ணுக்குஅளித்த வரப்ரசாதம்!!!

ஆணவம்,அகம்பாவம்,ஆபத்து,அகால அழிவு, என்னும் அருமைக்

குழந்தைகளின் தாய்!!!!

ஓர் அமைதியான ஏமாற்றுதல் !!!

நம்மிடம் இருப்பது, ஆனால் நமக்கு மட்டும் தெரியாதது

இதயத்தின் முகவரி, உணர்வுகளின் வாசல்!!

மவுனம் 

மவுனம் சம்மத்திற்கு அறிகுறி,

சிலர் மவுனம் சமாதிக்கு அறிகுறி!!!

கண்ணீர் – அட விழிகளுக்குக் கூட வியர்வையா????

நதி – மலைக்குத் தப்பி கடலுக்கு இரையானது!!!!

காதல் – உள்ளத்தை அள்ளித் தா என்றேன், அவள்,

உன்னிடம் உள்ளதை அள்ளித் தா என்றாள்!!!!

இணைந்தால் பந்தல், பிரிந்தால் கந்தல்……

அவள் ஜோடி சேர்ந்தாள், எனக்கு தாடி சேர்ந்தது!!!

காதல் கடிதம் – அன்பே, என் இதயத்தை கடனாக இதோ அனுப்பி

உள்ளேன். வட்டியாக ஒரு முத்தத்தை அனுப்பு …..

அன்பே, என் இதயத்தை விற்று நீ சுவாசிப்பதற்காக தென்றலை

வாங்கினேன், ஆனால் நீ என் காதலை விற்று ஒரு கணவனை

வாங்கிக் கொண்டாயே???

காதல் திருமணம் – வந்தது ஒருபந்தம், பிரிந்தது பல சொந்தம் !!!

ஏமாற்றுபவன் தூண்டில் போட, ஏமாந்து சிக்கியது ஒரு மீன்!!!

தாவணி – பருவ வயலுக்கு பாவை போட்டாள் வேலி !!!

பருவம் வந்தது, உருவம் தந்தது !!!

தாடி – வளை நினைத்து கண்ணீரில் முளைத்த செடி…….

முத்தம் – காதல் சாம்ராஜ்யத்தின் “ராஜ முத்திரை” !!!

புன்னகை – நண்பா அவள் சிரிக்கிறாள்,

தாடி வளர்க்கப் போவது நீயா, நானா ???

பெண் – இளமையில் இனிப்பு, முதுமையில் கசப்பு…….

ஜன்னல் – முன்பெல்லாம் வீட்டில், இப்போது ஜாக்கெட்டில்!!!

மஞ்சள் – பாவைக்கு அழகு, பத்திரிக்கைக்கு ஆபாசம்!!!

நகம் – பெண்களின் வெட்கத்திற்கு மருந்து !!!

வீடு – வயது வந்த பெண்களுக்கு சிறைச்சாலை……..

kattukuty

tags — வார்த்தை, பழசு, அர்த்தம், புதுசு

***

வித்யாசமான அஃறிணை, ஜடப்பொருள்களுடன் பந்தங்கள் , உறவுகள் ! (Post No.8910)

WRITTEN BY V. DESIKAN                           

Post No. 8910

Date uploaded in London – – 10 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

 9-11-2020 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் திரு V.தேசிகன் அவர்கள் ஆற்றிய உரை. Facebook.com/gnanamayam முகவரியில் இந்த ஒளிபரப்பைக் காணலாம்.

அஃறிணை பந்தங்கள்!

V. தேசிகன்

எல்லாருக்கும் வணக்கம். என்னைப்பற்றிய  சிறிய அறிமுகம் – பெயர்  தேசிகன். நான் பெங்களூரில்  வசிக்கிறேன்.  75 வயதாகிறது . இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் 30 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞானி.   

மனித பந்தங்கள், உறவுகள், நேயங்கள்  பற்றி உணர்ச்சிப்பூர்வமான பல வலை பதிவுகளை நாம்  படித்திருக்கிறோம். 

நான்  இன்று சற்றே வித்யாசமான  அஃறிணை, ஜடப்பொருள்  பந்தங்கள் , உறவுகளை  பற்றி  பேச விரும்புகிறேன்.  

ஏனோ தெரியவில்லை , எனக்கு சிறு வயதிலிருந்து  ஜடப்பொருள்களை  உயிர் உள்ளதாக கருதும் ஒரு மனப்பான்மை. இது ஒரு மன வியாதி அல்ல,  ஒரு மென்மையான உணர்வு என்றே கருதுகிறேன். உங்கள் கருத்துகளை கூறலாம். 

இன்று  என் வாழ்க்கையில்  என்னுடன் துணை வந்த  மூன்று ஜடப்பொருள்களை பற்றி பேச விரும்புகிறேன்.

முதல் பந்தம்:

1969ல்  வேலையில் சேர்வதற்காக  பெங்களூரு வந்தேன். அக்கால கட்டத்தில் பேருந்துகள் குறைவு. அதனால் ஒரு ஸ்கூட்டர்  வாங்கினேன். ஹெல்மெட் அணிய வேண்டிய கட்டாயமில்லை. இருந்தாலும் 60 ரூபாய் கொடுத்து ஒரு பச்சை நிற ஹெல்மட்டை வாங்கினேன். அணிந்து ஓட்டினேன். எல்லோரும் என்னை வினோதமாக பார்த்தார்கள் . கால ஓட்டத்தில்,  ஸ்கூட்டர்கள்  மாறின, கார் வந்தது. பிறகு ஹெல்மெட்டுக்கு அவசியம் இல்லாமல் போனது.  ஆனாலும் அதை தூக்கி ஏறிய மனமில்லை.  40 வருடங்கள் அதை பத்திரமாக பாதுகாத்தேன்.  கடைசியில் ஒரு நாள் வருத்தத்துடன் பிரியா  விடை கொடுக்க நேர்ந்தது. என் உயிர் காத்த பச்சை ஹெல்மெட் இன்றும்  என் மனதில் இருக்கிறது.

இரண்டாம் பந்தம் :

1969ல்  ஒரு லாட்ஜ்ல்  தங்கியிருந்தேன். காலையில் எழுந்ததும் காப்பி சாப்பிடும் பழக்கம் உண்டு. 7 மணிக்கு வேலைக்கு கிளம்ப வேண்டும். ஹோட்டலை தேடி செல்வதற்கு நேரம் இருக்காது. அதனால் அறையிலேயே காபி தயாரிக்க முடிவு செய்தேன். அதற்கு ஒரு சாஸ்ப்பான் தேவை பட்டது. 30 ரூபாய் கொடுத்து மஞ்சள் வண்ண பிடி கொண்ட சாஸ்ப்பானை வாங்கினேன். அது 50 வருடங்களுக்கு பிறகும் இன்றும் என்னுடன் இருக்கிறது. ஒரே வித்யாசம் என்னவென்றால், காபிக்கு பதில், நான்  டீ தயாரிக்க அதை  உபயோகம் செய்து கொண்டு இருக்கிறேன். 

மூன்றாவது  பந்தம் :  

என்னுடைய  வேலை நாட்களில் பல திட்டப்பணி (projects) யில் ஈடுபட்டு பணியாற்றியிருக்கிறேன். கடைசி  திட்டப்பணி  ஒரு பெரிய சவாலாக இருந்தது. பாதுகாப்பு  உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா இல்லையா  என்று நிர்ணயிக்க ஒரு  சரகம் (range)  அமைக்க வேண்டி இருந்தது. அதற்கு  பல ஏக்கர்  நிலம் தேவை பட்டது. அது கிடைக்க தாமதமானதால், ஒரு நடமாடும் சரகத்தை உருவாக்க வேண்டும் என்ற வேலை எனக்கு அளிக்கப்பட்டது. இந்த திட்டப்பணியை  வடிவமைத்து, உருவாக்கி செயல்பட வைக்க எனக்கு 6 பேரும், ஒரு வருட காலமும் கொடுக்கப்பட்டது. சரகத்தை ஆறு வண்டிகளாக பிரித்தோம் . ரேடார்கள், தொடர்பு உபகரணங்கள் , ஜெனெரேட்டர் , கம்ப்யூட்டர் சாதனங்கள் எல்லாம்  அதற்குள் பொருத்தப்பட்டன.  எல்லா மின் சமிக்கைகைகளும் ஒரு மய்ய வண்டிக்கு வந்து சேரும்படி நியமித்தோம் .  அந்த 40 அடி நீள வண்டிக்கு  சங்கம் என்று பெயர் சூட்டினோம். 40 கம்ப்யூட்டர் , காட்சி திரை, ஆண்டென்னாக்கள், மற்றும் பயோ டாய்லெட் உள்ள ஒரே வண்டி டிவிஎஸ் சுந்தரம் இண்டஸ்ட்ரீஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டது.  இந்த வண்டியை பல இடங்களுக்கு எடுத்து சென்று இந்திய வாயு படை அதிகாரிகளுடன்  வேலை செய்து சோதனை நடத்தினோம். சங்கம்(photo) எங்கள் எல்லாருக்கும் பெருமையும் புகழையும்  தந்தது. 

1997ல்  நான் தன்னார்வ  ஒய்வு  பெற நிச்சயித்தேன்.  பிரியாவிடை நிகழ்ச்சியில் உடன் பணியாற்ற்றிய  நண்பர்களிடம்  விடை பெற்ற பின், சங்கம் வண்டி  இருக்கும்  விமான கொட்டகையை நோக்கி நடந்தேன்.   என் நண்பன் சங்கத்தை வலம்  வந்து ஆசை தீர பார்த்தேன். Shakespeare வரிகள் நினைவுக்கு வந்தது – “என்றென்றும் என்றென்றும்   விடை பெறுகிறேன் நண்பா; ஒரு வேளை  மீண்டும் சந்தித்தால் , ஏன்  சற்றே புன்னகை செய்வோம். இல்லையென்றால் இப்பிரிவு நன்றாகவே நடந்தது “. என்று கூறினேன்.

சில வருடங்களுக்கு பிறகு இருவரும் சந்திக்க நேர்ந்தது. புன்னகை சிந்தினோம். 

சங்கத்தை உருவாக்க எங்களுக்கு உறுதுணையாய் இருந்த திரு நாகராஜன் அவர்களுக்கு  கோடான கோடி நன்றி. உங்கள் எல்லாருக்கும் பல நன்றிகள். வணக்கம். 

   V.தேசிகன் – அறிமுகம்

இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான திரு வி.தேசிகன் மதுரையைச் சேர்ந்தவர்.

மின்னியல் துறையில் 1968இல் பட்டம் பெற்ற இவர் பெங்களூரில் உள்ள DRDO எனப்படும் டிஃபென்ஸ் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷனில் பணியாற்றத் தொடங்கினார். பல அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக அமைந்தார்.

ASIEO – அஸியோ எனப்படும் Associated System Integration and Evaluation Organisation என்ற பாரதத்தின் உயர் நிலை ஆய்வு நிறுவனத்தில், இவர் ப்ராஜெக்ட் டைரக்டராக இருந்து ஆற்றிய பல சாதனைகளுள் குறிப்பிடத்தக்க ஒரு அரும் சாதனை, ‘சங்கம்’ என்ற பெயரில்  நடமாடும் ‘ஆய்வு மற்றும் சாதன ஒருங்கிணைப்பு வாகனம்’ ஒன்றை உருவாக்கியது தான். எஞ்ஜினியரிங் மார்வல் என்று வெளிநாட்டுப் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்ட வாகனம் இது.

1983ஆம் ஆண்டிற்கான தலை சிறந்த விஞ்ஞானி – Scientist of the Year – என்ற உயரிய விருதை மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடமிருந்து இவர் பெற்றார்.

பங்களூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப்பின் தலைவராகச் சேவை புரிந்த இவருக்கு டென்னிஸ், கோல்ப், இசை, வலைதளத்தில் பல சுவையான பதிவுகளைச் செய்தல் ஆகியவற்றில் அளவற்ற ஆர்வம் உண்டு.

அவ்வப்பொழுது டெக்கான் ஹெரால்ட் உள்ளிட்ட பத்திரிகைகளில் சுவைபட கட்டுரைகளை வழங்கி வருபவர் இவர்.

எழுபதுக்கும் மேற்பட்ட சுவையான கட்டுரைகள்  அடங்கிய இவரது ப்ருந்தாவன் எக்ஸ்பிரஸ்  (Brindavan Express) என்ற புத்தகம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற புத்தகம்.

பாரம்பரியப் பண்பாடும், இறைபக்தியும் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவரும் பெரிய விஞ்ஞானியுமா திரு வி.தேசிகனை இங்கு ஞானமயம் நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

tags — அஃறிணை, ஜடப்பொருள், பந்தங்கள் , உறவுகள்,V.தேசிகன்

***

புராணங்களில் காலப் பயணம் TIME TRAVEL & TIME DILATION (Post No.8909)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8909

Date uploaded in London – – 10 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

-11-2020 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் கேள்வி-பதில் பகுதியில் இடம் பெற்ற உரை!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம் முன் இருக்கும் கேள்வி, “புராணங்களில் கூறப்படும் கதைகள் அறிவியல் கொள்கைகளுடன் ஒத்துப் போகிறதா? ஆம் எனில் உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்ல முடியுமா? என்பதாகும்.”

விஞ்ஞானம் முன்னேற முன்னேற புராணங்கள் கூறும் கொள்கைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக ஆமோதித்து வருகிறது.

ஸ்வாமி விவேகானந்தர் நமது ரிஷிகள் காலத்தால் முற்பட்டவர்கள் அவர்கள் ஞானத்தை அறிந்து பாராட்ட உலகம் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆகவே விஞ்ஞானம் வளர வளர அவர்கள் கண்ட அனைத்துமே விஞ்ஞான உரைகல்லில் தீட்டப்பட்டு உண்மையே என ஆமோதிக்கப்பட்டு வருகிறது.

உதாரணத்திற்கு ஏராளமானவற்றைச் சொல்ல முடியும் என்றாலும் ஒன்றே ஒன்றை இங்கு பார்ப்போம்.

TIME TRAVEL எனப்படும் காலப் பயணம் விஞ்ஞானிகள் அனைவருக்கும் ஆர்வமூட்டும் ஒரு கொள்கை.

இதை புராணம் சொல்கிறதா என்று பார்ப்போம்.

அசுவினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய கதையைக் கொண்டவை. இவற்றுள் ரேவதி நட்சத்திரம் 27வது நட்சத்திரமாக – கடைசி நட்சத்திரமாக – அமைகிறது. ரேவதியின் கதை ஆச்சரியமான ஒன்று!

ரைவதன் என்ற மன்னனுக்குப் பிறந்த பெண்ணின் பெயர் தான் ரேவதி. அவன் காலத்தில் மனிதர்கள் இன்று இருப்பதை விட அதிக உயரத்துடன் இருந்தார்கள். தன் பெண்ணுக்கு ஏற்ற நல்ல மணாளனைத் தேட ஆரம்பித்த ரைவதன் யாருமே சரியாக அமையாததால் கவலைப்பட ஆரம்பித்தான். மனம் வருந்தினான்.

ரேவதியைப் படைத்த பிரம்மாவையே நேரில் பார்த்து மணாளன் யார் என்று கேட்டு விடலாமே என்று அவனுக்கு யோசனை தோன்றியது. நேராக சத்திய லோகத்துக்கே தன் பெண் ரேவதியுடன் அவன் சென்றான். அவன் பிரம்ம லோகம் சென்ற சமயம் அங்கே ஒரு யாகம் நடந்து கொண்டிருந்தது. ஆகவே அது முடியும் வரை அவன் காத்திருக்க நேர்ந்தது. யாகம் முடிந்தவுடன், பிரம்மா ரைவதைனை அழைத்து, “விஷயம் என்ன?” என்று கேட்டார். ரைவதன் தன் கவலையை வெளியிட்டான்.

பிரம்மா சிரித்தார்.

“மன்னனே! ஏமாந்து விட்டாயே! பூலோகத்தைப் பார்” என்றார். அங்கே மனிதர்கள் மிகக் குறைந்த உயரத்துன் அங்கும் இங்கும் போவதைக் கண்ட ரைவதன் துணுக்குற்றான். “என்ன இது! இப்படி இருக்கிறது பூலோகம்” என்று கேட்டான்.

பிரம்மா கூறினார்: “ ரைவதா! நீ இங்கே வந்த போது பூமியில் இருந்த யுகம் வேறு. நமது யாகம் நடந்து முடிந்த இப்போதோ அங்கே கலி யுகம் நடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள காலமும் இங்குள்ள கால நிர்ணயமும் வேறு. இனி இவளை பூமியில் உள்ள எவரும் மணம் செய்து கொள்ள முடியாது. 10 அடி உயரம் உள்ள பலராமன் என்பவர் பிறப்பார். இவளைத் தன் கலப்பையால் உயரத்தைக் குறைத்து மணப்பார். கவலைப்படாமல் செல்” என்றார் பிரம்மா.

ரேவதியும் பலராமனை பிரம்மா சொன்னபடியே அவர் தன் தலையில் ஒரு தட்டு தட்டி உயரத்தைக் குறைத்த பின்னரே மணந்தாள்.

இவ்வாறு புராணக் கதை சொல்கிறது.

இனி அறிவியலுக்கு வருவோம்.

பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் போது பயண காலத்திற்கும் பூமியில் உள்ள காலத்திற்கும் பெருத்த மாறுபாடு ஏற்படுகிறது என்பதை அறிவியல் இந்த விண்வெளி யுகத்தில் நன்கு விளக்குகிறது!

இதற்கு TIME DILATION என்று பெயர்.

பூமியிலிருந்து ராக்கட்டில் புறப்பட்ட விண்வெளி வீரர் பயணம் செய்யும் வருடமும் அப்போது பூமியில் நாம் கழிக்கும் வருடமும் ‘Meyers Handbook on Space” என்ற நூலில் கொடுக்கப்பட்டிருக்கிறது.


அட்டவணை

விண்வெளி வீரர் பயணத்தில் கழிக்கும்     பூமியில் நாம் கழிக்கும் ஆண்டுகள்

           ஆண்டு

  1. 1
  2. 2.1

5                            6.5

                10                              24

               20                               270

               30                               3100

               40                               36000

50                            4,20,000 (கலி யுக வருடங்கள்)

———————————————————————–

ரைவதன் சுமார் 50 ஆண்டுகள் விண்வெளியில் பயணப்பட்டிருப்பான் எனில் பூமியில் 4,20,000 ஆண்டுகள் அதாவது ஒரு யுகம் கழிந்திருக்கும்.

இதைத் தான் ‘Meyers Handbook on Space தருகிறது.

புராணம் கூறும் கதைக்கு அறிவியல் டைம் டைலேஷன் என்ற கொள்கை மூலம் விளக்கம் தருகிறது.

இப்படி ஒவ்வொரு நட்சத்திர கதைக்கும் ஒரு அறிவியல் விளக்கம் உண்டு.

ரேவதை நட்சத்திரத்தை மேலை நாட்டு வானவியல் Zeta Piscum எனக் குறிப்பிடுகிறது.

இனி ரேவதி நட்சத்திரம் பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.

ரேவதி பற்றி நமது ஜோதிட நூல்கள் செல்வம் மற்றும் வளத்தைக் குறிக்கும் நட்சத்திரம் என்று புகழ்கின்றன. இறை நம்பிக்கையுடன் இந்த நட்சத்திரம் இணைத்துப் பேசப்படுகிறது. பராசக்தியின் கருவாக இது குறிப்பிடப்படுவதால் ஜனனத்தையும் முடிவையும் குறிக்கிறது.

ரேவதி நட்சத்திரத்தை நல்ல பயணத்திற்கு உகந்த நட்சத்திரமாக நமது முன்னோர்கள் கூறுகின்றனர்.

சக்தியை மிகுதியாகத் தரும் இதை க்ஷீரத்துடன் அதாவது பாலுடன் ஒப்பிட்டுப் பேசுவர். மீன ராசிக்குரிய ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு இசை, நடனம்,பாட்டு, நாடகம் உள்ளிட்ட அனைத்தும் தண்ணீர் பட்ட பாடு தான்!

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கான் அதிர்ஷ்ட தேவதை பூஷா தேவதை. வணங்க வேண்டிய தெய்வம் ரங்கநாதர்.

மீனைப் போன்ற தோற்றமுடைய 32 நட்சத்திரங்களின் தொகுதி இது என நமது அறநூல்கள் கூறுகின்றன.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த சில பெரியார்களைப் பார்ப்போம். 63 நாயன்மார்களில் ஏயர்கோன் கலிக்காமர், கலிக்கம்பர், வாயிலார் ஆகிய மூவர் ரேவதி நட்சத்திரத்தில் உதித்தவர்கள். வைணவப் பெரியார்களில் பெரிய பெருமாள், எரும்பில் அப்பா ஆகிய இருவரும் ரேவதி நட்சத்திரத்தில் உதித்தவர்கள். மஹாபாரத வீரன் அபிமன்யுவின் நட்சத்திரம் ரேவதி. பிரபலங்கள் என்று சொல்லப்போனால் ரவீந்திரநாத் தாகூர், மார்லன் பிராண்டோ ஆகியோரும் அடங்குவர்.

இனி ஒரு குட்டி விஷயம் – ஐன்ஸ்டீன் ஜாதகத்தில் சுக்ர கிரஹம் ரேவதியில் இருக்கிறது. அவர் சுக்ர தசையின் போது தான் தியரி ஆஃப் ரிலேடிவிடியைக் கண்டு பிடித்தார்.

ஆக ரேவதிக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பு நன்கு விளங்குகிறது இல்லையா!

வாழ்க நமது புராணங்கள்; வளர்க புராணங்களை விளக்கும் அறிவியல்!

tags– புராணங்களில்,  காலப் பயணம், ரேவதி

***

ஸ்ரீ சைலம்- ஆலயம் அறிவோம் (Post No.8908)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8908

Date uploaded in London – –9 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

9-11-2020 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை!

VISIT FACEBOOK.COM/GNANAMAYAM FOR VOICE RECORDING

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறும் தலம் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் மிகப் பழமையான ஒன்றான

ஸ்ரீ சைலம் தலமாகும்.

இந்தத் திருத்தலம் ஆந்திர மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் உள்ள நல்லமலை என்ற குன்றில் அமைந்த்துள்ள திருத்தலம் ஆகும். கிருஷ்ணா நதி தீரத்தில் அழகிய குன்றில் அமைந்துள்ள இது ஹைதராபாத்திலிருந்து சுமார் 230 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தேவார  மூவர் முதலிகளான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட திருத்தலமாகும் இது. திருப்பருப்பதம் என்ற பெயரைக் கொண்டது இது.

இங்கு மல்லிகார்ஜுனர் ஆலயம் அமைந்துள்ளது. அத்துடன் இங்குள்ள பிரமராம்பிகை சந்நிதி 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். அத்துடன் 18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இது இலங்குகிறது.

மஹாபாரதத்திலும் பல புராணங்களிலும் இது குறிப்பிடப்படுவதால் இது மிக மிகப் பழங்காலத்திலேயே தோன்றியது என்பதை அறிய முடிகிறது.

பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் இரு முறை இங்கு வந்ததாக புராணம் மூலம் அறிகிறோம்.

நான்கு புறமும் நான்கு கோபுரங்களைக் கொண்ட கோவிலில் மேற்கு நோக்கிய கோபுரம் மல்லிகார்ஜுன கோபுரம் என்ற பெயரைக் கொண்டுள்ளது. கிழக்கு கோபுரம் கிருஷ்ணதேவராயரின் பெயரால் அழைக்கப்படுகிறது. வடக்கு கோபுரத்தை 1677இல் சத்ரபதி சிவாஜி கட்டினார்; அவர் பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது. அம்பிகையை வணங்கி அவரிடமிருந்து பெற்ற வாளால் எதிரிகளை அழித்து ஹிந்து சாம்ராஜ்யத்தை அவர் நிறுவினார். இவர் கட்டிய கோபுரமே வடக்கு கோபுரம்.

கிழக்கு வாயிலில் நுழைந்தவுடன் கொடிக்கம்பமும் மண்டபமும் உள்ளன. அதை அடுத்து நந்தி மண்டபம் உள்ளது. இந்தியக் கோவில்களில் மிகப் பெரிய நந்திகளில் ஒன்றான இந்த நந்தியின் கொம்புகள் வழியே மல்லிகார்ஜுனரைத் தரிசிப்பது பெரும் பேறாகக் கருதப்படுகிறது.

அன்னை பிரமராம்பாள் கிழக்குப் பார்த்து கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறாள். பிரமராம்பா பீடம் என்று அழைக்கப்படும் இந்த சக்தி பீடத்திற்கு தொன்று தொட்டு ஆயிரமாயிரம் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

கோவிலின் வெளி பிரகாரத்தில் திரிபலா எனப்படும் மூன்று மரங்கள் உள்ளன. மேதி, ரவி, ஜீவி ஆகிய மூன்று மரங்களை இங்கு காணலாம். இந்த அதிசய மரத்தின் அடியில் அமர்ந்து தத்தாத்ரேயர் தவம் புரிந்தததால் இது தத்தாத்ரேய விருட்சம் என்றே அழைக்கப்படுகிறது.

இந்த தலத்தில் தான் ஆதி சங்கரர் சிவானந்த லஹரியை இயற்றி அருளினார் என்ப்தை வரலாற்றின் மூலம் அறிகிறோம். பால்தாரா, பஞ்சதாரா என்ற இரு நீரூற்றுகளின் அருகே அவர் தவம் புரிந்து வந்தார்.

பல்வேறு அழகிய சிற்பங்கள் நிறைந்துள்ள இந்தக் கோவிலில் பார்வதி திருமணம், அர்ஜுனன் தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்ச யாகம், சிவ தாண்டவம், கஜாசுர சம்ஹாரம், சிபி சக்ரவர்த்தியின் கதை உள்ளிட்டவற்றைச் சித்தரிக்கும் சிற்பங்கள் பார்ப்போரை பிரமிக்க வைப்பவையாகும்.

இந்த தலத்தில் நந்திகேசர் அருள் பெற்றதைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

நீண்டகாலம் மகப்பேறில்லாத சிலாதர் என்ற மஹரிஷி ஈசனை வேண்டி  நெடுங்காலம் கடும் தவம் இயற்றினார். சிவபிரான் அவர் முன் தோன்றி அவருக்கு இரு மகன்கள் பிறக்குமாறு ஆசீர்வதித்தார். இறைவன் அருளால் நந்திகேசனும் பர்வதன் என்ற மகனும் பிறந்தனர்.

ஒருமுறை சனகாதி முனிவர்கள் சிலாதரின் ஆசிரமத்திற்கு வந்தனர்.  நந்திகேசன் அவர்கள் காலில் விழுந்து வணங்கினார். நந்திகேசனை ஆசீர்வதிக்க ரிஷிகள் தங்கள் கரங்களை உயர்த்த முயன்று அப்படியே நிறுத்திக் கொண்டனர்.

இதனால் திகைத்த சிலாதர் காரணம் என்ன என்று அவர்களை வினவ, அவர்கள், ‘தங்கள் மகனின் ஆயுட்காலம் முடியவிருக்கிறது, அதனால் எங்களால் ஆசீர்வதிக்க முடியவில்லை’ என்று பதில் கூறினர்.

இதனால் வருந்திய சிலாதரை நோக்கி நந்திகேசர், “தந்தையே வருந்த வேண்டாம்; தவம் செய்து சிரஞ்சீவித்வம் அடைவேன்” என்று உறுதி கூறித் தவம் செய்யப் புறப்பட்டார். நந்திகேசரின் கடும் தவத்தால் மகிழ்ந்த சிவபிரான், “நந்திகேசன் தேவ கணங்களின் தலைவனாக ஆகட்டும்; அத்துடன் எனது வாகனமாகவும் ஆகக் கடவன்” என்று ஆசீர்வதித்தார்.

நந்திகேசன், சிவபெருமானைச் சுமக்கும் ஆற்றல் பெற்ற தலம் இதுவே.

எட்டு சிகரங்கள், ஒன்பது  கோவில்கள், ஒன்பது நந்திகள் கொண்டுள்ள ஜோதிர்லங்க ஸ்தலம் இது ஒன்று தான்!

கரவு இலா மனத்தர் ஆகி, கை தொழுவார்கட்கு  என்றும்,

இரவில் நின்று எரி அது ஆடி இன் அருள் செய்யும் எந்தை,

மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய வகையர் ஆகிப்

பரவுவார்க்கு, அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே

        என்று அப்பர் பிரான் இங்கு எழுந்தருளியுள்ள சிவபிரானைப் பாடிப் போற்றுகிறார். சுந்தரரோ, ‘சிவனைப் பாடிப் பரவும் தமிழ்மாலைகள் சொல்ல வல்லார் உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பார்’ எனக் கூறி சொர்க்கப் பேறு கிடைப்பதை உறுதி செய்கிறார்.

காலம் காலமாக பல லட்சம் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் மல்லிகார்ஜுனரும் தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   

நன்றி. வணக்கம்.

tags –  ஸ்ரீ சைலம்,   ஆலயம் அறிவோம்.

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ! – கம்பன் (Post No.8907)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8907

Date uploaded in London – –9 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘கண்டதும் காதல்’, ‘கண்கள் பேசின’, ‘ஈருடல் ஓருயிர்’ — என்றெல்லாம் சினிமா வசனங்களிலும் தற்கால கதைகளிலும் காண்கிறோம். இவர்களுக்கெல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்தவன் கம்பன்தான் போலும்.

கம்ப ராமாயணத்தில் பால காண்டத்தில்  மிதிலைக் காட் சிப் படலத்தில் வரு ம் இரண்டு பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை.

ஒரு பாடல்

“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” –

என்று முடியும்.

இன்னும் ஒரு பாடல்

“பிரிந்தவர் கூடினால் பேசல்  வேண்டுமோ “-

என்று முடியும்..

சில பாடல்களுக்கு முன்னர் ராமனையும் சீதையையும் முதலில் அழகாக வருணித்துவிட்டு, பின்னர் சில பாடல்கள் தள்ளி, பிரிந்த ராமனும் சீதையும் மீண்டும் இணைந்தனர் என்று  சொல்லுவது பொருந்துமா?

பொருந்தும்; ஏனெனில்…………………………….

இங்கே வால்மீகி முனிவரைப் போலன்றி , ராமனையும் சீதையையும் அவதார நிலைக்கு கம்பன் உயர்த்திவிட்டான்

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி  முயங்கப் பெறின் – குறள் 1330

என்ற கடைசி குறள் கம்பனுக்கு நினைவுக்கு வந்தது போலும்.

கணவன்- மனைவி இடையே கோப தாபங்கள் ஏற்படுவது அவசியமே. ஏனெனில் அதற்குப் பின்னர் அவர்கள் இருவரும் கூடி இணைவது தோசைக்கு தேங்காய் சட்னியுடன் வெங்காய சட்னியும் சேர்த்துக் கொடுத்தது போல சுவையாக இருக்கும் என்பது வள்ளுவனின் கருத்து. அதைச் சொல்லிவிட்டு அவரும் குறள் புஸ்தகத்தையே முடித்ததை பார்த்தால் நேரே படுக்கை அறைக்குச் சென்றிருப்பார் என்று தோன்றுகிறது!!

கம்பன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.

தேவலோகத்தில் நாராயணனும் லெட்சுமியும் ‘ஜாலி’யாக இருந்த போது கருத்து மோதல் வெடித்ததாம் ; உன்னால்தான் இது நடந்தது என்று ஒருவரை ஒருவர் ஏசினர் . இன்று ‘பெட் ரூமு’ BED ROOM க்கு வராதே என்று சொல்லிவிட்டு லெட்சுமி அம்மா போய்விட்டாள்; பிறகு ஊடல் தீர்ந்து  இருவரும் சந்தித்தனராம்.

எங்கே?

மிதிலாபுரியில்.

எவ்வாறு ?

ராமனும் சீதையாக அவதாரம் எடுத்து!

இதோ கம்பன் பாடல் –

மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும்

ஒருங்கிய இரண்டு  உடற்கு  உயிர் ஒன்று ஆயினார்

கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்

பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ

பொருள்

இடையில்லை என்று சொல்லும்படி நுண்ணிய இடை சீதைக்கு.

இழிவு இல்லை என்று சொல்லும்படி உலகிலுள்ள எல்லா குணங்களும் உடையவன் ராம பிரான்.

இந்த இரண்டு உடல்களும் ஓருயிர் என்று சொல்லும்படி ஆயினர்.

திருப்பாற் கடலின் பள்ளியிலே கூடியிருந்து புணர்ச்சி நீங்கிப் பிரிந்து போனவர்கள் , மீண்டும்

இங்கே சந்தித்ததால் அவர்களது காதல் சிறப்பை வெளியிட வாய்ப் பேச்சும் தேவையோ?

தேவையில்லை.

TAGS — பிரிந்தவர் கூடினால், கம்பன்

–SUBHAM—

CHANGE OF EXAMINATION PAPERS AND PATTERNS (Post No.8906)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8906

Date uploaded in London – – 9 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

LIFE IS EX – EX – EX……..

TO DAY IS EXPERIMENT,

TOMORROW IS EXPECTATIONS

USE YOUR EXPERIENCE IN YOUR EXPERIMENT TO ACHIEVE YOUR EXPECTATIONS !!!

Xxx

CHANGE OF EXAMINATION PATTERNS…….

1997 – ANSWER ALL THE QUESTIONS…….

2007 – ANSWER ANY FIVE QUESTIONS……

2012 – SELECT CORRECT ANSWER A or B or C

2017 – WRITE EITHER A or B

2022 – PLEASE READ THE QUESTIONS

2027 – THANKS FOR COMING !!!

 xxxxx

RELATIONSHIPS ARE LIKE ELECTRIC CURRENT.

WRONG CONNECTION WILL GIVE YOU SHOCK,

THROUGHOUT YOUR LIFE…….

BUT THE RIGHT CONNECTION WILL GIVE YOU

LIGHTS UP YOUR LIFE !!!

Xxx

RELATIONSHIPS ARE LIKE BIRDS…….

IF YOU HOLD IT TIGHTLY THEY DIE.

IF YOU HOLD IT LOOSELY THEY FLY.

BUT IF YOU HOLD WITH CARE, THEY REMAIN

WITH YOU FOR EVER !!!

Xxxx

A BAD NEWS………. TIME-FLIES……..

A GOOD NEWS……..YOU ARE THE PILOT !!!

 Xxx

A POT WAS ASKED,

HOW DO YOU REMAIN COOL IN EVERY SITUATION.???

THE POT REPLIED,

I JUST REMAIN MYSELF THAT I AM MADE UP OF MUD.

AND WILL RETURN BACK TO MUD

THEN. WHY HAVE PRIDE AND ANGER .???

Xxxx

WHAT IS HYPNOTISM ???

HYPNOTISM IS TAKING CONTROL OVER SOME ONE AND

MAKING THAT PERSON TO PERFORM FOR YOUR WISH…….

NON SENSE……. THAT IS CALLED…….”MARRIAGE”!!!

Xxxx

HOTEL ADVT

WE OFFER THREE KINDS OF FOOD!!!

GOOD. – CHEAP – FAST

BUT YOU CAN PICK ONLY TWO.

GOOD AND CHEAP. WON’T BE FAST

FAST AND GOOD. WON’T BE CHEAP

CHEAP AND FAST. WON’T BE GOOD

XXXX

WOMEN ARE LIKE FRUITS .

EACH-HAVE THEIR UNIQUE COLOR , AROMA , SHAPE , AND TASTE…..

THE PROBLEM IS IN MEN, THEY WANT FRUIT SALAD!!!

Xxx

ONE BUCKET OF WATER AND ONE BUCKET OF LIQUOR

ARE PLACED IN FRONT OF A DONKEY.

DONKEY DRANK THE WATER AND LEFT THE PLACE.

THE TEACHER ASKED QUESTION TO THE STUDENTS,

WHAT DO YOU LEARN.???

STUDENTS ANSWER……

ONE WHO DOES-NOT DRINK LIQUOR IS A DONKEY!!!

XXXX subham xxxxxx

மஹரிஷி அக்னிபர் – ஐந்து கந்தர்வ மங்கைகளைக் கவர்ந்தவர்! (Post.8905)

மஹரிஷி அக்னிபர் – ஐந்து கந்தர்வ மங்கைகளைக் கவர்ந்தவர்!

ச.நாகராஜன்

கந்தர்வ உலகில் சுக சங்கீதி, சுசீலன், ஸ்வரபேதி, சந்திரகாந்தன்,சுப்ரபன்  என்று ஐந்து கந்தர்வர்கள் இருந்தனர். அவர்களுக்கு முறையே ப்ரமோகினி, சுசீலை, சுஸ்வரை, சுதாரை, சந்திரிகை ஆகிய அழகிய பெண்கள் இருந்தனர்.

கந்தர்வ மங்கையர் என்பதால் அவர்களின் அழகு சுடர் விட்டுப் பிரகாசித்தது.

நிலவு போன்ற தேக காந்தியும், சந்திரனைப் போன்ற அழகிய முகமும், பார்ப்பவர்கள் மனதைக் கவரத்தக்கபடி அழகே ஒரு உருவம் எடுத்து வந்தது போன்ற அவர்களைக் கண்டால் யாருக்குத் தான் பிடிக்காது?

இந்த இயற்கை அழகோடு சர்வ ஆபரணங்களினால் அலங்காரம் செய்து கொண்டும், மிகுந்த சங்கீத ஞானத்தைக் கொண்டும் நானாவித லீலைகளைச் செய்து கொண்டும் அவர்கள் ஐவரும் குபேரனுடைய தோட்டத்தில் உல்லாசமாக இருந்து வந்தனர்.

ஒரு சமயம் வைகாசி மாதத்தில் பூலோகம் நோக்கி அவர்கள் ஐவரும் வந்தனர். நர்மதை நதி தீரத்தை அடைந்த அவர்கள் பார்வதி தேவியை பூஜிப்பதற்காக அங்கிருந்த நந்தவனத்திலிருந்து பலவித  மலர்களைப் பறித்துக் கொண்டு, ஸ்நானம் செய்தனர். லோகமாதாவை சந்தனம், புஷ்பம் ஆகியவற்றால் மிகுந்த பக்தியுடன் பூஜித்தனர். பின்னர் பாடல்களைப் பாடியும் நடனம் ஆடியும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

அப்போது அந்த நதி தீரத்திற்கு மாத்யான்ஹ சந்தி ஜெபம் செய்ய ஒரு பிரம்மசாரி வந்தார். அழகிய மேனி கொண்ட அவரது விசாலமான கண்கள், அகன்ற மார்பு, முழங்கால் வரை நீண்ட கைகளுடன், மான் தோல், தண்டம், இடுப்பில் தர்ப்பை ஆகியவற்றுடன் இருந்த அவரது யௌவன ஸ்வரூபத்தைக் கண்ட அந்த ஐந்து மங்கையரும் வேடனால் அடிக்கப்பட்ட மான்கள் போல மன்மத பாணத்தால் அடிக்கப்பட்டனர்.

ஐவரும் அவரைக் காம விகாரத்துடன் நோக்கினர்.

‘நமக்குத் தகுந்த ஒருவர் வந்து விட்டார்’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட அவர்கள், ‘இவர் யார்? கந்தர்வரா, கின்னரரா, சித்தரா அல்லது இஷ்டம் போல உருவை மாற்ற வல்லவரா, ரிஷி குமாரரா’ என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

‘பார்வதி தேவியை பூஜித்ததன் பலனாகவே இவர் இங்கு வந்திருக்கிறார்’ என்று எண்ணிய அவர்கள் இவர் மன்மதன் போலத் தோற்றமளித்தாலும் கூட ரதி தேவி இல்லையே, ஆகவே இவரை நாம் அணுகலாம் என்று நிச்சயித்தனர்.

இவர்கள் பேசுவது அனைத்தையும் அந்த பிரம்மசாரி கேட்டுக் கொண்டிருந்தார். அவர் வேதநிதி முனிவரின் குமாரர். அவர் பெயர் அக்னிபர்.

மிகுந்த புத்திசாலியான அந்த ரிஷிகுமாரர் தனக்குள் யோசிக்க ஆரம்பித்தார்.

‘விஸ்வாமித்திரர், பராசரர், கண்டு முனிவ்ர், தேவலர் உள்ளிட்ட பல பெரிய ரிஷிகள் கூட பெண் மயக்கத்தினால் தம் வசம் இழந்து தவத்தை இழந்தனர். ஆகவே என்ன செய்தால் இவர்களின் காமவலையிலிருந்து தப்பிக்கலாம்’ – இப்படி எண்ணமிட்ட அக்னிபர் அவர்கள் தம்மை அணுகுமுன் தாம் வீட்டிற்குச் செல்வதே சரி என்ற முடிவுக்கு வந்தார். தனது யோகபலத்தால் தன் உருவை மறைத்துக் கொண்டு வீடு போய் சேர்ந்தார்.

கந்தர்வ மங்கையர் ஐவரும் இந்த அற்புதத்தைக் கண்டு திகைத்தனர்.

“இவர் இந்திரஜாலம் அறிந்த மாயக்காரரோ’ என்று புலம்பினர். மறுநாள் எப்படியும் நதி தீரம் வந்து தானே ஆக வேண்டும் என்று எண்ணிய அவர்கள் ஐவரும் அந்த இரவை அங்கேயே கழித்தனர்.

மறுநாள் காலை சூரியோதயம் சமயம் ஸ்நானம் செய்ய வழக்கம் போல அக்னிபர் அங்கே வந்தார்.

“ஏ! காதலரே! எம்மை ஏமாற்றி விட்டு நேற்று சென்று விட்டீர். இன்று அப்படி முடியாது” என்று கூறியவாறே ஒடிச் சென்று அவரைத் தழுவிக் கொண்டனர்.

அக்னிபர், “நீங்கள் சொல்வது எனக்கு அநுகூலமாகவே இருக்கிறது. ஆனால் நான் இப்போது குருகுலவாசத்தில் வித்யாப்யாசம் செய்து வருகிறேன். ஆகவே விதிகளுக்கு மாறாக பெண்களுடன் உடலுறவு கொள்வது தகாது. இது ப்ரம்மசரிய விரதத்திற்கு பங்கமாகி விடும்” என்றார்.

கந்தர்வ மங்கையரோ அவரைப் பலவாறாக நிர்ப்பந்திக்க ஆரம்பித்தனர். தங்களை காந்தர்வ விவாஹம் செய்து கொள்ளலாம் என்று அவர்கள் கூறினர்.

அக்னிபர், “குருவின் அனுமதியின்றி என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறினார்.

அதற்கு அவர்கள், ‘நீர் ஒரு ஒரு முட்டாள் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் ஒரு புத்திமானானவன் வலுவில் வரும் உத்தம அழகியை தள்ளவே மாட்டான். அதை தர்மசாஸ்திரமும் ஆமோதிக்கிறது. உத்தமமான பெண்ணாக இருந்தால் அவளை ஏற்றுக் கொள் என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது.

நாங்களோ தேவ லோகத்துப் பெண்கள். நீர் அரிய தவம் செய்தாலும் கூட எங்களைப் போன்ற தெய்வீக மங்கையர் உமக்குக் கிடைப்பது அரிது! இருந்தாலும் எம்மை நீர் விலக்கினால் பிரம்மா படைத்த உமது புத்தியைப் பற்றி  என்ன தான் சொல்வது?!” என்றனர்.

அக்னிபர், “ ஒ! மான் போன்ற விழிகளைக் கொண்ட மங்கையரே! தர்மத்தையே செல்வமாகக் கொண்டவர்கள் அதை எப்படிக் கைவிட முடியும்? தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் சாஸ்திரவிதிப்படி கடைப்பிடித்தால் தான் அது பலனைக் கொடுக்கும். ஆகவே இந்த நேரம் கெட்ட நேரத்தில் – அகாலத்தில் – ஒரு போதும் உங்களை பாணிகிரஹனம் செய்து கொள்ள மாட்டேன்” என்று உறுதிபடக் கூறினார்.

முனிகுமாரரின் திடமான பதிலைக் கேட்ட அவர்கள், அவரை விடவில்லை.

காமவெறி அதிகமானதால் அவரைக் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்தனர். இன்னும் காம லீலைகளை ஆரம்பித்தனர்.

ஆனால் அக்னிபர் கொஞ்சமேனும் தன் உறுதியிலிருந்து தளரவில்லை. அவர்கள் மீது அவர் கோபம் கொண்டார்.

“நீங்கள் ஐந்து பேரும் பிசாசுகளாக மாறக் கடவீர்” என்று ஒரு சாபத்தைக் கொடுத்தார்.

இதனால் மிகவும் சோகமடைந்த அந்த ஐந்து கந்தர்வ மங்கையரும், “குற்றமற்ற எங்களுக்கு இப்படி ஒரு சாபம் கொடுக்கலாமா? உமக்கு அநுகூலம் செய்ய வந்தோம். எமக்குக் கெடுதி செய்து விட்டீர். நீர் தர்மநாசம் செய்பவர் என்பது நிச்சயமாகி விட்டது. ஆசையுள்ளவர்கள், பக்தர்கள், நண்பர்கள் ஆகியோர் விஷயத்தில் கோபம் கொண்டு தீமை இழைப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்லதை அடைய மாட்டார்கள். எமக்கு இப்படி கொடிய சாபத்தைக் கொடுத்த நீரும் பிசாசாகக் கடவது” என்று பதில் சாபம் கொடுத்தனர்.

ஆக அக்னிபரும் அந்த ஐந்து கந்தர்வ மங்கையரும் பிசாசுகளாக மாறினர். அங்கும் இங்கும் அலைந்து  மிகவும் துன்பப்பட்டனர்.

சிறிது காலம் சென்றது. அப்போது லோமசர் என்ற மஹரிஷியை அவர்கள் கண்டனர். அவரைக் கண்ட அவர்கள் அவரை ஆகாரமாகப் புசிக்கலாம் என்று அவரை நெருங்கினர்.

ஆனால் அவரது தவ வலிமையினால் அவரது அருகில் கூட அவர்களால் போக முடியவில்லை.

அக்னிபர் லோமசரை பூர்வ ஜென்ம புண்ணியத்தால் வணங்கினார்.

“ஹே! முனிவரே! சாதுக்களின் சேர்க்கை மிகுந்த பாக்கியவான்களுக்கே கிடைக்கும். கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதை விட சாதுக்களின் சகவாசம் மேலானது என்பது உண்மை” என்று சொல்லி தனது பூர்வ விருத்தாந்தத்தை விவரமாக எடுத்துக் கூறி விமோசனம் வேண்டினார்.

லோமசர் அவர்கள் பால் மிகவும் பரிதாபப்பட்டார்.

அனைவரையும் நோக்கி, “நீங்கள் அனைவரும் என்னுடன் வாருங்கள். ரேவா நதியில் என்னுடன் ஸ்நானம் செய்யுங்கள். சாபம் நீங்கி சுகம் பெறுவீர்கள்” என்று கூறி அவர்களை ஆசீர்வதித்தார்.

அனைவரும் ரேவா நதியில் ஸ்நானம் செய்தவுடன் பிசாசு உருவம் நீங்கி தங்கள் அழகிய சுய உருவங்களை அடைந்தனர்.

முனி குமாரரான அக்னிபர் லோமசரின் உத்தரவின் பேரில் அந்த ஐந்து கந்தர்வ மங்கையரையும் மணந்து அவர்களுடன் சுகமாய் வாழலானார்.

இறுதியில் அனைவரும் சுவர்க்கத்தை அடைந்தனர்.

 மஹரிஷி அக்னிபரின் வரலாற்றை இப்படி பாத்ம புராணம் விரிவாகக் கூறுகிறது!

tags- மஹரிஷி, அக்னிபர்

DR R.NAGASWAMY SPEAKS, NEVER FORGET MONDAYS

WORLD FAMOUS  HISTORIAN DR R N SPEAKS, SURESHJI SPEAKS AND SCIENTIST DESIKAN SPEAKS; USUAL NEWS  AND VIEWS IS ALSO THERE

PLEASE JOIN US AT 1 PM LONDON TIME, 6-30 PM INDIAN TIME TODAY/ MONDAY AT FACEBOOK.COM/GNANAMAYAM. IF U WANT TO PARTICIPATE LIVE WE WILL SEND U THE ZOOM LINK. PL. CONTRIBUTE 3 TO 4 MINUTES VIDEO OR AUDIO CLIPS. U CAN ALWAYS SEE US ON FACEBOOK.COM/GNANAMAYAM. 

U R ALSO WELCOME TO BECOME A BROADCASTER.

SUBHAM

TAMIL WORDS IN ENGLISH – PART 20 (Post No.8904)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8904

Date uploaded in London – –8 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part –20

Words beginning with – N

N.1.NULL, NULLUM- ALLA,/ILLAI ந/ அல்ல, ந/இல்லை,

N.2. NULL AND VOID- ந/ செல்லாது  SELLATHU

N.3.NEAR – AYAL; ANITHTHE- MIRROR IMAGE OF NEAR=ANER ந/அயல், ந/ அணித்தே,

N.4. NAN0- ANU ந/அணு

INITIAL LETTER N IS LOST IN THE ABOVE WORDS.

XXXX

N.5. NARCISSISM/GREEK – நர-ஸ்வ -ப்ரிய ; தன் உடலின் மீதே தான் காதல் கொள்ளும் கிரேக்க புராண மனிதன் நரசிஸ்ஸஸ் SELF LOVE,  NARA SVA PRIYA/ SKT.

N.6.NASO, NOSE, NASAL – NAASIKA; USED IN ALL INDIAN LANGUGES

NASI DVAR – NOSTRILS நோஸ் – நேசல் – நாசி ; நாசி த்வாரம் (யோகா, மருத்துவம் தொடர்பான தமிழ் நூல்களில் சம்ஸ்க்ருதம் காணப்படும்

N.6. NAVY, NAVAL – NAAVA/SKT; NAAVAAY/TAMIL – BOAT, SHIP நாவ , நேவி ,

N.7. NEBULA – KUZAPPAM குழப்பம்

N.8. NEOS, NEW – NAVA, NUUTANA நூதன, நவ

N.9.NEPHRO – NEERAKAM நீரகம் ,

N.10.NEURO – NARAMBU, நரம்பு, நாடி, நார்

N.11. NERVE – SEE BOVE நாடி,  நரம்பு,  நார்

N.12. NEUT- RAL – NADU/ CENTREநடு ,

N.13. NIHIL- NAY, NO, NA, ILLAIந, நோ, நை  ந/இல்லை

N.14.NOMEN, NAME – NAAMAM/ NAME நாமம்

N.15. NOMOS – NIYAMA /RULES நியம,

N.16. NOSOS – NOY, NASITHTHAL/ DISEASE; NAASA நாஸ,

N.17. NOMADIC – NAADODI நாடோடி

M.18.NEGATION, NEGATIVE- NA(N)THTHAMAI, VIRUMBAAMAI நத்தம் / நத்தாமை, நந்தாமை ந , நோ

M.19. NICI/ NIGHT – RATRI/SKT; NADU NISI/TAM. நிஸி , நடு நிசி, நிசா , நைட்

N.20. NICE – NAISAANA, NAYAMAAANA நைஸான, நைச்சியமான

N.21. NAGGING – NACHCHARI, NAKSHATRYEYAN நச்சரி; நட்சத்திரேயன் (அரிச்சந்திரன் கதை)

N.22. NATION, NATURA- NAATU நாடு (த/ ட =ஸ ), TION= SION

N.23.NOBLE – NALLA, NANI NALLA, நல்ல

N.24. NICHOLAS – NIKILA நிகிலா

N.25-NEEM – VEMBU, வேம்பு,

N.26. NOON; NAN PAHAL நண் பகல்,

N.27. KNIGHT/ NEIGHING  – KANAITHAL; க/ணைத்தல்

N.28. NOVEMBER – NINTH MONTH; DECEMBER- DASA/10

SEPTE/ MBER-  SAPTA7, OCTO-ASHTA 8; JULIAN CALENDAR CHANGED EVERYTHING. நவ-9-ம்பர் தச-10-ம்பர், சப்த-7-ம்பர், அஷ்-8-டோபர் ; ஜூலியன் காலண்டர் செயல்பாட்டில் வரும் முன் மார்ச்/யுகாதியே உலகம் முழுதும் ஆண்டுத் துவக்கம் . பிற்காலத்தில் காலண்டர் மாறினாலும் மாதப் பெயர்கள் மாறவில்லை. நவ-9–ம்பர்= ஒன்பதாம் மாதம்

N.29. NUMBER- ENNAM ந/எண்ணம், ,

N.30.NAVEL – NAABHI ;  V=B நாபி

N.31. NECTAR- NARAVAM; ATTAR நறவம் /அத்தர்

N.32.NECESSARY- NISCHAYA THEVAI நிச்சய தேவை, ,

N.33. NODD- AATTU தலை/ ஆட்டு

N.34. NOODLE – NUUL PONDRA நூல் போன்ற

N.35- NOAH/BIBLICAL CALENDAR – NAVA= NEW MAN OR NAAVA MAN- BOAT MAN நோவா /பைபிள் கதை= நவ மனிதன்/புதியவன்; நாவ மனிதன்- படகில் வந்தவன்

N.36.NEMESIS – NAMUCI OF RIG VEDA; ALSO ENEMY

ந முசி = ரிக் வேத அரக்கன்

N.37. NAÏVE – NAICHCHIYAMAANA; VINAYA/MIRROR IMAGE நைச் சியமான ; வல ம் இடமாக படித்தால் வினய /பணிவான- வினய = வணக்கம்

N.38. MINUTE- NIMI – IMAI/EYELID; NIMISHA= MINISHA= MINUTE; MIRROR IMAGE OF NIMI- IMAI IN TAMIL FOR EYELID

N.39.NIMI- MUMMI/ FICATION; NIMI STARTED MUMMFICATION IN INDIA

நிமி- முதல் முதலில் இந்தியாவில் எண்ணைத் தைலத்தால் சடலம் காப்பாற்றப்பட்ட முறையை உண்டாக்கியவன் ; நிம்மி= எகிப்திய மம்மி.

நிமிஷம் — வல ம் இடம் படித்தால்  மினிட்/ ஆங்கிலம் ; த/ ட =ஷ

நிமி — கண்/இமை ; 60 முறை இமைத்தால் – ஒரு நிமிஷ ;

N.40.NUANCES- NUNUKKAM/ MINUUTE நுணுக்கம்,

N.41. NIGGER, NEGRO – NISHAADA நிஷாத, நைஜர், நைஜிரியா , நிக்கர் /நீக்ரோ

N.42. NIGERIA, NIGER – COUNTRYAND DARK RIVER; GOING THROUGH DARK CONTINENT; AFRICAN WAS CALLED DARK CONTINENT; NICI= NIGHT

N.43. NARAM SIN, NABONIDUS – KINGS OF MIDDLE EAST = NAVANEETHA, NARA SIMHA; ALSO NABHA- SKY நரம் சின் = நரசிம்மன் அல்லது நர சேனன் , நபோ நிதஸ் = நவநீதன் ; நப = ஆகாயம்

N.44.NIXON- NISHADAN நிஷாதன்,

N.45. NURTURE, NURSURY – NAATRU நாற்று

N.46. NIGER- FLOWING RIVER IN AFRICAN LANGUAGE; WE HAVE NEY AARU IN INDIA நெய்  ஆறு/ கேரளம் 

N.47- NAKED – NAGGA IN PALI நக்க; நேக்கட் /ஆங்கிலம், நிர்வாண /சம்ஸ்க்ரு

NICOBR ISLAND IS FULL OF JHARAVA TRIBES WHO ARE NAKED; தம் ; அம்மண மாந்தர் வாழும் நிக்கோபார் தீவு – நக்க வரம் 

N.48. NUMB- NAMATHU/ MARATHU POCHU நமத்துப் போ;

N.49. NOTORIOUS – NAATU ARINTHA; KNOWN TO ALL நாடறிந்த ,

N.50.NOTE/ NOTICE- NAATTAM OR NOTTAM; NOKKU நோட்டம், நாட்டம், நோக்கம்

N.51. NEAT- NIYATHI/RULE நியதி/ விதி

N.52. NOSOS – DISEASE; NAASAM/DESTROY- – நோய், நாசம் ; பீ நாசம்- மூக்கில் ரத்தம் கொட்டும் நோய்.

tags-  Tamil words – part 20

—SUBHAM—

அதிர்ஷ்டம் ‘அம்பாசிடர்’ கார்ல வந்தா, பிரச்சினை ‘ப்ளைட்ல’ வருது ! (Post.8903)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8903

Date uploaded in London – – 8 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 6

Compiled by Kattukutty

குறைகளை தன்னிடம் தேடுகிறவன் தெளிவடைகிறான்

குறைகளை பிறரிடம் தேடுகிறவன் களங்கப்படுகிறான்

 XXX

அறுந்து போன செருப்புக்குக் கூட வீட்டில் இடம் உண்டு

இறந்து போன மனித உடலுக்கு ஒரு இடமும் இல்லை……

XXXX

விழுதல் என்பது வேதனை.

விழுந்த இடத்தில் எழுதல் என்பது சாதனை!!!

XXXX

பேசிப் பேசி நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் “பொய்”

அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் எனபதுதான் “மெய்”

XXXX

விஸ்கி குடிச்சா நாம நாலு பேருக்கு முன்னாடி ஆடலாம்,   –  அதுவே

அதிகமா குடிச்சா நமக்கு முன்னாடி நாலு பேரு ஆடுவாங்க……..

XXX

நீங்க எவ்வளவு பெரிய பருப்பா இருந்தாலும்,  உங்களை வைச்சு

சாம்பாரெல்லாம் பண்ண முடியாது!!!

XXX

டீ மாஸ்டர் எவ்வளவுதான் லைட்டா டீ போட்டாலும், அதிலிருந்து

கொஞ்சம் கூட ‘லைட்’ LIGHT  வராது !!!

XXX

முட்டை இடாத பறவை எது ???

ஆண் பறவை !!!

XXX

ஊசி குத்தின இடத்தில் ஏன் ரத்தம் வருது ???

தன்னை குத்தினது யாருன்னு பார்க்க வருது!!!

XXX

என்னதான் ஊருக்கு கேட்கிற மாதிரி குறட்டை விட்டாலும்,

அத நம்ம காதால கேட்க முடியாது ……..

XXX

அதிர்ஷ்டம் அம்பாசிடர் கார்ல ஏறி வந்தா,

பிரச்சினை FLIGHT  ப்ளைட்ல ஏறி வருது !???

XXX

கல்யாணம் ஆன பின்னால ஒண்ணு அடி விழும்,

இல்லே முடி விழும், அவ்ளோதாங்க வாழ்க்கை………

XXXX

என்னதான் வேல வெட்டி இல்லாமல் இருந்தாலும்,

நமக்கு நாமே போன் பண்ணும்போது பிஸியாத்தானே

இருப்போம்????

XXX

மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட 

நாக்குக்கு நயமா சமைக்கிற பொண்ணுதான் 

ஆண்களுக்குத் தேவையாம்!!!

Xxx

 கடன் கொடுத்துப் பார்…..உறவுகள் உன்னைப் போற்றும்!!!

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!

XXXX

மாசத்துக்கு ஒரு நாள்தான் சம்பளம் தராங்க

ஆனா வேல மட்டும் தினமும் தராங்க???

XXX

பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா???

செலவழியுங்க…..

உங்க மதிப்பு தெரிய வேண்டுமா???

கடன் கேளுங்க…….

XXX

பிச்சை போடுவதும் சுய நலம்தான், புண்ணியம் கிடைக்கும்

என்று நினைத்தால்!!!

XXX

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்,

பொண்டாட்டி சொல்லியே கொல்லும்……….

நவீன,  ஞான மொழிகள் – 6,

***