வீணான ஒரு ஆராய்ச்சி! வேனன் கதை!(Post No.4303)

Written by London Swaminathan

 

Date:15 October 2017

 

Time uploaded in London- 10-40 am

 

 

Post No. 4303

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேனன் என்ற புராண புருஷன் பற்றி ஒரு சுவையான கதை இருக்கிறது. அந்த வேனன் கதையைப் படிக்கும் போதெல்லாம் ‘வீண்’ என்ற சொல்லே இவன் பெயரில் இருந்துதான் வந்ததோ என்று எண்ணினேன்.

 

 

“ஏண்டா வீண் வம்பு பேசுகிறாய்? ஏண்டா இப்படி வீணாப் போற” என்றெல்லாம் கேட்டிருக்கிறோம்.

 

பழைய ஆனந்தவிகடன் தமிழ் அகராதியைப் பார்த்த போது,

வீண்= பயனின்மை

என்று ஒரே சொல்லில் முடித்துவிட்டனர்.

 

சங்க இலக்கிய சொற்களஞ்சியத்தைப் பார்த்தபோது, வீண் என்ற சொல்லோ, வீணை என்ற சொல்லோ இல்லை!

 

திருக்குறள் சொல்லடைவைப் பார்த்தபோதும் ‘வீண்’ என்ற சொல்லே இல்லை. இதை எல்லாம் பார்தவுடன் என் ஊகம் சரிதான் என்று தோன்றியது. மேலும் ‘வீண்’ பற்றி ஆராய்ச்சி செய்தேன். கழகப் பழமொழி அகரவரிசையில் ‘வீண்’ என்ற சொல்லில் பிறந்த சில பழமொழிகள் இருந்தன. அதில் வீண் என்ற பெயர்ச் சொல்லில் பிறந்த “வீணன் (வெட்டிப்பயல், துட்டன்)” என்ற சொல்லைக் கண்டேன்.

சரிதான்! நான் ஊகித்தது நூற்றுக்கு நூறு சரியே என்று சொல்லியது போல இருந்தது “வீணன்” என்ற சொல்.

 

அதாவது, வீண் என்ற சொல் திருவள்ளுவர் காலத்திலோ, அதற்கு முந்தைய சங்க காலத்திலோ  தமிழில் இல்லை! அந்தச் சொல்

தோன்றக் காரணமான வீணன்/ வேணன் என்னும் துட்டன் பற்றிய கதை சுவையான கதை.

 

அது என்ன கதை?

விஷ்ணு புராணத்தில் வேனன் என்னும் கதை வருகிறது. வேனன் என்ற மன்னன் மிகவும் கொடியவன்; துஷ்டன். ஹிரண்யகசிபு போல எல்லா சமயச் சடங்குகளுக்கும் தடை போட்டான். ரிஷி முனிவர்களுக்குக் கோபம் வந்தது; அவனைக் கொன்றுவிட்டனர். ஆனால் அது “வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கியது போல” ஆயிற்று. அரசன் இல்லாத நாட்டில் “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” என்ற காட்டு நீதி நிலவியது.

 

அதை சம்ஸ்கிருதத்தில் அ+ராஜகம்= அராஜகம்= அரசன் இல்லாத நிலை என்பர். இன்று கூட தமிழிலும் அராஜகம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்த சொல்; எதிர்க் கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சிக்கு எதிராகப் பிரயோகிக்கும் சொல்!

 

அராஜக நிலையை மாற்ற ரிஷி முனிவர்கள் மஹாநாடு கூட்டினர்; சரி வேனனின் இடது கையைக் கடைந்து ஒரு அரசனை உருவாக்குவோம் என்று முயன்றனர். ஒரு கோரமான கருப்பு பூதம் வந்தது; அடச் சீ! நீ போ!! என்று விரட்டி விட்டனர். பின்னர் வேனன் சடலத்தில் வலது கையைக் கடைந்தனர். பிருது என்ற அழகிய ஆண் மகன் வந்தான். அவனை அரசனாக நியமித்தனர். ஆனால் அராஜக நிலையால் யாரும் வேலைக்குப் போகவில்லை; விவசாயம் நடக்கவில்லை; உடனே பிருது பூமியை மிரட்டினான். அது பசு வடிவம் கொண்டு பிரம்ம லோகம் வரை சென்றது; விடவில்லை பிருது; பின்னர் அந்தப் பூமி சொன்னது:

“இதோ பார்; இந்துக்கள் பெண் கொலை, பிராமணக் கொலை இரண்டும் செய்ய மாட்டார்கள்; நானே பசுவாகப் பாலைப் பொழிகிறேன்” என்று பாலைப் பொழிந்தது. இந்தப் பூமி முழுதும் வளம் கொழித்தது; பயிர்கள் செழித்தன. அன்று முதல் பூமிக்குப் ‘பிருத்வீ’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

 

இந்தக் கதை அருமையான தத்துவம், சங்கேத மொழி (CODED LANGUAGE, SYMBOLIC) நிறைந்த சிம்பாலிக் கதை!

 

அதாவது ராஜா இல்லாவிடில் — நல்ல ஆட்சியாளர் இல்லாவிடில் — அ ராஜகம் தாண்டவம் ஆடும்; மக்கள் ஸ்டிரைக் செய்வர்; பயிர்கள் விளையாது; பஞ்சம் ஏற்படும் அவனே கடுமையான விதிகளைப் பின்பற்றி அராஜகப் பேர்வழிகளை ஒடுக்கி நல்லாட்சி செய்தால் பூமி பாலாய்ச் சொறியும்; அதாவது மக்கள் வேலை செய்வர்; பலன் கிடைக்கும். அருமையான சிம்பாலிக் ஸ்டோரி Symbolic Story!

 

இந்து மதத்தில் புராணங்களில் இப்படித்தான் அடையாள பூர்வ, சங்கேத மொழியில், மறை மொழியில் கதைகள் இருக்கும்; வேதங்களில், பிராமணங்கள் என்னும் நூலில் எல்லாக் கதைகளும் சங்கேத மொழிக் கதைகள்தாம்; அவைகளைப் புரிந்து கொள்ள முடியாத வெள்ளைத்தோல் வெளிநாட்டாரும், மார்கஸீய வாந்திகளும், ஆங்கிலம் மட்டுமே படித்த அரை வேக்காட்டு அறிவிலிகளும் இந்து மதத்தை எள்ளி நகை ஆடினர்.

“வீண்” என்ற சொல்லைக் கொடுத்ததே வேனன் கதைதான்!!

வேனன்= வீணன்= வீண்

 

இதனால்தான் சங்க காலத்தில் இல்லாத இச் சொல், வள்ளுவர் பயன்படுத்தாத இச் சொல் பிற்காலத்தில் தமிழில் வந்தது என்பது எனது ஊகம்; புதிய சான்று– எதிர்ச் சன்றுகள் இல்லாதவரை- எனது ஊகம் சரியே!

 

அகத்தியர் விந்திய மலையை கர்வபங்கம் செய்தது, கடலைக் குடித்தது, பரசுராமன் கேரள பூமியைக் கடலில் இருந்து மீட்டது, பகீரதன் ஊசிமுனையில் தவம் செய்து கங்கையைக் கொண்டு வந்தது, காக்கை கவிழ்த்த கமண்டலம் மூலம் அகத்தியர் காவிரியை உருவாக்கியது — முதலியன எல்லாம் பிரமாண்டமான பொறியியல்- எஞ்ஜினீயரிங் அதிசயங்கள் (Engineering Marvels) , பிரம்மாஸ்திரம் என்பது அணு ஆயுதம்! ஒலி அலைகளையும் தண்ணீரையும் பயன்படுத்தி பிரம்மாண்டமான சக்தியை உருவாக்கலாம், மனோவேகத்தில் சென்று பல வெளி உலகங்களை அடையலாம்; ஐன்ஸ்டைனின் கொள்கையை மாற்றலாம் – என்று நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைகளையும் படிக்கவும்.

TAGS:— வேனன் கதை, வீண், விஷ்ணு புராணம், ஆராய்ச்சி

-சுபம்-

ரஹசியம்! பரம ரஹசியம்! எல்லா மதத்திலும் உண்டு! (Post No.4300)

Written by London Swaminathan

 

Date:14 October 2017

 

Time uploaded in London- 7-43 am

 

 

Post No. 4300

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பாரசீக நாட்டில் (ஈரான்) ஜொராஸ்டர் (Zoroaster or Zarathusthra) என்பவர் பின்பற்றிய மதம், வேத கால சமயம் போன்றது. அவர்களும் தீயை (யாக, யக்ஞம்) வணங்கினர். ஆயினும் சில கருத்துக்களில் மாறுபட்டார். ஒற்றுமை அம்சங்களே அதிகம்; அதில் ஒன்று மந்திரங்களை எல்லோருக்கும் கற்றுத் தராதே என்பதாகும். இது எல்லா சமயங்களிலும் உள்ள உண்மை.

 

நான் தினமும் படிக்கும் விநாயகர் கவசத்தில் கடைசியில் வரும் வரிகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக உளது என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது!

அன்பு உறுதி ஆசாரம் உடையார்க்குக்கிக்

கவசத்தை அறைக அல்லார்க்கு

என்பெறினும் உரையற்க எனக்கிளந்து

மரீசி தனது இருக்கையுற்றான்

என்று விநாயக கவசம் முடியும். அதாவது அன்பு, உறுதி, ஆசாரம் ஆகியன எவருக்கு இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டும் இக்கவசத்தைச் சொல்லிக்கொடு; மற்றவர்கள் என்ன கொடுத்தாலும், அவர்களுக்குச் சொல்லி விடாதே என்று கூறிவிட்டு மரீசி முனிவர் அவருடைய இருப்பிடத்தை அடைந்தார் என்பதாகும்.

 

புத்தரும் ஒரு சொற்பொழிவில், எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும்; அவைகள் எல்லாவற்றையும் நான் சொல்லித் தரப்போவதில்லை என்று கூறுகிறார். அதிக விடயங்களைச் சொல்லச் சொல்ல குழப்பம் அதிகரிக்கும் என்பது அவருக்கும் தெரியும்.

 

ஜொராஸ்டர் சொல்லிய கருத்துக்கள் ஜெண்ட் அவஸ்தா (Zend Avesta) என்ற புனித நூலில் உள்ளது. சந்தஸ் என்ற சம்ஸ்கிருதச் சொல்லே ஜெண்ட் (ZEND) என்று திரிந்ததாக ஆன்றோர் கூறுவர். இந்தப் புனித நூலில் மூன்று இடங்களில் இந்த மந்திரங்களை யாருக்குச் சொல்லித் தரவேண்டும்,எப்படி சொல்லித் தர வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.

 

தந்தை ஒருவர் மகனுக்குக் கற்பிக்கலாம்; அல்லது சஹோதரன் ஒருவன் மற்ற சஹோதரனுக்கு உபதேசிக்கலாம்; அல்லது அதர்வண் (புரோஹிதர்) தனது சீடனுக்குச் சொல்லித் தரலாம் என்று ஜொராஸ்டருக்கு அஹுரமஸ்தா (AHURA MAZDA அசுர மஸ்தா= பெரிய கடவுள்) சொன்னதாக ஆறாவது அமேஷா ஸ்பெண்டாவில் (Sixth Amesha Spenta) வருகிறது. இதே போல யாஸ்ட் 14, 46 (Yasht 14, 46) ஆகியவற்றிலும் சொல்லப்பட்டுள்ளது.

இந்து மதத்தில் எல்லா மந்திரங்களும் குரு மூலமாகவே கற்பிக்கப்படுகிறது. பிராமனர் உள்பட மூன்று வருணத்தார் பூணுல் போடும்போதும் அவர்களுக்கு தந்தைதான் காயத்ரீ மந்திரத்தை உபதேசிப்பார். அப்பொழுது மகனையும் தந்தையையும், புரோஹிதரையும் ஒரு பட்டு வேஷ்டியால் போர்த்தி மறைத்து விடுவர். இதன் பொருள் இது ரஹசிய மந்திரம்; அந்த ரஹசியத்தைக் காக்க வேண்டும் என்பதாகும்.

பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷதத்திலும் (6-3-12), சாந்தோக்ய உபநிஷத்திலும் (3-2-5-6) இவ்வாறு எழுதப்பட்டுளது. அதாவது மகனோ அல்லது தனது மாணவரோ இல்லாவிடில் மந்திரங்களைக் கற்பிக்காதே என்பது கட்டளை.

 

மதத்தில் தீட்சை பெற்றவர்களுக்கே ரஹசிய ஞானம் கிடைக்கும் என்று கிறிஸ்தவ புனிதர் பால் (St.Paul) கூறுகிறார்.

 

பாபிலோனியா, எகிப்து போன்ற நாகரீகங்களிலும் சில விஷயங்கள் எல்லோருக்கும் கிடைக்காது என்றும் அதில் சேர்ந்தவர்களுக்கு (Initiated)  மட்டுமே கிடைக்கும் என்றும் வரலாற்று அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

 

ரோமானிய சாம்ராஜ்யத்தில் பரவிய மித்ர (Mithra Cult) வழிபாடு நிலத்து அடியிலுள்ள குகைகளில் கற்பிக்கப்பட்டது. அது மட்டுமல்ல அந்த வழிபாட்டில் தீட்சை எடுத்துக் கொள்வோர் சவுக்கடியும் (flagellation) பெறவேண்டும்.

மித்ரனைப் போற்றும் ஒரு மந்திரத்தில் (யாஸ்ட் Yasht 10-122) சவுக்கடி விதிகள் கூறப்படுகின்றன. மூன்று பகல், மூன்று இரவில் குளித்த பின்னர் 30 சவுக்கடி அல்லது சாட்டை அடி பெறும், சாத்திரங்களைக் கற்ற அறிஞர்களே மித்ர பானத்தை அருந்தலாம் என்று ஜோராஸ்டருக்கு அசுர மஸ்தா கூறுகிறா

ர் என்று இந்த யாஸ்ட் சொல்கிறது. சில சந்தர்ப்பங்களில் இரண்டு பகல் இரண்டு இரவுகளில் குளித்து விட்டு இருபது கசையடிகள் வாங்கிய பின்னர் மித்ரனுக்காக தயாரிக்கப்பட்ட பானத்தை அருந்தலாம் என்றும் அதே மந்திரம் சொல்லும்.

 

ஐயப்ப விரதம் இருப்போர் குருமார்களிடம் தீட்சை பெறுவது இப்போதும் உள்ளது.  அதற்கு 41 நாள் விரதம் இருக்க வேண்டும். இதே போல விஜயாவாடவில் பவானி விரதம் இருப்போர் 41 நாட்களுக்கு சிவப்பு ஆடைகளை அணிந்து கோவில் குருமாரிடம் தீட் சை பெறுகின்றனர்.

 

ஏன் இந்த ரஹசியம்?

கண்ட கண்ட தோழான் துருத்திகளுக்கு மந்திர உபதேசம் செய்தால், அவர்களுடைய நடை உடை பாவனைகள் அந்த மந்திரத்தின் மதிப்பைக் குறைத்து விடும்; மக்கள அதில் நம்பிக்கை இழந்து விடுவர். எல்லா மதங்களிலும் போலி சாமியார்கள் உண்டு; அவர்கள் எல்லாம் நாஸ்தீகவாதிகளுக்கு உதவி செய்யவும் மதங்களின் மதிப்பைக் குறைக்கவும் பிறந்தவர்கள். மந்திரத்தின் மதிப்பையும் சக்தியையும் காப்பாற்ற ரஹசியம், பரம ரஹசியம் அவசியம்!

Source: M P Khareghat Memorial Volume-1, Bombay, 1953 (A Symposium on Indo-Iranian Subjects)

TAGS: ரகசியம், ரஹசியம், பரம, மந்திரம், ஜொராஸ்டர்

இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:–

போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் …

https://tamilandvedas.com/…/போலி-சாமியார்-பற…

2 days ago – போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294) … கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி வேடம் போடும் ஆட்கள் …

மந்திரங்களை யாரும் கற்கலாமா? | Tamil and …

https://tamilandvedas.com/…/மந்திரங்களை-யாரு…

6 Nov 2013 – ஏன் சில மந்திரங்களை ஒரு சில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று … எல்லோருக்கும் முன்பாக மன்னர் தனக்கும் காயத்ரீ மந்திரம் …

மந்திரங்களை யாரும் கற்கலாமா? | Swami’s …

swamiindology.blogspot.com/2013/11/blog-post_6.html

6 Nov 2013 – ஏன் சில மந்திரங்களை ஒரு சில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று … எல்லோருக்கும் முன்பாக மன்னர் தனக்கும் காயத்ரீ மந்திரம் …

 

–SUBHAM–

 

‘முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்’ (Post No.4297)

Written by London Swaminathan

 

Date:13 October 2017

 

Time uploaded in London- 7-37 am

 

 

Post No. 4297

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பட்டினத்தாரும் நம்மாழ்வாரும் பாடியது:

முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்

இரண்டு பெரிய பக்தர்கள், ஒரே கருத்தைச் சொல்லும்போது, அதை நம் மனதில் வைப்பது எளிதாகிறது; மேலும் ஒருவர் வைணவர்கள் போற்றும் நம்மாழ்வார், மற்றொருவர் சைவர்கள் போற்றும் பட்டினத்தார் என்பதைக் காணுகையில் நம் ஆர்வம் கொப்புளிக்கிறது.

 

இருவரும் என்ன சொல்கிறார்கள்?

நீ எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் இறுதியில் ஆண்டியும் அரசனும் சந்திக்கும் இடம் ஒன்றே.

 

நம் வாழ்வில் காணா சமரச இடம்

சுடுகாட்டிலோ, இடு காட்டிலோதான் நாம் அனைவரும் வித்தியாசமின்றி சந்திக்கிறோம்

ரம்பையின் காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல்:–

 

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

 

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு

தொல்லையின்றினே தூங்கிடும் வீடு

உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

 

 

ஆண்டி எங்கே அரசனும் எங்கே

அறிஞன் எங்கே அசடனும் எங்கே

ஆவி போன பின் கூடுவார் இங்கே

ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே

 

 

பட்டினத்தார் பாடல்

பாமர மக்களுக்குப் புரியும் வகையில் எழுதப்பட்டது திரைப்படப் பாடல். இலக்கிய நயம்பட எழுதப்பட்டது பக்திப் பாடல்; மேலும் பக்திப் பாடல்களைப் பாடுவோர் அதை அடிமனதில் தோன்றும் ஆன்மீகப் பேரூற்றில் இருந்து தருகையில் நாம் மிகவும் ரசிக்கிறோம்; பருகுகிறோம். ஆகையால் காலா காலத்துக்கும் அப்பாடல்கள் அழிவதில்லை. அதே கருத்து திரைப்பாடல்களில் வருகையில் அது அழிந்துவிடுகிறது. ஏனெனில் அவர்கள் காசு, பணத்துக்கு எழுதுகிறார்கள்.

 

இதோ பட்டினத்தார் பாடல்:–

 

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

 

 

பொருள் மிகவும் எளிது:

பெரிய  வைர, ரத்தின, தங்க கிரீடங்களை (மணி முடி) தாங்கி பாரையே ஆண்ட அரசர்களும் இறுதில் இறந்த பின்னர் எரிக்கப்பட்டு ஒரு கைப்பிடி சாம்பல் ஆகிவிடுவர். இதைப் பார்த்த பின்னரும், பலரும் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்க்காமல், மேலும் மேலுமாசைகளைப் பெருக்கி வாழ மக்கள் விரும்புகின்றனர். திருத் தில்லை அம்பலத்தில் ஆடும் இறைவனின் அடிகளை நாடும் நாட்டம் வரவில்லையே!

 

இது பட்டினத்தாரின் ஏக்கம்.

இதோ நம்மாழ்வார் பாசுரம்:

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ

இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்

பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்

கடிசேர் துழாய் முடிக்கண்ணன் கழல்கள் நினைமினோ

–திருவாய் மொழி, திவ்வியப் பிரபந்த பாடல் எண் 3009

 

பொருள்:-

 

பேரரசர்கள் ஒரு சமயம். மற்ற சிற்றரசர்களின் முடிகள் தங்கள் காலில் படும்படி (காலில் விழுந்து வணங்கும்போது) ஆட்சி புரிந்தனர். இடி போன்ற முரசங்கள் ஒலிக்கும்படி சபை வீற்றிருந்தனர். ஆனால் அவர்களே பின்னொரு நாளில் இவை அழியும்படி, போரில் தோற்று பொடியாக, துகளாக ஆனார்கள். ஆகவே மணம் பொருந்திய துளசி மாலையை அணிந்த கண்ணன் திருவடிகளை நினை மனமே; இப்போதே நினை மனமே.

 

ஆக நம்மாழ்வாரும் பட்டினத்தாரும் பேசும் பெரிய மன்னர்கள் தகுதி நமக்கு இல்லை. ஆனால் அவர்களுகே அந்தக் கதி என்றால் ஊர் பேர் தெரியாத நமக்கு எந்த கதியோ?

 

இறைவன் சந்நிதியில் மட்டுமே நாம் அனைவரும் சமம்.

 

–சுபம்–

நம்மாழ்வார் பாசுரத்தில் தமிழர் வரலாறு (Post No.4291)

Wikipedia picture of Nammalvar

Written by London Swaminathan

 

Date:11 October 2017

 

Time uploaded in London- 11-59 am

 

 

Post No. 4291

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

இந்துக்களுக்கு வரலாறே எழுதத் தெரியாது என்று எள்ளி நகையாடுவது மேல் நாட்டு “அறிஞர்களின்” வாடிக்கை. இதைக் கிளிப்பிள்ளை போல திருப்பிச் சொல்லுவது மார்கஸீயவாந்திகளின் மற்றும் ஆங்கிலத்தில் வரலாறு படித்த சுயபுத்தி இல்லாத நம்மவர் சிலரின் வாடிக்கை. ஒத்து ஊதுவதில் சிறந்தவர்கள்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், காஷ்மீரி பிராமணன் கல்ஹணன் எழுதிய ராஜ தரங்கினிதான் இந்தியாவின் முதலாவது வரலாற்று நூல் எனபர் வெள்ளையர்.

 

ஆனால் நம்மவர்கள் மிகத் தெளிவாக வரலாற்றை அறிந்திருக்கிறார்கள் என்பதற்கு புற நானூறும் பிருஹதாரண்ய உபநிஷத்தும், கோ கருநந்தடக்கன் போன்றோர் கல்வெட்டுகளும் சான்று; நம்மாழ்வாரும் (800 CE) ஒரு பாசுரத்தில் பாரத நாட்டை ஆண்டு போன மன்னர்களின் எண்ணிக்கை கடல் மணல் துகள்களுக்குச் சமம் என்கிறார். பல ஆயிரம் , பல ஆயிரம் மன்னர்களைக் கண்டது பாரதம்!

 

நினைப்பான் புகின்கடல் எக்கலின் நுண்மணலில் பலர்

எனைத்தோர் உகன்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர்

மனைப்பால் மருங்குற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்

பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ

–பாடல் 3010

 

பொருள்:-

பல யுகங்கள் இவ்வுலகத்தை எல்லாம் ஆண்டு இறந்து போன அரசர்கள் மிகப்பலர். நினைக்கப்பு குந்தால் கடல் மணல்திட்டிலே உள்ள நுண்மையான மணலைக் காட்டிலும் அவர்கள் பலர் ஆவர். அவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடமும் தெரியாமல் அழிந்தார்களே அன்றி, வேறு ஒன்றையும் பார்த்தோம் இல்லை. ஆதலால் பனைமரம் போன்ற பெரிய கால்களை உடைய மதயானையைக் கொன்ற கண்ணபிரானது திருவடிகளை வணங்குங்கள்.

 

மேல்நாட்டோர் போல குறுகிய கால எல்லை பற்றிக் கவலைப் படாதவர்கள் இந்துக்கள். அவர்கள் எல்லாம் மாபெரும் யுகக் கணக்கில்தான் (eras and eons) எதையும் பார்ப்பார்கள். சின்னக் குழந்தைகூட சூர்ய கோடி சமப்ரபா என்றும் சஹஸ்ர கோடி யுகதாரிணே நம: என்றும் தினசரி வழிபடுவர். ஆக இவர்கள் சொல்லும் கி.மு. கி.பி. எல்லாம் இந்துக்களுக்கு கொசு அல்லது — கொசுறு!!

Picture from Wikipedia

எகிப்திய, மாயன், சுமேரிய, பாபிலோனிய, சீன ,கிரேக்க வரலாறுகள் எதுவும் கி.மு 3000-ஐத் தாண்டுவதில்லை. ஆனால் கி.மு 3102ல் வாழ்ந்த வியாசர் எழுதிய மஹாபாரதமோ நூற்றுக் கணக்கான அரசர்கள் பெயர்களைச் சொல்லுகிறது.  கோ கரு நந்தடக்கனின் எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கலியுகம் துவங்கி இத்தனையாவது நாள் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது என்று நாள் கணக்கில் சொல்லுகிறது! ஆக மஹாபாரதம் சொல்லும் காலக் கணக்கு சரியே என்பது 1200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் பொறித்த கல்வெட்டில் உளது. பிருஹதாரண்யக உபநிஷத் ஐம்பதுக்கும் மேலான ஆசிரியர் பரம்பரையை அப்படியே தருகிறது. இது கி.மு 850ல் எழுதப்பட்டது என்று மேல் நாட்டு “அறிஞர்களும்’ ஒப்புக்கொள்வர். கபிலரோ புற நானூற்றின் 201 ஆவது பாடலில் இருங்கோவேள் என்ற குறு நில மன்னனின் 49 தலை முறை பற்றிப் பேசுகிறார்.

அவ்வையாரோ புற நானூற்றுப் பாடலில் அதியமானின் முன்னோர்கள் கரும்பு கொண்டுவந்த வரலாற்றைப் (இக்ஷ்வாகு வம்சம்) பற்றிப் பாடுகிறார். ஒரு சதுர் யுகத்தில் பிரம்மாவின் ஆயுட்காலமே முடிந்து வேறு ஒரு பிரம்மா வருவார்; இது போல பல பிரம்மாக்களைக் கண்டது இந்து மதம். ஆகையால்தான் புற நானூற்றுப் புலவர்களும் நம்மாழ்வாரும் மன்னர்களின் எண்ணீக்கயை மணல்துகளுக்கு ஒப்பிடுகின்றனர்.

 

இதோ புறநானூற்றுப் பாடல்:

 

சேற்றுவளர் தாமரை பயந்த, ஒண்கேழ்

நூற்றிதழ் அலரின் நி ரை கண்டன்ன

வேற்றுமை இல்லாத  விழுத்திணைப் பிறந்து

வீற்றிருந்தோரை எண்ணுங்காலை

 

–புறம் 27, முதுகண்ணன் சாத்தனார்

 

இந்த உலகத்தில் ஆண்ட மன்னர்கள் தாமரைக் குளத்தில் மாரும் தாமரை போன்ற எண்ணிக்கை உடையவர்கள்….

 

இதோ இன்னும் ஒரு பாடல்:-

 

இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்

உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித்

தாமே ஆண்ட ஏமம் காவலர்

இடுதிரை மணலினும் பலரே

–புற நானூறு 363, ஐயாதிச் சிறுவெண் தேரையார்

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் புலவர் பாடிய பாடல் இது

கரிய கடலால் சூழப்பட்ட இப்பெரிய இடத்தையுடைய மண்ணுலகத்தை– வேல மரத்தின் அளவு இடமும் மற்றவர்க்கு விடாதபடி— தாமே ஆண்ட மன்னர்களின் எண்ணிக்கை கடல் அலைகள் ஒதுக்கும் மணலை விடப் பலர் ஆகும்.

 

அவர் காலத்தில் இருந்த மன்னர்கள் எண்ணிக்கையே அவ்வளவு!

 

புராணங்களும் ஒரு வம்சத்தில் மட்டும் 140 தலை முறைகளுக்கு மேலாக பட்டியல் இட்டுள்ளது. இது போல நாடு முழுதும் பல வம்சங்கள். ஆக இவ்வளவு பெயர்களும் ஒரு தூசுக்குச் சமானம் என்பதால் இந்துக்கள் அதைத் தனித் தனியாக எழுதி இருந்தாலும் அவை இன்று அர்த்தமில்லாத வெறும் குப்பையே.

 

கிரேக்க ஆசிரியர்கள் இந்திய வரலாறு அலக்சண்டருக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுப் பழமையுடையது என்று எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

–Subham–

தமிழ்ப் புலவர்கள் மீது நம்மாழ்வார் கடும் தாக்குதல்! (Post No 4282)

Written by London Swaminathan

 

Date: 8 October 2017

 

Time uploaded in London- 11-40 am

 

Post No. 4282

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

நம்மாழ்வாரின் திருவாய் மொழி தித்திக்கும் தேன்; திகட்டாத செங்கரும்பு; திவ்வியப் பிரபந்தத்தின் 4000 பாசுரங்களில் கால் பகுதியை ஆக்ரமிக்கும் நம்மாழ்வார் பாசுரங்கள், மஹாகவி பாரதியாருக்கு மிகவும் பிடித்தவை. அவருக்கு மட்டும்தானா? நமக்கும் குலோப் ஜாமுனையும் கோதுமை, அல்வாவையும் அடுத்தடுத்து கொடுப்பது போல இருக்கிறது. பன்னீர் ஜாங்ரியையும் பாதுஷாவையும் சாப்பிட்டது  போல இனிக்கிறது.

 

மிகவும் துணிச்சலாலகப் பாடி இருக்கிறார்; பச்சைப் பொய்கள் என்ற சொற்கள் மூலம் மனிதர்களைப் பாடும் புலவர்களைச் சாடுகிறார்.

சொன்னால் விரோதம்; ஆயினும் சொல்லுவேன் என்று துணிந்து விட்டார்.

 

பணத்திற்கு ஆசைப்பட்டு குறு நில மன்னர்களையும், உதவாக்கரைப் பணக்காரகளையும் பாடும் — இந்திரனே! சந்திரனே! என்று பாடும் — புலவர்களைச் சாடுகிறார் நம்மாழ்வார்.

 

நான் நினைக்கிறேன்; நம்மாழ்வாரின் இந்தத் துணிச்சல்தான் பாரதியை அவர்பால் ஈர்த்திருக்க வேண்டும் என்று. நாடே சுதந்திரத்துக்காக ஏங்கியபோது சிலர் வெள்ளைக்காரர்களுக்கு அடிமைத் தொழில் புரிந்தமையும், அவர்களைப் போற்றி நூல் தோறும் கவி பாடியதும் பாரதியாரின் ரத்தத்தைக் கொதிக்க வைத்தது. உடனே ‘நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்’– என்று பாடினார்.

 

நம்மாழ்வார்தான் அவருக்கு வழிகாட்டி.

நம்மழ்வாரின் அற்புதப் பாசுரங்களைப் பாருங்கள்:-

 

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ

என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்

தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து

என் ஆனை, என் அப்பன், எம்பெருமான் உளனாகவே

பொருள்

நான் சொல்வது பகையாகப் படலாம். ஆயினும் சொல்லாமல் விடமாட்டேன். பெருமாளுக்கே என் கவிதைகளைத் தருவேன்; மற்றவரைப் பற்றி கவி பாடேன். வண்டுகள் தென்னா, தெனா என்று இசைபாடும் திருவேங்கடத்தில் உள்ள பெருமாள் எல்லாருக்கும் தந்தையாய் இருப்பவன்; அவனை விட்டு யாரையும் பாட மாட்டேன்.

பச்சைப் பொய்கள்! வாய்மை இழக்கும் புலவீர்காள்!!

 

இன்னும் இரண்டு பாடல்களில் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறார்:

கொள்ளும் பயன் இல்லை, குப்பைகிளர்த்தன்ன செல்வத்தை

வள்ளல் புகழ்ந்து, நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!

கொள்ளக் குறைவு இலன், வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்

வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ (3213)

பொருள்:-

 

புலவர்களே! குப்பையைக் கிளறினாற்போல, தள்ளத் தக்க குற்றமுடைய செல்வரைப் புகழ்ந்து பாடாது, வள்ளல் மணிவண்ணனைப் பாடுங்கள். அவன் ஒருவனே கவி பாடுவதற்குப் பொருளானவன். குணங்களில் குறைவில்லாதவன். உங்களுக்கு விருப்பமானவற்றைத் தருவான். அவனைப் பற்றி கவி பாட வாருங்கள்.

சேரும் கொடை புகழ் எல்லை இலானை, ஓர் ஆயிரம்

பேரும் உடைய பிரானை அல்லால், மற்று யான் கிலேன்

மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள் என்று

பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே

 

பொருள்:

உண்மை இல்லாமல், பொய் மொழியால் உன் கைகள் மேகம் போன்று கொடையாளி, உன் தொள்களோ மலை போன்ற வலிமை உடயவை- என்று மனிதப் பதரை பேச மாட்டேன்.வள்ளன்மையும் புகழுமொப்பில்லாத ஆயிரம் திருப்பெயர்களும் உடைய எம்பெருமானை அல்லாமல் வேறு யாரையும் பேசுவதற்கு நான் தகுதி அற்றவன்.

 

மானிடரைப் பாடாது மாதவனை மட்டும் பாட வேண்டும் என்று பத்து கவிகள் சாத்தியுள்ளார் நம்மாழ்வார். ஏனைய ஏழு கவிகளையும் படித்து இன்புறுக.

 

ஆழ்வார்கள் தரும் அமுதம் திகட்டாது!

TAGS:__நம்மாழ்வார், சொன்னால் விரோதம், பச்சைப் பொய்கள்

–சுபம்–

அதிசய பிராமணன்; பிராமண அதிசயம்! (Post No.4276)

Written by London Swaminathan

 

Date: 6 October 2017

 

Time uploaded in London- 19-26

 

Post No. 4276

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

உலகிலேயே பழைய சடங்கு ஒன்றைப் பினபற்றும் ஒரே இனம் பிராமணர்கள்; அவர்கள் உலகிலேயே பழைய சடங்கைச் செய்வதாக விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் உரைக்கும்.

 

அது என்ன பழைய சடங்கு?

சந்தியாவதந்தனம்!

அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான். தொல்காப்பியம் உரைக்கும் தமிழ் கடவுள்கள் இந்திரன், வருணன், விஷ்ணு பெயர்களையும் சங்கத் தமிழ் நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களையும் , வரலாற்றுப் புருஷர்களான ஜனமேஜயன் முதலியோர் பெயர்களையும் சொல்கிறான். அவ்வளவு கடவுள் பெயரையும் சொல்லிவிட்டு அனத முழுமுதற் கடவுளான பிரம்மனும் நானும் ஒன்றே என்றும் சொல்லுகிறான். இது உபநிஷத மந்திரம் (அஸாவாதித்யோ பிரம்ம, பிரம்மைவாஹமஸ்மி)

சங்கத் தமிழர்கள் அதிகமாகப் புகழும் கபிலன், ஒரு பிராமணன். அவரை ‘’புலன் அழுக்கற்ற அந்தணாளன்’’ என்று புலவர் பெருமக்கள் போற்றுவர். அவர்தான் சங்கத்தமிழ் புலவர்களில் அதிக கவி மழை பொழிந்தவர்.

 

அந்தக் காலத்தில் பிராமணர்கள் ஒழுக்க சீலர்களாகவும், தன்னலமற்ற ரிஷி முனிவர்களாகவும் விளங்கினர். இதனால் பார்ப்பனரையும் கடவுளையும் ஒன்றாகப் பார்த்தனர். ( இன்று அவர்கள் த்ரிகால சந்தியா வந்தனம் செய்யாததால் அவர்கள் மதிப்பிழந்து விட்டனர்)

 

திரி கால சந்தியா வந்தனம்= முக்கால சந்தியா வழிபாடு

சந்தியா= தேவியின் பெயர், சந்தி/அந்தி நேரத்தின் பெயர்0.

நான் யஜூர் வேத ஆபஸ்தம்ப சூத்திர முறைப்படியுள்ள சந்தியாவந்தனத்தை இங்கே பயன்படுத்துகிறேன். மற்றவர்கள் சில மாறுபாடுகளுடன் செய்வர். சிலர் இ தைவிடக் கூடுதலான மந்திரங்களைச் சொல்லுவர். ஆயினும் முக்கியச் சடங்குகள் மாறாது

பிராமணர்களை பூசுரர்கள், அதாவது பூவுலகில் நடமாடும் தேவர்கள், என்று மனு ஸ்மிருதி முதலிய நூல்கள் விதந்து ஓதுகின்றன. சங்கத் தமிழ் நூல்களோவெனில் பிரமணர்களை பசுக்களுடன் ஒப்பிடுகின்றன. கண்ணகியோவெனில் பார்ப்பனர்களையும், பத்தினிகளையும் விட்டுவிட்டு மதுரையை எரி! என்று அக்கினி தேவனுக்குக் கட்டளை இடுகிறாள். முதுகுடுமிப் பெருவழுதியோ பார்ப்பனர்களுக்கும் சிவன் கோவிலுக்கும் மட்டும் தான் தலை சாய்ப்பான் என்று புற நானூறு செப்பும். மாவீரன்   சேரன் செங்குட்டுவனோவெனில் மன்னனைக் கண்டித்த பார்ப்பனன் மாடல மறை யோனுக்கு துலாபரம் செய்து தன்னு டைய எடையான 55 கிலோ தங்கத்தை அளித்ததாக சிலப்பதிகாரம் முழங்குகிறது.

 

 

பிராமணர்களின் சந்தியா வந்தனம் மாக்ஸ்முல்லர் (Max Muller) வகையறாக்களின் மண்டையில் சுத்தியல் அடி கொடுக்கிறது. அதுகள், ‘ஆரியர்கள்’ என்று வேதத்தில் இல்லாத ஒரு இனத்தை கற்பித்து அவர்கள் ஐரோப்பாவிலிருந்தோ, மத்திய ஆசியாவிலிருந்தோ நுழைந்ததாக கதை கட்டின. அப்படி ஒரு குளிர்ப்  பிரதேசத்தில் இருந்து வந்திருந்தால் தண்ணீர் சம்பந்தமான சடங்குகளே இராது. பிராமணர்களோ தண்ணீர் இல்லாமல் வாழ மாட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் தண்ணீர்தான் முக்கியம்; உலகிலேயே தண்ணீருக்கு அதிகமான சொற்களை உடைய மொழி-சம்ஸ்கிருதம்! பிராமணர்கள் வாழும் அக்கிரஹாரம் எப்போதும் நதிக்கரையில்தான் இருக்கும்

 

பிராமணர்கள் நாள் தோறும் நதிக்கரைக்குச் சென்று சூரிய உதயத்துக்கு முன்னரும், நடுப்பகலிலும், சூரிய அஸ்தமனத்துக்கும் முன்னரும் அந்தி நேரச் சடங்குகளைச் செய்வர். இதற்கு அவர்களுக்குத் தேவையாநது தண்ணீர் ஒன்று மட்டுமே.

 

(சூரியனைக்) காணாமல், (நிழல்) கோ ணாமல், ( சூரியனை) கண்டு கொடு என்பது பிராமணப் பழமொழி)

சுருங்கச் சொன்னால், இது நீரைக் கொடுத்து, சூரியனின் அருளை வேண்டுவது. உலகில் நமக்குக் கண்ணுக்குத் தெரியும் சக்திகளில் மிகப் பெரியது சூரியன். அதற்கு ஒப்பிட உலகில் வேறு ஒரு பொருளும் இல்லை. ஒவ்வொரு நிமிடமும் அதற்குள் பல கோடி ஹைட்ரஜன்  குண்டுகள் வெடிப்பதால் நமக்கு சக்தி கிடைக்கிறது. சூரியன் அழிந்தால் எட்டாவது நிமிடத்தில் பூமி இருண்டு விடும்; சில தினங்களுக்குள் உயிர் இனங்கள் அழியத் தொடங்கும்.

 

இதனால் கடவுளுக்கு நிகராக ஒரே ஒரு பொருளை மட்டுமே – ஒளியை – சூரிய ஒளியை ஒப்பிட்டனர். அதற்குப் பின் சக்தியின் வடிவான காயத்ரீ தேவியை வழிபடுவதே சந்தியா வந்தனத்தின் முக்கிய கட்டம்.

 

இதைச் செய்ய பத்து நிமிடம்தான் ஆகும். அதற்குள் 100 முதல் 150 பெயர்களை அவர்கள் சொல்லுவர். தனது கோத்திரம், குலம் சூத்திரம், அவர்களுக்கு மூலமான ரிஷிகளின் பெயர்க ளைப் பகருவர். நவக்கிரகங்களின் பெயர்களையும் மொழிவர். திசைகள், “கை தொழு எழுவர்” என்று சங்க நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களை  வழிபடுவர்.

 

கிருஷ்ணரும் அர்ஜுனரும் பழங்குடி மக்கள் ( கோண்டுகள் – கோண்ட்வானா லாண்ட்= காண்டவ வனக் காட்டு மக்கள்) வாழும் காண்டவ இனக் காடுகளை அழித்தபோது, நாகர்களுக்கும், பாண்டவர்களுக்கும் மிகப்பெரிய பகைமை மூண்டது. அதற்கு சமாதனம் செய்ய ஜரத்காரு, ஆஸ்தீகர் ஆகியோர் வந்தனர். நர்மதை நதிக்கரையில் ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகம் (நாகர் படுகொலை) நிறுத்தப்பட்டது. பரீக்ஷித் மஹாராஜன் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இது நடத்தப்பட்டது. அப்பொழுது மயன் தலைமையில் சென்ற ஒரு குழு தென் அமெரிக்காவில் மாயன் (MAYAN)  நாகரீகத்தை நிறுவியது; ( எனது பழைய ஆய்வுக் கட்டுரையில் முழு விவரம் காண்க) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவமும் பிராமணர்களின் சந்தியா வந்தனத்தில் இடம் பெறுகிறது.

நான் லண்டன் மாநகரில் தேம்ஸ் நதி தீரத்தில் தினமும் இரு முறை  மட்டுமே சந்தியா  வந்தனம் செய்கிறேன். மதிய வேளைகளில் வெளியே இருப்பதால் செய்ய இயலவில்லை. ஒருநாள், நாம் எவ்வளவு பெயர்களை இதில் சொல்கிறோம் என்று கூட்டல், கழித்தல் கணக்குப் போட்ட போதுதான் 100 பேருக்கும் மேலாக வந்தது தெரிந்தது. அதுவும் தொல்காப்பியர் சொல்லும் கடவுளர் பெயர்கள் அதில் இருப்பதும், உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் சொல்லும் காயத்ரி மந்திரம் அதில் இருப்பதும் வியப்பை ஏற்படுத்தியது. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதி நதி தீரத்தில் நம்மவர் செய்த ஒரு சடங்கை இன்று வரை கடைப்பிடிப்பதால் என்னை நானே படிம அச்சு (FOSSIL) — பழங்காலச் சுவடு– என்று நினைத்து பெருமை அடைந்தேன்.

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் “பிராமணர்  இல்லையேல் தமிழ் இல்லை” (No Brahmins, No Tamil) என்று சங்க காலம் பற்றி ஒரு கட்டுரையும், பிராமணர்களை கின்னஸ் நூல் சாதனைப் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என்று ஒன்பது கட்டுரைகளையும் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக இதையும் படிக்க வேண்டுகிறேன்.

 

சிலர் நர்மதை நதி பற்றிய மந்திரம் சொல்லுவதில்லை; வடக்கத்தியர் நகக்கிரஹ தர்ப்பணம் செய்வதில்லை. ஆகாயால்தான் கூட்டல் கழித்தலுக்குப் பின்னர் நூற்றுக்கு மேலான பெயர்கள் என்று சொன்னேன். யமனுக்கு மட்டுமே பத்து பெயர்கள் வரை சொல்லுகிறோம்.

 

சந்தியாவந்தனம் பற்றிய இன்னொரு வியப்பான செய்தி– காயத்ரி தேவியை  “உன்னுடைய மலை உச்சியில் உள்ள வீட்டுக்குப் போகலாம்” என்று விடை கொடுத்து அனுப்புகிறோம். இந்த “சிகர” என்ற வார்த்தையை (ZIGGURAT) ஜிக்குராட் என்று அழைத்தனர். சுமேரியர்களும் மலை உச்சியில் தெய்வத்தை வைத்தனர். ஆனால் அது எல்லாம் மியூசியங்களுக்குப் போய்விட்டன. மோசசும் ஜீசசும் தோன்றும் முன்னர் துவங்கிய சந்தியா வந்தனத்தைச் செய்யும் பிராமணர் ஒவ்வொருவரும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறத் தகுதி உடையவர்களே.

 

தினமும் மூன்று முறை சந்தியா வந்தனம் செய்யும் பிராமணனைக் கண்டால் ஒரு பெரிய கும்பிடும் போடுங்கள்.

நிற்க; இதோ பிராமணர் சொல்லும் தெய்வங்கள், புனிதர்களின் பட்டியல்:-

ஓம், அச்யுதா, அனந்தா, கோவிந்தா, விஷ்ணுவின் 12 பெயர்கள்- கேசவா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு. மது சூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ச்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா,

கணேச தியானம், (ஆதி சைவர்களாக இருந்தால் சில மாறுபாடுகள் உண்டு)

 

ஏழு லோகங்கள்- பூர், புவ, சுவர், மஹ, ஜன, தபோ, சத்ய லோகங்கள்

காயத்ரீ மந்திரம் பல இடங்களில் வருகிறது

பரமேஸ்வர (ப்ரீத்யர்த்தம்); வைணவர்கள் வேறு பெயர் சொல்லுவர்.

ஆப: (நீர்), சூர்யன், அக்னி,

பிரம்மன் (பிரும்மா அல்ல), நவக்கிரஹங்கள்- சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், ப்ருஹஸ்பதி, சுக்ர, சனைச்சர, ராஹு ,கேது

பிரம்மா, பரமாத்மா,

சப்த ரிஷிகள்: அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட,கௌதம, காஸ்யப, ஆங்கிரஸ்

 

யாப்பிலக்கண அணி: காயத்ரீ, உஷ்னிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதி

ஏழு வேத காலக் கடவுளர்: அக்னி, வாயு, அர்க, வாகீச, வருண, இந்திர, விச்வே தேவா, தேவதா:

 

வாமதேவ ரிஷி, காயத்ரீ, சாவித்ரீ, ஸரஸ்வதீ, விச்வாமித்ர ரிஷி

அபிவாதயே என்னும் மந்திரத்தில் ஒருவருடைய கோத்ரம், ரிஷிகளின் பெயர்கள் வரும். எடுத்துக் காட்டாக எனது குலத்தில், வைஸ்வாமித்ர, அகமர்ஷண, கௌசிக, ஆபஸ்தம்ப, ஸ்வாமிநாத: (My name)

 

சந்தியா, சாவித்ரி, காயத்ரீ, சரஸ்வதி, சர்வ தேவதா:

(சில பெயர்கள் திரும்பத் திரும்ப வரும்; கூட்டல் கழித்தலுக்குப் பின்னரும் 100 பெயர்களுக்கு மேல்!)

 

4 திசைகள் – கிழக்கு, தெற்கு, மேற்கு வடக்கு திசைகளுக்கு வந்தனம்

மேல், கீழ், இடைவெளி,பூமி, ம்ருத்யவே,

யமன்

 

(யமன், வருணன், சூரியன், காயத்ரீ முதலிய தெய்வங்களுக்கு பத்து, பதினைந்து சிறப்புப் பெயர்கள் வரும். அவைகளையும் சேர்த்தால் 150 பெயர்கள் வரை செல்லும்)

 

எடுத்து க்காட்டாக யமன் பற்றிய பெயர்களை மட்டும் தருகிறேன்:

யமன், தரமராஜன்,ம்ருத்யவே, அந்தகாய, வைவஸ்தாய, காலாய, சர்வபூதக்ஷயாய, ஔதும்பராய, தத்னாய, நீலாய, பரமேஷ்டினே, வ்ருகோதராய, சித்ராய, சித்ரகுப்தாய.

 

பின்னர் க்ருஷ்ண பிங்களம் ( சங்கர நராயணன்= ஹரிஹரன்)

 

நர்மதை நதிக்கு வணக்கம்- ஜனமேஜய, ஆஸ்தீக மகரிஷி- ஜரத்காரு- பன்னகேப்ய:-

சூரியன் பற்றிய நீண்ட மந்திரம்

நாராயணனுக்கு எல்லாம் சமர்ப்பணம்

 

சவித்ரு தேவன்

ஓம் தத் சத்

90 பெயர்களுக்கு மேல் வரும் தெய்வங்களோடு யமன் பற்றி வரும் 13 பெயர்கள் மற்றும் இது போல ஒவ்வொரு மந்திரத்திலும் வரும் பெயர்களைச் சேர்த்தால் 150 பேருக்கும் மேலாக வரும்!

 

வாழ்க பிராமணர்! வளர்க சந்தியாவந்தனம்!!

 

Please read my old articles:-

Brahmins deserve an entry in to Guinness Book of Records …

tamilandvedas.com/2012/01/26/327

Brahmins deserve an entry in to Guinness Book of … That is why I say Brahmins deserve a mention in the Book of Records. 32. … by Tamil and Vedas on January 26, …

Brahmins deserve an entry in to Guinness Book of Records -Part 5

  • Brahmins | Tamil and Vedas
  • tamilandvedas.com/category/brahmins
  • … Asoka mentioned Brahmins first and … //tamilandvedas.com/2017/05/30/about-brahmins-buddha-and … “Brahmins deserve an entry in to Guinness Book of …

·         No Brahmins, No Tamil!! | Tamil and Vedas

tamilandvedas.com/2012/01/14/no-brahmins-no-tamil

No Brahmins, No Tamil!! … political parties in Tamil Nadu has misled the public to a great extent that they really believed Brahmins were aliens to Tamil culture.

·         No Brahmins, No Tamil!! | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2012/01/no-brahmins-no-tamil.html

No Brahmins, No Tamil!! By S Swaminathan … literature would find out that without Brahmins Tamilwould have died or at least become poorer two thousand years ago.

–SUBHAM—

 

TAGS: பிராமணன், அதிசயம், சந்தியவந்தனம், 100 கடவுள்

 

 

பூமிக்கு பாரம் யார்? வேதப் பிரான்பட்டர் பதில் (Post No.4274)

Written by London Swaminathan

 

Date: 5 October 2017

 

Time uploaded in London- 17-45

am

 

Post No. 4274

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பூமிக்குப் பாரம் யார்? இந்த பூமி சுமப்பதே வீண் என்று யாரைச் சொல்லலாம்?

 

5X 5 + 5 தெரியாதோர் இந்த உலகில் வாழ்வதே  பிரச்சினைதான்!

 

இது என்ன பிரமாதம்? விடை முப்பது 5X5+5=30!

 

வேதப் பிரான் பட்டர் சொல்லும் 30 அதுவல்ல.

வையம் புகழும் பாவைப் பாடல் முப்பதை அவர்  குறிப்பிடுகிறார்.

 

திருப்பாவை தெரியாதோரை இந்த பூமி சுமப்பதே வீண்.

 

இதைச் சொல்வதையும் அழகாகப் பாடல் வடிவில் பகர்வார்

 

பாதகங்கள் தீர்க்கும்

பரமன் அடிகாட்டும்

வேதமனைத்துக்கும்

வித்தாகும்- கோதைத் தமிழ்

ஐயைந்து மைந்தும்

அறியாத மானிடரை

வையம் சுமப்பதூஉம் வம்பு!

 

–வேதப் பிரான் பட்டர், ஆண்டாள் வாழித் திருநாமம்

வம்பு

ஆனந்த விகடன் அகராதி (1937-ம் ஆண்டு) தரும் பொருள்:-

கயிறு, அசப்பியம் ( சபைக்கு அடாத சொல்), சண்டை, தீச் செயல், தீச் சொல், நிலையின்மை, புதுமை, மிடா (பானை), முலைக் கச்சு, வாசனை, வீம்பு.

xxxx

கிரியா அகராதி தரும் அர்த்தம்:–

Unnecessary trouble; issue leading to quarrel; gossip

 

 

சுமப்பது என்ற வினைச் சொல்லை பொறுக்கி எடுத்திருப்பது ஆழந்த சிந்தனைக்குரியது. ‘கழுதை பொதி சுமக்கும்’ என்று சொல்லுவோம். அது போல பாரம்தான் திருப்பாவை தெரியாத, படியாத, கேளாத அறிவிலிகள்!

 

அடுத்த படியாக ‘வம்பு’ என்ற சொல். இதற்குப் பல பொருள் உண்டு.

நான் யார் தெரியுமா?

‘வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன்; வந்த சண்டையை விட மாட்டேன்’ என்று வீராப்பு பேசுவோம்.

 

‘அவள் ஊர் வம்புக்குக் கிடந்து அலைகிறாள்’ என்று சிலர் மீது புகார் சொல்வோம்.

 

‘வேண்டாத வம்பை விலை கொடுத்து வாங்காதே’ என்றும் கேட்டிருப்போம்.

வேதப் பிரான் சொல்லும் ‘வம்பு’ எதுவோ?

ஊர் வம்பு பேசும் வெட்டிக் கும்பலில் ஒருவர்; சபைக்கு ஏற்றதல்லாத சொற்களைப் பேசும் ஆட்களில் ஒருவர் என்று சொல்லுவதே சாலப் பொருத்தம்.

 

ஆக திருப்பாவை என்பதும் ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழி என்பதும் (143 பாடல்கள் ) பெண் இனத்துக்கே பெருமை சேர்ப்பதாகும். 1400 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு TEENAGE GIRL –டீன்  ஏஜ் கேர்ல்– பெண்– இப்படி ஊர்ப் பெண்களை (gossip) வம்பு பேசவிடாமல்- திருமாலின் பெருமைதனைப் பேச அழைத்திருப்பது அதிசயம்தானே. இவருக்கும் முன்னால் காரைக்கால் அம்மையாரைக் காண்கிறோம், மங்கையற்கரசியைக் காண்கிறோம், சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருபது பெண் புலவர்களைக் காண்கிறோம்; அவர்களில் மாமணியாக விளங்கும் அவ்வையாரையும் அறிவோம். ஆனால் ஆண்டாள் போல இளம் வயதும் இல்லை; கோழி கூவுவதற்கு முன்னால் ஊர்மக்களை, பெருமாளின் பெருமையைச் சொல்லி அழைத்த ஆண்டாளின் திருப்பாவை 5X 5 +5 = 30 அறியாதோர் பூமிக்கு வம்பு, பாரம், குப்பை!

 

நாமும் ஆண்டாள் பெருமையைப் பாடுவோம்:–

 

திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!

பெரும்புதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!

 

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!

மரு ஆரும் திருமல்லி, வள நாடி வாழியே!

வண் புதுவை, நகர்க் கோதை, மலர்ப் பதங்கள் வாழியே!!!

 

 

 

–SUBHAM—

இந்துக்களின் நரபலி யக்ஞம்! 179 பேர் ‘படுகொலை’? (Post No.4270)

Written by London Swaminathan

 

Date: 4 October 2017

 

Time uploaded in London- 11-07 am

 

Post No. 4270

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

உலகில் ரிக் வேதத்தை அலசி ஆராய்ந்தது போல வேறு எந்த மத நூலையும் எந்த வெள்ளைக்காரர்களும் மார்கஸீய வாந்திகளும் ஆராய வில்லை. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி! இவர்கள் எல்லா சமய நூல்களையும் இப்படி அணுகி இருந்தால் இவர்கள் ‘யோக்கியர்’கள். ஆனால் மற்ற சமய நூல்களில் சொன்னவற்றை நியாயப்படுத்தி எழுதினார்கள் (குத்து, வெட்டு, கொலை செய், கற்பழி) அவைகளைக் குறைகூறவில்லை. சுமார் 50 வெள்ளைத் தோல்களும் , நூற்றுக்  கணக்கான மார்கஸீய வாந்திகளும் இந்திய வரலாறு பற்றி எழுதியதை இன்றுவரை பாட புத்தகத்தில் வைத்துள்ளனர். நான் மதுரை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சரித்திரப் பட்டம் வாங்கியவன். ஆனால் காஞ்சி பரமாசார்ய சுவமிகளின் உபந்யாசங்களில் உள்ள சரித்திரம் எதுவும் அதில் இல்லை. மார்கஸீய, காங்கிரஸ் தில்லுமுல்லுகள் எழுதிய — வெள்ளைக்கார்கள் எழுதிய —-டல்ஹௌசி பிரபுவின் சீர்திருத்தம், ‘ரிப்பன் எங்கள் அப்பன்’ என்று போற்றுவது ஏன்? என்று பல பாடங்களைப் படித்துதான் பட்டம் வாங்கினேன்.

ஆனால் 70 வருடங்களுக்கு முன் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் பேசிய உரைதனில் பேசிய போர்னியோவின் அடர்ந்த காட்டுக்குள் மூல வர்மனின் நாலாவது நூற்றாண்டுக் கல்வெட்டு கண்டு  பிடிக்கப்பட்டதும், துருக்கியில் கி.மு 1380 ஆண்டு வேத கால தெய்வக் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டதும் எந்த சரித்திரப் புத்தகத்திலும் இல்லை. மத் தியப்பிரதேசத்தில் தாரா என்னும் இடத்தில் மசூதிக்குள் சம்ஸ்கிருத இலக்கணக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதெல்லாம் அவர்களுடைய சொற்பொழிவு மூலம் அறிந்ததே!

 

அயோக்கியர் எழுதிய வரலாற்றை விட்டு விட்டு வெள்ளைத் தோல் எழுதியவற்றுக்கு வருவோம். வேத கால இலக்கியங்களை சுமார் 50 வெள்ளையர்கள்– இல்லை இல்லை கொள்ளையர்கள்—- ஆராய்ந்து பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன், லத்தீன் மொழிகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் நூற்றுக் கணக்கான நூல்களையும் எழுதிக் குவித்துள்ளனர். அவைகள் ஆங்கிலத்தில் உள்ளதால் அவை எல்லாம் பெரிய ஆராய்ச்சி நூல்கள் என்று அக்காலத்தவர் கருதினர் (ஆனால் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்; அவைதான் எனக்கும் பயன்படுகின்றன! அவற்றைப் படித்தபின்னர் அவர்களே அவர்களை முட்டாள் என்று காட்டிவிட்டனர் என்பதாவது எனக்குத் தெரிந்தது)

 

வேதங்கள் நான்கு: ரிக், யஜூர், சாமம், அதர்வணம்.

அவற்றை அடுத்து வந்தவை பிராமணங்கள் எனப்படும் உரைநடை இலக்கியம். இவை பிரம்மாண்ட அளவில் இருக்கின்றன. அப்போது மோசஸ் பிறக்கவில்லை . இதுவரை மோஸசுக்கு வரலாற்று ஆதாரம் தொல்பொருட்துறை ஆதாரம் கிடைக்கவில்லை ஆனால் அவர்தான் மூன்று மதங்களுக்குத் தலைவர்!!!

 

வெள்ளைக்கார  “யோக்கியர்” இதை எல்லாம் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள். விக்கிபீடியாவைப் படித்து நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்மூர் திராவிட தத்துப் பித்துகளுக்கும் “கெக்கெப் பிக்கே”க்களுக்கும் இது புரியாது. அவ்வளவு மூளை!!!!

பிராமண்ட பிராமண நூல்களை அடுத்து வந்தவை ஆரண்யகங்கள் ( காட்டு நூல்கள்) அவற்றை அடுத்து வந்தவை உலகப் புகழ் பெற்ற உன்னத உபநிஷத்துகள்.

 

சம்ஸ்கிருத இலக்கியத்துக்கு வரலாற்று, தொல்பொருட்டுறை ஆதாரங்கள் இருக்கின்றன; கி.மு 1400 முதல்; சரஸ்வதி நதியின் விஞ்ஞானச் செய்திகள், வேதங்களை கி.மு 2000க்கு முந்தியவை என்று காட்டிவிட்டன. சுருங்கச் சொன்னால் வேதங்களோ பிராமணங்களோ தோன்றிய காலத்தே  உலகில் தமிழ் மொழி இல்லை, கிரேக்க மொழி இல்லை, லத்தீன் மொழி இல்லை; கொஞ்சம் சீன மொழியும், ஹீப்ரூ /எபிரேய மொழியும் இருந்தன. மற்ற மொழிகள் இன்று மியூசியங்களில் உள்ளன.

 

ஆக இவ்வளவு பழமையான பிராமண இலக்கியங்களில் என்சைக்ளோபீடியா போல பல விஷயங்கள் உள்ளன அவற்றின் சப்ஜெட்களை- பொருளடக்கம், இன்டெக்ஸ் போட்டாலே அவர்கள் பிரஸ்தாபிக்கும் விஷயங்களின் பட்டியல் கிடைத்துவிடும்! கணிதம், வான சாத்திரம், அரசனின் பட்டாபிஷேகம் முதலியன குறித்து அவர்கள் சிலாகிக்கும் விஷயங்களைக் கண்டால், வெள்ளைக்காரன் எழுதியது எல்லாம் நல்ல ஜோக் புக்ஸ் JOKE BOOKS என்று நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்; பசுமரத்தாணி போலப் பதியும்.

 

179 பேர் படுகொலை! நரபலி!!

பிராமண நூல்களில் அஸ்வமேத யாகம், ராஜ சூய யாகம், புருஷமேத யாகம் குறித்துப் படித்த வெள்ளைக் காரர் களுக்கு ஒரே குஷி; மாக்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானிய கூலிகள், இது என்னத் தத்துப் பித்து உளறல் என்று பரிகசித்தனர். இதை வைத்தே இந்துமதத்தை கோழிகளைக் கூடைக்குள் அமுக்குவது போல ஒரே அமுக்காக அமுக்கிவிடுகிறேன் பார் என்று கொக்கரித்தார்கள்; மெக்காலே போன்றோர் இந்த வேகத்தில் ஆங்கில கல்வி பரவினால் இந்தியாவும் இராது; இந்துமதமும் இராது என்று எழுத்தில் வடித்தனர். நம்மூர் திராவிடங்களும் ஜஸ்டிஸ் கட்சிகளும் பலமாக மண்டையை ஆட்டின.பரிதபக் கேஸுகள்!!!

 

சோழன் பெருநற்கிள்ளி ராஜசூய யக்ஞம் செய்தது புற நானூற்றில் உள்ளது. பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி அஸ்வமேத யாகம் செய்தது புறநானூற்றிலும் காளிதாசனின் ரகுவம்சத்திலும் — குறிப்பால் உணர்த்தப்படுகிறது. சோழப் பேரசன் கரிகால் பெருவளத்தான் பருந்து வடிவ யாக குண்டம் நிறுவி வேள்வி வேட்டதும், ரிக் வேதம் சொல்லுவது போல எல்லோரையும் ஏழு அடி நடந்து வழியனுப்பியதையும் புற நானூறும் ஏனைய சங்க நூல்களும் செப்புகின்றன. வருணனையும், இந்திரனையும், விஷ்ணுவையும் தமிழ்க்கடவுள்கள் என்று ‘ஒல்காப்புகழ் தொல்காப்பிய’னும் செப்பி விட்டான். இந்த 2000 ஆண்டுக்கு முந்தைய விஷயங்கள் வெள்ளைக்காரர்

களுக்குத் தெரியாது!

 

கால்டுவெல் போன்றோர் உளறிய உளறல்களை மரத் (மறத்) தமிழர்கள் ஆங்காங்கே மறுத்து அடிக்குறிப்பு சேர்த்தனர்.

 

பிராமண நூல்களில் சதபத, ஐதரேய , தைத்ரீய பிராமணங்கள் யாக யக்ஞ்ங்களை விரிவாக எடுத்துரைக்கின்றன. அதில் தைத்ரீய பிராமணம் யஜூர் வேதத்தைச் சேர்ந்தது. அதில் புருஷமேத யக்ஞம் எனப்படும் நரபலி யக்ஞத்தில் 179 பேர் தீயில் ஆகுதி அளிக்கப்பட்டதாக பட்டியல் உள்ளது அதைப் அடித்த வெள்ளைகளுக்கு ஒரே ஆனந்தம்! இந்துக்களைக் காட்டுமிராண்டிகள் என்று காட்ட இது ஒன்று போதுமே என்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஆனால் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் குட்டு வெளிப்பட்டுவிடும்!

 

மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்ற அரை வேக்காடுகள்– மான் தோல் போர்த்திய புலிகள்  — சாயனர் சொன்ன வியாக்கியானத்தைச் சொல்வதாக சொல்லி — அவர் சொல்லாத விஷயத்தையும் சேர்த்தனர்-

 

 

‘ஆரிய’ என்ற சொல்லின் பொருளை ‘ரிஷி முனிவர்கள்’, ‘வடக்கில் இமயத்தின் அடிவாரத்தில் வாழ்பவர்கள்’- ‘சம்ஸ்கிருத மந்திரங்களில் வல்லவர்கள்’- ‘பண்பாடு மிக்கவர்கள்’- ‘நாகரீகம் தெரிந்தவர்கள்’- ‘மாண்புமிகு’– என்ற உண்மைப் பொருளைப் பாரதி பாடல்களிலும் புற நானுற்றிலும் காணலாம்– மாக்ஸ்முலர் வகையறாக்கள் ஆரியர் என்பது ஒரு இனம் என்றும் அதில் தானும் ஒருவன் என்றும்- அவர்கள் ஜெர்மனி முதலிய இடங்களில் வாழ்ந்தனர் என்றும் இந்தியாவுக்குள் கி.மு 1500 வாக்கில் நுழைந்திருக்கலாம் என்றும் கதை கட்டினர். இவை எல்லாமின்று ‘பொய்யாய்ப் பழங்கதையாய்ப்’ போய்விட்டன.

 

ஏனெனில் சரஸ்வதி நதியின் விஞ்ஞான ஆராய்ச்சியும் நாஸா NASA புகைப்படங்களும் வெள்ளைத் தோலை உரித்துவிட்டன.

பிராமண நூல்களில் புருஷமேத யக்ஞத்தில் பலியிடப்பட்ட, அல்லது பலியிடப்பட வேண்டிய 179 பேரின் பட்டியல் உள்ளது. எனது ஆங்கிலக் கட்டுரையில் — மூன்று கட்டுரைகளில் – 179 பேரின் பட்டியலையும் கொடுத்துவிட்டதால் இங்கே தரப்போவதில்லை..

 

அதிலிருந்து நமக்குத் தெரியவரும் உண்மைகளை மட்டும் விண்டுரைப்பேன்!

 

1.தீயில் தூக்கிப் போட வேண்டிய முதல் ஆள் பிராமணன் என்று பட்டியல்  துவங்குகிறது. இதைப் படித்தவுடன் வெள்ளைத்தோல்களுக்கு உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது. சூத்திரன், ராக்ஷசன், அசுரன் என்று சொல்லி இருந்தால் , பார்த்தீர்களா பிராமணர்களின் அட்டூழியங்களை என்று எழுத முடியும்.

2.இதற்குப் பின்னர் போர் வீரன், வணிகப் பெருமகன், சூத்திரன் ஆகியோர் வருகின்றனர்.

 

  1. இந்தப் பட்டியல் மறை மொழியில் உள்ளது. அதாவது ஒரு சமுதாயம் என்பது இவர்கள் இல் லாமல் இல்லை என்று உணர்த்த எழுதப்பட்டது போல உளது. காரணம் என்னவெனில் இப்படி ஒரு யாகம் நடந்ததாக எங்குமே தகவல் இல்லை. பல நூறு ராஜாக்களில் ஒருவரான ஹரிசந்திரன் காலத்தில் சுனஸ்சேபனைப் பலிகொடுக்க முயன்றபோது புரட்சித்தலைவர் விசுவாமித்ரர் தடுத்துவிட்டதாத இருக்கிறது. சிறுத்தொண்டர் (பெரிய புராண) ஆதி சங்கர நரபலி முயற்சிகளும் காபாலிகர்களால் முயலப்பட்டதே அன்றி புருஷ மேத யக்ஞத்தின் பகுதியாகாது. மேலும் சங்கரர், சிறுத்தொண்டர் கதைகளும் தமிழ்த் திரைப்படங்கள் போல இனிதே- சுபம் – என்றே முழுமை பெறுகின்றன.

 

  1. 179 பேர் பட்டியலில் பல சொற்களுக்கு வெள்ளைகளுக்கே அர்த்தம் புரியவில்லை; விளக்கம் இன்றி அப்படியே எழுதிவிட்டனர்.

 

  1. இந்தப்படியலில் டாக்டர், வான சாத்திர அறிஞன், பொற்கொல்லன் ரதகாரன், கொல்லன், இசை துறை கலைஞர்கள், நாட்டிய சிகாமணிகள், இசைக்கருவி வாசிப்போர், மன்னருக்கு வரிவசூல் செய்வோர், மன்னருக்குப் பட்டாபிஷேகம் செய்வோர் ஆகியோரும் உள்ளது. அதாவது, இவர்கள் ஒவ்வொருவராக தீயில் போடப்பட வேண்டும்

 

ஆக இந்தப் பட்டியலை இலக்கிய பூர்வமாக, எழுத்துக்கு எழுத்து அர்த்தம் செய்ய முடியாது என்று கண்ட வெள்ளைகளும்  மார்கஸீய வாந்திகளும் பேசாமடந்தை ஆகிவிட்டன. இதைப் பற்றி பிரஸ்தாப்பிபதைவிட இதை தொட்டும் தொடாமலும் பட்டும் படாம லும் சொல்லிவீட்டு அந்தக் காலத்தில் — ஆதிகாலத்தில் — இருந்த நரபலியின் எச்சம் -சொச்சம்- மிச்சம்- மீதி என்று ஒரு வரி எழுதி விட்டு ஓடிப்போய் விட்டார்கள்

 

வெடிகுண்டு வெடிக்கலாம் என்று வந்த பயங்கரவாதிகளுக்கு புஸ்வாணமே கிடைத்தது!!!!!

 

  1. இதைவிட இன்னொரு விஷயம் என்னவென்றால் 50 வெள்ளைகளும் 100 மார்கஸீயங்களும் 1000 திராவிடங்களும் ஒரு மந்திரக் கருத்திலும் ஒருமித்த கருத்து கொள்ளவில்லை. ஆரியர் கள் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று மட்டும் சொன்னால் போதும்– காட்டினால் போதும்– 300 வருஷம் நம்மை ஆண்ட வெள் ளையன் தயவும் ரொட்டித் துண்டும் கிடைக்கும் என்று வா லாட்டின.

7. இதைவிடப் பெரிய விசயம் என்ன வென்றால், கி,மு.1200ல் படிப்பறிவற்ற –மாடு மேய்க்கும்—அநாகரீகக் கும்பல் கைபர் கணவாய் வழியாக நுழைந்தது என்று சொல்லிவிட்டு- கிமு. 1000ல் அவர்கள் பிராமணங்களில் சொன்ன விஷயங்களைப் பட்டியல் போடுவது – “சூடான ஐஸ்க்ரீம்” என்று சொல்லுவது போல இருந்தது. உலகில் எந்த நாகரீகமும் இப்படி வளர்ந்ததாக சாட்சியம் இல்லை. நாம் சுமேரிய, எகிப்திய நாகரீகம் பற்றிப் படிப்பதெல்லாம் 5000 ஆண்டு வரலாறு. ஆக அதே அளவுகோலை இந்துக்களுக்கும் வைத்தால் நாம் 10,000 ஆண்டு வரலாறு உடையவர் ஆகி விடுவோம். அது எப்படி?

பிரம்மாண்டமான வேத இலக்கியமும் பிராமணங்களும் உருவான போது உலகில் வேறு எந்த இலக்கியமுமே இல்லை. எகிப்திய, பாபிலோனிய இலக்கியம் எல்லாம் மியூசியங்களுக்குப் போய்விட்டன. ஆனால் ரிக்வேதச் சொற்களை, கொட்டாம் பட்டி காய்கறிக்கூடைக் கிழவி முதல் இமயமலை ரிஷிகேஷ் பண்டிதர்வரை இன்று வரைப் பேசி வருகின்றனர்; போற்றி வருகின்றனர். நமக்குத் தெரிந்த தமிழ், லத்தீன், கிரேக்கம் ஆகியவற்றுக்கு அப்போது இலக்கியமே இல்லை. ஹீப்ருவீல் அதற்குப் பின்னர்தான் மோசஸ் கதைக்கத் துவங்கினார். அவருக்கும் வரலாற்று ஆதாரம் இல்லை. இலக்கிய ஆதாரம் மட்டுமே உளது. சீன மொழிக் கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உளது. அழிந்து போன எகிப்திய, பாபிலோனிய  கவெட்டுகளும் ஜில்காமேஷ் போன்ற பிதற்றல்களும் உப்பு புளி எண்ணை விற்ற கணக்குகளுமாக உளது. 1,20,000 களிமண் கல்வெட்டுகள் கிடைத்தன. ஆயினும் ரிக்வேதம் போல ஒரு கவிதைத் தொகுப்பு கிடையாது. நாமோ அதை வியாசர் கி.மு 3102-க்கு முன் தொகுத்ததாகப் படிக்கிறோம்.

 

ஆக, நரபலி யாகம் நடக்கவில்லை. அதில் பிராமணன் முதலான 179 பேரைத் தீக்கிரையாக்கவும் இல்லை. அவர்கள் வேள்வி என்று சொன்ன சொல் பிறகாலத்தில் பகவத் கீதையில் வேள்வி என்ற சொல் பல விஷயங்களுடன் இணைக்கப்பட்டது போலப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.

 

நானே வெள்ளைக்கரன் மொழிபெயர்ப்பை வைத்துதான் இவ்வளவையும் எழுதுகிறேன். அவன் எத்தனை தப்பு விட்டானோ? திரித்து எழுதினானோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இந்து அறிஞர்கள் மஹா நாடு கூட்டி ரிக் வேதத்தில் உள்ள 10,000 மதிரங்களுக்கும் உண்மைப் பொருளைக் கண்டறிய வேண்டும் அல்லது கான்சி பரமாசார்ய சுவாமிகள் போன்ற பெரியோர்கள் சொல்லுவது போல அவைகளை அர்த்தம் பாராமல் மந்திரங்களாக உச்சரிக்க வேண்டும். எதிர்காலத்தில் வரப்போகும் ஆதிசங்கரர்களும் வியாச மகரிஷிகளும் நமக்கு விளக்கம் தருவர் என்று நம்புவோமாக.

 

TAGS: இந்து, நரபலி, யக்ஞம், புருஷமேதம், 179 பேர் படுகொலை

 

-சுபம்—

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 4 (Post No.4269)

Written by S.NAGARAJAN

 

 

Date: 4 October 2017

 

Time uploaded in London- 6-16 am

 

Post No. 4269

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 4

ச.நாகராஜன்

6

 

லார்ட் மெக்காலேயின் முழுப் பெயர் தாமஸ் ஜேம்ஸ் பாபிங்டன் மெக்காலே.

மெக்காலே பிறந்த தேதி 25-10-1800

மாரடைப்பால் இறந்த தேதி 28-12-1859

1834ஆம் ஆண்டு சுப்ரீம் கவுன்ஸில் ஆஃப் இந்தியாவின் துவக்க உறுப்பினராக அவர் ஆக்கப்பட்டார்.

அடுத்து 1834ஆம் ஆண்டிலிருந்து 1838ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார்.

இநதியாவில் உள்ளவர்கள் நாகரீகமற்ற ஜடங்கள் என்றும். விக்கிரக ஆராதனை செய்பவர்கள் நிச்சயம் திருத்தப்பட வேண்டிய ஜென்மங்கள் – காட்டுமிராண்டிகள்-  என்றும் அவர் தீர்மானமான எண்ணம் கொண்டார்.

இதற்கான ஒரே வழி ஆங்கிலக் கல்வியை இங்கு அறிமுகப்படுத்தி இந்திய இரத்தமாக இருந்தாலும், கறுப்புக் கலருடன் இருந்தாலும் எண்ணத்தில் சுத்தமான ஆங்கில டேஸ்டையும் அறிவையும், பழக்க வழக்கங்களையும் இந்தியர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தார்.

இந்த அறிவீ னமான கொள்கையைத் தான்  மெக்காலே கொள்கை என்கிறோம்.

இதற்குப் பலியாகி இதை ஆமோதித்தோர் பிரிட்டனில் இருந்த ஏராளமானோர்.

மாக்ஸ்முல்லரும் இந்தக் கொள்கையில் விழுந்தவரே!

அனைத்து இந்தியரும் கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு எப்படியாவது உடனடியாக இந்தியாவை கிறிஸ்தவ நாடாக்கி விட வேண்டும் என்பதே மெக்காலேக்களின் ( மெக்காலே கொள்கையைக் கொண்டோர்) ஒரே எண்ணமாக இருந்தது.

இதற்கான வழி வகைகளை முழு வீ ச்சுடன ஆராய்ந்து அமுல் படுத்தினர் பாதிரிமார்கள்.

இந்த நிலையில் தான் மாக்ஸ்முல்லர் லண்டன் வந்தார்.

7

 

மிஷனரிகளுக்கு பிரமாதமான வேலை இந்தியாவில் காத்திருந்தது.

முப்பது கோடிப் பேர்கள்.

அவர்கள் 56 தேசங்களாகப் பழைய பாரதத்தில் இருந்து இப்போது ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாக ஆகி இருக்கின்றனர்.

பல்வேறு  மொழிகள்.

ஆகவே

  • ஐநூறுக்கும் மேற்பட்ட சம்ஸ்தானங்களை மேலும் பிளவு படுத்த வேண்டும்.
  • இருக்கின்ற உள்ளூர் மொழிகளை வைத்து எவ்வளவு பிரச்சினையையும் பிரிவினையையும் உருவாக்க முடியுமோ அவ்வளவையும் உருவாக்க வேண்டும்.
  • அனைவரையும் ஒன்று படுத்தும் ஆதார மொழியான சம்ஸ்கிருத்த்தை அழிக்க வேண்டும்; அது ஒன்றுமில்லாத மொழி என்று திட்டமிட்டு “ஆதாரபூர்வமாக அறிஞர்களின் பின்னணியில் ஆய்ந்து” முடிவை வெளியிட்டு சொந்த மக்களே அதை எள்ளி நகையாட வேண்டும்.
  • ஆரியர்கள் படையெடுத்ததால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.திராவிடர்கள் வேறு இனம். அவர்கள் ஆரியர்களால் தெற்கே துரத்தப்பட்டவர்கள் என்று ஓங்கி முழங்கி அதை ஆதரிக்கும் ஒரு கைக்கூலிப் படையை உருவாக்க வேண்டும்.
  • ஆங்கிலத்தைப் புகுத்தி அதைப் பேசுவோருக்கு உயர் பதவி அந்தஸ்து தரப்படல் வேண்டும். அவர்கள் ஆங்கில ஜாதி – அதாவது மேம்பட்ட ஜாதி என்ப்தை கணம் தோறும் வாழ்க்கை முறையில் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
  • .சொந்த கலாசாரத்தைப் பின்பற்றுவோர் கல் தோன்றிய காலத்தில் இருந்த காட்டுமிராண்டிகள்; அவர்களின் இராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் உள்ளிட்டவை சுத்த புளுகு மூட்டைகள் என்ற பிரச்சாரம் பலப்படுத்தப்பட வேண்டும்.
  • வேத மந்திரங்கள் அர்த்தம் இல்லாதவை; சிறுபிள்ளைத்தனமானவை என்று அடிக்கடி திருப்பித் திருப்பி “அறிஞர்களால்” சொல்லப்பட வேண்டும்.
  • ஹிந்துக்களை ஜாதி வாரியாகப் பிரித்து சண்டையிடச் செய்ய வேண்டும்.
  • தீண்டாதார் என்று ஒரு கோஷ்டியை இனம் காட்டி ஒட்டு மொத்தமாக அவர்களை ஹிந்து மதத்திலிருந்து பிரிக்க வேண்டும்.

10 ) ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தீராத தொடர் பகையை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் உருவாக்கி அதை நீடித்து வளரச் செய்ய வேண்டும்.

  • எவ்வளவு விதமாக எத்துணை அளவு நாட்டைப் பிரித்துத் துண்டாட முடியுமோ அத்துணை அளவு அதைச் செய்ய வேண்டும்.
  • இந்த நோக்கங்களுக்கு ஆதரவாக உயர் குடி மக்களையும் படித்தவர்களையும், அறிஞர்களையும் பொன், பெண், பதவி உள்ளிட்ட அனைத்தையும் விலையாகக் கொடுத்து வாங்குதல் வேண்டும். அவர்கள் லண்டனின் மவுத் பீஸாக விளங்கினால் பாமர மக்கள் செய்வதறியாது தானே பின் தொடர்வர். வேலை சுலபமாகும்.
  • மேலை நாட்டு நடை, உடை, பாவனைகளை அதிகமதிகம் பரப்ப வேண்டும். அதை அனைவரும் மதிக்கும் படி செய்ய வேண்டும்.
  • ஓட் போடும் முறை வந்தால் அதை மூலதனமாகக் கொண்டு இன்னும் ஏராளமான பிரிவினைகளைச் செய்யலாம்.
  • இதற்கு ஆகும பணத்தை இந்தியாவிலிருந்து சுரண்டி எடுத்து லண்டனுக்கு அனுப்பி அங்கிருந்து பட்ஜெட் போட்டு மீண்டும் இந்தியாவிற்கு இந்த நோக்கங்களுக்காக அனுப்பல் வேண்டும்.

இதற்காக முழு சேனை மிஷனரிகள் என்ற பெயரில் தயாராக வேண்டும் என்ற நிலைப்பாடு இதை ஒட்டி எழவே மிஷனரிகள் தயாராயினர்.

மேலே கண்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்திய வரலாற்றைச் சில நிமிடங்கள் ஆராய்ந்து பார்க்கும் அன்பர்கள் இன்று இந்தியத் திருநாட்டில் விளங்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் அலங்கோலங்களுக்கும் இவையே காரணம் என்பதை அறிந்து கொள்ள முடியும் – சுலபமாக.

 

இந்தப் பின்னணியில் மாக்ஸ்முல்லருக்கு வருவோம்.

***

தொடரும்
 

 

 

 

 

குழல் அழகர், வாயழகர், கண்ணழகர்: ஆண்டாள் சொல்மாலை! (Post No.4267)

Written by London Swaminathan

 

Date: 3 October 2017

 

Time uploaded in London-16-07

 

Post No. 4267

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

குழல் அழகர், வாயழகர், கண்ணழகர்: ஆண்டாள் சொல்மாலை! (Post No.4267)

ஆண்டாள் பாடிய திருப்பாவை அதிகமானோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அவர் பாடிய நாச்சியார் திருமொழி , தமிழ் வைஷ்ணவர்களிடம் பிரபலமான அளவுக்கு மற்றவர்களிடம் பிரபலமாகவில்லை. ஒவ்வொரு பாடலிலும் உள்ள பக்திச் சுவை ஒரு புறம் இருக்க, சொல்லழகும் இருக்கிறது. ஓரிரு பாடல்களைக் காண்போம்.

 

திருவரங்கத்து அழகன்மேல் காதல் கொண்ட ஆண்டாள், அவனைப் பலவகையில் வருணிக்கிறாள். குழல் அழகர், வாயழகர், கண்ணழகர், பூவழகர் என்று புகழ்ந்து தள்ளுகிறாள்.

 

எழிலுடைய அம்மனைமீர்!

என்னரங்கத் தின்னமுதர்;

குழல் அழகர் வாயழகர்;

கண்ணழகர்; கொப்பூழில்

எழுகமலப் பூவழகர்;

எம்மானார் என்னுடைய

கழல்வளையைத் தாமும்

கழல்வளையே ஆக்கினரே!

—ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி

 

பொருள்:-

அழகை உடைய அன்னையீர்! எனக்குரிய திருவரங்கத்தே வீற்றிருக்கும் அரங்கநாதர் இனிமை நல்கும் அமுதம் ஒத்த உருவத்தை உடைய அழகர்; அவர் சுருட்டி முடித்த கூந்தலை உடைய அழகர்; புன்சிரிப்பைக் காட்டும் சிவந்த திருவாயை உடைய அழகர். காண்பாரை ஈர்க்கும் கண்ணழகர்; புதிதாக மலர்ந்தெழும் தாமரை மலரின் மென்மையையும்  அழகையும் பெற்ற உந்திச் சுழிகொண்ட திருவயிற்றைப் பெற்ற அழகர்; என்னை ஆட்கொண்ட அழகுருப் பெற்றவராகிய அத் தலைவர் காதல் பித்தேற்றி என்னை மெலிவித்தார். என்னுடைய கழற்றவும் பின் சேர்க்கவும் இயல்புடைய கை வளைகளை கையைவிட்டே கழன்றோடும்படி செய்து விட்டனரே! பார்த்தீர்களா? என்கிறாள்.

இன்னொரு பாசுரத்தில் கொள்ளைக் கொள்ளிக் குறும்பனை கோவர்த்தனனை என்று வருணிப்பாள்

 

அதாவது, மென்மையான பெண் உள்ளத்தை அழகால் மயக்கிக் கொள்ளை கொள்ளும் குறும்புச் செயல்புரிபவனும் — என்பதாகும்.

 

இதை திருஞான சம்பந்தரின் தேவாரத்தின் முதல் பாடல் வரிகளுடன் ஒப்பிட்டு மகிழலாம்:

உள்ளம் கவர்கள்வன் என்று உள்ளத்தைக் கொள்ளை கொண்டவனான சிவ பெருமானை வருணிக்கிறார்.

 

யஜூர்    வேதத்தில் உள்ள ருத்ரத்திலும் தஸ்கரானாம் பதி= திருடர் தலைவன், அதாவது உள்ளத்தைக் கொள்ளை  கொள்ளும் கள்வர் தலைவனாக சிவனை வருணிக்கிறார்கள் வேத கால ரிஷிகள்.

 

ஆண்டாளையும், சம்பந்தரையும் வேத கால ரிஷிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் ஒரு தனி ஆனந்தம் கிடைக்கும்.

–SUBHAM–