பஞ்சாமிர்தம், பஞ்சாங்கம், பஞ்சகவ்யம் பஞ்சயக்ஞம் என்றால் என்ன?(Post No.2596)

buy-palani-panchamirtham-online

Compiled by london swaminathan

Date: 4 March,2016

 

Post No. 2596

 

Time uploaded in London :–  14-57

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

(Already published in English a few days ago)

 

1.பஞ்சாமிர்தம்

ஐந்து வித பொருட்களைக் கலந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப் பயன்படும் ‘ஜாம்’ பொன்ற பொருள் இது. ‘பஞ்ச’ என்றால் ஐந்து என்று பொருள்; பஞ்ச பண்டவர் என்றால் ஐந்து பாண்டவர் என்பதை ஒவ்வொரு இந்துவும் அறிவர்.

பஞ்சாமிர்தம் பற்றிய ஸ்லோகம்:-

துக்தம் சசர்கரஞ்சைவ க்ருதம் ததி ததா மது

பஞ்சாம்ருதமிதம் ப்ரோதம் விதேயம் சர்வகர்மசு (சப்தகல்பத்ரும:)

துக்தம் – பால்

சர்கரா – சர்க்கரை

க்ருதம் – நெய்

ததி – தயிர்

மது – தேன்

தற்காலத்தில் இத்துடன் பலவகை பழங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றையும் சேர்க்கின்றனர்.

 

urine of cow

2.பஞ்சகவ்யம்

கோமூத்ரம், கோமயம், க்ஷீரம் ததிசர்பிஸ்ததைவ ச

கவாம் பஞ்ச பவித்ராணி புனந்தி சகலம் ஜகத் —(சப்தகல்பத்ரும:)

 

கோ மூத்ரம் – பசுவின் மூத்திரம்

கோ மயம் – சாணி

க்ஷீரம் – பால்

ததி – தயிர்

சர்பி – நெய்

Cow-Urine-Article

3.பஞ்சாங்கம்

ஐந்து அங்கம் என்பது இதன் பொருள்; அவையாவன: திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம்

திதி- ஒரு மாதத்தை இரண்டு பகுதிகளாக பிரித்திருக்கிறோம்; பிரதமை (முதல்) திதி முதல் 15ஆவது நாள் அமாவாசை வரும். மீண்டும் பிரதமை முதல் கணக்கிட்டு 15 ஆவது நாள் பௌர்ணமி வரும். சுருக்கமாகச் சொல்லப்போனால் சந்திரனனின் நிலை.

வாரம்: ஞாயிறு முதல் சனி வரையுள்ள ஏழு நாட்கள் அல்லது கிழமைகள்.

நட்சத்திரம்:- நிலவு அதன் வட்டப்பாதையில் எந்த நட்சத்திரத்துடன் கூடியிருக்கிறதோ (உண்மையில் கூடியிருப்பதாகத் தென்படுகிறதோ) அது அந்த நாளின் நட்சத்திரம். மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன.

யோகம்:- சேர்க்கை என்று பொருள்; இரண்டு நட்சத்திரங்களின் சேர்க்கைக் காலம். ஒரு கிழமையும், ஒரு நட்சத்திரமும் கூடும் போது அது நல்லதா, கெட்டதா (அமிர்த யோகம், மரண யோகம், சித்த யோகம்) என்று அறிய உதவும். இந்த சொல்லுக்கு வேறு ஒரு பொருளும் உள்ளதால் 27 யோகங்களிலெது என்றும் சொல்லலாம்.

கரணம்- திதியில் பாதி

panchangam

4.பஞ்சயக்ஞம்

பிரம்மயக்ஞோ ந்ருயக்ஞஸ்ச தைவயக்ஞஸ்ச சத்தம

பித்ருயக்ஞோ பூத யக்ஞ: பஞ்சயக்ஞ: ப்ரகீர்திதம்

பிரம்ம யக்ஞம் – வேத பாராயணம்

நர யக்ஞ – ஏழைகளுக்கும், விருந்தினர்களுக்கும் உனவு படைத்தல்

தைவ யக்ஞம்- இறைவனுக்குப் படைத்துவிட்டு உண்ணுதல்

பித்ருயக்ஞம் – தென்புலத்தார்க்கு நீர்க்கடன் செலுத்தல் (முற்காலத்தில் தினமும் செய்தனர். இப்பொழுட்து ஆண்டுக்கு 12 முறை முதல் 96 முறை வரை செய்கின்றனர்)

பூதயக்ஞம்: – எறும்பு முதல் யானை வரைக்கும் உணவளித்தல்; குறிப்பாக பசு மட்டுக்கு இலை, தழை அளித்தல்

மனு தர்ம சாஸ்திரத்தில் இது பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. வள்ளுவர் குறளிலும் (எண் 43) காண்க.

5mahayagna

–சுபம்–

ராஜா தந்த முத்தை பிச்சைக்காரனுக்கு கொடுத்த பூசாரி (Post No 2550)

pearl

Compiled  by London swaminathan

 

Date: 17  February 2016

 

Post No. 2550

 

Time uploaded in London :–  8-28 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

ஒரு ஊரில் ஒரு அர்ச்சகர் இருந்தார். கிட்டத்தட்ட நம்ம ஊரில் அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் போல. எதையும் தனக்கென வைத்து கொள்ளா உபகாரி. அவரது புகழ் திக்கெட்டும் பரவியது உடனே சீன தேசத்து ராஜா அவரைப் பார்க்க வந்தார். நெடு நேரம் தத்துவ விஷயங்கள் பற்றி உரையாடினர். கற்றாரை கற்றாரே காமுறுவர் அன்றோ. ஆகையால் விடைபெற்றுச் செல்லுகையில் விலையுயர்ந்த முத்து ஒன்றை அர்ச்சகரிடம் அன்பளிப்பாகக் கொடுத்தார்.

 

அதை வாங்கிய அர்ச்சகர், ராஜாவுக்கு முன்னாலேயே, அதைக் கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்த பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டார். ராஜாவுக்கு என்னமோ போலாகிவிட்டது. முகம் சிறுத்துவிட்டது.

 

இருந்தபோதிலும் காரணத்தை அறிவோமென்று எண்ணி, “அன்பரே நீர் உபகாரி என்பதை நான் அறிவேன். நீவீர் எப்போதுமே இப்படித்தான் செய்வீர்களோ? என்று கேட்டான் மன்னன்.

 

“ஆமாம், மன்னர் மன்னா!”

“அப்படியா?உங்கள் நண்பர்கள் எதைக்கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களோ” – என்று கேட்டான் மன்னன் ஏளனமாக.

“ஆமாம்”, என்றார் அர்ச்சகர்.

 

“இதோ நீங்கள் நடப்பதற்கு ஊன்றுகோல் வைத்திருக்கிறீர்களே. அதை உங்கள் நண்பர் கேட்டால்”…..

 

“ நீதி சாத்திரங்களில் சொல்லியிருக்கிறது. ஒரு நண்பனுக்கு அத்தியாவசியமான எதையும் ஒரு உயர்ந்த மனிதன்/ உத்தம புருஷனானவன், கேட்கக்கூடாதென்று” – என்றார்.

 

“சரி, அவர் உயர்ந்த குணமுள்ள நண்பர் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன்…” என்றான் மன்னன் விடாப்பிடியாக.

 

“ஆ, அருமையான கேள்வி. அப்படிப்பட்ட குணமுடையவன் எனக்கு நண்பனாக இருக்கவே முடியாதென்றார்”, அர்ச்சகர்.

மன்னர் வாயடைத்துப் போனார்.

 

–இது ஒரு சீனக் கதை

 

Xxxx

 

ardhanaree

எல்லாம் கடவுள் கொடுப்பான்?

இரண்டு நண்பர்களிடையே காரசாரமான வாக்குவாதம். கடவுள், எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுப்பார். நாம் ஒன்றும் செய்யத் தேவையே இல்லை என்றான் ஒருவன்.

 

இல்லை, அப்பைடியில்லை. யார் ஒருவன் முயற்சி செய்கிறானோ அவனுக்குதான் கடவுள் உதவி செய்வார் என்றான் மற்றவன்.

 

உடனே முதலாமவன், “இதோ பார் நான் கோவிலில் போய் ஒரு மூலையில் உட்காருகிறேன். எனக்கு உணவு முதலியன கிடைக்கும் என்று சொல்லி ஒரு மூலையில் அமர்ந்தான். அவன் நண்பனும் தொலைவிலிருந்து வேடிக்கை பார்த்தான். ஒரு நாள் ஆயிற்று; இரண்டு நாள் ஓடிற்று; யாரும் அவனைக் கண்டுகொள்ள வேயில்லை. பசியோ வாட்டியது. மூன்றாம் நாளும் வந்தது. இரவு நெருங்கிவிட்டது. இதுவரை யாரும் அவனைக் கண்டுகொள்ள வேயில்லை.

அப்பொழுது மூன்று பக்தர்கள் மிச்சமுள்ள பிரசாதத்தைப் பங்குபோட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களோ, இந்த ஆளை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை.

அவர்களிடம் பிரசாதம் நிறைய மிஞ்சியிருந்ததால், அட, இதை வீணடிக்கக்கூடாது; வீட்டிற்குக் கொண்டு செல்வோம் என்று பேசிக்கொண்டனர். மூலையில் உட்கார்ந்த ஆள் யோசித்தான். இவர்களும் போய்விட்டால் நான் மூன்று நாள் சாப்பிடாததால் இரவில் மயக்கம் போட்டுவிடுவேன் என்று எண்ணி ஒரு தந்திரம் செய்தான். லேசாக ஒரு இருமல் இரும்பி கணைத்தான். உடனே பக்தர்கள் மூவரும் அவன் பக்கம் திரும்பி, அடப் பாவமே முகமெல்லாம் வாடி இருக்கிறதே. சாப்[பிடவே யில்லை போலிருக்கிறதே என்று கருதி மீதியுள்ள புளியோதரை, தயிர்சாதம் எல்லாவற்றையும் கொடுத்தனர். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நண்பனிடம் போனான். கடவுள் எல்லோருக்கும் உதவுவார்தான். ஆனால் அவரைக் “கொஞ்சம் தூண்டிவிட” வேண்டியிருக்கிறது- என்றான்.

நண்பன் சிரித்துக்கொண்டே வீட்டுக்குப் போனான்.

–பாரசீகக் கதையின் தழுவல்

 

 

108 உபநிஷத்துகளின் பட்டியல் (Post No. 2539)

IMG_2976

List of 108 Upanishads in Tamil

 

Compiled by london swaminathan

 

Post No. 2539

Date: 14th February 2016

 

Time uploaded in London:- 11-55

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

 

swami_48@yahoo.com)

 

தமிழில் 108 உபநிஷத்துகளின் பெயர்கள் உள்ள பழைய நூல் ஒன்றை, பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். அதன் விவரங்கள் கீழே உள்ளன. ஆங்கிலத்தில் ஏற்கனவே 121 உபநிஷத்துகளின் பெயர்களை வெளியிட்டுள்ளேன்.

 

 

 

IMG_2980

 

IMG_2981

 

IMG_2982

 

IMG_2984

IMG_2986

 

IMG_2987

My Previous Upanishad Articles in English:–

List of 121 Upanishads; posted on 9 December 2014

Humour in the Upanishads 23 April 2014

Why did Shah Jahan’s son translate the Upanishads? 11 December 2014

Plato used Hindu Microcosm and Macrocosm 20 June 2015

Da..Da…. Da….. Story, posted 19 February 2014

 

 

List of 108 Upanishads in Tamil

 

Compiled by london swaminathan

 

Post No. 2539

Date: 14th February 2016

 

Time uploaded in London:- 11-55

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

 

swami_48@yahoo.com)

 

தமிழில் 108 உபநிஷத்துகளின் பெயர்கள் உள்ள பழைய நூல் ஒன்றை, பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். அதன் விவரங்கள் கீழே உள்ளன. ஆங்கிலத்தில் ஏற்கனவே 121 உபநிஷத்துகளின் பெயர்களை வெளியிட்டுள்ளேன்.

 

 

 

My Previous Upanishad Articles in English:–

List of 121 Upanishads; posted on 9 December 2014

Humour in the Upanishads 23 April 2014

Why did Shah Jahan’s son translate the Upanishads? 11 December 2014

Plato used Hindu Microcosm and Macrocosm 20 June 2015

Da..Da…. Da….. Story, posted 19 February 2014

மிதிலை தந்த செல்வம்! (Post No.2519)

IMG_2695

மிதிலை தந்த செல்வம்! (Post No.2519) 

 

Written by S Nagarajan

 

Date: 8 February 2016

 

Post No. 2519

 

Time uploaded in London :–  5-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

ஹிந்து சரித்திர பொற்காலம்

 

மிதிலை தந்த செல்வம்!

 

ச.நாகராஜன்

 

 IMG_2695 (2)

ஹிந்து சரித்திரத்தை எழுத வேண்டுமெனில் பல கோடானு கோடி பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். அதில் ஒரு முக்கிய பங்கை மிதிலாபுரி வகிக்கும் என்பதில் ஐயமில்லை.

அங்கல்லவா சீதா தேவி தோன்றி வாழ்ந்து வந்தாள். இராமாயண நாயகியின் சரிதம் ‘சீதாயா சரிதம் மஹத் – சீதையின் மஹத்தான சரிதம் – என்று கூறி புகழப்படுகிறது.

 

விதேஹம் என்று இன்னொரு பெயரும் மிதிலைக்கு உண்டு. அதன் மன்னனான ஜனக புத்ரிக்கு வைதேஹி  என்ற பெயர் இதனால் தான் ஏற்பட்டது. மிதிலா புத்ரி என்பதால்  மைதிலி!

 

இந்த விதேஹம் பற்றி உலகின் மிகப் பண்டைய நூலான சதபத ப்ராஹ்மணம் கூறுகிறது. இங்கு சதாநீரா நதி ஓடியதாக அது தெரிவிக்கிறது. இந்த நதியே கோசல நாட்டையும் மிதிலாபுரியையும் பிரிக்கும் எல்லைக் கோடாகத் திகழ்ந்தது. சதாநீரா என்று பழைய காலத்தில் வழங்கப்பட்ட இந்த நதியை இன்று நாம் கண்டகி நதி என்று குறிப்பிடுகிறோம். நேபாளத்திலிருந்து பாய்ந்தோடி வரும் இந்த நதி கங்கையைச் சேர்கிறது. இதைப் பற்றிய அற்புதக் கதைகள் கேட்கத் தெவிட்டாதவை.

 

 

விதேஹம் பல ராஜ்யங்களை உள்ளடக்கி இருந்தது. வைசாலி அதில் ஒன்று. இங்கு தான் புத்த பிரான் பிறந்தார்.

ஆக மிதிலைச் செல்வமான மைதிலி – சீதா பிராட்டி இராமாயணத்தைத் தர கௌதம புத்தரோ ஒரு புதிய வழிகாட்டுதலை உலகிற்குத் தந்திருக்கிறார். அதற்கான இடமும் இந்த அழகிய பிராந்தியம் தான்!

 

 

மிதிலையும் அதன் அருகில் உள்ள வைசாலியும் சோனா மற்றும் கங்கை நதியின் அருகில் உள்ள ராஜ்யங்களாக வரலாறு விளக்குகிறது!

 

 

இராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமனையும் லட்சுமணனையும் அயோத்தியிலிருந்து அழைத்துச் செல்கையில் நான்கு நாட்கள் நடைப் பயண்மாக நடந்து விதேகத்தை அடைந்தார் என்ற குறிப்பு வருகிறது. இடையில் ஒரு நாள் இரவு அவர்கள் வழியில் இளைப்பாறுகின்றனர்.

ஆக, இவை இரண்டும் மிக அருகில் இருந்த நகரங்கள் என்பது தெளிவு.

 rama rama rama

மிதிலையைச் சேர்ந்த அந்தணர்களை மைதிலி பிராம்மணர்கள் என்று கூறுவது வழக்கம்.

இங்கு யாகங்களும் பண்டித சபை விவாதங்களும் அன்றாடம் நடை பெற்று வந்திருக்கின்றன.

 

சடங்குகளையும் யாகங்களையும் எதிர்த்த புத்தர் தன் கடுமையான பிரச்சாரத்தை இங்கு மேற்கொண்டது இயல்பே.

ஹிந்து தத்துவம் தழைத்து ஓங்கி இருந்த இடம் விதேஹம்.

மஹாபாரதம் விளக்கும் சுகதேவர் மற்றும் மைதில தர்மவியாதன் கதையை நாம் அறிந்து பிரமிக்கிறோம்.

மீமாம்சை என்னும் தர்ம சாஸ்திர பிரிவைச் சொல்பவர்களை மீமாம்ஸகாரிகா என்பர். அப்படிப்பட்ட மீமாம்ச சாஸ்திர நிபுணர்கள் 1400 பேர்கள் ஒரே சமயத்தில் இங்கு இருந்துள்ளர்.

இந்த 1400ன பேரை வைத்து ராஜா பைரவசிம்மன் என்னும் ஒரு மன்னன் யாகம் ஒன்றை நடத்தியுள்ளான். இதை 15ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.

புகழோங்கிய பண்டைய நகரம் இன்று … இருக்கிறது.

இன்றும் இருக்கிறது. அவ்வளவு தான்!

 

 

ஹிந்து சரித்திரத்தை நன்கு தெரிந்து கொண்டால் உத்வேகம் எழும். பழைய தத்துவ தரிசனங்கள் நமக்குப் புலப்படும். ஆனால் இன்றைய பீஹார் நிலையோ சொல்லவே தேவை இல்லை.

 

பழைய காலத்தில் சுமார் 1255 சதுர மைல் பரப்பைக் கொண்டிருந்த மிதிலாபுரி இன்று பீஹாரிலுள்ள 38 மாவட்டங்களில் சில மாவட்டங்களில் அடங்கிக் கிடக்கிறது.

மதுபானி, தர்பங்கா,சமஸ்திபூர், வைசாலி, முஸாபிர்பூர்ம் சம்பாரன், மொங்கைர், ஸஹர்ஸா, பூர்னியா ஆகிய மாவட்டங்களில் அடங்கி உள்ள பண்டைய பிரம்மாண்டமான ராஜ்யம் பழைய கதையை ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு  இதிஹாஸ சொல்லிலும் இங்கு சொல்கிறது.

 

 

ஹிந்து பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு தேசீய உணர்வு செகுலர் அடிப்படையில் அழிக்கப்பட்டு வந்தாலும் ஒரு பழம் பெரும் வரலாற்றைப் போற்றிப் பாதுகாக்கவாவது இந்த மிதிலாபுரியையும் அதன் செல்வங்களையும் பாதுகாக்கலாம் அல்லவா! காலம் கருணை செய்ய வேண்டும்; ஹிந்துக்கள் புகழோங்கிய பண்டைய நாளின் வீரத்தையும், தத்துவதர்சனத்தையும், சீலத்தையும் மீண்டும் கொண்டு எழ வேண்டும்.

 

 

அயோத்தியின் அருகில் உள்ள … 

மிதிலாபுரி இதற்கு அஸ்திவாரமாக அமையுமா?

*******

 

 

ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்! (Post No.2514)

IMG_3108

Picture of Nan Tien Temple in Australia

 

Written by london swaminathan

Date: 6 February 2016

 

Post No. 2514

 

Time uploaded in London :– 9-51 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

five buddhas

 

IMG_3105

IMG_3111

 

சிட்னி நகரிலிருந்து சுமார் ஒர் மணிநேரம் காரில் சென்றால் உல்லாங்காங் என்ற இடத்தை அடையலாம். அதற்கு அருகில் புகழ் பெற்ற நான்  டியன் (Nan tien)  புத்தர் கோவில் இருக்கிறது. இது மிகப் பெரிய கோவில். நல்ல இயற்கை வனப்பு மிக்க இடத்தில் கட்டி இருக்கிறார்கள். படிக்கட்டுகள் மூலம் உயர உயர செல்ல வேண்டும். அதற்கும் மேலாக ஒரு பெரிய மணி இருக்கிறது. அதை அடைய இன்னும் மேலே செல்ல வேண்டும்.

 

பசுமையான இந்த பூமியில் நுழையும்போதே மனோரம்யமான காட்சிகள் காத்திருக்கின்றன. உள்ளே நுழைகையில் நம்மை வரவேற்கிறார் சிரிக்கும் புத்தர். இது ஒரு அதிஷ்டசின்னமாகக் கருதப்படுவதால் சென்னை, பம்பாய் நகரங்களில் பலர் வீடுகளிலும் இதை இப்போது காணலாம்.

IMG_3116

பின்னர் பெரிய, உயரமான படிக்கட்டுகள் வழியே சென்றால் முதல் நிலை புத்தர் கோவில். பெரிய, உயரமான வண்ண புத்தர். அவருடைய பல அவதாரங்களைப் பிற்கால பவுத்த நூல்கள் கூறுவதால் அது என்ன மைத்ரேயர் என்ற விவரங்களை சீன மொழியிலும், ஆங்கில மொழியிலும் பொறித்திருக்கிறார்கள். உள்ளே மவுனமாக பிரார்த்தனை, தியானம் செய்யலாம். செருப்புகள் அணிந்தே உள்ளே செல்லலாம்.

 

ஆனால் இதற்கு மேலே மூன்று புத்தர்கள், அதற்கும் மேலே உயரமான இடத்தில் ஐந்து பல வண்ண புத்தர் சிலைகள் உள்ளன. அங்கே செருப்புகளை வெளியே போட்டுவிட்டுச் செல்ல வேண்டும்.

நான் ஹாங்காங்கிலுள்ள புகழ் பெற்ற புத்தர் கோவிலுக்குச் சென்ற போது எல்லோரும் செருப்புக் காலுடன் சென்று வணங்குவதைக் கண்டு வியந்தேன்.

இந்த புத்தர் கோவிலில் சிக்குடை, பாதி உடை அணிந்த பெண்களை அனுமதிப்பதில்லை. ஒரு ஆஸ்திரேலிய வெள்ளைக்காரி, பாதி உடை அணிந்திருந்ததால் அவரை மரியாதையாக திருப்பி அனுப்பினர். வரவேற்பு பகுதிக்குச் சென்றால், சால்வை கிடைக்கும் என்றும் அதைப் போர்த்திக்கொண்டு வரலாமென்றும் சொல்லி அனுப்பினர்.

 

 

IMG_3151

IMG_3118

எல்லா புத்தர் கோவில்களிலும் ஊதுபத்தி வாங்கி கொளுத்தி வைக்கின்றனர். இதற்கென பிரமாண்டமான தொடீகள் உள.

ஆக மிகப்பெரிய, பல வண்ண ஒரு புத்தர், 3 புத்தர், 5 புத்தர் என்று தரிசித்த பின்னர் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானமும் செய்யலாம். இந்துக்கள் போலக் கையெடுத்துக் கும்பிடாமல், எல்லோரும் ஜப்பானிய முறையில் சிரம் தாழ்த்தியோ, மண்டியிட்டோ வணங்கினர். நானோ கரம் குவித்து, சிரம் தாழ்த்தி, தாழிட்டு வணங்கினேன்.

 

இந்த பிரம்மாண்டமான காம்பவுண்டில் சில் குறிப்பிடத்தக்க விஷயங்கள்:-

 

அருமையான சைவ உணவு சிற்றுண்டி சாலையில் 13 டாலருக்கு இழை, தழை சகிதம் சைவ உணவு கிடைக்கும். மாமிச சாஸேஜ் போலத் தோன்றும் டோபு, சோயா மொச்சை, காய்கறிக் கூட்டு ஆகியன சுவையும் மணமும் மிக்கவை. பெரிய காண்டீன். சுகமாகச் சாப்பிட்டோம்.

 

எங்கு பார்த்தாலும் புத்தர் சிலைகள்- புத்த பிட்சு சிலைகள், பல போஸ்களில்!

IMG_3120

கோவிலுக்கு அருகிலுள்ள திறந்தவெளி அரங்கில் சீன ராசிகளின்படியான 12 பிராணிகளின் சிலைகளும் அந்தந்த ராசியின் பலனும் எழுதப்பட்டுள்ளன. இதைச் சுற்றி புகைப் படமெடுக்க பெரும் கூட்டம். அதே இடத்தில் ஒரு அதிர்ஷ்ட மரமும் இருக்கிறது. அதன் மீது ஒரு சிவப்பு நிற ரிப்பனை எறிவர். இதை கோவில்காரர்களே விற்பனை செய்கின்றனர். நாம் நினைத்த காரியம்நிறைவேற இப்படிச் செய்யலாம் என்கின்றனர்.

 

கீழே மரத்தில், அழகான குரங்கு பொம்மைகள் தொங்குகின்றன. மேலே மியூசியம், சீன மட்பாண்ட,பீங்கான் விற்பனைக் கூடம், படம்-புத்தக கலைப் பொருள் விற்பனைக் கூடங்கள் இருக்கின்றன. மியூசியத்திலிருக்கும் தங்க நிற புத்தர் உருவங்கள் காணவேண்டியவை.

 

பெரிய பகோடா, தனியே ஓரிடத்தில் இருக்கிறது. மேலே ஏறிச் சென்றால் மிகப்பெரிய மணி இருக்கிறது அதை அடிக்க பெரிய மரக்கட்டையைப் பொருத்தி இருக்கிறார்கள். முன்னோர்களின் நினைவாக நன்றி தெரிவிக்க இந்த ஏற்பாடு. முன்னோர்களின் சாம்பல்/அஸ்தி அடங்கிய பேழையை வைக்க ஒரு புத்தர் கோவிலில் ஏற்பாடு செய்திருக்கிரார்கள். இதற்குக் கட்டணம் உண்டு.

IMG_3134

IMG_3154

 

சிட்னி நகருக்குச் செல்லும் அனைவரும் பார்க்கவேண்டிய இந்தக் கோவிலில் புகைப்ப்படமெடுக்க நூற்றுக் கணக்கான இடங்கள் உள்ளன. ஆனால் மூன்று பிரதான கோவில்களிலும் புகைப்படமெடுக்கக் கூடாது.

மூங்கில் தோப்பு, தாமரைக் குளம், பிரமாண்டமான மரங்கள் ஆகியன இவ்விடத்தை அலங்கரிக்கின்றன. மேலே மணி அடிக்கச் செல்லும் புல் மேட்டில் பாம்புகள் ஜாக்கிரதை என்ற போர்டு வைத்துள்ளனர். பெரும்பாலும் சீன, ஜப்பானியர் கூட்டமிருந்தாலும் ஆங்காங்கே தமிழ்க் குரல்களும், இந்தியும் பயணிகளிடையே ஒலித்தன.

IMG_3128

கோவிலைப் பார்க்க கட்டணமில்லை. ஆயினும் நாமே அதனழகைக் கண்டு வியந்து உண்டியலில் காசு போட விழைவோம்.

அமைதியான, அற்புதமான, அழகான கோவில்.

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் (தர்மம்) சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி!!!

 

IMG_3124

 

–subham–

கர்ம பலன்: அந்த மாங்காய் இது அல்லவே! (Post No. 2513)

mango thongum

Written by S Nagarajan

 

Date: 6 February 2016

 

Post No. 2513

 

Time uploaded in London :–  5-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

ச.நாகராஜன்

 

 IMG_2704

 

 

 

அந்த மாங்காயும் இந்த மாங்காயும்

 

கர்ம பலன் என்பது ஒரு மர்மமான விஷயம். பெரிய முனிவர்களும் கூட அறிய முடியாத இரகசியம். 750 கோடி பேர் இன்று உலகில் இருக்கிறார்கள். அதைத் தவிர கோடானு கோடி எண்ணிக்கையே  தெரியாத உயிரினங்கள் இன்றைய உலகில் உள்ளன. எந்த கர்மத்தால் யாருக்கு என்ன நல்லது அல்லது கெட்டது நடக்கிறது. அது எப்போது நடக்கிறது?

யாருக்கும் தெரியாது. ஆனால் நல்லவை செய்தவர்க்கு நல்லதும் கெட்டவை செய்தவர்க்க்கு கெடு பலனும் வந்து சேரும்.

 

 

நாகசேனரின் விளக்கம்

 

புத்தர் மறுபிறப்பு பற்றியும் கர்மபலன் பற்றியும் போதுமான அளவு விளக்கியுள்ளார்.

ஒரு சின்ன கதை கர்ம பலனின் ஒரு அம்சத்தைப் பற்றி விளக்குகிறது.

நாகசேனர் மஹாராஜா மிலிந்தனுக்கு இதைப் பற்றி விளக்கும் கதை இது.

 

நாகசேனர்: அரசே! ஒரு மாங்காய் தோப்பு ஒருவனுக்கு சொந்தமாக இருந்தது. அதில் இருந்த மரத்தில் ஒன்றின் மாங்காய்களை ஒருவன் பறித்து விட்டான். மாந்தோப்பிற்குச் சொந்தக்காரன் அரசனிடம் சென்று முறையிட்டான். அரசன் மாங்காய்களைப் பறித்தவனைக் கூப்பிட்டு ஏன் பறித்தாய் என்று கேட்டான். அதற்குப் பறித்தவன், “இந்த மனிதர் எநத மாங்காய்களை விதைத்தாரோ அது வேறு மாங்காய்கள். அதை நான் பறிக்கவில்லை. நான் பறித்த மாங்காய் அது அல்லவே!” என்று பதில் அளித்தான். அரசே! இப்படி பதில் கூறியவன் குற்றமிழைத்தவனா, இல்லையா?”

 

மிலிந்தன்: ஐயனே! நிச்சயமாக அவன் குற்றமிழைத்தவனே! அவனுக்கு தண்டனை உண்டு.

 

நாகசேனர்: என்ன காரணத்திற்காக?

மிலிந்தந்: எவ்வளவு புத்திசாலித்தனமாக அவன் பதில் கூறினாலும் அது செல்லாது. பறிக்கப்பட்ட கடைசி மாங்காய் முதலில் நட்ட முதல் மாங்காயிலிருந்தே உருவானது. அதனால் தான்!

 

நாகசேனர்: ஓ! மன்னா! அதே போலத்தான் இந்த உடல் மற்றும் ,மனத்தினால் செய்யப்பட்ட ஒரு நல்லதோ அல்லது கெட்டதோ இன்னொரு உடல், மனம் எடுத்த போது அதன் விளைவை அனுபவிக்கிறது.

 

 

இன்னொரு பிறவி எடுத்த போது முந்தைய ஜன்மம் பற்றிய நினைவும் இல்லை; அதில் செய்த நல்லது கெட்டதும் தெரிவதில்லை.

 

ஆனால் இதனால் விளைவு நம்மைச் சேராமல் இருக்காது. நினைவுக்கும் விளைவுக்கும் துளியும் சம்பந்தமில்லை.

எடுத்துக்காட்டாக குற்றம் இழைத்த ஒருவன், அது பற்றிய ஞாபகமே தனக்கு இல்லை என்றால் நீதிபதி ஒத்துக் கொள்வாரா அல்லது குற்றமிழைத்தவன் வயதான காரணத்தினாலோ அல்லது ஆரோக்கியக் கேட்டினாலோ மறதியை அடைந்து அதை செய்ததே தெரியவில்லை என்றால் நீதிபதி ஒப்புக் கொள்வாரா?

நான் அவன் இல்லை என்று தப்பித்துக் கொள்ள முடியாது!

நாகசேனரின் விளக்கத்தை மன்னன் புரிந்து கொண்டான்.

 

 

IMG_2705

புத்தகோஸரின் விளக்கம்

 

இந்த ஜன்மத்தில் எடுத்த ஒரு உருவத்தில் செய்த பிழைக்கு அடுத்த ஜன்மத்தில் விளைவா என்று புத்தரிடம் சீடன் குடதந்தன் வியக்கிறான்.

 

இந்த உடல் பிரக்ஞையில் செய்த செயலுக்கு -விதைத்த விதைக்கு – அடுத்த  ஜன்ம உடலில் உள்ள பிரக்ஞையுடன் இருக்கும் போது விளைவு ஏற்படுவது சரிதானா?

இதற்கு புத்தகோஸர் அருமையாக விடையளிக்கிறார்.

அடுத்தாற்போல விளைவை அநுபவிப்பவன் முந்தைய நபரும் இல்லை; முந்தைய நபர் இல்லாமலும் இல்லை!!

இதற்கு புத்த மதத்தில் இரண்டு எடுத்துக்காட்டுகள் மூலமாக விளக்கம் அளிக்கப்படுகிறது.

 

ஒன்று பட்டாம்பூச்சி உவமை.

இன்னொன்று தீ ஜுவாலை உவமை.

 

 

ஒரு பட்டாம்பூச்சி எப்படி உருவாகிறது? முதலில் முட்டை, பின்னர் புழுவாகிறது. பின்னர் கிறிஸ்லிஸ் (Chrysalis) என்ற பொற்புழு நிலையை அடைகிறது.பின்னர் முழு

வண்ணத்துப்பூச்சியாக உரு மாறுகிறது. அதனுடைய ஒரே வாழ்க்கையில் தான் இந்த மாற்றம் நிகழ்கிறது. புழுவாக இருந்த அதே வண்ணாத்திப்பூச்சி இப்போது இல்லை, ஆனால் அதே சமயம் அதிலிருந்து மாறுபட்ட ஒன்றும் இல்லை! தொடர்ச்சியைக் கொண்டுள்ள ஒரு முறையில் ஒன்று இன்னொன்றாகப் பரிமளிக்கிறது.

 

 

தீபம் ஒன்றை இரவு எட்டு மணிக்கு ஏற்றுவதாக வைத்துக் கொள்வோம்.அதன் ஒளி எங்கும் பரவுகிறது. தீப ஜுவாலையைப் பார்க்கிறோம். அதே தீபத்தை காலை ஆறு மணிக்கு மீண்டும் பார்க்கிறோம். இரவு எட்டு மணிக்குப் பார்த்த தீப ஜுவாலை இப்போது இல்லை என்றாலும் தொடர்ந்து எரிவதால் இப்போதுள்ள தீப ஜுவாலை மாறுபட்ட ஒன்றும் இல்லை என்றாகிறது.

 

 

வினையின் விளைவு தொடரும்

 

அதே போல ஒரு உயிர் தனது தொடர் கர்மத்தினால் அதன் விளைவை இன்னொரு உடலில் அநுபவித்தே ஆக வேண்டும்.

சரி, தன்னை உணர்ந்த ஞானி ஒருவர் கர்மம் செய்து கொண்டே இருக்கிறாரே என்று கேட்டால் ரமண மஹரிஷி வேதாந்தம் மூலம் விடையளிக்கிறார்.

 

ஞானியின் கர்மம் வறுத்த விதை போல. அது கர்மம் தான் என்றாலும் அதற்கு விளைவு இருக்காது!

இப்படி கர்ம பலனில் ஏராள ரகசியம் இருக்கிறது. முற்றிலும் உணர்ந்தவர் யாரும் இல்லை.

 

வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது தான் கர்ம நியதி. தர்ம நியதி!

**********

பிக்ஷுவே, அப்போது என்ன செய்வாய்? (Post No. 2509)

IMG_9409 (2)

Written by S Nagarajan

 

Date: 5 February 2016

 

Post No. 2509

 

Time uploaded in London :–  7-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

ச.நாகராஜன்

 

 

புத்தரிடம் புன்னா என்ற பிக்ஷு வந்தார். புத்த தர்மத்தை உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும் என்ற ஆவலுடன் வந்த அவரை புத்தர் கனிவுடன் பார்த்தார்.

 

தனக்கான தியான முறை ஒன்றை கருணை கூர்ந்து அருள வேண்டும் என்று அவர் புத்தரிடம் விண்ணப்பித்தார்.

புத்தரும் அவருக்குரிய தியான முறை ஒன்றை உபதேசித்து அருளினார்.

 

பின்னர் புன்னாவை நோக்கிய புத்தர், “எந்த ஊருக்குப் போகப் போகிறாய்?” என்று கேட்டார்.

“சுநபராந்தா என்று ஒரு மாவட்டம் இருக்கிறது. அங்கு சென்று தர்ம பிரச்சாரம் செய்யப் போகிறேன்” என்றார் புன்னா.

புத்தர்:-“புன்னா! சுநபராந்தாவில் உள்ள மக்கள் சற்று கடுமையானவர்கள்.அவர்கள் உன் பேச்சைக் கேட்க மாட்டார்கள். உன்னைக் கண்டபடி திட்டப் போகிறார்கள். அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா:- “ஆஹா! இவர்கள் எவ்வளவு நல்லவர்கள். திட்டத்தானே செய்கிறார்கள். என்னை அடிக்கவில்லையே என்று நினைத்துக் கொள்வேன்.”

 

புத்தர்: “நல்லது.அவர்கள் உன்னை அடித்து விட்டாகள் என்றால், அப்போது நீ என்ன செய்வாய்?”ர்

புன்னா: “ஆஹா! இவர்கள் கல்லை எடுத்து என்னை அடிக்கவில்லை. கையாலே தானே இரண்டு தட்டு தட்டுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.”

 

புத்தர்:” அப்பனே! அவர்கள் கல்லை எடுத்து வீசி அடித்தால், அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா: “ நல்ல வேளை! இவர்கள் கல்லைத் தானே வீசி எறிகிறார்கள். கழி கொண்டு தாக்கவில்லையே என்று நினைத்துக் கொள்வேன்.”

 

புத்தர்: “அப்பனே, புன்னா! ஒருவேளை அவர்கள் கம்பால் உன்னைத் தாக்கினார்கள் என்றால் அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா: “நல்லவேளையாக இவர்கள் கம்பு கொண்டு தான் அடிக்கிறார்கள். கொலைகாரக் கத்தியால் தாக்கவில்லையே என்று எண்ணுவேன்”

 

புத்தர்: “ஒருவேளை அவர்கள் கத்தியை எடுத்து உன்னைக் குத்தி விட்டால், அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா: “ஆஹா! இவர்கள் கத்தியினால் குத்தத் தானே செய்தார்கள். என் உயிருக்கு ஆபத்து ஒன்றும் விளைவிக்கவில்லையே என நினைப்பேன்.”

IMG_9410 (2)

புத்தர்: “புன்னா! ஒருவேளை அவர்கள் கத்தியினால் குத்தி உன் உயிருக்கே ஆபத்து விளைவித்து விட்டால், அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா:”ஏராளமான பிக்ஷுக்கள் தங்கள் உடலின் மீது அதிருப்தி கொண்டு, வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து, கத்தி ஒன்று கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள்.ஆனால் எனக்கோ எந்தவித சிரமுமின்றி ஒரு கத்தி கிடைத்து உயிர் போகவுள்ளதே என்று நினைப்பேன்.”

 

புத்தர்: “நல்லது, மிகவும் நன்று, புன்னா! நீ சுநபராந்தாவில நன்கு பணி ஆற்ற முடியும்.உன்னிடம் பொறுமையும் எளிமையும் இருக்கிறது. உனக்கு காலம் மிகவும் நன்றாக இருக்கிறது

 

நீ நினைத்தபடி தர்ம பிரச்சாரம் செய்யக் கிளம்பு”

 

புத்தர் கருணையுடன் புன்னாவை ஆசீர்வதித்தார்.

 

புன்னா சுநபராந்தா நோக்கி புத்தரின் ஆசியுடன் பயணமானார்!

 

புத்தரின் போதனை: அஹிம்சையும், பொறுமையும், எளிமையும் நேர்மையும் தர்ம பிரச்சாரம் செய்பவர்களுக்கு இன்றியமையாத குணங்கள்.

*********

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்! (Post No. 2501)

IMG_2231

 

IMG_2232

 

IMG_2240

Written by london swaminathan

Date: 2 February 2016

 

Post No. 2501

 

Time uploaded in London :– 14-06

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2233

இங்கிலாந்தைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் பல நகரங்களில் தமிழர்களும் ஏனைய வட இந்திய இந்துக்களும் பல கோவில்களைக் கட்டி வழிபடுவதை என்னுடன் பயணம் செய்த நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் எனக்கு, இரண்டு கோவில்களுக்குள் மட்டுமே உள்ளே சென்று வழிபடும் பாக்கியம் கிட்டியது. சிட்னியிலுள்ள அம்மன் கோவிலை வெளியிலிருந்து பார்த்துக் கும்பிட்டுவிட்டுப் போனோம்.

 

சிட்னி முருகன் கோவிலுக்குச் சென்றோம். நல்ல சாந்நித்யம் மிகுந்த கோவில். ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகள் லண்டன் வீடுகளைப் போல பல மடங்கு பெரியவை. அது போலவே கோவில்களும் நல்ல விஸ்தாரமாகக் கட்டப்பட்டுள்ளன.

 

சிட்னி முருகன் கோவில் பிரகாரத்தில் ஒரு பெரிய வெள்ளி மயில் வாகனத்தைக் கண்டு படம்பிடித்தேன். கோவில்கள் என்பன, இந்தியப் பண்பாட்டின் கலாசார மையங்களாக விளங்கி வந்துள்ளன. இப்பொழுதும் அவ்வாறே பல இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும், பிறந்த நாள் விழா, சஷ்டியப்தபூர்த்தி, கல்யாணம் ஆகியவற்றுக்கும் உறைவிடமாக அமைந்துள்ளன. நாங்கள் சிட்னி முருகன் கோவிலுக்குள் நுழைந்தபோது பலர் சூட்டும் கோட்டுமாக வந்து கொண்டிருந்தனர். காரணம் அருகிலுள்ள மண்டபத்தில் ஒரு கல்யாணம்.

IMG_8984

பிரகாரத்தைச் சுற்றி வருகையில் எதிர்வரும் இன்னிசைக் கச்சேரி நோட்டிஸைப் பார்த்து மகிழ்ந்தேன். அவர் ஒரு உள்ளூர் பாடகர் என்பதையும் அறிந்தேன்.அதேபோல சைவ பாடசாலை என்ற போர்டும் பெரிதாகத் தெரிந்தது. நான் வழக்கமாகப் போகும் கோவில்களில் மட்டும் அர்ச்சனை செய்வேன் மற்ற கோவில்களில் உண்டியலில் காசு, பணம் போட்டுவிடுவேன். அவாறு செய்துவிட்டு வெளியே வந்தோம்.

IMG_8985

IMG_8987

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்

 

சிட்னி நகரத்துக்கு வெளியே ஹெலன்ஸ்பர்க் என்னுமிடத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலும் அதை ஒட்டி சிவன் கோவிலும் உள்ளன. ஒரே கோவிலை இரண்டாகப் பிரித்துள்ளனர். இரண்டுக்கும் வெவ்வேறு சைவ , வைஷ்ணவ அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்தக் கோவிலும் மிகப் பெரிய கோவில். ஊருக்கு வெளியே இருந்தபோதிலும் இங்கும் ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். பல சுற்றுலா இடங்களுக்குப் போகும் வழியிலிருப்பது இதன் சிறப்பு. கோவிலுக்கு எதிர்த்தாற்போல ஒரு மிருகக் காட்சிசாலையும் உள்ளது. அங்கே கட்டணம் கொடுத்து கங்காரு, கோவாலா போன்ற மிருகங்களைப் பார்த்துவிட்டு கோவிலுக்கு வந்தோம்.

 

இந்தக் கோவிலில் 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் சிலைகளையும், சுதைகளையும் அழகாக வைத்திருக்கிறார்கள். புகைப்படம் எடுக்கக்கூடாது என்று போர்டு எழுதி வைத்திருப்பதால் அதை மதித்து போட்டோ எடுக்காமல் வந்தேன். ஒரே ஒரு சிற்பத்தை மட்டும் அர்ச்சகரின் அனுமதி பெற்று எடுத்தேன். சிவன், முருகன், பாலாஜி சந்நிதிகள் தனித் தனியே உள்ளன.

 

கோவில்களை ஆதரிப்பது நமது கடமை.இறைவனை தரிசித்து அருள் பெறுவது நமக்கு நன்மை.

 

IMG_2809

 

IMG_2814

IMG_2815

IMG_2806

IMG_2822

IMG_2818

 

IMG_2811

–சுபம்–

 

ஆஸ்திரேலியா நாட்டு மலையில் அதிசய கணபதி! (Post No. 2500)

DSCF5335

Written by london swaminathan

Date: 2 February 2016

 

Post No. 2500

 

Time uploaded in London :–  9-46 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

aussi ganesh

“காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்”- என்றும் “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” – என்றும் தமிழில் பழமொழிகள் உண்டு. இது போல தெய்வ பக்தியுடையோருக்கு பாறையும் கடவுள் சிலையாகத் தோன்றும்! காதல் பித்து ஏறியவர்களுக்கு எதைப் பார்த்தாலும் காதலன் அல்லது காதலி போலத் தோன்றும். பக்தி என்னும் பேய் ஏறியவர்களின் குணங்களை நாரத பக்திசூத்ரமும் பாகவதமும் விளக்கும். இதை அப்பர் தேவாரத்திலும் பாடியிருக்கிறார்.

 

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;

இது போல பக்திப் பித்து ஏறினால் பாறையெல்லாம் கடவுள் சிலையாகத் தோன்றும்!

 

நாங்கள் பன்னிருவர் ஒரு பெரிய காரில் (12 seater van) ஏறிக்கொண்டு,  ஆஸ்திரேலியாவில் நீலகிரிக்குச் – BLUE MOUNTAIN ப்ளூ மவுன்டைந்—சென்றோம். அங்கு மூன்று பாறைகள் செங்குத்தாக இருக்குமிடத்துக்கு மூன்று சகோதரிகள் – THREE SISTERS த்ரீ சிஸ்டர்ஸ்—என்று போர்டு வைத்துள்ளனர். நாங்கள் பன்னிருவரும் அதற்கு துர்கா, லெட்சுமி, சரஸ்வதி என்று புதிய பெயர் சூட்டி மகிழ்ந்தோம். அதற்குள் ஒருவர் எலிபெண்டா குகை த்ரிமூர்த்தியை நினைவுபடுத்தி—ஏன் பிரம்மா, விஷ்ணு, சிவா என்று சொல்லக்கூடாது என்று கேட்டார். அதையும் ஏற்றுக் கொண்டு அடுத்த எக்கோ பாயிண்டுக்கு ECHO POINT  வந்தோம். இந்த எதிரொலி மலையில் நாம் எதைச் சொன்னாலும் எதிரொலி கேட்கும் என்றனர். நான் ராமா, கிருஷ்ணா என்று பெரிதாகக் கூக்கூரல் எழுப்பினேன். பலனில்லை. ஒருவேளை சரியான பருவநிலை இருக்க வேண்டும் போல. ஏனெனில் நாங்கள் நின்று கொண்டிருக்கும்போதே பெரிய மேகம் சூழ்ந்து அந்த இடமெல்லாம் புகைமூட்டம் போட்டது போல ஆகிவிட்டது.

 

தமிழ்நாட்டில் கொடைக்கனலிலும் எதிரொலி கேட்குமிடம் உள்ளது. பில்லர்ஸ் ராக் PILLARS ROCK என்னுமிடத்தில் திடீர் திடீரென்று இப்படி மேகம் சூழும். இதையெல்லாம் பேசிக்கொண்டே 12 பேரும் நகர்ந்தோம். அங்கு ஒரு பெரிய பெயர்ப் பலகையில் அங்கு பார்க்க வேண்டிய ஏழு இடங்கள் பற்றிய குறிப்புகளை எழுதி இருந்தனர். எங்கள் 12 பேரில் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, “இதோ பாருங்கள் ஒரு மலை, பிள்ளையார் வடிவத்தில் இருக்கிறது” என்று காட்டினார். அந்தப் படத்தில் மூன்றாவதும் கணபதி போல இருந்தது (KINGS TABLELAND). எல்லோரும் ஒரு கும்பிடுபோட்டுவிட்டு வேகமாகக் காரில் ஏறினோம். மேக மூட்டத்தில் முழு வெளிச்சம் போட்டுக் கொண்டு காரை மேதுவாகச் செலுத்தி ஒரு வழியாக சிட்னி நகருக்கு வந்தோம்.

DSCF5335 (2)

படத்திலுள்ள பாறைகளைப் பாருங்கள்! உங்களுக்கும் பல கடவுள் உருவங்கள் தோன்றும்!!

 

கிருஷ்ண சபதம்! (Post No. 2493)

krishna as ntr

Written by S Nagarajan

 

Date: 31 January 2016

 

Post No. 2493

 

Time uploaded in London :–  11-31 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

ஞான ஆலயம் பிப்ரவரி 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. திருமதி மஞ்சுளா ரமேஷை ஆசிரிராகக் கொண்டுள்ள இந்த ஆன்மீக இதழ் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கும்.

மஹாபாரதம்

கிருஷ்ண சபதம்!

 

ச.நாகராஜன்

 

 

flute kris, fb

 

ஸ்ரீ கிருஷ்ணர், வசுதேவர் சந்திப்பு

மஹாபாரதத்தில் ஒரு அருமையான காட்சியைச் சித்தரிக்கிறார் வேத வியாஸர்.

 

சோகத்தின் உச்ச கட்டம் அது.

 

அதில் தான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னைப் பற்றியும் தன் அரும் குணநலன்களைப் பற்றியும் பேசுகிறார். அதாவது அவருக்குப் பேச வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.கிருஷ்ண சரிதத்தைக் கேட்கும் பக்தர்களான நாம் பரவசப்படுகிறோம்.

காட்சியைப் பார்ப்போம்.
பாரத யுத்தம் முடிந்தது. த்வாரகை மீள்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். உற்சாகமான வரவேற்பு. தந்தை வஸுதேவரையும் அன்னையையும் அடி பணிந்து வணங்குகிறார் கிருஷ்ணர். ‘நடந்ததை உன் வாயாலேயே சொல்’ என்று கேட்கிறார் வஸுதேவர்.

 

 

விஸ்தாரமாக யுத்தத்தைச் சொன்ன கிருஷ்ணர் ஒரு விஷயத்தை மட்டும் வஸுதேவருக்குச் சொல்லவில்லை. அது தான், அவரது பேரனான அபிமன்யுவின் மரணம்.

 

சோகத்தினால் முதியவர் துக்கப்படக் கூடாது என்பது கிருஷ்ணரின் எண்ணம் ஆனால் சுபத்திரையோ கிருஷ்ணரை நோக்கி, ‘அபிமன்யுவின் வதத்தைச் சொல்லும்’, என்று கூறி மயக்கமுற்று விழுகிறாள். அதைக் கண்ட வஸுதேவரும் மயக்கமுறுகிறார்.

 

ஒருவாறு அவர்களைத் தேற்றிய கிருஷ்ணர் அஸ்வமேத யாகம் செய்யுமாறு யுதிஷ்டிரரிடம் கூற யாக ஏற்பாடுகள் பிரமாதமாக ஆரம்பிக்கப்படுகின்றன.

 

 

இறந்து பிறந்த குழந்தை

 

யாகத்திற்காக அனைவருடனும் ஹஸ்தினாபுரத்திற்கு கிருஷ்ணர் வந்த அந்த சமயத்தில் தான் மிக்க சோகமான நிகழ்ச்சி நடைபெற்றது.

 

உத்தரையின் பிரசவ நேரம் அது. குழந்தையும் பிறந்தது. ஆனால் பிரம்மாஸ்திரம் பிரயோகிக்கப்பட்டதால் குழந்தை மரித்துப் பிறந்தது.

 

குந்தி தேவிக்கும், உத்தரைக்கும் அரண்மனையில் இருந்த இதர அனைவருக்கும் துக்கம் தாளவில்லை.

 

கிருஷ்ணரை எப்படியாவது குழந்தையை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டிய குந்தி தேவி கிருஷ்ணருடைய பிரதிக்ஞையை நினைவு படுத்துகிறாள்.

 

“அஸ்வத்தாமாவினால் பிரம்மாஸ்திரம் ஏவப்பட்ட காலத்தில் மரித்துப் பிறக்கும் குழந்தையை நான் உயிர்ப்பிக்கிறேன் என்று நீ பிரதிக்ஞை செய்திருக்கிறாய்” என்று நினைவு படுத்துகிறாள் குந்தி.

 

கிருஷ்ணருக்குத் துக்கம் தாளவில்லை. அப்படியே ஆகட்டும் என்று உரக்கச் சொல்லி அனைவரையும் சந்தோஷப்படுத்தியவாறே உத்தரையின் பிரசவ அறைக்குள் செல்கிறார்.

 

அங்கே உத்தரை கட்டுக் க்டங்காத துயரத்துடன் கிருஷ்ணரைப் பார்த்தவுடன் அழுது புலம்பலானாள். குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு, ‘இதோ இங்கே வந்திருக்கும் கிருஷ்ணரை நமஸ்கரிக்காமல் இருக்கிறாயே” என்றெல்லாம் கூறிப் புலம்புகிறாள்.

 

“கிருஷ்ணரே! என் குழந்தையை உயிர்ப்பித்துத் தாரும்” என்று கூறி அவள் அழ, கூடவே அங்கு குழுமியிருந்த அனைவரும் அழ அந்தச் சமயத்தில் எழுந்தது கிருஷ்ண சபதம்!

உத்தரை கிருஷ்ணரை நமஸ்கரித்து எழுந்தாள். உடனே கிருஷ்ணர் ஆசமனம் செய்து பிரம்மாஸ்திரத்தை அதன் விளைவு இல்லாமல் போகச் செய்தார்.

 

krishna close up

கிருஷ்ண சபதம்

 

பின்னர் அந்தக் குழந்தை உயிருடன் எழுவதைப் பற்றி உலகமெல்லாம் அறியும் படி பிரம்மாண்டமான ஒரு சபதத்தை செய்தார்:

 

“உத்தரையே! நான் பொய் சொல்லவில்லை. இது உண்மையாகவே ஆகப் போகிறது. எல்லா மக்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இந்தக் குழந்தையை உயிருள்ளதாக ஆக்குகிறேன்.

 

நான் ஒரு பொழுதும் விளையாட்டுக்களிலும் கூடப் பொய் சொன்னதில்லை.யுத்தத்திலிருந்து புறம் காட்டியது இல்லை.இது உண்மையானால் இந்தக் குழந்தை உயிருடன் வாழட்டும்.

 

எனக்குத் தர்மத்திலும் அந்தணர்களிடத்திலும் அதிகமான அன்பு இருக்குமானால், இறந்து பிறந்த இந்த அபிமன்யுவின் குழந்தை ஜீவித்திருக்கட்டும்.

 

நான் ஒருபொழுதும் அர்ஜுனனிடத்தில் விரோதத்தை எண்ணாமலிருப்பது உண்மையானால் மரித்த இந்தக் குழந்தை ஜீவிக்கட்டும்.

 

சத்தியமும் தர்மமும் என்னிடத்தில் எப்பொழுதும் நிலைபெற்றிருக்குமானால் அபிமன்யுவின் புத்திரனும் இறந்தவனுமாகிய இந்தக் குழந்தை ஜீவிக்கட்டும்.

நான் கம்ஸனையும் கேசியையும் தர்மமாகக் கொன்றது உண்மையானால் இப்பொழுது இந்தக் குழந்தை மறுபடியும் பிழைக்கட்டும்

 

இப்படி கிருஷ்ணர் சபதத்தை உலகம் முழுவதும் அறியுமாறு உரக்கக் கூறினார்.

 

பின்னர் பிரம்மாவுர்ம் ருத்திரரும் பூஜிக்கப்பட்ட தன் பாதத்தால் குழந்தையின் கால் முதல் தலை வரையில் தடவினார்.

உடனே அந்தக் குழந்தை மெல்ல மெல்ல தன் பிரக்ஞையை அடைந்தது; பின்னர் அசைந்தது.

 

உயிர் பிழைத்த குழந்தையைக் கண்டு அனைவரும் ஆனந்த மிகுதியால் கிருஷ்ணரைப் புகழ்ந்தனர்.

 

பிரம்மாஸ்திரமோ கிருஷ்ணரால் உபசம்ஹாரம் செய்யப்பட்டதால் பிரம்மாவை அடைந்தது. இப்படியாக ஸ்ரீ கிருஷ்ணரின் சபதம் நிறைவேறியது.

 

 

ஆஸ்வமேதிக பர்வம் அறுபத்தொன்பதாம் அத்தியாயத்தைப் படிப்பவர்களின் மனம் ஆனந்தம் அடைவதோடு, கிருஷ்ணரின் மஹிமையை அவர் வாயாலேயே சொல்லக் கேட்ட பெருமையையும் அடையும்.

 

கிருஷ்ணரின் அரிய பெரிய பெருமைகளை மனம் காலம் எல்லாம் அசை போட்டாலும் முழுவதையும் உணர்ந்ததாகச் சொல்ல முடியுமா?

முடியாது!

 

krishna statue side pose

 

சிசுபாலனின் பொய் நிந்தனைகள்

 

சிசுபாலன் நூறு பொய் நிந்தனைகளைக் கூறும் வரை அவனை வதம் செய்யாமல் விடுகிறேன் என்று அவன் தாய்க்கு வரம் அருளினார் கிருஷ்ணர்.

 

கோபம் தலைக்கேற வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிப் பொய்களை அடுக்கிக் கொண்டே போனான் சிசுபாலன். இதை இராஜசூயச் சருக்கத்திலே பதின்மூன்று பாடல்களில் அற்புதமாக விவரிக்கிறார் வில்லிப்புத்தூரார்.

அதில் ஒரு பாடல் இது:-

 

கஞ்சனெனும் மாமனொடு காளையமர் செய்தான்  வஞ்சனையினால் அமரும் எத்தனை மலைந்தான்    தஞ்சமெனவே மருவு தமரிலொரு தானே                  முஞ்சி  விரகாலுரிய மேதினி புரந்தான்

 

 

பாடலின் பொருள் :- இள எருது போல கொழுத்தவனான கிருஷ்ணன் மாமனான கம்ஸனுடன் போர் செய்து அவனைக்  கொன்றிட்டான். தந்திர வகைகளால் எத்தனையோ யுத்தங்களையும் செய்து முடித்தான். தன்னையே ஆதாரமாகக் கொண்டு சார்ந்துள்ள சுற்றத்தார்களில் தான் ஒருவன் மட்டுமே மேம்பட்டு தந்திரமாகத் தனக்கு உரியதாக ராஜ்யத்தைக் கைப்பற்றி ஆள்பவன் ஆனான்.

 

 

கம்ஸனைக் கொல்லுதல், சங்கு உருவத்தில் கடலில் வாழ்ந்த பஞசஜனன் என்னும் அசுரனைக் கொல்லுதல், பதினெட்டு முறை ஜ்ராசந்தனுடன் போர் செய்து வெற்றி பெறல், காலயவனென்ற மிலேச்ச ராஜனைத் தந்திரத்தால் அழித்தல், ருக்குமியைப் பங்கப் படுத்தல் ஆகிய அனைத்தையும் சுட்டிக் காட்டும் விதத்தில் இவை அனைத்தும் வஞ்சனை அல்லவா என்று ‘வஞ்சனையினால் அமரும் எத்தனை மலைந்தான்’ என்று ஆவேசப்பட்டு சிசுபாலன் கத்தினான். ஆனால் அதில் கோபம் இருந்ததே தவிர சத்தியம் இல்லை. சிசுபாலன் போலவே துரியோதனன் உள்ளிட்டோரும் பல பொய்ப் பழிகளை கிருஷ்ணர் மீது சுமத்தியதுண்டு.

 

 

ஆகவே தான் பொய் நிந்தனை சொல்வோர் சொன்னதெல்லாம் பொய்களே என்று உலகிற்குத் தெரிவிக்கும் வண்ணம் சத்திய பிரகடனம் செய்ய வேண்டி, உத்தரையின் சிசுவான – பாண்டவரின் ஒரே வாரிசான – பரீட்சித்தை உயிர்ப்பிக்க வேண்டிய  உச்சகட்டத்தில் (க்ளைமாக்ஸாக) கிருஷ்ணர் தன்னைப் பற்றிப் பிரகடனம் செய்யும் இந்த அரிய காட்சி அமைகிறது.

 

 

கிருஷ்ணரே சத்தியம் கிருஷ்ணரே தர்மம்!

 

எங்கு கிருஷ்ணர் இருக்கிறாரோ அங்கு சத்தியமும், தர்மமும், வெற்றியும் நிச்சயம். அவர் அருளால் இறந்தவரும் எழுவர்.

மஹாபாரதம் காட்டும் பல அரிய காட்சிகளில் உன்னதமான  காட்சி ஸ்ரீ கிருஷ்ண சபதம்!

 

********