தாய்லாந்தில் ஒரு அதிசயக் கோவில் (Post No.4999)

Written by London Swaminathan 

 

Date: 11 May 2018

 

Time uploaded in London – 13-40 am (British Summer Time)

 

Post No. 4999

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

முதலிலேயே ஒரு உண்மையச் சொல்லி விடுகிறேன். போகாத இடம் பற்றி நான் எழுதுவதில்லை. ‘கண்ணால் கான்பதே மெய், காதால் கேட்பதெல்லாம் பொய்’- என்ற கொள்கை உடையவன் நான். ஆயினும் இப்பொழுது தாய்லாந்து பற்றி ஸத்ய வ்ரத சாஸ்திரி எழுதிய புஸ்தகத்தைப் படிக்கையில்தான் இப்படி ஒரு இடம் இருப்பதே தெரிந்தது. ஆகையால் அதை தமிழ் கூறு நல்லுலகத்துக்கும் செப்புவோமே என்ற நல்லெண்ணத்தில் எழுதுகிறேன். ஏனெனில் இது அதிசயங்கள் நிறைந்த கோவில்.

 

எங்கே உள்ளது?

தாய்லாந்தில் பூரிராம் (ராம புரி) மாகாணத்தில் உளது.

இடத்தின் பெயர் பனம் ரங். இது க்மேர் (கம்போடிய) கட்டிட பாணியில் அமைந்த கோவில். இந்து சிலைகளும், சின்னங்களும் உள

எவ்வளவு பழமையானது?

பத்தாம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி இருக்கலாம்.

 

அது எப்படித் தெரிந்தது?

கம்போடியாவில் உள்ள அங்கோர்வட் முதலிய ஆலயங்களின் தாக்கம் இதில் இருப்பதாலும் சில கல்வெட்டுகளாலும் தெரிகிறது,

இதன் சிறப்பு ஏன் அங்கோர்வட் (கம்போடியா), போரோ புதூர் (ஜாவ, இந்தோநேஷியா போலத் தெரியவில்லை?

இப்பொழுதுதான் யுனெஸ்கோ போன்ற அமைப்புகள் இதைப் பாரம்பர்ய சின்னமாக அறிவிக்க அணுகியுள்ளனர்

தாய்லாந்து அரசும்

தபால்தலைகள் முதலியன வெளியிட்டு இதன் அருமை, பெருமைகளை உலகிற்குப் பறையறிவித்து வருகின்றது.

 

இளம் சிவப்பு மணற்கற்களைக் கொண்டு ஒரு குன்றின் மேல் கோவிலைக் கட்டி இருக்கின்றனர். இது சிவ பெருமான் குடிகொண்டுள்ள கயிலை மலையைச் சிறப்பிப்பதாகும்

அதிசயங்கள் என்ன?

1.ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று (ஏப்ரல் 13, 14) இந்தக் கோவிலின் 15 வாயில்களையும் சூரிய ஒளி தொட்டுச் செல்லும். அன்றைய தினம் முதல் பனம் ரங் விழா துவங்கும்.

அப்பொழுது சுவாமி திரு வீதி உலா நடக்கும்; நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கும். பழந்தமிழ் நாட்டில் நடந்த இந்திர விழாக் காட்சிகளை நினைவு படுத்தும்

 

  1. கோவிலுக்குச் செல்வதற்கான பாதை 600 அடிக்கும் மேல் நீளமானது. போகும் வழியில் ஒரு மண்டபம் உண்டு; அங்குதான் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் அமர்ந்து அலங்காரம் செய்து கொள்வார். கிட்டத்தட்ட ராஜ ராஜ சோழன் ஆண்ட காலம்.

 

 

இந்த நீண்ட பாதையைக் கடந்தவுடன் இரண்டு நாகர் பாலங்கள் இருக்கும். அவைகள் மேலுலகத்துக்குச் செல்லும் வழிகளாகும். நாக லோகம் என்பது மேலுலக வழிகளைக் குறிக்கும்.

இதற்குப் பின்னரே உட்புறக் கோவில்.

 

அங்கே சிவன், விஷ்ணு சிலைகளைக் காணலாம். உயரமான அமைப்பு மேரு மலை என்றும் சொல்லுவர். சிவலிங்கமும் அங்கே உளது.

  1. இங்கு ராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும், இலங்கையிலும், தென்கிழக்காசிய நாடுகளிலும் உள்ள ராமாயணச் சிற்பங்களைக் காண்கையில் ஆதிகாலத்தில் மஹாபாரதத்தைவிட ராமாயணமே மக்களை அதிகம் கவர்ந்தது என்று சொல்லலாம்.

 

  1. ஒரு கையிலிருந்து இரண்டு ஐந்து தலை நாகங்கள் இருப்பதால் இது க்மேர் சிலைகளின் பாணியைப் பின்பற்றுவது தெரிகிறது. ஆகை யால் இந்த அமைப்பு பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

 

4.ஒரு கோபுரத்தில் நடராஜர், புன்னகை புரியும் ரிஷி , ஜடாயு, சீதையைக் கடத்தும் காட்சி, மாரீசன் வதை, சீதா ஸ்வயம்வரக் காட்சி, வில்லை முறிக்கும் காட்சி என்பன இருக்கின்றன.

 

இன்னொரு காட்சியில் ராமர் குதிரை மீது பவனி வருகிறார்; இசைக் கலைஞர்கள் முன்னே செல்கின்றனர்.

மண்டோதரி கையில் இந்திரஜித்தின் தயைக் கொடுக்கும் காட்சி, ராவணனுடன் ராமனும் லெட்சுமணனும் சண்டை போடும் காட்சி, ராமர் பட்டாபிஷேகத்துக்கு வரும் காட்சிகளும் காணப்படும்.

 

ரிஷிகள் ஜப மாலையுடன் அமர்ந்த காட்சிகளும் தத்ரூபமானவை.

 

நரேந்திர ஆதித்யன் என்பவன் சிவன் கோவிலைக் கட்டிய செய்தியை ஒரு கல்வெட்டு கூறுகிறது.

 

5.இன்னும் ஒரு அதிசயம் என்ன என்றால் திசைத் தெய்வங்களின் உருவங்கள் தனித் தனியே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் மரத் தூண்களில் பொருத்தப்பட்டு  கால வெள்ளத்தில் மரங்கள் உளுத்து உதிர்ந்து போய் இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.

 

ஒரே தலை உடைய ஐராவதம் மீது இந்திரன் பவனி வரும் காட்சி ஒரு காலத்தில் கிழக்குப் பக்கம் இருந்திருக்க வேண்டும் (சில கோவில்களில் 4 தலைகளுடைய யானை மீது இந்திர உருவம் இருக்கும்)

 

தென் கிழக்கு திக்கிற்கு அதிபதியான அக்னி தேவன் காண்டா மிருகம் மீது பவனி வருவது அதிசயமே; இந்தியாவில் அக்னியின் வாஹனம்– ஆடு.

மேற்குத் திக்கிற்கு அதிபதியான —- வருணன் நாகத்தின் மீது காணப்படுகி             றார். இந்தியாவில் முதலை அல்லது ஹம்ச வாஹனத்தில் வருணன் பவனி வருவார்.

 

குபேரன் சிஙத்தின் மீது இருப்பதும் தென் கிழக்காசிய மக்களின் நூதனக் கற்பனையைக் காட்டுகிறது. இந்தியாவில் அவரை யக்ஷன் மீது காணலாம். அவர் வட திசை அதிபதி.

 

வட மேற்கு திசைக்கு அதி தேவதையான ஈஸானன், சிவன் போல் காளை வாஹனத்தில் த்ரி சூலத்துடன் தோன்றுகிறார்.

 

மேல் திசைக்குரிய பிரஹ்மா நான்கு தலைகளுடன் மூன்று ஹம்ஸங்களுடன் (அன்னம்) வருகிறர். வேறு சிலைகள் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு சிலையிலும் பறவைகள், குரங்குகள், பூக்கள், மூர்த்திகளின் மீதுள்ள ஆடை ஆபரணங்கள் ஆகியவை (KHMER) ‘க்மேர்’ பாணியில் இருப்பது, அங்கோர் வாட்டின்- கம்போடியாவின்— தாக்கத்தைக் காட்டும்.

கோவிலைச் சுற்றி பல குளங்கள் கட்டப்பட்டிருப்பது இமயமலை கயிலையை நினைவு படுத்தும்.

6.இது ஒரு அவிந்துபோன எரிமலைக் குன்றின் மீது அமைக்கப்பட்டிருப்பதும் அதிசயமே.

இது தாய்லாந்தின் புனரமைப்புடன் இப்பொழுது சுற்றுலாப் பயணிகளுக்கான பூங்காவாக நுழைவுக் கட்டணத்துடன் திகழ்கிறது. இவ்வளவு காலமாக வெளி உலகம் இதை அறியவில்லை. உட்புற மூர்த்திகளின் உருவங்களின் புகைப் படங்கள் இன்னும் பிரபலமாகவில்லை.

 

 

 

 

 

 

சுபம்–

சங்க காலத்தில் புலவர்களின் ஜாதி பேதம் பார்க்கவில்லை! (Post N.4978)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 5 MAY 2018

 

Time uploaded in London –  5-08 AM   (British Summer Time)

 

Post No. 4978

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

சங்க இலக்கிய காலத்தில் புலவர்களின் ஜாதி பேதம் பார்க்கவில்லை!

 

ச.நாகராஜன்

 

திராவிடம் என்று மார் தட்டும் தம்பிகள் அகநானூறையும் புறநானூறையும் முன்னிறுத்தி அகநானூற்றுத் தம்பியே ஆர்ப்பரித்து வா; புறநானூற்றுப் போர்வீரனே பொங்கி எழு என்றெல்லாம் போலி வசனம் பேசிய காலத்தில் அதனால் ஏமாந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அதற்கான பலனை இப்போது அனுபவித்து தமிழகத்தை இழிநிலைக்கு உள்ளாக்கி மோசமான நிலையில் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம்.

பார்ப்பன எதிர்ப்பு; பார்ப்பன காழ்ப்பு என்ற அடிப்படை வெறுப்பில் உருவாகிய திராவிடக் கட்சிகள் அதனால் சொந்தக் குடும்பங்களுக்கு ஆதாயம் சேர்த்தது தான் மிச்சம்.

ஆனால் அந்தக் கொடிய செயலே அந்தக் குடும்பங்களுக்குள் குழப்பம் விளைவித்திருப்பது தர்மத்தின் வழி முறை தானே!

சொத்து யாருக்கு என்பதில் – அதாவது சொத்தை ஒரு டிரஸ்டாக ஆக்கினாலும் அதை ஆள்வது யார் என்பதில் – நடக்கும் போர் அவர்களை அழித்து விடும் என்பதைக் காலம் காட்டும்.

சங்க இலக்கியத்தை நன்கு படிக்காமலேயே இவர்கள் விட்ட கட்டுக் கதைகள் அந்தக் கால (ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் வாழ்ந்த) தமிழர்களை ஏமாற்றி நாசமுறச் செய்தது.

இதனால் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்பது போல ஒரு திருடர் கூட்டம் தான் உருவானது.

நிற்க, சங்க இலக்கியத்திற்குத் திரும்புவோம்.

அங்கு ஜாதி பேதமே இல்லை; பார்ப்பன வெறுப்போ, பார்ப்பன காழ்ப்புணர்ச்சியோ இல்லை.

தமிழ் படித்த யார் வேண்டுமானாலும் அவர் நன்கு இலக்கியம் படித்து கற்பனை வளத்தில் ஊறி அருமையான கருத்து வளம் சொல் வளம், நன்னெறி போதிக்கும் திறமை, உவமைகளைக் கையாளுவது போன்றவற்றில் திறம்பட்டு இருந்தால் அவர் புலவராகலாம்.

 

ஆணியம் பெண்ணியம் என்ற பால் வேறுபாடும் அந்தக் காலத்தில் இல்லை என்பது வியப்பூட்டும் ஒரு குறிப்பிடத் தகுந்த விஷயம்!

இப்படி புகழுடனும் பெருமையுடனும் பரந்த மனப்பான்மையுடனும் உலக நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் மனப்பானமையுடனும் வாழ்ந்த தமிழர்களை நாம் மறந்து விட்டோம்.

நமது முன்னோர்களை கொச்சைப் படுத்தி பார்ப்பனன், பார்ப்பனன் அல்லாதோன் என்றெல்லாம் வகை வகையாக வேறுபடுத்தி பல்வேறு சண்டைகளை மூட்டி அரசியல் ஆதாயம் பார்க்கும் தலைவர்களின் கீழ் வாழ்கிறோம். என்ன கொடுமை இது!

சில குறிப்புகளைக் கீழே பார்த்தால் சங்க இலக்கியப் புலவர்கள் பற்றி நன்கு அறியலாம்:

புலவர்களில் அந்தணர்

ஆமூர்க் கௌதமன் சாதேவனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கபிலர்

கோடிமங்கலம் வாதுளிநற் சேந்தனார்

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

நக்கீரனார்

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்

மதுரை இளங்கௌசிகனார்

மதுரைக் கணக்காயனார்

மதுரைக் கௌணியன் தத்தனார்

மாமூலனார்

புலவர்களில் அரசர்கள்

அண்டர்மகன் குறுவழுதியர்

அதியன் விண்ணத்தனார்

ஒல்லையூர்த்தந்த பூதப்பாண்டியன்

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

சேரமான் இளங்குட்டுவன்

பாண்டியன் அறிவுடைநம்பி

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

பாலைபாடிய பெருங்கடுங்கோ

மருதம்பாடிய இளங்கடுங்கோ

முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்

வீரைவெளியன் தித்தனார்

 

புலவர்களில் இடையர்கள்

இடைக் காடனார்

இடையன் சேந்தன் கொற்றனார்

இடையன் நெடுங்கீரனார்

இருங்கோள் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்

 

புலவர்களில் எயினர்

எயினந்தைமகன் இளங்கீரனார்

விற்றூற்று மூதெயினனார்

 

புலவர்களில் கூத்தர்

உறையூர் முதுகூத்தனார்

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன்கூத்தனார்

மதுரைக் கூத்தனார்

மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன்மள்ளனார்

மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன்றேவனார்

 

புலவர்களில் தட்டார்

தங்காற் பொற்கொல்லனார்

மதுரைப் பொன்செய்கொல்லன் வெண்ணாகனார்

 

புலவர்களில் மந்திரத்தலைவர்

ஏனாதி நெடுங்கண்ணனார்

 

புலவர்களில் வண்ணக்கர்

வடமவண்ணக்கன் டேரிசாத்தனார்

 

புலவர்களில் வணிகர்

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார்

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்

 

புலவர்களில் வேளாளர்

ஆர்க்காடுகிழார்மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்

ஆவூர்கிழார் மகனார் கண்ணத்தனார்

ஆவூர் மூலங்கிழார்

மேற்படியார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்

உமட்டூர்கிழார்மகனார் கண்ணனார்

கோடியூர் கிழார்மகனார் நெய்தற்றத்தனார்

செல்லூர் கிழார்மகனார் பெரும்பூதங் கொற்றனார்

நல்லாவூர்கிழார்

நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர்கிழார்

நொச்சிநியமங்கிழார்

பெருங்குன்றூர் கிழார்

பொதும்பில்கிழார் வெண்கண்ணனார்

மதுரைக் காஞ்சிப்புலவர்

மதுரை மருதங்கிழார்மகனார் பெருங்கண்ணனார்

மாற்றூர்கிழார்மகனார் கொற்றங் கொற்றனார்

வடமோதங்கிழார்

புலவர்களில் பெண்பாற் புலவர்

அஞ்சில் ஆந்தைமகள் நாகையார்

அள்ளூர் நன்முல்லையார்

ஒக்கூர்மாசாத்தியார்

ஔவையார்

கழார்க்கீரனெயிற்றியார்

குமிழிஞாழார் நப்பசலையார்

நக்கண்ணையார்

போந்தைப்பசலையார்

மதுரைநல்வெள்ளியார்

முள்ளியூர்ப்பூதியார்

வெள்ளிவீதியார்

வெறிபாடிய காமக்கணியார்.

 

மேலே கண்ட புலவர்களின் பெயரே பெரிய வரலாறைச் சொல்லும். தமிழர்கள் இன்றைய திராவிடக் கட்சிகள் கூறும் பொய்களை நம்பாமல் உண்மையான சங்க இலக்கியத்தைத் தாமே படித்து ஆராய்வது தான் உண்மையைத் தெரிந்து கொள்ள சரியான வழியாகும்.

மேலே கண்ட பட்டியல் முழுதுமான பட்டியல் அல்ல; ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு சின்னப் பட்டியலே.

அன்புத் தமிழர்கள் உண்மை அறியும் ஆர்வத்துடன் பரந்த சங்க கால நெறியுடன் இந்தக் கால நவீன தொழில்நுட்பத்தையும் ஏற்று வாழ்ந்தால் புதிய பொன்னான வரலாறைப் படைக்க முடியும்!

***

ஸம்ஸ்க்ருதம் படித்த வில்லியம் ஹென்றி ராபின்ஸனின் சுவையான கதை (Post No.4967)

ஸம்ஸ்க்ருதம் படித்த வில்லியம் ஹென்றி ராபின்ஸனின் சுவையான கதை (Post No.4967)

 

Written by London Swaminathan 

 

Date: 1 May 2018

 

Time uploaded in London – 17-00 (British Summer Time)

 

Post No. 4967

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

எவ்வளவோ வெளிநாட்டினர் ஸம்ஸ்க்ருதம் பயின்றனர். மாக்ஸ்முல்லர், வில்சன், ஓல்டன்பர்க், க்ரிப்பித், ராத், ஸிம்மர், கீத், மக்டொனால்ட், எக்லிங் போன்ற நூற்றுக் கணக்கானோர் பெயர்கள்– பலருக்கும் தெரியும். ஆயினும் கூகிள் செய்தாலும் அரிதே தென்படும் ஒருவர் வில்லியம் ஹென்றி ராபின்ஸன் — லண்டன் யுனிவர்ஸிட்டி லைப்ரரியில் பர்த்ருஹரியின் நீதி சதகத்தைத் தேடிப் போனேன்; எதேச்சையாக நூற்றாண்டுக்கும் முந்தைய ஒரு புத்தகம் கையில் அகப்பட்டது. அதிலுள்ள கதையைச் சொல்லுவதற்கு முன்னால், ராபின்ஸன் கதையைச் சொல்லுகிறேன்.

19 வயதில் திருமணம்

லண்டனில் 1824 ஆம் ஆண்டில் வெஸ்டமினிஸ்டர் பகுதியில் ராபின்ஸன் பிறந்தார். 1891 ஆம் ஆண்டில் இறந்தார்.

லண்டன் அந்த நூல்

அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் கோல்டன் லெஜென்ட் ஆஃப் இண்டியா. (Golden Legend of India). 1898ம் ஆண்டில் முதல் பதிப்பு வெளியானது. அது பிரிண்டில் இருக்கையில் அவர் இறந்துவிட்டார்.

 

அவருடைய பெற்றோர்கள் மிகவும் ஏழைகள். இருந்தபோதிலும் நன்கு படிக்க வைத்தனர். இதனால் அவர் 14 வயதிலேயே மாணவர்- ஆசிரியராக நியமனம் பெற்றார்.

 

நம்மூர் போலவே அவருக்கு 19 வயதிலேயே திருமணம் நடந்தது.

 

அந்த நூலின் அடிக் குறிப்புகளைப் பார்த்தவுடனேயே அவர் ஸம்ஸ்க்ருத இந்து மத நூல்களை ஐயம் திரிபறக் காற்றவர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கியது. மேலும் அவர் எழுதிய நூல் ஆங்கில மொழியில் கவிதை நடையில் அமைந்துளது. இதனால் இவருடைய ஆங்கிலப் புலமையும் விளாங்கா நிற்கும். (ஆ என்பது எதிர்மறைப் பொருள் தரா; விளங்கி நிற்கும் என்பதே போருள்)

 

அவ்வளவு சின்ன வயதிலேயே கல்யாணம் கட்டியதால், நல்ல சம்பள வேலையை நாடினார்.வரி வசூல் அலுவலகத்தில் வேலை கிடைத்தது; பின்னர் பல வேலைகளுக்குத் தாவினார். சென்ற இடமெல்லாம் சிறப்பே கிடைத்தது.

 

ஸம்ஸ்க்ருதத்தில் விழுந்தார்!

 

திடீரென்று கீழை நாட்டு விஷயங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. பிரிட்டிஷ் மியூஸியத்தில் ஸம்ஸ்க்ருதம் கற்றார். அங்கு இவர் முகத்தை அறியாத அறிஞர் எவருமிலர். அற்புதமான இந்திய தத்துவ நூல்களில் மூழ்கிப் போனார். டாக்டர் ரிச்சர்ட் கார்னர் (Dr Richard Gardner) என்ற அறிஞர், அன்பரே! படியும்; மேலும் மேலும் படியும்!! என்று உத்வேகம் ஊட்டினார். அவருடைய கோல்டன் லெஜெண்ட் நூல் தயாராகவும் உதவினார்.

 

ஹென்றியின் மனைவி 1889-ல் காலமானார். இது அவருக்கு பெருத்த அடியாக இருந்தது; பட்ட காலிலேயே படும் என்பது பழமொழி அல்லவா? 1897ல் அவரும் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டார். ஒரு வண்டி மோதி படு காயமடைந்தார். உடைந்த கையை ஒட்டினாலும் உடைந்த மனம் ஒட்டவில்லை.

 

கடைசி சில ஆண்டுகளில் படுத்த படுக்கையாகக் கிடந்தார். அதுவும் அவருக்கு கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தாற்போல அமைந்தது. நூலை எழுதி முடித்து, பிரிண்டுக்கு அனுப்பினார். திரும்பத் திரும்பி அதைத் திருத்தி எழுதி அடிக் குறிப்புகளைச் சேர்த்தார். அவைதான் இவருடைய அறிவுக்குச் சான்று பகர்கின்றன ஆனால் புத்தகம்  அச்சாகி  வந்தது; அதற்கு முன் அவர் காலச் சுவடில் அச்சாகி மறைந்து விட்டார்.

அவருடைய அறிவுத்தாகம் தணியவே இல்லை. உடல் தளர்ந்தாலும்             உள்ளம் உரம் பெற இந்திய இலக்கியங்களும் தத்துவ நூல்களும் உதவின. தெய்வீக உண்மைகளை வெளி உலகிற்கு அறிவிக்க ஆசை கொண்டார். இந்த நூலைப் பார்வையிட்ட பலரும், இதன் இலக்கிய நயத்தோடு இந்திய தத்துவ ஞானமும் பெற இது உதவுகிறது என்றனர்.

 

சுனஸ்சேபன் என்றால் நாய் வால் என்று பலரும் மொழி பெயர்ப்பர். ஆனால் ஹென்றியோ சினோசூர் (Cynosure)  எனப்படும் துருவ நட்சத்திரமே இதன்      சரியான மொழிபெயர்ப்பு என்பார்.

சுனஸ்சேபன் கதையை வில்ஸன், ராத் போன்ற அறிஞர்கள் மொழிபெயர்த்த போதும் ஹென்றியே ஐதரேய பிராஹ்மணக் கதையை முழுதும் தனி நூலாகத்   தந்துள்ளார்.

 

ஹரிசந்திரன் என்ற மன்னனின் கதையை அறியாத இந்தியர் எவருமிலர். மஹாத்மா காந்தி போன்றோரை உருவாக்கிய உண்மை விளம்பியின் கதை; நீண்ட காலமாக குழந்தை இல்லாததால் வேதக் கடவுளான வருண பகவான் அவருக்கு ரோஹிதன் என்ற மகனைத் தந்து அவனை பிற்காலத்தில் பலி தரவேண்டும் என்றார். அவரும் ஒப்புக்கொண்டு பின்னர் தயங்கினார். ரோஹிதன் , அஜீகர்த்தன் என்பவரின் குழந்தையான சுனஸ்சேபனை விலைக்கு வாங்கி அவனை பலி கொடுக்க யாகக் கம்பத்தில் கட்டியிருந்தார். அந்த நேரத்தில் விஸ்வாமித்ர மஹரிஷி அந்தப் பக்கம் வந்தார்; வெகுண்டெழுந்தார். அவனை யாகத் தூணில் இருந்து விடுவித்தார்.

 

இது பற்றி வேதத்துக்கு பா ஷ்யம் எழுதிய சாயனர் என்பார் இந்திய யாகங்களில் உயிர்ப்பலி என்பது கிடையாது என்றும் யாகக் கம்பத்தைச் சுற்றி அக்னியை எடுத்துச் சென்றவுடன் அந்த உயிரினங்கள் விடுவிக்கப்படும் என்றும் உரை எழுதியுள்ளார். அவரது பாஷ்யத்தையே அனைவரும் ஏற்பதால் யாக  என்பது இல்லை என்பதே உண்மை. அது மட்டுமல்ல. இந்திய இலக்கியத்தில் ஒரே ஒரு நரபலி மட்டுமே பேசப்படுகிறது சுனஸ்சேபனும் இறுதியில் பலி இடப்படவில்லை. அதற்கு முன்னரோ பின்னரோ இப்படி ஒரு சம்பவமும் இல்லை.

 

அதிசயம் ஆனால் உண்மை

 

உண்மையில் நரபலி நடந்திருந்தால் அதை மறைக்கவே அனைவரும் முயல்வர்;  ஆனால் இந்திய சட்டப் புத்தகங்களில் எழுதிய ஸ்ம்ருதிகாரர்களோவெனில் இந்த சுநஸ்சேபன் கதையை எல்லா முடிசூட்டு விழாக்களிலும் ராஜசூய யக்ஞத்திலும் படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினர். ஏன் என்று எவரும் விளக்கவில்லை. சோழ மன்னர்களில் ராஜ சூய யக்ஞம் செய்தவன் பெருநற்கிள்ளி. பாண்டவர்களில் ராஜசூயம் செய்தவன் தர்ம புத்ரன். ஆக ராமாயண, மஹாபாரத இதிஹாசங்களில் இக்கதை சுருக்க வடிவில் இருந்தாலும், ரிக் வேதத்தின் துணை நூலான ஐதரேய பிராஹ்மணத்தில் முழுக்கதையும் உள்ளது. இதை எல்லா முடிசூட்டு வைபவங்களிலும் பாராயணம் செய்வர் .

 

வேத ஸம்ஹிதைகளை அடுத்து வந்தவை பிராஹ்மண நூல்கள்; அவைகளை அடுத்து வந்தவை ஆரண்யங்களும் உபநிஷதங்களும் ஆகும்; இந்த நான்கு வகை நூல்களும் சேர்ந்து வேத நூல்கள் என்று விளம்பப்படும்; இவை அனைத்தும் கிரேக்கர்கள், தமிழர்கள் முதலியோர் நூல்களை எழுதுவதற்கு முன்னர் எழுந்தவை ஆகும்.

 

–சுபம்–

தமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே! (Post No.4951)

தமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே! (Post No.4951)

 

Written by London Swaminathan 

 

Date: 26 April 2018

 

Time uploaded in London – 15-19

 

Post No. 4951

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

Tamil Poets and Kalhana

காஷ்மீரின் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருத கவிஞர் கல்ஹணர்; இவரை வெள்ளைக்கார்கள் மெத்தப் புகழ்வர். புராணங்களில் 140 தலைமுறை மன்னர்களின் பெயர்கள் இருந்தாலும் வருஷம் குறிப்பிடவில்லை. கல்ஹணர்தான் முதல் முதலில் வருஷத்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதினார் என வெளி நாட்டினர் விளம்புவர். ஆனால்  கல்ஹணரின் கலியுகக் கணக்கு இந்துக்கள் பஞ்சாங்கத்தில் உள்ளது போல கி.மு 3102 துவங்குவது அல்ல, இவர் கி.மு 2600 வாக்கில் என்று செப்புவார். கல்ஹணர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர். ஆயினும் அவைகளை      ஆராய்ச்சியளருக்கு விட்டு விட்டு, நாம் ஒப்பீட்டு இலக்கியத்தை மட்டும் நாம் காண்போம்.

 

GREAT MEN THINK ALIKE பெரியோர்கள் ஒரே மாதிரி சிந்திப்பர் என்று ஆங்கிலத்தில் சொல்லுவர். கல்ஹணர் சொன்னதை தமிழ்ப் புலவர் பாடல்களுடன் ஒப்பிட்டால் அது உண்மையே என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.

“தன் உடல் வருத்தத்தையும் மனக் களைப்பையும் பற்றிக் கவலை ப்படாதவர் அடைய முடியாததும் உண்டோ? அத்தகையோர் துணிகரச் செயல்களில் இறங்குவர் (வெற்றி அடைவர்) என்று கல்ஹணர் நுவல்வார்.

 

Achievement
What cannot be accomplished by anyone who disregard s his own limbs and mind?
Such a person is capable of bold enterprise. Rajatarangini 7-1328

 

கருமமே கண்ணாயினார்

உத்தமர் யார் என்று நீதிவெண்பா கூறுகிறது:-

ஒரு வேலையைச் செய்யும்போது, உடலுக்கு வரும் கஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார். பசியைப்பற்றி கவலைப்படமாட்டார். வேலை முடியும் வரை தூங்க மாட்டார். யார் இடையூறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தார். காலம் வீணாகுமோ என்று கவலைப்படமாட்டார். யார் இகழ்வதையும் பொருட்படுத்தமாட்டார்.

 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்- செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங்கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

 

XXX

“ஆற்றின் கரையில் உள்ள ஒரு பெரிய மரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அதைத் தொற்றிக்கொண்டு வளரும் பூங்கொடியும் அழியும் என்பதை சொல்லவும் வேண்டுமோ”- என்று மொழிகிறார் கல்ஹணர்.

இதைத் தமிழில் சேருவார் சேர்க்கையினால்– சஹவாச தோஷத்தால்– ஒருவன் கெட்டான் என் போம்.

Certainty
If a tree which protects a river bank collapses in a flood, the creeper which lives on it, will surely follow suit.8-3250

‘சேராத இடந்தனிலே சேர வேண்டாம்’- என்று உலக நீதி உரைக்கிறது.

 

நீதி வெண்பா (எழுதியவர் யார் என்பது கிடைக்கவில்லை) சொல்கிறது:

புற்றுக்குப் பக்கத்தில் வைக்கோற் புரி கிடந்தாலும் அதைப் பாம்பு என்றே கருதுவர்; தீயோருடன் சேர்ந்த நல்லோரையும்   தீயவர்கள் என்று எண்ணி ஒதுங்குவர் என்று:

நல்லொழுக்க மிலா ரிடஞ்சேர்ந்த நல்லோர்க்கும்

நல்லொழுக்கமில்லாச் சொல் நண்ணுமே – கொல்லும்

பாம்பெனவுன் னாரோ பழுதையே யானாலுந்

தூம்பமரும் புற்றடுத்தாற் சொல்

நல்லோருடன் சேராதோர் இப்படி அழிவர் என்று மற்றொரு பாடல் கூறும்.

 

சந்தனமரத்துக்குப் பக்கத்தில் நிற்கும் மற்ற செடி கொடிகளும் அந்த மரத்தின் மணத்தைப் பெறும். ஆனால் மூங்கில் மரத்துக்கு அருகில் நிற்கும் மரங்களோ அது உராய்ந்து உண்டாகும் தீயில் தான் அழிவதோடு பக்கத்தில் உள்ள மரங்களையும் அழித்துவிடும்.

 

சந்தனத்தைச் சார்தருவுந்  தக்க மணங்கமழும்

சந்தனத்தைச் சார்வேய் தழல்பற்ற — அந்தவனந்

தானுமச் சந்தனமும் தன்னினமு மாய்வதன்றித்

தானுங் கெடச்சுடுமே தான்  (நீதி வெண்பா)

வேய்= மூங்கில்; தரு=மரம்

 

XXX

 

Defeat
Every great person finally meets with humiliating defeat just if he was a common man. Who then could proudly think I am great 8-335

 

“எல்லாப் பெரிய மனிதர்களும் இறுதியில் அவமானப்பட்டு தோல்வி அடைகின்றனர் ; சாதாரண மனிதனைப் போல ஆகின்றனர். இப்படி இருக்கையில் யார் நான்தான் பெரியவன் என்று நினைக்கமுடியும்?” என்று கல்ஹணர் கேட்கிறார்.
முடி சார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவிலொரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்த
படி சார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னம்பலவர்
அடி சார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இலையே

பட்டினத்தாரோ முடி மன்னர்களும் இறுதியில் பிடி சாம்பராய் சுடு காட்டில் சாதாரண மனிதன் எரிக்கப்பட்ட இடத்தில் எரிக்கப்படுவதைக் காட்டுகிறார். (இந்து மதத்தில் மன்னர்களுக்கும் பிச்சைக்காரகளுக்கும் ஒரே சுடுகாடுதான்)

xxx

 

Equanimity
The ocean is not warmed by the submarine fire nor does it cold by the snow s of the Himalayas when they enter it. Men of unruffled mind display equanimity either in dejection or exultation 8-2666
கடலுக்கு அடியிலுள்ள தீயினால் (வடமுகாக்னி= கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகள்) கடல் சூடாவதும் இல்லை; இமயமலையில் இருந்து வரும் பனிக்கட்டி  ஆறுகள் கடலில் பாய்வதால் அது குளிர்வதும் இல்லை. அது ஒரே மாதிரிதான் இருக்கும்; அது போல பெரியோர்கள் போற்றினும் தூற்றினும் சம நிலை தவற மாட்டார்கள் –கல்ஹணர்

 

இதையே தமிழ்ப் புலவர்கள் பால், தங்கம், சந்தனம் அகில், சங்கு கடல் மூலம் மிக அழகாகச் சொல்லுகின்றனர்.

அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

 

அதிவீர ராம பாண்டியனுக்கு முன்னரே இதே கருத்தை அவ்வையாரும்

வாக்குண்டாம் என்னும் பாடலில் கூறுகிறார்: 

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்  – வாக்குண்டாம்

–சுபம்–

 

சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண் (Post No.4943)

 

Yupa is on seen in the right.

சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண் (Post No.4943)

 

 

RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan 

 

Date: 23 April 2018

 

Time uploaded in London –  22-20 (British Summer Time)

 

Post No. 4943

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேத்திலுள்ள சொற்களை நாம் இன்று வரை பன்படுத்துவது, இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் இருந்ததற்குச் சான்றாக விளங்கி வருகிறது.

 

யூபம் என்னும் தூண் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை இது. இந்த யூப ஸ்தம்பம் ரிக்வேதத்திலும் உள்ளது. அதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய சங்கத் தமிழ் இலக்கியத்திலும் உளது. ஹரப்பா என்பதே ஹரி யூப என்ற சொல்லின் மருவு என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன்.

Pandya coin

நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூலவர்மனின் ஏழு யூப ஸ்தம்பங்கள் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்ததை காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994) பல ஆண்டுகளுக்கு முன்னரே சொற்பொழிவில் குறிப்பிட்டதையும் எழுதினேன்.

 

புற நானூற்றின் மிகப்பழைய பாட்டிலும் பெரும்பாணாற்றுப் படையிலும் யூபம் பற்றிய குறிப்புகள் உளதையும் சுட்டிக்காட்டினேன். தமிழ் மன்னர்கள் வேத கால யாக யக்ஞங்களில் பேரார்வம் கொண்டவர்கள் என்பதை ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கி ள்ளி பற்றிய கட்டுரையிலும், பருந்து வடிவில் யாக குண்டம் அமைத்த கரிகாற் பெருவள த்தான் செய்த யாகம் பற்றிய கட்டுரையிலும் எழுதினேன்.

 

 

அகஸ்தியரையும் பாண்டியரையும்

தொடர்புப் படுத்திப் பேசிய முதல் காவியம் உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் ரகுவம்சம் என்பதையும், பாண்டிய மன்னர்கள் சதாசர்வ காலமும் அவப்ருத ஸ்நானத்தில் நனைந்திருப்பதே அவர்களின் பெருமை என்று காளிதாசன் பாண்டிய மன்னனை இந்துமதி ஸ்வயம்வரத்தில் அறிமுகப்படுத்தியதை எழுதி இது பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் அஸ்வமேத யாகம் பற்றிய குறிப்பாக இருக்கலாம் என்பதையும் குதிரை பொறித்த பெருவழுதி நாணயம் கிடைத்திருப்பதையும் எழுதினேன். இதன் மூலம் காளிதாசனின் காலம் சங்கத் தமிழ் இலக்கியத்தை ஒட்டியோ முன்னரோ இருக்கலாம் என்றும் சொன்னேன்.

(இவை அனைத்தையும் எனது ஐந்து ஆண்டுக் கட்டுரைகளில் கண்டு மகிழ்க. இப்பொழுது புதிய விஷயங்களைக் காண்போம்).

 

Yupa is shown.

வேள்வி நெடுந்தூண்

 

யூபம் என்ற ரிக்வேதச் சொல்லை மிகப் பழைய புலவரான நெட்டிமையார் அப்படியே குறிப்பிடுவதும் மற்றொரு புலவர் வேள்வி நெடுந்தூண் என்று குறிப்பிடுவதையும் காண்போம்.

 

பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது (புறம்.15)

 

நால்வேதத்து

அருஞ் சீர்த்திப்பெருங்கண்ணுறை

நெய்மமலி ஆவுதி பொங்க, பல் மாண்

வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி

யூபம் நட்ட வியன் களம் பல கொல்?

யா பல கொல்லோ?

 

பொருள்

உன்னால் தோற்கடிக்கப்பட்ட பகைவர்கள் எண்ணிக்கை அதிகமா? அல்லது நான்கு வேதங்களில் சொன்னபடி நெய்யும் பொரியும் போட்டு யூப ஸ்தம்பங்கள் நட்டு நீ செய்த யாககங்கள்  அதிகமா?என்று பாண்டிய மன்னரைக் கேட்கிறார் நெட்டிமையார்.

 

சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாடிய கருங்குளவாதனார் பாடிய (புறம்.224) பாட்டில்,

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்

என்கிறார்.

 

அதாவது பருந்து வடிவ யாக குண்டத்தில் அந்தணர் சொற்படி செய்யப்பட்ட யாகத்தில் யூப நெடுந்தூண் நட்டவன் நீ…

 

இவ்வாறு பதிற்றுப் பத்து,  பெரும்பாணாற்றுப்படையிலும் வருகிறது

 

கேள்வியந்தணர் ரருங்கடனிறுத்த

வேள்வித்தூணத் தசைஇ யவன

ரோதிம விளக்கின்………

–பெரும்பாணாற்றுப்படை வரி 315, 316

 

யூபம் பற்றி அக்காலத் தமிழ் அறிஞர்களுக்கு நன்கு தெரியுமாதலால் உரைகாரர்கள் அதிகம் விளக்கவில்லை. இதற்கு நாம் ஸம்ஸ்க்ருத நூல்களையே நாட வேண்டியுள்ளது.

 

யூபக் கம்பங்களில் வேள்வியில் ‘பலியிடும்’ மனிதர்கள், மிருகங்களைக் கட்டுவார்கள். பின்னர் அவைகளை அவிழ்த்து விட்டு விடுவார்கள்.

 

ஐதரேய பிராஹ்மணம் என்னும் நூல் ரிக் வேதத்தின் துணை நூல். அதில் ராஜ சூய யாகம் பற்றி வருகிறது; எந்த யாகம் செய்தாலும் அதில் மன்னர்கள் சுநஸ்சேபன் கதையைக் கேட்க வேண்டும்.

உயிர்ப்பலி இல்லை

 

சுநஸ்சேபன் என்பவன் யாகத்தில் பலியிடக் கட்டியிருந்த போது அவனை விஸ்வாமித்ரர் விடுவித்த கதை இது. இது சூர்ய வம்சத்தின் 28ஆவது மன்னரான ஹரிச்சந்திரன் காலத்தில் நடந்தது.

 

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால் ஹரிசந்திரன் காலத்துக்கு முன்னாலோ பின்னாலோ இப்படி நடந்ததாக எங்கும் எந்தக் குறிப்பும் இல்லை. ஆக அந்த ஒரே சம்பவத்திலும் சுனஸ்சேபனை விஸ்வாமித்ர மஹரிஷி காப்பாற்றி விடுகிறார்.

 

மேலும் நால் வேதத்துக்கும் உரை எழுதிய பலருள் மிக முக்கியமானவர் சாயனர். அவரே சொல்கிறார்: ‘யாகத்தில் உயிர்கள் பலியிடப்படுவதில்லை. யூப ஸ்தம்பத்தைச் சுற்றி தீ எடுத்துச் செல்லப்பட்டவுடன் அவை  விடுதலை செய்யப்பட்டுவிடும்’.

சாயனர் சொல்லுவதை எல்லோரும் ஏற்றுக் கொள்வர்.

 

அகநானூற்றில் ஒரு ஆமை மர்மம் இருந்தது. அது எப்படி வெளியே வந்தது என்ற மர்மத்தைத் துலக்கி நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையிலும் ஆமை பலியிடப்படவில்லை என்பதைக் காட்டி இருக்கிறேன் (கட்டுரையில் மேல் விவரம் காண்க)

 

 

ரிக் வேதத்தில் இரண்டு இடங்களிலும் அதர்வ வேதத்தில் சில இடங்களிலும் பிற்கால பிராமண நூல்களில் ஏராளமான இடங்களிலும் யூபம் என்ற சொல் நேரடியாகப் பயிலப்படுகிறது. குறிப்பால் உணர்த்தும் இடங்கள் மிகப் பல.

 

யூப ஸ்தம்பம் கடிர மரத்தால் (கருங்காலி வகை மரம்) செய்யப்படும், அதன் மேல் பகுதி த்ரிசூலம் போல இருக்கும்; யக சாலைக்கு கிழக்கே வைப்பர். அதில் நெய் தடவி தோரணங்கள் கட்டுவர். அந்தக்கால இளைஞர்களின் அலங்காரம் போல இது விளங்குவதால் யுவ (இளைஞர்) என்ற சொல்லே இப்படி மருவியதாச் சிலர் பகர்வர்.

 

மனிதர்களுக்கு யாக யக்ஞங்க்ள் பற்றிய அறிவு வருவதைக் கடவுளர் விரும்பாமல் தடுத்ததால் (யோயுபயன்) யூபம் என்பப் எயர் வந்ததாக ஐதரேய பிராஹ்மணம் செப்பும். சதபதப் பிராமணத்தில் வேறு விளக்கம் உண்டு.

 

யாகத்தில் பலியிடப்படும் விலங்குகளோ மனிதர்களோ சம்மதம் தெரிவித்தால்தான் அவைகளைப் பலியிடலாம். ம்ருகங்களுக்கு, தான் சாகப்போகிறோம் என்று தெரிந்தவுடன் தயங்கும் என்றும் அப்போது கடவுளர் அவைகளிடம் நான் உன்னை சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னவுடன் அவை இசைவு தெரிவிக்கும் என்றும் நூல்கள் இயம்பும்.

இன்னும் சிலர் மந்திரத்தைக் கேட்டவுடன் அதன் சக்தியில் மிருகங்களே செயல் இழந்து விடும் என்பர். எது எப்படியாகிலும் யாகத்தில் பலி என்பதே இல்லை அதற்குப் பதிலாக நெய்யே விடப்படும் என்று 700 ஆண்டுகளுக்கு முன்னர் சாயனர் எழுதி வைத்ததே சரி யென்று தோன்றுகிறது.

 

மாபாரதக் கதை

 

 

இசைவு தெரிவிக்கும் விஷயம் பற்றி மஹாபாரத்ததில் ஒரு சுவையான சம்பவம் உண்டு. அஸ்வமேத பர்வத்தில் அந்தக் கதை வருகிறது

 

கிருஷ்ணரும் அர்ஜுனரும் பிராமணர் வேடத்தில் மேவரத்வஜன் என்ற மன்னரிடம் சென்றனர். கிருஷ்ணனின் மகனை புலி தூக்கிக்கொண்டு போய்விட்டதென்றும் அரசனின் மகனின் உடலில் பாதி கிடைத்தால்தான் புலி அவனை விடும் என்றும் சொன்னார்கள். உடனே மன்னன், தன்னையே பலி கொடுப்பதாகச் சொல்லி மகனையும் மனைவியையும் கூப்பிட்டு அறுக்கச் சொன்னான். அவர்களும் அப்படியே செய்ய முன்வந்தார்கள். அப்பொழுது அந்த மன்னரின் இடது கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தவுடன் கிருஷ்ணன் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். முழு சம்மதம் இருந்தால்தான் யாகத்தில் பலியிடலாம், கண்ணீர்த் துளியானது முழு மனது இல்லை என்பதைக் காட்டுகிறது என்று சொல்லி நிறுத்திவிட்டனர். இந்தக் கதையானது எதையும் அனுமதி இன்றி செய்யக்கூடாது என்பதை விளக்குவதோடு அக்காலத்தில் சிறந்த ஜனநாயகம் இருந்ததைக் காட்டுகிறது.

 

இதுவரை சொன்ன விஷயங்கள்:

 

இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம்  இருந்ததை பாண்டிய மன்னர்கள் சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் யாகம் செய்ததை சங்கத் தமிழ் இலக்கியம் செப்புவதால் அறிகிறோம்.

 

யாகத்தில் உயிர்ப்பலி இல்லாமல் அது அடையாள         பூர்வமாக செய்யப்பட்டதையும் சாயனர் உரை மூலம் அறிகிறோம்.

 

 

கருங்காலி வகை மரம் பல மருத்துவ குணம் உடைய மரம். அதை யூப ஸ்தம்பத்துக் பயன்படுத்தியது, அதன் தோற்றம் மற்றும் மருத்துவ குணமுள்ள ஒரு மரத்தைப் பயன்படுத்தியது ஆகியவற்றையும் கண்டோம்.

 

 

யூப தூண் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/யூப-தூண்/

Translate this page

ஆகவே யூபம் என்பது சிந்து சமவெளி நாகரீக ஹரியூப்பியவில் மட்டும் இன்றி 2000 ஆண்டுகளாக ஆசியா முழுதும் பரவிவிட்டது தெரிகிறது. யூப ஸ்தம்பம் என்பது வேதத்தில் ஆகுதியாக்கப்படும் யாகப் பசு கட்டப்படும் இடம் அல்லது வேதச் சடங்கின் வெற்றியின் நினைவாக எழுப்பபடும் …

ராவணன் – பாண்டியர் சமாதான …

swamiindology.blogspot.com/2014/06/blog-post_24.html?view=sidebar#!

24 Jun 2014 – வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்திகாளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்)பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் சொல்கிறார். புற நானூற்றில் பெரிதும் போற்றப்படும் பலயாகசாலை முது …

புலிக் கொடி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/புலிக்-கொடி/

Translate this page

தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய மூவேந்தர்களும் குறைந்தது 2500 ஆண்டுகளாக வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். போதாயனர், காத்யாயனர், வால்மீகி, வியாசர், அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், மாமன்னன் அசோகன், கலிங்க மன்னன் காரவேலன், இலங்கையின் …

பாண்டியர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாண்டியர்/

Translate this page

அதில் முக்கியமான செய்தி – அகத்தியர் – பாண்டியர் – இராவணன் தொடர்பு ஆகும். வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்தி காளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்)பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் …

–சுபம்–

 

இந்து அரசர்களின் பட்டாபிஷேகக் காட்சிகள் (Post No.4936)

இந்து அரசர்களின் பட்டாபிஷேகக் காட்சிகள் (Post No.4936)


WRITTEN by London Swaminathan 

 

Date: 21 April 2018

 

Time uploaded in London –  21-20 (British Summer Time)

 

Post No. 4936

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்து அரசர்கள் எப்படிப் பட்டாபிஷேகம் செய்து கொண்டனர் என்பதை ரிக் வேதத்துக்குருரிய பிராஹ்மண நூலான ஐதரேய பிராஹ்மணமும் மஹாபாரதமும் ராமாயணமும் படம் பிடித்துக் காட்டுகின்றன. சில சுவையான விஷயங்களை மட்டும் காண்போம்.

 

உலகின்  மிகப்பழைய நூல் ரிக் வேதம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஒவ்வொரு வேதத்துக்கும் யாக யக்ஞ முறைகளை விரிவாவக் கூறும் பிராஹ்மணம் என்ற துணை நூலும் உண்டு. ரிக் வேதத்தின் சாகல ஷாகாவின் நூல் ஐதரேய பிராஹ்மணம். அது ராஜசூய யக்ஞம் எப்படிச் செய்யப்படுகிறது என்று விளக்குகிறது.

 

 

அத்தி மர அற்புதம் புலித்தோல் மஹிமை, புனித நீர் அபிஷேகம் , பெண்கள் மாடி வீட்டு ஜன்னல்களின் வழியாகக் காணும் காட்சி முதலியன பட்டாபிஷேக வர்ணனையில் அடிபடுகின்றன.

 

பட்டாபிஷேகத்துக்கான ஆசனத்தை அத்தி மரம் கொண்டு செய்தனர். இதை உடும்பரா என்று ஸம்ஸ்க்ருத நூல்களும் விஷ்ணு சஹஸ்ர நாமமும் அழைக்கும். மூன்று புனித மரங்கள் — ஆல், அரசு, அத்தி– ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக சஹஸ்ரநாமத்தில் வருகின்றன. பெரிய அற்புதம் என்னவென்றால் மூன்றும் FICUS பைகஸ் வகை மரங்கள் என்றும் அவை மூன்றும் மோரேஸி (Moraceae)  என்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் இன்றைய தாவரவியல் நூல்கள் இயம்பும். இதைப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடித்த இந்துக்கள் அவைகளை தெய்வப்  பட்டியலில் சேர்த்துவிட்டனர். அதர்வ வேதத்திலேயே அத்தி மரத்தின் (உடும்பர) அற்புத சக்திகள் வருணிக்கப்படுகின்றன.

ஐதரேய பிராஹ்மணம் செப்புவதாவது:

 

உடும்பர மரத்தைக் கொண்டு  ஒன்பது அங்குல உயரத்துக்கு ஒரு ஆசனம் செய்ய வேண்டும்; அதற்கு நான்கு கால்கள் இருக்க வேண்டும் . அதன் மீது பல பலகைகள் அடுக்கப்படும். மூன்று புறமும் பலகைகள் அடிக்கப்படும் ஆசனத்தின் பல பகுதிகள் புனித மூஞ்சைப் புல்லினால் கட்டப்படும்; அதில் புலியின் தலைப் பகுதி கிழக்கு நோக்கிய வண்ணம் புலித்தோல் வைக்கப்படும்; அதில் மன்னன் மண்டியிட்டு ஏறுவார. அப்போது கடவுளரையும் அந்த ஆசனத்தில் ஏறும் படி பிரார்த்திப்பார்.

 

பின்னர் மன்னர் மீது தங்க சல்லடை வழியாக அபிஷேக நீர் ஊற்றப்படும்; இந்த நீர் புனித நீர் நிலைகளில் இருந்தும் நாற்கடல்களில் இருந்தும் கொணரப்படும்; மந்திர உரு ஏற்றப்பட்ட தண்ணீரை மன்னர் தலையில் அபிஷேகம் செய்வர். மன்னருக்கு மேலும் கீழும் தங்கத்தகடு வைக்கப்படும், இந்த தங்கத் தகடு அவருக்கு அழியாத் தன்மையை அளிக்கும் என்று மந்திரங்கள் சொல்லுகின்றன.

 

சிந்து சமவெளி- வேதகால நாகரீகம்

மன்னரின் தலை மீது உடும்பர மரக்கிளை வைக்கப்படும்; அது ஒரு தங்க வட்டத்தில் பொருத்தப்படும். சிந்து சமவெளி முத்திரைகளில் இப்படிக் கடவுளர்/ மன்னர் தலையில் கிளையைப் பார்க்கலாம்.

 

மன்னரின் ராஜ சூய யக்ஜம் என்பது அவர் முடிசூட்டப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட சடங்குகள் அனைத்தையும் மீண்டும் செய்வதாகும். சோழ மன்னன் பெருநற்கிள்ளியும் ராஜ சூய யாகம் செய்தான்; அதற்கு சேர- பாண்டிய மன்னர்கள் வந்தனர். மூவேந்தரும் அமர்ந்த அரிய காட்சியைக் கண்ட அவ்வையார் அசந்தே போனார். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகச் சண்டைபோட்டே அழியும் தமிழ் மன்னர் மூவரும் அமர்ந்த காட்சியைக் கண்டு இன்று போல் என்றும் வாழ்க என்று பாடியது புறநானூற்றில் உளது.

 

யுதிஷ்டிரன் என்னும் தர்மர் செய்த ராஜசூயம் மஹாபாரதத்தில் மிகவும் விரிவாகக் காணப்படுகிறது. அப்போது பிற நாட்டு மன்னர்கள் வந்து பரிசுப் பொருள்களைக் குவிப்பர். இதன் பொருள் என்ன வென்றால் அந்த மன்னரின் இறையாண்மையை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லுவதாகும்.

 

இந்த ராஜசூய யாகத்தில் முக்கியச் சடங்கு வேள்வியாகும். அதில் சோம பானம் பருகுதலும் உண்டு; சோமபானம் என்பது காப்பி போல, ஹெர்பல் டீ/ மூலிகை தேநீர் போல உற்சாகம் தரும் ஒரு மூலிகை பானம்; சுரா பானம் என்பது சாராயம். அது பற்றியும் வேதத்தில் உளது. சோமபானத்தைப் புகழும் வேதங்கள் சுரா பானத்தைக் கண்டிக்கின்றன.

 

மன்னரின் பட்டாபிஷேகத்தைக் காண பல நாட்டு மன்னர்களும் ரிஷி முனிவர்களும் பொது மக்களும் அலைகடல் எனத் திரளுவதால் பிரம்மாண்டமான பந்தல்கள் எழுப்பப்படும். அதுவும் வேள்விக்கூடமும், யாகம் முடிந்தவுடன் எரித்து அழிக்கப்படும்

 

ராஜசூய யாகத்தில் சுனஸ்சேபன் கதை வாசிக்கப்படும். சுனஸ்சேபன் என்பவன் புருஷமேதம் என்ப்படும் நரபலி யாகம் போல பலி கொடுக்கக் கட்டப்பட்டவன் அவனை விஸ்வாமித்ரர் மீட்ட கதையை ஒவ்வொரு சடங்கிலும் படிக்க வேண்டும் என்று வேதம் கட்டாயப்படுத்துகிறது; .ஆனால் மனிதனோ மிருகங்களோ பலியிடப்படாமல் விடுவிக்கப்பட்டதாகவும் வேதமே விளம்பும்; ஆகவே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வழக்கத்தை நினைவுபடுத்த மட்டுமே இச்சடங்குகள்- உண்மைப் பலி அல்ல என்பதும் தெளிவாகிறது.

 

பெண்கள் பார்வை

ராமாயணத்தில் முதலில் பட்டாபிஷேக ஆயத்தக் காட்சிகளும் கடைசி காண்டத்தில் உண்மையில் நடந்த ராமர் பட்டாபிஷேகக் காட்சிகளும் வருணிக்கப்படுகின்றன. மஹாபரதத்தில் யுதிஷ்டிரனின் பட்டாபிஷேகக் காட்சிகள் உள. அவனுக்குக் கிடைத்த நீண்ட பரிசுப் பட்டியலையும் காணலாம்

 

மனைவி இல்லாமல் ஒரு இந்து, எந்த வேதச் சடங்கையோ பூஜையையோ செய்ய முடியாது; பெண்களுக்கு அவ்வளவு முக்கியம் கொடுக்கும் மதம் இந்து மதம்; ராம பட்டாபிஷேகத்தில் வசிட்ட முனிவன் ராமனையும் சீதையையும் ஆசனத்தில் அமர்த்திய காட்சியை வால்மீகி பாடுகிறார்.

பட்டாபிஷேகத்துக்கு அருகில் வரமுடியாத பெண்கள் மாடிப் பலகணியின் வழியாகக் கண்டதை ராமாயணம் முதலியன காட்டும். சூழ்ச்சிமிக்க மந்தரை அதை மாடியில் இருந்து பார்த்தவுடன் சூழ்ச்சியில் இறங்கியதாக ராமாயணம் சொல்லும். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் ஏழு மாடி கட்டிடம் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

 

ஆக தங்கம், புலித்தோல், புனித நீர் அபிஷேகம், உடும்பர மர ஆசனம், ரிஷி முனிவர், அயல் மன்னர்கள் வருகை, மக்களின் பெருங்கூட்டம், பெண்களின் ஜன்னல் வழிப்பார்வை பற்றிய சுவையான செய்திகளை சம்ஸ்க்ருத நூல்கள் சுவைபட  உரைக்கின்றன.

 

–சுபம்-

 

கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 2 (Post No.4932)

கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 2 (Post No.4932)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 20 April 2018

 

Time uploaded in London –  7-29 am (British Summer Time)

 

Post No. 4932

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 20 April 2018

 

Time uploaded in London –  6-39 am (British Summer Time)

 

Post No. 4933

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

அந்தப்புர ஆபத்துகள்!

மன்னரின் அரண்மனையில் உள்ள அந்தப்புரம் ஒரு ஆபத்தான இடம் என்று சாணக்கியன் எச்சரிக்கிறான். அது சதித்திட்டங்களின் உறைவிடம் . ஆகையால் முன் எச்சரிக்கை அவஸியம் என்று சாணக்கியன் நுவல்கிறான். அந்தப்புரம் என்பது அகழி, மதில் சுவர் ஆகியவற்றால் பாதுக்காக்கப்பட வேண்டும்; பாம்பு,தீ, விஷம் ஆகியன வராத இடமாக இருக்க வேண்டும். ( பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து தீயினால் கொலை செய்ய துரியோதணன் முயன்றது சாணக்கியனுக்கும் தெரியும்)

 

அந்தப்புரத்தில் பல ரஹஸிய அறைகள், கதவுகள், மருந்து மூலிகைகள் இருத்தல் நலம்; தாதியர் இருக்க வேண்டும்;   அந்தப்புர அதிகாரியின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருக்க வேண்டும்.

 

அசோகன் இதற்கென ஒரு அதிகாரியை நியமித்ததும் அவர் பெயர் ‘ஸ்த்ரீ அத்யக்ஷ மாஹாமாத்ரா’ என்றும் அறிகிறோம்.

 

அந்த அதிகாரி காதல் பரீக்ஷையில் (தேர்வில்) தேறியவராக இருக்க வேண்டும் என்பான் கௌடில்யன்.

 

அதிகாரிகளின் சம்பளம்

 

அந்தர்வம்ஸிகா என்ற அந்தப்புர அதிகாரி க்கு அதிக சம்பளம் கொடுக்க கௌடில்யன் யோஜனை கூறுகிறான். அவருக்கு 24,000 பணம். அதாவது பிரதம மந்திரி, மஹாராணி, இளவரசர்,  ராஜாவின் அம்மா, தலைமைக் குருக்கள் ஆகியோருக்கு அடுத்த நிலை. இவர்கள் ஒவ்வொருவருக்கும் 48,000 பணம் சம்பளம் (அர்த்த சாஸ்திரம் 5-3)

 

அந்தப்புரத்தை காவலர்கள், அலிகள், உளவாளிகள் , வயதானவர்கள் கண்காணிக்க வேண்டும். துறவிகள், கோமாளிகள், பொது மகளிர் உள்ளே செல்லக்கூடாது. குளித்துவிட்டு, சுத்தமாக வரும் பொது மகளிர் உள்ளே அனுமதிக்கப்படலாம். மஹாராணியின் உறவினர்களுக்குக் கூட அனுமதி கிடை யாது. யாரேனும் நோய்வாய்ப்பட்டால மட்டும் அனுமதி உண்டு. (அர்த்த சாஸ்திரம் 5-3)

மன்னரைச் சந்திப்பதற்கு முன்னர் மன்னரின் தோழியர்கள் மஹாராணியை உடல் பரிசோதனை (Body Search) செய்ய வேண்டும் விமான நிலயத்தில் கத்தி, வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பதை சோதிப்பது போன்ற Body Search  பாடி செர்ச்.

2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் இதை எழுதி இருப்பதைப் பார்த்தால் ஜேம்ஸ் பாண்டு (007 James Bond Films) திரைப்படம் எல்லாம் தோற்றுவிடும் போலத் தோன்றுகிறது. மஹாராணிகள் உடல் சுத்தமும் பரிசீலிக்கப்படும்.

 

கௌடில்யன் சொல்கிறான்:-

மஹாராணியின் அறையில் மறைந்திருந்த  சொந்த சஹோதரனே  பத்ர சேனன் என்ற மன்னரைக் கொன்றதை அறிக .

 

அன்னையின் படுக்கைக்குக் கீழே ஒளிந்திருந்து மகனே தந்தையும் மன்னனும் ஆன  காருசாவைக் கொன்றதை மறவாதே.

பொறியுடன் தேன் கலந்து தருவதாகச் சொல்லி காசி ராஜனை மஹாராணியே விஷம் வைத்துக்  கொன்றதையும் அறிக.

 

காற் சிலம்பு, ரத்தினக் கல், கண்ணாடி ஆகியவற்றில் தடவிய விஷத்தால் மன்னர்களைக் கொலை செய்த செய்திகளையும் மறவாதே.

 

தலை முடியில் மறைத்து வைத்த கத்தியால் மன்னர்களைக் கொலை செய்த மஹாரணிகளையும் வரலாறு சொல்கிறது– அர்த்த சாஸ்திரம்1-20, காம சுத்திரம் 7-51/54

கீழ்ஜாதி நந்த வம்சம்

 

சாணக்கியன் இவ்வளவு விஷயங்களைச் சொல்வதற்குக் காரணம், அவர் தூக்கி எறிந்த நந்த வம்சத்தினர் மஹா அட்டஹாசம் செய்துவிட்டனர். ஒர் மஹாராணி, கீழ் ஜாதி அம்பட்டனுடன் தொடர்புகொண்டதால் அந்தப் பேரரசு தோன்றியது என கிரேக்க, ரோமானிய வரலாற்றாசிரியர்கள் எழுதிவைத்துச் சென்றனர். அவர்களுடைய பெயர்கள்

கிரேக்கர் டயடோரஸ் சிகுலஸ் Diodoros Siculus (கி.மு. முதல் நூற்றாண்டு);

ரோமானியர் கர்டியஸ் ரூபஸ் Curtius Rufus (கிபி. முதல் நூற்றாண்டு)

 

சமண மாத நூல்கள் நந்த வம்ச மன்னன் ஒரு வேசிக்கும் அம்பட்டனுக்கும் பிறந்தவன் என்று எழுதிவைத்துள்ளன.

 

அசோகன் தனது அந்த்ப்புரத்தை மிகவும் கண்காணித்தானாம். ஒரு இளவரசனும் அந்தப்புர அழகியும் அரட்டை அடித்ததை அறிந்து இருவரையும் அடித்தே கொன்றதாக ‘திவ்யாவதானா’ சொல்கிறது.

 

‘முத்ராராக்ஷசம்’ என்ற ஸம்ஸ்க்ருத நாடகமும் அரண்மனைச் சதித் திட்டங்களை எழுதியுள்ளன.

 

நம்பத்தகுந்த, பாதுகாப்புச் சோதனைக்களுக்கு உடப்பட்ட பெண்களைக் கொண்டே அரசனைக் குளிப்பாட்ட வேண்டும். எண்ணெய்  மஸாஜ் Oil Massage  செய்ய வேண்டும்; சாமரம் வீசச் செய்யவேண்டும் என்று மநுஸ்மிருதியும் இயம்பும் (7-219)

 

பொய்க்கதைகள் மூலம் காதல் டெஸ்ட்

ராணிக்கும்   மற்றொரு மந்திரிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக உளவாளி மூலம் வதந்தி பரப்புதல் முதலியன பற்றி கௌடில்யன் பேசுகிறான். மற்றொரு வழிமுறையையும் கௌடில்யன் விவாதிக்கிறான். அதாவது உளவாளி ஒருவன் வணிகன் போல வந்து மஹாராணியின் நெருங்கிய தோழியுடன் காதல் கொள்ளுதல்; அவளுக்கு விலை உயர்ந்த பரிசுகளை அள்ளி வீசுதல்; பெண்கள் எப்போதுமே பரிசு, நகை என்றால் மயங்கி விடுவார்கள். மற்றொரு உளவாளி அந்தப் பெண்ணுக்கு காதல் குளிகை தர வேண்டும் அதை அவள் பிரயோகித்தால், அந்த வணிகன் அவளுக்கு அடிமையாகி விடுவான் என்று சொல்ல வேண்டும். அதை அவள் நம்பி வாங்கி விட்டால் அந்த வணிகன் அவளுக்கு வசப்பட்டது போல நடிக்க வேண்டும்.

 

அவள் மஹாராணிக்கு மிக நெருக்கமானவள் என்பதால் மஹாரணிக்கும் செய்தி எட்டும். தோழி மூலம் அவளுக்கும் காதல் குளிகை தரவேண்டும்; ஆனால் அதில் பயங்கர விஷம் இருக்கும். மஹாராணி அதை நம்பி மன்னனுக்கு படுக்கை அறையில் கொடுத்தால் மன்னன் சாவான்.

இப்படியெல்லாம் நடக்கலாம் என்பதால்தான் மன்னர்களை எச்சரிக்கிறான் சாணக்கியன்.

 

அரண்மனைச் சதி நடந்த, ‘குனாலா- அவனது மாற்றாந்தாய் திஷ்ய ரக்ஷிதா சம்பவத்தை’ திவ்யாவதான என்ற நூல் காட்டுவதால் அக்காலத்தில் இவை எல்லாம் உண்மையில் நடந்ததாகவே தோன்றுகிறது.

சந்திர குப்தனின் நெருங்கிய நண்பனான பர்வதக, ஒரு விஷ கன்னிகை மூலம் இறந்ததை ‘முத்ராராக்ஷசம்’ என்னும் ஸம்ஸ்க்ருத நாடகமும், ‘பரிசிஷ்டபர்வன்’ என்ற சமண மத நூலும் காட்டுகின்றன. மாற்றாந்தாய் தனது மகனுக்குப் பட்டம் வேண்டி இப்படிச் செய்ததாக அறிகிறோம்.

 

 

சாணக்கியன் கொடுத்த விஷம்

 

விஷத்துக்கு விஷமே முறிவு- என்ற நம்பிக்கை இந்தியாவில் உண்டு. ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் சாப்பிட்டால் நாளடைவில் விஷத்தை முறிக்கும் சக்தி வந்துவிம். ஹோமியோபதியும் இதே அடிப்படையில்தான் சிகிச்சை கொடுக்கிறது  மௌர்யப்

பேரரசனான சந்திர குப்தனுக்கு சாணக்கியன் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்தானாம். அப்போதுதான் அவன் விஷத்தினால் இறக்கமாட்டான் என்று.

 

ஆயினும் துர்தரா என்ற மஹாராணி கர்ப்பமாக இருந்தபோது இது நடந்ததால் அவள் உடம்பில் விஷம் ஏறி இறக்கும் தருவாய் வந்துவிட்டது. உடனே கருவில் இருந்த சிசுவை caesarean operation சிசேரியன் ஆபரேஷன் மூலம் சாணக் கியன் எடுக்க வழி செய்தான். அப்படியும் அந்த குழந்தையின் உடலில் ஒரு சொட்டு (பிந்து) விஷம் ஏறியதால் அவனுக்கு பிந்துசாரன் என்று பெயர் வந்ததாக ‘பரிசிஷ்டபர்வன்’ என்ற சமண நூல் சொல்லும்.

 

மனுவும் கூட மனுதர்ம சாஸ்திரத்தில் விஷம் பற்றி எச்சரிக்கிறான்.

நம்பத் தகுந்த பரிசாரகர் செய்த உணவை, மற்றவர்களைச் சாப்பிடச் செய்து பரிசோதித்த பின்னரே மன்னன் சாப்பிட வேண்டும். மந்திரம் ஜபித்து விஷம் போனவுடன் சாப்பிட வேண்டும். விஷ முறிவு மூலிகைகளை உணவுடன் சேர்க்க வேண்டும். விஷத்தை முறிக்கும் ரத்தினக் கற்களை எபோதும் அணிந்திருக்க வேண்டும்.

-மநு 7-217/218

 

மன்னர்கள் ஒழுக்கம் தவறி நடந்தால் அழிவார்கள் என்பதையும் சாணக்கியன் விளம்புவான். ஒரு பிராஹ்மணப் பெண் மீது கை வைத்த மன்னன் போஜ தண்டக்யா கூண்டோடு அழிந்தான். காமத்தினால் கரால வைதேஹன் என்ற அரசன் ஒழிந்தான் (அர்த்த சாஸ்திரம் 1-6)

மநுவும், அடக்கமில்லாது ஆட்டம்போட்டு அழிந்த மன்னர்களின் பட்டியலைத் தருகிறான்- வேனன், நஹுஷன், பிஜாவன் மகனான சுதாஸ்; மநு 7-41/42)

.

 

–SUBHAM–

 

கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 1 (POST NO.4929)

கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 1 (POST NO.4929)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 19 April 2018

 

Time uploaded in London –  13.35 (British Summer Time)

 

Post No. 4929

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

உலகின் முதல் பொருளாதார நூல் அர்த்த சாஸ்திரம். இது பொருளாதாரம் அரசியல் பற்றி மிக விரிவாக விவாதிக்கும் நூல். இதை எழுதியவருக்கு இரண்டு பெயர்கள் உண்டு: சாணக்கியன், கௌடில்யன். அவர் பல நூல்களை எழுதியுள்ளார். அர்த்தசாஸ்திரத்துக்கு அடுத்தபடியாகப் புகழ்படைத்தது சாணக்கிய நீதி.

 

ஒரு மன்னன் தன்னை எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சாணக்கியன் விரிவாக கூறுகிறான். விஷம் வைப்பதிலிருந்து, படுக்கை அறைத் தாக்குதல் வரையுள்ள பல ஆபத்துகளை விரிவாக உரைக்கிறான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பல சம்பவங்களையும் எடுத்துரைக்கிறான். அதில் திடுக்கிடும் பல கொலைகள் பற்றிய செய்திகள் வருகின்றன. பெண்கள், பேய்களாகவும்– கொலைகாரப் பேய்களாகவும் மாற முடியும் என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகள். காளிதாசன் ரகு வம்சத்தின் முதல் அத்தியாயத்தில் வருணிக்கும் அற்புதமான குணங்களுக்கு நேர் மாறுபட்டது இது. அதாவது கிருத யுகத்துக்கும் கலியுகத்துக்கும் உள்ள வித்தியாசம்.

 

குறிப்பாக வெளிநாட்டினரும், க்ஷத்ரிய ஜாதி அல்லாதாரும் ஆட்சியைப் பிடித்தவுடன் இவை எல்லாம் நடந்தன என்று சொன்னால் தவறாகாது..

 

 

அரசர்கள் இன்பம் அனுபவிக்கலாம். ஆனால் தார்மீக நெறிக்கோ, பொருளாதாரத்துக்கோ பாதிக்காத வகையில் இதைச் செய்தல் வேண்டும். 16 வயது வரை பிரம்மசர்யம் காத்துவிட்டு பின்னர் கல்யாணம் முடிக்கலாம். அரசன் என்பவன் ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளலாம். ராமனைத் தவிர மற்ற மன்னர்கள் இப்படிச்செய்ததை நாம் அறிவோம்.

 

சங்கத் தமிழ் இலக்கியம் கரிகாலன், ஆய் அண்டிரன், பேகன் போன்றோர் பல மனைவியருடன் வாழ்ந்ததைக் காட்டுகிறது.

 

அசோகனுக்கு இரண்டு மனைவியருக்கு மேல் இருந்தது இலக்கிய வட்டரத்தில் இருந்து தெரிகிறது. இதுதவிர அந்தப்புர அழகிகள் காமக்கிழத்திகள் உண்டு. அசோகனே தனது மற்றும் சகோதரர்களின் அந்தப்புரம் பற்றிப் பேசுகிறான்.

 

அசோகனின் இரண்டாவது மனிவியின் பெயர் காருவாகி. மஹாவம்சம் என்னும் நூல் வேதிசா நகரில் வாழ்ந்த அசோகன் மனைவி பற்றிக் குறிப்பிடுகிறது. திவ்யாவதான என்னும் நூல் அசோகனின் வேறு இரண்டு மனைவியரின் பெயரகளை மொழிகிறது:- திஷ்ய ரக்ஷிதா, பத்மாவதீ.

அசோகரின்  அரண்மனையிலுள்ள 16,000 பெண்களும் விருந்தினரை உபசரித்ததாக மஹாவம்சம் எனும் இலங்கை வரலாற்று நூல் செப்பும்.

 

16,000 மனைவியர் 60,000 மனைவியர் என்பதெல்லாம் மரபுத் தொடர் வாக்கியங்கள் (IDIOMS AND PHRASES). இங்கிலாந்தில் ‘அம்மா, இந்த பொம்மையை வாங்கிக் கொடுத்தால் உனக்கு மில்லியன் கிஸ் (ONE MILLION KISSES)  தருவேன்’ என்று சொல்லும். தமிழர்கள் நாலு பேர் என்ன சொல்லுவார்கள் என்பர். புத்த மத நூல்கள் “அவன் 500 விலைமாதர்களிடம் சென்றான்; அவன் 500 யோகியரைச் சந்தித்தான்” என்றெல்லாம் விளம்பும் இவை இலக்கிய மரபுத் தொடர்கள்.அப் படியே பொருள் கொள்ளலாகாது.

 

 

கௌடில்யன் என்னும் சாணக்கியனும் அந்தப்புரம்,

மற்றும் அரண்மனைக்கு வெளியேயுள்ள உல்லாச கேளிக்கை விடுதிகள் பற்றி விளக்குவான்..

 

வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்ரம் எனும் நூல் இதை நன்கு விளக்குகிறது:

“அரசன்  தினமும் மதிய வேளையில் அந்தப் புரத்துக்குச் செல்ல வேண்டும். நன்கு தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அந்தப்புர அழகிகள் அனைவரையும் அலங்கரித்து ஒரே இடத்திற்கு வரவழைக்க வேண்டும். அவரவர் தகுதிக்கு ஏற்ப அரண்மனை வீடுகள், அந்தஸ்து, பரிசுகளை உரிய தருணத்தில் தர வேண்டும் அவர்களுடன் ஜோக் JOKE  அடித்து தமாஷாக பேச வேண்டும். அதே போல காமக்கிழத்திகளையும் (புனர்பூஸ்) கவனிக்க வேண்டும்; பிறகு விலைமாதர்களைச் (வேஸ்யா= வேசி) சந்திக்க வேண்டும். இவர்களை தனித் தனியே வீடுகள் கொடுத்து வைக்க வேண்டும். மதிய தூக்கத்தில் இருந்து மன்னன் விழித்தவுடன் மஹாராணிகள் , தோழிகள் புடைசூழ மன்னரைப் பார்க்க வேண்டும். எந்தப் பெண்ணின் மாத விலக்கு முடிந்தது. எந்தப் பெண்ணுடன் அரசன் துயில் கொள்ளலாமென்றும் தோழிமார்கள் மன்னனிடத்தில் செப்ப வேண்டும் (காம சூத்திரம் 4-2)

 

(ராஜ ராஜ சோழன் 400 ஆடல் அழகிகளுக்குக் கொடுத்த வீட்டு எண்கள், அவர்களுடைய அற்புதமான தமிழ், ஸம்ஸ்க்ருதப் பெயர்களை டாக்டர் இரா நாகசாமி வெளியிட்ட தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் என்ற நூலில் காண்க).

—TO BE CONTINUED…………………..

 

–SUBHAM–

இந்து மன்னர்களின் 24 மணி நேர வேலை! (Post No.4926)

இந்து மன்னர்களின் 24 மணி நேர வேலை! (Post No.4926)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 18 April 2018

 

Time uploaded in London –  10-12 (British Summer Time)

 

Post No. 4926

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

உலகப் புகழ்பெற்ற சாணக்கியன் அவனுடைய அர்த்தசாஸ்திரம் எனும் நூலில் பல அதிசய விஷயங்களைச் சொல்லுகிறான். அவன்தான் உலகின் முதல் ராஜதந்திரி; உலகின் முதல் பொருளாதார நிபுணன். அலெக்ஸாண்டரின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய மகத  சாம்ராஜ்யத்தைப் படைத்த மாமேதை.

 

அவனைப் பற்றி நிறைய ஸம்ஸ்க்ருத நாடகங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டதால் ஓரளவு அவனைப் பற்றி அறிய முடிகிறது. அவன் ஒரு மன்னனின் குண நலன்கள் பற்றி விரிவாகப் பேசுகிறான்.

சாணக்கியன் மஹா கில்லாடி. சாம, தான, பேத, தண்டம் என்னும் சதுர்வித உபாயங்களைக் கையாண்டு நல்லாட்சி அமைக்கலாம் என்று சொல்லுவான்.

 

அவனைப் பற்றி ‘இந்தியா என்னும் உலக அதிசயம்’(A.L.BASHAM,THE WONDER THAT WAS INDIA, PAGE 89) என்ற ஆங்கில நூலை எழுதிய ஏ.எல்.பாஷம் என்ற அறிஞர் சொல்லுவார்:

“ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், கைப்பற்றவும் பல நேர்மையற்ற வழிமுறைகளைச் சாணக்கியன் செப்புவது உண்மையே; ஆயினும் அவன் ஒரு அரசனின் கடமைகளை, குண நலன்களை எளிய சொற்களில், மிக அழுத்தம் திருத்தமாக நுவல்கிறான். உலகில் வெகு சில நாகரீகங்கள் மட்டுமே இத்தகைய பெருமைமிகு  குறிக்கோளைக் கொண்டவை. அப்படிப்பட்ட அரிய லட்சியத்தை சாணக்கியன் முன் வைத்துள்ளான்.

மன்னன் என்பவன் கலைகளிலும் அரசியல் விஷயங்களிலும் வல்லவனாக இருக்க வேண்டும். புலனடக்கம் உள்ளவனாக இருத்தல் வேண்டும். மற்றவர்களின் மனைவியர் அல்லது சொத்து சுகங்களுக்கு ஆசைப்படக் கூடாது. நாட்டு மக்களின் நலனில் நாட்டம் கொண்டவனாக இருத்தல் வேண்டும் (அர்த்தசாஸ்திரம்- அத்தியாயம் 1 ) என்கிறான்.

 

அறிவிலே சிறந்தவன்; உருவத்தில் வாட்டசாட்டமானவன், உயர் குலத்தில் பிறந்தவன், வீரத்தில் வல்லவன், நேர்மையான குணநலம் உடையவன், நன்றியுள்ளவன், குறிக்கோளும் உற்சாகமும் உடையவன், எதையும் நாளை, நாளை என்று ஒத்திப் போடாதவன், கடவுள் நம்பிக்கை கொண்டவன், வயதில் முதியோரைக் கலந்தாலோசிப்பவன், உறுதியான முடிவை எடுப்பவன், அமைச்சரவை உடையவன், ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்டோன், அருகாமை நாடுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பவன், குற்றங்களுக்கு சரியான தண்டனை வழங்குபவன், முன்னோக்கு கொண்டவன், நல்ல செயல்களுக்குப் பரிசு அளிப்பவன்,  மற்ற நாடுகளுடன் உடன்படிக்கை செய்பவன், அவற்றை மதித்து நடப்பவன், பிடிவாதம், கோபம், முரண்பாடு, பேராசை, க்ஷணச் சித்தம், க்ஷணப் பித்தம் இல்லாதவன்- என்று நல்ல மன்னருக்கான இலக்கணத்தை வகுத்து இருக்கிறான் சாணக்கியன் (அர்த்தசாஸ்திரம் ஐந்தாம் அத்யாயம்)

இவ்வளவையும் ஒருவன் அடுக்கிப் பட்டியல் போட்டால்- அதுவும் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் – எழுதினால் அவனை உலகமே பாராட்டாது என்ன செய்யும். ஆயிரம் பிளட்டோ, அரிஸ்டாடில், மக்கியவல்லிகளுக்கு இணையானவன் சாணக்கியன். இதோ அவன் தரும் மன்னரின் ஒரு நாள் TIME TABLE டைம் டேபிள்:-

 

 

ஒரு நல்ல மன்னன் இரவிலும் பகலிலும் விழிப்பாக இருக்க வேண்டும். ஒரு நாளை இரண்டாகப் பகுக்க வேண்டும். கீழ்கண்ட ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சுமார் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கலாம்:

 

பகல் நேரம்

 

1.காவலர்களைச் சந்தித்தல், நிதி அறிக்கை பரிசீலித்தல்

(அதாவது முந்திய நாள் பற்றிய ஆய்வு’ நேற்று என்ன நடந்தது?)

 

2.நகர மக்கள், நாட்டு மக்களின் க்ஷேமம் விசாரித்தல்

 

3.குளியல், காலை உணவு, படித்தல்

 

4.கப்பம் வசூல், அதிகாரிகளைச் சந்தித்தல்

5.உத்தரவு போடுதல், அமைச்சர்களைச் சந்தித்து ரஹஸிய ஆலோசனை நடத்தல்

 

6.பிடித்த கேளிக்கையை ரஸித்தல்

 

7.நால் வகைப் படைகளைப் பார்வையிடல்

 

8.தளபதிகளுடன் படை எடுப்பு, தாக்குதல் முறியடிப்பு பற்றி ஆலோசனை. மாலை இறை வழிபாடு

இரவு நேர செயல்பாடு

  1. ரஹஸிய தூதர்களைச் சந்தித்தல்

2.குளியல், உணவு, படிப்பு

3.படுக்கை அறையில் சங்கீதம் ரஸித்தல்

4 உறக்கம்

5.உறக்கம்

6.துயில் எழுதல் அப்பொழுது சூத, வேதாளிகர், பாணர்கள் மன்னன் ம் புகழ் இசைத்தல்; மன்னன் அன்றைய செயல்பாடு/ வேலைகளை திட்டமிடல்

  1. நிர்வாக நடவடிக்கைகளை யோசித்தல்; உளவாளிகளை அனுப்புதல்

8.அதிகாலைப் பொழுதில் வழிபாடு; மற்றும் மருத்துவர், சமையல்காரர், ஜோதிடர்களைச் சந்தித்தல்; பின்னர் அரசவைக்குள் நுழைதல்.

 

அரசன் என்பவன் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரையுள்ள எல்லோரையும் சந்திப்பதையும் , நிதிநிலையை ஆராய்வதையும் ஒரு நாளைக்கு இரு முறை குளித்தலையும், இறைவழிபாடு செய்தலையும், சுமார் ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்குவதையும் மேற்கண்ட பட்டியல் காட்டுகிறது.

 

–சுபம்–

ராஜ ராஜ சோழன் கதை- எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (Post No. 4910)


WRITTEN by London Swaminathan 

 

Date: 13 April 2018

 

Time uploaded in London –  11-17 am  (British Summer Time)

 

Post No. 4910

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

ராஜ ராஜ சோழன் கதை- எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (Post No. 4910)

 

ஒரு இயக்கத்திலோ ஒரு நாட்டிலோ தலைவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே தொண்டர்களும் இருப்பர். ‘யதா ராஜா ததா ப்ரஜா’- என்று ஸம்ஸ்க்ருதத்திலும் மொழிவர். ஆகவே பெரிய பதவிகளில் இருப்பவர்கள் அடக்கத்தோடு இருக்க வேண்டும். வள்ளுவன் இதை அழகாகச் சொல்கிறான். அடக்கம், பணிவு என்பது மிகவும் போற்றுதற்குரியது. அது செல்வந்தர்களிடத்தில் இருந்தால் இன்னும் சிறப்பு என்பான்.

 

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)

 

பொருள்

பணிவு- அடக்கம் என்பது எல்லோருக்கும் நன்மை தரும்; பணக்காரர்களிடத்தில்  அது இருந்தால், அவர்களுக்கு மேலும் செல்வம் கிடைததது போல இருக்கும்.

 

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது  (குறள் 124)

 

எந்த நிலையிலும் மாறுபாடமல் இருப்பவனின் பணிவு, மலையை விடப் பெரியது, உயர்வானது.

 

‘அற்பனுக்கு வாழ்வு வந்தால்  அர்த்த ராத்ரியில் குடை பிடிபான்’– என்பர். அப்படி கூத்தாடக் கூடாது. இன்னும் சிலரோ சின்னக் கஷ்டம் வந்தாலும் உலகையே பறிகொடுத்தது போல வாடி விடுவர். தோல்வி என்பது – வெற்றியின் முதற்படி என்பதை அவர்கள் உணரார்.

 

ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம் கற்பிக்கிறது என்பதை அவர்கள் அறியார்.

மாபெரும்  பெரிய கோவிலை தஞ்சையில் எழுப்பி அதில் பெருவுடையார் என்ற பிரம்மாண்டமான பிருஹத் ஈஸ்வரர் லிங்கத்தை வைத்த சோழ மன்னன் ராஜ ராஜன், அடக்கத்தின் சின்னம்! பணிவுக்கு எடுத்துக் காட்டு.

 

தஞ்சையில் பிரம்மாண்டமான கோவில் பணிகள் நடந்து கொண்டிருந்தன. பெரிய சிற்பியானவன்,அடைப்பைக்காரன் அருகில் நிற்க, நுணுக்கமான கலை வேலைப்பாடுகளில் ஈடு பட்டிருந்தான். அவன் வெற்றிலை போட்டுத் துப்பும் எச்சிலை அதற்கான வட்டிலில் ஏந்துவது, அவனுக்கு வேண்டிய எடுபிடி வேலைகளைச் செய்வது அடைப்பைக்காரன் பணி.

 

கோவில் பணிகள் செவ்வனே நடக்கின்றனவா என்று ஆர்வத்தோடு பார்த்து வந்தான் ராஜ ராஜ சோழன். பெருந்தச்சனோ, மாமன்னனைக் கவனிக்கவில்லை. அவன் தனது செதுக்கல் வேலைகளில் முனைப்பாக இருந்தான். அந்த நேரத்தில் அ டைப்பைக்காரன் ஒரு சின்ன வேலைக்காக வெளியே போயிருந்தான். மாமன்னன் அவன் அருகில் வந்து அந்தக்  கலை நுணுக்கப் பணிகளை உன்னிப்பாக கவனித்தான். அப்பொழுது அவன் எச்சிலைத் துப்ப அடைப்பைக்கரனை அழைக்க, அவனோ அங்கு இல்லை. மாமன்னன் அந்த எச்சில் துப்பும் தட்டை ஏந்தி துப்புதலை வாங்கிக் கொண்டான். அவன் தன்னிச்சையாக திரும்பிப் பார்த்தபொழுதே மாமன்னன்  —– இந்து மஹா சமுத்திரத் தீவுகளைக் கடற்படை கொண்டு தமிழ் பூமியாக மாற்றிய மன்னன் —- அருகில் நிற்பது  புரிந்தது. காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அலறியிருப்பான்; மன்னன், அவனை ஆஸ்வாசப்படுத்தி இருப்பான் என்பதெல்லாம் எழுதாமலே விளங்கும்.

இனியவை நாற்பது

 

பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்னினிது – என்று இனியவை நாற்பது செப்பும். அதாவது உண்மையைக் கடைப் பிடித்து அடக்கத்துடன் வாழ்வது நல்லது.

 

கல்வியுடைமை பொருளுடைமை யென்றிரண்டு

செல்வமுஞ் செல்வமெனப்படும் – இல்லார்

குறையிரந்து தம்முன்னர் நிற்போற்  றாமுந்

தலைவணங்கித் தாழாப்பெறின்

 

–நீதிநெறி விளக்கம்

 

பொருள்

 

 

கல்வியும் செல்வமும் இல்லாதோர், அவை இரண்டையும் வேண்டி ஒருவர் முன்னால் எப்படி நிற்பார்களோ அது போல தாமும் தலைவணங்கித் தாழப் பெறின்/ நின்றால்,  அவன் பெற்ற கல்வியையும், செல்வத்தையும் உண்மையான செல்வங்களாகப் பெரியோர் கருதுவர்.

 

சுருக்கமாகச் சொல்லப்போனால், பணிவு என்பதே பெரிய செல்வம். ஏனைய எல்லாம் அதற்குப் பக்க பலமாக இருப்பதே சிறப்பு.

எனது பழைய கட்டுரைகளில் பல கதைகளும் உண்டு. கீழே காண்க

 

கம்பன் பணிவு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கம்பன்-பணிவு/

1 Jun 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact swami_48@yahoo.com. kalidasa_20405. Poet Kalidasa. அடக்கத்தின் சின்னம் கம்பன்; பணிவின் சின்னம் காளிதாசன். கம்ப ராமாயணத்தின் புகழும், காளிதாசன் எழுதிய ரகு வம்சம் என்ற காவியத்தின் புகழும் இன்று இந்தியா முழுதும் பரவிவிட்டது.

பணிவு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பணிவு/

 

T

10 Apr 2016 – கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு! (Post No.2711). modi humility. Compiled by london swaminathan. Date: 10 April, 2016. Post No. 2711. Time uploaded in London :– 8-47. ( Thanks for the Pictures ). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ‘அறிஞர்க்கு அழகு …

அகந்தை | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/அகந்தை/

பணிவு என்ற அணி கொண்ட பண்புடையார் தாமே! அவமானப்பட்டு அழிவார்கள் யாவர்? அகம்பாவத் திமிராலே அழிவாரே ஆவர்! எவராலும் நம்பியே ஏற்கமுடியாதோர்? எந்நாளும் பொய் கூறி ஏய்க்குமவராவார்” (பாடல் 46). சம்ஸ்கிருதத்திலும் இதைக் காண்போம்: கோ வர்த்ததே விநீத: கோ வா …

அடங்காத பெண் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/அடங்காத-பெண்/

10 Apr 2016 – கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு! (Post No.2711). modi humility. Compiled by london swaminathan. Date: 10 April, 2016. Post No. 2711. Time uploaded in London :– 8-47. ( Thanks for the Pictures ). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ‘அறிஞர்க்கு அழகு …

 

5 லகாரம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/5-லகாரம்/ – Translate this page

விநய/ பணிவு. வஸ்த்ரேன வபுஷா வாசா வித்யயா விநயேன ச. வகாரை: பஞ்சாபி: ஹீன நரோநாயாதி கௌரவம். வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்! Leave a comment. by Tamil and Vedas on July 23, 2015 • Permalink. Posted in தமிழ் பண்பாடு, Quotations, Women. Tagged 5 லகாரம், 5 வகாரம், கல்யாணப் பெண், நல்ல மனைவி, மாப்பிள்ளை.

ஜானவி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ஜானவி/ –

4) வித்யா – கல்வி அறிவு 5) வினயா – வினயம் அல்லது எளிமை அல்லது பணிவு இந்த ஐந்தும் ஒருவனின் மதிப்பைக் கூட்டுகின்றன. கௌரவம் அடையக் காரணமாக அமைகின்றன. வஸ்த்ரேண வபுஷா வாசா வித்யா வினயேன ச I வகாரை: பஞ்சாபி: ஹீன: நரோ நாயாதி கௌரவம் II. வஸ்த்ரேண – ஆடையும்

சிலை எதற்கு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/சிலை-எதற்கு/

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Modesty Anecdotes (Translated by London swaminathan). 0_photographers_alinari_rome. Rome Art Gallery. பணிவு, அடக்கம் பற்றி பல மேற்கோள்களும், துணுக்குச் செய்திகளும் உள்ளன. ஏற்கனவே ஆப்ரஹாம் லிங்கன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை எழுதினேன். இதோ மேலும் …

 

‘வணக்கம் வளர்ச்சி தரும், அகந்தை …

https://tamilandvedas.com/…/வணக்கம்-வளர்ச்சி-தர…

28 Feb 2014 – எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவர் உள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து –125. பொருள்: அடக்கம் உடையோர் தேவர். அடங்காதோர் வாழ்வது இருள் சூழ்ந்த நரக வாழ்வு. எல்லோருக்கும் அடக்கம்/ பணிவு தேவை. இது பணக்காரன் இடம் இருந்தால் அவனுக்கு அது மேலும் ஒரு …

 

–SUBHAM–