“எனக்கு ஏன் சிலை வைக்கவில்லை?” (Post No.2705)

walker art gallery

Picture: Walker Art Gallery, Liverpool

Compiled by london swaminathan

Date: 8 April, 2016

Post No. 2705

Time uploaded in London :–  10-05 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

Modesty Anecdotes (Translated by London swaminathan)

 

0_photographers_alinari_rome

Rome Art Gallery

பணிவு, அடக்கம் பற்றி பல மேற்கோள்களும், துணுக்குச் செய்திகளும் உள்ளன. ஏற்கனவே ஆப்ரஹாம் லிங்கன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை எழுதினேன். இதோ மேலும் சில சம்பவங்கள்:–

 

காடோ என்பவர் புகழ்பெற்ற ரோமானிய ராஜ தந்திரி. 2000 ஆண்டுகளுக்கு முன், இதாலியில், ரோம் நகரில் இருந்த அரசியல்வாதி.அவர் சிலை வைப்பது பற்றிச் சொன்னது மிகவும் பிரபலமான பொன்மொழியாகும்:-

 

“எனக்கு சிலை வைப்பதை நான் விரும்பவில்லை. எவன், எதற்காக, இந்த ஆளுக்குச் சிலை வைத்தான்? என்று கேட்பதைவிட, இப்பேற்பட்ட பெரியவருக்கு இன்னும் சிலை வைக்கவில்லையா? ஏன்? என்று மக்கள் கேட்பதையே நான் விரும்புகிறேன்”.

Xxx

da vinci

குறைகுடம் கூத்தாடும்; நிறைகுடம் தழும்பாது

 

லியார்னோடோ டா வின்சி என்பவர் பல கண்டுபிடிப்புகளின் தந்தை, பல ஓவியங்களை வரைந்தவர். அவர் மரணப் படுக்கையில் கிடந்தார். அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட இதாலிய அரசர் அவரைப் பார்க்க வந்தார். உடனே லியார்னாடோ மிகவும் கஷ்டப்பட்டு எழுந்திருக்க முயன்றார். தலையை எவ்வளவு தூரம் தூக்க முடியுமோ அத்தனை உயரம் தூக்கி, “நான் கலைத் துறையில் இன்னும் எவ்வளவோ செய்திருக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் மனிதனையும் கடவுளையும் அவமதித்துவிட்டேன்” என்று பணிவுடன் கூறிவிட்டுத் தலையைச் சாய்த்தார்.

லியார்னாடோ செய்ததோ மகத்தான சாதனைகள். ஆனால் அவருடைய பணிவோ அதையும்விட மகத்தானது.

Xxx

பீதோவன் மியூசியத்தில் பியானோ கருவி

paderewsi_readmore

Picture of Padrewski

 

மேலை உலகத்தின் மாபெரும் இசை மேதை பீதோவன். அவர் பயன்படுத்திய இசைக் கருவிகள் ஜெர்மனியில் பான் நகரத்தில், அவரது சொந்த வீட்டில் உள்ள, ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு அமெரிக்க மாணவர் குழு அதை சுற்றிப் பார்க்கவந்தது. அதில் ஒரு பெண்மணி, அந்தப் பகுதியின் பாதுகாப்பாளரிடம் போய்,  தனது கவர்ச்சி சக்திகளையெல்லாம் பயன்படுத்தி மிகவும் கொஞ்சலாக, ‘நான் இந்தக் கருவியைக் கொஞ்சம் வாசித்துப் பார்க்கலாமா?’ என்று கேட்டார். பாதுகாப்பாளரும் (மியூசியம் க்யூரேட்டர்), ‘அதற்கென்ன ,வாசியுங்களேன்’ என்றார். அந்தப் பெண்ணும் பீதோவன் இயற்றிய புகழ்பெற்ற, ‘மூன்லைட் சொனாட்டா’வை இசைத்து முடித்துவிட்டு, பெருமிதத்துடன், “உலகப் புகழ்பெற்ற இசை மேதைகள், என்னைப் போல இந்த பியானோவை வாசித்திருப்பார்களே” என்றார்.

 

அந்தப் பகுதியின் பாதுகாப்பாளரோ மிகவும் அமைதியாகச் சொன்னார்: “மேடம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெடெரொவ்ஸ்கி இங்கே வந்திருந்தார். இதன் பக்கத்தில் வந்து, பயபக்தியுடன் இதைப் பார்த்தார். கடவுளே! இதைத் தொடும் தகுதி எனக்கு இல்லை” என்று சொல்லிவிட்டுப் போனார்.

பெடெரவ்ஸ்கி, போலந்து நாட்டைச் சேர்ந்த இசை மேதை. உலகப் புகழ்பெற்ற பியானோ கலைஞர். அவருடய பணிவையும் அடக்கத்தையும் பாருங்கள். பீதோவனின் பியானோவைத் தொடக் கூட அஞ்சினார். (நான் இதை ஏற்கனவே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன்- லண்டன் சுவாமிநாதன்).

beethoven piano

–சுபம்–