ராஜ ராஜ சோழன் கதை- எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (Post No. 4910)


WRITTEN by London Swaminathan 

 

Date: 13 April 2018

 

Time uploaded in London –  11-17 am  (British Summer Time)

 

Post No. 4910

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

ராஜ ராஜ சோழன் கதை- எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (Post No. 4910)

 

ஒரு இயக்கத்திலோ ஒரு நாட்டிலோ தலைவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே தொண்டர்களும் இருப்பர். ‘யதா ராஜா ததா ப்ரஜா’- என்று ஸம்ஸ்க்ருதத்திலும் மொழிவர். ஆகவே பெரிய பதவிகளில் இருப்பவர்கள் அடக்கத்தோடு இருக்க வேண்டும். வள்ளுவன் இதை அழகாகச் சொல்கிறான். அடக்கம், பணிவு என்பது மிகவும் போற்றுதற்குரியது. அது செல்வந்தர்களிடத்தில் இருந்தால் இன்னும் சிறப்பு என்பான்.

 

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)

 

பொருள்

பணிவு- அடக்கம் என்பது எல்லோருக்கும் நன்மை தரும்; பணக்காரர்களிடத்தில்  அது இருந்தால், அவர்களுக்கு மேலும் செல்வம் கிடைததது போல இருக்கும்.

 

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது  (குறள் 124)

 

எந்த நிலையிலும் மாறுபாடமல் இருப்பவனின் பணிவு, மலையை விடப் பெரியது, உயர்வானது.

 

‘அற்பனுக்கு வாழ்வு வந்தால்  அர்த்த ராத்ரியில் குடை பிடிபான்’– என்பர். அப்படி கூத்தாடக் கூடாது. இன்னும் சிலரோ சின்னக் கஷ்டம் வந்தாலும் உலகையே பறிகொடுத்தது போல வாடி விடுவர். தோல்வி என்பது – வெற்றியின் முதற்படி என்பதை அவர்கள் உணரார்.

 

ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம் கற்பிக்கிறது என்பதை அவர்கள் அறியார்.

மாபெரும்  பெரிய கோவிலை தஞ்சையில் எழுப்பி அதில் பெருவுடையார் என்ற பிரம்மாண்டமான பிருஹத் ஈஸ்வரர் லிங்கத்தை வைத்த சோழ மன்னன் ராஜ ராஜன், அடக்கத்தின் சின்னம்! பணிவுக்கு எடுத்துக் காட்டு.

 

தஞ்சையில் பிரம்மாண்டமான கோவில் பணிகள் நடந்து கொண்டிருந்தன. பெரிய சிற்பியானவன்,அடைப்பைக்காரன் அருகில் நிற்க, நுணுக்கமான கலை வேலைப்பாடுகளில் ஈடு பட்டிருந்தான். அவன் வெற்றிலை போட்டுத் துப்பும் எச்சிலை அதற்கான வட்டிலில் ஏந்துவது, அவனுக்கு வேண்டிய எடுபிடி வேலைகளைச் செய்வது அடைப்பைக்காரன் பணி.

 

கோவில் பணிகள் செவ்வனே நடக்கின்றனவா என்று ஆர்வத்தோடு பார்த்து வந்தான் ராஜ ராஜ சோழன். பெருந்தச்சனோ, மாமன்னனைக் கவனிக்கவில்லை. அவன் தனது செதுக்கல் வேலைகளில் முனைப்பாக இருந்தான். அந்த நேரத்தில் அ டைப்பைக்காரன் ஒரு சின்ன வேலைக்காக வெளியே போயிருந்தான். மாமன்னன் அவன் அருகில் வந்து அந்தக்  கலை நுணுக்கப் பணிகளை உன்னிப்பாக கவனித்தான். அப்பொழுது அவன் எச்சிலைத் துப்ப அடைப்பைக்கரனை அழைக்க, அவனோ அங்கு இல்லை. மாமன்னன் அந்த எச்சில் துப்பும் தட்டை ஏந்தி துப்புதலை வாங்கிக் கொண்டான். அவன் தன்னிச்சையாக திரும்பிப் பார்த்தபொழுதே மாமன்னன்  —– இந்து மஹா சமுத்திரத் தீவுகளைக் கடற்படை கொண்டு தமிழ் பூமியாக மாற்றிய மன்னன் —- அருகில் நிற்பது  புரிந்தது. காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அலறியிருப்பான்; மன்னன், அவனை ஆஸ்வாசப்படுத்தி இருப்பான் என்பதெல்லாம் எழுதாமலே விளங்கும்.

இனியவை நாற்பது

 

பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்னினிது – என்று இனியவை நாற்பது செப்பும். அதாவது உண்மையைக் கடைப் பிடித்து அடக்கத்துடன் வாழ்வது நல்லது.

 

கல்வியுடைமை பொருளுடைமை யென்றிரண்டு

செல்வமுஞ் செல்வமெனப்படும் – இல்லார்

குறையிரந்து தம்முன்னர் நிற்போற்  றாமுந்

தலைவணங்கித் தாழாப்பெறின்

 

–நீதிநெறி விளக்கம்

 

பொருள்

 

 

கல்வியும் செல்வமும் இல்லாதோர், அவை இரண்டையும் வேண்டி ஒருவர் முன்னால் எப்படி நிற்பார்களோ அது போல தாமும் தலைவணங்கித் தாழப் பெறின்/ நின்றால்,  அவன் பெற்ற கல்வியையும், செல்வத்தையும் உண்மையான செல்வங்களாகப் பெரியோர் கருதுவர்.

 

சுருக்கமாகச் சொல்லப்போனால், பணிவு என்பதே பெரிய செல்வம். ஏனைய எல்லாம் அதற்குப் பக்க பலமாக இருப்பதே சிறப்பு.

எனது பழைய கட்டுரைகளில் பல கதைகளும் உண்டு. கீழே காண்க

 

கம்பன் பணிவு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கம்பன்-பணிவு/

1 Jun 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact swami_48@yahoo.com. kalidasa_20405. Poet Kalidasa. அடக்கத்தின் சின்னம் கம்பன்; பணிவின் சின்னம் காளிதாசன். கம்ப ராமாயணத்தின் புகழும், காளிதாசன் எழுதிய ரகு வம்சம் என்ற காவியத்தின் புகழும் இன்று இந்தியா முழுதும் பரவிவிட்டது.

பணிவு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பணிவு/

 

T

10 Apr 2016 – கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு! (Post No.2711). modi humility. Compiled by london swaminathan. Date: 10 April, 2016. Post No. 2711. Time uploaded in London :– 8-47. ( Thanks for the Pictures ). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ‘அறிஞர்க்கு அழகு …

அகந்தை | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/அகந்தை/

பணிவு என்ற அணி கொண்ட பண்புடையார் தாமே! அவமானப்பட்டு அழிவார்கள் யாவர்? அகம்பாவத் திமிராலே அழிவாரே ஆவர்! எவராலும் நம்பியே ஏற்கமுடியாதோர்? எந்நாளும் பொய் கூறி ஏய்க்குமவராவார்” (பாடல் 46). சம்ஸ்கிருதத்திலும் இதைக் காண்போம்: கோ வர்த்ததே விநீத: கோ வா …

அடங்காத பெண் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/அடங்காத-பெண்/

10 Apr 2016 – கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு! (Post No.2711). modi humility. Compiled by london swaminathan. Date: 10 April, 2016. Post No. 2711. Time uploaded in London :– 8-47. ( Thanks for the Pictures ). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ‘அறிஞர்க்கு அழகு …

 

5 லகாரம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/5-லகாரம்/ – Translate this page

விநய/ பணிவு. வஸ்த்ரேன வபுஷா வாசா வித்யயா விநயேன ச. வகாரை: பஞ்சாபி: ஹீன நரோநாயாதி கௌரவம். வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்! Leave a comment. by Tamil and Vedas on July 23, 2015 • Permalink. Posted in தமிழ் பண்பாடு, Quotations, Women. Tagged 5 லகாரம், 5 வகாரம், கல்யாணப் பெண், நல்ல மனைவி, மாப்பிள்ளை.

ஜானவி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ஜானவி/ –

4) வித்யா – கல்வி அறிவு 5) வினயா – வினயம் அல்லது எளிமை அல்லது பணிவு இந்த ஐந்தும் ஒருவனின் மதிப்பைக் கூட்டுகின்றன. கௌரவம் அடையக் காரணமாக அமைகின்றன. வஸ்த்ரேண வபுஷா வாசா வித்யா வினயேன ச I வகாரை: பஞ்சாபி: ஹீன: நரோ நாயாதி கௌரவம் II. வஸ்த்ரேண – ஆடையும்

சிலை எதற்கு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/சிலை-எதற்கு/

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Modesty Anecdotes (Translated by London swaminathan). 0_photographers_alinari_rome. Rome Art Gallery. பணிவு, அடக்கம் பற்றி பல மேற்கோள்களும், துணுக்குச் செய்திகளும் உள்ளன. ஏற்கனவே ஆப்ரஹாம் லிங்கன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை எழுதினேன். இதோ மேலும் …

 

‘வணக்கம் வளர்ச்சி தரும், அகந்தை …

https://tamilandvedas.com/…/வணக்கம்-வளர்ச்சி-தர…

28 Feb 2014 – எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவர் உள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து –125. பொருள்: அடக்கம் உடையோர் தேவர். அடங்காதோர் வாழ்வது இருள் சூழ்ந்த நரக வாழ்வு. எல்லோருக்கும் அடக்கம்/ பணிவு தேவை. இது பணக்காரன் இடம் இருந்தால் அவனுக்கு அது மேலும் ஒரு …

 

–SUBHAM–

கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு! (Post No.2711)

modi humility

Compiled by london swaminathan

Date: 10 April, 2016

 

Post No. 2711

 

Time uploaded in London :–  8-47

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

‘அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்’- வெற்றிவேற்கை

dinamalar humility

ஸ்கட்லாந்தில் எடின்பர்க் நகரத்தில் கல்லூரி முதல்வர் ஜான் கேர்ன்ஸ் பற்றி அறியாதோர் எவருமிலர். ஒருமுறை ஒரு பெரிய பொதுக்கூட்டத்துக்கு அவர் அழைக்கப்பட்டார். அவர் அடக்கத்தின் சின்னம்; பணிவின் இலக்கணம்; எளிமைக்கு எடுத்துக்காட்டு.

 

அவர் கூட்டத்தில் நுழைந்தவுடன் ஒரே கரகோஷம்! அவர், இது தனக்காக இல்லை, வேறு யாரோ ஒருவருக்கு என்று நினைத்து பின்னால் திரும்பிப் பார்த்தார். ஊர் பேர் தெரியாத ஒரு குள்ளமான ஆசாமி அவர் பின்னால் வந்தார். பிரின்ஸிபால் கேர்ன்ஸ், தலையை பவ்யமாகக் குனிந்து, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து, அவரை முன்னே போகவிட்டார். அவர்தான் அன்றைய கூட்டத்தின் கதாநாயகர் என்று கேர்ன்ஸ் நினைத்தார். இப்படி அவர் பணிவுடன் நடந்ததைப் பார்த்த மக்கள் கூட்டம் விண்ணதிர கைதட்டி ஆரவாரம் செய்தது. அந்த மண்டபமே இடிந்து விழும் அளவுக்கு கரகோஷம்; பின்னர்தான் தெரிந்தது தனக்குத் தான் அந்த வரவேற்பு என்பது! கூட்டத்தை ஏற்பாடு செய்தோர், கேர்ன்ஸை மரியாதையுடன் மேடைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்தனர்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் – வள்ளுவன் குறள் 125.

 

Xxxx

 

Park Ave Lady_profile

முற்றும் உணர்ந்தவரில்லை முழுவதூஉங்

கற்றனம் என்று களியற்க – சிற்றுளியாற்

கல்லும் தகரும், தகரா கனங்குழாய்!

கொல்லுலைக் கூடத்தினால் (நீதிநெறி விளக்கம்)

 

அடக்கமில்லாப் பெண்!

ஆங்கிலப் பேரகராதியை முறையாகத் தயாரித்து பெரும்புகழ் பெற்றவர் சாமுவேல் ஜான்சன். அவருடைய அறையில் சுவையான பல விஷயங்கள் விவாதிக்கப்படும். ஒரு முறை, அந்த விவாதம் ‘பலான’ விஷயங்களை நோக்கித் திசை திரும்பியது. உடனே ஒரு பெண்மணி, மிகவும் நல்ல பத்தினி போல, முகத்தைச் சுழித்துக்கொண்டு, வெளியேறினார்.

உடனே ஜான்சன் சொன்னார்:

“இப்போது போனாளே, ஒரு பதிவிரதை, அவள்தான், இந்த அறையிலேயே அடக்கமில்லாத பெண்”.

 

–சுபம்–

 

“மந்திரி பதவி விலகினால் விலகட்டுமே! ரொம்ப நல்லது” (Post No.2702)

lincoln speeches

Compiled by london swaminathan

Date: 7 April, 2016

 

Post No. 2702

 

Time uploaded in London :–  10-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

அடக்கம் அமரருள் உய்க்கும் – குறள் 121

அடக்கத்தின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன்

ஆப்ரஹாம் லிங்கன் என்பவர் அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிகவும் புகழ்பெற்றவர்; நேர்மையானவர். சமத்துவத்துக்குப் போராடியவர். கறுப்பின மக்களையும் மதித்தவர். அவர் வாழ்நாள் முழுதும் பல சுவை மிகு சம்பவங்கள் நடந்தன. அவருடைய ஒவ்வொரு பேச்சும் மேற்கோள் காட்டக்கூடிய பொன் மொழிகள்!

லிங்கனின் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சர் பதவியை சால்மன் சேஸ் என்பவர் வகித்து வந்தார். ஒரு முக்கிய விஷயத்தில் எல்லா அமைச்சர்களுடனும் இவர் கருத்து வேறுபட்டார். உடனே பதவியை ராஜினாமாச் செய்தார்.

லிங்கனின் ஆலோசகர்கள், “ஐயன்மீர்! சேஸ் அவர்களின் பதவி விலகல் கடிதத்தை ஏற்காதீர்கள். சேஸின் சேவை நாட்டுக்குத் தேவை” – என்று அறிவுரை வழங்கினர்.

உடனே ஆப்ரஹாம் லிங்கன் சொன்னார்:

“அடடா! என்ன தப்புக் கணக்கு இது! ஆனால் உங்களைச் சொல்லிக் குற்றமில்லை; நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் எண்ணியிருந்தேன்; இது சுத்த அபத்தம்.”

 

“நாம் எல்லோரும் நாளைய தினம் பதவியை விட்டு விலகினோம் என்று வைத்துக் கொள்வோம்; ஒரு வாரத்துக்குப் பின்னர் திரும்பி வருவோம்; நம்முடைய இடத்தில் புதியவர்கள் இருப்பார்கள்; நாம் என்ன செய்தோமோ அதையே அவர்களும் திறம்பட செய்வார்கள்; பல பதவிகளில், இப்போதைய மந்திரியைவிட, மேலும் திறமையானவர்கள் கூட இருப்பார்கள்”

“இதைச் சொல்லும்போது எனக்கு ஐரிஷ்காரர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவருடைய முடிபு இதுதான்: ‘இந்த நாட்டில் ஒருவனைப் போலவே மற்றவனும் சிறந்தவன்தான். இன்னும் சொல்லப் போனால் ஒருவன் மற்றொருவனை விஞ்சுமளவுக்குத் திறமைசாலியும் கூட. இந்த அரசாங்கம், எந்த ஒரு தனி மனிதனையும் சார்ந்து நிற்கவில்லை”. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

 

Xxx

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் குறள் 121

ஒரு பிரமுகர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வந்தார். அப்போது அமெரிக்க ஜானாதிபதி ஆப்ரஹாம் லிங்கன், தனது பூட்சுக்கு கறுப்பு வண்ணம் ஏற்றி பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்.

“அடக் கடவுளே! இது என்ன கஷ்டகாலம்; ஜனாதிபதியான நீங்கள் கையெல்லாம் கறுப்புச் சாயம் ஏற, உங்களுடைய பூட்சுகளுக்குப் பாலீஷ் போடுகிறீர்கள்!” – என்று எள்ளி நகையாடினார்.

லிங்கன் அவருக்கே உரித்தான அங்கத பதில்களை அள்ளி வீசினார். “பின்ன என்ன? நான், வேறு யார் பூட்சுகளுக்குப் பாலீஸ் போட வேண்டும் என்கிறீர்கள்?”

வந்தவர் வாயடைத்துப் போனார்.

அடக்கத்தின் சின்னம் ஆப்ரகாம் லிங்கன்.

பணிவின் இலக்கணம் ஆப்ரகாம் லிங்கன். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

–சுபம்–

xxx

நான் பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை – கம்பன்

பணிவு

Written by London swaminathan

Post No.1851; Date: 7 May 2015

Uploaded at London time: 19-51

புலவர்கள் பணிவும் அடக்கமும்!!

வாய் ஆறாக வயிறு களனாக உணரும் அறுசுவைகளோ சிறிது நேரமே நிலைத்து நிற்கும். செவி ஆறாகச் சிந்தை களனாக உணரத் தக்க கவிச் சுவையோ தெவிட்டாத தெள்ளமுதம் ஆகும்.

வால்மீகி முனிவர் வழிப்பறிக் கொள்ளைக்காரனாக இருந்தவர். பின்னர் முனிவர் ஆனவர். காட்டில் வசித்த அவர் ஒருநாள், ஒரு வேடனைக் கண்டார். ஒரு ஆண் பறவையும் பெண் பறவையும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்த நேரத்தில் ஆண் பறவையை வில்லால் அடித்துக் கொன்றான் வேடன். பெண் பறவையோ சோகத்துடன் தனது கணவனை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. உடனே வால்மீகி, அவனைச் சபித்தார். அந்த சாபம் பாடல் வடிவில் வெடித்தது. அட! இது என்ன ஆச்சர்யம்! நான் சபித்த சாபம் “அனுஷ்டுப் சந்தஸ்” என்ற யாப்பில் ஒரு பாடலாக வந்ததே என்று வியந்தார். அதாவது, “சோகத்திலிருந்து ஸ்லோகம்” பிறந்தது.

அந்த நேரத்தில் பிரம்மதேவன் அவர் முன்னிலையில் தோன்றி சகல குண சம்பன்னனான, சத்ய பராக்ரமனான இராமபிரானின் தெய்வீகக் கதையைப் பாடச் சொன்னார். அப்படிப் பிறந்ததே ராமாயணம்.

இப்பேற்பட்ட வால்மீகியின் அற்புதமான ராமயணத்தைப் பாடவே தான் தமிழில் ராமாயணத்தை இயற்ற முயன்றதாக கவிச் சக்ரவர்த்தி கம்பன் கூறுகிறான்:

“வையம் என்னை இகழவும் மாசு எனக்கு

எய்தவும் இது இயம்புவது யாது எனின்

பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே”

இதற்கு முன் தனது செயலானது, ஒரு பெரிய பாற்கடலை பூனை நக்கி, நக்கி குடிக்க முயற்சிப்பது போலத்தான் தன் முயற்சியும் என்று அவை அடக்கத்துடன் கூறுகிறார்:

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!

பூசை=பூனை, காசு இல் கொற்றம்= குற்றமற்ற வெற்றியை உடைய

கவிதை என்பது என்ன?

உள்ளத்திலிருந்து பீறிட்டெழும் உணர்ச்சியே கவிதை. இந்த உணர்ச்சி இரக்கத்தின் காரணமாகவோ, அன்பின் காரணமாகவோ , அழகை ரசிப்பதன் காரணமாகவோ, தார்மீக கோபத்தின் காரணமாகவோ எழக்கூடும்.

காளிதாசன் எழுதிய மாளவிகா அக்னி மித்ரம் என்ற நாடகத்தில் சொல்லுகிறார்:

பழையதெல்லாம் நல்லது; புதியது எல்லாம் பயனற்றது என்று ஒதுக்கி விடாதீர்கள். அறிவுள்ள விமர்சகர்கள் தக்க முறையில் ஆராய்ந்து முடிவு எடுப்பர். மூடர்களோவெனில் மற்றவர் முடிவைச் சார்ந்து நிற்பர் என்கிறார்.

ரகுவம்ச காவியத்துவக்கத்தில் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படது போல சூர்ய வம்சப் பேரரசர்கள் பற்றித் தான் எழுத முயற்சிப்பதாகவும், இது ஒரு பெரிய சமுத்திரத்தை சிறிய படகின் மூலம் கடப்பதற்குச் சமம் என்றும் சொல்லுவார்.

ஆயினும் முன்னோர்கள் (வால்மீகி போன்ற ஆதி கவிகள்) ஏற்கனவே துளைத்த வைரத்தில் நூலை நுழைப்பது தனக்கு சிரமமான பணியல்ல என்றும் பணிவோடு பேசுகிறார்.

ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹாம் பஹுஞ்சே கவி

இந்தியில் ஒரு பழமொழி உண்டு:

ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹாம் பஹுஞ்சே கவி—என்று. சூரியன் (ரவி) பூக முடியாத இடத்திலும் கவி(ஞன்) புகுந்து விடுவான் என்பது இதன் பொருள். இதற்கு உதாரணமானவர்கள்: வால்மீகி, காளிதாசன், கம்பன், இளங்கோ, பாரதி முதலியவர்கள் ஆவர்.

பெரிய கலைக் களஞ்சியத்தை – ப்ருஹத் ஜாதகம் – ப்ருஹத் சம்ஹிதா முதலிய நூல்களை எழுதிய வராஹமிகிரர்,

சோதிட சாத்திரம் என்னும் பாற்கடலை, எனது புத்தி என்னும் மந்தர மலையால் கடைந்து, உலகிற்கு சந்திரன் போல ஒளியூட்டக்கூடிய சாத்திரத்தைக் கொடுக்கிறேன். முன்னோர் சொன்ன எல்லாவற்றையும் சுருக்கித் தந்துள்ளேன். அவற்றுடன் எனது நூலை ஒப்பிட்டு, தள்ளுவன தள்ளி கொள்ளுவன கொள்ளுங்கள் என்று அடக்கமாக வாசிக்கிறார்.

கவிஞர்கள் மாபெரும் அறிவாளிகள்; அதே நேரத்தில் மிக மிகப் பணிவுடையோர்.

கவிஞர்கள் இறக்கலாம்; கவிதைகள் இறக்காது; அவை அமரத்துவம் வாய்ந்தவை!

ஆசை பற்றி அறையலுற்றேன்…..

கம்பன்1

கட்டுரையாளர் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை:- 1183; தேதி:–20 July 2014.

கம்பன் பாடிய ராமாயணப் பாடலில் பால காண்டத்தில் மிகவும் பணிவோடு சொல்கிறான்:

ஓசைபெற்று உயர்பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ! (4)

பொருள்:– பெரிய புனிதமான திருப் பாற்கடலை ஒரு பூனை நக்கிக் குடிப்பது போல, குற்றமற்ற, வீரம் மிக்க ராமன் கதையை சொல்லவேண்டும் என்ற ஆசையால் நான் சொல்கிறேன்.

பின்னர் ஒரு பாடலில் மூவர் பாடிய ராமாயணத்தில் முதல்வர் (வால்மீகி) பாடியதை வைத்துப் பாடியதாகக் கூறுகிறான். அந்த முதல்வர் வால்மீகி என்பதை அதற்குப் பின் வரும் பாடலில் பெயரைச் சொல்லியே உறுதிப் படுத்துகிறான். ஆனால் அந்த மூவர் யார் என்பதற்கு உரைகாரர்கள் வசிஷ்டர், போதாயனர், வால்மீகி ஆகியோர் எழுதியவை என்கின்றனர். நமக்குக் கிடைத்திருப்பதோ வால்மீகி ராமாயணம் ஒன்றுதான். காளிதாசன் ரகுவம்சத்தில் எழுதியதைக் கம்பன் திரும்பச் சொன்னானோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. இதோ கீழ்வரும் பாடலைப் படித்து நீங்களே முடிவு செய்யுங்கள்.

கம்பன்3

முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ –(பால. 8)

பொருள்:– முத்தமிழ் நூல்களைக் கற்றுத் தேர்ந்த புலவர்களுக்கு எல்லாம் ஒரு பெரிய அறிவிப்பு:– பைத்தியக்காரர்கள் சொன்னதையும், அரைவேக்காடுகள் சொன்னதையும், பக்தர்கள் சொன்னதையும் ஆராயலாமோ!!

தேவ பாடையின் இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ! (10)

பொருள்:– தேவ பாஷையான — (கடவுளரைப் போற்றும் வேதம் உள்ள மொழி) —-சம்ஸ்கிருதத்தில் மூவர் —-(வால்மீகி, வசிட்டர், போதாயனர்) — இராமன் கதையைப் பாடினர். அவர்களுள் முதன்மையான நாவல்லமை மிக்கோனைப் — (வால்மீகி) – பின்பற்றி தமிழில் நான் பாடுகிறேன்.

raghuvamsa_of_kalidasa

காளிதாசன் ரகுவம்சம்

க்வ சூர்யப்ரபவோ வம்ச: க்வ ச அல்பவிஷயோ மதி:
திதீர்ஷு:துஷ்தரம் மோஹாத் உடுபேனாஸ்மி சாகரம்

பொருள்:– சூரியனிடமிருந்து இந்த வம்சம் தோன்றியது. அந்த வம்சத்தின் பெருமையோ சிறந்தது. நானோ மிகக் குறைவான அறிவுடையவன். கடக்க முடியாத சமுத்திரத்தை ஒரு சிறு படகின் மூலம் ஒருவன் கடக்க விரும்புவது போல என் சிறு மதியால் கடல் போன்ற இந்த சரித்திரத்தைக் கூறப் போகிறேன்.

மந்த: கவியச: ப்ரார்த்தி கமிஷ்யாம் உபஹாஸ்யதாம்
ப்ராம்சு லப்யே பலே லோபாத் உத்பாஹுரிவ வாமன:

பொருள்:– குறைந்த அறிவுடைய நான் கவியின் புகழை அடைய விரும்புகிறேன். உயரமான மனிதன் மட்டுமே அடையக்கூடிய பழத்தை குள்ளமான நான் கைகளை நீட்டிப் பறிக்க முயலும்போது பரிகசிக்கப்படும் நிலையை அடைவேன்.

அதவா க்ருதவாக் தூரே வம்சேஸ்மின் பூர்வசூரிபி:
மணௌ வஜ்ர சாமுத்கீர்ணே சூத்ரயேவாஸ்தி மே கதி:

நான் காவியம் இயற்றும் திறமை இல்லாவிடினும் முன்னோர் சென்ற வழியில் சென்று என் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வேன். எப்படி வஜ்ர ஊசியினால் துளைக்கப்பட்ட துவாரத்தில் நூல் எளிதில் செல்லுமோ அப்படி முன்னோர் —- (வால்மீகி) — போட்ட துளை வழியாகச் செல்வேன்.
—ரகுவம்சம் முதல் சர்கம் பாடல் 2, 3, 4

மேலும் இரண்டு ஸ்லோகங்களில் ரகுவம்ச மன்னர்களின் குணங்கள் தன் காதில் விழுந்துவிட்டதால், ஏற்பட்ட உந்துதலால் துணிச்சலாக இந்தக் காவிய முயற்சியில் இறங்கியதாகவும் தனக்கு சொற்செல்வம் குறைவே என்றும் பணிவுடன் கூறுகிறார். தங்கம் சுத்தமானதா இல்லையா என்பதை அக்னியில் (தீயில்) போட்டு பரிசோதிப்பது போல பெரியோர்கள் என் காவியத்தைப் பரிசோதிக்கட்டும் என்கிறார்.

கம்பனையும் காளிதாசனையும் படிக்கும்போது கம்பன் காளிதாசனைப் பின்பற்றினானோ ( அறிமுகப் பாடல்களில் மட்டும்) என்று எண்ண வேண்டி இருக்கிறது. ஆனால் இரு புலவர்களும் எவ்வளவு பணிவோடு துவங்கினர் ! அவை இரண்டும் எப்படி உலகப் பிரசித்தம் அடைந்து விட்டன!!

‘வித்யா விநயன்ன சம்பதே’= பணிவால் கிடைப்பதே கல்வி; கல்விக்கு இலக்கணம் பணிவு!

இந்த நேரத்தில் நினைவுக்கு வரும் மேலும் ஒரு பாடல் ஆதிசங்கரரின் அபூர்வ சௌந்தர்ய லஹரி (அழகின் அலைகள்) துதியில் வரும் ஒரு பாடலாகும்.

lahari

சௌந்தர்ய லஹரி

ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி முத்ரா விரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய – க்ரமண – மசனாத்யாஹுதி – விதி:
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில – மாத்மார்ப்பண – த்ருசா
ஸபர்யா – பர்யாயஸ் – தவ பவது யன்மே விலசிதம்
–சௌந்தர்ய லஹரி பாடல் 27

ஆதிசங்கரர் கூறுகிறார்:

தாயே! நான் ஆத்மாவை உனக்கு அர்ப்பணித்துவிட்டேன். நான் என்ன பேசினாலும் அதையெல்லாம் உனது ஜபமாகக் கொள்ளவேண்டும். நான் என் கைகளால் செய்யும் அத்தனையையும் உனது முத்திரைகளின் விளக்கமாகக் கொள்ள வேண்டும். நான் நடப்பதையெல்லாம் உன்னை வலம் வருவதாகக் கொள்ள வேண்டும். நான் சாப்பிடுவதை எல்லாம் உனக்கு வேள்வித் தீயில் ஆகுதி செய்ததாகக் கொள்ள வேண்டும், நான் படுத்துக் கொண்டால் அதைக் கீழே விழுந்து வணங்கியதாகக் கொள்ள வேண்டும். எனது செயல்கள் அனைத்தும் உனது பூஜையாகக் கொள்ள வேண்டுகிறேன்.

இப்படிப்பட்ட ஒரு நிலை வந்துவிட்டால் — எதையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யும் நிலை வந்துவிட்டால் — எல்லோரும் சங்கரர் ஆகிவிடுவர்.

வாழ்க கம்பன், காளிதாசன், ஆதி சங்கரன்!!!

‘வணக்கம் வளர்ச்சி தரும், அகந்தை அழிவைத் தரும்’

Obama_bowing_in_Tokyo

US President Obama bowing to Japanese Emperor.

எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-873 தேதி:- 28 பிப்ரவரி 2014

ஆதி சங்கரரின் வினா- விடை ஸ்லோகம் (பிரஸ்ன உத்தர ரத்ன மாலிகா) அற்புதமான கருத்துக்களை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. 67 ஸ்லோகங்களில் எதைப் படித்தாலும் அது திருக்குறளிலும் இருப்பதைக் கண்டு அகம் மகிழ்கிறது, உளம் குளிர்கிறது.

இதோ 200 கேள்விகளில் ஒன்று:
கேள்வி:- யார் முன்னேறுவார்?
பதில்:- அடக்கம் உடையோர்

கேள்வி:- யார் தேய்ந்து போவார்?
பதில்: அகந்தை உடையோர்.

இதை லண்டனில் உள்ள எனது இனிய நண்பர் மீனாட்சிசுந்தரம் ராஜகோபாலன் அழகாகக் கவிதை வடிவில் (67 பாடல்களையும்!) தருகிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதோ:

“பவ வாழ்வில் உயர்வென்னும் பலன் அடைவார் யாரே?
பணிவு என்ற அணி கொண்ட பண்புடையார் தாமே!
அவமானப்பட்டு அழிவார்கள் யாவர்?
அகம்பாவத் திமிராலே அழிவாரே ஆவர்!
எவராலும் நம்பியே ஏற்கமுடியாதோர்?
எந்நாளும் பொய் கூறி ஏய்க்குமவராவார்” (பாடல் 46)

சம்ஸ்கிருதத்திலும் இதைக் காண்போம்:
கோ வர்த்ததே விநீத: கோ வா ஹீயதே யோத்ருப்த:
கோ ந ப்ரத்யேதவ்யோ ப்ரூதே யஸ்சான்ருதம் ஸஸவத்.

Touching-Feet
Prime Minister Manmohan Sing bowing to a Hindu Swamiji.

இரண்டு கதைகள்

யாருக்காவது சம்ஸ்கிருதத்தில் உள்ள கீதை, வேதம், உபநிஷத்துக்களைப் படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தால் அவர்கள் ராமகிருஷ்ண உபதேச மஞ்சரியைப் படித்தால் போதும். கதைகள், உவமைகள் மூலம் அத்தனையும் சொல்லிக் கொடுத்து விடுவார்!. இதோ அவர் சொல்லும் கதை:
“ஒரு சீடனுக்கு அவனுடைய குரு மீது அபார பக்தி.. அவர் கூப்பிட்ட உடனே, இருவருக்கும் இடையில் இருந்த நதியைக் கடக்கவேண்டி இருந்தது. குருவின் பெயரைச் சொல்லிக் கொண்டே தண்ணீரில் நடந்து வந்து குருவை நமஸ்கரித்தார். குருவுக்கு அகந்தை வந்து விட்டது. என் பெயருக்கே இவ்வளவு சக்தி இருந்தால் அதைத் தரித்து இருக்கும் எனக்கு எவ்வளவு சக்தி இருக்கும் என்று எண்ணீனார். அவரது சக்தியைச் சோதித்துப் பார்க்க மறு நாள் நதியில் இறங்கினார். “நான், நான், நான்”– எவ்வளவு சக்தி உடையவன் என்று எண்ணிய மாத்திரத்தில் அவர் நதிக்கடியில் போய்ச்சேர்ந்தார். பாவம் நீந்தக் கூடத் தெரியாது!

நம்பிக்கை மகத்தான அற்புதங்களைச் சாதிக்கும். அகந்தை மனிதனை அழித்து விடும்”.

அவர் சொன்ன இன்னொரு கதை:

“சில புத்தகங்களைப் படித்து விட்டவுடனே சிலருக்கு அஹம்காரம் (யான், எனது என்னும் செருக்கு) தலைக்கு ஏறி விடுகிறது. ஒரு நாள் நான் காளிகிருஷ்ண தாகூருடன் கடவுள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தேன். உடனே அவர் சொன்னார், “ அதான், எனக்குத் தெரியுமே” என்று. நான் உடனே அவரிடம் சொன்னேன்: டில்லிக்குப் போய்விட்டு வந்தவன் அதைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்வானா? ஒரு நல்ல கனவான் நான் தான் பெரிய கனவான் – என்று கூறிக் கொள்கிறாரா?

“கடவுளே! ஒருவனுக்கு அகந்தை வந்து விட்டால் தலைக் கிறுக்கு வந்து விடுகிறது! அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் அன்றோ! தட்சிணேஸ்வரத்தில் கோவில் தோட்டத்தைக் கூட்டிச் சுத்தம் செய்யும் ஒரு பெண்மணி இருந்தார். அவளுக்கு கொஞ்சம் நகைகள் கிடைத்துவிட்டன. அவ்வளவுதான்! தலை–கால் புரியவில்லை! ஒரு நாள் தோட்டத்தில் சிலர் அந்தப் பெண்மணியைக் கடந்து போய்க் கொண்டு இருந்தார்கள். இந்தப் பெண் அவர்களிடம் வலியப் போய், : ஏய்! கண் தெரியவில்லையா? விலகிப் போங்கடா— என்றாள். தோட்டத்தைக் கூட்டிப் பெருக்கும் பெண்ணுக்கே இவ்வளவு திமிர் என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?”

(ஆதாரம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்ன கதைகள். ஆங்கிலப் புத்தகம்).

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்கள் எல்லா மொழிகளிலும் கிடைக்கும். சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடம் எல்லா புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.

baba-ramdev-nitin-gadkari

BJP leader Nithin Gadkri bowing to Yoga Guru Baba Ramdev.

தமிழ்ப் புலவன்– தெய்வப் புலவன்– வள்ளுவன் செப்புவதும் அஃதே:

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆர் இருள் உய்த்து விடும் —121

மற்றொரு குறளில்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவர் உள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து –125

பொருள்: அடக்கம் உடையோர் தேவர். அடங்காதோர் வாழ்வது இருள் சூழ்ந்த நரக வாழ்வு. எல்லோருக்கும் அடக்கம்/ பணிவு தேவை. இது பணக்காரன் இடம் இருந்தால் அவனுக்கு அது மேலும் ஒரு செல்வம் போலத் திகழும்!

இது மட்டுமா? நன்றாக நாக்கை அடக்குங்கள் என்று எச்சரிக்கவும் செய்கிறார்: ஆமை போல் ஐந்து புலன்களையும் அடக்குங்கள்; யா காவாராயினும் நா காக்க= அட! அட்லீஸ்ட் நாக்கையாவது அடக்குங்களேன். ஏன் என்றால் தீயினால் சுட்ட புண் உள் ஆறும், நாவினால் சுட்டதோ வடுப் போல் என்றும் இருக்கும் என்றும் பகர்வார்.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்றுப் பிற—95

பணிவுன் இனிய சொல்லற்றலும் ஒருவனுக்கு இருந்து விட்டால் அவனுக்கு வேறு எந்த அணிகலன்களும் தேவையே இல்லை!

கிருஷ்ண பரமாத்மாவும் பகவத் கீதை 16:1 முதல் 3 ஸ்லோகங்களில் 26 தெய்வீக குணஙகளைப் பட்டியல் இடுகிறார். அதில் புறக்கரணங்களை அடக்குதல் (தம:), பணிவு (ஹ்ரீ:/ நாணம்) ஆகிய இரண்டையும் சேர்த்துள்ளார்.

baba- kalam

Ex President of India Abdul Kalam and Sri Sathya Sai Baba.

தமிழ் இலக்கியத்தில் தலை சாய்ந்த நெற்கதிர்களைப் பணிவுக்கு உவமையாக்குவர் புலவர் பெருமக்கள். கதிர்கள் கனம் தாங்காமல் அவைகள் மணப் பெண் போல தலை குனிந்து பணிவுடன் நிற்கும். நற்குடியில் பிறந்த கற்றோரும், செல்வந்தரும் இது போல அடக்கத்துடன் செயல்படுவராம்.

Contact: swami_48@yahoo.com

யாருக்கு எது அலங்காரம்?

Please click here for the article:

21சம்ஸ்கிருத செல்வம்

humility_servanthood

jeeyar visit to ahobilam

Images of humility from various websites;thanks.