WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com
Date: 28 April 2019
British Summer Time uploaded in London – 17-44
Post No. 6320
Pictures shown here
are taken from various sources including google, Wikipedia, Facebook friends
and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND
tamilandvedas.com))
ஞானம், அறிவு பற்றி 31 பொன் மொழிகள்
சுபமுகூர்த்த தினங்கள்- 2, 8, 10, 16, 17, 23, 9
அமாவாசை- மே 4; பௌர்ணமி- மே 18
ஏகாதசி விரத நாட்கள்- 15, 30
பண்டிகை தினங்கள்- மே 1- மே தினம் ; 4- அக்னி நக்ஷத்ரம் ஆரம்பம் ; 7- அக்ஷய த்ருத்யை ; 18- வைகாசி விசாகம் ; மே 23- இந்தியத் தேர்தல் முடிவுகள் ; 29- அக்னி நக்ஷத்திரம் முடிவு.
மே 1 புதன் கிழமை
அஜ்ஞானேனாவ்ருதம் ஜ்ஞான தேன முஹ்யந்தி
ஜந்தவஹ- பகவத் கீதை 5-15
அஞ்ஞானத்தினால் ஞானம்
மறைக்கப்பட்டுள்ளது; அதனால் பிராணிகள் மோஹத்தை அடைகின்றன.
மே 2 வியாழக் கிழமை
அஞ்ஞானம் அகன்றவுடன் ஞானம் சூரியனைப்
போல பிரகாசிக்கிறது-பகவத் கீதை 5-16
மே 3 வெள்ளிக் கிழமை
ஆத்மஞானம் பரம் ஞானம்- தன்னைப் பற்றிய
அறிவே சிறந்தது- ஸம்ஸ்க்ருதப் பொன்மொழி
மே 4 சனிக் கிழமை
எல்லா உயிர்களிடத்திலும் தன்னைக்
காண்பவனே உண்மையில் காண்பவன்
ஆத்வத்ஸர்வபூதேஷு யஹ பஸ்யதி ஸ பஸ்யதி-
சாணக்கிய நீதி 6-2; ஹிதோபதேசம் 1-14
மே 5 ஞாயிற்றுக் கிழமை
ஒன்றாகக் காண்பதே காட்சி- அவ்வையார்
மே 6 திங்கட் கிழமை
ஞானம் ஹி தபஸஹ பலம்- பாரத மஞ்சரி
ஞானமே தவத்தின் பலன்.
மே 7 செவ்வாய்க் கிழமை
ஞானலவதுர்விதக்தம் ப்ரஹ்மாபி நரம் ந ரஞ்சயதி- நீதி சதகம் 2; ஹிதோபதேசம்
1-56
அறிவற்றவனை பிரம்மா கூட திருப்தி செய்ய
முடியாது
மே 8 புதன் கிழமை
அறிவற்ற மக்கள் விலங்குகளுக்கு சமம்-
ஸம்ஸ்க்ருதப் பொன்மொழி
ஞானேன ஹீனாஹா பசுபிஸ்ஸமானாஹா
மே 9 வியாழக் கிழமை
ஞானாக்னிஹி ஸர்வகர்மானி பஸ்மஸாத்
குருதே – பகவத் கீதை 4-37
எல்லா கருமத்தையும் ஞானத் தீ
சாம்பலாக்கிவிடும்
மே 10 வெள்ளிக் கிழமை
ந ஹி ஞானேன ஸத்ருசம் பவித்ரஹ – பகவத்
கீதை 4-38
இவ்வுலகில் ஞானம் போல பரிசுத்தம்
செய்யும் பொருள் கிடையாது.
மே 11 சனிக் கிழமை
ந ஹி ஸர்வஹ ஸர்வம் ஜானாதி- முத்ரா
ராக்ஷசம்
எல்லோருக்கும் எல்லாம் தெரியாது.
மே 12 ஞாயிற்றுக் கிழமை
நாஸ்தி ஞானாத் பரம் ஸுகம் – சாணக்கிய
நீதி 2-12
அறிவைவிட இன்பம் தருவது எதுவும் இல்லை.
மே 13 திங்கட் கிழமை
எந்த அளவுக்குக் கேட்கிறானோ அந்த
அளவுக்கே ஒருவனின் அறிவு (யஹ ப்ராயஹ் ஸ்ரூயதே யாத்ருக்தத்தாத்ருகவகம்யதே-
ஸம்ஸ்க்ருதப் பொன்மொழி
மே 14 செவ்வாய்க் கிழமை
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு
(வாக்குண்டாம் அவ்வையார்)
ஆம்பல் மலரின் உயரத்தைத் தீர்மானிப்பது
குளத்தில் உள்ள நீர் மட்டம்; மனிதனின் விவேகத்தைத் தீர்மானிப்பது
அவன் கற்ற நூல்கள்.
மே 15 புதன் கிழமை
அறிவற்றங் காக்குங் கருவி- தமிழ் வேதம்
திருக்குறள் 421
அறிவு என்பது ஒருவனுக்கு அழிவு வராமல்
காக்கும் கருவி ஆகும்
மே 16 வியாழக் கிழமை
சென்றவிடத்தில் செலவிடா தீதொரீ இ
நன்றின்பால் உய்ப்பதறிவு– தமிழ் வேதம்
திருக்குறள் 422
மனம்போன போக்கில் போகாமல் தீயதை
விலக்கி நல்லவற்றில் மனதைச் செலுத்துவதே அறிவு-தமிழ் வேதம் திருக்குறள் 422
மே 17 வெள்ளிக் கிழமை
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு-தமிழ் வேதம்
திருக்குறள் 423
யார் எதைச் சொன்னாலும் உண்மையை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதே அறிவு
மே 18 சனிக் கிழமை
எண்பொருளவாகச் செலச்சொல்லித்
தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பதறிவு –தமிழ் வேதம்
திருக்குறள் 424
அரிய பொருளை எளிமையாகச் சொல்; பிறருடைய நுட்பமான கருத்துக்களை ஆராய்ந்து காண்க
மே 19 ஞாயிற்றுக் கிழமை
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு- 425
உலகத்தை நட்பாக்கிக் கொள்வது அறிவு;
மலர்தலும் கூம்பலும் இல்லாமல் ஒரே மாதிரி எந்நேரத்திலும் இருத்தல் அறிவு.
மே 20 திங்கட் கிழமை
எவ்வதுறைவது உலகம் உலகத்தோடு
அவ்வதுறைவது அறிவு- 26
உலகத்தோடு ஒட்ட ஒழுகு
மே 21 செவ்வாய்க் கிழமை
அறிவுடையார் ஆவதறிவார் அறிவிலார்
அஃதறி கல்லாதவர் 427
பின்வருவனவற்றை முன்கூட்டியே எண்ணுபவர்
அறிவுடையார்; அப்படி அறியாதோர் அறிவில்லாதவர்.
மே 22 புதன் கிழமை
அஞ்சுவது அஞ்சாமை பேதமை- 428 அஞ்சத்தக்க விஷயங்களுக்கு பயப்படாமல் இருப்பது முட்டாள்தனம்.
மே 23 வியாழக் கிழமை
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை
அதிரவருவதோர் நோய்- 429
முன்கூட்டியே காக்க வல்ல
அறிவுடையோர்க்கு நடுங்க வாய்க்கும் நோய் திடீரென வராது.
மே 24 வெள்ளிக் கிழமை
அறிவுடையார் எல்லாம் உடையார் – 430
அறிவுடையோர்க்கு செல்வம் இல்லாவிடினும்
எல்லாம் இருக்கும்.
மே 25 சனிக் கிழமை
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்- 411;
நல்லதைக் கேட்கும் கேள்விச் செல்வமே சிறந்த செல்வம்
மே 26 ஞாயிற்றுக் கிழமை
செவிக்குணவில்லாத போழ்து
சிறிதுவயிற்றுக்கும் ஈயப்படும் -412
காதில் கேட்க நல்ல விஷயங்கள்
இல்லாதபோது சிறிதளவு சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டும்
மே 27 திங்கட் கிழமை
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை- திருமூலர் திருமந்திரம்.
மே 28 செவ்வாய்க் கிழமை
மடையனைவிட
குருடன் மேல் (அந்தோ வரோ நைவ ச ஞானஹீனஹ- கஹாவத்ரத்னாகர்)
மே 29 புதன் கிழமை
கிம்
கிராதோ விஜானீயாத்மௌக்திக்தக்ஸ்ய மஹார்கதாம் – விலை மதிப்பற்ற முத்தின் மதிப்பு
வேடனுக்குத் தெரியுமா?–கஹாவத்ரத்னாகர்
மே 30 வியாழக் கிழமை
கழுதைக்குத்
தெரியுமா கற்பூர வாசனை?–
தமிழ்ப் பழமொழி
மே 31 வெள்ளிக் கிழமை
ஞானமேவ
பராசக்திஹி – அறிவே பலம் (சம்ஸ்க்ருத சுபாஷிதம்)
புத்திமான்
பலவான் ஆவான் — பழமொழி
–subham—