ஔவைப் பாட்டியின் வாசகங்களைக் கண்டுபிடியுங்கள் (Post No.7083)

WRITTEN  by London swaminathan
swami_48@yahoo.com

Date: 11 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8-29 am
Post No. 7083

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கூடியமட்டிலும் சொற்கள் பிரிக்கப்படவில்லை. மேலும் கீழுமாக, குறுக்கும் நெடுக்குமாகப் பாருங்கள்; சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் கற்றது இவை.

Answers

ம் செ ய விரு ம்பு

ஆறு  வது சினம்

ல்வ  து கர  வேல்

ஈவ  து வில க்கே ல்

டை   து விள  ம்பே  ல்

ஊக்    து கை  விடே  ல்

எண் எழு த் து இ கழேல்

ஏற்பது இகழ்ச்சி

ஐயமிட்டு உண்

ஒப்புர வொழுகு

ஓதுவது ஒழியேல்

–subham–

காந்திஜியிடம் புரபஸர் கீதையைப் பற்றிக் கேட்ட கேள்வி! ( (Post No.7080

Written by S Nagarajan


swami_48@yahoo.com

Date: 10 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-23
Post No. 7080

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ச.நாகராஜன்

காந்திஜி ஒரு கர்மயோகி. கீதை வழி நடப்பவர்.

அவரைப் பார்க்க ஆசிரமத்திற்கு ஒரு பேராசிரியர் வந்தார்.

அவரை வணங்கிய புரபஸர், “நீங்கள் கீதையை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கு தயவுசெய்து கீதையின் சாரத்தை விளக்க முடியுமா?” என்று கேட்டார்.

அவரை உற்று நோக்கிய காந்திஜி, “புரபஸர், எனக்காக ஒன்றை நீங்கள் செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

“நிச்சயமாக” சந்தோஷத்துடன் கூறினார் புரபஸர்.

முற்றத்தில் குவிந்து கிடந்திருந்த செங்கல் அடுக்கை அவரிடம் காண்பித்த காந்திஜி, “இதை தயவுசெய்து எதிர்ப் பக்கம் போட்டு விட முடியுமா?” என்றார்.

திகைத்தார் புரபஸர். திக்கித் திணறியவாறே, “ உம், நான் உங்களிடம் முக்கியமான ஒரு  கேள்வியைக் கேட்டேன். அதற்கு நீங்கள் மட்டும் தான் பதில் கூற முடியும் என்று எண்ணுகிறேன்” என்றார்.

“ஆம், அதைப் பற்றிப் பிறகு பேசுவோம்.இப்போது தயவு செய்து அந்த செங்கல்களை…” காந்திஜி இழுத்தார்.

புரபஸருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. குழப்பமடைந்தார். ஆனால் மஹாத்மா சொன்னபடி செய்ய விழைந்தார்.

 செங்கற்களை எடுத்து எதிர்ப்பக்கம் கொண்டு சென்று அடுக்கினார்.

வேர்த்து விறுவிறுக்க காந்திஜியிடம் வந்த புரபஸர், ‘வேலை முடிந்து விட்டது’ என்று கூறினார்.

காந்திஜியே நேரில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

“அடடா, இப்படிச் செய்யச் சொல்லவில்லையே நான்!” என்று ஆச்சரியப்படும் குரலில் கூறினார் காந்திஜி.

“நான் எதிர்ப்பக்கம் என்று சொன்ன போது நேர் எதிரில் என்று சொல்லவில்லை. அந்த மூலையில் எதிர்ப்பக்கத்தில் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்.. அதொ அந்த வடக்குப் பக்க மூலையில்…”

பெருமூச்சு விட்ட புரபஸர், “அதனால் என்ன, இதோ அந்தப் பக்கம் போட்டு விடுகிறேன்” என்று மறுபடியும் தன் வேலையை ஆரம்பித்தார்.

அவருக்கு மேலும் கீழும் மூச்சு வாங்க ஆரம்பித்தது. கைகளில் எல்லாம் சிராய்ப்பு. முதுகில் வலி.

காந்திஜியிடம் மீண்டும் வந்த அவர், “பாபுஜி, வேலை முடிந்து விட்டது, இப்போது நீங்கள் என் கேள்விக்கு…” என்று சொல்ல ஆரம்பித்த போது  இடைமறித்தார் காந்திஜி.

“இந்த மூலையில் இருக்கும் செங்கல்கள் தோட்டத்திற்குப் போகும் வழியை அல்லவா அடைக்கிறது. இதை கிழக்குப் பக்க மூலையில் போட்டு விடலாமே” – காந்திஜி புரபஸரை நோக்கி இப்படிக் கூறினார்.

தனது நிதானத்தை இழந்த புரபஸர், “முதலில் அந்த இடத்தில் தானே இவை இருந்தன! நான் ஒரு புரபஸர், பாபுஜி!  உங்களிடம் ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காண வந்தேன். ஆனால் நீங்களோ என்னை கேவலம் ஒரு கூலி வேலைக்காரன் போல நடத்துகிறீர்கள். ஒரு வேளை  நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியாது என்று எண்ணுகிறீர்களோ அல்லது உங்களால் கீதையின் சாரத்தை நான் புரிந்து கொள்ளும்படி விளக்க முடியாதோ..” எனப் பொங்கினார்.

“அன்புள்ள நண்பரே, நான் உங்களுக்கு நடைமுறை விளக்கத்தை அல்லவா இப்போது அளித்தேன். கீதையின் முக்கியமான உபதேசத்தில் அல்லவா உங்களை ஈடுபடுத்தினேன் இவ்வளவு நேரமும்” என்ற காந்திஜி, “ கீதையின் சாரம் இது தான் – உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை  செய்யுங்கள். வேறு எதையும் நாடிச் செல்லாதீர்கள்” (Gita’s Central Teaching : –  Do your allotted task. Do not seek anyting else) என்று முடித்தார்.

*

அருமையான இந்த சம்பவத்தை ஜே.பி. வாஸ்வானி கீதையை விளக்கும் தனது  புத்தகமான The Seven Commandments of the Bhagavad Gita என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

அது என்ன செவன் கமாண்ட்மென்ட்ஸ்?

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

***

Gandhiji in Mauritius- Puvana Sharma’s Picture

இசையில் எண் 8; யோகத்தில் எண் 8 (Post No.7079)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 10 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-06
Post No. 7079

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

பெண்கள் 4 வகை- நாட்டிய சாஸ்திரக் கூற்று! (Post No.7078)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 10 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 9-17 AM
Post No. 7078

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

தங்கம் 4 வகை, பெண்கள் 4 வகை …



https://tamilandvedas.com › 2019/05/18 › தங்கம்-…

18 May 2019 – தங்கம் 4 வகைபெண்கள் 4 வகை, பிரளயம் 4 வகை! (Post No.6405). Written by London … This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)).

பெண்களின் ஏழு வகைகள் | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › பெண்களின…

  1.  

23 Jun 2012 – Tagged with பெண்களின் ஏழு வகைகள் … பெண்கள் எத்தனை வகை? … நாயிகா: கணவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவள் 4.

XXX SUBHAM XXX

கண்ணின் ‘மாயப்பார்வை’! ஆயிரம் அறிஞர்களின் சட்டங்கள்!!! (Post No.7076)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 9 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 17-15
Post No. 7076

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ச.நாகராஜன்

கலீல் ஜிப்ரான் லெபனானிய அமெரிக்கர். 1883ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி பிறந்தார். அமெரிக்காவில் குடியேறினார். கமிலா ரெஹ்மான் அவரது தாய். அவரது தாயின் மூன்றாவது கணவருக்குப் பிறந்தவர் அவர்.

காச நோயால் 1931, ஏப்ரல் மாதம் ̀10ஆம் தேதி அவரி நியூயார்க்கில் மரணமடைந்தார்.

ஜிப்ரான் ஒரு தத்துவ ஞானி. எழுத்தாளர். நாவலாசிரியர். ஓவியர்.

பொருள் பொதிந்த குட்டிக் கதைகளை எழுதும் அவரது பாணி தனி பாணி.

இரண்டு குட்டி உரைநடைக் கதைகளைக் காண்போம்.

கண்ணின் ‘மாயப்பார்வை’

கண் ஒரு நாள் சொன்னது : “இந்தப் பள்ளத்தாக்குகளுக்கு வெகு தொலைவில் நான் ஒரு மலையைப் பார்க்கிறேன். அது நீலப் பனிப்போர்வையால் மூடப்பட்டிருக்கிறது. அது அழகாக இருக்கிறது, இல்லையா?”

காது கேட்டது, சிறிது நேரம் உற்றுக் கேட்ட பின்னர் சொன்னது : “அது சரி, எங்கே இருக்கிறது மலை? அதை நான் கேட்கவில்லையே?”

பிறகு கை பேச ஆரம்பித்தது, அது சொன்னது : “ நானும்  அதை உணர்ந்து பார்க்கவோ தொடவோ வீணாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னால் மலையைப் பார்க்கவே முடியவில்லை.”

மூக்கு சொன்னது : “  அங்கு மலையே இல்லை. என்னால் அதை நுகர முடியவில்லை.”

பின்னர் கண் இன்னொரு பக்கம் பார்த்தது.

மற்றவை எல்லாம் தமக்குள் ஒன்றுக்கொன்று கண்ணின் விசித்திரமான மாயப்பார்வையைப் பற்றிப் பேச ஆரம்பித்தன.

பிறகு அவை கூறின : “ கண்ணிடம் ஏதோ ஒன்று சரியாக இல்லை.”

***

முன்னொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பெரும் புத்திசாலி.

தன் மக்களுக்காகச் சட்டங்களை இயற்ற அவன் விரும்பினான்.

தன் குடிமக்களில் ஆயிரம் வெவ்வேறு கூட்டத்தினரிடமிருந்து ஆயிரம் அறிஞர்களை தன் தலை நகருக்குஅழைத்தான். சட்டங்களை இயற்றினான்.

இது ஒரு முடிவுக்கு வந்தது.

அனைத்துச் சட்டங்களும் சுவடிகளில் எழுதப்பட மன்னன் முன் வைக்கப்பட்டது.

மன்னன் அதைப் படித்தான். அதைப் படித்தவுடன் அவன் தேம்பித் தேம்பி அழுதான்.

தனது ராஜ்யத்தில் இப்படி வெவ்வேறு விதமாக ஆயிரம் விதத்திலான குற்றங்கள் இருப்பது தனக்கு இதுவரை தெரியவில்லையே என்று நினைத்து அழுதான்.

பிறகு தனது  எழுத்தரை அழைத்தான்.

புன்னகை முகத்தில் தவழ தானே சட்டங்களைச் சொல்ல ஆரம்பித்தான்.

அவனது சட்டங்கள் மொத்தம் ஏழு தான்!

ஆயிரம் அறிஞர்களுக்கும் ஒரே கோபம். கோபத்துடன் அவனை விட்டு நீங்கி தனது கூட்டத்தாரிடம் தாங்கள் இயற்றிய சட்டங்களுடன் சென்றனர்.

ஒவ்வொரு கூட்டமும் தங்கள் அறிஞர்கள் இயற்றிய சட்டங்களைப் பின்பற்றி நடக்க ஆரம்பித்தது.

அதனால் தான் இன்றும் கூட நம்மிடையே ஆயிரம் சட்டங்கள் இருக்கின்றன.

அது ஒரு பெரிய தேசம். அதில் ஆயிரம் சிறைச்சாலைகள் இருக்கின்றன. சிறைகளில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் – ஆயிரம் சட்டங்களை மீறியவர்கள் நிரம்பி வழிகின்றனர்.

உண்மையில் அது ஒரு பெரிய தேசம் தான். ஆனால் அங்குள்ள மக்கள் ஆயிரம் சட்டங்களை வகுத்த சட்ட நிபுணர்களின் வழி வந்தவர்கள்.

அங்கு ஒரே ஒரு புத்திசாலி மன்னன் தான் இருந்தான்!

***

தமிழர்களின் எண்பேராயம் (Post No.7046)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com

Date: 2 OCTOBER 2019

British Summer Time uploaded in London – 18-15

Post No. 7046

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

எட்டாம் எண் விஷயங்களைத் தொடர்ந்து காண்போம்-

அஷ்டாங்க யோகம்

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாஹாரம், தாரணை, யோகம், ஸமாதி

xxx

எட்டு வகை சிருஷ்டி

விபுதாஹா, பிதரஹ, அசுராஹா, கந்தர்வ அப்சரஸஹா,

யக்ஷ ரக்ஷாம்ஸி, பூதப்ரேத பிஸாஸாஹா, சித்த சாரண வித்யாதராஹா,

கின்னராதயஹ

xxx

எழுத்து பிறக்கும் எட்டு இடங்கள்-

மார்பு, நெஞ்சு, தலை, நாவின் அடிப்பாகம், ,பல், மூக்கு, உதடு, அண்ணம்.

இதைக் கூறும் சம்ஸ்கிருத ஸ்லோகம்–

அஷ்டௌ  ஸ்தானானி வர்ணானாமுரஹ

கண்ட சிரசஸ்ததா ஜிஹ்வாமூலம் தந்தோஸ்ச

நாஸிகோஷ்டௌ ச தாலு ச

xxx

தமிழர்களின்  ஆலோசனைக் குழு (சிலப்பதிகாரம் சொல்லும் எண்பேராயம்)

கரணத்தியலாவர்- கணக்கர்

கருமக்காரர்- செயலர்

கனகச் சுற்றம் – கருவூல ஆதிகாரி

கடைக் காப்பாளர்- அரண்மனைக் காவலர்

நகர மாந்தர் – முதியோர்

படைத்தலைவர் – காலாட்படைத் தளபதி

யானைவீரர் – யானைப்படையின் தலைவர்

இவுளி மறவர் – குதிரைப்படையின் தலைவர்

Xxx

செக்ஸ் SEX விஷயத்தில் எண் எட்டு

அஷ்டாங்க மைதுனம்

1.பெண்களை நினைத்தல்

2.பெண்கள் பற்றிப் பிதற்றல் (கனவிலும் நனவிலும்)

3.அவளுடன் விளையாடல்

4.அவளைச் சந்தித்தல்

5.அவளுடன் ரஹசியம் பேசுதல் (டெலிபோனிலோ, நேரிலோ),

6.அவளை அனுபவிப்பதாக நினைத்துப் பார்த்தல்,

7.அதற்காக முயற்சித்தல்,

8.ஏனைய கடமைகளை அறவே மறத்தல்

இதைச் சொல்லும் சம்ஸ்க்ருத ஸ்லோகம்–

ஸ்மரணம் கீர்த்தனம் கேலிஹி ப்ரேக்ஷணம் குஹ்ய பாஷணம்

சங்கல்போ அத்யவசாயஸ்ச க்ரியா நிஷ்பத்திரேவ ச

Xxx

எட்டுத் தொகை

சங்க கால இலக்கியம் 18 நூல்களைக் கொண்டது. சுமார் 30,000 வரிகள். இதில் இரண்டு தொகுப்புகள் உள. மிகப் பழைய படல்களின் தொகுப்பு எட்டுத் தொகை என்றும், பின்னர் வந்தவை பத்துப் பாட்டு என்றும் தொகுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் எட்டுத்தொகையில் உள்ள எட்டு நூல்கள்-

நற்றிணை – 175 புலவர்கள் பாடிய பாடல்கள்

குறுந்தொகை – 205 புலவர்கள் பாடிய பாடல்கள்

ஐங்குறுநூறு – 5 புலவர்கள் பாடிய பாடல்கள்

பதிற்றுப்பத்து – 10 புலவர்கள் பாடிய பாடல்கள்

பரிபாடல் – 13 புலவர்கள் பாடிய பாடல்கள்

கலித்தொகை – 5 புலவர்கள் பாடிய பாடல்கள்

அகநானூறு – 145 புலவர்கள் பாடிய பாடல்கள்

புற நானூறு – 165 புலவர்கள் பாடிய பாடல்கள்

ஒரே புலவர் பல நூல்களிலும் பல பாடல்களைப் பாடியிருக்கின்றனர்.

எட்டு நூல்களையும் எளிதில் நினவிற்கொள்ள ஒரு பாடல் உண்டு-

நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ

றொத்த பதிற்றுப்பத்தோங்கு பரிபாடல்

கற்றறிந்தார் சொல்லுங் கலியோடகம்புறமென்

றித்திறத்த வெட்டுத் தொகை

Xxx

அவையோர்க்கான பண்புகள் 8–

நற்குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறாமை, தன்னலமின்மை.

—Subham —

கவிதையில் இலக்கண அதிசயம்! வேற்றுமைக் கவிதைகள்!! (Post No.7040)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 1 OCTOBER 2019

British Summer Time uploaded in London –6-59 AM

Post No. 7040

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

எட்டாம் நம்பர் மஹிமை (Post No.7036)

COMPILED BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 30 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 8-59 AM

Post No. 7036

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

எட்டு வகைத் திருமணங்கள் | Tamil and …



https://tamilandvedas.com › tag › எட்டு-வகை…

1.      

8 Jun 2018 – தொல்காப்பியரும் மநுவும் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள் … ஆருஷத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் முன், …

திருமண வகைகள் | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › திருமண-வக…

1.      

9 Apr 2015 – Tagged with திருமண வகைகள் … இந்துமதத்தில் 8 வகைத் திருமணங்கள். Written by … வரை பின்பற்றுவது; எட்டு வேற்றுமைகளை பின்பற்றுவது.

எட்டு வகை திருமணங்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › எட்டு-வகை-…

8 Apr 2015 – Tagged with எட்டு வகை திருமணங்கள் … எட்டு வகைத் திருமணங்கள் … பைசாசம் — என்ற எட்டுவகை திருமணம் பற்றி பல சுவையான …

அஷ்டமா சித்திகள் | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › அஷ்டமா-சி…

1.      

Translate this page

29 May 2018 – Tagged with அஷ்டமா சித்திகள். வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத சக்திகள்! … தன்னிகரில் சித்தி பெறலாம்.

வித்தை | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › வித்தை

1.      

Translate this page

12 Aug 2017 – WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU. அஷ்டமா சித்தி (எட்டு வகை …

ரிக்வேதக் கவிதை | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › ரிக்வேதக்-…

1.      

Translate this page

21 May 2018 – WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU. அஷ்டமா சித்தி (எட்டு வகை …

to be continued……………………

Indus Valley Weights

பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் நவரத்தினங்கள் (Post No.7034)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 29 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 14-01

Post No. 7034

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

மாலைமலர் 28-9-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் நவரத்தினங்கள் – ஒரு அறிமுகம்!

ச.நாகராஜன்

பூமித் தாய் எல்லையற்ற கருணை உள்ளம் படைத்தவள்!

தன் மக்கள் நீடித்து ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் பூரணமான நூறு ஆண்டுகள் வாழ என்னென்ன தர வேண்டுமோ அனைத்தையும் தந்து அவள் அருளியுள்ளாள்.

ஆகவே தான் எழுந்தவுடன் உள்ளங்கைகளைப் பார்த்தவாறே அவளுக்கு நன்றி கூறி விஷ்ணு பத்னி நமஸ்துப்யம்; பாத ஸ்பர்ஸம் க்ஷமஸ்வ மே – விஷ்ணுவின் பத்னியே, உன்னைக் காலால் தொட்டு இன்று முழுவதும் நடக்க இருக்கிறேன். இதற்காக என்னை மன்னித்தருள் என்று கூறி வேலையைத் தொடங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது நமது அற நூல்கள். நன்றி மறப்பது நன்றல்ல, அல்லவா!

   தானியங்கள், நீர், காற்று, இருக்க இடம், வெப்பம், வானிலிருந்து விளையும் நன்மைகள் என அனைத்தையும் தன் மண்டலத்தில் தந்த அவள் கருணைக்கு எல்லையே இல்லை.

இத்துடன் மூலிகைகள், மினரல்கள் எனப்படும் தாதுப் பொருள்கள், தங்கம் உள்ளிட்ட விலை மதிக்கவே முடியாத உலோகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சொல்லப் போனால் முடிவே இருக்காது.

அன்னை பூமிக்கு 53 பெயர்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று வசுந்தரா என்பதாகும்.

வசுந்தரா என்றால் செழிப்பான நிலத்தையும் அளப்பரிய செல்வங்களையும் கொண்டவள் என்று பொருள். ‘உலகம் முழுவதும் எதிலிருந்து ஆரம்பித்து எதில் முடிகிறதோ அது வசுந்தரா’ என்று இன்னொரு பொருளும் உண்டு. புத்த மத நூல்களும் பாலி மொழியில் உள்ள கிரந்தங்களும் தரும் பொருள்கள் பிரமிக்க வைப்பவை; ரகசியமானவை!

இப்படிப்பட்ட அரிய பூமியில் அரிய பிறப்பான மனிதப் பிறப்பை எடுத்துள்ள வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான பிரச்சினைகள்.

இவற்றிற்கு அவரவர் அறிவுக்குத் தக அவரவர் வழியில் தீர்வு காண்கின்றனர்.

மனம் கனிந்த அன்னை சரியான வழியைக் காட்ட மகான்களையும், சித்தர்களையும் உலவ விட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழி காண்பிக்கவே அவை பல சாஸ்திரங்களாக – அற நூல்களாக வடிவம் எடுத்தன.

அவற்றுள் ஒன்று தாதுப் பொருள்களைப் பற்றிய சாஸ்திரம். இதன் முக்கியப் பகுதி நவரத்தினங்களைப் பற்றியது.

மணி என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது இது.

இதன் முக்கியத்துவம் என்ன?

மூன்று முக்கிய சாஸ்திரங்களுள் முக்கியமானது மணிகள் பற்றியதாகும்.

அன்யானி சாஸ்த்ராணி விநோத மாத்ரம் – மற்ற கலைகள் எல்லாம் வேடிக்கைக்காக உள்ளனவே தான்.

ஆபத்துக் காலங்களிலும் அனைத்து சமயங்களிலும் உதவுவது : மணி மந்த்ர ஔஷதமே என்று மேலோர் குறிப்பிடுவர்.

மணி என்பதில் ஜ்யோதிஷம், வைத்யம், வாஸ்து, எண் கணிதம் , வைத்தியம், பக்தி எனப்படும் இறையருள் பெறும் துதி செய்தல் உள்ளிட்ட அனைத்துக் கலைகளும் இணைகின்றன.

மினரல் எனப்படும் தாதுபொருள்களை கணக்கிலடங்காத அளவில் பூமித் தாய் தந்திருக்கிறாள்.

அவற்றில் 300 அரிய தாதுக்களை அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்; அவற்றின் அரிய பயன்களைச் சொல்லி வருகின்றனர்.

இந்த முன்னூறில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்டவற்றை அரிதான மணிகள் என மணிகளில் நிபுணர்களாக உள்ளோர் குறிப்பிடுகின்றனர். இந்த எண்பதில் ஒன்பது மணிகளை உலகில் உள்ள அனைத்து பழைய நாகரிகங்களும் – எகிப்திய, அஸிரிய, ரோமானிய, கிரேக்க, யூத, ஹிந்து, பௌத்த, அராபிய நாகரிகம் உள்ளிட்ட அனைத்துமே – உச்சி  மேல் வைத்துக் கொண்டாடுகின்றன.

ஒன்பது மணிகளை நவ ரத்தினங்கள் என்று சந்தோஷத்துடன் குறிப்பிடுகிறோம். ஏனையவை உபரத்தினங்கள் எனப்படும். வணிக நோக்கில் இவை ராசிக் கற்கள் என்ற பெயரைப் பெறுகின்றன.

நவரத்தினங்களாவன :

1) மாணிக்கம்  – Ruby

2) முத்து – Pearl

3) பவளம் – Coral

4) மரகதம் – Emerald

5) புஷ்பராகம் – Topaz

6) வைரம் – Diamond

7) நீலக்கல் – Blue Sapphire

8) கோமேதகம் – Zircon

9) வைடூரியம் – Cat’s Eye

ஹிந்து நாகரிகத்தில் கருட புராணம், சரக சம்ஹிதை, ஜோதிட சாஸ்திரம் உள்ளிட்ட நூல்கள் ஒவ்வொரு ரத்தினத்தின் பயனையும் தன்மையையும் விரிவாக விளக்குகின்றன.

இவை பிரமிப்பை ஊட்டுபவை; ஏனெனில் இன்று அறிவியல் பல நவீன சாதனங்களின் உதவியால் கூறுபவற்றை அவை தீர்க்கமாக துல்லியமாகப் பல்லாண்டுகளுக்கு முன்பேயே குறிப்பிட்டிருப்பதால் தான் இந்த பிரமிப்பு.

ரஸ ஜல நிதி என்ற நூல் ஒவ்வொரு விஷயத்தையும் ‘பிட்டுப் பிட்டு’ வைக்கிறது; வியப்பின் உச்சிக்கே போய்விடச் செய்கிறது.

ஆயுள் நீட்டிக்க ரத்தினக் கற்களை அணிக என்று ஆணையிடுகிறார் சரகர்.

தேர்ந்த மருத்துவரான இவர் நூறு வயது வாழ்வதற்கான வழிகளைத் தெள்ளத் தெளிவாக தனது சரக சம்ஹிதை நூலில் விளக்குகிறார். சந்தோஷமாக வாழ்க்கை எது என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

அதே நூலில் (அத்தியாயம் 19 சுலோகம் 7) வெளியில் கிளம்பும் போது –

ரத்தினக் கற்களைத் தொடாமல் (அணியாமல்) செல்லக் கூடாது.

பெரியோர்களின் பாதங்களைத் தொடாமல் செல்லக் கூடாது.

நெய், நல்ல மங்களகரமான பொருள்கள், மலர்கள் இவற்றைத் தொடாமல் செல்லக் கூடாது.

வணக்கத்திற்குரிய பெரியோர்கள், பூசிக்கப்படும் பொருள்கள் ஆகியவை வலப்புறம் இருக்கும்படியும், சிறியவர்கள் இடப்புறம் இருக்கும்படியாகவும் உள்ள நிலையில் கிளம்ப வேண்டும். (அதாவது பூஜை செய்த பின் பெரியோர்களை வலமாகச் சுற்றிக் கிளம்ப வேண்டும்.)

இதை அடுத்து, அடுத்த சுலோகத்தில் ரத்தினக் கற்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

ரத்னக் கற்களை கைகளில் அணியாமலோ, குளிக்காமலோ சாப்பிடக் கூடாது என்று வலியுறுத்தும் அவர் மூலிகைகளை உடலிலே தரிக்குமாறும் அறிவுறுத்துகிறார்.

ரத்னக் கற்களை Precious Stones – அரிய, மதிப்புடைய கற்கள் என்று கூறுகிறோம்.

அரிய கற்கள் என்றால் எதை வைத்து அப்படிச் சொல்ல முடிகிறது.

இதற்கான மேலை நாட்டு வரையறுப்பு –Beauty, Durability, Rarity  – அழகு, நீடித்திருக்கும் தன்மை, அரிதாகவே கிடைப்பது – ஆக இந்த மூன்று பண்புகளும் இருந்தால் அந்தக் கல்லை அரிய கல் என்று கூறலாம் என மேலை நாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

நமது நூல்களோ இன்னும் ஒரு பண்பைச் சேர்க்கிறது.

Usablility – பயன்மை; அது வாழ்க்கைக்கு உதவுகிறதா என்று பார் என்கிறது!

மூன்று பண்புகளின் விளக்கம் என்ன?

அழகு (Beauty) : அழகு அவரவரது கண் பார்வையைப் பொறுத்தது. இன்று இருக்கும் டிசைன் நாளை இருப்பதில்லை. வரம்பற்ற கற்பனைக்கு இடமாக்கித் தன்னை வெவ்வேறு விதத்தில் கவர்ச்சியாகக் காட்டிக் கொள்ளும் கல்லே அழகுக் கல்!

நீடித்திருக்கும் தன்மை (Durability) : நிறைய விலையைக் கொடுத்து வாங்கி பெருமையுடன் அதை அணியும் போது அது நீடித்திருக்கிறதா அல்லது உடனே மங்கி தன் தன்மையை இழந்து அழிகிறதா என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக அடுத்த தலைமுறைகளுக்கும் செல்லும் கல்லே நீடித்திருக்கும் கல்.

அரிதாகவே கிடைப்பது (Rarity) : தனது பெருமையை நிலை நாட்டிக் கொள்ள விரும்பும் ஒருவர் இது கிடைக்கவே கிடைக்காத ஒன்று என்று சொல்லும் போது அவர் அடையும் கர்வமும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்காதது.

இந்த மூன்றும் இருந்தாலும் இது நமக்கு உகந்ததா என்பதையும் பார் என்று சொல்கிறது நமது அற நூல்கள்.

உலகில் உள்ள 750 கோடிப் பேர்களில் ஒருவர் போல ஒருவர் இல்லை. கை ரேகை தனி; கண்ணின் கரு விழித் திரை (Iris) தனி. மரபணு தனி. அவர்களது ஆசையும் விருப்பமும் தேவையும் தனித் தனி தான்! உடல் வியாதிகளும், உள்ள மகிழ்ச்சிகளும் தனித் தனி தான்!

இந்த அடிப்படையில் நவ ரத்தினங்களை அலசுவோம்:

மாணிக்கம் உஷ்ண அலைகளை வெளிப்படுத்துகிறது. குளிர்ச்சி சம்பந்தமான வியாதிகளைப் போக்க வல்லது. ரத்த சோகை, குளிர், ஜன்னி முதலானவற்றை உடனே குணப்படுத்தும்.

முத்து மன சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

பவளம் பக்கவாத நோயைக் குணப்படுத்தும். வயிறுக் கோளாறுகள், மலச்சிக்கல், நீரிழிவு நோய் ஆகியவற்றைப் போக்கும்.

மரகதம் பில்லி சூனியத்தை நீக்கும். துர்த்தேவதைகளை விலகச் செய்யும்.

புஷ்பராகம் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை நீக்கி புத்திர பாக்கியத்தைத் தரும்; மலடை நீக்கும்.

வைரம் குடும்ப ஒற்றுமையை ஓங்கச் செய்யும். கலைகளில் வல்லவராக்கும். குறிப்பாக நாட்டியம், நடிப்பு, சினிமா துறையில் உள்ளோர் அணிய வேண்டிய கல் இது. வாயு, பித்தம், கபம் ஆகிய மூன்றின் தோஷங்களை நீக்க வல்லது.

நீலக்கல்,  ஜல நீலம் மற்றும் இந்திர நீலம் என இது இருவகைப் படும். தோல் நோய்களைப் போக்கும். தொழு நோய் உடையவர்கள் கூட இதை அணிந்து நலம் பெறலாம்.

கோமேதகம் பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

வைடூரியம் வாழ்வில் ஏற்படும் பெருந்துன்பங்களிலிருந்து காக்க வல்லது.

இப்படிப்பட்ட ரத்தினங்களை ஜோதிட சாஸ்திரம் ஆதரிக்கிறது; அணிந்து பயன் பெறுமாறு அறிவுறுத்துகிறது.

கற்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை ஜோதிட நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன.

சூரியன் – மாணிக்கம்

சந்திரன் – முத்து

செவ்வாய் – பவளம்

புதன் – மரகதம்

குரு   – புஷ்பராகம்

சுக்ரன் –  வைரம்

சனி – நீலக்கல்

ராகு – கோமேதகம்

கேது – வைடூரியம்

ஆக நவ மணிகளும் கிரஹ தோஷங்களைப் போக்க வல்லவை.

ரத்தினங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு தனிக் கலை.

‘அறிவுறுத்தியபடி குறிப்பிட்ட கல்லை அணிந்தேன்; ஆனால் நல்லது நடக்கவில்லை; மாறாக நிலைமை மோசமானது’ என்று ஒருவர் சொன்னால் அது பொய்யாக இருக்காது.

அவர் அணிந்திருந்த கல் உண்மையான, தோஷமற்ற கல்லா என்பதை ஆராய வேண்டும்.

ஆம், கற்களில் உள்ள தோஷங்கள் பல.

அதுவும் இன்றைய அறிவியல் உலகில் செயற்கையாகச் செய்யப்படும் “கற்களை” அதிகப் பணம் கொடுத்து வாங்கி அணிந்து பயன் இல்லாதது மட்டுமன்றி இன்னும் அதிகக் கெடுதல் ஏற்பட்டால் மனம் நோவது இயற்கை தானே!

சாஸ்திரத்தைப் பழிக்காமல் அதைத் தந்த சதிகாரர்களைத் தான் பழிக்க வேண்டும்!

ஆகவே எச்சரிக்கையுடன் இந்தக் கலையை அணுக வேண்டும்.

எல்லாத் துறைகளிலும் போலிகள் உள்ளனர் – அறிவியல் துறை உட்பட!!

ஆகவே முதலில் தினமும் சிறிது நேரம் இந்தக் கலைக்கு நேரம் ஒதுக்கி இதைப் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும். அட, டி.வி. சீரியலுக்கு ஒதுக்கும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு ஒதுக்கினால் கூட போதும், வாழ்க்கை வளம் பெற உதவும் கற்களைத் தேர்ந்தெடுத்து விடலாம்.

இது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.

கற்க கசடறக் கற்க இந்தக் கலையை; பின் அணிக அதற்குத் தக என்பது தான் நமக்கு உரித்தான சூத்திரம்.

சூஷ்மத்தைப் புரிந்து கொண்டால் வெற்றி தான் பெறுவோம்!

வாழ்க வளமுடன், நல் மணியுடன்!

***

—subham—

கெட்டிக்காரி யார்? ஒரு சமண மதக் கதை (Post No.7031)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com

Date: 29 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 7-39 AM

Post No. 7031

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.