சாப்பிடக் கூடாத இலைகள் எவை? (Post No.7554)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7554

Date uploaded in London – 9 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சாப்பிடக் கூடாத இலைகள் எவை?

சதகம்  என்றால் 100 பாடல்களின் தொகுப்பு என்று அர்த்தம். தமிழில் நிறைய சதக நூல்கள் உள; பெரும்பாலும் இவை திருக்குறள் , நாலடியார் போல நீதிகளை உரைக்கும். ஏனைய சில பாண்டி மண்டலம் கொங்கு மண்டலம் போன்ற இடங்களின் சிறப்புகளை விதந்தோதும் . இந்துக்களுக்குப் போட்டியாக முஸ்லிம்கள் , கிறிஸ்தவர்கள் பாடிய சதகங்களும் இருக்கின்றன. நமக்கு கிடைத்த மிகப்  பழைய தமிழ்ச் சதகம் மாணிக்கவாசகர் பாடிய திருச் சதகம் ஆகும். ஆயினும் அது திருவாசகத்தின் ஒரு பகுதி என்பதால் 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய கார்மண்டல சதகம் தான் முதலில் கிடைத்த தமிழ்ச் சதகம் என்பர். பழமொழிகள் நிரம்பிய தண்டலையார் சதகம் படிக்கச் சுவையானது. அம்பல வாணக் கவிராயர் பாடிய அறப்பளீச்சுர  சதகம்சதுரகிரி மலையில் உள்ள இறைவனை வேண்டிப் பாடியது. நீதிகள் , அறிவுரைகள் நிரம்பியது tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாம் எல்லோரும் வாழை இலையில் சாப்பிடுகிறோம் . தாமரை இலையில் சாப்பிடலாமா ? அரச இல்லை அல்லது புரசை இலைகளைத் தைத்து  செய்யப்படும் தையல் இலைகளில் சாப்பிடலாமா இதற்கெல்லாம் கவிராயர் சொல்லும் பதில்களைப்  பாருங்கள் .

(இதற்கிடையில் நாக்கில் தண்ணீர் ஊறவைக்கும் சுவையான செய்தி. அந்தக் காலத்தில் சில ரயில் நிலையங்களில் பட்டணம் பக்கோடா, போண்டா , வடை முதலியவற்றை தையல் இலையில் கட்டி விற்பார்கள். நானும் என் தம்பி சூரிய நாராயணனும் ந்த்ராலயத்தில் உள்ள ரா கவேந்திர சுவாமிகள்  மடத்துக்குப் போய் சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசித்தோம். முடிந்தவுடன் தையல் இலையில் சுவையான சாப்பாடு! மந்தாரை இலைகளைத் தைத்து தையல் இலை செய்வார்கள் என்று கேள்வி. நிற்க )

மா, பலா, வாழை இலைகளிலும், புன்னை, புரசு, குருக்கத்தி, பன்னிர்  இலைகளிலும் சாப்பிடலாம்.

சாப்பிடக்கூடாத இலைகள் எவை?

ஆல மரம் , அத்தி, அரசு, எருக்கு, முள் எருக்கு , தாழை , தாமரை , பாதிரி , ஆமணக்கு, சகதேவ , இத்தி மர இலைகளில் சாப்பிடக்கூடாது tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

அத்துடன் வேறு சில அறிவுரைகளையும் சேர்த்துச் சொல்கிறார் –

அடிக்கடி சாப்பிடாதே; குறைவாகவோ, அதிகமாகவோ சாப்பிடாதே . மேற்கண்ட இலைகளில் சிற்றுண்டி கூட  சாப்பிடக்கூடாது; தண்ணீரும் பருகக்கூடாது . இதோ பாடலும் பொழிப்புரையும் –

அறப்பளீச்சுர சதகம்

அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு.

Singapermal Kovil Temple

—subham—

வேத காலப் பெண் கவிஞர்கள் (Post No.7552)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7552

Date uploaded in London – 8 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

உலகில் மிகவும் அற்புதமான விஷயம் இந்தியாவின் பெண் அறிவாளிகளாகும் . உலகில் வேறு எந்த நாட்டிலும் பழங்காலத்தில் இவ்வளவு பெண் அறிவாளிகள் இருந்ததாக கிரேக்க, பாபிலோனிய, எகிப்திய வரலாறுகளில் இல்லை. அதிலும் குறிப்பாக பெண் கவிஞர்களை அங்கு விரல்விட்டு எண்ணிவிடலாம். வேதகாலம் என்பதை கி.மு.1500 அல்லது அதற்கு முந்தைய காலம் என்பதை இப்பொழுது பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தமிழ் சங்கப்  புலவர் காலம் என்பது சுமார் 2000 ஆண்டுகளு க்கு முந்தையது என்பதிலும் கருத்து ஒற்றுமை உளது. ஆக இந்தக் காலத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலேயே 60 பெண் கவிஞர்களின் பெயர்களும் கவிதைகளும் கிடைக்கின்றன.

 tamilandvedas.com, swamiindology.blogspot.com

பழங்கால உலகில் இந்தியாதான் பெரிய நாடு. இமயம் முதல் குமரி வரையும் . மேற்கே ஆப்கனிஸ்தான் வரையும் பரவிய பிரம்மாண்டமான நிலப்பரப்பு. அ தில் இப்படி 60 பேர் இருந்ததை  எண்ணி இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படலாம். மேலும் அவர்கள் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் பாடிய கவிதைகளிலும் பெரிய, அரிய கருத்துக்கள் உள்ளன. இதுதவிர அந்தக் காலத்தில்  அரசாண்ட அரசிகள், கவிதை  பாடாமல்  புகழ்  ஏணியின் உ ச்சியைத் தொட்ட பெண்மணிகள் என்று பட்டியலிட்டால் அது இரு நூற்றுக்கும் மேலாகப் போய்விடும் . வரலாற்றுக்கும் முந்தைய காலத்தில் ஆண்ட ஸ்த்ரீ ராஜ்ய அரசிகள் பற்றி எல்லா பழைய நூல்களும் குறிப்பிடுகின்றன.

இந்தக் கட்டுரையில் வேத கால பெண் புலவர்கள் பற்றி மட்டும் காண் போம்  வேத காலம் என்பதில் சம்ஹிதை, பிராமண, ஆரண்யக, உபநிஷத்துக்கள் உருவான காலம் அடக்கம். உலகிலேயே பழமையான நூலான ரிக்வேதம், ஒவ்வொரு மந்திரத்தைக் கண்ட/ கண்டுபிடித்த ரிஷி அல்லது ரிஷிகாவின் பெயரைச் சொல்கிறது. பெண் கவிஞர்களை ரிஷிகா என்பர்.

ரிக்வேதத்தில் 30 ரிஷிகாக்களின் பெயர்கள் இருக்கின்றன. கில/ பிற்சேர்க்கை சூக்தங்களில் காணப்படும் 5 பெயர்களும் இதில் அடக்கம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

கோஷா, லோபாமுத்ரா,அப்பால, ரோமச, சூர்யா , ஜுஹு பிராஹ்மஜெய, சிராத்தா , யமீ , இந்த்ராணீ , மேதா , அகஸ்த்யவஸா , ஆத்ரேயீ , ஸாஸ்வதீ , விஷ்வாவாரா  முதலிய பெயர்களை ரிக் வேதத்தில் பார்க்கலாம்.

30 பெண் புலவர்களையும் கீழ்கண்டவாறு பிரிக்கலாம்

கடவுளராகக் கருதப்படும் பெண்கள் –

இந்த்ரமாதரஹ , இந்த்ரனுசா , இந்த்ராணி , அதிதி, சூர்யா, ஸாவித்ரீ , யமீ வைவஸ்வதீ, சசி பௌலோமி முதலியோர் இந்த வகையின் கீழ் வருவார்கள் .

ஒரு மந்திரத்தில் இந்திரனின் மகனான வசுக்ராவின் மனைவி பாடியது என்று வரும். அப்படியானல் இந்திரனின் மருமகள் என்று பொருள்படும். இந்திரன் என்பது அரசனா , கடவுளா , இயற்கைச்  சக்தியா அல்லது, பிரதமர், ஜனாதிபதி போன்ற பதவிப் பெயரா என்று ஆராய்ந்து முடிவு காண வேண்டும் tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் 10-86ல் 11 மந்திரங்களில் இந்திராணி துதிபாடுகிறார் .

ரிக் 10-85 என்பது கல்யாணத்தில் பயன்படுத்தும் மந்திரம் . இதன் ரிஷிகாக்கள்  சூர்யா,சாவித்ரி ; இவ்விருவரும் விவஸ்வன் எனப்படும் சூரியனின் மனைவியர் என்றும், அவர்களை வ்ருஷகாபேயி என்று பல மந்திரங்கள் துதிபாடும் என்றும் பிருஹத்கதா  என்னும் நூல் உரைக்கும்..

யமனுடைய சகோதரி யமீ. இருவருக்கும் இடையே நடந்த சம்பாஷணை க் கவிதை  பத்தாவது மண்டலத்தில் வருகிறது.

யமி வைவஸ்வதி என்ற பெயரும் காணப்படுகிறது.

சசி பவுலோமி ஒரு கவிதை பாடியுள்ளார்

 tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

அரசர் தொடர்புடைய புலவர்கள்

கோஷா கக்ஷிவதீ , லோபாமுத்ரா,அபால, ரோமச, சூர்யா , ஜுஹு பிராஹ்மஜெய, சிராத்தா , யமீ , இந்த்ராணீ , மேதா , அகஸ்த்யவஸா , ஆத்ரே யீ , ஸஸ்வதீ ஆங்கிரஸி , விஷ்வாவாரா   முதலிய பெயர்கள் அரசர் தொடர்புடைய பெண் புலவர்கள்.

அபால  என்பவர் அத்ரியின் புதல்வி.

10-39, 10-40 ஆகிய இரண்டு சூக்தங்களும் கோஷா கக்ஷிவதியின் பெயரில் உள்ளன .

அகஸ்திய மகரிஷியை மணந்த லோபாமுத்ரா ஒரு மஹாராணி. இவர் பெயரிலும் மந்திரங்கள் இருக்கின்றன.

 tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxx

சம்பாஷணைக் கவிதைகள்

உலகில் சம்பாஷணை (Conversational Poems) வடிவத்தில்  அமைந்த ஒரே வேதப்புத்தகம் பகவத் கீதை. அர்ஜுனன் கேள்விக்கு கிருஷ்ணன் விடை தருகின்றார் . ஏனைய மதங்களின் வேதப் புத்தகங்களில் அங்குமிங்கும் கொஞ்சம் உரைநடையைக் காணலாம். இதை சாக்ரடீஸ் பின்பற்றியதால் வெளிநாட்டினர் இதை சாக்ரடீஸ் முறை (Socratic Method) என்பர். நம்முடைய புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் கேள்வியில் பிறந்தவையே . முக்கிய உபநிஷதங்களும் கேள்வி-பதில் வடிவில் அமைந்தவை.  tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் சம்பாஷணைக் கவிதைகள் இருக்கின்றன. உலகின் பழைய நூல்களில் இதைக் காண்பது அரிது. சொல்லப்போனால் இது இந்து மதத்தின் எல்லா புராண , இதிகாசங்களிலும் உள்ளது. வேதகால உபநிஷத்துகளிலும் உண்டு. மருத்துவ, ஜோதிட நூல்கள் அனைத்திலும் உண்டு. ஒருவர் கேள்வி கேட்டவுடன் மற்றொருவர் பதில் சொல்லுவார். ரிக் வேதத்தில் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் கவிதை நடை  சம்பாஷணைகள் கல்யாண நலுங்குப் பாடல்கள் போல கிண்டல் தொனியில் இருக்கும். நலுங்குப் பாடல்களில் கொஞ்சம் செக்ஸ் விஷயங்கள் வரும். அதுபோலவே இந்தக் கவிதைகளிலும் உண்டு tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

வெள்ளைக்காரர்களுக்கு இதைப் படித்தவுடன் , அடடா, குறை சொல்ல ஒரு விஷயம் கிடைத்துவிட்டது என்று மகிழ்வர் .ரிக் வேதத்தின்  முதல் மண்டலத்திலும், பத்தாவது மண்டலத்திலும்  வரும் கவிதைகளைக் காலத்தால் பிந்தியவை என்று சொல்லி மகிழும் வெள்ளைத்தோல் அறிர்கள் இங்கு வாய் மூடி மௌனமாகி விடுவர் . உலகப் புகழ் பெற்ற காதல் பாட்டு இங்குதான் வருகிறது. அதை எல்லாக் கல்யாணங்களிலும் பிராமணர்கள் விரிவாக ஓதுவார்கள். அது இல்லாமல் கல்யாணம் நிறைவு பெறாது. அந்த அற்புதமான கவிதை ரிக் வேதத்தில்(10-85) 47 மந்திரங்களுடன் இருக்கிறது. அது பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

 tamilandvedas.com, swamiindology.blogspot.com

 tags –  ரிக் வேதம், பெண் புலவர்கள், சம்பாஷணை , கவிதைகள் , அறிவாளிகள்

–subham–

அழகிக்கு நான்கு நெற்றி, ஐந்து காதணி, ஆறு …….. ஒரு புதிர் பாடல்! (Post No.7545)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7545

Date uploaded in London – – 7 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

அழகிக்கு நான்கு நெற்றி, ஐந்து காதணி, ஆறு மார்பகங்கள், ஏழு கண்கள் – ஒரு புதிர் பாடல்!

ச.நாகராஜன்

மதுரகவிராயரின் பல பாடல்களை ஏற்கனவே பல கட்டுரைகளில் பார்த்து விட்டோம்.

இன்னும் ஒரு பாடல் இது.

புதுமையான புதிர் பாடல் இது.

துரைரங்கன் என்னும் ஒரு பிரபுவின் மீது அவர் பாடிய இந்தப் பாடலில் அவரை, பாடலில் உள்ள புதுமையை ஆராய்ந்து அறிய வேண்டும் என்கிறார் கவிராயர் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

பாடல் இதோ:

துங்கவரை மார்பா துரைரங்க பூபதியே

இங்கோர் புதுமை யியம்பக் கேள் – பங்கயக்கை

ஆயிழைக்கு நான்குநு தலைந்துகுழை யாறுமுலை

மாயவிழி யேழா மதி

பாடலின் பொருள் :

துங்கம் – பரிசுத்தமாகிய

வரை – மலை போன்ற

மார்பா – மார்பினை உடையவனே

துரைரங்க பூபதியே – துரைரங்கன் என்னும் பூபதியே

இங்கு  – இவ்விடத்தில்

ஓர் புதுமை இயம்பக் கேள் – ஒரு புதிய செய்தி உண்டு; அதைச் சொல்கிறேன்; கேட்பாயாக (அது என்னவெனில்)

பங்கயக் கை – தாமரை மலர் போன்ற கைகளை உடைய

ஆயிழைக்கு – அழகிய பெண்ணுக்கு

நான்கு நுதல் – நான்கு நெற்றிகள்

ஐந்து குழை – காதணி ஐந்து tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆறு முலை – மார்பங்கள் ஆறு

மாய விழி ஏழாம் – வஞ்சமுள்ள (மயக்கும்) கண்கள் ஏழு

மதி – தேர்ந்து நீயே ஆலோசித்து இதை அறிவாயாக!

பாடலின் பொருளை துரைரங்க பூபதி அறிந்து கொண்டு மதுரகவி ராயருக்குப் பரிசுகள் கொடுத்துப் பாராட்டினார்.

பாடலில் மறைந்திருக்கும் பொருள் தான் என்ன?

ஆயிழை என்றால் கன்னி (ராசி)

மேஷம், ரிஷபம், மிதுனம்,கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியவை பன்னிரெண்டு ராசிகள் tamilandvedas.com, swamiindology.blogspot.com

இவற்றில் கன்னி ராசிக்கு நான்காவது ராசி  தனுர் ராசி.

தனுர் என்றால் வில் என்று பொருள்

கன்னி ராசிக்கு ஐந்தாவது ராசி மகரம்.

மகரம் என்றால் மீன் என்று பொருள்.

கன்னி ராசிக்கு ஆறாவது ராசி கும்பம். அதாவது குடம்.

கன்னி ராசிக்கு ஏழாவது ராசி மீனம். அதாவது கெண்டை மீன்.

பாடலில் புலவர் கூறிய கருத்து;

அழகிக்கு வில்லை நிகர்த்த நெற்றியும்

மகர மீனுருவை ஒத்த காதணியாகிய மகர குண்டலமும்

குடம் போன்ற மார்பகங்களும்

கெண்டை மீன் போன்ற கண்களும் உள்ளன.

இதை ஆராய்ந்து அறிக.

 ஜோதிடத்தில் அழகியைச் சேர்த்துப் பாடிய சமத்காரப் பாடல் இது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்னொரு சமயம் மதுரகவிராயர் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தார்.

அபார அழகு. அசந்து போனார். பாடினார் ஒரு பாடல் இப்படி :-

மூவென்ப தென்பதிலோர் நாளில்லை மொய்வனத்தில்

தாவுந் தனிமிருகந் தானில்லை -நேரே

வளையா நடையில்லை வாரிறுக விம்மும்

முலையாளை யான் முயங்குதற்கு

பாடலின் பொருள் :

வார் இறுக – கச்சு இறுகும்படி

விம்மும் முலையாளை – பருத்த மார்பகங்களை உடையவளை

யான் முயங்குவதற்கு – நான் கட்டித் தழுவுவதற்கு

மூவொன்பது என்பதில் – மூன்று ஒன்பது அதாவது இருபத்தேழு நட்சத்திரங்களில்

ஓர் நாள் இல்லை – ஒரு நட்சத்திரம் இல்லை – உத்தர நட்சத்திரம் இல்லை – அதாவது உத்தரம் இல்லை (பதில் இல்லை – அவளிடமிருந்து)

மொய் வனத்தில் – நெருங்கிய காட்டில்

தாவும் – தாண்டித் திரியும் tamilandvedas.com, swamiindology.blogspot.com

தனி மிருகம் இல்லை – ஒப்பற்ற மிருகம் இல்லை (அதாவது வேங்கை இல்லை. வேங்கை என்ற சொல்லுக்குப் பொன் என்ற பொருளும் உண்டு)

நேரா வளையா நடை இல்லை – நேராக வளையா நடையுமில்லை.

நேரா வளையா நடை என்பது அன்னம் அல்லது சோறைக் குறிக்கிறது tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

 பேரழகியைக் கட்டித் தழுவுவதற்கு ஆசை. ஆனால் அவளிடமிருந்து பதிலும் இல்லை; என்னிடம் அவளுக்குத் தரப் பொன்னும் இல்லை;  சோறும் இல்லை, எப்படித் தழுவுவேன்?

நல்ல கேள்வி இது? யார் தான் பதில் சொல்ல முடியும்?

***

அடங்காதவரை அடக்குவது எப்படி? (Post No.7542)

Written  by London Swaminathan         

Post No.7542

Date uploaded in London – – 6 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

அறப்பளிச்சுர சதகத்தில் 100 அருமையான பாடல்கள் உள . அதில் ஒரு பாடல், எதை அல்லது யாரை எப்படி அடக்கலாம் என்று உரைக்கிறது.

கொடிய , வலிய எருதாக இருந்தால் மூக்கில் கயிறு கட்டி அடக்கிவிடலாம்.  மதம் பிடித்த பெரிய யானையை அங்குசம் என்னும் ஆயுதத்தால் குத்தி வசப்படுத்தலாம்.

விஷப் பாம்பாக இருந்தால் மந்திரத்தால் அதை அடக்கிவிடலாம் . பாய்ந்து செல்லும் குதிரையாக இருந்தால் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்தலாம்.

விஷம் போன்ற மனத்தைக்கொண்ட கெட்டவர்களைச்  சவுக்கால் அடித்து வசப்படுத்தலாம். அறிஞர்களாக இருந்தால் கோபத்தை நல்ல சிந்தனையால், அறிவால் கட்டுப்படுத்தலாம்.

அடியார்கள் துதித்த மாத்திரத்தில் அருள்புரிய ஓடிவரும் அறப்பளீச்சுரனே, தாமரைப் பாதங்கள் உடையவனே ,சதுரகிரி மலையில் உறைவோனே !

சொற்களின் பொருள் — களிறு – யானை , அரவு- பாம்பு, பரி – குதிரை, வசவிர்த்தி- வசப்படுத்தல், சோர்பந்து – கொறடா , சவுக்கு.

துட்டன்-துஷ்டன்- கெட்டவன் , குவலயம் – உலகம், மதவேள் – மன்மதன் போல அழகுடைய.

அறப்பளீச்சுர சதகம்

அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு

tags – அடங்காதவர், அடக்குவது , எருது, யானை, அரவு

–subham-

போஜ மஹாராஜன் : கொடுத்தே சிவந்த கொடைவள்ளல்! (Post No.7527)

போஜனைப் பற்றிய அடுத்த கட்டுரை இது.

போஜ மஹாராஜன் : கொடுத்தே  சிவந்த கொடைவள்ளல்! (Post No.7527)

WRITTEN BY S NAGARAJAN            

Post No.7527

Date uploaded in London – – 3 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

மாமன்னன் போஜ மஹாராஜன் அனைத்துக் கலைகளிலும் வல்லவனாக இருந்தான். சிறந்த சிவபக்தன் என்பதாலும் அனைத்து நூல்களையும் ஆராய்ந்தவன் என்பதாலும் வாழ்வின் நிலையாமையைப் பற்றி நன்கு அறிந்திருந்தான்.

அவனது அவையில் ஒரு நாள் நடந்த சமபவம் இது:

சிம்மாசனத்தில் போஜன் அமர்ந்திருக்க அருகில் இருந்த அடைப்பக்காரன் போஜனுக்கு வெற்றிலையை மடித்துக் கொடுத்தான். அதற்குள் வைக்க வேண்டிய பாக்கு மற்றும் வாசனைப் பொருள்களை அவன் எடுத்துக் கொடுப்பதற்குள் போஜன் வெற்றிலையை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு மென்று தின்ன ஆரம்பித்தான்.

இந்தச் செய்கையைக் கண்ட அரசவை அறிஞர்கள் சற்று வியப்படைந்தனர். அவர்களில் ஒருவர் இதற்கான காரணத்தைக் கேட்க போஜன் கூறினான்: “ மனிதன் மரணத்தின் பற்களில் எப்போதும் சிக்கி இருப்பவன். அவன் எப்போது பிறருக்குக் கொடுக்கிறானோ, அவன் எப்போது ஒரு பொருளை அனுபவிக்கிறானோ அப்போது மட்டும் தான் – அந்தக் கணம் தான் அவனுக்குச் சொந்தம். அடுத்து வருவதெல்லாம் சந்தேகத்திற்கு இடமானது தான்.”

இதைக் கூறி விட்டுப் போஜன் தொடர்ந்தான்:

“ஆகவே ஒவ்வொரு நாளும் மனிதன் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது தனக்குத் தானே. ‘இன்று நான் எந்த நல்ல காரியத்தைச் செய்ய முடியும்’ என்று கேட்டுக் கொள்ள வேண்டும். சூரியன் மாலையில் மேற்கே அஸ்தமிக்கும் போது ஒருவனது வாழ்க்கையின் ஒரு பகுதியையும் எடுத்துக் கொண்டு செல்கிறான். பலரும் என்னைக் கேட்கிறார்கள் :” இன்று என்ன செய்தி? நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்களா” என்று.

உடலின் ஆரோக்கியத்தை எப்படிப் பாதுகாக்க முடியும்? ஒவ்வொரு நாளும் நாம் வாழ்க்கையை விட்டுச் சென்று கொண்டிருக்கிறோம் இல்லையா? ஆகவே நாளை செய்ய வேண்டியதை இன்றே செய். மதியம் செய்ய வேண்டியதை அதற்கு முன்பே செய். மரணம் நீ பகலில் செய்ய வேண்டியதைச் செய்து முடித்தாயா, முடிக்கவில்லையா என்று பார்க்காது. மரணம் என்ன, மரணம் அடைந்து விட்டதா? ஒருவனது ஆபத்துக்கள் எல்லாம் அழிந்து விட்டனவா? உடலை நோக்கிப் பாய்ந்து வரும் வியாதிகள் தடுக்கப்பட்டனவா? அனைவரும் உல்லாசத்தில் திளைக்கின்றனரா?”

போஜன் இப்படிக் கூறி முடித்தவுடன் அவனது மனதை நன்கு அறிந்த ஒரு கவிஞர் அவனை நோக்கி, “ விரைந்து செல்லும் போர்க்குதிரையின் மீது அமர்ந்த மரண தேவன் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான்.

ஆகவே மன்னர் மன்னா, நீ எப்போதுமே தர்ம காரியங்கள் செய்வதிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும்.” என்றார்.

மன்னன் மகிழ்ந்தான். அனைவரும் போஜனின் மனப்போக்கையும் அவனது அறம் சார்ந்த வாழ்க்கையையும் போற்றிப் புகழ்ந்தனர்.

போஜராஜன் பெரிய கொடை வள்ளல். இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாமல் வேண்டியதைத் தருபவன்.

தனது வாயிலில் காத்திருப்போர்க்குத் தங்கக் காசுகளைத் தருவது அவன் வழக்கம். அவனது காவலாளிகள் ஒவ்வொருவரையும் வரிசையாக அனுமதிக்க ஒவ்வொருவராக வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.

அவனது கையில் அணியும் கங்கணத்தில் அவன் ஒரு ஸ்லோகத்தைப் பொறித்து வைத்திருந்தான்.

அதன் பொருள் : “ மனிதனின் செல்வம் இயற்கையாகவே நிலையில்லாதது. துரதிர்ஷ்டம் உன்னை சீக்கிரமே அடைவது நிச்சயம். நல்லதைச் செய்ய உள்ள வாய்ப்பைக் காண்பதற்கு நேரம் கடந்து விட்டது. ஓ! பௌர்ணமி நிலவே! உன்னிடம் இருக்கும் செல்வத்தால் உலகெங்கும் வெண்மையான பிரகாசமான கிரணங்களை அள்ளி வீசு!

உனது செல்வ வளத்தால் பாதிக்கப்படாதவன் விதி! அது நீடித்து நிலைத்து இருக்காது!

ஓ! ஏரியே! உனது பாய்ந்து செல்லும் அழகிய நீரைப் பாய்ச்ச இதுவே தகுந்த தருணம்! மேலும் இப்போது நீர சுலபமாகக் கிடைக்கிறது. சுவர்க்கத்தில் மேகங்கள் நெடுநேரம் மிதக்காது.கொஞ்ச நேரம் தான் நீர் வெள்ளமெனச் செல்லும் -அதன் வேகம் நீரை உயரத்திற்குக் கொண்டு சென்ற போதிலும் கூட! அந்த வெள்ளத்தின் குறும்பு நீண்ட காலம் இருக்காது. நதியின் இரு புறமும் உள்ள உயரமான மரங்களை அது தாழ வளைத்து வைத்திருக்கிறது.”

இந்த ஸ்லோகத்தின் மூலமாக நிலையாக இருக்காத செல்வத்தை அது இருக்கும் போதே பிறருக்குக் கொடுத்து விடு என்று அவன் தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டான்.

போஜன் ஒரு தாயத்தை வேறு தன் கழுத்தில் அணிந்திருந்தான்.

அதில் உள்ள பதக்கத்தில் அவனே இயற்றிய ஒரு செய்யுள் பொறிக்கப்பட்டிருந்தது.

அதன் பொருள் : “பிரகாசமான சூரியன் அஸ்தமிப்பதற்கு முன் இரப்போர்க்கு நான் என் செல்வத்தைக் கொடுக்காவிடில், இந்தச் செல்வம் நாளைக்கு யாருக்குச் சொந்தமாகும் என்பதை யாராவது எனக்குச் சொல்ல முடியுமா?”

இப்படிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் போஜனின் கஜானா என்ன ஆவது?

அது குறைந்து கொண்டே போனது.

இதைப் பார்த்தார் அவனது அமைச்சர் ரொஹக். அதிர்ந்து போனார் அவர். ஆனால் அதை போஜனிடம் நேரடியாகச் சொல்ல அவருக்குத் துணிச்சலும் இல்லை.

ஆகவே போஜன் தானம் வழங்கும் கூடத்தில் ஒரு நாள் இரவு சென்று அங்கிருந்த ஒரு கரும்பலகையில் எழுதி வைத்தார் இப்படி:

“தேவையான காலத்திற்கு உதவும் வகையில் ஒருவன் செல்வத்தைக் காத்து வைக்க வேண்டும்.”

இதை மறுநாள் காலை பார்த்தான் போஜன். சிரித்தான்.

அதன் அடியில் எழுதினான் இப்படி:

“நல்லவனுக்குத் தீங்கு எப்படி வரும்?”

அன்று இரவு அமைச்சர் போஜன் எழுதியதற்குக் கீழாக இப்படி எழுதினார்:

“சில சமயம் உண்மையிலேயே விதி கோபத்துடன் எழும்”

மறுநாள் காலை இதைப் பார்த்த போஜன் தனது அமைச்சருக்கு முன்னாலேயே இப்படி எழுதினான்:

“அப்படியெனில் குவித்து வைத்திருக்கும் பொற்குவியல்கள் உண்மையிலே மறைந்து போகும்.”

இப்படி எழுதி விட்டுத் தன் அமைச்சரை நோக்கிய போஜன், “ மதியில் சிறந்த பிரதம மந்திரியினால் கூட எனது யானை போன்ற உறுதி மொழியை அவரது அங்குசத்தினால் மாற்ற முடியாது.”

நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட அழகிய ஆடையை அணிந்த போதும் கூட போஜனின் மனம் எளியவர் பால் எப்போதும் இருந்தது.

இது போன்ற நூற்றுக் கணக்கான சம்பவங்கள் இன்னும் போஜனின் வாழ்க்கையில் உண்டு.

King Bhoja’s Coin with Varaha Avatara of Vishnu.

இப்படிப்பட்ட ஒரு மன்னனை உலகின் எந்த நாடேனும் கண்டதுண்டா?

இல்லை என்றே சந்தேகமின்றி உரக்கக் கூறலாம்!

Tags – போஜ மஹாராஜன், கொடைவள்ளல்

–subham-

உலகின் மாபெரும் அறிவாளி மன்னன் போஜராஜன்! (Post No.7524)

ச.நாகராஜன்

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7524

Date uploaded in London – – 2 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் எடுத்துக் கொண்டு ஆங்காங்கு பல நாடுகளையும் ஆண்ட மன்னர்களில் அறிவாளிகளாக இருந்த மன்னர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் உயர்ந்த அறிவாளியாகவும் பல்வேறு துறைகளில் பல நூல்களை இயற்றிய அறிவாளியாகவும் மிளிரும் மன்னன் பாரதத்தைச் சேர்ந்த போஜ மஹாராஜனே! ( அரசாண்ட காலம் :கி.பி. 1010-1055)

போஜனின் பெயரால் வழங்கப்படும் நகரின் பெயர் போபால்.

போஜன் 84 நூல்களை இயற்றியதாகப் பலவேறு நூல்களின் அடிப்படையில் அறிகிறோம்.

இன்னும் சிலர் அவன் 104 நூல்களை இயற்றியதாகவும் 104 ஆலயங்களை அமைத்ததாகவும் கூறுகின்றனர்.

போஜன் சிறந்த சிவ பக்தன்.

வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொரு நாளையும் நன்கு அனுபவித்தவன்.

பெருத்த நீதிமான். ஏழைகளின் பால் இரக்கம் கொண்டவன்.

சிறந்த கவிஞன். பல் துறை நிபுணன். எப்போதும் அவனைச் சுற்றிப் பெரும் கவிஞர் கூட்டம் ஒன்று இருந்து கொண்டே இருக்கும்.

ஏராளமான நுட்பமான கேள்விகளை அவர்களிடம் அவன் கேட்டுக் கொண்டே இருப்பான்.

அவர்களில் தலை சிறந்த கவிஞனாக மிளிர்ந்த காளிதாஸன் மன்னனின் மனதில் ஊடுருவி இருக்கும் ரகசியத்தை அறிந்து பளீர் பளீரென்று கவிதையாலேயே பதில் கொடுப்பான்.

போஜனையும் காளிதாஸனையும் இணைத்து பாரதத்தில் உலவி வரும் சம்பவங்கள் ஏராளம்; கதைகள் ஏராளம்.

துரதிர்ஷ்டவசமாக போஜனைப் பற்றிய முழு வரலாறு எழுதப்படவில்லை.

ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் நூல்களில் உள்ள சம்பவங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

அவனது 84 நூல்களில் இன்று கிடைத்திருப்பவை சொற்பமே. ஒரு வேளை முனைப்புடன் ஆராய்ந்தால் (4 லட்சம் சம்ஸ்கிருத சுவடிகள் திறந்து கூடப் பார்க்கப்படவில்லை என்பதை நினைத்துப் பார்த்தால்) அவனது நூல்கள் பல கிடைக்கக் கூடும்.

அவனது நூல்களின் பட்டியலை ஒருவாறாக இன்றைய நிலையில் தொகுத்துப் பார்த்தால் வருவது கீழ்க்கண்ட நூல்கள்:

வானவியல் மற்றும் ஜோதிடம்

ராஜமார்த்தாண்டா

ராஜம்ருகங்கா

இட்வஜ்ஜனவல்லபா (ப்ரஸ்ன ஞானம்)

ஆதித்ய பிரதாப சித்தாந்தா

மருத்துவம்

ஆயுர்வேத சாரஸ்வம்

விஸ்ராந்தவித்யா விநோதம்

சாலைஹோத்ரம் (விலங்கிய கையேடு)

சில்ப சாஸ்திரம்

சமராங்கதஹன சூத்ரதாரா

இலக்கணம்

சப்தானு ஞானம்

தத்துவம்

ராஜமார்த்தாண்டம் (வேதாந்தம்)

பதஞ்சலி யோக சூத்ரம்

தத்வ ப்ரகாசம் (சைவம்)

சித்தாந்த சங்க்ரஹம்

சிவதத்வ ரத்ன காலிகா

யுக்தி கல்பதரு

பரம சாஸ்த்ரம்

வியவஹார சமுச்சயம்

சாருசர்யா

அர்த்த சாஸ்திரம்

அய்ஜக்ய நீதி (தண்ட நீதி) மற்றும் புத்ரமார்த்தாண்டம்

அலங்காரம்

சரஸ்வதி கண்டாபரணம்

ச்ருங்கார ப்ரகாஸம்

கவிதை மற்றும் உரைநடை

ரத்னாயன சம்பு

வித்யாமோத காவ்யம்

இரு பிராக்ருத நூல்கள் (சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை)

மஹா காளி விஜயம் (ஸ்தோத்ர நூல்)

ச்ருங்கார மஞ்சரி (உரைநடையில் கதைகள்)

சுபாஷித ப்ரபந்தம்

அகராதி

நாமமாலிகா

மேலே கண்டவை அனைத்தும் பிரபாவ சரித்ரம் என்ற (1450ஆம் ஆண்டு) நூலில் தரப்பட்டவையாகும்.

வழக்கம் போல ஆங்கில “அறிஞர்களால்” முட்டாள்தனமாக வைக்கப்படும் ஒரு வாதம் – இவ்வளவு நூல்களையும் ஒரே மன்னன் எழுதி இருக்க முடியுமா? என்பது தான்!

உடனேயே இவர்களின் முடிவு “முடியாது” என்பது தான்.

பல்வேறு அறிஞர்களை எழுத வைத்துத் தன் பெயரைப் போட்டுக் கொண்டான் போஜன் என்று கூறி இவர்கள் சந்தோஷப்படுகின்றனர் – பாரத அறிஞன் ஒருவனை மட்டம் தட்டி, அதை அப்படியே காலம் காலமாகச் சொல்ல வித்திட்டு விட்டோமே என்பது இவர்களின் சந்தோஷம். ஆகவே தான் இவர்களின் பெயர்களைக் கூட இங்கே குறிப்பிடவில்லை. வெற்று விளம்பரத்தைத் தேடும் அறிஞர்களுக்கு நாம் ஏன் அதைத் தர வேண்டும்.

இன்றைய உலகை எடுத்துக் கொண்டால் பல அறிஞர்கள் ஏராளமான நூல்களை எழுதிதைப் பார்க்கிறோம்; எழுத்தாளர்கள் பல நாவல்களை எழுதியதைப் பார்க்கிறோம்.

அவர்களை எல்லாம் ஏன் இந்த அறிஞர்கள் மட்டம் தட்டவில்லை? சந்தேகப்படவில்லை?!

காரணம் போஜன் ஒரு பாரத தேசத்து மாமன்னன்; பேரறிஞன் – அவனை அப்படி ஒப்புக் கொள்ளாமல் மட்டம் தட்ட வேண்டும்; அவ்வளவு தான்!

•   I. Astronomy and Astrology   (1) Rajamarttanda   (2) Rajamrganka   (3) Yidvajjanavallabha (pra§najnana)   (4) Adityapratapasiddbanta   II. Medicine   (5) Ayurveda Sarvasvam   (6) Visrantavidyavinoda   (7) Salihotra (a Veterinary Manual)     III. Silpaidstra   (8) SamaranganaSutradbara   IV. Grammar     (9) Sabdanu6a3anam   V. Philosophy   (10) Rajamarttanda (Vedanta)   (11) „ (acorn, on Patanjali’s Yoga Sutras)   (12) Tatvaprakasa (Saivaism).   (13) Siddhantasangraha, „   ( 14 ) Sivatatvaratna Kalika „   (15) Yukti Kalpataru „   VI. Pharma Sastra   (16) Vyavabarasamuccaya.   (17) Carucarya.   VII. Arthasaitra   (18) Caijakyaniti (Dandaniti) and Putramartanda.   VIII. Alankdra   (19) Sarasvati Kantbabharana   (20) jSrngaraprakasa.   IX. Poetry and Prose.   (21) Ratnayana campu.   (22) Vidyavmodakavyam.   (23, 24) Two Prakrt poems (lately discovered at  Dbar).   (25) Mabakalivijayam (a stotra)   (26) Srngaramanjari (prose tales)   (27) Subbasitaprabandha.   X. Lexicography   (28) Namamalika. A list in the Prabhavaka Garitra (c. 1450 A. D.)

*

போஜன் எழுதிய நூல்களாக விக்கிபீடியா தரும் பட்டியல் இது:

According to Ajada, who wrote a commentary titled Padaka-prakasha on Sarasvati-Kanthabharana, Bhoja wrote 84 books. The surviving works attributed to Bhoja include the following Sanskrit-language texts (IAST titles in bracket)

  • Bhujabala-bhima (Bhujabalabhīma), a work on astrology
  • Champu-Ramayana or Bhoja-Champu (Campūrāmāyaṇa), a re-telling of the Ramayana in mixture of prose and poetry, which characterises the champu genre. The first five kandas (chapters) are attributed to Bhoja. The sixth and seventh chapters were completed by Lakshmana and Venkatadhvarin respectively.
  • Charucharya (Cārucārya), a treatise on personal hygiene
  • Govinda-vilasa, poem
  • Nama-Malika, a compiled treatise on lexicography
  • Raja-Martaṅda (Rājamārtanḍa) or Patanjali-Yogasutra-Bhashya, a major commentary on the Yoga Sutras of Patanjali; includes an explanation of various forms of meditations
  • Raja-Mriganka-Karana (Rājamrigankakaraṅa), a treatise on chemistry, especially dealing with the extraction of metals from ores, and production of various drugs.
  • Samarangana-Sutradhara (Samarāṇgaṇasūtradhāra), a treatise on architecture and iconography. It details construction of buildings, forts, temples, idols of deities and mechanical devices including a so-called flying machine or glider.
  • Sarasvati-Kanthabharana (Sarasvatīkaṇṭhabharaṇa), a treatise on Sanskrit grammar for poetic and rhetorical compositions. Most of it is a compilation of works by other writers. Some of the poetic examples provided by him in this work are still appreciated as the highest cream of Sanskrit poetry.
  • Shalihotra (Śālihotra), a book on horses, their diseases and the remedies
  • Shringara-Prakasha (Śṛṅgāraprakāśa), treatise on poetics and dramaturgy
  • Sringara-Manjari-Katha (Śṛṅgāramanjarīkathā), a poem composed in akhyayika form
  • Tattva-Prakasha (Tattvaprākaśa), a treatise on Shaivite philosophy. It provides a synthesis of the voluminous literature of the siddhanta tantras
  • Vidvajjana-Vallabha, treatise on astronomy
  • Vyavahara-Manjari (Vyavahāramanjarī), a work on dharmaśāstra or Hindu law
  • Yukti-Kalpataru, a work dealing with several topics including statecraft, politics, city-building, jewel-testing, characteristics of books, ship-building etc.

The Prakrit language poems Kodanda-Kavya and Kurma-Sataka are also attributed to Bhoja.[79] The Kodanda-Kavya (Kodaṅḍakāvya) was found inscribed on stone slab fragments at Mandu.[80] The Kurma-Sataka (Avanikūrmaśataka), which praises the Kurma (tortoise) incarnation of Vishnu, was found inscribed at the Bhoj Shala in Dhar.[81]

Sangitaraja, attributed to Kalasena or Kumbha, names Bhoja as an authority on music, which suggests that Bhoja also compiled or wrote a work on musi

***

போஜனின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் சிலவற்றை அடுத்துப் பார்ப்போம். 

(தொடரும்)

எக்ஸ்டசி உயிர்கொல்லி மருந்து (Post No.7516)

WRITTEN  BY LONDON SWAMINATHAN

Post No.7516

Date uploaded in London – 30 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மே 24, 1992 தினமணியில் நான் எழுதிய கட்டுரைகள்:–

1.ரஷ்ய ராக்கெட்டுகள் ஏலம்

2.எல்விஸ் பிரெஸ்லி தபால் தலை

3.டைட்டானிக் கப்பல் விபத்து விசாரணை

4.எக்ஸ்டசி உயிர்கொல்லி மருந்து

இதில் ‘எக்ஸ்டசி உயிர்கொல்லி மருந்து’

பற்றிய செய்தியைக் காண்போம்–

Pure ecstasy takes the form of a white powder. It is known as MDMA which is short for 3,4 Methylenedioxymethamphetamine. Although police seizures of MDMA powder have increased in recent years, it remains less common than ecstasy tablets or capsules. Ecstasy is also very occasionally sold as crystals.

—subham—

‘உள்ளுர்ப் பெண்ணும் அயலூர் மண்ணும் ஆகாது’ (Post No. 7510)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No.7510

Date uploaded in London – 29 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பிப்ரவரி 2020 காலண்டர்  (விகாரி- தை/மாசி)

பண்டிகை நாட்கள் — 1 ரத சப்தமி,  2 பீஷ்ம அஷ்டமி ,  8 தைப் பூசம், வடலூர் ஜோதி தரிசனம்  , 21 மஹா சிவராத்திரி , 25  ராமகிருஷ்ண பரமஹம்சர்  ஜயந்தி  .

பௌர்ணமி– 8/ 9, அமாவாசை -22/23

ஏகாதசி விரதம்  – 5,19

முகூர்த்த நாட்கள்  – 5, 7, 12, 14, 20, 21, 26

மனிதனுடைய குணநலன்களை சித்தரிக்கும் 29 பழமொழிகள், இந்த பிப்ரவரி 2020 காலண்டரில் இடம்பெறுகின்றன.


உலகில் முதல் முதலில் அக்யூ பங்க்சர்
 (Acupuncture) சக்தியை அறிமுகப்படுத்திய பீஷ்மரின் நினைவு நாள் 
பீஷ்ம அஷ்டமி ஆகும்

பிப்ரவரி 1 சனிக் கிழமை 

இக்கரைக்கு அக்கரை  பச்சை

பிப்ரவரி 2 ஞாயிற்றுக் கிழமை

ஆரால் கேடு ? வாயால் கேடு

பிப்ரவரி 3 திங்கட் கிழமை

உள்ளுர்ப் பெண்ணும் அயலூர் மண்ணும் ஆகாது

பிப்ரவரி 4 செவ்வாய்க் கிழமை

ஆரம்ப சூரத்தனம்

பிப்ரவரி 5 புதன் கிழமை

ஆணை அடித்து வளர்க்க, பெண்ணைப் போற்றி வளர்க்க

பிப்ரவரி 6 வியாழக் கிழமை

ஆயிரம் நற்குணம் ஒரு லோப குணத்தால் கெடும்

பிப்ரவரி 7  வெள்ளிக் கிழமை

ஆண்  அண்டத்தை ஆளுகிறான், ஆணைப் பெண் ஆளுகிறாள்

பிப்ரவரி 8  சனிக் கிழமை 

ஆயிரம் வித்தைகள் கற்றாலும் உலகத்தில் ஆடம்பரங்கள் வேண்டும்

பிப்ரவரி 9 ஞாயிற்றுக் கிழமை

ஆயுசு பலமாக இருந்தால் ஆற்றில் போனாலும் பிழைப்பான்

பிப்ரவரி 10 திங்கட் கிழமை

ஆறு வரவு, நூறு செலவு

பிப்ரவரி 11 செவ்வாய்க் கிழமை

ஆற்று மணலிலே தினம் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஓட்டும்

பிப்ரவரி 12  புதன் கிழமை

இட்டுக்  கெட்டார் எங்கனுமே இல்லை

பிப்ரவரி 13 வியாழக் கிழமை

பழமை பாராட்ட வேண்டும்

பிப்ரவரி 14  வெள்ளிக் கிழமை

பருப்புச் சோற்றுக்குப் பதின் காதம் போவான்

பிப்ரவரி 15 சனிக் கிழமை 

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

பிப்ரவரி 16 ஞாயிற்றுக் கிழமை

பழிக்கு அஞ்சு, பாவத்துக்குக் கெஞ்சு

பிப்ரவரி 17 திங்கட் கிழமை

புலி அடிக்கு முன்னே கிலி அடிக்கும்

பிப்ரவரி 18 செவ்வாய்க் கிழமை

பெருங்காயம் இருந்த பாண்டம் வாசனை போகாது

பிப்ரவரி 19 புதன் கிழமை

பை  எடுத்தவனெல்லாம் வைத்தியனா ?

பிப்ரவரி 20 வியாழக் கிழமை

மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் கொட்டம் அடங்க வேண்டும்

பிப்ரவரி 21  வெள்ளிக் கிழமை

பழம் நழுவில் பாலில் விழுந்தது, அதுவும் நழுவி வாயில் விழுந்தது

பிப்ரவரி 22 சனிக் கிழமை 

மண் காசுக்கு சாம்பல் கொழுக்கட்டை

பிப்ரவரி 23  ஞாயிற்றுக் கிழமை

பால் ஆறாய் ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்

பிப்ரவரி 24 திங்கட் கிழமை

வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் செய்

பிப்ரவரி 25 செவ்வாய்க் கிழமை

தேனை வழித்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா ?

பிப்ரவரி 26 புதன் கிழமை

வைரத்தை வைரம்கொண்டே அறுக்க வேண்டும் 

பிப்ரவரி 27 வியாழக் கிழமை

அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே

பிப்ரவரி 28  வெள்ளிக் கிழமை

மவுனம் உடையார்க்கு வாராது சண்டை

பிப்ரவரி 29 சனிக் கிழமை 

வாய் சர்க்கரை,   கை கருணைக் கிழங்கு

xxx

Bonus Proverbs

மனப் பேயேயொழிய மற்ற பேய் இல்லை

இரண்டு பெண்டாட்டிக்காரன்பாடு திண்டாட்டம்

வேண்டாப்  பெண்டாட்டியின் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்

Xxxx subham xxxx

எல்விஸ் பிரெஸ்லி தபால் தலை(Post No.7508)

WRITTEN BY LONDON SWAMINATHAN

–          

–         Post No.7508

–          

–         Date uploaded in London – 28 January 2020

–         Contact – swami_48@yahoo.com

–         Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மே 24, 1992 தினமணியில் நான் எழுதிய கட்டுரைகள்

ரஷ்ய ராக்கெட்டுகள் ஏலம்

எல்விஸ் பிரெஸ்லி தபால் தலை

டைட்டானிக் கப்பல் விபத்து விசாரணை

எக்ஸ்டசி உயிர்கொல்லி மருந்து

இதில் எல்விஸ் பிரெஸ்லி தபால் தலை முடிவும் 26-7-1992ல் தினமணிக் கதிரில் வெளியானது.

முதலில் எல்விஸ் பற்றிய செய்தியைக் காண்போம்

யுவாங் சுவாங் பொய் சொல்வாரா? பாஹியான் பொய் சொல்வாரா? (Post No.7506)

யுவாங் சுவாங் பொய் சொல்வாரா? பாஹியான் பொய் சொல்வாரா? (Post No.7506)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7506

Date uploaded in London – 28 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குச் செய்த தீமைகள் பல. கொஞ்சம் பட்டியலைப் பார்ப்போம்.

1. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செல்வங்களை இங்கிலாந்துக்குக்கு கொண்டு சென்றனர். இந்தியாவின் புகழ் பெற்ற வைரங்கள், மரகதங்கள் , நீலக்  கற்கள் இப்பொழுது பிரிட்டனில் உள்ளன. இதே காலத்தில் வங்காளத்திலும் பீஹாரிலும் மட்டும் பல லட்சம் பேர் பட்டினியாலும் பஞ்சத்தாலும் இறந்தனர்.

2. இந்தியாவை மூன்று துண்டாக போட்டு கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்க தேசம்), மேற்கு பாகிஸ்தான் என்று செய்து நிரந்தர தொல்லை கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

3. இதையெல்லாம் விட மிகப்பெரிய விஷமம் வரலாற்றைத் திருத்தி எழுதியதாகும் . எகிப்து, பாபிலோனியா, மாயன், கிரேக்க நாகரீகங்களில் 5000 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்த மன்னர்கள் பட்டியல் உண்டு. இந்தியாவில் மட்டும் புத்தர் காலத்துக்கு முன்னர், ஆண்டவர் எவருமே இல்லை. புராணங்களில் இதிகாசங்களில் சொல்லும் மன்னர் பெயர்கள் எல்லாம் கட்டுக்கதை என்று சொல்லி மன்னர்கள் பெயர் அத்தனையையும் அழித்தனர். அது மட்டுமல்லாமல் இந்தியர்கள் மட்டும் உலகில் பூர்வ குடியினர் இல்லை. திராவிடர்கள் மத்தியதரைப் பகுதியில் இருந்தும், ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்தும்  வந்தனர் என்றும் கால்டுவெல்  மூலமும்,மாக்ஸ்முல்லர்  மூலமும் பரப்பினர். உண்மையில் நாம் வெளியே  சென்று, உலகம் முழுதையும் நாகரீக மயமாக்கியதை மறைத்தனர்.

இந்தக் கட்டுரையில் இந்த மூன்றாவது விஷயத்தை எடுத்துக் கொள்வோம். பாஹியான், யுவாங் சுவாங், வராஹ மிஹிரர், கல்ஹணர் ஆகிய நால் வரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். இந்த நான்கு  பே ர்களும் அரசியல் கட்சிக்காரர்கள் இல்லை. மத வெறியர்களும் இல்லை என்பதை உலகமே ஒப்புக் கொள்கிறது. ஆகையால் பொய் சொல்ல வாய்ப்புகள் குறைவு.

முதலில் இந்த 4 பேரும் யார் என்று தெரியாதவர்களுக்குச்  சொல்லிவிடுகிறேன்.

பாஹியான் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரீ கர்.

யுவாங் சுவாங் , பாஹியானுக்குப் பின்னர்  சீன யாத்ரீகர் – 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா, இந்தோனேஷியா போன்றா நாடுகளுக்கு விஜயம் செய்து பயணக் கட்டுரைகளை எழுதி வைத்தார்.

வராஹமிஹிரர் என்பவர் கிட்டத்தட்ட அதே காலத்தில் வாழ்ந்தவர்தான். பிருஹத் ஜாதகம், பிருஹத் சம்ஹிதை போன்ற நூல்களில் வான சாஸ்திர,ஜோதிட மற்றும் கலாசார அறிவியல் விஷயங்களை எழுதியவர் .

கடைசியாக வாழ்ந்தவர் கல்ஹணர் என்னும் காஷ்மீரி பிராமணர் ஆவார் . ராஜ தாரங்கிணி என்ற காஷ்மீர் வரலாற்று நூலை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்தார். இவர் ஆண்டுகளைக் குறிப்பிட்டு எழுதியதால் இவரை முதல் இந்திய வரலாற்று ஆசிரியர் என்று மேலை நாட்டுக்கார்கள் புகழ்வர் .

ஆயினும் வராஹ மிஹிரரும் கல்ஹணரும் இந்திய வரலாற்றில் ஒரு வெடி  குண்டைத் தூக்கிப் போட்டார்கள்.கலியுகம் என்பது கி.மு.3102ல் துவங்கவில்லை. அதற்குச் சுமார்  600 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் துவங்கியது என்கிறார்கள்.மற்றோர் புறம் கல்ஹணரும் யுவாங் சுவாங்கும் இன்னொரு வெடிகுண்டைத்  தூக்கிப் போட்டார்கள். குஷான மன்னர்களான கனிஷ்கர் , ஹு விஸ்கர் எல்லோரும் மிகவும் முற்காலத்தில்  ஆண்டதாகவும் , புத்தர் பெருமான் மிகவும் முற்காலத்தில் இருந்ததாகவும் சொல்கின்றனர் .

கல்ஹணரைப் புகழும் மேலை நாட்டினர் அவர் எழுதிய எட்டு அத்யாயங்களில் முதல் 4 அத்தியாயங்களை நம்பாதே என்கின்றனர். ஏனெனில் இதில் கி.மு.2000 முதலான மன்னர் பட்டியல் உளது!!

இதெல்லாம் ஒரு  புறமிருக்க, பல வரலாற்று ஆசிரியர்கள் வெள்ளைக்காரர் எழுதிய இந்திய வரலாறு ஆயிரம் ஆண்டுகளை விழுங்கிவிட்டது, மறைத்துவிட்டது என்பர். அதாவது அசோகர் கல்வெட்டில் குறிப்பிடும் சந்திரகோட்டஸ் ( சந்திர குப்தர் என்பதன் மருவு) மௌர்ய சந்திர குப்தர்  என்பது தவறு. உண்மையில் அது குப்த வம்சத்தைச் சேர்ந்த சந்திர குப்தர்  என்பர். புத்தர் காலம் பற்றியும் இலங்கை , இந்தியா, திபெத், பர்மா, சீன வரலாறுகளில் குழ ப்பம் இருக்கிறது.

வெள்ளைக்காரர் எழுதிய வரலாற்றுப் புஸ்தகங்களை உலகம் முழுதும் திருத்திப் புதுப்புது புஸ்தகங்களை பாடத்திட்டங்களில் சேர்த்து வருகையில் நம் மட்டும் எம்.ஏ வரலாற்றுப் பாடம் வரை பழைய பல்லவியைப் பாடி வருகிறோம்!!

முதலில் வரலாற்றைத்  திருத்தி எழுதவேண்டும். எதிரும் புதிருமான இரு வேறு  கருத்துக்களையும் அருகருகே கொடுத்து ஆராய்ச்சிகளைத் தொடர வேண்டும். பாஹியான்,யுவாங் சுவாங் -கல்ஹணர் சொல்லும் கருத்துக்களை மேலும் ஆராய வேண்டும். 1600 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் எழுதி வைத்திருக்க காரணம் இல்லாமல் இருக்காது. பிற்காலத்தில் இந்தியாவுக்கு வந்த அல்பெரூனி  கூட  கலியுகம் முதலியவற்றில் சில மாறுபட்ட கணக்கீடுகள்   இருப்பதைச்  சுட்டிக்காட்டியுள்ளார்.

குஷ் (Kush Kingdom of Egypt) என்னும் ஒரு வம்சத்தினர் எகிப்து  நாட்டை ஆண்டனர். அவர்களுக்கும் நமது குஷானர்களுக்கும் தொடர்பு உண்டா  என்றும்  ஆராயலாம். அவர்களும் கி.மு காலத்தை சேர்ந்தவர்கள்.

யுதிஷ்டிரர் பட்டாபிஷேகம் செய்து கொண்டபோது சபதரிஷி சுழற்சி மக நட்சத்திரத்தில் இருந்ததாக வராஹ மிஹிரர் சொல்கிறார். இதனால்தான் ஏறத்தாழ 640 ஆண்டு வித்தியாசம். இரும்பு, குதிரை ஆகிய இரண்டின் குறிப்புகள் காரணாமாக மஹாபாரத காலத்தை கி.மு. 1500 என்று தொல்பொருட் துறையினர் கூறுவர்.

ஆக நமது பஞ்சாங்கம், வராஹ மிஹிரர்/கல்ஹணர் ஜோடி, தொல் பொருட் துறை  சான்றுகள் ஆகியன வெவ்வேறு காலத்தைச்  சொல்லுவதால் அறிஞர் மாநாட்டைக் கூட்டி அவ்வாப்பொழு து ஆராயவேண்டும். ஏனெனில் குதிரை, இரும்பு இரண்டின் காலமும் கி.மு.1500க்கும் முந்தையது என்று தற்காலச்  சான்றுகள் கா ட்டுகின்றன.

புராணங்களில் உள்ள வரலாறு என்ற தலைப்பில் புஸ்தகம் எழுதிய டி .ஆர் .மங்கட் (D R MANKAD, PURANIC CHRONOLGY)  , ஒரு பட்டியல் தருகிறார். அதன்படி

தற்போது இந்துக்கள் தினமும் பூஜையில் சொல்லும் ஏழாவது மநுவான வைவஸ்வத மனுவின் காலம் கி.மு 5976

மஹாபாரத யுத்தம் நிகழ்ந்தது – கி.மு.3201

யுதிஷ்டிரர் இறந்தது – கி.மு. 3176

துவாபர யுகம் முடிவு – கி.மு .2976

இதை அப்படியே நம்பத்  தேவையில்லை. இது ஒரு ஆராய்ச்ச்சிதான். ஆனால் இதில் பசையுள்ள பல வாதங்கள் இருக்கின்றன.

மெகஸ்தனீஸ் (Greek Ambassador) என்ற கிரேக்கரும் அரியான் (Arrian, Greek Historian) என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியரும் சந்திரகோட்டஸ்   காலத்துக்கு முன்னால் 154 அரசர்கள் இந்தியாவை ஆண்டதாகவும் அவர்களுடைய காலம் 6000  ஆண்டுகளுக்கும் மேல் என்றும் எழுதி வைத்துள்ளனர். இந்த சந்திரகோட்டஸ், மௌர்ய சந்திர குப்தர்  என்பது வெள்ளைக்காரர் வாதம். இல்லை இவர், குப்தப் பேரரசரான சந்திரகுப்தன்தான் என்பது மங்கட்டின் வாதம். இத்துடன் கல்ஹணர் சொன்ன விஷயங்களையும் யுவாங் சுவாங் சொன்ன விஷயங்களையும் இணைத்து ஆராய்தல் அவசியம்.

புத்தர் காலம் பற்றி மகா குழப்பம்

புத்தர்  காலம் பற்றி மகா குழப்பம் உளது. ஆதி சங்கரர் காலம் பற்றியும் குழப்பம் உளது. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) போன்றோர் அவர் கிறிஸ்துவுக்கு முந்தைய காலம் என்பார். ஏனையோர் அது கி.பி.732 என்பர். அப்போது சங்கரரைப் போலவே எல்லா விதங்களிலும் அச்சு வார்த்த துபோல அபிநவ சங்கர் என்பவர் இருந்ததால் இப்படிக்  குழப்பம்.

புத்தர் காலம் பற்றி புத்தமத நாடுகள் வெவ்வேறு கணக்கு கொடுக்கின்றன. இந்தக் கணக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் யுவாங் சுவாங் எழுதிய புஸ்தகத்திலும் உளது. அட, காரணமே இல்லாமல் மெகஸ்தனிஸும், கல்ஹணரும் , யுவாங் சுவாங்கும்  பொய் சொல்வார்களா ? சிந்தித்துப் பாருங்கள்.

பாஹியான் என்ற சீன யாத்ரீகர் எழுதிய குறிப்புகளில் தான் இந்தியாவுக்கு வந்தபோது புத்தர் இறந்து 1497 ஆண்டுகள் ஆனதாக எழுதுகிறார். அவர் கி.பி. 405 முதல் 411 வரை இந்தியாவில் இருந்தார். ஆகையால் அவருடைய கணக்குப்படி புத்தர் இறந்தது கி.மு 1086.

அவருக்கு சுமார் 250 ஆண்டுகளுக்குப் பின்னர் யுவாங் சுவாங் வந்தார். அவருடைய பெயருக்கு ‘தர்ம ஆசார்ய’ என்று அர்த்தம். அவர் எழுதிய சி யூ கி என்ற புஸ்தகத்தில் “புத்தரின் மரணம் பற்றி வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு காலத்தை சொல்கிறார்கள். சிலர் 1300, 1200, 1500 ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள். சிலர் 900 ஆண்டுதான் ஆயிற்று என்பர்”.

அவருடைய கணக்குப் படி பார்த்தாலும், புத்தரின் மரணம் கி.மு.860 முதல் கி.மு.260 க்குள் இருந்திருக்க வேண்டும்.

சீ னர்கள் பொதுவாக நம்புவது கி.மு 638 (புத்தர் மரண ஆண்டு)

ஸ்ரீலங்கா, பர்மா, அஸ்ஸாம் – கி.மு.543

திபெத் – கி.மு.2422 முதல் கி.மு 546

காண்டன் புள்ளிக் கணக்கு புஸ்தகம் – கி.மு.543 அல்லது 487

வெள்ளைக்காரர்கள் இவை எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு கி.மு 487ல் புத்தர்  இறந்தார் என்று எழுதிவிட்டனர். அதாவது யுவாங் சுவாங், பாஹியான், கல்ஹணர் போன்ற வரலாற்று கதாநாயகர் சொன்னதும் பொய் மக்களின் நம்பிக்கையும் பொய் . நாங்கள் சொல்வதே மெய். என் று  சொல்லி , அசோகர் கல்வெட்டு சொல்லும் சந்திர கோட்டஸ் தான் மௌர்ய  சந்திர குப்தன்  என்று எல்லோரையும் நம்பவைத்தனர். அதாவது கட்டைப் பஞ்சாயத்து முறையில் மற்றவற்றை மறுத்துவிட்டனர். இந்துக்களாகிய நாம் வரலாற்றைத் திருத்தி எழுதினால் தமிழர்கள் சொல்லும் 10,000 ஆண்டு தமிழ்ச் சங்க வரலாறும் உண்மையாகிவிடும்! 

முதலில் எல்லா வரலாற்றுப் புஸ்தகங்களிலும் எதிரும் புதிருமாக உள்ள கருத்துக்களைக் கொடுத்து புதிய முடிவுகள் வந்தவுடன் அவற்றை முழு  அளவுக்கு மாற்றி எழுதலாம்.

Xxxx subham xxx