யூத மத ‘ரப்பை’ ஜோக்குகள்! (Post No.4920)

யூத மத ரப்பை ஜோக்குகள்! (Post No.4920)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 16 April 2018

 

Time uploaded in London –  11-03 am (British Summer Time)

 

Post No. 4920

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

இது பழைய ப்ரஷ்யாவில் (ஜெர்மனி, போலந்தின் பகுதிகள் கொண்ட நாடு) நடந்தது. Frederic the Great பிரெடெரிக் தெ க்ரேட் (1740-86) என்று அழைக்கப்படும் மன்னரிடம் ஒரு ப்ராடெஸ்டன்ட்  (protestant bishop) பிஷப் சென்றார்.

“மன்னரே எனது சமயத்துக்கு ஒரு அலுவலகம் தேவை”.

“அடக் கடவுளே! இப்பொழுதுதானே அந்த இடத்தை வேறு ஒரு பிரிவுக்குக் கொடுத்தேன். ஆனால் கத்தோலிக்க மதப் பிரிவுக்கான ஆபீஸ் இடம் காலியாக இருக்கிறது.

அப்படியா! என்று சொல்லிவிட்டு ப்ராடெஸ்டன்ட் சமயப் பிரிவு பிஷப் போய்விட்டார்.

 

ஒரு வாரம் கழித்து அவர் திரும்பி வந்தார்.

“மன்னரே! உண்மைக் கடவுளைக் கண்டு விட்டேன். நான் இப்பொழுது கத்தோலிக்க குருவாக மாறிவிட்டேன். நீங்கள் சொன்னீர்கள், கத்தோலிக்கப் பிரிவு அலுவலகம் காலியாக இருப்பதாக. அடியேனுக்கு அருள்கூர்ந்து அதைக் கொடுக்கலாமே.”

மஹா ப்ரெடெரிக் சொன்னார். “என்ன துரதிருஷ்டம் உங்களுக்கு! அதுவும் போய்விட்டதே. ஆனால் ஒரு நல்ல செய்தி. நேற்று யூதமத ரப்பை (சமய குரு, அறிஞர், யூத சட்ட நிபுணர்) இறந்து விட்டார். இப்பொழுது அவர்களுடைய சைனகாக் (கோவில்) என் கையில் உள்ளது.

 

ஒருவேளை நீங்கள்  யூதமத………………………………

 

அவர் போய்விட்டார்.

 

xxx

 

Bronx Zoo ப்ரான்க்ஸ் நகர மிருகக் காட்சி சாலை

 

ஒருவர் ப்ரான்க்ஸ் நகர மிருகக் காட்சி சாலையில் வேலை கேட்டு வந்தார். அவர் ஒரு பருமனான ஐரிஷ்காரர். அவரிடம் வேலை வாய்ப்பு மனுவைக் கொடுத்து,

“அன்பரே, இதைப் பூர்த்தி செய்யுங்கள்; பின்னர் நிரப்பிய மனுவை எங்களிடம் கொண்டு வாருங்கள்” என்றனர் அதி காரிகள்.

அவரும் பூர்த்தி செய்தார்.

ஒரு கேள்வி ரபிஸ்(Rabies) என்றால் என்ன? அதை எப்படி தடுப்பீர்கள்?

அவர் எழுதினார்,

ரப்பைஸ் என்பவர் யூத சமய நிபுணர்; அவர் வந்தால் யாரும் தடுக்க முடியாது!

 

ரபிஸ் (Rabies) என்பது வெறிநாய்கள் மற்றும் மிருகங்களின் எச்சில் மூலம் பரவும் கொடிய வைரஸ் நோய்; மரணம் கூட வரும்; ரப்பைஸ் (Rabbis) என்பவர் யூத சமய சட்ட நிபுணர்கள்; சமய வித்தகர்)

 

விலங்கியல் பூங்காவின் மனுவை நிரப்புகிறோம் என்ற உணர்வே இல்லாமல் பொருத்த மற்ற பதிலை எழுதினார் ஐரிஷ்காரர்!!!

 

xxx

 

ஒரு யூத மத நபர் பின்ஸ்க் (Pinsk) நகரில் இருந்து மின்ஸ்க் (Minsk) நகருக்கு வேலைக்குப் போனார். ஆறு மாதம் ஆகிவிட்டது வெள்ளிக்கிழமை மாலை வேளை; நண்பரிடம் விடைபெற்றார்.

அடக்கடவுளே! நாம் யூதர்கள்! வெள்ளி மாலை முதல் சனி மாலை வரை Sabbath சப்பத் என்பது மறந்துவிட்டதா? நீ மின்ஸ்க் நகருக்குப்  பயணம் செய்தால், அது அபச்சாரம். என்னுடன் தங்கி விட்டு மெதுவாகப் போகலாம்.

 

அவர் சொன்னார்,

“இதோ பார், பிள்ளைக்குட்டி பெண்டாட்டியை விட்டு வந்து ஆறு மாதம் ஆகிவிட்டது. எனக்கு வார இறுதி விடுமுறைதான் பெரிது; சப்பத் அல்ல.

அட நீ ஒன்று ஆறு மாதம் பிரிந்து இருந்து விட்டாய்! 24 மணி நேரம் கூட இருந்தால் குடி முழுகிப் போய்விடுமா? பெரிய வீடு இருக்கிறது. இங்கே நல்ல யூத மத சம்ப்ரதாய உணவு கிடைக்கும்; வா, உள்ளே என்று தர தர என்று இழுத்து, அறைக்குள் விட்டார்.

 

 

அவரும் வேண்டா வெறுப்பாக அங்கே தங்கினார். 24 மணி நேரத்துப்பின் புறப்பட்டார். அவரது நண்பரோ உள்ளே மீண்டும் இழுத்துச் சென்று இன்னும் ஒரு நாள் தங்கிவிட்டுப் போ என்றார்.

மீண்டும் அதே பல்லவி; என் பிள்ளைக்குட்டி,பெண்டாட்டி…..

 

“சீ போ; ஒரே ஒரு நாள் இரு”.

அவரும் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு நாள் இருந்தார்.

மறு நாள் வீட்டை விட்டு ஓடிவிடத் தயாராக இருந்த அவர் நண்பரிடம்; இப்பொழுது திருப்திதானே?  நான் பின்ஸ்க் நகருக்குப் புறப்படுகிறேன் என்றார்.

 

கட்டாயம் போகலாம், நண்பா! இதோ பில்! இரண்டு நாள் சாப்பாடு, தங்குமிடச் செலவு!

 

அதைப் . பார்த்தவுடன் அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆகாஸத்துக்கும் பூமிக்கும் குதித்தார்

 

இது என்னையா அநியாயம்! நீ என்ன கொள்ளைக்கார பிஸினஸ் நடத்துகிறாயா?

ஊருக்குப் போக எத்தனித்த என்னை வலுக்கட்டாயமாக இழுத்து உள்ளே தள்ளினாய். மீண்டும் புறப்பட்டபோது இன்னொரு நாள் விருந்தினராக இரு என்றாய்? இப்பொழுது என்ன மூஞ்சிக்கு பில்?

 

இருவருக்கும் இடையே பயங்கர கார சார வாதம். அப்பொழுது இடம் கொடுத்து பில்லும் கொடுத்த நண்பர் சொன்னார். இரு நான் மின்ஸ் நகர ரப்பையைக் கூப்பிடுகிறேன் அவர் என்ன சொல்கிறார் என்று கேள்- என்றார்.

அவரும் சம்மதித்தார்; நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

 

ரப்பையும் வந்தார்; நீண்ட தாடியைப் பல முறை உருவித் தடவிக் கொடுத்தார். சொன்னதையே திரும்பத் திரும்பக் கேட்டார். பல முறை கேட்ட பின்னர், நீ பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்றார்.

இவரோ மறுத்தார்; நியாயமே இல்லை என்று வாதாடினார்.

இறுதியில் மனைவிமக்களைக் காண வேண்டும் என்ற பேரவாவில், சரி நாசமாய்ப் போய்த் தொலை; இந்தா உன் பணம்; எழுத்து மூலம் ரசீது கொடு; என்றார்.

இடம் கொடுத்த நண்பரும் அதை வாங்கிக் கொண்டு, ரப்பை வெளியே போனவுடன் ரஸீதையும் பணத்தையும் திருப்பிக் கொடுத்தார்.

பின்ஸ்க் நகர நண்பருக்கு மேலும் ஆத்திரம் பொங்கியது.

என்ன மயி===== க்கு இவ்வளவு நேரம் என்னிடம் பணம் கேட்டாய்? ஏன் இப்பொழுது திருப்பித் தருகிறாய்?

 

அன்பரே! இந்த ஊர் Rabbi ரப்பை எவ்வளவு முட்டாள் என்பதை காட்டத்தான் இப்படிச் செய்தேன்.

இவருடன்தான் நாங்கள் தினமும் மாரடிக்கிறோம்.

 

நண்பருக்கு அழுவதா சிரிப்பதா- என்று தெரியவில்லை!

 

குட் பை Good Bye என்று சொல்லி விட்டு பின்ஸ்க் நகருக்கு ஓடினார்- ஓடினார்- ஓடிக்கொண்டே இருந்தார்.

 

சுபம்-

புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது! (Post No.4912)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 14 April 2018

 

Time uploaded in London –  6-10 AM  (British Summer Time)

 

Post No. 4912

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கொங்கு மண்டலப் பெருமை

 

புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது!

 

ச.நாகராஜன்

 

தமிழக மன்னர்களும் பிரபுக்களும் புலவர்களுக்குத் தகுந்த பரிசுகளைக் கொடுப்பதைப் பெருமையாகவும் கடமையாகவும் கருதியவர்கள்.

கொங்கு மண்டல சதகத்தில் வரும் பல பாடல்களை ஏற்கனவே பார்த்துள்ளோம். இன்னும் ஒரு பாடலைப் பார்ப்போம்:

 

இப்போதுள்ள கோபிச்செட்டி பாளையம் தாலுகா பழைய காலத்தில் காஞ்சிக்கோயில் நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. இதில் அடங்கியிருந்த ஊரான பாரியூரில் செட்டி பிள்ளையப்பன் என்ற பெரிய கொடையாளி ஒருவர் இருந்தார். அவர் மீது கவிபாடிக் கொண்டு புலவர் ஒருவர் வந்தார். கொடுத்துக் கொடுத்துக் கையில் ஒன்றுமில்லாமல் இளைத்திருந்த செட்டி பிள்ளையப்பன் சற்று வருத்தத்துடன் சிந்திக்கலானார்.

உலகத்தில் ஒருவனிடம் சென்று எனக்கு இல்லை என்று கேட்பது சிறுமை. கேட்போனுக்கு இல்லை என்று சொல்வதோ சிறுமையிலும் சிறுமை. அதிலும் நம் குலத்தைப் புகழ்ந்து கவி பாட வந்த புலவருக்கு இல்லை என்று சொல்வது நமக்கு தீரா வசையைத் தேடித் தரும். ஆகவே அருகில் உள்ள புலித்தூறிற் புகுந்து அங்கிருக்கும் புலிக்கு உணவாவதே சாலச் சிறந்தது.

 

இப்படி எண்ணிய செட்டி பிள்ளையப்பன் புலி உறையும் இடத்திற்குச் செல்லலானார்.

அப்போது அங்கு கொள்ளையடித்த பொற்குவியல்களை பங்கு போட்டுக் கொண்டிருந்த திருடர்கள் அவரைப் பார்த்து பயந்து அவற்றை அப்படியே விட்டு விட்டு ஓடினர்.

இதனால் மகிழ்ந்த செட்டி பிள்ளையப்பன் அவற்றை எடுத்து வந்து புலவருக்கு உரிய முறையில் பரிசுகளை வழங்கினார்.

 

 

கொங்கு மண்டல சதகம் 99வது பாடல் செட்டி பிள்ளையப்பனைப் போற்றுகிறது.

 

பாடல் வருமாறு:

கவியின் மெலிந்த புகல்கவிக் கீயக் கயிலின்மையால்

புலியி னுழைபுக்குக் கள்வர்கள் பங்குப் பொருட்டிரளை

மலிய வெடுத்தப் புலவனுக் கீந்த வடகரையான்

வலியன் கனவாளன் செட்டிபிள் ளான்கொங்கு மண்டலமே

 

இதன் பொருள் : வறுமையால் தளர்வுற்ற காலத்தில், கூறிய பாட்டைக் கேட்டு அவருக்குப் பொருள் கொடுக்க கையில் ஒன்றும் இல்லாததால், புலி வாழுமிடத்தில் புகவே, அங்கு திருடர்கள் பங்கிட்டுக் கொண்டிருந்த பொற்குவியலை அடைந்து கவி பாடிய புலவனுக்குக் கொடுத்த வடகரை நாட்டினனான செட்டி பிள்ளான் என்பவனும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே!

 

 

ஒரு சுவையான செய்தி, பாரியூர் ஸ்ரீ அமரவிடங்கப் பெருமானார் சிவாலயத்தில் ஒரு கற்சாசனம் உள்ளது. அதில் செட்டி பிள்ளையப்பன் நில தானம் செய்த செய்தி உள்ளது.

 

“ஸ்வஸ்தி ஸ்ரீ…..வீர வல்லாள தேவர் .. ராஜ்ஜியம் பண்ணியருளா நின்ற   … வத்ஸரத்து ஆவணி மாத முதல் காஞ்சிக் கூவல்நாட்டில் பாரியூர் வெள்ளாளன்களில் செட்டி பிள்ளையப்பனேன் உடையார் அமரவிடங்கப் பெருமாள் திருப்பள்ளிஎழுச்சிக்கு….”

 

இந்த அரிய சம்ப்வத்தை அமரவிடங்கர் குறவஞ்சி என்னும் நூ பாடலாக இப்படித் தருகிறது:

 

 

இட்டமான கவிசொல்லும் பாவலர்க்

கில்லையென்று சொலற்கஞ்சிக் காட்டில்வாழ்

துட்ட வன்புலித்தூறிற் புகுந்தநற்

றூயவன் கனவாள குலத்தினன்

செட்டி பிள்ளையப் பன்றினந் தொண்டுசெல்

தேவிமாமலை மாதொரு பங்குள

கட்டு செஞ்சடையமர விடங்கனார்

கதித்துவாழ் பாரியூ ரெங்களூரே

 

தமிழ்ப் புலவர்களை மதித்து வாழ்ந்த நாடு தமிழ் நாடு; அதில் கொங்கு மண்டலத்தின் சிறப்பை இந்தப் பாடல் மூலம் அறிந்து மகிழ்கிறோம்.

 

***

 

அடங்காப்பிடாரியை அடக்கும் வித்தை! (Post No.4894)

COMPILED by London Swaminathan 

 

Date: 8 April 2018

 

Time uploaded in London –  11-29 am (British Summer Time)

 

Post No. 4894

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

நடேச சாஸ்திரியார் என்னும் தமிழ்ப் பெரியார், தமிழ் மொழிக்கு அரிய பெரிய சேவை செய்துள்ளார். அக்காலத்தில் அவர் கேட்ட நாட்டுப்புற கதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் புஸ்தகமாகவும் ஆராய்ச்சி இதழ்களில் கட்டுரைகளாகவும் வெளியிட்டுள்ளார். அவர் தொகுத்த ஒரு கதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் டேமிங் ஆf தெ ஷ்ரூ ( TAMING OF THE SHREW) போன்ற கதை. இதோ நடேச சாஸ்திரியின் நடையிலேயே படியுங்கள்:-

 

 

 

 

 

 

TAGS– கெட்ட பெண், நல்ல பெண், பேய், அடங்காப்பிடாரி

 –subham–

திருடனைப் பிடித்த புத்திசாலி வணிகன் (Post No.4887)

திருடனைப் பிடித்த புத்திசாலி வணிகன் (Post No.4887)

 

Written by London Swaminathan 

 

Date: 6 April 2018

 

Time uploaded in London –  7-41 am (British Summer Time)

 

Post No. 4887

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

இது ஒரு தெலுங்கு தேச நாட்டுப்புற கதை

 

ஒரு வயதான வர்த்தகன் வீட்டில் திருடன் வந்து மரத்தடியில் ஒளிந்து கொண்டான். இதை அந்த புத்திசாலி வணிகன் பார்த்தும் பாராமலும் இருந்துவிட்டான். பின்னர் திருடனைப் பிடிக்க எப்படி பக்கத்து வீட்டுக்காரர்களை அழைப்பது என்று யோசித்தான்.

 

திருடன், திருடன் என்று கத்தினால் அவன் ஓடி விடுவான் அல்லது வணிகரைத் தாக்குவான். ஆகையால் ஒரு IDEA ஐடியா செய்தார்.

 

மனைவியைக் கூப்பிட்டு மரத்துக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியைப் போடச் சொன்னார். கணவனுக்கு ஏதோ என்னமோ ஆகிவிட்டதோ என்று பயந்து அந்த அம்மாளும் ஒரு நாற்காலியைப் போட்டார்.

 

‘கடவுளே, பயங்கர பல் வலி. சீக்கிரம் ஒரு குடத்தில் சுடுநீரும், வாயில் அடக்கிக்கொள்ள கிராம்பும் கொண்டு வா’ என்றார். மனைவியும் அப்படியே செய்தார்.

 

அவர் ஒவ்வொரு முறையும் வாயைக் கொப்பளித்து அந்த எச்சிலைத் திருடன் இருக்கும் புதர் மீது துப்பினார்.  குடத்தில் கடைசி நாலு வாய்க்கு சுடு நீர் இருக்கும் நேரத்தில் அதை இரண்டு மூன்று முறைக் கொப்பளித்து மனைவி மீது துப்பினார். அவள் கணவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று குய்யோ முறையோ என்று சப்தம் போடத் துவங்கினாள். உதவி, உதவி என்று எல்லோரையும் கூப்பிடத் துவங்கினார் .

எல்லோரும் ஓடி வந்தனர்; உடனே அந்த வணிகர் மனைவியைப் பார்த்து திட்டத் துவங்கினார்:- “நான் யாருக்காக லட்சக் கணக்கான ரூபாயைச் சேமித்து வைத்தேன்? இது என்ன அநியாயம்? இரண்டு முறை எச்சில் விழுந்ததற்கு இவ்வளவு கூப்பாடு போட்டு ஊரையே கூட்டி விட்டாளே!! இதோ பாருங்கள், அந்தப் புதருக்கு அடியில் ஒளிந்திருக்கும் திருடன் மட்டும் நான் ஒரு மணி நேரத்துக்கு எச்சில் நீரை துப்பியும் கூட எவ்வளவு அமைதியாக இருக்கிறான்? அவனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? என்று கேட்டார்.

 

உடனே எல்லோரும் அந்த்ப் புதர் மீது பாய்ந்து, திருடனை வெளியே இழுத்து தர்ம அடி கொடுத்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

 

எந்தப் பிரச்சினையையும் சமயோசித புத்தியால் சமாளிக்கலாம்.

 

–subham–

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -2 (Post No.4860)

Date: MARCH 29, 2018

 

 

Time uploaded in London- 5-56 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4860

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் சிறப்பு

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -2

 

ச.நாகராஜன்

 

இந்தியா காத்து வரும் மொழி தான் சம்ஸ்கிருதம்.என்றாலும் பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதையும் அது கவர்ந்து வந்திருக்கிறது!

அது தரும் ஞானம் மேற்கு நாடுகளைக் கவர்ந்துள்ளது என்பதை யோகா, ஆயுர்வேத மருந்துகள், தியான உத்திகள், நடைமுறை தத்துவங்களாகத் திகழும் ஹிந்து மதம், புத்த மதம் ஆகியவற்றின் மூலமாக உணரலாம்.

ஆங்காங்குள்ள இடங்களில் இருக்கும் பாரம்பரியங்களையும், மதங்களையும் அது எதிர்ப்பதில்லை; அவற்றுடன் முரண்படுவதில்லை! மாறாக அவற்றை ஆதரிக்கிறது. விரிவாக்குகிறது.

மேலும் அதிகப் பொலிவுடன் அவற்றைத் திகழ வைக்கிறது!

சம்ஸ்கிருதத்தின் துல்லியம் அகர வரிசையில் ஒலிகள் எப்படி அமைக்கப்பட்டு விவரிக்கப்பட்டிருக்கிறது என்ற இணையற்ற விவரத்திலிருந்தே உருப்பெறுகிறது.

வாய், மூக்கு,தொண்டை முதலிய இடங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒலி எழும்புவதை அது விவரிக்கிறது. அவை மாறுவதே இல்லை!

ஆகவே தான் சம்ஸ்கிருதத்தின் எழுத்துக்கள் ‘அக்ஷரங்கள்’ – அழிக்கப்பட முடியாதவை – என்று வழங்கப்படுகிறது.

ஆக வாயிலுள்ள ஐந்து இடங்கள் எல்லா அக்ஷரங்களையும் எந்த இடத்திலிருந்து உருவாக்குகிறது என்பதானது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சில மன மற்றும் உடல் முயற்சிகள் மூலம் இவை நன்கு முறைப்படி திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது.

A,b,c,d,e,f,g  என்ற ஆங்கில அகர வரிசையில் இதை உச்சரித்த பின் என்ன அமைப்பு (structure) இதில் இருக்கிறது?

ஏதேனும் தெரிகிறதா பாருங்கள்?! ஒரு அமைப்பும்   இல்லை.

A -இல் ஆரம்பித்து Z  வரை போகிறது. அவ்வளவு தான்!

மாறாக சம்ஸ்கிருதத்தில் உள்ள அழகிய அமைப்பு (structure) ஆங்கிலத்தில் இல்லை.

சரி,இப்போது எழும் கேள்வி, என் குழந்தை ஏற்கனவே இருக்கும் பாடச் சுமை போதாது என்று இன்னுமொரு மொழியை ஏன் கற்க வேண்டும் என்பது தான்!

இது அவர்களுக்கு எந்த விதத்தில் பயன்படும்?

பதில் இது தான்:

சம்ஸ்கிருதத்தின் குணாதிசயங்களே உங்கள் குழந்தையின் குணாதிசயங்களாக மாறும். அதாவது உங்கள் குழந்தையின் மனமும் இதயமும் அழகியதாக ஆகி விடும்!

துல்லியமானதாக (precise) ஆகி விடும்!

நம்பகமானதாக (reliable) ஆகி விடும்! எதையும் கூர்ந்து கவனிக்கும் சக்தியை அதனுடைய துல்லியத்தினால் சம்ஸ்கிருதம் அதைக் கற்கும் உங்கள் குழந்தைக்குத் தானாகவே கற்பித்து விடும்!

துல்லியம் இருக்குமானால் உயரச் செல்லுதல் என்பது ஏற்படும் என்பது அனுபவம்!

 

அது உங்களுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. ஆரம்ப பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கூட அதன் இனிய அனுபவத்தை உணர முடியும். இசை போல அது உங்களை உயர்த்தும்.

அது வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும், பகுதிகளிலும் வாழ்நாள் முழுவதும் உதவும்.

இது மற்ற எல்லா குழந்தைகளையும் ஒப்பிடும் போது உங்கள் குழந்தைக்கு மிகுந்த பயனை நல்கும்.

சம்ஸ்கிருதத்தைக் கற்பதன் மூலமாக இதர மொழிகளைக் கற்பது சுலபமாக ஆகிறது.

சம்ஸ்கிருதத்தில் உள்ள சில இலக்கணங்களை ஐரிஷ் அல்லது கிரேக்கம்,லத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிரதிபலிக்கிறது.

இந்த மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருத இலக்கணத்தின் சில பகுதிகளைக் கொண்டுள்ளது.

சம்ஸ்கிருதம் கற்பதானது முறையான ஒரு மொழியைக் கற்கிறோம் என்பதாகிறது. அதன் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் அது உங்கள் குழந்தைகளை முன்னேற்றுகிறது – வாழ்நாள் முழுவதும்!

அதை அவர்களே உங்களுக்குச் சொல்வார்கள்.

அவர்கள் நன்கு பேச ஆரம்பிப்பார்கள். யார் நன்கு பேச முடியுமோ அவர்களே உலகை வழி நடத்திச் செல்கின்றனர்.

பாரக் ஒபாமா நன்கு பேசுவதால் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.

மஹாத்மா காந்தி தனது சீரான சொற்களால் பெருந்திரளான கூட்டத்தைக் கவர்ந்தார்.

தெரஸா எளிய சொற்களால் அனைவரையும் உயர்த்துகிறார்.

பெரும் ஆசான்களின் மொழியானது நமக்குப் பழமையான காலத்திலிருந்து கிடைத்துள்ள ஒன்று. ஆனால் அதுவே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

ப்ளேட்டோவின் வார்த்தைகளின் மூலம் அவரது அருமையான மனத்தின் மூலம் புக முடிகிறது.

உங்கள் மகனோ மகளோ துல்லியமான மொழி மூலம் தங்களை வெளிப்படுத்த முடியுமானால் அவர்களே எதிர்காலத் தலைமுறையின் தலைவர்களாக ஆகி விடுவார்கள்.

வேதம், கீதை ஆகியவற்றின் மூலமாக சம்ஸ்கிருதம் அனைத்தையும் உள்ளடக்கிய கருத்துக்களைக் கொண்டுள்ளது.

வில்லியம் பட்லர் ஈட்ஸ் (William Butler yeats) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள உபநிடதங்கள் உலகம் முழுமைக்கும் பொதுவான மத உணர்வுகளை கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகம் முழுவதுமுள்ள மக்களுக்குத் தந்து வருகிறது!

மொழி பெயர்ப்பின் மூலம் இவற்றைப் படிப்பது மூலத்தைப் படிப்பதற்கு ஈடாகாது.

ஆகவே அவற்றை மூலத்தில் உள்ள மொழியிலேயே படிக்க வேண்டும்.

மதச் சச்சரவுகள் பெருகி வரும் இக்காலத்தில் உலக முழுமைக்கும் பொதுவான மத நோக்கத்தைத் தரும் ஞானம் நல்கும் மதத்தை நாம் பெற வேண்டும்.

பயங்கரவாதம் தவறாக மதத்தைப் புரிந்து கொள்ளும் அரைகுறை மதக் கருத்துக்களால் ஏற்படுகிறது.

உலகம் முழுவதும் போற்றும் ஆன்மீக ஞானியான ஸ்வாமி விவேகானந்தர். சிகாகோவில் 1893இல்  சர்வ மத மகாநாட்டில நிகழ்த்திய உரையில் கூறியது இது:-

You can put a mass of knowledge into the world, but that will not do it much good. There must come culture into the blood. We all know in modern times of nations which have masses of knowledge, but what of them? They are like tigers, they are like savages, because culture is not there.

Knowledge is only skin-deep, as civilisation is, and a little scratch brings out the old savage. Such things happen; this is the danger. Teach the masses in the vernaculars, give them ideas; they will get information, but something more is necessary; give them culture.

 

சம்ஸ்கிருதம் உங்கள் குழந்தைக்கு உலகம் முழுமைக்குமான, சீரான லயத்துடன் கூடிய உண்மைகளை வெளிப்படுத்த உதவுகிறது!

 

***

தொடரும்

 

 

 

 

 

 

 

 

செம்புலப்பெயல் நீரார் செப்பியதை கம்பனும், வள்ளுவனும் செப்பினர்! (Post No.4858)

\’WRITTEN by London Swaminathan 

 

Date: 28 MARCH 2018

 

Time uploaded in London –  7-51 am

 

Post No. 4858

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

(பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன், பெர்னார்ட் ஷாவின் தம்பி, காந்திஜியின் தாத்தா சொன்னது)

செம்புலப்பெயல் நீரார் செப்பியதை கம்பனும், வள்ளுவனும் செப்பினர்! (Post No.4858)

சங்க இலக்கியத்தில் புகழ்பெற்ற அகத்துறைப் பாடல் செம்புலப்பெயல் நீரார் என்னும் புலவர் யாத்தது. ரிக் வேதம் போலவே, சில தமிழ்ப் புலவர்களின் புகழ்பெற்ற வாசகத்தைக் கொண்டே அப்புலவரை அழைப்பது தமிழிலும் உண்டு. ஒரு செம்மண் தரையில் மழை நீர் விழுந்தால் அது எப்படி இரண்டறக் கலக்குமோ அது போல நாம் ஒன்றுபட்டு விட்டோம்; இனி பிரியமாட்டோம் என்று காதலியிடம் காதலன் சொல்லும் பாடல் அது.

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

 

–குறுந்தொகை 40, செம்புலப்பெயனீரார்

 

பொருள்:

காதலன் கூறுகிறான்: “என்னுடைய தாயும் நின்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவினர்? என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்பொழுது யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தே பெய்த மழை நீர், அம்மண்ணோடு கலந்து அத்தன்மையை அடைவது போல நமது உள்ளங்கள் (தாமாகவே) ஒன்றுபட்டன.

 

கம்பனும் சொன்னான்

கம்பன், யுத்தகாண்டம், கும்பகர்ணன் வதைப் படலத்தில் சொல்லுகிறான்:-

 

புலத்தியன் வழிமுதல்வந்த பொய் அறு

குலத்து இயல்பு அழிந்தது கொற்றம் முற்றுமே

வலத்து இயல் அழிவதற்கு  ஏதுமை அறு

நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால்

 

-கம்ப ராமாயணம்

 

பொருள்

புலத்திய முனிவரின் வழி வந்த குலத்தின் பெருமை உன்னால் அழிந்தது. உனது செயல் நமது வெற்றித் தன்மையை விழ்ச்சி அடையச் செய்யும். அறம் தவறிய உனக்கு வெற்றி கிடைக்குமா? கிடைக்காது. குற்றமற்ற நிலத்தின் இயல்பே நீரினது இயல்பாகும் என்னும் முறைமைக்கு ஏற்றதாக உள்ளது. (இது ராவணனுக்கு கும்பகர்ணன் சொன்ன அறிவுரை)

 

நிலம் நன்றாக இருந்தால் அதில் விழும் நீரும் நன்றாக இருக்கும்.

 

வள்ளுவனும் விளம்பினான்

இதையே வள்ளுவனும் விளம்புவது, படித்து மகிழ்வதற்குரியது:-

 

நிலத்தியல்பால் நீர்திரிந்  தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப  தாகும் அறிவு – குறள் 452

 

பொருள்

தான் அடைந்த நிலத்தின் தன்மையையே நீரும் பெறும். அது போல மக்களும் எந்த இனத்தாருடன் சேருகின்றனரோ அந்த அறிவையே பெறுவர்.

 

இதை சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவன் சொல்லுவதால் சத் சங்கத்தின் மஹிமை தெள்ளிதின் விளங்கும்.

 

இன்னொரு குறளில் செம்புலப் பெயல் நீரார் செப்பியதையே வள்ளுவனும் செப்புவான்:–

 

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந்   தன்னா      ரகத்து – குறள் 1323

 

நிலத்தொடு நீர் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சம் உடைய காதலனும் காதலியும் ஊடலில் அடையும் இன்பத்துக்குச் சமமான இன்பம் சொர்க  லோகத்தில் உண்டோ?

தேவலோகத்தில் SEX  செக்ஸ் கூடாது என்று பார்வதி சபித்ததால் அங்கு செக்ஸ் (பாலியல்) இன்பம் கிடையாது (பிற கிரஹங்களில் உயிரினங்கள் உண்டா? என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில்

(Hindus’ Belief in Extra Terrestrial Civilizations) இது பற்றி விளக்கியுள்ளேன்.

 

 

காளிதாசனும் மொழிந்தான்!

 

காதலர்களின் மனம் ஒன்று பட்டதற்கு இப்படி ஒரு உவமையைப் பயன்படுத்தியது போல, சங்க காலத்துக்கு முன் வாழ்ந்த காளிதாசரும் மழை நீர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார். (காளிதாசன் காலம் பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அவன் சங்க காலத்துக்கு முந்தியவன் என்பதை நிரூபித்துள்ளேன்)

 

ஒரே சுவையுடைய மழை நீர் எங்கெங்கு விழுகின்றதொ அந்தந்த நிலத்தின் சுவையைப் பெறுவதுபோல சத்வம் என்ற ஒரே குணமுடைய இறைவன், கைக்கொள்ளும் குணங்களுக்கு ஏற்ப தொழில்களையும் பெயர்களையும் ஏற்கின்றீர் (சத்வ குணம் காரணமாக விஷ்ணுவாகவும், ரஜோ குணம் காரணமாக பிரம்மனாகவும், தமோ குணம் காரணமாக ருத்திரத் தனமையையும் அடைகின்றீர். எப்படி நீர் என்பது ஒன்றுதானோ அதே போல இறைவன் ஒருவனே.

ரசாந்தராண்யேகரசம் யதா திவ்யம் பயோஸ்ச்னுதே

தேசே தேசேகுணேஷு  ஏவம் யதாத்வம்அவிக்ரியஹ

— ரகு வம்சம் 10-17

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?’ (Post No …

https://tamilandvedas.com/…/யாயும்-ஞாயும்-ய…

6 Apr 2017 – Written by London swaminathan Date: 6 APRIL 2017 Time uploaded in London:- 20-27 Post No. 3794 Pictures are taken from various sources; thanks. contact; swami_48@yahoo.com காளிதாசனும், செம்புலப்பெயநீராரும் சங்கத் தமிழ் நூல்களில் ஒன்று குறுந்தொகை. அருமையான காதல் பாடல்கள் உள்ள நூல். அதில் ஒரு அருமையான பாடல். காதலர் …

 

சுபம்–

 

 

ஆஹிரி ராகம் பாடினால் ஆகாரம் கிடைக்காது! (Post No.4814)

Written by London Swaminathan 

 

Date: 14 MARCH 2018

 

Time uploaded in London – 6-35 am

 

Post No. 4814

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

ஆஹிரி ராகம் பாடினால் ஆகாரம் கிடைக்காது! (Post No.4814)

 

ஒவ்வொரு ராகம் பற்றியும் ஒரு நம்பிக்கை உண்டு. மழை பெய்விக்கும் ராகம், தீயை உண்டாக்கும் ராகம், உறக்கத்தைத் தரும் ராகம், உற்சாகத்தை ஊட்டுவிக்கும் ராகம், நோய் தீர்க்கும் ராகங்கள், மாடுகளை அதிகம் பால் கறக்க வைக்கும் ராகம், மன நோய் தீர்க்கும் ராகம் எனப் பல பல.

 

 

ஆஹிரி ராகம் பாடினால் உணவு கிடைக்காது என்றும், அதைக் காலை நேரத்தில் பாடக்கூடாது என்றும் சொல்லுவர்; இது பற்றிய சுவையான கதை இதோ!

 

 

ஒரு பாகவதருக்கு ஆஹிரி ராகம் என்றால் உயிர் போல; அதைப் பாடிப் பாடி ஆனந்தம் அடைந்தார்; அதைக் கேட்ட ஒருவர் சொன்னார்:

“ஐயா, உமக்குத் தெரியாதா?ஆஹிரி  பாடினால் ஆகாரம் கிடைக்காது; அது மட்டுமல்ல அதைப் பகல் நேரத்தில் பாடக்கூடாது.”

 

“பாகவதர் சொன்னார்: அது எல்லாம் தவறான நம்பிக்கை; நானே அதைப் பொய்ப்பித்துக் காட்டுவேன்; அடுத்த ஊரில் நாளை முதல்  கோவில் திருவிழா நடக்கிறது. அங்கே சென்று கச்சேரியில் ஆஹிரிராகப் பாடல்களைப் பாடி உங்கள் கூற்றைப் பொய் என்று காட்டுகிறேன்” என்று சவால் விட்டர். அவரும் இசைவு தெரிவித்தார்.

 

 

அவரோ தேங்காய் மூடி பாகவதர்; அதிக வருமானம் இல்லாமல் அன்றாடக் கஞ்சிகே தாளம் போடுபவர்; அவர் கச்சேரியில் வாசிக்கப்போகும் செய்தி கேட்டவுடன் அவருடைய மனைவிக்கு ஆனந்தம்.

 

“நாதா, நான் கட்டுச் சோறு கட்டித் தருகிறேன்; கூஜாவில் தண்ணீரும் கொண்டு செல்லுங்கள்; கோவில் விழாவில் கண்டதைச் சாப்பிட்டு சரீரமும், சாரீரமும் கெட்டுவிடக்கூடாது” என்றாள்; அவருக்கு பரமானந்தம் சரி என்று சொன்னார்.

 

கட்டுச் சோற்றுக் கூடை, கூஜா தண்ணீர், குடை சகிதம் பயணம் ஆனார்.

 

பாதி தூரம் சென்றவுடன் களைப்பு மிகுதியால் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். கூடை சோற்றை நாயோ மாடோ சாப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காக அங்கே வளைந்து இருந்த ஒரு மூங்கில் மரத்தின் முனையில் கட்டித் தொங்க விட்டார்.  அழகிய குரலில் ஆஹிரி  ராகத்தை ஆலாபித்தார். அப்போது நண்பகல் நேரம்; ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று பாடி சாதகம் செய்தார். மணி இரண்டு ஆனவுடன் பசி வயிற்றைக் கிள்ளியது. சரி, சாப்பிடப் போவோம் என்று எழுந்தார். ஆனால் ஆகாரக் கூடையயைக் காணவில்லை.

அடக் கடவுளே! பகல் நேரத்தில் ஆஹிரி இசைத்தால், உணவு கிடைக்காது என்பது உண்மைதானோஎன்று பயந்தார்; சுற்று முற்றும் தேடினார்;  மரத்தின் மீது இருந்த ஒரு பறவை காச்சு மூச்சென்று கத்தியது;  தலையை நிமிர்ந்து பார்த்தார்.

 

மூங்கில் மரம் நிமிர்ந்து நின்றது. அதன் உச்சியில் சோற்றுக் கூடை தொங்கிக் கொண்டிருந்தது. அதை எடுக்க முடியாமல் பரிதவித்தார். ஒரு கிராமத்தான் அதைப் பார்த்து, “ஓ, சுவாமி! மூங்கில் மரம் இரவில், குளிரில் வளைந்து பூமியைத் தொடும்; வெய்யில் ஏற, ஏற அது நிமிர்ந்துவிடும் என்பது உமக்குத் தெரியாதா? இரவு வரை காத்திருந்தால் சோற்று மூடை கீழே வரும்” என்றான்.

அவருக்கு இரவு வரை காத்திருக்க முடியாது என்பது புரிந்தது; பக்கத்து ஊருக்குச் சென்று பாசி ஆறுவோம் என்று நடந்தார். ஒரு தெருவின் முனையில் இருந்து கம கம வென அறுசுவை உண்டியின் வாசனை அடித்தது. அந்தத் தெருவுக்குள் நடந்து சென்றபோது ஒரு வீட்டின் வாசலில் ஒரே கூட்டம்; கல்யாண தோரணங்களும், வாழை மரமும் அலங்கரித்த பந்தல் வேறு இருந்தது.விசாரித்துப்  பார்த்த்ததில் அன்று கிராமம் முழுவதற்கும அங்கே இலவச விருந்து என்பதை அறிந்து உள்ளே சென்றார். பந்தியில் அமர்ந்தார்.

 

 

மரியாதையின் பொருட்டு பெண்ணின் தாய் , தந்தையரே எல்லோருக்கும் இலையில் பாயசம் முதலிய இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் பாகவதருக்கு உற்சாகம் மிகவே ஆஹிரி ராகத்தைப் பாடுவோம்; பகலில் பாடக்கூடாது; ஆகாரம் கிடைக்காது என்ற இரண்டு பழமொழிகளையும், நம்பிக்கைகளையும் தகர்போம் என்று எண்ணி பாகவதர் பேசத் துவங்கினார்:

 

“அன்பர்களே! ஆஹிரிதான் எவ்வளவு அழகு; ஆரபியின் அழகை ரசிக்காதவர்களும் சுவைக்காதவர்களும் உலகில் உண்டா? பகலிலும் ரசிக்கலாம்; இரவிலும் ரசிக்கலாம்; இதோ ஆஹிரியை ……….’’

—என்று பேசிக்கொண்டு இருந்த போது அவர் முதுகில் அடியும் குத்தும் விழுந்தன. அப்போதுதான் மணப் பெண்ணின் தாயார் பாயசம் பரிமாறிக் கொண்டு இருந்தாள். அவளும் பாயசக் கரண்டியால் அவர் தலையில் ஒரு போடு போட்டார்; பாகவதருக்கு ஒன்றுமே புரியவில்லை கண்கள் இருண்டன.

 

நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டுக் கொண்டு இருந்தபோதே நாலைந்து பேர் அவரை தர,தரவென இழுத்துக் கொண்டு போய் வெளியே தெருவில் நிறுத்தி திட்டத் துவங்கினர்:

“அடே பாவி உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா? மணப் பெண்ணின் தாயை பட்டப் பகலில் அவமானப் படுத்துகிறாயே!” என்று சொல்லி மேலும் இரண்டு அடி போட்டனர். நான் அப்படி ஒன்றும் செய்யவில்லையே, உங்கள் கண்களுக்கு முன் பந்தியில் வாழை இலை முன் அல்லவா உட்கார்ந்து  இருந்தேன்” என்று சொல்லி அழுதார்;

அட, நீ மணப் பெண்ணின் தாயார் ஆஹிரியை ‘’அழகி, ருசி, ரசி’’ என்று சொன்னாயே! என்றவுடன்தான் அந்த வீட்டுப் பெண்மணியின் பெயர் ‘ஆரபி’ என்று விளங்கியது. பின்னர் அவர்களிடம் ஆஹிரி பற்றிய முழுக் கதையையும் சொல்லி, தனது மகத்தானா  ஆஹிரி ராக விளக்கத் திட்டம் பற்றியும் சொன்னார்; பின்னர் எல்லோரும் பரிதாபப்பட்டு அவரை உள்ளே அழைத்துச் சென்று அறுசுவை உணவு அளித்தனர்.

 

வீட்டுக்குத் திரும்பிச் சென்றவுடன் அவர் மனைவி ஆவலுடன் கேட்டாள்: “என்னங்க ஆஹிரி பாடினீர்களா? நல்ல சன்மானம் கிடைத்ததா?”

 

சன்மானமா, தன் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டதே பெரும்பாடு; ஆஹிரியைப் பகலில் பாடினால் ஆகாரமும் கிடைக்காது என்பது மட்டும் அல்ல; அடி உதையும் கிடைக்கும் என்று தன் கதை  முழுவதையும் விளக்கினார்!

 

எனது இரண்டு பிளாக்குகளிலும் உள்ள முந்தைய சங்கீதக் கட்டுரைகள்:—

 

சாவேரி சோக ராகமா? | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/சாவேரி-சோக-ராகம…

மூட நம்பிக்கைகள் தோன்றுவது எப்படி? 4 கதைகள். Post No. 978 ; Date 14th April 2014. By London Swaminathan. பேராசிரியர் ராமானுஜ சீனிவாசன் இந்திய கலாசாரம் பற்றி எழுதிய புத்தகம் ஒன்றில் இசையில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தது பற்றி நான்கு கதைகள் சொல்லுகிறார். இவை இசைக்கு மட்டுமின்றி …

 

 

பாடப்பாட ராகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாடப்பாட-ராகம்/

Written by London Swaminathan. Date: 29 NOVEMBER 2017. Time uploaded in London- 9-38 am. Post No. 4444. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. ஆஸ்திரியாவில் பிறந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் பிரெடெரிக் க்ரைஸ்லர் Frederic (Fritz) Kreisler (1875-1962) ஆவார். அவர் வாழ்வில் ஒரு சுவையான சம்பவம் …

 

 

ராகங்கள், தான்சேன், ராக தேவதை | Tamil and …

https://tamilandvedas.com/…/ராகங்கள்-தான்சேன…

பாரத சாம்ராட் என்று கவிஞர்கள் அக்பரைப் புகழ்ந்த போது தான்ஸேனை சங்கீத சாம்ராட் என்று அவர் அழைத்தார். அவர் மேக மல்ஹார் ராகத்தைப் பாடினால் மழை பொழியும்! (தான்ஸேன் தீபக் ராகம் பாடிய போது தீ ஜுவாலை எழுந்ததையும் குருநாதர் ஹரிதாஸைப் பார்க்க அக்பர் …

 

பைரவி ராகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பைரவி-ராகம்/

… எழுதியுள்ளார். அதில் பல்வேறு இசை வகைகளைக் கேட்டால்கிடைக்கும் நன்மைகளையும் விவரித்துள்ளார். … பைரவிராகம் பக்க வாத நோயைத் தீர்க்கும், காய்ச்சலைப் போக்கும்; எப்போதும் உடனடி சுறுசுறுப்பை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது ‘ராக …

 

ராகங்கள்- தமிழ்,வடமொழிப் பெயர்கள் | Tamil …

https://tamilandvedas.com/…/ராகங்கள்-தமிழ்வடம…

7 Jun 2014 – பழந்தக்க ராகம் = ஆரபி /சுத்த சாவேரி இந்தோளம் = மாய மாளகௌளம் புறநீர்மை = பூபாளம் /ஸ்ரீகண்டி நட்டராகம் = பந்துவராளி நட்டபாடை = நாட்டை கொல்லி = பிலஹரி கொல்லி கவ்வாமை = நவரோகி தக்கேசி = காம்போதி தக்கராகம் = ஏகதேச காம்போதி நேரிசை = சிந்து கன்னடா

 

கல்யாணி ராகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கல்யாணி-ராகம்/

 

23 Jul 2016 – Article Written S NAGARAJAN Date: 23 July 2016. Post No. 2996. Time uploaded in London :– 5-26 AM ( Thanks for the Pictures). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). சுகமான கல்யாணி , ராகங்களின் ராணிக்கு வந்த ஒரு அற்புதமான கடிதம்! (எனது …

 

Music | Tamil and Vedas | Page 5

https://tamilandvedas.com/category/music/…:/tamilandvedas…/5/

7 Jun 2014 – தற்போது இன்னிசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வோரிடம் தமிழ் பண்களின் (ராகம்) பெயரைச் சொன்னால் அவர்களுக்கு என்ன ராகம் என்று தெரியாது. ஏனெனில் தேவாரம் … பழந்தக்க ராகம் = ஆரபி /சுத்த சாவேரி இந்தோளம் ….. https://tamilandvedas.wordpress.com/2013/02/16/hindu-eagle-mystery-deepens/. Four Birds in One …

 

Pancharatna Kritis | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/pancharatna-kritis/

திருவையாற்றிலுள்ள உங்கள் சமாதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆராதனையில் பாடப்படும் (ஐந்து) பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் எவை? நாட்டை ராகத்தில்– ஜகதாநந்த காரக. ஆரபி ராகத்தில் – சாதிஞ்செனே, ஓ மனசா. கௌளைராகத்தில் – துடு குகல நன்னே தொர. வராளி ராகத்தில் – கன கன …

–Subham–

 

பதில் சொல்லடா, தமிழா! Tamil Q & A (Post No.4812)

Written by London Swaminathan 

 

Date: 14 MARCH 2018

 

Time uploaded in London – 3-56 am

 

Post No. 4812

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கீழ்கண்ட கேள்விகளுக்குப் பதில்/ விடை சொல்லி உங்கள் தமிழ் அறிவினைச் சோதித்துக் கொள்ளுங்கள்

 

1.வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டு ஒருவன்

கல்லால் எறியப்பிரம்பால் அடிக்க இக்காசினியில்

அல்லார் பொழில் தில்லை அம்பலவாணற்கு ஓர் அன்னைபிதா

இல்லாத தாழ்வுஅல்லவோ இங்ஙனேஎளிது ஆனதுவே

 

2.வெள்வாய்க் கழுதைப் புல் இனம் புரட்டி

வெள்ளிஅ வரகும் கொள்ளும் வித்தும்

வைகல் உழவ! வாழிய பெரிது

 

3.மறுஇல மாக்கதை கேட்பவர் வைகுந்தம்

பெறுவர் என்பது பேசவும் வேண்டுமொ

 

  1. அம் செஞ்சீறடி அணி சிலம்பு ஒழிய

மெந்துகில் அல்குல் மேகலை நீங்கக்

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்

மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்

 

  1. முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே

 

  1. நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரிவாள் எங்கள் தாய்- அவர்

அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்

ஆனந்தக் கூத்திடுவாள்

 

  1. ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின் பார்த்து

இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்

 

  1. அறத்தான் வருவதே இன்பம்

 

  1. பொருளற்ற பாட்டுக்களை – அங்குப்

புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்

இருளுக்குள் சித்திரத்தின் – திறன்

ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்  கூடுமோ?

 

  1. வினையைப் பொடியாக்கித்

தணியார் பாதம் வந்தொல்லைதாராய்

பொய்தீர் மெய்யானே

 

11.காலில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

12.கையில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

13.காதில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

14.இடையில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

  1. நினைத்ததை அளிக்கும் ரத்தினக் கல்லின் ( தலையில் அணியும் ஒரு நகையின்) பெயர் வரும் காவியம்/ காப்பியம் எது?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

விடை/ ANSWERS

1.காளமேகம்,  தனிப்பாடல்கள், 2. சங்க கால அவ்வையார்

புறநானூறு, 3. கம்பன், கம்ப ராமாயணம், 4. இளங்கோ, சிலப்பதிகாரம்,

  1. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 6. பாரதி, பாரதியார் பாடல்கள், 7. திருமூலர் எழுதிய திருமந்திரம், 8. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 9. பாரதிதாசன் பாடல்கள், 10. மாணிக்கவாசகர், திருவாசகம்
  2. சிலப்பதிகாரம், 12.வளையாபதி,13.குண்டலகேசி, 14. மணிமேகலை, 15.சீவக சிந்தாமணி

 

 

தமிழில் இருந்து ஆங்கிலமும் உலக மொழிகளும் தோன்றினவா? (Post No 4790)

RESEARCH ARTICLE Written by London Swaminathan 

 

Date: 27 FEBRUARY 2018

 

Time uploaded in London – 14-15

 

Post No. 4790

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

This follows my earlier articles that shows t English and other languages came from the root words of Sanskrit and Tamil

 

 

தமிழில் இருந்து ஆங்கிலமும் உலக மொழிகளும்  தோன்றினவா? (Post No 4790)

நான் 50 ஆண்டுகளாக மொழி ஆராய்ச்சி செய்கிறேன். சின்னப் பையனாக இருந்த போது காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994) ஸம்ஸ்க்ருதம்- ஆங்கிலம் தொடர்பு பற்றிப் பேசிய உபந்யாஸத்தில் மாதா=மதர், ப்ராதா= ப்ரதர், ஹோரா= ஹவர் (MAATHAA-MOTHER, BRAATHAA- BROTHER, HORA- HOUR) இப்படிப் பல சொற்களை மேற்கோள் காட்டி மொழிந்த சொற்பொழிவு அது.

 

(அந்தக் காலத்தில் ‘தெய்வத்தின் குரல்’ என்ற நுல் கிடையாது; காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளின் பேருரைகளை மடத்தினரே சிறு சிறு புத்தகங்களாக வெளியிட்டனர்; பின்னர் கலைமகள் காரியாலயம் வெளியிட்டது. அவைகளில் அவர் சொன்ன ஸம்ஸ்க்ருத ஸ்லோககங்கள் அப்படியே ஸம்ஸ்ருதத்தில் இருக்கும்; இப்போதும் அந்தப் புஸ்தகங்கள் சில என்னிடம் உள்ளன)

உலகம் முழுதும் மொழியியலாளர்கள் (LINGUISTS) இன்று வரை ஒப்புக்கொண்ட ஒரு “உண்மை” — இந்திய ஐரோப்பிய மொழி (INDO- EUROPEAN )ஒன்றின் கிளையே ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய மொழிகள் என்பதாகும். பின்னர் மதுரைப் பல்கலைக் கழக லைப்ரரி உறுப்பினராக இருந்தபோது ஒரு புத்தகம் கிடைத்தது. அதில் சுமார் 1380 ஆங்கிலச் சொற்களுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் உள்ள தொடர்பை ஒருவர் மொழியியல்  ரீதியில் சமர்ப்பித்து காசி இந்து பல்கலைக் கழகத்தில் (BENARES HINDU UNIVERSITY) டாக்டர் பட்டம் வாங்கிய நூல் அது. அந்த நூலை அப்படியே

கைப்பட ஒரு கொயர் நோட்டுப் புத்தகத்தில் எழுதி லண்டனுக்கு கொண்டு வைத்து இருக்கிறேன்.

 

பின்னர் லண்டனுக்கு வந்து வசிக்கத் தொடங்கியபோது,  25 ஆண்டுகளுக்கு முன்னர்,  பி.பி.சி.யில் (B B C TAMIL SERVICE) சாத்தூர் சேகரன் (30-09-1991)என்ற மொழி ஆர்வலரைப் பேட்டி கண்டு ஒலிபரப்பினேன். தமிழோசை நேயர்கள் அதற்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர். ஆனால் அவர் உலகிலுள்ள 140-க்கும் மேலான மொழிகள்

தமிழ் மொழியில் இருந்து தோன்றியதற்கான சான்றுகள் இருப்பதாகச் சொல்லி பல புத்தகங்களை எனக்கும் தமிழோசை சங்கர் அண்ணாவுக்கும் வழங்கினார். அவர் சொன்ன கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை என்பதை தனிப்பட்ட உரையாடலில் விளம்பினேன்.

 

அதற்குப் பின்னர் லண்டனில் CHANNEL FOUR சானல் ஃபோர் (4) நிகழ்ச்சியில் ஒரு சுவையான நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. அதில் புதிய மொழிக் கொள்கையை முன்வைத்த ஒரு ரஷ்யயரையும் இஸ்ரேலியரையும் காட்டினார்கள். அவர்களின் கூற்றுப்படி பைபிளில் கூறப்படும் TOWER OF BABEL பேபல் கோபுரக் கதை உண்மையே என்றும் ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்ததால் ஒரு மொழிதான் பேசினர் என்றும் காலப்போக்கில் அவர்கள் பிரிந்து சென்ற பின்னர் மொழிகள் கிளைவிட்டுப் பரவின என்றும் பகர்ந்தனர்.

 

அண்மையில் லண்டன் பல்கலைக் கழக நூலகத்த்தில் இருந்து உலக மொழிகளின் அட்லஸ் (ATLAS OF WORLD LANGUAGES) என்ற புத்தகத்தைப் படித்தபோது நியூ கினி (NEW GUINEA) தீவில் ஆதி வாசி மக்கள் 750-க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், ஆஸ்திரேலியப் பழங்குடி (AUSTRALIAN ABORIGINES) மக்கள் 250 -க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், உலக மொழி இயல் அறிஞர்களுக்குப் புதிராக விளங்குகிறது; பழைய மொழியியல் கொள்கைகளுக்குச் சவாலாக அமைந்துள்ளது என்று செப்பியு ள்ளதை அறிந்தேன்.

 

எமனோ, பர்ரோ போன்ற அறிஞர்கள் திராவிட மூல சொற்கள் சுமார் 4500 மட்டுமே என்று எழுதிய (ETYMOLOGICAL DICTIONARY OF DRAVIDIAN LANGUAGES) புத்தகத்திலும் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். அரிசி,  நீர் என்பன மற்ற ஐரோப்பிய மொழிகளில் ஆதிகாலத்தில் இருப்பதைக் காட்டினேன். கிரேக்க மொழியில் பழைய (PALEO) தொலை (TELE) ஓடு (ODOMETER) கை (CHI), நீர் (NEREIDS=WATER NYMPHS)  முதலிய சொற்கள் அலக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கு முன்னரும் இருப்பதைக் காட்டினேன். யவன, ஹோரா (தொல்காப்பியத்தில் ஓரை) முதலிய சொற்கள் பற்றி மயிலை வேங்கட சாமி வையாபுரிப் பிள்ளை ஆகியோர் எழுதியவையும் தவறு என்று கண்டேன். யவன என்ற சொல் ஆதிகாலத்தில் இருந்தே மஹாபாரதம் முதலிய நூல்களில் உள்ளது.

 

ஆக நான் கண்ட உண்மை இதுதான்:

உலகிலுள்ள பழைய மொழிகளில் சில சொற்கள் ஒன்றாகவே இருக்கும்; தமிழ் சொற்களான அப்பா. அம்மா உலகில் பல மொழிகளில் உள்ளன. இதை வைத்து மட்டும் அவை தம்ழில் இருந்த வந்ததாகச் சொல்ல முடியாது. இன்னும் சில சொற்கள் ஒலியை அடிப்படையாக வைத்து வரும் உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளில் பறவைகளின் பெயர்கள் கா, கீ, கு, கொ,கெ, கோ, கே என்ற சொற்களில் துவங்கும்; மனிதன் அவைகளின் ஒலியில் இருந்து உருவாக்கிய சொற்கள் இவை. இதில் வியப்பு எதுவும் இல்லை.

 

 

உலகிலுள்ள பழைய மொழிகளை ஆராய்ந்தால் அவைகளின் சொற்கள் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்தோ தமிழில் இருந்தோ கிளைவிட்டுப் பரவியிருப்பதைக் காணலாம்.

 

சில அடிப்படை மொழி இயல் கொள்கைகளைப் பயன்படுத்தினால் அவை எப்படி மாறின என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் ஆர் (R=L) என்பதும் எல் என்பதும் இடம் மாறும்

எம் வி பி (M=V=P/B) என்பன இடம் மாறும்

ஆர் (R=D) டி என்பது இடம் மாறும்

T=S ( சீர், திரு) Sri= Ceres (Goddess of Wealth in the West)

மிர்ரர் இமேஜ் (MIRROR IMAGE) ஏற்படும்; கண்ணாடி விளைவு.

 

அதாவது யாளி  (YAALI= LEO) என்பதை எழுதி கண்ணாடியில் காட்டினால் லியோ என்று வரும் (LEO= சிங்கம், சிம்ம ராசி)

 

தமிழில் கூட இலக்கணப் போலி உண்டு வாயில் என்றாலும் இல்வாய் என்றாலும் ஒன்றே.

ஆக எனது கொள்கை இதுதான்.

 

ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் உண்டு. அவைகள் அனைத்திற்கும் ஸம்ஸ்க்ருத மூலம் கிடையாது .மொழியியல் அறிஞர்கள் ஆங்கிலம் என்பது ஸம்ஸ்க்ருதத்துடன் தொடர்புடையது, திராவிட மொழி என்பது வேறு என்று இயம்புவர். அது தவறு.

 

ஸம்ஸ்க்ருத மூலம் இல்லாத ஆங்கில ச் சொற்களில் தமிழ் மூலமிருப்பதை உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம். சில சொற்களுக்கு ஸம்ஸ்க்ருதத்தைவிட தமிழ் நெருக்கமாக இருப்பதையும் காணலாம்; ONE ஒன்று=ஒன், EIGHT எட்டு= எய்ட், COT கட்டில்=காட்

 

 

ஆகவே உலக மொழிகள் அனைத்தும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் புகல்வதைப் போல சிவனின் உடுக்கை ஒலியில் இருந்து (மாஹேஸ்வர சூத்ரம்) பிறந்தவையே; அது ஒரு புறம் தமிழாகவும் மறு புறம் ஸம்ஸ்க்ருதமாகவும் பரிணமித்தது. உலக மொழிகள் அனைத்தும் தமிழ்-ஸம்ஸ்க்ருத மூல ஒலிகளில் இருந்து தோன்றியவையே. அப்படிப் பார்க்கையில் ஆங்கிலமும் தமிழ் -ஸம்ஸ்க்ருத மூல மொழியில் இருந்து பிறந்ததே. கீழ்கண்ட சொற் பட்டியல் மாதிரிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. எனது அகராதி மார்ஜினில் (MARGINAL NOTES) உள்ள சொற்கள் அனைத்தையும் போடுவது இயலாது; ஆதாவது ஆயிரக்கணக்கான சொற்கள் தமிழ் தொடர்புடையவை. 1991 ஆம் ஆண்டில் சாத்தூர் சேகரன் என்னிடம் பி பி ஸி தமிழோசைப் பேட்டியில் சொன்னது ஓரளவு உண்மையே. அவர் ஸம்ஸ்க்ருதத்தைச் சொல்லத் தவறிவிட்டார் (எனது முந்தைய மொழி இயல் கட்டுரைகளில் மேலும் பல உதாரணங்கள் உள்ளன. கிரேக்க- தமிழ் தொடர்பு ஆராய்ச்சிக் கட்டுரையிலும் பல எடுத்துக் காட்டுகளை முன் வைத்துள்ளேன். கண்டு மகிழ்க!

இந்த வகையில் நோக்கினால் ஒரு சொல் தமிழ் சொல்லா, அல்லது ஸம்ஸ்க்ருதச் சொல்லா என்று நீண்ட காலமாக நிகழ்ந்துவரும் சர்ச்சையும், வாதப் ப்ரதிவாதங்களும் முடிவுக்கு வரும்


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

COGNATE WORDS

 

சில சொற்கள் ஸம்ஸ்க்ருதத்திலும் காணப்படும்

Tamil/ Sanskrit                                          English

 

Deivam/ Deva                                     Deo தெய்வம்;

Kadavul                                               God கடவுள்

Periya/ Bruhath                                               Big பெரிய

Ondru                                                  One ஒன்று

Ettu /Ashta                                                      Eight எட்டு

 

Paraththai/ Para Stree                                    Prostitute பரத்தை

Veera                                                              Hero வீரன்

Manathu/ Manas                                            Mind மனது காம

Kama/ Kama                                       amorous காம

Patha=Adi                                                        Path, Pedestal, Foot பத, பாத, அடி

Dharma=aram                                    Moral அறம்

Neer                                                                Nereids= water nymphs நீர்

Puttil                                                                Bottle புட்டில்

Arukan/ Bargo                                    Argos (light, sun) அருகன்

Andira/ Aindra/Indra                          Andrew (English name) அண்டிரன் /ஐந்திர,  இந்திர

Pillai                                                                Fille (French) பிள்ளை

Tarai                                                                Terrain தரை

Tele (phone, scope, vision)                 Tolai தொலை

Pazaiya                                                            Paleo (ntology) பழைய

Piththu                                                 Fad பித்து

Kuuli                                                                Ghoul/Ghost கூலி

Vathuvai /Bride                                               Wed வதுவை

Paiyul (Purananuru)                            Paiyon (Greek)= song பையுள்

Aiyavi (smallest seed)                         Iota ஐயவி

Maaya                                                 Magic (g=y) மாய

Staanu/ Thun                                      Stand தாணு

AAndu                                                  Annum, annual ஆண்டு

 

Duusi                                                               Dust தூசி

 

LIST 2 OF COGNATE WORDS

TAMIL WORDS                        ENGLISH WORDS

ATHLETE -ATALAR அடலர் ஏர் உழுதல்;  AUGURY- ARIKURI அறிகுறி

ARABLE- ER UZAKKUUTIYA ஏர் உழுதல்;

APOLLO- PAKALAVAN (MIRROR IMAGE) பகலவன் AURUM/GOLD- AADAKAM (AOR/HEBREW WORD, MIRROR IMAGE RAYI SKT.WORD) ஆடகம்

 

ANTHEM/ANTHOLOGY – SANTHAM சந்தம்; ATHRO(POLOGY)- AAN=MAN ஆண்

MAN- AAN மனிதன்/மானுடன்; ARGOTER (BEG)- ERPATHU (IKAZSSI) ஏற்பது (இகழ்ச்சி); AVER(T)- THAVIR தவிர் ;A-VENGE- VANJI வஞ்சி; AWE- ACHCHAM அச்சம்; AXIS-ACHU அச்சு A-TTACK- THAAKKU தாக்கு ; ANCHOR- NANGUURAM நங்கூரம்; ATTIRE-AADAI ஆடை ;ARDENT, ARDOUR- AARVAM ஆர்வம் ;CUMULATE/ACUMULATE- KUVI, KUMITHTHU குவி/குமித்து;  AWARE- ARI (VEN) அறி ;ANTIQUITY- AATHI (KUTI) ஆதி ;ALL-ELLAA (MIRROR IMAGE) எல்லா;ATTAIN-ADAI அடை

ADAMANT- ADAAVADI அடாவடி ;AMPHORA- AMBARAA (SHAPE) அம்பறா (துணி- வடிவம்); BAY-VAAY வாய்; BURG- PURA, UUR புரம்/ஊர்; BOAT-PATAKU படகு

BETEL-VETTALAI வெற்றிலை; BIRD- PARAVAI, ANNAP’’PEDU’’SEVAR PEDU பறவை/ பேடு; BRIDE- VADUVAI வதுவை; BIRTH-PIRATHTHAL பிறத்தல்

BARRIER- VARAIYARAI வரையறை; BLAZING- PALAPALAPPU பளபளப்பு

BARN- ARAN/LOFT பரண்; BLUFF-ULARU உளறு; BOY- PAIYAN பையன்/பியூன்

 

BARE – VERUM வெறும் ;BARREN- VARANDA வறண்ட ;BURY-PUTHAI புதை;

BEAT- PUTAI- NAIYAP PUDAI புடை/ நையப்புடை; BLAST- PILA, VIlAASU பிள/விளாசு; FLAW- PIZAI பிழை ;BATTER- PAATARAI பட்டறை வேகு/வேக்காடு; BAKE- VEGU, VEKKAADU வேகு/வேக்காடு;

BABY- PAAPPAA பாப்பா ;BAG- PAKKU (SANGAM TAMIL) பக்கு

 

C

CONCH- SANGU சங்கு சரடு கயிறு; CORD- KODI, SARADU சரடு

COIR- KAYIRU  கயிறு; COWRY- SOZI சோழி; CHIRO- KAI/HAND கை கல் செறி, செழுமை, சீர், திரு; CAL- KAL (STONE), CALCULATE கல் ;CERES- SIIR, SRI, SEZUMAI, THIRU, செறி, செழுமை, சீர், திரு

 

CHAFF- SAAVI சாவி செப்பு/செம்பு; COPPER- SEPPU செப்பு/செம்பு

CRORE- KODI கோடி; CLAY- KALI (MAN) களி; COPRA- KOPPARAI கொப்பறை

CASH- KAASU காசு; CHOULTRY- SATTHTHIRAM சத்திரம் ; CHIT- SIITU (KKAVI), SITTAI சீட்டு/சிட்டை; CURRY- KARI கறி; CURL- SURUL சுருள் ; CUTE-SUTTI சுட்டி ;

CHAR- KARI கரி ;CUP- KOPPAI, KUVALAI  கோப்பை,குவளை; CROOKED- KURUKIYA குறுக்கு  குறுகிய

COLD, CHILL- KULIR குளிர் ; CURVE- SUZIVU சுழிவு ; COOPT- KUUTTU கூட்டு

CUDDLE-KATTU கட்டு ; CROWD- KUUTTAM கூட்டம்; CHAOS- KUZAPPAM குழப்பம்

CHEER – SIRI சிரி ; CELEBRATE- KALI (PPU) களி(ப்பு); COARSE- SORASORA(PPU) கரகர, சொர சொர; CHATEAU –KOTTAI கோட்டை; COASTAL- KADAL +ORA கடல் ஓர

CYST- KATTI  கட்டி; CRACK- KIRUKKU கிறுக்கு ; CODNEMN- KANDI, KANDANAM கண்டி/கண்டனம், ;COIL- SUZAL, சுழல்/குழல்

 

Words about genital organs are same In most of the languages with slight changes)

This is not a comprehensive list; only some examples are given.

 

–subham–

ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – (கடைசிப் பகுதி) POST.4789

Date: 27 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 5-42 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4789

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 3 (கடைசிப் பகுதி)

 

ச.நாகராஜன்

 

 

கவர்னர் அறையில் உள்ளே நுழைந்த உயர் அதிகாரி பதறிப் போய் ஹூ ஆர் யூ என்றார் என்னப் பார்த்து.

அறிமுகம் செய்து கொண்டேன். அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை வந்து விட்டேன். ஒரு சின்ன சப்மிஷன் தான். இரண்டு நிமிட வேலை தான்.

அந்த நேரம் கவர்னர் உள்ளே வந்தார்.

 

யார் – மெல்லிய குரலில் கேட்டார்.

சொன்னேன்.

என்ன விஷயம்?

மிகச் சுருக்கமாக விளக்கினேன்.

 

ஆர்டர் வந்தது.எக்ஸ்கியூட் செய்தோம். இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்தவர் முறையாக பாஸ் செய்தார். இதோ டாகுமென்ட்ஸ்.

அந்தமான் சென்றவுடன் அனைத்தையும் ரிஜக்ட் செய்தார்.

அங்கே எதையும் செய்ய வசதி இல்லை. பெருத்த பொருட்செலவில் மீண்டும் பேக்டரி கொண்டு வந்தோம். இந்த முறை அனைத்து ரா மெடீரியல் கம்பெனிகளின் உயர் அதிகாரிகளின் முன் அதிகாரி சொன்னவற்றைச் செய்தோம். இதோ இன்ஸ்பெக்‌ஷன் ரிபோர்ட். கண்டெய்னர்கள் மீண்டும் அனுப்பப்பட்டன. இப்போது மீண்டும் பல டெஸ்டுகள் என்கிறார்கள். நீங்கள் தான் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்.

அனைத்து ஆவணங்களும் அழகுற தரப்பட்டன.

கூர்ந்து கேட்ட கவர்னர் மார்பின் மீது கை வைத்தார். நான் பார்த்துக் கொள்கிறேன். அவரது கனிவான செய்கைக்கு நன்றி கூறி கவர்னர் மாளிகை சீலை டாகுமெண்டில் வாங்கிக் கொண்டு திரும்பினேன்.

 

பத்து நிமிடத்தில் வேலை – மகத்தான வேலை – முடிந்தது.

பின்னர் மாலை அரவிந்த ஆசிரம தரிசனம்

மறுநாள் ஊர்.

 

நிர்வாகத்திடம் விளக்கினேன்.

எல்லோருக்கும் புரிந்தது – செய்யக்கூடியது அனைத்தையும் நான் செய்து விட்டேன் என்று.

அடுத்து என்ன?

டைரக்டருக்கு போன் செய்தேன். வரலாமா?

வாருங்கள்.

மறுநாள் அந்தமானில் ஆஜர்.

கவர்னரைப் பார்த்தாயிற்று போலும்!

 

ஆம், சார் இவ்வளவு பெரிய் பதவியில் துடிப்பாக இருக்கும் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாதா? ஆச்சரியமாக இருக்கிறது.

வாருங்கள், சாப்பிடப் போகலாம். என் காரிலேயே வாருங்கள். உங்களை லாட்ஜில் டிராப் செய்கிறேன்.

 

போகும் வழியில் இந்தத் தீவில் மாட்டிக் கொண்ட துயரத்தை ஒரு பாட்டம் அழுதார். அவர் நட்சத்திரம், ராசி, லக்னம், இப்போது நடக்கும் தசை, புக்தி அது முடியும் தேதி என்று விலாவாரியாகச் சொல்லிப் புலம்பினார்.

 

லாட்ஜ் வந்தது. நாளை பார்க்கிறேன். தேங்க்ஸ்!

மறுநாள் காலை பத்தரை மணி.

அவர் ரூமில் நுழைந்தேன்.

சார்! உங்களுக்கு ஒரு நற்செய்தி!

எனக்கா? குட் நியூஸா?

ஆமாம் சார், உங்களுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அநேகமாக சென்னை தான்!

அவர் துள்ளிக் குதித்தார்.

எப்படிச் சொல்கிறீர்கள்?

ஒரு பேப்பரை அவர் முன்னால் போட்டேன்.

 

அதில் அவரது ஜாதகக் குறிப்பும், கோசார ரீதியாகவும், தசா புக்தி ரீதியாகவும் நடப்பதைச் சுட்டிக் காட்டினேன். அன்றிலிருந்து 45 நாட்களில் எல்லாம் முடிந்து விடும். டிரான்ஸ்பர் உறுதி.

 

அவர் உடனடியாக போனில் மனைவியை அழைத்தார். சார் சாப்பிட வருகிறார். உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்ல வருகிறார். அவரே சொல்வார்.

 

வீட்டில் அவரது மனைவி காத்துக் கொண்டிருந்தார்.

அறிமுகத்திற்குப் பின்னர் அவரிடம் சொன்னேன்.

சாருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அநேகமாகச் சென்னை தான். வீட்டில் இருக்கும் குப்பை கூளத்தை எல்லாம் டிஸ்போஸ் செய்யுங்கள். குப்பை போகப் போக இன்கிரிமெண்ட் நிச்சயம். உடனே ஆரம்பியுங்கள். பாதியை கிஃப்டாகத் தந்து விடுங்கள். கிளம்புகிற வழியைப் பாருங்கள்.அவரால் நம்ப முடியவில்லை. பல வருடமாக டிரை செய்கிறார்.

 

சார், நீங்கள் கிளம்பும் முன் எனக்கு ஒரு வழியைச் செய்யுங்கள். இன்னொருவர் உங்கள் இடத்தில் வந்தால் அடியைப் பிடிடா என்று அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குள் என்னை ஒரேயடியாக வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

 

சாப்பிட்டு விடை பெற்றுக் கொண்டேன்.

அலுவலகம் வந்தவுடன் நீங்கள் கிளம்புங்கள் என்றார்.

நாளை உங்கள் ஃபிரண்ட் பத்தரைக்கு என் ரூமுக்கு வருவார். அவர் வந்த மூன்று நிமிடத்திற்குப் பின் உள்ளே வாருங்கள். ஒரு எச்சரிக்கை. உங்களைத் திட்டுவேன். உங்கள் நிறுவனத்தைத் திட்டுவேன். கோபப் படாதீர்கள்!

இப்படி க்ளூ கொடுத்து விட்டீர்களே. நன்றாகத் திட்டிக் கொள்ளுங்கள்.

 

ஏதோ ஒரு பெரிய டிராமா அரங்கேறப்போகிறது.

நான் தயார் தான்!

 

மறுநாள் பத்து மணிக்கு ஒரு மரத்தின் பின்னால் நின்றிருந்தேன்.பங்காளி நண்பர் உள்ளே சென்றார். சரியாக மூன்று நிமிடம் கழித்து உள்ளே நுழைந்தேன்.

கொதித்தெழுந்தார் டைரக்டர்.

 

மேஜையை ஒரு குத்து குத்த பேப்பர் வெயிட்டுகள் உயரப் பறந்தன.

 

வந்துட்டான்யா மூஞ்சியைக் காண்பிச்சுகிட்டு. தினமும் இதே எழவாப் போச்சு. பேரு பெத்த பேரு.ஆனா ஃபிராடு நிறுவனம்

இந்த கவர்ன்மெண்டை ஏமாத்த விட மாட்டேன். என்ன ஆனாலும் சரி. மீண்டும் மேஜையில் ஒரு குத்து. பேப்பர்கள் பறக்க பேப்பர் வெயிட்டுகள் அறையின் நாலா புறமும் சிதறின.

பியூன் உள்ளே வர நடுங்கினார்.

 

அனைவரும் ஜன்னல் வழியே, கதவு வழியே எட்டிப் பார்த்தனர்.இப்படி ஒரு கோர தாண்டவத்தை அவர்கள் இது வரை பார்த்ததில்லை.

 

அரை மணி நேரம் எனக்கும் நிறுவனத்திற்கும் திட்டு. பின்னர் காட்சி மாறியது.

நீங்கள் என்ன செய்தீர்கள்? மதுரை சென்றீர்கள். அரசாங்கப் பணத்தில். அனைத்தையும் அப்ரூவ் பண்ணினீர்கள். இங்கு வந்த பிறகு ஒரே பல்டி. வெட்கமாயில்லை. உங்கள் கையெழுத்தை நீங்களே மதிக்கவில்லை. சரி, இவர் என்ன செய்தார்? பணம் போனாலும் பரவாயில்லை என்று அனைத்து கண்டெய்னர்களையும் திரும்ப எடுத்துச் சென்றார். திரும்ப அங்கு சென்றீர்கள். மைண்ட் இட். அரசாங்கப் பணத்தில்! உயர் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் நீங்கள் சொன்னதை எல்லாம் செய்தார். பக்கம் பக்கமாகக் கையெழுத்துப் போட்டீர்கள். அவமானமாயில்லை. உங்கள் கையெழுத்துத் தானே! இங்கு வந்தவுடன் புதிய டெஸ்ட் தேவை என்கிறீர்கள். இந்த ப்ராஜெக்டுக்கு அரசு ஒதுக்கிய கால அவகாசம் முடியப் போகிறது. ஒன்று இதை முடியுங்கள் அல்லது டிபார்ட்மெண்டையே முடித்து விடுவேன்.

மேஜையில் மீண்டும் ஒரு குத்து. இன்னும் பத்து நிமிடம் டைம் தருகிறேன். பத்தே நிமிடங்கள். அனைத்து பேப்பர்களும் கையெழுத்திட்டு என மேஜைக்கு வர வேண்டும். இந்த கண்டெய்னர்கள் சரி இல்லை என்றால் அதற்கான முழுப் பொறுப்பும் உங்களுடையதே. உங்களிடம் இத்தனை லட்சத்தையும் ரிகவர் செய்வேன். கவர்னர் ஆர்டர் வேறு வந்து விட்டது.

 

ஒரு வழியாக ஓய்ந்தார்.

பலர் அங்கும் இங்கும் ஓடினர்.

 

அடேயப்பா! இன்னும் இவ்வளவு பேப்பர்களில் கையெழுத்து தேவையா. அதிசயித்தேன்.

 

பத்தாம் நிமிடம் பல கத்தை பேப்பர்கள்.  கிரீன் இங்கில் மளமளவென்று கையெழுத்தை விளாசித்

தள்ளினார்.நடுநடுங்கிய பங்காளி பாபு ஓரம் கட்டப்பட்டார்.

அடுத்து அக்கவுண்ட்ஸ் மேனேஜரை சம்மன் செய்தார்.

“இதோ, எல்லாம் ரெடி. இவரது பேமெண்ட் செக் எங்கே?

“பதினைந்து நாளில் அனுப்பிடலாம் சார்!

மீண்டும் மேஜையில் ஒரு குத்து!

 

என்ன விளையாடுகிறீர்களா? இந்த ப்ராஜெக்டின் பணத்தின்  மீது கை வைக்க யாருக்கும் உரிமை இல்லை. அது வந்து பல மாதமாக ஆகிறது. எங்கே அது? பத்து நிமிடத்தில் செக் வேண்டும். கையெழுத்துப் போட நான் ரெடி. எவ்ரிதிங் இஸ் இன் ஆர்டர் நௌ!

 

அவர் ஆடிப் போனார். சார், நாளை மத்தியானம் தருகிறேன் சார்.

 

நோ, நோ! காலை பத்து மணிக்கு என் டேபிளில் இருக்க வேண்டும். அவ்வளவு தான், எல்லாரும் போகலாம்!

என்னைப் புன்முறுவலுடன் பார்த்தார்.

திருப்தி தானே – கண்ணால் கேட்டார். கோடி தேங்க்ஸ் – கண்களினால் பதில்!

 

எப்போது கிளம்ப வேண்டும்?

ஒப்பன் டிக்கட் தான் சார்!

 

நாளை மறுநாள் எர்லி மார்னிங் கிளம்புங்கள்.

மறுநாள் காலை பத்து மணி. கத்தை கத்தையான பேப்பர்களில் அப்ரூவல்கள். ஒரு செக்!

 

அடேயப்பா! பிரம்மாண்ட தொகை!

 

கோடி நன்றி சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றேன். மறக்க முடியாத மாபெரும் தமிழர்!

 

ஊர் வந்து சேர்ந்தவுடனேயே தாக்கீது.

உடனடியாக ஹெட் ஆபீஸில் போர்டு மீட்டிங் அறைக்கு வர வேண்டும்.

 

அலறி அடித்துக் கொண்டு வண்டியில் விரைந்தேன்.

அங்கு சார், உங்களைத் தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்ற அலுவலர் என்னை இழுத்துக் கொண்டு போர்டு மீட்டிங் நடக்கும் பிரம்மாண்ட அறைக்குச் சென்றார்.

அங்கு யாரும் போகக் கூடாதே!

 

கதவைத் திறந்து இதோ வந்து விட்டார் என்றார்.

மெதுவாக உள்ளே நுழைந்தேன். பேசவே இல்லை. செக்கை எடுத்து மேடத்திடம் நீட்டினேன்.

 

அதை வாங்கிப் பார்த்தார். திகைப்பு. பிறகு மலர்ச்சி. அடுத்தவரிடம் செக்கை நீட்டினார். அவர் வாங்கிப் பார்த்தார். அடுத்தவர், அடுத்தவர்.

 

ஹௌ இட் ஹாப்பண்ட்?

 

நிறுவனத்தின் கமிட்மெண்ட் .. பள பளா. அரை நிமிடத்தில் நிறுத்திக் கொண்டேன். செக்கை கேட்டேன். ஆபீஸில் தர வேண்டுமே!

 

இல்லை, என்னிடமே இருக்கட்டும். தன் ஹாண்ட் பாக்கில் வைத்துக் கொண்டார்.

 

மெதுவாகப் படி இறங்கினேன். உயர் அதிகாரிகள் வந்து என்னஎன்ன என்றனர். நடந்ததைச் சொன்னேன். ஒரே பாராட்டு.

 

ஆபீஸுக்கு செல்வதற்குள் விஷயம் பரவ அனைவருக்கும் ஆனந்தம்.

அந்த போர்டு மீட்டிங் முக்கிய டெஸிஷன்களை எடுக்கும் க்ரூசியல் மீட்டிங்காம். கட் கட் கட். ஒரே வதந்தியில் மூழ்கி இருந்தது ஆபீஸ்.

ஆனால் அது ஐந்து நிமிடத்தில் முடிந்து விட்டதாம். காபி மீட்டிங்காக.

 

ஒரே நிம்மதிப் பெருமுச்சு – எங்கும்!

பின்னர் அருமை நிறுவனத்தை விட்டு விருப்பத்துடன் விலகினேன்.

 

சென்னை வந்து இன்னொரு கம்பெனியில் மானேஜர் ஆனேன்.

ஒரு நாள் கீழ்க்கட்டளை தாண்டி கார் சென்று கொண்டிருந்தது.

 

அட, என்ன அழகாக இருக்கிறது,பாருங்கள், ஃபிஷரி டிபார்ட்மெண்ட் – டிரைவரிடம் சொன்னேன்.

ஆமாம் சார், நல்ல ஒரு டைரக்டர் வி.கி…. பெயரைச் சொன்ன அவர் சிரத்தையுடன் எல்லாம் செய்கிறார் சார்.

என்ன என்று ஒரு உற்சாக அலறல் அலறினேன்.

என்ன சார், டைரக்டரை உங்களுக்குத் தெரியுமா?

புன்முறுவல் பூத்தேன்.

 

கார் சர் என்று தார் சாலையில் வழுக்கி ஓடியது!

 

சொந்த சர்வைவலுக்காக, பெரும் பணத்தொகையைப் பெறுவதற்காக ஜோதிடத்தைத் தவறாக மூன்றாம் முறையாக என் கேரியரில் கையாண்டிருக்கிறேன்.

தப்பு தப்பு தான்!

 

 

இறைவனின் வழிகள் விசித்திரமானவை. அவன் வழிமுறைகள் என்னவென்று எனக்கே தெரியாது என்று வேத வியாஸரே சொல்லி விட்ட பின்னர் அற்பன் நான் சொல்ல என்ன இருக்கிறது?

 

ஆண்டவன் சோதிப்பான்; கைவிட மாட்டான்!

மஹாகணபதியே துணை!

 

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

****

ஜோதிட கட்டுரைகள் மூன்றும் (3+1) முடிந்தன.