பதில் சொல்லடா, தமிழா! Tamil Q & A (Post No.4812)

Written by London Swaminathan 

 

Date: 14 MARCH 2018

 

Time uploaded in London – 3-56 am

 

Post No. 4812

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கீழ்கண்ட கேள்விகளுக்குப் பதில்/ விடை சொல்லி உங்கள் தமிழ் அறிவினைச் சோதித்துக் கொள்ளுங்கள்

 

1.வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டு ஒருவன்

கல்லால் எறியப்பிரம்பால் அடிக்க இக்காசினியில்

அல்லார் பொழில் தில்லை அம்பலவாணற்கு ஓர் அன்னைபிதா

இல்லாத தாழ்வுஅல்லவோ இங்ஙனேஎளிது ஆனதுவே

 

2.வெள்வாய்க் கழுதைப் புல் இனம் புரட்டி

வெள்ளிஅ வரகும் கொள்ளும் வித்தும்

வைகல் உழவ! வாழிய பெரிது

 

3.மறுஇல மாக்கதை கேட்பவர் வைகுந்தம்

பெறுவர் என்பது பேசவும் வேண்டுமொ

 

 1. அம் செஞ்சீறடி அணி சிலம்பு ஒழிய

மெந்துகில் அல்குல் மேகலை நீங்கக்

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்

மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்

 

 1. முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே

 

 1. நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரிவாள் எங்கள் தாய்- அவர்

அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்

ஆனந்தக் கூத்திடுவாள்

 

 1. ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின் பார்த்து

இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்

 

 1. அறத்தான் வருவதே இன்பம்

 

 1. பொருளற்ற பாட்டுக்களை – அங்குப்

புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்

இருளுக்குள் சித்திரத்தின் – திறன்

ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்  கூடுமோ?

 

 1. வினையைப் பொடியாக்கித்

தணியார் பாதம் வந்தொல்லைதாராய்

பொய்தீர் மெய்யானே

 

11.காலில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

12.கையில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

13.காதில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

14.இடையில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?

 

 1. நினைத்ததை அளிக்கும் ரத்தினக் கல்லின் ( தலையில் அணியும் ஒரு நகையின்) பெயர் வரும் காவியம்/ காப்பியம் எது?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

விடை/ ANSWERS

1.காளமேகம்,  தனிப்பாடல்கள், 2. சங்க கால அவ்வையார்

புறநானூறு, 3. கம்பன், கம்ப ராமாயணம், 4. இளங்கோ, சிலப்பதிகாரம்,

 1. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 6. பாரதி, பாரதியார் பாடல்கள், 7. திருமூலர் எழுதிய திருமந்திரம், 8. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 9. பாரதிதாசன் பாடல்கள், 10. மாணிக்கவாசகர், திருவாசகம்
 2. சிலப்பதிகாரம், 12.வளையாபதி,13.குண்டலகேசி, 14. மணிமேகலை, 15.சீவக சிந்தாமணி

 

 

TAMIL QUIZ- நீங்கள் தமிழ் புத்தகத்தைக் கரைத்துக் குடித்தவரா? (Post No.4762)

Date: 19 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-59 AM

 

Written by London swaminathan

 

Post No. 4762

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

கீழ்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.

கீழ்கண்ட பாடல் வரிகளை யார் சொன்னது? எங்கே சொன்னார்கள்?

 

 

 

1.நாவினில் வேத முடையவள் கையில்

நலந்திகழ் வாளுடையாள்- தனை

மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை

வீட்டிடு  தோளுடையாள்

 

2.காய்ச்ச பலாவின் கனி உண்ண மாட்டாமல்

ஈச்சம் பழத்துக்கு இடர் உற்றவாறே

 

3.நல்லதொரு புதுமைநாட்டில் கண்டேன்; அதனைச் சொல்லவா? சொல்லவா? சொல்லவா?

 

4.ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்

முத்தீப் புரையக் காண் தக இருந்த

கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!

 

 

5.சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய

சக்கரக் கையனே! அச்சோ! அச்சோ!

6.ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ

 

 

7.அறன் எனப்பட்டதே இல்வாழ்கை

 

8.எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்

இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்

 

9.கல்லை மென்கனியாக்கும் விச்சைகொண்டென்னை நின்கழற்கன்பனாக்கினாய்

எல்லையில்லை நின்கருணை யெம்பிரான்

 

10.குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

 

 

 

11.தண்டியக்காரரும் சண்டாளர்களும் 
என்பெயர் சொல்லவும் இடி விழுந்துஒடிட

 

 

 

12.மலையிடைப் பிறவா மணியே என்கோ?

அலையிடைப்பிறவா அமிழ்தே என்கோ?

யாழிடைப் பிறவா இசையே  என்கோ?

 

13.கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே

 

14.தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருக பணித்தருள்வாய்

 

15.கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே

 

 

 

விடைகள் ANSWERS

 1. பாரதி, பாரதியார் பாடல்கள், 2. திருமூலர் எழுதிய திருமந்திரம், 3. காளமேகம், தனிப்பாடல்கள், 4. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 5. பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம், 6.கம்பன், கம்ப ராமாயணம், 7. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 8. பாரதிதாசன் பாடல்கள், 9. மாணிக்கவாசகர், திருவாசகம், 10. தற்கால அவ்வையார்,
 2. தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 12. இளங்கோ, சிலப்பதிகாரம், 13. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 14. குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை, 15. பட்டினத்தார் பாடல், திருவேகம்பமாலை

 

Hindu Tamil Quiz 4

 

Hindu Tamil Quiz 4 by S Swaminathan

தமிழ் கேள்வி பதில் 4-ம், ஆங்கிலத்தில் உள்ள இந்து க்விஸ் 4-ம் வெவ்வேறு கேள்விகளைக் கொண்டவை. இரண்டு மொழிகளும் தெரிந்தவர்கள் இரண்டுக்கும் பதில் தரலாம்.

15-20 மதிப்பெண்கள்- மிகவும் கெட்டிக்காரர்

10-15 வரை- நல்ல மதிப்பெண்

5-10 வரை பரவாயில்லை

5-க்கும் குறைவான மதிப்பெண்கள்- நிறைய நூல்களைப் படிக்கவும்.

 

1)வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் யார்?

 

2)திவ்வியப் பிரபந்தத்தில் எத்தனை புத்தகங்கள் எத்தனை பாடல்கள் இருக்கின்றன?

 

3)திருவிருத்தம் திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய் மொழி ஆகிய பாடல் தொகுப்பைப் பாடியவர் யார்? அவைகளின் தனிச் சிறப்பு என்ன?

 

4)தேவாரம் பாடிய மூவர் யார்?

 

5)திருவாசகத்தைப் பாடியவர் யார்?

 

6)சீர்காழியும் திருவாதவூரும் யார் யார் பிறந்த ஊர்கள்?

 

7)தியாகராஜ சுவாமிகள் எத்தனை கோடி ராம நாமம் ஜபித்தார்?

 

8)யுதிஷ்டிரர் (தருமன்) நடத்திய யாகத்தில் அன்னதானத்தின் பெருமையை உணர்த்திய பிராணி எது?

 

9)யுதிஷ்டிரர் வடக்கு நோக்கிப் பயணம் செய்த போது அவருடன் வந்த பிராணி எது?

 

10)ராமாயணத்தில் குரங்குப் படையுடன் சேது/பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட சிறு பிராணி எது?

 

11)எதைத் தானம் கொடுத்து சுவர்க்கம் புகுந்தான் ரந்தி தேவன்?

 

12)தமிழ்நாட்டில் கூத்தனூரில் உள்ள கோவிலின் சிறப்பு என்ன?

 

13)பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலில் சந்தித்த ஊர் எது?

 

14)நம்மாழ்வார் வாழ்ந்த திருக்குருகூரின் இன்னொரு பிரசித்தமான பெயர் என்ன?

 

15)திவ்யப் பிரபந்தத்தில் திருமாலை, திருப்பள்ளி எழுச்சி ஆகிய இரண்டு பாசுரங்களை இயற்றியவர் யார்?

 

16)சேர நாட்டில் திருவஞ்சைக்களத்தில் அவதரித்த ஆழ்வார் யார்?

 

17)நீலன் என்ற இயற் பெயர் உடைய ஆழ்வார் யார்?

 

18)பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி, சிவன் மீது திருப்பள்ளி எழுச்சி பாடிய கவிஞர்கள் யாவர்?

 

19)விஷ்ணுசித்தன் என்ற இயற் பெயர்கொண்ட ஆழ்வார் யார்?

 

20)திருவாய்மொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?

 

 

விடைகள்: 1.)நம்மாழ்வார் 2.)புத்தகங்கள் 24, பாடல்கள் 4000 3.)நான்கும் நம்மாழ்வார் அருளிய நூல்கள், இவைகள் வேதத்தின் சாரமாகக் கருதப்படுவதால் தமிழ் மறை என்றும் அழைக்கப்படுகின்றன.4).அப்பர் (திருநாவுக்கரசர்), சம்பந்தர், சுந்தரர் 5.)மாணிக்கவாசகர் 6.)சம்பந்தர், மாணிக்கவாசகர் 7.) 96 கோடி ராம நாமம் 8.)கீரி, 9.)நாய், 10.)அணில் 11.)தண்ணீர் தானம் 12.)சரஸ்வதி தேவி கோவில் 13.)திருக்கோவலூர் 14.)ஆழ்வார் திருநகரி 15.)தொண்டரடிப்பொடி ஆழ்வார் 16.)குலசேகர ஆழ்வார்

17.)திருமங்கை ஆழ்வார் 18.)பாரதி, மாணிக்கவாசகர் 19.) பெரியாழ்வார் 20.) பாசுரங்கள் 1102.

For more of the same contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com