காளிகோவில் பூசாரி : வாரியார் சொன்ன கதை (Post No. 2486)

durga many hands

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 13 January 2016

 

Post No. 2486

 

Time uploaded in London :– 9-31 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

(லண்டன் ஸ்ரீ முருகன் கோவில் மஹா கும்பாபிஷேக மலர், 1984)

நேற்று வெளியிட்ட சஜ்ஜன சாருகர் கதையையும் படியுங்கள்

durga killing asura

அவ்வினைக்கு இவ்வினை: மற்றொரு சான்று

ஒரு காளிகோவில் பூசாரி ஒருவன் பூஜை செய்து கொண்டிருந்தான். மார்கழி மாதம் அதிகாலையில் குளிர்ந்த நீரில் முழுகி காளி தேவிக்கு தயிர் அன்னம் நிவேதனம் செய்தான். ஒவ்வொரு நாள் ஒவ்வொருவருடைய உபயம். தட்டில் பணம் போடும் பெரியவர்கட்குத் தயிரன்னத்தை விளாம்பழம் அளவு உருட்டித் தருவான். பிள்ளைகள் கையில் தயிரன்னத்தைத் தடவி விடுவான். அப்பிள்ளைகள் வெளியே வந்து பூதக்கண்ணாடி போட்டுப்பார்த்தால்தான் கையில் பிரசாதம் சிறிது இருப்பது தெரியும்!

 

பூசாரிக்கு ஆகார மாறுபாட்டால் காய்ச்சல் வந்தது. அதற்குத் தகுந்த மருந்து   உண்பதுதான் முறை. அவன் அறிவில்லாதவன். “காளியாயீ! இந்தக் காய்ச்சலிலிருந்து என்னைக் காப்பாற்று. உனக்கு இரு ஆடுகள் பலி தருவேன்” என்று பிரார்த்தனை செய்துகொண்டான். அவன் மனைவி மிளகு- திப்பிலி கஷாயம் செய்து தந்தாள். காய்ச்சல் நின்றுவிட்டது.

 

ஆடிமாதம அம்மனுக்கு, பூசாரி, அபிஷேகம் செய்து இரு ஆடுகளைக் கொண்டுவந்து அவைகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி நீராட்டினான். மஞ்சள் நீர் பட்டதும் இரு ஆடுகளும் தலையை உதறின.- உடனே பூசாரி, “அம்மன் உத்தரவாகிவிட்டது. அதற்கு அடையாளம் ஆடுகள் தலையை ஆட்டிவிட்டன” என்று சொல்லி இரு ஆடுகளையும் வெட்டிவிட்டான். தண்ணீர்பட்டால் உதறுவது இயற்கைதானே, அதற்காக ஆட்டை வெட்டலாமா?

 

அந்த நகரை ஆட்சிபுரிகின்ற மன்னவனுக்கு ஒரு மன்னனும், மந்திரிக்கு ஒரு மகனும் பிறந்தார்கள். மந்திரி மகனும், மன்னன் மகனும் கலைகளில் வல்லவர்கள் ஆனார்கள். மன்னன் மகனுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது.

 

மன்னன் மகனுக்கு மகுடாபிஷேகம் செய்தபின்னர், 12 ஆண்டுகளுக்கு மழை பெய்யவில்லை. மக்கள் உண்ணீரும் தண்ணீரும் இன்றித் தவித்தார்கள். ஒருநாள் மன்னவன் மகனும் மந்திரி மகனும்  இரவு பத்து மணிக்கு அந்தக் காளிதேவியிடம் இக்குறையைச் சொல்லி வழிபாடு செய்யச் சென்றார்கள். நம்மைத் தண்டிக்க வருகிறார்களோ என்று அஞ்சிய பூசாரி காளிதேவிக்குப் பின்புறம் ஒளிந்து கொண்டான்.

 

மன்னவன் மகன், அம்பிகையை அஞ்சலி செய்து, “தேவி! கருணாம்பிகை! அகிலாண்டநாயகி! எனக்கு முடிசூட்டிய பின்னர் 12 ஆண்டுகளாக மழையில்லை. அம்மையே! மழை பொழியச் செய்வாய்” என்று உள்ளம் உருக வேண்டினான்.

 

காளிதேவி, “மன்னன் மகனே! என் சந்நிதியில் நரபலி தந்தால் மழை பொழியும்” என்று அசரீரியாகக் கூறினாள்.

 

இதையறிந்த மன்னன் மந்திரியுடன் ஓடோடி வந்தான், மந்திரியைப் பார்த்து, “ தோழனே மக்களுக்கு நான் தந்தை. மக்கள் பொருட்டு என் உயிரைத் தியாகம் செய்ய வேண்டும். என்னைப் பலியிடு. நீ அரசாட்சியை ஏற்று நாட்டை ஆள் என்றான். மந்திரியோவெனில், “அரசே!

உடுக்கை இழந்தவன் கை போல

ஆங்கன் இடுக்கண் களைவதாம் நட்பு

 

 

durga,Bvar

தங்களின் நண்பனாகிய நான் தங்களை பலியிடுவதா? வேண்டாம். என்னைப் பலியிடுங்கள். மந்திரி பதவிக்குப் பலர் ஆலாப் பறக்கிறார்கள். யாரையாவது அமைசராக வைத்து அரசு புரியுங்கள்” என்றான்.

“என்னைப் பலியிடு”, “என்னைப் பலியிடு” – என்று இருவரும் வாதிட்டனர்.

 

அரசன், அன்பனே எனக்கும் உனக்கும் வாக்குவாதம் வேண்டாம்; அம்பிகையைக் கேட்போம். அம்பிகை யாரைக் கேட்கின்றாளோ, அவ்வாறே செய்வோம்” என்று கூறினான்.

 

தேவி! உன் சந்நிதியில் அடியேன் பலியாக வேண்டுமா? அல்லது அமைச்சர் பலியாக வேண்டுமா? என்று வினாவினான்.

 

தேவி சொன்னாள்: “மன்னவனே! நீயும் பலியாக வேண்டாம், மந்திரியும் பலியாக வேண்டாம். என் பின்னே ஒளிந்திருக்கும் பூசாரிதான் பலியாக வேண்டும். அதுவும் நீயும் மந்திரியும் பூசாரியை என் சந்நிதி முன்னே நிறுத்தி, அவனுக்கு முன்னும் பின்னுமாக நின்று, ஏக காலத்தில், உங்கள் மகன்கள் இருவரும் பூசாரியின் தலையை வெட்டித்தள்ள வேண்டும்”.

 

பூசாரி இதைக் கேட்டு நடுநடுங்கினான். வெளியே வந்தான். அவனுடைய கண்கள் சிவந்தன. மீசை படபடத்தது. புருவம் நெளிந்தது. “காளியாயீ! நீ ஒரு தெய்வமா! உனக்கு 55 ஆண்டுகளாகப் பூசை செய்தேனே! என்னையா பலியிடச் சொல்கின்றாய்? உனக்கு கருணையில்லையா? 84 நூறாயிர யோனி பேதங்கட்கும் நீ தாயல்லவா? நான் உனக்கு சேயல்லவா? கொடியவளே! உனக்கு இரக்கம் இல்லையா? பலகாலம் தொண்டு செய்த என்னையே பலிவாங்க முற்பட்டனையா? உன் மனம் இரும்பா? கல்லா? இரக்கமில்லாத அரக்கியே! நீ ஒரு தெய்வமா?” என்று கூறி வசைமாறி பொழிந்தான்.

 

காளிதேவி சொன்னாள்: “பூசாரி! பதட்டம் அடையாதே. தானத்தில் நிதானம் பெரியது. தயிரன்னம் உண்டு உனக்குக் காய்ச்சல் வந்தால் கோனாரின் வீட்டில் வாழும் ஆடுகள் என்ன பாவம் செய்தன? எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி பேதங்கட்கும் நான் தாய் என்று இன்றுதான் உணர்ந்தனையா? நீ பல ஆண்டுகளுக்கு முன் வெட்டிய ஆடுகட்கும் நான் தாயல்லவா? வாயில்லாத குற்றமற்ற ஆடுகளைக் கதறக் கதற அன்று நீ பலியிட்டனையே! நீ பலியிட்ட இரண்டு  ஆடுகளும் மன்னவன் மகனாகவும், மந்திரி மகனாகவும் பிறந்து வந்திருக்கின்றனர்.

Durga puja in Allahabad

Allahabad: Devotees immerse goddess Durga idol on the last day of puja festival in a pond near the confluence the Ganga, Yamuna, and Saraswati on Friday in Allahabad. PTI Photo (PTI10_23_2015_000199A)

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் – தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும் – என்பது பெரியோர் வாக்கு. அவ்வினைக்கு இவ்வினை” – என்றாள்.

 

பூசாரி குனிந்து நின்றான். மன்னவன் மகன் வாளும் மந்திரி மகன் வாளும் பூசாரியின் தலையை ஏக காலத்தில் சோதித்தன. அம்பிகை காட்சிதந்தாள். மன்னனே! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்றாள்.

 

மன்னன், “தாயே! இந்த பூசாரி குற்ரத்தை உணர்ந்துகொண்டான். மன்னிப்பது உன் இயல்பு. தேவி! இவனை மன்னித்து உயிர்ப்பிச்சை கொடு என்றான்.பின்னர் மழை பெய்து, மக்கள் சுகமடைய அருள்புரிவயாக” என்றான்.

 

அம்பிகை அருள் புரிந்தாள். பூசாரி எழுந்தான். அதுமுதல் ஆலயத்தில் பலியிடும் கொடுமையை அகற்றினான். நன்கு மழை பொழிந்தது. நாடு செழித்தது. ஆதலால் செய்தவினை செய்தவனை வந்தடையும்.

“அவ்வினைக்கு இவ்வினை” என உணர்க. யாருக்கும் எப்போதும் இடர் புரியாது, நலமே புரிந்து இறையறும் பெறுக.

 

வாரியார் 1

(கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1984 ஆம் ஆண்டில் எழுதியது)

-சுபம்-

 

 

மர்தனம் குணவர்தனம்: குணங்கள் பற்றிய சம்ஸ்கிருத பழமொழிகள் (Post No. 2479)

cleaning saints

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 11 January 2016

 

Post No. 2479

 

Time uploaded in London :– காலை  9-32

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

(தமிழ் மொழிபெயர்ப்பு:லண்டன் சுவாமிநாதன்)

1.குணேஷு க்ரியதாம் யத்ன: கிம் ஆடோபை: ப்ரயோஜனம் – சார்ங்கதர பத்ததி.

நற்குணங்களை அடைய முயற்சி செய்க. ஆடம்பரத்தால் என்ன பயன்?

 

2.குணேஷு யத்ன: புருஷேண கார்யோ ந கிஞ்சித்  அப்ராப்யதமம் குணானாம்- மிருச்சகடிகம்

மனிதர்கள் நற்குணங்களை அடைய முயற்சிசெய்ய வேண்டும். நல்ல குணங்களால் அடைய முடியாது என்ன?

 

3.குணேஷ்யேவ கர்தவ்ய: ப்ரயத்ன: புருஷை: சதா – மிருச்சகடிகம்

நற்குணங்களை அடைய எப்போதும் முயற்சி செய்க.

 

4.குணைர் உத்தமதாம்  யாந்தி ந உச்சைர் ஆசனம் ஸ்தித: – சாணக்ய நீதி, பஞ்ச தந்திரம்

குணங்களால்தான் உயர்ந்த நிலையை அடைய முடியும். உயர்ந்த ஆசனத்தால் அல்ல.

 

dalai's 80th BD in california

5.குணோ பூஷயதே ரூபம்- சாணக்ய நீதி

நற்குணங்களே ஒருவனுக்கு அழகு தரும்.

 

6.குணோ ஹி கௌரவஸ்தானம் ந ரூபம் ந தனம் ததா

குருதாம் நயந்தி ஹி குணா ச சம்ஹதி: – கிராதார்ஜுனீயம்

நற்குணங்கள் ஒருவனுக்கு பெருமை சேர்க்கும் (உயர்வு தரும்)

வெளித்தோற்றத்தால் அல்ல.

 

7.தத் ரூபம் யத்ர குணா: – காதா

நற்குணங்கள் எங்கோ, அங்கே அழகு (ஒளிரும்)

 

8.நம்ரந்தி குணினோ ஜனா: நம்ரந்தி பலினோ வ்ருக்ஷா:

பழுத்த பழங்கள் உடைய மரங்கள் தாழ்ந்து இருக்கும். நற்குணங்கள் உடையோர் அதுபோல பணிந்திருப்பர்.

 

9.நிர்குணஸ்ய ஹதம் ரூபம் – சாணக்ய நீதி

குணமில்லாத இடத்தில் அழகு பாழ்.

 

10.ந ஏகத்ர சர்வோ குண சந்நிபாத:

ஒரே இடத்தில் எல்லா குணங்களும் சேருவதில்லை.

 

11.பதம் ஹி சர்வத்ர குணைர் நிதீயதே – ரகுவம்சம்

ஒருவனுடைய நிலையை நிர்ணயிப்பது அவனது குணங்களே.

 

12.ப்ராயேன சாமக்ரயவிதௌ குணானாம் பராங்முகி விஸ்வஸ்ருஜ: ப்ரவ்ருத்தி:- குமார சம்பவம்

 

13.கடவுள் பெரும்பாலும், எல்லா குணங்களையும் ஒரே இடத்தில் வைக்காமல் பிரித்துவைக்கவே செய்கிறார்.

(ஒப்பிடுக: துர்கா, லெட்சுமி, சரஸ்வதி மூவரும் சேர்ந்து வசிப்பதில்லை)

 

14.மர்தனம் குணவர்தனம்சு.ர.பா. (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

நல்ல குணங்கள், தொடர்ந்து கடைபிடிப்பதால்தான், வளரும்.

(ஒப்பிடுக: சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்)

baba laddu

15.யத்ரா க்ருதிஸ் தத்ர குணா வசந்தி- சு.ர.பா.

எங்கு உடற்கட்டு இருக்கிறதோ அங்கே குணங்கள் இருக்கும்.

(ஒப்பிடுக: பலமுள்ளவனே ஆன்மாவை அறிவான்: உபநிஷத்)

 

16.யதா நாம ததா குண:

எப்படிப் பெயரோ அப்படி குணம் (பெயருக்கேற்ற குணம்)

 

17.யதி சந்தி குணா: பும்சாம் விகசந்த்யேவ தே ஸ்வயம் – சம்யோ

நற்குணங்கள் இருக்கும் மனிதர்கள், தாமாகவே உயர்வடைவர் ( குணங்களே ஒருவர் உயர உதவும்)

 

18.ரூபஸ்யாபரணம் குண: — சாணக்யநீதி

குணங்களே நல்ல அணிகலன்.

 

19.வசந்தி ஹி ப்ரேம்ணி குணா ந வஸ்துனி – கிராதார்ஜுனீயம்

அன்பில்தான் குணங்கள் இருக்கும்; பொருட்களில் அல்ல.

 

20.சத்ரோரபி குணா க்ராஹ்யா தோஷா வாச்யா குரோரபி – மஹாபாரதம்

எதிரிகளிடத்தில் நற்குணங்கள் இருந்தாலும் அவைகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

 

21.சத்ரோரபி சுகுணோ க்ரஹ்ய:- சாணக்யசூத்ரம்

சந்த: ஸ்வத:ப்ரகாசந்தே  குணா ந பரதோ நூணாம் –சு.ர.பா

நற்குணங்கள் தாமாகவே பிரகாசிக்கும்; பிறர் காட்டத் தேவையில்லை.

 

22.சுலபா ரம்யதா லோகே துர்லபம்ஹி குணார்ஜனம் – கிராதார்ஜுனீயம்

அழகானது மலிவாகக் கிடைக்கும்; நற்குணங்களோ கிடைப்பதரிது.

(தமிழ் மொழிபெயர்ப்பு:லண்டன் சுவாமிநாதன்)

 

 

 

Subham–

 

‘எல்லாம் நன்மைக்கே’- சுவாமி ராமதாஸ் சொன்ன கதை (Post No. 2474)

ramdas

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 9 January 2016

 

Post No. 2474

 

Time uploaded in London :– 12-06

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஒரு நாட்டில் ஒரு மன்னனிடம் மந்திரி ஒருவர் வேலை பார்த்தார். அவர் இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். எது நடந்தாலும் எல்லாம் , ‘இறைவன் கொடுத்த வரம்” என்று நினைப்பார். யாராவது வந்து “எனக்கு அந்தக் கஷ்டம், இந்தக் கஷ்டம்” என்று முறையிட்டாலோ,முனகினாலோ, “கவலைப் படாதே, எல்லாம் நன்மைக்கே, கடவுள் எதையும் யாருக்கும் காரணமின்றி தரமாட்டார்” என்று ஆறுதல் சொல்லுவார். இவ்வாறு இந்த ‘எல்லாம் நன்மைக்கே’ மந்திரியின் புகழ் திக்கெட்டும் பரவியது.

ramdas book

ஒரு நாள் அரசனும் மந்திரியும் வேட்டையாட காட்டுக்குச் சென்றனர். இருள் சூழும் வேலையில், அவர்கள் கூட வந்த பரிவாரம், வேறுதிசையில் போய்விட்டது. மந்திரியும் மன்னனும் தனித்து இருந்தனர். அரசனுக்கு ஒரே பசி. அமைச்சரிடம் சொல்லவே அவரும் ஒரு மரத்தில் பழங்கள் இருப்பதைப் பார்த்து அதைப் பறித்து மன்னைடம் கொடுத்தார்.

மன்னனோ பசி, அவசரத்தில் பழங்களை வெட்டும்போது ஒரு விரலையும் வெட்டிக்கொண்டு விட்டார். ரத்தம் குபுகுபு என்று வழிந்தோடியது. வலியில் துடித்தார். மந்திரியிடம் பொறுக்கமுடியாத வலி பற்றிச் சொல்லி கதறினார். மந்திரியோ, “மன்னரே! கவலைப் படாதீர்கள்; எல்லாம் நன்மைக்கே” என்றார்.

 

அரசனுக்கு அதி பயங்கர கோபம் வந்தது. “நான் துடியாய்த் துடிக்கிறேன். ஆறுதல் சொல்வதற்குப் பதில் எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய்” என்று சொல்லி மந்திரியை ஓங்கி ஒரு உதை விட்டு, இனிமேல் என்முகத்தில் முழிக்காமல் ஓடிவிடு என்றார். மந்திரியோ, அதற்கும்’ எல்லாம் நன்மைக்கே’ என்று காரணம் கற்பித்துவிட்டு அவர்முகத்தை திருப்பிக்கொண்டு, வேறு ஒரு மரத்தடியில் போய் அமர்ந்தார். மன்னன் தனது மேலாடையில் ஒரு ஓரத்தைக் கிழித்து கையில் விரல் துண்டித்த இடத்தில் ஒரு கட்டுப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார்.

 

 

ramdas2

கொஞ்ச நேரத்தில் அந்த வழியே இரண்டு தடியர்கள் வந்தனர். மன்னர்கள் மீது பாய்ந்து அவரைக் கட்டி, அலாக்காகத் தூக்கினர். அவரோ குய்யோ முறையோ என்று கத்தினார். தான் இந்நாட்டு மன்னர் என்றும், யாது காரணத்தாலவர்கள் இப்படிச் செய்கின்றனர் என்று ம் வினவினார். அந்த தடியர்களுக்கு மேலும் சந்தோஷம் வந்தது. உடனே சிரித்துக் கொண்டே சொன்னார்கள்: “நாங்கள் ஆண்டுதோறும் ஒரு ஆடவனை காளிதேவிக்கு உயிர்பலி தருவோம். இந்த தடவை மன்னே உயிர்ப்பலிக்கு கொடுக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியது. காளிதேவி எங்களுக்கு கூடுதல் அருள் பொழிவாள்”.

 

மன்னனுக்கு ஒரே துன்பம்! என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.

 

காளிதேவியின் பீடத்தில் அவனைக் கிடத்தி பூசாரியை அருவாளுடன் வர அழைத்தனர். அவரும் வந்தார். ஆடைகளையெல்லாம் ஒன்றொன்றாக உருவிவிட்டு வெட்டச் செல்லும் போது அந்தப் பூசாரி, மன்னனின் கையில் ஒரு கட்டு போடப் பட்டிருப்பதைப் பார்த்தான். அது என்னவென்று வினவினான். உடனே விரல் துண்டுப்பட்ட இடத்தை மன்னன் காட்டினான்.

 

“அடக் கடவுளே! முழு உடலிருக்கும் மனிதனைத் தான் காளிக்குப் பலி தரவேண்டும். இவனுக்கோ ஒரு அங்கம் பழுது. இவனை உடனே எடுத்துச் செல்லுங்கள். காளிதேவி கோபித்துக்கொள்வாள்” என்றார் பூசாரி. உடனே இரண்டு தடியர்களும் மன்னரை அலாக்காகத் தூக்கி பழைய இடத்திலேயே போட்டுவிட்டு போய்விட்டனர்.

 

மன்னனுக்கு மந்திரி சொன்னது நினைவுக்கு வந்தது: எல்லாம் நன்மைக்கே – என்று அமைச்சர் சொன்னாரே. கை விரல் வெட்டுப்பட்டதற்கு கோபப்பட்டு அவரை எட்டி உதைந்தேனே. கைவிரல் வெட்டுப்பாடாமல் முழு அங்கத்துடனிருந்தால் இவ்வளவு நேரம் காளிக்குப் பலி கொடுத்திருப்பார்களே என்று எண்ணி வருத்தப்பட்டார். மந்திரியின் பெயரை உரத்த குரலில் சொல்லி அழைத்துக் கொண்டே போனார்.

 

தொலைவில் மரத்தடியில் அமர்ந்திருந்த மந்திரி ஓடோடி வந்து மன்னா! என்ன வேண்டும்? ஏன் அழைத்தீர்கள்? என்றார். மன்னன் முழுக் கதையையும் சொல்லி மந்திரி சொன்னது உண்மைதான். கடவுள் கஷ்டத்தைக் கொடுத்தால் அதுவும் நன்மைக்கே என்றார். மந்திரியிடம் மன்னிப்பும் கோரினார்.

 

மந்திரி சொன்னார்: மன்னரே, மன்னிப்பு கேட்க வேண்டாம். நீங்கள் என்னை எட்டி உதைந்தபோது நானும் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லிவிட்டுப் போனேன். நீங்கள் என்னை விரட்டாமலிருந்தால், இவ்வளவு நேரம் அந்தத் தடியர்கள் நம்மிருவரையும் கொண்டுபோய் பூசாரியிடம் ஒப்படைத்திருப்பர். உமக்கு அங்கக் குறைவு இருந்ததால் என்னைத்தான் பலியாக்கி இருப்பர். நீங்கள் என்னை எட்டி உதைத்து விரட்டிவிட்டதும் இறைவன் செயலே. எல்லாம் நன்மைக்கே” என்று சொன்னார். பின்னர் இருவரும் காட்டிலிருந்து நாட்டுக்குப் புறப்பட்டனர்.

bhavan book

நீதி: ஏதேனும் துன்பம் நேரிட்டாலும், அது ஏதோ ஒரு நன்மைக்கே என்று ஆண்டவனை நம்பி வாழ வேண்டும்.

 

“நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு” (பாரதியார் பாடல் வரிகள்).

தமிழ் மொழி பெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன்

–சுபம்–

 

 

யாழ்ப்பாணத் தமிழறிஞர் செய்த “100 செயல்” அற்புதம்! (Post No. 2461)

IMG_0281

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

Date: 5 January 2016

 

Post No. 2461

 

Time uploaded in London :–  7-53 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தமிழறிஞர்கள் பலர் செயற்கரிய செயல்களைச் செய்துள்ளனர்.இவர்களில் குறிப்பிடத் தக்கவர் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்து மேலைப் புலோலி நா.கதிரைவேற்பிள்ளை (1871-1907) ஆவார். பல சீட்டுக் கவிகள், சிலேடைக் கவிதைகள், சித்திரக் கவிதைகள், எல்லாவற்றிற்கும் மேலாக முறையான தமிழ் அகராதி முதலியன இவர்தம் படைப்புகளாகும். இவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைக் கவனிக்கும் – அவதானிக்கும் – ஆற்றல் படைத்தவர். ஆகையால் இவரை சதாவதானி என்ற சிறப்புப் பட்டத்துடனேயே குறிப்பிடுவர்.

 

ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்தால் அவரை அஷ்டாவதானி (அஷ்ட=எட்டு) என்பர். பத்து செயல்களை ஒரே நேரத்தில் செய்தால் தசாவதானி (தச=பத்து) என்பர். நூறு செயல்களைச் செய்தால் சதாவதானி (சத = நூறு) எனபர். அஷ்ட, தச, சத என்பனவெல்லாம் வடமொழி எண்கள்.

 

தமிழ்கூறு நல்லுலகில் செய்குத் தம்பி பாவலர் என்பவற்கும் சதாவதானி என்ற அடைமொழி உண்டு. நா.கதிரைவேற்பிள்ளை செய்த அதிசயம் பலர் முன்னிலையில் நடந்து வெள்ளைக்கார துரைகளால் பாராட்டப்பட்டது. அவர் என்ன செய்தார், எங்கே செய்தார்?

 

கதிரைவேற்பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்தாலும் வசித்தது முழுதும் தமிழ்நாட்டில்தான். ஆறுமுக நாவலருக்குப் பின்னர் சைவத் திருமுறைகளின் பாதுகாவலனாக நின்றார்.

1908ஆம் ஆண்டில் பாலசுந்தர நாயகர் எழுதி வெளியிட்ட வாழ்க்கைச் சரித நூலில் பல சுவையான விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று:–

 

பிள்ளை அவர்கள், முதலில் மேலைப்புலோலி கந்தசாமி கோவிலில் நன்னூல் காண்டிகையுரை ஆசிரியர் வித்வான் அ.குமாரசாமிப் புலவர் தலைமையில் 18 அவதானங்களை செய்து முடித்தார்.

 

பின்னர் சென்னையில் லெட்சுமிவிலாச நாடகசாலையில் பால சரஸ்வதி ஞானானந்த சுவாமிகள் தலைமையில்,

 

வேலும் மயிலும் துணையென நவிலல்

இலாட சங்கிலி கழற்றல்

சிலேடைக் கட்டளைக் கலித்துறை, சிலேடை வெண்பா, நீரோட்டகம் முதலியன

6 இலக்கண விடை உபந்யாசம்

இரண்டறக் கலத்தல் உபந்யாசம்

பாரதச் செய்யுளுரை

இங்கிலீஷ் கண்டப் பத்திரிக்கை வருடந்தேதி, பிறந்த நாள், இலக்கினம், பிறந்த நட்சத்திரம் முதலியவை

எண் கணக்கில் கூட்டல் 1, கழித்தல் 1, பெருக்கல் முதலியவை

 

இவை எல்லாவற்றையும் அன்பர்களது மனம் குதூகலமுறுமாறு காட்டி முடித்து சதாவதானியென்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

 

இதற்குப் பின் ரெவரெண்ட் கிளேட்டன் துரையவர்கள் நீலகிரி குண்ணூரில் உத்தியோகம் கொடுத்தார்.

 

IMG_0280

 

 

 

ரெவெரெண்ட் கிளேட்டன் துரையவர்களால் மெயில் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட செய்தி:-

“தமிழ்ப் பாண்டித்யத்தின் அபிவிருத்தியி லூக்கமுடைய சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளைக்கு இம்மாதம் 25ஆம் தேதி குண்ணூரில் திடீரென்று நேர்ந்த மரணம் துக்கத்தையுண்டாக்கக்கூடியதே. அவரது வயது 36 ஆயினும் இச்சென்னையிலும், மதுரையிலும், தன் சுய நாடாகிய இலங்கையின் வடக்கிலும் தமிழ்க் கல்வியில் சிறந்தவர் என்ற கீர்த்தியைப் பெற்றிருக்கிறார். பூர்வீக பாஷையின் தத்துவ சாத்திரங்களில் பாண்டித்தியமும் மிக்க வைராக்கியமுடையவ ரென்றும் பிரசித்தியடைந்தவர். சின்னாளைக்கு முன் இச்சென்னையில், சதாவதானம் , (அதாவது நூறு விஷயங்களை ஏக காலத்தில் கவனமாய்ச் செய்தல்) ஆச்சரியமான பெரு ஞாபகத்தைக் காட்டினார். அக்காலத்திலங்கு வந்திருந்த வித்துவான்கள் முன்னிலையில் அபரிமிதமான வரிசைகளுடைய எண்களின் தொகைகளையும், மிகக் கஷ்டமான தமிழ்ச் செய்யுட்களைச் சொல்லியும், அநேகர் பிரமிக்கும்படியான கேள்விகட்குச் சிறிதும் தாமதமும், சந்தேகமில்லாதும், கலவரப்படாமலும் விடையிறுத்திய பின்னர்தான் சதாவதானியென்ற பெயரால் வித்வத்சிரோமணிகளால் அழைக்கப்பட்டார். அவர் அநேக நூல்களைச் செய்திருப்பவராயிருந்தாலும் அவற்றுள் மிக்க அருமையும் எவரும் தெரிந்துகொள்ளும்படியாய் வெளியாகியது தமிழ்ப் பேரகராதியே. தம்வேலைகளில் மிக்க ஊக்கமும் ஜாக்கிரதையுமுடையவர். அவர் வைதீக சைவராயிருந்தும் அந்நாட்க்குரிய வேலைகளின் பேரில் மிக்க கவனமுடையவர். அவர் பிறப்பு மிகச் சிறந்ததே.”

 

கதிரைவேற்பிள்ளை 1907 ஆம் ஆண்டில் நீலகிரியில் இறந்ததால் இந்தச் செய்தி 1907 ஆம் ஆண்டு மெயில் பத்திரிக்கையில் வந்திருக்க வேண்டும்.

 

கதிரைவேற் பிள்ளை இயற்றிய நூல்கள்:-

தமிழ்ப் பேரகராதி

அதிவீரராம பாண்டியனாரின் கூர்ம புராணத்துக்கு விளக்க உரை

பழநித் தல புராண விருத்தியுரை

சித்திரக் கவிகள்: கமலபந்தனம், கோபுர பந்தனம், ரத பந்தனம், இரட்டை நாக பந்தனம்

சிலேடை வெண்பா

யமகம் நிறைந்த கட்டளைக் கலித்துறை வெண்பா

கருவூர் மான்மியம் (மஹாத்மியம்)

சீட்டுக் கவிகள்:- ஏகாம்பரேஸ்வரர் கோவில் தர்மகர்த்தா கா. மு.சுப்பராயமுதலியருக்கு,

பாலவனம் ஜமீந்தாரும் மதிரைத் தமிழ் சங்க அக்கிராசனருமான ஸ்ரீமாந் பாண்டித்துரைத்தேவர் பெயரில் வாகைப்பாட்டு

தருமை ஆதீன திருக்கயிலாய பரம்பரை அம்பலவாண தேசிகருக்கு

சாமிநாத பண்டிதருக்கு

தெல்லியபதி கதிரேசன் பிள்ளைக்கு,

இராஜரெத்தினம் பிள்ளைக்கு எழுதிய சீட்டுக் கவிகள்

காஞ்சி கோவிதராஜ முதலியார்க்கு எழுதிய சீட்டுக் கவி இதோ :–

 

 

வாழ்க்கைக் குறிப்பு:-

தந்தை பெயர்: நாகப்ப பிள்ளை

 

மனைவியின் பெயர் – வடிவாம்பிகை (கோவிந்த பிள்ளையின் குமாரத்தி)

புதல்வி பெயர்- சிவஞானாம்பிகை

 

 

வள்ளலார் அன்பர்களுடன் மோதல்

பிள்ளைவாழ் காலத்தில் சைவத் திருமுறைகள் மட்டுமே அருட்பா, வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் பாடியதை திரு அருட்பா என்று சொல்லலாகாது, அது மருட்பா என்று ஒரு வேண்டாத சர்ச்சை நிலவியது. நா. கதிரவேற்பிள்ளை ஆறுமுக நாவலர் கட்சியிலிருந்ததால், வள்ளலார் கோஷ்டி அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டது. ஆனால் வழக்கு தள்ளுபடியாகிவிட்டது.

அஷ்டாவதானம்:

ஒரே சமயத்தில் எட்டு காரியங்களில் கவனம் செலுத்துகை. இலாடச் சங்கிலி சேர்ப்பு,  ஒருவிருவர் வினாவிற்குத்திரம்  (உத்திரம்=பதில், விடை), சொக்கட்டான், முதுகிலிட்ட பரல் எண்ணல், சதுரங்கம், புதுக்கவிதை கூறல்,  கண்ட பத்திரிகை, கணிதம் கூறல், குதிரையடி கூறல் முதலியன ( பக்கம் 115, அபிதான சிந்தாமணி)

 

கண்ணை மூடிக்கொண்டு செஸ் விளையாடி சாதனை செய்வோரும் அபார நினைவாற்றல் உடையவரே..

blindfold chess

மார்க் லாங் சாதனை!

வெளிநாடுகளில் பார்க்காமலேயே (ப்ளைண்ட் Fபோல்ட்) செஸ் விளையாடுவார்கள். செஸ்/சதுரங்கப் பலகையைப் பார்க்காமலேயே, திரும்பி உட்கார்ந்துகொண்டு காயை நகர்த்தச் சொல்லி வெற்றி பெறுவார்கள். பலர் ஒரே நேரத்தில் பல சதுரங்கவீரர்களுடன் விளையாடுவதும் உண்டு. மார்க் லாங் என்ற ஜெர்மானியர் கண்ணை மூடிக்கொண்டு 46 பேருடன் செஸ் விளையாடி சாதனை படைத்தார். ஆனால் ஆட்டங்கள் முடிய சில நாட்கள் பிடிக்கும்.

 

–சுபம்–

 

உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்! (Post No. 2460)

villi-bharatham

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 5 January 2016

 

Post No. 2460

 

Time uploaded in London :–  5-40 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

வில்லி பாரதம்

 

உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்!

ச.நாகராஜன்

 

வில்லியின் பாணி

 

கவிஞர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. தங்களின் சிற்ப்புத் தன்மைகளை அவர்கள் காட்டிக் கொண்டே போவர்.அதைக் கண்டுபிடிப்பதில் தான் ரஸிகனுக்கு உற்சாகம்.

நவில்தொறும் நூல் நயம் (குறள் 783) அப்போது தானே சித்திக்கும்!

 

வில்லிப்புத்தூராரின் பாணியை ரஸிகனாக உற்சாகத்துடன் பார்க்க ஆரம்பித்தால் ஏராளமான சிறப்பியல்புகளைக் கண்டு பிடித்து அநுபவிக்கலாம்.

 

ஒரு உவமையைச் சொல்லவே சில கவிஞர்கள் தவிப்பர். ஆனால் இரு அடிகளில் மூன்று உவமைகளை அடுக்கி நம்மை பிரமிக்க வைப்பார் வில்லிப்புத்தூரார்.

இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

villi 1

 

மின்னல், வேல், பொன் உவமைகள்

 

“மின்போல் நுடங்க விடைவேல் விழி நீர் ததும்பப்              பொன் போலுருவங் கருகும்படி பூமி போர்ப்ப              அன்போடு அவுணர் மடமாதர் அரற்றும் ஓதை என்போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும்

 

(நிவாதகவசர் காலகேயர் வதை சருக்கம் பாடல் எண் 102)

அர்ஜுனன் ராட்சஸர்களை வதம் செய்து குவிக்கிறான்.

இறந்து போன ராட்சஸர்களின் மனைவிமார்கள் அழுது புலம்புகின்றனர்.

 

 

மின் போல் நுடங்க இடை: அவர்களின் இடைக்கு மின்னலை உவமையாக்குகிறார் கவிஞர். ஒளியும் மெல்லியதாக இருத்தலும் பற்றி இடை மின்னலாக கூறப்படுகிறது.

 

விழிக்கு வேல் உவமை :- கூர்மை கொண்டது. காம நோயை உண்டாக்கி ஆடவரை வருத்துதலால் விழிக்கு வேல் உவமை.

உருவத்துக்குப் பொன் உவமை: நிறம் பொன் போல ஜொலிக்கிறது. பொன் கிடைத்தற்கு அருமையானது. ஆகவே அருமை மற்றும் நிறத்திற்குப் பொன் உவமை ஆனது.

மட மாதர் என்பதால் அழகும் பேதைமையும் கொண்ட பெண்டிர் என்பது உணர்த்தப்பட்டது.

 

அவர்கள் அழும் ஒசை எது போல் இருந்தது என்றால் இடி இடிக்கும் ஓசையைப் போல இருந்தது.

உவமைகளின் குவியல் எப்படி அமைகிறது!

இன்னொரு பாடல்!

 

மின் தாரை, வெண்ணிலா, மேகம் உவமைகள்

 

“மின் தாரை பட வெண்ணிலா வீசு மேகம் கொல் என வந்து முன் நின்றானை முகநோக்கி நீதிக்கொர் வடிவாம் மன் இவை கூறுவான்

 

உன் தாதை தமியனோடு உயவாமல் ஒரு வாசமலர் கொண்டிடச் சென்றான் என சிந்தை நொந்து அன்புடன் பின்னும் இவை செப்புவான்

 

புட்பயாத்திரைச் சருக்கத்தில் 130வது பாடல் இது.

வீமனுக்கு இடிம்பியிடம் பிறந்த புதல்வன் கடோத்கஜன். வீமன் தன்னைக் கலந்து ஆலோசியாது ஒரு புஷ்பத்தைக் கொண்டுவரச் சென்றதை கடோத்கஜனிடம் தர்மர் கூறுவதாக அமைந்த பாடல் இது.

 

 

மின் தாரை பட என்பதால்  கடோத்கஜனின் செம்பட்ட மயிர் மின் தாரை போல இருந்தது என்பது பெறப்படுகிறது.

 

வெள் நிலா வீசும் என்பதால் வெண்மையான கோர தந்தங்களை உடையவன் அவன் என்பது பெறப்பட்டது.

 

மேகம் கொல் என்பதால் கரிய பெரிய வடிவமான காளமேகமோ என்று கூறத் தகும் பெரிய வடிவை உடையவன்  அவன் என்பது பெறப்பட்டது.

 

கடோத்கஜனின் தோற்றம் ஒரு கணத்தில் நம் முன்னர் நிறுத்தப்படுகிறது, அடுக்கு உவமைகளால்!

 

அவனை நோக்கி, தர்மர், “உன் தந்தை என்னோடு ஆராயாமல் நறுமணம் கொண்ட மலர் ஒன்றைக் கொண்டு வருவதற்காகப் போய் விட்டான் என்று மனம் வருந்தி அன்புடன் கூறி விட்டு மீண்டும் கூறத் தொடங்குகிறான்” என்பதே பாடலின் பொருள்.

srimad_bhagavad_gita

 

கவிதை தரும் இன்பம்

 

ஒரு கவிதை என்பது சொற்களின் மூலமாக ஒரு காட்சியை நம் மனக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.

 

கவிதையின் ஓசை நயத்தால் அதைப் படிக்கும் போது செவிக்கு இன்பம்.

 

கவிதை நம் மனக் கண் முன் வருவதால் கண்ணுக்கு இன்பம்.

சிந்தையைக் கவர்தலால் ஐம்பொறிகளுக்கும் இன்பம்.

வில்லி பாரதத்தில் பல பாடல்களில் இப்படி உவமைகளை அடுக்கிக் கொண்டே போவதைக் கற்பதால் வரும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை!

 

வில்லியிடம் ஊறும் உவமைகளைப் படித்தால் கற்றனைத்தூறும் அறிவு!

 

*******

 

 

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! வசுதைவ குடும்பகம்!! (Post No. 2458)

best bharat mata

Written by London swaminathan

Date: 4 January 2016

 

Post No. 2456

 

Time uploaded in London :–  8-30 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

“எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர், வாழ்க!” (பாரதியார்)

barati stat3

இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனையுடைய நாடு பாரதம். இங்கு வாழ்ந்த சாது சந்யாசிகள், பெரியோர்கள், உத்தமர்கள், சத்யசந்தர்கள், உண்மை விளம்பிகள், ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள், மஹநீயர்கள், ஞானிகள் — 3500 ஆண்டுகளாக ஒரே கருத்தை வலியுறுத்துவது, படித்துப் படித்து இன்புறத்தக்கது.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா –

என்ற புறநானூற்று வரிகளை (புறம் 192) அறியாதோர் யாருமில்லை; கனியன் பூங்குன்றன் இக்கருத்தைச் சொல்லுவது போலவே வடமொழி வாணவர்களும் செப்பி மகிழ்வர். வசுதைவ குடும்பகம்= உலகம் ஒரே குடும்பம் என்பது அவர்கள் கண்ட உண்மை.

அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதஸாம்

உதராசரிதானாம் து வசுதைவ குடும்பகம்

—ஹிதோபதேசம், பஞ்ச தந்திரம்

பொருள்:- இது தன்னுடையது, அது பிறருடையது என்பது சின்ன புத்தியுடையோரின் செய்கையாகும்; நற்குணம் பொருந்தியோருக்கோவெனில் இந்த உலகமே ஒரு குடும்பம்.

kanchi best anbe sivam

இந்தக் கருத்து பஞ்சதந்திரத்திலும், ஹிதோபதேசத்திலும் வலியுறுத்தப்படுவதால் இதன் முக்கியம் மேலும் தெளிவாகிறது.

 

பண்டிதா: சமதர்சின:

ஆனால் இதற்கெல்லாம் மூலக் கருத்து கண்ணபிரான் சொன்ன பகவத்கீதையில் இருக்கிறது. ஞான பண்டிதர்களுக்கு நாயும் பசுவும், யானையும் ஒன்றுதான்! அந்தணர்களும் புலையர்களும் ஒன்றுதான். காக்கை, குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற பாரதியின் வரிகள் – அவர்களுடைய கருத்தைப் பிரதிபலிக்கிறது.

இதோ பகவத் கீதை ஸ்லோகம்:

வித்யா விநய ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி

சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சின:

(பகவத் கீதை 5-18)

வித்யா விநய ஸம்பன்னே = கல்வியும் அடக்கமும் நிறைந்த

ப்ராஹ்மணே = பிராமணனிடத்தும்

கவி ஹஸ்தினி = பசுவினிடத்தும், யானையினிடத்தும்

சுனி ச = நாயினிடத்தும்

ஏவ ச்வபாகே = அவ்வாறே நாயை உண்ணும் புலையனிடத்தும்

பண்டிதாஹா = ஆத்ம ஞானிகள்

ஸமதர்சினஹ = சமநோக்கு உடையவர்கள்.

baba closwe up

இதையே தாயுமானவரும்

எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும்  அவ்வுயிராய்

அங்கிருப்பது நீ யன்றோ பராபரமே – என்பார்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்……..

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் –972)

என்று வள்ளுவன் இதை இன்னும் அழகாகச் சொல்லுவான்.

பொருள்:– எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையுடையது; அங்கே வேறுபாடில்லை. செய்யும் தொழில்களால் – செயல்களினால் தான் வேறுபாடுகள்.

 

இது எவ்வளவு உண்மை; சிறு வயதில் எத்தனை கதைகள் கேட்டிருக்கிறோம்; ஒரு பெரிய பணக்காரனுக்கு இரண்டு பிள்ளைகள் அல்லது ஒரு ராஜாவுக்கு இரண்டு குமாரர்கள்; ஒருவர் உயர்ந்தார்; மற்றொருவர் தாழ்ந்தார் என்றும் அதற்கான காரணம் என்னவென்றும் விதவிதமாக கதைகள் உள்ளன. அவரவர் செய்தொழிலால்தான் இந்த வேற்றுமைகள். இந்தக் கருது வள்ளுவனுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பிருஹதாரண்யக உபநிஷத்திலுமுள்ளது (பிருஹத் = பெரிய, ஆரண்யக = காட்டு).

 

ந இஹ நானாவஸ்தி கிஞ்சன- ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்

பொருள்:-இந்த உலகில் உயிர்களிடத்தில் மட்டும் எந்தபேதமும் இல்லை.

சிறுவயதில் ஒரு கதை கேட்டிருப்போம்; உடலின் ஒவ்வொரு உறுப்பும் தான் தான் முக்கியமான வேலையைச் செய்வதாகச் சொல்லி தனகே முதல் மரியாதை வேண்டும் என்னும் கதை அது. தான் ரத்தத்தை எல்லா உறுப்புகளுக்கும் அனுப்பாவிடில் உடலே இயங்காது என்று இதயம் சொல்கிறது. நுரையீரலோ தான் ஆக்சிஜனைக் கொடுத்து, கரியமிலவாயுவை வெளியேற்றாவிடில் உடலில் நீலம் பாய்ந்து இறக்க நேரிடும் என்கிறது. மூளையோ தந்து உத்தரவுப்படியே நரம்புகள் செயல்படுகின்றன; ஒருவனுடைய மூளை இறந்துவிட்டால் இதயம் என்ன செய்ய இயலும்? என்று சொல்கிறது. இதே போல கை, கால், கண், மூக்கு, வாய், செவி, தோல் எல்லாம் சண்டையிடுகின்றன. ஆனால் இக்காலத்தில் ஒரு சிறுவனுக்குக் கூடத் தெரியும் உடலில் எல்லா உறுப்புகளும் முக்கியமானவை; ஒன்றில் குறைபாடு இருந்தாலும் அவன் உடலூனமுடையவனே என்று.

 

இதை ரிக்வேதமும் புருஷசூக்தத்தில் (10-8-90) அழகாகச் சொல்லும்; பிராமணன் என்பவன் சிந்திப்பவன்; க்ஷத்ரியன் என்பவன் தோள்வலியால் நாட்டையும் மக்களையும் காப்பவன்; வைஸ்யன் என்பவன் தொடை வலிமையால் வணிகம் செய்து காப்பான்; சூத்திரன் என்பவன் கால் வலிமையால் உழைத்துக் காப்பான் என்று.

ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத்,

பாஹூ ராஜன்ய க்ருத:

ஊரு ததஸ்ய யத் வைச்ய:

பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத

பொருள்: பிரம்மாவை தேவர்கள் பலியிட்டபோது அவருடைய முகம் பிராமணனாகவும், கைகள் க்ஷத்ரியனாகவும், தொடைகள் வைச்யனாகவும், பாதங்கள் சூத்ரனாகவும் ஆயின.

 

at_the_feet_of_god_medium

எப்படி ஒரு உறுப்பில்லாமல் உடல் நன்கு செயல்படாதோ அப்படியே இந்த நான்கு வர்கமும் எந்த நாட்டிலும், எப்போதுமிருக்கும்! ஆனால் பிறப்பின் அடிப்பையிலன்றி செய்தொழிலின் அடிப்படையில்.

பிற்காலத்தில் இது வேறுபட்டது. முன்காலத்தில் சேர,சோழ, பாண்டிய மன்னன் மகன்கள் தான் ராஜாவாக இருக்கமுடியும். இன்றும் பிரிட்டனில் ராஜா அல்லது ராணி மகன் தான் அரசுகட்டிலில் ஏற முடியும். இன்றும்  நார்வே, சுவீடன், மொனாகோ என்று ஏராளமான நாடுகளில் இந்த வழக்கமுளது.பிரிட்டனில் பிரபுக்கள் மகன்தான் பிரபுவாகிறான். பரம்பரை மூலமே பிரபுக்கள் சபையில் இடம் பெறமுடியும். இந்திராகாந்தி, ராஜமான்யத்தை ஒழித்தபின்னர்தான் ஒவ்வொரு நாடாக அதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. கனடா, ஆஸ்திரேலியா போன்ற பலநாட்டு மக்கள் இன்றும் பிரிட்டிஷ் ராணியை ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது பிறப்பே, பதவியை முடிவு செய்கிறது! அதில் யாரும் தவறு கானவில்லை. ஒவ்வொரு தடவைக் கருத்துக் கணிப்பு நடக்கையிலும் ராஜா ராணிக்குப் பெரும்பானமை மக்கள் அதாரவு இருக்கிறது!

எதுவுமே மக்கள் பார்க்கும் பார்வையிலும், ராஜ குடும்பத்தினரின் செயல்பாட்டிலும்தான் இருக்கிறது. ஆக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது கூட காலத்துக்கு காலம், நாட்டுக்கு நாடு வேறு படும். ஆனால் இந்திய ஆன்ம ஞானிகளுக்கு எல்லாம் எப்போதும் ஒன்றே.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் (திருமூலர்)

 

894_Bhagwat_Gita_thumb[13]

–சுபம்–

 

நகைச் சுவைக் கதை! மனைவியாற் பட்டபாடு! (Post No. 2452) Date: 2 January 2016 Post No. 2452 Time uploaded in London :– 14-40 ( Thanks for the Pictures ) DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. முன்னர் வெளியிட்ட கதையின் தொடர்ச்சிக் கதை:– இவ்வாறு நான் துபாஷ் வேலையில் தகல்பாஜி அன்னாத்தைகளுடன் தமாஷாயிருக்கும்போது, எனது குரு என்னைப் பார்க்க வந்தார். முன்னரே எனக்கும், அவருக்கும் ஒரு சபதமுண்டல்லவா? ஆகையால் அவர் வந்தவுடன் மெதுவாய்க் கொல்லைப்புஅம் போய், என் மனைவி நாறவல்லியை நயந்து, அடிபணிந்து, “அம்மணீ! பரதேவதா! உனக்குப் புண்ணியமுண்டே; ப்ருஷார்த்தமுண்டே; இகமுண்டே, பரமுண்டே, எல்லாமுண்டே. இன்று என் குரு வந்திருக்கிறார். ஓம், பாக்யவதி, ஐம்பது வசவு உன்னை வைவேன். நீ பொறுத்துக்கொள்ள வேண்டும்” – என்று வேண்டினேன். உடனே ஜகஜண்டி மனமிரங்கி, ஒரு வசவு ஜாஸ்தியாப் போனாலும் வட்டியும் முதலுமாய் வசூல் பண்ணிவிடுவேனென்றாள். நானும் சாப்பிட்டு முடிவதற்குள் ஐம்பது வசவு ஆகாதென்று மனம் தேறி உள்ளே வந்து, என் குரு முன்னிலயில் நின்று, “ ஜலமேண்டி தூக்கவில்லை, லவண்டி, பருப்பேண்டி கடையவில்லை பத்ரகாளி, பெருக்காமலிருக்கிறாயே பெருச்சாளி, தலைமயிர் ஏன் அவிழ்ந்திருக்கிறது தடிமுண்டே” என்று பிரண்டையின் மேல் வண்டிக்காலுருண்டதுபோல், மனங்கொண்டது மாளிகையாய் வைதேன். அவளும் கணக்கெண்ணிக்கொண்டு வந்தாள். எனது குருவும் எனக்கு நல்ல பெண்டாட்டி வாய்த்திருக்கிறாளென்று உள்ளமகிழ்ந்தார். சமையல் ஆயிற்று. சாப்பாட்டிற்கு உகார்ந்தோம்.என் சம்சாரம், ரசம் ஒரு சட்டியிலெடுத்துவது வார்க்கவந்தாள்; வசது ஐம்பதும் தீர்ந்துவிட்டது எனக்குத் தெரியாது. குருவின் இலையில் ரசத்தை விடவும், ஒரு துளி சிதறி அவர்துடையில் விழ அவர் ‘உஸ்’ அப்பாடா, என்றார். உடனே நான் கோபித்து, “கொட்டினாளா பரத்தை” என்று திட்டினேன். அதற்கவள், என்னை முறைத்துப் பார்த்து ‘ஆமடாபிலே, வெள்ளான்பிலே’ என்று கூறி என் தலையில் சட்டியைப் போட்டுக் கரண்டிக்காம்பாலடித்து, “வெட்கங்கெட்ட வெங்கம், ஐம்பது வசவுக்கு மேல் பொறுக்கமாட்டெனென்று சொல்லவில்லையோடா; ஆலி பூதமே! பின்னழலாம். முன்னே ரசச் சட்டிக்காசை கீழே வை” – என்றாள். அப்போது நான் ரசமெல்லாம் மேலே ஒழுகிக் கழுத்தில் சட்டிவாய் மாட்டிக் கன்றிச் சிவந்து திகுதிகுவென்றெரிய,’இஞ்சி தின்ற குரங்கு போல்’ விழித்தேன்.எனது குருவோ பயந்து நடுங்கிக் கொண்டு, “வீணாயுடைத்தது வேணதுண்டு என் தலையில் இந்தப் பூணாரம்பூண்ட புதுமைதனைக் கண்டதில்லை” –என்று கூறிக்கொண்டு சிட்டாய்ப் பறந்துவிட்டார். –சுபம்–

Angry Wife in the Elevator(1)

Date: 2 January 2016

 

Post No. 2452

 

Time uploaded in London :–  14-40

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

முன்னர் வெளியிட்ட கதையின் தொடர்ச்சிக் கதை:–

இவ்வாறு நான் துபாஷ் வேலையில் தகல்பாஜி அன்னாத்தைகளுடன் தமாஷாயிருக்கும்போது, எனது குரு என்னைப் பார்க்க வந்தார். முன்னரே எனக்கும், அவருக்கும் ஒரு சபதமுண்டல்லவா? ஆகையால் அவர் வந்தவுடன் மெதுவாய்க் கொல்லைப்புஅம் போய், என் மனைவி நாறவல்லியை நயந்து, அடிபணிந்து, “அம்மணீ! பரதேவதா! உனக்குப் புண்ணியமுண்டே; ப்ருஷார்த்தமுண்டே; இகமுண்டே, பரமுண்டே, எல்லாமுண்டே. இன்று என் குரு வந்திருக்கிறார். ஓம், பாக்யவதி, ஐம்பது வசவு உன்னை வைவேன். நீ பொறுத்துக்கொள்ள வேண்டும்” – என்று வேண்டினேன். உடனே ஜகஜண்டி மனமிரங்கி, ஒரு வசவு ஜாஸ்தியாப் போனாலும் வட்டியும் முதலுமாய் வசூல் பண்ணிவிடுவேனென்றாள்.

 

நானும் சாப்பிட்டு முடிவதற்குள் ஐம்பது வசவு ஆகாதென்று மனம் தேறி உள்ளே வந்து, என் குரு முன்னிலயில் நின்று, “ ஜலமேண்டி தூக்கவில்லை, லவண்டி, பருப்பேண்டி கடையவில்லை பத்ரகாளி, பெருக்காமலிருக்கிறாயே பெருச்சாளி,  தலைமயிர் ஏன் அவிழ்ந்திருக்கிறது தடிமுண்டே” என்று பிரண்டையின் மேல் வண்டிக்காலுருண்டதுபோல், மனங்கொண்டது மாளிகையாய் வைதேன். அவளும் கணக்கெண்ணிக்கொண்டு வந்தாள். எனது குருவும் எனக்கு நல்ல பெண்டாட்டி வாய்த்திருக்கிறாளென்று உள்ளமகிழ்ந்தார். சமையல் ஆயிற்று.

 

சாப்பாட்டிற்கு உகார்ந்தோம்.என் சம்சாரம், ரசம் ஒரு சட்டியிலெடுத்துவது வார்க்கவந்தாள்; வசது ஐம்பதும் தீர்ந்துவிட்டது எனக்குத் தெரியாது. குருவின் இலையில் ரசத்தை விடவும், ஒரு துளி சிதறி அவர்துடையில் விழ அவர் ‘உஸ்’ அப்பாடா, என்றார். உடனே நான் கோபித்து, “கொட்டினாளா பரத்தை” என்று திட்டினேன். அதற்கவள், என்னை முறைத்துப் பார்த்து ‘ஆமடாபிலே, வெள்ளான்பிலே’ என்று கூறி என் தலையில் சட்டியைப் போட்டுக் கரண்டிக்காம்பாலடித்து, “வெட்கங்கெட்ட வெங்கம், ஐம்பது வசவுக்கு மேல் பொறுக்கமாட்டெனென்று சொல்லவில்லையோடா; ஆலி பூதமே! பின்னழலாம். முன்னே ரசச் சட்டிக்காசை கீழே வை” – என்றாள்.

Angry_Wife_Cha

அப்போது நான் ரசமெல்லாம் மேலே ஒழுகிக் கழுத்தில் சட்டிவாய் மாட்டிக் கன்றிச் சிவந்து திகுதிகுவென்றெரிய,’இஞ்சி தின்ற குரங்கு போல்’ விழித்தேன்.எனது குருவோ பயந்து நடுங்கிக் கொண்டு,

“வீணாயுடைத்தது வேணதுண்டு என் தலையில் இந்தப்

பூணாரம்பூண்ட புதுமைதனைக் கண்டதில்லை”

–என்று கூறிக்கொண்டு சிட்டாய்ப் பறந்துவிட்டார்.

–சுபம்–

‘அன்பென்று கொட்டு முரசே!’– புத்தாண்டு சிந்தனைகள்! (Post No. 2448)

IMG_3382

Written by London swaminathan

 

Date: 1 January 2016

 

Post No. 2448

 

Time uploaded in London :–  9-31 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாரதி பாடல்களில் மந்திர சக்தி இருக்கிறது!

காரணம்?

சதாசர்வ காலமும் “மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டுமென்று” அவர் கலைமகளை வேண்டி நின்றார். பாரதி பாட்டில் எனக்குப் பிடித்த வரிகள் எது என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவிக்கிறேன். எல்லா வரிகளிலும் பாஸ்ட்டிவ் எனர்ஜி= ‘ஆக்க சக்தி’ பொங்கிப் பரிமளிக்கிறது.

‘ஒளிபடைத்த கண்ணினாய் வா, வா’ என்ற வரியா? ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!’ என்ற வரியா? ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற வரியா? அல்லது ‘எல்லாரும் அமர நிலை எய்தும் நிலையை இந்தியா உலகிற்களிக்கும்’ என்ற வரியா? அல்லது ‘தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்துவிடுவோம்’ என்ற வரியா?, ‘இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்’ என்ற வரியா?, ‘கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்’ – என்ற வரியா – என்று என்னால் முடிவு செய்ய முடியவில்லை.

 

நூற்றுக் கணக்கான மந்திரங்களை நமக்களித்த பாரதி, மேலும் ஒரு அருமையான சொற்றொடரைத் தந்துள்ளார். “அன்புதன்னில் செழித்திடும் வையம்”!

 

இந்த உலகம் வளம் பெற மழை வேண்டாம், உரம் வேண்டாம். ஆனால் அன்பு என்று ஒன்று இருந்துவிட்டால் தானாக மாதம் மும்மாரி மழை பெய்யும். நல்லறம், நல்லாட்சி நிலவும் இடங்களில் பயிர் செய்யாமலேயே தானியம் தானாக விளையுமாம்! இதை வள்ளுவனும் காளிதாசனும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டனர். புல்வாயும் (மான்), புலிப்போத்தும் ஒரு துறையில் நீருண்ணுமாம். இதையும் கம்பனும் காளிதாசனும் சொல்லிவிட்டனர்.

 

அன்பு பற்றி பாரதி வேறு என்ன சொன்னார்?

 

முரசு கொட்டுங்கள்!

அன்பென்று கொட்டு முரசே! – மக்கள்

அத்தனை பேரும் நிகராம்.

இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு

யாவரும் ஒன்றென்று கொண்டால்.

 

ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே!

நன்றென்று கொட்டு முரசே! – இந்த

நாநில மாந்தருக்கெல்லாம்.

 

IMG_3326

அன்பே சிவம்!

அன்பு சிவம் உலகத் துயர் யாவையும்

அன்பினிற் போகுமென்றே- இங்கு

முன்பு மொழிந்துலகாண்டதோர் புத்தன்

மொழி எங்கள் அன்னை மொழி

 

மஹாகளியின் புகழ்

அன்பு வடிவாகி நிற்பள் துன்பமெலாம் அவள் இழைப்பள்

ஆக்கம் நீக்கம் யாவும் அவள் செய்கை – இதை

ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை

 

பாப்பாவுக்கு அன்பு ‘அட்வைஸ்’!

அன்பு மிகுந்த தெய்வம் உண்டு – துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

 

உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்

உண்மையென்று தனறிதல் வேணும்

 

புலியிடம் அன்பு! (ஞானிகளுக்கு அட்வைஸ்)

தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு

சிந்தையிற் போற்றிடுவாய் – நன்னெஞ்சே

அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

அவளைக் கும்பிடுவாய் – நன்னெஞ்சே

 

 

சிவசக்தி

அன்புறு சோதியென்பார் – சிலர்

ஆரிருட் காளியென்று உனைப் புகழ்வார்;

 

 

விநாயகர் நான்மணி மாலை

பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

விளங்குக: துன்பமும், மிடிமையும், நோவும்,

சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்

இன்புற்று வாழ்க!

 

வாழ்க திலகன் நாமம்

அன்பெனும் தேன் ஊறித் ததும்பும்

புதுமலர் அவன் பேர்

 

ஜாதீய கீதம் (பாரத அன்னை பற்றி)

அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை

மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ;

தோளிடைவன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ

SURAT CHATURTHI

முரசு

சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு

தன்னில் செழித்திடும் வையம்;

ஆதரவுற்றிங்கு வாழ்வோம்- தொழில்

ஆயிரம் மாண்புறச் செய்வோம்

 

அன்பு குறித்து பாரதி பாடியது இத்தனைதான் என்று எண்ணிவிடாதீர்.  அவன் பாடல்களில் அன்பு என்ற சொல் இல்லாத இடங்களிலும் அன்பு ஊற்றெடுத்துப் பாய்வதைக் காணலாம்.

 

-சுபம்-

 

விகடன் பள்ளியிற் படித்த விநோதம் (Post No. 2441)

IMG_9805 (2)

Compiled  by London swaminathan

Date: 30 December 2015

 

Post No. 2441

 

Time uploaded in London :– காலை 8-58

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

விநோத விகட சிந்தாமணி- என்ற பழைய நூலிலிருந்து; (நூல் கொடுத்துதவியர்- ச.சீனிவாசன், சென்னை).

 

பழைய தமிழ்நடை; பழைய நகைச்சுவை!!

 

“ஐயா! நான் பள்ளியிற் வாசித்த வைபவத்தைக் கூறுகிறேன் கேளும். நான் பிறந்தது வெயிலடிச்சான்பட்டி. என் தகப்பனாருக்கு நான் ஒருவனே ஏகபுத்திரன். எங்கள் ஜாதியோ துடைதட்டி வெள்ளாளர். என் தகப்பனார் சுத்த கர்நாடகம். ஒருநாள் என் தகப்பன் வழக்கம்போல் அதிகாலையிலெழுந்து ஆற்றில் ஸ்நானம் செய்துவிட்டுக் கரையில் வந்து வேஷ்டி கட்டிக்கொள்ள மடிசஞ்சியைப் பார்க்க, எவனோ அப்பிக்கொண்டு போய்விட்டான். அங்கு தோட்டக்காரனின் வெள்ளை நாயொன்று படுத்திருந்தது.

மையிருட்டாயிருந்தமையாலும்,கண்பார்வை மத்தியமாதலாலும் மடிசஞ்சியென்றெண்ணி நாயைப் பலமாய்த் தூக்கினார். அப்போது வயிரவர் தீர விசாரித்துவிட்டார். சிலநாளைக்கெல்லாம் அவர் வெறிநாய் கடித்த கிறுக்கால் வலி பொறுக்கமாட்டாமல் நாய் போல் ஊளையிட்டே இறந்தார்.

 

அதன்பின் என் தாய் என்னைப் பள்ளியில் வைக்கத் தொடங்கினாள். நான், “ஆனகுலத்திற் பிறந்து ஆடுமாடு மேய்க்காமல் ஓலைவாரிக் கழுதையாய்ப் போகிறதா?” என்றெண்ணிப் படிப்பும் வேண்டாம், பிடிப்பும் வேண்டாம்” என்றேன். அது என் தாயாருக்கு மனம் பொறாமல் நான்கு ஐந்து புளியமரங்களும், பத்துப் பதினைந்து வீடுகளுமுள்ள பெரியபட்டணமாகிய ஆடுசாபட்டியில் ஓர் உபாத்தியரிடம் கொண்டுபோய் என்னை ஒப்புவித்தார். நான் அங்கேயே உபாத்தியாயர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தேன்.

 

என் வாத்தியார் சம்சாரமோ வெகு வக்கணைக்காரி. அவள் அழகோ சொல்லவேண்டியதில்லை; வர்ணிக்கத்தான் வேண்டும்

 

(சிந்து)

“இளிச்ச பல்லுக்காரி

இடிபோல் சொல்லுக்காரி

வெளிச்ச மூஞ்சிக்காரி

வெட்கங்கெட்ட நாரி

டொக்கு கன்னக்காரி

டக்குக் கண்ணுக்காரி

ஈன நடைக்காரி

ஆனைக் கழற்காரி

IMG_9805 (3)

இப்பேற்பட்ட அற்புதம் வாய்ந்து சுப்ரதீபமாய் விளங்கும் வல்லாளகண்டி என்பவள் அனுதினமும் உபாத்தியாயர் தலையில் ஒரு சட்டி அல்லது ஒரு பானை உருட்டமலிருக்கமாள். அப்படி சட்டிப்பனைகளை அவர் தலையில் உருட்டும்போது நான் பசுமூத்திரம் குடித்த காளைபோல் பல்லை யிளித்துக்கொண்டிருப்பேன். அப்போதவர், “அடே பையா! இவளைக் காட்டிலும் பட்டிமுண்டையாய் உனக்கு வாய்க்கவேணும். அப்போது இளிக்கமாட்டாய் என்பார். இப்படியிருக்க ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் இறைத்துவிடவேண்டுமென்று எனது வாத்தியார் மனைவி என்னை ஏவினார். அப்போது,

 

நெடுமால் திருமுருகா

நித்த நித்தமிந்தெழவா

வாத்தியாரும் சாகாரோ

வயிற்றெரிச்சல் தீராதா”

என்று ஓயாமல் கடவுளைப் பிரார்த்திக்கொண்டிருக்கும்போது, ‘போதாக்குறைக்கு பொன்னியம்மன் குறை’ என்பதுபோல வாத்திச்சியும் மோட்டுத் தவளைபோற் கட்டளையிடவே நான் கிணற்றண்டை சென்று ஒரு கூர்மையான கல்லொன்றெடுத்து அந்தத் தோண்டியை ஆயிரம் பொத்தலாக்கி ஒரு குடம் தண்ணீர் எடுத்துவந்தேன். அதற்கவள், ‘அடிமாண்டு போக’, கரியாய்ப் போக என்று தனது வசவு அரிச்சுவடியை வரிசையாயொப்பிவித்தாள்.

மற்றொரு நாள் அவள் நெல்லுக் குத்திக்கொண்டிருக்கையில் என்னையும் ஒரு உலக்கை எடுத்து வந்து குந்தாணியில் குத்தும்படி சொன்னாள். நான் இதுதான் சமயமென்று  என் பலமெல்லாம் சேர்த்து அவள் கைவிரல் நசுங்கும்படி ஒரு போடு போட்டேன். அம்மாடி, அப்பாடி, நான் சாகலாச்சு, போகாச்சு என்று அவள் தாய் தந்தை பாட்டன் பூட்டன் இறந்த துக்கத்தையெல்லாம் எண்ணி ஒப்பாரி வைத்தாள். பின்னர் வாத்தியார் வந்து சமாதானம் பண்ணப்பட்ட பாடு ‘மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது’ போலாயிற்று.

 

வேறொரு நாள் குரு என்னைப் பார்த்து, வெந்நீர் போடும்படி சொன்னார். ஆகட்டும் குருபராக்கென்று வெகு வணக்கத்துடனும், விரைவுடனும், வாத்தியார் பாட்டன் பூட்டென்களெல்லாம் அருமையாய்க் கைபாடுபட்ட மூளை பிறள, எழுத்தாணி முனைதேய வறட்டு வறட்டென்று எழுதிய  ஏட்டுச் சுவடிகளாகிய பாகவத, பாரத இதிஹாச புராணங்களையெல்லாம் தூக்கிவந்து அடுப்பில் உருவியும், உருவாமலும் போட்டு வெந்நீர் காய வைத்துக் குருவை வணக்கத்துடன் ஸ்நானம் செய்ய அழைத்தேன்.

 

குருவும் முப்பத்திரண்டு பற்கள் தெரியும்படி தன் மனைவியைக் கூப்பிட்டு, பார்த்தாயடி! சீஷப் பிள்ளை விரைவில் வெந்நீர் போட்டுவிட்டான். நீ வெந்நீர் போட ஊரடங்கிவிடும் என்று சொல்லி வெந்நீர் ஸ்நானஞ் செய்து, மடி வஸ்திரம் தரித்துப் பலகைமீதமர்ந்து பாராயணஞ் செய்ய ராமாயணம் கொண்டுவா” என்று தன் மனைவியையேவ அவள் பரணெல்லாம் தேடியும் ஒரு ஏட்டுத் துணுக்குங்கூட கிடைக்கவில்லை. அப்போது பரண்மீது அந்த அம்மாள் கையில் ஒரு கொள்ளித்தேளிருந்து கொட்டிவிடவே அலறியடித்துக்கொண்டு, “ஏட்டுக் கட்டையும் காணோம், சுடுகாட்டையும் காணோம். உமது ராமாயணம் பாழாய்ப்ப் போக, நீர் அடிமாண்டு போக” என்று வைய ஆரம்பித்தாள். உடனே வாத்தியார் எழுந்து, துஷ்டை, பிரிஷ்டை என்று வைதுகொண்டு தேடிப் பார்த்தார். அது அங்கே ஏனிருக்கும்?

 

பின்பு என்னைப் பார்த்து, சிஷ்யா! ஏடுகளெல்லாமெங்கே? என்றார். உடனே பரமானந்த சீஷனான நான், “ஒரு அண்டா வெந்நீர்  ஐந்து நிமிஷத்திலெப்படிக் காய்ந்ததென்றெண்ணுகிறீர் என்றேன். அதற்கவர், சபாஷ்! பிள்ளையாண்டான், கெட்டிக்கரனென்று மெச்சி என்னை ஊருக்கனுப்பிவிட்டார். பின்பு சிறிது நாளைக்கெல்லாம் எனக்கு விவாகம் நடந்தேறி, துபாஷ் வேலியிலிருந்தேன். அப்போது மனைவியால் பட்ட பாட்டைக் கேளும்.

 

சூத்ரதாரர்:- நண்பா! உன் அன்பார்ந்த கதைகளைக் கேட்கக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது. விளம்புவாய்

–சுபம்—

நகைச் சுவைக் கதைகள் தொடரும்………………………………………….

 

பழைய ஜோக்! குப்பா சாஸ்திரியும், சுப்பா தீக்ஷிதரும் ஏகாதசி விரதம் (Post No. 2429)

er uzavan 3

Written by London swaminathan

Date: 26 December 2015

 

Post No. 2429

 

Time uploaded in London :– 12-17

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஒருநாள் கும்பபுரம் குப்பாசாஸ்திரிகள், ஏகாதசி அன்று வெற்றிலை பாக்குப் புகையிலை போட்டுக்கொண்டு மிதுனபுரம் சுப்பாதீக்ஷிதர் வீட்டுக்கு வர, அவர் குப்பா சாஸ்திரிகளைப் பார்த்து, “ஏனையா ஏகாதசியன்று வெற்றிலைபாக்கு போட்டு வந்தீர்?” என்றார்.

குப்பா:- ஐயா! நன்றாய்ச் சொன்னீர். பிரம்மபத்ரமாகிய புகயிலை போட்டுக் கொண்டதால் வெற்றிலை போடுவதில் தோஷமில்லை.

சுப்பா:- பிராமணன் புகையிலை போடலாமா?

குப்பா: பழையது சாப்பிட்ட எனக்கு புகையிலையின்றி சரியாய் வராது.

சுப்பா:- அடடா! ஏகாதசியன்று பழையது சாப்பிடலாமா?

குப்பா:- பழையது சப்பிடாவிட்டால் ஏர் பிடித்து உழ முடியாதே!

சுப்பா:- சரி, சரி; பிராமணன் ஏர் பிடித்து உழுவது எந்தவூர் வழக்கம்?

குப்பா: என்னையன்றி வில்வக்கட்டை கலப்பையைக் கொண்டு உழ வேறொருவராலும் சாத்தியமாகாது.

சுப்பா:- இதென்ன அநியாயம்! வில்வ மரத்தை வெட்டக் கூடாதே. அதனால் செய்த கலப்பையைப் பிடித்து பிராமணன் உழலாமா?

குப்பா:- ஓய்! அதன் மகிமை உமக்குத் தெரியாது. வில்வக் கட்டையைக் கலப்பைக்குப் போடாவிடில் காராம்பசு ஏருக்கு வராது.

சுப்பா: கிருஷ்ண, கிருஷ்ண; மகா பாவம். காராம்பசுவைக் கொண்டு உழலாமாங்காணும்?

குப்பா:- நல்ல நீதி சொல்ல வந்தீர். அப்படிச் செய்யாவிடில் துளசி வனம் அழியாதுங்காணும்.

சுப்பா:- ராம, ராம; அட சண்டாளா! மகாவிஷ்ணுவுக்கு அர்ப்பணிக்க எல்லாரும் துளசி வனம் வைக்கிறார்கள் நீரதை அழிக்க வேணும் என்கிறீர்.

 

opium

குப்பா:- போங்காணும் போம்; துளசி வனம் அழியாவிட்டால் கஞ்சாப் பயிராவது எப்படி?

சுப்பா:- ஹரி, ஹரி! ஏன் ஓய் என்ன இது! பிராமணனுக்குக் கஞ்சாப் பயிர் எதற்க்குங்காணும்?

குப்பா:- கஞ்சாப் பயிர் செய்யாவிடில் நான் சாப்பிடுவதற்குக் கடையில் வாங்கிக் கட்டுபடியாகாது இல்லியோ?

சுப்பா:- ஓய், இது என்ன அநியாயம்? பிராமணன் கஞ்சா சாப்பிடலாமாங்காணும்?

குப்பா:- ஓய் கூச்சல் போடாதேயும். வம்ச பரம்பரையாய் நடந்து வருகிற வழக்கத்தை விடக்கூடாதுகாணும். மேலும் அது சாப்பிடாவிட்டால் நான் சாப்பிடுகிற மாம்சம் எப்படி ஜீரணமாகும்?

சுப்பா:- சரி, சரி, உம்மோடு பேசுவதுகூட மகபாவம்! நீர் பிராமணனே இல்லை! (என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்கொண்டார்)

குப்பா:- ஏன்? நீர் பிராமணன் அல்ல என்றால் ஆகாதோ? (என்று சொல்லி நடையைக் கட்டினார்).

–சுபம்—