மார்ச் 2016 காலண்டர் (மன்மத ஆண்டு மாசி/பங்குனி) Post No.2593

siva's 12 shrines

சூரியன் பற்றிய 31 அருமையான சம்ஸ்கிருத,தமிழ் பழமொழிகள்

Compiled by london swaminathan

Date: 2 March,2016

 

Post No. 2593

 

Time uploaded in London :–  9-20 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

முக்கிய நாட்கள்:- 7 சிவராத்திரி, 9 சூர்ய கிரஹணம், 14 காரடையான் நோன்பு, 22- ஹோலி/காமன் பண்டிகை, 23 பங்குனி உத்தரம், 25 புனித வெள்ளி, மேலை நாடுகளில் ஈஸ்டர் விடுமுறை 25 முதல் 28 முடிய.

 

முகூர்த்த நாட்கள்:- 6, 10, 11,18, 25

அமாவாசை:- 8/9

பௌர்ணமி:- 22/23

ஏகாதசி:- 5, 19

 

sivaya nama

மார்ச் 1 செவ்வாய்க்கிழமை

ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத்

உடல்நலம் பெற சூரியனை வழிபடுக

மார்ச் 2 புதன்கிழமை

அம்போஜினீ லோசன முத்ரணம்  கிம் பானு அவனஸ்தங்கமிதே கரோதி-மிருச்சகடிகம் 10-58

சூரியன் மறையாத போது தாமரை மலர் கண்களை மூடுமா? (குவியுமா)

மார்ச் 3 வியாழக்கிழமை

இந்தனம் அப்கதக்த அபி அக்னி: த்விஷா நாத்யேதி பூஷணம் –சிசுபாலவதம் 2-23

பெரும் விறகுக் குவியலைக் கொண்டு ஜகஜ்ஜோதியாக எரியவிட்டாலும், சூரிய ஒளியை விஞ்ச முடியாது.

மார்ச் 4 வெள்ளிக்கிழமை

சூரியனைக் கண்ட பனி போல

சூரியனைக் கண்ட இருள் போல

மார்ச் 5 சனிக்கிழமை

செங்கதிர் முன்னே வெண்கதிர் அடங்கினது போல

 

 

மார்ச் 6 ஞாயிற்றுக்கிழமை

அப்ராத் விமுக்தஸ்ய திவாகரஸ்ய மரீசய: தீக்ஷ்ணதரா பவந்தி- சுபாஷிதரதனாவளி

மேகமில்லாத நாட்களில் வெய்யில் அதிகம் சுடும்.

மார்ச் 7 திங்கள் கிழமை

உதயந்தம் சூர்யம் சர்வே ப்ரணமந்தி

உதய சூரியனை எல்லோரும் வணங்குகின்றனர்.

மார்ச் 8 செவ்வாய்க்கிழமை

சூரியனைக் கண்ட தாமரை போல

மார்ச் 9 புதன்கிழமை

உதிதே ஹி சஹஸ்ராம்சௌ ந கத்யோதோ ந சந்த்ரமா – சுபாஷித ரத்னகண்டமஞ்சுஷா

சூரியன் உதித்து விட்டால், மின்மினிப்பூச்சியுமில்லை, சந்திரனுமில்லை!

மார்ச் 10 வியாழக்கிழமை

சூரியனுக்கு முன் மின்மினி  போல

 

siva girl

மார்ச் 11 வெள்ளிக்கிழமை

சூரியனைப் பார்த்து நாய் குரைத்தாற் போல

மார்ச் 12 சனிக்கிழமை

சூர்யாபாயே ந கலு கமலம்  புஷ்யதி ஸ்வாமபிக்யாம் – மேகதூதம் 2-18

சூர்யன் அஸ்தமித்தபின்னர், தாமரையின் அழகு அதிகரிக்காது

மார்ச் 13 ஞாயிற்றுக்கிழமை

சூர்யே தபதி ஆவரணாய வ்ருஷ்டே: கல்பேத லோகஸ்ய கதம் தமிஸ்ரா – ரகுவம்சம் 5-13

சூரியன் பிரகாசிக்கையில், அடர்ந்த மேகத்தினால் வந்த இருள், நம் பார்வையை மறைக்க இயலுமா?

மார்ச் 14 திங்கள் கிழமை

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரிநாடன் திகிரிபோல், பொன்கோட்டு

மேரு வலந்திரிதலான் (சிலப்பதிகாரம்)

மார்ச் 15 செவ்வாய்க்கிழமை

ஆனால் ஆதிவாரம், ஆகாவிட்டால் சோமவாரம் (ஆதிவாரம்=ஞாயிற்றுக்கிழமை)

holi,ht

 

மார்ச் 16 புதன்கிழமை

வர்ஷணம் அனுசரதி சூர்யா தப:

மழைக்குப்பின், சூரியனின் ஆட்சிதான்.

மார்ச் 17 வியாழக்கிழமை

சஹஸ்ரகுணம் உத்ஸ்ரஷ்டும்

ஆதத்தே ஹி ரஸம் ரவி: – ரகுவம்சம் 1-18

கதிரவன் (கடல்) நீரை உறிஞ்சுவது

ஆயிரம் மடங்காகத் திருப்பித் தருவதற்குத்தான்!

மார்ச் 18 வெள்ளிக்கிழமை

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு

ஓ அற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி- (திருமுருகாற்றுப்படை).

மார்ச் 19 சனிக்கிழமை

சூர்யஸ்ய கிம்  தீப ப்ரதர்சனேன – கஹாவத்ரத்னாகர்

சூரியனைக் காட்ட விளக்கு தேவையா?

மார்ச் 20 ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை ஒரு பொழுது, நண்டு வேண்டாம், சாறு விடு.

 

dj-06-holi-02

 

மார்ச் 21 திங்கள் கிழமை

ரஜஸா ரவிர்  அபிபூயதே நஹி – கஹாவத்ரத்னாகர்

தூசிப்புயலால், சூரியனை வெல்லமுடியாது.

மார்ச் 22 செவ்வாய்க்கிழமை

சூரியன் எழுமுன் காரியம் ஆடு.

மார்ச் 23 புதன்கிழமை

சூரியனைக் கிரகணம் பிடித்தது போல, என்னைச் சனியன் பிடித்தான்.

மார்ச் 24 வியாழக்கிழமை

ருதே ரவே: க்ஷாலயிதும் க்ஷமேத க:

க்ஷபாதமஸ்காண்டமலீமசம் நப: – சிசுபாலவதம் 1-38

இருள் சூழ்ந்த ஆகாயத்தைச் சுத்தம் செய்து, விளக்கம்பெறச் செய்ய சூரியனைத் தவிர யாருக்கு இயலும்?

மார்ச் 25 வெள்ளிக்கிழமை

ஞாயிற்றுக்கிழமையை மறைப்பாரில்லை

pasupathinath,nepal

 

மார்ச் 26 சனிக்கிழமை

தாரா நைவ ப்ரகாசந்தே  பானௌ பாதீஹ பாஸ்வரே – கஹாவத்ரத்னாகர்

சூரியன் இருக்கையில் விண்மீன்கள் கண்சிமிட்டாது

மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை

க: ப்ரதீபோ ரவே: புர:?- கதா சரித் சாகரம்

சூரியனுக்கு முன் விளக்கு எதற்கு!!!

மார்ச் 28 திங்கள் கிழமை

தமஸ்தபதி கர்மாம்சௌ கதம் ஆவிர்பவிஷ்யதி – சாகுந்தலம் 5-14

சூரியனிருக்கையில் இருள் ஏது?

மார்ச் 29 செவ்வாய்க்கிழமை

க: சக்த: சூர்யம் ஹஸ்தேனாச்சாதயிதும்?

–அவிமாரக

சூரியனைக் கையால் மறைக்கமுடியுமா?

 

holi-hand

மார்ச் 30 புதன்கிழமை

சூரியவிளக்கு இருக்க சுடர் விளக்கு எதற்கு?

மார்ச் 31 வியாழக்கிழமை

சூரியன் முன்னே சந்திரன் தோன்றினது போலே

(சம்ஸ்கிருதப் பழமொழிகளின் தமிழாக்கம் – லண்டன் சுவாமிநாதன்)

–சுபம்–

 

நன்கொடை/ தானம் பற்றிய பழமொழிகள், பாடல்கள் (Post No.2584)

donation new 2

Date: 29 February 2016

 

Post No. 2584

 

Time uploaded in London :– 7-57 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

for more articles and pictures.

 

 

donate

“தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்க்கக்கூடாது” – என்பது தமிழ்ப் பழமொழி.

ஒருவர் தானமாகக் கொடுத்த பொருளை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்து, விலை மதிப்பு போடக்கூடாது. அதை தானம் என்றே கருத வேண்டும். இது போல ஒரு போட்டியில் வெற்றிபெற்றபோது பரிசின் விலை மதிப்பைப் பார்க்கக்கூடாது. முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்பதுதான் முக்கியம். அதற்குப் பரிசாகக் கொடுத்த பேனா, பென்சில் ஆகியவற்றின் விலைமதிப்பைப் பார்ப்பது தவறு.

இந்தப் பழமொழியின் அறிவியல் பின்னணி என்ன?

பல்லும், மாடும்

ஒரு மாட்டை விலைக்கு வாங்குவோர் முதலின் அதன் வயதையும், உடல் ஆரோக்கியத்தைப் பார்க்க, அதன் பல்லைப் பிடித்துப் பார்ப்பர்.

 

மொத்தம் (மாடுகளில்) 32 நிரந்தர பற்கள் இருக்கின்றன.

வயது நிர்ணயம்

மாடுகளில் மேற்கண்டவாறு எண்ணிக்கையில் பற்கள் இருந்தாலும், அவற்றின் கீழ்த்தாடையில் உள்ள 4 ஜோடி முன் வெட்டு பற்களை வைத்து தான் அதன் வயது நிர்ணயிக்கப்படுகிறது. மாடுகளின் வயதை கண்டுபிடிக்க, அவற்றின் கீழ்த்தாடையின் உதடுகளை சிறிது விலக்கினால் கீழ்த்தாடை பற்கள் தெளிவாக தெரியும். இந்த பற்களின் எண்ணிக்கையை கொண்டு வயதை நிர்ணயிக்கலாம்.

டாக்டர்.இரா.உமாராணி, இணை பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை.

-தினமணி

 

இந்தச் செய்தி பழமொழியின் உண்மைப் பொருளை விளக்குகிறது!

donation

தனக்கும் மிஞ்சித்தான் தான தர்மம்

இந்தப் பழமொழிக்கு இரண்டு விதமாகப் பொருள் சொல்லுவர். தனக்குப் போக எஞ்சியதைத்தான், தானமாகக் கொடுக்க வேண்டும் என்பது ஒரு விளக்கம். தன்னுடைய சக்திக்கும் மீறி ஒருவர் அளிப்பதே தான, தர்மம்; வெறும் ஒப்புக்குக் கொஞ்சம் கொடுப்பது தானம், தர்மம் – என்னும் பெரிய சொற்களின் பொருளுடன் பொருந்தா- என்பது மற்றொரு விளக்கம்.

 

தானம் பற்றிய 2 ஸ்லோகங்கள்

தானதூஷணம்

அநாதரோ விலம்பஸ்ச வைமுயம் சாப்ரியம் வச:

பஸ்சாத் பவதி ஸந்தாபோ தான தூஷண பஞ்சகம்.

 

 

ஐந்து வகைத் தானங்கள் குறையுடைய தானம்; அவையாவன:

அநாதர- மரியாதை இல்லாமல் வழங்கும் தானம்

விலம்ப: – தமதமாகக் கொடுக்கும் தானம்

வைமுக – முக்கியம் கொடுக்காமல் இருப்பது

அப்ரியம்வச: – திட்டிக் கொண்டே கொடுப்பது

பஸ்சாத் சந்தாப- கொடுத்த பின்னர் வருந்துவது

 

தானபூஷணம்

தானத்தின் இலக்கணம்

 

அநந்தஸ்ரூணி ரோமானி பஹுமானம் ப்ரியம் வச:

கிஞ்சானுமோதனம் தானம் தான் பூஷண பஞ்சகம்.

 

 

ஆநந்தஸ்ரூணி – தானம் கொடுத்தபின் ஆநந்தக் கண்ணீர்

ரோமாணி – மயிர்க்கூச்சம் எடுத்தல்

பஹுமானம் – மரியாதை காட்டல்

ப்ரியம் வச: – பிரியமான சொற்களைச் செப்பல்

அனுமோதனம் – தானத்தை மறுக்காமல் ஏற்றல்

new donation

திருவள்ளுவரின் பத்து கட்டளைகள்!

தானம் பற்றி திருவள்ளுவர் பத்து கட்டளைகள் இடுகிறார். வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் – என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் அவர் கீதை, ராமாயணம் முதலிய நூல்களில் வரும் “தானம்-தவம்”  என்ற அடுக்குத் தொடரை அப்படியே சில குறள்களில் பயன்படுத்துவதைக் காட்டினேன். அதாவது இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை ஒன்றே! அது ஈகை என்னும் அதிகாரத்தில் வரும் பத்து குறட்பாக்களிலும் எதிரொலிப்பதைக் காணலாம்:-

1.ஏழைகளுக்குக் கொடுப்பதே தானம் (வறியார்க்கொன்றீவதே ஈகை)

2.சொர்க்கம் கிடைக்காவிட்டாலும் கொடு (மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று)

3.நல்ல குடிப் பிறந்தவன் முகக் குறிப்பைப் பார்த்தே தானம் கொடுப்பான் (ஈதல், குலனுடையான் கண்ணே உள)

4.இரந்தவர் இன்முகம் காணும் அளவு (கேட்டவன் முகம் மலரும்வரை) கொடு!

5.பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்:—பசியைப் பொறுக்கும் துறவிகள் கூட, பசியை ஆற்றும் இல்லறத்தானுக்குப் பின்னரே இடம்பெறுவர்.

6.அழிபசி தீர்த்தல் பொருள் வைப்புழி; ஒருவனுடைய பசியைத் தீர்த்தல், வருக்காலத்துக்குப் பணத்தை சேமிப்பதை ஒக்கும்.

7.பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது:- பகுத்துண்டு பல்லுயிரைக் கவனிப்போனை, பசி எண்ணும் நோய் அண்டாது.

8.ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல்:–ஏழைகளுக்குக் கொடுக்கும் இன்பம், கஞ்சர்களுக்குத் தெரியாது

9.தாமே தமியர் உணல்:- ஒருவன் தான் மட்டுமே உண்பானாகில் அது பிச்சை எடுப்பதைவிடக் கொடியது.

  1. இனிது அதுவும் ஈதல் இயையாக் கடை:— இறப்பது கொடிது! தானம் செய்யமுடியாவிட்டால், இறப்பதும் இனிது.

-சுபம்–

 

ரோமானிய சக்ரவர்த்தியின் ‘வில்லன்’ சிரிப்பு! (Post No 2579)

caligula

Compiled  by London swaminathan

 

Date: 27 February 2016

 

Post No. 2579

 

Time uploaded in London :– 6-01  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 

 

ரோமானிய சக்ரவர்த்தியின் ‘வில்லன்’ சிரிப்பு!

ரோமானிய அரசன் காலிகுலா, ஒரு விருந்து கொடுத்தான். நிறைய அதிகரிகளும், அமமைச்சர்களும் அரச குலத்தினரும் அமர்ந்திருந்தனர். திடீரென்று காலிகுலா வெடிச் சிரிப்பு சிரித்தார். அது வில்லன் சிரிப்பாக மாறியது. நிற்கவே இல்லை. எல்லோரும் சேர்ந்து சிரித்தனர். எதற்காக? சிரிக்காவிட்டால் அவர்கள் தலையே போய்விடும். அப்பேற்பட்ட ஹிரண்யகசிபு அவன்!

 

கொஞ்ச நேரம் ஆயிற்று, சிரித்து சிரித்துக் களைப்பானவுடன் சிம்மாசனத்தில் ‘அப்பாடா’ என்று சாய்ந்தார். அருகிலுள்ள, ஒருவர் மட்டும் பய பக்தியுடன் மன்னர் சிரித்ததன் காரணத்தை வினவினார்.

 

“ஒன்றுமில்லை, நான் மட்டும் தலை அசைத்திருந்தால், உங்கள் குரல்வளைகளெல்லாம் வெட்டப்பட்டு நீங்கள் அனைவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்திருப்பீர்கள்” – என்று தன்னுடைய பருத்த கையினால் அங்கு வந்திருந்த அத்தனை பேரையும் சுட்டிக்காட்டினான். கேட்டவருக்கு ரத்தமே உறைந்து போயிருக்கும்.

 

இதை பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்துள்ளனர்!

 

Xxxx

 

george 5

குழந்தாய்! என்ன படிக்கிறாய்?

இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், ஒரு நாள் அரண்மனைக்குள் சுற்றிவரும்போது, பேரப்பிள்ளை மிகவும் உன்னிப்பாக, கவனமாக எதையோ படித்துக்கொண்டிருந்தான்.

மன்னர், அவனிடம் போனார். அன்பாக தலையை வருடினார். அது என்ன? இவ்வளவு ஆர்வத்தோடு படிக்கிறாயே! என்ன விஷயம் என்று உசாவினார்.

பேரன் சொன்னான்:

“ஒன்றுமில்லை, தாத்தா! பீட்டர் வார்பெக் பற்றிப் படித்தேன்.

 

மன்னர் கேட்டார், “ பீட்டர்…. வார்பெக்……… அது யாரு எனக்கே தெரியாதே!

பேரன் சொன்னான்,

“தாத்தா, அவன் ஒரு மன்னரின் மகன் போல நடித்தான். ஆனால் உண்மையில் அவன் அப்படிப்பட்ட பேர்வழி இல்லை; மிகவும் நல்ல ஒரு குடும்பத்தில் பிறந்தவன்!”

 

மன்னருக்கு ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது!

 

Xxx

red-clock

இரண்டு கடிகாரம்!

 

ஐந்தாம் சார்லஸ் மன்னன், அரச பதவியைத் துறந்து ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் அமைதியாகக் காலம் கழித்து வந்தார். ஆனால் பொழுது போவதற்காக கடிகாரங்களைச் சேகரிப்பது, சுத்தம் செய்வது, அவைகளைச் செப்பனிடுவது ஆகியவற்றைச் செய்துவந்தார். ஒரு முறை இரண்டு சரியாக ஓடாத கடிகாரங்களைச் செப்பனிட்டு, இரண்டிலும் சரியான நேரத்தைக் காட்ட முயன்றார். ஆனால் இரண்டு கடிகாரங்களும் ஒத்துழைக்க மறுத்தன.

இரண்டு கடிகாரங்கள் ஒரே மாதிரி நேரம் காட்டாது – என்ற ஆங்கிலப் பொன்மொழிக்கேற்ப அவை இரண்டும் தனக்கு இஷ்டப்பட்ட நேரங்களைக் காட்டின.

 

உடனே அருகில் நின்ற உதவியாளரிடம், மன்னர் சொன்னார், “ என்ன மடமை! இரண்டு கடிகாரங்களைக்கூட ஒன்றாக ஓடச் செய்யமுடியாத நான், ஆட்சி செய்த காலத்தில் ஆயிரக் கணக்கானோரை ஒரே மாதிரி நினைக்கவும், செயல்படவும் வேண்டுமென்று  எதிர்பார்த்தேனே!” – என்றார்.

 

Xxx

 

disraeli stamp

மஹாராணியை மயக்கிய பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமராக இருந்த டிஸ்ரேலி என்பவர், விக்டோரியா மஹாராணியின் நன்மதிப்பை பெற்றிருந்தார். எல்லோருக்கும் வியப்பு. எப்படி ஒரு பிரதமர், ஒரு மஹாராணியிடம் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்று. அவரிடமே இதற்கான காரணத்தையும் கேட்டுவிட்டனர்.

அவர் சொன்னார், “ அட, மற்ற அரசியல்வாதிகள் எல்லாம், அவரை மஹாராணியாக நினைத்து, பயபக்தியுடன், அரசு செயல்பாடுபற்றி மட்டும், இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு வந்து விடுவர். நான் அவரும் ஒரு பெண்மணிதானே என்று கருதி பெண்களுக்குப் பிடித்தமான விஷயங்களைப் பேசுவேன்; அது மட்டுமல்ல அவர் என்ன சொன்னாலும் ஆமாம்சாமி போடுவேன், எதையும் மறுத்துரைக்க மாட்டேன். அவர் பேசும் விஷயங்களை மறந்துகூட விடுவேன்” – என்றார். (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: லண்டன் சுவாமிநாதன்)

-சுபம்-

தலைகீழாகக் காற்றில் நடந்த பெண்ணைக் காப்பாற்றிய நீதிபதி! (Post No.2576)

penmani

Compiled  by London swaminathan

 

Date: 26 February 2016

 

Post No. 2576

 

Time uploaded in London :– 8-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 

IMG_4887 (2)

ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: லண்டன் சுவாமிநாதன்

 

மேலை நாடுகளில் கிறிஸ்தவ மதத்தை நம்பாமல், வேறு நம்பிக்கை கொண்டவர்களை சூன்யக்காரி (Witch விட்ச்) என்று சொல்லி உயிரோடு தீயில் எரித்துவிடுவார்கள். ஐரோப்பா முழுவதும் இப்படி எரிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கும் அதிகம் என்று ஒரு புத்தகம் கூறுகிறது. இப்படி உயிருடன் எரிக்கப்பட்ட பிரான்ஸ் தேசத்து இளம்பெண் ஜோன் ஆf ஆர்க் பற்றி உலகமே அறியும்.

 

இது போன்ற ஒரு வழக்கு லார்ட் மான்ஸ்பீல்டு (Lord Mansfield) முன்னால் விசாரணைக்கு வந்தது. அப்பெண்ணைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவள் இங்கிலாந்தில் பிறந்தவள். வெளிநாட்டில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அவளோ நம்மையும் உயிரோடு எரிக்கப்போகிறார்கள் என்று எண்ணி நடுங்கிக் கொண்டிருந்தாள். ஏனெனில் ஊரே ஒன்று கூடி இப்படி முத்திரை குத்தி லட்சக்கணக்கான பேரை எரித்துள்ளனர்.

 

முதலில் நீதிபதி எதிர்தரப்பு வாதத்தைக் கேட்டார்: இந்தப் பெண் காற்றில் நடக்கிறாள்; அதுவும் கால்கள் மேல்புறமும், கைகள் பூமிக்கு அருகிலுமுள்ளன. அதை நாங்கள் கண்ணால் கண்டோம் என்று பலரும் கூறினர்.

 

எல்லோரும் சாட்சியம் அளித்த பின்னர் அவர் அமைதியாகத் தீர்ப்பு கூறினார்: நீங்கள் இத்தனை பேர் சொல்லும்போது அதை நான் நம்பாமலிருக்க முடியாது. அவள் தலைகீழாக காற்றில் நடந்தது உண்மை என்றே எடுத்துக்கொள்வேன். ஆனால் அவளும் உங்களைப் போலவும், என்னைப்போலவும், இங்கிலாந்தில் பிறந்து இங்கு வந்திருக்கிறார். எனக்குத் தெரிந்தவரை தலைகீழாகக் கால்களால் நடப்பதும், காற்றில் பறப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை. ஏனெனில் இங்கிலாந்து சட்டத்தில் இது ஒரு குற்றம் என்று சொல்லும் எந்தச் சட்டமும் இல்லை. ஆகையால் இவரை நான் சூன்யக்காரி என்று கருத சட்டம் இடம் தராததால், இவரை விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்புகிறேன்.

அந்த அப்பாவிப் பெண்ணுக்கு உயிர் வந்தது!

Xxx

மகளே உன் சமத்து!

ஒரு மாஜிஸ்டிரேட்டுகு தர்ம சங்கடமான நிலை. ஏனெனில் அவருடைய சொந்த மகளே குற்றவாளிக்கூண்டில் நிற்கிறார். சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்த போது அதைப் பொருட்படுத்தாது, காரில் சிட்டாகப் பறந்தவுடன் போலீஸார் சிக்கெனப் பிடித்தனர்.

 

“குற்றவாளியே! இன்று நான் உனக்கு அளிக்கும் தண்டனை உன்னைப் பாதிப்பதற்கும் மேலாக என்னைத்தான் பாதிக்கப் போகிறது .உனக்கு பத்து டாலர் அபராதம் – என்று சொல்லிவிட்டு, மாஜிஸ்டிரேட், தன் பாக்கெட்டில் கையை விட்டு, பத்து டாலரை எடுத்து கோர்ட் அதிகாரிகளிடம் கொடுத்தார். மகளுக்காக தானே அபராதத்தைக் கட்டினார்!

Xxx

 

1-jeffries1000

அயோக்கியன் யார்?

ஜட்ஜ் ஜெப்ரீஸ் (Judge Jeffries) என்பவர் நீதிபதிகளில் மிகவும் கியாதி (புகழ்) பெற்றவர். ஒருமுறை நீதி மன்றத்தில் ஒரு வழக்கில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசுகையில் தன் கையில் இருந்த பிரம்பை நீட்டிக்கொண்டே பேசினார்.

“இதோ இந்தப் பிரம்பின் ஒரு முனையில் ஒரு அயோக்கியன் நிற்கிறான்”.

 

இப்படி அவர் கூறுகையில் அப்பாவிக் குற்றவாளிக்கு நியாயமான சந்தேகம் வந்துவிட்டது.

“பிரம்பின் எந்த முனையில் அந்த அயோக்கியன் இருக்கிறான்?” என்று நிதிபதியைக் கேட்டுவிட்டான்.

(வக்கீல்களுக்கு அடக்கமுடியாத சிரிப்பு வந்திருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?)

 

இதே நீதிபதி ஒருமுறை மற்றொரு குற்றவாளியை நீ பெரிய அயோக்கியன் என்று சொன்னார்.

அவன் இடைமறித்து,

“நீதிபதி ஸார், அ(வ்வ)ளவுக்கு நான் அயோக்கியன் இல்லை—என்றான்.

 

என்ன சொன்னாய்? என்றர் நீதிபதி.

“அவ்வளவுக்கு நான் பெரிய அயோக்கியன் இல்லை, நீதிபதி ஸார்”—என்றான்.

“அப்படி முறையாக வார்த்தைகளை அடுக்கு” – என்று புத்திமதி கூறினார்.

(கோர்ட்டில் ‘கொல்’லெனும் சிரிப்பு)

–சுபம்–

ஆசிரியரைப் பழிவாங்கிய நீதிபதி! Post No. 2573

judges with hammer coloring sheet

Compiled  by London swaminathan

 

Date: 25 February 2016

 

Post No. 2573

 

Time uploaded in London :–காலை 8-04 மணி

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 

 

அமெரிக்காவில் ஒரு நகரில் நடந்த நிகழ்ச்சி இது. ஒரு பள்ளிக்கூட ஆசிரியை, சிக்னலில் சிவப்பு விளக்கு இருந்தபோதிலும், காரை ஓட்டிச் சென்றார். போலீசார் பிடித்து கோர்ட்டுக்குக் கொண்டுபோனார்கள்.

 

நீதிபதிக்கு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த இளம் ஆசிரியை, மிகவும் உரிமையுடன், “ கனம் நீதிபதி அவர்களே! நான் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. உடனே பள்ளிக்குச் சென்று மாணவிகளுக்குப் பாடம் நடத்த வேண்டும். ஆகையால் எனது வழக்கை உடனே பைசல் செய்யவேண்டும் என்றாள்.

 

பள்ளிக்குட ஆசிரியை என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்திலேயே நீதிபதியின் கண்கள் பளிச்சிட்டன. வாயோ ஒரு ஏளனப் புன்னகைஅயைச் சிந்தியது!

“என்ன சொன்னாய்? நீ ஒரு ஆசிரியையா? இவ்வளவு காலமாக யாராவது ஒர் வாத்தியார் அகப்படமாட்டாரா என்று காத்திருந்தேன். அதோ அந்த மூலையில் ஒரு மேஜை இருக்கிறதே; அதில் போய் உட்கார்.

“நான் (சிக்னல்) சிவப்பு விளக்கை மீறிச் சென்றேன்; அது தவறுதான்” – என்று 500 முறை (இம்பொசிஸன்) எழுதிக்கொண்டு வா. அப்புறம் தீர்ப்பு சொல்கிறேன் என்றார்.

 

இதற்குப் பெயர், ஆங்கிலத்தில் , ஸ்வீட் ரிவெஞ்ச்!

 

Xxx

ஒரு புதிய வக்கீல்; கோர்ட்டுக்கு வந்தார். நீதிபதி முன்னிலையில் நின்றார். கட்சிக்காரர், குற்றவாளிக் கூண்டில் நின்றார். வழக்கறிஞருக்கு வாழ்க்கையிலிதுதான் முதல் வழக்கு. உடல் நடுங்கியது. நாவில் பேச்சே வரவில்லை; திக்கித் திணறி,

“ கனம் நீதிபதி அவர்களே! எனது வாடிக்கையாளரின் துரதிருஷ்டம்…….

 

“ கனம் நீதிபதி அவர்களே! எனது வாடிக்கையாளரின் துரதிருஷ்டம்…….

 

“ கனம் நீதிபதி அவர்களே! எனது வாடிக்கையாளரின் துரதிருஷ்டம்…….

 

—என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

நீதிபதி சொன்னார்:

“ தொடர்ந்து பேசுங்கள். இதுவரை நீங்கள் சொன்னதை கோர்ட் அப்படியே நம்புகிறது!”

என்றார்.(கோர்ட்டில் பலத்த சிரிப்பு)

வாடிக்கையாளரின் துரதிருஷ்டம் — அனுபவமில்லாத, புதிய வக்கீலிடம் கேஸ் சிக்கிக்கொண்டது.

xxxx

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்

விஸ்வ பாவனா ( யாதும் ஊரே! யாவரும் கேளிர்) (Post No. 2557)

IMG_2704

 

Written by London swaminathan

 

Date: 20 February 2016

 

Post No. 2557

 

Time uploaded in London :–  6-56 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 

For 2500 more articles and research papers.

 

IMG_3384

சம்ஸ்க்ருத பழமொழிகள், பொன்மொழிகள்

தமிழ் மொழிபெயர்ப்பு; லண்டன் சுவாமிநாதன்

 

அநாஸ்ரயா ந சோபந்தே பண்டிதா வனிதா லதா – கதாசரித்சாகரம்

பெண்களும், பூங்கொடிகளும் எப்படி பற்றுக்கோடில்லாமல் சோபிக்கமாட்டார்களோ, அப்படியே பண்டிதர்களும் அவர்களை ஆதரிப்போர் இல்லாவிடில் சோபிக்க மாட்டார்கள்/ சிறப்படையமாட்டார்கள் (அதாவது பெண்கள், அறிஞர்கள், பூங்கொடிகளுக்கு ஆதரவு/ கொழுகொம்பு தேவை)

தொல்காப்பியனுக்கு ஒரு நிலந்தரு திருவில்பாண்டியன், கம்பனுக்கு ஒரு சடையப்ப வள்ளல், அருணகிரிநாதருக்கு ஒரு பிரபுடதேவமஹராயன், காளிதாசனுக்கு ஒரு போஜன், சேக்கிழாருக்கு ஒரு சோழமன்னன், தெனாலிராமனுக்கு ஒரு கிருஷ்ணதேவராயன், பீர்பலுக்கு ஒரு அக்பர்– இவ்வாறு ஒவ்வொருவரும் சிறப்படைய ஒருவர் தேவை).

Xxx

 

உபாயம் சிந்தயேத் ப்ராக்ஞஸ்ததா உபாயம் ச சிந்தயேத் – ஹிதோபதேசம்—பஞ்சதந்திரம்

அறிஞன் உபாயத்தைச் சிந்திக்க வேண்டும்- அவ்வாறே அபாயத்தையும் சிந்திக்க வேண்டும்.

எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவதென்பது இழுக்கு (குறள்)

ஒரு உதாரணம்: –சக்ரவியூஹத்தில் நுழையக் கற்றுக் கொண்ட அபிமன்யூ அதிலிருந்து வெளிவரக் கற்றுக் கொள்ளாததால் இறக்க நேரிட்டது.

Xxx

சபாரத்னம் வித்வான் –  பிரசங்காபரணம்

அவைகழகு அறிஞர்கள்!

விக்ரமாதித்தன் சபையை நவரத்னங்கள் என்றழைக்கப்பட்ட ஒன்பது அறிஞர்கள் அலங்கரித்தனர். இதே போல கிருஷ்ணதேவராயர் சபையை அஷ்ட திக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் அலங்கரித்தனர்.

IMG_4432

உதாத்த பாவனா= உயர்ந்த நோக்கு

கோபத்தை சாந்தியால்/கோபமின்மையால் வெல் – தம்மபதம்

 

Xxx

எல்லா உயிர்களிடத்தும் சொல், செயல், சிந்தனை ஆகிய மூன்றிலும் அன்புடனிருத்தல், அருள்கூர்தல், தானம் செய்தல் ஆகியனவே ஒழுக்கம்  எனப் புகழப்படுகிறது – மஹாபாரதம்

 

Xxx

ஒன்றுமே இல்லாதவிடத்தும் சந்தோஷமாக இருப்பவனே சொர்க்கத்தைக் காண்பவன் (சொர்கமென்பது, ஒன்றுமேயில்லாதபோதும் சந்தோஷமாக இருப்பதாகும்)

Xxx

 

அஹிம்சையே பெரிய தர்மம் –மஹாபாரதம்

 

Xxx

ஒருவனுடைய ஒழுக்கம் குடிப்பிறப்பைக் காட்டும்; ஒருவனுடைய உடல், அவன் சாப்பிடும் உணவைக் காட்டும்- சாணக்கிய நீதி

Xxx

ஆசாரமே பெரிய தர்மம்- மனு

(ஆசாரம்= ஒழுங்குமுறை விதிகள்)

Xxx

ஆசாரமே தர்மமும் தவமும்

Xxx

 

IMG_4438

ஆச்சாரத்திலிருந்துதான் ஆயுளும் பணமும் கிடைக்கும் – ம.பா.

Xxx

தனக்கு எது தீங்கு செய்யுமோ, அதைப் பிறருக்கு செய்யாதே – பஞ்ச தந்திரம்

 

Xxx

எவனுக்கு ஆசை அடிமையாக இருக்கிறதோ அவனுக்கு உலகமே அடிமை.

எவன் ஆசையால் அடிமைபடுத்தப்படவில்லையோ, அவன் உலகையே அடிமைப்படுத்துவான். – சு.ர.பா.

Xxx

ஆசையின் எல்லையைத் தொட்டவர் எவர்?

Xxx

ஆசையே ஒளி; நிராசையே (பற்றற்ற தன்மை) தவம்.

Xxx

ஆசையே துன்பத்திற்குக் காரணம்.

பற்றற்றிருப்பதே சுகம்

Xxx

இறைவனை வழிபடுவதே எல்லோருக்கும் நன்மை பயக்கும்

Xxx

உற்சாகமே பலம்; உற்சாகத்தைவிட பெரிய பலம் எதுவுமில்லை; உற்சாகமுள்ளவனுக்கு உலகில் அடைய முடியாதது எதுவுமில்லை.

Xxx

கொடையாளிக்கு பணம் புல்லுக்குச் சமம்

Xxx

ஒருநிலையை அடையும் வரை உற்சாகம் இருக்கிறது; அதற்கப்புறம் அது முடிந்துவிடுகிறது.

Xxx

IMG_4437 (2)

ஈசாவாஸ்யம் இதம் சர்வம், யத் கிம்ச ஜகத்யாம் ஜகத்….

இந்த உலகம் முழுதும் இறைவனுக்குச் சொந்தமானது. அதில் மிஞ்சியிருப்பதை இறைவனுடைய பிரசாதம் என்று அனுபவிக்கவேண்டும் – ஈசா. உப.

–சுபம்–

 

ராஜா தந்த முத்தை பிச்சைக்காரனுக்கு கொடுத்த பூசாரி (Post No 2550)

pearl

Compiled  by London swaminathan

 

Date: 17  February 2016

 

Post No. 2550

 

Time uploaded in London :–  8-28 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

ஒரு ஊரில் ஒரு அர்ச்சகர் இருந்தார். கிட்டத்தட்ட நம்ம ஊரில் அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் போல. எதையும் தனக்கென வைத்து கொள்ளா உபகாரி. அவரது புகழ் திக்கெட்டும் பரவியது உடனே சீன தேசத்து ராஜா அவரைப் பார்க்க வந்தார். நெடு நேரம் தத்துவ விஷயங்கள் பற்றி உரையாடினர். கற்றாரை கற்றாரே காமுறுவர் அன்றோ. ஆகையால் விடைபெற்றுச் செல்லுகையில் விலையுயர்ந்த முத்து ஒன்றை அர்ச்சகரிடம் அன்பளிப்பாகக் கொடுத்தார்.

 

அதை வாங்கிய அர்ச்சகர், ராஜாவுக்கு முன்னாலேயே, அதைக் கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்த பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டார். ராஜாவுக்கு என்னமோ போலாகிவிட்டது. முகம் சிறுத்துவிட்டது.

 

இருந்தபோதிலும் காரணத்தை அறிவோமென்று எண்ணி, “அன்பரே நீர் உபகாரி என்பதை நான் அறிவேன். நீவீர் எப்போதுமே இப்படித்தான் செய்வீர்களோ? என்று கேட்டான் மன்னன்.

 

“ஆமாம், மன்னர் மன்னா!”

“அப்படியா?உங்கள் நண்பர்கள் எதைக்கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களோ” – என்று கேட்டான் மன்னன் ஏளனமாக.

“ஆமாம்”, என்றார் அர்ச்சகர்.

 

“இதோ நீங்கள் நடப்பதற்கு ஊன்றுகோல் வைத்திருக்கிறீர்களே. அதை உங்கள் நண்பர் கேட்டால்”…..

 

“ நீதி சாத்திரங்களில் சொல்லியிருக்கிறது. ஒரு நண்பனுக்கு அத்தியாவசியமான எதையும் ஒரு உயர்ந்த மனிதன்/ உத்தம புருஷனானவன், கேட்கக்கூடாதென்று” – என்றார்.

 

“சரி, அவர் உயர்ந்த குணமுள்ள நண்பர் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன்…” என்றான் மன்னன் விடாப்பிடியாக.

 

“ஆ, அருமையான கேள்வி. அப்படிப்பட்ட குணமுடையவன் எனக்கு நண்பனாக இருக்கவே முடியாதென்றார்”, அர்ச்சகர்.

மன்னர் வாயடைத்துப் போனார்.

 

–இது ஒரு சீனக் கதை

 

Xxxx

 

ardhanaree

எல்லாம் கடவுள் கொடுப்பான்?

இரண்டு நண்பர்களிடையே காரசாரமான வாக்குவாதம். கடவுள், எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுப்பார். நாம் ஒன்றும் செய்யத் தேவையே இல்லை என்றான் ஒருவன்.

 

இல்லை, அப்பைடியில்லை. யார் ஒருவன் முயற்சி செய்கிறானோ அவனுக்குதான் கடவுள் உதவி செய்வார் என்றான் மற்றவன்.

 

உடனே முதலாமவன், “இதோ பார் நான் கோவிலில் போய் ஒரு மூலையில் உட்காருகிறேன். எனக்கு உணவு முதலியன கிடைக்கும் என்று சொல்லி ஒரு மூலையில் அமர்ந்தான். அவன் நண்பனும் தொலைவிலிருந்து வேடிக்கை பார்த்தான். ஒரு நாள் ஆயிற்று; இரண்டு நாள் ஓடிற்று; யாரும் அவனைக் கண்டுகொள்ள வேயில்லை. பசியோ வாட்டியது. மூன்றாம் நாளும் வந்தது. இரவு நெருங்கிவிட்டது. இதுவரை யாரும் அவனைக் கண்டுகொள்ள வேயில்லை.

அப்பொழுது மூன்று பக்தர்கள் மிச்சமுள்ள பிரசாதத்தைப் பங்குபோட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களோ, இந்த ஆளை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை.

அவர்களிடம் பிரசாதம் நிறைய மிஞ்சியிருந்ததால், அட, இதை வீணடிக்கக்கூடாது; வீட்டிற்குக் கொண்டு செல்வோம் என்று பேசிக்கொண்டனர். மூலையில் உட்கார்ந்த ஆள் யோசித்தான். இவர்களும் போய்விட்டால் நான் மூன்று நாள் சாப்பிடாததால் இரவில் மயக்கம் போட்டுவிடுவேன் என்று எண்ணி ஒரு தந்திரம் செய்தான். லேசாக ஒரு இருமல் இரும்பி கணைத்தான். உடனே பக்தர்கள் மூவரும் அவன் பக்கம் திரும்பி, அடப் பாவமே முகமெல்லாம் வாடி இருக்கிறதே. சாப்[பிடவே யில்லை போலிருக்கிறதே என்று கருதி மீதியுள்ள புளியோதரை, தயிர்சாதம் எல்லாவற்றையும் கொடுத்தனர். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நண்பனிடம் போனான். கடவுள் எல்லோருக்கும் உதவுவார்தான். ஆனால் அவரைக் “கொஞ்சம் தூண்டிவிட” வேண்டியிருக்கிறது- என்றான்.

நண்பன் சிரித்துக்கொண்டே வீட்டுக்குப் போனான்.

–பாரசீகக் கதையின் தழுவல்

 

 

மர்தனம் குணவர்தனம்: குணங்கள் பற்றிய சம்ஸ்கிருத பழமொழிகள் (Post No. 2479)

cleaning saints

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 11 January 2016

 

Post No. 2479

 

Time uploaded in London :– காலை  9-32

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

(தமிழ் மொழிபெயர்ப்பு:லண்டன் சுவாமிநாதன்)

1.குணேஷு க்ரியதாம் யத்ன: கிம் ஆடோபை: ப்ரயோஜனம் – சார்ங்கதர பத்ததி.

நற்குணங்களை அடைய முயற்சி செய்க. ஆடம்பரத்தால் என்ன பயன்?

 

2.குணேஷு யத்ன: புருஷேண கார்யோ ந கிஞ்சித்  அப்ராப்யதமம் குணானாம்- மிருச்சகடிகம்

மனிதர்கள் நற்குணங்களை அடைய முயற்சிசெய்ய வேண்டும். நல்ல குணங்களால் அடைய முடியாது என்ன?

 

3.குணேஷ்யேவ கர்தவ்ய: ப்ரயத்ன: புருஷை: சதா – மிருச்சகடிகம்

நற்குணங்களை அடைய எப்போதும் முயற்சி செய்க.

 

4.குணைர் உத்தமதாம்  யாந்தி ந உச்சைர் ஆசனம் ஸ்தித: – சாணக்ய நீதி, பஞ்ச தந்திரம்

குணங்களால்தான் உயர்ந்த நிலையை அடைய முடியும். உயர்ந்த ஆசனத்தால் அல்ல.

 

dalai's 80th BD in california

5.குணோ பூஷயதே ரூபம்- சாணக்ய நீதி

நற்குணங்களே ஒருவனுக்கு அழகு தரும்.

 

6.குணோ ஹி கௌரவஸ்தானம் ந ரூபம் ந தனம் ததா

குருதாம் நயந்தி ஹி குணா ச சம்ஹதி: – கிராதார்ஜுனீயம்

நற்குணங்கள் ஒருவனுக்கு பெருமை சேர்க்கும் (உயர்வு தரும்)

வெளித்தோற்றத்தால் அல்ல.

 

7.தத் ரூபம் யத்ர குணா: – காதா

நற்குணங்கள் எங்கோ, அங்கே அழகு (ஒளிரும்)

 

8.நம்ரந்தி குணினோ ஜனா: நம்ரந்தி பலினோ வ்ருக்ஷா:

பழுத்த பழங்கள் உடைய மரங்கள் தாழ்ந்து இருக்கும். நற்குணங்கள் உடையோர் அதுபோல பணிந்திருப்பர்.

 

9.நிர்குணஸ்ய ஹதம் ரூபம் – சாணக்ய நீதி

குணமில்லாத இடத்தில் அழகு பாழ்.

 

10.ந ஏகத்ர சர்வோ குண சந்நிபாத:

ஒரே இடத்தில் எல்லா குணங்களும் சேருவதில்லை.

 

11.பதம் ஹி சர்வத்ர குணைர் நிதீயதே – ரகுவம்சம்

ஒருவனுடைய நிலையை நிர்ணயிப்பது அவனது குணங்களே.

 

12.ப்ராயேன சாமக்ரயவிதௌ குணானாம் பராங்முகி விஸ்வஸ்ருஜ: ப்ரவ்ருத்தி:- குமார சம்பவம்

 

13.கடவுள் பெரும்பாலும், எல்லா குணங்களையும் ஒரே இடத்தில் வைக்காமல் பிரித்துவைக்கவே செய்கிறார்.

(ஒப்பிடுக: துர்கா, லெட்சுமி, சரஸ்வதி மூவரும் சேர்ந்து வசிப்பதில்லை)

 

14.மர்தனம் குணவர்தனம்சு.ர.பா. (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

நல்ல குணங்கள், தொடர்ந்து கடைபிடிப்பதால்தான், வளரும்.

(ஒப்பிடுக: சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்)

baba laddu

15.யத்ரா க்ருதிஸ் தத்ர குணா வசந்தி- சு.ர.பா.

எங்கு உடற்கட்டு இருக்கிறதோ அங்கே குணங்கள் இருக்கும்.

(ஒப்பிடுக: பலமுள்ளவனே ஆன்மாவை அறிவான்: உபநிஷத்)

 

16.யதா நாம ததா குண:

எப்படிப் பெயரோ அப்படி குணம் (பெயருக்கேற்ற குணம்)

 

17.யதி சந்தி குணா: பும்சாம் விகசந்த்யேவ தே ஸ்வயம் – சம்யோ

நற்குணங்கள் இருக்கும் மனிதர்கள், தாமாகவே உயர்வடைவர் ( குணங்களே ஒருவர் உயர உதவும்)

 

18.ரூபஸ்யாபரணம் குண: — சாணக்யநீதி

குணங்களே நல்ல அணிகலன்.

 

19.வசந்தி ஹி ப்ரேம்ணி குணா ந வஸ்துனி – கிராதார்ஜுனீயம்

அன்பில்தான் குணங்கள் இருக்கும்; பொருட்களில் அல்ல.

 

20.சத்ரோரபி குணா க்ராஹ்யா தோஷா வாச்யா குரோரபி – மஹாபாரதம்

எதிரிகளிடத்தில் நற்குணங்கள் இருந்தாலும் அவைகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

 

21.சத்ரோரபி சுகுணோ க்ரஹ்ய:- சாணக்யசூத்ரம்

சந்த: ஸ்வத:ப்ரகாசந்தே  குணா ந பரதோ நூணாம் –சு.ர.பா

நற்குணங்கள் தாமாகவே பிரகாசிக்கும்; பிறர் காட்டத் தேவையில்லை.

 

22.சுலபா ரம்யதா லோகே துர்லபம்ஹி குணார்ஜனம் – கிராதார்ஜுனீயம்

அழகானது மலிவாகக் கிடைக்கும்; நற்குணங்களோ கிடைப்பதரிது.

(தமிழ் மொழிபெயர்ப்பு:லண்டன் சுவாமிநாதன்)

 

 

 

Subham–

 

‘அன்பென்று கொட்டு முரசே!’– புத்தாண்டு சிந்தனைகள்! (Post No. 2448)

IMG_3382

Written by London swaminathan

 

Date: 1 January 2016

 

Post No. 2448

 

Time uploaded in London :–  9-31 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாரதி பாடல்களில் மந்திர சக்தி இருக்கிறது!

காரணம்?

சதாசர்வ காலமும் “மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டுமென்று” அவர் கலைமகளை வேண்டி நின்றார். பாரதி பாட்டில் எனக்குப் பிடித்த வரிகள் எது என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவிக்கிறேன். எல்லா வரிகளிலும் பாஸ்ட்டிவ் எனர்ஜி= ‘ஆக்க சக்தி’ பொங்கிப் பரிமளிக்கிறது.

‘ஒளிபடைத்த கண்ணினாய் வா, வா’ என்ற வரியா? ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!’ என்ற வரியா? ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற வரியா? அல்லது ‘எல்லாரும் அமர நிலை எய்தும் நிலையை இந்தியா உலகிற்களிக்கும்’ என்ற வரியா? அல்லது ‘தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்துவிடுவோம்’ என்ற வரியா?, ‘இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்’ என்ற வரியா?, ‘கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்’ – என்ற வரியா – என்று என்னால் முடிவு செய்ய முடியவில்லை.

 

நூற்றுக் கணக்கான மந்திரங்களை நமக்களித்த பாரதி, மேலும் ஒரு அருமையான சொற்றொடரைத் தந்துள்ளார். “அன்புதன்னில் செழித்திடும் வையம்”!

 

இந்த உலகம் வளம் பெற மழை வேண்டாம், உரம் வேண்டாம். ஆனால் அன்பு என்று ஒன்று இருந்துவிட்டால் தானாக மாதம் மும்மாரி மழை பெய்யும். நல்லறம், நல்லாட்சி நிலவும் இடங்களில் பயிர் செய்யாமலேயே தானியம் தானாக விளையுமாம்! இதை வள்ளுவனும் காளிதாசனும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டனர். புல்வாயும் (மான்), புலிப்போத்தும் ஒரு துறையில் நீருண்ணுமாம். இதையும் கம்பனும் காளிதாசனும் சொல்லிவிட்டனர்.

 

அன்பு பற்றி பாரதி வேறு என்ன சொன்னார்?

 

முரசு கொட்டுங்கள்!

அன்பென்று கொட்டு முரசே! – மக்கள்

அத்தனை பேரும் நிகராம்.

இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு

யாவரும் ஒன்றென்று கொண்டால்.

 

ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே!

நன்றென்று கொட்டு முரசே! – இந்த

நாநில மாந்தருக்கெல்லாம்.

 

IMG_3326

அன்பே சிவம்!

அன்பு சிவம் உலகத் துயர் யாவையும்

அன்பினிற் போகுமென்றே- இங்கு

முன்பு மொழிந்துலகாண்டதோர் புத்தன்

மொழி எங்கள் அன்னை மொழி

 

மஹாகளியின் புகழ்

அன்பு வடிவாகி நிற்பள் துன்பமெலாம் அவள் இழைப்பள்

ஆக்கம் நீக்கம் யாவும் அவள் செய்கை – இதை

ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை

 

பாப்பாவுக்கு அன்பு ‘அட்வைஸ்’!

அன்பு மிகுந்த தெய்வம் உண்டு – துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

 

உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்

உண்மையென்று தனறிதல் வேணும்

 

புலியிடம் அன்பு! (ஞானிகளுக்கு அட்வைஸ்)

தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு

சிந்தையிற் போற்றிடுவாய் – நன்னெஞ்சே

அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

அவளைக் கும்பிடுவாய் – நன்னெஞ்சே

 

 

சிவசக்தி

அன்புறு சோதியென்பார் – சிலர்

ஆரிருட் காளியென்று உனைப் புகழ்வார்;

 

 

விநாயகர் நான்மணி மாலை

பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

விளங்குக: துன்பமும், மிடிமையும், நோவும்,

சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்

இன்புற்று வாழ்க!

 

வாழ்க திலகன் நாமம்

அன்பெனும் தேன் ஊறித் ததும்பும்

புதுமலர் அவன் பேர்

 

ஜாதீய கீதம் (பாரத அன்னை பற்றி)

அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை

மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ;

தோளிடைவன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ

SURAT CHATURTHI

முரசு

சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு

தன்னில் செழித்திடும் வையம்;

ஆதரவுற்றிங்கு வாழ்வோம்- தொழில்

ஆயிரம் மாண்புறச் செய்வோம்

 

அன்பு குறித்து பாரதி பாடியது இத்தனைதான் என்று எண்ணிவிடாதீர்.  அவன் பாடல்களில் அன்பு என்ற சொல் இல்லாத இடங்களிலும் அன்பு ஊற்றெடுத்துப் பாய்வதைக் காணலாம்.

 

-சுபம்-

 

சுபாஷித இலக்கியம் (Post No. 2427)

raghavan 2

Picture of Dr Raghavan, Sanskrit Scholar

 

Written by S NAGARAJAN

Date: 26 December 2015

 

Post No. 2427

 

Time uploaded in London :– காலை 6-35

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

சுபாஷித இலக்கியம்

ச.நாகராஜன்

 

 

கூகிளின் புத்தகத் திட்டம்

 

உலகில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையைச் சொல்வது முடியக் கூடிய காரியமா என்ன?

மலைக்க வேண்டாம்.

 

வானத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களையே பட்டியலிடும் இந்தக் காலத்தில் முடியாதது என்று ஒன்று உண்டா என்ன?

 

கூகிள் களத்தில் இறங்கியது. தி டெலகிராஃப் பத்திரிகை 6-8-2010 தேதியிட்ட இதழில் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதன்படி புத்தகம் பற்றிய கூகிள் திட்டம் முடிந்து விட்டதென்றும் உலகில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை சரியாக 129,864,880 (பன்னிரண்டு கோடியே தொண்ணூற்றெட்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து எண்ணூற்றி எண்பது) என்றும் அந்தச் செய்தி கூறியது.

 

புத்தகங்களின் கணக்கு ஒருவாறாக வந்து விட்டது!

 

dr raghavan

டாக்டர் வி.ராகவனின் அரிய பணி

 

நல்லது, புத்தகமாக வெளி வராத சுவடிகள் எவ்வளவு? அதில் சம்ஸ்கிருதச் செல்வம் எவ்வளவு உள்ளது? மலைக்க வைக்கும் அளவில் பல லட்சக்கணக்கான சுவடிகள் உலகெங்கும் பல்வேறு இடங்களில், – பல்கலைக் கழகங்களில், கோவில்களில், மடாலயங்களில், தனியாரது சேகரிப்பில், அருங்காட்சியகங்களில் என்று இப்படிப் பல்வேறு இடங்களில்  –  உள்ளன.

இதை மொத்தமாகப் பட்டியலிடும் பெரிய திட்டத்தை யாரும் மேற்கொள்ளவில்லை.

 

சம்ஸ்கிருத பேரறிஞர் டாக்டர் வி.ராகவன் (1908-1979) இந்தப் பணியில் தீவிரமாக இறங்கினார். உலகெங்கும் பயணம் செய்தார். ஓரளவுக்கு பல்லாயிரம் சுவடிகள் மற்றும் புத்தகங்களின் விவரத் தொகுப்பை நூலாக்கினார்.

 

ஆனால் தஞ்சையில் உள்ள சரஸ்வதி மஹாலில்  தொடங்கி  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வரை பகல்லாயிரக்கணக்கான இடங்களில் உள்ளவற்றை முழுவதுமாக யாரே தொகுப்பர்? காலம் தான் விடை சொல்ல வேண்டும்.

 

என்றாலும் கூட தங்களால் முடிந்த அளவில் பல அறிஞர்கள் தங்கள் வாழ்நாள் பணியாக சம்ஸ்கிருதச் செல்வத்தைக் காக்க முயற்சி எடுத்திருப்பதை சரித்திரம் சொல்கிறது.

 

SUBASHITA BIG

மஹாசுபாஷித சம்க்ரஹா – லுட்விக் ஸ்டர்ன்பாக்

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் சுபாஷிதம் ஒரு தனி இடத்தைப் பெறுகிறது.

 

பல்லாயிரக்கணக்கான சுபாஷித ஸ்லோகங்களை வெளியிடுவது ஒன்றையே தன் வாழ்நாள் பணியாக மேற்கொண்ட அறிஞர் லுட்விக் ஸ்டர்ன்பாக் (Ludwik Sternbach) அனைத்து சம்ஸ்கிருத ஆர்வலர்களாலும் போற்றிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பெரியார்.

 

 

மஹாசுபாஷித சம்க்ரஹா என இவர் அரிய சுபாஷிதங்களைத் தொகுக்கும் பணியை ஆரம்பித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் எட்டுத் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில்

அகரவரிசைப்படி ஸ்லோகங்கள்/செய்யுள்கள்  தொகுக்கப்பட்டுள்ளன.

 

சம்ஸ்கிருத மூலமும் அதன் கீழ் ஆங்கில மொழிபெயர்ப்பும் அரிய குறிப்புகளும் இந்த எட்டுத் தொகுதிகளில் உள்ளன.

முதல் தொகுதியில் 1 முதல் 1873 ஸ்லோகங்களும் இரண்டாம் தொகுதியில் 1874 முதல் 4208 முடிய உள்ள ஸ்லோகங்களும் மூன்றாம் தொகுதியில் 4209 முதல் 8285 முடிய உள்ள ஸ்லோகங்களும் நான்காம் தொகுதியில் 6286 முதல் 8264 முடிய உள்ள ஸ்லோகங்களும் ஐந்தாம் தொகுதியில் 8265 முதல் 9979 முடிய உள்ள ஸ்லோகங்களும் ஆறாம் தொகுதியில் 9980 முதல் 11491 முடிய உள்ள ஸ்லோகங்களும் ஏழாம் தொகுதியில் 11492 முதல் 13018 முடிய உள்ள ஸ்லோகங்களும் எட்டாம் தொகுதியில் 13019 முதல் 14653 முடிய உள்ள ஸ்லோகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 

LUDWIG 2

முதல் பாகம் 586 பக்கங்களையும் இரண்டாம் பாகம் 608 பக்கங்களையும் மூன்றாம் பாகம் 564 பக்கங்களையும் நான்காம் பாகம் 571 பக்கங்களையும் ஐந்தாம் பாகம் 492 பக்கங்களையும் ஆறாம் பாகம் 575 பக்கங்களையும் ஏழாம் பாகம் 671 பக்கங்களையும் எட்டாம் பாகம் 732 பக்கங்களையும் கொண்டுள்ளது. ஆக சுமார் 4799 பக்கங்களில் 14653 சுபாஷித செய்யுள்களைப் படிக்க முடியும்.

 

 

அறிஞர் லுட்விக் ஸ்டர்ன்பாக்கிற்கு அறிவுச் செல்வத்தைப் போற்றும் உலகினர் அனைவரும் நன்றிக் கடன் பட்டுள்ளனர். இந்தத் தொகுதிகளை விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் தக்க நூலகத்தை அணுகி இவற்றைப் படிக்கலாம். இணையதளத்திற்கான இணைப்பு வசதி உள்ள,

சுபாஷிதத்தைப் படிக்க ஆரம்பிக்க விரும்பும் ஆர்வலர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளங்களை நாடலாம்; நற்பயன் பெறலாம் :-

LUDWIG3

http://sanskritdocuments.org/doc_z_misc_subhaashita/doc_z_misc_subh_1_index.html

http://www.scribd.com/doc/94115369/Sanskrit-Subhashita-Collection#scribd

 

—Subham—-