அகஸ்தியர் கொடுத்த அற்புத ஆயுதங்கள்: கம்பன், வால்மீகி தகவல் (Post No.3628)

Written by London swaminathan

 

Date: 11 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 19-59

 

Post No. 3628

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

இராம பிரானுக்கு அகஸ்தியர் என்ன, என்ன ஆயுதங்களை அளித்தார் என்று வால்மீகி ராமாயணத்திலும், கம்ப ராமாயணத்திலும் தகவல்கள் உள்ளன. வால்மீகி விஷ்ணுவின் ஆயுதங்களை மட்டும் சொல்கிறார். கம்பன் அத்தோடு சிவபெருமான் ஆயுதங்களையும் சேர்த்துச் சொல்கிறார். கம்பன் சொல்லும் தராசு உவமை படிக்க இன்பம் தருகிறது.

 

ஏற்கனவே விஸ்வாமித்ரர் கொடுத்த ஆயுதங்களின் பட்டியலை, பால காண்டத்தில் (அத்தியயம் 27, 28)  வால்மீகி கொடுத்துள்ளார்.

 

ஆரண்ய காண்டத்தில் (அத்தியயம் 12)  வால்மீகி கொடுக்கும் தகவல் இதோ:-

 

“இதுதான் விஷ்ணுவுக்குச் சொந்தமான சக்திவாய்ந்த தெய்வீக வில். இது விஸ்வகர்மாவினால் உருவாக்கப்பட்டது. தங்கமும் வைரமும் பதிக்கப்பட்டது.

இதோ, இது பிரம்மதத்த அம்பு. தவறாமல் தாக்கவல்லது; சூரியன் போன்றது. எனக்கு இதை இந்திரன் அளித்தான். இதோ கூரான அம்புகள் உடைய, எடுக்க எடுக்கக் குறையாத அம்பறாத்தூணி. தீப்போல ஜ்வலிக்கக்கூடியவை. இதோ வெள்ளி உறையும், அதிலுள்ள தங்க வேலைப்பாடுமிக்க வாளும்”.

“ஏற்கனவே அசுரர்களை அழிக்க விஷ்ணு பயன்படுத்திய அம்பு இது. இவை அனைத்தும் உனக்கு வெற்றியைத் தரும்” – என்று சொல்லி அகஸ்தியர் ஆயுதங்களைக் கொடுத்தார்.

 

 

இனி கம்பன் என்ன சொல்கிறான் என்று காண்போம்:-

 

அகஸ்தியர் கொடுத்த வாளினை ஒரு தராசுத் தட்டில் வைத்து மறுதட்டில் பூலோகம் முழுவதையும் வைத்தாலும் அந்த வாளுக்கு இணையாகாதாம். இது தவிர மேரு மலையை வில்லாக வளைத்து வானில் தொங்கிக் கொண்டிருந்த திரிபுரங்களையும் ( மூன்று பறக்கும் கோட்டைகள்) அழிக்க சிவபெருமான் பயன்படுத்திய வலிய அம்பையும் முனிவன் அளித்தானாம்.

இப்புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்

ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்

வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்

முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும் நல்கா

–அகத்தியப் படலம்

 

இதற்கு முன் கம்பன் கூறுவான்:

விழுமியது சொற்றனை இவ்வில் இவண்மேல் நாள்

முழுமுதல்வன் வைத்துளது மூ உலகும் யானும்

வழிபட இருப்பது இது தன்னை வடி வாளில்

குழு வழு இல் புட்டிலொடு கோடி என நல்கி

 

பொருள்:-

 

அகஸ்தியன் சொன்னது: சிறந்த கருத்தினைச் சொன்னாய் இராமா! இங்குள்ள இந்தவில் முற்காலத்தில், முழு முதல்வனான திருமால் வைத்திருந்தது. மூன்று உலகங்களும் நானும் வணங்கும் சிறப்பு பெற்றது  இவ்வில்லை, குறையாமல் நிறைந்திருக்கும் புட்டிலொடு (அமபறாத்தூணி) பெற்றுக் கொள்க.

 

 

வால்மீகியும் கம்பனும் தரும் ஆயுதங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு ஆராய்ச்சியே செய்யலாம். ஆரணிய காண்ட உரையில் இராவணன் பயன்படுத்திய ஆயுதங்களின் தகவலும் கிடைக்கிறது. அவனுடைய வாளின் பெயர் பெயர் சந்திரஹாசம்!

 

பாலகாண்டம் 27, 28 ஆம் அத்தியாயங்களில் வால்மீகி தரும் ஐம்பதுக்கும் மேலான ஆயுதங்களின் பெயர்கள் வியப்பூட்டும்! குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 பூக்களின் பெயர்களை அடுக்குவதுபோல வால்மீகி 50-க்கும் மேலான ஆயுதங்களின் பட்டியலைக் கொடுத்து அசத்திவிட்டார்.

 

சுபம்

 

 

 

வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி? ராமாயண அறிவுரை (Post No.3572)

Written by London swaminathan

 

Date: 24 January 2017

 

Time uploaded in London:- 9-53 am

 

Post No.3572

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

 

வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்பதற்கு ராமாயண, மாபாரத இதிஹாசங்களில் நிறைய அறிவுரைகள் உள்ளன. இதோ ஒரு ஸ்லோகம்:

ஒருவன் நன்ங்கு செயல்பட நான்கு குனங்கள் இருக்க வேண்டும். அவை யாவன?

 

ஸ்ம்ருதி – நினைவாற்றல்

த்ருதி – லட்சியத்தில் உறுதி

மதி – அறிவு

தாக்ஷ்யம் – திறமை

யஸ்ய த்வேதானி சத்வாரி வானரேந்த்ர யதா தவ

ஸ்ம்ருதித்ருதிர்மதிர்தாக்ஷ்யம்  ச கர்மசு ந சீததி

–வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், 1-198

 

இவை நான்கும் இருந்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கலாம். வேலை வாய்ப்பு இன்டெர்வியூக்களில் எளிதில் வெற்றி பெறலாம். இதில் இரண்டவதாகச் சொல்லப்பட்ட லட்சிய உறுதி இருந்தால் மற்ற மூன்று குணங்களும் தன்னாலே யே அதிகரிக்கும். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக்கூடாது.

 

யாராவது ஒருவரிடம் ஒரு உதவியோ, வேலையோ கேட்டுச் சென்றீர்களானால், உங்கள் பலவீனத்தைச் சொல்லக்கூடாது. உங்களுக்கு எதில் எதில் பலம் அதிகம், திறமை அதிகம் என்பதைப் பட்டியலிடுங்கள். எந்த இன்டர்வியூவிலும் பொய்யும் சொல்ல வேண்டாம்; உங்கள் பலவீனத்தையும் சொல்லவேண்டாம்.

 

எங்கள் லண்டனில், சிலர் குறிப்பாக உன் பலவீனம் என்ன? என்று இன்டெர்வியூவில் கேட்பார்கள் அப்பொழுது உண்மையைச் சொல்லிவிட்டு அதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள், அல்லது எப்படி அந்த பலவீனதை உடைத்தெறிவீர்கள் என்றும் சொல்லிவிடுங்கள்.

 

இதோ பகவத் கீதையில் கண்ணனும் சொல்கிறான்:-

 

உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவசாதயேத்

ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மனஹ (கீதை 6-5)

 

தன்னால் தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும். தன்னை தாழ்த்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன், தனக்குத்தானே பகைவன் என்பது நிச்சயமான (உண்மை).

 

ஆத்மனா- தன்னாலேயே

ஆத்மானம் – தன்னை

உத்தரேத் – உயர்த்திக் கொள்ள வேண்டும்

ஆத்மானம் – தன்னை

ந அவசாதயேத் – தாழ்த்திக் கொள்ளக் கூடாது

ஹி – நிச்சயமாக

ஆத்மா ஏவ – தானே

ஆத்மனஹ – தனக்கு

பந்துஹு – உறவினன்

ஆத்மா ஏவ- தானே

ஆத்மனஹ – தனக்கு

ரிபுஹு – பகைவன்.

 

தம்மபதத்தில் (380) புத்தர் பிரானும், அத்தாஹி அத்தனோ கதி (தனக்குத் தானே எஜமானன்) என்பார்.

 

திருவள்ளுவன் இதற்கும் ஒரு படி மேலே சென்று, கடவுளே உனக்குத் தரமாட்டேன் என்றாலும், முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்பது இயற்கை நியதி; அதவது கடவுளே மீற முடியாத விதி என்பார்

 

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்

மெய்வருத்தக் கூலி தரும் (619)

 

நசிகேதன், சாவித்ரி, மார்கண்டேயன் கதைகள் இதற்கு நல்ல எடுத்துக் காட்டுகள்.

 

முயற்சி திருவினை ஆக்கும்!

 

–சுபம்-

 

மரங்களை அலங்கரித்த மங்கையர்: கம்பன் தரும் அதிசயத்தகவல் (Post No.3248)

img_4055

Written by London Swaminathan

 

Date: 13 October 2016

 

Time uploaded in London: 20-36

 

Post No.3248

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

முல்லைக்கு தேர் ஈந்த பாரி வள்ளலை நாம் அறிவோம். ஒரு முல்லைக் கொடி காற்றில், கொழு கொம்பு இல்லாமல் தத்தளிக்கிறதே என்று வருந்தி தனது தேரையே ஒரு முல்லைக் கொடிககு அளித்தான் தமிழ் மன்னன் பாரி.

 

இதூபோல உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலம் நாடகத்தில் கானகத்தில் வளர்ந்த, சகுந்தலை என்ற பெண், செடிகொடி களுக்குத் தண்ணீர் விட்டுவிட்டு அந்த நீரை பறவைகள் அருந்துவதைப் பார்த்துவிட்டுத்தான் சாப்பிடப்போவாள் என்றும் எல்லாப் ண்களுக்கும் உள்ள பூச்சூடும் ஆர்வம் அவளுக்கு இருந்தாலும் பூவைப் பறித்தால் அதன் அழகு போய்விடுமே என்று எண்ணி பூவைக்கூட செடியிலிருந்து பறிக்க மாட்டாள் என்றும் காளிதாசன் பாடுகிறான். அது மட்டுமல்ல பூங்கொடிகள் முதல் முதலில் பூத்த நாள ன்று சகுந்தலை ஒரு விழாக் கொண்டாடினாள் என்றும் காளிதாசன் பாடுகிறான்,(அபிக்ஞான சாகுந்தலம், நாடகம் அங்கம் 4)

 

நம்முடைய கிராமப்புறங்களில் பல மரங்களில், குழந்தை பிறக்காதவர்கள் தொட்டில் போன்ற பொம்மைகளைத் தொங்கவிடுவர். இன்னும் சிலர் தனது துணிமணிகளிலிருந்து நூல் அல்லது, கந்தைகளைக் கிழித்து தொங்கவிடுவர். இது போல மேலை நாடுகளிலும் அந்தக் காலத்தில் வழக்கம் இருந்தது. இப்போது பார்ப்பது அரிது. இது எல்லாம் பிரதி பலனை எதிர்பார்த்துச் செய்யும் செயல்கள். .ஆனால் சகுந்தலையும் பாரியும் பிரதிபலன் எதிர்பாராமல் தாவரங்களையும் தன்னுயிராகக் கருதினர். இது போல செடிகொடிகளை சகோதரியாகக் கருதிய பாடல் சங்க இலக்கியத்திலும் இருப்பதை முன்னரே காட்டிவிட்டேன்.

img_4033

கம்பன் தரும் ஒரு அரிய தகவல்– மரங்களை பெண்கள் அலங்கரித்த செயல் பற்றியது!

 

கம்ப ராமாயணம், பால காண்டத்தில் வரும் பாடல் இதோ:-

பூ எலாம் கொய்து கொள்ளப் பொலிவு இல துவள நோக்கி

யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி

கோவையும் வடமும் நாணும் குழைகளும் குழையப் பூட்டி

பாவையர் பனிமென் கொம்பை நோக்கினர் புரிந்து நிற்பார்

 

பொருள்:-

பூங்கொடிகளில் உள்ள மலர்களை எல்லாம் பெண்கள் பறித்துவிட்டனர். அடக் கடவுளே! நம் கணவன்மார்கள் வந்தபோது இந்தச் செடிகள் மொட்டையாக நின்றால் அழகாய் இராதே என்று எண்ணி தாம் அணிந்திருந்த முத்துமாலை, இரத்தின மாலை, தங்க வடங்கள், காதணிகள் எல்லா வற்றையும் கொடிகளுக்கும் செடிகளுக்கும் சூட்டி அவை அந்தக் கனத்தில் தாழத் துவங்கினவாம். பிறகு அந்தப் புதுப்பொலிவுபெற்ற செடிகொடிகளைக் கண்டு மகிழ்ந்தனராம்.

 

தாவரங்களின் மீது என்னே அன்பு. மேல நாடுகளில் நாய்களுக்கும் பூனைகளுக்கும் சட்டை, செருப்பு போட்டு மகிழும் மக்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் செடிகொடிகளுக்கு ஆபரணங்களைப் போட்டு அழகு பார்த்தது நம் நாட்டில்தான். அதுவும் கம்பன் மட்டுமே தரும் தகவல் இது!

img_4063

வாழ்க செடி கொடிகள்: வளர்க மரங்கள்!!

 

 

பெண்கள் மீது கை வைத்தால்………. கம்பன் எச்சரிக்கை! (Post No.3184)

beauty-with-puukkuutai

Written by London swaminathan

Date: 24 September 2016

Time uploaded in London:6-37 am

Post No.3184

Pictures are taken from various sources; thanks.

 

 

நான் மதுரை யாதவர் தெரு வடக்கு மாசி வீதியில் கால் நூற்றாண்டுக் காலம் வசித்தேன். அப்பொழுது பல காட்சிகளைக் கண்டதுண்டு. திடீரென டவுன் பஸ் நிற்கும். அதிலிருந்து ஒருவனைக் கீழே தள்ளி நாலைந்து பேர் அடிப்பார்கள். உடனே ரோட்டில் போகும் வருவோரெல்லாம் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவனை அடிப்பார்கள். அவன் குத்துயிரும் கொலை உசிருமாக இருக்கையில் அவனை ஓட ஓட விரட்டுவார்கள். கடைசியில் அவன் எப்படியோ தப்பி த்து ஓடி விடுவான். இதே போல மதுரை சித்திரைத் திருவிழாவிலும் கண்டதுண்டு. காரணம் என்ன என்று கேட்டால் அவன் “பெண்கள் மீது கை வைத்துவிட்டான்” சார்! என்பர். ஆனால் அடித்தவர்களில் பாதிப்பேருக்கு ஏன் அடித்தோம், யாரை அடிக்கிறோம் என்றே தெரியாது! இதற்குப் பெயர் தர்ம அடி!

 

இப்போது நான் வசிக்கும் ஊரிலும் (LONDON) பெண்கள் மீது இப்படிக் கைவைப்பதுண்டு. பெரும்பாலும் பஸ்களிலும் அதிகமாக மெட்ரோ

 

(METRO சுரங்க) ரயிலிலும் நடக்கும். அதை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும் சில கட்டுரைகளில் சி. சி. டிவி. (C C TV= Closed Circuit Television) காமெரா மூலம் படம் எடுத்துப் பிரசுரிப்பார்கள்.

 

வாரம் தோறும்  நாங்கள் ‘ஸ்கைப்’ SKYPE மூலம் நடத்தும் கம்ப ராமாயணம் வகுப்பில், கிஷ்கிந்தா காண்டம் படிக்கையில் இப்படி ஒரு காட்சி வந்தவுடன் , மதுரையில் பழைய காலத்தில் பார்த்த அவ்வளவும் நினைவுக்கு வந்து விட்டது. மன திற்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். காரணம் இல்லாமல் இல்லை. எங்கள் வீட்டுப் பக்கத்துச் சந்தில் ஒரு ஐயர், இட்டிலிக் கடை வைத்து நடத்தி வந்தார். அவரது இட்டிலியும் பக்கோடாவும் மதுரை முழுதும் பிரசித்தம். அவரும் ஒரு முறை இப்படி தர்ம அடி கொடுக்கும் கும்பலில் நாலு அடி போட்டு விட்டுத் திரும்பி வந்தார்.

 

 

“என்ன மாமா? நீங்களும் அடித்தீர்கள்? ஏதாவது உங்களி டம் விஷமம் செய்தானா? என்று நாங்கள் கேட்டோம். இல்லை எனக்குத் தெரியாது. எல்லோரும் அடித்தார்கள். நானும் அடித்தேன். என்ன? பொம்பளை மீது கை வச்சிருப்பான். அல்லது பிக் பாக்கெட் அடிச்சிருப்பான். நாலு சாத்து சாத்த வேண்டியதுதானே? என்றார் !!!

இதுபேர்தான் தர்ம அடி!!!

 

இதை எல்லாம் கேட்ட பின்னர் நாங்கள் (என் சகோதர்கள்) எல்லோரும் வீட்டிற்குள் போய் சிரி, சிரி என்று சிரிப்போம். அவரைப் பார்க்கும் போதெல்லாம் ‘தர்ம அடி’ நினைவுக்கு வரும்.

 

நிற்க. கம்பன் பாட்டைப் பார்ப்போம்.

img_4413-2

ஆறுடன் செல்பவர் அம் சொல் மாதரை

வேறு உளார் வலி செயின் விலக்கி வெஞ் சமத்து

ஊறுற தம் உயிர் உகுப்பர் என்னையே

தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்

–கலன் காண் படலம் , கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்

 

 

பொருள்:-

வழியில் செல்லும் மகளிரை வேறு எவரேனும் வருத்தினால் (ரோட்டில் போகும் பெண்கள் மீது யாரேனும் கை வைத்தால்), அவர்களுடன் தமக்குத் தொடர்பில்லையானாலும், அது செய்ய முடியாதபடி (தர்ம அடி போட்டு),  தடுத்துப் போர் செய்து உயிரையும் கொடுப்பர் உலகத்தார். அப்படியிருக்கையில் நானோ என்னை நம்பியிருந்த என் மனைவியின் (சீதா தேவியின்) துயரத்தைப் போக்க மாட்டாதவனாய் உள்ளேன் (இவ்வாறு ராம பிரான் புலம்புகிறார்)

 

இதைப் பார்க்கும்போது கம்பன் காலத்திலும் சாலையில் இப்படி நடந்து, அதில் பலர் தலையிட்டு,  தர்ம அடி கொடுத்து, சிலர் உயிர் கூட போனதுண்டு என்று தெரிகிறது.

 

எங்கள் லண்டனிலும் கூட மாதம் தோறும் இப்படிச் சில செய்திகள்

வருகின்றன. சூப்பர்மார்க்கெட் கார் பார்க்கிலும் (CAR PARK) ‘பப்’ (PUBLIC HOUSE) பிலும் (மது பானக்கடை) சண்டை போடுவோர் இடையே சமரசம் செய்யப்போய் கத்திக் குத்து வாங்கி இறந்தோர் பற்றிய துயரச் செய்திகளை படிக்கிறோம்.

bob-painting-3

வாழ்க கம்பன்! வளர்க தமிழ்! அனைவரும் படிக்க கம்ப ராமாயணம்!!!

 

-SUBHAM-

ஒரே துறையில் மானும் புலியும்: கம்பன் தரும் அதிசயத் தகவல் (Post No.3180)

animal-water-2

Written by London swaminathan

Date: 23 September 2016

Time uploaded in London: 8-43 AM

Post No.3180

Pictures are taken from various sources; thanks.

 

நல்ல மன்னர்கள் ஆட்சி செய்தால் அங்கு இயற்கையாகவே பகைமை கொண்ட கீரியும் பாம்பும், பூனையும் எலியும், புலியும் மானும் கூடப் பகைமையை விட்டு நட்பு பராட்டுமாம்.

கம்பனும் காளிதாசனும் தரும் தகவல் இது:-

 

இதோ கம்பன் பாடல்:

கருங்கடல் தொட்டனர் கங்கை தந்தனர்

பெரும்புலி மானொடு  புனலும் ஊட்டினர்

பெருந்தகை என் குலத்து அரசர் பின் ஒரு

திருந்திழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்

–கலன் காண் படலம், கிஷ்ககிந்தா காண்டம்

 

பொருள்:-

பெருமையுடைய எனது முன்னோர்கள் கடலைத் தோண்டினர் (சகரர் கதை); மேலுலகதில் இருந்த கங்கையை பூவுலகுக்கு கொண்டு வந்தனர் (Civil Engineer பொறியியல் வல்லுனன் பகீரதன் கங்கையைத் திருப்பிவிட்ட புராணக் கதை); போர் செய்யும் இயல்புடைய புலியையும் யானையையும் ஒரே துறையில் நீர் அருந்துமாறு செய்தனர் (தர்ம ஆட்சி). அவர்கள் குலத்தில் உதித்த நானோ மனைவியின் துயரைத் தீர்க்கும் தவத்தைச் செய்யாதவனாக உள்ளேன் (சீதை பற்றி ராமன் புலம்பல்)

–கிட்கிந்தா காண்டம்

 

animals-water-1

வேறொரு இடத்தில்

புலிப்போத்தும் புல் வாயும் ஒரு துறையில் நீருண்ண

உலகாண்டோன் ஒருவன் — என்று பாடியுள்ளான்

 

வள்ளுவனோ இதற்கும் ஒரு படி மேல் சென்று

தர்ம ஆட்சி நடத்தும் மன்னன் நாட்டில் பருவமழை கொட்டும்; விளைச்சல் பெருகும் என்பான் (குறள் 545); கொடுங்கோலன் நாட்டில் மழையும் பெய்யாது; பசு மாடும் பால் தராது; பார்ப்பனர்களுக்கு வேதங்கள் மறந்து போகும் என்பான் (குறள் 559, 560)

 

 

காளிதாசனும் இதே கருத்தை முன்வைக்கிறான், ரகு வம்சத்தின் ஆறாவது சர்கத்தில் 46 ஆம் பாடலில் ஒரு உவமை வருகிறது.முனிவர்களின் ஆஸ்ரமத்தில்  இயற்கையிலேயே பகைமை உடைய மிருகங்களும் எப்படி பகைமை பாராட்டாது நட்புறவு கொள்ளுமோ அதுபோல……………………………..

முனிவரின் ஆஸ்ரமத்தில் புலியும் மானும் யானையும் சிங்கமும் போன்றை ஒன்று தாக்காமல் அமைதியாக வரும் என்பது இதன் பொருள். அது போல நீப மன்னனின் ஆட்சியும் குண நலன்களும் இருந்தன என்பான் காளிதாசன்.

 

மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் சிவபெருமானின் கருணை பற்றிப் பேசுகையில் “புலி முலை புல்வாய்க்கு அருளினை போற்றி” என்று விதந்தோதுவார்.

 

animals-3

இளங்கோ தரும் அதிசயத் தகவல்

 

நெஞ்சையள்ளும் சிலப்பதிகார காவியத்தில் பாண்டிய நாட்டில் நீதியும் அமைதியும் நிலவுவதால் இடி, மின்னல் கூட மக்கள் மீது விழாது; புலியும் மானும் சண்டை போடாது; முதலைகள் தாக்காது; துர் தேவதைகள் ம னிதனைப் பிடிக்காது; பாம்பும் கடிக்காது; கரடி கூட புற்றுமண்ணைத் தோண்டி கறையான் எறும்புகளைச் சாப்பிடா து. ஏனெனில் அங்கே தர்ம ஆட்சி நடக்கிறது. பகல் நேரத்திலு ம் பெண்ணும் ஆணும் போவது போல இரவில் பவுர்ணமி வெளிச்சத்திலும் போகலாம்; ஒரு பயமும் இல்லை– என்று இளங்கோ அடிகள் இயம்புவார்.

கோள்வல் உளிஒயமும் கொடும்புற்று அகழா;

வாள்வரி வேங்கையும் மன் கணம் மறலா;

அரவும், சூரும், இரைதேர் முதலையும்,

உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா —

செங்கோல் தென்னவர் காக்கும் நாடு

 

—புறஞ்சேரி இறுத்த காதை, சிலப்பதிகாரம்

 

புறநானூற்றில் புலியும் மானும்

புறநானூற்றில் ஒரு அரிய செய்தி வருகிறது. ஒரு பெண் மானை ஒரு புலி கொன்றுவிட்டது. அதனுடன் ஒரு குட்டியும் இருந்தது. அந்தக் குட்டியை கொன்று சாப்பிடவில்லை. அதற்குக் காட்டிலுள்ள ஒரு முதிய காட்டுப்பசு பால் கொடுத்ததாம். தாயன்பு என்பது இந்த மிருகம், அந்த மிருகம் என்ற வரையரைக்கு எல்லாம் அப்பாற்பட்டது:-

புலிப்பாற்பட்ட ஆமான் குழவிக்குச்

சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்

—புறநானூறு 323

 

–subham–

 

 

 

 

நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ: கம்பன் (Post No.3137)

sugreeva

Written by London Swaminathan

 

Date: 9 September 2016

 

Time uploaded in London: 9-04 AM

 

 

Post No.3137

 

Pictures are taken from various sources; thanks.

 

 

உலகம் முழுதும் அகதிகள் பிரச்சனை தலை விரித்தாடுகிறது. ஆயிரக் கணக்கானோர் வெளிநாடுகளுக்குச் சென்று அடைக்கலம் கோருகின்றனர். அவர்களுக்குப் பல நாடுகள் அடைக்கலம் தருகின்றன. இவையெல்லாம் சரணாகதி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கோட்பாடு. யாராவது ஒருவர் உன்னைச் சரண் அடைகிறேன் என்று மற்றவர் காலில் விழுந்துவிட்டால் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பது இந்து தர்மக் கோட்பாடு. ராமாயணத்தில் மிகப் பெரிய அளவுக்குப் பேசப்படுவது சரணாகதி தத்துவம் ஆகும். இது ராமாயணத்தின் பிற்பகுதியில் விபிஷணன் சரண் அடையும்போது பெருமளவில் விவாதிக்கப்படுகிறது; விவரிக்கப் படுகிறது. அதற்கெல்லாம் பீடிகை போடும்படியாக கிஷ்கிந்தா காண்டத்திலேயே கம்பன் சில பொன்மொழிகளை உதிர்க்கிறான். இதோ இரண்டு பொன் மொழிகள்:–

 

ஒடுங்கல் இல்  உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி

தொடங்கின மற்றும் முற்றத் தொல் அறம் துணிவர் அன்றே

கொடுங்குலப் பகைஞன் ஆகிக் கொல்லிய வந்த கூற்றை

நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ

 

பொருள்:-

பரந்த இந்த உலகத்தில் உயிர்கள் எல்லாம் விரும்பியவற்றை உதவி, வேள்வி, தவம் முதலியவற்றை நிறைவேற்றும்படி மேலோர் செய்வர் அல்லவா? அததகைய அறங்களுள், எமன் போன்ற எதிரிக்குப் பயந்து நம்மிடம் சரண் அடைந்தவர்க்கு அஞ்சாதே என்று அருள் காட்டுவதை விடப் பெரிய அறம்/தர்மம் வேறு ஏதாவது உளதோ?

 

இது யார் சொன்னது? எங்கே சொன்னது?

 

ராம லெட்சுமணர்களைச் சந்தித்த அனுமன் சுக்ரீவனுக்கு, வாலியினால் ஏற்பட்ட துனபங்களை விவரித்துவிட்டு சரண் அடைந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது (இந்து) தர்மம் அல்லவா? என்கிறான்.

28_24_kishkinta_vali-fight-ground

சுக்ரீவன் இதைத் தன் வாயாலேயே சொல்லி காலில் விழும்  ஒரு பாடலும் வருகிறது:–

 

முரணுடைத் தடக்கை ஒச்சி முன்னவன் பின்வந்தேனை

இருள்நிலைப் புறத்தின் காறும் உலகு எங்கும் தொடர இக்குன்று

அரண் அடைத்து ஆகி உய்ந்தேன்  ஆர் உயிர் துறக்கலாற்றேன்

சரண் உனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான்

பொருள்:-

என் அண்ணனான வாலி, தம்பியாகிய என்னை அடிப்பதற்காக ஓங்கிய கைகளுடன் இவ்வுலகத்துக்கு அப்பாலும் எல்லா உலகங்களிலும் என்னைத் துரத்தி வந்தான். இம்மலையே பாதுகாப்பான இடம் என்பதால் இங்கே வந்தேன்; உயிரை விடவும் மனம் இல்லை; உன்னை அடைக்கலம் அடைந்தேன். என்னைக் காப்பாற்றுதல் உனக்குக் கடமையாகும் – என்று சொன்னான் சுக்ரீவன்

 

என்னைத் தாங்குதல் தருமம் என்றான் என்ற வாக்கியத்தில்தான் இந்து தர்மக் கோட்பாடு பளிச்சிடுகிறது.

 

இன்று உலகம் முழுதும் அகதிகள் வாழ வழிவகுத்தது இந்து மதம். சுக்ரீவன், வாலி என்பவர்கள் ஓரிரு தனி நபர்கள். ஆயினும் போரில் சரண் அடைந்தவர்களையும் காப்பாற்றுவது நமது இதிஹாச புராணங்களில் உள்ளது. சரியான ஆயுதம் இல்லாதவர்ளையும், ஆயுதமே வைத்திராதவர்களையும் தாக்கக்கூடாது என்பதும் தெளிவாககக்  கூறப்பட்டுள்ளது.

 

புருஷோத்தமன் (போரஸ்) என்ற மன்னனை அலெக்ஸாண்டர் வென்று விட்டான். உனக்கு என்ன வேண்டும்? உயிர்ப்பிச்சை வேண்டுமா? இவ்வளவு சிறிய மன்னனாலும் என்னையே திணறடித்துவீடாய்! — என்றான். அவனோ சிறிதும் அஞ்சாமல் என்னை மன்னன் போலவே நடத்த வேண்டும் என்றான். அதன்படியே செய்தான் அலெக்ஸாண்டர். இது தர்மம் என்பதால் அப்படிக்கேட்டான் புருஷோத்தமன (போரஸ்). இந்துமதத்தின் பெருமையையும் பாரதத்தின் பெருமையையும் அறிந்து யோகிகளைச் சந்திக்கவே இந்தியாவுக்கு வந்தவன் அலெக்ஸாண்டர் என்பதால் உடனே அவனை மன்னன் போலக் கருதி அவன் ராஜ்யத்தை அவனிடமே ஒப்படைத்தான் என்பதை நாம் அறிவோம்.

 

வாழ்க சரணாகதி தத்துவம்!! வாழ்க அகதிகள்!!

 

 

 

தாய்தன்னை அறியாத கன்று இல்லை! கம்பன் உவமை நயம்!! (Post No 3079)

 

pasuvum kandrum

Written by London swaminathan

Date: 21 August 2016

Time uploaded in London: 7-53 AM

Post No.3079

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

கம்ப ராமாயணம் ஒரு இனிய நீர் ஊற்று; தோண்டத் தோண்ட இனிய நீர் சுரக்கும். தொட்டனைத்தூறும் மணற் கேணி அது; படிக்கப் படிக்க கற்றனைத்தூறும் அறிவு.

 

சின்ன வயதில் எனக்கு ஒரு வியப்பு! நான் மதுரையில் வடக்கு மாசி வீதியில் யாதவர் (கோனார்கள் ) இடையே வாழ்ந்தேன். அந்தக் காலத்தில் மதுரையில் வைகை நதியில் தண்ணீர் ஓடும். ஆகையால் யாதவ இளைஞர்கள் தினமும் மாடுகளை எங்கள் தெரு வழியாக ஆற்றங்கரைக்கு நடத்திச் செல்லுவர். அந்த மாட்டுக் கூட்டம் வரும்போது வீட்டு வாசலில் உள்ள சைக்கிள், மோட்டார் சைக்கிள் எல்லாவற்றையும் அவசரம் அவசரமாக சுவற்றை ஒட்டி நிறுத்துவோம் அல்லது ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு இடிததுச் சென்று விடும். அந்த மாட்டுக் கூட்டம் வரும் முன்னே, “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளும் தகர டப்பிகளும் (ஏழைகளின் மணி!) சப்தம் போடும்.

 

அப்பொழுது ஒவ்வொரு மாடும் அதன் கன்றுடன் செல்லும். கூட்டத்தில் அது அது அதனதன் தாய்ப் பசுவுடன் செல்லும்.  நானோ பள்ளிக் கூடப் பையன். அட, எல்லா மாடுகளும் ஒரே மதிரியாக இருக்கிற தே, எல்லா கன்றுகளும் ஒரே மதிரியாகத் தெரிகின்றனவே. எப்படி அது அது அதனதன் தாயாரை அறிகிறது என்று வியந்து நிற்பேன்.

pasu cow claf kandru

கம்பனும் இப்படி ஒரு காட்சியைக் கண்டான் போலும்! அவனது உவமைகளில் ஒன்று — “தாய்தன்னை அறியாத கன்று இல்லை”.

 

வேதத்திலும் தாய்ப் பசு -கன்றின் அன்பு அடிக்கடி உவமையாகக் கையாளப்படுகிறது. இந்துக்களின் மிகப்பெரிய கண்டு பிடிப்புகள் இரண்டு:

  1. காடுகளில் திரிந்த பல விலங்குகளில் மாட்டின் பால்தான் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று கண்டுபிடித்து அதை நாட்டு விலங்காக மாற்றி (DOMESTICATION) உலகம் முழுதும் விவசாயத்தையும் மாடு வளர்ப்பையும் கற்றுக் கொடுத்தான்.
  2. இரண்டாவது கண்டு பிடிப்பு– டெசிமல் சிஸ்டம் DECIMAL SYSTEM (தசாம்ச முறை). இந்த இரண்டையும் இந்துக்கள் கற்பிக்காவிடில் உலகில் நாகரீகம் என்பதோ விஞ்ஞானம் என்பதோ வளர்ந்திரா. நிற்க.

 

கம்பன் உவமை நயத்தைக் காண்போம்:-

 

தாய்தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை அறியாத

ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய

நீ அறிதி எப்பொருளும் அவை உன்னை நிலை அறியா

மாயை இது என்கொலோ வாராதே வரவல்லாய்

 

பொருள்:–

“தலைவனே! பக்தர்களிடம் வருவதற்கு அரியவன்போல் தோன்றி, பிறகு எளிதாக வந்து காட்சி தரும் வல்லமை உள்ளவனே! தன்னைப் பெற்ற தாயைத் தெரிந்து கொள்ளாத கன்றுகள் இல்லை. தான் பெற்ற கன்றுகளை தாயும் அறிந்து கொள்ளும். உன்னிடமிருந்தே உலகம் தோன்றியதால் நீ உலகத்தின் தாயாக விளங்கி, எல்லாப் பொருள்களையும் அறிகிறாய். ஆனால் அப்பொருள்கள் எல்லாம் உனது தனிமையான நிலையை அறிய மாட்டா.”

 

எனது கருத்து:–

இதைப் படிக்கையில் பதி, பசு, பாசம் என்ற சைவ சித்தாந்த உண்மையும் நினைவுக்கு வருகிறது.

 

வாத்சல்யம் (தாய்ப் பசு – கன்று (வத்ஸ) இடையிலுள்ள அன்பும் நினைவுக்கு வருகிறது.

 

ஒவ்வொரு பசுவும் அதன் கன்றை அறியும். அது போல ஒவ்வொரு கன்றும் அதன் தாயை அறியும்.

இதே போல தாயாகிய இறைவனே நீ எங்கள் எல்லாரையும் அறிவாய். நாங்கள் உன்னை அறியும் பக்குவம் பெறவில்லையே. இது என்ன மாயமோ என்று கம்பன் வியக்கிறான்.

கன்று எப்படி தன் தாயை அறிகிறதோ அது போல நாமும் இறைவனை  அறிய வேண்டுமானால் அது போலப் பாசம் (பக்தி) வேண்டும். இறைவனோ எப்போதுமே தாய்ப்பசு போல நம் மீது அன்பைப் பொழிந்துகொண்டிருக்கிறான்.

எது எப்படியாகிலும் வேதத்தில் காணும் இந்த உவமை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டது சிறப்புடைத்து.

வேத கால உவமை சைவ சித்தாந்தத்துக்கும் வித்திட்டது!

hi-620-emperor-penguins-on-the-sea-ice-close-to-halley-research-station-credit-british-antarctic-survey

இன்னும் வியப்பு நீங்கவில்லை

 

டெலிவிஷனில் இயற்கை பற்றி வரும் ‘டாகுமெண்டரி’களைப் (Documentary ) பார்ப்பேன். அதில் ஒன்று அண்டார்ட்டிகா என்னும் தென் துருவப் பகுதியில் வாழும் பெங்குவின் பறவைகளைப் பற்றியது. அவை கூட்டமாக வாழும். கூட்டம் என்றால் அப்படிப் பெரிய கூட்டம்! திருவிழாக் கூட்டம்!!! ஆண் பெங்குவின்கள், கடலில் குதித்து நீந்திவிட்டுக் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின் திரும்பி வரும். ஒவ்வொன்றும் அதன் பெண்சாதியைக் கண்டுபிடித்து அதன் அருகி ல் போய் நிற்கும். குட்டிகளும் அதன் அருகே நிற்கும். இதைக் கண்டு எல்லோரும் வியப்பர். எப்படி பல்லாயிரம் பெங்குவின்கள் இடையே ஒவ்வொன்றும் தன் மனைவியைக் கண்டு பிடிக்கின்றன என்று. ஆக , கம்பனின் உவமையை இப்பொழுது நாம் பெக்குவினுக்கும் மாற்றலாம்!

penguin kuuttam

–subham–

 

கம்பனின் அதிசய உவமை! புறச்சூழல் உண்மை!!(Post No.3065)

Dead fish floated in the green waste water.

Written by London swaminathan

Date : 15th August 2016

Time uploaded in London: 17-56

Post No.3065

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

கம்பராமாயணம் ஒரு தேன் கூடு;  பிழியப் பிழிய தேன் வரும். ஆனால் என் போன்றோர் இலக்கிய நயத்துக்காக நூல்களைப் படிப்பதில்லை. அதிலுள்ள விஞ்ஞான உண்மைகளையும் தத்துவ உண்மைகளையும் ஆழத் துருவி ஆராய்வதே நோக்கம். ஆரணிய காண்டத்தில் மாரீசன் வதை படலத்தில் கம்பன் ஒரு அசாதாரண உவமையைக் கையாளுகிறான். இதைப் பார்க்கும் போது 1200 ஆண்டுகளுக்கு முன்னரே புறச் சூழல் அறிவு இருந்திருப்பது புலனாகிறது.

 

இதோ பாட்டும் அதன் பொருளும்:–

 

வெஞ்சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு

அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர்

நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்

நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால்

 

பொருள்:

மாயமான் வடிவத்தில் சென்று சீதையை ஏமாற்று — என்று ராவணன் ஏவியபோது மாரீசன் மன நிலை பற்றிய பாடல் இது:–

 

“இராவணன் செயலால தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் அழிவு வரும் என்பதை மாரீசன் உணர்ந்தான். தனது அன்பிற்குரிய சுற்றத்தாரை நினைத்து வருந்தினான். மானிட வீரர்களான இராம இலக்குவரை எண்ணி மனதில் குழப்பம் அடைந்தான். இது எப்படி இருந்ததென்றால்….

ஆழமான பள்ளத்தில் உள்ள நீர் நச்சுத் தனமை அடையும் போது, அதில் வாழும் மீன் அந்த நீரில் இருந்தாலும் சரி, நிலத்தில் இருந்தாலும் சரி இறப்பது உறுதி. அந்த மீன்கள் எப்படி நடுங்குமோ அப்படி மாரீசன் நடுங்கினான். அந்த மாரீசனின் மன நிலையை நம்மால் முடியாத அளவுக்கு அவன் பயப்பட்டான்”

இந்தப் பாட்டில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது இலக்கிய நயம்: விஷ நீரில் மீன் இருந்தாலும் சாகும். வெளியே போனாலும் சாகும். அது போல மாரீசன் மாய மான் வேடம் போடாமல் சென்றால் ராவணன் கொன்றுவிடுவான். மாய மான் வேடம் போட்டாலோ ராமன் கொன்று விடுவான்! இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை!

fishes 2

இரண்டாவது அறிவியல் விஷயம்:

 

ஒரு விஷயத்தை உவமையாகப் பயன்படுத்த வேண்டுமானால் அது மக்களுக்குப் புரிய வேண்டும்; தெரிந்திருக்க வேண்டும்.

 

நீர் நிலைகள், குறிப்பாக ஆழமான கிணறுகள், அசுத்தமடைவதும், அதனால் மீன்கள் இறப்பதும் மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஒரு வேளை நீரை அசுத்தம் செய்யாதீர்கள்! நடுக்குறும் மீனின் கதி , உங்களுக்கும் வரும் என்று கம்பன் அறிவுரை பகர்கிறான் போலும்.

 

எது எப்படியாகிலும் இப்பேற்பட்ட உவமை அரிதிலும் அரிது. கம்பன் கையாளும் உவமைகளைப் பட்டியலிட்டுப் பார்த்தால் அவன் மேதா விலாசமும் நமக்கு வெள்ளிடை மலையென விளங்கும்.

 

–SUBHAM–

துணை இலாதவரும், புணை இலாதவரும்– கம்ப ராமாயணச் சுவை (Post No. 3061)

0c79b-ar2bkanda9.jpg

கவந்தன் படலம்

 

Written by london swaminathan

Date: 14th    August 2016

Post No. 3061

Time uploaded in London :– 12-47

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

கம்பன் காவியம் ஒரு கல்கண்டு! சுவைத்துக் கொண்டே இருக்கலாம்.

 

 

ராமன் ஒரு அவதாரம்; ஆயினும் மனிதனாகத் தோன்றினால் மனிதன் போலவே நடந்தால்தான் அவனை நாம் பின்பற்றுவோம். ராமன் தனது வாழ்க்கை மூலம் பல அரிய பண்புகளை நமக்குக் கற்பிக்கவந்தவன். ஆகவே துணையின் பெருமை, நட்பின் பெருமை, உதவி பெறுவதன் பெருமை ஆகியவற்றையும் நமக்குக் காட்டுகிறான்.

 

பஞ்ச தந்திரங்களில் ஒன்று சரியான நட்பைப் பெறுதல்; துணை இல்லாமல் ஒரு காரியமும் நடவாது. ஏழு கோடி அவுணர்களை வீழ்த்திய ராமனும் கூட துணை இல்லாமல் ஒருவேலையைச் செய்ய இயலாது.

 

 

ராமன் உதவி பெறுவதைவிட, கம்பன் அதை நமக்குச் சொல்லும் அழகு தனியே!

 

சுக்ரீவனின் நட்பைப் பெறுக – என்று ராம பிரானுக்கு  கவந்தன் அறிவுரை அறிவுரை வழங்குகிறான்

 

கணை உலாம் சிலையினீரைக் காக்குநர் இன்மையேனும்

இணை இலாதாள் தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்

புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல்

துணை இலாதவருக்கு இன்றால் பகைப் புலம் தொலைத்து நீக்கல்

 

–ஆரண்ய காண்டம், கவந்தன் படலம்

 

பொருள்:-

அம்புகளை வீசும் வில்லை உடைய (கணை உலாம் சிலை) உன்னைக் காப்பதற்கு பலம் உடையவர் யாருமில்லை.ஆயினும் ஒப்பில்லாத சீதையைத் தேடுவதற்கு (இண இலாள் தன்னை நாடற்கு), உதவி தேவை.

 

எதைப் போல என்றால்,

கப்பல் இல்லாமல் கடலைக் கடக்க முடியாது (புணை இலாதவற்கு வேலை/கடல் போக்கு அரிது)

 

அதேபோல

துணை இல்லாமல் பகைப் புலத்தை அழிக்க முடியாது.

kamban_stamp

நல்ல உவமை: இந்த உவமையை இந்துமத நூல்கள் முழுவதும் காணலாம். கடல் என்பது அவர்களுக்குத் தெப்பம் போல; உலகம் முழுதும் சென்று நாகரீகத்தைப் பரப்பியவர்கள் இந்துக்கள். அதனால் வேதம் முதல் நேற்றைய இலக்கியம் வரை கப்பல்-கடல் உவமை வரும்.

 

சம்சார சாகரம் = பிறவிப் பெருங்கடல் என்பதை கீதையிலும்  குற ளிலும் காணலாம். நிற்க.

 

திருவள்ளுவரும் இதை வலியுறுத்துவார்:-

 

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல்

–குறள் 677

ஒரு செயலைச் செய்பவன், ஏற்கனவே அந்தப் பணியைச் செய்து அறிவு பெற்றவனின் அனுபவத்தைப் பகிர்ந்து, அதைச் செய்வதே முறை.

MySt Kambar fdc

–Subham–

சூர் அறுத்தவனும் ஊர் அறுத்தவனும்! ராமாயண இன்பம் (Post No.3026)

350px-Shiva_Tripurantaka

Written by london swaminathan

Date: 1st August 2016

Post No. 3026

Time uploaded in London :–  11-45 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணம் படிக்கப்படிக்கத் தெவிட்டாதது. இதை பல்வேறு கோணங்களில் படிக்கவேண்டும். ஒவ்வொரு கடவுளுக்கும் கதா பாத்திரத்துக்கும் கம்பன் கொடுத்த அடைமொழிகளை மட்டும் தனியாக படித்து ரசிக்கலாம்.

 

ஆரணிய காண்டத்தில் அகத்தியப் படலத்தில் வரும் ஒரு பாடலைக் காண்போம்:

 

சூர் அறுத்தவனும் சுடர் நேமியும்

ஊர்  அறுத்த ஒருவனும் ஓம்பினும்

ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்

வேர் அறுப்பென் வெருவன்மின் நீர் என்றான்

 

பொருள்:-

சூர் அறுத்தவன் – முருகன்

சுடர் நேமி – திருமால்

ஊர் அறுத்தவன் – சிவன்

சூரபதுமனைக் கொன்ற முருகனும், காலநேமியைக் கொன்ற ஒளிமிகுந்த சக்ராயுதம் ஏந்திய திருமாலும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான ருத்திரனும், அவ்வரக்கருக்குத் துணையாக வந்து காத்தாலும், எந்த அரக்கர் பாவம் செய்தவர்களோ, அவர்களை அடியோடு அழிப்பேன்; எனவே நீங்கள் அஞ்ச வேண்டாம் என்றான் ராமன்.

surasamharan

தாரகன் என்ற அரக்கனுக்கு மூன்று பிள்ளைகள்: தாரகாக்க்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி. மூவரும் பிரம்மாவிடம் வரம் பெற்று மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். அவர்கள், நல்லோருக்குத் தொல்லை கொடுக்கவே சிவன் அந்த மூன்று கோட்டைகளையும் அழித்தார். அதனால் அவருக்கு திரிபுராந்தகன் என்று பெயர்.

 

இக்கதை 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலும் இருக்கிறது:-

 

ஓங்கு மலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ,

ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி,

பெருவிறல் அமரர்க்கு வென்றிதந்த

கறைமிடற்று அண்ணல் காமர் சென்னி

—– மதுரை இளநாகன், புறம்.55

 

முக்கண்ணன் (சிவன்) பூமியாகிய தேரில் சென்றான்; வேதங்களே குதிரையாக வந்தன. ஆதி அந்தணனாகிய பிரமன் தேர்செலுத்திச் செல்கிறான்; இமயமலையை வில்லாகவும், ஆதிசேடன் என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு வளைத்து தீ என்னும் அம்பால் மூன்று கோட்டைகளை எரித்தான். சங்க இலக்கியத்தின் நூல்களில் பல இடங்களில் சிவனின் திருவிளையாடல் இடம்பெறுகிறது.

 

இந்த த்ரிபுரம் எரித்த வரலாறு நமக்குப் பல உண்மைக  யும் உணர்த்தும்:–

 

அசுரர்களும் தவம் செய்தனர்; வரம் பெற்றனர்; அவர்களுக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவந்தான் கடவுள். ஆகவே தேவர்கள் ஆரியர் என்றும், அசுரர்கள் திராவிடர் என்றும் வெளிநாட்டினர் சொன்ன கதைகள் யாவும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயின.

tripura

அசுரர்களின் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில் இருப்பதையும் கவனிக்க வேண்டும். தமிழில் இல்லை.

மேலும் சங்க இலக்கிய காலத்திலேயே தமிழ் இந்துக்களுக்கு ராமாயண, இதிஹாச புராணங்கள் நன்கு தெரிந்திருந்தன.

 

மேலும் ரஷியாவும் அமெரிக்காவும் SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷட்டில் கட்டுவதற்குமுன் நாம் ‘ஸ்பேஸ் ஷட்டில்’ வைத்திருந்தோம். திரிபுரம் என்ற மூன்று கோட்டைகளும் வானில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.

 

–Subham–