Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Muslim invaders drove out
Indian scholars to Tibet
Muslim invaders destroyed Buddhist monasteries of Udandapura
and Vikramasila (In Bihar region) around 1200 CE. Many of the monks were killed
and others fled to various countries. The learned Sakyasri went to Orissa and
afterwards to Tibet; Ratnarakshita to Nepal;Buddamitra and others sought refuge
in South India, While Sangama Srijnana with several of his followers went to
Burma and Cambodia. And Buddhism became extinct in Magadha (modern
Bihar).
Many emigrants from Magadha rejoined their brethren in the
South and founded colleges in Vijayanagara, Kalinga and Konkan. The
comparatively satisfactory condition of Buddhism in the Deccan about that time
is attested by the rich donations to the monastery at Dambal.
Monks of the monasteries Udandapura and Vikramasila on their
dispersion carried with them their arts and learning in the same manner as the
Byzantine Greeks on their expulsion from Constantinople bore with them their
intellectual treasures to the Italian cities. In the kingdom of Deccan and in
Tibet the Buddhist refugees found hospitable asylums, just as the Greek
philosophers found in the Florentine Republic under the Medici.
Tantric mysticism and alchemy were taught at the Universities of Nalanda, Udandapura and Vikramasila in Maghada and Central India and from thence it spread to Bhot ( Tibet) and to South India.
The Tantras found a home in China. Amoghavagra, a Brahmin converted to Buddhism, resided in China between 746 and 771 CE. He spread the science of supernatural powers, Siddhis, there.
In Tibet Tibetan scriptures Kanjur (Kang- Gyur-The Translaation of the Word)) and Tanjur (Stan-ghyur-The Translation of the Treatises) ) were the Tibetan equivalent of Buddhist Tripitaka. Both represent an immense collection of works (108+224 Volumes) primarily translated from the Sanskrit and subsidiarily from the Chinese languages between the 7th and the13th centuries . These collections are of considerable value as most of their Sanskrit originals are either lost or now unavailable. The faithful accuracy of these translations and their fidelity to the original enable us often to reproduce the Sanskrit texts and thus provide us valuable historical data.
Tanjur, though a commentary of Kanjur (108 volumes) , is
twice as large as the former and consists generally of 225 large volumes. Some
parts of Tanjur are believed to date back to the seventh century, though the
major portion was composed later. It is divided into two main classes Rgyud,
corresponding to the Sanskrit Tantra and Mdo, corresponding to Sanskrit Sutra
(Science and Literature).
MEDICINE, ASTROLOGY & ASTRONOMY
Some five volumes of Tanjur are devoted to medicine and some
others to astronomy or astrology. We are indebted to a great Hungarian scholar
Csoma de Koros for his pioneering work on the study of these two famous
encyclopaedic Tibetan scriptures. In his analysis of the contents of the Mdo,
Csoma has mentioned a work on preparing quick silver, (mercury) described as
the most powerful agent for subduing every sickness and for improving the
vigorous of the body, as well as a work on turning base metals into gold.
Pandit Vidhusekhar Bhattacharya, in his article on Sanskrit
Treatises on Alchemy as translated into Tibetan has discussed about four works
and given more information. He gave the Sanskrit names of four treatises as
1.Rasa siddhi sastra
2.Dhatuvada sastra
3.Sarvesvara rasayana
4.Dhatuvada
Some of these works are translated into English.
The original Sanskrit texts of these works belong to eighth
or ninth centuries. They are completely lost and fully depend upon
Tibetan aand Chinese translation.
Rasa means mercury or quicksilver
and Rasayana means Alchemy.
Source book – History of
Chemistry in Ancient and Medieval India
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கவிஞர் கண்ணதாசன் கேட்கும் கேள்விக்கு யாராலாவது மறுத்துப்
பேச முடியுமா?
ஆம், கல்லெல்லாம் மாணிக்கக் கல் ஆகாது.
மாணிக்கத்தின் குணாதிசயங்களும் பலன்களும்!
ரூபி (Ruby)
என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மாணிக்கம் நவரத்தினங்களுள்
அற்புதமான ஒரு ரத்தினம்.
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுடன்
தொடர்பு கொண்ட ரத்தினம் இது. எண் கணிதத்தில் ஒன்று என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டதும்
இதுவே தான்!
சூரிய காந்த மணி,கெம்பு, சீயம்
என்று அழைக்கப்படும் இந்தக் கல் சூரியன் தரும் பிரகாசம், புகழ், மேன்மை, வெற்றி ஆகியவற்றை
தரும்!
சூரியன் ஒரு ஜாதகத்தில் ஐந்து
மற்றும் ஒன்பது ஸ்தானங்களில் இருக்கும் போது மாணிக்கம் அணிவது சிறந்த மேன்மையை ஜாதகருக்குத்
தரும்.
மாணிக்கத்தில் எந்த மாணிக்கத்தை
அணிவது என்ற கேள்விக்கு பல காலமாகச் சொல்லும் பதிலைத் தான் இன்றும் சொல்ல முடியும்!
பர்மாவிலிருந்து கிடைக்கும் சிவப்பு வண்ண மாணிக்கம் மிகவும் சிறந்தது.
மாணிக்கம் வைரத்திற்கு அடுத்தபடி
மிகவும் கடினமானது.
பிரடரிச் மோ என்ற ஜெர்மானிய
அறிஞர் ஒவ்வொரு கல்லுக்கும் உள்ள கடினத்தன்மையை வரையறுத்தார். அவர் கூறும் அளவு அவரது
பெயாராலே மோ அலகு எனக் கூறப்படுகிறது.
இதன் படி மிகவும் கடினமான வைரம்
10 என்ற அலகைப் பெறுகிறது. அதற்கு அடுத்தபடியாக 9 என்ற மோ அலகைப் பெறுவது மாணிக்கம்.
மாணிக்கத்தின் ஒப்படர்த்தி
3.99லிருந்து 4.05 வரை இருக்கும். இதன் ஒளி விலகல் எண் 1.756 ஆகும்.
பலவித நிற வேறுபாடுகள் கொண்ட
மாணிக்கம் கிடைக்கப்பெறுகின்றன.
புறா ரத்த வண்ணம் எனப்படும்
(Piegeon Blood Red) மாணிக்கமே மதிப்பு மிக்கது, அணிவதற்கு ஏற்றது.
கண்களில் நோய் உள்ளவர்கள் மாணிக்கம்
அணிந்தால் அந்த நோய்கள் விலகும்.
உடலின் வலிமை கூடும்.வீரிய விருத்தி
உண்டாகும்.
ஆயுளைக் கூட்டும்.
மனதிற்கு சாந்தியைத் தரும்.
அதிகாரத்தைக் குறிக்கும் கல் என்பதால் பழைய காலத்தில் மன்னர்கள் இதை அணிவது வழக்கம். இன்றைய நாட்களில் தலைமை அதிகாரி (CEO) க்கு உரிய கல் இது.
ARGENTINA’S PRESIDENT WITH HER RUBY NECKLACE
தலைமை பீடத்தில் இல்லாதவர் இதை
அணிந்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். அரசியலிலும் ஏற்றம் தரும் கல் இது.
வைத்திய சாஸ்திரங்களில் மாணிக்கத்தின்
பெருமை பலவாறாகப் புகழப்படுகிறது.
பதார்த்த குணசிந்தாமணி என்ற
புகழ்பெற்ற பண்டைய வைத்திய நூல் இதைப் பற்றிக் கூறும் போது,
‘சுர ரோகம் சன்னிகளின் தோஷம்
அதிதாகம்
உரமான மேகம் ஒழியும் – திரமாக
ஊணிக்கொள் நேத்திரநோய் ஓடும்
அரவீன்ற
மாணிக்கத்தால் வசியமாம்’ என்று கூறுகிறது.
இதன் பொருள் ; சுர நோய் தீரும். அதி தாகம், மேக நோய் ஒழியும். கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் போகும். வசியம் உண்டாகும்.
பண்டைய நாகரிகங்களில் மாணிக்கம்!
பண்டைய நாகரிகங்களில் எகிப்திய
நாகரிகம் உள்ளிட்ட நாகரிகத்தில் இது செய்வினை மற்றும் தீய சக்திகளிடமிருந்து காத்துக்
கொள்ள அணியப்பட்டது. மாணிக்கத்தை நனைத்து விட்டு அந்த நீரை வயிற்று வியாதிகளுக்கு அருந்துமாறு
வைத்தியர்கள் அறிவுறுத்தினர். அத்தோடு இதன் பொடியை ரத்த சம்பந்தமான நோய்கள் தீர்க்கவும்
இதர மருந்துப் பொருள்களுடன் சேர்ந்து பயன்படுத்தினர்.
எப்போது முதல் முறையாக அணிவது?
சுக்ல பக்ஷ ஞாயிற்றுக்கிழமை
அன்று சூரிய ஹோரையில் இதை அணிவது நலம்.
தங்கம் அல்லது தாமிரத்தால் செய்யப்பட்ட
மோதிரத்தில் இதைப் பதித்து அணியலாம்.
முதல் முறை அணியும் போது பாலில் இதை அமிழ்த்திப் பின்னர் நீரால் அலம்பி விட்டு அணிதல் வேண்டும்.
நான்கு வகை நல்ல மாணிக்கக் கற்கள்!
மிகப் பழைய நூலான ரஸ ஜல நிதி
மாணிக்கத்தைப் பற்றிய ஏராளமான விவரங்களைத் தருகிறது:
மாணிக்கம் நான்கு வகைப்படும்
1) பத்மராகம் 2) குருவிந்தஜா 3)சௌகந்திகா 4) நீல காந்தி
இதில் தாமரை வண்ணத்தில் (வெள்ளையுடன்
கூடிய சிவப்பு வண்ணம்) கண்ணுக்கு விருந்தாகும் ஒளி பொருந்திய ஒளி ஊடுருவும் வட்ட வடிவமான மிருதுவான ஆனால் கனமான மாணிக்கமே சிறந்தது.இதுவே
பத்மராகம்.
கோரண்டம் (Corundum) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது
சம்ஸ்கிருதத்தில் குருவிந்தம் என அழைக்கப்படுகிறது.
லலிதாம்பிகையின் தலையில் அணியப்பட்டுள்ள
கிரீடம் குருவிந்தத்தால் ஆனது என்பதிலிருந்தே இதன் சிறப்பை அறியலாம். செக்கச் செவேலென
இருக்கும் அழகிய கல் இது.
சௌகந்திகம் மஞ்சள் கலந்த சிவப்பு
வண்ணத்துடன் இருக்கும்.
நீல கங்கா நதியிலிருந்து கிடைப்பது
நீல காந்தி. சிவப்புடன் நீல வண்ணம் உள்ளிருந்து ஒளிர இரண்டு வண்ணமும் கலந்த கல் இது.
இந்த நான்கு வகைகளும் அதன் தரத்தின் படி மேலே வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
குறைபாடுகள் எவை?
மாணிக்கத்தில் உள்ள குறைகள்
பின் வருமாறு:
துளைகள் உள்ளது, அழகில்லாமல்
இருப்பது, ஒளியில்லாமல் இருப்பது, கரடுமுரடாக இருப்பது, ஓளி புகாத தன்மையுடன் இருப்பது,
தட்டையாக இருப்பது, மிகவும் லேசாக இருப்பது, வடிவமைப்பில் ஒழுங்கற்ற தன்மையுடன் இருப்பது.
இவையிருப்பின் அந்தக் கல்லை
வாங்கக் கூடாது.
ஒரு மாணிக்கத்தில் இரு வேறு
ஒளிகள் அதன் இரு வேறு பக்கங்களிலிருந்து வந்தால் அது அழிவைத் தரும். வாங்கக் கூடாது.
காகத்தின் கால் போல உள்ள தோற்றம்
அளிக்கும் மாணிக்கம் தோல்வியைத் தரும்.
விரிசல் இருப்பின் அதை அணிந்தால்
ஆயுதங்களால் காயம் ஏற்படும்.
மாணிக்கத்தின் உள்ளே சிறு கூழாங்கல்
இருப்பின் நண்பர்கள் அழிவர்; மாடு உள்ளிட்ட கால்நடைகள் அழிந்து படும்.
மாணிக்கத்தின் உள்ளே பால் போன்ற
ஒரு பூச்சு இருப்பின் அதை அணியக் கூடாது. அது துன்பத்தைத் தரும்.
தேனின் நிறத்தைப் போல இருக்கும்
மாணிக்கமும் அணிவதற்குத் தக்கதல்ல. இதை அணிந்தால் ஆயுள் குறையும். துரதிர்ஷ்டம் வரும்.
புகழ் குறையும்.
ஒளி இல்லாத மாணிக்கம் பண இழப்பை உண்டாக்கும்.
புகை போன்ற வண்ணம் உடைய கல் மின்னலினால் விபத்தை ஏற்படுத்தும்.
இவை எல்லாம் ரஸ ஜல நிதி தரும் அறிவுரை!
PICTURE OF RUBY EAR RINGS
நல்ல
மாணிக்கம் எது?
அருமையான மாணிக்கக் கல்லை எப்படி அறிவது?
சூரிய ஒளி அதன் மேல் படப்பட சுற்றுப்புறம் எல்லாம் பிரகாசிக்கும்.
இளங்காலை நேரத்தில் உதய சூரியனின் கிரணங்கள் பட்டவுடன் சிவப்பு ஜூவாலை
போன்ற ஒளியை எந்தக் கல் கக்குகிறதோ அது சிறந்தது.
தூரத்திலிருந்து பார்க்கும் போது சிவப்புத் தீ போல ஜொலிப்பது வம்ச காந்தி
என்று அழைக்கப்படுகிறது. அது உடனடியாக செல்வத்தைத் தரும்.
இருளில் ஒரு மாணிக்கத்தை வைத்தால் அது தன் ஒளியால் சுற்றுப்புறத்தில்
ஒளியைத் தருமாயின் அது நல்ல கல்லாகும்.
கடவுளுக்குக் கூடக் கிடைக்காத மாணிக்கம் அல்லது கடவுளரே ஆவலுடன் விரும்பி
ஏற்கும் மாணிக்கம் எது எனில். அதை ஒரு தாமரை மலரின் உள்ளே வைத்தவுடன் அது விகசித்து
உடனே இதழ் விரித்து மலரும். அதுவே அற்புதமான மாணிக்கக் கல்!
மாணிக்கத்தின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?
இரண்டு கேரட் சாதாரணமாக அணியப்படுகிறது.
RUBY STAMP FROM VIETNAM
பிரபலமான மாணிக்கக் கற்கள்!
இது வரை உலகம்
கண்ட புகழ் பெற்ற மாணிக்கக் கற்கள் வருமாறு:
ப்ளாக் ப்ரின்ஸின்
ரூபி (Black Prince’s Ruby)
தைமூர் ரூபி (Timur Ruby)
ரோஸர் ரீவ்ஸ் ஸ்டார் ரூபி (Rosser Reeves Star Ruby)
எட்வர்ட்ஸ் ரூபி
(Edwardes Ruby)
உலகின் பிரபலமான நடிகையும் பேரழகியுமான
எலிஸபத் டெய்லர் 1968 ஆம் ஆண்டு ஒரு மாணிக்கம் பதித்த மோதிரத்தை அணிந்தார். அது உலகினரின்
கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
அதன் எடை 8.24 கேரட். அது 2011இல்
42 லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
(ஒரு டாலரின் இன்றைய ரூபாய் மதிப்பு 70) அதாவது ஒரு கேரட்டின் விலை சுமார் ஐந்து லட்சம்
டாலர்!
உலகின் அதிக எடையுள்ள ரூபி ஹோப் ரூபியாகும். இதன் எடை 32.08 கேரட்.
RUBY FROM THAILAND
மாணிக்கம் கிடைக்கும் இடங்கள்!
பர்மாவைத் தவிர அமெரிக்கா மற்றும்
ஆஸ்திரேலியாவிலும் மாணிக்கம் கிடைக்கிறது.
ஒரு முக்கியமான விஷயம், நமது
தமிழ்நாட்டில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மாணிக்கம் உள்ளிட்ட பல கற்கள் உள்ளன.
ரத்தினக் கலையில் நிபுணர்களாக
உள்ள வல்லார் இந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினால் தமிழகம் மாணிக்க நாடாக ஆகி விடும்.
சிலம்பில் மாணிக்கம்!
தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம்
மாணிக்கத்தையும் முத்தையும் மையமாகக் கொண்டு முடிகிறது.
பாண்டிமாதேவி என் பொற்சிலம்பில்
முத்துப் பரல்கள் உள்ளது என்று கூற கண்ணகி தன் காற்சிலம்பை உடைத்துக் காண்பிக்க அதிலிருந்து
மாணிக்கப் பரல்கள் தெறித்து விழுந்தன.
“கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு
உடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே” என அழகுற அந்தக் காட்சியை அமைக்கிறார் இளங்கோவடிகள்.
கண்ணகியின் மாணிக்கக் கற்கள்
மன்னனின் வாயில் தெறிக்க, மதுரை பற்றி எரிந்ததையும் பின்னர் நடந்ததையும் அனைவரும் அறிவர்.
மாணிக்கம் இல்லாத இலக்கியம்
ஒளி இல்லாத இலக்கியம்.
ஆங்கில இலக்கியத்தில் ரால்ஃப்
வால்டோ எமர்ஸன் உள்ளிட்ட கவிஞர்கள் மாணிக்கத்தைத் தங்கள் கவிதையில் இழைத்துள்ளனர்.
தமிழில் மாணிக்கத்தின் பெருமையைச் சுட்டிக் காட்டும் நூற்றுக் கணக்கான பாடல்கள் உள்ளன.
பெரியாழ்வார்,
“மாணிக்கம் கட்டி வயிரம் இடை
கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச்
சிறு தொட்டில்”
என்று வர்ணிப்பதிலிருந்து ஆரம்பித்தால்
மாணிக்கப் பட்டியல் நீளும்.
அருளாளர்கள் அனைவரும் மாணிக்கமே
என இறைவனை அறைகூவி அழைக்கும் போது மாணிக்கத்தின் உண்மையான மதிப்பு தெரிய வருகிறது,
இல்லையா?
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
மாலைமலர் 28-9-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் நவரத்தினங்கள் – ஒரு அறிமுகம்!
ச.நாகராஜன்
பூமித் தாய் எல்லையற்ற கருணை
உள்ளம் படைத்தவள்!
தன் மக்கள் நீடித்து ஆரோக்கியத்துடனும்
மன நிம்மதியுடனும் பூரணமான நூறு ஆண்டுகள் வாழ என்னென்ன தர வேண்டுமோ அனைத்தையும் தந்து
அவள் அருளியுள்ளாள்.
ஆகவே தான் எழுந்தவுடன் உள்ளங்கைகளைப் பார்த்தவாறே அவளுக்கு நன்றி கூறி விஷ்ணு பத்னி நமஸ்துப்யம்; பாத ஸ்பர்ஸம் க்ஷமஸ்வ மே – விஷ்ணுவின் பத்னியே, உன்னைக் காலால் தொட்டு இன்று முழுவதும் நடக்க இருக்கிறேன். இதற்காக என்னை மன்னித்தருள் என்று கூறி வேலையைத் தொடங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது நமது அற நூல்கள். நன்றி மறப்பது நன்றல்ல, அல்லவா!
தானியங்கள், நீர், காற்று, இருக்க இடம், வெப்பம்,
வானிலிருந்து விளையும் நன்மைகள் என அனைத்தையும் தன் மண்டலத்தில் தந்த அவள் கருணைக்கு
எல்லையே இல்லை.
இத்துடன் மூலிகைகள், மினரல்கள்
எனப்படும் தாதுப் பொருள்கள், தங்கம் உள்ளிட்ட விலை மதிக்கவே முடியாத உலோகங்கள் உள்ளிட்ட
அனைத்தையும் சொல்லப் போனால் முடிவே இருக்காது.
அன்னை பூமிக்கு 53 பெயர்கள்
உண்டு. அதில் முக்கியமான ஒன்று வசுந்தரா என்பதாகும்.
வசுந்தரா என்றால் செழிப்பான
நிலத்தையும் அளப்பரிய செல்வங்களையும் கொண்டவள் என்று பொருள். ‘உலகம் முழுவதும் எதிலிருந்து
ஆரம்பித்து எதில் முடிகிறதோ அது வசுந்தரா’ என்று இன்னொரு பொருளும் உண்டு. புத்த மத நூல்களும் பாலி மொழியில்
உள்ள கிரந்தங்களும் தரும் பொருள்கள் பிரமிக்க வைப்பவை; ரகசியமானவை!
இப்படிப்பட்ட அரிய பூமியில்
அரிய பிறப்பான மனிதப் பிறப்பை எடுத்துள்ள வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான
பிரச்சினைகள்.
இவற்றிற்கு அவரவர் அறிவுக்குத்
தக அவரவர் வழியில் தீர்வு காண்கின்றனர்.
மனம் கனிந்த அன்னை சரியான வழியைக்
காட்ட மகான்களையும், சித்தர்களையும் உலவ விட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழி
காண்பிக்கவே அவை பல சாஸ்திரங்களாக – அற நூல்களாக வடிவம் எடுத்தன.
அவற்றுள் ஒன்று தாதுப் பொருள்களைப்
பற்றிய சாஸ்திரம். இதன் முக்கியப் பகுதி நவரத்தினங்களைப் பற்றியது.
மணி என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது
இது.
இதன் முக்கியத்துவம் என்ன?
மூன்று முக்கிய சாஸ்திரங்களுள்
முக்கியமானது மணிகள் பற்றியதாகும்.
அன்யானி சாஸ்த்ராணி விநோத மாத்ரம் – மற்ற கலைகள் எல்லாம் வேடிக்கைக்காக உள்ளனவே தான்.
ஆபத்துக் காலங்களிலும் அனைத்து
சமயங்களிலும் உதவுவது : மணி மந்த்ர ஔஷதமே என்று மேலோர் குறிப்பிடுவர்.
மணி என்பதில் ஜ்யோதிஷம், வைத்யம்,
வாஸ்து, எண் கணிதம் , வைத்தியம், பக்தி எனப்படும் இறையருள் பெறும் துதி செய்தல் உள்ளிட்ட
அனைத்துக் கலைகளும் இணைகின்றன.
மினரல் எனப்படும் தாதுபொருள்களை
கணக்கிலடங்காத அளவில் பூமித் தாய் தந்திருக்கிறாள்.
அவற்றில் 300 அரிய தாதுக்களை
அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்; அவற்றின் அரிய பயன்களைச் சொல்லி வருகின்றனர்.
இந்த முன்னூறில் சுமார் எண்பதுக்கும்
மேற்பட்டவற்றை அரிதான மணிகள் என மணிகளில் நிபுணர்களாக உள்ளோர் குறிப்பிடுகின்றனர்.
இந்த எண்பதில் ஒன்பது மணிகளை உலகில் உள்ள அனைத்து பழைய நாகரிகங்களும் – எகிப்திய, அஸிரிய,
ரோமானிய, கிரேக்க, யூத, ஹிந்து, பௌத்த, அராபிய நாகரிகம் உள்ளிட்ட அனைத்துமே – உச்சி மேல் வைத்துக் கொண்டாடுகின்றன.
ஒன்பது மணிகளை நவ ரத்தினங்கள் என்று சந்தோஷத்துடன் குறிப்பிடுகிறோம். ஏனையவை உபரத்தினங்கள் எனப்படும். வணிக நோக்கில் இவை ராசிக் கற்கள் என்ற பெயரைப் பெறுகின்றன.
நவரத்தினங்களாவன :
1) மாணிக்கம் – Ruby
2) முத்து – Pearl
3) பவளம் – Coral
4) மரகதம் – Emerald
5) புஷ்பராகம் – Topaz
6) வைரம் – Diamond
7) நீலக்கல் – Blue Sapphire
8) கோமேதகம் – Zircon
9) வைடூரியம் – Cat’s Eye
ஹிந்து நாகரிகத்தில் கருட புராணம்,
சரக சம்ஹிதை, ஜோதிட சாஸ்திரம் உள்ளிட்ட நூல்கள் ஒவ்வொரு ரத்தினத்தின் பயனையும் தன்மையையும்
விரிவாக விளக்குகின்றன.
இவை பிரமிப்பை ஊட்டுபவை; ஏனெனில்
இன்று அறிவியல் பல நவீன சாதனங்களின் உதவியால் கூறுபவற்றை அவை தீர்க்கமாக துல்லியமாகப்
பல்லாண்டுகளுக்கு முன்பேயே குறிப்பிட்டிருப்பதால் தான் இந்த பிரமிப்பு.
ரஸ ஜல நிதி என்ற நூல் ஒவ்வொரு
விஷயத்தையும் ‘பிட்டுப் பிட்டு’ வைக்கிறது; வியப்பின் உச்சிக்கே
போய்விடச் செய்கிறது.
ஆயுள் நீட்டிக்க ரத்தினக் கற்களை
அணிக என்று ஆணையிடுகிறார் சரகர்.
தேர்ந்த மருத்துவரான இவர் நூறு
வயது வாழ்வதற்கான வழிகளைத் தெள்ளத் தெளிவாக தனது சரக சம்ஹிதை நூலில் விளக்குகிறார்.
சந்தோஷமாக வாழ்க்கை எது என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
அதே நூலில் (அத்தியாயம் 19 சுலோகம்
7) வெளியில் கிளம்பும் போது –
ரத்தினக் கற்களைத் தொடாமல்
(அணியாமல்) செல்லக் கூடாது.
பெரியோர்களின் பாதங்களைத் தொடாமல்
செல்லக் கூடாது.
நெய், நல்ல மங்களகரமான பொருள்கள், மலர்கள் இவற்றைத் தொடாமல் செல்லக் கூடாது.
வணக்கத்திற்குரிய பெரியோர்கள்,
பூசிக்கப்படும் பொருள்கள் ஆகியவை வலப்புறம் இருக்கும்படியும், சிறியவர்கள் இடப்புறம்
இருக்கும்படியாகவும் உள்ள நிலையில் கிளம்ப வேண்டும். (அதாவது பூஜை செய்த பின் பெரியோர்களை
வலமாகச் சுற்றிக் கிளம்ப வேண்டும்.)
இதை அடுத்து, அடுத்த சுலோகத்தில்
ரத்தினக் கற்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
ரத்னக் கற்களை கைகளில் அணியாமலோ,
குளிக்காமலோ சாப்பிடக் கூடாது என்று வலியுறுத்தும் அவர் மூலிகைகளை உடலிலே தரிக்குமாறும்
அறிவுறுத்துகிறார்.
ரத்னக் கற்களை Precious Stones – அரிய, மதிப்புடைய கற்கள் என்று
கூறுகிறோம்.
அரிய கற்கள் என்றால் எதை வைத்து
அப்படிச் சொல்ல முடிகிறது.
இதற்கான மேலை நாட்டு வரையறுப்பு
–Beauty,
Durability, Rarity – அழகு, நீடித்திருக்கும்
தன்மை, அரிதாகவே கிடைப்பது – ஆக இந்த மூன்று பண்புகளும் இருந்தால் அந்தக் கல்லை அரிய
கல் என்று கூறலாம் என மேலை நாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.
நமது நூல்களோ இன்னும் ஒரு பண்பைச்
சேர்க்கிறது.
Usablility – பயன்மை; அது வாழ்க்கைக்கு உதவுகிறதா என்று பார் என்கிறது!
மூன்று பண்புகளின் விளக்கம்
என்ன?
அழகு (Beauty) : அழகு அவரவரது கண் பார்வையைப் பொறுத்தது. இன்று இருக்கும்
டிசைன் நாளை இருப்பதில்லை. வரம்பற்ற கற்பனைக்கு இடமாக்கித் தன்னை வெவ்வேறு விதத்தில்
கவர்ச்சியாகக் காட்டிக் கொள்ளும் கல்லே அழகுக் கல்!
நீடித்திருக்கும் தன்மை (Durability) : நிறைய விலையைக் கொடுத்து வாங்கி பெருமையுடன் அதை அணியும்
போது அது நீடித்திருக்கிறதா அல்லது உடனே மங்கி தன் தன்மையை இழந்து அழிகிறதா என்பதையும்
பார்க்க வேண்டி இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக அடுத்த தலைமுறைகளுக்கும் செல்லும் கல்லே
நீடித்திருக்கும் கல்.
அரிதாகவே கிடைப்பது (Rarity) : தனது பெருமையை நிலை நாட்டிக் கொள்ள விரும்பும் ஒருவர் இது கிடைக்கவே கிடைக்காத ஒன்று என்று சொல்லும் போது அவர் அடையும் கர்வமும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்காதது.
இந்த மூன்றும் இருந்தாலும் இது
நமக்கு உகந்ததா என்பதையும் பார் என்று சொல்கிறது நமது அற நூல்கள்.
உலகில் உள்ள 750 கோடிப் பேர்களில்
ஒருவர் போல ஒருவர் இல்லை. கை ரேகை தனி; கண்ணின் கரு விழித் திரை (Iris) தனி. மரபணு தனி. அவர்களது ஆசையும்
விருப்பமும் தேவையும் தனித் தனி தான்! உடல் வியாதிகளும், உள்ள மகிழ்ச்சிகளும் தனித்
தனி தான்!
இந்த அடிப்படையில் நவ ரத்தினங்களை
அலசுவோம்:
மாணிக்கம் உஷ்ண அலைகளை வெளிப்படுத்துகிறது.
குளிர்ச்சி சம்பந்தமான வியாதிகளைப் போக்க வல்லது. ரத்த சோகை, குளிர், ஜன்னி முதலானவற்றை
உடனே குணப்படுத்தும்.
முத்து மன சம்பந்தமான அனைத்து
நோய்களையும் தீர்க்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
பவளம் பக்கவாத நோயைக் குணப்படுத்தும்.
வயிறுக் கோளாறுகள், மலச்சிக்கல், நீரிழிவு நோய் ஆகியவற்றைப் போக்கும்.
மரகதம் பில்லி சூனியத்தை நீக்கும்.
துர்த்தேவதைகளை விலகச் செய்யும்.
புஷ்பராகம் குழந்தை இல்லையே
என்ற ஏக்கத்தை நீக்கி புத்திர பாக்கியத்தைத் தரும்; மலடை நீக்கும்.
வைரம் குடும்ப ஒற்றுமையை ஓங்கச்
செய்யும். கலைகளில் வல்லவராக்கும். குறிப்பாக நாட்டியம், நடிப்பு, சினிமா துறையில்
உள்ளோர் அணிய வேண்டிய கல் இது. வாயு, பித்தம், கபம் ஆகிய மூன்றின் தோஷங்களை நீக்க வல்லது.
நீலக்கல், ஜல நீலம் மற்றும் இந்திர நீலம் என இது இருவகைப் படும். தோல் நோய்களைப் போக்கும். தொழு நோய் உடையவர்கள் கூட இதை அணிந்து நலம் பெறலாம்.
கோமேதகம் பசியைத் தூண்டி ஜீரண
சக்தியை அதிகரிக்கும்.
வைடூரியம் வாழ்வில் ஏற்படும்
பெருந்துன்பங்களிலிருந்து காக்க வல்லது.
இப்படிப்பட்ட ரத்தினங்களை ஜோதிட
சாஸ்திரம் ஆதரிக்கிறது; அணிந்து பயன் பெறுமாறு அறிவுறுத்துகிறது.
கற்களுக்கும் கிரகங்களுக்கும்
உள்ள தொடர்பை ஜோதிட நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன.
சூரியன் – மாணிக்கம்
சந்திரன் – முத்து
செவ்வாய் – பவளம்
புதன் – மரகதம்
குரு – புஷ்பராகம்
சுக்ரன் – வைரம்
சனி – நீலக்கல்
ராகு – கோமேதகம்
கேது – வைடூரியம்
ஆக நவ மணிகளும் கிரஹ தோஷங்களைப்
போக்க வல்லவை.
ரத்தினங்களைத் தேர்ந்தெடுப்பது
ஒரு தனிக் கலை.
‘அறிவுறுத்தியபடி குறிப்பிட்ட
கல்லை அணிந்தேன்; ஆனால் நல்லது நடக்கவில்லை; மாறாக நிலைமை மோசமானது’ என்று ஒருவர் சொன்னால் அது பொய்யாக இருக்காது.
அவர் அணிந்திருந்த கல் உண்மையான,
தோஷமற்ற கல்லா என்பதை ஆராய வேண்டும்.
ஆம், கற்களில் உள்ள தோஷங்கள்
பல.
அதுவும் இன்றைய அறிவியல் உலகில்
செயற்கையாகச் செய்யப்படும் “கற்களை” அதிகப் பணம் கொடுத்து வாங்கி
அணிந்து பயன் இல்லாதது மட்டுமன்றி இன்னும் அதிகக் கெடுதல் ஏற்பட்டால் மனம் நோவது இயற்கை
தானே!
சாஸ்திரத்தைப் பழிக்காமல் அதைத் தந்த சதிகாரர்களைத் தான் பழிக்க வேண்டும்!
ஆகவே எச்சரிக்கையுடன் இந்தக்
கலையை அணுக வேண்டும்.
எல்லாத் துறைகளிலும் போலிகள்
உள்ளனர் – அறிவியல் துறை உட்பட!!
ஆகவே முதலில் தினமும் சிறிது
நேரம் இந்தக் கலைக்கு நேரம் ஒதுக்கி இதைப் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும். அட,
டி.வி. சீரியலுக்கு ஒதுக்கும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு ஒதுக்கினால் கூட போதும்,
வாழ்க்கை வளம் பெற உதவும் கற்களைத் தேர்ந்தெடுத்து விடலாம்.
இது உண்மை, வெறும் புகழ்ச்சி
இல்லை.
கற்க கசடறக் கற்க இந்தக் கலையை;
பின் அணிக அதற்குத் தக என்பது தான் நமக்கு உரித்தான சூத்திரம்.
சூஷ்மத்தைப் புரிந்து கொண்டால்
வெற்றி தான் பெறுவோம்!
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000.
BOOK
TITLE- HINDU ASTRONOMY, AMERICAN MISSION PRESS, JAFFNA, 1848
தமிழர்களின் வானியல் அறிவு நுட்பமானது. வேத வானியலும்
தமிழர்களின் வானியலும் ஒன்றே தான். ஒத்துப் போவது தான்.
நுட்பமானது அது.
வானியலில் நுட்பமான கணிதம் ஜா கணிதம் என்று சொல்லப்படுகிறது.
இதைப் பற்றி மாயவரம் ஸ்ரீ
V.சுப்பிரமணிய சாஸ்திரிகள் நன்கு விளக்கியுள்ளார்.
1969ஆம் ஆண்டு இவர், கால லக்ஷணம், லீலாவதி பஞ்சாங்கம், கலியுக கடிகாரம், லீலாவதி கிரக
கணிதம், நட்சத்திர மண்டலம், சந்திர க்ரஹணம், சூரிய க்ரஹணம், லீலாவதி ஜாதக கணிதம் உள்ளிட்ட
பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவர் கூறியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்தால் சில
விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஜா கணிதம் என்றால் என்ன?
30 வருடத்தில் சனி ஒரு சுற்று சுற்றி வருகிறது.
27 நாள் 8 மணியில் சந்திரன் ஒரு சுற்று சுற்றி வருகிறது.
ஆகாய வீதி பற்றிய கணிதம் இக்காலத்தில் இரு விதமாகக்
கணித்துக் கூறப்படுகிறது.
ஒன்று வாக்கியம் (பாம்புப் பஞ்சாங்கம் என்று நடைமுறை
வழக்கில் அறியப்படுவது இது)
இன்னொன்று திருக்கணிதம்.
வாக்கியப்படி பஞ்சாங்கம் சொல்பவர்கள் தேவதைகளுக்கு
தலைகள், கைகள், கால்கள் விசேஷமாக உண்டு என்று சொல்கின்றனர்.
திருக்கணிதம் கணிப்பவர்கள் சந்திரனுக்கு வடக்கில்
சனி, குரு அல்லது சித்திரை நட்சத்திரம் என்று கூறி அதன் படி கணிக்கின்றனர்.
வாக்கிய கனிதம் வேத காலத்தது.
வேத காலத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களை செய்யும் போது
வானவீதியில் காலப் போக்கால் சில வித்தியாசங்கள் தென்பட்டன.
அதைச் சரி செய்ய ஜா வாக்கியங்களை காலத்திற்கு ஏற்ப
கணித, வான சாஸ்திர, ஜோதிட நிபுணர்கள் ஏற்படுத்தினர்.
மகர ஜா, மந்த ஜா, கடக ஜா ஆகியவை செவ்வாய், புதன்,
குரு, சுக்கிரன், சனி ஆகியவை சம்பந்தப்பட்டவற்றிற்கு உகந்தவை.
மேஷாதி ஜா, கடகாதி ஜா, துலாதி, மகராதி ஆகியவை சூரியனுக்கும்
சந்திரனுக்கும் சம்பந்தமுடையவை; அதற்குப் பயன் படுபவை.
ராகு மற்றும் கேதுவுக்கு ஜா வாக்கியங்கள் கிடையாது.
நுட்பமான இந்த ஜா வாக்கியங்கள் வானத்தில் காலப் போக்கில்
ஏற்படும் சிறிய மாறுதல்களைக் கூடக் கவனித்து கணிதத்தை இன்னும் அதி நுட்பமாக ஆக்கின.
தமிழ் நாட்டில் தான் அற்புதமாக பஞ்சாங்கம் கணிக்கப்படும்
முறை உருவானது.
திருவையாற்றில் அதி நுட்பமான வான சாஸ்திரத்தை அறிந்த
நிபுணர்கள் வாக்கிய பஞ்சாங்கத்தையும் திருக்
கணித பஞ்சாங்கத்தையும் கணித்தனர்.
இரு கை விரல்களை வைத்து மனப்பாடமாக இருந்த சூத்திரங்களை
அடிப்படையாகக் கொண்டு இவர்கள் துல்லியமாகக் கணித்த படியே சூரிய சந்திர கிரகணங்கள் நிகழும்
என்பது எவ்வளவு ஆச்சரியகரமான விஷயம்!
இந்த நிபுணர்களை அழைத்து இவர்களின் கலை அழிந்து போகாமல்
காக்க ஹிந்து ஜோதிட, வானவியல் ஆர்வலர்களும் மத்திய மாநில அரசும் முன் வர வேண்டாமா?
அடுத்து வருடங்கள் இரு வகை.
சாந்திரமான (அதாவது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட)
ஸம்வத்ஸரம்; இன்னொன்று ஸௌரமான (அதாவது சூரியனை அடிப்படையாகக் கொண்ட) ஸம்வத்ஸரம்.
சாந்திரமான ஸம்வத்ஸரம் 355 ராத்திரிகள் கொண்டது.
ஸௌரமான ஸம்வத்ஸரம் 365 ராத்திரிகள் கொண்டது.
இந்த இருவகை ஸம்வத்ஸர கணிதமும் இன்று தேவைப்படுகிறது.
இரவு பகல் எப்படி உண்டாகிறது என்பதை நன்றாகப் படித்தாலும்
அதன் உண்மை இது வரை மாயையாகவே அறிய முடியாதபடியே உள்ளது.
வானத்தில் ஏற்படும் கிரக சேர்க்கைகள் அற்புதமானவை.
அதையொட்டி பூமியில் ஏற்படும் நுட்பமான மாறுதல்கள்,
விளைவுகள் கூறப்பட்டன. அந்த சேர்க்கைகள் பூமியில் வாழும் மானிடர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும்
நல்ல மற்றும் தீய விளைவுகள் கூறப்பட்டன.
யுத்தம், சமாதானம், வளம், வறட்சி ஆகியவையும் சுட்டிக்
காட்டப்பட்டன.
இவை மாபெரும் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை.
ஏராளமான நிபுணர்களும், நிறைய பொருள் செலவும் ஏற்படும்;
இதற்குப் பல அடிப்படை வசதிகளும் வேண்டும்.
காலம் கை கூடினால் இந்த ஆய்வு முடிக்கப்படும் போது
ஹிந்து ஞானம் நன்கு வெளிப்படும். அதன் நன்மையும் புலப்படும்.
மே,2019 ஞான ஆலயம் இதழில் வெளியாகியுள்ள
இரண்டாவது கட்டுரை!
பாரதீய விஞ்ஞானத்தின் பன்முகப் பரிமாணங்கள்! – இங்கு இல்லாதது
எங்கும் இல்லை!
காதலை எழுதக் கற்றுக் கொடுக்கும் சாஸ்திரங்கள்!
ச.நாகராஜன்
புற ஆராய்ச்சிகளால் மேலை நாட்டினர்
கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் உள்ளுணர்வால் ரிஷிகளின் அகத்தில் தோன்றும் பாரதீய விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளுக்கும்
ஏராளமான வித்தியாசங்கள் உண்டு.
ஒரு கண்டுபிடிப்பை இன்னொரு கண்டுபிடிப்பு
நிராகரிப்பது மேலை நாட்டு விஞ்ஞானம். ஆனால் சத்தியத்தின் அடிப்படையில் நித்தியமாக என்றும்
உள்ள உண்மைகளைக் கண்டுபிடிப்பது பாரதீய விஞ்ஞானம்.
சுமார் நான்கு லட்சம் சம்ஸ்கிருத
சுவடிகளும் ஏராளமான தமிழ்ச் சுவடிகளும் திறக்கப்படாமல் அப்படியே உள்ளன.
ஆனால் ஆங்காங்கே மிக அரிதாக
ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தும் போது அவர்கள் தரும் அற்புதமான தகவல்களை அறிந்து வியக்கிறோம்.
எடுத்துக்காட்டாக இரண்டே இரண்டு
ஆய்வுகளை மற்றும் இங்கே குறிப்பிடலாம்.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார்
அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முனைவரான திருமதி கா.சத்தியபாமா தமிழ்ச்சுவடிகளை ஆராய்ந்து
மாயச்சதுரம் அமைக்கும் முறைகளைச் சுவடிகள் கூறுவதைக் கண்டு வியந்து அதை விளக்கியுள்ளார்.
சம்ஸ்கிருத நூலான பீஜ பல்லவா
என்பது கிருஷ்ண தைவக்ஞரால் இயற்றப்பட்டது. இது அல்ஜீப்ரா பற்றிய அழகான நூல். இதை ஆய்வு
செய்து டாக்டர் சீதா சுந்தர் ராம், “பீஜபல்லவா ஆஃப் க்ருஷ்ண தைவக்ஞா – அல்ஜீப்ரா இன் ஸிக்ஸ்டீந்த்
செஞ்சுரி இந்தியா – எ க்ரிடிகல் ஸ்டடி!”(Bijapallava of Krsna
Daivajna – Algebra In Sixteenth Century India – A Critical Study by Dr Sita
Sundar Ram) என்ற நூலை எழுதியுள்ளார்.
(287 பக்கம் உள்ள இந்த நூலை 2012ஆம் ஆண்டு ‘தி குப்புசாமி சாஸ்திரி
ரிஸர்ச் இன்ஸ்டிடியூட்’,மைலாப்பூர், சென்னை – 600004 வெளியிட்டுள்ளது. நூலின் விலை ரூ
400/).
எண்ணி எண்ணி வியக்கிறோம் – எப்படி பழைய காலத்திலேயே இப்படி அரிதான
விஷயங்களை பாரதீய விஞ்ஞானிகள் அல்லது ரிஷிகள் அல்லது அறிஞர்கள் எழுதியுள்ளனர் என்று!
(ஏற்கனவே இது பற்றிக் கட்டுரைகளை எழுதி விட்டதால் இவர்களைப் பற்றி இங்கு விவரிக்கவில்லை)
இந்த வகையில் நம் கவனத்தைக் கவர்பவர் மஹாஸ்ரீ அனெகல் சுப்பராய
சாஸ்திரி. இவரது வாழ்க்கை வரலாறு பிரமிப்பூட்டும் ஒன்று. இவரது அறிவோ நம்மைத் திகைக்க
வைக்கிறது.
இளம் வயதில் சொல்லொணாத் துன்பம் அனுபவித்தவர் ஸ்ரீ
சாஸ்திரிகள். ஒரு விதமான தோல் பற்றிய நோய் அவரைத் தாக்கவே அவர் கடும் துன்பமடைந்தார்.
ஒவ்வொரு இடமாகத் தவழ்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு நாள் தாகம் அதிகரிக்கவே
நீர் அருந்த ஒரு குளத்திற்குச் சென்றவர் அதில் வீழ்ந்து விட்டார். அப்போது தான் ஒரு
அற்புதம் நிகழ்ந்தது. ஒரு குகையில் தான் இருப்பதை அவர் கண்டார். அங்கு ஒரு மகான் அவர்
மீது கருணை மிகக் கொண்டு அவரது நோயைத் தீர்த்து வைத்தார்.
அத்துடன் பல சாஸ்திரங்களை அவருக்கு உபதேசித்தார்.
அற்புதமான அந்த ஆற்றலைப் பெற்ற சாஸ்திரி அதை மக்களுக்கு விளக்க ஆரம்பித்தார். பரத்வாஜ
ரிஷி அருளிய விமான சாஸ்திரம், சோலார் எனர்ஜி எனப்படும் சூரிய கிரணங்களின் ஆற்றலை விளக்கும்
அம்சுபோதினி உள்ளிட்டவற்றை பெங்களூரில் உள்ள வெங்கடாசல சர்மாவிடம் கூற அவர் அதை எழுதிக்
கொண்டு ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். மஹாஸ்ரீ அனெகல்
சுப்பராய சாஸ்திரிகளைப் பற்றி பிரபல ஜோதிடர் திரு பி.வி.ராமனின் பாட்டனாரான. பி.சூரியநாராயண
ராவ் (1856-1937) அவருடனான தனது
சுவையான பிரமிக்க வைக்கும் அனுபவங்களை விரிவாக விளக்கியுள்ளார்.
ஸ்ரீ சுப்பராய சாஸ்திரிகள் விளக்கியுள்ள சாஸ்திரங்களைப்
பற்றிய ஒரு சிறு குறிப்பை மட்டும் இங்கே பார்ப்போம்:
அக்ஷரலக்ஷ சாஸ்திரம் : இதில் அகர முதலான எழுத்துக்கள்,
எண்கள், இலக்கணங்கள், மொழியின் வடிவம், அடையாளங்கள், குறியீடுகள் உள்ளிட்டவை – 14 லோகங்களிலும்
உள்ளவை -விளக்கப்பட்டுள்ளன.
லிகித சாஸ்திரம் : எல்லா ஸ்லோகங்களையும் எப்படி எழுதுவதென்று
விளக்கும் சாஸ்திரம் இது.
கணித சாஸ்திரம் : அனைத்து லோகங்களிலும் இன்று நிலவி
வரும் கணிதத்தின் பல்வேறு விஷயங்களைத் தரும் இந்த சாஸ்திரத்தில் 18 சாஸ்திரங்கள் உள்ளன.
ஜோதிட சாஸ்திரம் : 64 விதமான ஜோதிட மற்றும் வானவியல்
இரகசியங்களை விளக்கும் அபூர்வ சாஸ்திரம் இது.
நிருக்த சாஸ்திரம் : வேத வியாக்யானங்களை விளக்கும்
சாஸ்திரம் இது.
வைசேஷிக சாஸ்திரம் : இதில் ஏழு வகை சாஸ்திரங்கள் உள்ளன.
நியாய சாஸ்திரங்களும் இதில் அடக்கம்.
வேதாந்த சாஸ்திரம் : இதில் 132 வேதாந்த சித்தாந்தங்கள்
அடங்கியுள்ளன. பூர்வ பக்ஷம், வேதாந்தம் ஆகியவற்றை விமரிசித்து விவாதித்து முடிவான முடிவைத்
தருபவை இவை.
பட்ட சாஸ்திரம் : இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன.
இவை நியாய சாஸ்திரத்துடன் ஒத்திருப்பவை.
பிரபாகர சாஸ்திரம் : மூன்று பிரபாகர சித்தாந்தங்கள் விளக்கப்படும் இதில்
நியாய சாஸ்திரங்களும் உள்ளன.
நியாய சாஸ்திரம் : இதில் 84 சாஸ்திரங்கள் உள்ளன. கதாதரரின்
ஐந்து வேதங்கள், வைகானஸ தர்க்கத்தின் 42 வேதங்கள், கௌட தர்க்கத்தின் 60 வேதங்கள் இதில்
விளக்கப்படுகின்றன.
வியாகரண சாஸ்திரம் : ஒன்பது வகை இலக்கணங்கள் விளக்கப்படுகின்றன
இதில்.பாணிணீயம், மஹாவியாகரணம், ஐந்திரம்,சாந்திரம்,
சகதவாணம், ஸ்போட்டயாணம் முதலியவை பற்றி இதில் காணலாம்.
சப்த சாஸ்திரம் : ஒலியின் நுட்பம் பற்றிய விஞ்ஞானம்
இது. ஆறு சாஸ்திரங்கள் இதில் உள்ளன.
தர்க்க சாஸ்திரம் : தர்க்க விஞ்ஞானம். இதில் உள்ள
எட்டு சாஸ்திரங்கள் 84 (லாஜிக் எனப்படும்)
தர்க்க விவாதங்களை அலசி ஆராய்கின்றன.
மீமாம்ஸ சாஸ்திரம் : கர்மா எனப்படும் செயல் பற்றியது இது. அதாதோ தர்ம
ஜிக்ஞாஸா என ஆரம்பிக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதை இயற்றியவ்ர் ஜைமினி
ரிஷி. ஜைமினி மீமாம்ஸை தத்வ தர்ம பிரகரணம், தர்மாபேத அபேதம்,சேஷசேஷீ பாவம், ப்ரயோஜக,
ப்ரயோஜிக பாவம், கர்மா, அதிகாரி நிரூபணம்,சமன்யாதிதேசம், விசேபாதிதேசம், ஊஹா,பாதா,
தந்திரம், ப்ரஸங்கம் ஆகிய 12 விஷயங்களை விளக்குகிறது. இப்போது புழக்கத்தில் உள்ளது
இது தான்.
ஆனால் இது தவிர இன்னும் மூன்று சாஸ்திரங்கள் பிரமிக்க
வைக்கும் பல இரகசியங்களை விளக்குபவை.
சந்தஸ் சாஸ்திரம் : கவிதை பற்றியது இது. யதி, (அதாவது
எழுத்துக்கள் ஒத்திருக்க வேண்டும், இடையில் நிறுத்தங்கள் சரியானபடி அமைய வேண்டும்)
கனம் (அதாவது அளவுடனான சீர்கள் பற்றிய கவிதா இலக்கணம்) மற்றும் பல்வேறு வகை கவிதா வடிவங்கள்
பற்றியது இது. இதில் 12 சாஸ்திரங்கள் உள்ளன.
அலங்கார சாஸ்திரம் : அணிகள், மொழியின் அலங்காரங்கள்
பற்றியது.உவமான, உவமேயம் உள்ளிட்டவை இதில் விளக்கப்படுகின்றன. இதில் 9 சாஸ்திரங்கள்
உள்ளன.
சில்ப சாஸ்திரம் : -சிற்பம், கட்டிடக்கலை பற்றியது
இது. 32 சாஸ்திரங்கள் இதில் உள்ளன. 364 வகையான
சிற்பங்கள் இதில் விளக்கப்படுகின்றன.
சுப சாஸ்திரம் : உணவு வகைகளைச் சமைக்கும் சமையல் சாஸ்திரம்.
116 வகையான உணவு வகைகளை எப்படி சமைப்பது என்பதை இது விளக்குகிறது.
மாலினி சாஸ்திரம் : இரகசியமாக காதல் சங்கேதங்களை விளக்கும்
சாஸ்திரம் இது. மலர்களில் எழுதுவது எப்படி, மாலைகள், பூங்கொத்துகள் வாயிலாக காதல் செய்திகளைப்
பரிமாறுவது எப்படி என்பதை இது விளக்குகிறது. இதில் எழுதுவதற்கு விசேஷ தொழில்நுட்பம்
தேவை. இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன.
ஜரிஹர சாஸ்திரம் : போர்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்
தயாரிக்கப்படும் அனைத்து உலோகங்கள் பற்றியது இது. வெடிமருந்துகள், துப்பாக்கி குண்டுகள்,பீரங்கிகள்,
வில் அம்புகள் உள்ளிட்ட போர் சாதனங்களை விளக்கும் இதில் ஒன்பது சாஸ்திரங்கள் உள்ளன.
நூறாயிரம் விதமாக சுடும் போர்முறைகள் இதில் விளக்கப்படுகின்றன.
பிரளய சாஸ்திரம்: இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன. பிரபஞ்சத்தில்
இருக்கும் ஓவ்வொரு உயிரினத்தின் ஆயுள் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை இது விளக்குகிறது.
எப்படி உருமாற்றம் ஏற்படுகிறது, எப்படி இறுதி பிரளயம் ஏற்படுகிறது என்பதையும் இது விளக்குகிறது.
கால சாஸ்திரம் : பொருள்கள் அனைத்தும் எந்தக் காலத்தில்
உருவாகின்றன, எப்போது அழிக்கப்படுகின்றன என்பது பற்றிய கால சாஸ்திரம் இது. அறுவடைகள்,
விதைப்பது எப்படி, வளர்ப்பது எப்படி என்பது பற்றியும் கால சாஸ்திரம் விளக்குகிறது.
மாயா வாத சாஸ்திரம் : 20 வகை மாஜிக் கலைகளை விளக்கும்
சாஸ்திரம் இது. மாயமாக மறைவது, திருப்பி வருவது உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் வித்தைகள்
இதில் விளக்கப்படுகின்றன.
இது தவிர மருத்துவ சாஸ்திரம் உள்ளிட்ட ஏராளமான சாஸ்திரங்களின்
உள்ளார்ந்த இரகசியங்கள் பாரதீய விஞ்ஞானத்தில் உள்ளன.
அனைத்தையும் விளக்க ஒரு தனி நூலே தேவை.
இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் அணுகுண்டு
உள்ளிட்ட ஆயுதங்களை நவீன விஞ்ஞானிகள் உருவாக்கியது பாரத தேசத்தின் புராதன நூல்களை வைத்தே
தான் என்பதும் நியூமரலாஜி நிபுணரான சீரோ தஞ்சாவூரில் தான் இதைக் கற்றார் என்பதும் நவீன
கால புத்தகங்கள் ஆதாரங்களுடன் விளக்க ஆரம்பித்துள்ளன என்பது தான்.
பண்டைய பாரதத்தின் மேன்மையை ஆராய்ந்து பல ஆய்வாளர்கள்
இப்போது அதை வெளி உலகிற்கு கொண்டு வருவது ஒரு நல்ல சகுனம்!