தமிழா! மரம் நடு! குளம் தொடு!! (Post No.2955)

tree planting, fb

Written by London swaminathan

Date: 9 July 2016

Post No. 2955

Time uploaded in London :– 10-00 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

இன்று மரம் நடுதல், நீர்நிலைகளை உருவாக்கல் (ஏரி தூறு எடுத்தல், கிணறு வெட்டுதல்) முதலியவற்றைப் பெரும் விளம்பரத்தோடு செய்வதைக் காண்கிறோம். ஆனால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த புறச் சூழல் விழிப்புணர்வும் இயற்கைப் பாதுகாப்பும் நம் நாட்டில் இருந்தது. குறிப்பாகத் தமிழர்கள் இது பற்றிப் பாடி வைத்துள்ளனர். அதற்கு முன்னர் உலக மஹா கவிஞன்  காளிதாசனும் இதைப் பாடிவைத்துள்ளான்.

 

காவியம் செய்வோம்; நல்ல காடு வளர்ப்போம்

கலை வளர்ப்போம்; கொல்லர் உலை வளர்ப்போம்

ஓவியம் செய்வோம்; நல்ல ஊசிகள் செய்வோம்;

உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்

 

என்று காடு வளர்ப்பு பற்றி பாரதி பாடும் முன்னரே, வேறு பல கவிஞர்களும் பாடிவைத்தனர்.

tree planting 2

குளம்தொட்டுக் கோடுபதித்து வழிசீது

உளம்தொட்டு உழுவயல் ஆக்கி — வளம்தொட்டுப்

பாகுபடுங்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தான்

ஏகும் சுவர்க்கத்து இனிது.

 

–சிறுபஞ்சமூலம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்

 

1)நீர்நிலைகலை உருவாக்கி,

2)அவைகளைச் சுற்றி மரக்கிளைகளை நட்டு,

3)மக்கள நடக்கும் வழியை உண்டாக்கி,

4)தரிசான நிலத்தில் உள்ள இடத்தைச் செம்மைப் படுத்தி வயலாக ஆக்கி  வளப்படுத்தி,

5)சுற்றுப்சுறுபுறத்தில் சுவர்களுடன் கிணற்றைத் தோண்டி உதவுபவன் — இந்த ஐந்தையும் செய்பவன் — சுவர்க்க லோகம் புகுவான்.

 

இன்னும் ஒரு பாடல்

 

நீரறம் நன்று நிழல் நன்று தன்னில்லுள்

பாரறம் நன்றுபார்த்து உண்பானேல் — பேரறம்

நன்று தளிசாலை நாட்டல் பெரும்போகம்

ஒன்றுமாம் சாலவுடன்.

tree planting

நீர் அளிக்கும் அறம் நன்று (அப்பூதி அடிகள், 1400 ஆண்டுகளுக்கு முன்அ, ப்பர் பெயரில் தண்ணீர்ப்பந்தல் வைத்தது போல)

 

தன் வீட்டில் மற்றவர் தங்க இடம் கொடுத்து உதவும் தர்மமும் நல்லது;

மற்ற உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்து உண்பானால் அதுவும் நன்று (பஞ்ச யக்ஞம்– ஐவேள்வி — என்பது, இந்துக்கள் தினமும் செய்வது, காண்க குறள் -43);

 

கோயிலுடன், மரங்கள் அர்டர்ந்த சாலையை அழியாதபடி நிலைபெறச் செய்வது மிக நல்ல தர்மம்;

 

இந்த ஐந்தையும் செய்தால் பேரின்பம் ஏற்படும் (பேரின்பம் = பிரம்மானந்தம்).

 

காளிதாசன் சொன்னது:–

திலீபன் என்னும் மன்னன் கிராமப்புறம் வழியாகப் பயணம் செய்தான்; அரசன் வருவதை அறிந்த வயதான இடைக்குலப் பெரியோர்கள், அரசனை வெறும் கையோடு பார்க்கக்கூடாது என்று சாத்திரம் சொல்லுவதால், புத்துருக்கு நெய்யோடு (புதிதாகக் காய்ச்சி உருக்கப்பட்ட நெய்) அவனைச் சந்தித்தார்கள். அரசனோ மஹா அறிவாளி. இடைச் சேரிக்கிழவர்களுடன் என்ன பேசுவது? அவர்களோடு பேசுவதற்கு ஏதேனும் ஒரு சாக்கு வேண்டுமல்லவா? ஆகையால் மரங்களின் பெயர்களை எல்லாம் விசாரித்தானாம். —காளிதாசனின் ரகுவம்சம் 1-45

 

(என்னைவிட உங்களுக்கு இதில் அறிவு அதிகம் என்று மன்னனே ஒத்துக்கொண்டதால் இடையர்கள் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பர். மன்னனுக்கு மரங்கள் பற்றிக்கூட அறிந்துகொள்ளும் வழக்கம் அக்கலத்தில் இருந்தது).

 

இன்னும் ஒரு பாடல்

 

மரத்தை மகன் போல வளர்த்த குறிப்பு மேகதூதத்தில் வருகிறது. மரத்தை சகோதரி போல நினைப்பது தமிழில் நற்றிணையில் வருகிறது.

well pazum kinaru, kodunkaal

செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றாமல் சகுந்தலை சாப்பிட மாட்டாள் என்று சாகுந்தலம் செப்பும்.

 

முல்லைக் கொடியில் எவனாவது வெந்நீரை ஊற்றுவானா? என்ற உவமையை காளிதாசன் சாகுந்தலத்தில்கு பயன்படுத்துவான்.

விஷமரத்தையும் கூட வெட்டக்கூடாது என்று குமார சம்பவத்தில் பாடுகிறான்.

மரங்களை வெட்டாதே என்று காரிக்கண்ணனார் பாடுகிறார் (புறநானூறு 57)

 

–சுபம்–

 

 

 

யாழ்ப்பாண ஐயர் பழமொழிகள்! (Post No. 2953)

pararajasekara

Compiled by London swaminathan

Date: 8 July 2016

Post No. 2953

Time uploaded in London :– 17-11

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

“பரராஜ சேகரன் ஆண்ட காலத்தில் சுபதிருஷ்ட முனிவர் என்பவர் அவன் சபைக்கு வந்தார். மன்னன் எழுந்து நின்று அவரை உபசரித்து,  தனது எதிர்காலம் பற்றிக் கூறுமாறு வேண்டினான். முனிவர் சொன்னார்:-

நீ புண்ணியவான். உனது ஆட்சி குறைவின்றி நடக்கும். அதற்குப்பின் உன் மூத்த புதல்வனை விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள். இரண்டாவது மகனை வெட்டிக் கொன்றுவிடுவார்கள்.

 

இரண்டாம் பத்தினியின் வயிற்றில் பிறந்த சங்கிலி அரசோச்சுவான். அவனது கொடுங்கோலாட்சியில் பறங்கியர் வசம் ஆட்சி ஒப்படைக்கப்படும்.  பறங்கியர் சிவாலயங்களை அழித்து தமது சமயத்தைப் பரப்பி நாற்பது வருஷம் கொடுங்கோலாட்சி புரிவர். அவர்களை ஒல்லாந்தர் (ஹாலந்து/ டச்சு) வென்று  அவரைப்போல் கொடியராக 120 ஆண்டுகள் ஆள்வர். அதற்குப்பின் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர்- ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதியாக அரசு செய்வர். உன் சந்ததிக்கு அரசு ஒரு காலத்தும் மீள்வதில்லை” என்றார்.

 

இதுவே சாரமான கல்வெட்டொன்று திரிகோணமலைத் தம்பத்திலுமுள்ளது

அது மிகவும் பழமையானது. பிற்காலத்தாரால் ஏடுகளில் மாற்றப்பட்டுத் திரிபுபெற்றுள்ள வைபவமாலைக் கூற்றுப்போல்வதன்று:-

 

முன்னாட்குளக்கோட்டன் மூட்டுந்திருப்பணியைப்

பின்னாட்பறங்கி பிடிப்பானே — பொன்னாரும்

பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய் மாற

மானேவடுகாய்விடும்.

 

இதனை வையா (வையாபுரி ஐயர்) பாடல் என்பர்.

வையாபுரி பாடல் பொய்யாதென்பது பழமொழி. வையாபுரி ஐயர் என்பது அவர் இயற்பெயர். அவர் பிராமண சந்யாசி. அவர் சுபதிருஷ்டர் சீடராகிய சித்தையர் என்பவருக்குச் சீடர்.

 

சித்தையர் இருந்து தவம் செய்த இடம் சித்தன்கேணியென்று வழங்குகின்றது. சித்தன்கேணிக் கிராமத்திலே அவர் இருக்கும் வரையில்  விஷப் பாம்புகள் செல்வதும், விஷம் தீண்டி இறப்பதும் இல்லையாம். வையாபுரி ஐயர் சீடர் கோவியத் திருமேனியுடைய கொற்றனார்.

 

ஐயருக்கு 12 மனைவிகள்!

 

அவர் சீடர் பெரியதம்பி ஐயர். அவர் கொற்றனார் கொடுத்த மூலிகையை உண்டு நரை திரை மூப்பு இன்றி 120 வயசில் இளமையோடிறந்தவர். அவருக்கு நான்கு பார்ப்பாரப் பெண்களும், நான்கு வேளாளப் பெண்களும், நான்கு கோவியப் பெண்களுமாக பன்னிருவர் பத்தினிமார் ஏக காலத்தில் இருந்தார்கள். இவருடைய அற்புத இளமையை நோக்கியே “பெரிய தம்பி ஐயர் வாலிபத்திலே” என்னும் பழமொழி வழங்குவதாயிற்று. பெரியதம்பி ஐயர் இருந்த வீடு வண்ணைச் சிவன் கோயிலுக்குத் தென் பாரிசத்தில் இன்றுமிருக்கின்றது. அவர் சந்ததியாருமங்கேயிருக்கின்றார்கள்”.

 

–ஆதாரம்: யாழ்ப்பாண சரித்திரம், ஏ.முத்து தம்பி பிள்ளை

 

கோபக்காரர்கள் நான்கு வகை! (Post No.2951)

angry-status

Article Written by London swaminathan

Date: 8 July 2016

Post No. 2951

Time uploaded in London :– 8-42 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

fight-scenes-290x300

நான்கு வகையான கோபக்காரர்கள் இருக்கிறார்கள். இதை ஒரு சம்ஸ்கிருதப் பாடல் அழகாக வருணிக்கிறது. உலகில் சம்ஸ்கிருதத்தில் இல்லாத விஷயம் எதுவுமே இல்லை.

 

பழங்கால மொழிகளில் சம்ஸ்கிருதத்துக்கு இணையான மொழி எதுவுமே இல்லை. கிரேக்கம், எபிரேயம் (ஹீப்ரூ), சீனம், லத்தின், தமிழ் ஆகிய எல்லா மொழி வரலாறுகளையும் படித்த என் போன்றோருக்கு இது உள்ளங்கை நெல்லிக் கனி போலத் தெரியும். செக்ஸ், மருத்துவம், நாட்டியம், இசை, இலக்கணம், சட்டம், நாடகம், காப்பியம்,சமய இலக்கியம், தத்துவம், மொழி இயல், அகராதி இயல், இதிஹாச, புராணம் ஆகிய எல்லாவற்றிலும் உலக மொழிகளில் முதலிடம் வகிப்பது சம்ஸ்கிருதம். இதற்குக் கொஞ்சம் பக்கத்தில் வருவது கிரேக்க மொழி மட்டுமே. ஆனல் அதில் கி.மு 800-க்கு முன் எதுவுமே கிடையாது. அதற்குப்பின்னர் ஓரளவு எல்லா விஷயங்களும் உள்ள மொழி. அதிலும் கூட பாணிணீய இலக்கணம், காமசூத்திரம், மனுதர்ம சாத்திரம், பரதம் போன்ற நூல்கள் இல்லை.

 

தமிழ் மொழியில் கி.மு. 300க்கு முன் எதுவும் இல்லை. அப்படிக்கிடைத்த விஷயங்களிலும் சம்ஸ்கிருதம் கலந்து இருக்கிறது.தமிழ்க் கல்வெட்டுகளும் இந்தக்காலத்துக்குப் பிந்தியவையே. ஆனால் சம்ஸ்கிருதச் சொற்களுடன் உள்ள கல்வெட்டுகள் கி.மு. 1400 லிருந்து நிறைய கிடைக்கின்றன.

young-angry-man-52068682

கோபக்கரரர்கள் நான்கு வகை

 

உத்தமே ச க்ஷணம் கோப: மத்யமே கடிகாத்வயம்

அதமே ஸ்யாத் அஹோராத்ரம் பாபிஷ்டே மரணாந்தக:

 

கடிகா என்றால் 24 நிமிடங்கள்

க்ஷணம் என்றால் ஒரு நொடி/வினாடி

 

முதல்தரமான மனிதர்களிடத்தில் ஒரு நொடிப்பொழுதுதான் கோபம் நீடிக்கும். இதை வள்ளுவனும்

 

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்தல் அரிது – குறள் 29

 

நொடி= க்ஷணம்= கணம்

 

குணக்குன்றாக விளங்கும் முதல்தர (உத்தம) மக்களிடையே கோபம், ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்துவிடும்.

 

இதற்கு அடுத்த (மத்தியம) தரத்திலுள்ளோர் கோபம் இரண்டு கடிகை (48 நிமிடங்கள்) இருக்கும்.

 

கடைத்தரத்திலுள்ளோர் கோபம் ஒரு நாள் முழுவதும் — 24 மணி நேரம் — நீடிக்கும். இதை சம்ஸ்கிருதத்தில் அஹோராத்ரம் (பகல்+ இரவு) என்பர்.

 

ஆனால் பாபிகளுக்கோ வாழ்நாள் முழுவதும் கோபம் நீடிக்கும். அதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுதும் மனதில் கரு வைத்திருப்பவன் மஹா பாவி.

 

இந்த நான்கு வகைகளில் நாம் முதல் வகையைச் சேர்ந்திருப்பது நல்லது.

 

முனிவு என்றாலும் கோபம். அந்த முனிவை வென்றவரே முனிவர் என்றும் ஒரு விளக்கம் உளது.

 

ரிஷி, முனிவர்களின் கோபம் பற்றி காளிதாசன் ரகுவம்சத்தில் (5-54) மிக அழகாகச் சொல்லுகிறான்:

 

” நான் அவர் (மதங்க முனிவர்)  பாதத்தில் வணங்கி அவருடைய கோபத்தை நீக்கினேன். அவர் சாந்த சுபாவத்தை அடைந்தார். நீரின் இயற்கைக் குணம் குளிர்ச்சியாகும்.  நெருப்பு, வெய்யில் இவைகளால்தான் அது சூடாகிறது. அது போல மஹரிஷிகளின் இயற்கைக் குணம் குளிர்ச்சிதான் (சாந்தம்). ஏதேனும் ஒரு தக்க காரணதால்தான் அது கோபம் அடையும்” (ரகு வம்சம் 5-54).

 

 

இதைத்தான் வள்ளுவனும் சொன்னான். வள்ளுவன் பயன்படுத்தும் கணம், குணம் முதலியன சம்ஸ்கிருதச் சொற்கள் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

 

மனு சொல்லுகிறார்; கோபத்தால் எட்டு தீய குணங்கள் வரும் என்று (7-48)

angry-woman

கோபத்தால் வருபவை எட்டு

 

பைசுனம் சாஹசம் த்ரோஹ ஈர்ஷ்யா அசூயா அர்த்ததூஷணம்

வாக்தண்டஜம் ச பாருஷ்யம் க்ரோத ஜனோபி கணோஷ்டக:

மனு 7-48

 

கோபத்திலிருந்து பிறக்கும் எட்டு தீய குணங்கள்:– அவதூறு, வன்செயல், தீய எண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடுசொற்கள், தாக்குதல்.

வள்ளுவன் வெகுளாமை என்னும் அதிகாரத்தில் கோபம் பற்றி பத்து குறள்கள் பாடியிருப்பதை இவைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழுங்கள்

 

 

கோபம் பற்றிய முந்தைய கட்டுரைகள்:–

தன்னையே அழிக்கும் கோபம் , சம்ஸ்கிருத செல்வம் , கட்டுரை 20, (எழுதியவர் நாகராஜன்), தேதி 28-1-2014

கோபக்காரர்களை வெல்வது எப்படி? (Article: Written by London swaminathan

Date: 14th September 2015)

 

சாது மிரண்டால் காடு கொள்ளாது! சீனக் கதை!! (Post No. 2405)

Date: 19 December 2015

 

Win Anger by serenity, wickedness by Virtue (Post No. 2568)

Compiled  by London Swaminathan, Date: 23 February 2016

 

When angry, count a hundred! (Post No 2565), Date: 22 February 2016

 

Conquer Evil Doers by Saintliness, Anger by peacefulness (Post No. 2839)

Date: 25 May 2016

Sringeri Acharya’s Advice on Anger Management! Compiled  by London Swaminathan,  Date: 22 September 2015

–Subham–

 

 

 

கர்ப்பிணிப் பெண்களைப் பார்க்கப் போகும்போது……….. (Post No. 2949)

pegnant

Article Written by London swaminathan

Date: 7 July 2016

Post No. 2949

Time uploaded in London :– 9-45 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

oldman

யார் யாரைப் பார்க்கச் செல்லுகையில் வெறும் கையோடு போகக்கூடாது என்று ஒரு பாடல் இருக்கிறது:–

 

கர்ப்பிணிகள்

குழந்தைகள்

குரு (சந்யாசிகள்)

முதியோர்

கோவில்

அரசர்கள் (பிரதமர், முதலமைச்சர், ராஷ்டிரபதி)

அக்னிஹோத்ரம் செய்பவர்கள் வசிக்கும் இடங்கள்.

 

அக்னிஹோத்ரம் க்ருஹம் க்ஷேத்ரம் கர்பிணீம் வ்ருத்த பாலகௌ

ரிக்த ஹஸ்தேன ந உபேயாத் ராஜானம் தைவதம் குரும்

 

அக்னிஹோத்ரம் க்ருஹம் க்ஷேத்ரம் = தினமும் அக்னிஹோத்ரம்

செய்யும் பிராமணர்களின் வீடுகள்

கர்பிணீம், வ்ருத்த, பாலக: = கர்ப்பிணிகள், முதியோர், சிறுவர்/சிறுமியர்

 

ராஜானம், தைவதம், குரும் = அரசர்கள், தெய்வம், குரு ஆகியோரின் இருப்பிடம்

 

ரிக்த  ஹஸ்தேன = வெறும் கையோடு

ந உபேயாத் = நெருங்கக்கூடாது (செல்லக்கூடாது)

 

children

குழந்தைகளுக்கு சாக்லெட், பிஸ்கட், மிட்டாய் அல்லது விளையாட்டுப் பொருட்களை வாங்கிச் சென்றால் தாய், தந்தையர் மிகவும் மகிழ்ச்சி அடைவர். நம்முடைய வீட்டிலுள்ள குழந்தைகளின் வயது, விருப்பங்களை அறிந்து வைத்திருக்கிறார்களே என்று வியப்படைவர். உங்களுக்கு வடை, பயசத்துடன் சாப்பாடும் போடுவார்கள்.

 

கர்ப்பிணிப் பெண்களுக்கு மசக்கையும், பல விருப்பங்களும் இருக்கும். அவர்களுடைய விருப்பங்களை அறிந்து, அதற்குத்தக சமைத்துக்கொண்டுபோய் கொடுக்க வேண்டும். பெண்ணின் அம்மாவோ, மாமியோரோ உங்களை வாழ்த்துவர். உங்கள் வீட்டில் அத்தகைய சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது ஓடிவந்து உதவி செய்வர்.

 

கோவில்களுக்குச் செல்லுகையில் கட்டாயம் பூவும், பழமும் கொண்டு செல்ல வேண்டும். தேவைப்படும் இடங்களில் பிரசாதம் செய்துகொண்டுபோய் கொடுக்கவேண்டும். ஒன்றும் செய்ய அவகாசமில்லாவிட்டால் உண்டியலிலும், ஐயர் (பட்டர், குருகள்) தட்டுகளிலும் காசுபோட வேண்டும். காரணம் என்ன வென்றால் கோவில்களிலிருந்து ஒரு துரும்பு கூட எடுத்துவரக்கூடாது என்று சாத்திரங்கள் சொல்லும். சிவன் சொத்து குல நாசம். ஆனால் நாமோ அங்கிருந்து விபூதி, குங்குமம், பூ, பழம், துளசி முதலியவற்றை அன்புடன் வாங்கி வருவோம். இதற்கு உடனே காசு போட்டுவிடவேண்டும்.

கோவிலுக்குச் செல்

பெரியோர்கள், சாது சந்யாசிகள்  முதலியோரைப் பார்க்கச்செல்லுகையில் பூ, பழம், தேங்காய் அல்லது குறைந்தது ஒரு எலுமிச்சம்பழமாவது வாங்கிச் செல்லவேண்டும். குரு, தெய்வம், சாதுக்களின் பரிபூரண ஆசி கிட்டும்.

 

வயதானவர்கள் வசிக்கும் வீட்டுக்குச் செல்லுகையில் பழங்கள், இ னிப்புகள், காரங்கள், புத்தகங்கள் (books), கடிகாரம், வாக்கிங் ஸ்டிக் (Walking Stick) , பிளாஸ்க் (Flask), காலணி (Shoes) போன்ற பயனுள்ள பொருட்களை வாங்கிச் செல்லலாம்.

–Subham–

 

 

பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக! (Post No.2945)

assorted-coloured-gemstones-1

Written by London swaminathan

Date: 5 July 2016

Post No. 2945

Time uploaded in London :– 9-24 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

ஸ்த்ரியோ ரத்னானி அத வித்யா தர்ம: சௌசம் சுபாஷிதம்

விவிதானி ச சில்பானி சமாதேயானி சர்வத:

–மனு ஸ்மிருதி 2-240

 

எல்லா திசைகளிலிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டியவை:-

பெண்கள், ரத்னக் கற்கள், கல்வி, தர்மம் (அறச் செயல்கள், அற விதிகள்)

தூய்மை (விதிகள், உணவு),  நல்ல சொற்கள் (பொன்மொழிகள், பழமொழிகள், உபதேசங்கள்)

மனு சொல்வதை புறநானூற்றிலும் காணலாம்

 

நான்கு ஜாதிகளில், தாழ்ந்தவரானாலும், கல்வியில் சிறந்தவன் சொல்லைத் தான் அரசனும் கேட்டு நடப்பான்:–

 

 

வேற்றுமை தெரிந்த நாற்பலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே (புறம்.183)

 

மனு, இதை மேலும் அழகான உவமைகளால் விளக்குவான்:-

 

விஷத்திலிருந்து கூட அமிர்தம் எடுக்க முடியும்;

குழந்தையிடமிருந்து கூட அருமையான யோஜனைகள் கிடைக்கும்;

எதிரியிடமிருந்து நற்குணங்களை கற்றுக்கொள்ளலாம்;

அசுத்தமான மண்ணிலிருந்தும் தங்கத்தைக் காய்ச்சி எடுக்கலாம்

மனு 2- 239

 

இந்த உவமைகளைச் சொன்ன பிறகே நல்ல பெண்களை எங்கிருந்தாலும் திருமணம் செய்க என்பான்.

ms garland making

மனு, மற்றொரு இடத்தில் (9-23), கீழ் ஜாதியில் பிறந்த அருந்ததி, உலக மஹா கற்புக்கரசியாக மதிக்கப்படுவதை எடுத்துக் காட்டுவான்.

 

2-241ஆவது ஸ்லோகத்தில் பிராமணர் அல்லாதார் இடமிருந்தும் வேதங்களைக் கற்கலாம் என்கிறார் (உபநிடதங்களில் க்ஷத்ரிய மன்னர்களிடம், பிராமணர்களும் வேதாந்தம் கற்றனர் என்ற குறிப்பு உள்ளது.  க்ஷத்ரிய மன்னர் குலத்தில் பிறந்த கௌதம புத்தரை பிராமண அறிஞர்களும் பின்பற்றியபோது புத்தரின் முகம் தாமரை போல மலர்ந்தது என்று தம்மபத விரிவுரைகள் பகரும்.)

 

வேதங்களைக் கற்பிக்கும் போது அவர்களைக் குருவாக மதிக்க வேண்டும் என்கிறார் மனு. ஜனக மன்னனிடம் பலரும் கற்றதை இங்கே நினைவு கூறலாம்.

 

ஜாதியை விட உயர்ந்தது கல்வியும், நல்லொழுக்கமும் என்று மனு நிறைய இடங்களில் வலியுறுத்திக் கொண்டே போவதை கற்றோர் அறிவர்.

 

–Subham–

அருணகிரிநாதர் சொன்ன பெண் பூதம் பற்றிய கதை (Post No 2944)

thiruvilayadal006

Written by London swaminathan

 

Date: 5 July 2016

Post No. 2944

Time uploaded in London :– 8-12 AM

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

thiruvilayadal_torment

திருவிளையாடல் புராணத்திலுள்ள தருமி என்ற பிராமணப் புலவன் கதையும் நக்கீரன் என்ற சங்கப் புலவர் சிவனுடன் மோதிய கதையும் எல்லோரும் அறிந்ததே. தருமி என்ற புலவனுக்கு சிவபெருமானே பாட்டு எழுதிக் கொடுத்தார். அதில் நக்கீரர் பிழை கண்டார். சிவனே அவர் முன் தோன்றி என்ன பிழை? என்று கேட்டார். இருவரிடையே வாக்குவாதம் முற்றியது. சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். நக்கீரனோ நெற்றிக்க ண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சாடவே, நக்கீரன் உடல் எரிந்து நோய் ஏற்பட்டது.

 

இதை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அப்பர், தனது தேவார பதிகத்தில் பாடிவைத்துள்ளார்.

 

 

இதற்குப்பின் என்ன நடந்தது?

 

அந்தக் கதையை அருணகிரி நாதர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடலில் சொல்கிறார்:-

 

அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி

அபயமிட  அஞ்சலென் றங்கீரனுக் குதவி

–பூத-வேதாள வகுப்பு

 

பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் இக்கதை மிகவும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

கற்கிமுகி என்ற பூதம் சிவபூஜையில் தவறு செய்த 999 பேரை பிடித்து ஒரு குகையில் வைத்திருந்தது. யாராவது ஒருவர் சிவ பூஜையின் போது கவனத்தை இழந்து மனதை வேறுபக்கம் செலுத்தினால் அந்தப் பூதம் பிடித்துவிடும். ஆயிரம் பேரைப் பிடித்தவுடன் அனைவரையும் சாப்பிட அந்த பூதம் திட்டமிட்டிருந்தது.

 

நக்கீரர், தன் உடலில் தோன்றிய நோய் அகல சிவபூஜை செய்து கொண்டிருந்தார். இவரைச் சோதிக்க விரும்பினார் சிவன்.

 

நக்கீரர் தவம் செய்த இடத்திலிருந்த ஆலமரத்திலிருந்து ஒரு இலை கீழே விழுந்தது. அருகில் ஒரு நீர்நிலை இருந்தது. இலையின் ஒரு பாதி நீரிலும் மறுபாதி கரையிலும் இருந்தது. நீரிலுள்ள  பாதி மீனாகவும் தரையிலிருந்த பாதி பறவையாகவும் காட்சிதந்தது. இது நக்கீரருக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஆதைக் கவனித்ததால், சிவ பூஜையிலிருந்து அவரது கவனம் திசை திரும்பியது. காத்துக் கொண்டிருந்த கற்கிமுகி பூதம், நக்கீரரைக் கவ்விப் பிடித்து குகைச் சிறையில் அடைத்தது. அவரைப்  பார்த்தவுடன், அங்கிருந்த 999 சிறைக்கைதிகளும் ஓவென்று கதறினர். காரணத்தை வினவியபோது நக்கீரர்தான் ஆயிரமாவது ஆள் என்றும், ஆயிரம் பேர் வந்தவுடன் சாப்பிடப் போவதாகப்  பூதம் சொன்னது என்றும் கூறினர்.

 

உடனே நக்கீரர், அஞ்சற்க, நான் என் பிரார்த்தனையின் மூலம் உங்களை விடுவிப்பேன் என்று சொல்லி இறைவனைத் துதித்தார். அப்பொழுது அவர் முருகன் மீது பாடிய பாடல்தான் திருமுருகாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூலாகும்.

nakkirar 1

இந்த நேரத்தில் , வெளியே குளிக்கச் சென்ற கற்கிமுகி பூதம் திரும்பிவந்தது. முருகனைத் துதித்த நக்கீரர், ஒரு இலையை அதன்மீது தூக்கி எறிந்தார். அது வேலாக உருமாறி பூதத்தை வதைத்தது.

 

இந்த நிகழ்ச்சி மதுரை அருகிலுள்ள திருப்பறங்குன்றத்தில் நடந்ததாக ஐதீகம்.

 

–சுபம்–

 

 

மறைந்திருந்தே பார்க்கும் மருமம் என்ன? ஒரு யாழ்ப்பாணக் கதை (Post No 2943)

anthaka kavi 1

Written by London swaminathan

 

Date: 4 July 2016

Post No. 2943

Time uploaded in London :– 16-34

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

இது, மன்னன் ஏலேலனும் அந்தகக்கவி வீரராகவனும் சந்தித்தது பற்றிய  சுவையான கதை. கண்கள் பார்க்க முடியாதபோதும் ஏலேலன் திரை மறைவிலிருந்து கண்டதைக் கண்டுபிடித்துப் பாடியவுடன் ஏலேலன் அசந்தே போய்விட்டான். மனைவியுடன் கோபித்துக்கொண்ட கவிஞருக்கு ராஜ உபசாரம் கிடைத்தது.

 

 

கதை சுவையானாலும், ஒரு குறை உளது. அது காலவழுவமைதி ஆகும். ஏலேலன் காலம் வேறு. அந்தகக்கவியின் காலம் வேறு. இரண்டு கவிஞர்கள் ஒரே பெயருடன் இருந்திருக்கலாமே என்று வாதாடக் கூடும். ஆயினும் அந்தகக் கவிராயரின் பாடல், நடை முதலியவற்றைக் காணும்போது அது தற்காலத் தமிழ் நடையாகவே இருக்கிறது. ஏலேலன் என்ற மன்னனோ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்.

 

இது யாழ்ப்பாண சரிதம் என்ற பழைய நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

 

anthakakavi 2

anthaka kavi 4

 

anthaka kavi5

 

anthaka kavi 6

–subham–

 

மாப்பிள்ளை உள்பட 5 பேருக்கு பணத்தின் அருமை தெரியாது ! (Post No.2942)

IMG_4371

Written by London swaminathan

 

Date: 4 July 2016

Post No. 2942

Time uploaded in London :– 10-09 AM

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஐந்து பேருக்கு பணத்தின் அருமையோ, பணக் கஷ்டமோ தெரியாது. யார் அந்த ஐந்து பேர் என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் அழகாகச் சொல்கிறது:

 

விருந்தாளி (அதிதி)

சிறுவர், சிறுமியர் (பாலக:)

பெண்கள் (ஸ்த்ரீ ஜன:)

அரசன் (ந்ருபதி:)

மாப்பிள்ளை (ஜாமாதா)

 

அதிதிர் பாலகஸ்சைவ ஸ்த்ரீஜனோ ந்ருபதிஸ் ததா

ஏதே வித்தம் ந ஜானந்தி ஜாமாதா சைவ பஞ்சம:

 

IMG_4496 (2)

சோறுகண்ட இடம் சொர்கம் — என்று உட்கார்ந்து சாப்பிடும் விருந்தாளிகளுக்கு பணக் கஷ்டம் பற்றி என்ன கவலை? விருந்து அளிப்பவன் , பாவம், கடன் வாங்கி விருந்து கொடுத்துக் கொண்டிருப்பான்!

 

சின்னக் குழந்தைகள் யானையையும், காரையும் கூடப் பார்த்து எனக்கு அதை வாங்கிக்கொடு – என்று அடம் பிடிக்கும். வீட்டில் நாய், பூனை, மீன் வளர்க்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கும். அவர்களுக்குப் பணக் கஷ்டம் தெரியுமா?

 

பெண்களுக்கு ஆசை அதிகம். வைர நெக்லஸ், தங்க அட்டிகை, பெரிய பங்களா, சொகுசான கார் – என்று பெரிய பட்டியல் வைத்திருப்பர். அந்தக் கலத்தில் அவர்கள் வேலைக்குப் போகாததால் பணத்தின் அருமை தெரியாது. இப்பொழுது அவர்களும் வேலைக்குப் போவதால், “கொஞ்சம்” தெரிந்திருக்கிறது.

 

அரசனுக்கும், ஆளுவோருக்கும் மக்கள் கஷ்டம் தெரியாது என்பதை விளக்கத் தேவையே இல்லை. மக்கள் மீது வரி மேல் வரி போட்டு வாட்டி வதைப்பர். தாங்கள் மட்டும் எல்லாவற்றையும் அனுபவிப்பர்.

 

கடைசியாக மாப்பிள்ளை! பெண் வீட்டுக்குப் போய் அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா என்று அதிகாரம் செய்வர். அவர்களோ சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் கஷ்டப்படுவர்.

IMG_4545

எவ்வளவு அனுபவபூர்வமான கண்டுபிடிப்புகள்!

 

-சுபம்-

 

நாஸ்தீகருக்கு மனுவும் வள்ளுவரும் தரும் சவுக்கடி! (Post No.2940)

valluvar door

Written by London swaminathan

Date: 3 July 2016

Post No. 2940

Time uploaded in London :– 12-48

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

punul valluvar

லோப: ஸ்வப்னோ த்ருதி: க்ரௌர்யம் நாஸ்திக்யம் பின்னவ்ருத்திதா

யாசிஷ்ணுதா ப்ரமாதஸ்ச தாமசம் குண லக்ஷணம்

மனு 12-33

பேராசை, தூக்கம், புலனின்ப கட்டுப்பாடில்லாமை, கொடுமை செய்தல், நாத்திகம், தொழில் செய்யாமை, பிச்சை எடுத்தல், சோம்பேறித்தனம் ஆகியன தாமச குண லட்சணம்.

 

வள்ளுவனும் நாத்திகனை பேய்ப்பயல் என்று திட்டுகிறான்:

 

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (குறள் 850)

 

உலக மக்கள் அனைவரும் உண்டு என்று சொல்லுவதை, ஒருவன் இல்லை என்று சொன்னால் அவனை மனித வடிவில் வந்த பேய் என்று கருதவேண்டும்

 

கண்ண பிரானும் கீதையில் இதையே சொல்லி இருக்கிறான்:–

சம்சயாத்மா விநஸ்யதி  சந்தேகபடுபவன் அழிந்தே போய்விடுவான் என்கிறார். மேலும் அத்தகையோருக்கு இக,பர லோகங்களும் இல்லை; சுகமும் இல்லை என்பான் கண்ணன் (4–40)

 

மாணிக்கவாசகரோ நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்’ என்று திட்டுவார்.

manikkavasagar,US

இவை எல்லாம் தமோ குண லட்சணங்கள்.

 

XXX

 

 

மனுவானவர் சத்துவ, ராஜச குணங்களையும் விளக்குகிறார். இவை பகவத் கீதையில் மிக விரிவாக உள்ளது (அத்தியாயம் 14, குணத்ரயவிபாக யோகம்)

 

வேதாப்யச: தப: ஞானம் சௌசம் இந்த்ரிய நிக்ரஹ:

தர்மக்ரியா ஆத்மசிந்தா ச சாத்விகம் குணலக்ஷணம்

மனு 12-31

வேதம் ஓதுதல், தவம், ஞானம், தூய்மை, புலனடக்கம், அறச்செயல் (தர்ம கைங்கர்யம்), ஆத்மசிந்தனை (அகநோக்கு) ஆகியன சத்வ குணத்தின் லட்சணங்கள்

XXX

 

ஆரம்பருசிதா தைர்யம் சத்கார்ய பரிக்ரஹ:

விஷயோபசேவா ச அஜஸ்ரம்  ராஜசம் குணலக்ஷணம்.

தொழிலில் சூரத்தனம், நிலையற்ற தன்மை, கெட்ட செயல்களில் ஈடுபடுதலில் உறுதி, புலன் இன்ப நாட்டம் ஆகியன ராஜச குண லட்சணம்.

XXX

 

இறுதியாக மூன்று குணங்களின் முக்கியக் கொள்கை என்ன என்பதையும் மனு, சுருக்கமாக ஒரே பாடலில் சொல்லிவிடுகிறார்.

 

தாமச குணமுடையோரின் லட்சணம் புலனின்பம், ராஜச குணம் உடையோரின் லட்சணம் செல்வத்தை சேகரித்தல், சத்துவ குணம் உடையோரின் லட்சணம் அறப் பணி செய்தல்.

தமசோலக்ஷணம் காமோ ரஜச: அர்த்தம் உச்யதே

சத்வஸ்ய லக்ஷணம் தர்ம: ஸ்ரோட்யம் ஏஷாம் யதோத்தரம்

மனு 12-38

 

 

-SUBAM-

 

எச்சரிக்கை! ஒன்பது பேர் உங்களை கண்காணிக்கிறார்கள்! (Post No 2938)

hindu wedding

Written by London swaminathan

 

Date: 3 July 2016

Post No. 2938

Time uploaded in London :– 6-38 AM

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

egyptian

Egyptian Inscription

 

9 கர்ம சாக்ஷிகள்

சூர்ய: சோமோ யம: காலோமஹாபூதானி பஞ்ச ச

ஏதே சுப அசுபஸ்ய இஹ கர்மனோ நவ சாக்ஷிண:

 

நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம். ஏனெனில் இரண்டாவது ஆள் ஒருவருக்குத் தெரிந்தால் அதன் பெயர் “ரஹசியம்” அல்ல என்பதும் அந்த ஆள் எவ்வளவுதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது வெளியே பரவ வாய்ப்பு உண்டு என்றும் நமக்குத் தெரியும். ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.

 

யார் அந்த ஒன்பது பேர்?

 

பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்(வெற்றிடம்); இது தவிர சூரியன், சந்திரன்,யமன், காலம்(நேரம்).

 

பஞ்சபூதம் என்று சொல்லிவிட்டாலேயே எல்லாம் அடங்கிவிடும். இருந்த போதிலும் சூரியனும், சந்திரனும் நன்கு தெரிந்த பிரகாசமான பொருள் என்பதால் அதைச் சேர்த்தனர். அல்லது இரவும் பகலும் — 24 மணி நேரமும்– என்று பொருள் கொள்ளவும் அவை உதவும்.

 

யமன் என்பவன் யார்? அவனுடைய கணக்குப்பிள்ளை சித்திர குப்தன் என்பர் இதன் பொருள் என்ன வென்றால் நாம் செய்யும், நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷமும் ஒரு சித்திரத்தை — படத்தை உருவாக்குகிறது. அந்தப் படம் நமக்குத் தெரியாமல் (குப்த=ரகசியமாக) இருக்கிறது. இந்த விஞ்ஞான உண்மையையே இந்துக்கள் ‘சித்திர’ ‘குப்த’ என்றனர்.

 

ஒரு கொசு நீரில் உட்கார்ந்தால் கூட நீரில் அதிர்ச்சி ஏற்பட்டு வளையங்கள் உண்டாகும். ஆனால் நமக்கு கண்ணுக்குத் தெரியாது.அது கொசுவுக்குத் தெரியும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்றால்கூட ஒரு வழித்தடம் உண்டாகும். அது நமக்குத் தெரியாது. எறும்புக்கு அந்தப் பாதை தெரியும். அதுபோல நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ண்மும் ஒரு படத்தை உண்டாக்கும்; அது நமக்குத் தெரியாது; சித்திரகுதன் அல்லது யமனுக்குத் தெரியும்.

 

சித்திரகுபதன் அல்லது யமன் என்பவன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். நம்முடைய எல்லா நல்ல, கெட்ட செயல்கள், எண்ணங்கலையெல்லாம் கூட்டிக் கழித்து பாவ புண்ணியங்களைப் பட்டியல் போட்டுவிடுவர்.

nabonidus-praying-to-the-sun-moon-and-venus

Nabonidus praying to Sun, Moon and Venus

நீர், நெருப்பு, ஆகாயம் முதலியன இல்லாத இடமே இல்லை. அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இந்துக்களுத் தான் இந்த விஞ்ஞான உண்மைகள் தெரியும். இதுவரை வேறு யாருக்கும் அது தெரியாது.

 

நீரை மந்த்ரம் மூலம் அனுகுண்டாக மாற்றும் வல்லமை நம் ரிஷி முனிவர்களுக்கு இருந்தது. ஒரு உள்ளங்கை நீரை மந்திரம் மூலம் சாபமாகவோ வரமாகவோ மாற்றும் அரிய வித்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால்தான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தாலும், தானங்களை செய்தாலும் நீரைப் பயன்படுத்தினர். சாபம் கொடுக்கவும் வரம் கொடுக்கவும் நீரைப் பயன்படுத்தினர்.

 

நெருப்பு என்பது இல்லாமல் மனிதன் முன்னேறமுடியாது. உடம்பிலுள்ள அக்னி ஜடராக்னி. வெளியே உள்ள அக்னி சாட்சியாக திருமணம் செய்துவிட்டால் அதை மீறக்கூடாது. பழைய அரசர்கள் அக்னி சாட்சியாக உடன்படிக்கை செய்ததை நமது கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்கினி சாட்சியாக கோவலன் – கண்ணகி திருமணம் செய்து கொண்டதை தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் சொல்லும். நீர் ஆறாக ஓடும்படி தாரைவார்த்து தானம் செய்ததை சங்க இலக்கியம் செப்பும்.

 

கல்வெட்டுகளில் “சூரியர் சந்திர சாட்சியாக” என்ற சொற்களையோ இரண்டின் படங்களையோ காணலாம்.

 

காலம் (நேரம்) என்பது நம்மைக் கவனிக்கிறது. அதை நிறுத்த யாராலும் முடியாது. கடிகாரம் ஓடிக்கொண்டிருபாது போல ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகிறது.

 

persian 500 bce

Sun and Moon in Persian Inscription 500 BCE

விண்ணில் உலவும் செயற்கைக் கோள்கள், நம் வீட்டு கொல்லைபுறத்தைக் கூடப் படம் பிடிக்கும்; கூகுள் மேப் மூலம் நம் நண்பர் வீட்டிற்குள் யார் வந்து செல்கிறார்கள் என்பதை நம் வீட்டுக் கம்ப்யூட்டரிலேயே காணமுடியும்; சி.சி. டிவி மூலம் கொலைகாரனைக் கூடக் கண்டுபிடிக்கமுடியும். இன்ப்ரா ரெட் காமிரா, பைனாகுலர் மூலம் இருட்டில் நடப்பதையும் காணமுடியும். ஆனால் இவைகளிடமிருந்து தப்பிக்க வழி உண்டு. இந்துக்கள் சொன்ன ஒன்பது கர்ம சாட்சிகளிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது!!!

 

ஆகவே ஒன்பது சாட்சிகளுக்குப் பயந்து நாம் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்; நல்ல காரியங்களையே எண்ண வேண்டும்.

 

ஒன்றே செய்க; அதுவும் நன்றே செய்க; அதையும் இன்றே செய்க.

 

–சுபம்–