அதிசய மன்னர்கள் எழுதிய அற்புத புத்தகங்கள்!

matta

 

Research Paper written by london swaminathan

 

Research article No 1612; Dated 30th january 2015

இந்தியா ஒரு அதிசய நாடு. பழங்கால இந்தியாவோ மிகமிக அதிசய நாடு! 15 லட்சம் சதுர மைல்கள் பரப்புடைய அகண்ட பாரதம். அத்தனைக்கும் ஒரே எழுத்து– பிராமி என்னும் லிபி. பிராமி என்றால் சரஸ்வதி என்று பொருள்! எவ்வளவு பொருத்தமான பெயர்!  வட மேற்கு மூலையில் இருக்கும் ஆப்கனிஸ்தான் முதல் (கரோஷ்டி லிபியும் உண்டு)  கர்னாடகா வரை பிராமி லிபியில் அசோகனின் கல்வெட்டுகள்! இலங்கையின் தென் கோடியிலும் பிராமி லிபி. இவ்வளவு அகண்ட பரப்பில் ஏன் இப்படி எழுதினர்? ஏன் எனில் இந்தியர்கள் எல்லோருக்கும் எழுதப் படிக்கத் தெரியும்.

இதைவிட பெரிய அதிசயம்– பழனி அருகில் கிடைத்த 2500 ஆண்டுப் பழமையான பிராமி கல்வெட்டில் வைரம் (வயிர) என்ற சம்ஸ்க்ருதச் சொல்!! ஜ என்பதை ய என்று எழுதுவது மரபு- உலகம் முழுதுமுள்ள இலக்கண விதி! வஜ்ர என்ற வடமொழிச் சொல் வைர /வயிர என்று எழுதப்பட்டுள்ளது. (எ.கா. ஜாமம்=யாமம், ஜீஸஸ்= யேசு, அஜன்=அயன், ஜூ=யூத, ஜோஸப்= யூசுப் , ஜாத்ரா=யாத்ரா, ராஜா= ராயல்; இன்னும் நூற்றுக் கணக்கில் எழுதி வைத்துள்ளேன்).

இந்த எழுத்து பல்லவ கிரந்தமாக மாறி தென் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் இன்றும் புழங்குகின்றன.

 

உலகம் முழுதும் உள்ள ஒவ்வொரு மொழியிலும் அற்புதமான இலக்கியங்கள் உள. வால்மீகி, வியாசன், உலகப் புகழ் காளிதாசன், கம்பன், இளங்கோ, வள்ளுவன், ஹோமர், வர்ஜில், பிளாட்டோ,சாசர், ஷேக் ஸ் பியர் — என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் மன்னர்களே புத்தகங்கள் எழுதியது உண்டா? இந்தியாவில் மட்டும் உண்டு.

22OEB_AMUKTAMALYADA_131860e

மற்ற இடங்களில் இருந்தாலும் ஒன்றிரண்டு இருக்கலாம். இந்திய மக்களும் மன்னர்களும் அறிவாளிகளாக இருந்த காரணத்தால் இந்த நூல்கள் பெருகின. ஹோமரும் மோஸஸும் பிறப்பதற்கு முன்னரே இந்தியாவில் வேதங்களும் அது தொடர்பான இலக்கியங்களும் பெருகின. அளவே இட முடியாத அளவுக்கு!! உலகில் மிகச் சிறந்த அறிவாளிகள் இங்கு இருந்ததே இதற்குக் காரணம்.


ratnavali of harsa

இதோ இதற்கான சாட்சியங்கள்:

 

தமிழ் மன்னர்கள் இளம் பெருவழுதி, அறிவுடை நம்பி, நெடுஞ்செழியன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், மாக்கோதை, கணைக்கால் இரும்பொறை, மஹாராணி பூதப் பாண்டியன்  பெருங் கோப்பெண்டு  முதலிய பலர் பாடிய பாடல்கள் சங்க இலக்கியத்தை அலங்கரிக்கின்றன.

 

மன்னன் விச்வாமித்திரன் எழுதிய மந்திரங்கள் வேதத்தில் உள்ளன! அவர் பிராமணர் இல்லை. இருந்தபோதிலும் அவர் “எழுதிய” (காதில் கேட்ட) காயத்ரீ மந்திரத்தைத் தான் பார்ப்பனர்கள் முப்போதும் எப்போதும் ஓதுவர்.

 

யாதவ மன்னன் — இடைச் சாதி கண்ணன் – அருளிய பகவத் கீதை உலகப் பெரும் நூல்.

 

ஜனக மன்னர் விவாதித்த உபநிஷத்துகளும் மன்னர் கொடுத்தவை.

 

யவனர் ,சகரர் இன மக்களை பாரத மண்ணில் இருந்து  ஓட ஓட விரட்டிய விக்ரமாதித்தன், காளிதாசனை ஆதரித்ததோடு வேதாளக் கதைகள் தோன்றவும் காரணம் ஆனான்.

 

காஷ்மீரைச் சேர்ந்த புலவன் மாத்ருகுப்தன் மன்னர் பதவி வகித்தான்.  பல நூல்களை எழுதினான்.

 

காளிதாசனுடன் தொடர்புடைய மற்றொரு மன்னன் போஜன். இது விக்ரமாதித்தனின் வேறு ஒரு பெயராகவோ அல்லது அவனுக்கு அடுத்து வந்தவனாகவோ இருக்கலாம். தமிழில் கூட கபிலர், பரணர் போன்ற புலவர்கள் பல மன்னர்களைப் பாடினர். அதைப் போல காளிதாசனும் பல மன்னர்கள் ஆட்சிக் காலம்  வாழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு.

bhoja

போஜன் என்றாலே அறிவாளி என்னும் பொருள் இருந்ததால், எல்லா புத்திசாலி மன்னர்களும் தன்னை போஜன் என்று அழைத்துக் கொண்டனர். கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி நூலில் மூன்று போஜ மன்னர்களைக் குறிப்பிடுகிறார். வேதகால இலக்கியமான ஐதரேய பிராமணத்தில் போஜ மன்னன் பெயர் வருகிறது. ஆக பல போஜர்கள் இந்தியாவை ஆண்டார்கள்.

ஆயினும் வலரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த பத்தாம் நூற்றாண்டு போஜ மன்னர் 84 நூல்களை எழுதி உலகப் புகழ் பெற்றுவிட்டார். இவர் இத்தாலிய அறிஞர் லியார்னோடா டா வின்ஸியைவிட அதிக விஷயங்களை எழுதிவிட்டார். குதிரை சாத்திரம் முதல் விமான சாஸ்திரம் வரை எல்லாம் இவருக்கு அத்துபடி. இவர் வாழ்ந்த தாரா என்னும் மத்தியப் பிரதேச நகரில் இவரது ஸம்ஸ்கிருத இலக்கண சித்திரக் கவி ஒன்று,  ஒரு மசூதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகள் 1932ஆம் ஆண்டு மயிலாப்பூர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் விவரங்களை எனது ஆங்கிலக் கட்டுரையிலும் காண்க:

 

Old Sanskrit Inscriptions in Mosques and on Coins

https://tamilandvedas.com/2012/03/17/old-sanskrit-inscriptions-in-mosques-and-on-coins/


amukta

பல்லவ மன்னனின் காமெடி நாடகம்

 

அப்பர் என்னும் திரு நாவுக்கரசரை படாத பாடு படுத்தியவன் மாமன்னன் மகேந்திர பல்லவன் (கி.பி.600-630). அவனே பின்னர் சைவ சமயத்துக்குத் திரும்பினான். அவன் காபாலிகர், புத்த, சமண சன்யாசிகளில் இருந்த கபட வேட தாரிகளைக் கிண்டல் செய்து மத்த விலாசப் பிரஹசனம் என்ற சம்ஸ்கிருத  நகைச்சுவை  நாடகத்தை எழுதினான்.

இதே காலத்தில் வாழ்ந்த ஹர்ஷ வர்தனன் என்னும் மன்னன் மூன்று வடமொழி நாடகங்களை எழுதினான்.  நாகா நந்தம், பிரியத்ர்சிகா, ரத்னாவளி என்ற மூன்றில் நாகனந்தம் மட்டும் ஜீமூடவாகனன், நாகர்கள் பற்றியது மற்ற இரண்டும் காதல் கதைகள்! உதயணன்- வாசவதத்தா காதல் விடயத்தை அடிப்படையாக உடையவை.

maduravijayam

கங்கா தேவியின் மதுரா விஜயம்

 

மதுரை மீனாட்சி கோவில்—  துலுக்கர்கள் ஆட்சிக் காலத்தில் 40 ஆண்டுகள் மூடிக்கிடந்தபோது விஜய நகர மாமன்னர்கள் இந்து மதத்தைக் காப்பாற்ற குமார கம்பண்ண என்ற நாயக்க மன்னர் தலைமையில் படைகளை அனுப்பினர். அவன் மாபெரும் வெற்றி கண்டு தமிழகம் எங்குமுள்ள கோவில்களுக்குப் புத்துயிர் ஊட்டினான். அவன் படை எடுத்த போது அவனுடன் கூடவே வந்தாள் அவனுடைய மனைவி மஹாராணி கங்காதேவி. அவள் போர்க்கால பத்திரிக்கை நிருபர் போல தான் கண்டவற்றை அப்படியே  சம்ஸ்கிருதக் கவிதையாகப் பொழிந்து தள்ளினார். இந்த நூலின் பெயர் மதுராவிஜயம். உலகில் போர் பற்றிய முதல் நேரடி வர்ணனை இந்த நூலில்தான் உள்ளது— மற்ற நூல்கள் போர் முடிந்தபின் எழுதியவை.

ராஜபுத்திர இளவரசி மீராபாய் பாடிய 1300 பஜனைப் பாடல்களை யார் மறக்க முடியும்?

விஜய நகர மன்னர்களில் மிகவும் கீர்த்தி வாய்ந்தவர் கிருஷ்ண தேவராயர். இவர் ஸ்ரீரங்க நாதர்  மேல் ஆண்டாள் கொண்ட பக்தியை மெச்சி தெலுங்கில் ஆமுக்தமால்யதா என்னும் காவியத்தைப் படைத்தார்- வாழ்னாள் முழுதும் போர்கள் செய்து வெற்றி வாகை சூடிய ராயருக்கு புத்தகம் எழுதவும் நேரம் கிடைத்தது இந்திய மண்ணின் மகிமை.


vikram

உலகில் பல மொழிகளில் புகழ் மிகு இலக்கியங்கள் உண்டு என்று கண்டோம். ஆயினும் பழங்காலத்தில் இப்படி இல்லை. எகிப்தில்,  பாரசீகத்தில், சுமேரியாவிலும்  நூல்கள் இருந்தன. ஆனால் அவைகளை இலக்கியங்கள் என்று சொல்ல முடியாது சுமேரியாவில் இரண்டு கிளை மொழிகளில் தலா 60,000 வரிகள் வீதம் எழுதி வைத்துள்ளனர். ஆயினும்  இவை எல்லாம் நூல்கள் ஆகா.

மனு என்பவர் வேத காலம் முதல் பெயர் பெற்ற மன்னர் ஆவார். இவர்தான் உலகின் முதல் சட்டப் புத்தகத்தை எழுதியவர். இவருக்கு முன் பாபிலோனிய ஹமுராபி (கி.மு 1750) வாழ்ந்தார் என்று சொல்வோரும் கூட, ஹமுராபியின் சட்டதிட்டம் புத்தக வடிவில் இல்லை என்பதை அறிவர். மனுவின் பெயர் வேதத்தில் உள்ளது. வேதத்தின் காலம் கி.மு 4000 என்கபார் ஜெர்மன் அறிஞர் ஜாகோபி.

வேறு சில அரச எழுத்தாளர்களின் பெயர்கள்:

 

யசோவர்மன் – கி.பி.735

 

காலசூரி மயூர ராஜா–கி.பி.800

 

விக்ரஹ ராஜ தேவ – கி.பி. 1153

 

நேபாள மன்னன் அமோக வர்ஷன் – எட்டாம் நூற்றாண்டு.

Statue_of_Raja_Bhoja_02

Bhoja statue in Bhopal, M.P. India

இந்தியமன்னர்கள் அருமையான நூல்களை எதற்காக எழுதினார்கள்? நாம் படித்துப் பயன் பெற வேண்டும், எழுதியவர்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகத்தானே! போஜன் எழுதிய 84 நூல்களையும் படிப்போம்; நாகானந்தம், ரத்னாவளி,ஆமுக்த மால்யதாவைப் படித்து ரசிப்போம். மத்தவிலாசப் பிரஹசனத்தைப் படித்துச் சிரித்து மகிழ்வோம்.

contact swami_48@yahoo.com

–சுபம்–

ratnavali-CZ56_l

பிறக்காத பிள்ளைக்குப் பெயர்!

Two men on camelback in desert, Jaiselmer, India 546003

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. பிறக்காத பிள்ளைக்குப் பெயர்!

 

by ச.நாகராஜன்

Post No 1607; Dated 28th January 2015.

 

நியாயங்கள் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்கள்:

अजातपुत्रनामकरणन्यायः

ajataputranamakarana nyayah

அஜாதபுத்ர நாமகரண நியாயம்

அஜாதபுத்ர – பிறக்காத பிள்ளை நாமகரணம் – பெயர் சூட்டல்

பிறக்காத ஒரு பிள்ளைக்குப் பெயர் வைக்கும் நியாயம் இது. பயனற்ற முட்டாள்தனமான காரியம் ஒன்றைச் செய்பவனைச் சுட்டிக் காட்டப் பயன்படும் நியாயம் இது.

Proclaiming the name of a son before he is born. That is counting your chickens before they are hatched என்று ஆங்கிலத்தில் இதனை விளக்குகிறார் கர்னல் ஜி.ஏ. ஜாகோப் (G.A.Jacob).

(G,A.Jacob பற்றிய குறிப்பு :- A Handful of Popular Maxims (volumes 1 to 3) – A collection of Sanskrit Wisdom sayings – என்ற 3 பாகங்கள் அடங்கிய புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்ட அறிஞர்.1909ஆம் ஆண்டு இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.)

अन्धदर्पणन्यायः

Andha darpana nyayah

அந்த தர்பண நியாயம்

அந்த- அந்தகன்; தர்பணம் – கண்ணாடி

குருடனும் அவனது கண்ணாடியும் என்பது இந்த நியாயம். பயனற்ற ஒரு பொருளை ஒருவன் வைத்திருக்கும்போது இந்த நியாயம் வழங்கப்படுகிறது.

The maxim of a looking glass for a blind. யோக வாசிஷ்டம், ஹிதோபதேசம் உள்ளிட்ட பல நூல்களில் இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.

mirror-person

उष्ट्रलगुडन्यायः

ustralaguda nyayah

உஷ்ட்ர லகுட நியாயம்

ஒட்டகமும் தடியும் என்னும் நியாயம் இது.  ஒட்டகத்தின் முதுகில் சுமந்து செல்லப்படும் தடியாலேயே அது அடிக்கப்படுகிறது. அதேபோல ஒரு முட்டாள் அவனது முட்டாள்தனமான செய்கையாலேயே துன்பப்படுவான் என்பதை இந்த நியாயம் சுட்டிக் காட்டும்.

The illustration of the camel and the stick என்று இந்த நியாயத்தை கர்னல் ஜி.ஏ. ஜாகோப் (G.A.Jacob). விளக்குவதோடு இதற்கு ஒப்புமையாக “Hoist with his own petard” என்று ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டில் வருவதையும் சுட்டிக் காட்டுகிறார்.(Hamlet Act 3;  Scene 4)

ஆத்ம தத்வ விவேகம், வேதாந்த கல்ப தரு ஆகிய நூல்களிலும் இது எடுத்தாளப்படுவதை அவர் விளக்கங்களுடன் தருகிறார் தனது நூலில்!

चिन्तामणिंपरित्ज्यकाचमनिग्रहणन्यायः

cintamanim parityajya kacamanigrahana nyayah

சிந்தாமணிம் பரித்யஜ்ய காசமணிக்ரஹண நியாயம்

சிந்தாமணியை தியாகம் செய்து விட்டு செயற்கை கண்ணாடிக் கல்லை வாங்கினாற் போல என்னும் நியாயம் இது.

 

எவ்வளவு அரிய மணி சிந்தாமணிக் கல்! அதைக் கொடுத்து விட்டு சாதாரண கண்ணாடியால் ஆன ஒரு செயற்கைக் கல்லை ஒருவன் வாங்கினால் அவனை என்னவென்று சொல்வது! வெறும் பளபளப்பை நம்பி கண்ணாடிக் கல்லை சிந்தாமணிக்குப் பதில் பெறுவதைப் போல முட்டாளான ஒருவன் அரும் மதிப்பை உணராது மதிப்பற்ற ஒன்றை நாடுவதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது பழமொழி.  All that glitters is not gold என்பது இதே கருத்தைச் சொல்லும் ஆங்கிலப் பழமொழி.


2000px-Birthstones.svg

பிரம்ம ஞானம் அடைவதை விட்டு விட்டு சாதாரண உலகியல் புலன் இன்பங்களில் ஒருவன் மூழ்குவதை இந்த நியாயத்தைச் சுட்டிக் காட்டி ரகுநாதர் விளக்குகிறார்.

 

(ரகுநாத சிரோமணி பற்றிய குறிப்பு : பெரும் அறிஞரான இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நவத்வீபத்தில் பிறந்தவர். இவரது காலம் கி.பி 1477-1547).

 

contact swami_48@yahoo.com

நீங்கள் சதுரமா? பூஜ்யமா?

geometrical-models

Are you a Square (Esquire) or a Zero (Pujya Sri)?

 

Written by london swaminathan

Research Article No.1605; Dated 27th January 2015

யாராவது உங்களை பூஜ்யம் என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வரும். அந்தக் காலத்தில் மாணவர்கள் பரீட்சை விடைத் தாள்களில் தப்பான விடைகளைத் தொடர்ந்து எழுதி இருந்தால், வாத்தியார், ஒரு பெரிய வட்டத்தைப் போட்டு அதில் பூஜ்யம் என்று கொட்டை எழுத்தில் எழுதுவார். உண்மையில் பூஜ்ய என்பது மதிப்புக்குரிய சொல்!

இந்துக்கள் வட்டம், சதுரம் போன்ற சொற்களை அன்றாட வாழ்வில் நல்ல பொருளில் பயன்படுத்தினர்.

சதுரம்(Square) என்னும் சொல்லில் இருந்து வந்தது சாதுர்யமான, அதாவது புத்தி சாலியான, திறமையான. பஜனைப் பாடல்களில் கூட இறைவனை ‘சதுரா’ (புத்திசாலி) என்று போற்றித் துதிப்பர்.

சதுரம் என்பது வலுவான அஸ்திவாரம் உடையதால் அதைக் கோவில் கட்ட பயன்படுத்தினர். பிற்காலத்தில் திறமைசாலிகளை அழைக்க சதுரம் என்பதைப் பயன்படுத்தினர். சதுரா, சாதுர்யமான என்றால் இந்திய மொழிகளில் திறமைசாலி எனப் பொருள்.

சம்ஸ்கிருதத்தில் பூஜ்யம் என்றால் பூஜைக்குரிய, வணக்கத்துக்கு உரிய என்றும் சைபர், சூன்யம் என்றும் இரண்டு வகையாகப் பொருள்படும்.

பூஜ் என்ற சம்ஸ்கிருத வேர்ச் சொல்லுக்கு வணக்கத்துக்குரிய, பூஜைக்கு உரிய  என்று பொருள். ஆனால் வட்டம் என்பது துவக்கமும் முடிவும் இல்லாத ஒரு உரு என்பதால் இதை ஆதி அந்தம் அற்ற பூர்ணத்துவத்துக்கும் முழுமைக்கும் , நித்தியத்துவத்துக்கும் பயன்படுத்தினர்.


geometric_shapes

பழைய காலத்தில் முதலில் மனிதன் சித்திர எழுத்துக்களைப் பயன் படுத்தினான். பின்னர் —ரீபஸ் (Rebus) — கொள்கையைப் பயன் படுத்தி பலசொற்களை உருவாக்கினான். அதாவது படத்தை எழுதி, அது தொடர்பான பொருள்களுக்கும் அதைப் பயன்படுத்தினர். பிறகு குழப்பத்தைத் தவிர்க்க புதிய ஸ்பெல்லிங் (Spelling )–  புதிய படங்கள் முதியவற்றை வரைந்தான்.  அப்படி உருவான சொற்களே சாதுர்ய (சதுரம்), பூஜ்ய ஸ்ரீ என்பன ஆகும்.

எந்த ஆங்கிலம்– தமிழ் அகராதியைப் புரட்டினாலும் ‘’சீரோ’’ (Zero) என்பதற்கு பூஜ்யம் அல்லது சூன்யம் என்று  போட்டிருக்கும். அதாவது

(Cypher) சைபர்/பூஜ்யம் என்பதற்கு தமிழில் சொல் இல்லை என்றே தோன்றுகிறது!!

 

‘’சுழி’’ என்னும் தமிழ் சொல் எண் (Number) விஷயத்தில் பயன்படுத்தப் படுவதில்லை. பிள்ளையார் சுழி, நீர்ச் சுழல், வலஞ்சுழி என்ற பொருள்களிலேயே வருகிறது. சங்க இலக்கியச் சொல்லடைவிலும் எண் என்னும் பொருளில் ‘’சுழி’’ வரவில்லை.

அவர்கள்= எஸ்க்வயர் (Esquire)

 

ஆங்கிலத்தில் ‘’எஸ்க்வ்யர்’’ (esquire) என்று ஒரு சொல் உண்டு. உயர் திரு என்னும் பொருள் உடைய சொல்.ஆனால் தமிழில் பெயருக்குப் பின்னால் மரியாதைக்காக அவர்கள் என்று சேர்ப்பது  போல ஆங்கிலத்திலும் பெயருக்குப் பின்னால் இதைச் சேர்ப்பர். என்சைக்ளோபீடியாவில்– கலைக்களஞ்சியங்களில் பார்த்தால் இதன் 400 ஆண்டு வரலாறு மட்டுமே இருக்கும். குதிரை வீரனின் மூத்த மகன், குதிரை வீரனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர், பிரபு, கனவான் என்றே போட்டிருப்பர். ஆனால் இது சதுர — ஸ்கொயர் — எஸ்க்வயர் — என்றே வந்திருக்க வேண்டும். ஆங்கிலம் முதலான ஐரோப்பியச் சொற்களுக்கு மூலம் சம்ஸ்கிருதம் என்று உலகமே ஒப்புக் கொண்டாலும் அவர்களுக்கு போதுமான எடுத்துக் காட்டுகள் இல்லாததால் அரைகுறை உண்மை மட்டுமே கலைக் களஞ்சியங்கள்லும் ஆக் ஸ் போர் ட் அகராதியிலும் இருக்கும்.

indus1
Look at B for square within square letter

சிந்து சமவெளி

 

சிந்து சமவெளி நாகரீகத்தில் உள்ள 4000+ முத்திரைகளில் பல முத்திரைகளில் ஒரு சதுரத்துக்குள் சதுரம் உள்ளது போல முதல் எழுத்துக்கள் உள்ளன. இதுவும் மதிப்புமிக்க, திறமை மிக்க மன்னன், அரண்மனை அல்லது தலை நகரம் (மொஹஞ்சதாரோ, ஹரப்பா) என்னும் பொருளிலேயே பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

எகிப்து

 

எகிப்தில் ஹைரோகிளிப்ஸ்(Heiroglyphs) என்ற சித்திர எழுத்துக்களில் மன்னர் பெயர்களை எழுதும் போது அதை செவ்வக உருவத்தில் எழுதி அதன் மீது பருந்து வடிவத்தைப் பொறித்தனர். இப்போது பத்திரிக்கைகளில் முக்கியச் செய்திகளை வெளியிடுகையில் கட்டம் கட்டி, பெட்டிச் செய்தியாக வெளியிட்டு வாசகர்களின் கவனத்தைக் கவர்வது போல அக்காலத்தில் மன்னன் என்பதைக் காட்ட இப்படிச் சதுரம் கட்டினர். இதை செரிக் (Serekh) என்பர். பிற்காலத்தில் இது கார்டூஷ் (cartouche) ன்று மற்றொரு வடிவம் பெற்றது.

serekh

Egyptian Serekh

ஆக உலகிற்கு  பாரதம் வழங்கிய நன்கொடைகளில் சதுரம், சாதுர்யம், செரிக், எஸ்க்வயர் என்ற சொற்களும் அடக்கம்.

முக்கோணத்தையும் இந்துக்கள் நற் பொருளில் பயன்படுத்தினர். யந்திரங்களில் வட்டம், முக்கோணம், சதுரம், செவ்வகம் ஆகிய  ஜியோமிதி வடிவங்களை வரைந்து அதன் இடையில் பீஜாக்ஷர மந்திரங்களை எழுதி பூஜித்து மாந்த்ரீக சக்திகளைப் பெற்றனர்.

வாதாபி கணபதிம் பஜே பாடலை எழுதிய முத்து ஸ்வாமி தீட்சிதர் மந்திர தந்திரங்களை அறிந்த மஹான். அவர் வினாயகர் பற்றிச் சொல்கையில் —த்ரிகோண மத்யகதம் —- என்று சொல்கிறார். மர்மம் நிறைந்த முக்கோண வடிவில் நடுவில் வசிப்பவர் என்பது இதன் பொருள்.

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते

पूर्णश्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥

ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

 

உப நிஷதத்தில் இகவும் பிரபலமான மந்திரம்

 

ஓம் பூர்ணமதப் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உத்ச்யதே

பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவாவசிஷ்யதே

 

ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி.

இதன் பொருள்:

அதுவும் பூரணமாக நிறைந்தது, இதுவும்  பூரணமாக நிறைந்தது

பூரணத்தில் இருந்தே பூரணம் (நிறைவு) வருகிறது.

பூரணத்தில் இருந்து பூரனத்தை எடுத்தாலும் அது பூரணம் ஆகவே (நிறைவு) இருக்கிறது.

 

இதில் பூரணம் என்பதற்குப் பதிலாக எண் ‘சைபர்’, ‘ஜீரோ’, பூஜ்யம் என்று போட்டுப்பார்த்தாலும் கணிதப் படி சரியாகவே இருக்கும்.

 

ஆக பூர்ணம் (வட்டம்) என்பது,  ஆன்மீக பரிபாஷையில் நிறைவு, பரிபூரணத்வம், முழு முதல், மூல முதல்வன் என்னும் பொருள்படும்.

 

இனி உங்களை பூஜ்யம் (ஸ்ரீ), பரம பூஜனீய என்று அழைத்தால் சந்தோஷப்படுங்கள்.

 

–சுபம்–

contact swami_48@yahoo.com

கடலும் பறவையும்! தித்திப நியாயம்

bird2

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. கடலும் பறவையும்!

by ச.நாகராஜன்

Post No 1603 Dated 2th January 2015

 

நியாயங்கள் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்கள்:

टिट्टिभन्यायः

tittibha nyayah

தித்திப நியாயம்

தித்திப நியாயம் என வழங்கப்படும் இது தித்திப பறவை பற்றிய அற்புத நியாயம்.

 

இந்த நியாயம் எழுந்ததற்கு அடிப்படையான கதை ஒன்று உண்டு. தித்திபம் என்னும் பறவை ஒன்று கடற்கரை ஓரத்தில் கூடு ஒன்று கட்டி முட்டை ஒன்றை இட்டுக் காத்து வந்தது. ஒரு நாள் கடற்கரை பொங்கி எழ, அந்தக் கூடு அலைகளால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மனம் கலங்கிய பறவை சமுத்திரத்தின் மீது போர் தொடுத்தது. தன் மூக்கால் நீரை எடுத்ததோடு தன் சிறகுகளை கடலில் நனைத்து நீரை எடுத்துக் கொண்டு வந்து கரையில் உதறியது. இப்படியே மீண்டும் மீண்டும் அது செய்ய ஆரம்பித்தது. சமுத்திரத்தை வற்ற வைக்கும் தன் முயற்சியை அது கைவிடவே இல்லை! பறவையின் உறுதியைக் கண்ட சமுத்திர ராஜன் வியந்து பறவையிடம் அதன் முட்டையைத் திருப்பித் தந்தான்.

எவ்வளவு தான் கஷ்டம் ஒருவனுக்கு இருந்த போதிலும் மனதில் உறுதி இருந்தால் அது கரைந்து வெற்றி கிடைத்து விடும் என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

விடாமுயற்சி வெற்றி தரும் என்பது பழமொழி.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.      —-   திருக்குறள் 619

 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்   

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி                             

 அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்                                     

   கருமமே கண்ணாயி னார்

செவ்வி – காலம்

குமரகுருபரர் இயற்றிய நீதிநெறி விளக்கத்தில் 53வது பாடல் இது.

இதை விளக்க அழகிய கதை ஒன்று உண்டு. ஒரு  முறை சர்ச்சில், ஹிட்லர், ஸ்டாலின் ஆகிய மூன்று பேரும் ஒரு நீச்சல் குளத்தின் அருகே நின்று கொண்டு தம்மில் யார் பெரியவர், யார் வெற்றியாளர் என்பதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். முடிவில்லாத விவாத்தின் முடிவில் ஒரு போட்டி மூலமாக வெற்றி பெற்றவர் யார் என்று முடிவு செய்யப்படலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த ஒரே ஒரு குட்டி மீனை யார் பிடிக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.

Sea-Birds

முதலில் ஹிட்லர் தன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கினார். மீனை நோக்கிச் சுட்டார். அது துள்ளி ஓடியது. எத்தனை முறை சுட்டாலும் அதைப் பிடிக்கவே முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக் கொண்ட ஹிட்லர் ஸ்டாலினை அதைப் பிடிக்குமாறு கூறினார். ஸ்டாலின் உடனே குளத்தில் குதித்தார். மீனைத் துரத்தினார். ஆனால் ஸ்டாலின் இந்தக் கோடியில் இருக்கும் போது மீன் குளத்தின் மறு கோடிக்கு ஓடியது. நீந்தி நீந்திக் களைத்த ஸ்டாலின் மேலே வந்து சர்ச்சிலை நோக்கி, “இனி உங்கள் முறை” என்றார்.

சர்ச்சில் பதற்றமின்றி ஒரு சிறிய ஸ்பூனை கையில் எடுத்துக் கொண்டார். நீச்சல் குளத்தின் நீரை ஸ்பூனால் எடுத்து வெளியே விட்டு ஒன்று என்றார். இப்படியே அவர் எண்ணிக் கொண்டு போவதைப் பார்த்த ஹிட்லரும் ஸ்டாலினும்.” என்ன செய்கிறீர்கள்” என்று ஆச்சரியத்துடன் கேட்டனர். “குளத்தின் நீர் வற்றினால் மீன் தானாகப் பிடிபடப் போகிறது. அது தான் இந்த நீரை எடுத்து வெளியில் விட்டுக் குளத்தைக் காலி ஆக்குகிறேன். மீன் நிச்சயம் சிக்கி விடும் இல்லையா?” என்றார் சர்ச்சில்!

 

இது தான் விடாமுயற்சியின் வெற்றியைச் சொல்லும் துணுக்கு.

இந்த விடாமுயற்சியின் மேன்மையை விளக்க ஆயிரக்கணக்கான செய்யுள்கள் உண்டு,

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்    

பெருமை முயற்சி தரும்  —-  திருக்குறள் 611

என்பது உள்ளிட்ட நூற்றுக் கணக்கான பாடல்களை எடுத்துக் காட்டினால் அதுவே ஒரு தனி நூலாகி விடும்!

bird1

Contact swami_48@yahoo.com

*****************

.

கிருஷ்ணர் கொடுத்த நன்கொடைகள்!

beauiful-krishna-radha

எழுதியவர்- லண்டன் சுவாமினாதன்

கட்டுரை எண்-1599; தேதி:- 24 ஜனவரி 2015

 

Compiled by london swaminathan

Post No: 1599: Dated 24 January 2015

கிருஷ்ணர் ஒரு தாராளப் பிரபு. அவர் அறிந்தும் அறியாமலும் கொடுத்த நன்கொடைகள் பலப்பல.

குசேலர் என்னும் சுதாமா கிழிசல் துணியில் பழைய அவலை முடிந்து வந்தார். அதை ஒரு பிடி வாயில் போட்டுக் கொண்ட அடுத்த நிமிடம் அந்த ஏழையின் குடிசைகள்,  மாட மாளிகைகள் ஆக மாறின. அவருக்குச் செல்வத்தைக் கொடுத்தார்.

திரவுபதியின் வஸ்த்ரங்க்களை துச்சாதனன் உருவிய போது சேலையைக் கொடுத்தார். ஆடை மட்டும் இன்றி திரவுபதிக்கு மானத்தையே கொடுத்தார்.

துரியோதணனும் அர்ஜுனனும் போருக்கு உதவி கேட்டு வந்தனர். துரியோதணா நீயே முதலில் வந்தாய். முதலில் உனக்கு என்ன வேண்டும் என்பதைக் கேள் என்றார். அவன் எல்லா படைகளையும் கேட்டான். எடுத்துக் கொள் என்று சொல்லி எல்லா ஆயுதங்களையும் படைகளையும் துரியோதணனுக்குக் கொடுத்தார்.

கண்ணன் மீது பரிபூரண பக்தி கொண்ட அர்ஜுனனுக்கு தன்னையே கொடுத்தார். அவனுக்கு சாரதியாக/ டிரைவராக அமர்ந்தார். ஆக உடல் உழைப்பைக் கொடுத்தார்.

கோபியர்கள் மட்டற்ற, மாசு மருவற்ற, தூய, மனம் திறந்த அன்பைப் பொழிந்தனர். அதைப் பன்மடங்கு திருப்பித் தந்து புல்லாங்குழல் இன்னிசையாலும் அவர்களை மகிழ்வித்தான்.

பெரும் மழை வந்தபோது பயந்து நடுங்கிய இடைச் சிறுவர்களுக்கு கோவர்த்தன மலையையே உயர்த்திக்  குடை கொடுத்தான்.


Was Draupadi Disrobed

பெரும் சன்டைகளுக்கும் உயிர்க் கொலைகளுக்கும் காரணமாக அமைந்த சியமந்தக வைரத்தை அக்ரூரருக்குக் கொடுத்தான்.

 

அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மருக்கு, ஏற்கனவே அர்ஜுனனுக்கும் சஞ்சயனுக்கும் காட்டிய விஸ்வரூப தரிசனத்தைக் கொடுத்தான். இப்படி எவ்வளவோ கொடைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அது சரி,

 

திரவுபதிக்கு புடவை

துரியோதணனுக்கு படைகள்

அர்ஜுனனுக்கு  டிரைவர் சேவை

கோபியருக்கு அன்பு

அக்ரூரருக்கு சியமந்தக வைரம்

பீஷ்மருக்கு தரிசனம்

இடைச்சிறுவருக்கு மலைக் குடை

 

மானுடப் பிறவி எடுத்து தினமும் அல்லற்பட்டு, அவன் புகழ் பாடும் நமக்கு என்ன கொடுத்தார்?

 

கீதை — பகவத் கீதை–  என்னும் மாபெரும் பொக்கிஷத்தைக் கொடுத்தார். உபநிஷதம் எல்லாவற்றையும் ‘சாறு (ஜூஸ்’) பிழிந்து அதை நமக்கு எளிதில் பருக வசதியாக ஒரு கோப்பையில் கொடுத்தது போல — பகவத் கீதை என்னும் 700 ஸ்லோகங்களே மட்டும் உடைய — 1400 வரிகளே உடைய — அரிய பெரிய புத்தகத்தைக் கொடுத்து இருக்கிறார். பயன்படுத்துவதும் பயன் படுத்தாமல் இருப்பதும் நம் கைகளில்தான்!

 

கண்ணன் மாபெரும் கொடையாளி !

 

முந்தைய கட்டுரைகள்:

 

Krishna’s Diamond in USA? – posted 23 April 2012)

Atom Bomb to Zoo of the Bhagavd Gita – posted in two parts on 22, 23 November 2011

Swami Vivelkanda on Krishna and Gopis – posted on March 8, 2014

 

contact swami_48@yahoo.com

கரிகாலன் வரலாறு கூறும் சுவைமிகு பாடல்கள்!

chola-flag-2

Compiled by london swaminathan

Post No: 1597: Dated 23 January 2015

 

தமிழ் இலக்கியத்தில் அதிகம் பாடல் பெற்ற மன்னன் கரிகாலன் என்றே தோன்றுகிறது. பழமொழி நானுறு மட்டிலுமே மூன்று பாடல்கள் இருக்கின்றன. பத்துப் பாட்டில் பொருநர் ஆற்றுப் படை, பட்டினப் பாலை

ஆகிய நூல்களிலும், புறநானூறு முதலிய பாடல்களில் நிறைய இடங்களிலும் கரிகாலன் பெயர் வருகிறது. வேத நெறி தவறாமல் ஆட்சி செய்த மாமன்னன் அவன் —-.மஹாவம்சத்தில் வரும் எல்லாரன், ஏழாரன் என்ற பெயர்களும் இவரையே குறிக்கும் என்பாரும் உளர்.

1.கரிகாலன், யஜூர் வேதத்தில் சொன்னபடி பருந்து வடிவ யாக குண்டம் எழுப்பி பெரிய யாகம் செய்ததைத் தனிக் கட்டுரையில் விரிவாகத் தந்து விட்டேன்.

 

காண்க: கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம், ஜனவரி 18, 2012

 

2.கரிகாலன், ரிக் வேத மந்திரத்தில் சொன்னபடி, ஏழு அடி நடந்து (சப்த பதி) சென்றுதான் நண்பர்கள், விருந்தாளிகளுக்கு பிரிவுபசாரம் (குட் பை) சொல்லுவான் என்பதையும் தனிக்கட்டுரையில் கொடுத்து விட்டேன்.

 

பிராமண புரோகிதர்களைக் கொண்டு நடத்தும் திருமணங்களில்– தீயை வலம் வரும் மணமக்கள் — ஏழு அடி = சப்த பதி — நடப்பர். அப்படியானால் அந்த உறவு நீடித்து நிற்கும் என்பது கருத்து. தமிழ் மன்னர்களின் அமைச்சர்கள், புரோகிதர்கள்  பிராமணர்கள் என்பதால் தொண்டைமான் இளந்திரையன், கரிகாலன் ஆகியோர் இப்படிச் செய்ததை சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்கள் அழகாகச் சொற்களில் வடித்துள்ளன

3.கரிகாலன் தான்,  இந்தியத் திரு நாட்டில் நீண்ட காலம் ஆண்ட மன்னன் என்பதையும் சில நாட்களுக்கு (ஜனவரி21, 2015) முன் தனி ஒரு கட்டுரையில் தந்தேன்.

4.உலகம் முழுதும் உள்ள நீதிபதிகள் தலையில் நரை முடி தரித்து (விக்) நீதி வழங்கும் — தீர்ப்புக் கூறும் — வழக்கத்தைக் கரிகாலனே துவக்கி வைத்தான் என்றும் ஒரு ஆய்வுக் கட்டுரையில்  எழுதிவிட்டேன்.

 

எனது முந்தைய கட்டுரைகளைப் படித்தறிக.

karikal elephant

இப்பொழுது பழமொழிப் பாடல்களில் வரும் அவன் கதைகளைக் கண்போம்:

 

1.சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்

பிடர்த்தலைப் பேரானைப் பெற்று – கடைக்கால்

செயிரறு செங்கோல் செலீ இயினான்; இல்லை

உயிர் உடையார் எய்தா வினை — (பழமொழி நானூறு)

 

பொருள்:பகைவர் மூட்டிய தீயில் அகப்பட்ட சோழனின் சிறுவயது மகன், இரும்பிடர்த் தலையார் என்ற மாமன் உதவியுடன் பிற்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றி செங்கோல் ஆட்சி செய்தான். ஒருவன் அடைய முடியாத வினை எதுவும் இல்லை.

இதைக் கர்மவினைக் கொள்கையை உறுதிப்படுத்தும் பாட்டு என்பதே பொருத்தம். பழமொழி நூலை யாத்தவர்கள் சமண முனிவர்கள் என்பர் சான்றோர். அவர்கள் கர்ம வினைக் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை உடையோர். கரிகாலனுக்கு பூர்வ ஜன்ம கர்ம வினையின் படி அப்பதவி கிடைக்க வேண்டும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க இயலாது என்பதே புலவர் தம் கருத்து.


இவன் சிறு வயது பாலகனாக இருந்ததால் இவனுக்கு எதிராக அரண்மனைச் சூழ்ச்சிகள் பெருகி, பஞ்ச பாண்டவர் தங்கிய அரக்கு மாளிகைக்கு துரியோதணன் தீ வைத்தது போல  — கரிகாலன் இருப்பிடத்துக்கும் தீ வைக்கவே அவன் தப்பி ஓடுகையில் கால் கருகி கரிகாலன் எனப் பெயர் பெற்றதை பொருநர் ஆற்றுப்படையின் பிற்சேர்க்கையான கீழ் கண்ட பாடலும் உறுதி செய்யும்:

 

முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்

இச் சக்கரமே அளந்ததால் – செய்ச்சேய்

அரிகால்மேல் தேன்   தொடுக்கும் ஆய் புனல் நீர் நாடன்

கரிகாலன் கால் நெருப்புற்று

அக் காலத்தில் மன்னர் இல்லாத — அராஜக நாட்களில் — யானை கையில் மாலையைக் கொடுத்து, அது யார் கழுத்தில் மாலை இடுகிறதோ அவரை மன்னர் ஆக்கல் வழக்கம். மூர்த்தி நாயனார், கரிகாலன் முதலியோர் இப்படித் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழ் மன்னர்கள் ஆவர்.

கரிகாலன் பற்றிய பாட்டு இதோ:

processiononelephants2

2.கழுமலத்து யாத்து களிறும் கருவூர்

விழுமியோன் மேற் சென்றதனால்  விழுமிய

வேண்டினும் வேண்டா  விடினும் உறற்பால

தீண்டாவிடல் அரிது –(பழமொழி நானூறு)

 

பொருள்:– கழுமலம் என்னும் ஊரில் இருந்து விடப்பட்ட யானை, கருவூருக்குச் சென்று கரிகாலனை ஏற்றி  வந்தது. ஒரு பொருளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , அடைவதற்கு உரியன ஒருவரை அடைந்தே தீரும் (கர்ம வினைக் கொள்கை)

Muller Collection - Dr. W.E. Bok of Pretoria in robes and wig

3.உரை முடிவு காணான் இளமையோன் என்ற

நரை முது மக்கள் உவப்ப — நரை முடித்து

சொல்லாலே முறை செய்தான் சோழன் – குலவிச்சை

கல்லாமற் பாகம் படும் –  -(பழமொழி நானூறு)

 

பொருள்:- நாம் சொல்லும் வழக்கைப் புரிந்து கொள்ளும் வயது இவனுக்கு இல்லை- இவன் சின்னப் பையன்- என்று வயதான மனுதாரர்கள் சொன்னார்கள். உடனே (மாறு வேடத்தில்) தலையில் நரை முடித்து வந்து மனம் மகிழும் தீர்ப்புரைத்தான்.ஆதலால் அவரவர் குலத்துக்குரிய அறிவு கல்லாமலேயே எல்லோருக்கும் இருக்கும் (ஜாதிக் கொள்கை: அவரவர் ஜாதி மூலம் கிடைக்கும் அனுபவ அறிவு அவனை அப்பணியில் சிறக்கச் செய்யும். இப்போதும் நடிகர் மகன் நடிகனாவதும், முதலமைச்சர் மகன், அமைச்சர் பதவி பெறுவதும் உண்டு)

இது பற்றி 1990-களில் லண்டனில் இருந்து வெளியான ‘மேகம்’ மாத இதழில் நான் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் — “தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்”—  என்று நூல் வடிவில் 2006-ல் வெளியானது. பின்னர் இந்த பிளாக்- கில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது.

எனது பழைய கட்டுரை ( இதுவரை படிக்காதோருக்காக)

 

தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகு காட்சிகள்

கரிகால் சோழனுக்கு பிரிட்டிஷ் நீதிபதிகளுடன் தொடர்பு உண்டா?

ச. சுவாமிநாதன், எம்.ஏ., (பிரித்தானியா)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை ஆண்ட கரிகால் சோழனுக்கும் இன்று பிரிட்டனில் நீதி வழங்கும் அதிகாரிகளுக்கும் இடையே தொடர்பு உண்டு என்று யாரேனும் சொன்னால் இது என்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்களே? என்று கூறுவார்கள்.  கோகுலாஷ்டமிக்கும் குலாம்பாய்க்கும் என்ன தொடர்போ, அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்போ அந்த அளவுதான் தொடர்பு என நினைப்பார்கள்.  ஆனால் பின்வரும் அதிசயமான விஷயத்தைப் படியுங்கள்.  தொடர்பு புரியும்.

இதோ ஒரு குட்டிக்கதை

பெரும்பாலும் தமிழர்களுக்குத் தெரிந்த கதை, சோழநாட்டில், உறையூரில் இருந்த நீதிமன்றம் மிகவும் புகழ் பெற்றது.  ஒருநாள் இரண்டு முதியவர்கள் ஒரு வழக்குடன் அங்கு வந்தார்கள்.  அப்போது நீதிமன்றத்தில் நடுவர் இருக்கையில் அமர்ந்திருந்தவனோ சோழமாமன்னன் கரிகாலன்.  வயதில் இளையவன்.  இரண்டு முதியவர்களுக்கும் பெருத்த ஏமாற்றம்.

நாம் கொண்டு வந்த வழக்கோ மிகச் சிக்கலானது.  இந்தச் சிறுவனா இதை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப் போகிறான்.  இது இயலாத செயல் என்று கருதினர்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமல்லவா?

அவர்கள் முகத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தைக் கவனித்த கரிகாலன், “பெரியோர்களே! வயதான நீதிபதியைக் காணவில்லை என்று தானே கவலைப்படுகிறீர்கள்.  நாளை வாருங்கள் அவர் இருப்பார்.”  எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.

அவன் கூறியது போலவே, மறுநாள் அறங்கூறு அவையில், தலை நரைத்த முதிய நீதிபதி ஆசனத்தில் அமர்ந்து இருந்தார்.  முதியவர்கள் இருவரும் தம் வழக்கை எடுத்துரைத்தனர்.  அதனை விசாரித்த முதிய நீதிபதி, அனைவரும் வியக்கும் வண்ணம் தீர்ப்புக் கூறினார்.  முதியவர்கள் இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி.

wig1karikal elephant

அதிலும், அவ்வாறு தீர்ப்புக் கூறியது முதிய நீதிபதியைப் போல் நரைமுடி தரித்து அமர்ந்திருந்த இளைஞனான கரிகாலன்தான் எனத் தெரிந்ததும் அவர்களின் வியப்பு எல்லையற்றதானது.  கரிகால் சோழன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நரைமுடி தரித்து வந்து தீர்ப்பு வழங்கிய செய்தி முழு உலகுக்கும் தெரிய வந்துவிட்டது போலும்.

அதன் விளைவாகத் தான் உலகெங்கிலும் நீதிபதிகள் நரைமுடி போன்று ‘விக்’ தரித்து தீர்ப்பு வழங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளத் துவங்கியிருக்க வேண்டும்.  இன்றும் கூட பிரிட்டனில் நீதிபதிகள் தலையில் வெள்ளை (நரை) முடி ‘விக்’ தரித்து வந்துதான் தீர்ப்பு வழங்குகின்றனர்.  வேறு சில நாடுகளிலும் இவ்வழக்கம் இருந்து பின்னர் மறைந்திருக்க வேண்டும்.  நரைமுடி தரித்து தீர்ப்பு வழங்கிய கரிகால் சோழனைத் தமிழ் இலக்கியம் மிகவும் வியந்து போற்றுகிறது.

இச்செய்தியைப் பொருநராற்றுப்படை, மணிமேகலை, பழமொழி ஆகிய நூல்கள் எடுத்துரைக்கின்றன.

முதியோர் அவை புகு பொழுதிற்றம்

பகை முரண் செலவும்—–

பொருநராற்றுப்படை (வரி 187–188)

என்றும்

இளமை நாணி முதுமை எய்தி

உரை முடிவு காட்டிய உரவோன்

என்றும் இலக்கியங்கள் புகழ்கின்றன.  பழமொழி என்னும் பதினெண்ணின் கீழ்க் கணக்கு நூல் பின்வரும் பாடலில் விளக்கமாகக் கூறுகிறது.

“உரை முடிவு காணா இளமையோன் என்ற

நரை முதுமக்கள் உவப்ப====

“நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்

சோழன், குல விச்சை கல்லாமற் பாகம்படும்

தத்தம் குலத்தொழில் கற்காமலேயே ஒருவருக்கு வந்துவிடும் என்னும் பழமொழியை விளக்கக் கரிகாலன் கதையைப் பயன்படுத்துகிறான் ஒரு கவிஞன்.  இமயம் வரை சென்று புலிக்கொடி நாட்டிய கரிகால் பெருவளத்தானை பிரிட்டன் வரை சென்று புகழ்க்கொடி நாட்டினான் என்று சொன்னால் மிகையல்ல.

contact swami_48@yahoo.com

 

திருமந்திரம்: குருடன் குருடனுக்கு வழி காட்டினாற் போல!

Tirumular+Tirumantiram2

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

 

  1. திருமந்திரம்: குருடன் குருடனுக்கு வழி காட்டினாற் போல!

 

Compiled by S Nagarajan

Post No: 1596: Dated 23 January 2015

 

by

ச.நாகராஜன்

 

நியாயங்கள் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்கள்:

दग्धदहन न्यायः

Dagdha dahana nyayah

தக்த தஹன நியாயம்

தக்த – எரிபட்டதை; தஹன – எரிப்பது

எரித்ததை எரிப்பது என்னும் இந்த நியாயம் தீயில் எரிபட்டுப் போன ஒரு பொருளை தீ மீண்டும் எரிக்காது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. முடியாத ஒரு காரியத்தையோ அல்லது பயனற்ற ஒரு காரியத்தையோ வீணாக ஒருவன் செய்யும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.


Blind Faith- Blind leading Blind

अन्धपरम्परान्यायः

andha parampara nyayah

அந்த பரம்பர நியாயம்

அந்த(கன்) – குருடன்

குருடனைக் குருடன் பின்பற்றும் இந்த நியாயம் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ஒன்று. குருட்டுத்தனமாக, அறிவற்று, சுய சிந்தனையற்று ஒருவனைப் பின்பற்றும்போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

ஒரு குருடனை வழிகாட்டியாகக் கொண்டு ஒருவன் சென்றால் அவன் விழுவதோடு அடுத்தவனையும் கிணற்றில் தள்ளி விடுவான்.

 

நல்ல குருவினைப் பின்பற்றாமல் தீய ஒருவனைக் குருவாகப் பாவித்து ஒருவன் பின்பற்றுவது குருடனைக் குருடன் பின்பற்றியது போல ஆகும் என்பது அற நூல்கள் பலவற்றிலும் குறிப்பிடப்படுகிறது.

 

எடுத்துக்காட்டாக திருமுலரின் திருமந்திரத்தில் வரும் இந்தப் பாடலைக் கூறலாம்:

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்  

குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்                          

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்                                  

குருடும் குருடும் குழி விழுமாறே —- (திருமந்திரம் பாடல் எண் 1680)

 

‘Blind leading the blind’ என்ற இதே கருத்து கதோபநிஷத்திலும் காணப்படுகிறது.

பைபிளிலும் இந்தக் கருத்தை மாத்யூ 15:13-14 மற்றும் ல்யூக் 6:39-40லும் காணலாம். புத்தமத த் தின் முக்கிய நூலான சாங்கி சூத்திரத்திலும் இது கையாளப்படுகிறது. அருளாளர்கள் எழுதிய பாஷ்யங்களிலும் இந்த நியாயம் எடுத்துச் சொல்லப்படுகிறது.

 

உலகளாவிய விதத்தில் பேசப்படும் இந்த நியாயம் மிகச் சில சொற்களில் அரிய கருத்தை விளக்கும் ஒன்றாகும்.

Blind-leading-the-blind

अश्मलोष्टन्यायः

ashma loshta Nyayah

அஷ்ம லோஷ்ட நியாயம்

அஷ்ம- கல்; லோஷ்ட – மண்ணாங்கட்டி,

கல்லும் மண்ணாங்கட்டியும் என்னும் நியாயம் இது. மண்ணாங்கட்டி ஒன்று பஞ்சை விடக் கெட்டியானது தான்; ஆனால் அதைக் கல்லுடன் ஒப்பிட்டால் அது மிகவும் மிருதுவானது தானே! உடைத்து உதிரக் கூடிய ஒன்று அது! அது போலவே ஒரு மனிதன் அவனது கீழ் வேலை பார்ப்போரை ஒப்பிட்டால் மிகவும் முக்கியமானவன் தான்! ஆனால் அதே சமயம் அவனை விட மேல் நிலையில் உள்ளோரை ஒப்பிடுகையில் அவன் சிறிய நிலையில் உள்ளவன் தான்! ஒரு விஷயத்தை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுகையில் எதை எத்துடன் ஒப்பிடுகிறோம் என்பதில் ஏற்படும் முக்கியத்துவத்தை இந்த நியாயம் விளக்குகிறது.


Clay-Lumps-1964438

अहि-निर्ल्वयनीन्यायः

ahi nir-lvayani nyayah

அஹி நிர்-ல்வயனி நியாயம்

பாம்பு தன் சட்டையை உரித்து விடுவது பற்றிய நியாயம் இது.

 

எப்படி ஒரு பாம்பானது தன் சட்டையை உரித்து விட்டவுடன், அதை இனிமேல் தன் உடலில் ஒரு பகுதியாக்க் கருதுவதில்லையோ அதே போல ஒருவன் உண்மையான வித்யாவை ( மெய் கல்வி) அடைந்தவுடன் – தன்னை ஆன்மா என்று அறிந்தவுடன் -உடலை இனியும் தனதாக எண்ண மாட்டான்.

உயர்ந்த ஆன்மீகக் கருத்தைச் சொல்லும் நியாயம் இது.

shed-snake-skin2

अहिकुंडलन्यायः

ahi kundala nyayah

அஹி குண்டல நியாயம்

பாம்பு சுருண்டு படுத்திருக்கும்போது அதன் சுருள்களைச் சொல்லும் நியாயம் இது.

எப்படி சுருண்டு படுப்பது பாம்பின் இயற்கையோ (அதன் சுருள்கள் அதன் இயற்கையோ) அதே போல கெட்டவன் ஒருவனின் வழிகளும் அவனுடன் இயற்கையாக  இருக்கும் ஒன்றே! இயல்பாகத் தீயவரிடம் அமைந்திருக்கும் கெட்ட செயல்களையும் தீய எண்ணங்களையும் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

இப்படி எத்தனை எத்தனை நியாயங்கள்! ஒவ்வொன்றையும் படிக்கவும் கேட்கவும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தவும் சுவையான ஒன்றாக அமைகிறது இல்லையா!

best coiled

contact swami_48@yahoo.com

***************

Longest Ruling Indian Kings!

கரிகால் சோழன்

Compiled by london swaminathan

Post No: 1593: Dated 21 January 2015

 

The longest ruling Indian king was Karikala, a Cholza king, according to a palm leaf discovered in Oriental Manuscript Library, Chennai.

Prof M Ragava Iyengar brought it to the attention of scholars several decades ago. According to the manuscript, Karikal Choza ruled the Chola country for 83 years. If it is correct he must be the longest ruling monarch in India. The four line Tamil verse says that Karikalan came to power when he was five years old and raised the banks of River Kaveri at 53 and lived upto 83 in Thanjavur.

Tamil litearture talks about some boy kings. A Pandya came to power when he was a boy according to Tiruvilaiyadal Purana. The greatest of the Chola kings, Karikal Choza also came to power when he was young. When he escaped the palace intrigues and conspiracies,his feet were burnt in an arson attempt. Since he had burnt feet he was called Mr Burnt Feet (Kari Kalan in Tamil). He was said to have regained the kingdom when an elephant garlanded him. In those days they used to send an elephant with a garland and whoever it garlands will become the king. Karikalan regained the kingdom thus. But the confusing part in the four line Tamil verse is a reference to Thanjavur which became the capital of Chozas at a late stage.

We know for sure that there were two Karikalans in the Choza King list. Karikalan and Aditya Karikalan. People believed that the early Karikal Choza only built a dam across Kaveri in Grand Anicut in Tamil Nadu. Though we hear lot of stories about Karikal Choza, no historical material is available in support of him.But it is true that there is NO historical record for most of the Kings mentioned in Sangam Tamil literature.

Chola-Empire-Map

Another Tamil scholar P T Srinivasa Iyengar proved that one Karikala lived at the time of Trilochana Pallava in sixth century. This led to the view that there were three Karikalans. And in the cholz dynasty we see three Kulothungas, three Rajarajas and three Rajendras. So it is not uncommon.

There is nothing wrong in beleiving the story when a whole religion Judaism is founded on Moses who has no historical proof until this day. I also think that there might have been another Karikal Chola apart from the known two. If we get some proof from a secondary source then we can believe the information given in the Tamil verse. We must remmeber that there is a huge gap between the Sangam Chola kings and the historical Chola kings. More research is required to fill in the gap.

 

Kalhana in his Rajatarangini gives 70 years for Huna king Mihirakula and sixty or over sixty years each for another ten kings! This is very unusual because the avearge rule for a king is only 20years in most parts of the world.

 

Rule of Chera Kings

We get some interesting infromation from another Sangam Tamil work called ‘Pathitru Pathu’ which gives the years for all the Chea kings:-

 

Nedun Cheralathan – Ruled for 58 years

Palyanai Chelkezu Kuttuvan – 25 years

Kalangkai kanni Narmudi Cheral – 25 years

Senguttuvan – 55 years

Adukotpattu Cheralathan – 38 years

Selvak katung ko vaziyathan – 25 years.

 

All the above dates are within acceptable limits.

Map_of_the_Periplus_of_the_Erythraean_Sea[1]

Among the Pallava kings,

 

Nandivarman II ruled for 65 years (longest ruling historical king in India)

Dantivarman rued for 50 years.

Amoghavarsha of Rahtrakutas ruled for 64 years.

Kushna king Kanishka ruled for 45 years

 

We know that Bimbisara ruled for 52 years, Vinayaditya of Hoysalas 51 years, Veera Vallala III -51 years, Chalukya Vikramaditya 50 years and Kulothunga for 50 years as well.

Kalidas in his Raguvamsa Kavya says all the kings of ancient India ruled till old age and they went to forest when they saw their grand children. During modern times, kings fought few wars and had good medical treatment, had Gold Bhasmam every day and had a long life. But in the olden days they had to fight their enemies and establish their supriority. Otherwise they will be devoured like  a big fish eating smaller ones.


Uttama_coin

Coins of Uttama Choza

Sumerian legends give thousands of years for each king. Lord Rama was also given 10,000 years. But great saint and Yoga master Patanjali worked it out scientifically and arrived at 28 years for Lord Rama’s rule. Actually 10,000 years are just 10,000 days. Probably Sumer also had the custom of mentioning the days as years.

 

Ancient wolrd’s longest serving monarch was an Egyptian king. Pepi ruled fro 94 years and Rameses II for 67 years

 

In Sri Lanka, Pandukabhaya ruled for 70 years, Muta Siva 60 years, Vijayabahu and Parakrama  Bahu 55 years each.

 

Encyclopedias say that Sawai Raja Basavalinga of Mysore region ruled for 79 years. But there is no surprise because modern day kings like him led a care free, war free life. They had healthy food and good medical care.

 

contact swami_48@yahoo.com

நீண்ட காலம் ஆண்ட மன்னன் கரிகாலன்?

Kallanai24

Karikal Choza (Mr Burnt Feet Choza)

கட்டுரையாளர் லண்டன் சுவாமினாதன்

 

ஆராய்ச்சிக் கட்டுரை எண் – 1592; தேதி-  21 ஜனவரி 2015

சோழ மன்னர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலன். நமக்குத் தெரிந்து அவனது பெயரில் பிற்காலத்தில் ஆதித்த கரிகாலன் என்ற ஒரு மன்னன் இருந்தான். ஆனால் இவ்விருவர் தவிர மூன்றாம் கரிகாலன் ஒருவன் இருந்திருக்க வேண்டும். இவர்களில் யார் காவிரியில் அணை கட்டிய கரிகாலன் என்பது கேள்விக்குறியாக தொக்கி நிற்கும்.

 

பேராசிரியர் மு. ராகவ அய்யங்கார் பல ஆண்டுகளுக்கு முன் சென்னை கீழ் திசை சுவடிகள் நிலையத்தில் இருந்து பின்வரும் பாடலைக் கண்டுபிடித்தார்:-

அஞ்சில் முடிகவித்து ஐம்பத்து மூன்றளவில்

கஞ்சிக் காவேரி கரை கண்டு – தஞ்சையிலே

எண்பத்து மூன்றளவும் ஈண்ட விருந்தேதான்

விண்புக்கான் தண்புகார் வேந்து

 

இந்தப் பாட்டு கரிகால் பெருவளத்தான்  ஆட்சிக் காலத்தை 83 ஆண்டுகளாகக் கூறுகிறது. அவன் ஐந்து வயதில் பட்டம் ஏற்று 53 வயதில் காவிரிக்கு கரை எழுப்பி 83 ஆண்டில் உயிர் துறந்ததை தெள்ளிதின் விளம்பும் பாட்டு இது.

Chola-Empire-Map

ஆனால் இதில் தஞ்சை என்பதில் இருந்து இப்பாட்டு குறித்து சந்தேகம் எழுந்தது. ஏனெனில் சோழர்களின் தலை நகராக தஞ்சாவூர் உருவாநது மிகவும் பிற்காலத்தில். பி.டி சீனிவாச அய்யங்கார் என்னும் பேரறிஞர், திரிலோசன பல்லவன் காலத்தில் வாழ்ந்த ஒரு கரிகாலன் பற்றி அக்காலத்தில் எழுதி வந்தார். அவன் ஆறாம் நூற்றாண்டவன் என்பதும் அவர் கருத்து. ஆகவே மூன்று கரிகாலன்கள் இருந்திருக்க வேண்டும் என்றே நானும் கருதுகிறேன். இவர்களில் யார் கல்லணையில் காவிரி நதியின் குறுக்கே அணை கட்டினர் என்பதும் ஆய்வுக்குரிய விஷயமே.

 

நமக்குத் தெரிந்த கரிகாலன் கதை எல்லாம் சுவையான கதைகள் ஆனால் சரித்திரச் சான்றுகள் எதுவும் இல! சிறுவயதில் கரிகாலனை மன்னர் ஆக்க விடாமல் சதிகள்– அரண்மனைக்கு தீ வைப்பு — கரிகாலன் தப்பி ஓட்டம்– கால் கருகி கரிகாலன் என்ற பெயர் — யானை கையில் மாலை கொடுத்து அனுப்பவே அது அந்தச் சிறுவன் கழுத்தில் போட அவன் மீண்டும் மன்னன் ஆனான்— என்பன செவி வழிச் செய்திகள்.

மூன்றாம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடையே ஆண்ட சோழ மன்னர்களின் பெயர்கள் நமக்குக் கிடைக்கவில்லை.சங்க காலத்துக்கு முந்தைய சோழ மன்னர்களின் பெயர்களும் நமக்குக் கிடைக்கவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு குறைந்தது ஐந்து மன்னர் வீதம் கிட்டத்தட்ட முப்பது சோழ மன்னர்களாவது சங்க காலத்துக்குப் பின்னர் இருந்திருக்க  வேண்டும். ஆகவே பல கரிகாலன் கொள்கையில் பசை இருக்கிறது என்போமாக!

??????????????????????????????

Rajaraja on Indian Postage Stamp

மோசஸ் என்பவர் தலைமையில் அமைந்த யூத மதத்தை நாம் அறிவோம். ஆனால் அந்த மோசசுக்கு வரலாற்று சான்று எதுவும் இல. சங்க கால மன்னர்கள் பெரும்பாலோர் வரலாற்றுச் சான்று அற்றவர்களே. ஆயினும் அனைவரும் உண்மையில் ஆட்சி புரிந்ததை நாம் அறிவோம்.

 

பழஙகால புராண மன்னர்களின் பெயர்களை 18 புராணங்கள் ராமாயண, மஹா பாரதம் ஆகியன எடுத்தியம்பும். ஆயினும் வரலாற்றுச் சான்று இல்லாமலேயே நாம் நம்புகிறோம்.

கரிகாலன் பற்றிய இந்தப் பாடல் உண்மையானால் அவன் தான் இந்தியாவில் நீண்ட காலம் ஆண்ட மன்னன் ஆவான். காஷ்மீரின் வரலாற்றை எழுதிய கல்ஹணர் பல மன்னர்களுக்கு நீண்ட ஆட்சி ஆண்டுகளை அளிக்கிறார். அவர் கணக்குப் படி மிகிரகுலன் என்ற ஹூண மன்னன் 70 ஆண்டுகள் ஆண்டான். மேலும் பத்து மன்னர்கள் தலா 60 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.

ஆயினும் வரலாற்றுச் சான்று உடைய அரசர்களில் மிகவும் நீண்ட ஆட்சி புரிந்தவன் பல்லவ மல்லன் எனப்படும் இரண்டாம் நந்தி வர்மன் தான் – அவன் 65 ஆண்டுகளும், அவனுக்கு அடுத்ததாக ராஷ்டிரகூட மன்னன் அமோகவர்ஷன் 64 ஆண்டுகளும் ஆண்டதை வரலாறு பதிவு செய்துள்ளது.


raja_raja_cho

Rajaraja

பதிற்றுப் பத்து தரும் அரிய தகவல்

 

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – 58 ஆண்டுகள் ஆண்டான்

 

பல்யானை செல்கெழு குட்டுவன் – 25 ஆண்டுகள் ஆண்டான்

 

நார் முடிச் சேரல்– 25 ஆண்டுகள் ஆண்டான்

 

செங்குட்டுவன் – 55 ஆண்டுகள் ஆண்டான்

 

ஆடுகோட்பாட்டு சேரலாதன்- 38 ஆண்டுகள் ஆண்டான்

செல்வக் கடுங் கோ வாழியாதன்-25 ஆண்டுகள் ஆண்டான்

 

பெருஞ்ச் சேரல் இரும்பொறை –17 ஆண்டுகள் ஆண்டான்

 

குடக்கோ இளஞ்ச் சேரல் இரும்பொறை –16 ஆண்டுகள் ஆண்டான்

கரிகால் சோழன்

ஏனைய சில மன்னர்கள் ஆட்சி புரிந்த ஆண்டுகள்:

 

பிம்பிசாரன்- 52

சாளுக்கிய விக்ரமாதித்யன் -50

பல்லவ தந்தி வர்மன் – 50

குலோத்துங்க சோழன் – 50

ஹொய்சாள வினயாதித்யன்-51

ஹொய் சாள வீர வல்லாளன்- 51

கனிஷ்கன் -45

 

இலங்கை மன்னர்கள்:

பாண்டுகாபயன்- 70

மூடசிவன் – 60

பராக்ரம பாஹு-55

விக்ரமபாஹு– 55

காளிதாசன் எழுதிய ரகுவம்ச காவியத்தில் சூரிய குல மன்னர்கள் — பேரக் குழந்தைகளைப் பார்க்கும் வரை ஆண்டுவிட்டு காடேகியதாக — வானப்ரஸ்தம் சென்றதாகக் கூறுவான்.

 

ராமாயணத்தில் இராமபிரான் 10, 000 ஆண்டுகள் ஆண்டதாகக் கூறியதை 2000  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாபெரும் அறீஞர் பதஞ்சலி— 10,000 நாட்கள் என்று கொண்டு கணக்கிட்டு ராமன் 28 ஆண்டுகள் ஆண்டதாக எழுதியுள்ளார். அக்கலத்திலேயே வரலாற்றைப் புதுமைக் கண்களோடு கண்ட மாபெரும் அறிஞன் — பாணினியத்துக்கு உரை கண்ட மஹா பாஷய ஆசிரியர் — பதஞ்சலி!

நம்முடைய இன்றைய ஆய்வுக்கு எல்லாம் முன்னோடி பதஞ்சலி!!

சுமேரியாவிலும் ஆரம்ப கால மன்னர்களுக்கு 28 ஆயிரம், 36 ஆயிரம் என்று ஆட்சி ஆண்டு கொடுத்தனர். உலகு எங்கிலும் நாட்களை வருடக் கணக்கில் சொல்லும் வருடம் இருந்திருக்க வேண்டும்!


1000_Rupee_thumb[7]

வரலாற்றில் மிகவும் நீண்ட காலம் ஆண்ட மன்னன் எகிப்திய மன்னன் பெபி ஆவான் அவன் 94 ஆண்டுகள் ஆண்டான். ஆவனுக்கு அடுத்ததாக ராமசேஷன் (ராம்செஸ் ) என்ற மன்னன் 67 ஆண்டுகள் !

நவீன கால (பிரிட்டிஷ் ஆட்சிக் கால இந்திய மன்னர்கள்) இந்திய மன்னர்களில் பலர் நிறைய ஆண்டுகள் ஆண்ட — பெயர் அளவுக்கு “மன்னர்களாக” இருந்திரு க்கிறார்கள். இவர்களில் “நீண்ட ஆட்சி” புரிந்தோர் உண்டு. இவர்கள் போர் என்ற சொல்லை அறியாதவர்கள். தங்க பஸ்பம் சாப்பிட்டுக் கொண்டு பல மஹா ராணிகளுடன் உல்லாச சுக போக வாழ்க்கை நடத்தியவர்கள். ஆகையால் அவர்களை ஒதுக்கி விடுதல் சாலப் பொருத்தம்.

 

contact swami_48@yahoo. com

வீட்டு வாசற்படியில் வைக்கும் விளக்கு!

lamp1

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. வீட்டு வாசற்படியில் வைக்கும் விளக்கு!

Article No.1588; Date: 19th January, 2015

Part 4 of Nyayas in Tamil written by S Nagarajan


by ச.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்.

देहलीदीपन्यायः

dehalidipa nyayah

 

தேஹலி தீப நியாயம்

 

வீட்டு வாயிற்படியில் வைக்கும் தீப நியாயம் காலம் காலமாக வழங்கி வரப்படும் ஒரு நியாயம். வீட்டு வாயிற்படியில் வைக்கும் விளக்கானது வீட்டிற்கு உள்ளேயும் வெளிச்சம் தரும். வீட்டை நோக்கி வருவோருக்கும் வெளியே வெளிச்சம் தரும். அதனால் ஒரே சமயத்தில் இரு நன்மைகள்!

 

ஒரே சமயத்தில் இரு நன்மைகளைத் தரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கூற இந்த நியாயம் பயன்படுகிறது.

 

இதை அற்புதமாக துளசிதாஸர் பயன்படுத்தி ராம நாம மஹிமையை விளக்குகிறார். ஹிந்தியில் இரண்டு அடிப் பாடல்கள் தோஹா என்று வழங்கப்படுகிறது.

துளஸிதாஸரின் தோஹாவைப் பார்ப்போம்:-

 

ramnam mani dipa dharu, jiha dehari dvara
tulasi bhitara baherihi, jau cahasi ujiyara

 

ராமநாம மணி தீப தரு, ஜிஹ தேஹரி த்வாரா I

துளஸி பிடாரா பஹேரிஹி ஜா சாஹஸி உஜியாரா II

lamp use it

வீட்டு வாயிலில் வைக்கப்படும் விளக்கு போல நாக்கில் வைக்கப்படும் ராம நாமம் உள்ளேயும் வெளியேயும் நலம் தரும். ஆத்மாவுக்கும் நலம். வெளி உலகிலும் நலம் தரும்.

இந்த நியாயமே இன்னும் இரு நியாயங்களாகப் பெயரிடப்பட்டு இப்படிப் பரிமளிக்கிறது.

 

அந்தர்தீபிகா நியாயம்

மத்யதீப நியாயம்

பல்வேறு சூத்திரங்களிலும் இந்த நியாயம் கையாளப்படுகிறது.

अन्धगोलाङ्गूलन्यायः

andha go langula nyayah

 

Two blind men_0

அந்த கோ லாங்கூல நியாயம்

 

அந்த: – குருடன்’; கோ-காளை; லாங்கூலம் – வால்

 

ஒரு குருடன் பார்த்த காளையின் வால் என்ற நியாயம் இது.

இது எப்படி எழுந்த து என்பதை விளக்கும் கதை இது.முன்னொரு காலத்தில் ஒரு குருடன் தனது கிராமத்திலிருந்து கிளம்பி அருகில் உள்ள ஒரு நகருக்குச் செல்ல ஆரம்பித்தான். அவன் சென்று கொண்டிருக்கும் போது ஒரு மற்றவர்கள் படும் கஷ்ட்த்தைக் கண்டு மகிழும் ஒரு கொடூரமான ஆசாமியைச் சந்தித்தான். அந்த ஆசாமி குருடன் அடுத்துள்ள நகருக்குச் சென்று நிறைய தானம் பெறலாம் என்ற அவனுடைய எண்ணத்தை அறிகிறான். உடனே அவனது சுபாவப்படி அவனிடம் அவனுக்கு தகுந்த ஒரு வழிகாட்டியைக் காண்பிப்பதாக க் கூறுகிறான். அங்கே மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு காளையின் வாலை அவன் கையில் தந்து, “இதோ பார்! இதைப் பிடித்துக் கொண்டு செல்! நகரம் வந்து சேரும் என்கிறான். குருடனும் அவன் சொற்களை நம்பி காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறான். பிறகு என்ன நடந்தது என்பதை யாரும் விளக்கவே வேண்டாம்! வெகுண்ட காளை அவனை முட்புதருக்குள் தள்ளி விட்டது!

 

நம்பக்கூடாத ஒருவனை நம்பிக் கெடுவதை இந்த நியாயம் விளக்குகிறது.

இதை ஆதி சங்கரர் வேதாந்த சூத்திரத்தில் போலி குருவை அண்டி சரியான வழிகாட்டுதலின்றிக் கெடும் சீடனைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்துகிறார்.


two_frogs

कूपमण्डूकन्यायः

kupamanduka nyayah

கூப மண்டூக நியாயம்

கூபம் – கிணறு மண்டூகம் – தவளை

கிணற்றுத் தவளை நியாயம் என்று அழைக்கப்படும் இது பெரும்பாலும் உலக வழக்கில் அன்றாடம் வழங்கப்பட்டு வரும் ஒரு நியாயம்.

 

இது எப்படி வந்த து என்பதை விளக்க ஒரு கதை உண்டு. கடலிலிருந்து ஒரு தவளை கிணற்றுக்கு வந்து சேர்ந்தது.அதைப் பார்த்த கிணற்றுத் தவளை நீ எங்கிருந்து வந்தாய் என்று கேட்க அது நான் கடலிலிருந்து வருகிறேன் என்றது.

 

“கடல் என்றால்.. அது எவ்வளவு பெரியது?” என்று கேட்டது கிணற்றுத் தவளை.

“மிகவும் பெரியது”

“இந்தக் கிணறு அளவு இருக்குமா?”

“இன்னும் பெரியது”

“இதைப் போல இன்னும் ஒரு மடங்கு இருக்குமா?”

 

“அதற்கு எல்லையே இல்லை. மிக மிகப் பெரிய் ய்ய் யது..”

 

இதைக் கேட்ட கிணற்றுத் தவளை சிரித்தது. “நீ சொல்வது பொய்”, என்றது. ‘கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது’, என்றது அது.

 

சிறிதே படித்து கொஞ்சம் அனுபவமே கொண்டிருக்கும் ஒருவன் பரந்த உலக அனுபவத்தையும் ஆழ்ந்த அறிவையும் பற்றித் தெரிந்திருக்க முடியாது என்பதைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது. அவன் வெறும் கிணற்றுத் தவளை என்பது உலக வழக்கு!

froguseful

contact swami_48@yahoo.com

***************