வித்தியாசமான விஞ்ஞானி யுங்! -3

jung

Post No.1057; Dated: 22 May 2014.
ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரையில் இது பகுதி

((குறிப்பு: ஆங்கிலத்தில் ஜங் என்று எழுதியபோதிலும் சரியான உச்சரிப்பு யுங்)).

வித்தியாசமான விஞ்ஞானி யுங்! -3
ச.நாகராஜன்

பிற்பகல் நேரம். நல்ல சூரிய ஒளியில் யுங் ஒரு பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கிறார். அருகே ஒரு செங்குத்தான மலை. அந்த மலையின் மீது ஒரு கோட்டை. அந்தக் கோட்டையின் மேலிருந்த உயரமான கோபுரம் ஒன்றில் ஒரு பெண்மணி சுவர் தடுப்பின் அருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக ஜங் கழுத்தைப் பின்னால் மிக நீட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறது. ஜங் கழுத்தை நீட்டிய போது……

க்ரிக் என்ற சத்தம் கழுத்தில் கேட்க யுங் உறக்கம் கலைந்து எழுந்தார். தன் கனவில் பார்த்த பெண்மணி மறு நாள் பேச நிச்சயித்திருந்த அதே பெண்மணி தான். ஜங்கிற்கு இப்போது விஷயம் புரிந்து விட்டது. அவரை அவ்வளவு தூரம் கழுத்தை நீட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறதென்றால்…..

யுங் மறுநாள் தன் கனவை அந்தப் பெண்மணியிடம் அப்படியே சொன்னார். அபாரமான புத்திசாலியான அந்தப் பெண்மணியும் தான் உள்ளபடியே விஷயங்களைச் சொல்லாமல் மறைப்பதை ஜங் கண்டு பிடித்து விட்டார் என்பதைப் புரிந்து கொண்டார். அந்தக் கணத்திலிருந்து அனைத்தையும் ஒழுங்காகச் சொல்ல ஆரம்பித்தார். சிகிச்சை நல்ல முறையில் தொடங்கியது.

நனவு நிலைக்கும் கனவுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு நோயாளி ஒரு கனவைச் சொல்கிறார் என்றால் அது எப்படி தன்னைப் பாதிக்கிறது என்று பார்ப்பார் ஜங். பாதிப்பே இல்லை என்றால் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்று அர்த்தம். ‘காயப்பட்ட டாக்டர் தான் சரியான சிகிச்சை தர முடியும்’ என்ற பொருள் பொதிந்த வாக்கியத்தை உளவியல் சிகிச்சையாளரான யுங் அடிக்கடி சொல்வார்!

உளவியல் டாக்டராக இருந்தாலும் ஜங்கிற்கு ஏராளமான அமானுஷ்யமான அனுபவங்களும் எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டும் அபூர்வமான கனவுகளும் அடிக்கடி வந்தன.

1913ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நாள் யுங் தனியாக பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு ஒரு காட்சி தோன்றியது. வட கடலுக்கும் ஆல்ப்ஸ் மலைக்கும் இடையில் உள்ள பகுதியில் பிரம்மாண்டமான வெள்ளம் வடக்குப் பகுதியில் உள்ள தாழ்வான நிலப்பகுதியில் பிரவாகமாகப் பாய்வது போன்ற காட்சியை அவர் கண்டார். அது ஸ்விட்சர்லாந்தை நோக்கி நகர்ந்து வரும் போது தனது நாட்டைக் காப்பாற்றுவதற்காக அங்கிருந்த மலை உயரமாக வளர்ந்து கொண்டே போவதையும் அவர் பார்த்தார். ஒரு பேரபாயம் நிச்சயமாக வரப் போகிறது என்பதை யுங் உணர்ந்தார்.

மஞ்சள் அலைகளில் அடித்துச் செல்லப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தது. பிறகு வட கடல் முழுவதும் இரத்தமாக ஆனது. இந்தக் காட்சி ஒரு மணி நேரம் வரை நீடித்தது. யுங் குழம்பிப் போய் மயக்கமடைந்தார்.
இரண்டு வாரங்கள் கழித்து அதே காட்சி திரும்பவும் தோன்றியது. இப்போது காட்சி மிகவும் தெளிவாக இருந்தது, அவருக்குள் ஒரு குரல் தெளிவாகப் பேசியது:” இதோ பார் இது நிச்சயமான உண்மை, இப்படித் தான் நடக்கப் போகிறது. நீ சந்தேகப்படாதே!

அந்த ஆண்டு குளிர் காலத்தில் ஒருவர், ‘சமீப காலத்தில் உலகின் அரசியல் நிலவரம் எப்படி இருக்கும்’ என்று யுங்கிடம் கேட்டார்,”தனக்கு அது பற்றி ஒன்றும் தோன்றவில்லை என்றும் ஆனால் ரத்த ஆறு ஓடுவதைப் பார்ப்பதாகவும்” ஜங் பதில் கூறினார்,

தான் கண்ட காட்சி ஒரு புரட்சியைக் குறிக்கிறதோ என்று சந்தேகப்பட்ட யுங் அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

இதே போல 1914ஆம் ஆண்டு கோடை காலத்திலும், வசந்த காலத்திலும் ஆர்க்டிக்கில் குளிர் அலை அடித்து நிலமெல்லாம் பனிப்பாறைகளாக ஆவதாக அவர் மூன்று முறை கனவு கண்டார்.
இப்படி எல்லாம் கனவுகள் வருகிறதே, ஒரு வேளை தனக்கு சைக்கோஸிஸ் வியாதி வந்து விட்டதோ என்று கூடஅவர் எண்ணலானார்.

ஆனால் நடந்தது என்ன? பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட முதலாம் உலகப் போர் அந்த ஆண்டே ஆகஸ்ட் முதல் தேதி அன்று தொடங்கியது.

இப்படித் தமது கனவுகள் எல்லாம் பலிப்பதைக் கண்ட அவர் தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டு அவற்றின் மூலம் பல்வேறு உண்மைகளைக் கண்டார்.

கனவுகளுக்கும் நனவு நிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதைக் கண்ட அவர், நோயாளிகளைக் குணப்படுத்த அவர்களின் கனவுகளைக் கேட்டு அதற்கு உரிய உண்மைப் பொருளை அவர்களிடம் விண்டுரைத்து அவர்களைக் குணப்படுத்தினார்.

carl-jung-four-functions

கள்ளம் கபடமற்ற எளியவர்களை அவரால் சுலபமாகக் குணப்படுத்த முடிந்தது, அவரே ஒரு முறை கூறினார் இப்படி:” எனது நோயாளிகளிலேயே நன்றி கெட்டவர்களும் குணப்படுத்துவதில் மிகுந்த கஷ்டங்களைத் தந்தவர்களும் (வழக்கமாகப் பொய் சொல்பவர்களைத் தவிர அவர்களுக்கு அடுத்ததாக உள்ள) புத்திசாலிகள் தாம்! அவர்களின் ஒரு கை என்ன செய்கிறது என்று அடுத்த கைக்குக் கூடத் தெரியாது!”

அவர்களிடம் ஒரு “கம்பார்ட்மெண்ட் சைக்காலஜி” இருப்பதை அவர் அனுபவரீதியாக உணர்ந்தார். எதையும் அறிவு ரீதியாகச் சமாளிக்க முடியும் என்று நம்பும் அவர்கள் உணர்ச்சி கைமீறிப் போகும் சமயத்தில் மிகவும் கஷ்டப்படுகின்றனர் என அவர் கண்டார்.

எளிதில் மனதில் எந்த எண்ணம் ஓடுகிறது என்பதைக் கண்டுபிடிக்க அரிய முறை ஒன்றை யுங் வகுத்தார். நூறு வார்த்தைகளை அவர் சொன்னவுடன் எதிரில் இருப்பவர் உடனடியாக அந்த வார்த்தைகளுடன் தொடர்பு கொண்ட தனக்குத் தோன்றும் வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். பதில் சொல்ல எடுத்துக் கொண்ட நேரம், சொன்ன வார்த்தை இவற்றின் மூலமாக எதிரில் இருப்பவரின் உண்மையான எண்ணம் என்ன என்பதை ஜங்கால் கண்டுபிடிக்க முடிந்தது. இன்று பரவலாக நடைமுறைக்கு வந்து விட்ட இந்த ‘வோர்ட் அசோசியேஷன் டெஸ்டை’ முதலில் வகுத்தவர் ஜங் தான்!

ஜோதிடத்தையும் ஆவிகளோடு பேசும் மீடியத்தையும் கூட அவர் விடவில்லை. அந்த ஆராய்ச்சியிலும் இறங்கினார்……

சின்ன உண்மை!
மனதிற்கு நான்கு முக்கிய பண்புகள் உண்டு என்பதை முதலில்
சொன்னவர் யுங் தான்! ஐம்புலன்கள் முலமாகச் சுற்றுப்புறத்தை
அறிதல் (SENSING), சிந்தித்தல்(THINKING), உணர்தல்(FEELING),
உள்ளுணர்வு மூலமாக ஆழ்மன ரீதியாக விஷயங்களைப் பகுத்துப்
பார்த்தல் (INTUITING) ஆகிய நான்கு பண்புகள் மனதிற்கு உண்டு
என்பதை அவர் வலியுறுத்தினார்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

மாமன்னன் அலெக்ஸாண்டரின் குருவான அரிஸ்டாடில் பல கேள்விகளுக்கு “எனக்குத் தெரியாது” என்று விடை கூறுவது வழக்கம். இதனால் எரிச்சல் அடைந்த சிலர் அவரை நோக்கி, “எதற்கெடுத்தாலும் எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது என்று பதில் சொன்னால் என்ன அர்த்தம்! இதற்குத் தானா மன்னர் உங்களுக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது?” என்று ஏளனமாகக் கேட்டனர். அதற்கு அரிஸ்டாடில் உடனே,” எனக்கு என்ன தெரியுமோ அதற்குத் தான் மன்னர் பணம் அளிக்கிறார். எனக்குத் தெரியாததற்கெல்லாம் அவர் பணம் கொடுக்க வேண்டும் என்றால் அவர் கஜானா காலி ஆகி விடும்” என்று பதில் சொன்னர்.கேள்வி கேட்டவர்கள் அரண்டு போய் நகர்ந்தனர்.
அலெக்ஸாண்டர் இசையில் மிக்க ஆர்வம் கொண்டவர். அவர் லைர் என்ற நரம்பிசைக் கருவியை வாசிப்பதைக் கேட்ட அரிஸ்டாடில் அவரை நோக்கி,” இன்னமும் நன்கு பயிற்சி செய்யலாமே” என்றார்.
நன்கு பயிற்சி செய்தால் அதில் நிபுணன் ஆகி விடுவேன் என்று பயந்து தான் அதை நன்கு பயிற்சி செய்யவில்லை” என்று பதில் சொன்னார் அலெக்ஸாண்டர். விஞ்ஞானியின் கேள்விக்கு ஏற்ற மாமன்னனின் பதில் இது!

உலகத்தை வெல்ல ஆசைப்பட்டவர் லைர் இசைக்கருவியின் எல்லைக்குள் தன்னை அடக்கிக் கொள்ள முடியுமா என்ன?
***********************

contact: swami _ 48 @ yahoo.com

ரோகிணி நட்சத்திர மர்மம்! தமிழர் திருமணம் நடத்தியது ஏன்?

Taurus_constellation
படம்: ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம்

கட்டுரையாளர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1055; தேதி:– மே 21, 2014.

தமிழர்கள் ரோகிணி நட்சத்திர நாளில் திருமணம் செய்ததாக அகநானூற்றில் இரண்டு பாடல்களும் கண்ணகி- கோவலன் திருமணம் ரோகிணி நட்சத்திரத்தில் நடந்ததாக சிலப்பதிகாரமும் கூறும். ரோகிணி நட்சத்திரத்தில் திருமணம் ஏன்?

தமிழர்களுக்கு சோதிடத்திலும் பல்லி சொல்லும் பலனிலும், புள் (பட்சி) நிமித்தத்திலும், தும்மல்,கண் துடிப்பு விஷயத்திலும், அபார நம்பிக்கை இருந்ததை சங்க இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் காண முடிகிறது. இந்த ரோகிணி நட்சத்திர நம்பிக்கை வட இந்தியாவிலும் உண்டு. தமிழ் இலக்கியத்தில் இது இடம்பெறும் 500, 600 ஆண்டுகளுக்கு முன்னரே இது சம்ஸ்கிருத இலக்கியத்தில் இருக்கிறது.

இந்துக்கள் வட இமயம் முதல் தென் குமரி வரை (‘ஆ சேது ஹிமாசலம்’) — ஒரே நம்பிக்கை வைத்திருந்ததை இது காட்டுகிறது. அது மட்டுமல்ல, ஆரிய – திராவிட இனவாதம் பேசி நாட்டைப் பிரிக்க, இந்து மதத்தை ஒழிக்க முற்பட்டோரின் பொய்மை வாதத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

போதாயன கிருஹ்ய சூத்திரம், மனுதர்ம சாஸ்திரம், வால்மீகி ராமாயணம், காளிதாசனின் படைப்புகள் முதலியன நிலவு- ரோகிணி நெருக்கத்தைப் புகழ்ந்து உரைக்கின்றன. கணவன் – மனைவி, காதலன் – காதலி அன்புக்கு உவமையாகப் பயன்படுவது ‘’நிலவு – ரோகிணி’’ நெருக்கம்தான். சங்க இலக்கியத்திலும் இந்த நெருக்கம் பல இடங்களில் உவமையாகப் பயன்படுத்தப்படுகிறது.
அகநானூற்றில் இரண்டு கல்யாணப் பாடல்கள் இருக்கின்றன. இரண்டும் தமிழர் திருமண முறையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இதை விட்டால் அடுத்தபடியாக சிலப்பதிகாரத்தில்தான் கல்யாணக் காட்சி. அதையும் விட்டால் ஆண்டாளின் வாரணம் ஆயிரத்தில்தான் அடுத்த கல்யாணக் காட்சி வருகிறது.

taurus-constellation-new-3
ஆல்டிபாரன் என்பது ரோகிணியின் அராபிய பெயர்

அகநானூறு 86 (நல்லாவூர்க் கிழார்) பாடிய பாடலில்

“கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடுஇல் விழுப்புகழ் நாள் தலைவந்தென……….”
பொருள்:- வெண்மையான சந்திரனை குற்றமில்லாத சிறந்த புகழினை உடைய உரோகிணி என்ற நாள் (நட்சத்திரம்) அடைந்தது…………………………

அகநானூறு 136 (விற்றூற்று மூதெயினனார் பாடிய பாடல்)
“மைப்பு அறப்புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப்பேணி
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
அம்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்து………………”
(திங்கள்=சந்திரன், சகடம்=ரோகிணி நட்சத்திரம்)

இந்த இரண்டு பாடல்களும் தரும் பொருளின் சுருக்கம்: கல்யாணம் என்பது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தை அடைந்த நாளில் நடைபெறும். அந்த வீட்டில் ‘’வெஜிட்டேரியன்’’ சாப்பாடு (வெண்சோறு+ நெய் அல்லது உளுந்து கலந்த பொங்கல்) கிடைக்கும். சுமங்கலிகள் கூடி நின்று மங்கள முழக்கம் செய்வர். வீடு பந்தல் போட்டு, மணல் தூவி அலங்கரிக்கப்பட்டிருக்கும். சுவற்றில் தெய்வ ஓவியங்கள் இருக்கும்.புத்தாடைகள் உடுத்தி இருப்பர் முதலிய பல விஷயங்களை நீண்ட பாடலில் காணலாம்.

taurus_constellation_map

வால்மீகி ராமயணத்தில் பல இடங்களில் சந்திரனைச் சேர்ந்த ரோகிணி போல என்ற உவமை வருகிறது. காளிதாசனும் விக்ரம ஊர்வசீயம், சாகுந்தலம் நாடகங்களிலும், ரகுவம்ச காவியத்திலும் இந்த உவமைகலைப் பயன்படுத்துகிறான். ஆனால் இவைகளுக்கெல்லாம் முன்னர் படைக்கப்பட்ட போதாயன க்ருஹ்ய சூத்திரத்திலும், மனு தர்ம சாஸ்திரத்திலும் ரோகிணி நட்சத்திர நாள் திருமணத்துக்கு உரிய நாள் என்று தெளிவாகவே எழுதப்பட்டுள்ளது. அதை இளங்கோவும் நல்லாவூர்க் கிழாரும் விற்றூற்று மூதெயினனாரும் பின்னொட்டிச் செல்வது பாரதீய கலாசாரத்தின் செல்வாக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

தமிழ் இலக்கியத்தில் மணநாள் குறிப்பு தவிர, பொதுவாக ரோகிணி-நிலவு உறவு பற்றிக் கூறும் செய்யுள்கள்: திருமுருகாற்றுப்படை வரி 87/ 88, நெடுநல்வாடை-163, புறம் 60, 160 பாடல்கள்.

சம்ஸ்கிருத இலக்கியத்தில்:- ஐதரேய பிராமணம், சதபத பிராமணம் மற்றும் போதாயன, மானவ க்ருஹ்ய சூத்திரங்கள்; வால்மீகி ராமாயணம்(5-33-7;5-24-10;5-37-24;5-15-22 etc). காளிதாசனின் விக்ரம ஊர்வசீயம்3-4, 3-12
சாகுந்தலம் 7-22; ரகு வம்சம்-14-40.

புராணக் கதை

தக்ஷன் என்ற ரிஷியுனுடைய 27 பெண்களை சந்திரன் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் அன்பு செலுத்தவே பற்ற மனைவியர் தந்தையிடம் முறையிட்டனர். அவர் சந்திரன் தேய்ந்து அழியட்டும் என்று சாபமிட்டார். எல்லா மனைவியரும் அவ்வளவு கடுமையான சாபம் வேண்டாம் என்று மன்றாடினர்.

இந்துமதத்தில் கடவுளேயானாலும் ஒரு வரமோ சாபமோ கொடுத்துவிட்டால் அதைத் திரும்பி எடுக்கவே முடியாது ஏனெனில் இது சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த மதம். ஆனால் குறைக்கவோ, கூட்டவோ முடியும். உடனே நிலவு என்பது 15 நாள் தேய்ந்து (கிருஷ்ண பட்சம்) அடுத்த 15 நாள் வளரட்டும் என்றார் தக்ஷன்.

உண்மையில் இது வான சாஸ்திர உண்மை. அந்தக் காலத்தில் விஞ்ஞானப் பாடங்களை இப்படிக் கதையாகச் சொல்வது மரபு. ஆக நிலவின் சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம் பற்றி விளக்க இப்படிக் கற்பனைக் கதை உற்பத்தி செய்தனர்.

ஆயினும் ரோகிணிக்கு அதிக அன்பு காட்டியது என்ன விஞ்ஞான நிகழ்ச்சி என்று இப்போது சொல்ல முடியவில்லை. ஒருவேளை முன்னொரு காலத்தில் நிலவு ரோகிணிக்கு மிக அருகில் வந்திருக்கலாம். அல்லது அந்த இடத்தைக் கடக்க கூடுதல் நாட்கள் எடுத்திருக்கலாம். இப்போது நிலவு 29 நாட்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றுகிறது.

Taurus web

இதே போல பூமியே நடுங்கும்படியான ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னர் புதன் பிறந்ததாகவும் இன்னொரு புராணக் கதை கூறுகிறது. இதில் பிருஹஸ்பதியும் சம்பந்தப்படுவதால் இதுவும் ஒரு விண்வெளி விஞ்ஞானக் கதையே. பூமி, நிலவு மோதலால் அல்லது குரு (வியாழன் கிரக ஈர்ப்பால்) ஈர்ப்பால் புதன் உருவாகி இருக்கலாம். எதிர்காலத்தில் புதன் கிரகம் பற்றி புதிய தகவல் வரும்போது நம் புராணக் கதைகள் விஞ்ஞானக் கதைகளாகக் கருதப்படும்.

கிரகணம் பற்றி நாம் நன்கு அறிந்து, அதைக் கணக்கிட்டு பஞ்சாங்கத்தில் குறித்தபோதும் பாமர மக்களுக்கு இதெல்லாம் விளங்காது என்பதால் சந்திரனை பாம்பு விழுங்குகிறது என்று கதை சொல்லுவது போலத்தான் நிலவு- ரோகிணி கதையும்.

நிலவு பூமியை ஒரு முறை வலம் வர 27 நாட்கள் ஆகும். பூமியும் சூரியனைச் சுற்றுவதால் 27 நாட்களுக்குள் பூமி இரண்டரை நாள் தூரம் முன்னேறி இருக்கும். இதனால் நிலவு ஒரு முறை பூமியை வலம் வர ஆகும் நாட்கள் 29-5 (இருபத்தொன்பதரை) நாட்கள். இதை ஒரு சாந்திர மாதம் என்பர். நிலவு போகும் பாதையில் தெரியும் 27 நட்சத்திரங்களை அவனது மனைவியர் என்று பாமர மக்களுக்காக கதை சொன்னார்கள்.

நிலவுக்கு ‘’அருகில்’’ ரோகிணி நட்சத்திரம் வருகிறது என்பதெலாம் மாயத்தோற்றமே. ஏனெனில் நட்சத்திரங்கள் கோடி கோடி மைல்கள் அப்பால் இருக்கின்றன. நிலவு அவைகளைக் கடந்து போவது போலத் தோன்றினாலும் நிலவுக்கும் அவைகளுக்கும் இடையில் கோடானு கோடி மைல்கள் இருக்கின்றன.

பாலகங்காதர திலகர் என்ற சுதந்திரப் போராட்ட வீரர் ரிக் வேதத்தில் உள்ள வான சாத்திரக் குறிப்புகளை வைத்து அதன் காலம் கி.மு.6000 என்று கணித்தார். இவர் ஆராய்வது தெரியாமல், தனியாக ஆராய்ந்த ஜெர்மானிய அறிஞர் ஜாகோபியும் வான சாஸ்திரத்தை வைத்து ரிக் வேதம் கி.மு.4500 என்று கூறினார்.

பகவத் கீதையில் கண்ணன்– ‘’மாதங்களில் நான் மார்கழி’’– என்று கூறுவது போல கி.மு.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணினியும் மார்கழியே வருடத்தின் முதல் மாதம் என்கிறார். அப்போதைய கோள் நிலை கொண்டு கணிக்கப்பட்ட கணக்கில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது தெரிகிறது. எதிர்காலத்தில் தமிழர்களும் வடவர்களும் ஏன் ரோகிணியில் கல்யாணம் செய்தார்கள் என்பது தெரியவரலாம்.

contact swami _48@yahoo.com

வித்தியாசமான விஞ்ஞானி யுங்! -2

jung-red-book

Post No.1053; Dated: 20 May 2014.
ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரையில் இது இரண்டாம் பகுதி
((குறிப்பு: ஆங்கிலத்தில் ஜங் என்று எழுதியபோதிலும் சரியான உச்சரிப்பு யுங்)).

வித்தியாசமான விஞ்ஞானி யுங்! -2
ச.நாகராஜன்

நிறை வாழ்வு வாழ்ந்தவரான யுங் 1957ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஒரு நாள் தனது வாழ்க்கை வரலாற்றை தனது சகா ஒருவரிடமும் அனீலா ஜஃபே என்ற பெண்மணியிடமும் சொல்லலானார். சில சமயம் சில அத்தியாயங்களை அவரே தன் கைப்பட எழுதிக் கொடுத்தார். அவர் 1961ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி மரணமடைந்தார். அது வரை தனது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் சொல்லி வந்தார். மிக சுவாரசியமான சம்பவங்கள் அடங்கிய அவரது வரலாறு மெமொரீஸ், ட்ரீம்ஸ், ரெஃப்ளக் ஷன்ஸ் (Memories Dreams Reflections ) என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

யுங் தனது ஹிப்நாடிஸ மருத்துவ முறையை ஆரம்பித்த காலத்தில் நடந்தது இது;
ஒரு நாள் 58 வயதான பெண்மணி ஒருத்தி ஊன்று கோலை ஊன்றிக் கொண்டு அவரிடம் சிகிச்சைக்காக வந்து சேர்ந்தார். அவருக்குக் கடந்த 17 வருடங்களாக பக்க வாதம். இடது காலை அசைக்கக் கூட முடியாது. யுங் அவரை வசதியாக ஒரு நாற்காலியில் அமர வைத்தார்.

அவரிடம் என்ன விஷயம் என்று மெதுவாக விசாரித்தார். அவ்வளவு தான், அந்தப் பெண்மணி கடகடவென்று நிறுத்தாமல் பேச ஆரம்பித்தார். தனது நோயைப் பற்றிப் புலம்பினார். ஜங்,”போதும். நான் இப்போது உங்களை ஹிப்நாடைஸ் செய்ய்யப் போகிறேன்”, என்றார். அவர் சொல்லியவுடன் அந்தப் பெண்மணி கண்களை மூடினார். யுங் ஒன்றும் செய்யாமலேயே ஆழ்ந்த ஹிப்நாடிஸ நிலைக்குச் சென்று விட்டார். அத்தோடு தனது கனவுகளை விவரிக்க ஆரம்பித்தார். அப்போது யுங்கிற்கு அதன் அர்த்தம் புரியவில்லை.பின்னால் பல ஆண்டுகள் கழித்து அவருக்கு அந்தப் பெண்மணி சொன்ன கனவுகள் புரிந்தன. அப்போது அந்தப் பெண்மணி ஏதோ உளறுகிறார் என்று நினைத்துக் கொண்டார்.

சற்று நேரம் கழிந்தது. நிலைமை சற்று தர்மசங்கடமாக ஆனது. ஏனெனில் ஜங் என்ன செய்கிறார் என்பதை அங்கிருந்த இருபது மாணவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர்..அரை மணி நேரம் கழிந்தது. மாணவர்கள் முன்னர் தனது நடுக்கத்தைக் காண்பிக்காமல் யுங் அந்தப் பெண்மணியை எழுப்ப ஆரம்பித்தார். பத்து நிமிடங்கள் கழிந்தன. திடீரென்று விழிப்பு நிலைக்கு வந்த அந்தப் பெண்மணி பெரிதாகக் கத்த ஆரம்பித்தார்.

“ஆஹா! இப்போது என் வியாதி குணமாகி விட்டது”! என்று கூவிய அவர் ஊன்றுகோல்களைத் தூக்கி எறிந்தார். நடக்க ஆரம்பித்தார். அங்கிருந்த அனைவரும் அசந்து போய் பிரமித்து விட்டனர்!
“பார்த்தீர்களா! இது தான் ஹிப்நாடிஸம் ஏற்படுத்தும் நல்ல விளைவு “ என்று மாணவர்களை நோக்கிக் கூறிய ஜங் உள்ளுக்குள் குழம்பினார். தான் ஒன்றுமே செய்யாமல் இருந்த போது எப்படி அந்தப் பெண்மணி குணமானார்? அவருக்குப் புரியவே இல்லை.

“சரி, இது நீடித்து நிலைக்காது. சீக்கிரமே அவர் பழைய நிலைக்குச் சென்று விடுவார்” என்று நினைத்தார் யுங். ஆனால் அந்தப் பெண்மணி குணமானது நிலைத்திருந்தது.அடுத்த ஆண்டு கோடைக்கால லெக்சர்களை ஜங் ஆரம்பித்தார். அதற்கான அறிவிப்புகள் செய்தித் தாள்களில் வெளியாயின.

முதல் லெக்சர் ஆரம்பிக்கும் நாளன்று அந்தப் பெண்மணி மீண்டும் வந்து யுங்கைப் பார்த்தார். தனக்கு முதுகு வலி என்றார். வலி தாளவில்லை என்று அலறிய அவரைப் பார்த்த ஜங் எப்போது எப்படி அந்த வலி ஆரம்பித்தது என்று கேட்டார். அவருக்கு இப்போது நன்கு புரிந்து விட்டது. தனது லெக்சர் ஆரம்பம் என்று செய்தித் தாளில் படித்த அந்தக் கணம் தான் அவருக்கு வலி ஆரம்பித்திருந்தது.

“சரி,உங்களை ஹிப்நாடைஸ் செய்கிறேன்” என்று சொன்ன அந்தக் கணமே அந்தப் பெண்மணி ஆழ்ந்த உறக்க நிலைக்குத் தானாகவே சென்று விட்டார்! சிறிது நேரத்தில் அவரது வலி போயே போய் விட்டது.

அவரைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்க ஆரம்பித்தார் யுங்.

ஜங்கின் பிரிவிலேயே அந்தப் பெண்மணியின் மனவளர்ச்சி குன்றிய மகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். பெண்மணியின் முதல் கணவனுக்குப் பிறந்திருந்ததால் அவனது பெயரை இந்தப் பெண்மணியின் பெயருடன் சேர்த்துப் பார்க்க முடியாமல் இருந்தது. அவனைப் பெரிய ஹீரோவாக ஆக்க நினைத்திருந்த அந்தப் பெண்மணி அது முடியாமல் போனதால் ஜங்கைத் தன் அபிமான புத்திரனாக எண்ணிக் கொண்டாள். அவரைப் பார்த்தவுடன் அவருக்கு 17 வருட வியாதி குணமாகி விட்டது! அதை ஊர் முழுவதும் பரப்பி யுங்கிற்குப் பெரும் புகழை அவர் சேர்த்து விட்டார்.

carl jung

யுங் பின்னால் சொன்னார் இப்படி:” எனது உளவியல் சிகிச்சையின் முதல் கேஸ் இப்படி ஆச்சரியகரமாக் அமைந்தது.தனது தாய்ப்பாசத்தால் தன் மனவளர்ச்சி குன்றிய மகனுக்குப் பதில் என்னை தன் மகனாக பாவித்து தத்து எடுத்துக் கொண்டதால் அந்தப் பெண்மணி குணம் அடைந்தாள்”

யுங் ஹிப்நாடிஸ சிகிச்சை செய்வதைப் பின்னர் விட்டு விட்டார். ஏனெனில் அந்த சிகிச்சை தரும் குணம் எத்தனை காலம் நீடித்திருக்கும் என்பதை அவரால் உறுதி செய்ய முடியவில்லை.

.
பின்னர் யுங் கனவுகளைப் பற்றித் தீவிரமாக ஆராய ஆரம்பித்தார். ஏராளமான சுவாரசியமான கேஸ்களை அன்றாடம் அவர் சந்திக்க வேண்டி இருந்தது. ஒரு சுவையான கேஸ் இது:

ஒரு பெண்மணி அவரிடம் சிகிச்சைக்காக வந்தார். அபாரமான புத்திசாலிப் பெண் அவர்.தனது கனவுகளை யுங்கிடம் விவரிக்க ஆரம்பித்தார். அவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டார் ஜங்.
ஆனால் அவரிடம் பேசுவதிலிருந்து உருப்படியாக ஒன்றையும் அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் கனவுகளுக்கு அவரால் விளக்கமும் கண்டு பிடிக்க முடியவில்லை. ‘சம்திங் ராங்.ஒரு வெறுமை இருக்கிறது’ என்பதை அவர் புரிந்து கொண்டார். ஜங் இப்படிப் புரிந்து கொண்டதை அந்தப் புத்திசாலிப் பெண்மணியும் புரிந்து கொண்டார்.

இதைப் பற்றிப் பேசி விட வேண்டியது தான் என்று யுங் தீர்மானித்தார். பேச வேண்டிய தினத்திற்கு முந்தைய நாள் அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவு ……

சின்ன உண்மை!
உளவியல் ரீதியாக மனிதரில் இரு வகை உண்டு என்பதை முதலில் சொன்னவர் யுங் தான்! தன்னைப் பற்றியும் தன் உணர்சிகளைப் பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் உள்முகச் சிந்தனையாளர்
(introvert) ஒரு வகை. பரந்த மனம் கொண்டவர் (extrovert) இன்னொரு
வகை. இவை இரண்டும் கலந்தே மனிதர்கள் இருந்தாலும் ஒரு வகை
அவ்வப்பொழுது அவர்களிடம் வெளிப்படுகிறது. Introvert, Extrovert ஆகிய
இரு வார்த்தைகளை முதலில் உருவாக்கியவர் யுங் தான்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கணித மேதையான பாஸ்கல் (1623-1662)
ஹைட்ராலிக் ப்ரஸ்ஸைக் கண்டு பிடித்தவர். குறைந்த விசை மூலம் அதிக கனமான பொருள்களைத் தூக்க வழி வகுத்தவர் அவர். அழுத்தம் பற்றிய அளவீடான பாஸ்கல் அவர் பெயரால் தான்
அழைக்கப்படுகிறது.

ஒரு நாள் இரவு வெகு நேரம் கழித்துத் தன் வீட்டிற்கு வந்த பாஸ்கல் கதவைத் தட்டினார். அரைத் தூக்கத்தில் இருந்த அவரது பணியாளர் கதவைத் திறந்து தூக்கக் கலக்கத்தில் பாஸ்கலை நோக்கி,’ நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டார்.

மறதி மன்னரான பாஸ்கல்,”மிஸ்டர் பாஸ்கலைப் பார்க்க வேண்டும்!” என்றார்.

“அவர் இல்லையே! வெளியே போயிருக்கிறார்” என்றார் பணியாளர்.
“சரி, அப்புறம் வந்து பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு பாஸ்கல் நடையைக் கட்டினார்.

விஞ்ஞானிகளுக்கும் மறதிக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு போலும்!

contact swami _ 48 @yahoo.com
*****

வித்தியாசமான விஞ்ஞானி யுங்! Carl Jung -Part 1

Carl-Gustav-Jung

Post No.1049 ; Dated 18th May 2014.

எனது சகோதரர் ச. நாகராஜன் எழுதிய ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரையில் இது முதல் பகுதி

((குறிப்பு: ஆங்கிலத்தில் ஜங் என்று எழுதியபோதிலும் சரியான உச்சரிப்பு யுங்)).

வித்தியாசமான விஞ்ஞானி யுங்! Carl Jung -1
By ச.நாகராஜன்

விஞ்ஞான உலகில் ஏராளமானோர் விதவிதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.இன்றும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த விஞ்ஞான உலகில் சற்று வித்தியாசமான விஞ்ஞானியாக கார்ல் யுங் Carl Jung (பிறப்பு:1875 மறைவு:1961) திகழ்கிறார்.

ஒரு நவீன விஞ்ஞானி முகத்தைச் சுளிக்கும் விஷயங்களை எல்லாம் அலாதி ஈடுபாட்டுடன் ஆராய்ந்து அதில் தன் முத்திரையைப் பதித்தவர் இவர்! ஜோதிடத்தில் இவருக்கு அபார ஈடுபாடு உண்டு. ஆன்மீக இயலில் இவரது கண்டுபிடிப்புகள் ஏராளம்! டெலிபதி, டெலிகைனஸிஸ், மீடியம், புலன் கடந்த அதீத உளவியல், இரகசிய ஆற்றல்கள்,கனவுகள் என விலாவாரியாக அறிவியல் பூர்வமாக இவர் ஆராயாத வித்தியாசமான துறைகளே இல்லை.மற்ற விஞ்ஞானிகளை யெல்லாம் பற்றி இவர் துளிக்கூடக் கவலைப் படவில்லை. தனது ஆராய்ச்சியில் முழு ஈடுபாட்டுடன் இறுதி வரை இருந்தார் மாபெரும் மேதை யுங்!

இவர் புதிதாகத் தோற்றுவித்த அறிவியல் துறைகள் இரண்டு!
ஒன்று சிங்க்ரானிசிடி எனப்படும் ‘அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைகள்’! இரண்டாவது ‘கலெக்டிவ் அன்கான்ஸியஸ்’ எனப்படும் கூட்டு நனவிலி நிலை அதாவது மக்கள் கூட்டம் மொத்தமாகக் கொண்டிருக்கும் ஒரு நனவிலி நிலை ஆகும்.

யுங்கின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏராளமான சம்பவங்கள் அவரை அதி தீவிரமாக பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆராய உத்வேகப்படுத்தின.

Time jung-carl-

எடுத்துக்காட்டாக சிங்க்ரானிசிடி எனப்படும் “அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமை” பற்றிய ஒரு முக்கிய சம்பவத்தைக் குறிப்பிடலாம். ஒரு நாள் ஜங்கிடம் சிகிச்சை பெற வந்த ஒரு பெண்மணி தான் கண்ட கனவை உணர்ச்சி பொங்க விவரித்துக் கொண்டிருந்தார். அந்தக் கனவில் அவருக்கு மிகவும் விலை மதிப்புள்ள ஒரு நகை தரப்பட்டிருந்தது. அந்த நகை வண்டு போல செய்யப்பட்ட ஒரு அணிகின்ற கல்! இதை அந்தப் பெண்மணி விவரித்துக் கொண்டிருந்த சமயம் யுங்கின் ஜன்னலை யாரோ தட்டிக் கொண்டே இருப்பது போன்ற ஒலி எழுந்தது. இந்த ஒலியால் ஈர்க்கப்பட்ட ஜங் ஜன்னலை நோக்கி விரைந்தார். ஜன்னலைத் திறந்தார். ஜன்னலின் வெளியிலிருந்து பறந்து வந்த ஒரு பொன் வண்டு அவர் கையில் வந்து உட்கார்ந்தது. அதைக் கையில் பிடித்துக் கொண்ட ஜங் தன் கனவை விவரித்துக் கொண்டிருந்த பெண்மணியிடம் அதைக் காட்டி,”இதோ இருக்கிறது உங்களின் பொன்வண்டு” என்று கூறி விட்டு வண்டை அவர் கையில் கொடுத்தார். இதனால் அசந்து போன அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. மிகுந்த புத்திசாலி அவர். நன்கு படித்தவரும் கூட. தன் உணர்ச்சிகளை அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

இந்த வண்டு சம்பவத்திற்குப் பின்னர் அந்தப் பெண்மணி மிக வேகமாகக் குணமடைந்தார்.

பிரபஞ்சத்தில் உள்ள ஏதோ ஒரு சக்தி அர்த்தமுள்ள ஒரு தற்செயல் சம்பவத்தின் மூலம் அவரைப் பூரண குணம் அடைய வைத்தது.
தன் கனவை அந்தப் பெண்மணி சொல்லிக்கொண்டிருந்த போது ஜன்னலில் ஏன் வண்டு வந்து மோதி ஒலியை எழுப்பி ஜங்கின் கவனத்தை ஈர்க்க வேண்டும்? அந்த வண்டும் சாதாரணமாகக் காணப்படக்கூடிய வண்டு அல்ல. வண்டு இனத்திலேயே அபூர்வமாகக் காணப்படும் வண்டு அது!

jung

அந்தப் பெண்மணியின் மனம் போராட்டத்தின் உச்சியில் எழுப்பிய கூக்குரல் பிரபஞ்ச மனத்தை உலுக்கி அந்த வண்டை அந்த நொடியில் ஜங்கின் ஜன்னலுக்கு வரவழைத்ததா? இந்த சிறிய அற்புதச் செயலின் மூலமாக அந்தப்பெண்மணி பூரண குணம் அடைய வேண்டும் என்று இருந்ததா? அவரது கூக்குரலுக்கு பிரபஞ்சத்தின் விடையா அது?யுங் ஆராய ஆரம்பித்தார்.

இந்த வண்டு விஷயம் இத்தோடு நிற்கவில்லை.

பிலிப் கஸினோ என்ற ஒரு எழுத்தாளர் இப்படிப்பட்ட அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைச் சம்பவங்களைத் தொகுத்து தன்னிடம் நட்பு கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு அனுப்பினார். அவர் யோகாவைக் கற்பிப்பவர். ‘அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமையை’ இந்த பொன்வண்டு சம்பவம் விளக்குகிறதா என்று குழம்பியவாறே யோசித்தவண்ணம் இருந்தார் அவர். தனது வாழ்க்கையில் இப்படி சம்பவம் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என அவர் நினைவுபடுத்திப் பார்த்தார்.

அன்று முற்பகலில் தனக்கு ஏதேனும் கடிதங்கள் வந்துள்ளனவா என்று பார்க்க வாசலில் இருந்த தோட்டப்பகுதியை நோக்கி நடந்தார். என்ன ஆச்சரியம்! அங்குள்ள செடிகளின் மீதும் அதன் சுற்றுப்புறத்திலும் நூற்றுக்கணக்கான நீல நிற வண்டுகள் ஹூங்காரமிட்டுப் பறந்து கொண்டிருந்தன! அவற்றின் நீல வண்ணம் சூரிய ஒளியில் பட்டு பிரகாசமாக புது வண்ணமாக மின்னிக் கொண்டிருந்தது! ‘என்ன நான் கனவு காண்கிறேனா’ என்று வியந்த அவரால் தான் கண்ட காட்சியை நம்பவே முடியவில்லை! 36 மணிநேரம் அங்கேயே பறந்து கொண்டிருந்த வண்டுகள் திடீரென இடத்தை விட்டுப் பறந்து மாயமாயின!

உடனே அவர் பிலிப் கஸினோவுக்கு இதைப் பற்றி எழுதி,”ஒருவேளை அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமை தொடர்ந்து நீரோட்டம் போன்ற ஒரு தொடர் ஓட்டத்தையும் விளைவித்துக் கொண்டு இருக்குமோ “ என்று வியந்தார்! ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் இப்படி அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை யாரும் கூர்ந்து கவனிப்பதுமில்லை. அது சொல்லும் செய்திகளை அறிந்து கொள்வதும் இல்லை என்பது தான் உண்மை!

Carl-Jung-Emma-Jung-e1345143082354

Carl Jung with his wife Emma Jung

பகுப்பாய்வு உளவியலைக் கண்ட மேதையான கார்ல் யுங் சிக்மண்ட் ப்ராய்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,உல்ப்கேங் பாலி,வில்லியம் ஜேம்ஸ் போன்ற பிரபல விஞ்ஞானிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானியான ஜங்கின் வாழ்க்கையில் நடந்த சில அபூர்வமான சம்பவங்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சின்ன உண்மை!
2011ஆம் ஆண்டு வெளியான ‘எ டேஞ்சரஸ் மெதேட்’ (A Dangerous Method) என்ற ஹாலிவுட் திரைப்படம் யுங்கிற்கும் சிக்மண்ட் ஃப்ராய்டுக்கும் இடையே உள்ள தொடர்பைச் சித்தரிக்கிறது. ஜங்கிடம் சிகிச்சை பெற வந்து அவரை ஈர்த்த கவர்ச்சிப் பெண்மணியான சபீனா ஸ்பீல்ரெய்னுடன் அவர் கொண்டிருந்த உறவையும் இப்படம் விவரிக்கிறது!

131.பாக்யா வார இதழில் 30-8-2013 இதழில் தொடங்கி ஐந்து இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட யுங் பற்றிய கட்டுரைகளுள் முதலாவது கட்டுரை இது.

contact swami_ 48@yahoo .com

ராமாயணம் சௌபாக்யம், பாப நாசனம், வேத சமம்!

ram hanuman

Post No.1047
By S Nagarajan, அத்தியாயம் 27

உலகின் முதல் காவியமான ராமாயணம் ஹிந்துக்களின் பொக்கிஷம். ராமாயணம் ஒரு அறிவுக் களஞ்சியம். அறக் களஞ்சியம். கலாசாரப் பொக்கிஷம். கலைப் பொக்கிஷம். கவிதைப் பொக்கிஷம். உவமை, உத்தி, நியாயம், பழமொழி, பழங்கதைகள் ஆகியவற்றின் கருவூலம். சுயமுன்னேற்றத்தைத் தரும் முன்னேற்ற நூல். புருஷார்த்தம் எனப்படும் அறம், பொருள், இன்பம், மோக்ஷம் ஆகிய நான்கையும் அடைவதற்கான வழிகளைச் சுட்டிக் காட்டும் லட்சிய நூல். கோடானு கோடி மனிதர்களுக்கு காலம் காலமாக உத்வேகம் ஊட்டிய பழம் பெரும் நூல். மேலாண்மையைத் திறம்படச் செய்ய வைக்கும் மேலாண்மை நூல்.

யுத்தக் கலையைக் கற்பிக்கும் போர் நூல். அஸ்திரங்களைப் பிரயோகிப்பது பற்றிய அனைத்தையும் கற்பிக்கும் அஸ்திர நூல். ராஜ தந்திரக் கலையைக் கற்பிக்கும் ராஜ தந்திர நூல். எல்லா நலத்தையும் விளைவிக்கும் மந்திர நூல். பல யந்திரங்களை விளக்கும் யந்திர நூல். இறைவனைத் துதிக்கச் சிறந்த துதிகளை அள்ளித் தரும் ஸ்தோத்திர நூல். மன நலத்தை மேம்படுத்தும் உளவியல் நூல். மூலிகைகளின் ரகசியத்தைக் கூறும் மூலிகை நூல். உயிர் மீட்கும் மருத்துவ நூல். வேத விளக்கமாகத் திகழும் வேதத்தின் உரை நூல். ரிஷிகளின் சரித்திரங்களைத் தரும் வரலாற்று நூல். ஜோதிட சாஸ்திரத்தின் நுணுக்கங்களை அறிவிக்கும் ஜோதிட நூல். வானியல் மர்மங்களை விளக்கும் வான சாஸ்திர நூல்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கான ஆதாரங்கள் 24000 ஸ்லோகங்களில் பொதிந்து கிடக்கின்றன! வல்லார் வாய் கேட்டு இவற்றை அறியலாம்.

ram in frame

உத்தர காண்டத்தில் இறுதி ஸர்க்கமான நூற்றிப்பத்தாவது ஸர்க்கத்தில் ராமாயணத்தின் பெருமை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.

வேத பாடத்திற்கு முதலில் கற்றறிய வேண்டியதென பெருமை பெற்றதாய் பிரம்மாவினால் மெச்சிக் கொண்டாடப்பட்டது. (முக்யம் ஏதாவதத் ப்ரஹ்மபூஜிதம்) ராமாயணம்.

ஸ்வர்க்க லோகத்தில் தேவரைப் பற்றியதாகிய ராமாயணத்தை கந்தர்வர்கள் உள்ளிட்ட தேவர்களும் பரம ரிஷிகளும் சித்தர்களும் அப்போதிலிருந்து எக்காலத்திலும் சந்தோஷமுடையவர்களாய் பாராயணம் செய்து வருகின்றனர்.

இதமாக்யானமாயுஷ்யம் சௌபாக்யம் பாப நாசனம் I ராமாயணம் வேத சம்ம் ச் ராத்தேஷு ஸ்ராவயேத்துத: II
(உத்தர காண்டம் நூற்றிப்பத்தாவது ஸர்க்கம், முப்பதாவது ஸ்லோகம்).

இதம் – இந்த ராமாயணம் – ராமாயணம் என்னும் ஆக்யானம் – ஆக்யானமானது ஆயுஷ்யம் – தீர்க்காயுளைக் கொடுக்க வல்லது சௌபாக்யம் – ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்க வல்லது பாப நாசனம் – சர்வ பாபங்களையும் போக்க வல்லது வேத சமம் – வேதத்திற்குச் சமமானது ச்ராத்தேஷு – சிரார்த்த காலங்களில் ஸ்ராவயேத் – பாராயணம் செய்ய வேண்டும்.

rama boating

இதனது கால் ஸ்லோகத்தையாவது எவன் ஒருவன் படிக்கிறானோ அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் அடைகின்றான். புத்திர பாக்கியம் இல்லாதவன் புத்திரனைப் பெறுகிறான். பணம் இல்லாதவன் பணத்தைப் பெறுகிறான்.

எவனேனும் பாவங்களை விடாமல் செய்த போதிலும் அவனும் ஒரு ஸ்லோகத்தையாவது படிப்பானாகில் பாவத்திலிருந்து விமோசனம் அடைகிறான்.

நோயற்ற வாழ்வைத் தரவல்லதாகிய (ஆயுஷ்யம்) ராமாயணம் என்னும் ஆக்யானத்தை பாராயணம் செய்யும் மனிதன் இந்த உலகில் புத்திர பௌத்திர பாக்கியங்களைப் பெற்று விளங்குகின்றான். இறந்த பின்னர் இங்கேயும் பரலோகத்திலும் கௌரவிக்கப்படுகின்றான்.
இப்படி ராமாயணம் கற்றலின் பலனையும் கேட்டலின் பயனையும் உத்தரகாண்டத்தில் வால்மீகி மஹரிஷி விவரித்து அருளியுள்ளார்.

ராமாயணத்தைப் பயில்வோம். பயிற்றுவிப்போம்.

கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று அருளுகிறார் நம்மாழ்வார்.
பூரண அவதாரமான ராம சரிதத்தை இடைவிடாமல் கற்போம். ஏற்றம் பெறுவோம்!

முற்றும்.

contact swami_48@yahoo.com

*******************

இந்திய படுக்கை அதிசயங்கள்: ஒரு சுவையான கதை

Deogarh_Vishnu_w
Snake Bed of Vishnu, Deogarh.

Written by London Swaminathan
Post No. 1043; Dated 15th May 2014.

( Also published in English under “Interesting Story about Ancient Beds”” on 15th May 2014. Following is the Tamil version )

இந்திய நாகரீகம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உச்சகட்டத்தை எய்தி இருந்ததை சங்க இலக்கியம் மூலமாகவும், சம்ஸ்கிருத காவியங்கள் மூலமாகவும் அறிய முடிகிறது. அப்போது இந்தியா முழுதும் வாழ்ந்த இந்துக்கள் தொடாத கலையே இல்லை, தொடாத துறையே இல்லை. பௌத்தர்களும் சமணர்களும் துறவறம் ஒன்றே வழி என்று வலியுறுத்திய காலத்தில் இந்துக்கள் இல்லறமே (கிருஹாசஸ்தாஸ்ரம்) மற்ற மூன்று அறங்களையும் விடச் சிறந்தது என்று பறை சாற்றினர்.

மனுதர்ம சாஸ்திரத்தில் மனு எழுதியதை (மனு 3-78) அப்படியே வள்ளுவனும் மொழிபெயர்த்தான்:

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)

சந்யாசி, பிரம்மச்சாரி, வானப்பிரஸ்தன் ஆகிய மூவரையும் ஆதரிப்பவன் கிருஹஸ்தன் என்பது இக்குறளின் பொருள்.

இல்லறம் தழைத்தால் நல்லறம் ஓங்கும். இல்லறம் தொடர்பான 64 கலைகள் பெருகும். இப்படி உண்மையிலேயே கலைகள் பெருகியதால் நாடகம், நாட்டியம் தொடர்பாக பரதம் என்னும் நாட்டிய சாஸ்திரத்தை பரத முனிவர் வடமொழியில் எழுதினார். வாத்ஸ்யாயன மகரிஷி ‘செக்ஸ்’ பற்றி எழுதினார். பாணிணி இலக்கணம் பற்றி எழுதினார். வராகமிகிரர், வான சாஸ்திரம், ஜோதிடம், மற்ற அறிவியல் துறைகள் பற்றி எழுதினார்.

snake bed of vishnu, M B puram
Snake Bed ,Mahabalipuram,Tamil Nadu

படுக்கை செய்வது, படுக்கையை பூக்கள் கொண்டு அலங்கரிப்பது, கட்டில்கள் செய்வது முதலிய கலைகள் வளர்ந்தன. இதை நிரூபிக்க பல கதைகள் இருக்கின்றன. இதோ விக்ரமாதித்தனும் வேதாளமும் என்ற கதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதை:–

ஒரு ஊரில் இரண்டு புகழ்பெற்ற ஆட்கள் வாழ்ந்தனர். அவர்களுடைய பெயர்கள் போஜனவிலாசின் (சாப்பாட்டு மன்னன்), சய்யவிலாசின் (படுக்கை மன்னன்). இருவரும் அவரவர் துறையில் அதிசயக்கத் தக்க அளவில் சிறந்து விளங்கியதால்தான் புகழ் ஓங்கியது இவர்களுடைய புகழ் ராஜாவின் காதுகளையும் எட்டவே, அவன் அவர்களைச் சோதித்து பரிசு கொடுக்க விரும்பினான்.

ராஜா அழைத்தவுடன் இருவரும் வந்தனர். இருவரில் யார் அதிகம் சிறந்தவரோ அவருக்குப் பரிசு என்று அறிவித்தான். இருவரும் எல்லா நிபந்தனைகளையும் ஒப்புக்கொண்டனர். ஒருநாள் மிகப் பெரிய விருந்துக்கு ஏற்பாடாகியது. அரண்மனை இதுவரை காணாத அளவுக்கு அதிகமான அறுசுவை பதார்த்தங்கள் தயாராயின. நாட்டிலேயே தலை சிறந்த சமையல்காரர்கள், மிகச் சிறந்த சாமான்களைக் கொண்டு சமைத்தனர். சாப்பாடு தயாரானவுடன் மன்னரும் அவனும் (சாப்பாட்டு மன்னன்) ஒரே வரிசையில் உட்கார்ந்தனர். அங்கிருந்த நூற்றுக்கணக்கான பண்டங்களைப் பார்த்தவுடன் அவன் மயக்கம் போட்டுவிடுவான் என்று அரசன் எண்ணியிருந்தான். ஆனால் அவனோ இலையில் போட்ட எதையும் தொடக்கூட இல்லை!

andal bed
Andal Bed, 19th century drawing

மன்னனுக்கு ஒரு பக்கம் எரிச்சல், மறுபக்கம் வியப்பு. உபவாசம் இருப்பவனையும் தின்னத் தூண்டும் சுவைமிகு, மணம் மிகு உணவு. அப்படியும் தொடவில்ல. ஆனால் அவனைக் காரணம் கேட்டபோது இந்த அரிசிச் சோற்றில் சுடுகாட்டு அரிசி வாடை அடிக்கிறது என்றான். அரசனுக்கு அதிபயங்கர கோபம். இருந்தபோதிலும் ஒருவனைத் தண்டிக்கும் முன்னர், தீர விசாரிப்பதே முறை என்று எண்ணி அத்தனை சமையல்காரர்கள், கணக்குப்பிள்ளைகள் எல்லோரையும் அழைத்து விசாரித்தான்.

சமையல்காரன் எந்தக் கடையில் அரிசி வாங்கினானோ அந்த வியாபாரியை விசாரித்ததில் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் சாகுபடி செய்வோனிடம் வாங்கிய நெல்லைத் தான் விற்றதாகச் சொன்னான். அரசனுக்கு ஒரே வியப்பு. எவ்வளவு மணப் பொருட்களை சேர்த்தபோதும் சாப்பாட்டு மன்னன் ஒரு குறையைக் கண்டு பிடித்துவிட்டான் என்று பாராட்டி அவனுக்குப் பரிசுகள் தந்தார் ராஜா.

அடுத்ததாக படுக்கை மன்னன் தனது திறமையைக் காட்ட முன்வந்தான். தலை சிறந்த படுக்கை கட்டில் நிபுணர்கள் வந்து உலகிலேயே தலை சிறந்த படுக்கையை தயார் செய்து அலங்ரித்தனர். அதில் அவனைப் படுக்கும்படி ராஜா கூறினார். அவனோ படுத்த மாத்திரத்தில் படுக்கையில் இருந்து குதித்து எழுந்து விட்டான். ஏதோ உறுத்துகிறது என்று முறையிட்டான் ராஜாவுடனே சிரித்துவிட்டுச் சோதித்துப் பார்ப்போமே என்றார். படுக்கையில் ஏழு போர்வைகள் ஏழு மெத்தைகளுக்கு கீழே ஒரு ‘முடி’ இருந்தது.. ராஜா அதைப் பார்த்தவுடன் மேலும் அதிசயித்து முன்னைவிட ஏராளமான பரிசுகளைக் கொடுத்தனுப்பினான்.
etruscanbed-11.8493139_std
Etruscan Bed ( please see my earlier post about Etruscan- Indian link)

ஆக சாப்பாடானாலும் படுக்கையானாலும் எல்லாவற்றிலும் முடிசூடா மன்னர்கள் இருந்த நாடு பாரத நாடு. சங்க இலக்கிய நூலான ‘’நெடுநல் வாடை’’யில் அன்னப் பறவையின் இறக்கை மென்மை போல (அன்னத்தூவி மயிர் போல) வெண்மையான, மென்மையான படுக்கைகள் இருந்ததாக எழுதி இருக்கின்றனர். தந்தக் கட்டிகள் பற்றியும் தமிழ் இலக்கியம் பேசுகிறது. இதை வடமொழி நாடகங்களும் மெய்ப்பிக்கின்றன.

சாகுந்தலம் என்ற நாடகம் எழுதி உலகப் புகழ் அடைந்த காளிதாசன், சகுந்தலை என்பவள் காதல் வயப்பட்டவுடன் மலர்ப் படுக்கை அமைத்து தூங்கினாள் என்று எழுதினான்.

அவனுக்கு முன் 13 சம்ஸ்கிருத நாடகங்களை எழுதிப் புகழ் பெற்ற பாஷா என்பவன் எழுதிய ‘’ஸ்வப்னவாசவதத்த’’மில் உதயணனின் இரண்டாவது மனைவி பத்மாவதிக்கு தலைவலி வரவே, குளத்துக்கு நடுவில் அமைக்கப்பட்ட சமுத்ரக் க்ருஹத்தில் மலர்ப் படுக்கையில் படுத்ததாகக் கூறுகிறான்.
lotus AJANTA-01
Padmapani (Lotus Holder) in Ajanta paintings

பாணபட்டன் எழுதிய காதம்பரியில், இளவரசி காதம்பரி சந்திரபீடன் என்பவனை நினைத்து வாடவே தோழியர் தாமரை இலை கொண்டு வீசுகின்றனர். காதம்பரியின் காதுகளில் தாமரைப் பூ, கைகளில் தாமரைப் பூ, மணிக்கட்டில் தாமரைத் தண்டு வளையல், மார்பில் தாமரை இலைகள், நெற்றியில் சந்தனக் குழம்பு!! எலாம் தாமரைமயம்!!! அந்தக் காலத்தில் மலர் மருத்துவம் இருந்தது போலும்!

விவேகானந்தர் கதை

ராமகிருஷ்ண பரமஹம்சர், தனது வாழ்நாளில் பணத்தைத் தொட்டதே இல்லை. ஆன்மீக முன்னேற்றத்துக்கு பெரும் தடை பணத்தாசை என்பது அவருடைய உபதேசம். ஒரு முறை அவருடைய சீடர் சுவாமி விவேகானதர் தன்னுடைய குருவையே சோதிக்க விரும்பினார். பரமஹம்சருக்குத் தெரியாமல் படுக்கைக்கு மிக ஆழத்தில் ஒரு காசை வைத்து போர்வையால் மூடி மறைத்துவிட்டார்.

LotusFlower
வழக்கம் போல இரவில் தூங்கச் சென்ற ராமகிருஷ்ணருக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தார். ஏன் தூக்கம் வரவில்லை என்று கேட்டபோது படுக்கையில் இருக்கும் ஏதோ ஒன்று இப்படி அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்றார். அப்புறம் அந்தக் காசு வெளியே தூக்கி எறியப்பட்டது. ஆக விக்ரமாதித்தன் கதையில் சய்யவிலாசி தனது படுக்கை அறிவினால் முடியைக் கண்டு பிடித்தான். பரமஹம்சர் போன்ற ஞானிகள் மெய்யறிவினால் காசைக் கண்டுபிடிக்கின்றனர். இப்படிப் படுக்கை அதிசயங்கள் பற்றிப் பல கதைகள் உண்டு.
egypt-bed
Egyptian Bed of Boy King Tutankhamen

Swami_48@yahoo.com

சுமேரியாவில் சம்ஸ்கிருத சொற்கள்!!

borobudur_aerial
Borobudur Temple in Indonesia in Meru style!

Written by London Swaminathan
Post No. 1039; Dated 13th May 2014.

(Already published in English under “Sumerian Words in Sanskrit: Sumukan Mystery on 12th may,2014. Following is the Tamil version)

டைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தை மெசபொடேமியா என்பர். இங்குதான் உலகின் மிக முக்கிய நாகரீங்களான பாபிலோனிய, சுமேரிய, அக்கடிய, மிட்டனி, ஹிட்டைட், காசைட் நாகரீகங்களும் வம்சங்களும் தழைத்தோங்கின. இவைகளில் மிட்டனி நாகரீகத்தில் தசரதன் பிரதர்தனன் என்ற புராண மன்னர்களின் பெயர்களும் ரிக் வேத துதிகளும் இருப்பது விந்தையிலும் விந்தை. கி.மு. 1400 ஆண்டுகளிலேயே துருக்கி- சிரியா பகுதிகளில் வேத கால நாகரீகம் இருந்தது வெள்ளைக்கார அறிஞர்களைத் திடுக்கிட வைத்தது—திக்கு முக்காடச் செய்தது. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் 1932 ஆம் ஆண்டிலேயெ சென்னைச் சொற்பொழிவில் இதைக் குறிப்பிட்டபோதும் இந்திய அறிஞர்களோ வெளிநாட்டு அறிஞர்களோ இதைக் கண்டு கொள்ளவே இல்லை. உலக நாகரீகங்கள் பற்றிய கலைகளஞ்சியங்களில் மட்டும் இதற்கு ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம் ஒதுக்கி இருக்கிறார்கள்!!

காரணம் என்ன? இதை விரிவாக ஆராய்ந்தால் அவர்கள் சொன்ன ஆரிய—திராவிட வாதத்தை குழிதோண்டிப் புதைத்து சமாதி கட்டியது போல ஆகிவிடும். ஆகவே அமுக்கமாக இருந்துவிட்டனர். இந்தியர்களோவெனில் அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை வெளிநாட்டு அறிஞர்களுக்கு ஒத்து ஊதுவதே தமது ‘’தெய்வீகக் கடமை’’யாகக் கொண்டுவிட்டனர்!!

சுமேரியாவில் களிமண் ஏடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 60,000 வரிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது. லண்டன் பல்கலைக் கழகம் போன்ற பெரிய பல்கலைக் கழகங்களில் இதற்கெனவே துறைகள் இருப்பதாலும், பிரிட்டிஷார் உலகம் முழுதும் வரலாற்றுப் பொக்கிஷங்அளைக் கொள்ளையடித்து பிரிட்டிஷ் மியூசியத்தில் குவித்து வைத்திருப்பதாலும் சுமேரிய பாபிலோனிய விஷயங்களில் அக்கறை செலுத்துகின்றனர். இந்தியர்களும் கண்ணில் விளக்கு எண்ணெய் ஊற்றிப் படித்தால், பல ரகசியங்கள் வெளிவரும். சிரியா- எல்லை அருகில் உள்ள மிட்டனி, ஹிட்டைட், காசைட் ஆகிய மூன்று நாகரீகங்களும் “ஆரிய” செல்வாக்குடைய நாகரீகங்கள் என்ற வரிகளுடன் வெள்ளைக்காரர்கள் முடித்து விடுகின்றனர். இவைகளை தீர ஆராய்வது நம் கடமை. உலகம் முழுதும் இந்தியர்கள் எப்படி நாகரீகத்தைப் பரப்பினர் என்பதை இதில் அறிய முடியும்.

sri yantra
Sri Yantra with Meru as centre is used in Hindu Pujas

‘’சுமேரு’’ சொல் விளக்கம்
எகிப்தியர்களும் சுமேரியர்களும் தாங்கள் அந்த நாட்டுக் குடிமக்கள் அல்ல என்றும் வெளியில் இருந்து வந்த ‘வந்தேறு குடிகள்’ என்றும் தெள்ளத் தெளீவாக எழுதிவைத்துள்ளனர். இதற்கு நேர் மாறாக சங்கத் தமிழ் இலக்கியமும் இந்து மத வேத ,இதிஹாச, புராணங்களும் பாரத புண்ய பூமியில் இந்துக்கள் தொன்று தொட்டு வாழ்வதாகக் கூறுகின்றன. பாரதியார் போன்ற உண்மை விளம்பிகள், ‘எந்தையும் தாயும்’ போன்ற பாடல்களில் இதைப் பாடியும் வைத்தனர்.

மேரு என்பது கடவுளின் இருப்பிடம் என்றும் அது தொலைவில் வடக்கே இருப்பதாகவும் இந்துமத புராணங்கள் இயம்பும். மேலுலத்தில் ஒரு மேரு இருப்பதும் (தேவியின் வசிப்பிடம்), அதே போல பூமியில் ஒரு இடம் இருப்பதும் வெள்ளிடை மலை என விளங்கும். புத்த மதத்தினர் கைலாஷ் மலைப் பகுதியைக் கூட மேரு என்பர். சுருக்கமாக்ச் சொல்ல வேண்டுமானால், உயரமான மேடு (மேரு) கடவுள் வசிக்கும் இடம்; இது புனிதமான பகுதி.

வட துருவத்தை சுமேரு என்றும் தென் துருவத்தை குமேரு என்றும் அழைப்பர் (காண்க: காஞ்சி பரமாசார்யார் சொற்பொழிவுகள்). பாமீர் பீட பூமி என்பது பா+மேரு என்பதன் சுருக்கம். கென்யாவில் (ஆப்பிரிக்கா) உயரமான சிகரத்தின் பெயர் மேரு. இந்தோநேஷியாவில் போரோபுதூர் கோவில், கம்போடியாவில் அங்கோர்வட் கோவில் ஆகியன மேரு வ்டிவில் அமைக்கப்பட்ட கோவில்கள். தேவி உபாசகர்கள் வணங்கும் ஸ்ரீசக்ரமும் நடுவில் மேருவை உடையததே.
Angkor-Wat
Angkor Wat Temple in Cambodia designed as Meru

சுமேரியா என்பதற்கு தெளிவான பொருள் கிடைக்கவில்லை என்று எல்லா கலைக் களஞ்சியங்களும் செப்புவதைக் காணலாம். இதற்கு நம்முடைய வட மொழி விளக்கமே சாலப் பொருந்தும். சு+மேரு. உயரமான பகுதியின் பெயரை அவர்கள் வைத்ததற்கு அவர்களுடைய பூர்வீக இந்து மத நம்பிக்கை காரணமாக இருக்கலாம். இதற்கு என்ன ஆதாரம்?

உலகில் பெர்லின் என்ற பெயரில் மட்டும் இருபதுக்கும் மேலான ஊர்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் ஒரு சேலம் நகரம் இருக்கிறது. தமிழ் நாட்டு சேலம் எல்லோரும் அறிந்த ஊர். மேலூர், புதூர் போன்ற ஊர்கள் தமிழ்நாட்டில் ஏராளம். ஆக இரண்டு பெயர்கள் ஒன்றாக இருந்தால் உடனே இரண்டும் ஒன்று என்று பி.எச்டி. ‘தீஸிஸ்’ எழுதி விட முடியுமா? முடியவே முடியாது. உலகில் எல்லா மொழிகளிலும் சில, பல சொற்கள் ஒன்றாக இருக்கின்றன. ஆக எல்லா மொழிகளும் ஒன்று என்று சொல்லி விட முடியுமா? முடியாது. நமது கொள்கைகளை வலியுறுத்த வேறு பல ஆதாரங்களும் அவசியம்.

இந்த அடிப்படையில் சுமேரிய கலாசாரத்தை அணுகினால் சுமுகன் என்ற வடமொழிப் பெயரும், அழிகி, விழகி போன்ற அதர்வண வேதச் சொற் களும் கிடைக்கின்றன. இவைகளுக்கு சுமேரிய நிபுணர்களும் வேறு விளக்கம் சொல்ல முடியவில்லை. நான் நேற்று எழுதிய ‘’சுமேரியாவில் இந்து புராணக் கதை’’ என்ற கட்டுரையில் உலகம் முழுதும் கருடன் இனம்- நாகர் இனம் என்ற பெயரில் மனிதர்கள் மோதிக் கொண்டதையும் பிற்கால உபந்யாசகர்கள் அவைகளை உண்மையான பாம்புகள், கழுகுகள் என சித்தரித்ததையும் விளக்கினேன்.

சுமுகன் என்பது கருடனுக்கு ஒரு பெயர். அதன் பகைவனான பாம்புக்கும் ஒரு பெயர். பரமபத சோபான படத்தில் சுமுகன் பாம்பைப் பார்க்கலாம். விஷ்ணுவுக்கும் சுமுகன் என்பதை விஷ்ணு சஹ்ஸ்ரநாமம் பாராயணம் செய்வோர் அறிவர். வீடுகளுக்கு வந்து பூஜை செய்யும் ஐயர்கள் முதலில் பிள்ளையார் பூஜை போடுகையில் ‘சுமுகாய நம:’ என்று பிள்ளையாருக்கும் அதே பெயரைச் சொல்லுவதைக் கேட்கலாம். ஆக அழகான, மங்களகரமான முகம்= சு+முகம். இந்தப் பெயர் சுமேரியாவில் கடவுளாகவும், கடவுளின் தோழனாகவும் வருகிறது!

smallNaramSin
Stele of Naram Sin (2620 BCE) with Cosmic Mountain (Meru)

அழிகி, விழிகி என்ற பாம்புகள் (சொற்கள்) அதர்வண வேதத்தில் வருகின்றன. இவகளுக்கு விளக்கம் தெரியாமல் நம்மவர்களும் அதர்வண வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட வெளிநாட்டினரும் முழித்தனர். அசீரிய மன்னர்களின் பெயர்களில் இவை இருப்பது அண்மைக் கால ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஆக மேலும் மேலும் சுமேரிய பாபிலோனிய நாகரீகங்களை ஆராய்ந்தால் புதிய, வியப்பான தடயங்கள் கிடைக்கலாம். அதன் பின்னர் அந்தப் பெயர்கள் எப்படிப் பரவின என்பதை நடு நிலையில் நின்ற ஆராய்ந்து பின்னர் நம் கொள்கைகளைப் பகரலாம், பறைசாற்றலாம்.
carchemish birdment 9C BCE
Birdmen from Carchemish.

Contact swami_48@yahoo.com

சுமேரியாவில் இந்து புராணக் கதை!

eagle 883 BCE
Eagle headed genie with divine water (amrita) in Assyria 893 BCE

By London swamiathan
Post No.1037; Dated 12th May 2014.

சுமேரியா என்பது இன்றைய இராக், ஈரான் ஆகிய நாடுகளைக் கொண்ட பகுதியில் நிலவிய பழங்கால நாகரீகம். உலகில் எல்லா நாகரீகங் களுக்கும் முன்னதாக அது இருந்ததற்கான தொல்பொருட் சின்னங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. களிமண் பலகைகளில் 60,000 வரிகள் அளவுக்கு விஷயங்கள் கிடைத்து இருக்கின்றன. இது சம்ஸ்கிருதம் போல தெள்ளிய நடை இலக்கியம் மற்றும் கணக்கு வழக்குகள். இதே போல மேலும் ஒரு 60,000 வரிகள் பேச்சு வழக்கு இலக்கியம் வேறு இருக்கிறது. இது பிராக்ருதம் போன்றது. எப்படி வடமொழி நாடகங்களில் பெண்களும் நகைச்சுவை நடிகரும் மட்டும் பிராக்ருதம் பேசினார்களோ அதே போல பெண்கள் மட்டும் கொச்சை வழக்கு சுமேரியன் மொழியைப் பேசினர். இவை எல்லாவற்றையும் படித்து வெளியிட இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும். அதற்குப் பின்னர்தான் இதில் முத்துக் குளிக்க முடியும்.

சம்ஸ்கிருதத்தில் இதைவிடப் பன்மடங்கு இலக்கியம் இருந்தபோதிலும் அதன் பழமையை– சுமேரியாவுக்கும் முந்தையது என்று– மேல்நாட்டினர் ஒத்துக் கொள்வதில்லை. ஆனால் ஜாகோபி பொன்ற ஜெர்மானிய அறிஞர்கள் ரிக் வேத காலம் கி.மு.6000 என்று ஒப்புக்கொள்வர். அப்போது இவ்வளவு சுமேரிய விஷயங்கள் வெளியாகவில்லை.

இதுவரை வெளியான சுமேரிய இலக்கியங்களில்கூட இந்து மத நூல்களோடு ஒப்பிடும் பல வியப்பான விஷயங்கள் உள்ளன. எல்லோரும் அறிந்த விஷயம்—பிரளயம் பற்றிய கதை. இது நமது மச்சாவதாரத்தில் இருப்பது போல பைபிள் மற்றும் பல மத்திய கிழக்கு நூல்களில் உள்ளன. நான் பார்த்த வரையில் கருட புராணக் கதை, அதர்வ வேத (பாம்பு) நாகங்கள், சுமுகன் என்ற சம்ஸ்கிருத சொல் முதலியன கிடைத்திருக்கின்றன. முதலில் கருடன் கதையைப் பார்ப்போம்.

உலகம் முழுதும், நாகர்களுக்கும் பறவை ( கருடன் ) மனிதர்களுக்கும் நடந்த சண்டை பற்றி இலக்கியங்கள் பேசுகின்றன. அங்கே எழுதினவர்கள் நாகர்களையும் கருடன்களையும் மனிதர்கள் என்று பொருள்படவே எழுதினர். பிற்காலத்தில் இதை பாம்பு, கழுகு என்று மாற்றிச் சொல்லத் துவங்கிவிட்டனர். இதை மாயா, எகிப்திய, சுமேரிய நாகரீகங்களிலும் காணலாம்.
garuda vahan

மஹாபாரதம், புராணங்களில் வரும் நாகர்- கருடன் சண்டை பலருக்கும் தெரிந்திருக்கும். காஸ்யப மகரிஷிக்கு இருந்த பல மனைவியரில் விநதா என்பவளுக்கு கருடனும் கத்ரு என்பவளுக்கு பாம்புகளும் (நாகர்கள்) பிறந்தன என்றும் கொடுமைக்காரியான கத்ரு, விநதாவை அடிமையாக வைத்திருந்ததாகவும் தேவ லோக அமிர்த்தத்தைக் கொண்டுவந்து கொடுத்தால் அடிமை விலங்கை முறிப்பதாகச் சொன்னதாகவும் கதை.

உடனே கருடன் இந்திர லோகம் சென்று அமிர்தத்தைத் திருடியதாகவும் இந்திரன் சண்டை போடவே கருடன் ஒரு இறகைக் கொடுத்து கொஞ்சம் அமிர்தத்தை மட்டும் பெற்று நாகர்களுக்குக் கொடுக்க விநதா விடுதலை ஆனதாகவும் படிக்கிறோம். இதில் மேலும் சுவையூட்ட அந்த அமிர்தம் தர்ப்பைக் காட்டில் சிந்தியதை நாகங்கள் நக்கியதால் பாம்புகளின் நாக்கு பிளவுபட்டதாகவும் சொல்லுவர். இது எல்லாம் அடையாளபூர்வ சங்கேத மொழி. இதன் ஆழ்ந்த பொருளை ஊன்றிப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளமுடியும்.

கருடனைப் பற்றி ரிக்வேதம் முதல் புராணங்கள் வரை மூன்று விஷயங்கள் வருகின்றன: 1) அமிர்தத்தைக் கொண்டு வந்தது 2). தொலை தூர மலைகளில் இருந்து சோமயாக த்துக்கான சோமலதையைக் கொண்டுவந்தது 3) மலைப் பள்ளத் தாக்குகளில் இருந்து மரகதக் கற்களைக் கொண்டுவந்தது.

மரகதக் கல்லுக்கு கருட ரத்னம் என்றும் குபேரனின் கல் அது என்றும் சொல்லுவர். பிற்காலத்தில் இந்தக் கதைகள் எல்லாம் அராபியர்களால் திருடப்பட்டு அரேபியன் இரவுகள கதைப் புத்தகத்துக்குப் போய்விட்டன.
garuda vahanam, tiruppullani, fb

சுமேரியாவில் கருடன் கதை

சுமேரியாவில் கிஷ் என்னும் நகரத்துக்கு முதல் மன்னன் ஏதனன். அவனுக்குக் குழந்தைகள் இல்லை. ஷாமாஷ் என்னும் சூரியக் கடவுளிடம் முறை இடுகிறான். குழந்தை பிறப்பதற்கான மர்ம மூலிகையின் பெயரைச் சொல்லுமாறு வேண்டுகிறான். மலைக்குச் செல்லும் படி சூரியதேவன் உத்தரவிடுகிறான். இதற்கிடையில் மலையில் பாம்புகளுக்கும் கருடன்களுக்கும் இடையில் சண்டை. எல்லா பாம்புகளையும் கருடன் பிடித்துத் தின்பதாக புகார். உடனே பாம்புகள் கடவுளிடம் முறையிட்டன. கருடனைப் பிடிக்க கடவுள் ஒரு திட்டம் தருகிறார். கருடனும் அகப்பட்டுக் கொள்கிறான். அந்த நேரத்தில்தான் ஏதனன் அங்கு செல்கிறான்.

கருடனை ஏதனன் காப்பாற்றுகிறான். நன்றிக்கடனாக அவனை தேவலோகத்துக்கு அது அழைத்துச் செல்கிறது. ஏதனன் உயரத்தைக் கண்டு பயப்படவே திரும்பிவிடுகின்றனர். பின்னர் பூவுகத்துக்கு வந்தவுடன் ஒரு கனவு வருகிறது. .மீண்டும் தேவ லோகம் செல்லுகின்றனர். இந்த்
இடத்தில் களிமண் பலகை உடைந்திருக்கிறது.

இருந்தபோதிலும் பிற்கால களிமண் பலகைகளில் ஏதனனின் மகன் பலி அரசாண்டதாக வருவதால் தேவ லோக மூலிகை பெற்று குழந்தை பெற்றிருப்பான் என்றே ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். இந்தக் கதையிலும் இந்துமத கருடன் கதையிலும் கருடன்- நாகர் சண்டை வருவதும், அமிர்தம் அல்லது அற்புதக் குளிகை கொண்டுவர தேவலோகம் செல்லுவதும் ஒரேமாதிரியாக உள்ளன.

Map Sumeria

ஏதனன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததால் அவனை யத்னன் என்று அழைத்திருக்கலாம். யத்ன என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு விடாமுயற்சி என்று பொருள். யத்னன் உடன் சென்றவன் பெயர் சுமுகன். அவனுடைய மக்ன் பெயர் பலி. அதுவும் சம்ஸ்கிருத சொல். சுமுகன், சுமேரு மற்றும் அதர்வ வேதத்தில் வரும் தியமத், அலிகி, விலிகி ஆகிய சம்ஸ்கிருத சொற்கள் சுமேரியாவில் காணப்படுகின்றன. இவை எதற்கும் மேலை நாட்டினர் விளக்கம் சொல்ல முடியவில்லை.
ரிக்வேதத்தில் கருடனை சுபர்ணன், ஸ்யேனன் என்று அழைக்கின்றனர்.
சுமுகன், சுமேரு. அலிகி, விலிகி பற்றி தனியாகக் காண்போம்.

hit_eagle

கீழ்கண்ட கட்டுரை (25-12-2011-ல் வெளியிடப்பட்டது)
சுமேரியாவில் தமிழ் பறவை
ச.சுவாமிநாதன்

துருக்கியில் இரு தலைப் புள், கி.மு 1400
சங்கத் தமிழ் இலக்கியமான அகநானூற்றில் ஒரு அரிய செய்தி வருகிறது. அது ஒரு இரண்டு தலைப் பறவை பற்றிய செய்தி. இந்தப் பறவை சுமேரியாவில் கி.மு 3800 சிலிண்டர் முத்திரை ஒன்றிலும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, பஞ்ச தந்திரக் கதைகளிலும் அச்யுத ராயரின் தங்கக் காசுகளிலும் இதே இரு தலைப் புள் கண்டரண்ட பறவை என்ற பெயரில் உள்ளது.அல்பேனியாவின் தேசியக் கொடியிலும் ரஷ்யாவின் காசு, கரன்சி நோட்டுகளிலும் தமிழ்நாடு,ஆந்திர,கர்நாடக கோவில்களிலும் இந்தப் பறவையின் ஓவியங்களையும் சிலைகளையும் பார்க்கலாம்.எப்படி ஒரு தமிழ் பறவை இப்படி உலகெங்கும் பறந்து சென்று வெற்றிக் கொடி நாட்டியது என்பது ஒரு சுவையான செய்தி.

இதோ அகநானூறு கூறுவதைக் கேளுங்கள்:
“யாமே,பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே”
–கபிலர் (பாடல் எண் 12)

இதன் பொருள்: இனி யாங்களோ ஒரு பொழுதும் பிரிதல் இல்லாது கூடிய வெறுத்தல் இல்லாத நட்பினால் இரண்டு தலைகளுடைய ஒரு பறவையின் உடம்பில் உள்ள ஓர் உயிர் போல் உள்ளோம்.
இரண்டு தலைப் பறவைக்கு தலைகள் மட்டுமே இரண்டு.ஆனால் வயிறு ஒன்றுதான். கபிலர் பாடிய பாடலில் இருவர் இருந்தாலும் உயிர் ஒன்றுதான் எனப் பாடியுள்ளார். அந்தக் காலத்தில் இந்தியா முழுதும் இப்பறவை பற்றி தெரிந்திருக்கிறது. ஆகையால் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட வடமொழி நூலான பஞ்ச தந்திரக் கதையிம் இப்பறவை வருகிறது. புறாக்கள் அனைத்தும் வேடனின் வலையில் சிக்கி அவை அனைத்தும் ஒன்றாகப் பறந்து சென்று வேடனை ஏமாற்றிய கதையை அனைவரும் அறிவோம். அந்தக் கதையில் ஒரு துணைக் கதையாக கண்ட பேரண்ட பட்சி கதை வருகிறது. இரு தலை பறவையின் இரண்டு தலைகளும் ஒன்றுக்கொன்று சண்டை யிடும் கதை. ஒரு தலை தனக்கு அம்ருதம் வேண்டும் என்றும் இன்னொரு தலை தனக்கு விஷம் வேண்டும் என்றும் சண்டை போடுகின்றன. இறுதியில் ஒரு தலை விஷம் அருந்தவே அப்பறவை இறக்கிறது. ஒற்றுமையின்மையால் இருதலைப் பறவை இறக்கும் கதை இது.

சங்கத் தமிழ் நூல்களான பரிபாடல் (8-72), கலித்தொகை (89), பிற்கால நூலான தகடூர் யாத்திரை ஆகியவற்றிலும் இருதலைப் பறவை உவமை வருகிறது.அந்த அளவுக்குப் பிரபலமான கதை. சேர மன்னனும் அதியமானும் ஒரே குலத்தவராயிருந்தும் சண்டை போட்டதற்கு உவமையாக தகடூர் யாத்திரை இதைக் காட்டுகிறது. சுமேரியாவில் இது லகாஷ் நகர தெய்வம் நினூர்தாவின் சின்னமாகக் கருதப் பட்டது.

துருக்கியில் ஹட்டுசா முதலிய நகர்களில் இது இரண்டு தலைகளாலும் இரண்டு முயல்களைத் தூக்குவது போல பெரிய உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இது கி. மு 1400ல் செதுக்கப் பட்டது.துருக்கியின் வரலாற்றில் பின்னிப் பிணைந்துவிட்ட இப்பறவைக்கு வானத்தில் விண்கலத்திலிருந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமான ஒரு வடிவத்தை எர்சூரும் மாகாணத்தில் இப்போது கட்டிவருகிறார்கள்.

flag_of_albania
Flag of Albania

நாயக்க மன்னர் காலத்தில் இப்பறவை மிகப் பலம் வாய்ந்த டினோசர் பறவை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அச்யுத ராயர் (1530-1542) வெளியிட்ட தங்க நாணயத்தில் இரண்டு யானைகளைத் தூக்குவது போல படம் உள்ளது. அவ்ருக்கு முந்திய மன்னன் நாகரி எழுத்தில் பெயரை மட்டும் பொறித்தான்.

தமிழ்நாட்டில் ஆவுடையார் கோவில் ஒவியத்தில் இது பல யானைகளைத் தூக்குவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. கர்னாடகத்தில் கேலடி கோவில் சிற்பத்திலும்,தட்சசீலத்தில் சமணர் கோவில் சிற்பங்களிலும் இப்பறவை உண்டு. ஸ்ரீசைலம்,பேலுர்,கோரமங்கலா கோவில்களிலும் இதைக் காணலாம்.

achyuta-raya-gold

அச்யுத ராயரின் தங்கக் காசு

மைசூர் மன்னர் உடையார், இதை 500 ஆண்டுக் காலமாக ராஜவம்ச சின்னமாக பயன்படுதுகின்றனர். இன்றும் அரண்மனையில் இதைக் காணலாம். கர்நாடக அரசும் இதை தனது சின்னத்தில் பொறித்துள்ளது.
இப்பறவை ரஷ்ய நாணயங்கள், கரன்சி நோடுக்கள், அல்பேனியா,பல்கேரியா தபால் தலைகள், தேசியக் கொடி எல்லாவற்றிலும் இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இரு தலைப் பறவை இல்லாத இடமே இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன் கபிலர் பாடிய இப்பறவை எங்கெல்லாம் பறந்து செண்றுவிட்டது!!

அல்பேனியாவின் தேசியக் கொடி ரஷ்ய ரூபிள் நாணயம்

குறுந்தொகையில் இருதலைக் குழந்தை

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் ஒரு இரு தலைக் குழந்தை Siamese Twins பற்றிய சுவையான செய்தி வருகிறது. பாடல் எண் 324 ஐ எழுதியவர் பெயரே கவைமகன்.அதாவது இருதலை உடையோன். கவட்டை, ஆங்கிலச் சொல் gap ஆகியவை இதனுடன் தொடர்புடைய சொற்களாக இருக்கலாம்.

ரிக் வேதத்தில் பெயர் தெரியாத மிகப் பழைய புலவர்களுக்கு அவர்கள் பயன் படுத்தும் சொற்றொடர்களைக் கொண்டு பெயரிடப் பட்டதாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ளனர். ஐந்தாம் நூற்றாண்டில் தமில் இலக்கியத்தைப் பகுத்து வைத்தோரும் அதே நடை முறையைப் பயன் படுத்தி ஏறத்தாழ 20 புலவர்களுக்கு இப்படி காரணப் பெயர்களை இட்டுள்ளனர்.
siamese
Siamese Twins

கவைமகன் (twins or Siamese Twins) எழுதிய குறுந்தொகை 324 ல் இருதலைப் புள்
போலவே கருத்து கூறியுள்ளார்.
கவை மக நஞ்சு உண்டா அங்கு,
அஞ்சுவல் பெரும! என் நெஞ்சத்தானே.
— கவை மகனார்

பொருள்: இத்தலைவியோ தன் அறியாமையினால் வருந்துகின்றாள். யான் என் மனத்தினுள்ளே இரட்டைப் பிள்ளைகள் நஞ்சுண்டால் இருவர் திறத்தும் ஒரு தாய் வருந்துவதைப் போல நீ அங்கனம் வருதலை எண்ணி அஞ்சுவேன்.

ஒட்டிப் பிறக்கும் இருதலை குழந்தை மிகவும் அபூர்வம்.ஒரு லட்சத்தில் ஒர்ன்றுதான் இப்படிப் பிறக்கும்.அக் குழந்தைகளை ஆபரேஷன் செய்து தனியே பிரிக்க 18 மணி நேரம் கூட ஆகும்.இப்படிப் பட்ட நீண்ட நேர அறுவைச் சிகிச்சைகள் அண்மையில் நடந்தன.
மேற்கூறிய கவை மகன் உவமையில் ஒரு தலை விஷம் உண்டால் மறு தலையும் இறக்கும் என்பது விளக்கப் பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் இக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் Please go to swamiindology.blogsot.com or tamilandvedas.wordpress.com
coin

இதே பொருள் பற்றிய முந்தைய கட்டுரைகள்:
Double headed Eagle: Sumerian Indian Connection (posted on 18-12-2011)
Birds for Finding Direction: Sumerian to Tamil Nadu via Indus Valley (8-4-13)
Hindu Eagle Mystery Deepens Feb.16, 2013
Karikal Choza and Eagle Shaped Fire Altar
Are Mayas, Hindu Nagas?
Four Birds in One Sloka
Hindu Vahanas around the World
Gods and Birds
Vishnu Seal in Indus Valley Civilization
Bahrain (Dilmun) Mysteries (posted 10-11-2012)
Confusion about Vedic Soma Plant (Posted on 5-5-2013)
பஹ்ரைன் அதிசயங்கள்“( posted 7-11-2012)
Contact swami_48@yahoo.com

ஆன்ம ஞானம் பெற அதிசுலபமான அதிசய வழி!

yv1
Post No. 1035; Dated 11th May 2014.

By ச.நாகராஜன்

விளங்காத மர்மம் விளக்கும் அரிய நூல்!

ஆன்மீக நாட்டம் உடைய ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தோன்றும் விடை காண முடியாத கேள்விகள் ஏராளம். இந்தப் பிறவியின் மகத்துவம் என்ன, ஏன் இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்தது, விதியா,முயற்சியா எது மேலோங்கும், இறப்புக்குப் பின்னர் எங்கே போகப் போகிறோம், மறு ஜென்மம் உண்டா, புண்யம் எது,பாவம் எது, எப்படி வாழ்ந்தால் ஆன்ம ஞானம் கிடைக்கும் இத்யாதி கேள்விகள் ஏராளம். விடை தான் தெரியவில்லை. இந்தக் குறையை நீக்க வல்ல ஒரு அற்புதமான நூல் ‘’யோக வாசிஷ்டம்’’. ஒவ்வொரு மர்மமான கேள்விக்கும் ஆணித்தரமாக நேரடியாக பதிலைத் தருவதில் இதற்கு நிகரான இன்னொரு நூல் இல்லை என்றே சொல்லலாம்.

அதனால் தானோ என்னவோ உயரிய ஞானம் உடைய அறிஞர்கள் பலரும் இதில் உள்ள கருத்துக்களைப் பிரதிபலித்துத் தங்கள் நூல்களில் கருத்துக்களை எழுதியுள்ளனர்.ஜேம்ஸ் ஆலன், அன்னி பெஸன்ட், பெர்க்ஸன், பால் ப்ரண்டன், அலெக்ஸாண்டர் கானான்,சர் ஜேம்ஸ் ஜீன்ஸ்,வில்லியம் ஜேம்ஸ், சி.இ.எம்.ஜோட், ஆலிவர் லாட்ஜ், ஷோப்பன்ஹோவர், டபிள்யூ.ஆர்.இஞ்ஜே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அறிஞர்கள் யோக வாசிஷ்ட கருத்துக்களை வார்த்தைக்கு வார்த்தை நேரடியாக அப்படியே தெரிவித்துள்ளனர்.

விதி என்பது இல்லவே இல்லை!

தைவம் நாம ந கிஞ்சன் (விதி என்று ஒன்றும் இல்லை- 2-5-18)
தைவம் ந வித்யதே (விதி என்பது இல்லவே இல்லை- 2-8-13)
மூடை: ப்ரகல்பிதம் தைவம் (மூடர்களால் உருவாக்கப்பட்ட தே விதி – 2-8-16) என்று இப்படி அடித்துச் சொல்லும் யோக வாசிஷ்டம் மனிதனின் செயல்களே அவனுக்குப் பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதுவே விதி என்று சொல்லப்படுகிறது என்று விளக்குகிறது.

yv2

நீடித்திருக்கும் வியாதிக்கு இப்போது மருந்து சாப்பிட்டால் எப்படிஅது தீருமோ அதே போல முந்தைய கருமங்களின் தீய விளைவுகளை இப்போதைய நல்ல கர்மங்களால் மாற்ற முடியும் என்று விளக்கி மனித குலத்திற்கே பெரும் ஆறுதல் செய்தியை அது தருகிறது!
மனமே எல்லாம் என்று கூறி அதைச் செம்மைப் படுத்தி நல்ல எண்ணங்கள் மூலம் உயரிய நிலையை அடைய முடியும் என்பது
யோக வாசிஷ்டம் தரும் அற்புத செய்தி!

பிறப்பு,இறப்பு,கர்ம பலன்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களை விளக்கும் இந்த நூல் எப்படிப்பட்ட வழிகளின் மூலம் அருமையான ஆன்ம ஞானத்தை அடைந்து உலகியல் துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம் என்ற ரகசியத்தையும் சுலபமாக விளக்குகிறது.

அதிசய வழிகள் நான்கு

இதற்கான அதிசய வழிகள் நான்கு!

சந்தோஷ: சாதுசங்கஸ்ச விசாரோத்ய சமஸ்ததா I
ஏத ஏவ பவாப்யோத்யாவுபாயாஸ்தரணே ந்ருகாம II (2-16-18)

சந்தோஷம் (எப்போதும் திருப்தி), நல்லோர் இணக்கம் (சாதுக்களுடன் சேர்தல்),விசாரம், அமைதி –இவையே மனிதருக்கு உலகம் என்னும் சாகரத்தைக் கடக்கும் வழிகளாகும். இதை எளிதாக நான்கு ‘ஸ’காரங்களாக ஸந்தோஷம், ஸத் சங்கம், ஸத் விசாரம், ஸமஸ்தம் என்று நினைவில் கொ:ள்ளலாம்.

சந்தோஷம்
விஷயங்களில் ஆசையில்லாது, சந்தோஷமாக (திருப்தியுடன் ) இருக்கும் ஒருவனுக்கு பெரும் சக்திகள் (வளங்களும் கூட) ஒரு அரசனிடம் இருக்கும் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும் என்பதை உறுதியாக யோக வாசிஷ்டம் தெரிவிக்கிறது. எவ்வளவு அரிய செய்தி இது!

நல்லோர் இணக்கம்
மனதில் இருக்கும் இருளை சாதுக்கள் அகற்றுவர்.சூரிய ஒளி போன்ற ஞானத்தைத் தருவர். தர்மங்கள் செய்வதாலும்,புனிதத்தல யாத்திரை மேற்கொள்வதாலும் விரதங்களாலும் மதச் சடங்குகள் மற்றும் யாகங்களாலும் என்ன பயன், ஒருவன் சாதுக்களுடன் சேர்ந்து இருக்கும் போது!

விசாரம்
நான் யார்? (கோஹம்)உலகில் பிறப்பு என்ற தோஷம் எப்படி வந்து சேர்ந்தது?( கதமயம் தோஷ: சம்ஸாராக்ய உபகத: 2-14-50) இப்படி தர்க்கரீதியாக விசாரம் செய்வதே விசாரம்!

சமஸ்தம்
அனைத்து உயிர்களிடமும் நட்பாக இருந்தால் உயரிய ஆன்மா தன்னைத்தானே சுத்தப்படுத்துகிறது (ஸ்வயம் ஏவ ப்ரஸீததி)
ஆக இந்த நான்கு வழிகளில் எந்த ஒரு வழியை மேற்கொண்டாலும் இறை சக்தி அருளைப் பாலித்து பெரும் வளங்களைத் தந்து முக்தியை நல்கும் என யோக வாசிஷ்டம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.
yv3

ராமர் வசிஷ்டரிடம் கேள்விகள் கேட்க பிரம்ம ரிஷி வசிஷ்டர் பதில்களைத் தீர்க்கமாக அளிக்கிறார். அதுவே ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட யோக வாசிஷ்ட நூலாக அமைகிறது.இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஸ்லோகங்கள் 32000 தான்!

அதி சுலப வழி விசாரமே

மேலே கூறிய நான்கு வழிகளில் மிக சுலபமான வழியாக ரமண மஹரிஷி கூறுவது, ‘நான் யார் என்று இடைவிடாது உன்னேக் கேள்வி கேள்! அனைத்து மர்மங்களும் தானே பிடிபடும்’ என்பதே!
எப்போதும் திருப்தி, நிஜமான உயரிய பண்புகள் உள்ள சாதுக்களை நாடுதல், அனைத்து உயிர்களிடமும் சமத்துவம் என்பதெல்லாம் பலருக்கும் கடைப்பிடிக்க சற்று சிரமமான வழிகள். ஆனால் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் சற்றும் செலவின்றி ஆண், பெண் யாரானாலும் அந்தஸ்து பேதமின்றி நாடு,இனம்,மொழி தாண்டி சுலபமாக செய்யக்கூடியது விசாரமே!

அதனால் தான் அவர், ஆன்ம வித்தை உரை என்ற அற்புதமான பாடலில் பல்லவி, அனுபல்லவி ஐந்தே ஐந்து சரணங்களில்

“ஐயே!அதி சுலபம் – ஆன்மவித்தை
ஐயே! அதி சுலபம் “ என்று கூறி விளக்குகிறார்.
பொருள் பொதிந்த அடுக்குமொழித் தமிழ்க் கவிதை வரிகளைப் இந்தப் பாடலில் படித்தால் மஹரிஷி ஒரு மஹாகவியும் கூட என்பதை உணர்ந்து விடலாம்!
na's BD

சரணங்களின் கடைசி வரிகளைப் பார்ப்போம்:-
பொய் உருவான அகங்காரத்தை நான் யார் என்ற இடைவிடாத கேள்வி மூலம் ஒழித்து விட்டால்,

“சுயமான்மா விளங்குமே;இருள் அடங்குமே;இடர் ஒடுங்குமே; இன்பம் பொங்குமே” என்றும்,

மாம்சமான சரீரத்தை நான் என்று எண்ணாமல் நான் யார்? இடம் எது என்று விசாரிப்பதால்,
“இதய குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம ஞானமே; இதுவே மோனமே; ஏக வானமே” என்றும்

உண்மை சொரூபத்தை உணர்ந்து விட்டால் பின் அறிவதற்கு என்ன இருக்கிறது? “தன்னைத் தன்னில்” உணர்ந்து விட்டல்,
“தன்னுள் மின்னும் ஆன்ம பிரகாசமே; அருள் விலாசமே,அக விநாசமே; இன்பவிகாசமே” என்றும் ,

கர்மங்களின் கட்டு அவிழ,
“இம்மார்க்கம் மிக்கு எளிது! .. .. சும்மா அமர்ந்திருக்க அம்மா! அகத்தில் ஆன்ம ஜோதியே; நிதானுபூதியே: இராது பீதியே; இன்ப அம்போதியே” (இன்ப அம்போதி –ஆனந்தக் கடல்) என்றும்,

அண்ணாமலையானைக் காண அவன் அனுக்ரஹம் வேண்டும்,
“உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை என் ஆன்மா காணுமே; அருளும் வேணுமே: அன்பு பூணுமே: இன்பு தோணுமே”
என்றும் அற்புதமான சிறிய ஐந்து வரிப் பாடல்கள் ஐந்தின் மூலம் விளக்குகிறார்.

யோக வாசிஷ்டம் கூறும் அதிசய வழிகள் நான்கில் அதிசுலபமான ‘நான் யார்’ என்ற விசார வழியை அனுபூதியாக உணர்ந்தவர் மஹரிஷி ரமண மகான்! அனைவரையும் உய்விக்க எண்ணும் அருளுடன், “ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை” என்று அவர் கூறும் போது யோக வாசிஷ்டத்தின் உண்மைக் கூற்றையும், அதை மெய்ப்பிக்கும் மஹரிஷியின் மாண்பையும் எண்ணி எண்ணி நம் மெய் சிலிர்க்கும்!
அவருடன் இணைந்து அதி சுலபம் ஆன்ம வித்தை என்று பாடியவாறே நான் யார் என்ற விசார மார்க்கத்தை மேற்கொண்டு சம்சார சாகரத்தைக் கடந்து விடலாம்! அப்போது … ..

“சுயமான்மா விளங்குமே;இருள் அடங்குமே;இடர் ஒடுங்குமே; இன்பம் பொங்குமே”
yv5

ஆன்மீக மாத இதழ் ஞான ஆலயம் ஜூலை 2013 இதழில் வெளியான கட்டுரை

(This article was written by my brother S Nagarajan: swami)

Contact swami_48@yahoo.com

Indus Valley – Brahmin Connection!

tigerladyK50a

By London Swaminathan
Post No. 1034; Date 10th May 2014

The world was misled by some scholars in the case of Indus Valley Civilization. They made two or three false statements as a result of which we are unable to decipher the script until today. More than fifty different decipherments are available today and none of them is accepted by everyone. The first false statement made by the early excavators introduced the Aryan- Dravidian division into it. The second false statement introduced the Dravidian decipherment theory in the script. Both of them not only failed to make any progress but also prevented others to look at it from different angles.

Sumerian culture was bilingual from the very beginning. People speaking different languages lived together in a small geographical area. Hundreds of gods and goddesses were seen in the Middle East and Egypt. We have to apply the same rule to Indus Valley Civilization. It is possible that we may have had different language speakers and worshippers of different faiths under one roof. We have seen such a condition even in the Buddhist period 2600 years ago. So it is important that we look at the Indus Valley/ Sarasvati Valley civilization from a new angle.

Now that we know the date of decline of the civilization and satellite pictures of Saraswati’s dried up basin, all those myths about Aryan invasion and destruction are finished once and for all. My research into this civilization shows some Brahmin connection to the civilization. It will prove that the Brahmins lived there at the peak of the civilization.

industablet2

1.Story of Saraswat Brahmins: In the Mahabharata, Rishi Saraswata is represented as being the son of the personified river Saraswati. In a time of great drought he was fed with fish by his mother, and so was enabled to keep up his knowledge of the Vedas, while other Brahmanas were reduced to such straits for the means of subsistence that study was neglected and the Vedas were lost. When the drought was over, the Brahmanas flocked to him for instruction, and 60,000 acquired knowledge of the Vedas from him. This shows that there was a drought lasting for a long period and the Saraswat Brahmins migrated to different parts of India. Even today we see Saraswat Brahmins in different parts of the country.

2. Ram’s sons invaded Indus cities: Please see my earlier article Indus Valley Cities in Ramayana. Mahabharata also confirms what Ramayana says about the Gandharva rulers of Indus region. Chitrangada was the elder son of King Shantanu and Queen Satyavati. Chitrangada thought too highly of himself and was killed in his youth by a Gandharva of the same name as his during an extended battle along the banks of River Saraswati. We know that the mighty Saraswati was running through the region in Vedic days and slowly disappeared during Mahabharat times.

tigersrampant

3. Contrary to the foreign scholars’ propaganda, Hindu literature says that the Asuras and Devas were sons of one and the same mother. Both of them had Brahmins as their Gurus. Asuras (demons) had Sukra (venus) as their teacher and Devas (angels) had Brihaspati (Jupiter) as their teacher. This was referred to even by Sangam Tamil Poets 2000 years ago (See Kalitokai lines 99-1/2). Brihaspati was praised as the king of Sindhu Desa in the Navagraha Stotras. So the Brahmins belong to Indus country.

4. Brahmins all over the world perform Sandhyavandhana three times a day. The water mantra was given by the sage Sindhudweepa. This also shows that the Brahmins are closely connected to the Indus area. We read about Sindhudweepa Amabrish and Jayadratha as kings of Indus area.

calendar symbol 3

5. The big mystery about the Indus seals is that we don’t see the cow in any of the 4000+ seals, but have only bulls. Is it because the Brahmins and others regarded Cow as a holy animal?

narrativeseal

6. Though almost all the civilizations appeared on the banks of rivers, Brahmins’ life is entirely based on water. They can’t survive without water which is essential for their religious ceremonies. The Great Bath and the rooms around it in Mohanjo daro might have been be used by the Brahmins for their religious ceremonies.

7. I have already written about the most famous Sugarcane (Ikshwaku) dynasty and the discovery of sugar in the Indus excavations.

8. I have already dealt with the discovery of sesame seeds in the Indus area and the use of it by the Brahmins in Hindu funeral ceremonies and the water ablutions for the departed souls. This also proves the Brahmin link to Indus valley.

scorpion 4

9. We have one Guru or king’s picture in the Indus. The way he wears the cloth on his left shoulder is the way Vedic pundits wear their upper garment. Even the Muslims going around Kaba in Mecca wear their cloth in this style.

10. Some scholars have even identified some fire places in the excavated areas of Indus Valley. They believe that Brahmins had performed fire ceremony every day. The strange, unidentified symbol in many of the seals may be a filter used for extracting Somarasa by the Brahmins.

cult2

11. Brahmanabad and Brahmin Janapadas were there only in the Indus area and nowhere else in India.

12. Manu says, “The country that the Gods made between the two divine rivers, the Sarasvati and the Drsadvati, is what they call the Land of Veda”. Manu was mentioned in Rig Veda in several places. Vedas are dated between 6000 BCE and 1000 BCE. Since Vedic names were found in 14th century in Turkey, Syria, Iraq, Iran and Egypt (please see Bogazkoy Excavations, Dasaratha letters in Egypt, Tushrata in Syria/Turkey, Mittani kings, Horse manual of Kikkuli), Vedas must have been there even before Indus Valley’s decline. The Sanskrit names were found in a vast geographical area from Egypt to Southern most part of India. Modern research has found more evidence in the names of Azigi, Vizigi, Tiamat, Sumukan of Sumerian civilization and Atharva Veda.

Indus priest

13. Buddha made the peepal tree popular. Peepal sticks (Ficus religiosa) were used by Brahmins even before the Buddha. There was a sage with the name of the Ficus tree: Pippaladan. Brahmins are the one who use this tree from Vedic days until today in their day to day ceremonies like Agnihotram and Samidhadanam. Ficus tree motifs are there in Indus valley in the seals and pots.

OLYMPUS DIGITAL CAMERA

14. Vedic society had many gods and worship but not the temples as we have them today. This is seen only in India. All other ancient civilizations had big structures for worship. Indus valley also had no places of worship.

15. We see lot of divine figures with horns in the Indus valley. Only Brahminical explanations are available for such figures in the Vedas and other stotras. Eka Sringi (one horn), Naikasringi (not one horn, but many horns), Chatwari Srunga: (God Agni) are described in the Vedas and Vishnu Sahasranama.

16. Bull fighting, identified in some Indus seals, is in Sangam literature. But even the Tamil references link it with the Yadava community and Lord Krishna.

dilmun seal pasupati
Pasupati seal is found in Bahrain (above), Denmark, Rome and Indus Valley.

cereunnos
Cerunnos, Irish God (Pasupati)

17. Tamil literature has no knowledge of Indus valley at all. 2000 year old Sangam Tamil literature praised the holy Ganges in many places, Yamuna in one place and Himalayas in several places along with Hindu Gods. In the absence of any connection between the Tamils and the Indus valley, we cannot think of deciphering the script through Dravidian languages. We have no evidence of the huge Indus bricks in ancient Tamil Nadu.

Contact swami_48@yahoo.com

Roman_Orpheus_Taming_Wild_Animals
Roman God (Pasupati) with animals.

Read my other posts on Indus:
Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (posted 21/1/12)
Human Sacrifice in Indus Valley and Egypt (posted on 31/10/12)
Ghosts in Indus Seals and Indian Literature
Flags: Indus Valley- Egypt Similarity
Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?
Indra on Elephant Vahana in Indus Valley
Indus Script Deciphered
Human sacrifice in Indus Valley and Egypt 0ct.31, 2012
Indus Valley Cities in Ramayana Dec.18, 2012

Open Sesame’: Password to Heaven Post No 756 dated 23rd December 2013
Change ‘’Indus’’ valley civilization to ‘’Ganges’’ valley civilization! Ulta! 29-3-2014
Indus Valley Case: Lord Indra Acquitted Post No 764 dated 28th Dec. 2013
‘Sex Worship’ in Indus Valley
Flags: Indus Valley – Egypt Similarity (15/1012)

The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty
Vishnu in Indus Valley Civilization (posted on 19-10-11)
Serpent Queen: Indus Valley to Sabarimalai 18 June 2012
Fall of Brahmin Kingdoms in Pakistan and Afghanistan 23-3-14

IthyphallicProtoSiva
Pasupati in Indus Valley.