இயற்கையில் கணித இரகசியம்! –3

monalisa fibonacci
Post No 1029: Dated 8th May 2014
By ச.நாகராஜன் (Part-3)

“எல்லாமே எண்கள் தான்!”
-பிதகோரஸ்

இயற்கையில் உள்ள கணித ரகசியங்களையும் வடிவமைப்பு ரகசியங்களையும் கண்டுபிடிக்க விஞ்ஞானியாகத் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஐன்ஸ்டீன் ஒளியின் வேகத்தைக் கண்டுபிடிக்க ஒளியின் மீது ஏறிச் செல்வது போலக் கற்பனை செய்து அதைக் கண்டு பிடித்தார். ஆனால் சாமானியராக இருந்த பலரும் கணித ரகசியங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக ‘குட் வில் ஹண்டிங்’ (Good Will Hunting) என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் வரும் கதாநாயகனான வில் ஹண்டிங் என்ற இருபது வயது இளைஞனைக் கூறலாம். இந்த ஆங்கிலப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. உள்ளூர் மதுபானக் கடையில் வேலை பார்த்து வந்த ஹண்டிங் மிகப் பெரும் மேதைகளாக இருந்த கணிதப் பேராசிரியர்களால் தீர்க்க முடியாத கணிதப் பிரச்சினைகளை அனாயாசமாக தீர்த்து விடுவான்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் அமெரிக்காவில் சாண்டியாகோவில் வாழ்ந்தவர் ஐந்து குழந்தைகளுக்குத் தாயாரான பெண்மணி மர்ஜோரி ரைஸ். அவர் கணிதப் பேராசிரியர்கள் கண்டுபிடிக்கவே முடியாது என்று நினைத்த ஜாமெட்ரி வடிவங்களை இல்லத்தில் இருந்தபடியே கண்டுபிடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். 1976இல் அவர் இப்படி 58 விசேஷ வடிவங்களை அமைத்துக் காட்டினார்.

1998ஆம் ஆண்டு கல்லூரி மாணவரான ரோலண்ட் க்ளார்க்ஸன் என்பவர் மிகப் பெரும் பிரைம் எண்ணை – பகா எண்ணைக் கண்டு பிடித்தார். (பகா எண் என்பது ஒன்றாலும் அதே எண்ணினாலும் மட்டுமே வகுக்கக் கூடிய ஒரு எண். உதாரணமாக 11 என்ற எண்ணை ஒன்றாலும் அதே பதினொன்றாலும் மட்டுமே வகுக்க முடியும்) இப்போது புதுப் புது பிரைம் நம்பர்களைப் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே கண்டுபிடிக்கின்றனர்!

கயாஸ் (CHAOS) எனப்படும் குழப்பம் அல்லது சீரற்ற தன்மை பற்றிய கயாஸ் தியரி என்று ஒன்று உண்டு. இந்த குழப்பத்திலும் கூட ஒரு ஒழுங்கு இருக்கிறது என்பதை இப்போது கண்டு பிடித்துள்ளனர்.

வானத்தில் உள்ள மேகக் கூட்டங்கள் வெவ்வேறு வடிவத்திலும் அளவுகளிலும் சீரற்ற தன்மையில் இருப்பது போல நம் கண்களுக்குத் தோன்றினாலும் அதை உயர்த்திலிருந்து பார்க்கும் போது அதிலும் ஒரு ஒழுங்கு, லயம் இருப்பதைப் பார்த்து விஞ்ஞானிகள் பிரமிக்கின்றனர்.

இப்படி கணித மர்மங்களை ஏன் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். முதலாவதாக பிரபஞ்சத்தில் உள்ள புதிர்கள் அனைத்திற்கும் விடைகளை கணித எண்களே தருகின்றன! பிரபஞ்சத்தில் உள்ள மர்மங்களைக் கண்டுபிடித்து விட்டால் நாளை என்ன நடக்கும் என்ற கணிப்பைச் சரியாகச் செய்ய முடியும். ஒரு விண்கல் நம் பூமியின் மீது மோத வருகிறது என்றால் அதைத் தடுக்கும் தற்காப்பு நடவடிக்கையிலும் ஈடுபட முடியும்.

அத்தோடு இந்த இயற்கை கணித ரகசியங்களைக் கண்டுபிடித்து விட்டால் மிக உயரிய நாகரிகத்தை அடைந்து வளமுடன் அனைவரும் வாழும் வழியையும் கண்டு பிடிக்கலாம்.

sri_yantra

இந்துமத ரகசியங்கள்

நமது முன்னோர்கள் இந்த அரிய ரகசியங்களைக் கண்டு பிடித்து அவற்றை யந்திரங்களாக மாற்றி வழிபட வழி வகுத்தனர்.ஸ்ரீ சக்ர யந்திரம் என்பது பிரபஞ்ச தத்துவத்தையும் ரகசியத்தையும் சிறு யந்திரத்தில் அடக்கிக் காண்பிக்கப்பட்ட வழியே என்றும் அதிக ஆற்றலைக் கொண்ட இந்த யந்திரத்தை இப்போது ‘டீ- கோட்’ செய்ய விஞ்ஞானிகள் முயல்கின்றனர் என்பதும் சுவையான செய்தி அல்லவா! நான்காம் தலைமுறை கணினி கூட ஸ்ரீயந்திரத்தின் சிக்கலான அமைப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை இதுவரை!

பெயரில் உள்ள எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை முதலில் பிதகோரஸ் கூறினார் என நம்புகின்றனர். ஆனால் வடமொழியில் உள்ள ‘கடபயாதி சங்க்யா’ என்ற முறை எதையும் கணித சூத்திரத்தில் அடக்கி விடும் ஒரு வழி முறையாகத் தொன்று தொட்டு நம் நாட்டில் இருந்து வருகிறது. பெயரில் உள்ள எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை -இந்த கடபயாதி வழிமுறை உள்ளிட்ட விஷயங்களை – பல சம்ஸ்கிருத நூல்கள் விளக்குகின்றன!

எடுத்துக்காட்டாக ஆதி சங்கரரின் பெயரிலேயே அவர் பிறப்பு பற்றிய அனைத்து விவரங்களும் அமைந்துள்ளன. சம்-க-ர என்பதற்கு உரிய எண்களாக 5-1-2 ஆகியவை அமைகின்றன. கடபயாதி முறைப்படி இந்த எண்களைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டு விவரங்களை அறிய வேண்டும். அதன் படி இந்த எண்கள் 2-1-5 என்ற வரிசையில் மாற்றி அமைத்துப் பார்த்தால் 2 என்பது அவர் பிறந்த மாதமான வைகாசி மாதத்தையும் ஒன்று முதல் பக்ஷமான வளர்பிறையையும் ஐந்து என்பது அவர் பிறந்த திதியான பஞ்சமியையும் குறிக்கும். வைகாசி மாதம் சுக்லபட்சம் பஞ்சமியில் சங்கரர் அவதரித்தார் என இதன் மூலம் அறிய முடிகிறது.

மஹாபாரதத்தின் உண்மைப் பெயரான ஜய என்பதை 8-1 என்ற எண்கள் குறிக்கின்றன. இதை கடபயாதி முறைப்படி திருப்பிப் போட்டால் வருவது 18. ஆகவே பதினெட்டுப் பர்வங்களைக் கொண்ட இந்த நூலில் பதினெட்டு என்ற எண் முக்கியத்துவத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இவை எளிய உதாரணங்கள். ஆனால் சிக்கலான பல மர்மங்களை இந்த முறைப்படி சம்ஸ்கிருத நூல்களில் மறைத்து வைத்துள்ளனர். இதை ஆராய்வோர் பிரமித்து மலைக்கின்றனர்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மர்மங்களையும் ஆராய்ந்து பார்த்து விட்டு, “எல்லாமே எண்கள் தான்” என்ற பிரபலமான தத்துவத்தைச் சொன்னார் பேரறிஞர் பிதகோரஸ். ஆனால் இதையே தொலைக்காட்சி, ரயில், கார் போன்ற நவீன வசதிகள் இல்லாத தமிழக குக்கிராமத்தைச் சேர்ந்த சாதாரண பாமரன் ஒருவன் “எல்லாம் ஒரு கணக்குத் தான்” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லும் போது பிரபஞ்சம் பற்றிய பேரறிவை அவனது அனுபவபூர்வமான வார்த்தைகளில் கண்டு பிரமிக்க வேண்டி இருக்கிறது! ஆராய்ந்து பார்த்தால் எல்லாமே எண்கள் தான்!!

taj-mahal-golden-ratio

அறிவியல் அறிஞர் வாழ்வில்.. ..

பிரபல கணித மேதையான நேபியரைப் பற்றி சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு. ஆன்மீகத்திலும் கணிதத்திலும் அளவற்ற ஆர்வம் கொண்டவர் நேபியர். அவர் ஒரு பிரபலமான மாஜிக் நிபுணரும் கூட! ரஸவாதத்திலும் ஆவிகளுடன் தொடர்பு கொள்வதிலும் கூட அவருக்கு ஆர்வம் அதிகம். சின்ன பெட்டி ஒன்றில் ஒரு சிலந்தியையும் கூடவே எடுத்துக் கொண்டு எங்கும் போவது அவரது வழக்கம். அவருடன் இருக்கும் கறுப்புச் சேவல் தான் அவருக்குக் குறி சொல்லும் பரிச்சயமான ஆவி!

இந்தச் சேவலை வைத்துக் கொண்டு தான் தன்னுடைய பணியாளர்களில் யார் தன் வீட்டிலிருந்து திருடிக் கொண்டு போகிறார் என்பதை திருட்டு நடக்கும் போது அவர் கண்டுபிடிப்பார். தன்னுடைய பணியாளர்களை ஒவ்வொருவராக வரச் சொல்லி ஒரு அறையில் பூட்டுவது அவர் வழக்கம். தன்னுடைய சேவலைத் தடவுமாறு அவர்களிடம் கூறுவார். பின்னர் சேவல் யார் திருடன் என்பதை அவரிடம் கூறும். ஆனால் உண்மையில் நடப்பது என்னவெனில் கறுப்பு வண்ணச் சேவலின் மீது கறுப்புப் பொடியை அவர் தடவி விடுவார்..பணியாளர் ஒவ்வொருவராக சேவலைத் தொட்டுத் தடவ வேண்டும். குற்றம் இழைக்காதவர்கள் கள்ளம் கபடமின்றிச் சேவலை நன்கு தடவுவார்கள். உண்மையான குற்றவாளியோ அதைத் தடவுவது போலப் பாசாங்கு செய்வார். நேபியர் ஒவ்வொருவரின் கையையும் சோதிக்கும் போது எவர் கை மிகவும் சுத்தமாக இருக்கிறதோ அவர் தான் குற்றவாளி என்று கண்டுபிடித்து விடுவார்.

‘ மதி ‘ பாதி, ‘மாஜிக்’ பாதி!! எப்படி கணித மேதையின் தந்திரம்!

Contact swami_48@yahoo.com
*****************

மூன்று புகழ்பெற்ற பிரிவுபசார உரைகள்

namaskar

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.- 1028; தேதி 8 மே 2014

உலக இலக்கியங்களில் வேறு எங்கும் இல்லாத அற்புதமான பிரிவுபசார உரைகள் சம்ஸ்கிருத இலக்கியங்களில் உள்ளன. உலகில் ஒரு இனத்தின் பெயரில் இல்லாத பழைய மொழி சம்ஸ்கிருதம்.. ஆகவே, அதிலுள்ள விஷயங்களும் உலகத்திற்கே சொந்தம்.

ராமாயணத்தில் ராமனுக்கு கௌசல்யா அளித்த பிரிவுபசாரச் சொற்பொழிவும், சகுந்தலைக்கு வளர்ப்புத் தந்தையான கண்வ மகரிஷி வழங்கிய பிரிவுபசார புத்திமதியும், வேதக் கல்வியை முடித்து வீடு திரும்பும் மாணவருக்கு மகரிஷிகள் வழங்கிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவும் ஆழமான பொருள் பொதிந்தவை. இந்த முத்தான– சத்தான சொற்பொழிவுகளில் உள்ள விஷயங்கள் எக்காலத்துக்கும் பொருந்தும். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் மற்றவர்கள் நாகரீக முதிர்ச்சியடையும் முன்னரே நாம் எந்த அளவுக்கு அறிவில் முதிர்ச்சி பெற்றிருந்தோம் என்பதையும் இவை காட்டும். ஏனெனில் இந்த மூன்று உரைகளும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை. அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியவை.
முதலில் தைத்திரீய உபநிஷத்தில் வரும் ஆசிரியர் பிரிவுபசார உரை. இது ஒருபட்டமளிப்பு விழா உரை போன்றது:

“உண்மையே பேசு; கடமையைச் செய்.
வேதங்களைப் புறக்கனிக்காமல் தொடந்து படி;
ஆசியருடன் வாழ்ந்த காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
(வீட்டிற்குச் சென்று) –திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வாழ்க.
உண்மயிலிருந்தும் தர்மத்திலிருந்தும் கொஞ்சமும் பிறழாதே
சமூகம் பயன்பெற ஏதேனும் (தொழில்) செய்.
சாதனைகள் புரிக. கற்றதை மறந்துவிடாதே; திரும்பத் திரும்ப நினைவு கூறு.
கடவுளையும் முன்னோர்களையும் நினைவில் வை.

girl is paying respect to her dad.

தந்தை தாய், ஆசிரியர் கடவுள்
தாயை மதித்திடு. கடவுளாக வணங்கு.
தந்தையை மதித்திடு. கடவுளாக வணங்கு.
உனது குருவையும் கடவுளாக வணங்கு.
விருந்தினரை உபசரி. உன்னைப் பரிசோதிக்க கடவுளே வந்திருப்பதாக எண்ணு.
நல்லது, கெட்டது எது என்று பகுத்தறி. கெட்டதை உதறு.
எப்போதும் நல்லதே செய்.

உன் ஆசிரியர் இடத்தில் எது எது நல்லதோ அதைப் பின்பற்று; மற்றதை மற.
இதுநாள் வரை நீ வாழ்ந்த உன் குருவை விடப் பெரிய ஆட்களைச் சந்திக்கப் போகிறாய்.
அவர்களுக்கு உரிய மரியாதை செய். (Taittiriya Upanishad 1-11)

இந்த அற்புதமான உரைக்குப் பின் குருவுக்கு சிஷ்யன் குருதட்சிணை வழங்குவான். ஏகலைவன், தனது கட்டை விரலையே காணிக்கையாகச் செலுத்தினான். அர்ஜுனனோவெனில் குருவின் எதிரியான பஞ்சாப் அரசனையே தேர்ச் சக்கரத்தில் கட்டி இழுத்து வந்து குருவின் காலடியில் சமர்ப்பித்தான். குருவுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காத மாணவர்கள்!

3000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த உரை இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

Shakuntala-Raja-Ravi-Varma

கண்வ மகரிஷி பேருரை

உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன்–அவனுடைய ஏழு நூல்களையும் பயிலாதவர்கள் பாரத கலாசாரம் பற்றிப் பேசும் தகுதியை இழந்துவிடுவர். எப்படி ஒருவர் சங்க இலக்கியம் படிக்காமல் இந்தியப் பண்பாடு பற்றிப் பேசமுடியாதோ அப்படி காளிதாசன். அவன் எழுதிய நாடகங்களில் உலகமே போற்றி வியந்த நாடக நூல் சாகுந்தலம். அதில் சகுந்தலை என்னும் அழகி உலகம் அறியாத அப்பாவிப் பெண். காட்டிலுள்ள முல்லைக் கொடியும் மரம் செடி கொடிகளும் ஆஸ்ரமத்தில் வளரும் கிளிகளும் மான்களும் அவளுடைய சகோதர சகோதரிகள். பறவைகள் சாப்பிடாவிட்டால் சாப்பிடமாட்டாத பருவ மங்கை. அவரைப் பறவைகள் (சகுன) வளர்த்ததால் அவளுக்கு சகுந்தலை என்று பெயர். இதோ அவள் கணவன் வீட்டுக்குப் (அரசனின் அரண்மனை) போவதற்கு முன், வளர்ப்புத் தந்தை கண்வர் சொன்னது:

“என் அன்பு மகளே. உன் கணவன் வீட்டுக்குச் செல்லப் போகிறாய். அங்கே:-
உன்னை விட வயதில் மூத்த பெரியோருடன் கவனமாகப் பழகி, அவர்களுக்குச் சேவை செய். அரசனின் சக மனைவிகள் இடத்தில் நட்போடு வாழ். கணவன் உனக்கு ஏதேனும் கஷ்டம் கொடுத்தாலும் கோபத்தில் எதையும் சொல்லிவிடாதே. நீ யார் யாருக்குச் சேவை செய்கிறாயோ அவர்களுக்கு எல்லா மரியாதைகளும் கொடு. செல்வத்திலும் சுக போகங்களிலும் வாழப் போகும் நீ அகந்தையும் தலைக்கனமும் ஏறாமல் பார்த்துக்கொள். அப்படி வாழ்ந்தால்தான் பெண்கள் இல்லத்தரசி என்ற பெயர் எடுப்பர். இதற்கு மாறாக நடப்பவர்கள் குலத்தைக் கெடுக்கவந்த கோடாரி என்று பெயர் எடுப்பர்.” (சாகுந்தலம், காட்சி 4)

இதையெல்லாம் சொல்லி முடித்த பின், வயதில் மூத்த ஞானத்தில் முதிர்ந்த மகரிஷி கண்வர், தன் மனைவி இருக்கும் திசையைப் பார்த்து, “அன்பே நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்கிறார். அவள் உடனே, “ஒரு மணப் பெண்ணுக்கு இது அருமையான புத்திமதி. அன்பு மகளே, எப்போதும் இதை நினைவில் வைத்துக்கொள்” என்கிறார்.

காளிதாசன் உலக மகா கவிஞன் மட்டுமல்ல. பெரிய சைகாலஜிஸ்ட்= உளவியல் நிபுணன். ஒரு பெண்ணின் வாயால் இது எல்லாம் சரி என்று சொன்னால்தான் மற்றொரு பெண் நம்புவாள். இல்லை என்றால் இந்த ஆண்களுக்கு என்ன தெரியப் போகிறது என்று நினைத்து விடுவார்கள். அது மட்டுமல்ல. பெண்கள் என்றாலேயே அம்மாவின் கருத்தே முதலில் நிற்கும். அவளுக்கு அதிகாரம் அதிகம். அந்த முறையிலும் மனைவி கருத்தைக் கேட்கிறார் மகரிஷி கண்வர். இதற்குப் பின், பல சுவையான கட்டங்கள் வருகின்றன. கட்டுரைக்குத் தொடர்பில்லாத விஷயம் என்பதால் அடுத்த பேருரையைப் பார்ப்போம்.

ram sita

ராமனுக்கு கௌசல்யா வழங்கும் பிரிவுபசாரம்

“ராமா, காட்டுக்குப் போகாதே என்று சொன்னாலும் நீ கேட்கப் போவதில்லை. போ. ஆனால் சீக்கிரம் திரும்பி வா. எந்த தருமத்தை இத்தனை காலம் காத்தாயோ அதுவே உன்னை ரட்சிக்கும். நாள் தவறாமல் கோவிலுக்குப் போய் கும்பிட்டாயே அந்த தெய்வங்கள் உன்னைப் பாதுகாக்கும். நல்லோர் சென்ற பாதையிலேயே செல்வாயாக விஸ்வாமித்ர மஹரிஷி கொடுத்த ஆயுதங்கள் உன்னைப் பாதுகாக்கும். நீ அப்பாவுக்குக் காட்டிய பணிவும், கீழ்ப்படிதலும் அம்மாவுக்குக் கொடுத்த மரியாதையும் உன்னை நீடுழி வாழ வைக்கும். சந்தோஷமாக இரு. கடவுளை தியானித்து மகிழ்ச்சியாக இரு. காட்டில் விஷ ஜந்துக்களும் கொடிய மிருகங்களும் உலாவும். அவைகளிடமிருந்து ஒரு தீங்கும் வராமல் இருக்க என் ஆசீர்வாதங்கள். ராக்ஷசர்களும் பிசாசுகளும் உலவும் இடம் இருண்ட கானகம். ஜாக்கிரதையாக இரு.
(அயோத்யா காண்டம், அத்தியாயம் 25,வால்மீகி ராமாயணம்)

இதன் பிறகு கௌசல்யா உலகிலுள்ள எல்லா இந்து தெய்வங்களின் பெயரையும் வரிசையாக சொல்லி வாழ்த்துகிறாள். பருவங்கள், நாட்கள், மாதங்கள், பறவைகள், மிருகங்கள், தாவரங்கள் என்று எல்லா பெயர்களையும் சொல்லி வேண்டுகிறாள்.

காளிதாசனின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு. இதற்குச் சங்க இலக்கியத்தில் காணப்படும் 200க்கும் அதிகமான அவனது உவமைகளே சான்று என்று ஏற்கனவே பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். இத்துடன் கௌசல்யாவின் பிரிவுபசாரத்தை ஒப்பிடுகையில் வால்மீகி ராமாயணம், காளிதாசனுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதப் பட்டிருக்கவேண்டும். அவ்வளவு பழைய ‘ஸ்டைலில்’ எழுதி இருக்கிறார் வால்மீகி.

abivadayae

இந்த மூன்று பேருரைகளும், இந்தியர்களை என்றும் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யும். ஏனெனில் மூன்றும் சத்தியத்தை அடிப்படையாக உடையவை!

contact swami_48@yahoo.com

இயற்கையில் கணித இரகசியம்! –2

Post No 1026; Dated 7th May 2014.

அறிவியல் துளிகள் 164

இயற்கையில் கணித இரகசியம்! –2
(பிபனோசி தொடரும் தங்க விகிதமும்) Part 2
by ச.நாகராஜன்

EAR cochlea

snail fibonacci

மனித காதின் அமைப்பும் பிபனோசி தொடர் எண்களின் படியே
உள்ளது! உடல் அமைப்பிலும் பிபனோசி தொடரைக் காணலாம்!

தங்க விகிதம் என்று கூறப்படும் 1.6 என்ற எண்ணின் அடிப்படையிலேயே எகிப்திய பிரமிட் அமைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சுவையான விஷயம். உலகில் மிகவும் அழகிய கட்டிடங்கள் என்று கூறப்படும் கட்டிடங்களைக் கட்ட பெரிய வடிவமைப்பாளர்கள் தங்க விகிதத்தையே தேர்ந்தெடுத்துக் கட்டிடங்களை அமைக்கின்றனர்.

நத்தையின் சுருள் (spiral) வடிவம் பிபனோசி தொடர் எண்களை ஒட்டியே அமைந்துள்ளது. இன்னும் இயற்கையில் அமைந்துள்ள மிருகங்களில் வரிக்குதிரையின் வரிகள், சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகள், புலியின் உடலில் உள்ள கோடுகள் என அனைத்தையும் ஆராய்ந்த வல்லுநர்கள் இவை அனைத்தும் ஒரு நியதிக்குட்பட்டு இருப்பதைப் பார்த்து வியக்கின்றனர்.

இயன் ஸ்டீவர்ட் (Ian Stewart) என்னும் ஒரு கணித ஆர்வலர் இயற்கையில் உள்ள கணித இரகசியங்களைப் பற்றிப் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். பிரபல விஞ்ஞான சஞ்சிகையான ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிக்கையில் பொழுதுபோக்கு கணிதம் என்ற தொடரை எழுதியவர் அவர். இயற்கை அமைப்பில் உள்ள கணித ரகசியங்கள் பற்றி அவர் விளக்கும் அனைத்து விவரங்களும் பிரமிப்பை ஊட்டுபவை.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் நட்சத்திரங்களும் இதர விண்கற்கள் உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளும் ஒரு கணித நியதியின் படியே சுழல்கின்றன; நகர்கின்றன! சூரியனைச் சுற்ற பூமி எடுத்துக் கொள்ளும் காலமான 365 நாட்கள் என்பதில் ஆரம்பித்து ஒவ்வொன்றையும் கவனிக்க ஆரம்பித்தால் எல்லாமே கணித நியதியில் தான் இயங்குகின்றன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

வியாழ (Jupiter) கிரகத்தை எடுத்துக் கொள்வோம். அதனுடைய மூன்று உபகிரகங்களின் பெயர்கள் அயோ, யூரோப்பா மற்றும் கனிமெட். இவைகள் வியாழ கிரகத்தை முறையே 1.77, 3.55 மற்றும் 7.16 என்ற நாட்கணக்கில் சுற்றுகின்றன. இந்த எண்களைப் பார்த்தால் ஒன்றின் இரு மடங்கே அடுத்ததாக அமைவது தெரிய வரும். இது தற்செயல் ஒற்றுமை அல்ல; இயற்கையின் கணித நியதியாக அமைந்த ஒரு உண்மை.

jupiter with its satellites

ஒரு எண்ணை அதே எண்ணால் பெருக்கி வருவது அதன் வர்க்கம் எனப்படும். இரண்டை இரண்டால் பெருக்கினால் வருகின்ற நான்கு இரண்டின் வர்க்கம். ஒரு எண்ணை அதே எண்ணால் இரு முறை பெருக்கி வரும் எண் அதன் க்யூப் அல்லது கன சதுரம் எனப்படும். இரண்டை இரு முறை இரண்டால் பெருக்கி வரும் எண்ணான எட்டு அதன் க்யூப் ஆகும். கெப்ளர் கிரகங்களைப் பற்றி ஆராயும் போது சூரியனிலிருந்து எந்த ஒரு கிரகத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த கிரகம் உள்ள தூரத்தின் க்யூபை அந்த கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலத்தின் வர்க்க எண்ணால் வகுத்தால் எப்போதும் ஒரே எண் (Kepler’s Laws) வருகிறது என்பதைக் கண்டு அதிசயித்தார். அவர் ஆராய்ந்த ஆறு கிரகங்களில் எல்லா கிரகங்களுக்கும் இப்படி ஒரு அதிசயமான, இரகசியமான கணித ஒற்றுமை ஏன் இயற்கையில் அமைக்கப்பட்டிருக்கிறது.! அவரும் அவரது சகாவான டாக்டர் வாட்ஸனும் இதைப் பார்த்து பிரமித்தனர்!

ஓரியன் நட்சத்திர தொகுதியில் உள்ள மூன்று நட்சத்திரங்களை பூமியிலிருந்து பார்த்தால் அது சம தூரத்தில் இருப்பது போலக் காணப்படுகிறது. இது ஒன்றும் தற்செயலாக ஏற்பட்டிருப்பது அல்ல! இயற்கையின் கணித மர்மங்களுள் இதுவும் ஒன்று. மேஷம், ரிஷபம் என ராசிகளை விவரித்து நட்சத்திரங்களை ஆடு, காளை போன்ற உருவங்களைச் சித்தரிக்க வைப்பதும் ஒரு கணித அபூர்வம் தான்!

சூரியனுடைய குறுக்களவை எடுத்துக் கொண்டால் அது பூமியின் குறுக்களவைப் போல சரியாக 108 மடங்காக இருக்கிறது. ஒரு நாளைக்கு நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை 21600. இதுவும் 108இன் மடங்காகவே இருக்கிறது! இதே போல நூற்றுக்கணக்கான பல விஷயங்களைத் தொகுத்துப் பார்த்தவர்கள் 108இன் மகிமையை விளக்குகின்றனர்.

விளையாட்டில் வார்த்தையை மாற்றும் விளையாட்டை எடுத்துக் கொள்வோம். ஆங்கிலத்தில் முதலில் ஒரு வார்த்தையைக் கொடுத்து அதில் உள்ள ஒரு எழுத்தை மட்டும் மாற்றியவாறே கொடுக்கப்பட்ட இன்னொரு வார்த்தையை மிகவும் குறைந்த மாறுதலில் யார் அடைகிறார்கள் என்று பார்ப்பது வழக்கம்.இது ஒரு பிரபலமான வார்த்தை விளையாட்டு.

இயன் ஸ்டீவர்ட் உதாரணமாகக் கொடுக்கும் ஒரு விளையாட்டு வார்த்தைப் புதிர் SHIP என்ற வார்த்தையை DOCK என்று மாற்று என்பது தான். இதை அவர் ஷிப்-டாக் தியரம் என்கிறார். (SHIP – DOCK THEROREM) இதில் விசித்திரம் என்னவெனில் வார்த்தைகளை மாற்றிக் கொண்டே போகும் போது, யார் எப்படி மாற்றினாலும் சரி, இடையில் வரும் வார்த்தைகளில் ஒன்று நிச்சயமாக ஆங்கிலத்தில் உயிர் எழுத்து எனப்படும் வௌவல்களில் இரண்டைக் கொண்டிருக்கும். (A,E,I,O,U ஆகிய ஐந்து எழுத்துக்கள் வௌவல்கள் எனப்படும்)
kepler's laws

எடுத்துக்காட்டாக புதிரை விடுவிக்கும் ஒரு வழியைப் பார்ப்போம். இதில் ஒரு எழுத்தை மட்டும் மாற்றிக் கொண்டே போகிறோம். SHIP, SLIP, SLOP, SLOT, SOOT, LOOT, LOOK, LOCK, DOCK என்ற இந்த வரிசைத் தொடரில் இரண்டு வௌவல்கள் வரும் வார்த்தைகள் இருப்பதைக் காணலாம். இப்படி வௌவல்கள் அமைவதே கணித நியதிப் படி தான் என்பதை நிபுணர்கள் விளக்குகின்றனர். இப்படி எதில் எடுத்தாலும் கணிதத்தின் அடிப்படையில் ஒரு நியதி அல்லது ஒழுங்கு இருந்து கொண்டே இருக்கிறது.

கவிதை அமைக்கும் சந்தஸ் சாஸ்திரம் அல்லது யாப்பிலக்கணம் கவிதை வரிகளில் எத்தனை எழுத்துக்கள் இருக்க வேண்டும் (கட்டளைக் கலித் துறையில் அடிக்கு 16 மற்றும் 17 எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்பன போன்ற கவிதை இலக்கணம்) என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. சங்கீதத்திலோ தாளம் முதலான அனைத்துமே கணிதம் தான்!
கணித அதிசயம் தொடரும்

அறிவியல் அறிஞர் வாழ்வில்.. ..

சார்லஸ் டாட்ஸன் (Charles Dodgson) பிறவி மேதையாகத் திகழ்ந்த பிரிட்டிஷ் கணித நிபுணர். 1854ஆம் ஆண்டு பி.ஏ.-இல் முதல் வகுப்பில் ஹானர்ஸ் பெற்று தேறி ஆக்ஸ்போர்டில் கணித லெக்சரராக நியமிக்கப்பட்டார்.1881 முடிய இப்பணியில் இருந்த அவர் ஏராளமான கணித சம்பந்தமான புத்தகங்களை எழுதினார். அவரது புத்தகங்கள் கணித உலகில் அவருக்கு ஒரு தனி இடத்தை ஏற்படுத்தித் தந்தன. ஒரு நாள் விக்டோரியா மஹாராணியிடமிருந்து தனிப்பட்ட முறையில் அவரே எழுதிய கடிதம் ஒன்று அவருக்கு வந்தது, அவருடைய இன்னொரு புத்தகத்தை உடனே அனுப்புமாறு அக்கடிதத்தில் ராணியார் வேண்டிக்கொண்டிருந்தார். அவரது வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு ஒரு புத்தகம் கிடைத்தது. அது ‘சிலபஸ் ஆஃப் ப்ளேன் அல்ஜீப்ரய்கல் ஜாமட்ரி’ என்ற புத்தகம். அதைப் பார்த்து ராணியார் திகைத்தார். அவருக்கும் அல்ஜீப்ராவுக்கும் என்ன சம்பந்தம்! விசாரித்துப் பார்த்தவுடன் தான் அவர் உண்மையை உணர்ந்து கொண்டார்!

NPG P7(26),Lewis Carroll (Charles Lutwidge Dodgson),by Lewis Carroll (Charles Lutwidge Dodgson)

‘ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட்’ (Alice in Wonderland) என்பதை லீவிஸ் கரோல் (Lewis Carroll) என்ற புனைப் பெயரில் எழுதியவர் சார்லஸ் டாட்ஸன் என்றும் அவர் ஒரு பெரிய கணித மேதை என்றும் அறிந்த போது அவர் பிரமித்தார். ஆலிஸ் இன் ஒண்டர்லேண்டைப் படித்து பிரமித்த ராணியார் அதே போல இன்னொரு புத்தகத்தைக் கேட்டிருந்தார். அவருக்கு வந்ததோ கணித மேதையின் இரண்டு பிரபலமான கணித புத்தகங்களுள் இரண்டாவது புத்தகம்!

அற்புதமான ஆலிஸ் இன் ஒண்டர்லேண்டை எழுதியவர் உண்மையில் ஒரு கணித மேதை என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்!

contact swami_48@yahoo.com
*********************

இயற்கையில் கணித இரகசியம்! – 1

By S Nagarajan
Post No.1024 ; dated 6th May 2014

This series is written by my brother S Nagarajan for the Bhagya Tamil Magazine

பாக்யா இதழில் வெளிவரும் அறிவியல் துளிகள் தொடரில் 11-4-14,18-4-14 மற்றும் 25-4-14 இதழ்களில் வெளியான 3 அத்தியாயங்கள்

அறிவியல் துளிகள் 163

இயற்கையில் கணித இரகசியம் ! – 1

(பிபனோசி (Fibonacci) தொடரும் தங்க விகிதமும்)
ச.நாகராஜன்

female-face-for-golden-ratio

“நல்லது எப்போதும் அழகாகத் தான் இருக்கும். அழகானதோ ஒரு போதும் விகிதத்தில் குறைவு படாது”
ப்ளேடோ

பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே ஒரு கணித நியதிக்கு உட்பட்டிருக்கிறது. இதை மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கின்றனர்; வியக்கின்றனர். மெய்ஞானிகள் பிரபஞ்ச லயத்தை கடவுளின் அருள் என்று போற்றும் போது விஞ்ஞானிகளோ அதை இயற்கையின் அதிசயம் என்று வியக்கின்றனர்.

கணிதத்தில் அமைந்துள்ள ஒரு அதிசயத்தை இத்தாலியைச் சேர்ந்த பிபனோசி (Fibonacci) என்ற கணித நிபுணர் கண்டுபிடித்தார். ரோமானிய எண்களை விட ஹிந்து-அராபிய எண்கள் மிக எளிமையாகவும் அபூர்வமாகவும், ஆற்றல் வாய்ந்ததாகவும், பல அதிசயங்களைக் கொண்டுள்ளதாகவும் இருப்பதை அவர் ஆராய்ந்து கண்டார். அவரது தந்தை அடிக்கடி பயணப்பட்டுக் கொண்டே இருந்ததால் அவருக்கு உதவும் வகையில் பிபனோசியும் வெளி நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தார். உலகின் பிரபலமான கணித மேதைகளைச் சந்திக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. கணிதத்தில் பல விந்தைகளைச் சுட்டிக் காட்ட ஆரம்பித்தார். அவற்றை மேலும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் அவர் சுட்டிக் காட்டிய விந்தைகளின் பிரதிபலிப்பு அப்படியே இயற்கைப் படைப்பில் இருப்பதைக் கண்டு அதிசயித்தனர்.
Fibonacci
Learnado Fobonacci

ஒரு எண்ணின் முந்தைய இரண்டு எண்களைக் கூட்டி வரும் எண்களால் அமைந்த ஒரு தொடர் பிபனோசி தொடர் என்று அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

0,1,1,2,3,5,8,13,21,34,55 என இப்படி வரு எண் தொடர் பிபனோசி தொடர் ஆகும்.

ஒன்றையும் இரண்டையும் கூட்டினால் வருவது ஐந்து. மூன்றையும் ஐந்தையும் கூட்டினால் வருவது எட்டு. இப்படியே இந்தத் தொடரை அமைத்துக் கொண்டே போகலாம்.

இதில் இன்னொரு அதிசயம் – எட்டை ஐந்தால் வகுத்தால் வருவது 1.6. இது தங்க விகித எண் என்று அழைக்கப்படுகிறது.

இயற்கைப் படைப்பில் உள்ள மலர்களை எடுத்துக் கொள்வோம்.
சூரிய காந்தி மலரில் உள்ள இதழ்கள் இடது பக்க சுழற்சி உடையதாகவும் வலது பக்க சுழற்சி உடையதாகவும் அமைந்தி ருப்பதைப் பார்க்கலாம். (இது வரை இப்படி ஒரு விந்தை மலர்களில் இருப்பதைப் பார்க்காதவர்கள் இனியேனும் பார்த்து மகிழலாம்).

fibonacci (1)
சூரிய காந்தி மலரில் இடது பக்க சுழற்சி உள்ள இதழ்கள் 34 என்ற எண்ணிக்கையில் இருந்தால் வலது பக்க சுழற்சி உள்ள் இதழ்கள் 55 என்று அமைந்திருக்கிறது. லில்லி மலரின் இதழ்கள் 3, டெய்ஸி மலரின் இதழ்கள் 21 என அமைந்திருப்பதை எண்ணிப் பார்த்து (எண்ணியும் பார்த்து) வியக்கலாம்.

சூரிய காந்தி மலரின் நடுவில் உள்ள விதைகள் நிரப்பப்படுவது கூட ஒரு அற்புதமான கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 137.5 டிகிரியில் இந்த மலரின் அமைப்பு முழுவதும் இருப்பதைப் பார்த்தால் தங்க விகிதமும் தங்க கோணமும் இயற்கை அமைப்பில் இருப்பதை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

மனித உடலில் கூட இந்த அமைப்பு இருப்பது கண்கூடு. கண்ணாடி முன்னால் ஒருவர் நின்றாலேயே போதும், அற்புதமான இந்த அமைப்பை அவர் உணர்ந்து கொள்ள முடியும். ஒன்று, இரண்டு, மூன்று ஐந்து என இப்படி பிபனோசி தொடரில் உள்ள கணித எண்கள் நம் உடலில் விளையாடுகின்றன. ஒரு மூக்கு, இரண்டு கண்கள், மூன்று பகுதிகளாக உள்ள அங்கங்கள், ஐந்து விரல்கள் என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

sunflower fibonacci
டி என் ஏ (DNA) எனப்படும் மரபணுவை ஆராயும் போது திக்கித் திணறிய விஞ்ஞானிகள் பிபனொசி தொடரையும் தங்க விகிதத்தையும் டி.என்.ஏ. அமைப்பில் கண்டு அதிசயித்தனர். டி என் ஏயில் உள்ள டபிள் ஹெலிக்ஸ் அமைப்பில் ஒரு பக்கம் 34 அங்ஸ்ட்ராம் அலகுகள் (angstroms) நீளமும் அடுத்த பக்கம் 21 அங்ஸ்ட்ராம் அலகுகள் (angstroms) அகலமும் இருக்கின்றன. (அங்ஸ்ட்ராம் என்பது நீளத்தை அளக்கும் மிகச் சிறிய ஒரு அலகு.ஒரு அங்ஸ்ட்ராம் என்பது டென் டு தி பவர் ஆஃப் மைனஸ் டென் எனக் கூறப்படும். அதாவது ஒரு மீட்டரை எடுத்துக் கொண்டால் பத்து நூறு கோடியில் ஒரு பங்கு தான் அங்ஸ்ட்ராம்!)

இயற்கை பரிணாம வளர்ச்சியில் இந்த எண்கள் ஒரு முக்கிய பங்கை வகிப்பதை அறிந்த விஞ்ஞானிகள் ஏன் அந்த அமைப்பை இயற்கை தேர்ந்தெடுத்தது என பல நூற்றாண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர். மலர்களில் இந்த அமைப்புக்கான ஒரு காரணம் அதன் வளர்ச்சிக்கான காரணம் தான்! சூரிய ஒளிக்காக ஏங்கும் மலர்கள் அதிகமான விதைகளைப் பெற வேண்டுமானால் இப்படிப்பட்ட கோணத்திலும் விகிதத்திலும் அமைந்தால் தான் அவற்றை அதிகமாகப் பெற முடியும் என்பது தெரிய வருகிறது!

அழகி என்று நாம் கருதும் யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டால் அவர்களின் அங்க அமைப்பு அகலத்திலும் உயரத்திலும் 1.6 என்ற தங்க விகிதத்தையே கொண்டுள்ளது.

கையில் விரல்களின் நீளம், கையின் கணுப் பகுதி வரை உள்ள நீளம், முழங்கை வரை உள்ள நீளம் இவற்றை அளந்து பார்த்தால் அளவுகள் பிபனாசி தொடர் எண்கள் அமைப்பில் இருப்பதைப் பார்த்து மகிழலாம்.
(கணித இரகசியம் தொடரும்)
coneflower

அறிவியல் அறிஞர் வாழ்வில்.. ..

ரொனால்ட் ஏ பிஷர் (Ronal A Fisher) ஒரு பிரபலமான கணித மேதை. புள்ளிவிவர இயலில் பெரும் புகழ் பெற்றவர். (தோற்றம் 17-2-1890 மறைவு: 29-7-1962)
(இவரைப் பற்றிய சுவையான சம்பவம் ஒன்றை ஏற்கனவே அத்தியாயம் 105இல் பார்த்தோம்!)

இவரது தாயார் கேதி ஹீத் ஒரு வழக்கறிஞரின் மகள். தந்தையார் ஜார்ஜ் பிஷர் லண்டனில் கிங்ஸ் வீதியில் இருந்த ஒரு ஏலக் கம்பெனியின் உரிமையாளர். இந்த தம்பதியினருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. நான்கு பையன்கள் மூன்று பெண்கள். 1876இல் ஜெப்ரி (Geoffrey) என்ற பையனும் 1877இல் ஈவிலின் (Evelyn) என்ற பெண்ணும் பிறந்த பின்னர் மூன்றாவதாக பிற்ந்த குழந்தைக்கு ஆலன் என்று பெயரிட்டனர். ஆனால் ஆலன் மிகவும் குறைந்த வயதிலேயே இறந்து விட்டதால் கேதி மிகவும் துயரத்தில் ஆழ்ந்தார்.

ஆலன் என்ற பெயரில் ஆங்கில எழுத்தான ‘Y’
வரவில்லை, அதனால் தான் அவன் இறந்து விட்டான் என்று கேதி எண்ணினார். இந்த விசித்திர நம்பிக்கையில் நன்கு ஊறி இருந்ததால் அடுத்து பிறந்த எல்லா குழந்தைகள் பெயரிலும் ‘Y’ என்ற எழுத்து வரும்படி பார்த்துக் கொண்டார். இதனால் தான் கணித மேதைக்கு ரொனால்ட் அயில்மர் பிஷர் (Ronald Aylmer Fisher) என்று ‘Y’ வருமாறு பெயர் வைக்கப்பட்டது. அவரும் கேம்பிரிட்ஜில் நன்கு படித்து பிரபலமான கணித மேதையானார்.

விஞ்ஞானிகள் குடும்பத்திலும் விசித்திரமான நம்பிக்கைகள் ஏராளம் உண்டு!

To be continued……………….

Contact swami_48@yahoo.com
^^^^^^^^^^^

நாடி ஜோதிட ரகசியங்கள்: ‘நாஸா’ விஞ்ஞானிகள் கவனிக்க!

nadi 1

By London Swaminathan
Post No. 1021: Date 5th May 2014.

அமெரிக்க விண்வெளி (நாஸா) விஞ்ஞானிகளுக்கும் தெரியாத விஷயங்கள் நமக்குத் தெரியும்!!

இந்திய இலக்கியங்களில் எவ்வளவோ விஞ்ஞான ரகசியங்கள் உள்ளன. ஒருவர் கண்டுபிடித்த பின்னர் இது எங்கள் சமய நூல்களில் அந்தக் காலத்திலேயே எழுதிவிட்டனரே என்றால் நம்மைப் பார்த்து நகைப்போர் தொகையே அதிகம் இருக்கும். இதுவரை நாம் மட்டுமே அறிந்த பல விஷயங்களை நான் பட்டியலிட்டு எழுதிவிட்டேன். இதோ இன்னும் ஒரு ரகசியம். இதை உலக விஞ்ஞானிகள் அறிந்தால் பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் கண்டுபிடிக்க முடியும்.

nadi2

நாடி ஜோதிடம் உண்மையா?

நாடி ஜோதிடம் என்னும் துறையில் விஷயம் தெரிந்தவர்களைவிட போலிகளும் மோசடிக்காரர்களுமே அதிகம். ஆயினும் இத்துறையில் சில அபூர்வமான விஞ்ஞான விஷயங்கள் உள்ளன. ஒருவருடைய கைகளைப் பார்த்தே அவர்கள் பிறந்த நேரத்தில் வானத்தில் கிரகங்கள் எந்தெந்த இடத்தில் இருந்தன என்பதை துல்லியமாகச் சொல்லி விடுகின்றனர். பின்னர் அவர்களுடைய எதிர்கால வாழ்வு பற்றி ஆரூடங்களும் சொல்லுவர்.

ஒருவர் பிறந்தபோது வானில் எந்த கிரகம் எந்த இடத்தில் (ராசியில்) இருந்தது என்பதைக் கூறுவது வான சாஸ்திரம். அதற்குப் பின் எதிர்காலத்தில் அவர்களுக்கு என்ன என்ன நேரிடும் என்று சொல்லுவது ஜோதிடம். இரண்டும் வெவ்வேறு துறைகள். என்னுடைய சகோதரர் இருவர் 30 ஆண்டுகளுக்கு முன் மதுரை அருகில் கவலூர் என்னும் கிராமத்தில் இருந்த நாடி சோதிடர்களைப் பார்க்கப் போயினர். கைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே கிரக நிலைகளை எழுதிக் கொடுத்துவிட்டனர். பின்னர் சோதிடமும் கூறினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது குடும்ப ஜோதிடர் ஏற்கனவே எழுதிக் கொடுத்த ஜாதகத்தில் இருந்த கிரக நிலைகளையே அந்த நாடி ஜோதிடர்களும் எழுதி இருந்தனர். இது பெரிய அதிசயம். வரப்போகும் மனைவியின் பெயரையும் கூறியிருந்தனர். அதுவரை எல்லாம் உண்மையாக இருந்தது. ஆனால் எதிர்காலம் பற்றிச் சொன்னது நடக்கவில்லை.

கைகளை மட்டும் பார்த்து ஒருவருடைய பிறந்த நாள் கிரக நிலைகளை சொல்லமுடிவது பல வகைகளில் விஞ்ஞானிகளுக்கு உதவும். இந்தக் கலை அழிவதற்கு முன் இதை விஞ்ஞானிகள் ஆராய்வது நம் கடமை. இந்த ரகசியத்தை அறிந்தால் பிரபஞசத்தின் புரியாத புதிர்களை விடுவிக்கமுடியும். இது இந்துக்கள் உலகிற்கு வழங்கும் ஒரு கொடையாக அமையும்!

nadi book

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்று ஒரு பழமொழி உண்டு. அண்டம், பிண்டம் ஆகிய இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள் அதாவது கோள (முட்டை) வடிவில் இருக்கும் பிரபஞ்சம் அல்லது பூமியைக் குறிக்கும். அதில் இருக்கும் மலைகள், ஆறுகள், தாவரங்கள் ஆகியன உடலில் ரத்த நாளங்கள், முடி முதலியன வடிவில் இருப்பதாகச் சொல்லுவர். இதற்கு மேலும் அழ்ந்த பொருள்களும் உண்டு. நம்முடைய மனமும் பிரபஞ்ச மனமும் ஒன்றாகும் போது காலத்தைக் கடந்து நின்று கடந்த கால, நிகழ் கால, வருங்கால நிகழ்ச்சிகாஇக் காணமுடியும்! மற்றொரு பொருள்: பிரபஞ்சத்தில் எத்தனை அண்டசரசரங்கள் இருக்கின்றனவோ அவைகள் நம்மில் உள்ளன. இமயமலையை பொருட்காட்சி சாலையில் மண்ணில் செய்துவைப்பது போல நம்மை இறைவன் ஒரு சின்ன பொம்மை (மாடல்) யாகப் படித்திருக்கிறான். (‘’பாபாவின் வாழ்வும் ரமணரின் வாக்கும்’’– என்ற கட்டுரைஅயில் முன்னர் இது விளக்கப்பட்டுள்ளது)

ரேகையைப் பார்த்து உருவத்தை வரையும் அபூர்வ கலை!

இன்னொரு விஷயம் ஒருவருடைய கை ரேகைகளைப் பார்த்து உருவத்தையே வரையும் அல்லது சொல்லும் கலை. இந்த அபூர்வ கலை இப்பொழுது அழிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. குற்றவியல் விஞ்ஞானத்திலும் தடய அறிவியலிலும் கை விரல் ரேகைப்பதிவுகள் பயன் படுத்தப்படுகின்றன. இதுவும் முதலில் இந்தியாவில்தான் தோன்றியது.

nadi 3

பிருஹத் கதா என்னும் நூல் தமிழில் பெருங்கதை என்று கவிதை வடிவில் உள்ளது. அருமையான ஒரு இலக்கியம். இதில் ஒரு அபூர்வ காட்சி வருகிறது. மதன மஞ்சிகை என்ற பேரழகி மாடியில் (உப்பரிகையில்) தோழியருடன் பந்து விளையாடிக் கொண்டு இருக்கிறாள். அப்பொழுது அந்த வழியாக நரவாணன் என்பவன் யானை மீது பவனி வந்தான். அந்த நேரத்தில் பந்து தவறிப் போய் அவன் மீது விழுந்தது. பந்தை எடுக்க ஓடோடி வந்த ‘அவளும் நோக்கினாள், அண்ணலும் நோக்கினான்’. காதல் மலர்ந்தது. பந்தை எடுக்காமல் திரும்பி விடுகிறாள். ஆனால் யார் அந்த நங்கை? அவள் பெயர் என்ன? என்பதெல்லாம் நரவாணனுக்குத் தெரியாது.

நண்பன் கோமுகனிடம் பந்தைக் கொடுத்து இதை எறிந்தது யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லுகிறான். கோமுகனோ இருந்த இடத்திலேயே அமர்ந்து காரியத்தை முடித்துவிடுகிறான். சந்தனக் கையில் தோய்த்த கையுடன் மதனமஞ்சிகா பந்து விளையாடியதால் அவளுடைய விரல் ரேகைகள் அதில் பதிந்திருந்தன. அந்த சாத்திரத்தில் கோமுகன் வல்லவன். ஆதலால் ரேகையைக் கொண்டே அந்த அழகியின் அங்க அடையாளங் களை வருணிக்கிறான். அந்த அடையாளங்களை உடையவள் மதனா தான் என்பதையும் உறுதிபடக் கூறுகிறான். இதோ அந்த பெருங்கதைப் பாடல்:-

palm 1

“விரலும் விரலிற்கு ஏற்ற அங்கையும்
அங்கைக்கு ஏற்ற பைந்தொடி முன்கையும்
முன்கைக்கு ஏற்ற நன்கு அமைதோளும்
தோளிற்கு ஏற்ற வாள் ஒளி முகமும்
மாப்படு வடு உறழ் மலர் நெடுங் கண்ணும்
துப்பு அன வாயும் முத்துஒளி முறுவலும்
ஒழுகுகொடி மூக்கும் எழுதுநுண் புருவமும்
சேடு அமைசெவியும் சில் இருங்கூந்தலும்
ஒல்குமயிர் ஒழுக்கும் அல்குற்பரப்பும்
மருங்கின் நீளமும் நிறம்கிளர் சேவடித்
தன்மையும் எல்லாம் முன்முறை நூலின்
அளந்தனன் போல வளம்பட எழுதி
பாவை இலக்கணம் பற்றி மற்று அதன்
நிறமும் நீளமும் பிறவும் தெரியாச்
செறிதாள் அண்ணலைச் செவ்வியின் வணங்கி
இதன் வடிவு ஒப்போள் இந்நகர் வரைப்பின்
மதனமஞ்சிகை ஆகும்!”

பெருங்கதை 5-8-100/116

nadi 4

இந்துமதம் வெளியிடும் விஞ்ஞான ரகசியங்கள் பற்றி முன்னர் வெளியான கட்டுரைகள்:
1.வடக்கே தலை வைக்காதே
2. Post No. 934.மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம்-பகுதி1 (Date 26-3-14)
3. Post No.935. மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம்-பகுதி2 (Date 26-3-14)
4. Post No. 951.அபாயநோயிலிருந்து பிரபஞ்ச ஆற்றலால் மீண்டவர், நாகா, (Date 3-4-14)
5. Post No.1003. வெள்ளி கிரகம்—மழை தொடர்பு பற்றி உபநிஷத்! (Date 26th April), 2014.
6. அருகம்புல் ரகசியங்கள்
7.நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு
8.நிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள்- Part 2
9. ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?
10. தக்காளி ரசத்தின் மகிமை
11. ஒரு வேளை உண்பான் யோகி
12.தீபாவளி ரகசியங்கள்
13.பஜனை செய்வது உடம்புக்கு நல்லது (10 ஜூலை 2013)

nadi book 2

Please read my Earlier Posts:
Is Brahmastra a Nuclear Weapon?
Time Travel by Two Tamil Saints
Hindu’s Future Predictions (Part 1 and art2)
Science Behind Deepavai (Part 1 and Part 2)
Great Engineers of Ancient India
Post No. 933. Medical Science solves Ten Mysteries in Maha Bharata 26-3-14
Head towards North is wrong
‘OM’ BOOSTS BRAIN POWER
Acoustic Marvel of Madurai Temple
Orbiting the Earth: Skanda beat Yuri Gagarin
Hindu God with “an IPod”
Power of Holy Durva Grass
Science Behind Deepavali-1
Science Behind Deepavali-2

Contact swami_48@yahoo.com

உலகம் வியக்கும் பெண்கள் பாட திட்டம் !!

chatus shasti kala

Written by London Swaminathan
Post No.1019 ; Date 4th May 2014.

“ A woman should study even before reaching adolescence, and then, once married should continue her studies with her husband.” ( Sutra 2, Chapter 3, Kamasutra of Vatsyayana)

சிலப்பதிகாரத்திலும், கம்பன் பாடல்களிலும், லலிதா சஹஸ்ரநாமத்திலும், வாத்ஸ்யாயனரின் காமசூத்திரத்திலும் அறுபத்து நான்கு கலைகள் பற்றிப் படிக்கும்போது உடம்பில் புல்லரிக்கிறது! ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?’ என்று உலகமே எண்ணியிருந்த காலத்தில் 64 கலைகளைப் பட்டியலிட்டு ஒவ்வொரு பெண்ணும் அதைப் பயிலவேண்டும் என்று வடமொழியில் எழுதிய பெருமை வாத்ஸ்யாயனரையே சாரும்! பிற்காலத்தில் இது அரசர்கள், இளவரசர்கள், இளவரசிகள் ஆகியோர் அனைவருக்கும் பாட திட்டமானதை இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். அன்று வாத்ஸ்யாயனர் எழுதியதை இந்தியர்கள் பின்பற்றி இருந்தால் இன்று உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக இந்தியா ஓங்கி வளர்ந்திருக்கும்.

காம சூத்திர நூலில் வாத்ஸ்யாயனர் எழுதியது, வெறும் காகித திட்டமா? அல்லது செயல்முறையில் பின்பற்றப்பட்டதா என்று ஒரு கேள்வி எழக்கூடும். ரிக் வேதத்தில் உள்ள இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களையும் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் சங்க இலக்கியத்தில் வந்த இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களையும் பார்க்கையில் இது காகித திட்டம் அல்ல. உண்மையில் அறிவாளிகளை உருவாக்கிய திட்டம் என்றே உறுதியாகக் கூறலாம்.

64ArtsinIndianCulture_thumb[13]

சங்க கால இலக்கியத்தை ஒட்டி எழுந்த பிராக்ருத மொழி நூலான காதா சப்த சதியில் 15–க்கும் மேலான பெண்கள் காதல் கவிதைகளைப் புனைந்திருப்பதும் குறிப்பிடத் தக்கது. காரைக்கால் அம்மையார் பாடிய பாடலில் பிறந்து கல்வி பயின்ற நாள் முதலாக என்று பாடுவதில் இருந்து அவர் முறையாகக் கல்வி பயின்றது தெரியும்.

ரிக்வேத கவிதாராணி லோபாமுத்ராவும், தமிழ் மூதாட்டி அவ்வையாரும் ஒரே இடத்தில் உட்காராமல் விறுவிறுப்பான பொது வாழ்வில் ஈடுபட்டதை இலக்கியத்தில் படிக்கிறோம். திரவுபதியும், சீதையும் பேசிய வசனங்களைப் பார்க்கையில் பெண் என்பவள் வெறும் பேதை அல்ல என்பதையும் உணர்கிறோம்.

“ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்………………
லலிதா சஹஸ்நாமத்தில் 236–ஆவதாக வரும் நாமம் “சதுஷ் ஷஷ்டி கலாமயீ” என்ற நாமம் ஆகும். இதன் பொருள் அறுபத்து நான்கு கலைகளின் ரூபமாயிருப்பவள்.

கம்பன் ஒரு பாடலில் “ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை” – என்று சரஸ்வதியைப் பாடுகிறான். கம்ப ராமாயண பால காண்டத்தில் மட்டுமே ஐந்து இடங்களில் 64 கலைகளைக் குறிப்பிடுகிறான்.

மதுரையை கண்ணகி எரித்தபோது பற்றி எரிந்த மதுரை வீதிகளில் ஒன்றில்,

“எண் நான்கு இரட்டி இருங்கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயங்கெழு வீதி” — (அழற்படு காதை)

என்று கூறுவதில் இருந்து அந்தத் தெருவில் 8X4X2 = 64 கலைகளைப் பயின்ற இசை மாதர் வாழ்ந்ததை அறிகிறோம்.

nataraja and narathaki

நடராஜன் கால் மாறி ஆடின கதை
மதுரையில் சிவபெருமான் ஆடிய 64 திருவிளையாடல்களில் ஒன்று கால் மாறி ஆடின படலம். கரிகால் சோழனின் அவைப் புலவன் மதுரைக்கு வந்து ராஜ சேகர பாண்டியனைச் சந்தித்தபோது கரிகால் சோழன் 64 கலைகளில் வல்லவன் என்றும் ராஜ சேகரனுக்கு நாட்டியம் ஆடத் தெரியாதது ஒரு குறை என்றும் இடித்துரைத்தான். சிவபெருமானுக்குப் போட்டியாக ஆடற்கலையைக் கற்கக் கூடாது என்று எண்ணியிருந்த ராஜசேகரன் அன்று முதல் நாட்டியத்தையும் கற்று 64 கலைகளிலும் வல்லவன் ஆனான் என்று திருவிளையாடல் புராணம் கூறும் (காண்க:– கால் மாறி ஆடினபடலம்). அதுமட்டுமல்ல.

ராஜசேகரன், சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்றபோது சிவன் ஒரே காலை ஊன்றி ஆடினால் கால் வலிக்காதா? என்று சொல்லி கண்ணீர் உகுத்தான்.. என்ன அதிசயம்! சிவன் இரு கால்களையும் மாற்றி மாற்றி ஆடினான். உலகம் முழுதும் ராஜசேகரன் பெருமை பரவட்டும் என்று எண்ணிய சிவன், நிரந்தரமாக இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி காட்சி அளித்தான். இன்று வரை மதுரை நடராஜர் சிலை கால் மாறிய நிலையிலேயே நிற்கிறது. ஆக மதுரைக் கோவிலின் வரலாறே 64 கலைகளில் ஒன்றின் மீது அமைந்துள்ளது.
yaksa-2200 yr

Look at the Jewelry in 2200 year old sculpture!

பெண் அறிஞர்கள்
2800 ஆண்டுகளுக்கு முன் விதேஹ மன்னன் ஜனகன் கூட்டிய ஆன்மீக மாநாட்டில் சாக்ரடீசுக்கும் முந்திய பேரறிஞன் யாக்ஞவல்கியனை கார்க்கி என்ற பெண் கேள்வி கேட்டு மடக்கியதை பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் படிக்கிறோம். அவருடைய இரண்டு மனனைவிகளில் ஒருவரான மைத்ரேயி, “சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்க பணம் உதவாதென்றால் எனக்கு சொத்தும் வேண்டாம், சுகமும் வேண்டாம்”- என்று கூறியதையும் அறிவோம். ஆக, பெண்களின் பேரறிவு என்பது திடீரென வானில் பிரகாசமாகத் தோன்றி மறையும் எரிகல் அல்ல, நிரந்தரமாகப் பட்டொளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் என்பதை 3000 ஆண்டு இந்திய இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன.

Perfume bottles

பில்லியன் டாலர் ‘பெர்Fயூம்’ பிஸினஸ்

வாத்ஸ்யாயனர் எழுதிய 64 கலைகளுக்கு யசோதரா எழுதிய உரையும் லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஸ்கர ராயர் எழுதிய உரையும் 64 கலைகள் பற்றி நிறைய விஷயங்களைத் தருகின்றன. இதில் உள்ள விஷயங்கள் வியத்தகு விஷயங்கள். ஒவ்வொரு பெண்ணும், இளவரசன் இளவரசியும் இசை, நடனம், ஓவியம், வீட்டு அலங்காரம், சிகை அலங்காரம், பூ வேலைப்பாடுகள், கடிதம் எழுதல், மொழிகள், ரகசியக் குறியீடுகள் கற்றல், பறவை வளர்த்தல், அவைகளைப் பேசப்பழக்குதல், வாசனைத் திரவியங்கள் செய்தல், மூலிகை சிகிச்சை தருதல், மசாஜ் செய்தல், சமைத்தல், சூதாடுதல், இந்திரஜால வித்தைகள் செய்தல் இப்படி எத்தனையோ கலைகளைப் பயின்றனர்.

சிலர் நினைக்கலாம் ஆண்களுக்கு எதற்கு இவ்வளவு கலைகள் என்று. பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்த காலத்தில் ஒவ்வொரு கலையும் அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவியது என்பதைப் படித்திருக்கிறோம்.

64 கலைகளில் சில கலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதில் வரும் வருமானத்தைப் பார்ப்போம். ‘கந்தயுக்தி’– என்னும் கலை உடலில் பூசும் வாசனைத் திரவத்தைத் தயாரிப்பது எப்படி என்று சொல்லுகிறது. இன்று ‘பெர்ப்யூம்’ என்ற பெயரில் பெண்கள் பயன்படுத்துவதை இந்தியாதான் முதலில் ஏறுமதி செய்தது. கடவுளுக்கு செய்யப்படும் 16 உபசாரங்களில் (ஸோடசோபசாரம்) வாசனைப் பொருள் சார்த்துவது ஒரு உபசாரம்! இந்துக்களின் தினசரி வாழ்வே 64 கலைகள்தான்!!

1,74,720 சென்ட் வகைகள்!!!!
இந்தியாவில் ஒரு லட்சத்து எழுபத்து நாலாயிரத்து, எழு நூற்று இருபது வாசனைத் திரவியங்கள் இருந்ததாக வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதா கூறுகிறது. இந்த நூலும் நூலின் மீது எழுந்த உரைகளும் இதுபற்றி மிக விரிவாக எழுதி இருக்கின்றன (காண்க:– பிருஹத் சம்ஹிதா , அத்தியாயம் 77 மற்றும் அதன் பாஷ்யம்). இன்று இந்த வணிகம் கோடி கோடியாகப் பணம் குவிக்கும் தொழிலாக விளங்குகிறது. பிரான்ஸின் தலைநகரான பாரீஸ் இதில் முண்ணனியில் நிற்கிறது.

hairstyle2

பூ வியாபாரத்தை எடுத்துக் கொண்டால் தமிழர்கள்தான் இதை ஆதிகாலம் முதல் செய்து வந்ததை சங்க இலக்கியத்தில் இருந்து அறிகிறோம். ஆனால் இன்று உலகில் ஹாலந்து முதலிய நாடுகள்தான் பூ ஏற்றுமதியில் முன்னனியில் நின்று கோடி கோடியாகக் குவிக்கின்றன. முடி அலங்காரம் உலகில் ஒரு பெரிய பிஸினஸ். இதிலும் நாம் முதலிடத்தில் இல்லை. உண்மையில் வாத்ஸ்யாயனர் எழுதிய எல்லாக் கலைகளையும் நாம் முறையாகப் பயின்று, மற்றவர்களையும் பயிற்றுவித்து நிறைய சம்பாதித்து இருக்கலாம். கோட்டை விட்டுவிட்டோம்.

சென்றதை எண்ணி வருந்துவதை விட இன்று சீனா என்ன செய்கிறது என்று பார்த்தால் நம்க்கு உத்வேகம் பிறக்கும். அமெரிக்கா முழுதும் ஒரு டாலர் கடைகளையும், பிரிட்டன் முழுதும் ஒரு பவுண்ட் கடைகளையும் திறந்து வியாபாரத்தில் சக்கைப் போடு போடுகிறது. அந்தக் கடைகளில் எதை எடுத்தாலும் ஒரு டாலர் அல்லது ஒரு பவுண்ட்தான்! ஊசி நூல் முதல் இந்துமத கடவுளர் படங்கள் வரை எல்லாம் சீனாவில் இருந்து வருகிறது!

Bodhisattva_Ajanta
Ajanta Painting

64 கலைகள் நமக்கு உணர்த்தும் மிகப் பெரிய உண்மை என்னவென்றால் மனித இனத்திற்கு நாகரீகத்தைக் கற்பித்ததே இந்தியர்கள்தான். நாகரீகம் என்பது இந்தியாவில் உதித்து உலகம் எங்கும் பரவியது. இதற்கு ஆதாரம் என்ன? உலகில் உணவு, உறைவிடம், உடை ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால்தான் இசையும் நடனமும் இலக்கியங்களும் மலரும். நமது நாட்டில் 3000 ஆண்டுகளுக்கு முன் இவை மலர்ந்ததோடு இன்றுவரை நீடிக்கவும் செய்கின்றன.வேதத்தில் நாட்டியம் பற்றி உள்ளது, சிந்து சமவெளி சிலைகளில் பரத நாட்டியம் இருக்கிறது. இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

மற்ற எகிப்து, கிரேக்கம், மத்திய கிழக்கு நாட்டு நாகரீகங்கள் வாழ்ந்து முடிந்து கல்லறைக்குப் போய்விட்டன. அவர்கள் எல்லோரும் எழுதிப் படிப்பதற்கு முன்னால் நாம் ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தோம் அத்தனையும் சிந்தனைத் தேன். புத்தரும் ,மஹாவீரரும், ஏசுவும், சொராஸ்ட்ரரும் , கன்பூசியஸும் தோன்றும் முன்னர் நாம் 108 உபநிஷதங்களுக்கு மேல் எழுதிக் குவித்தோம். நாம் எழுதாத பொருள் இல்லை என்னும் அளவுக்கு எல்லாவற்றையும் எழுதினோம். அவைகளில் முதலில் நின்றது ஒன்றே நம் நாகரீக முன்னேற்றத்திற்குச் சான்று.

????????????????
Sigiriya paintings from Sri Lanka

Contact swami_48@yahoo.com

காந்திஜிக்கு பிடித்த உபநிஷத் மந்திரம்!

item-gandhi-stamp-001

Written by London Swaminathan
Post No. 1017; Dated 3rd May 2014.

உபநிஷத அற்புதங்கள் –பகுதி 5 எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்
முன்னரே எழுதியது போல இந்தப் பகுதிகள் உபநிஷத தத்துவங்களை விளக்குவது அல்ல. உபநிஷதம் பற்றிய மேம்போக்கான சுவையான செய்திகளைக் கூறுவதே இப்பகுதியின் குறிக்கோள். சென்ற பகுதியில் வெள்ளி- கிரகம் மழை தொடர்பான விஷயங்கள் உபநிஷதங்களிலும் தமிழில் புறநானூற்றிலும் இருப்பதைக் கண்டோம். இதோ மேலும் சில:–

46. மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த உபநிஷத் ஈச உபநிஷத் ஆகும். திடீரென்று ஒரு தீவிபத்து ஏற்பட்டு எல்லா உபநிஷத்துகளும் இந்து மத நூல்களும் அழிந்துவிட்டாலும் ஈச உபநிஷத்தின் முதல் மந்திரம் மட்டும் இந்துக்களின் நினைவில் இருந்தால், அதுவே போதும். இந்துமதம் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்றார் காந்திஜி!!

அந்த மந்திரத்தில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது?
இதோ முதல் மந்திரம்:

“ஈசாவாஸ்யம் இதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
த்யேன த்யக்தேன புஞ்சீதா மா க்ருத: கஸ்யஸ்வித்தனம்”

பொருள்: இந்த பிரபஞ்சத்தில் உள்ள அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தம். அவனே அவைகளை நிர்வகிக்கிறான். ஒவ்வொருவரும் அவருக்கு உரித்தானதை மட்டும் எடுத்துக்கொள வேண்டும். மற்றவர்களுக்குச் சொந்தமானது எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
uk gandhi

47. மகாத்மா கந்தியிடம் ஒரு மேல் நாட்டு பத்திரிக்கை நிருபர் வந்தார். உங்கள் வாழ்க்கையின் (வெற்றியின்) ரகசியம் என்ன? மூன்றே சொற்களில் கூறுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார். காந்திஜி உடனே தயங்காமல் RENOUNCE AND ENJOY என்று சொல்லிவிட்டார். இசா உபநிஷத்தின் முதல் மந்திரத்தில் உள்ள “ தேன த்யக்தேன புஞ்சீதா” என்ற மூன்று சொற்களின் சாரம் இது.

தேன = அவரால் (கடவுளால்)
த்யக்தேன = உனக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை
புஞ்சீதா = ஏற்றுக் கொள்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் உன் தேவைக்கு மேல் எதற்கும் ஆசைப் படாதே. இப்படி எல்லோரும் கருதினால் உலகில் ‘இல்லை’ என்ற தொல்லை ‘இல்லை ஆகிவிடும்’!
(ஆதாரம்: உபநிஷத், ஏகநாத் ஈஸ்வரன் எழுதிய ஆங்கில நூல்)

gandhi-english

48.கண்ணாடி (தர்பண), வைர ஊசி (வஜ்ர சூசிகா), மணி பார்க்கும் எந்திரம் (கடீயந்த்ர = கடிகாரம்) ஆகியனவும் உபநிஷத்துகளில் குறிப்பிடப் படுகின்றன.

49. கொடிகள், வாகனங்கள் தோன்றியது இந்தியாவில்தான் என்று பல கட்டுரைகள் எழுதினேன். ராமாயண, மஹாபாரதங்களில் கொடிகள் பற்றி நிறைய குறிப்புகள் இருந்தாலும் அந்தக் காவியங்கள் எழுத்தில் வந்தது கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுவர். ஆனால் உபநிஷதங்களிலும் விருஷப த்வஜ ( விடைக் கொடி- பிரஸ்னோபநிஷத்), மூஷிக த்வஜ (எலிக் கொடி) ஆகியன வருகின்றன.

50. வீணை என்னும் வாத்தியம் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் வருகிறது (2-4-9; 5-4-10)

51.படகுகள்/கப்பல்கள் பற்றி பிருஹதாரண்யக, முண்டக, மைத்ரீ உபநிஷத்துகளில் படிக்கிறோம் 18 படகுகள் கொண்ட ஒரு அணியை முண்டகோபநிஷத்தில் காணலாம் ( முண். 1-2-7)

52. ஜோதிடம் பற்றிய குறிப்புகள் தைத்ரீய சிஷாவல்லியில் வருகிறது (3).

53.தேவாலயம், சிவாலயம் போன்ற கோவில் குறிப்புகள் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் வருகின்றன (5-7; 3-3-4). கி.மு 800 வாக்கிலேயே கோவில்கள் இருந்தன என்பதை இது உறுதி செய்கிறது,

54.பஞ்சம் ஏற்பட்டது பற்றி சாந்தோக்ய உபநிஷத் ( 1-10-1) கூறுகிறது. சம்ஸ்கிருத ,தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் 12 ஆண்டுக் காலம் நீண்ட வறட்சி பற்றி வருகிறது. அந்தக் கால உண்மை நிலையை எழுதியதால் இந்த இலக்கியங்களை நாம் நம்ப முடிகிறது. திருவிளையாடல் புராணமும் கூட நீண்ட வறட்சியால் புலவர்கள், பிராமணர்கள் ஆகியோர் வேற்று தேசங்களுக்குச் சென்றதாகத் தெரிவிக்கிறது.

sahanavatu

55. உபநிஷத்துகளில் மிகவும் பழமையானதும் பெரியதும் பிருஹத் ஆரண்யக ( பெரிய காட்டு) உபநிஷத் என்று முன்னரே கண்டோம். இதில் உத்தாலகர் என்பவர் தனது மகன் ஸ்வேதகேதுவுக்கு ஒன்பது உபமானக் கதைகள் மூலம் அத்வைதக் கொள்கையைப் போதிக்கிறார். இந்த குட்டிக் கதை சொல்லும் உத்தியை பிற்காலத்தில் புத்தர், ஏசு போன்றோரும் பயன்படுத்தினர். ஏசுநாதர் இதைக் கற்க இந்தியா வந்ததாகவும் ஒரு சாரார் கூறுவர்.

56. உபநிஷத்துகளில் பிராணிகளும் கூட மனிதனுக்கு உபதேசிப்பதைக் காண்கிறோம்: இடி/மின்னல் த.. த… த…. என்று உபதேசித்ததை முன்னர் தனிக்கதையில் கண்டோம். அன்னப் பட்சிகள் பேசிக்கொண்டதை ஜனஸ்ருதி அறிந்துகொண்டார். சத்யகாமனுக்கு அவன் மேய்த்துவந்த மாட்டுக் கூட்டத் தலைமைக் காளையே உபதேசம் செய்தது. தீ, அன்னம், நீர்மூழ்கிப் (மீன்கொத்தி) பறவை ஆகியவற்றிடமிருந்தும் அவன் கற்றுக் கொண்டான். அவனுடைய சீடன் உபகோசல என்பவன், யாகத் தீயில் இருந்து பாடம் கற்றான். இதை வைத்துதான் சம்ஸ்கிருதத்தில் பஞ்ச தந்திரக் கதைகள், ஹிதோபதேசக் கதைகள் உருவாயின என்றும் கருதலாம்.

57.பிருஹத்ரதன் (பெருந்தேரன்), அஜாதசத்ரு, ஜனகன் போன்ற மன்னர்களின் பெயர்கள் உபநிஷத்துகளில் காணப்படுகிறது. இவர்களுடைய காலத்தைக் கண்டுபிடித்து இந்திய வரலாற்றை திருத்தி எழுதுவது நமது கடமை.

58. சாப்பாட்டைக் குறைகூறக்கூடாது என்று தைத்ரீய உபநிஷத் கூறுகிறது (தைத்ரீய பிருகுவல்லி-9)

உபநிஷதத் தொடர் முற்றும்.

ராமாயணம் தோன்றியது எப்படி? அற்புதமான கதை

rama rama
Post No 1015; Date 2nd May 2014.

எழுதியவர் ச.நாகராஜன்
ராமாயண வழிகாட்டி- அத்தியாயம் 26

சிலேடைக் கவிதையில் ராமாயண உதயம்!!

ராமாயணம் தோன்றக் காரணமாக அமைந்ததே ஒரு சிலேடை ஸ்லோகத்தால் தான்!

இனிமையான குரலுடைய இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகளுடைய ஆண்,பெண் ஜோடியை குரூரங்களுக்கு இருப்பிடமான ஒரு வேடன் பார்த்தான்.அதில் ஆண் பறவையைக் கொன்றான்.பெண் பறவை கீழே தள்ளப்பட்டு பூமியில் புரளுகிற ரத்தத்தினால் பூசப்பட்ட சரீரமுடைய தன் ஜோடிப் பறவையைப் பார்த்து பரிதபிக்கத்தக்க புலம்பலைப் புலம்பிற்று. அந்தப் பறவையைப் பார்த்த தர்மாத்மாவான வால்மீகி முனிவருக்குக் கருணை உண்டாயிற்று. அவர் ‘இது அதர்மம்’ என்று ஒரு வசனத்தைக் கூறினார்:

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I
யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

நிஷாத – வேடா! க்ரௌஞ்சமிதுனா – க்ரௌஞ்ச மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் மயங்கி இருந்த ஏகம் – ஒன்றை அவதீ: – கொன்றாய் தத் ஸ்வே – அதனால் நீ ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – இருப்பை மா அகம::-அடைய மாட்டாய்

இதைச் சற்று சிந்தித்த அவருக்கு இதே வசனத்திற்கு வேறு ஒரு பொருள் தோன்றியது!

ramachandra swami

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I
யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

மாநிஷாத – ஸ்ரீனிவாஸ! க்ரௌஞ்சமிதுனாத் – ராக்ஷஸ மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் புத்தி கெட்ட ஏகம் – ஒருவனை அவதீ: – கொன்றீர்; யத் ஸ்வே – அதனால் நீர் ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – கீர்த்தியை மா அகம::-அடைந்தீராக!

ஆக இந்த ஸ்லோகமே இரு அர்த்தம் கொண்ட ச்லேடை ஸ்லோகமாக ஆனது!
சற்று சிந்தித்த அவருக்கு ஒரு அதிசயம் விளங்கியது!

rama flowering sita

பாதபத்தோக்ஷரசமஸ்தந்த்ரிலயசமன்வித: I
ஷோகார்தஸ்ய ப்ரவ்ருத்தோ மே ஸ்லோகோ பவது நான்யதா II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினேழாம் ஸ்லோகம்

சோகார்தஸ்ய – சோகத்தால் பீடிக்கப்பட்ட மே – என்னிடமிருந்து ப்ரவ்ருத்த – உண்டானதும் பாதபத்த: – பாதங்களோடமைந்த அக்ஷரசம: – எழுத்தொத்த தந்த்ரிலயசமன்வித: – வீணைத் தந்தியில் தாள லயத்தோடு கூடினது ஸ்லோக: – ஸ்லோகம் என்ற பெயர் உடையதாகவே பவது – இருக்கட்டும் அன்யதா ந – வேறு விதமாக இல்லை

தானே தாள லயத்துடனும் அற்புதமான அர்த்தத்துடனும், பொருத்தமான சந்தத்துடனும் அமைந்த அந்தச் செய்யுளுக்கு ஸ்லோகம் என்று அவர் பெயர் தந்தார். இப்படியாகத் தான் சங்கீத லயமும் அர்த்தமும் சந்தமும் உள்ள ராமாயணம் உதயமாயிற்று!

அப்போது வால்மீகி முனிவரைப் பார்க்க தாமே வந்த பிரம்மாவை அவர் உபசரித்து வரவேற்றார். ஆனாலும் மனதிலே க்ரௌஞ்ச பக்ஷியைப் பற்றிய எண்ணம் அவருக்கு இன்னும் போகவில்லை.
பிரம்மா அவர் எண்ணத்தை அறிந்து சிரித்தார்.பிறகு கூறினார்:-

kothanda raman

மச்சாந்தாதேவ தே ப்ரஹ்மண் ப்ரவ்ருத்தேயம் சரஸ்வதி I
ராமஸ்ய சரிதம் சர்வ குரு த்வம்ருஷிசத்தம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், முப்பத்தியிரண்டாம் ஸ்லோகம்

ப்ரஹ்மன் – பிராம்மணரே தே – உம்முடைய இயம் சரஸ்வதி – இந்த வாக்கானது மச்சாந்தாத் ஏவ – என்னுடைய அபிப்ராயத்தினாலேயே ப்ரவ்ருத்தா – உண்டானது ருஷிசத்தம – முனி ச்ரேஷ்டரே த்வம் – நீர் ராமஸ்ய சரிதம் –ராமருடைய சரித்திரத்தை சர்வம் – முழுவதையும் குரு – செய்யும்.

இவ்வாறு ராம சரிதத்தை முழுவதுமாகச் செய்ய பிரம்மா அருளுரை புகல ராமாயணம் உருவானது. வால்மீகி முனிவருக்கு உலகம் உய்ய வேண்டும் என்ற பிரம்மாவின் சங்கல்பம் மகிழ்ச்சியைத் தரவே அற்புதமான காவியத்தை உள்ளது உள்ளபடி செய்தார்.

உலகில் மலைகளும் நதிகளும் எதுவரைக்கும் இருக்குமோ அது வரைக்கும் ராமாயணக் கதை உலகங்களில் விளங்கப் போகிறது என்று ஆசீர்வதித்தார் பிரம்மா.

யாவத் ஸ்தாஸ்வந்தி கிரய: சரிதஸ்ச மஹீதலே I
தாவத் ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், முப்பத்தியேழாம் ஸ்லோகம்

பூமி உள்ளவரை ராமாயணம் ஒலிக்கும்!!!

Golden_Globe_awards_logo

மஹீதலே – உலகத்தில் கிரய: – மலைகளும் சரிதஸ்ச – நதிகளும் யாவத் – எதுவரைக்கும் ஸ்தாஸ்வந்தி – இருக்குமோ தாவத் – அதுவரை ராமாயணகதா – ராமாயண கதை லோகேஷு – உலகங்களில் ப்ரசரிஷ்யதி –விளங்கப் போகின்றது.

வால்மீகி முனிவரின் இந்த ஆதி காவியம் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமேது! இதைப் படிக்கும் பேறு பெற்றோரின் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் அல்லவா!!

contact swami_48@yahoo.com

அனுமன் ராமனைக் கொன்றான் ! சம்ஸ்கிருத புதிர் !!

anjaneya,fb

By London Swaminathan
Post No. 1013; Dated 1st May 2014.

தமிழைப் போலவே சம்ஸ்கிருதமும் வளமான மொழி. ஆனால் சம்ஸ்கிருதம் தமிழைவிட 1500 ஆண்டுப் பழமையான மொழி என்பது தொல்பொருட் சின்னங்களால் நிரூபிக்கப்படுள்ளது இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். துருக்கி- சிரியா எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் வேத கால தெய்வங்கள் பெயர், ரிக் வேதத்தில் உள்ள அதே வரிசையில், ஒரு உடன்படிக்கையில் இருப்பது எல்லோரும் அறிந்ததே. காஞ்சிப் பெரியவர் தனது உரையில் இதை 1932 ஆம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டினார்.

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட தசரதன் கடிதங்களும் (ராமாயண தசரதன் அல்ல), கிக்குலி எழுதிய குதிரைப் பயிற்சி நூலும், இராக்-துருக்கி-சிரியா பகுதியை ஆண்ட மிட்டன்னி நாகரீக மன்னர்கள் பிரதர்தனன், தசரதன் ஆகியோர் பெயர்களும் மறுக்கமுடியாத தொல்பொருட் துறை சான்றுகளாகப் பட்டொளி வீசிப் பறக்கின்றன.

இந்தோநேசியாவில் மனிதர்கள் புகமுடியாத காடு என்று எண்ணியிருந்த போர்னியோ தீவில் மூலவர்மனின் நாலாம் நூற்றாண்டு சம்ஸ்கிருதக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதையும் காஞ்சி மாமுனிவர் தனது உபந்யாசங்களில் குறிப்பிட்டதை நாம் அறிவோம்.

வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, இநதோநேஷியா பகுதிகளில் 800-க்கும் அதிகமான சம்ஸ்கிருத கல்வெட்டுகள் இருப்பதையும் அறிஞர் உலகம் நன்கு அறியும். ஆசியா கண்டம் முழுதும் சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் இருப்பதையும் ஆப்பிரிக்காவில் எகிப்தில் தசரதன் கடிதங்கள் இருப்பதையும் அறிஞர் உலகம் எந்தவித ஆட்சேபணையும் இன்றி ஒப்புக்கொள்வது மகிழ்ச்சிக்குரியது.

என்னைப் போன்றோர் எழுதிய மாயா- இந்து தொடர்புகளைப் பலர் ஏற்பதில்லை. அது ஏற்கப் பட்டால் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள மாயா, ஒலமக், ஆஸ்டெக் (ஆஸ்தீக), இன்கா நாகரீகங்களும் சம்ஸ்கிருதமே என்பதை உலகம் ஏற்கும். நிற்க.

இனி புதிருக்கு வருவோம். தமிழில் 20,000 பழமொழிகள் இருப்பதைப் போல சம்ஸ்கிருதத்திலும் பல்லாயிரக் கணக்கான பழமொழிகள் உண்டு. இது தவிர விடுகதைகளும், புதிர்களும், ஏராளம், ஏராளம். எண்ணி மாளாது. யாரேனும் ஒருவர் தமிழ் மொழி இலக்கியங்களையும் சம்ஸ்கிருத இலக்கியங்களையும் படிக்காமல் இந்தியப் பண்பாட்டை எடைபோட முன்வந்தால், அது குருடன் யானையைப் பார்த்த கதையாக முடியும். குருடர்கள் யானை பார்த்த கதையை திருமூலரும், சம்ஸ்கிருத, பாலி இலக்கியங்களும் பாடி இருப்பதை ஏற்கனவே எழுதிவிட்டேன்.

அனுமன் ராமனைக் கொன்றான்!

“ஹதோ அனூமதா ராமா, சீதா ஹர்ஷம்
உபாகதா ருதந்தி ராக்ஷசா சர்வே ஹா ஹா ராமோ ஹதோ ஹத:”

என்ற சம்ஸ்கிருத ஸ்லோகத்தை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்.
ராம என்பது எல்லோரும் அறிந்த புனிதனின் பெயர். ‘ஆராம’ என்றால் தோட்டம். இந்த ஒரு சொல் தெரிந்தால் போதும். புதிரை விடுவித்து விடலாம்.

முதலில் எழுதப்பட்ட ஸ்லோகத்தின் பொருள்: அனுமன் ராமனைக் கொன்றான். சீதைக்கு மகிழ்ச்சி. ராக்ஷசர்களும் ஹா, ஹா, ராமன் கொல்லபட்டான் என்று கூத்தாடுகின்றனர்.

ஆராம என்ற சொல்லுடன் அர்த்தம் கொண்டால் கிடைக்கும் பொருள்: “அனுமன் தோட்டத்தை (அசோகவனம்) அழித்தான், சீதைக்கு மகிழ்ச்சி. ராக்ஷசர்கள், ஹா, ஹா, தோட்டம் அழிக்கப்பட்டுவிட்டது” என்று கூச்சல் இட்டனர்.

இதே போல தமிழிலும் ஏராளமான சுவைமிகு பகுதிகள் உண்டு. அவைகளைத் தனியாகக் காண்போம்.

angry ram

சம்ஸ்கிருத சிலேடை

கவி காளமேகம் பொழிந்த சிலேடைக் கவிதைகளைப் பள்ளிக் கூடத்திலேயே தமிழ்ப்பாட வகுப்பில் படித்து இருக்கிறோம். அதே போல ஒரு சம்ஸ்கிருத (ஸ்லேச) சிலேடைக் கவிதை:
பாணன் என்ற கவிஞன் காளிதாசனுக்குப் பின் தோன்றி புகழ் அடைந்தவன். அவன் எழுதிய காதம்பரி என்னும் புகழ் பாடும் சிலேடைக் கவிதை இதோ:

யுக்தம் காதம்பரீம் ஸ்ருத்வா கவயோ மௌனம் ஆஸ்ரித:
பாணத்வனாவ் அனத்யாயோ பரிதிர் ஸ்ம்ருதிர்யத:

பாண என்ற சொல்லில் இருபொருள் (சிலேடை) அமைந்துள்ளது. பாண என்பது மாபெரும் கவிஞனின் பெயர். இதற்கு ‘அம்பு’ என்ற பொருளும் உண்டு .ராம பாணம் என்ற சொல் தமிழிலும் வழக்கில் உண்டு.

kadambari
முதல் பொருள்: காதம்பரீயைக் கேட்ட மாத்திரத்தில் புலவர்கள் மௌனம் ஆகிவிடவேண்டும் என்பது சரியே ( நிசப்தமாகக் கேட்க வேண்டும் ). ஏனெனில் பாணன் கவிதை என்ற உடனேயே மற்ற கவிதைகளை நிறுத்திவிட வேண்டும் என்பது ஒரு புனித விதி ஆகும்.
அம்பு என்ற பொருள் கொண்டால் வரும் பொருள்:

காதம்பரீயைக் கேட்ட புலவர்கள் மௌனம் ஆகிவிடவேண்டும் என்பது சரியே ( நிசப்தமாகக் கேட்க வேண்டும் ). ஏனெனில் அம்பு ஒலி கேட்ட உடனேயே மற்றவைகளை நிறுத்திவிட வேண்டும் என்பது ஒரு புனித விதி ஆகும்.

போர்க்காலத்தில் அம்பு ஒலி சப்தம் வரும்போது அங்கு கவிதைக்கு என்ன வேலை?

மஹாபாரதத்தை எழுதிக் கொடுக்க பிள்ளையார் போட்ட நிபந்தனையும் அதற்கு வியாசர் போட்ட பதில் நிபந்தனையும் நாம் அனைவரும் அறிந்ததே. யக்ஷப் ப்ரஸ்நம் என்ற பகுதியில் மரதேவதை கேட்ட பல கேள்விகளுக்கு தர்மன் திறம்பட பதில் அளித்ததையும் நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். இவை அனைத்தும் அந்தக் காலத்தில் இந்துக்களின் அறிவு, குறிப்பாக விடுகதை, புதிர், சிலேடை விஷயங்களில் எவ்வளவு முன்னேறி இருந்தது என்பதைக் காட்டுகின்றன.

bana

contact swami_48@yahoo.com

ராமரைப் பற்றி சீதை கூறிய அரிய விஷயங்கள்

anuman vanakkam

Post No. 1007; Date 28th April 2014.

எழுதியவர்:-ச.நாகராஜன்;
ராமாயண வழிகாட்டி–அத்தியாயம் 25

ராமரின் சாஸ்வதமான அனுஷ்டானம்!

ராமரைப் பற்றி சீதை கூறும் அரிய குணங்கள் ஆரண்ய காண்டத்தில் நாற்பத்தியேழாவது ஸர்க்கத்தில் 17ஆம் ஸ்லோகத்தில் இடம் பெறுகிறது. ராவணன் சீதையை யார் என வினவ சீதை தனது குடும்பத்தைப் பற்றிச் சொல்லும் அற்புதமான சித்திரத்தை இங்கு காண்கிறோம்.

தத்யாத்ந ப்ரதிக்ருஹ்ணீயாத் சத்யம் ப்ரூயாந்ந சான்ருதம் I
ஏதத்ப்ராஹ்மண ராமஸ்ய வ்ரதம் த்ருவமனுத்தமம் II

ப்ராஹ்மண – பிராம்மணரே! தத்யாத் – (ஸ்ரீ ராமர் எப்போதும்) அளிப்பார் ந ப்ரதிக்ருஹ்ணீயாத் – (ஒருபோதும்) வாங்கமாட்டார் சத்யம் – உண்மையே ப்ரூயாத் – பேசுவார் அன்ருதம் – பொய்யை ச ந – ஒருபோதும் பேச மாட்டார் ராமஸ்ய – ராமரது அனுத்தமம் – ஒப்புயர்வற்ற த்ருவம் – சாஸ்வதமான வ்ரதம் – அனுஷ்டானம் ஏதத் – இது.

அந்தண வேடத்தில் கபட வேஷதாரியாக வந்த ராவணனிடம் ராமரைப் பற்றி சீதை கூறும் அற்புத ஸ்லோகம் இது.

சில பதிப்புகளில் காணப்படும் இந்த ஸ்லோகத்தின் இன்னொரு உருவம் இது:

தத்யாத்ந ப்ரதிக்ருஹ்ணீயாத் சத்யம் ப்ரூயாந்ந சான்ருதம் I
அபி ஜீவிதஹேதோர்வா ராம: ஸத்யபராக்ரம: II

இந்த ஸ்லோகத்தில் ஒரு சுவாரசியமும் அடங்கியுள்ளது. இதே ஸ்லோகத்தை சீதை ஹனுமானுக்கு அசோகவனத்தில் கூறுகிறார். சுந்தரகாண்டத்தில் முப்பத்திமூன்றாவது ஸர்க்கத்தில் 26வது ஸ்லோகமாக இது அமைகிறது. ஆக ராமாயணத்தில் அபூர்வமாக இரு முறை வருகின்ற ஒரே ஸ்லோக வரிசையில் ராமரின் அபூர்வ குணங்களை அறிவிக்கும் இந்த ஸ்லோகமும் இடம் பெறுகிறது.

34 Hazara Rama Temple Ramayana Carvings
Hazara Rama Temple, Hampi, Karnataka.

ஸத்ய பராக்ரம: என அடிக்கடி ராமரைப் பற்றிக் கூறுவதைப் பார்க்கிறோம். இதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. என்றும் நிலை கொண்டிருக்கும் சத்தியம் மற்றும் பராக்கிரமம் என்றும் பொருள் கொள்ளலாம். சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட பராக்கிரமம் என்று இன்னொரு பொருளையும் கொள்ளலாம்.

மாரீசனே ராவணனிடம் ராமரைப் பற்றி, “ராமோ விக்ரஹவான் தர்ம:” “ராமன் தர்மத்தின் மறு உருவம்” என்று புகழ்கிறான்.

“அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்பதையே கம்பன் தன் காவியத்தின் முகப்புச் செய்தியாக அளிக்கிறான்.

அறத்தைப் பேணி வர்க்கும் சத்ய பராக்ரமனான ராமனின் குணங்களே அவனைத் தெய்வமாக இனம் சுட்டிக் காட்டுகின்றன.

உத்தர ராம சரிதத்தில் அருந்ததி கோசலையிடம் கூறுவது இது:

“குணா: பூஜா-ஸ்தானம் குணிஷு ந ச லிங்கே ந ச வய:”

“ஒருவரது குணங்களினாலேயே அவர் மதிக்கப்படுகிறார். ஆணா அல்லது பெண்ணா என்பதாலோ அல்லது வயதாலோ அல்ல”

ரகு வம்சத்தில் மஹாகவி காளிதாஸன்,

” த தா ஹி சர்வே தஸ்ய ஆஸன் பரார்த்த ஏக பலா: குணா:” என்று சுருங்கச் சொல்லி ராமாவதார நோக்கத்தை விளங்க வைக்கிறான்.

இதன் பொருள்: “அவரது எல்லா குணங்களும் ஒரே நோக்கத்தையே கொண்டிருக்கின்றன. மற்றவர்கள் அனைவரும் சுகமாக வாழ்வதே அது”

ராமரின் சாஸ்வதமான அனுஷ்டான்ங்கள் படிப்பதற்காக மட்டும் அல்ல; நம் வாழ்வில் அனுஷ்டானமாகக் கடைப் பிடிப்பதற்காகவே!

முன்னர் வெளியான 24 பாகங்களும் இந்த பிளாக்—கில் உள்ளன. படித்து மிகிழ்க!

Contact swami_48 @ yahoo.com