இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள்- பகுதி 2

Picture: Goddess Kali

ராம ராம ராம

இராம பாணம் பட்டு உருவினாற்போல
இராமர் இருக்கும் இடம் அயோத்தி
இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது
இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?
அனுமார் வால் போல நீளுகிறதே
இராமனைப் போல ராசா இருந்தால் அனுமாரைப் போல சேவகனும் இருப்பான்
இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?
இராமன் மங்கையோடு இணங்கியது அவம்
இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா? (110)
இரா முழுதும் இராமாயண்ம் கேட்டு சீதைக்கு ராமன் என்ன வேண்டும் என்ற கதை (சீதைக்கு ராமன் சித்தப்பன் என்ற கதை)
இராமேசுரத்துக்கும் காசிக்கும் போயும் என்னைப் பிடித்த சநீசுரன் தொலையல்ல
தம்பி உடையான் படைக்கஞ்சான் ( லெட்சுமணன் பற்றிய மொழி)
இராவண சந்யாசி போல இருக்கான்
இராவணன் குடிக்கு மஹோதரன் போலும், சுயோதனன் குடிக்கு சகுனி சுக்கிரீவ ஆக்கினையாய் இருக்கிறது
போலும்

சந்நியாசி புராணம்

சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்து சமுசாரம் மேலிட்டது போல
சந்நியாசி கோவணம் கட்டினது போல
சந்நியாசம் சகல நாசம்
சந்நியாசிக்குப் பழைய குணம் போகாது
சந்நியாசிக்கு சாதி மானம் போகாது (120)
சந்நியாசி பயணம் திண்ணையை விட்டுக் குதிப்பது தான்
சந்நியாசி பூனை வளர்த்தது போல
சந்நியாசியைக் கடித்த நாய்க்கு பின்னாலெ நரகமாம், சந்நியாசிக்கு முன்னாலெ மரணமாம்
சந்நியாசியை நிந்தித்தவனுக்கு பின்னாலெ நரகமாம்
சந்நியாசி வீடு திண்ணைல
சபையிலெ நக்கீரன் அரசிலே விற்சேரன்
சப்தப் பிரம்மத்திலே அசப்த பிரம்மம் பிரகாசிக்கிறது
சப்தப் பிரம்மம் பரப் பிரம்மம் இரண்டையும் அறிய வேண்டியது
பழமொழிகளில் அவதாரம்
கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக் கூடாது (வாமன அவதாரம்) (130)
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் (நரசிம்ம அவதாரம்)
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (காகாசுரன் கதை-ராமாவதாரம்)
சாத்திரம் கற்றவன் தானே காசு
சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்திரம்
சாத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள், கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு
சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்
சாபமிட்டருண்டோ? தலையில் திரு எழுத்தோ? வேக விட்டருண்டோ? எழுத்தின்படி தானோ?
சுவர்க்கத்திலே தோட்டியும் சரி, தொண்டமானும் சரி
சுவர்க்கத்துக்குப் போகிறபோது கக்கதிலே கூத்தியரா?
சுவர்க்கத்துக்குப் போகிறபோது கக்கதிலே ஒரு பிள்ளை ஏன்?
சுவர்க்கத்துக்குப் போனாலும் கக்கதிலே அட்சய பாத்திரமா?
சுவாமி வரங் கொடுத்தாலும் முன்னடியான் வரங் கொடான்
சூட்சுமத்தில இருக்குது மோட்சம்
சூட்சுமம் அறியாதவனுக்கு மோட்சம் இல்லை

14 லோகங்கள்

கீழேழு லோகமும் மேலேழு லோகமும் கண்ட காட்சியா?
குபேர பட்டணம் கொள்ளை போனாலும் கொடுத்து வையாத பாவிக்கு ஒன்றுமில்லை
ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதாம்
ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனது போல
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்
ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது (150)
ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு
காவியுடுத்தவர் எல்லாம் விவேகானந்தரா?

ஏகாதசி மஹிமை

ஏகாதசிக்கு மா இடித்தாற் போல
ஏகாதசித் திருடியை ஏற்றடா ரததின் மேலே
ஏகாதசி மரணம் துவாதசி தகனம்
ஏகாதசி மரணம் நல்லதென்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா?
எறும்பு முதல் எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும் நாராயணன் என்னை காப்பாற்ற மாட்டானா?
ஓமப் பிண்டத்தை நாய் இச்சித்தாற் போல
வடக்கே போன வாலியும் வரக் காணோம்
அவன் தம்பி அங்கதன் (160)
ரிஷிப் பண்டம் ராத்தங்காது
ஆண்டியே அன்னத்துக்கு அலையறச்சே லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறதாம்
ஆதி முதல்வனே பாய்ந்தோடும் போது ஐயர் மணி ஆட்டுவாரா?
ஆத்தாள் அம்மணம், அன்றாடம் கோ தானம்
ஆயிரம் உளிவாய்ப் பட்டுத்தான் ஒரு லிங்கம் ஆகவேண்டும்
சரியான சாப்பாட்டு ராமன்
அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய் பாரமா?
அண்ணாமலையாருக்கு 64 பூசை, ஆண்டிகளுக்கு 74 பூசை
அண்ணாமலையார் அருள் உண்டானால் மன்னார்சாமி மயிர் பிடுங்குமா?
வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி (170)
பகீரதப் பிரயத்தனம் செய்தான்
அகாரியத்திலே பகீரதப் பிரயத்தனம் ஆகாது
அகோர தபசி, விபரீத நிபுணன்
அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?
அக்கினி தேவனுக்கு அபிடேகம் செய்தது போல இருக்கிறது
அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூறு வழியாக வரும்
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
வீட்டுக்கு வந்த வரலெட்சுமி
லெட்சுமி இருக்கும் இடத்தில சரசுவதி இருக்க மாட்டாள்
பெருங்காயம் இருந்த பாண்டம் வாசனை போகாது (பாவம் செய்தவர்கள் நிலை) (180)
பிறவிக் குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற் போல
வைகுண்டம் என்பது திரு மாநகரம்
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்தில்

Picture: Kneeling figure from Cambodia

வேத மகிமை

வேதியர்க்கு அழகு வேதம் ஓதுதல்
வேதத்தில் நாலு விதம் உண்டு
வேதத்திற்கு உலகம் பகை, உலகத்திற்கு ஞானம் பகை
வேதத்திற்கும் விக்ரகபக்திக்கும் பகை
வேதத்தை அறியாத கிழவன் வீண்
வேதம் ஆய்ந்து ஓதல் போதகர் முறைமை
வேதம் ஏன், நியாயம் ஏன், வித்தாரம் கள்ளருக்கு (190)
வேதம் ஒத்த மித்திரன்
வேதம் கேடவரை, வேதம் கேடவர் என்பான் ஏன்?
வேதம் பொய்த்தாலும் வியாழம் பொய்யாது
உருத்திராக்கப் பூனை உபதேசம் பண்ணினது போல
ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை
ஐயர் ஒன்றே கால் சேர் அவர் அணியும் லிங்கம் அரை சேர்
ஐயானாரே வாரும், கடாவைக் கொள்ளும்
ஐயனார் கோவிலிலே ஆனை பிடிக்க வேண்டும் (200)
ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தங்கம்
ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனை பேரும் பத்திரகாளி
கஞ்சி வரதப்பா என்றால் வாயில் வாரப்பா என்றானாம்
காசிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம்
கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுக்கும்
சுடலை ஞானம் திரும்பி வரும் மட்டும்தான் (ஸ்மசான வைராக்யம்)
தவசிச்சிக்கு தயிரும் சோறும் விசுவாசிக்கு வென்னீரும் பருக்கையும்
தவசிப்பிள்ளை நமசிவாயம் கையாசாரம்
தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும்
தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை (210)
தவத்திலிருதால் தலைவனைக் காணலாம்
தவத்துக்கொருவர் கல்விக்கிருவர்

Picture: Ganesa in US Museum

உன்னையே நீ அறிவாய்
எல்லாம் தலை விதி (கர்ம வினைக் கொள்கை)
உடலில் உள்ள அழுக்கைப் போக்கிடலாம் உள்ளத்திலுள்ள
அழுக்கைப் போக்குவது கஷ்டம்
ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சுக் கும்பிட்டானாம்
மலையத்தனை சுவாமிக்கு கடுகத்தனை கற்பூரம்/ சாம்பிராணி

பெருமாள்

பெருமாளைச் சேர்ந்தோருக்குப் பிறப்பில்லை, பிச்சைச் சோற்றுக்கு எச்சல் இல்லை
பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு
பெருமாள் இருந்தால் அல்லவோ திருநாள் நடக்கப் போகிறது?
பெருமாள் என்கிற பெயரை மாற்றி பெத்த பெருமாள் ஆச்சு (220)
பெருமாள் செல்கிற வழியில் புல்லாய் முளைத்தாலும் போதும்
பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா? பிரம்மா நினைத்தால் ஆயுசு குறைவா?
பெருமாள் புளிச்ச தண்ணீருக்கு அலைகிறான், அனுமார் ததியோதனம் கேட்கிறார்
பிச்சை எடுக்கிறதாம் அதைப் பிடுங்குகிறதாம் அனுமார்
பிள்ளையாரைப் பிடிச்ச சனி அரசமரத்தையும் பிடிச்சதாம் (225)

(பழமொழிகளில் இந்துமதம் என்ற எனது கட்டுரையில் கண்ட 14 பழமொழிகளையும் சேர்த்துக் கொள்க)

இந்து மதம் பற்றிய 200 பழமொழிகள்-Part 1


Picture: Lord Ganesh

( முன்னர் ஏற்றப்பட்ட (1) 20,000 தமிழ் பழமொழிகள், (2) யானை பற்றிய 100 பழமொழிகள், (3) பழமொழிகளில் இந்துமதம் ஆகிய மூன்று கட்டுரைகளையும் (4) Amazing Collection of 20,000 Tamil Proverbs கட்டுரையும் காண்க ).

இந்து மதத்தின் மாபெரும் தத்துவங்களை, ஒரு சில சொற்களைக் கொண்டே பழமொழிகள் விளக்குகின்றன. இத்தகைய 14 பழமொழிகளை விளக்கி 2009ஆம் ஆண்டில் எழுதிய எனது கட்டுரை இலண்டன் தென் இந்திய சங்க தீபாவளி மலரிலும் பல பிளாக்குகளிலும் வெளியாகியது இப்போது மேலும் சில நூறு பழமொழிகளை மட்டும் பார்ப்போம்.
கங்கை நதி ,காசி பற்றி மட்டுமே பத்துப் பதினைந்து பழ மொழிகள் இருக்கின்றன. ராமனும் கண்ணனும், அரியும் சிவனும், கங்கையும் காசியும் சுவர்க்கமும் நரகமும், கோவிலும் சுவாமியும் தமிழர்கள் வாழ்வில் எப்படி இரண்டறக் கலந்திருக்கின்றன என்ற பேருண்மையை பழமொழிகள் பட்டவர்த்தனமாகப் பறை சாற்றுகின்றன.

பழமொழிகள்

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது
அரசன் அன்றேகொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
கல்லைக் கண்டால் நாயைக் காணும், நாயைக் கண்டால் கல்லைக் காணும் ( மரத்தை மறைத்தது மாமத யானை……….என்பதும் அதுவே)
லங்கணம் பரம ஔஷதம் (ருக்மாங்கனின் ஏகாதசி விரதக் கதை)
தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமா?
சட்டியில் இருந்தால் தானே அகப்பைஅயில் வரும் (கந்த சஷ்டி பற்றிய பழமொழி)


Picture: Tripura Vijaya from Tamilartsacademy.org

இது என்ன வேத வாக்கா?
அவன் சரியான பிரஹஸ்பதி (காலப்போக்கில் பொருள் மாறிய மொழி)
அவன் சரியான அசமஞ்சன் (புராணக் கதை)
இது என்ன பிரம்ம வித்தையா?
காலம்–கலி காலம், நாம் என்ன செய்ய?
கெடுவான் கேடு நினைப்பான் (விநாச காலே விபரீத புத்தி)
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி
இருக்குதே தண்ணீர் வண்டி, இல்லாவிட்டால் தம்பிரான் பதவி
என்ன ரொம்ப வேதாந்தம் பேசுகிறாய்?
அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனை பாடுவேனா?
அடியைப் பிடியடா, பாரத பட்டா
அவனின்றி ஒரு அணுவும் அசையாது (20)

Picture: Sri Krishna

பிள்ளையார் சுழி போட்டாயிற்று
பிள்ளையார் பிடிக்க குரங்கானது
உரு ஏறத் திரு ஏறும்
ஒன்றாகக் காண்பதே காட்சி
ஆருமில்லார்க்கு தெய்வமே துணை (அகதிக்குத் தெய்வமே துணை)
தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் (தனக்கும் மிஞ்சியதுதான் தானம்)

அரியும் சிவனும்

சிவ பூஜையில் கரடி புகுந்தது போல
சிவனொடுக்கும் தெய்வம் தேடினும் இல்லை (சிவாத் பரதரம் நாஸ்தி)
அரன் அதிகம் அரி அதிகம் என்போருக்கு பரகதி இல்லை (கம்பன்)
அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு
தோத்திரத்துக்கு திருவாசகம் சாத்திரத்துக்கு திருமந்திரம்
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்
சித்தம் போக்கு சிவம் போக்கு, ஆண்டி போக்கும் அதே போக்கு
கல்லாடம் படித்தவனிடம் சொல்லாடாதே
அன்பே சிவம்
சிவத்தைப் பேணிற் தவத்திற்கழகு
சிவனே என்று கிட
சோற்றுக்குப் பின்னர்தான் சொக்கரும் மீனாட்சியும்
எறும்புக்கும் படி அளப்பான் ஈசன் (சிவநி ஆக்ஞாலேக சீம கறவது: தெலுங்கு)


Picture: Sri Nataraja

பிச்சைச் சோற்றிற்குப் பிறப்பு இல்லை (40)
என் கடன் பணி செய்து கிடப்பதே (அப்பர்)
நீரில்லாத நெற்றி பாழ்; நெய் இல்லாத உண்டி பாழ்
சும்மா இருப்பதே சுகம் (சும்ம இரு, சொல்லற)
தருமம் தலை காக்கும்
வானத்துக்கு வால்மீகி போருக்கு வியாசர்
காணாமற் கோணாமற் கண்டு கொடு (முக்கால சந்தியா வந்தனம் செய்யும் நேரம் பற்றிய பழமொழி )
வயிறு நிறைந்தால் வாய் வாழ்த்தும் (அன்ன தானப் பெருமை)
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்தது போல

வேலும் மயிலும்

வேலை வணங்குவதே எமக்கு வேலை (பாரதி)
வேலுண்டு வினை இல்லை; மயிலுண்டு பயமில்லை
சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை
குன்று தோராடும் குமரன் (50)
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வதாற்போல்
கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்
நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறைத் தீர்ப்பு
கடவுளை நம்பினார் கைவிடப் படார்
கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப் போக
கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மாதா பிதா குரு தெய்வம்

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
பசித்திரு, தனித்திரு, விழித்திரு
நாலாம் பிறை பார்த்தவன் கதி நாய் பட்டபாடு தான்
ஞானத்தில் தன் பேச்சு, பிரேமத்தில் பெண்பேச்சு
கருடா சவுக்கியமா என்றதாம் பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு
கருடா சவுக்கியமா என்று கேட்டதற்கு அவரவர் இருக்கிற இடத்தில் இருந்தால் சவுக்கியம் என்றதாம்
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது
அவன் ஒரு ருத்திராட்சப் பூனை (65)

கோவிலோ கோவில்

Picture: Madurai Meenakshi Temple

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
கோபுர தரிசனம் பாப விநாசம்
கோவில் இடிக்கத் துணிந்தவனா குளம் வெட்டப் போகிறான்
கோவில் உண்டைச் சோறு குமட்டின தேவடியாள் குத்துமித் தவிட்டுக்குக் கூத்தாடுகிறாள்

கோவிலை அடைத்துக் கொள்ளை இடுகிறவனா குருக்களுக்குத் தட்சினை கொடுப்பான்?
கோவிலைப் பார்த்துக் கும்பிடுகிறதா? கொள்ளை பார்த்துக் கும்பிடுகிறதா?
கோவில் மணியம் என்கிற பேர் இருந்தால் போதும்
கோவில் மணியம் போனால் நம்பியான் சுழலும் போச்சுதா?
கோவில் விளங்கக் குடி விளங்கும்
கண்ட இடம் கைலாசம்
கண்ட கண்ட கோவில் எல்லாம் கை எடுத்துக் கும்பிட்டேன்
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யறது
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது (கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
ஒரு மனப் படு, ஓதுவார்க்குதவு (80)
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்

கங்கையும் காசியும்


படம்: சிவனும் பார்வதியும் (Shiva and Parvati)

கங்கா ஸ்நானம் துங்கா பானம்
கங்கைக்குப் போன கடாவின் கதை போல
கங்கை ஆடப் போன கடாவை கட்டி அழுதானாம்
கங்கையிலே படிந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது
கங்கையில் ஆடினாலும் கணமும் விடாமற் செய்த பாவம் தொலையாது
கங்கையிலே பிறந்த நத்தை சாலக்கிராமம் ஆகாது
கங்கையில் ஆடினாலும் பாவம் தீருமா?
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
வைகைக் கரைக்கு வார்த்தையும் கங்கைக் கரைக்குக் கீர்த்தியும்
கங்கையிலுள்ள மீன் எல்லாம் சொர்க்கத்துக்குப் போகாது (ரா.கி.பரமஹம்சர்

காசி இரண்டு எழுத்துத் தானே காண எத்தனை நாள் செல்லும்?
காசிக்குப் போயும் கரும தொலையவில்லை
காசிக்குப் போயும் மூடத் தவசி காலில் விழுகிறதா?
ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது
காசிக்குப் போனாலும் அகப்பை அரைக் காசு
காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை
காசிக்குப் போனேன் காவடி கொண்டு வந்தேன்
காசி முதல் ராமேசுவரம் பரியந்தம்
காசி முதல் ராமேசுவரம் வரையில் தெரிந்தவன் (100)
காசியில் இருந்தவன் கண்ணைக் குத்த காஞ்சீபுரத்திலிருந்து கையை நீட்டிக் கொண்டு போனானாம்

மறுபிறப்பு உண்மையா? பகுதி 4

மெய்ஞானமும் விஞ்ஞானமும் கூறும் புனர்ஜென்ம உண்மைகள்! – 4
(அறிவியல்,ஆன்மீக நோக்கில் மறுபிறப்பு இரகசியங்கள்!)

Written By S Nagarajan

காந்திஜி , இயன் ஸ்டீவன்ஸன் ஆராய்ந்த சாந்தி தேவி மர்மம்!

1926ம் ஆண்டு டெல்லியில் பிறந்த குழந்தையான சாந்தி தேவி தனக்கு நான்கு வயதாக இருக்கும் போது தனது பெற்றோர் மதுராவில் இருப்பதாகவும் அங்கு செல்ல விரும்புவதாகவும் கூறியது. ஆனால் சாந்தி தேவியின் இந்தப் பேச்சை அவளது பெற்றோர் சட்டை செய்யவில்லை.ஆறு வயதான போது அவள் மதுராவிற்குச் செல்ல விரும்பி வீட்டை விட்டு ஓட முயன்றாள். அவளது ஆசிரியரிடமும் பள்ளித் தலைமையாசிரியரிடம் தான் குழந்தை பெற்றெடுத்த பத்தாம் நாளன்று இறந்ததாகவும் தனது உறவினர் அனைவரும் மதுராவில் இருப்பதாகவும் மீண்டும் மீண்டும் அவள் கூறினாள்.இதனால் வியப்படைந்த அவர்கள் உன் கணவன் பெயர் என்ன என்று கேட்டவுடன் கேதார்நாத் என்று உடனே பதிலளித்தாள்.

தலைமையாசிரியர் மதுராவில் மேற்கொண்ட விசாரணையில் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் கேதார் நாத் என்பவரின் மனைவியான லக்டி தேவி குழந்தை பெற்றெடுத்த பத்தாம் நாளில் இறந்ததை அறிந்து வியப்படைந்தார். மஹாத்மா காந்தி இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டவுடன் ஒரு கமிஷனை அமைத்து இதை ஆராயுமாறு பணித்தார். கமிஷன் சாந்தி தேவியை மதுராவிற்கு 1935ம் வருடம் நவம்பர் மாதம் 15ம் தேதி அழைத்துச் சென்றது.அங்கே சாந்தி தேவி தனது முந்தைய ஜென்ம உறவினர்கள் அனைவரையும் அடையாளம் காட்டினாள்.

கேதார் நாத் தனக்கு மரணப் படுக்கையில் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் சொல்லி அவற்றை ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேட்டாள்! வாழ்நாள் முழுவதும் சாந்தி தேவி மணம் புரிந்து கொள்ளவில்லை. ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் அவரது புனர்ஜென்மம் பற்றி மீண்டும் ஆராயப்பட்டது. ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு பிரபல ஆய்வாளர் அவரைப் பேட்டி கண்டார்.

மறு ஜென்மம் பற்றி விஞ்ஞான ரீதியாக ஆய்வு நடத்தி வந்த பிரபல விஞ்ஞானி ஐயான் ஸ்டீவன்ஸன் 1986ல் அவரைப் பேட்டி கண்டு அவர் கூறியதெல்லாம் உண்மையே என்று உறுதி செய்தார். அவருடன் இணைந்து ஆய்வு நடத்திய கே.எஸ்,.ராவத் சாந்தி தேவி இறப்பதற்கு நான்கு நாட்கள் முன்னர் கூட அவரைச் சந்தித்தார். 1987 டிசம்பர் 27ம் தேதி மறைந்த சாந்தி தேவி உலகினருக்கெல்லாம் மறுஜென்மம் உண்மையே என்பதை உணர்த்திய ஒரு அதிசயப் பிறவி!

தனது ஆராய்ச்சியில் ஏராளமானோரைச் சந்தித்த இயன் ஸ்டீவன்ஸன் அதில் ஆச்சரியப்படத்தக்க (சாந்தி தேவி உள்ளிட்ட) இருபது கேஸ்களைப் பற்றி விளக்கமாக எழுதி தன் ஆய்வு முடிவை வெளியிட்டார்.

இஸ்மாயிலின் முற்பிறப்பு

1956ல் துருக்கியில் அடானா மாவட்டத்தில் பிறந்தவர் இஸ்மாயில்.அவர் சிறு குழந்தையாக இருந்த போதே தனது பெயர் அல்பெய்ட் சுசுல்மஸ் என்றும் தான் கொலை செய்யப்பட்டதாகவும் தன் பெற்றோரிடம் கூறினார். பிறப்பிலேயே அவரது தலையில் ஒரு வெட்டுக் காயக் குறி இருந்தது! தனது “பழைய” வீட்டிற்கு கூட்டிச் செல்லுமாறு பெற்றோரை அவர் வற்புறுத்தவே சுசுல்மஸ் வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அனைத்து இடங்களையும் அடையாளம் காட்டிய இஸ்மாயில் தனது பூர்வெ ஜென்ம மகளுடன் நெடு நேரம்பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள்.முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லாததால் சஹிதா என்பவரை மணம் புரிந்து அவர் மூலம் குழந்தைகளை அடைந்தார். ஒரு நாள் தோட்டத்தில் வேலை பார்க்க இதர நகர்களிலிருந்து வந்த பணியாளர்களைப் பணிக்கு அமர்த்திய போது அவர்கள் சுசுல்மஸைத் தலையில் அடித்துக் கொலை செய்தனர். இவையெல்லாம் அங்கு நடந்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது! தனது பழைய வியாபாரத்தில் வாட்டர் மெலான் பழத்திற்குப் பணம் தராத ஒரு நண்பரிடம் பழைய சம்பவத்தை நினைவூட்டி ‘பழைய வசூலையும்’ முடித்துக் கொண்டார் இஸ்மாயில்!
அந்தணராக இருந்த கிறிஸ்தவ பாதிரி!

இதே போல கிறிஸ்தவ பாதிரியாக இருந்த ஒருவர் தான் முந்தைய ஜென்மத்தில் அஜம்கர் மாவட்டத்தில் தாமோதர் உபாத்யாய என்ற பெயருடன் அந்தணராக இருந்ததாகக் கூறி பழைய ஜென்ம நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக விளக்கினார்.

எட்கர் கேஸின் ஆகாயப் பதிவுகள்!

இப்படிப்பட்ட முன் ஜென்ம நிகழ்வுகளை அக்கு வேறு ஆணி வேராக விவரமாகப் பிட்டுப் பிட்டு வைத்தவர் பிரபல அமெரிக்க சைக்கிக்கான எட்கர் கேஸ் ஆவார்.(பிறப்பு 18-3-1877 மறைவு:3-1-1945).ஆகாசத்தில் பதிந்து கிடக்கும் ‘ஆகாஷிக் ரிகார்ட்’ மூலம் யாருடைய பிறவியையும் கூறி விட முடியும் என்று அவர் கூறியதோடு ஆயிரக்கணக்கானோருக்கு அவர்களது முன் ஜென்ம விவரங்களை துல்லியமாகக் கூறினார். இன்று அவரது ஆயிரக்கணக்கான சீடர்கள் அவரைப் பற்றி பெருமையுடன் கூறுகின்றனர்; சுமார் 300 புத்தகங்கள் அவரைப் பற்றி வெளி வந்துள்ளன. 35 நாடுகளில் அவரது மையங்கள் இன்றும் உள்ளன.2500 பேர்களின் கேஸ்களை அவர் விவரித்துக் கூறியது அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ஒரு இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் இறந்து போனதைக் குறிப்பிட்டு அவரது கல்லறை இருக்கும் இடத்தையும் எட்கர் கேஸ் கூறவே அந்த இடத்திற்குச் சென்று தன் பூர்வ ஜென்ம கல்லறையைப் பார்த்துப் பரவசமானார் ஒருவர்.

எப்படி அவரால் ஒருவரின் முன் ஜென்மத்தை உடனே கூற முடிகிறது என்று அவரைக் கேட்ட போது அவர் இந்தத் தகவல்களைத் தாம் இரண்டு விதங்களில் பெறுவதாகக் கூறி அதை விளக்கினார்! முதலாவதாக ஒவ்வொருவரின் அந்தக்கரணத்தில் அவரவர் முன் ஜென்ம விவரங்கள் உள்ளன. மிக ஆழ்ந்து புதைந்து கிடக்கும் இவற்றைத் தட்டி விட்டால் திறக்கும் கதவு போல திறந்து அனைத்தயும் தான் பெறுவதாக அவர் குறிப்பிட்டார். இரண்டாவதாக பிரபஞ்சம் முழுவதும் மின் ஆன்மீக அலைகள் எல்லையற்ற காலம் தொட்டு இருந்து வருகிறது.நடக்கின்ற ஒவ்வொரு சம்பவமும் ஒலி (சப்தம்) ஒளி உள்ளிட்ட அனைத்துமே ஆகாயத்தில் பதிவாகி விடுவதால் இந்த ஆகாஷிக் ரிகார்ட் மூலம் அனைத்தையும் தான் பெறுவதாகக் கூறினார்.இதைப் பெறத் தன் அதீத சைக்கிக் சக்தி உதவுகிறது என்றும் அவர் விளக்கினார்.

சுந்தரர், அப்பர் முற்பிறப்புகள்

விவேகாநந்தர்- ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ( இருவரும் நர நாராயணர்கள்), அப்பர், சுந்தரர் உள்ளிட்ட ஏராளமான மகான்களின் பூர்வ ஜென்மங்கள் அவர்களாலேயே விளக்கப்பட்டுள்ளன; இவை சுவாரசியமானவை! தேவாரத்தில் சுந்தரர் அப்பரின் வரலாற்றைப் பரக்கக் காணலாம்!
ஷீர்டி சாயிபாபாவின் ருணானுபந்தம்!

ஷீர்டி சாயி பாபாவின் வாழ்வில் அவர் தனது பக்தர்களின் பூர்வ ஜென்மங்களைக் கூறிய விதம் மிக மிக அற்புதமானவை. தன் சீடர்களில் இருவர் பாம்பும் தவளையாகவும் இருந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த போது இவரைப் பார்த்து வெட்கமடைந்ததை அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு ஆட்டுக் குட்டியை அன்போடு அணைத்து தன் பழைய சிஷ்யனான அதற்குத் தன் அன்பைத் தெரிவித்துஆசி அருளியிருக்கிறார். எத்தனை ஜென்மமானாலும் உங்களைக் கைவிட மாட்டேன் என்று உறுதி படக் கூறி ஆறுதல் அளிக்கும் அவர் இதை ‘ருணானுபந்தம்’ (பந்தத்தினால் ஏற்பட்ட கடன்) என்கிறார்! அவரே சத்ய சாயியாக அவதரித்திருப்பதும் இனி பிரேம சாயியாக அவதரிக்க இருப்பதும் அனைத்து சாயி பக்தர்களும் நன்கு அறிந்த விஷயமே!

புராண இதிஹாஸ விஞ்ஞான ஆய்வுகள் சுருக்கமாகத் தெரிவிக்கும் ஒரு உண்மை ஒவ்வொருவருக்கும் மறு பிறவி உண்டென்பது தான்! இதைக் கர்ம பலன்களுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் பெறுவதாக நம் அற நூல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஜெனன மரணச் சுழலை நீக்கப் பாடுபடுவதே மனிதனின் இறுதி லட்சியம் என்றும் அவை முழங்குகின்றன.

பாஹி முராரே

இந்தச் சுழலை எப்படி நீக்கிக் கொள்வது என்பதை ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் 21ம் செய்யுளில் அற்புதமாகக் கூறுகிறார். பாடல் இதோ:-
புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் இஹ சம்ஸாரே பஹ¤துஸ்தாரே ருபயா பாரே பாஹி முராரே

மீளவும் பிறப்பு மீளவும் இறப்பு மீளவும் தாயின் குடரிடைப் படுப்பு!
கடத்தற்கரிய சம்சாரத்தில் வீழ்வது!இரக்கம் கொள்; கரை சேர் முராரி!

இறைவனைப் பணிந்தால் ஜனன மரண விஷச் சுழல் நீங்கும் என்பதே புனர் ஜென்ம ஆராய்ச்சி விளக்கும் இறுதியான ஆனால் உறுதியான முடிவு! (முற்றும்)

Written by S Nagarajan
**********************

சிட்டுக்குருவி,சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

தேசிய கவி சுப்ரமண்ய பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் மிகவும் வறுமையில் வாடினார். அவரது மனைவி சமைக்க அரிசி இல்லாமல் அடுத்த வீட்டில் கடன் வாங்கி வந்தாள். அரிசியைக் கண்ணில் கண்ட பாரதி அதே நேரத்தில் முற்றத்தில் குருவிகளையும் கண்டார். உடனே செல்லாம்மவிடமிருந்து தானியத்தை வாங்கி குருவிகளுக்காக இரைத்தார். செல்லம்மாவின் முகம் வாடியது. குருவிகள் உண்டது கண்டு பாரதியின் முகம் ஆனந்தத்தில் மலர்ந்தது!

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும்
மலையும் எங்கள் கூட்டம் என்று பாடிய கவிஞனுக்கு,

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்று பாடிய கவிஞனுக்கு,
யார் பாடம் கற்பிப்பது?

பலர் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டார்கள். பாரதியோவெனில் இயற்கையின் சிரிப்பில் இறைவனைக் கண்டான். சிட்டுக் குருவி யிடமிருந்து ஆன்மீக பாடங்களையும் கற்றான். அவரது ஆன்மீக தாகத்தைக் காட்டும் பாடல் இதோ:

விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு— (விட்டு)

பெட்டையினோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாதொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்து அன்பு செய்து இங்கு—(விட்டு)

முற்றத்திலேயும் கழனி வெளியிலும்
முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்ற பொழுது கதை சொல்லித் தூங்கிப்பின்
வைகறை ஆகு முன் பாடிக் களிப்புற்று (விட்டு)

தத்தாத்ரேயர் என்ற ரிஷி இயற்கையில் தான் கண்ட எல்லாவற்றிலும் ஒரு நல்ல பாடத்தைக் கற்றதை பாகவதம் எடுத்துக்கூறும். (Please read my article Let Nature Be Your Teacher: William Wordswoth and Dattatreya in my blogs). வோர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞனும் ஏட்டுப் படிப்பு எதற்கும் உதவாது. புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு வெளியே வாருங்கள் என்கிறான். இவை எல்லாவற்றையும் பாரதி செயலிலேயே செய்து காட்டிவிட்டான்.

குரு கோவிந்த சிம்மன் கதை

சீக்கியர்களில் கடைசி குருவான குரு கோவிந்த சிங் மாபெரும் வீரன். மொகலாயப் பேரரசன் அவுரங்க சீப்பின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவன். எத்தனை கஷ்டங்கள் வந்தபோதும் அவைகளைத் துச்சமாக மதித்தவன். அந்த குரு கோவிந்த சிம்மன் ஒரு சிட்டுக் குருவியைக் கூட பருந்தாக்கிக் காட்டுவேனென்று வீர முழக்கம் செய்தார். கால்சா என்னும் சீக்கிய வீரர்களின் அமைப்பை நிறுவி வீரப் படைகளை நிறுவினார். அவர் கூறிய வாசகங்களை பாரதியார் குரு கோவிந்த சிம்மனைப் பற்றி பாடிய பாடலில் ஈயைக் கருட நிலைக்கு ஏற்றுவேன் என்று சிம்ம கர்ஜனை செய்கிறார்.

குரு கோவிந்தன் உண்மையிலேயே இப்படிச் செய்து காட்டினார். அவர் கால்சா வீரர்களுக்காக செய்த அமிர்தம் ஒரு சில துளிகள் கீழே சிந்திவிட்டன. அதைச் சுவைத்த குருவிகள் உடனே வீறு கொண்டெழுந்து வானில் சீறிப் பாய்ந்தன. கழுகுகளை ஓட ஓட விரட்டின. இதைக் கண்ட வீரர்கள் குருவின் மகத்தான சக்தியை உணர்ந்தனர்.

கோவிந்த சிம்மன் எப்போதும் ஒரு வெள்ளைப் பருந்தை வைத்திருந்தார். ஒரு முறை அவர் ஒரு முஸ்லீம் கனவானின் தோட்டத்துக்குப் போனார். அந்த ஆள் ஒரு கறுப்பு பருந்தை வைத்திருந்தார். கோவிந்த சிம்மனின் வெள்ளைப் பருந்தின் மீது ஆசை வந்தது. ஒரு தந்திரத்தின் மூலம் அதைக் கைப்பற்ற எண்ணினான். இரண்டு பருந்துகளுக்கும் போட்டிவைப்போம். தோல்வி அடைந்தவர் அவரது பருந்தை மற்றவருக்கு கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையும் போட்டார்.
குரு கோவிந்தருக்கு எதிராளியின் உள்நோக்கம் புரிந்தது. உடனே பருந்து என்ன? குருவிகளை அனுப்புகிறேன் அதனோடு உங்கள் பருந்து போடியிடட்டும் என்றார். அந்த முஸ்லீம் கனவானோ உம்முடைய குருவிகள் என் பருந்துக்கு உணவாகிவிடும் என்று சொல்லி சிரித்தார்.
கோவிந்த சிம்மன் மரத்தில் இருந்த இரண்டு சிறிய குருவிகளைப் பிடித்து பருந்தை விரட்ட அனுப்பினார். இரண்டு குருவிகளும் பருந்தை படுகாயப் படுத்தி ஒரு கிலோ மீட்டருக்கு விரட்டிச் சென்றன. படு காயம் அடைந்த பருந்து கீழே விழுந்து இறந்தது. அப்போது குரு கோவிந்தர் சொன்ன சொற்கள் சீக்கியர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சொற்களாகும்.
சிட்டுக் குருவிகளைப் பருந்துகளாக்கி சண்டையிட வைப்பேன். அப்போதுதான் என்பெயர் கோவிந்த சிம்மன். ஒன்றே கால் லட்சம் பேர் வந்தாலும் அவை எதிர்த்துப் போராடும் என்றார்:
சிடியான் சே பாஜ் பனாவோ

சவா லாக் சே ஏக் லடாவோ
தப் குரு கோவிந்த நாம் சுனாவோ

இதையே சீக்கிய குரு கூறிய சொற்களிலேயே காணலாம்:

சிரியோன் சே மே பாக் லராவுன்
தபே கோவிந்த சிம் நாம் கஹாவுன்

தமிழ் திரைப் படங்களில் சிட்டுக் குருவி

தமிழ் திரைபடங்களும் சிட்டுக் குருவிகளைப் பற்றி பாடல்கள் பாடி அவைகளின் மூலம் கருத்துக்களைப் பரப்பியுள்ளன. சிட்டுக் குருவிக்கு என்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கெது சொந்த வீடு, உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர் வலம் வந்து விளையாடு (படம்: சவாலே சமாளி) என்ற பாடலில் பாரதி பாடலின் தாக்கத்தைக் காண்கிறோம்.
ஏ குருவி குருவி (படம்: முதல் மரியாதை), சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ( படம்: நல்லவனுக்கு நல்லவன்), சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா, என்ன விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல்லே ( படம்: டவுன் பஸ்), சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே (படம்: புதிய பறவை) ஆகிய பாடல்கள் தமிழர்களின் னினைவில் நீங்கா இடம் பெற்றுவிட்டன.

பஞ்சதந்திரக் கதைகளிலும் கூட குரங்குக்கு புத்திமதி சொன்ன குருவிகளின் கூட்டுக்கு நேர்ந்த கதி மூலம் ஒரு நீதி புகட்டப்படுகிறது. சங்க இலக்கியத்திலும் குருவிகளைப் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.

இப்படி 2000 ஆண்டுகளுக்கு நமக்கு ஊற்றுணர்ச்சி தரும் சிட்டுக் குருவி இனம் வெகு வேகமாக அழிந்துவருவது கவலை தருகிறது. சிட்டுக் குருவிகளை காப்பது நம் கடமை.
**************

மாதவியின் 11 வகை நடனங்கள்

பழந்தமிழ் நாட்டில் இந்துமதக் கதைகள்

Picture shows famous danseuse Jyotsna Jaganathan

கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்

குடைகுடிமால் அல்லியமற்கும்பம்—சுடற்விழியாற்

பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம்

கொட்டியிவை காண்பதினோர் கூத்து

“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” —என்று பாரதியாரால் பாராட்டப்பட்ட சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் மிகவும் சிறந்தது. கண்ணகி-கோவலனின் கதையைக் கூறும் இந்தக் காவியம் படிக்கப் படிக்கத் தெவிட்டாதது. தமிழ் மக்களின் கலைக் களஞ்சியம் இந் நூல். இதில் நாட்டியம், இசை, சிற்பம், ஓவியம் முதலிய எல்லாக் கலைகள் பற்றிய குறிப்புகளும் உண்டு. இந்த காவியத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டிவிட்டார்.

சிலப்பதிகாரக் காவியத்தில் கண்ணகிக்கு அடுத்தபடியாக வரும் பெண் கதாபாத்திரம் மாதவி. அவள் பேரழகி. சித்திராபதியின் மகள். பூம்புகாரில் அவளை அறியாதோர் இல்லை. காவிரி பூம்பட்டினம் என்று அழைக்கப்பட்ட பூம்புகாரில் இந்திரவிழா கோலாகலமாக நடந்தது. அதில் மாதவியின் நாட்டிய அரங்கேற்றம் சீரும் சிறப்புமாக நடந்தது. சோழ மன்னன், மனம் மகிழ்ந்து மாதவிக்கு 1008 பொற்காசுகளையும் தலைக்கோல் பட்டத்தையும் தந்து கவுரவித்தான். ஐந்து வயது முதல் நாட்டியம் கற்ற மாதவி அத்துறையில் கரை கண்டு 12ஆம் வயதில் அரங்கேறினாள்.

இசையிலும் நடனத்திலும் பெரும் ஈடுபாடு கொண்ட கோவலன், மாதவியின் கலைகளில் மயங்கினான். அவனது மனைவி கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவியுடன் வாழ்ந்தான். பின்னர் கண்ணகியை அடைகிறான். பொய்க் குற்றச் சாட்டின்பேரில் மதுரையில் கொலைத் தண்டணை பெறுகிறான். பொங்கி எழுந்த கண்ணகி மதுரையை எரித்து சேரநாடு சென்று பத்தினித் தெய்வமாகிறாள்.

இந்த அற்புதமான காவியத்தில் மாதவி ஆடிய 11 வகை நடனங்களை உரைகாரர்கள் நமக்கு அளிக்கின்றனர். அத்தனையும் அற்புதமான இந்துமத புராணக் கதைகள். 2000 ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் வாழ்வில் இந்துமதம் எப்படி இரண்டறக் கலந்திருந்தது என்ற பேருண்மை இதன் மூலம் வெளிப்படுகிறது. “நன்மை வந்தெய்துக !! தீதெலாம் நலிக” என்ற வெற்றிச் செய்தியை தமிழர்கள் பறை சாற்றியது தெரிகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய விஷ்ணு, சிவன், துர்க்கை, முருகன், கண்ணன் ஆகியோரின் அழகிய 11 நடனங்களை மாதவி ஆடினாள். அவைகளைக் காண்போம்:

picture shows Japanese woman performing Bharatanatyam

எண்ணும் எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும்

பண் நின்ற கூத்து பதினொன்றும்— மண்ணின் மேல்

போக்கினாள்; பூம்புகார்ப் பொன் தொடி மாதவி, தன்

வாக்கினால் ஆடு அரங்கின் வந்து

1.அல்லியம்: கண்ண பிரானை அழிக்க ஏவப்பட்ட யானையை அவன் வென்றதைக் குறித்து ஆடும் ஆட்டம் இது.

2.கொடுகொட்டி: சிவபெருமான் அசுரர்களின் முப்புரத்தை எரித்து ஆடிய ஆடம் கொடுகொட்டி.

3.குடை: முருகப் பெருமான் அவுணர்களை வென்றதைச் சித்தரிப்பது குடை நாட்டியம்

4.குடம்: கண்ண பிரான் தனது பேரப் பிள்ளை அநிருத்தனை பாணாசுரனிடமிருந்து மீட்க ஆடிய ஆடம் குடம் என்னும் வகை ஆகும்

5.பாண்டரங்கம்; சிவன் முப்புரம் எரித்த பின்னர் நான்முகன் காண ஆடியது பாண்டரங்கம் என்னும் வகை.

6.மல்: கண்ணனும், பாணனும் நடத்திய மற்போரைக் காட்டுவது மல் வகை நடனம்.

7. துடி: சூரபத்மனை முருகன் வென்ற பின்னர் ஆடிய ஆடம் துடி

8.கடையம்: வாணாசுரனின் தலைநகரின் வடக்கு வாசலில் அயிராணி (இந்திராணி) ஆடியது கடையம் என்னும் வகையால் காட்டப்படும்

9.பேடு: மன்மதன் தன் மகன் அநிருத்தனை சிறையிலிருந்து மீட்க பேடி வடிவத்தில் ஆடியது பேடு என்பதாகும். பாணாசுரணின் மகள் உஷாவைக் கடத்திச் சென்றதால் அநிருத்தனை பாணன் சிறையில் போட்டான்.

10.மரக்கால்: கொற்றவையை/ துர்க்கையை வெல்ல அவுணர்கள் தேள் ,பாம்பு முதலிய விஷப் பிராணிகளை அனுப்பினர். அப்போது மரக் கால்கள் கொண்டு நடனமாடி துர்க்கை வெற்றி பெறுவதைக் காட்டும் நடனம் இது

11. பாவை: போர் செய்ய வந்த அரக்கர்களை அழித்து திருமகள் ஆடிய ஆட்டம் பாவை எனப்படும்.

இவைகளில் முதல் ஆறும் நின்று ஆடும் ஆட்டங்கள். ஏனைய ஐந்தும் வீழ்ந்தாடுபவை. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள், நாட்டிய மேடை எப்படி இருக்க வேண்டும், எப்படி அலங்கரிக்கப் படவேண்டும் என்ற அரிய தகவல்களையும் தருகிறார்.

காவியத்தில் வேறு மூன்று இடங்களில் வேடுவர் ஆடிய ஆட்டங்கள், ஆய்ச்சியர் என்னும் இடையர்கள் ஆடிய ஆட்டம், மலைவாழ் மக்களாகிய குன்றக் குறவையர் ஆடிய ஆட்டம் என்பனவற்றையும் விளக்குகிறார். சிலப்பதிகார காவியத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் படித்து ஜீரணிக்க பாமர மக்களால் முடியாது. அத்துறையில் வல்ல அறிஞர் பெருமக்கள் வாழ் நாள் முழுதும் ஆராய வேண்டிய அற்புத பொக்கிஷம் அது என்றால் மிகையாகாது.

சில நாத்திகர்கள் பழந்தமிழர்கள் பற்றிப் பரப்பிவரும் தவறான கண்ணோட்டத்தை சங்க இலக்கியத்தில் வரும் நூற்றுக் கணக்கான இந்துமதக் கதைகளும் சிலப்பதிகாரமும் தவிடு பொடியாக்கிவிட்டன.

 

Picture shows another famous danseuse Charulatha Jayaraman

**************

மறுபிறப்பு உண்மையா ?- பகுதி 3

Picture is taken from another website.Thanks.

This article is the third part on Rebirth written by S NAGARAJAN

புனர்ஜென்ம உண்மைகள்! – 3

(அறிவியல், ஆன்மீக நோக்கில மறுபிறப்பு இரகசியங்கள்!)

 

தேவியின் பாதஸ்மரணை தரும் பலன்!

பதினெட்டு புராணங்களும் அத்தோடு பதினெட்டு உப புராணங்களும் தரும் புனர்ஜென்மக் கதைகள் மற்றும் சம்பவங்கள் சுவாரஸ்யமானவை.

எடுத்துக்காட்டாக தேவி பாகவதம் பதினொன்றாம் ஸ்கந்தம் பதினெட்டாம் அத்தியாயத்தில் விவரிக்கும் பிரக்த்ரதன் கதையைச் சொல்லலாம்.

பொதியமலையில் ஒர் சக்கிரவாக பக்ஷ¢ இருந்தது. அது பறந்தவாறே சென்று முக்தியை நல்கும் காசியை அடைந்தது.அங்கு அன்னபூரணி ஸ்தானத்தை விட்டு நீங்காது தினமும் பிரதக்ஷ¢ணமாகப் பறந்து கொண்டே இருந்தது.இந்தப் புண்ணியத்தால் இறப்பிற்குப் பின்னர் சுவர்க்கத்தை அடைந்து தேவரூபத்தோடு இரண்டு கற்பகாலம் வரை பல போகங்களை அனுபவித்துப் பின்னர் பிரகத்ரதன் என்ற பெயருடன் ஒரு க்ஷத்திரிய குலத்தில் பிறந்தது.அரசனாக விளங்கிய பிரகத்ரதன் சத்யவாதி. யாகங்களைச் செய்பவன்.ஜிதேந்திரியன். மூன்று காலங்களையும் அறியும் சக்தி கொண்டவன்.முன் ஜென்மம் தெரிந்தவன்.அவன் புகழ் எங்கும் பரவியது.

அவன் பூர்வ ஜென்ம ஞாபகத்தைக் கொண்டிருப்பவன் என்பதைக் கேள்விப்பட்டு முனிவர்கள் உட்பட்ட பலரும் அவனிடம் வந்தனர். அவர்கள் அவனை நோக்க,¢ ‘இப்படி திரிகால ஞானமும் பூர்வ ஜென்ம உணர்ச்சியும் உனக்கு எந்தப் புண்ணியத்தால்  வந்தது’ என்று ஆவலுடன் கேட்டனர்.

அவனோ,”பூர்வ ஜென்மத்தில் நான் சக்கரவாக பக்ஷ¢யாக இருந்தேன்.புண்ணியவசத்தால் ஞானமில்லாமலேயே அன்னபூரணியை தினம் வலம் வந்தேன்.அதனால் சுவர்க்கமடைந்து இரண்டு கற்பகாலம் சகல போகமும் அனுபவித்துப் பின் பூமியில் இந்த சரீரம் அடையப் பெற்று திரிகாலஞானமும் பூர்வஜென்ம உணர்ச்சியும் பெற்றவனாக இருக்கிறேன். ஜகதம்பிகையின் பாதஸ்மரணையின் பலத்தை யார் அறிவார்கள்! இதை நினைத்த மாத்திரத்தில் என் கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பம் பொங்குகிறது” என்று  கூறித் தேவியைத் தொழுவதால் ஏற்படும் பலன்களை விளக்கினான்!

அனுமனே ருத்ரன்

ஆனந்த ராமாயணம் தரும் ஒரு அற்புதச் செய்தி அனும, ராம பக்தர்களையும் சிவ பக்தர்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும்! ஏகாதச (பதினோரு) ருத்திரர்களே குரங்குகளாக ஜனனம் எடுத்த செய்தி தான் அது! அசுரர்களின் அழிவுக்காக விஷ்ணுவுக்கு சகாயம் செய்ய வீரபத்திரன் சுக்கிரனாகவும்,சம்பு நலனாகவும்,கிரீஸன் நீலனாகவும்,மஹாயஸன் சுஷேணனாகவும்,அஜைகபாதன் ஜாம்பவானாகவும்,அஹிர்புத்னன் அங்கதனாகவும், பினாகதாரி  ததிவக்ரனாகவும்,யுதாஜித்து தாரகனாகவும்,ஸ்தானு தாலகனாகவும்,பர்க்கன் மைந்தனாகவும்,ருத்திரன் அனுமானாகவும் பிறந்தார்கள். ஆக அனுமனை வணங்கினால் சிவனுக்கு பிரீதி; விஷ்ணுவுக்கும் பிரீதி, அனுமனுக்கும் கூட பிரீதி!

 

காசியப ரிஷியே தசரதன்!

அத்யாத்ம ராமாயணம் பாலகாண்டம் இரண்டாவது சர்க்கத்தில் (23-26 சுலோகங்களில்) பிரம்மாவிடம் விஷ்ணு கூறுவதாக  தசரதனின் முன் ஜென்மத்தை எடுத்துரைக்கிறது!

விஷ்ணு பிரம்மாவிடம், “பூர்வம் காசியப ரிஷி நம்மைப் புத்திரனாகப் பெற வேண்டித் தவம் செய்ய, நாமும் அவ்வாறே அவருக்குப் புதல்வனாகும் வரத்தைத் தந்தோம்.இப்போது அவரோ பூலோகத்தில் தசரதனாகப் பிறந்திருக்கிறார்.அவருக்கு மகனாக கௌஸல்யா தேவி கர்ப்பத்தில் நாம் அவதரிப்போம்” என்று கூறுகிறார்!

பிரம்ம புராணம் சுபத்ரை மற்றும் கௌசிகனின் முற்பிறவியை எடுத்துக் கூறுகிறது என்று ஆரம்பித்துப் பட்டியலிட ஆரம்பித்தால் புராண முற்பிறவி சம்பவங்கள் ஒரு பெரிய தொகுப்பு நூல் ஆகி ஏராளமான மர்மங்களை அவிழ்க்கும் முற்பிறவிக் களஞ்சியம் ஆகி விடும்! கர்மங்களின் விசித்திரச் சங்கிலித் தொடர்பு பற்றித் தெரிந்து கொண்டு பிரமிப்பின் உச்சிக்குச் சென்று விடுவோம்! எத்தனை கோடி மனிதர்களுக்குத் தான் எத்தனை கர்மங்கள்! அவர்களுக்குத் தான் கர்மபலனுக்கேற்ப எத்தனை கோடானு கோடி ஜென்மங்கள்! கோடானு கோடி சூப்பர் மெகா கம்ப்யூட்டர்கள் கூட இந்தக் கணக்கைத் துல்லியமாகப் போட முடியுமா, என்ன!

 

நான்கு முகம் இல்லாத பிரம்மா!

பாரதம் வியாஸருக்குத் தரும் செல்லப் பெயர் கூட ஒரு முற்பிறவித் தொடரின் காரணமாகத் தான் என்றால் வியப்பு மேலிடுகிறது, இல்லையா!

பகவானான வியாஸர் நான்கு முகம் இல்லாத பிரம்மா, இரண்டு கரங்கள் உள்ள விஷ்ணு, நெற்றிக் கண் இல்லாத சிவன்! என்று கீழ்க்கண்ட சுலோகத்தில் போற்றப்படுகிறார்:

அசதுர்வதநோ பிரம்மா; த்விபாஹ¤ரப ரோஹரி I

அபால லோ சநச் சம்பு: பகவான் பாத நாராயண: II

நான்கு முகமில்லாத பிரம்மாவாக அவர் படைப்புத் தொழிலில் ஈடுபட்ட சம்பவத்தை மஹாபாரத அநுசாஸன பர்வத்தில் காணலாம்.

அவசரமாக ஓடும் ஒரு புழுவைப் பார்த்த வியாஸர், ‘ஏன் இப்படி அவசரமாக ஓடுகிறாய்’ என்று கேட்கிறார். ‘எதிர் வரும் பார வண்டி என் மீது ஏறி என்னை அழிக்காமல் இருக்க ஓடுகிறேன்’, என்றது புழு! ‘உயிர் போனால் போகட்டுமே உடலில் என்ன சுகம்’ என்று கேட்ட வியாஸரிடம் அது, தான் முற்பிறவியில் மனிதனாக இருந்ததாகவும் செய்த பாவத்தால் புழுவாக ஆனதாகவும் செய்த புண்ணியத்தால் வியாஸருடன் பேசும் பாக்கியம் கிடைத்ததாகவும் கூறுகிறது. ‘உனக்கு முற்பிறவி பற்றிய அறிவு எப்படி உண்டானது’ என்று வியாஸர் கேட்க, ‘கிழவியான என் தாயாரைக் காப்பாற்றினேன், ஒரு ஏழை அந்தணருக்கு பூஜை செய்தேன்,ஒரு விருந்தாளியின் பசியை அகற்றிச் சந்தோஷப் படுத்தினேன் ஆதலால் எனக்கு இந்த அபூர்வ அறிவு உண்டாயிற்று’ என்று பதில் சொன்னது. இதனால் மகிழ்ச்சி அடைந்த வியாஸர் அதற்கு முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, மான்,பறவை, ஏழைப் பணியாளன், வணிகன். க்ஷத்திரியன், அரசன் என பல பிறவிகளை படிப்படியாகத் தந்தார். ஒவ்வொரு பிறவியிலும் அது வியாஸரை வணங்கியதால் இப்படி ஏற்றம் பெற்றது. இறுதியில் ஒரு வேதியராகப் பிறந்து புண்ய கருமங்களைச் செய்து அந்தப் புழு முக்தி பெற்றது!

இப்படிபிரம்மாவுக்குப் போட்டியாக ஒரு படைப்புத் தொழிலைச் செய்து ஒரு புழுவை முக்தி அடையச் செய்ததால் அவர் நான்கு முகம் இல்லாத பிரம்மா என்று போற்றப்படுகிறார். ஆனால், அறத்தின் மூலம் உயர் பிறவி பெற்று முக்தி அடையலாம் என்பதே  கதை சொல்லும் உண்மை ஆகும்.

 

காந்திஜி டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதம்

இனி நவீன யுகத்தில் நம் சம காலத்தில் வாழ்ந்த காந்திஜி புனர்ஜென்மம் பற்றிக் கொண்டிருந்த கொள்கைகளைப் பார்ப்போம். மகாத்மா காந்திஜி லியோ டால்ஸ்டாயின் கொள்கைகளினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். அதனால் அவருடன் கடிதத் தொடர்பு அவருக்கு இருந்தது. ‘ஒரு ஹிந்துவுக்குக் கடிதம்’ என்ற டால்ஸ்டாயின் கட்டுரையை அவர் பிரசுரிக்க விரும்பினார்.ஆனால் அந்தக் கட்டுரையில் ஒரு பாராவில் புனர்ஜென்மத்தை மறுத்து டால்ஸ்டாய் கருத்துத் தெரிவித்திருந்தார். 1909 அக்டோபர் முதல் தேதியிட்ட கடிதத்தில் டால்ஸ்டாய்க்கு அவர் எழுதிய கடிதத்தில் புனர்ஜென்மத்திற்கு எதிரான கருத்தைத் தெரிவிக்கும் அந்த பாராவை நீக்கி வெளியிட அனுமதி கேட்டார். புனர்ஜென்மம் என்பது லட்சக்கணக்கான இந்திய சீன மக்களால் நம்பப்படும் கொள்கை என்றும் அது “அனுபவத்தின் அடிப்படையிலானது” (With many, one might almost say, it is a matter of experience) என்றும் விளக்கிய காந்திஜி தென்னாப்பிரிக்காவில் டிரான்ஸ்வால் சிறையில் நொந்து வாடுவோருக்கு புனர்ஜென்மக் கொள்கை ஆறுதல் அளிக்கும் ஒன்று என்று எழுதினார். காந்திஜியின் வேண்டுகோளை ஏற்ற டால்ஸ்டாய் அதை நீக்கி வெளியிடத் தன் அனுமதியைத் தந்தார். உடனே காந்திஜி அவருக்கு நன்றி தெரிவித்து 11-10-1909 தேதியிட்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். புனர்ஜென்மக் கொள்கை சத்யாக்ரகப் போராட்டத்திற்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் கர்மா கொள்கை மூலமே தேசத்தை எழுப்பி விட முடியும் என்பதையும் நன்கு அறிந்திருந்த மகாத்மா கர்மாவிற்கு ஏற்ற பலன் என்ற  அறவழிக் கொள்கையின் அடிப்படையில் தேசத்தை புனர் நிர்மாணம் செய்தார்.

இனி காந்திஜியே 1935ம் ஆண்டு ஒரு கமிஷன் அமைத்து ஆராய்ந்த சாந்திதேவியின் (பிறப்பு 11-12-1926 மறைவு 27-12-1987) புனர்ஜென்ம சம்பவத்தைப் பார்ப்போம். புனர்ஜென்மத்தை ஆராய்ந்த விஞ்ஞானி ஐயான் ஸ்டீவன்ஸனும் சாந்திதேவியை அவர் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் 1986ல் தன் ஆய்வுக்காகச் சந்தித்ததும் குறிப்பிடத் தகுந்தது.

நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்?

நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்?

சமுத்திர குப்தன் என்ற மாபெரும் குப்தப் பேரரசனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு அவனுடைய ஆதிக்கம் இரு கடல் எல்லையைத் தொடும் அளவு பரவியிருந்ததாகவும் கவுதமி புத்ர சதகர்ணியின் ஆட்சி முக்கடல் இடைப்பட்ட பகுதி முழுதும் நிலவியதாகவும் கல்வெட்டுகள் கூறும்.

பராந்தக வீரநாராயண ப ண்டியனின் தளவாய்புரம் செப்பேடு:

“ஹரிச்சந்திரன் நகரழித்தவன் பரிச்சந்தம் பல கவர்ந்தும்

நாற்கடலொரு பகலாடி நாற்கோடிபொன்னியதி நல்கி

நூற்கடலைக் கரைகண்டு நோன்பகடாயிரம் வழங்கியும்”

என்று கூறுகிறது. இது ஒன்பதாம் நூற்றாண்டு செப்பேடு.இன்னும் பல நூல்களிலும் இவ்வாறு ஒரே நாளில் 4 கடல் நீறைக் கொண்டுவந்து குளித்ததாகவும் முக்கடல் நீரில் நீராடியதாகவும் படிக்கிறோம். ஏன் இப்படிச் செய்தார்கள் ,இப்படிச் செய்ய முடியுமா? என்ற சுவையான விஷயத்தை ஆராய்வோம்.

இது உண்மைதான். ஆனால் தினமும் அவர்கள் இப்படிக் குளித்தார்களா என்பதைச் சொல்லமுடியாது. இப்போதும் கூட பெரிய கோவில்களின் கும்பாபிஷேகத்துக்கும், பெரிய சந்யாசிகள், குருமார்கள் பிறந்ததின வைபவங்களுக்கும் பல புண்ய தீர்த்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.நாம் கூட வீடுகளில் கங்கை நீரை அவ்வப்போது பயன்படுத்துகிறோம்.

மன்னர்கள் இப்படிச் செய்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. தங்களுடைய ஆட்சி எவ்வளவு தூரம் பரவி இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்திப் பெருமைப் பட இது உதவியது 2. கடல் நீராடல் புனிதம் என்பது புராண இதிஹாசங்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் மிகத் தெளிவாக எழுதப் பட்டிருக்கிறது. இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருக்கும் நம்பிக்கை.

பல்யானை செல்கெழு குட்டுவன் யானைகளை வரிசையாக நிறுத்தி அவைகளின் மூலம் தண்ணீர் கொண்டுவந்து நீராடினான் என்று பதிற்றுப் பத்து (3ஆம் பத்து) பதிகம் கூறுகிறது.. போர்ப் படைகள் பல பெரிய நதிகளைக் கடக்க அந்தக் காலத்தில் யானைகள வரிசையாக நிறுத்தி அதன் மீது சென்றனர். இதை காளிதாசனும் (ரகு. 4-38, 16-33) கூறுவான். அலெக்சாண்டரும் இப்படிச் செய்தான்.

வீரபாண்டிய கட்டபொம்மன் தினமும் திருச்செந்தூர் கோவில் தீபாராதனை நடந்த பின்னர்தான் சாப்பிடுவானாம். தீபாராதனை முடிந்ததை அறிய அவன் செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை நிறைய மணிக் கூண்டு கோபுரங்களை நிறுவினான். கோவில் மணி அடித்தவுடன் ஒவ்வொரு மணிக் கூண்டாக ஒலிக்கும். ஒரு மணிக்குண்டு ஒலியைக் கேட்டவுடன் அடுத்த மணியை தொலை தூரத்திலுள்ளவன் கேட்டு மணி அடிப்பான். இறுதியில் பாஞ்சாலங்குறிச்சியில் மணி ஓசை வந்தவுடன் கட்டபொம்மன் சாப்பிடுவான். இந்த மணிக்கூண்டுகளின் மிச்ச சொச்ச இடிபாடுகள் இப்பொதும் இருக்கின்றன.

மாயா இன மக்கள்

தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் 3000 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மாயா இன மக்களும் செய்திகளை அனுப்ப வேகமாக ஓடுபவர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தனர். மாயா இன மக்களுக்கு சக்கரம் பயன்படுத்தத் தெரியாததால் ஓட்டப் பந்தய வீரர்களை வைத்தே பல காரியங்களைச் சாதித்தனர்.

உலகப் புகழ்பெற்ற மராத்தன் ஓட்டப்போட்டியும் ஒரு வீரன் 26 மைல் ஓடிவந்து செய்தியைக் கொடுத்துவிட்டு இறந்துபோனதன் நினைவாகவே நடைபெறுகிறது. அவன் கிரேக்க வீரன்.

ஒரு சிறிய கணக்குப் போட்டுப் பார்த்தால் இதன் பெருமையையும் அருமையையும் நாம் அறியலாம்:

மாரத்தன் ஓட்டம் (26 மைல்)- சுமார் 2 மணி நேரம் ஆகும்

ஒரு மணிக்கு 13 மைல் ஓடலாம்

10 மணி நேரத்தில் 130 மைல் ஓடலாம் (ஒரே ஆள் இப்படி ஓட முடியாது. மிகவும் தேர்ச்சி பெற்ற 10 ஓட்டக்காரர்களை அமர்த்தி ரிலே ரேஸ் ஓடச் செய்வார்கள் பழைய கால மன்னர்கள் ).

தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட கரூர், உறையூர், மதுரை ஆகியன இரண்டு கடல்களிலிருந்தும் 150 மைல்களுக்குள்ளாகவே இருந்தன. ஒருவர் காலை ஆறு மணிக்கு கடல் நீரை கலசத்தில் எடுத்துக் கொண்டு ஓடினால காலை 11 மணிக்கு 65 மைல் வந்து விடலாம். இதுவே குதிரையில் வந்தால் மூன்று மணி நேரத்தில் 75 மைல் வந்து விடலாம். ஆக காலை 6 மணிக்கு குதிரை வீரர்கள் கடல் நீர் கலசங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டால் காலை பத்து மணிக்குள் 100 மைல் வந்துவிடலாம். இதிலும் ஒரே குதிரையில் செல்லாமல் ரிலே ரேஸ் போல குதிரைகளை மாற்றினால் இன்னும் வேகமாக வரலாம். மதுரை பாண்டிய மன்னன் தளவாய்புரம் செப்பேட்டில் கூறியபடி நீராடலாம். நாலாவது கடல் என்று கூறுவது எது என்று தெரியவில்லை. ஒருவேளை வட திசையிலிருந்து வரும் நீராக இருக்கலாம்.

தமிழ்நாட்டுக் கோவிலகளுக்கு இன்றும் கூட சுவாமிக்கு அபிஷேகம் செய்ய கங்கை ஜலம் லாரிகளில் கொண்டுவரப்படுகிறது. கன்யாகுமரி ஜில்லாவில் ஆண்டுதோறும் சிவராத்திரி நாளில் இந்துக்கள் 12 சிவாலயங்களில் தரிசினம் செய்ய சுமார் 50 மைல்கள் சிவாலய ஓட்டம் ஓடுவதை இப்போதும் காணலாம்.ஆக புனித நீர், ஓட்டம் என்பதெல்லாம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

காஞ்சி முதல் குமரி வரை புறா ரேஸ் வைத்தபோது அந்த தூரத்தை புறா 13 மணி நேரத்தில் கடந்துவிட்டது. ஆக தண்ணிரை இந்தக் காலம் போல பாலிதீன் பைகளில் அடைத்தால் புறாக்கள் கூட இன்னும் வேகமாகக் கொண்டுவந்து விடும்!!

***********

சஹஸ்ரலிங்கம்: கர்நாடகா-கம்போடியா அதிசிய தொடர்பு

Sahasralinga in Kanataka

(English version of this article is already posted under “The Mysterious Link between Karanataka “. Related subjects “Cambodia and Indus Goddess: Karnataka-Cambodia Link” and Pandya King Who Ruled Vietnam).

இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்துக்கும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள கம்போடியா நாட்டுக்கும் அதிசியமான தொடர்பு நிலவுகிறது. உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் கோவில் கம்போடியாவில் இருப்பதைப் பலரும் அறிவார்கள். வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோநேசியா, கம்போடியா முதலிய நாடுகளில் இந்துக்கள் 1500 ஆண்டுகளுக்கு ஆட்சி செலுத்தியதையும் அகத்தியர், கவுண்டின்யர் என்ற இரண்டு பிராமணர்கள் இந்த ஆட்சியை நிறுவியதையும் பலரும் வரலாற்றுப் புத்தகத்தில் படித்திருப்பர். ஆனால் வியட்நாமில் ஸ்ரீமாறன் என்ற பாண்டியன் ஆட்சியை நிறுவியதும் கம்போடியாவில் சஹஸ்ரலிங்கம் இருப்பதும் பலருக்கும் தெரியாது.

கர்நாடகத்திலும் கம்போடியாவிலும் மட்டும் ஓடும் நதிக்கிடையில் இப்படி ஆயிரம் லிங்கங்களை யார் செதுக்கினார்கள், எப்போது செதுக்கினார்கள், ஏன் செதுக்கினார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. இதற்கான சாட்சியங்கள் பழைய நூல்களில் இல்லை. பெரும்பாலும் செவி வழிச் செய்தியில்தான் கிடைக்கிறது. ஆயினும் பல நூற்றாண்டுகளாக, ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவை இரண்டும் இருக்கக் கூடும்.

கர்நாடக மநிலத்தின் வடக்கு கன்னட பகுதியில் சால்மலா ஆற்றில் இந்த ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. சீர்சி என்னும் ஊரிலிருந்து  17 கிலோமீட்டர் பயணம் செய்தால் இதை அடையலாம். ஆற்று நீரோட்டத்தில் நூற்றுக் கணக்கான லிங்கங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இயற்கை அழகு கொஞ்சும் இடம்– மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென் மேற்குப் பருவமழை கொட்டும் காலங்களில் ஆறு கரை புரண்டு ஓடும் காட்சி கண்கொள்ளாக் கட்சியாகும். லிங்கங்கள் அதன் அடிப்பாகமான யோனியுடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஷால்மலா ஆற்றின் நீரால் இவைகளுக்கு எப்போதும் அபிஷேகம்தான். கோவில்களைப்போல யாரும் போய் அபிஷேகம் செய்யவேண்டியதில்லை.ஆண்டுதோறும் சிவராத்திரியின்போது ஏராளமான மக்கள் வந்து வணங்குகின்றனர்.

இயற்கை எழில் சிந்தும் இந்த இடத்தைச் சுற்றி பச்சைப் பசேல் என்று மரங்களும் சல சல என்று ஓடும் நதியும் மனதுக்கு இதம் அளிக்கும். ஆற்று நீரோட்டதுக்கு இடையே இருக்கும் பாறைகளில் லிங்கங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தரும்.

இந்தியாவில் இப்படி ஒரு மகானுக்கு யோசனை வந்து இதை நிறுவியதே ஆச்சரியமான விஷயம். இதையே கம்போடியாவின் காட்டுக்குள் ஓடும் நதியில் யார் செய்தார்கள் என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது! கம்போடியாவிலும் இதை சஹஸ்ரலிங்கம் என்ற சம்ஸ்கிருத பெயரிலேயே இன்று வரை அழைக்கின்றனர்.

கம்போடியாவின் உலகப் புகழ் கோவில் அங்கோர்வட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கபல் சியான் என்னும் ஊர் இருக்கிறது.அங்கே ஓடும் ஆற்றுக்கு இடையேயும் சஹஸ்ரலிங்கம் செதுக்கப்பட்டுள்ளன. அங்கே மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் லெட்சுமி, விஷ்ணு, ராமர், அனுமார், சிவன் ஆகிய உருவங்களையும் செதுக்கி இருக்கிறார்கள். இதையும், சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளையும் காண நிறைய பயணிகள் வருகிறார்கள். அவர்கள் சபரிமலை போல காடு மேடுகளக் கடந்து வந்துதான் பார்க்கவேண்டும்.

Kbal Spean in Cambodia

கபால் சியான் என்றால் பாலம் என்று பொருள். இயற்கையாகவே அமைந்த கல் பாலம் வழியாக இந்த சஹஸ்ரலிங்க தலத்தை அடைய வேண்டும். ஆற்றின் இரு பக்கப் பாறைகளிலும் மிருகங்களின் சிற்பங்களையும் காணலாம். இந்த ஆறு குலன் மலையின் தென் மேற்கு சரிவில் இருக்கிறது. அருமையான ஒரு நீர்வீழ்ச்சியும் உண்டு. சுமார் 50 அடி உயரத்திலிருந்து விழும் அருவி மனம் கவரும் ஒரு காட்சியாகும். ஒரு காலத்தில் மன்னர்கள் புனித நீராட இங்கே வருவார்களாம்.

சஹஸ்ரலிங்கம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கோவில்களை 11 ஆவது 13 ஆவது நூற்றாண்டுகளில் கம்போடியாவை ஆண்ட இந்து மன்னர்கள் முதலாம் சூர்யவர்மன், இரண்டாம் உதயாதித்யவர்மன் உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. சிவலிங்கம் ஆக்க சக்தியின் வடிவம் என்றும் ஆற்றுப் படுகைகளில் சிவலிங்கங்களை நிறுவினால் தானிய விளச்சல் அதிகரிக்கும் என்றும் கம்போடீய மக்கள் நம்புகின்றனர். கம்போடிய நெல் வயல்களைச் செழிக்கச் செய்வதோடு மக்களை புனிதபடுத்தும் என்பது அவர்கள் நம்பிக்கை.

கம்போடியாவில் நீண்ட காலம் நடந்த யுத்தத்தினால் ஏராளமான இந்துச் சின்னங்கள் சின்னா பின்னமாயின. ஆனால் காட்டுக்குள் இருக்கும் சஹஸ்ரலிங்கம் பாதிக்கப்படவில்லை. கம்போடிய சஹஸ்ரலிங்கத்தைக் காண பண்டேய்ஸ்ரீ என்னும் இடத்திலிருந்து 12 கிலோமீட்டர் போகவேண்டும். மலை அடிவாரத்திலிருந்து கரடு முரடான பாதைகள் வழியாக 45 நிமிடம் மேலே ஏறிச் சென்றால் சஹஸ்ரல்ங்கங்களைக் கண்டு களிக்கலாம். மஹாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது பள்ளி கொண்டிருக்கும் காட்சி அற்புதமாக இருக்கிறது. அவருடைய நாபியிலிருந்து எழும் தாமரையில் பிரம்மா காட்சி தருகிறார்.

கர்நாடகத்துக்கோ கம்போடியாவுக்கோ போக முடியாதவர்கள் யூ ட்யூபில் இவைகளக் காணலாம்.கூகுல் செய்தால் போதும் .எனது ஆங்கிலக் கட்டுரையில் இடங்களின் பெயர்கள் இருக்கின்றன.

வட குஜராத்திலும் ஒரு சஹ்ஸ்ரலிங்கம்

வட குஜராத்தில் பதான் நகருக்குப் பக்கத்தில் சஹஸ்ரலிங்க குளம் இருக்கிறது. இதை கி.பி.1084ல் சித்தராஜ் ஜெய்சிங் என்ற மன்னன் கட்டினான். ஆனால் இப்போது 48 தூண்களுடன் கூடிய கோவில் மட்டுமே இருக்கிறது. அதில் பல குட்டி லிங்கங்கள் இருக்கின்றன. முஸ்லீம் படை எடுப்புகளில் பெரும் பகுதிகள் அழிந்துவிட்டன.

இவை தவிர நாடு முழுதும் ஒரே கல்லில் ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப் பட்ட சஹஸ்ரலிங்கம் சிலைகளும் உண்டு. ஒரிஸ்ஸா மாநில புவனேஸ்வரில் பரசுராமேஸ்வரர் கோவிலில் இருக்கும் சஹஸ்ரலிங்கம்தான் மிகப் பெரியது, அழகானது. இதையும் பரசுராமேஸ்வரா கோவில், புவனேஸ்வர் என்று கூகுள் செய்தால் கம்ப்யூட்டர் திரைகளிலேயே காணலாம்.

ஹம்பி நகரில் துங்கபத்திரா நதிக்கரையில் 108 லிங்கங்கள் இருக்கின்றன.

 

ஆயிரம் ஏன்?

யஜூர்வேதத்தில் வரும் புருஷசூக்தத்தில் இறைவனை ஆயிரம் கண்கள், ஆயிரம் தலைகள் நிறைந்தவன் என்று போற்றுகின்றனர். ரிக் வேதத்தில் ஆயிரம்கால் மண்டபம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. நாயக்க மன்னர்கள் கட்டிய கோவில்களில் எல்லாம் ஆயிரம் கால் மண்டபங்கள் உண்டு. இறைவன் எங்கும் நிறந்தவன் , கணக்கில் அடங்காதவன் என்பதற்காக இந்துக்கள் சஹஸ்ரநாமம், சஹஸ்ரலிங்கம், சஹஸ்ர கால் மண்டபம் என்று போற்றுவது மரபு.

************

 

கண்ணன் வழி , தனி வழி !

Raja Ravi Varma picture: Krishna and Sathyaki in Kaurava court

( நாமும் அனுமார் ஆகலாம் என்ற கட்டுரையின் இரண்டாவது பகுதி இது. அனுமார், அவருக்கு வந்த இடையூறுகளை எவ்வாறு களைந்தார் என்பது முதல் பகுதியில் விளக்கப்பட்டது. இதோ கண்ணன் வழி )

சோதனைகள், பிரச்சினைகள், இடையூறுகள் வந்தால் அவைகளைக் கண்ணன் தீர்க்கும் வழி தனி வழி. மகாபாரதக் கதைகளை கேட்டவர்களுக்கு நூற்றுக் கணக்கான உதாரணக் கதைகள் நினைவுக்கு வரும். இது கண்ணன் பற்றிய ஒரு பாகவதக் கதை.

கண்ணனும் சாத்யகியும் இணை பிரியா நண்பர்கள். இருவரும் யாதவ குல திலகங்கள். ஹஸ்தினாபுரத்துக்கு தூது சென்றபோதும், யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்துக்குச் சென்றபோதும் கண்ணனுடன் சென்றவன் சாத்யகி. மாபாரதப் போரில் 18 நாட்களும் போரிட்டவன். பாண்டவர்களின் ஏழு படைப் பிரிவுகளில் ஒரு படைக்கு தளபதி.

ஒரு நாள் கண்ணனும் சாத்யகியும் தொலைதூரப் பயணம் சென்றனர். பாதி வழியில் இருட்டிவிட்டது. இருவரும் நடுக் காட்டில் கூடாரம் அடித்துத் தங்கினர். யார் பாதுகாவல் காப்பர்கள் என்று ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். நாலு ஜாமம் கொண்ட இரவில் மாறி மாறி ஒவ்வொரு ஜாமத்தையும் ஒருவர் காப்பது என்று உடன்பாடு ஆயிற்று.

முதல் ஜாமத்தில் சாத்யகி காவல் காத்தார். அப்போது ஒரு பூதம் அவனைத் தாக்க வந்தது. சாத்யகி மாவீரன். கோபமும் வீரமும் கொந்தளிக்க பூதத்தைத் தாக்கினான். இவன் தாக்கத் தாக்க பூதம் மேலும் பலம் அடைந்தது, உருவத்தில் பெரிதாகிக் கொண்டே வந்தது. இதற்குள் முதல் ஜாமம் முடியவே, கண்ணன் காவல் காக்க வெளியே வந்தான்.

ஒன்றுமே நடக்காதது போல பாவனை செய்துகொண்டு சாத்யகி தூங்கப் போய்விட்டான். அதே பூதம் கண்ணனுடன் மோதியது. கண்ணன் கோபத்தையும் வீரத்தையும் காட்டாமல் அன்பே, ஆருயிரே, என் செல்லமே என்று பூதத்தைத் தட்டிக் கொடுத்தான். கண்ணன் அன்போடு தட்டத் தட்ட பூதம் சுருங்கிக் கொண்டே போயிற்று. இதற்குள் மூன்றாம் ஜாமம். உடனே சாத்யகி மீண்டும் காவல் காக்க வந்தான். கண்ணனை ஏற இறங்கப் பார்த்தான். அடி வாங்கிய சுவடே இல்லை. வாரிய தலை கூட கண்ணனுக்குக் கலையவில்லை. விஷமக் கார கண்ணன் முதல் ஜாமத்தில் நடந்தது என்ன என்று ஊகித்தறிந்தான்.

கண்ணன் தூங்கபோன உடனே பூதம் வந்தது, மீண்டும் சண்டை, அடி தடி, குத்து, வெட்டுதான். சாத்யகிக்கு செமை அடி. அவன் தாக்கத் தாக்க பூதம் பெரிதாகியது. சாத்யகிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. கண்ணனை உதவிக்கு அழைத்தால் அவமானம்.. நல்ல வேளையாக அந்த ஜாமம் முடிவுக்கு வரவே கண்ணன் காவல் காக்க வந்தான். எல்லாம் பழைய கதைதான். பூதத்தைப் புகழ்ந்து புகழ்ந்து தட்டிக் கொடுத்தான். கண்ணன் அன்போடு தட்டத் தட்ட பூதம் சுருங்கிக் கொண்டே போயிற்று அவன் அதைப் பிடித்து வேட்டியில் ஒரு ஓரத்தில் கட்டிக் கொண்டு முடிச்சுப் போட்டுவைத்தான். உள்ளே போய், “சாத்யகி விடிந்துவிட்டது. நாம் பயணத்தைத் துவங்கவேண்டும்” என்று கூறினான்.

சாத்யகிக்கு ஒரே ஆச்சர்யம். இது என்ன? அந்த பூதம் என்னிடம் மட்டும்தான் வாலாட்டியதா? கண்ணனிடம் வரவே இல்லையா? என்று நினைத்துக் கொண்டு மெதுவாக கண்ணனிடம் பேச்சுக் கொடுத்தான். “கண்ணா, இரவில் ஏதேனும் நடந்ததா? காவல் காப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா?” என்றான் மெதுவாக.

கண்ணனுக்குதான் சுற்றிவளைத்துப் பேசத் தெரியாதே! “ஓ, நீ பூதம் பற்றிக் கேட்கிறாயா? இதோ பார் இதுதான் என்கூட இரவில் சண்டைக்கு வந்தது என்று வேட்டியின் முடிச்சை அவிழ்த்து பூதத்தைக் காட்டினான். சாத்யகியுடன் சண்டை போட்ட அதே பூதம்! சாத்யகிக்கு ஆச்சர்யம் எல்லை கடந்துபோனது. அவன் கேள்வி கேட்பதற்கு முன்னர் கண்ணனே பதில் கூறிவிட்டான்.

“இதோ பார் சாத்யகி, ஒரு பிரச்சினை அல்லது கோபம் வரும்போது அதைப் பெரிதாக்குவது நாம்தான். அதையே நினைத்து நினைத்து ,அதனுடன் மோத மோத அது பெரிதாகிவிடும். அதே கோபத்தையோ பிரச்சினையையோ ஆற அமர சிந்தித்து ஆத்திரப் படாமல் சிந்தித்தால் பிரச்சினை சிறிதாகிவிடுமென்று சொல்லிக் கொண்டே கண்ணன் அந்த குட்டி பூதத்தைக் காட்டுக்குள் தூக்கி எறிந்தான். அது உருண்டு ஓடி விட்டது.

ஆங்கிலத்தில் பூதத்தை உண்டாக்கி சண்டை போடுவது என்ற சொற்றொடரே (Creating a Phantom and fighting with it) இருக்கிறது. ஆக பிரச்சினையோ சோதனையோ வந்தால் அமைதியாகத் தட்டிக் கொடுங்கள். அது உங்களுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடிப்போய்விடும்.

*************************

நாமும் அனுமார் ஆகலாம்

Image

வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாதோர் யாரும் இல்லை. கல்யாணம் ஆனவருக்கும் கல்யாணம் ஆகாதவருக்கும், குழந்தை பெற்றவருக்கும் குழந்தையே பெறாதவர்க்கும், பணம் இருப்பவர்க்கும் பணமே இல்லாதவர்க்கும், வேலை இருப்பவர்க்கும் வேலையே இல்லாதவர்க்கும் பிரச்சனைகள் உண்டு. இவைகளைத் தீர்க்க ஒன்று கிருஷ்ணர் ஆகலாம் இல்லையேல் அனுமார் ஆகலாம். அனுமார் ஆனால், அட, குரங்கே ! என்று கேலி செய்வார்கள் என்று நினைக்கலாம். ஆனால் அவர் பிரச்சனைகளைத் தீர்த்த முறையையாவது பின்பற்றலாமே!

கடலைத் தாண்டி சீதையைத் தேடப் போனான் அனுமன். முதலில் அவனுக்கு வந்த தடங்கல் மைநாக பர்வதம் என்னும் மலை. நன்றாக சொகுசாக ஓய்வு எடுக்க அருமையான இடம். நாம் எந்த ஒரு செயலைச் செய்யப் போனாலும் முதலில் அது நமக்கு மிகவும் பிடிக்கும். அதில் சொகுசு கண்டு ஓய்வெடுத்தால் அடுத்த கட்டம் செல்லவே முடியாது. அனுமன் ஏமாறவில்லை. மைநாக பர்வதம் என்ன சொன்னாலும் கேட்காமல், தான் முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என்று மீண்டும் விண்ணில் பறக்கத் துவங்குகிறான். சீதையை தேடிக் கண்டுபிடிப்பது ஒன்றே குறிக்கோள்.

அனுமனுக்கு வந்த இரண்டாவது இடையூறு சுரசா என்னும் அரக்கி. அவள் பயங்கரமான உருவம் உடையவள். நமக்கு வரும் பிரச்சனைகளும் முதலில் பயங்கரமாகத்தானே இருக்கின்றன. அதை எண்ணி, எண்ணித் தூக்கம் கூட கெட்டு விடுகிறது. அனுமன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் வழி விட மறுக்கிறாள் சுரசா. யாரானாலும் என் வாயில் புகுந்து பின்னர் வெளியேறலாம் என்கிறாள். அதாவது வாயில் புகுந்தால் அவனுடைய கதி சகதி என்பது அவள் கணிப்பு. அனுமன் அதற்கு ஒப்புக் கொண்டு தன் உருவத்தை மேலும் மேலும் பெரிதாக்குகிறான். சுரசாவும் வாயை மேலும் மேலும் பெரிதாக்குகிறாள். அனுமன் திடீரென தனது உருவத்தைச் சுருக்கி வாயில் புகுந்து காது வழியாக வெளியே வந்து ஆகாயத்தில பறந்து விடுகிறான்.

இதிலும் நாம் அனுமன் போல மாறி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். சாம, தான, பேத தண்டம் என்னும் சதுர்வித—4 வகையான—உபாயங்களைப் பின்பற்றித் தீர்வு காணலாம். முதலில் சுரசாவிடம் கெஞ்சினான். அவளோ அனுமன் கெஞ்சக் கெஞ்ச மிஞ்சினாள். அவளைக் கோபப்படுத்தி வாயை பிளக்கவைத்து எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராத விதமாகத் தப்பிக்கிறான். பல விஷயங்களில் நாமும் இப்படித் தீர்வு காண முடியும். வழக்குப் போட்டவனும் நம் மீது குற்றம் சாட்டியவனும் நாம் இப்படித்தான் நடப்போம் என்று நினைக்கும் நேரத்தில் நாம் பெரிய விஷயத்தை சிறிய உருவத்தில் ( சின்ன உபாயம் மூலம்) சந்தித்து அதிலிருந்து நழுவி விடலாம். சுருக்கமாகச் சொன்னால் செஸ் விளையாட்டில் எதிர்பாராத விதமாக காயை நகர்த்தி எதிரியைத் திகைக்கவைப்பது போல இது.

இதற்குப் பின்னர் அனுமன் சந்தித்த இடையூறு சிம்ஹிகை என்னும் அரக்கி. மாயா ஜாலங்களில் வல்லவள். அவள் எல்லோருடைய நிழலையும் அடக்கி ஆள்பவள். அது அவள் மீது பட்டாலே போதும் அவள் நம்மை அடக்கி ஆளமுடியும். அனுமனின் நிழல் கடலில் விழுந்தவுடன் அவனுடைய வேகத்தையே குறைத்துவிடுகிறாள். இதுவரை அனுமன் சந்தித்தவர்கள் அவன் உடலுக்குத் தீங்கு செய்ய எண்ணினார்கள். சிம்ஹிகை அவனது புகழுக்குப் பெயருக்குக் களங்கம் கற்பிக்கப் பார்ப்பதையே நிழல் என்று ராமாயணம் கூறுகிறது. நம் மீது பொறாமை கொண்டவர்கள் நம்மை நியாயமான முறையில் சண்டை போட்டொ, போட்டியிட்டோ வெல்ல முடியாவிட்டால், நம் மீது அலுவலகத்திலோ நம் குடும்பம் பற்றியோ அவதூறுகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள் அல்லவா? அதுதான் நிழல் அரக்கி.

சிம்ஹிகையை அனுமன் எப்படிச் சமாளிக்கிறன்? அவளுடைய வாய்க்குள் புகுந்து வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வருகிறான். நமக்கு எதிரான அவதூறு, அவப் பெயர்களைத் தருணம் பார்த்து கிழித்தெறிய வேண்டும் என்பது இதிலிருந்து கற்க வேண்டிய பாடம். இதே நிழலை நம் மனத்திலிருந்து வரும் பொறாமை, கோபம் முதலியனவாகவும் வருணிக்கலாம். மொத்தத்தில் ராமாயணம் எவ்வளவு அழகாக நிழல் அரக்கி என்று சொல்கிறது பாருங்கள்!! அற்புதமான மனோதத்துவ வருணனை.

இதற்குப் பின்னரும் இதற்கு முன்னரும் அனுமன் சந்தித்த எதிரிகள், பிரச்சனைகள் எவ்வளவோ. லங்கினி, ராவணன், சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்படி எத்தனையோ சோதனைகளைச் சொல்லலாம். அனுமனின் வாழ்க்கையைப் படிப்பவர்களுக்கு குடும்பம் மற்றும் அலுவலகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எளிது. அனுமான் சாலீஸாவைப் படித்தால் மட்டும் போதாது. பொருளை உணரவேண்டும், அதைப் பின்பற்றவேண்டும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலான் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான் (கம்பன்)

அனுமன் கண்ட எல்லா அரக்கிகள் ,சோதனைகளை ஒருவர் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஏற்படும் சோதனைகள் என்றும் விளக்கலாம், வியாக்கியானம் செய்யலாம். இனி கண்ணன் வழியைக் காண்போம்.

கண்ணன் வழி, தனி………தனீ……. வழி ! அதைத் தனியாகக் காண்போம்.