பானை உடைத்தவன் பாக்கியசாலி! (Post No.3018)

-font-b-Ceramics-b.jpg

Translated  by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3016

Time uploaded in London :–  8-16 AM

(Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

எழுத்துத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்:–

பிறருடைய கட்டுரைகள், கதைகள், துணுக்குகள் முதலியவற்றை மீண்டும் பயன்படுத்துகையில் எழுதியோருடைய பெயர்கள், வெளியிட்டவர்களின் பெயர்களை நீக்காமல் பகிருங்கள்; எழுத்தைத் திருடினால் உங்கள் மனைவி, மகள்கள், சொத்து, சுகம் இவைகளை வேறு ஒருவன்  திருடிவிடுவான் என்பதை அறியீரோ!

xxx

vase large_1027_2083145b

பீங்கான் தட்டுகள், குடங்கள்,பூக்கள் வைக்கும் ஜாடிகள், அலங்காரப் பொருட்களை விற்கும் கடையில் ஒரு இளைஞன் வேலைக்குச் சேர்ந்தான். எல்லாம் விலை உயர்ந்த பொருட்கள். அவனுக்கோ கை நடுக்கம்.

 

நல்ல பூ வைக்கும் ஜாடியை உடைத்துவிட்டான்.

முதலாளி விரைந்தோடி வந்தார்.

 

இதோ பார், இதற்கான பணத்தைக் கொடுத்தால் தான் உனக்கு வேலை.

 

இதன் விலை என்ன?

முதலாளி: 300 டாலர். அவ்வளவு பணம் உன்னிடம் இல்லை என்று எனக்குத் தெரியும். ஆகவே வாரா வாரம் உனது சம்பளத்தில் ஒரு டாலர் கழித்து வருவேன்.

ரொம்ப நல்லது, முதலாளி! எனக்கு 300 வாரங்களுக்கு வேலை இருக்கிறதே! அதுவே போதும்!!

 

.////

சந்தேகப் பங்காளிகள்!

 

இரண்டு பேர் கூட்டு சேர்ந்து வியாபாரம் நடத்தி வந்தனர். இருவரும் விடுமுறையைக் கழிக்க ஒரு தீவுக்குச் சென்றனர். கடலில் நீந்தக் குதிக்கும்போது ஒரு பார்ட்னர் சொன்னார்:-

 

அடக் கடவுளே? கடையின் கதவைப் பூட்டினேன். ஆனால் பணப் பெட்டியைப் பூட்ட மறந்து விட்டேன்!

 

மற்றொரு பங்காளி: அதனால் என்ன?

 

ஆமாம், ஆமாம், அதனால் ஒன்றுமில்லை! நீதான் என்னுடன் இருக்கிறாயே!!

 

////

confident-businessm

தன்னம்பிக்கை வாழ்க!

 

உலக வணிக கண்காட்சிக்கு ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. அதற்குப் பொறு ப்பான குரோவர் வேலனைச் சந்திப்பது ‘குதிரைக்கொம்பாக’ இருந்தது. அவரைக் காண பலரும் காத்திருந்தனர்.

 

ஒருவருக்கு வேலை இல்லை. அவரைச் சந்தித்து வேலை வாங்க துடியாய்த் துடித்தார். அவரது அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

 

ரிசப்ஷன் (RECEPTION) பெண்மணியிடம் குரோவர் வேலன் அலுவலக அறை எது? என்று கேட்டார்.

 

ரிஷப்ஷன் பெண்:- அவர் மிகவும் (BUSY) ‘பிஸி; இப்பொழுது நீங்கள் அவரைச் சந்திக்க முடியாது.

 

அவர் விறு விறு என்று அந்த அறையை நோக்கி நடந்தார்.

 

பெண்: – அன்பரே! அவரை இப்பொழுது சந்திக்க முடியாது என்று சொன்னேனே! காதில் விழவில்லையா?

 

ஏ, பெண்ணே! நான் காலையிலும் மாலையிலும் கடவுளுடனேயே இரு முறை பேசுகிறேன். உங்கள் முதலாளியுடன் பேச முடியாதா? என்று சொல்லிக் கொண்டே குரோவரின் அறைக்குள் நுழந்தார்.

அவருக்கு வேலை கிடைத்துவிட்டது!

 

தன்னம்பிக்கை வாழ்க!

 

////

whistling

பாடினாலும் வேலை!

 

எட்வார்ட் ஹாரிமேன் என்பவர் பெரிய ரயில்வே கம்பெனியின் அதிபர். அவரிடம் பல அதிகாரிகள் வேலை பார்த்து வந்தனர்..

ஒரு நாள் அவர் திடீரென அதிகாரிகள் அறைக்குள் நுழைந்தார்.

ஒரு அதிகாரி மேஜையின் மீது கால்களைப் போட்டுக்கொண்டு ஜாலியாக ‘விசில்’ அடித்து பாடிக்கொண்டிருந்தார்.

 

முதலாளியைப் பார்த்தவுடன் தூக்கிவாரி போட்டது.

உடனே நாற்காலியிலிருந்து எழுந்து நின்றார்.

 

சரி! நம்முடைய ‘சீட்டு’ இன்று கிழிந்தது– வீட்டுக்கு அனுப்பிவிடுவார் முதலாளி என்று நடுங்கினார்.

 

முதலாளி சொன்னார்: அட! இவ்வளவு கடுமையான வேலையிலும் உனக்கு நிதானமாகச் சிந்தித்து செயல்படும் ஆற்றல் இருக்கிறதே.

வெரி குட் (ரொம்ப நல்லது)

/////

 

ஏமாற்றியவருக்கு இரட்டைச் சம்பளம்!!

 

ஜேம்ஸ் கார்டன் பென்னெட் என்பவர் பெரிய பத்திரிக்கை முதலாளி. கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுபவர். யாரும் மதுபானம் குடித்துவிட்டு அலுவலத்துக்கு வரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார்.

 

ஒரு பத்திரிகை அலுவலக ஊழியர்,  ‘ஓஸி’யில் கிடைத்த மதுபானத்தை  நன்றாக மாந்திவிட்டு அலுவலகத்துக்கு வந்தார். முதலாளி எங்கே இந்த அறைக்குள் வரப்போகிறார் என்று எண்ணி இருந்தார்.

 

அவரது “அதிர்ஷ்டம்” பென்னெட் உள்ளே நுழைந்தார். உடனே இந்த குடிகார பத்திரிக்கை ஊழியர் கொஞ்சம் பிரிண்டிங் இங்க் — மையை முகத்தில் பூசிக் கொண்டார்.

 

பென்னெட், அவரை, ஒரு பார்வை பார்த்தார். போர்மன் (FOREMAN), யார் இந்த ஆள்?

 

உடனே அவர் அவர் பெயரைச் சொன்னார்.

Ink-face-black-eyes-Ilaria-Berenice

முதலாளி: கடுமையாக உழைப்பவர் என்று முகத்தைப் பார்த்தாலேயே தெரிகிறது. இன்று முதல் அவருக்கு இரட்டைச் சம்பளம் கொடுங்கள்!

 

–SUBHAM—

உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்! (Post No.3017)

Gallant

Article Written S NAGARAJAN

Date: 29 July 2016

Post No. 3017

Time uploaded in London :– 6-45 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

29-7-16 பாக்யா  இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்!

.நாகராஜன்

vision

மனதில் நினைப்பதை அறிவது என்பது குழந்தைகளின் மாயாஜாலக் கதைகளிலிருந்து இப்போது நிஜமாக ஆகிறது’                    – டெய்லி மெயில் பத்திரிகை                 

உலகம் மாறுகிறது! வேகமாக!! விளையாட்டாக முன்பு பேசியதெல்லாம் வினையாக ஆகிறது.

‘ஆமாம், இவரு நாம நினைச்சதை எல்லாம் கண்டு பிடிச்சிடுவாரில்லை!’ என்று கேலியாகப் பேசியதெல்லாம் பழைய கதையாக ஆகி விடப் போகிறது.

ஒருவர் என்ன நினனக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வது மட்டுமில்லை. அதை திரையிலும் பார்க்க முடியும், இனிமேல்!

அறிவியல் காட்டும் அற்புதங்களில் இதுவும் ஒன்றாகச் சேரப் போகிறது!

அமெரிக்காவில் புரட்சிகரமான கண்டுபிடிப்பு வரிசைகளில் ஒன்றாக நினைத்ததைப் படமாகக் காட்டும் முயற்சி வெற்றியை நோக்கி பீடு நடை போடுகிறது.

அமெரிக்க விஞ்ஞானிகளின் குழு ஒன்று, இரு தன்னார்வலர்கள்  வீடியோ ஒன்றைப் பார்க்கும் போது அவர்களின்  மூளைகளை ஸ்கேன் செய்து அந்த முடிவுகளை வைத்து அவர்கள் பார்த்தனவற்றை மறுபடியும் உருவாக்க முய்னறு வெற்றி பெற்றுள்ளது!

இந்தக் குழுவினரின் கண்டுபிடிப்பு இப்போது துல்லியமாக இல்லை என்றாலும், இந்த உத்தியின் மூலமாக ஒருவர் மனதில் நினைப்பதைச் சித்திரமாக திரையில் படமிட்டுக் காட்ட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்து விட்டது!

ஒரு மனிதனை நினைத்த போது விஞ்ஞானிகள் ஒரு மனிதனின் படத்தையும் அவன் பின்னணியில் ஆகாயத்தையும் உருவாக்க முடிந்திருக்கிறது.

பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜாக் காலண்ட் (Professor Jack Gallant) இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

 

how it works

“நீங்கள் பார்க்கும் எதையாவது விவரிக்க வேண்டுமென்றால் இப்போது வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அல்லது அதைப் படமாக வரைந்து காட்ட வேண்டியிருக்கிறது. இது சில சமயம் சரிப்பட்டு வருவதில்லை. இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப உத்தியானது குற்றம் ஒன்றைப் பார்த்த ஒருவர் என்ன பார்த்தார் என்பதைத் துல்லியமாக மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர உதவும்” என்கிறார் அவர்.

இது பற்றிய ஆய்வுகளில் மேற்கொள்ளப்பட்ட பல சோதனைகளில் இந்த சோதனை எப்படி மூளை ஸ்கேன்கள் ஒருவரின் உள்ளார்ந்த எண்ணங்களைப் படமாகக் காட்ட முடியும் என்பதற்கான முத்தாய்ப்பான சோதனையாக அமைந்துள்ளது.

இன்று சர்வ சாதாரணமாக மருத்துவ மனைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபங்ஷனல் மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங் (Functional magnectiv resonance imaging – fMRI) ஸ்கேனரை வைத்து அமெரிக்க குழுவினர் இரண்டு தன்னார்வலர்கள் ஒரு வீடியோவைப் பார்க்கும் போது  அவர்களின் மூளைகளை ஸ்கேன் செய்ததன் விளைவே இந்த சோதனையை வெற்றியாக்கியது.

ஒரு கணினியில் அவர்கள் தங்கள்  முடிவுகளை ஏற்றினர். அதில் அவர்கள் நினைத்த எண்ணங்களுக்கான வண்ணங்கள், உருவங்கள், இயக்கங்கள், செயல்பாடுகளில் ஏற்படும் பாட்டர்ன் எனப்படும் ஒழுங்குகள் ஆகியவற்றைத் தொகுத்தனர்.

பிறகு கம்ப்யூட்டர் மென்பொருளில் தன்னார்வலர்கள் இன்னொரு வீடியோவைப் பார்த்து அதனுடைய ஸ்கேன் முடிவுகளை ஏற்றினர்.

இப்போது கணினியிடம் அவர்கள் பார்த்ததைப் படமாக வரையுமாறு ஆணையிட்டனர்.

கணினி தந்த முடிவைப் பார்த்த பேராசிரியர் காலண்ட் அசந்து போனார்.

அவரது முடிவுகள் இன்னும் பரம இரகசியமாக உள்ளன என்றாலும் அவர் பெற்ற வெற்றியை உலகம் அறிந்து விட்டது!

துல்லியத்திற்கு மிக நெருங்கியவையாக கணினியில் படங்கள் அமைந்துள்ளன!

இன்னொரு சோதனையில் காமடி நடிகர் ஸ்டீவ் மார்டின் வெள்ளை நிற சட்டையை அணிந்திருந்ததை அப்படியே கணினி சித்தரித்துப் படமாக்கிக் காண்பித்தது. ஆனால் அவர் முகத்தைக் காண்பிக்க முடியாமல் அது திணறியது. ஆனால் எதிர்காலத்தில் அதனுள் உள்ளிடும் தகவல்கள் துல்லியமாக் அனைத்தையும் காட்டும் என்பதை விஞ்ஞானிகள் அறிந்து மகிழ்கின்றனர்.

jack-gallant-engineering-thoughts

இன்னொரு சோதனையில் அதில் கலந்து கொண்டவர்களிடம் வானத்தின் பரப்பையும் அதில் விமானம் ஒன்று பறந்து செல்வதையும் காண்பித்தனர்.

கணினி வானத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. விமானத்தை அதனால் படம் பிடித்துக் காட்ட முடியவில்லை. ஆனால் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டால் எதையும் கணினி காண்பிக்கும் என்பது உறுதி.

‘நீங்கள் நினையுங்கள்; உங்கள் எண்ணங்களைப் பிடித்துத் திரையில் காட்டுகிறோம்’, என்கின்றனர் விஞ்ஞானிகள் மிகுந்த நம்பிக்கையுடன்!

இந்த் புது விதமான உத்தி உலகில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களை நினைத்தாலேயே பிரமிப்பு ஏற்படுகிறது, இல்லையா!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஜப்பானில் பிறந்து அமெரிக்க  குடிமகனாக இன்று வாழ்பவரான ஷுஜி நகாமுரா (Shuji Nakamura – தோற்றம் 22-5-1954) ஒரு பெரிய விஞ்ஞானி. இயற்பியலில் 2014ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இவர் பெற்றார். லைட் எமிட்டிங் டையோடுகளைச் சுருக்கமாக நாம் இப்போது எல் இ டி (LED) என்கிறோம். ப்ளூ எல் இ டி கண்டுபிடிப்பிற்காக நகாமுரா நோபல் பரிசைப் பெற்றார்.

1979 ஆம் ஆண்டு மாஸ்டர் டிகிரியைப் பெற்ற அவர் டோகுஷிமா என்ற சிறிய நகரத்தில் இருந்த  நிசியா கெமிக்கல் (Nichia chemical) என்ற கம்பெனியில் வேலை பார்க்க ஆரம்பித்தார். பலத்த போட்டியின் காரணமாக அந்த கம்பெனி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.

 

ucsb_nakamura

1988இல் நகாமுரா நிறுவனத்தின் உரிமையாளரான் ஒகவா நொபுவோவிடம் நேரடியாகச் சென்றார். 30 லட்சம் அமெரிக்க டாலர்களைத் தருவதோடு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் ஆராய்ச்சி செய்ய அனுமதியையும் வேண்டினார். அவரே ஆச்சரியப்படும்படி உரிமையாளர் சரி என்று சொல்லி விட்டார்,

நகாமுரா தனது இடைவிடாத ஆராய்ச்சியினால் ப்ளூ எல் இ டிக்களை உருவாக்கும் உத்தியைக் கண்டு பிடிக்கவே கம்பெனி பெருத்த லாபம் அடைந்தது. கற்பனைக்கு எட்டாத அளவு லாபம்! ஆனால் நிறுவனமோ நகாமுராவைக் கண்டு கொள்ளவே இல்லை.

2000ஆம் ஆண்டில் நிறுவனம் நகாமுராவிடம் தனது கண்டுபிடிப்பை யாரிடமும் சொல்லக் கூடாது என்று நிபந்தனை விதித்தது.

கலிபோர்னியா பல்கலைக் கழகமோ இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று நகாமுராவுக்கு அறிவுரை வழங்கியது.

நகாமுராவின் மீது நிசியா, வணிக ரகசியங்களை வெளியிடுவதாக வழக்கு ஒன்றைத்  தொடர்ந்தது. நகாமுராவும் பதில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

1930 லட்சம் டாலரை (ஒரு டாலர் சுமார் 67 ரூபாய்கள்) த்னது கண்டுபிடிப்பிற்கான தொகையாக நகாமுரா கேட்டார். கம்பெனி வழங்கியதோ வெறும் 180 டாலர்கள் தான்!

இறுதியாக 81 லட்சம் டாலர் தர கம்பெனி சம்மதித்தது. நகாமுராவிற்கு இதில் ஏமாற்றம் தான்! என்றாலும் வெறும் 180 டாலரிலிருந்து 81 லட்சம் டாலரைத் தர கம்பெனி சம்மதித்ததை வழக்கின் வெற்றியாக அவர் ஏற்றுக் கொண்டார்.

உலக வரலாற்றில், குறிப்பாக ஜப்பானிய வணிக நிறுவன வரலாற்றில் இந்த வழக்கு குறிப்பிடத்தகுந்த வழக்காக அமைந்து விட்டது.நகாமுரா இன்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மட்டுமல்ல; பெரிய பணக்காரரும் கூட!

*********

 

 

காமத்தின் ஆற்றல் பற்றி கம்ப ராமாயணம் (Post No.3014)

cupids_arrow_tshirt-

Written by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3014

Time uploaded in London :–  8-32 AM

( Pictures are taken from various sources;thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

காம வசப்பட்டவர்களுக்கு என்ன நேரிடும் என்று  ஆரண்ய காண்டத்தில் கம்பன் இரண்டு பொன்மொழிகளை உதிர்க்கிறான்:-

 

1.கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ

பொருள்: என்னதான் கல்வி கற்றாலும் ஞானம் இல்லாவிடில், காமத்தை வெல்ல முடியுமா?

 

2.வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே

பொருள்:- எல்லா சக்தியையும் காமநோய் அழித்துவிடும்.

 

இதோ முழுப் பாடல்:-

 

(1).சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் சிந்தைதானும்

உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன

மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ

கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ

 

பொருள்:-

ராவணனுக்கு சிறிய இடையை உடைய சீதை என்ற பெயரும், அவனது மனமும் கலந்து, இரண்டு பொருள்கள் இல்லாமல் ஒன்றாகிவிட்டன. அதற்குப்பின்னர், ஒன்றிப்போன இரண்டிலே ஒன்றான சீதையை நீக்கி , மற்றொரு பொருளை நினைக்க அவனிடம் வேறு ஒரு மனம் இருக்கிறதா? இல்லை. அந்தச் சீதையை மறக்க வேறு வழி எது? கற்றுத் தேர்ந்தவர்களுக்கு, ஞானம் இல்லை என்றால் காமத்தை வெல்ல முடியுமோ? முடியாது.

 

கற்று அறிந்த விஷயம் நிறைய இருக்கலாம். ஆனால் விவேகமோ, ஞானமோ இல்லாவிடில் காமத்தை வெல்ல இயலாது.

 

ராவணன் மாபெரும் அறிஞன்; கலைஞன்; ஆனால் காமத்தையும், அஹங்காரத்தையும் அவனால் வெல்ல முடியவில்லை. அதுவே அவனுக்கு அழிவைக் கொண்டு வந்தது.

 

 

(2).பொன்மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட

தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ

மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்

வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே

—ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்

 

ராவணனையே தாக்க அஞ்சிய மன்மதன் கூட, இப்போது அவன் மீது அம்பு எய்தும் ஆற்றல் பெற்றுவிட்டான். ஏனெனில் எல்லாவகையான வல்லமையையும் நீக்கும் சக்தி காமத்துக்கு உண்டு. ஏன் இது நடந்தது? பொன் மயமாக ஒளிவிடும் சீதை , தன் மனத்தே புகுந்ததால், ராவணன் பெருமை இழந்தான்.

heart-pierced-by-cupids-a-007

(3).விதியது வலியினாலும் மேல் உள விளைவினாலும்

பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும்

கதி உறு பொறியின் வெய்ய காமநோய்கல்வி நோக்கா

மதியிலி மறையச் செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே

 

கற்ற கல்வியை பின்பற்றாத ஒருவன் அறிவில்லாதபடி, மறைவாகச் செய்த தீமையைப் போல ராவணனின் காம நோய் மறைவாக வளர்ந்துதது. இதற்கு மூன்று காரணங்கள்:– ஊழ்வினை வலியது, நடக்கவேண்டிய செயல்கள் தப்பாமல் நடந்தே தீரும், இலங்கை நகரம் அழிய வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

ஆரண்ய காண்டத்தில் அடுத்தடுத்து வரும் இப்பாடல்கள் படித்து இன்புறத்தக்கவை.

 

–subham–

 

 

மதசார்பற்ற (செகுலரிஸம்) கொள்கை சரியா?- 2 (Post No.3013)

Bishop-offers-cake

Article Written S NAGARAJAN
Date: 28 July 2016
Post No. 3013
Time uploaded in London :– 6-06 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(First Part was published on 26th July 2016)

செகுலரிஸம் சரியா? -2
ச.நாகராஜன்
இந்திய சரித்திரத்தைச் சற்று ஆழ்ந்து படித்தால் ஒன்று தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.
ஒரு நாளும் ஹிந்துக்கள் எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமித்ததில்லை.
எந்த ஒரு தனி நபரையும் வலுக்கட்டாயமாக ஹிந்து மதத்திற்கு மாற்றியதில்லை.
எந்த ஒரு மதத்தின் வழிபாட்டு ஸ்தலத்தையும் இடித்ததில்லை.
அடுத்த மதத்தினரின் இடங்களைப் பிடுங்கியதில்லை
அழித்ததில்லை. அதில் ஹிந்து கோவில்களைக் கட்டியதில்லை.

 
‘உங்கள் மதம் எதுவானாலும் அதை அப்படியே கடைப் பிடியுங்கள்’ என்பது தான் எந்த ஒரு ஹிந்து ஆசார்யரின் அன்புரையாக இருந்திருக்கிறது.
ஆனால் மாறாக வாணிகம் செய்ய வந்த பிரிட்டிஷாரையோ அல்லது மதத்தைப் பரப்ப வந்த கிறிஸ்தவ பாதிரிகளையோ எடுத்துக் கொண்டால் கடைசியாக நமது சரித்திரம் இனம் காட்டும் அன்னை தெரஸா உட்பட அனைவருமே முதலில் ஹிந்துக்களை மதம் மாற்றுவதிலேயே கவனம் செலுத்தினார்கள் என்பதை அறிய முடியும்.

 

vijyakanth_0
ஹிந்து பழக்க வழக்கங்களை ஒழித்தல், ஹிந்து ஆலயங்களை அழித்தல், ஒவ்வாத இதர மேலை நாட்டு பழக்க வழக்கங்களை வலுக் கட்டாயமாகத் திணித்தல் ஆகியவையே அவர்களின் வழி முறையாக இருந்தது.
கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் தைரியமாக ‘வருகின்ற ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவில் நல்ல அறுவடை செய்யலாம் செய்யுங்கள்’ என்று சொல்லக் கூடிய அளவு ஹிந்துக்கள் தாராள மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள் கூடவே வலி குன்றியும் ஒற்றுமை இன்றியும் இருக்கிறார்கள்.
முகமதிய கலாசாரத்தை எடுத்துக் கொண்டு இந்திய சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் நெஞ்சமே பிளந்து விடும்.
எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டன.
எத்தனை விக்கிரஹங்கள் நொறுக்கப்பட்டன.
வாள் முனையில் மதமாற்றம்.
ஹிந்துவாக இருந்தால் ஜஸியா வரி
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

 
ஆக இந்தப் பின்னணியில் நமது அரசியல் சட்டம் செகுலரிஸம் பேசாமல் சமத்துவம் என்ற கொள்கையை ஏன் முன் வைக்கவில்லை?
அனைவருக்கும் ஒரே சட்டம்! ஒரே இந்தியா! சமூகச் சட்டம் ஒன்றாக இருக்கட்டும்.
மதங்களின் வழிபாட்டு முறைகள் தனிப்பட்டவரின் விருப்பப்படி இருக்கட்டும்!
இது இல்லையே!
கிறிஸ்தவர்களுக்கு தனி போர்டு
முஸ்லீம்களுக்கு தனி போர்டு.
அவர்களின் நிலங்களை சொத்துக்களை அவர்களே தனிப்பட்ட முறையில் பராமரிக்க, செலவழிக்க, வசூல் செய்ய உரிமை.
ஆனால் ஹிந்து ஆலயங்கள் என்றாலோ அரசியல் வாதிகள் ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் பிடியில்!

 
ஆலயங்களில் வரக்கூடிய பக்தர்களின் காணிக்கையை ஆலய பூஜைக்கன்றி இதர் ஆயிரம் வழிகளில் செலவழிக்க அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஆலயங்களின் நிலங்கள் இடங்கள் மூலமாக பல லட்சம் வருமானம் வர வேண்டிய இடத்தில் ஒரு பைசாவும் வருவதில்லை அதை அரசியல்வாதிகள் கபளீகரம் செய்து தங்கள் விருப்பப்படி ஆக்கிரமித்திருப்பதையும் பார்க்கிறோம்!

 

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தங்கள் விருப்பப்படி தங்கள் வழிபாட்டு ஸ்தலத்தைப் பராமரிக்க உரிமை கொடுக்கும் சட்டம் ஹிந்து கோவில்களில் அதிக வருமானம் உள்ள கோவிலகளின் பணத்தை அந்தக் கோவில்களின் பராமரிப்புக்கும் சரியாகச் செலவழிப்பதில்லை; சற்று வருமானம் குறைந்த கோவில்களின் பூஜைகளுக்கு ஆகம விதிகளின் படி செய்வதற்கான பணத்தையும் தருவதில்லை.
ஆன்மீகக் கோவில்களின் பணம் அரசியல்வாதிகளின் மனம் போன படி செலவழிக்க அனுமதி!

 
திராவிட தீய சக்திகள் இதைத் தானே விரும்புகின்றன. என்ன ஒரு ஆனந்தம் அவர்களுக்கு – சீரங்க நாதரையும் தில்லை நடராசரையும் பீரங்கி வைத்துப் பிளக்கத் துடிக்கும் ‘கண்மணிகள்’ அல்லவா அவர்கள்!
ஆக இந்த குறைபாடுகள் ஏன்?
ஒரே வரியில் சொல்லி விடலாம் – பிளவுபட்டுள்ளது ஹிந்து சமுதாயம் என்று!
இந்தப் பிளவு பட்ட சமுதாயத்தை ஒன்றாக்கி ஹிந்துக்கள் அனைவரும் ஓரிழையில் இணைக்கப்படும் போது இந்தியாவில் அரசியல்வாதிகளின் சதிராட்டங்கள் முடிந்து போகும்.

Christians
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் தங்கள் தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்வர், ஒரு சட்டத்திற்குட்பட்டு!
ஹிந்துக்களின் ஆலயங்களும் சொத்துக்களும் அதற்கான வழியில் முறைப்படி கண்காணிப்புடன் பராமரிக்கப்படும்.
அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஒரே அரசியல் சாஸன சட்டம் அமையும்!
வலிமை வாய்ந்த ஹிந்து சமுதாயத்தில் ஆதாயம் பார்க்க நினைக்கும் அரசியல்வாதிகள் அறவே நீக்கப்பட்டிருப்பார்கள்.
இந்த ஹிந்துக்களை ஓரிழையில் இணைக்கும் பணியை யார் செய்வது?
அதற்கான அற்புதமான இயக்கமாக நமக்குத் தெரியும் ஒரே இயக்கம் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமே
இப்படி ஹிந்துக்களை இணைக்க, ‘ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள்’ விடுவார்களா?
தடைகள், தடைகள், தடைகள்.
என்றாலும் இந்த சமுதாயம் ஒன்று சேர்ந்தே தீரும்.
சங்கம் வெற்றி பெற்றே தீரும்!
அப்போது அரசியல் சாஸனத்தின் செகுலரிஸம் உண்மையான சமத்துவத்தைக் கொண்டுள்ள வகையில் இருக்கும்!
இப்படி நம்பலாம்.
அதற்காக நம்மளவில் நாமும் ‘அணில் சேவை’ செய்வது போல சேவையைச் செய்யலாம்!
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் வலுப் பெறுவது ஒன்றே நாட்டின் சகல பீடைகளையும் ஒழிக்கும் ஒரே வழியாகும்!
********** முற்றும்

இதயச் சிறையில் காதலி: கம்ப ராமாயண இன்பம் (Post No. 3010)

heart-pierced-by-cupids-a-007

 

Article written by London Swaminathan

Date:27 July 2016

Post No. 3010

Time uploaded in London :–  7-57 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பெண்கள், காதல் இவைகளைக் குறிப்பிடுகையில் இதயம் போன்று ஒரு படம் எழுதி அதில் ஒரு அம்புக்குறி போடுவதைக் காண்கிறோம். இது அதர்வ வேதத்தில் உள்ள உருவகம்; இதை இன்றும் காதலர் தினத்தன்று பயன்படுத்துவதைக் காண்கிறோம். இது பற்றியும் தமிழில் இருதயம் என்றே சொல் இல்லை என்பதையும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். குருத்து என்பதே ஹ்ருத் என்று சம்ஸ்கிருதத்தில் இருக்கிறது, இதுவே ஹார்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மூலம் என்றும் குருதி (இரத்தம்) என்பதே இதற்கு ஆதாரம் என்றும் எழுதினேன். இதன் மூலமாக பழைய மொழிக் கொள்கைகள் பித்தலாட்டம் என்றும் ஆரிய-திராவிட மொழிக் குடும்பம் வேறு வேறு இல்லை என்பதையும் நிலைநாட்டினேன். இதை உலகம் விரைவில் ஏற்கும்.நிற்க.

 

ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் காதலில் மயங்கி, நீ என் இதயத்தில் இருக்கிறாய் என்று சொல்லுவதும் உண்டு.

 

ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் காதலில் மயங்கி, நீ என் இதயத்தில் இருக்கிறாய் என்று சொல்லுவதும் உண்டு. இதுவும் இந்துக்கள் கற்பித்ததே.

அன்பு எனும் சிறையில் அகப்பட்ட யாருக்கும் இது பொருந்தும்! ராமனை எப்போதும் தன் இதயத்தில் காட்டும் அனுமனின் படத்தை நாம் எல்லோரும் பார்த்திருப்போம்.

 

கம்பராமாயணத்தில் ஒரு அருமையான பாடல் வருகிறது. ராவணனின் இதயத்தில் சீதை சிறை வைக்கப்பட்டுள்ளாம்!

 

மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீண்ட

எயிலுடை இலங்கை வேந்தன் இதயம் ஆம்  சிறையில் வைத்தான்

அயிலுடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்ல மெல்ல

வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே

ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்

 

பொருள்:–

உயர்ந்த மதிலையுடைய இலங்கைக்கு அரசனான ராவணன், மயில் போன்ற சீதையைக் கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைப்பதற்கு முன்னர், தனது இதயம் என்னும் சிறையில் வைத்தான். அப்பொழுதே வெய்யிலில் உருகும் வெண்ணை போல அவனது மனமும் உருகிற்று. (ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்).

 

 

வெய்யிலில் உருகும் வெண்ணெய் என்ற உவமையும் படித்துப் படித்து இன்புறத் தக்கது.

 

நாகரீக வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்திலேயேதான் இதுபோன்ற உவமைகள் தோன்ற முடியும். இது அதர்வண வேதத்திலேயே வருவதால் கம்பன் அந்த உவமையைக் கையாண்டதில் வியப்பொன்றும் இல்லை. பாரத சமுதாயமே பழங்கால உலகின் தலைவன், முதல்வன் என்பதில் இனிமேலும் ஐயப்பாட்டிற்கு இடமுண்டோ?

 

–சுபம்—

 

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda ( Research article written by London Swaminathan, posted on 26 September 2012)

 

சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிக்கை ஆசிரியர்: எனது தந்தையார் (Post No.3009)

appa, amma picture

Article Written S NAGARAJAN
Date: 27 July 2016
Post No. 3009
Time uploaded in London :– 5-24 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்காக

சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் பத்திரிக்கையாளரும். ஆன்மீகவாதியுமான தினமணி மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய திரு வெ.சந்தானம் அவர்களின் புத்திரர் தனது தந்தையாரைப் பற்றிய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்

வெ.சந்தானம்  தோற்றம்:4-9-1911 மறைவு:15-8-1998

 

 

எனது தந்தையார்

————————

சந்தானம் நாகராஜன்

 

தேசப்பணி

எனது தந்தையார் திரு வெ.சந்தானம் தேசீயம் இலக்கியம் தெய்வீகம் ஆகியவற்றில் ஈடுபட்டு நல்லனவற்றை நாள் தோறும் பரப்பிய புண்ணியர் என்று அவரை நன்கு அறிந்தவர்கள் கூறும் போது தான் அவரின் பெருமையை என்னால் உணர முடிந்தது. ஏனெனில் மிகவும் நெருக்கமாகப் பல ஆண்டுகள் கூடவெ வாழ்ந்த போதிலும் தன்னைப் பற்றியும் தான் ஆற்றிய பணியைப் பற்றியும் அவர் ஒரு வார்த்தை கூடக் கூறியதே இல்லை.

 

 

அவர் ஏன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதே எங்களுக்குத் தெரியாது. இதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசையிருந்தாலும் அது பற்றி அவர் கூறியதே இல்லை. ஆனால் டி,வி.எஸ் ஸ்தாபனத்தார் வெளியிடும் ஹார்மனி இதழின் ஆசிரியராக புதுக்கோட்டை திரு வெங்கடராமன் பொறுப்பேற்றிருந்தார். அவர் ஒரு நல்ல நண்பர். அவர் என்னிடம் தந்தையாரின் சுதந்திரப் போராட்ட பங்கைப் பற்றி ஒரு கட்டுரை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார். இதை முன் வைத்து என் தந்தையாரிடம் ஒரு கட்டுரை கேட்டேன். அதில் மலர்ந்தது ஒரு அற்புத கட்டுரை- அதில் அவரது பணி லேசாக குறிப்பிடப்பட்டு இருந்தது. சைமன் கமிஷன் பகிஷ்காரத்தை ஒட்டி வெள்ளையனே வெளியேறு என்று அச்சிடப்பட்டிருந்த பிரசுரத்தை அவர் சென்னை கடற்கரையில் விநியோகம் செய்ததற்காக ஆறு மாத சிறை தண்டனை பெற்றார் என்று அந்தக் கட்டுரை வாயிலாகத் தெரிய வந்தது.

 

 

 

தாமிரப் பட்டயம் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக வழங்கப்பட்டபோது திரு வை.சங்கரன், திரு ராஜாராம் உள்ளிட்டோர் மதுரையிலேயே கலெக்டர் புருஷோத்தமதாஸிடமிருந்து பெற்றனர்.பழைய போர் வீரர்கள் ஒன்றாகக் குழுமிய காட்சியைக் கண்ட கலெக்டர் இப்படிப்பட்ட பெரியவர்களுக்கு பட்டயம் வழங்க தனது நற்பேறை எண்ணி மகிழ்ந்தார்.

 

 

இலக்கியப் பணி

 

திரு பி.எஸ்,ராமையா மதுரையில் அவர் எழுதிய பிரஸிடெண்ட் பஞ்சாக்ஷரம், மல்லியம் மங்களம், தேரோட்டி மகன் ஆகிய நாடகங்களை நடத்தும் எஸ்.வி.சஹஸ்ரநாமம் குழுவினருடன் வந்தார். எங்கள் வீட்டிற்கு நேரடியாக அவர் வந்தது வெங்கலக் கடையில் யானை நுழைந்தது போல இருந்தது. நீண்ட காலப் பழக்கம் ஆதலால் வாடா, போடா என்ற வசனங்களைக் கேட்ட எனக்கு அது புதிதாக இருந்தது, ஏனெனில் என் வீட்டிற்கு என் தந்தையாரைப் பார்க்க வருவோர் தினமணி பொறுப்பாசிரியர் என்ற முறையில் மிகுந்த மரியாதை தருவர்.

 

 

ஆகவே திரு பி.எஸ். ராமையா வீட்டில் அமர்ந்த போது அவரது பழைய கால நினைவுகளைக் கிண்டி விட்டேன். சரசரவென்று அவர் அந்த மணிக்கொடி காலத்தைப் பிட்டு வைத்தார். அவர் பேசுவதே ரஸமாக இருந்தது. ஐந்து ரூபாய் சந்தாவாக வந்தால் அன்று தீபாவளிக் கொண்டாட்டம் தானாம்! அனைவரும் நடந்தே சென்று ஒரு பெரிய ஹோட்டலில் விருந்து போல சாப்பிட்டு உற்சாகமாக வந்து அடுத்த இதழின் பணியைத் தொடங்குவார்களாம்.

 

 

 

பின்னால் தனது மணிக்கொடிக் காலம் என்ற நூலில் எனது தந்தையாரைப் பற்றி பி.எஸ்.ராமையா குறிப்பிட்டிருக்கிறார். அவரது மணி விழாவைப் பெரிய அளவில் நடத்துவது என இலக்கிய அன்பர்களால் தீர்மானிக்கப்பட, என் தந்தையாருடன் நானும் வத்தலகுண்டு சென்றேன்.

 

 

வத்தலகுண்டு ஒரே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேளதாளத்துடன் திரு ராமையா அழைத்து வரப்பட்டார். திரு சி.சு.செல்லப்பா உற்சாகமாக ஆடி ஓடி அனைவரையும் வரவேற்றார். திரு ராமையாவின் முகம் மலர்ந்திருந்தது. வாழ்நாளிலேயே தன்னை கௌரவித்துவிட்டார்களே தமிழர்கள் என்று நினைத்தாரோ, என்னவோ!

 

 

கையில் காசு இல்லாமல் ஈஸி சேரை முறித்து விறகாகவும் அவர் ஆக்கியதுண்டு. பணம் ஆயிரக்கணக்கில் புரள லண்டனிலிருந்து,, “சந்தானம் உடனடியாக இங்கு வந்து விடு” என்று உற்சாகமாக அவர் என் தந்தைக்கு கடிதம் எழுதியதும் உண்டு. தமிழ் ஜீனியஸாக விளங்கிய அவர் மூலம் அவர்களது பழைய மணிக்கொடிக் காலத்தைப் பற்றியும் பாரதியார் பாடல்களைப் பரப்ப அவர்கள் எடுத்த முயற்சிகளையும் உணர முடிந்தது.

 

 

‘வெடிபடு மண்டலத் திடிபடு தாளம் போட’ என்ற பாட்டை எனது தந்தையார் ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய நேரத்தில் பாடும் போது காளி நேரில் நர்த்தனம் ஆடும் பிரமை எனக்கு உண்டாகும். அன்னை அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை என்ற வரிகளை உச்சஸ்தாயியிலும் அமைதியாக இறக்கமாகவும் பாடும் போது பாரதியின் சக்தி ஆவேசத்தை சுற்றி இருந்து கேட்கும் எங்களால் சுலபமாக உணர முடிந்தது.

 

 

லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனா என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்து அதில் கரீனினா என்பதை கரீனாவாக தமிழ் படுத்தியதன் காரணத்தையும் குறிப்பிட்டார். (தமிழில் கரீனினாவின், கரீரினாவை என்று வருவதைப் படிக்க வாசகர்கள் சிரமப்படுவார்கள் என்பதால் கரீனா என்ற மாற்றம் ஏற்பட்டது!)

 

 

தெய்வீகப் பணி

 

சுவாமிஜி கிருஷ்ணாவின் உபதேசத்தால் அதிகாலையில் கணபதி ஹோமம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என் தந்தையார். அச்சன்கோவிலுக்கு புஷ்பாஞ்சலிக்காக சென்றது, தர்மபுரம் திருவாவடுதுறை ஆதீனங்களில் நடத்தப்படும் திருமந்திர மற்றும் சைவ மகாநாடுகளில் பங்கேற்றது, பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீ சத்யசாயி பாபாவை தரிசித்தது, இளையாத்தங்குடியில் பெரியவாளை தரிசித்தது, சிருங்கேரி மஹா சந்நிதானம் எங்கள் இல்லத்திற்கு வந்தது என ஏராளமான நிகழ்ச்சிகளை உணர்ச்சிபூர்வமாக அனுபவித்து இறையருளை அனுபவித்தோம். ஸ்ரீ சத்யசாயி பாபாவிடம் எனது தந்தையார் அவர் மீது தான் இயற்றிய கீர்த்தனங்களை சமர்ப்பித்தபோது அது பாடியபோதே சமர்ப்பிக்கப்பட்டதாகவும் பதங்கள் நன்கு வந்துள்ளன என்றும் கூறியதைக் கேட்டு நான் அதிசயித்துப் போனேன்.பாபா அவரை ஆபட்ஸ்பரியில் நடந்த மகாநாட்டில் ஒரே மேடையில் தன்னுடன் பேசுமாறு அழைத்தார்,

இதே போல திரு முத்துராமலிங்க தேவரும் என் தந்தையாரை தலைமை தாங்க அழைத்து மதுரையில் தெய்வீகப் பணியைப் பரப்பி வந்தார்.

 

 

பத்திரிகைப் பணி

எமர்ஜென்ஸி காலத்தில் தினமணி தலையங்கப் பகுதியை வெற்றிடமாக வெளியிட்டுத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தது. அந்தக் காலத்திலும் அதற்கு முன்னும் பின்னரும் திரு ராம .கோபாலன் உள்ளிட்டோர் எனது இல்லத்திற்கு அடிக்கடி வந்து ஜனநாயகம் தழைக்க வேண்டிய அவசியத்தைப் பகிர்ந்து கொள்வர். எமர்ஜென்ஸி நீக்கப்பட்ட போது ஜனநாயகம் புதிய பிறப்பை எடுத்தது. அந்த கால கட்டத்தில் அரசு அதிகாரிகள் ஒழுக்கம் உள்ள சீலர் என்று என் தந்தையாரைப் பாராட்டி தினமணி அவசர நிலையைக் கடுமையாக எதிர்த்த போதிலும் தங்களின் அதீத செய்கைகள் எதையும் செய்யவிடவில்லை.

 

 

பத்திரிக்கை பணி என்பதால் அதுவும் தினசரி என்பதால் அன்றாடம் நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும். இவற்றை சமூகப் பொறுப்புடன் அவர் கையாண்டு செய்திகளைப் பிரசுரித்து வந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ராமேஸ்வரத்தில் கடல் பொங்கி ஊருக்குள் வந்து விட்டது என்று கேள்விப்பட்டவுடனேயே ஒரு சிறிய காரில் நேரடியாக என்ன நடந்தது என்பதைப் பார்க்கத் தந்தையார் கிளம்பினார். விவரத்தின் முழு தாக்கமும் தெரியாத சிறுவனான நானும் காரில் ஏறி அமர்ந்து கொண்டேன். மானாமதுரைக்கு முன்பாகவே கடல் சாலையை மூட சாலையைக் கண்டுபிடிக்க பல ஆட்கள் இறங்கி இரு பக்கமும் சாலையின் ஓரத்தில் இருந்து சாலையின் எல்லையைக் காண்பித்தவாறே கார்களை மெதுவாக வழி நடத்திச் சென்றனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராமையா அரசு வாகனங்களுடன் வந்தார்.

மானாமதுரையில் ஓரிடத்தில் வாகனங்களை நிறுத்தி  அனைவரையும் பின் தொடர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.நிலைமையின் தீவிரம் அவருக்கும் ஏனையோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்பட ஆரம்பித்தது.ஒரு ரயிலையே காணோம் என்ற செய்தி வர ஆரம்பித்திருந்தது. உடனே என் தந்தையார் மதுரை திரும்பி அச்சில் ஓடிக் கொண்டிருந்த பத்திரிக்கையை நிறுத்தி நேரில் கண்ட நிலைமையை பிரசுரித்தார்.

 

 

ராமநாதபுர தினமணி நிருபர் திரு ஆதிநாராயணன் ஒரு தோணி மூலமாக ராமேஸ்வரத்திலிருந்து வந்து உலகத்திற்கு ராமேஸ்வரத்தின் நிலைமையை தினமணி மூலமாக அறிவித்தார். உடனே மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இது போல ஆபத்து அல்லது அவசர காலங்களில் செய்தித்தாளின் முழு பலத்தையும் மக்களின் நலனுக்காக பலமுறை அவர் அர்ப்பணித்திருக்கிறார்.

 

 

 

செய்தித் தாள் என்பதே அன்றாட நிகழ்ச்சிகள் ஆயிரமாயிரத்தை எடிட் செய்து ஆறு அல்லது பத்துப் பக்கங்களில் கொடுப்பது தான். இதில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்த எடிட்டரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடிட் செய்து சுருக்குவது முடியாத காரியம். ஏனெனில் அவை ஒவ்வொன்றும் சமுதாய நலனுக்காக பத்திரிக்கை எப்படி பாடுபட வேண்டும் என்பதை உணர்த்தி வந்ததால் தான்!அவற்றில் முக்கியம் அல்லாதது எதுவும் இல்லை!!

 

 

தந்தயாரின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாத ஒருவர் அவர் ஒரு மஹரிஷி போல என்று குறிப்பிட்டுப் புலம்பிக் கொண்டே இருந்தார்.

 

பணம், சொத்து, புகழ் இவற்றுக்கெல்லாம் ஏங்காமல் “என் கடன் சமுதாயம் நலன் பெற பணி செய்து கிடப்பதே” என்பது தான் மஹரிஷிக்கு இலக்கணம் என்றால் அவரும் ஒரு மஹரிஷி தான் என்று எனக்கும் தோன்றுகிறது.

 

**************

 

 

 

இலக்கியமின்றி இலக்கணமின்றே! இந்திய அதிசயம்!! (Post No.3007)

450px-agastyaprambananindonesia

Agastya in Indonesia

Research Article written by London Swaminathan

Date:26 July 2016

Post No. 3007

Time uploaded in London :–  16-45

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

agastya-in-london

Agastya in London V and A Museum

 

இலக்கியமின்றி யிலக்கணமின்றே

எள்ளின்றாயினெண் ணெயுமின்றே

எள்ளின் றெண்ணெயெடுப்பது போல

இலக்கிட்யத்தினின்றே பருமிலக்கணம்

 

என்று பேரகத்தியத்தில் ஒரு பாட்டுளது.

பொருள்:-

இலக்கியம் இல்லாமல் இலக்கணம் வராது. எள் இல்லாமல் எண்ணை வராது. எள்ளில் இருந்து எண்ணை எடுப்பது போல இலக்கியத்திலிருந்தே இலக்கணம் வரும்.

 

இது மிக அருமையான கருத்து. கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில்  வந்ததா? பதில் சொல்லுவது கடினம். கோழி இல்லாமல் முட்டை வராது. முட்டை இல்லாமல் கோழி வராது.

 

ஆண் முதலில் பிறந்தானா? பெண் முதலில் பிறந்தாளா? ஆணில்லாமல் பெண்ணில்லை; பெண்ணில்லாமல் ஆண் இல்லை. பதில் சொல்வது கடினம்.

 

ஆதாம், முதலில் வந்ததாகவும், அவரது இடது விலா எலும்பிலிருந்து ஏவாள் வந்ததாகவும் பைபிள் கூறும். இது இந்து மதக் கதை. ஆதாம் = அத்மா, ஈவ் (ஏவாள்)= ஜிவ்+ஆத்மா. அர்த்தநாரீஸ்வர ர்- சிவனின் இடப்பாகம் உமா. அதுதான் ஏவாள் .

 

சதரூபா-  பிரம்மா கதையிலும் இது வருகிறது. பிரம்மா தனது சொந்த மகள் மீதே காதல் கொண்டதாக புராணம் கூறும். இதன் உட்பொருள் ஆதாம் தானே உருவாக்கிய ஒரு பெண்ணுடன் கூடி மனித இனத்தை உருவாக்கினான் என்பதே இதன் உட்கருத்து.

 

முட்டையோ கோழியோ ஏதோ ஒன்று முதலில் வந்திருக்கவேண்டும். அதே போல் ஆணோ பெண்ணோ யாரோ ஒருவர் முதலில் வந்திருக்கவேண்டும்..

 

இலக்கணம் முதலில் வந்ததா?

 

இலக்கணம் முதலில் வந்ததா, இலக்கியம் முதலில் வந்ததா? என்பது மற்றொரு புதிரான கேள்வி இதற்குப் பேரகத்தியம் என்னும் நூலே பதில் சொல்லும்

agastyanepal-carole-r-bolon

Agastya in Nepal

 

இலக்கியமின்றி யிலக்கணமின்றே

எள்ளின்றாயினெண் ணெயுமின்றே

எள்ளின் றெண்ணெயெடுப்பது போல

இலக்கிட்யத்தினின்றே பருமிலக்கணம்

 

 

இலக்கியம்தான் முதலில் வந்தது. இலக்கணம் அதன் பின்னரே எழுந்தது. அப்படியானால் முதலில் எழுதியோர் இலக்கணமில்  லாமல் எழுதினரா? ஆமாம் அப்படித்தான். பின்னர் இதைப் பார்த்து இதிலுள்ள பொதுவான அம்சங்களை வைத்து இலக்கணம் எழுதினர். அதற்குப் பின் வந்தவர்கள் அதைப் பார்த்து, அதில் எல்லோரும் பின்பற்றிய விதிகளை வைத்து இலக்கணம் கற்பித்தனர். அதை ஒட்டி எல்லோரும் பிற்காலத்தில் எழுதினர்.

இந்தக் கருத்து சம்ஸ்கிருதத்திலும் உளது. மேலும் இலக்கணம், இலக்கியம் என்பன லக்ஷணம், லக்ஷ்யம் என்னும் வடமொழிச் சொற்களில் இருந்து பிறந்தவை!

 

தமிழ் மொழிக்கு அகத்தியர் என்னும் வடபுல முனிவர் இலக்கணம் எழுதினார். அவருக்கு முன்னரே தமிழ் மொழி இருந்தது . இலக்கியங்களும் இருந்தன. அதைப் பயன்படுத்தி அகத்தியர் இலக்கணம் யாத்தார். அகத்தியர் காலம் குறித்து பல கருத்துகள் உள்ளன. முதல் அகத்தியர் கி.மு 1000 வாக்கில் அல்லது கி.மு 700 வாக்கில் தமிழ் நாட்டிற்கு வந்தார். அப்படியானால் அவர் காலத்திலேயே தமிழ் மொழியும் இருந்தது; இலக்கியங்களும் இருந்தன. ஆயினும் அவை அனைத்தும் அழிந்து போயின. பிற்கால அகத்தியரின் சீடரே தொல்காப்பியர் எனக் கொள்ளல் வேண்டும் ஏனெனில் தொல்காப்பியர் காலத்தை கி.மு முதல் நூற்றாண்டு என்றே மொழியியல் காட்டுகிறது. ஆயினும் அவர் சொல்லும் ஏராளமான உவம உருபுகள் சங்க இலக்கியத்தில் இல்லாததால் அவருக்கு முந்தியிருந்த இலக்கியத்தில் இருந்தவற்றையே அவர் எழுதியிருக்கவேண்டும்.

 

பல அகத்தியர்கள் இருந்ததை சம்ஸ்கிருத இலக்கியமும் ஒப்புக்கொள்கிறது.

agastya

Agastya Statue

உலக மஹா இலக்கிய அதிசயம்!

இதே கருத்தை வடமொழிக்கும் பயன்படுத்தினால் உலக மஹா அதிசயம் வெளியாகும்.

 

தமிழ் மொழி இலக்கியத்தின் காலம் கி.மு முதல் நூற்றாண்டு. ஆனால வ்வேத இலக்கியத்தின் காலமோ கி.மு.1400 முதல் கி.மு,.6000 வரை என்று அறிஞர்கள் ஒப்புவர். அதற்குப் பின் ஏராளமான இலக்கண ஆசிரியர்கள் தோன்றினர். வேத இலக்கியத்திற்குப் பின் எழுந்த பாணினி என்னும் முனிவரின் இலக்கன்ணமே என்று எஞ்சி நிற்கிறது. அவர் கி.மு ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இன்றுள்ள இலக்கணங்களில் அவர் எழுதியதே பழமையான இலக்கணம். அவரே பத்து இலக்கணகர்த்தாக்களின் பெயர்களைச் சொல்லுகிறார்.

அபிசாலி, கார்க்ய,காஸ்யப, காலவ, சக்ரவர்மண,பாரத்வாஜ, சாகடாயன, சாகல, சேனக, ஸ்போடாயன.

 

இவர்களில் ஒருவர் எழுதிய இலக்கணமும் நமக்குக் கிடைக்கவில்லை. வேதங்களின்  பெரும்பாலான பகுதிகளும் ஆயிரக்கணக்கான சம்ஸ்கிருத நூல்களும் அழிந்துவிட்டன.

 

ஆயினும் வேதங்களில் இந்த முனிவர்கள் சிலரின் பெயர்கள் காணப்படுகின்றன.

 

ஆனால் ரிக்வேதத்திலேயே இலக்கணம் பற்றிய சொற்கள் இருக்கின்றன. இதனால் கி.மு 1400 அல்லது அதற்கு முன்னரே இலக்கணம் இருந்ததை அறிகிறோம். இன்றுள்ள மொழிகளில் மிகவும் பழமையான சம்ஸ்கிருதத்தில் இப்படி இருப்பது உலக அதிசயம் மட்டுமல்ல. உலக நாகரீகம் தோன்றியது இந்தியாவே என்பதை  ஐயம் திரிபற, உள்ளங்கை நெல்லிக்கனி எனக் காட்டும். ஏனெனில் ஒரு நாட்டின் மொழி வளர்ச்சி அந்நாட்டின் நாகரீக வளர்ச்சியின் அளவு கோலாகும். இலக்கியமும் இலக்கணமும் வேத காலத்திலேயே தோன்றியது என்றால் அதற்கு முன்னரே சம்ஸ்கிருதம் இருந்திருக்க வேண்டும்.

 

உலகில் மிகப்பரிய மொழி அதிசயம் இது;

உலகில் மிகப்பரிய இலக்கண அதிசயம் இது;

உலகில் மிகப்பரிய இலக்கிய அதிசயம் இது;

உலகில் மிகப்பரிய மொழி இயல் அதிசயம் இது.

 

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!!
–Subham–

மதசார்பற்ற (செகுலரிஸம்) கொள்கை சரியா? (Post No 3006)

razan karunanidhi

 

Article Written S NAGARAJAN
Date: 26 July 2016
Post No. 3006
Time uploaded in London :– 7-59 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

செகுலரிஸம் சரியா?
ச.நாகராஜன்
இன்று கடைப்பிடிக்கும் வோட் பேங்க் அர்த்தத்தில் செகுலரிஸம் சரியா?
சற்று அலசிப் பார்ப்போம்.
செகுலரிஸம் என்றால் ஹிந்து மதத்தின் எந்த அம்சமும் ஒதுக்கப்பட வேண்டும், மற்ற மதங்களுக்கு குறிப்பாக கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்திற்கு தன்னுடைய தலையை வணங்கி விட்டுக் கொடுக்க வேண்டும், குனிந்து குனிந்து குட்டு வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் அரசியல் கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது – சிவ சேனா, ஹிந்து முன்னணி, பாரதீய ஜனதா பார்ட்டி போன்ற சில கட்சிகளைத் தவிர.
இது ஏன்?
கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் ஓட்டுக்களைப் பெற்று விடலாம் என்ற தீய ஆசை தான்!
நமது அரசியல் சட்டம் (Constitution) இப்படிச் சொல்கிறது:
‘We the people of India have resolved to constitute India into …. …a Secular Republic “
ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய மக்கள் இப்படியா சொன்னார்கள். ஒரு சில தலைவர்களே அரசியல் லாபத்திற்காக இப்படி அரசியல் சட்டத்தில் சொன்னார்கள்!
இன்று 120 கோடி மக்களிடம் இந்த வரியை ஓட்டிற்கு விட்டால் அந்த வாசகங்கள் உருப்படுமா? தேறுமா?
தேறாது.
அரசியல் சட்டத்தில் மைனாரிடிகளைப் பாதுகாக்க 29 மட்டும் 30 ஆகிய பிரிவுகள் இணைக்கப்பட்டன.
இவற்றை 25.2b யுடன் இணைத்துப் பார்த்தால் அதிர்ச்சி தான் மிஞ்சும்?
ஏன், எப்படி?
இவற்றில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்தமதத்தினர் சொல்லப்பட்டனர்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் விடப்பட்டனர்.
ஏன்?
அவர்கள் தாம் மைனாரிட்டியாம்!
பாவம், பார்ஸிகளைக் காணவே காணோம்.
கப்பலில் வந்த பார்ஸி இனத்தினர் ஒரு தூதுவரை ஹிந்து அரசனிடம் அனுப்பினர். இங்கு வந்து தங்க அனுமதிக்க வேண்டும் என்ற தூதுவரின் கோரிக்கையைக் கேட்ட ஹிந்து அரசன் ஒரு கிண்ணத்தில் பாலை முழுவதுமாக தளும்பத் தளும்ப நிரப்பி அதை தூதுவரிடம் கொடுத்து கப்பலில் உள்ள உங்கள் தலைவனிடம் நான் கொடுத்ததாகக் கொடுங்கள் என்றான்.
ஒன்றும் புரியாத தூதுவர் அந்தக் கிண்ணத்தை அப்படியே தலைவனிடம் சேர்ப்பித்து நடந்ததைச் சொன்னார்.
தலைவரோ அந்தக் கிண்ணத்தில் இருந்த பாலில் ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு அதை மீண்டும் சென்று மன்னனிடம் கொடுக்கச் சொன்னார்.
தூதுவர் நடந்ததை மன்னனிடம் சொல்ல சிரித்தவாறே அவன் அனைவரும் உள்ளே வாருங்கள் என்று அனுமதி கொடுத்தான்.
இதில் என்ன அர்த்தம் பொதிந்து இருக்கிறது என்பதை அறிய அவையில் அனைவரும் ஆர்வம் கொண்டனர்.
மன்னன் விளக்கினான்.
“எனது நாட்டில் கிண்ணத்தில் முழுவதுமாக உள்ள பால் போல மக்கள் நிரம்பியுள்ளார்கள், உங்களுக்கு இங்கு இடமில்லையே’ என்று சொல்லி அனுப்பினேன். இடமில்லையே என்ற ஆதங்கத்தில் சொன்னதை பார்ஸி தலைவர் புரிந்து கொண்டு சர்க்கரையை அதில் அள்ளிப் போட்டார்.
உங்கள் மக்களுடன் மக்களாக பாலில் சர்க்கரை போலக் கலந்து விடுகிறோம் என்றார் அவர்.
எப்படிப்பட்ட பதில்!
அருமையான உணர்வுகளைக் கொண்ட பார்ஸிகளை அனுமதித்து உள்ளே வரச் சொன்னேன் என்றான் ஹிந்து அரசன்.
அன்று பார்ஸிகள் கொடுத்த வாக்கை இன்று வரை அவர்கள் காப்பாற்றி வருகின்றனர்.
ஒரு கலவரம், ஒரு மத மாற்றம், ஒரு கிளர்ச்சி – ஊஹூம், பார்ஸிகளிடமிருந்து இன்று வரை இந்தியாவில் ஒன்று கூட எழவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள இனம் பார்ஸி இனம்.
கொடுத்த வாக்கை தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றும் மக்கள் என்றால் அவர்கள் பார்ஸிகளே!
இந்தப் பார்ஸிகளை எந்த பட்டியலிலும் சேர்க்கவில்லை நமது அரசியல் சட்டம்.
புத்த மதத்தினர்
ஜைன மதத்தினர்
சீக்கியர் – இவர்கள் மைனாரிடி இல்லையாம்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் மைனாரிடியாம்?
எந்த அடிப்படையில்?

secular-4
எண்ணிக்கையிலா? அப்படியானால் மேலே சொன்னவர்கள்: எண்ணிக்கையும் குறைவு பட்டது தானே!
ஆக அரசியல் சுய லாபத்திற்காக ஒரு விஷ வித்து விதைக்கப்பட்டது.
அதன் பலனை இன்று சுதந்திர பாரதம் அனுபவித்து வருகிறது.
சமத்துவம் – Equality – என்பது போய் செகுலரிஸம் சமத்துவமற்ற ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்று ஒரு பிளவை ஏற்படுத்தி விட்டது.
இதனால் மதமாற்றம், தீவிரவாதிகளின் மிரட்டல்கள், குண்டுவெடித் தாக்குதல் என்று தேவையற்ற அனைத்து தீமைகளும் அணிவகுத்து பாரதத்திற்கு அச்சுறுத்தல்களாக விளங்குகின்றன!
ஒரு பொது சிவில் சட்டம் அல்லவா இங்கு தேவை!
இந்திய அரசியல் சட்டம் ஹிந்துக்கள் மீது – அவர்கள் வாழ்க்கை முறை மீது, அவர்களின் மணச் சடங்கு, சுவீகாரம் உள்ளிட்டவற்றின் மீது – மட்டும் பாயும்.
ஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் என்றால் ஓடும்!
இது என்ன செகுலரிஸம்?
அதிசய செகுலரிஸம்?!
சற்று இன்னும் யோசித்துப் பார்ப்போம்!

-தொடரும்

‘அருந்தவத்து அரசி’ சபரி – ராமாயண இன்பம் (Post No.3004)

sabari

Picture shows Sabari with Rama, Lakshmana

Article Written by London swaminathan

Date:25 July 2016

Post No. 3004

Time uploaded in London :– 8-05 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் சபரி என்னும் கானகப் பெண்மணியைப் பற்றிய பாடல்கள் மிகவும் குறைவு. ஆயினும் அந்தப் பாடல்களை, ஸ்லோகங்களைப் படிக்கும்போது இலக்கிய இன்பமும், பக்திச் சுவையும் கிட்டும்.

 

முதலாவது, கானகத்தில் தவம் செய்யும் கிழவிக்கு கம்பன் கொடுக்கும் அடை மொழி “அருந்தவத்து அரசி”. வால்மீகி அடிக்கடி பயன்படுத்தும் “தபோநிதி” – என்பதை கம்பன் வேறு வடிவத்தில், இப்படி மிகவும் அழகாகப் பகர்கிறான்.

 

கம்ப ராமாயணம் முழுதும், ராமனுக்கும் சீதைக்கும் அனுமனுக்கும் கம்பன் கொடுக்கும் அடை மொழிகள் படித்துப் படித்து இன்புறத் தக்கவை.

இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை

பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன

அருந்தவத்து அரசி தன்னை அன்புற நோக்கி எங்கள்

வருந்துறு துயரம் தீர்த்தாய்; அம்மனை வாழி என்றார்

பொருள்:

சபரி சொன்னாள்: என் தந்தையே! நீ இங்கே வரப்போகிறாய் என்று கேட்டு, உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நீ வந்துவிட்டதால், இன்றுதான் என் தவம் பலித்தது ( என் புண்ணியம் பூத்தது).

உடனே, அருந்தவத்துக்கு ராணியான அவளைப் பார்த்து, அன்போடு ராமன் சொன்னான்: தாயே! வழிநடையால் ஏற்பட்ட களைப்பை, உன் உபசரிப்பால் தீர்த்துவிட்டாய், நீ வாழ்வாயாக.

 

அவள் சொல்கிறாள்: சிவனும் பிரம்மனும், இந்திரனும் என்னிடம் வந்து,  நீ சித்தி பெறும் காலம் வந்துவிட்டது. ராமன் இங்கே வருகிறான். அவனுக்கு உரிய உபசாரங்களைச் செய்துவிட்டு எம் உலகத்துக்கு வருக என்று அவர்கள் சொன்னார்கள்.

 

(பிரம்மா, சிவன் பெயரை மட்டும் சொன்னதிலிருந்து,   ராமனே விஷ்ணு என்பதையும் கம்பன் தெரிவிக்கிறான்.)

shabari

Picture: – சபரி என்ற வேடுவப் பெண்மணி

இன்னொரு பாடலில் ஞானிகள் யார் என்றும் கம்பன் சொல்கிறான். அவர்கள் “கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர்”. அதாவது, நமக்கு எல்லாம் காதில் இயற்கையாகவே துளை இருக்கிறது. சான்றோருக்கு,  கேள்வி  ஞானத்தால் – நல்லனவற்றைக் கேட்டதால் அத்துளை உண்டாயிற்றாம்!

 

சபரி வாழ்ந்த இடம் .மதங்க முனிவரின் ஆசிரமம் ஆகும். அந்த இடத்தின் இயற்கை அழகையும் பம்பா நதி தீரத்தின் இயற்கை அழகையும் வால்மீகி விரிவாக வருணிக்கிறார். கமபன் அந்த இடம் சொர்க்கலோகம் போல இருந்தது என்பான்:

எண்ணிய இன்பங்கள் அன்றித் துன்பங்கள் இல்லை ஆன

புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே

 

பொருள்:

புண்ணியம் செய்தோர் போகக்கூடிய சுவர்க்கம் (துறக்கம்) போல எப்போதும் இன்பம் மட்டுமே நிலவும் — துன்பமே இல்லாத – இடம் போல இருந்தது (மதங்க முனிவரின் இருப்பிடம்)

 

இறுதியில் ராமனுக்கு காய் கனிகளைக் கொடுத்து சபரி உபசரிக்கிறாள். அது மட்டுமல்ல சுக்ரீவன் வாழும் இடத்துக்கு எப்படி போவது என்றும் வழிகளை விரிவாகச் செப்புகிறாள். கடை சியில் யோக சக்தி மூலம் தன் உடம்பை விட்டு நீங்கி உயிர் துறக்கிறாள்.

 

வால்மீகி சிறிது வேறுவிதமாக முடிக்கிறார். யோக சக்தி என்பதற்குப் பதிலாக தீயில் புகுந்து சபரி உயிர் நீத்தாள் என்று இயம்புகிறார். அக்காலத்தில் சான்றோர்கள், தனது பணிகள் முடிந்தபின் இப்படி தீப்புகுந்து உயிர் துறப்பர்.

 

அதிகமான சங்கத் தமிழ் பாடல்களைப் பாடிய பிராமணப் புலவன் – “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” – கபிலனும் இப்படி தீப்புகுந்து உயிர்நீத்தான்.

 

சபரி பாடல்களில் இருந்து நாம் அறிவது என்ன என்று ஒரு ஆராய்ச்சி செய்வோம்:–

sabari ashram

Picture:– சபரி வாழ்ந்த இடம் .மதங்க முனிவரின் ஆசிரமம்

1.அந்தக் காலத்தில் பெண்களும் நல்ல ஆன்மீக அறிவு பெற்றிருந்த்னர். அவ்வையாருக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவர் சபரி. அப்போதே பெண்கள் ஆன்மீக தாகம் கொண்டு தவம் செய்தனர்.

2.ராமன் போன்றாரும், சபரியும் கானகத்தில் – வெஜிட்டேரியன் உணவை மட்டுமே சாப்பிட்டனர். காயும் கனிகளும் கீரையும் தேனும் திணை மாவுதான் அவர்கள் உண்டவை.

3.சான்றோர்கள் தன் தவ வலிமையால் உடல் துறப்பது, தீப்புகுவது என்பது சர்வ சாதாரணமாக இருந்தது. அதாவது உடலைத் துச்சமாக எண்ணினர். நாம் பழைய உடைகளைக் குப்பைக் கூடையில் எறிவது போல அவர்கள் உடலைத் துறந்தனர்.

4.கானகத்தில் இருந்த ஆசிரமங்கள் மிகவும் இயற்கை அழகு மிக்கவை அவை சொர்க்க லோகம் போன்று இன்பமே எந்நாளும் என்ற இடமாகத் திகழ்ந்தன.

5.சபரி கடித்துச் சுவைத்து கொடுத்த பழங்களை ராமன்- மன்னன் மகன் — ஜாதி வேறுபாடின்றி சாப்பிட்டதையும் நாம் அறிவோம். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடலை – ராமன் குகன் சம்பவத்திலும், சபரி சம்பவத்திலும் காட்டுகிறான்.

  1. எல்லாவற்றிற்கும் மேலாக ஆரிய-திராவிட வாதத்துக்கு செமையடி கொடுக்கிறது ராமாயணம். ஆதிகுடிகள், வேடுவர்கள் என்போரெல்லாம் திராவிடர் என்றும் , ராமன், கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் ஆரியர் என்றும் பிதற்றினர் வெளி நாட்டினர். அது தவறு – சபரியும் கூட யோக வாழ்வு நடத்தினாள் என்று காட்டுகிறது இந்த சம்பவம். மேலும் ராமனும், கிருஷ்ணனும் “காக்கா கறுப்பு நிறத்தோலினர் என்பதையும் நாம் அறிவோம். ஆக நிறவேற்றுமை புகுத்திய வெளி நாட்டுப் பேய்களுக்கு அடிமேல் அடி கொடுக்கிறது சபரி நிகழ்வு

7.சபரி என்ற வேடுவப் பெண்மணிக்கு நல்ல பூகோள அறிவு இருந்ததையும் இச்சம்பவம் காட்டும். அதாவது அவள், சுக்ரீவன் வாழும் ரிஷ்யமுக பர்வதத்துக்குப் போகும் வழியை இராம இலக்குவருக்கு இயம்புகிறாள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று ஒரு காலம் நிலவியது உண்மைதான். ஆனால் அதற்கு முன்னர் ‘கூகுள் மேப்’- ஐ (Google Map) விட அதிக அறிவு இருந்தது பெண்களுக்கு.

 

8.இப்படலம் சுவர்கம் பற்றிய தகலையும் நமக்குத் தருகிறது. சுவர்க்க லோகம் இன்பமே எந்நாளும் நிலவும் இடம். அங்கு துன்பம் என்பதே கிடையாது.

 

சபரி பிறப்பு நீங்கு படலத்தை கம்பன் முடிக்கும் முன்பாக, சபரி தன் யோக சக்தியால் உயிர் நீத்ததை ராமன் அதிசயத்தோடு பார்த்த செய்தியையும் கம்பன் கூறுகிறான்:-

அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்றி எய்தி

 

இந்த அதிசயத்தகவலை நமக்குக் கொடுத்த கம்பனுக்கும் வால்மீகிக்கும் நாமும் நன்றி சொல்வோம்.

 

–subham–

 

அதிசயத் துறவி ஸு யுன் – பகுதி 9 (Post No.3003)

$_35

Article Written S NAGARAJAN

Date: 25 July 2016

Post No. 3003

Time uploaded in London :– 5-49 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 9
ச.நாகராஜன்
ஸு யுன்னுக்கு இப்போது வயது 65
க்வி மிங் ஆலயத்தில் இருந்தோர் அவரைத் தனிமைத் தவத்தை விட்டு விட்டுத் தங்களிடம் வருமாறு வேண்டினர். அங்கு அவர்கள் அழைப்புக்கு இணங்கிச் சென்ற அவர், சூத்திரங்களின் விளக்கங்களை சொல்ல ஆரம்பித்தார். இப்போது அவருக்கு சிஷ்யர்களாக 300 பேர் இருந்தனர்.
அடுத்து, யாங்-சு ஆலயம் அவரை அழைத்தது சுராங்கம சூத்திரங்களையும் .ஹான் –ஷான் எழுதிய கவிதைகளையும் ஆலயத்தில் அவர் ம்ரப் பலகைகளில் ஓவியமாக வரைய ஏற்பாடு செய்தார்.
அவற்றை விளக்குமாறு அனைவரும் அவரைக் கேட்டுக் கொண்டனர்.
கூட்ட முடிவில் தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் லு பு சிங் மற்ற அதிகாரிகளுடன் வந்து ஸு யுன்னைத் தரிசித்தார்.
சான் டா ஆலயத்திற்கு வருமாறு பணிவுடன் அவர்கள் வேண்டினர்.
அங்கு சென்றார் ஸு யுன்.
நகரங்களில் தனக்கு வாழப் பிடிக்கவில்லை என்று கூறிய ஸு யுன் காக் ஃபுட் மலையில் உள்ள ஜிங்-டிங் மலை உச்சியில் உள்ள ஆலயத்தைத் தான் புனருத்தாரணம் செய்ய விரும்பியதையும் அங்குள்ளோர் அதைத் தடுத்ததையும் நினைவு கூர்ந்தார். (அத்தியாயம் 7இல் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது)
அந்த இடத்தில் சிறிது இடம் தந்தால் நன்றாக் இருக்கும் என்ற கருத்தை ஆள்வோரிம் அவர் கேட்டுக் கொள்ள அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
போ யு என்ற இடத்தில் ஒரு ஆலயம் இருந்தது. ஜியா குங் வமிசம் (1796-1820) ஆண்ட போது செழிப்பாக இருந்த ஆலயம் இப்போது பாழடைந்து கிடந்தது. ஏன் அதை விட்டு விட்டு எல்லோரும் போய் விட்டார்கள்?
ஆலயத்தின் வலது புறம் பெரிய ஒரு பாறை இருந்தது. அந்தப் பாறையிலிருந்து ‘வெள்ளைப் புலி’ யின் செல்வாக்கு இருந்ததாம். மக்கள் பயந்து ஓடி விட்டனர்.
பாறையை உடைக்க விரும்பினார் ஸு யுன். பாறையோ மிகவும் பெரிது. ஒன்பது அடி நான்கு அங்குலம் உயரம். ஏழரை அடி குறுக்களவு.
பாறையை இடது புறமாக 280 அடி தள்ளி விட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய ஸு யுன் ஒரு மேஸ்திரியைக் கூப்பிட்டு ஆள்களை அழைத்து வருமாறு கூறினார். 100 பேர்கள் குழுமினர். மூன்று நாட்கள் இடை விடாமல் உழைத்தனர். ஒரே சமயத்தில் அனைவரும் முயற்சி செய்தும் கூட பாறை அசையக் கூட இல்லை!
முயற்சியில் தோல்வி அடைந்த அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
ஸு யுன் அங்கு இருந்த காவல் தெய்வங்களை நோக்கிப் பிரார்த்தனை புரிய ஆரம்பித்தார். மந்திரங்களை ஜெபித்தார்.
பின்னர் பத்து துறவிகளை அழைத்தார். இடது புறம் பாறையைத் தள்ளுங்கள் என்றார்.
பாறை நகர்ந்தது! அனைவரும் ஆரவாரித்தனர்.
ஒருவர் பாறையில் ‘யுன் யி ஷி’ என்று எழுதியே விட்டார். மேகத்தால் நகர்த்தப்பட்ட பாறை என்பது அதன் பொருள்.
(மேகம் என்பது இங்கு ஸு யுன்னைக் குறிக்கிறது)
அதிகாரிகளும் அறிஞர்களும் நடந்ததைக் கேள்விப்பட்டு அங்கு விரைந்து வந்தனர். நடந்ததை பாறையில் கல்வெட்டாக்க முனைந்தனர்.
ஸு யுன் ஒரு கவிதையைப் புனைந்தார்.
அதன் சுருக்கம்:
“இந்த விசித்திரமான பாறை தைரியமாக நின்றது
புலிகள் நடமாடும் இடத்தில் ஆலயத்தை புனருத்தாரணம் செய்ய விரும்பினேன்
ஆயிரக்கணக்கான தடைகளைக் கடந்து இந்த மலைக்கு வந்தேன்
அப்போது – பிரகாசமான சந்திர வெளிச்சம்
மீன்கள் விளையாடும் அழகிய நேரம்
மாயா உலகத்தை மேலிருந்து பார்க்கும் அவன்
இனி சுவர்க்கத் தென்றல் தவழ்ந்து வர
மணிகளின் ஓசையைக் கேட்பான்”
ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது.எல்லா யாத்ரீகர்களும் அங்கு வருவதென்றால் அவர்களை நன்கு கவனிக்க பணம் வேண்டுமே
ஸு யுன் நிதி திரட்ட முனைந்தார்
– தொடரும்