Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 10 ( Post No.12,676)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,676

Date uploaded in London – –  –  5 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

SLOKAS 28

பர்த்ருஹரியின் நீதி சதகம் ஸ்லோகங்கள் 28,29,30

நீதி சதகத்தில் நூறு பாடல்கள் இருப்பதை அறிவோம். இதுவரை 27 பாடல்களை குறள் கீதை முதலிய நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். நமது அறிவு வேட்டையைத் தொடர்வோம்.

பாடல் 28

பரிவர்தினி ஸம்ஸாரம் ம்ருதஹ கோ வா ந ஜாயதே

ஸ ஜாதோ யேன ஜாதேன யாதி வம்சஹ ஸமுன்னதிம் –28

परिवर्तिनि संसारे
मृतः को वा न जायते ।
स जातो येन जातेन
याति वंशः समुन्नतिम् ॥ 1.28 ॥

நிலையற்ற இந்த உலகத்தில் யார் பிறப்பு- இறப்புச் சுழலில் விழவில்லை? ஒருவனுடைய குடும்பத்தின் செல்வ வளத்தையும் பெருமையையும் அதிகரிக்கும் பிறப்பே சிறந்தது.

28. In the ever-changing world, who does not attain birth or death? (Every one does.) He is (truly) said to be born, by whose birth his family attains eminence.

பிறப்பிறப்புப் சேர் குடும்பப் பேராழி  தன்னிற்

பிறந்தும் இறைவாப் பெரிய- திறைமுடையோன்

யாவெனெனிற் கீர்த்தி எவனாற்  குலமெல் லாம்

மேவு வவனாற் றென்று விளம்பு –28

பிராணிகளும், தாவரங்களும் இறக்கின்றன, பிறக்கின்றன. ஆனால் மனிதனுக்கும் அவைகளுக்கும் வேறுபாடு இல்லாவிடில் மனிதர்களும் அவைகளுடன் எண்ணப்படும். ஆகையால் வளத்தையும் நல்ல பெயரையும் சம்பாதிக்கும் வாழ்வே வாழ்வு ஏனையவை மிருக வாழ்வு.

இவை மேற்கூறிய பர்த்ருஹரியின் கருத்தை எதிரொலிக்கும்.

xxx

 SLOKAS 29

குஸுமஸ்தபகஸ்யேவ த்வயீ வ்ருத்திர் மனஸ்வினஹ

மூர்த்னிவா ஸர்வலோகஸ்ய சீர்யதே வன ஏவ வா –29

कुसुमस्तवकस्येव
द्वयी वृत्तिर्मनस्विनः ।
मूर्ध्नि वा सर्वलोकस्य
शीर्यते वन एव वा ॥ 1.29 ॥

பூங்கொத்து இருக்கிறது; அது காட்டிலும் இருக்கலாம்; அல்லது பெண்களின் தலையிலும் இருக்கலாம் இதே போலத்தான் ஒவ்வொருவருக்கும் இரண்டு நிலைகள் இருக்கின்றன.

29. A high-minded person has (only) two kinds of existence, like that of a bunch of flowers. Either they adorn the crest of all the world, or wither away  in wilderness.

பூவைப்போல் வல்ல புருஷன் தனக்கெவரும்

ஆவலாய்ச் சென்னியணி லாக்கலொன்று தாவிலா

மாவனத்திலேஇருந்து மட்கலொன்று வேறுவித

மாவதில்லை ஆவதில்லையாம் —29

பூங்கொத்து, பெண்களின் தலையை அலங்கரிக்கையில் சிறப்பு பெறும்; அதே பூங்கொத்து காட்டில் மலர்ந்து, யாரும் பார்க்காமல் உதிர்ந்தும் போவதுண்டு. ஆக புகழ் பெறுவதும் புகழ் இல்லாமல் வாழ்வதும் நம் கையில் இருக்கிறது.

வள்ளுவன் இந்த உவமையை வேறு ஒரு இடத்தில் பயன்படுத்துகிறான்.

வள்ளுவன் சொன்னான்:-

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையாதார் – குறள் 650

தான் படித்த விஷயத்தை அழகாக விளக்கத் தெரியாதவர்கள், மலர்ந்தும் மணம் வீசாத மலர்களுக்கு ஒப்பாவர்

நல்ல குலத்தில் பிறந்து அழகாக, இளமையுடன் தோன்றினாலும், படிக்கா விட்டால், வாசனை இல்லாத கிம்சுக (கல்யாண முருங்கைப் பூ போலத்தான்) மலர் போலவே இருப்பர்.

ரூப யௌவன சம்பன்னா விசால குல சம்பவா:

வித்யாஹீனா ந சோபந்தே நிர்கந்தா இவ கிம்சுகா:


xxxx

SLOKAS 30

சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குவது ஏன்?

செயற்கரிய  செயல் செய்தால்தான் பெருமை; இதை பர்த்ருஹரி அழகாக விளக்குகிறார்

ஸந்த்யன்யேஅபி ப்ருஹஸ்பதி ப்ரப்ருதயஹ ஸம்பாவிதாஹா பஞ்சஷா

ஸ்தான்ப்ரத்யேஷ விஷேஷ விக்ரமருசீ ராஹுர்ந வைராயதே

த்வாவேவ க்ரஸதே திவாகர நிசா ப்ராணேஸ்வரௌ பாஷ்யவரௌ

ப்ராதஹ பர்வணி பஸ்ய தானவபதிஹி சீர்ஷாவசேஷா க்ருதிஹி-30

வானத்தில் குரு போன்ற கிரஹங்கள் பிரகாசிக்கின்றன. ஆனால் ராஹு அவைக   ளை விழுங்குவதில்லை. கிரஹண காலத்தில் சூரியனையும் சந்திரனையும் அல்லவா ராஹு விழுங்குகிறான். இவ்வளவுக்கும் அவன் தலை மட்டும்தான் இருந்தது!

सन्त्यन्ये‌உपि बृहस्पतिप्रभृतयः सम्भाविताः पञ्चषास्
तान्प्रत्येष विशेषविक्रमरुची राहुर्न वैरायते ।
द्वावेव ग्रसते दिवाकरनिशाप्राणेश्वरौ भास्करौ
भ्रातः पर्वणि पश्य दानवपतिः शीर्षावशेषाकृतिः ॥ 1.30 ॥

30. O Brother! There are five or six other respected planets, such as Brhaspati, but Rahu, keen on (facing) superior valour, does not oppose them. He, the chief of Asuras, with only his head left in his body, eclipses only two of them, the Sun and the Moon (the Lords of day and night respectively), on the new moon and full moon days.

குரு முதலாம் ஐந்தாறு கோள்களிருந்தும்

கிருகணத்தில்  ராகு பெருங் கீர்த்தி மருவுதற்குச்

சூரியனையேதான் தொடர்ந்து பிடிக்கின்ற

காரியத்தைத் தேருங்கள் கண்டு – 30

இந்துக்களுக்கு ராஹு கேது ஆகிய இரண்டும் சாயா (shadows) கிரஹங்கள் (நிழல்கள்) என்பது தெரிந்தும், பாமர மக்களுக்குப் புரியவைப்பதற்காகவும், கிரஹண காலத்தில் சில செயல்களைச் செய்யக்கூடாது என்று எச்சரிக்கவும் சூரியனையோ, சந்திரனையோ ராஹு அல்லது கேது விழுங்குவதாகச் சொல்லுவர். உண்மையில் கிரஹண காலத்தில் , சூரியனோ சந்திரனோ பாம்பின் வாயில் போய்விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவது போலவே தோன்றும். மேலும் அமிர்தத்தைத் திருட முயன்ற ராஹு என்னும் பாம்பை விஷ்ணு வெட்டியதால் தலை மட்டுமே எஞ்சியதாகப் புராணக் கதைகள் புகலும். இதில் பர்த்ருஹரி உவமையாகக் காட்டி சொல்ல விழைவது என்ன வென்றால்,

பெரிய செயல்களைச் செய்தால்தான் புகழ். நோஞ்சானை அடித்துப் போட்டுவிட்டு பயில்வான் என்று பெயர் வாங்குவதில் பொருள் இல்லை.

செத்த பாம்பை அடித்துவிட்டு வீரன் என்று சொல்வதிலும் பொருள் இல்லை. ஆக செயற்கரிய செயலைச் செய்க.

இதை வள்ளுவனும் ஒரு குறளில் விளம்புவான்:-

நிலவரைநீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு –குறள் 234

ஒருவன் பூவுலகத்தில் புகழ் மணக்கும் செயல்களைச் செய்வானாகில், தேவலோகத்தில்  அவனுக்குத் தான் வரவேற்பு கிடைக்கும்; தேவர்களைப் போற்றமாட்டார்கள்.

–subham–

Tags-  Bhartruhari part10, Nitisataka part 10, Slokas , பர்த்ருஹரி, நீதி சதகம் ,ஸ்லோகங்கள் 28,29,30

ராவணன் குகை: இலங்கைத் தீவின் 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள்-49 (Post 12,675)


RAVANA CAVES  AT ELLA IN SRI LANKA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,675

Date uploaded in London – –  –  5 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx 

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 49 

இலங்கையிலுள்ள 52 ராமாயண ஸ்தலங்களில் ராவணன் தொடர்பான இடங்களைக்  காண்போம் .

நுவர எலியா காயத்ரி பீடம்

நுவரெலியா நகரில் சீதைஅம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக தரிசிக்க வேண்டிய இரண்டு இடங்கள், காயத்ரி தேவி மந்திரும் ஸ்ரீலங்காதீஸ்வரர் சிவன் கோவிலும் ஆகும். முருகேசு சித்தர் என்பவரின் சமாதியும் இங்கு உளது. அவர் ஜெர்மனி நாட்டிற்குக் கடத்திவரப்பட்ட நர்மதை நதிக்கரை பாணலிங்கங்களைக் கொண்டுவந்து இங்கே ஸ்தாபித்தார் . அவர் 2007-ம் ஆண்டில் சமாதி அடைந்தார். இந்தக் கோவில்கள் 1970 முதல் இருக்கின்றன. ராவணன் மகன் மேகநாதன், சிவனை வழிபட்ட இடம் இந்தப் பகுதி என்பது பக்தர்களின் நம்பிக்கை.

MANDODARI PALACE AND SITA BATHING GHAT STEPS

115.சீதா தேவி சிறை இருந்த அசோக வனம்

நுவரெலியாவில் சீதை அம்மன் கோவிலை முன்னொரு கட்டுரையில் தரிசித்தோம். அதன் அருகிலேயே தாவரவியல் பூங்கா இருக்கிறது ; இதுதான் ராமாயண காலத்தில் அசோக வனம் Ashoka Vatika Converted as a Botanic Gardens) இதன் பெயர் Hakgala Botanical Garden ஹக்கல தாவரவியல் பூங்கா; இங்கு 10,000 வகைத் தாவரங்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆர்க்கிட் மலர்களும் ORCHID FLOWERS ரோஜா மலர் வகைகளும் ஆகும் .

xxx

116.சீதா கொடுவா என்றால் சீதையின் கோட்டை. என்று பொருள்; இங்கு மண்டோதரி அரண்மனை இருந்ததாகவும் சீதையும் இங்கு சில காலம் சிறை வைக்கப்பட்டதாகவும் செவி வழிச் ‘செய்திகள் கூறுகின்றன. இது அடர்ந்த காட்டுக்குள் குருளுபோதா கிராமத்தில் இருக்கிறது. (Sita Kotuwa’ is situated in ‘Gurulupotha’ village in thick forest of ‘Uwa’ region of Sri Lanka. ‘Kotuwa’ means fort.) அடர்ந்த காட்டுக்குள் ஒன்றரை கி.மீ நடந்தால் இந்த இடத்தை அடையலாம் . அங்கே பெரிய, உயரமான கருங்கல் படிகளைக் காணலாம். சீதா தேவி தினமும் குளிப்பதற்கு இந்தப் படிகள் வழியாகத்தான் போவாளாம் . அடர்ந்த காட்டுக்குள் இப்படிப் படிகள் இருப்பதைப் பார்த்தால் இங்கே ஒரு பெரிய கட்டிடம்  இருந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்கலாம்.

அரண்மனையின் உடைந்த தூண்களும், கற்களும் இருக்கின்றன .Gurulupotha’, there was a big palace of Ravana’s queen Maharani Mandodari.

ராவணன் வைத்திருந்த 18 விமானங்கள்

பரத்வாஜ முனிவர் எழுதிய வைமானிக சாஸ்திரம் இப்பொழுதும் ஸம்ஸ்க்ருதத்தில் கிடைக்கிறது . இதன் அடிப்படையில் ராவணன், 18 வகை விமானங்களை வைத்திருந்தான். அவைகளில் குபேரனிடமிருந்து பறித்த புஷ்பக விமானம் ஒன்று. அவனுடைய விமானங்கள் இறங்குவதற்காக ஆறு இடங்களில் விமான தளங்களை அமைத்திருந்தான் ; அவையாவன Veragantota வரகந்தோட , Thodupol Kanda தொடுபோல கண்ட , Ussangoda உஸ்ஸன்கோட்டை , Variyapola வரியபோல , Vatariyapolaவாதாரியபோல  and Gurulupotha குருளுமபோத  என்ற ஆறு விமான நிலையங்கள் ஆகும்.

xxx

SITA DEVI FIRE WALKING PLACE, BIG KEY TO SITA TEMPLE AT ELLA

117.சீதா தேவி அக்கினி பரீட்சை

சீதா தேவி தனது தூய்மையை நிரூபிக்க அக்னி பரீட்சை நடந்த இடம் ஒன்றும் இலங்கையில் உள்ளது . அங்கு இப்பொழுது புத்த விஹாரம் இருக்கிறது ( Buddhist temple built at the place where Sitamata went through Agni-pariksha, is named as ‘Divirumpola Rajmahaviharay’). அந்த விஹாரையின் பெயர்  திவிரும்போல ராஜ மஹா விஹாரை. அங்கு நிறைய புத்தர் சிலைகளும் சுவரில் ராமாயண ஓவியங்களும் உள்ளன. அவைகளைப் பார்க்க கட்டணம் உண்டு. அங்குள்ள புத்த பிட்சு ராமாயணக் கதைகளையும் ஆங்கிலத்தில் சொல்கிறார்

சின்மயா மிஷன் இலங்கையில் ராமாயணம் என்ற புஸ்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில் நாம் அறியாத பல தகவல்கள் உள்ளன ( book published by Chinmaya Mission titled ‘Ramayana in Lanka’). இலங்கையிலுள்ள பெளத்தர்கள் Extremists தீவிரவாதிகள்; ஆதலால் ராமாயணத்தின் சுவடுகளை மறைத்துவிட்டனர் . இந்துக் கோவில்களுக்கு அருகில் புத்த விஹாரங்களைக் கட்டி, பழைய கோவில்களை இடம் தெரியாமல் செய்துவிட்டனர் .

அருகில் அஸ்வத்தத மரமும் சிறிய அறையும் உளது. அந்த இடத்தில் உள்ள சீதா தேவி சிலைகளையும் ஓவியங்களையும் சத்குரு அஞ்சலி காட்கில் பார்த்து வந்து பல தகவல்களைத் தெரிவித்தார் .சீதா தேவி அக்கினிக்குள் நுழையும் பெரிய உருவம் அங்கே இருக்கிறது.

சீதா தேவி அக்கினி பரீட்சை நடந்த சிறிய கோவில் அறைக்கு மிகப்பெரிய பூட்டும், மிகப்பெரிய சாவியும் உள்ளன

சீதா தேவி தீயில் புகுந்ததை நினைவு கூறும் வகையில் இன்று இந்தியா முழுவதும்இலங்கை முழுவதும், பூக்குழி இறங்கல்தீ மிதி விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த தீ மிதி வைபவத்தைத் துவக்கிவைத்தவள் சீதா தேவி. 5000 ஆண்டுகளாக இன்றும் தமிழர்கள் இதைச் செய்து வருகின்றனர்.

118. ராவணன் குகை, ராவணன் எல்லா / நீர்வீழ்ச்சி

எல்லா (Ella) என்னும் சிற்றூர்  நுவர எலியாவிலிருந்து ( ‘Nuwara Eliya’) 51 கி.மீ. தொலைவில் மலைப் பிராந்தியத்தில் இருக்கிறது. இந்த  ஊரை ராவணன் எல்லா என்றும் கூறுவார்கள். ஊரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் நீர்வீழ்ச்சி (எல்லா ) இருக்கிறது. அருகிலேயே ராவணன் குகையம் உளது

ராவணன் குகையின் நுழை வாயிலிலேயே பாறை வடிவமே கோர ராட்சத உருவத்தில் இருக்கிறது. குகைக்குள் சென்றாலும் அதே போல இராக்கத முகம் கொண்ட வடிவில் பாறைகள் இருக்கின்றன. குகைக்குள் சுரங்கப் பாதைகளும் உள்ளன. அவை வண்டிகள் செல்லும் அளவுக்குப் பெரிய சுரங்கப்பாதைகள். தமிழில் மயில்ராவணன் கோட்டை என்ற சொல் வழக்கு உண்டு. அதில் சென்றவர்கள் வழி தெரியாமல் திணறி அகப்பட்டுக் கொள்வார்களாம் . இதே போல கிரேக்க நாட்டிலும் இருந்தன அவைகளை மேஸ் MAZE என்பர்

ராவவன் கோட்டைக்குள் 200 மீட்டர் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. அரசாங்கமே பெரிய ராட்சத உருவத்தைக் காட்டி பெரிய பாறையையும்  வழியை அடைக்கும்படி வைத்ததுள்ளது . ஊர்மக்கள் சொல்லும் காரணம் உள்ளே விஷ ஜந்துக்களும் வௌவால்களும் வசிக்கின்றன என்பதாகும். சாதாரண மனிதர்கள் சென்றாலே மூச்சுத் திணறலும், வாந்தியும் ஏற்படும் ஒரு சூழ்நிலை.

ராவணன் பல உரு எடுக்க வல்லவன், மாயா ரூபம் உண்டாக்கி ஜாலங்கள் செய்பவன் என்று வால்மீகி எழுதியது  உண்மையே என்று இந்த குகைங்கள் நிரூபிக்கின்றன.

RAVANA ELLA (PICTURES ARE FROM JANA JAGRUTI WEBSITE; THANKS)

மேலும் காண்போம் .

TO BE CONTINUED……………………………..

TAGS- RAVANA CAVES, RAVANA ELLA, SITA ASOKA VANA, PART 49, SRI LANKAN TEMPLES, FIRE WALKING BY SITA, AGNI PAREEKSHA, ராவணன் குகை, ராவணன் எல்லா, நீர்வீழ்ச்சி

சம்ஸ்கிருத மொழியின் பெருமை!- 1 (Post No.12,674)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,674

Date uploaded in London –  –  5 November , 2023               

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

சம்ஸ்கிருத மொழியின் பெருமை! – 1

ச.நாகராஜன்

பாரதீய பண்பாட்டிற்கான தேசீய மொழி சம்ஸ்கிருதம். அதில் இல்லாதது எதிலும் இல்லை.

கோடிக் கணக்கான நூல்களைக் கொண்ட ஞானப் பொக்கிஷம் சம்ஸ்கிருதம்.

உலகில் உள்ள மொழிகளில் மிக மிக அதிகமான சொற்களைக் கொண்ட ஒரே மொழி சம்ஸ்கிருதமே.

102078 கோடியே 50 லட்சம் வார்த்தைகள் சம்ஸ்கிருத மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றை கணினிப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்த ஆரம்பித்தால் இன்னும் ஒரு நூற்றாண்டிற்கு இவற்றைப் பயன்படுத்த முடியும்.

மற்ற மொழிகளை விட குறைந்த வார்த்தைகளை வைத்து ஒரு வாக்கியத்தை அமைத்து, சொல்ல வந்த கருத்தை இந்த மொழியில் மட்டுமே சொல்ல முடியும்.

அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகமே சம்ஸ்கிருதத்திற்காக உள்ளது.

ஃபோர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையின் படி (Forbes July 1987) சம்ஸ்கிருதமே கணினிப் பயன்பாட்டிற்கு உகந்த மொழியாகும்.

திருத்தப்பட்ட செம்மொழி சம்ஸ்கிருதம். நாஸா சம்ஸ்கிருதத்தைப் பற்றிக் கூறுகையில், “Only unambigouous spoken language on the planet” – நேரடியாகப் பொருள் விளக்கம் தரும்படி பூமியில் பேசப்படும் ஒரே மொழி சம்ஸ்கிருதமே – என்று கூறுகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் சம்ஸ்கிருதமே அதிகாரபூர்வமான அங்கீகரிக்கப்பட்ட மொழியாகத் திகழ்கிறது.

சம்ஸ்கிருத மொழியின் அடிப்படையில் ஆறாவது மற்றும் ஏழாவது தலைமுறை சூப்பர் கணினிகள் அமெரிக்காவில் உருவாக்கப்படுவதாக நாஸா அறிவித்துள்ளது.

ஆறாவது தலைமுறை கணினி உருவாக்கத்திற்கான இலக்கு 2025ஆம் ஆண்டு என்றும், ஏழாவது தலைமுறை கணினி உருவாக்கத்திற்கான இலக்கு 2034 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு இலக்கையும் எட்டிய நிலையில் உலகெங்கும் சம்ஸ்கிருதம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பெருமளவில் உருவாகும்.

மிக மேம்பட்ட விஞ்ஞான நூல்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இவை வேதங்கள், உபநிடதங்கள், ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்கள், மஹாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட நூல்களாகும். நாஸா 60000 சுவடிகளைக் கொண்டுள்ளது. (Reference : Russian State University, NASA etc. NASA posseses 60,000 palm leaf manuscripts, which they are studying).

சம்ஸ்கிருதம் கற்பதால் மூளைத் திறன் கூடுகிறது. இதைக் கற்கும் மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனர்.

லண்டனில் உள்ள ஜேம்ஸ் ஜூனியர் ஸ்கூல், சம்ஸ்கிருதம் கற்பதை கட்டாயமாக ஆக்கியுள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் முதல் இடத்தை ஆண்டுதோறும் பிடிக்கின்றனர்.

இதைப் பின்பற்றி அயர்லாந்திலும் இப்போது சம்ஸ்கிருதம் பயில்விக்கப்பட்டு வருகிறது.

சம்ஸ்கிருதத்தைப் பேசும் போதும் படிக்கும் போதும் உடலில் உள்ள ஆற்றல் புள்ளிகள் செயல்படுத்தப்படுகிறது.  இதனால் மன அழுத்தம் குறைகிறது. வியாதிகள் வருவது தடுக்கப்படுகிறது. ஆற்றல் கூடுகிறது. மனம் சாந்த நிலையை அடைகிறது.

நாக்கில் உள்ள அனைத்து நரம்புகளையும் பயன்படுத்த வைப்பது சம்ஸ்கிருத மொழி ஒன்றே தான். அதைப் பேசும் போது ஆற்றல் புள்ளிகள் ஊக்குவிக்கப்படவே இரத்த ஓட்டம் சீர்படுகிறது.

இரத்த அழுத்தம், டயபடீஸ், கொலஸ்ட்ரால் மிகுதி உள்ளிட்டவை கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன, (ஆதாரம் அமெரிக்கன் ஹிந்து யுனிவர்ஸ்டியின் தொடர் ஆராய்ச்சி முடிவுகள்)

இது வெறும் மொழி மட்டுமல்ல. மனித சிந்தனைக்கும் ஆன்மாவுக்கும் பாலமாக செயல் படும் ஒன்று. பௌதிகத்திற்கும் உளவியலுக்கும்; பரு உடலுக்கும் நுண்ணுடலுக்கும்; கலைக்கும் பண்பாட்டிற்கும்; இயற்கைக்கும் அதைப் படைத்தவனுக்கும்;  படைக்கப்பட்ட அனைத்திற்கும் அதைப் படைத்தவனுக்கும் இடையிலான ஒரு மொழியாகத் திகழ்கிறது. 

உலகின் தலையான மதங்களான ஹிந்து மதம், புத்த மதம், ஜைன மதம் ஆகியவற்றிற்கான அறிவு சால் மொழியாக சம்ஸ்கிருதம் விளங்குகிறது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

(புத்த மதத்தில் பாலி மொழியுடன் கூட; ஜைன மதத்தில் ப்ராக்ருத மொழியுடன் கூட)

உலகின் நாட்காட்டியில் (காலண்டரில்) சிறந்து விளங்குவது

(சம்ஸ்கிருதத்தில் அமைக்கப்பட்டுள்ள) ஹிந்து நாட்காட்டியே. ஏனெனில் இது நிலவியலின் படி சூரிய மண்டல இயக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. (ஆதாரம் ஜெர்மன் ஸ்டேட் யுனிவர்ஸிடி).

 ஹிந்து ஶ்ரீ சக்ர அமைப்பை ஒட்டி பாதுகாப்பு அமைப்பு ஒன்றை இங்கிலாந்து இப்போது ஆராய்ச்சி செய்து வருகிறது.

 சான்ஸ்கிரிட் எஃபெக்ட் – SANSKRIT EFFECT –  இந்த வார்த்தை நியூரோ விஞ்ஞானியான ஜேம்ஸ் ஹார்ட்ஸெல் என்பவரால் (NEURO-SCIENTIST JAMES HARTZELL) உருவாக்கப்பட்டது. வேத மந்திரங்களை ஓதி மனனம் செய்வதன் மூலம் மூளையில், மூளைச் செயல்பாட்டில் நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவுத்திறனுக்கான பகுதிகள் பெரிதாக ஆகின்றன. இதுவே சான்ஸ்கிரிட் எஃபெக்ட்.

 இன்னும் இது போன்ற ஏராளமாம சிறப்புகள் சம்ஸ்கிருத மொழியில் உள்ளன.

அதை அடுத்துப் பார்ப்போம்.

                                      ***********************************

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 9 (Post No.12,673)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,673

Date uploaded in London – –  –  4 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

SLOKA 25

क्षुत्क्षामो‌உपि जराकृशो‌உपि शिथिलप्राणो‌உपि कष्टां दशाम्
आपन्नो‌உपि विपन्नदीधितिरिति प्राणेषु नश्यत्स्वपि ।
मत्तेभेन्द्रविभिन्नकुम्भपिशितग्रासैकबद्धस्पृहः
किं जीर्णं तृणम् अत्ति मानमहताम् अग्रेसरः केसरी ॥ 1.25 ॥

சிங்கம் புல்லைத் தின்னுமா?

க்ஷுத்க்ஷாமோஅபி ஜராக்ருசோபி சிதிலப்ராணோபி கஷ்டாம் தசா

மாபன்னோபி விபன்னதீதிரபிப்ராணேஷு நஸ்யஸ்வபி

மத்தேபேந்த்ர விபின்னகும்பபிசிதக்ராஸைகபத்தஸ்ப்ருஹஹ

கிம் ஜீர்ணம் த்ருணமத்தி மானமஹதாமக்ரேஸரஹ கேஸரீ 1-25

சிங்கத்துக்கு பசியால் வாட்டம்ஆனால் கிழடுஉடலில் பலம் குன்றிவிட்டதுஉடல் ஊனம்பலஹீனம்மனத் தளர்ச்சிகாம்பீர்யம் போய் மரணப் படுக்கையில் இருந்தாலும் மதம்பிடித்த யானையின் மீது பாய்ந்து அதை உண்ணவே எண்ணும். அப்பேற்பட்டவர்களே மஹத்தான சாதனையாளர். சிங்கம் என்றாவது புல்லைத் தின்னுமா?  

சிங்கம் பசித்தாலும் தீரவிளைத் தோய்ந்தாலும்

மங்கியுடல் வாடி மடிந்தாலும் — பொங்குமத  யானையையே

கொல்லவெண்ணும்  அன்றி யுலர் வைக்கோலைத்

தீனியென தின்னுமோ சென்று – 25

25. Even when weak with hunger, thin due to old age, largely unsteady and in a pitiable condition, with his lustre and vitality lost, will the lion, foremost among the proud and great, eat dry grass? His desire is fixed on devouring mouthfuls from the crown of a rutting elephant split open (by himself.)–25

Xxx

SLOKA 26

स्वल्पस्नायुवसावशेषमलिनं निर्मांसम् अप्यस्थि गोः
श्वा लब्ध्वा परितोषम् एति न तु तत्तस्य क्षुधाशान्तये ।
सिंहो जम्बुकम् अङ्कम् आगतम् अपि त्यक्त्वा निहन्ति द्विपं
सर्वः कृच्छ्रगतो‌உपि वाञ्छन्ति जनः सत्त्वानुरूपं फलम् ॥ 26

 ஸ்வல்பஸ்னாயுவஸாவ சேஷமலினம் நிர்மாம்ஸமப்யஸ்திகோஹோ

ஸ்வா லப்த்வா பரிதோஷமேதி ந ச தத்தஸ்ய  க்ஷுதாசாந்தயே

ஸிம்ஹோ ஜம்புகமங்கமாகதமபி  த்யக்த்வா நிஹந்தி த்விபம்

ஸர்வஹ க்ருச்ரகதோபி வாஞ்சந்தி ஜனஹ ஸத்வானுரூபம் பலம் 1-26

சதைப்பற்று இல்லாத எலும்பைக் கண்டாலும் நாய் சந்தோஷப்படும்ஆயினும் அது அதன் பசியைத் தீர்க்காது. சிங்கமோ தன் பிடியில் ஒரு முயலே சிக்கினாலும் அதை விட்டுவிட்டு பலம் பொருந்திய யானையயே கொல்ல விழையும். பெரியவர்கள் தங்கள் பெருமைக்கேற்ற செயலைச் செய்தே குறிக்கோளை அடைவர்.

 சாரமிலா வெள்ளெலும்பைத் தான் கண்டு சந்தோஷம்

கூரு நாய் கொண்டதனால் பசிதீராது

சேர நரி வாழ்ந்தாலும் சிங்கம் அதைவிட்டுத்

தூரவன  மதனில்  தூங்கும் மதயானைதனைக் 

கோர நகத்தால் கொல்லும்  அது போல ,

பார வறுமைபல பாய்ந்தாலும் மாந்தர் தந்

தார தம்மியப் படி தக்க பலன் வேட்பதன்றி

ஆற வேறொன்றை எண்ணார் –26

A dog gets satisfaction with a small bone, with a little fat and muscle on it, even if it is fleshless and not enough to satiate its hunger. A lion rejects a jackal available at hand, and kills an elephant. Everyone desires a goal matching his strength, even if he has to go through difficulty.–26

கோப்பெருஞ்சோழன் செப்புவது 1-26

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால் உயர்ந்த தேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்…………….

–புறம் 214, கோப்பெருஞ்சோழன்

யானை வேட்டைக்குப் போனவன் யானையை பெறலாம். ஆனால் குறும்பூழ் பறவையைப் பிடிக்கப் போனவன் வெறும் கையுடனும் வரக்கூடும்; ஆகையால் உயர்ந்த குறிக்கோளுடன் செல்க.

Xxxxx

SLOKA 27

लाङ्गूलचालनम् अधश्चरणावपातं
भूमौ निपत्य वदनोदरदर्शनं च ।
श्वा पिण्डदस्य कुरुते गजपुङ्गवस्तु
धीरं विलोकयति चाटुशतैश्च भुङ्क्ते ॥ 27॥

லாங்கூலசாலநமதஸ்சரணாவபாதம்

பூமௌ நிபத்ய வதனோதரதர்சனம் ச

ஸ்வாபிண்டதஸ்ய  குருதே கஜபுங்கவஸ்து

தீரம் விலோகயதி சாடுசதைஸ்ச புங்தே- 27

நாய் வாலை ஆட்டும்எவன் ரொட்டித் துண்டுபோட்டாலும் அவன் காலடியில் விழும். அது கீழே புரண்டு வயிற்றையும் வாயையும் காட்டி மேலும் உணவு பெற முயலும். ஆனால் பெரிய பலம் மிக்க யானையோ இனிமையான வார்த்தைகள் சொல்லி அழைத்தாலும்கூட உணவைப் பற்றி கவலைப்படுவதுமில்லைஅதை ஏற்பதுமில்லை.–27

கவள மிடுகின்றவனைக்  காணு நாய்  வாலைத்

துவள மிக வாட்டுந் துள்ளுந் தவள நிறப்

பல்லைவயிற்றைக்காட்டும் – பார்மேல் விழுமெழும்

எல்லையிலா ஏழ்மை இயற்றுமே – சொல்லரிய

யானை மதங்கொண்டதனால் யாரையு ம் பாராமலே

மான முடன் வீரமுடன் மாவோட்டி தானளிக்கும்

பெருங்கவலளந் தின்று பெருமையாய் வாழும்

இரும் புவியின் தன்மை இது  — 27

27. A dog wags his tail, falls at his feet and rolls on the ground displaying its maw, to its feeder. A majestic elephant looks calmly (at the feeder) and eats only after many persuasive words.–27

xxxx

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

வள்ளவனும் கண்ணனும் புகல்வது யாதெனின்

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – குறள் 596

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

xxxxx   subham   xxx

tags—Bhartruhari, 4 languages, part 9

விபீஷணன் கோவில்-இலங்கைத் தீவின் 108 ஆலயங்கள்- Part 48 (Post No.12,672)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,672

Date uploaded in London – –  –  4 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 48

இலங்கையிலுள்ள 52 ராமாயண ஸ்தலங்களில் மேலும் சில முக்கியமானவற்றைக் காண்போம் .

111.விபீஷணன் கோவில் VIBHISHANA DEVALAYA, Kelaniya

உலகிலேயே முதல் முதலில் வெளிநாட்டு அரசாங்கத்தை (FIRST EXILE GOVERNMENT IN THE WORLD) அறிவித்தது இந்துக்கள்தான். ராவணன் தம்பி விபீஷணனை  ராமபிரான், இலங்கை மன்னனாக அறிவித்து இந்தியாவில் முடி சூட்டினார் . இதை ஆங்கிலத்தில் exile government எக்ஸைல் கவர்மெண்ட் என்பார்கள். விபீஷணனுக்கு ராமேஸ்வரத்திலும்  இலங்கையிலும் கோவில்கள் உள்ளன. ராவண வதத்துக்கு முன்னதாகவே இலங்கை மன்னனனாக விபீஷணனுக்கு ராமர் முடிசூட்டினார்.)

கொழும்பு நகரிலிருந்து 5 மைல் தொலைவில் களனிய என்ற இடம் இருக்கிறது ; இங்கு களனி கங்கை நதி ஓடுகிறது. இதன் கரையில்  விபீஷணனுக்குக்  கோவில்  கட்டப்பட்டுள்ள்ளது. இலங்கை முழுவதும் நதிகளை கங்கை என்ற பெயருடன் அழைப்பதைக் கவனிக்க வேண்டும். இந்து இலங்கை பின்னர் புத்த மத இலங்கையாக மாறியதற்கு இவை எல்லாம் சான்று.

(ராமேஸ்வரம் – தனுஷ்கோடி செல்லும் சாலையில் ராமேஸ்வரத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் கோதண்டராமர் கோவில் இருக்கிறது ; அங்கு ராமபிரானை விபீஷணன் வணங்கும் கோலத்தில் இருப்பதைக் காணலாம்) .

களனியா என்னும் இடத்தில் இப்பொழுது புத்த விஹாரமும் இருக்கிறது. இதன் பழைய பெயர் கல்யாணி. பழைய கல்யாணி 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரலைத் தாக்குதலில் கடலுக்குள் சென்றுவிட்டது பின்னர் களனிய  தலை நகர் ஆனது. 

ராவண வதததுக்குப் பின்னர் இங்கு விபீஷணன் முறையாகப் பட்டம் சூட்டிக்கொண்டு ஆட்சி செய்ததால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆண்ட மன்னன், இன்று விபீஷணனுக்கு கோவிலை எழுப்பினான்

களனி விஹாரையில் முன்வாசல் தோரணத்தைக் கடந்ததும் வலது பக்கம் ஓர் சிறிய கட்டிடம் காணப்படுகிறது. இதுவே  விபீஷணன் கோயிலாகும். இங்கு கப்புறாளைகள் பூஜைகளை செய்து வருகின்றனர். பெளத்தர்களும் வணங்கிச் செல்கிறார்கள் .

விபீஷணன் கோவிலை சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர்  போச்சுகீசிய மத வெறியர்கள்  இடித்துத்  தரைமட்டமாகினார்கள் .விக்கிரகங்களை  ஆற்றில் வீசினார்கள். 1767 இல் கண்டியை ஆட்சி செய்த கீர்த்தி ஶ்ரீ ராஜசிங்க மன்னன்,   களனி விபீஷணன் கோவிலையும் , பெளத்த  விஹாரையையும் மீண்டும் கட்டினார்  .

12–ம் நூற்றாண்டு முதல் கோவில் பற்றிய செய்திகள், நூல்கள் மூலம் கிடைக்கின்றன. அண்மைக் காலத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. கோவில் தூண்கள் , சுவரிலுள்ள சிற்பங்கள் முதலியவற்றில் இந்து மத செல்வாக்கைக்   காணலாம்

ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் இலங்கையில் ராவணனுக்கு கோவில் கிடையாது. ஆனால் பல இடங்களில் விபீஷணன் கோவில்கள் இருக்கின்றன. மேலும் இளநகையைக் காக்கும் 4  காவல் தெய்வங்களில் விபீஷணன் பெயர்தான் உள்ளது. ராமாயண தர்மத்தை புராதன இலங்கை நூலிழை பிசகாமல் கடைப்பிடித்தது . விபீஷணன் ஒரு நியாய வாதி என்பதால், பல குடும்ப , சமூக பிணக்குகளைத் தீர்ப்பதற்காக சிங்கள மக்கள் விபீஷண பகவானுக்கு நேர்த்திக் கடனும் வேண்டிக்கொள்கின்றனர்

ராம பிரான், , 14 ஆண்டு முடியும் தருவாயில் , பரதனைக் காப்பாற்றுவதற்காக நந்திக்கிராமத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக விரைந்து சென்றார் என்றும் அதனால் விபீஷண னுக்கு  பட்டாபிஷேகம் செய்யும் பொறுப்பு லட்சுமணனிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் கதை போகிறது. ஆகையால் இங்கு அதைக்காட்டும் சிலைகளும் பெரிய ஓவியங்களும் உள்ளன .

அருகில் குருகுலாவ என்ற இடமும் இருக்கிறது. இது, ராமர் அனுப்பிய குரு , புரோகிதர், பிராமணர்கள் தங்கி குருகுலம் நடத்திய இடம் ஆகும்  .

Xxxx

112. சஞ்சீவி மலையின் ஐந்து துண்டுகள்

ராமாயண ஸ்தலங்கள் 52–ல் மூலிகை மலையான சஞ்சீவி  மலையின் ஐந்து துண்டுகள் விழுந்த 5 இடங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இத்துடன் வில்லூண்டி தீர்த்தம்கன்னியா வெந்நீர் ஊற்றுகள் ஆகியவற்றையும் சேர்த்தால்  7 இடங்களுக்கு  கணக்கு  கிடைத்து விடும் . அவைகளையும் சுருக்கமாகக் காண்போம்..

ராமனும் ராவணனும் கடும் போரிட்டனர் . அதில் லெட்சுமணன் மூர்ச்சை அடைந்தவுடன் அவனுக்கு மரணம்  சம்பவிக்காமல் இருக்க சஞ்சீவினி என்ற மூலிகை தேவைப்பட்டது.ஆயுர்வேத சிகிச்சையை நன்கு அறிந்த அனுமன், அந்த மூலிகைகக்காக இமய மலைக்குச் சென்றான். குறிப்பிட்ட மூலிகையைக் கண்டு பிடிக்க அவகாசம் இல்லை; இது URGENT MATTER அர்ஜென்ட் மேட்டர்; பெரிய எமர்ஜென்சி EMERGENCY என்பதால் மலையையே தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸ் AMBULANCE வேகத்தில் பறந்து வந்தான். அப்பொழுது ஐந்து இடங்களில் அதன் துண்டுகள் விழுந்தன. அவையாவன :– தொளு கண்ட (குருநாகல ), ரீதிகல , ருமசால (ராம சைலம் )மலை , கச்சத் தீவு, தள்ளாடி (மன்னார் )

There are 5 Sanjeevani Mountains in Sri Lanka namely, Dolukanda (Kurunegala) / Ritigala Nature Reserve (Habarana) / Rumassala Mountain (Galle) / Kachchativu island (Jaffna) / Thalladi (Mannar)

Xxxx

113. இரண்டு ஊற்றுகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள வில்லூண்டி தீர்த்தம் இராமாயண ஸ்தலங்களில் ஒன்றாகும்  ராமேஸ்வரம்- தங்கச்சி மடம் அருகில் கடலுக்கு நடுவில் உள்ள தூய நீர் வில்லூன்றித் தீர்த்தம் போலவே இதுவும் ஒரு அதிசய ஊற்று. யாழ்ப்பாண நகரின் மத்தியில் உள்ளது .. ராமர் படையின் தாகத் தைத் தீர்ப்பதற்காக ராமர் தனது வில்லினால் எய்த அம்பில் பொங்கிய ஊற்று இது.  இப்போது 100 x 100 அடி குளமாக இருக்கிறது. பூமியிலுள்ள ஊற்றுகளில் இருந்து நீர் சுரக்கிறது

கன்னியா நீர் ஊற்றுகள்

நான் செப்டம்பர் மாதம் (2023) இலங்கை சென்றபோது 100 ரூபாய் கொடுத்து ஆர்வத்தோடு டிக்கெட் வாங்கினேன். அதில் உண்மையை மறைத்து , ராமர் பெயரை அடியோடு மறைத்து இது அனுராதபுர காலத்திலிருந்து இருந்துவரும் புத்த மத தலம்  என்று அடித்த டிக்கெட்டைக் கொடுத்தனர். இது தொல்லியல் துறையின் சார்பில் அச்சிடப் பட்டுள்ளது.

இங்கு 7 ஊற்றுக்கள் இருக்கின்றன . இதுவும் ராமபிரானால் உண்டாக்கப்பட்டது என்பது ஐதீகம். அருகிலுள்ள இந்துக் கோவிலை சர்ச்சை- வழக்கு காரணமாக மூடி வைத்துள்ளனர்

இந்த வெந்நீர் ஊற்றுகளில் வெவ்வேறு வெப்ப நிலையில் நீர் வருவது ஒரு அதிசயம்தான் .

இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை இப்படி அதிசய ஊற்றுகள் இருக்கின்றன. அத்தனையும் இறைவன் சம்பந்தப்பட்டதே.  ஆகையால் கன்னியா வெந்நீர் ஊற்றுகளும்  ராம பகவானுடன் தொடர்புடையன என்று சொல்லுவதில் பொருள் உண்டு 107 டிகிரி முதல் 86 டிகிரி வரை வெப்பம் இருப்பதும் அந்த நீரில் நோய் தீர்க்கும் ரசாயன உப்புக்கள் இருப்பதும் ஆராய்சசியில் தெரிய வந்துள்ளது. நான் சென்ற போது ஆண்களும் பெண்களும் குளித்துக் கொண்டிருந்தனர். வெளியே வரும் வழி நெடுகிலும் கடைகள். அங்கு பல மூலிகைகளும் விற்கப்பட்டன.

Xxxxx

யாழ்ப்பாணம் முதல் கண்டி /கதிர்காமம் வரை ராமர் பெயர் கொடி கட்டிப் பறக்கிறது . மன்னார் அருகில் ராமர் அமைத்த  ராமர் சேது பாலமும் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது  அதுவும் 52 புனித இடங்களில் ஒன்று .

114. ராம சேது (சிங்களத் தீவினுக்கோர் பாலம்)

இதுவும் 52 புனித ஸ்தலங்களில் ஒன்று.

ராமர் கட்டிய பாலத்தை நாஸா NASA விண்வெளி புகைப்படங்களும்  உறுதி செய்கின்றன . இதை மக்கள் பயன்படுத்தும், இந்தியா- இலங்கை கடல் பாலமாக மாற்றவேண்டும் INDIA- SRI LANKA SEA BRIDGE  . பாரதியார் சொன்ன ஆரூடங்களில் இன்னும் இரண்டு பலிதமாகவில்லை.

சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் என்று பாடினார் பாரதி. ஆகையால் பங்களா தேஷ், பாகிஸ்தான் என்ற எல்லைகள் மறைந்து அகண்ட பாரதம் உருவாவது சத்தியமான உண்மை.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

என்று பாடியதால் பாலம் அமைந்ததே தீரும் என்று  11 September  2015 கட்டுரையில் இதே பிளாக் BLOG கில் எழுதியுள்ளேன்

இந்தியா- இலங்கை ரயில்வே மற்றும் சாலைப் பாலம் அமைந்தே தீரும் .

மேலும் பல ராமாயண ஸ்தலங்களை அடுத்ததாகக் காண்போம்

தொடரும்…………………………………

Tags – இலங்கை, ராமாயண , தலங்கள் , 52, பகுதி 48, புனித ஆலயங்கள் , விபீஷணன், கோவில் சிங்களத் தீவினுக்கோர் பாலம்

சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்தியா காண்டம்-கம்பர்- 3 (Post No.12,671)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,671

Date uploaded in London –  –  4 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்தியா காண்டம்-கம்பர் – பாகம் 3 

பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

நூலில் உள்ள அத்தியாயங்கள் இவை: 

1. ஆறு செல் படலம்

2. கங்கை காண் படலம்

3. திருவடி சூட்டு படலம்

பிற்சேர்க்கை

இராமாயணம் பற்றிய ஆய்வு நூல் வரிசையில் திரு ஆர் சேஷாத்ரிநாதன் எழுதிய இந்த நூல் நான்காவது நூலாக அமைகிறது.

தூத்துக்குடியில் பாரம்பரிய மிக்க பெரும் இசைக் குடும்பத்தில் பிறந்தவர் இவர். வயது 73. யூனியன் வங்கியில் பெரும் பொறுப்பை முப்பது வருடங்களுக்கும் மேலாக வகித்தவர் இவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய பல மொழிகளில் வல்லுநர். இராமாயண, மஹாபாரத இதிகாசங்களையும் புராணங்களையும் ஆழ்ந்து படித்ததோடு அவற்றின் மீது கொண்ட தீவிரப் பற்றால் அவற்றை நன்கு ஆராய்ந்து அதில் உள்ள நுட்பங்களையும் ரகசியங்களையும் தொகுத்து வருபவர். அதை தம் புத்தகங்கள் வாயிலாக உலகிற்குத் தந்து வருகிறார். இராமாயணம் பற்றிய சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதிய இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்த நூலில் என்னுரையாக இவர் கூறுவது :-

“கம்பர் ஒரு மகா சமுத்திரம். அதன் கரையில் கூழாங்கற்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் நான். அந்த சமுத்திரத்தில் இறங்கி எளிதாக முத்தெடுக்க முடியாது. அதற்கு அனுபவம் நிறைந்தோர் உதவி தேவை. அந்த வரிசையில் நாமக்கல் கவிஞர், ஐயா கம்பவாரிதி ஜெயராஜ், பேராசிரியர்கள் இராதாகிருஷ்ணன், அ.ச. ஞானசம்பந்தன், சுந்தர சண்முகனார், கணபதிப் பிள்ளை போன்ற சான்றோர்களின் உதவியோடும் நலுங்கு மெட்டு இராமாயணம், வீரபத்திர இராமாயணக் கும்மி, இராமாயண அம்மானை, அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனைகள் போன்ற நூல்களின் துணையோடும் கம்பன் என்னும் கடலில் மூழ்கி முத்து எடுக்க முயற்சி செய்துள்ளேன்.”

இராமாயண வெண்பாவிலிருந்து அழகிய பாடல்களை அந்தந்த இடத்திற்குத் தக்கபடி நூலில் தரப்பட்டதைக் காண்கிறோம்.

எடுத்துக்காட்டு:
பரதனுடன் சென்ற சேனையின் வர்ணனை:

கார் உற்ற வண்ணக் கடல்போல் வரும்சேனை

பேர் உற்றி டுங்கால் பெரும் குணத்தோன் -சீரை உடை

சுற்றினான் தம்பியொடும் தோன்றினான் பொன் தேர் மன்

முற்றினான் சேனை முகம்.

கூனியும் கூடப் போகிறாள். அவளை சத்ருக்னன் காண்கிறான்.

“செல்லும் கால் மந்தரையாம் தீயவளைக் கண்(டு) இவளைக்

கொல்வன் எனச் சென்றான் கொதித்து.”

குகன் பரதனை நீ வந்த காரணம் யாது? எனக் கேட்க பரதன் பதில் நவில்கிறான் இப்படி:

அண்ணனை நாடாள வாக்கி அவனடிக் கீழ்

நண்ணிப் பணிபுரிய நாடுகின்றேன் – புண்ணியனே!

நின்னையர சாக்கினேன் நீயாள்வாய் என்றெனக்கே

அன்னைதரு கீழ்மை யற

–    (கவிஞர் ஆதிமூலப் பெருமாளின் குஹவெண்பா)

பரதன் அயோத்தி திரும்பி அரசப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இராமன் பரதனிடம் அன்புக் கட்டளை இடுகிறான்.

அதை அருணாசலக் கவிராயர் இராம நாடகக் கீர்த்தனையில் உரைக்கிறார் இப்படி:

“இன்னஞ் சிறு பிள்ளை போலே என்னை அழைக்கிறாய் உன்னை

என்ன சொல்வேன் பரதா என் கண்ணின் மணியே!

முன்னதாக நான் கொண்டு பின்னாக அரசுனக்கு

முறையாலே தந்தேன் என் உரை பெய்யாமல்

உன்னாலும் எந்நாளும் சொன்னபடி நடக்கும் என்று

உசரப்போன தசரதற்கு வசை வையாமல்….

சின்னாபின்னங்களாய்ப் பட்டணமும் பரிசனமும்

சேற்றில் நட்ட கம்பம் போலே தொய்யாமல்

என் ஆனாய் தம்பி உன் நாட்டை ஆளடா

எப்படி நான் சொன்னாலும் அப்படி நீ செய்யாமல்

இன்னஞ் சிறுபிள்ளை போலே என்னை அழைக்கிறாய்….

இப்படி நூல் முழுவதும் பல நூல்களிலிருந்து எடுத்தாளப்படும் பகுதிகளைப் படித்து மகிழலாம்.

காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

அவர்தம் இந்தத் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துவோம்.

இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம். படிக்கடிஜிடல் வடிவத்தில் நூலைப் பெறஅச்சுப் பதிப்பாகப் பெற என இப்படி மூன்று விதங்களில் இந்த நூலைப் பெறலாம்.

***

PHOTO STORY- Indian Finance Minister Nirmala Sitaraman  in Sri Lanka

Posted by swami_48@yahoo.com on 3-11-2320

Nirmala ji visited famous Hindu temples of Lord Shiva (sung by Saints Sambandar and Appar 1400 years ago) in Thirukona malai,  Nallur Kandaswamy Temple in Jaffna. She visited tooth relic of Buddha at Kandy and paide respects to Buddhist saints. She attended other secular events. All news papers in Sri Lanka gave huge publicity for her.

Please see the photos taken from Newspapers:

According to 1000 year old Gita Govindam of Poet Saint Jayadeva,  Gautama Buddha was Vishnu’s Ninth Avatar.

Nirmalaji visited Buddha’s tooth relic at Kandy and paid respect to Buddhist saints.

Buddham Saranam Gachcaami. Sangam Saranam Gachcaami. Dhammam Saranam Gachcaami. 

–subham—

Tags- Nirmala sitaraman, Trincomalee, Kandy, Nallur, Jaffna

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 8 (Post No.12,670)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,670

Date uploaded in London – –  –  3 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 8

SLOKA 22

दाक्षिण्यं स्वजने दया परिजने शाठ्यं सदा दुर्जने

प्रीतिः साधुजने नयो नृपजने विद्वज्जने चार्जवम् ।

शौर्यं शत्रुजने क्षमा गुरुजने कान्ताजने धृष्टता

ये चैवं पुरुषाः कलासु कुशलास्तेष्वेव लोकस्थितिः ॥ 1.22 ॥

தாக்ஷிண்யம் ஸ்வஜனே தயா பரிஜனே சாட்யம் ஸதா துர்ஜனே

ப்ரீதிஹி ஸாது ஜனே நயோ ந்ருப ஜனே வித்வத் ஜனே ச ஆர்ஜவம்

சௌர்யம் சத்ரு ஜனே க்ஷமா குரு ஜனே காந்தா ஜனே த்ருஷ்டதா

யேசைவம் புருஷாஹா கலாஸு குசலாஸ்தேஷ்வேவ லோகஸ்திதிஹி  -1-22

பாடல் 22-ன் பொருள்

ஒருவன் உறவினர்களிடத்தில் மரியாதை காட்ட வேண்டும்;

வேலைக்காரர்களிடம் அன்பாக இருக்க வேண்டும்;

புனிதர்களின் உறவுக்கு ஏங்க வேண்டும்;

ஆட்சியாளரின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்;

கற்றோரிடம் பணிவுடன் இருக்க வேண்டும்;

எதிரிகளிடத்தில் வீரத்தைக் காட்ட வேண்டும்;

முதியோரிடம் சகிப்புத் தன்மை இருக்க வேண்டும்;

மனைவியிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்;

மனிதர்களின் திறமை, விவேகம், தந்திரம் மூலம்தான்

நல்ல சமுதாயம் வேரூன்றி நிற்கிறது

Xxx

உறவோர்க்குக் கண்ணோட்டம் ஊழியற்கிரக்கம்

மறவோர்க்கு வன்மை வழங்கல் –அறவோர்க்கு

மெய்யன்பு பாராளும் வேந்தர்கனுசரணை

கைவல்ய மாகுங் கணக்கு – 22

படித்தோர்க்கு ஒழுங்கு பகைவர்க்கு வீரம்

முடித்தோர்க் கடக்கம் முறையாம் — துடித்தவிடைப்

பெண்களுக்குத் திட்டம் பெரிதுங்கையாடுவார்

கண்களுக்கு மேல் பெற்றார் கண் -22

22. The stability of the world depends on those men alone, who are skilled in the arts and who display kindness to kinsfolk, compassion to others, deceit towards evildoers, friendship to good people, diplomacy to kings, honesty to the learned, bravery to foes, patience with elders and tact with women.

எல்லோரிடமும் அன்பு காட்டுதல்—

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு- 80

அன்பு இருக்கும் உடல் உயிருள்ள உடல்; அது இல்லாவிட்டால் அது பிணம் ( தோல் போற்றிய எலும்புக்கூடு)

xxx

பெரியார் துணைக்கு ஏங்கு—

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்-442

இருக்கும் துன்பத்தைப் போக்கி, இனி துன்பம் வராமல் காக்கும் அறிவிற் சிறந்த பெரியோரை பேணுக


xxxx

SLOKA 23

जाड्यं धियो हरति सिञ्चति वाचि सत्यं

मानोन्नतिं दिशति पापम् अपाकरोति ।

चेतः प्रसादयति दिक्षु तनोति कीर्तिं

सत्सङ्गतिः कथय किं न करोति पुंसाम् ॥ 1.23 ॥

ஜாட்யம் தியோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்

மானோன்னதிம் திஸதி பாபம் அபாகரோதி

சேதஹ ப்ரஸாதயதி திஷு தனோதி கீர்த்திம்

ஸத்ஸங்கதிஹி கதய கிம் ந கரோதி பும்ஸாம் 1-23

பாடல் 23-ன் பொருள்

புனிதர்களின், அறிவாளிகளின் தோழமையானது ஒருவனின் அறியாமையையும் அறிவின்மையையும் நீக்கும்;

மந்த புத்தியை  விலக்கும்; சுயமரியாதையை  அதிகரிக்கும்; பாபங்களைப் போக்கும்; மனத்தில் மகிழ்ச்சியை எழுப்பும்; உற்சாகத்தை உயர்த்தும்; சமுதாயத்தில் புகழை  ஈட்டித் தரும்; புனிதர்களின் கூட்டுறவால் கிடைக்காதது ஏதேனும் உண்டோ? செப்புக.

23. Association with good people removes dullness of the intellect, infuses one’s speech with truth, confers dignity, removes sin, gives clarity and joy to the heart and brings fame in all directions. Tell me, what does it not do for men?

உண்மையுரைப்பிக்கும் உயர்மதியை யுண்டாக்கும்

ஒண்மைதிகழ் மானத்தை ஓங்குவிக்கும் — எண்மை

மறத்தையழிக்கும்  மனத்தைக் கொழிக்கும்

புறத் தெங்குங் கீர்த்தி பொலிவிக்கும்  திறத்த பல

சொல்லியென்  மேலோர் தொடர்பு போல் நன்மை செய

வல்ல தொன்றெங்கு மிலை மற்று –-23

ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:–

சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்

நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.

திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் (குறள் 416)

கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.

இன்னொரு குறளில் சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (walking stick வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – குறள் 415

xxxxx

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)

xxxxxx

SLOKA 24

जयन्ति ते सुकृतिनो
रससिद्धाः कवीश्वराः ।
नास्ति येषां यशःकाये
जरामरणजं भयम् ॥ 1.24 ॥

ஜயந்தி தே ஸுக்ருதினோ ரஸஸித்தாஹா கவீஸ்வராஹா

நாஸ்தி யேஷாம் யச: காயே ஜராமரணஜம் பயம்-1-24

ஆழ்ந்த கல்விகற்றநவ ரசங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் புலவர்களின் புகழ் என்றும் குன்றாது. அப்பேற்பட்ட புலவர்கள் என்றும் வெல்வர். அவர்களுடைய புகழ் அழியும் என்ற பயமே இல்லை.

‘கவி’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்குப் புலவர் என்ற பொருளும் , நெடுநோக்குடைய அறிஞர் என்றும் பொருளும்  உண்டு. உண்மையில் வேத காலக் கவிஞர்கள் அப்படித்தான் இருந்தனர்.

Poets are Great men!

May There be glory to wise men who are learned and accomplished poets.. there is no fear that their fame shall wither or perish- 24

24.  Victorious are the fortunate great poets, who have mastered the Rasas. Their body of fame knows no fear of old age and death.

உள்ளதொன்றுரைகின்ற ஒண் கவியாற் பாவாணர்

எள்ளும் மரணபவ மின்றியே – வில்லரிய

சத்தியமா  ஞானியர்  போல்  தாவாத கீர்த்தியொடு

நித்தியமா வாழ்வார் நிசம் –24 

—- subham —-

 Tags-  Nitisataka part 8, bhartruhari part 8, 4 languages, respect, poets

சீதாதேவி கோவில்; அனுமார் மலை; ராமாயண தலங்கள்- இலங்கை…..Part 47 (Post.12,669)

Sita Devi Temple in Sri Lanka 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,669

Date uploaded in London – –  –  3 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 47

108.மருதநர் மடம் ஆஞ்சநேயர் கோவில்

Maruthanamadam Anjaneyar Kovil – Jaffna

மேலும் ஒரு ஆஞ்சனேயர் கோவில் பற்றிக் காண்போம்.. யாழ்ப்பாணத்திலுள்ள மருதன மடம் அனுமார் கோவில் அதன் கோபுரத்தாலும்  72 அடி உயர அனுமனின் கம்பீரமான சிலையாலும் புகழ் பெற்று விளங்குகிறது.. யாழ்ப்பணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

காங்கேசன் துறை நோக்கிப் பயணம் செய்யும் எவரும் கோபுரத்தையும் அனுமார் சிலையையும் பார்க்காமல் இருக்க முடியாது..மருதனமடம் ஆஞ்சநேயர் கோவிலின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, , பிரமிக்க வைக்கும் 72 அடி உயர அனுமன் சிலை ஆகும்.  கலங்கரை விளக்கம் போல  இந்த கோபுர அமைப்பை தொலைவிலிருந்து பார்க்க முடியும்..

மருதனமடம் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி பூஜைகள் தவிர, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த நாட்கள் அனுமாருக்குப் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன,

கோவிலின் மண்டபம் மிகப்பெரியது ; வண்ண, வண்ண சிலைகளும் ஓவியங்களும் அலங்கரிப்பதோடு மிகவும் சுத்தமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இது ராமாயண காலத்துடன் நேரடி தொடர்புடையது அல்ல;  ஆயினும் ராமாயணத்தில் அனுமன் கதாபாத்திரம் இல்லையேல் கதையே இல்லை என்பது நமக்குத் தெரியும். கண்ணகி மதுரையை  எரித்து அதர்மத்தை அழித்தாற்போல , இலங்கையில் அதர்மத்தை அழிக்க உதவியவன் அவன். ஆகவே இலங்கைத் தமிழர்கள் என்று மறவாத மா வரன் ஆஞ்சனேயன் ; இந்து மதத்தில் ஒரே மஹாவீரன் பட்டம் பெற்றவன் அனுமன்தான். சமண மதத்தில் 24ஆவது தீர்த்தங்கரராக வந்த மஹாவீரர் என்ற  மற்றொரு மாவீரனையும் உலகமே போற்றும்.

XXXXX

109. சீதா தேவி கோவில் , நுவரெலியா

இலங்கையிலுள்ள ராமாயண  திருத்தலங்களில் மிகவும் பிரசித்திபெற்றது நுவரெலியா சீதை அம்மன் கோவில் ஆகும்  இலங்கைத் தீவின் நடுநாயகமாகத் திகழ்வது மலையகம். இங்கு சீதா எலிய  என்னும் இடத்தில் சீதை அம்மன் கோவில் அமைந்துள்ளது.. நுவரெலியா நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கோவில் இருக்கிறது இங்கேதான் இராவணன் சீதா தேவியை சிறை வைத்திருந்த அசோக வனம் இருந்தது  எலிய என்றால்  சமவெளி என்று அர்த்தம் . அருகில் சீதா கொண்ட என்ற ஓடை இருக்கிறது அங்குள்ள பள்ளங்களை ராவ ணனின்  யானைகள் நின்ற கால் சுவடுகள் என்பர். இன்னும் சிலர் அனுமனின் கால் சுவடுகள் என்பார்கள். ஹக்கலா தாவரவியல் பூங்காவிலிருந்து 1 கிமீ தொலைவில் கோவில் உள்ளது. கோவில் அருகிலுள்ள கருப்பு நிற மண், இலங்கை நகருக்கு அனுமன் எரியூட்டியதால் ஏற்பட்டது என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ஓடையில் மூன்று சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.. காலை பூஜை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை பூஜை பிற்பகல் 2 மணி முதல் 6:30 மணி வரையிலும் நடக்கிறது.

கோவில் சுவர்களில் ராமாயணக் காட்சிகளை ஓவியமாக வைத்துள்ளார்கள். அமைதியான சூழ்நிலையிலுள்ள சிறிய கோவில்தான் இந்த கோவிலில் ராமர், சீதா தேவி, லக்ஷ்மணன்,  அனுமன் , கிருஷ்ணர், கணேசர் ஆகியோரைத்  தரிசிக்கலாம் .

சிவமயம் சங்கர சுவாமி இந்தக் கோவிலை ஸ்தாபித்தார். 5000 அடி உயர த்தில்  அமைந்த இந்த மலைப் பிராந்தியத்தில் காட்டு மலர்கள் அதிகம் பூக்கின்றன. அவகைகளை பூஜைக்குச் சீதா தேவி பயன்படுத்தியதால் மலர்களுக்குக் கூட  சீதா தேவியின் பெயர்கள்தான் !

இலங்கை அரசாங்கம் 2023ல் சீதா தேவி கோவில் தபால் தலையையும் வெளியிட்டு ராமாயணத்தைச் சிறப்பித்துள்ளது.

Xxxx

110.ருமசெல்ல / ராமா சைல அனுமார் மலை Rumasalla Mountain / Raama Saila= Herb Mountain

இலங்கையின் தென் கோடியில் இந்து மஹா சமுத்திரத்தின் கடலோரமாக காலி GALLE  நகரம் இருக்கிறது. அங்கே அனுமார் சிலையும் அனுமன் மலையும் இருக்கிறது . ராம சைல = என்பது இப்போது ரூம செல என்று மருவிவிட்டது . சைலம் என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு மலை என்று பொருள் . இது ராமாயண சுற்றுலாவில் முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.

கடற்கரைப் பக்கத்தில் அடர்ந்த மலை, காடு , பீச்/ BEACH கடற் கரை அனைத்தும் கொண்டது ராம சைலம்.

லட்சுமணன் மூர்ச்சை  அடைந்த போது அவனை உய்ப்பிக்க அனுமன் இம்மலைக்குச் சென்று சஞ்சீவி பர்வதத்தை/ மலையைக் கொணர்ந்தான் என்பது ராமாயணம் அறிந்தோருக்கு நன்கு தெரியும். உலகில் ரிக் வேதத்துக்கு அடுத்தபடியாக மூலிகை வைத்தியம் வருவது ராமாயணத்தில்தான் . . அனுமன் கொண்டு வந்த இமயமலைத்  துண்டுகள் ஐந்து இடங்களில் விழுந்ததாகவும் அதில் ஒரு மருந்து மலை இங்கே விழுந்ததால் இது ராம சைல = RAMA SAILA =  RUMA SALLA  என்று பெயர் பெற்றதாகவும் பக்கதர்கள் பகர்கிறார்கள் .

இப்போது அங்கு இரண்டு  அனுமன் சிலைகள்  உள்ளன . ஜப்பானியர் கட்டிய சமாதான/ அமைதி பகோடாவில் PEACE PAGODA இந்துக் கடவுளருடன்  ஆஞ்சனேயர் சிலையும் இருக்கிறது . விஷ்ணு , முருகன் சிலைகளும் ஜப்பானியர் கட்டிய புத்த விஹாரத்தில் இருக்கின்றன. இங்கு 150 வகையான மூலிகைகள் வளருவதை தாவரவியல் அறிஞர்கள் பட்டியலிட்டுள்ளதால் ராமாயண மருந்து மலை / சஞ்சீவி மலையின் பகுதி இதுவே என்பதும் உறுதியாகிறது

To be continued…………………………………

—SUBHAM—–

TAGS — இராமாயண தலங்கள், இலங்கை, ரூமசெல்ல , ராம சைல , ஆஞ்சனேயர் , சஞ்சீவி பர்வதம், மலை, மூலிகை, மருந்து மலை ,Part 47,

ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்தியா காண்டம்-கம்பர் – 2 (Post No.12,668)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,668

Date uploaded in London –  –  3 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்தியா காண்டம்-கம்பர் – பாகம் 2

பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

நூலில் உள்ள அத்தியாயங்கள் இவை:

1.தைலமாட்டுப் படலம்

2. கங்கைப் படலம்

3. குகப் படலம்

4. வனம் புகு படலம்

5. சித்திரகூடப் படலம்

6. பள்ளிபடைப் படலம்

பிற்சேர்க்கை

இராமாயணம் பற்றிய ஆய்வு நூல் வரிசையில் திரு ஆர் சேஷாத்ரிநாதன் எழுதிய இந்த நூல் மூன்றாவது நூலாக அமைகிறது.

நூலுக்கு வழங்கிய முன்னுரையில், “இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் எளிதாக்கி மக்களிடையே கொண்டு செல்ல பல உபந்யாசகர்கள், சான்றோர்கள், சொற்பொழிவாளர்கள் அயராது பாடுபடுகின்றனர். இந்த வரிசையில் என்னுடைய சிறு முயற்சியாக பாலகாண்டத்தையும் அயோத்யா காண்டத்தையும் தொகுத்து வழங்கியுள்ளேன். கம்பரின் அயோத்தியா காண்டத்தைத் தொகுத்து இப்போது வழங்கியுள்ளதில் இந்த இரண்டாம் பாகம் மலர்கிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆங்காங்கே கம்பரின் இனிய கவிதைகளோடு இராமாயண வெண்பா,  அருணாசலக் கவிராயரின் இராமநாடக கீர்த்தனை உள்ளிட்ட நூல்களிலிருந்து பாடல்களைத் தந்து ஒப்பிட்டு அவர் ஒவ்வொரு காட்சியையும் விவரிப்பது பல நூல்களின் சாரத்தை ஒருங்கே சேர்ந்து அருந்திய மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த நூலுக்கு திரு ச.நாகராஜன் அணிந்துரை வழங்கியுள்ளார்.

அதில் ஒரு பகுதி இது:

“மொழிவளம் மொழிகுவேனோ மொழிகதைத் தருண முன்னிப்

பொழிவளம்  புகலு கேனோ! பொருள் வளம் புடைத்து விம்மிக்

கழிவளங் கழறு கேனோ! காவியக் கழனி யோங்கிச்

செழிவளஞ் சிரித்து முத்தந் தெரித்தொளி சிதறும் பாவை”

என்று ‘கம்பராமாயண கௌஸ்துப மணி மாலையில்’ கம்ப பக்தர் பேராசிரியர் கே.என். சிவராஜ பிள்ளை கம்பனை வியந்து பாராட்டுகிறார்.

ஆனால் இந்த வேக யுகத்தில் கம்பனை இனம் காட்ட ஒருவர் வேண்டுமே! இந்த வகையில் தான் இராமாயணக் கடலில் கம்பன் பொதிந்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான முத்துக்களை அறிய ஆவல் கொண்டு ஆராய்ந்து அதில் உள்ள பல நல் முத்துக்களைக் கண்டு அவற்றை உலகினருக்கும் தரவல்ல ஒருவராகத் திகழ்கிறார் திரு ஆர். சேஷாத்ரிநாதன்.

அவரது இராமாயண ஈடுபாடும் ஆய்வும் பாராட்டுக்கு உரியது.”

*

பிற்சேர்க்கையில் அவர் இந்த நூலை எழுத உதவிய நூல்களின் பட்டியலைத் தருகிறார்.

1) வால்மீகி ராமாயணம் 2) கம்ப ராமாயணம் 3) துளஸி ராமாயணம் 4) இராமாயண வெண்பா 5) நலுங்கு மெட்டு ராமாயணம் 6) இராமநாடகக் கீர்த்தனை 7) வீரபத்திர ராமாயணக் கும்மி 8) ராமாயண அம்மானை 9) ராமாயணக் கப்பல் உள்ளிட்ட நூல்கள்.

வியக்கிறோம். 

காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

அவர் தம் இந்தத் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துவோம்.

இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம். படிக்கடிஜிடல் வடிவத்தில் நூலைப் பெறஅச்சுப் பதிப்பாகப் பெற என இப்படி மூன்று விதங்களில் இந்த நூலைப் பெறலாம்.

***