நிர்வாண முஸ்லீம் சாமியார்களுக்கு மரண தண்டனை (Post No.11,878)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,878

Date uploaded in London – –  7 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இரண்டு முஸ்லீம் சாமியார்களுக்கு முஸ்லீம் வெறியர்கள் மரண தண் டனை கொடுத்துக் கொன்றுவிட்டனர். இவர்களில் ஒருவர் சமாதி டில்லி யில் உள்ளது. இப்போதும் சூஃபி(Sufi)  மத முஸ்லீம்கள் அவரை வணங்கி வருகின்றனர் .

மன்சூர் (Mansur)  என்பவர் , இராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் 1000 ஆண்டுகாலுக்கு முன்னர் வசித்தார் .இவர் நானே கடவுள் (உபநிஷத்தில் உள்ள அஹம்  பிரம்மாஸ்மி) ” அன் – அல் – ஹக் என்று சொல்லிக்கொண்டு தெருக்களில் வலம் வருவார். இது இஸ்லாம் மதத்துக்கு எதிரானது என்று சொல்லி காலிபா, இவரைப் பிடித்து கி..பி. 920-ல் பாக்தாத் நகரில் சிரச் சேதம் செய்தான் 

இந்தியாவை ஆண்ட மொகலாய கொடுங்கோலர்களில் பலர் செக்ஸ் பைத்தியங்கள்; ஷாஜஹான் உள்பட எல்லோரும் ஏராளமான மனைவிகளை மணந்தவர்கள் ; அவர்களில்  பெரும்பாலானோர் தம்பி அல்லது அப்பனைக் கொன்ற கொலைகாரர்கள் . இதில் மிக மோசமான பேர்வழி அவுரங்க சீப். அவன் தனது உறவினர்களைக் கொன்றதோடு ஏராளமான இந்துக்களையும் சீக்கியர்களையும்  கொன்றவன். மத வெறியின் உச்சாணிக் கொம்பு . வாழ்க்கையில் இசை, நடனம் உள்பட எதுவமே பிடிக்காதவன். அவன், சர்மத்(Sarmad)   என்ற சாமியாருக்கு மரண தண்டனை விதித்தான்.

. இராக் நாட்டின் பாக்த்தாத்தில் மன்சூர் மரணதண்டனையை ஏற்று  இறந்தாலும் அவரது சூஃபி முஸ்லீம் மதக் கொளகைகள் இன்றுவரை உள்ளன. இவர்கள் முஸ்லீம்களானாலும் சித்தர்கள் போன்றவர்கள். கோவில்களையும் மசூதிகளையும்  விட , சடங்குகளை விட , ஆன்மீக தாகமே அவசியம் என்பவர்கள்.

இவர்களில் ஒருவர் சர்மத் (Sarmad)  . அவர் ஆசியாவின் பல நாடுகளில் ஆன்மீக வேட்கைகைக்காக அலைந்து திரிந்துவிட்டு இறுதியில் டில்லி நகரத்துக்கு வந்து சேர்ந்தார்..இந்து மத அவதூத (நிர்வாண) சன்யாசிகளைப் போல தில்லி நகரத்  தெருக்களில் ஆடையின்றித்  திரிவார் ; அதாவது உடலில் ஆடை இருக்கிறதாயில்லையா என்று அறியாத அளவுக்கு பக்தி பைத்தியம் மிக்கவர். அத்தோடு அன் – அல் – ஹக் (நானே பிரம்மம்) என்றும் சொல்லிக்கொண்டு இருந்தார். மதவெறி பிடித்த அவுரங்க சீப் இவரைப் பிடித்து வரக்  கட்டளையிட்டான் . முஸ்லீகள் இறைவனைப் பற்றிச் சொல்லும் கலீமா வைச் சொல்லக் சொன்னான் மன்னன்.. ஆனால் அவரோ கடவுள் என்ற அராபியமொழிச் சொல்லைச் சொன்ன அடுத்த வினாடியில் நிறுத்திவிட்டார். ஏன் என்று கேட்டதற்கு அவனைத்தானே தேடிக்கொண்டு இருக்கிறேன் (இன்னும் காணவில்லை) என்றார். இவனை சிரச்  சேதம் செய்யுங்கள் என்றான் அவுரங்க சீப்.

சாமியார் தலை நிலத்தில் உருண்ட து (circa 1690 CE). இது கி.பி (பொ .ஆ ) 1690 ல் நடந்தது . சாமியார் முகத்திலோ சாந்தமும் புன்னகையும் தவழ்ந்தது.

பாட்டுப் பாடிய வண்ணமே தியாகி ஆனார் சர்மத் (Sarmad. )

Xxxx

ஸர்மத் பாடியது என்ன?

மன்சூர் காலமாகி நீண்ட நெடுங்காலம் உருண்டோடிவிட்டது அவரது கொள்கைகளும் செல்வாக்கும் ஒளி மங்கிப்போய்விட்டன. அதை உயிர்ப்பித்து என் கடமை அதற்குப் புத்துயிர் ஊட்டுவேன் எனது உயிர்த்தியாகத்தின் மூலம் அதைச் செய்வேன். இறப்பு என்பது பெரிய உலகத்துக்கான வாசல் .

மரணத்தை தண்டனை வித்தித்த அவுரங்க சீப் குறித்தும் ஒரு செய்யுள் செய்தார் :-

மகுடம் தாங்கிய மண்டை,

பாவத்தால் கவலைப்படுகிறது

ஆனால் எனக்கோ வறுமை எனும்

செல்வம் கிடைத்திருக்கிறது;

அதாவது செல்வத்தினால் வரும்

 துயரம் இல்லாத ‘வறுமை’

அவனோ பாவம் என்னும் உடலை மறைக்க

பல மடிப்புள்ள ஆடை அணிகிறான் ;

இறைவனோ, பாவம் செய்யாதோருக்கு

குழந்தை அணியும் ஆடையைத் தருகிறான்

அதுதான் நிர்வாணம் என்னும் சூதுவாதற்ற ,

 கள்ளம் கபடமற்ற மனம் (தான் என் ஆடை)

இன்றும் உலகெங்கிலும் உள்ள சூஃபி மத முஸ்லீம்கள் இந்தப் புனிதர்களைப் போற்றி  அவர்தம் கொள்கைகளைப் பின்பற்றிவருகின்றனர்.

கொடுங்கோலர்கள், புனித மக்களின் உடலைத்தான் அழிக்கலாம் ; அவர்களுடைய புகழ் ஒளியை அழிக்க முடியாது .

–subham— 

Tags- சர்மத் , மன்சூர், மரண தண்டனை, அவுரங்கசீப், சிரச்சேதம், சூஃபி , நானே கடவுள், நிர்வாண ,சாமியார்கள்

வாரணவாகனனையும் வென்ற வாரணவாசி?! (Post No11,877)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,877

Date uploaded in London –   7 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

கொங்குமண்டல சதகம் பாடல் எண் 83

வாரணவாகனனையும் வென்ற வாரணவாசி?!

ச.நாகராஜன்

பழைய காலத்தில் மன்னராட்சியின் போது அனைத்து நாட்டதிகாரிகளும் சிலம்ப வித்தையில் தேர்ந்திருப்பர். நாட்டுப்படை ஆக்கியும் வைத்திருப்பர்.

இப்படிப்பட்ட வீரர் தம் குடும்பங்களில் கொங்கு மண்டலத்தில் கட்டி முதலி என்ற குடும்பம் குறிப்பிடத் தகுந்த ஒன்றாக இருந்தது.

இவர்கள் தாரமங்கலம், அமரகுந்தி நகரங்களைத் தலைநகரங்களாகக் கொண்டிருந்தனர்.

தொண்டை மண்டல வேளாளர் இளமன் கட்டி கட்டியதால் இளமீசுரர் கோவில் என ஒரு சிவாலயம் தாரமங்கலத்தில் உள்ளது.

இந்தக் கோவிலப் பற்றிய பல சாசனங்கள் உள்ளன.

ஔசல ராமநாத ராஜாவின் அரசியல் ஆண்டு 14-20 (கி.பி. 1268;1274) சாசனங்களும் இரண்டாவது ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி. 1281, 1289,1290,1302) ஆண்டுகளின் சாசனங்களும் இளமீசுரர் கோவிலில் இருப்பதால் சாசன காலங்களுக்கு முற்காலத்திலேயே கட்டி முதலி சந்ததியினர் சிவாலயத் திருப்பணி செய்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.

தார மங்கலம் கைலாசநாதர் கோவிலி மும்முடிக்கட்டி முதலியாலும் சீயால கட்டி முதலியாலும் முறையே செய்யப்பட்டு வணங்கா முடிக் கட்டி முதலியால் முடிவு பெற்றது.

இந்த வணங்காமுடிக் கட்டி முதலி பெரும் பெயரும் புகழும் பெற்றவன்.

அந்தக் காலத்தில் மேல்கரைப்பூந்துறை நாட்டுக்குத் தலைவனாக வாரணவாசி என்பவன் திகழ்ந்தான். அவன் இப்படிப்பட்ட பெரும் கட்டி முதலியை வென்று பெரும் புகழ் பெற்றான்.

இவனைப் பற்றி கொங்கு மண்டல சதகம் 83ஆம் பாடலில் காணலாம்.

வாரண வாகன நோவென மன்னர் மனமதிக்குங்

காரண வான்வணங் காமுடிக் கட்டி கனத்தபடை

பூரண வாகினி யுஞ்சிரந் தாழப் பொருது வென்ற

வாரண வாசி வளர்பூந் துறை கொங்கு  மண்டலமே

           கொங்குமண்டல சதகம் பாடல் எண் 83

பாடலின் பொருள் :

வேந்தர்கள் அனைவரும் , இவன் தேவேந்திரனோ (வாரணவாகனன்) என மதிக்கும் படி காரணம் பெற்றவனான வணங்கா முடிக் கட்டி முதலியும், தகுதி வாய்ந்த அவனது முழுப் படையையும் தலை கவிழுமாறு போர் செய்து  வென்ற வாரணவாசி என்பவன் வசித்துள்ள பூந்துறையும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்ததேயாம்.

கட்டிமுதலிகள் சேலம் மாவட்டம், கோவை மாவட்டங்களில் பல கோவில்கள், குளங்கள், ஏரிகள், கோட்டைகள் கட்டியுள்ளனர்.

அடியார் மீது பக்தி, தெய்வ பக்தி, கல்விப் பெருக்குடன் திகழ்ந்த இவர்கள் பொதுவகை உபகாரங்களையும் நல்லறங்களை செய்து புகழ் கொண்டவராவர்.

இவர்களில் பெண்பாலாரும் இத்துறையில் தலை சிறந்து விளங்கினர் என்பதை பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தின் சாசனம் மூலமாக அறிந்து கொள்ளலாம். 

திருச்செங்கோட்டு திருப்பணி மாலை பாடல் எண் 248 முதல் 262 முடிய உள்ள பாடல்கள் திருச்செங்கோட்டில் இவர்கள் செய்த தருமங்களை விளக்கிக் கூருகின்றன.

வாரணவாசியைப் புகழ வந்த பாடலினால் கட்டி முதலி பற்றிப் பல விவரங்களை அறிய முடிகிறது.

வாரணவாசி கொங்குமண்டல சதகம் பாடல் எண் 56 விளக்கும் பூந்துறைக் குப்பிச்சியின் வழித்தோன்றலாவான்.

கொங்குமண்டலத்தைச் சார்ந்தோர் இப்படிப்பட்ட கட்டிமுதலி, மன்றாடியார் குடும்பங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்தல் இன்றியமையாதது.

***

Stories of Two Donkeys blessed by Lord Shiva (Post No.11,876)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,876

Date uploaded in London – –  6 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Tamil Nadu has many temples associated with animals, birds, insects and plants. Most of them are Saivite (Shiva temples).

There is an interesting story  about a donkey who prayed to Lord Shiva and attained liberation. It happened in Karaveeram near Tiruvarur. The temple is at least 1400 years old  because it was sung by Tiru Gnana Sambandar, contemporary of Mahedra Pallava and saint Appar.

The donkey near the temple was praying for long to see Lord Shiva. But Shiva did not answer its prayer. At last, it decided to fall in the sea near Nagore and just before jumping into sea,it  heard a voice. When it stopped Lord Shiva appeared before and gave it Mokasha.

Old Dharmapuram Thevaram edition associated this shrine with donkey. It says Karaveeram means Donkey and the God here is called Karaveeranathar.

Other names are Brahmapureeswar.

The local purana associated this shrine with a plant as well. Gautama Rishi who was given the task of looking after the temple asked Lord Shiva for a boon. He requested that he should not be visible to anyone and so Lord Shiva changed him to the Sthala Vrksha, i.e. he sacred plant of the shrine.  There are two interpretations for the plant 1. Arali and 2.Alari

Even now women water the plant on New moon days so that they would get married soon.

Whatever the belief and customs, it shows that Hindus revere a plant or an insect or an un clean animal like  donkey.

If one goes to Ramanashram in Tiruvannamalai, one my see several Samadhis (graves) for animals from crow to a cow. If one goes to Tiru Kazuku Kundram near Chengalpattu one may see the statues of two eagles that visited the temple for hundreds of years to eat Sweet Rice Pongal. If one goes to Thirucherai Stone Garuda Temple, one can see the burial of sacred eagles. It is needless to say about the Samadhis or statues of sacred elephants in Guruvayur and monkeys in several places.

Xxx

Here is another story about an ass that went to Shiva loka:-

Ass that carried Rudraksha (Rosary beads)

There was once in Kīkaṭa (now Bihar state)  a merchant who had an ass to carry his merchandise. Once the merchant was returning home from Bhadrācala with his ass loaded with bundles of costly Rudrākṣas. The old ass fell down dead on the way, the weight of the Rudrākṣa bundles having been too much for it, and immediately it assumed the form of Deva and went to Kailāsa. Even if a man does not know what he is carrying, if he carries sacred things he will certainly attain salvation, like the ass that attained salvation in this case. (Devī Bhāgavata, 11th Skandha).

source- Wisdom Library.com

All these stories show the respect given to animal kingdom by the Hindus.

— Subham—

Tags- Karaveeram, donkey, Nagore, Ass, Kirata, Rudraksha bundle, Devi Bhagavata

சிவ பெருமானும் இரண்டு கழுதைகளும்; 2 குட்டிக் கதைகள் (Post No.11875)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,875

Date uploaded in London – –  6 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கரவீரம், பத்ராசலம் ஆகிய இரண்டு தலங்களை சேர்ந்த 2 கழுதைகள் எப்படி சிவ லோகம் சென்றன என்ற இரண்டு கதைகளைக் காண்போம்.

கரவீரம் என்னும் தலம் திருவாரூருக்கு அருகில் இருக்கிறது. இது பாடல் பெற்ற கோவில். மஹேந்திர பல்லவன் காலத்தில் வாழ்ந்த திரு ஞான சம்பந்தர் பாடியதால், குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது.

பழையா தருமபுர ஆதீன தேவாரப் புஸ்தகம், கழுதை வழிபட்டதால் இதற்கு கரவீரம் என்றே பெயர் என்று எழுதியுள்ளது. ஸம்ஸ்க்ருதத்த்தில் கரவீரம் என்றால் கழுதை . 2200 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னனைத் தோற்கடித்த  ஒரிஸ்ஸா சமண மத மன்னன் காரவேலன் பெயர் கழுதை என்று கூட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை இருக்கிறது இல்லை கரவீரம் என்பது தாவரத்தின் பெயர் என்று கதைப்போரும் உளர் .

மும்மூர்த்திகளில் மிகவும் கருணை உடையவர் சிவபெருமான். நமக்குத் தெரிந்து விஷ்ணு காப்பாற்றிய ஒரே பிராணி கஜேந்திரன் என்னும் யானை. ஆனால் கருணைகடலான சிவனோ ஊருக்கு ஊர் அணில், குரங்கு, சிலந்தி, பன்றி, பசு, பாம்பு, யானை என்று, எறும்பு முதல் பல பிராணிகளையும் காப்பாற்றியதை தமிழ் நாட்டின் ஊர்ப்பெயர்களே காட்டா நிற்கின்றன. திரு எறும்பியூர்,  புள்ளிருக்கு வேலூர், குரங்கணில் முட்டம், கரிவலம் வந்த நல்லூர், , பன்றிமலை என்று சுமார் 50 ஊர்ப்பெயர்களை அடுக்கிவிடலாம்.

போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்ற பழமொழிக்கு ஏற்ப தாவரங்களும் சிவபெருமான் அருள் பெற்றதையும், சில மரங்களை சிவ பெருமான் சுவீகார பிள்ளைகளாக ஏற்றத்தையும் எனது பிளாக்கில் படித்திருக்கிறீர்கள். அப்படி ஒரு கதை கரவீரத்திலும் உண்டு. அங்கே சிவலிங்கத்தை பூஜித்த கெளதம ரிஷி,  தான் உருவம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வேண்ட, சிவனும் அவரை அரளி/ அலரி ஆக மாற்ற இன்றும் அமாவாசையில் பெண்கள் கரவீரம் கோவிலில், விரைவில் திருமணம் நடைபெற வேண்டி, தாவரத்துக்கு நீர் வார்க்கின்றனர்.

ஞான சம்பந்தர் இந்த ஊரில் night halt நைட் ஹால்ட் செய்தார் . அதாவது இரவு ஒய்வு எடுத்தார். அதை அப்படியே பாலோ follow / பின்பற்றும் நம் மக்கள் இங்கே night halt நைட் ஹால்ட் செய்து வழிபடுகின்றனர்.

xxxx

அது சரி கரவீரம்/ கழுதையின் கதை என்ன ?

இந்த ஊரில் ஒரு கழுதைக்கு சிவ பக்தி ஜாஸ்தி. கோவிலை விட்டு அகலவில்லை. ஆனால் சிவனோ மிகவும் delay டிலே/ தாமதம் செய்தார். அவர் தோன்றாமல் இருந்ததால், துவண்டுபோன அக்கழுதை ஏமாற்ற உணர்வில் நாகூரில் கடலில் விழுந்து உயிர்த்தியாகம் செய்வோம் என்று முடிவு செய்து சென்றது. திடீரென ஒரு குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தது. சிவன் காட்சி தந்து அதனை ஆட்கொண்டார்.

திருவண்ணாமலை ரமண ஆஸ்ரமத்துக்குச் சென்று காக்கைக்கும் பசுவுக்கும் மானுக்கும் உள்ள சமாதிகளைப் பார்ப்போருக்கு பிராணிகளிலும் புனிதர் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளுவர். நிறைய பேர் சாபத்தால் மிருகங்களாய்ப் பிறந்து பின்னர் முக்தி அடைந்ததை நாம் புராணங்களில் படிக்கிறோம். மனு ஸ்ம்ருதியும் எந்தந்த பாபம் செயதோர் எந்தந்த அனிமல் animal  / பிராணியாகப் பிறப்பர் என்ற பட்டியலைக் கொடுத்து இருக்கிறார்.

மனு ஸ்ம்ருதி பற்றி நான் எழுதிய 4 நூல்களில் (2  தமிழ்+ 2 ஆங்கிலம்) இந்த அதிசய விஷயங்கள் உள .

ஆக கரவீரம் / கதை 1400 ஆண்டுகளுக்கு மேல் நம்மிடம் இருக்கிறது.

சம்பந்தர் பாடிய பதிகத்தில் இது பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஆனால் ஒவ்வொரு பாடலிலும் கஷ்டம் போகும் என்பதை அழகான அழகான தமிழ்ச் சொற்களால் பாடுகிறார், வினை நீங்கும், துயர் அகலும், அல்லல் போகும், இடர் அழியும் என்று கஷ்டம் என்பதற்குப் பல சொற்களை பிரயோகிப்பதால் கழுதையும் மோட்சம் அடைந்ததை உறுதி செய்யமுடிகிறது .

இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால், அந்தக் கழுதை நாமும்தான் என்றும் விளங்கும். நம்மில் எத்தனை பேர் கழுதையாக வாழ்கிறோம். கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்ற பழமொழியை மாற்றி கழுதை கெட்டால் டாஸ்மார்க் கடை, சினிமா கொட்டகை, உணவு விடுதி, அல்லது பேஸ் புக் , வாட்ஸ் அப் , கம்ப்யூட்டர் game கேம், சூதாட்டம் என்று நிற்கிறோம் . நாம்தான் கரவீரம்!!!

xxxx

கரவீரம் தேவாரம் : முதல்-திருமுறை- பதிகம் எண் 58

பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட

மறையும் மாமணி போற்கண்டங்

கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்

இறைய வன்கழல் ஏத்தவே.

Xxx

நண்ணு வார்வினை நாசமே.

Xxx

தொழவல் லார்க்கில்லை துக்கமே.

Xxx

தொண்டர் மேற்றுயர் தூரமே.

Xxx

கனல வனுறை கின்ற கரவீரம்

எனவல் லார்க்கிட ரில்லையே.

Xxx

உள்ளத் தான்வினை ஓயுமே.

Xxx

தடிய வர்க்கில்லை யல்லலே.

Xxx

பாடு வார்க்கில்லை பாவமே.

Xxx

இரண்டாவது கழுதைக் கதை : தேவி பாகவதம்

தேவி பாகவதம்

ரிக் வேதத்தில் இந்தியாவின் பீஹார் மாநிலத்தை கீகட நாடு என்று விசுவாமித்திரர் பாடுகிறார். அந்த கீகட நாட்டு வணிகர் பற்றி தேவி பாகவதம் பதினோராவது ஸ்காந்தத்தில் ஒரு கதை வருகிறது ஒரு வணிகர், நிறைய ருத்திராட்ச மூட்டைகளை ஏற்றி ஒரு கழுதை மேல் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.

பத்ராசலத்திலிருந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான் கழுதைக்கு பாரம் தாங்கவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு  வாங்கியது . வீடு நோக்கி வந்தபோது தொபுக் கட்டீர் என்று கீழே விழுந்து செத்தது. அடுத்த நிமிடமே அது தேவ சொரூபத்தை அடைந்து கைலாசம் சென்றது.

xxxx

இதிலுள்ள கருத்து

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பது போல ருத்திராட்சம் போன்ற சிவ பூஜைக்குரிய பொருளைச் சேர்ந்து சிவனடியார்க்கு உதவினால் கழுதையானாலும் மோட்சம் பெறலாம். அதாவது கழுதை போல வாழ்வு நடத்துவோனும் ஏதாவது சிவ கைங்கர்யம் செய்தால் அவனுக்கு முக்தி உண்டு.

இதனால்தான் வள்ளுவனும் எனைத்தானும் நல்லவை கேட்க என்று குறள் பாடினான். கொஞ்சமாவது நல்லது கேளுங்கப்பா என்று வள்ளுவன் கெஞ்சுகிறான்

இது போன்ற கழுதைக் கதைகளைக் கேட்டால் கூட, படித்தால் கூட, நாமும் கழுதைக் குணத்திலிருந்து விடுபடுவோம்.

இதில் மற்றும் ஒரு கருத்து தொனிக்கிறது. இந்துக்கள் எல்லாப் பிரா ணிகளுக்கும் மரியாதையும் மதிப்பும் கொடுக்கின்றனர் பண்டிதாஹா சமதர்ரசினஹ என்ற கீதை ஸ்லோகத்தில் (5-18), ஞானிகளுக்கு நாயும், பசுவும் , வேதம் படித்த பிராமணனும் ஒன்றே– என்று கண்ணன் செப்புகிறான். 

-subham— 

Tags- கழுதை , சிவ பெருமான், கரவீரம், சம்பந்தர் தேவாரம்,

கழுதைக் கதைகள் , கீகட தேசம், பத்ராசலம், தேவி பாகவதம், ருத்திராட்சம்,

ஸ்லோகமும் சோகமும்! (Post No.11,874)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,874

Date uploaded in London –   6 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்லோகமும் சோகமும்!

ச.நாகராஜன்

ஸ்லோகம் சோகமாவது எப்போது?

ஒரு ஸ்லோகம் எப்போது சோபிக்கிறது? அதைச் சொல்பவர் அழகாகச் சொல்ல வேண்டும்; அவர் சொல்லும் போது ஒருவர் அதைக் கேட்க வேண்டும். 

ரசித்துக் கேட்டு அவரைப் பாராட்டவும் வேண்டும்.

இப்படி இல்லையெனில் ஸ்லோகம் என்ற சம்ஸ்கிரத வார்த்தையில் இருக்கும் ‘ல’ என்ற எழுத்தை நீக்கி விட வேண்டியது தான்.

இந்த ‘ல’ எழுத்தை நீக்கி விட்டால் ஸ்லோகம் சோகம் என்ற வார்த்தையாக ஆகி விடும்.

இப்படிக் கூறும் சுபாஷிதத்தைப் பார்ப்போம்:

ஸ்லோக: சுஸ்லோகானாம் யாதி சதி ச்ரோதரி வக்தரி |

யதி ச்ரோதா ந வக்தா வா லகாரஸ்தத்ர லுப்யதே ||

பொருள் : ஒரு ஸ்லோகமானது அதைச் சொல்பவரும் கேட்பவரும் இருக்கும் போது நன்றாக இருக்கிறது. அதைச் சொல்ல ஒருவர் இல்லை, கேட்கவும் ஒருவர் இல்லை என்னும் போது ஸ்லோகத்தில் உள்ள ல என்ற எழுத்தை நீக்கி விட்டு அதைச் சொல்ல வேண்டியது தான்.

ஸ்லோகம் சம்ஸ்க்ருத விதிப்படி சோகம் ஆகி விடும்!

கவிஞனின் புலம்பல்!

“அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும்

ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்”

என்று வருந்திப் புலம்பினான் மாபெரும் கவிஞன் பாரதி.

கவிஞனின் உளத்தை அறிந்து கவிதையை ரசிப்பவே உண்மையான  கவிதா ரஸிகன்.

நான்கு முகம் படைத்த பிரம்மாவே,  நீ விரும்புகின்றபடி எனக்கு நூற்றுக் கணக்கான கவலைகளைக் கொடு,  அரஸிகனாக இருப்பவனுக்கு கவிதை சொல்லித் தருவதைத் தவிர! இந்த சாபத்தை மட்டும் என் தலையில் எழுதி விடாதே!

இது தான் பிரம்மாவிடம் ஒரு கவிஞனின் வேண்டுதல்.

சுபாஷித கவிதையைப் பார்ப்போம்:

இதரதாபஷதாநி யதேச்சயா விதர தானி சஹே சதுரானன |

அரஸிகேஷு கவித்வநிவேதனம் சிரஸி மா லிக மா லிக ||

இதை மட்டும் எழுதி விடாதே எழுதி விடாதே – மா லிக, மா லிகஎன்று புலம்பும் கவிஞன் எத்தனை வேதனைப் பட்டிருக்க வேண்டும் கவிதையை உண்மையாக ரஸிக்கத் தெரியாதவரிடம் நல்ல கவிதையைச் சொல்லியதால்.

 செயலில்லாத அறிவால் என்ன பயன்?

செயலில்லாத அறிவு ஒரு நொண்டியின் இயக்கம் போலத் தான்.  அவனால் எங்கும் செல்லவும் முடியாது எதையும் சாதிக்கவும் முடியாது. ஆகவே அறிந்தவன் அறிந்ததை நல்ல செயலில் காட்ட வேண்டும்.

கர்மணா ரஹிதம் ஞானம் பட்குணா சத்ருஷம் பவேத் |

ந தேன ப்ராப்யதே கிஞ்சித் ந ச கிஞ்சித்ப்ரசாத்யதே ||

ஞானமானது கர்மம் – செயல் -இல்லாமல் இருக்கக் கூடாது. அறிந்ததை நல்ல விதமாக செயலில் காட்ட வேண்டும்.

 செயலும் செய்பவனும் பிரிக்க முடியாத ஜோடி

 ஒரு செயலைச் செய்பவனையும் அவனது செயலையும் எவராலும் பிரிக்க முடியாது. செய்ததை செய்பவன் – நல்ல கர்மமாக இருந்தாலும், தீய கர்மமாக இருந்தாலும் – அனுபவித்தே ஆக வேண்டும்.

இதோ ஒரு சுபாஷிதம்:

யதா சாயாதபௌ நித்யம் சம்பத்தௌ ச பரஸ்பரம் |

த்த்தத் கர்ம ச கர்த்தா ச சுசம்ப்பத்தௌ பரஸ்பரம் ||

சூரியனின் ஒளியையும் நிழலையும் பிரிக்கவே முடியாது.

அதை இங்கு கவிஞர் உதாரணமாகக் காட்டுகிறார்.

எப்படி ஒரு நிழலும் சூரிய ஒளியும் பரஸ்பரம் நிரந்தரமாக தொடர்பைக் கொண்டிருக்கிறதோ அதே போல செயலும் அதைச் செய்பவனும் பரஸ்பரம் தொடர்பைக் கொண்டுள்ளவராவர்.

ஸ்லோகம் சிறிதுஅது தரும் கர்ம விளக்கமோ பெரிது!

***

Clairvoyant predicted Middlesbrough woman’s £12,050 Postcode Lottery win(Post No.11,873)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,873

Date uploaded in London – –  5 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

clairvoyant :

a person who claims to have a supernatural ability to perceive events in the future or beyond normal sensory contact.

xxxx

How much is postcode lottery per month?

£12 per month

Players sign up with their postcode and pay £12 per month. They are automatically entered into every draw and prizes are announced every day of the month. As 33% of the ticket price goes to charities, our players know that they are helping amazing causes every single day.

xxxx

Miracles do happen everyday; here is a news item that was flashed by almost all British newspapers

Xxx

A clairvoyant predicted that a Postcode Lottery winner would win, according to a woman from Middlesbrough.

Neighbours were over the moon when they found out they’d won a sizeable fortune on the Postcode Lottery.

Seven people living on Britain Avenue have scooped £379,418 each, a total of £2,6million, thanks to playing with the full winning postcode, TS5 7AT.

A total of 572 Teesside neighbours shared a £10.2 million prize pot at a special event at Centre Square in Middlesbrough on Saturday, April 1.

The win has been described as ‘life changing’.

Picture: Postcode Lottery (Image: Postcode Lottery)

The lottery winners with the postcode TS5 7 were all invited and had been told they’d won at least £4,000.

One lucky winner was Elaine Thompson, who thanks her clairvoyant for predicting the win.

In a spooky prediction, Elaine was told she was due to win money, just weeks after she’d cancelled her subscription to the lottery.

The superstitious 58-year-old quickly signed up again and bagged a £12,050 prize.

Elaine, a former foster parent, said: “The fortune teller predicted I was going to come into a significant amount of money.

“I’d just cancelled the Postcode Lottery. A few days later I reinstated the ticket.

“I can’t thank the clairvoyant enough, without her I would have missed out.

“I will be spoiling my family and taking my daughters to Fuerteventura.”

Another of these lucky people was Mark Baker who first thought he had won £12,050, which he was very happy with. He later realised though that the real sum he had won was a huge £379,418.

The local truck driver said: “You only dream of money like this, it doesn’t actually happen to working people but I guess it’s happened to us. It’s life changing.

From Aja Dodd, yahoo life website

This news item appeared in almost all England newspapers.

 —subham–

tags- Clairvoyant, Prediction, Lottery Prize, Postcode Lottery

ஆரூடம் கேட்பது, குறி சொல்லுவது உண்மையே! பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒப்புதல் (Post.11,872)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,872

Date uploaded in London – –  5 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கடந்த சில தினங்களாக பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒவ்வொன்றாக  ஜோதிடத்தின் பெருமையைப்  பறை சாற்றி வருகின்றன ; செய்திச்  சுருக்கம் இதோ : ஒரு பெண்மணி தொடர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கிவந்தார் ; பரிசே விழவில்லை; இந்த சனியனை ஒழித்துக்கட்டுகிறேன் பார், என்று பரிசுத் தொகை பிடிக்கும் பாங்குக் கட்டளையை (Direct Debit Instruction to Bank)  மாற்றினார். அவர் கான்ஸல் cancel செய்துவிட்டு குறி சொல்லும் (Clairvoyant) ஒருவரைச் சந்தித்தார்.

ஓம் சூம்மந்திரக்காளி உனக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை விழுவதை என் தேவதை காட்டுகிறாள் ஓடிப்போ !!என்றார் குறி சொல்லுபவர் .

அந்தப் பெண் மணி  வீட்டுக்கு ஓடிவந்தாள் ; மீண்டும் பாங்கிற்கு புது உத்தரவு அனுப்பி லாட்டரிக்கு பணம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றாள் . டிக்கெட்டும் வந்தது. அடித்தது லக்கி பிரைஸ் எவ்வளவு தெரியுமா? 12,050 பிரிட்டிஷ் பவுன் ( 12,050X 100 ரூபாய்)

அந்தப் பெண்ணின் பெயர் எலைன் தாமஸ் Elaine Thompson; நல்ல வேளையாக குறி பார்த்தேன்; ஆரூடம் சொன்னது அப்படியே பலித்தது. நான் மட்டும் அன்று, ஜோதிடம் கேட்டிராவிடில் பெரிய தொகையை இழந்திருப்பேனே என்று பத்திரிக்கரையாளரின் சொல்லி போஸும் கொடுத்தார் ( புகைப்படத்துக்கு ) ஆ னால் அவர் பேட்டையில் இவரை விட  7 பேருக்கு பெருந் தொகை பரிசு கிடைத்தது ஆளுக்கு £ 379,418. (ரூபாய் கணக்குக்கு 100 ஆல் பெருக்குங்கள் )

xxxx

பிரிட்டனில் ஏராளமான வகை பரிசுத்  திட்டங்கள் உள்ளன. நீங்கள் 21 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், எ ந்தக் கடைக்குள்ளும் நுழைந்து, வித விதமான பரிசுச்  சீட்டுகளை வாங்கி சுரண்டிப்பார்க்கலாம். அதிர்ஷ்ட எண் இருந்தால் பலவகை பரிசுத்தொகை கிடைக்கும் மற் றொரு வகை நேஷனல் லாட்டரி; ஐரோப்பிய லாட்டரி. வாரம் தோறும் பலமுறை குலுக்கல்  நடக்கும். நம் எண்  வந்தால் மில்லியன், பில்லியன் பவுன் கூட கிடைக்கும் .

மற்றொரு வகை லாட்டரி POSTCODE LOTTERY போஸ்ட்கோட் லாட்டரி; இதில் டிக்கெட் வாங்கி, உங்கள் பேட்டை போஸ்ட் கோட் (AREA POSTCODE) வந்தால் அதில் முதல், இரண்டு, மூன்று, நான்காவது என்று பரிசுகள் கிடைக்கும் . இந்தியாவில் ஊருக்கு ஊர் பின் கோட் PIN CODE உண்டு; பிரிட்டனில் ஊருக்கு ஊர் போஸ்டகோட் இருக்கும். இந்த முறை இங்கிலாந்தின் ஒருபகுதியான postcode, TS5 7AT பேட்டைக்கு அடித்தது யோகம். அங்கு டிக்கெட் வாங்கிய ஆட்களில் 7 பேருக்கு முதல் பரிசு £379,418. (ரூபாய் கணக்குக்கு 100 ஆல் பெருக்குங்கள் )

அந்த பேட்டையின் பெயர் Teesside டீ சைட் .அது Middlesbrough மிடில்ஸ் ப்ரோ வட்டாரத்தில் இருக்கிறது

Seven people living on Britain Avenue have scooped  each, a total of £2,6million, thanks to playing with the full winning postcode, TS5 7AT.

A total of 572 neighbours shared a £10.2 million prize pot at a special event at Centre Square in Middlesbrough on Saturday, April 1, 2023.

XXXX

நாமும் அந்த ஆரூடக் காரனைப் பார்க்கலாமே என்று நினைத்தேன். அப்போது ஒரு அசரீரி கேட்டது: உன் லக் LUCK தான் உனக்கே தெரியுமே. நீ போன முஹூர்த்தம் அவன் உனக்கு பெரிய நஷ்டம் வரப்போகிறது; ஓம், சூம், மந்திரக் காளி ; ஓடிப் போ என்று சொன்னால் என்னாவது !

வேண்டாண்டா , சாமி; இருப்பதே போதும்;  உடும்பு வேண்டாம்; ஆளை விட்டால் போதும்; நரி இடம்  போனா என்ன, வலம் போனா என்ன, ஆள் மேல் விழுந்து குதறாமல் இருந்தாலே  போதும் என்று பயந்து கொண்டே வந்துவிட்டேன் .

—subham—

TAGS- ஆரூடம், குறி சொல்லுதல், லாட்டரி பரிசு, போஸ்ட் கோட் லாட்டரி , பெண்மணி , பிரிட்டனில்,

சேலையூருக்கு வாருங்கள்; ஒரே கல்லில் 20 மாம்பழம் அடிக்கலாம்! (11,871)

Brahma on temple wall

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,871

Date uploaded in London – –  5 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

சேலையூர் சென்றால் ஒரே கல்லில் 20 மாங்காய்களை / மாம் பழங்களை அடிக்கலாம். அதாவது எல்லா இஷ்ட தெய்வங்களையும் கும்பிட்ட பலன்  கிடைக்கும்  இதில் சைவ, வைணவ, சாக்த தெய்வங்கள் மட்டுமல்ல. அதர்மத்தை அழிக்கும் , எதிரிகளை ஒழிக்கும் , பில்லி, சூனிய, செய்வினைகளை அகற்றும் உக்கிர தெய்வங்களும் அடக்கம். அதுமட்டுமல்ல இந்துக்கள் வழிபடும் பசுவையும் வணங்கலாம். மேலும் அன்னதானமும் செய்யலாம்; தினசரி யாகத்திலும் பங்கு கொள்ளலாம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் சேலையூர் ஸ்கந்தாஸ்ரமம் கோவிலுக்குச் சென்றபோது, பெண்கள் பூஜை செய்து கொண்டிருந்ததால் ஸ்ரீ சாந்தானந்தா ஸ்தாபித்த மிகப்பெரிய மகா மேருவைக் காண அருகில் செல்ல முடியவில்லை. ஆகையால் பிப்ரவரி 2023 இந்தியப்பயணத்தின் போது மீண்டும் சென்று தரிசித்தேன். காலை நேரம் எங்களைத் தவிர யாருமே இல்லை..

எனக்கு ஸ்ரீ சாந்தானந்தா ஒரு சிறிய புவனேஸ்வரி மந்திரத்தை, நான்  சின்னப் பையனாக இருந்த பொழுது சொல்லிக்கொடுத்ததால் எப்போதும் குரு காணிக்கை செலுத்துவேன். நல்ல வேளை , அலுவலகம்  திறந்து இருந்ததால் ஒரு அன்னதான டொனேஷன் கொடுத்து வந்தேன்.

எல்லாக் கடவுளரையும் வலம் வருகையில் ஒரு சில புரோகிதர்கள் பிரமாண்டமான யாக குண்டத்தின் முன்னர் அமர்ந்து ஒரு பெரிய மரத்துண்டை  பதம் பார்த்துக்கொண்டு இருந்தனர். புத்தகத்தை படித்தபோதுதான் அது என்ன என்று விளங்கியது

கோவில் இருப்பிடம்

சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம்

எண் 1, கம்பர் தெரு, மஹாலக்ஷ்மி நகர், சேலையூர் , சென்னை 600 073

போன் 22290134; 22293388

xxxx

சென்னை குரோம்பேட்டை- தாம்பரம் திசையில் ராஜ கீழ் பாக்கம்  பகுதியில் சேலையூர் இருக்கிறது. அங்குள்ள ஸ்கந்தாஸ்ரமம், பிரத்யங்கரா தேவி, சரபேஸ்வர் போன்ற பெரிய, மிகப்பெரிய, விக்ரகங்களை உடைய கோவில் ஆகும்.

புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்தா கட்டிய கோவில்.

புவனேஸ்வரி அம்மனுடன் அமைந்த பெரிய மஹா மேரு முக்கியமாக தரிசிக்க வேண்டிய சந்நிதி. அதற்கு அருகிலேயே ஸ்ரீசாந்தானந்தாவின் சிலையும் உள்ளது.

xxx

நீங்கள் தரிசிக்கவேண்டிய சந்நிதிகள் :

பஞ்ச  ஹேரம்ப கணபதி,

ஸ்ரீ மாதா புவனேஸ்வரி ,

ஸ்ரீ மஹா மேரு –  4 அடி உயரமுள்ள  பஞ்சலோக மேரு

சரபேஸ்வரர்

சுவாமிநாத சுவாமி (முருகன்)

உக்ர பிரத்யங்கரா தேவி

பஞ்சமுக ஆஞ்சநேயர்

சுதர்சன மூர்த்தி

தர்ம சாஸ்தா ஐயப்பன்

அஷ்டா தச புஜ மஹாலஷ்மி

சஹஸ்ரலிங்கம்

சனைச் சரன்

தத்தாத்ரேயர்

சங்கடஹர கணபதி

தன்வந்திரி

ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

கோசாலை

யாக குண்டம்/ யாகம்

ஸ்ரீசாந்தானந்தா

மேற்கண்ட தெய்வங்களில் பிரத்யங்கரா தேவி, சரபேச்வரர் , தன்வந்திரி ஆகியோருக்கு வெகு சில கோவில்களிலேயே சந்நிதிகள் உண்டு.

Xxxx

ஸ்கந்தாஸ்ரம புஸ்தகம் சொல்லும் தகவல் இதோ :-

நித்திய ஸ்ரீ பிரத்யங்கரா – ஸரப– சூலினி ஹோமம்

“நெல்லிக்கனி அளவு அன்னத்தையும் நெய்யையும்  ஹவிர்ப்பாகமாகக் கொடுத்தாலும் அக்னி, அதைப் பெரியதாக்கி , தெய்வங்களுக்குக் கொடுப்பதாக யஜுர் வேதம் கூறுகிறது.

ஸ்ரீ சரபேஸ்வரர் ஆலயம் ஒன்று,  இரண்டுக்கு மேல் இல்லை. ஸ்ரீ பிரத்யங்கரா தேவிக்கும் ஸ்ரீ சூலினி துர்காதேவிக்கும் ஆலயங்கள் இல்லை என்றே சொல்லலாம் . இந்த நிலையில் கலியுகத்திற்கு தற்சமயம் அவசியமான  மேற்படி தேவதைகளை நமது குருநாதர் ஸத்குரு ஸ்ரீமத் சாந்தானந்த சுவாமிகள் அவர்கள் சென்னை ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் பிரும்மாண்டமாக பஞ்ச லோகத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். ஆஸ்ரமத்தில் பூஜை, ஹோமம் முதலியன 25-6-1999 முதல் உலக க்ஷேமத்துக்காக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ பிரத்யங்கரா தேவிக்கும் ஸரப சூலினி தேவதைகளுக்கும் சக்தி அதிகரிக்கவும், தெய்வ சாந்நித்யம் ஏற்படவும் பிரத்யங்கரா , ஸரப சூலினி மஹா மூல மந்திரங்களை பல கோடி தடவை வேள்வியாகச் செய்வதாக சுவாமிகள் ஸத்ய சங்கல்பம் எடுத்துக் கொண்டார்கள் பக்தர்கள், நாம நட்சத்திரங்களுடன் உபயதாரர்களாக பங்கு கொள்ள வேண்டும். தொலைதூரத்தில் உள்ளவர்களும் இதைச் செய்யலாம். கோவிலில் விவரங்களைப்  பெறலாம்” .

xxx

எனது கருத்து My Comments 

சுவாமிகள் ஸ்தாபித்த விக்ரகங்கள், சிலைகள் எல்லாம் அளவில் பெரியவை. அதற்குத் தக பிரசாதம், பூஜை, அபிஷேகம் நடைபெற் றால்தான் அவற்றின் ஆற்றல் அதிகரிக்கும் . அந்த வகையில் பார்த்தாலும் நாம் உதவி செய்வது அவசியம்.

இந்தக் கலியுகத்தில் தினமும் அக்நி காரியம் செய்யவேண்டிய பிராமணர்கள் கூட அதைச் செய்வதில்லை; ஆகையால் சுவாமிகளின் ஸத்ய சங்கல்பத்தை நிறைவேற்ற  நாமும் உதவலாமே .

மேலும் சுவாமிகள் எதையுமே மிகப்பெரிய அளவில் சிந்த்தித்து நிறைவேற்றியும் காட்டியுள்ளார். 1960-களில் அவர் புதுக்கோட்டையில் சஹஸ்ரசண்டி ஹோமம் ஏற்பாடு செய்தபோது எனது தந்தை வெ . சந்தானம், தினமணிப் பத்திரிகையில் தினமும் செய்தி வெளியிட்டு அது வெற்றி அடைய உதவினார். அதுமட்டுமல்ல. அப்போது மதுரை மீனாட்சி கோவில் ஆடிவீதியில் நடந்த அனந்த ராம தீட்சிதர் உபன்யாசத்துக்கு நாள் தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வந்தனர் . நிதியெழுப்ப ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் நாங்கள் நாள் தோறும் தொண்டர்களாகப் பணியாற்றினோம்.

மேலும் எங்கள் வீட்டுக்கு பலமுறை வந்து ஸ்ரீ சாந்தாந்னதா ஆசீர்வதித்ததாலும் , எங்களுக்கு மந்திர உபதேசம் செய்த ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா, இவர் பற்றிச் சொல்கையில் , தானே காடுகளில்  அவர் தவம் செய்வதைக் கண்டதாகச் சொன்னதாலும் சாந்தானந்தா மீது கூடுதல் மரியாதை உண்டு.

ஸாந்தானந்த சுவாமிகள் மதுரையில் அவதரித்து, சுதந்திர போரட்டத்தில் அலிப்பூர் சிறை சென்று, குஜராத், ராஜஸ்தான் ரிஷிகேஷ் சிவாநந்தாஸ்ரமம் வரை சென்று , குற்றாலம், மேற்கு மலைத் தொடர்ச்சி காடுகளில் தவம் செய்து, சேலம், புதுக்கோட்டை , சேலையூர் கோவில்களை ஸ்தாபித்து, சமாதி அடைந்த கதையை தனியாகக் காண்போம்.

xxxx

18-2-23 சிவராத்திரி

18-2-23 சிவராத்திரி அன்று இரவில் சென்னை கே கே நகர் பிள்ளையார் கோவிலில் சிவனுக்கு பால், தேன் அபிஷேகம் நடந்ததையும் கண்டு களித்தேன். என் அண்ணன் குடும்பத்தினர், லிட்டர் லிட்டராக பாலையும் தேனையும் வாங்கிக் கொடுத்தனர். மறுநாள் குடந்தை வட்டாரக் கோவில் பயணம் இருந்ததால் அரை மணி நேர தரிசனத்துடன் திரும்பி வந்தேன். ஓம் நம சிவாய.

—subham—

Tags- சேலையூர் ,ஸ்கந்தாஸ்ரமம், பிரத்யங்கரா தேவி, ஸரப சூலினி, சாந்தானந்தா

உலகின் மாபெரும் இதிஹாஸம் மஹாபாரதம்! – கம்ப்யூட்டர் ஆய்வு! (Post No.11,870)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,870

Date uploaded in London –   5 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாபாரத மர்மம்!

உலகின் மாபெரும் இதிஹாஸம் மஹாபாரதம்! – கம்ப்யூட்டர் ஆய்வு!

ச.நாகராஜன்

உலகின் மாபெரும் இதிஹாஸமான மஹாபாரதத்தை கம்ப்யூட்டர் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர் மூன்று கணினி நிபுணர்கள்.

இதற்காக அவர்கள் இந்தத் துறையில் உள்ள நவீன உத்திகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

மிக சுவாரசியமான இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் மூவர்.

1) Debarati Das   தேபரதி தாஸ்University of Minnesota Twin Cities

2)  Bhaskarjyoti Das பாஸ்கர்ஜ்யோதி தாஸ் Visvesvaraya Technological University

·         3) Kavi Mahesh கவி மஹேஷ் Indian Institute of Information Technology Dharwad

இது இந்தியாவில் வாரணாசியில் 2106ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையாகும்.

ஆய்வின் தலைப்பு :

A Computational Analysis of Mahabharata

·         வருடம் : January 2016

·         மாநாடு : Conference: International Conference on Natural Language Processing ICON-2016

நடந்த இடம் : At: IIT-BHU, Varanasi, India

இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மஹாபாரத பதிப்பு உள்ள இணைய தளம் :

Project Gutenberg site (http://www.gutenberg.org/ebooks/7864).

இந்த ஆய்வுக்கென எடுத்துக் கொள்ளப்பட்ட ஆங்கில நூலை எழுதியவர் :கிஷோரி மோஹன் கங்கூலி (1883-1896)

This is a translation by Kisari Mohan Ganguli done between 1883-1896.

இதில் மஹாபாரதம் 15175 K bytes கொண்டிருப்பது தெரிகிறது.

விமரிசனப் பகுதிகளை நீக்கி விட்டால், ஆங்கில மொழிபெயர்ப்பின் படி  மீதி இருப்பது  13947 K bytes

மஹாபாரதத்தில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை : 28,58,609

மஹாபாரதத்தில் உள்ள வரிகளின் எண்ணிக்கை 1,18,087

தனித்தன்மை வாய்ந்த வார்த்தைகளின் எண்ணிக்கை 32,506

பர்வங்களின் எண்ணிக்கை 18

முக்கியமான கதாபாத்திரங்கள் 210 பேர்கள் (பத்து முறையாவது இதிஹாஸத்தில் வந்திருப்பவர்கள்)

Table 1:

Key Attributes of Mahabharata Text

Attributes Value Remarks

Size in bytes 15,175 K English translation

Size in bytes 13,947 K After removing comments

Number of words 28,58,609 Using NLTK

Number of unique words 32,506 Using NLTK

Number of sentences 1,18,087 Using NLTK

Number of chapters 18 “parva”

Number of characters 210 appearing at least 10 times

 மஹாபாரதம் உலகின் பெரும் காவியங்களான இலியட் மற்றும் ஒடிஸியை விட, இரண்டையும் சேர்த்து வைத்துப் பார்த்தாலும் மிக மிகப் பெரியது. இதில் 18 பர்வங்கள் உள்ளன. நூறு உப பர்வங்கள் உள்ளன.

Mahabharata is larger than Iliad and Odyssey together, compiled many years ago.

This has 18 “parva”s or chapters and each “parva” has many sections.

இவர்களின் ஆய்வறிக்கை முழுதுமாகப் படிக்க வேண்டிய ஒன்று.

இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த மூன்று அறிஞர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

மேலும் பல ஆய்வுகளை இவர்கள் செய்து கொண்டிருப்பதாக அறிகிறோம்.

முடிவுகள் நம்மை வியக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.

***

Etymology 3000 years ago! (Post No.11,869)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,869

Date uploaded in London – –  4 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Etymology is the study of the origin of words. The history of a word or phrase is shown by tracing its development and relationships.

Yaska was the oldest etymologist known to history. He found the roots of Vedic words. His writing known in Sanskrit as Nirukta, is not only available to us but also studied by Vedic students today. Nirukta is one of the six ancillary subjects, that all the Vedic students must study and pass.

Nirukta is the oldest treatise on etymology, philology and semantics.

He lived before the time of Greeks, Tamil and Latin authors writing books or poems. The wonder is that he mentioned his predecessors. The list of names that he provides us show that India, that is Bharat, was the most literate country in the ancient world. That also proved that Vedic civilization was far ahead of other civilizations. That proved that Sanskrit was the oldest and well developed language.

Though we have older writings in Egyptian, Babylonian cultures, they don’t deal with grammar or linguistics in detail. We have only gibberish and primitive  Gilgamesh poems as part of Middle East literature.

Here is what Yaska, the author of Nirukta (etymology) says:-

His 17 predecessors or his contemporaries:

1.Aagraayana

2.Audumbaraayana

3.Aupamanyava

4.Aurnavaabha

5.Kaaththakya

6.Kautsa

7.Krautuuki

8.Gaarrgya

9.Gaalava

10.Carmaciras

11.Yaitiki

12.Vaarsyaayani

13.Satabalaaksa

14.Saakataayan,

15.Saakapuuni

16.Saakalya

17.Sthaulaasthivi

Xxx

Apart from these individual names, he mentioned many subjects and professions:

Aithihaasikaahaa= historians

Duhitr- daayaadaah= a school of lawgivers who allow a daughter to inherit property of father just like a son.

Nairuktaahaa – etymologists

Parivraajakaahaa – ascetics or theologians

Yajnikaahaa – the ritualists

Vaiyaakarnaahaa = grammarians

Xxx

The existence of such schools of thought shows that specialisation in different subjects must have been prevalent for a considerable time to enable such schools to arise.

This was India before or around 1000 BCE.

We don’t see such a development anywhere in the world around that time.

Text books on these subjects must have existed at the time of Yaska.

Xxx

Six Limbs of Veda Maathaa

According to orthodox tradition, the Nirukta of Yaska is an auxillary treatise which is indispensable for a deep, full and proper knowledge of Vedic stanzas. It is technically called a Vedanga, a limb of the Veda. There are six limbs, Vedangas. The six limbs are

Grammar , phonetics, Ritualistic aphorisms,Metrics, Astronomy and Etymology

Shadango vedo adhyetavyah

Vyaakaranam sikshaa kalpa Chando jyotisham nruktam

Metre is indeed the feet of the Veda, Ritual texts the hands, astronomy the eye, etymology the ear, phonetics the nose and grammar the mouth of the Veda. Therefore, a scholar who has studied the Veda with its limbs becomes great in the world of Brahma.

Chandah paadau tu vedasya hastau kalpo atha padyate

Jyotishaamayanam  chakshurniruktam srotramuchyate

Sikshaagnaanam  tu vedasya mukham vyaakaram smrutam

Tasmaat saangamadheetyaiva brahmaloke mahiiyate

Xxx

Yaska is mentioned and quoted by many scholars in the later days,

Vararuchi in his Niruktasamuchchaya

Skandasvaamin in his commentary on the Rig Veda

Govindasvaamin in his commentary on Baudhaayana dharmasaastra

Medhaatithi in his commentary on the Manu Smriti

Uvata in his commentary on Vajasneyi Samhita

Bhatta bhaaskra Misra in his commentary on the Taittiriya Samhita

Devaraaja Yajvan in his commentary on the Nighantu

Udgiitha and Venkata Maadhava on their commentary on the Rig Veda

Saayana in his commentary on all the four vedas

quoted Yaska’s etymological explanations as authoritative.

Yaska has become, to all commentators, an ifallible guide in the domain of Vedic explanation.

Xxx

We have also got the 64 names of grammarians who lived before Panini of seventh or eighth century BCE

If we place Susrutha’s Sixth century BCE medical treatise together with the above, we can get a bird’s eye view of India’s enormous achievement.

Source book – Woolner Commemoration Volume,  1940 with my inputs

—subham—

Tags- Yaska, Nirukta, list of etymologists, Vedanga, six limbs.