பொறுமையின் சின்னமே பூமியே! தூய்மை செய்பவளே! ஆன்மீக பலத்தால் வலு அடைபவளே ! சக்தி, வளம் ஆகியன உடையவளே , உணவையும் நெய் யையும் உடையவளே! உன் மீது உட்கார்ந்து ஓய்வு எடுக்கலாமா?
இந்த மந்திரத்தில் பூமியின் பொறுமை போற்றப்படுகிறது. இந்த அற்புத விஷயத்தை இமயம் முதல் குமரி வரையுள்ள புலவர்கள் பாடியுள்ளனர். இது இந்துக்களின் சொந்தக் கண்டுபிடிப்பு.
எத்தனை வெட்டுகிறோம், எத்தனை தோண்டுகிறோம்; அப்படியும் அம்மாவை எட்டி உதயும் குழந்தை போல எங்களை அணைக்கிறாயே என்று இந்துக்கள் வியக்கின்றனர். ஆகையால் மீண்டும் மீண்டும் கும்பிடு போடுகின்றனர்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை –குறள் 151
பரிபாடல் என்னும் சங்க இலக்கிய நூலிலும் (2-55) இதே கருத்து வருகிறது
ரகு வம்சம் (18-9) என்னும் காவியத்தில் காளிதாசனும் க்ஷமா என்று பூமியைக் குறிப்பிடுகிறான்
XXX
WATER AND PURITY
மந்திரம் 30
சுத்தா ந ஆபஸ்தன்வே க்ஷரந்து ந யோ னஹ ஸேதுரப்ரியே தம் நிதத்மஹ
பவித்ரேண ப்ருதிவி மோது புனாமி –30
சென்ற பாட்டில் உள்ளது போலவே இங்கும் தூய்மை போற்றப்படுகிறது
“எங்கள் உடல் சுத்தம் டைய தூய நதி நீர் பெருக்கெடுக்கட்டும். எங் களை ஆக்கிரமிக்க நினைப்போர் விஷயத்தில் வாளாவிருக்க மாட்டோம். நான் என்னையும் சுத்தம் செய்து கொள்கிறேன் “
இந்துக்களின் வாழ்வில் நீர் என்பது பிறப்பு முதல் இறப்புவரை தொடர்புடையது. அதை ரிக் வேதமும் மீண்டும் மீண்டும் விதந்து ஓதுகிறது ; ஆகையால் அவர்கள் தினமும் குளிக்கும் வெப்ப மண்டலத்தைச் TROPICAL zone சேர்ந்தவர்களே; குளிர்ப் பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் இல்லை.
Xxxx
STUMBLING BLOCKS
மந்திரம்/ பாடல் 31
யாஸ்தே ப்ராசீஹி ப்ரதிசோ யா உதீசிர் யாஸ்தே பூமி அதராத் யாஸ்ச பஸ்யாத்
“உன்னுடைய கிழக்கு திசையில் வசிப்போரும் , வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் வசிப்போரும்
என்னிடம் இனிமை பாராட்டட்டும். அங்கு நான் இன்பமாக பயணிப்பேன் ஆகுக; இந்த உலகில் நான் வாழும் காலம் வரை தடுமாறக்கூடாது”.
இது மிகவும் பொருளுள்ள பாடல். கவச மந்திரங்களை போல நான்கு திசைகளில் இருந்தும் நன்மையே வந்தெய்துக என்று வேண்டிவிட்டு, ‘தடுமாறக்கூடாது’ என்று சொல்லுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1. இவ்வாறு நான் நாலு திசையிலும் செல்லும்போது உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும்
2. உள்ளத்தில், செய்கையில், சொல்லில் தடுமாறக்கூடாது. அதாவது திரிகரண சுத்தி; மனம், மொழி, மெய் மூன்றிலும் தூய்மை இருக்க அருள்வாயாகுக. ஏற்கனவே சொன்ன தடுமாறக் கூடாது என்ற பதங்கள் மீண்டும் வருவதைக் கருத்திற்கொள்ள வேண்டும். ஒரு முறை, உடல் தடு மாற்றத்தையும் இரண்டாம் முறை, உள்ளது தடுமாற்றையும் மனதிற் கொண்டு பாடியிருப்பார் போலும் !
இதில் இன்னொரு சுவையான மொழி இயல் LINGUISTICS MATTER விஷயமும் வருகிறது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் அவர்கள் 4 திசைகளையும் நோக்கி மந்திரங்களைச் சொல்லுவார்கள்.அதிலும் பிராச்யை , தக்ஷிணாயை, பிரதீச்யை, உதீச்யை என்றே சொல்லி நமஸ்கரிக்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து திசை வழிபாடு இருக்கிறது. அதுமட்டுமல்ல ,
புறநானூற்றில் கூடலூர்க் கிழார் பாடிய அற்புதப் பாடல் வருகிறது (புறம் 229); சேர மன்னன் மாந்தரஞ் சேரல் இறக்கப்போவதை முன் கூட்டியே அறிவித்தது ஒரு எரி கல் . அதில் ‘பிராச்யை’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லை ‘பாசி என்றும்’ உதீச்யை என்ற சொல்லை ‘ஊசி’ என்றும் தமிழ் மயமாக்கியது வியக்கத்தக்க ஒன்று. கூடலூர்க் கிழார் சம்ஸ்க்ருத மன்னன்!!
அவர் தமிழ்ப்படுத்தினாலும் அது மற்றவர்களுக்கும் புரிந்து இருப்பது இமயம் முதல் குமரி வரை சம்ஸ்க்ருதம் புழங்கியதைக் காட்டுகிறது. மேலும் இதே பாட்டில் பங்குனி மாதம், மேஷராசி முதலிய விஷயங்களும் வருவதால் யவனர்களிடமிருந்து இந்துக்கள், நாள் கிழமைகளை கற்றுக்கொண்டனர் என்ற பொய்மை வாதம் தவிடு பொ டி ஆகிறது.
“மேற்கு திசையில் இருந்தோ கிழக்கு திசையில் இருந்தோ எங்களைத் தள்ளாதே; வடக்கு, தெற்கு திசையில் இருந்தோ எங்களைத் தள்ளாதே”.
பூமாதேவியே எங்களிடம் கருணை காட்டு; வழிப்பறி செய்யும் கொள்ளையர் எங்களைக் காணாமல் போகட்டும்; அதி பயங்கர ஆயுதங்களை எங்களிடமிருந்து தொலைவில் வைப்பாயாகுக –32
கிட்டத்தட்ட சென்ற பாடல் போன்றதே. திசைகளைத் தவிர வழிப்பறி கொள்ளையரும் வருகின்றனர் இது பழங்கால இந்தியாவின் நிலையைக் காட்டுகிறது மஹாபாரதத்தில் தமயந்தி சென்ற வழியில் கொள்ளையர் நடத்திய தாக்குதல் விரிவாக உள்ளது. சங்கத் தமிழ் நூல்களில் வழிப்பறி கொள்ளையர் வருகின்றனர். இப்போதும் கடற்கொள்ளையர்கள் கப்பல்களைக் கடத்திச் சென்று கொள்ளை அடிப்பதை பத்திரிக்கையில் படிக்கிறோம்.; ஆயுதமற்ற அமைதியான சமுதாயத்தை வேண்டுவதும் இப்பாடலின் அச்சிறப்பே.
“புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்” என்று பாரதிதாசன் பாடினார் . காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் எழுதிய ஸம்ஸ்க்ருதக் கவிதையை எம்.எஸ். சுப்புலட்சுமி, ஐக்கிய நாடுகள் சபையில் பாடியதால் அது உலகம் முழுதும் ஒலிபரப்பாகியது . உலக நட்புடன் துவங்கும் அந்த மைத்ரீம் பஜத பாடல் யுத்தம் த்யஜத என்ற வரிகளுடன் முடிகிறது . ‘போர் செய்வதைக் கைவிடுங்கள்’ என்ற அவ்வரிகளின் SOURCE ‘மூலம்’ வேதத்தில் உள்ளது. அதர்வண வேதத்தில் ஆயுதங்கள் தொலைவில் ஒழியட்டும் என்ற வரிகள் உள்ளன..
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,573 Date uploaded in London – – 18 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com Efficacy of Vishnu Sahasranamam! Santhanam Nagarajan
After the Kurukshetra war Yudhishthira went to see Bhishma. Bhisma was lying in arrow bed. Lord Krishna advised Yudihisthira to seek advise from Bhishma. He did so. The dialogue between them is narrated in Anusasayan Parva of Mahabharata. Bhishma gives the Lord’s thousand names in Vishnu Sahasranama.
There are 108 verses in Vishnusajasranama. Each and every name has got its own hidden potentials. Learned saints have prescribed certain names for curing certain ailments. They have also prescribed certain verses for recitation to fulfill one’s desired desire. I am giving below one portion of the above details for the benefit of all.
Education: to gain knowledge Vedo veda-vidha-vyango vedango veda-vit-kavih || Sloka 14 To cure stomach ache Bhrajishnu rbhojanam bhokta sahishnu rajaga-dadijah | Sloka 16 For enthusiasm Ateendriyo maha-mayo mahotsaho maha-balah || Sloka 18 To get shukshma buddhi Maha-buddhir-maha-veeryo maha-shaktir-maha-dyuthih | Sloka 19 Eys sight improvement
Sahasra-moordha vishvatma saha-srakshah saha-srapat || Sloka 24 To gain great respect Satkarta satkruta-sadhuh jahnur-narayano narah || Sloka 26 To fulfill one’s desires Siddhar-thah siddha-sankalpah siddhida siddhi-sadhanah || Sloka 27
For Marriage Kamaha-kama-krutkantah kamah kama-pradah prabhuh || Sloka 32 Great job Vyava-sayo vyava-sthanah sams-thanah sthanado dhruvah | Sloka 42 To get over Fear of Deatth Vaikunthah purushah pranah pranadah pranavah pruthuh | Sloka 44 To gain Wealth
Artho-nartho maha-kosho maha-bhogo maha-dhanah || Sloka 46 To have good mind (Buddhi) Sarva-darshee nivru-tatma sarva-gno gnana muttamam || Sloka 48 To have Ananda (pleasure) Anando nandano nandah satya-dharma trivi-kramah || Sloka 56 For Kshemam
Anivarthee nivru-ttatma samkshepta kshema-krutchhivah | Sloka 64 To get away from all Shoka (pain, difficulties) Bhooshayo bhooshano bhooti vishoka shoka-nashanah || Sloka 67 To cure diseases Poornah poorayita punyah punya-keerti rana-mayah || Sloka 73 For Liberation (Moksha)
Sadgati satkruti-satta sadbhooti satpa-rayanah | Sloka 75 Chhatru jayam (Victory over enemies) Sulabha suvratah siddhah shatruji chhatru-tapanah | Sloka 88 To distance oneself from all accidents Amoorti ranagho chintyo bhaya-krudbhaya-nashanah || Sloka 89 For Mangalam
Svastida svasti-krut svasti svastibhuk svasti-dakshinah || Sloka 96 To avoid bad dreams Uttarano dushkrutiha punyo dussvapna nashanah | Sloka 99 For Papa nasam Devakee nandana srashta kshiteeshah papa-nashanah || Sloka 106 It is desirable to chant the full thousand names regularly in the morning or evening hours so that all round properiety will be ensured. From time immemorial, thousands and thousnads have benefitted by reciting this regularly. It is a regular practice in religious homes of Hindus.
Our sastras/ scriptures like Siddhisaram karma vibhaga samuchchayam etc have prescribed Vishnusahasranamam for pariharams ( to remove various illness/thoshas) If we devote sometime, we will be able to find more and more information to remove all of our thoshas!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
முக்கியமான ஆசனங்களில் இருபதுக்கும் மேலான ஆசனங்களுக்கு பிராணிகள், பறவைகள், பாம்பு, தேள் முதலிய பெயர்கள் இருப்பதைக் காணலாம். மேலும் பல ஆசனங்களுக்கு மலர்களின் பெயர்கள் இருப்பதையும் காணலாம். அவர்களிடமிருந்து இந்த ஆசன ரஹஸ்யங்களைக் கற்றுக் கொண்டதற்காக மக்கள் நன்றியுடன் பெயரிட்டான் என்றும் சொல்லலாம்.
பிராணிகளைக் கவனித்து அவைகளிடமிருந்துதான் மனிதன் ஆசனங்களை அறிந்தான் என்று நான்கு வேதங்களை மொழிபெயர்த்த எம்.ஆர். ஜம்புநாதன் எழுதிய யோகாசனப் புஸ்தகத்தில் கூறுகிறார். அவர் சொல்லுவது சரியே என்பதற்கு நானும் சில காரணங்களை சொல்கிறேன்.
நான் கூறும் சில காரணங்கள்:
உலகிலேயே அதிக காலம் வாழும் பிராணி ஆமை (TORTOISE) தான் . சுமார் 300 ஆண்டுகளுக்கு ஆமை உயிர் வாழ்வதை மனிதன் பதிவு செய்து வைத்துள்ளான். இன்று ஆமைதான் அதிக காலம் வாழும் பிராணி என்று சாதனை நூல்கள் (RECORD BOOKS) சொன்னாலும் அதைக் கண்டு பிடித்தவன் இந்துதான் !
புலன் அடக்கம் பற்றிச் சொல்ல வந்த கிருஷ்ண பரமாத்மா, முதல் முதலில் இதைச் சொன்னார். அவரைத் தொடர்ந்து மனு தனது மனு ஸ்ம்ருதியில் ஆமை பற்றி பேசுகிறார். அதை அப்படியே அவருக்குப் பின் வந்த திருவள்ளுவரும் சொன்னார். காலத்தால் பிற்பட்ட திரு மூலரும் ஆமை ரஹஸ்யத்தைக் குறிப்பிடத் தவறவில்லை.
பகவத் கீதை 2-58
மனு ஸ்ம்ருதி 7-105
திருக்குறள் 126
திருமந்திரம் 2360
XXX
தவளை அதிசயம்
கரடி, பாம்பு, தவளை போன்ற சில பிராணிகள் குளிர்காலத்தில் பேருறக்க (HIBERNATION) நிலைக்குச் சென்றுவிடுகின்றன. அவை தூங்கும்போது வளர்சிதை மாற்றத்தின் வேகமும் உடலில் குறைந்துவிடுகிறது. அவை உணவு இல்லாமலேயே 4 முதல் 6 மாதம் வரை நீண்ட உறக்கத்தில் — கும்ப கர்ணன் — நிலையை அடைந்து வசந்த காலம் வந்தவுடன் உயிர்த் துடிப்புடன் எழுந்து விடுகின்றன. ரிக் வேதத்தில் வரும் (7-103) நல்ல பிரசித்தமான பாடல் தவளைப்பாட்டு ஆகும். வேதம் ஓதும் பிராமணர்களையும், வசந்த காலம் வந்தவுடன் சப்தம் செய்யும் தவளைகளையு ம் ஒப்பிடும் நக்கல்- நையாண்டிப் பாட்டு இது. இதில் ஒரு விஞ்ஞான உண்மையும் இருக்கிறது. வேதத்தை மொழிபெயர்த்த வெளிநாட்டுக்கு கும்பலுக்கு அறிவியல் தெரியாது. அதுகள் இதை கிண்டல் என்று எழுதிவைத்துவிட்டன.. உண்மையில் மழைக்கால நான்கு மாதங்கள் ‘சாதுர்மாஸ்ய விரதம்’ எனப்படும். அப்போது சன்யாசம் எடுத்த சந்யாசிகள் ஒரே இடத்தில் தங்குவர். அது முடியும் காலத்தில் பிராமணர்கள் புதுப் பூணுல் அணிந்து மீண்டும் வேதம் கற்பத்தைத் துவங்குவர். அதாவது 4 மாத பேருறக்க நிலைக்குப் பின்னர் தவளைகளும் ஒலி எழுப்புவது போல.
இதைக் கவனித்த ரிஷி முனிவர்கள் நாமும் அப்படி இருக்கலாமே என்று மூச்சு அடக்கப் பயிற்சியைத் துவக்கினர் அப்படித் தவம் இருந்த வாலமீகி போன்ற முனிவர்கள் மீது புற்றுக்கள் கூட வளர்ந்துவிட்டன . ஆக இந்த ஹைபர் நேஷன் HIBERNATION எனப்படும் பேருறக்க நிலைஐயை மனிதர்களும் பயன்படுத்த முடியும் என்று பிராணிகளிடம் கற்றுக் கொண்டனர்..
திரு ஜம்புநாதன் எழுதிய யோகாசனப் புஸ்தகத்தில் சொல்லும் காரண் ங்கள் வேறு :
ஒரு களைப்படைந்த குதிரை படுத்துக் கொண்டு ஓய்வு பெற, புத்துணர்ச்சி பெற என்னவெல்லாம் செய்கிறது எனப்தைக் காட்டுகிறார். பூனை, நாய் முதலிய பிராணிகள் எப்படி உடம்பை முன்னோக்கியும் பின்னோக்கியும் இழுத்து பயிற்சி செய்கின்றன என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும் என்கிறார்.. குரங்குகள் மரத்துக்கு மரம் தாவுகையில் எந்த பயமும் இன்றி உடலை எப்படி லாவகமாக பயன்படுத்துகிறது என்றும் ஜம்பு நாதன் காட்டுகிறார்.
அவர் எழுதிய புஸ்தகத்தில் வெளியிடப்பட் ட சுமார் 50 ஆசனப் படங்கள், செய்முறைகள், பலன்களை ஆங்கிலக் கட்டுரைகளில் வெளியிட்டேன். அவற்றை இரண்டு நாட்களுக்கு வாசித்து பின்னர் அவற்றை யோகாசன ஆசிரியர் மூலம் கற்றுப் பயன்படுத்தலாம்.
–SUBHAM–
tags- யோகாசனம், பிராணிகள் , உறக்க நிலை, புலன் அடக்கம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
M R Jambunathan who translated all the four Hindu Vedas into Tamil says that humans learnt Yogasana from animals. He gives several examples to support his finding. He is right . I can cite more examples. The longest living animal is tortoise. They live up to 300 years . Lord Krishna in the Bhagavad Gita (2-58), Manu in Manu Smrti (7-105), Tamil poet Tiruvalluvar in his Tirukkural (Kural 126), Tirumular in his Tamil Tirumanthiram (2360) use the image of Tortoise to teach us self control. Unless they observed it for several generations, they wouldn’t have referred to it. They knew very well that the tortoises live longer than any other animal on earth because of breath control only. The most popular Frog poem (RV.7-103) in the Rigveda sows us how observant our ancestors were. There the Vedic Rishi refers indirectly to the hibernation of frogs. Vedic students begin or restart their Vedic studies after four month Chaturmasya Vratha time (rainy season). This is similar to hibernation of frogs. Several animals go into hibernation and stop their metabolic activities almost to nil.
Over 20 popular Yogasanas are named after animals, birds, insects and reptiles.
Let me give the examples shown by Sri Jambunathan. He says,
“Have you ever noticed a tired horse? It lies down completely and take some comfortable poses to refresh itself. Yoga is nothing but this activity scientifically applied. A weak man can never see the real Almighty says the Kathopanishad. Strength is greater than knowledge. Worship the strength said Sanatkumara to Rishi Narada.
I am the thunderbolt. I am the lion, eagle and what is all that are strong, said Sri Krishna to the valiant Arjuna. The object of the Yoga is to attain this mighty strength in and out.”
“God has endowed small animals with the faculty of protecting themselves from harm and of being happy. When we represent animals in limbs and form, in instinct and mind, what harm is there in copying some of the main activities which they do to protect and prolong their lives. If we observe all these animals, we can find that they keep themselves physically fit and enjoy happiness by adopting certain Asanas according to time and space.”
“There is no more beautiful sight in this world than that of a cat, tiger, lion sleeping or resting. It is the perfect picture of a repose with all the muscles relaxed. Thus, these animals get new life and vigour and enjoy life almost to perfection. In ancient times many Rishis in their wanderings in the forests observing carefully all the postures of wild animals, putting them to practical tests and finding them immediately profitable by their experiences , had given us these secrets in the Upanishads.”
“When a cat awakes it is a common sight to see stretching it’s body and then bringing it back in form of an arch standing stiff on all four feet. This is an everyday occurrence. It is only after assuming this posture that cat starts on its business. Instinct prompts this cat to adopt this Asana.
We may see it in a dog as well. When it turns lazy it stretches its body towards the front throwing all the weight forward and stretching it’s back without moving from the original place it throws all the weight in the rear. Thus, many animals do. Observe the monkeys adopting naturally many varieties of poses. They do take many postures like our professional athletes. They jump from one branch to another without fear and with great pleasure.”
“The question why we should copy the animals may appear to be not a reasonable one. But if you carefully study the universe and all other creations you will find that man is a representative of nature. The eye stands for the sun, the ear the sky, mind the moon, body the earth, and breath the air. Thus human body is a counterpart of all the elements of Nature.
Chandilyopanishad gives us a grand eulogism of the Asanas. Although Asanas are many in number we have only shown chiefly those that are very important. With illustration or each Asanna.”—M R Jambunathan 15-6-1933
Xxx
I am posting the Asanas in two of my blogs. Part A is published in tamilandvedas and part B is published in swamiindology.blogspot .com.
Please visit both the blogs to get all the 48++++ Asanas.
Tags- Asana, Yogasana, animal postures, Jambunathan book
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,570 Date uploaded in London – – 17 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹரிஷி கக்ஷீவான் : விசித்திர யானை மீது வருபவரையே மணப்பேன் என்ற கன்னியை மணந்தவர்! ச. நாகராஜன்
மஹரிஷி தீர்க்கதமஸ் என்பவரின் குமாரர் கக்ஷீவான்.
அவருக்கு உபநயனம் முடிந்த பின்னர் மஹரிஷி உதங்க முனிவரிட்ம் நான்கு வேதங்கள், சாஸ்திரங்கள், இதிஹாஸ புராணங்களை அனைத்தையும் கற்றார்.
குருகுலவாசம் முடிந்தது.
விடைபெறும் தருணத்தில் உதங்கர் கக்ஷீவானைப் பார்த்து, “ நீ உனது வீட்டிற்குப் போக அனுமதி கொடுக்கிறேன். உனது திருமணம் பற்றிய ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அதைக் கவனமாகக் கேள்.
ராம சேதுவாகிய கந்தமாதனத்திற்குச் செல். அங்கு அகஸ்திய தீர்த்தத்தில் ஸ்நானம் செய். மூன்று வருட காலம் அங்கு அனுஷ்டானங்களைச் செய்து வாசம் செய். நான்காவது வருஷம் நான்கு தந்தங்களுடனும், பருத்த சரீரம் கோண்ட சரத் கால மேகம் போன்ற வெள்ளை நிறமுடைய ஒரு பெரிய யானை அந்தப் புண்ணிய தீர்த்தத்திலிருந்து வெளியே வரும். அப்போது அந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து அதன் மீது ஏறி அமர்ந்து கொள். கவநயன் என்ற அரசனின் நகருக்குச் செல். அங்கு அவனுடைய மகளாகிய மனோரமை என்னும் கன்னி நான்கு தந்தங்கள் கொண்ட வெள்ளையானை மீது வருபவனையே மணப்பேன் என்று சபதம் செய்திருக்கிறாள். அவளை நீ காண்பாய். அவளது தந்தை இந்த சபதத்தினால் பெரிதும் வருந்தி இப்படி ஒரு அபூர்வ யானை இந்த உலகத்திலேயே இல்லையே, அது தேவ லோகத்தில் அல்லவா உள்ளது என்று வருந்திக் கொண்டிருக்கிறான். அவன் இப்படி வருத்தமுற்றிருக்கையில் ஒரு நாள் நாரத மஹரிஷி அவன் இருக்குமிடம் வந்தார்.
அவரை வரவேற்று பூஜித்த மன்னன் தன் வருத்தத்தைச் சொல்லிப் புலம்பினான். உடனே மஹரிஷி நாரதர், “வருந்தாதே. கக்ஷீவான் என்ற பிராமணரின் மகன் உனது மகள் சொன்ன யானை மீது ஏறி வருவான். அவனுக்கு உன் பெண்ணை மணம் முடிப்பாயாக” என்று கூறி அருளினார்.” என்று இவ்வாறு உதங்க முனிவர் கூறியதைக் கேட்ட கக்ஷீவான் அவர் கூறிய படியே சேதுவிற்கு வந்து அகஸ்திய தீர்த்தத்தில் நீராடி தன் அனுஷ்டானங்களைச் செய்யத் தொடங்கினார்.
மூன்று வருடம் கழிந்தது. மூன்றாம் வருட கடைசி நாள் இரவு விடிய ஒரு ஜாமம் இருக்கும் போது ஒரு பெரிய சப்தம் உண்டாயிற்று. கடல் கொந்தளிப்பது போன்ற அந்த சப்தத்தைக் கேட்ட கக்ஷீவான் கண் விழித்துப் பார்த்தார்.
என்ன ஆச்சரியம்! நான்கு தந்தங்களுடைய பெரிய வெள்ளை யானை அவர் அருகில் வந்து நின்றது.
அவர் உடனே தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து அந்த யானையின் மீது ஏறி அமர்ந்து கவநயனின் நகருக்குப் புறப்பட ஆயத்தமானார்.
ஆனால் அதே சமயம் மதுராபுரி மன்னனான கவநயன் காட்டுக்குச் சென்று வேட்டையாடி விட்டு தனது மந்திரி சேனையுடன் அகஸ்திய தீர்த்தம் அருகே வந்திருந்தான்.
அப்போது வெள்ளையானை மீது அமர்ந்து புறப்படச் சித்தமாகி இருந்த கக்ஷீவானைக் கண்டு மகிழ்ச்சி கொண்டான். நாரதர் கூறியது இவராகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணி அவரை எங்கு செல்கிறீர்கள் என்று கேட்க கக்ஷீவான் தான் கவநயன் மகளான மனோரமையை மணக்கப் போவதாகவுவும் அதற்காகக் கிளம்பிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
உடனே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட் கவநயன் அவரைத் தன் நகருக்கு வருமாறு அழைத்தான். கக்ஷீவான் கோரிய படி தனது புரோகிதரை தீர்க்கதமஸ் இருக்கும் இடத்திற்கு அனுப்பி அவரைத் திருமணத்திற்கு வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தான்.
அவரும் மகிழ்ச்சியுடன் கிளம்பி மகனிடம் வந்து அவனை ஆரத் தழுவினார். அனைவரும் மதுராபுரி வந்தடைந்தனர். மனோரைமை தான் சபதம் செய்த படியே நான்கு தந்தம் கொண்ட வெள்ளையானை மீது வந்த கக்ஷீவானைப் பார்த்து அவரை மணக்கச் சம்மதித்தாள்.
உதங்க முனிவரும் திருமணத்திற்கு வந்து சேர்ந்தார். ஒரு நல்ல சுப முகூர்த்த தினத்தன்று திருமணம் கந்தமாதன பர்வதத்தில் நடை பெற்றது.
சீர்வரிசையாக ஏராளமான தன கனக வாகனாதிகளை கவநயன் தர அவற்றைப் பெற்றுக் கொண்டு தீர்க்கதமஸ் தன் இருப்பிடமான வேதாரண்யத்திற்கு மகனுடனும் மருமகளுடனும் வந்து சேர்ந்தார்.
மன்னன் தன் ராஜதானியான மதுராபுரி சென்றான். உதங்க முனிவரும் விடை பெற்றுக் கொண்டு தன் இருப்பிடம் ஏகினார்.
அப்போது வெள்ளை யானையானது அகஸ்திய தீர்த்தத்தில் மறைந்து போனது.
இந்த ஆச்சரியமான சரித்திரம் ஸேது மாஹாத்மியத்தில் உள்ளது.
அகஸ்திய தீர்த்தத்திற்கு இணை அகஸ்திய தீர்த்தமே தான்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகிலேயே பழைய புஸ்தகம் ரிக் வேதம்; அதற்கு ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் கி.மு 4000 முதல் 6000 வரை தேதி குறித்தனர் (Herman Jacobi and B G Tilak). மாக்ஸ்முல்லர் கும்பல் கி.மு 1200 க்குப் பின்னர் இதை யாரும் வைக்கமுடியாது என்று சொன்னது. பேராசிரியர் வில்சன், கோல்ட்ஸ்டக்கர் போன்றோர் கொடுத்த அடியில் “இல்லை இல்லை; நான் சொன்னதன் கருத்து என்னவென்றால் அதற்கும் பின்னர் யாரும் காலம் சொல்ல முடியாது என்பதுதான். உண்மையில் அது கி.மு 1500 அல்லது அதற்கும் முன்னதாக இருக்கலாம்” என்று சொல்லி நழுவிக்கொண்டார் மாக்ஸ்முல்லர். அப்படிப்பட்ட பழைய வேதத்தில் டாக்டர் , மருந்து, மூலிகைகள்,சாவா மருந்து/அமிர்தம், அற்புத மருந்து /சோமம் , ஆயுர்வேத மருந்துகள் பற்றி நிறைய மந்திரங்கள் உள்ளன. ராமாயணக் கதை அறிந்த சின்னக் குழந்தைக்குக் கூட ஹநுமார்த்தான் உலகில் முதல் டாக்டர் என்பது தெரியும். லெட்சுமணன் மயக்கம் போட்டவுடன் இமயமலைக்குப் பறந்து போய் சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்தார்.. லெட்சுமணனும் குணமடைந்தார் .
ரிக் வேதக் கவிதைகள், யஜுர் வேதக் கவிதைகளில் பேஷஜம் / மருந்து, பிஷக்/டாக்டர் என்ற சொற்கள் வருகின்றன. இது அக்கால மருத்துவ அறிவைக் காட்டுகிறது. இதை மெய்ப்பிக்கும் விதத்தில் சுஸ்ருதர், சரகர் என்ற மருத்துவர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவ நூல்களையும் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிக் குவித்தனர். பிற்காலக் கவிஞர்கள் “நோய் என்பது பிறவித் தளை என்றும் அந்த ஜனன -மரண சுழற்சி நோயைப் போக்கவல்ல மருத்துவர் கடவுள்” என்றும் கூறிப் போந்தார்கள்
.
தமிழன் வழி தனீ ………………………. வழி
சங்க இலக்கியத்தின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை. அவர்களுக்கும் மருத்துவம், நோய்கள், அதற்கான காரணம் என்பதெல்லாம் நன்கு தெரியும்.. ஒரு புலவன் மிகவும் சாதுர்யமாக ‘பசிப்பிணி == பசி என்னும் நோய்’ என்ற சொல்லைக் கண்டுபிடித்து அந்த நோய்க்கு மருந்து கொடுக்கும் (உணவு) டாக்டர் இந்த ஊரில் இருக்கிறார் என்றும் பாடுகிறார்.
விவரங்களைப் படிப்பதற்கு முன்னர் ஒட்டு மொத்தக் கருத்து என்ன என்பதைக் காண்போம். அதாவது நோய் என்ற ஒன்று உண்டு; அதற்கு மருந்து என்று ஒன்று உண்டு. அதைத் தீர்க்கும் வைத்தியர் ஒருவர் உண்டு.
அதாவது வேத காலம் முதல் தற்காலம் வரை மனிதர்களுக்கு உடல்நல பிரச்சினை முக்கியமாகக் கருதப்பட்டது.
xxx
ரிக் வேதம்
1-43-2- Rudra’s medicines ரிக் வேதம் (ரி.வே.) 1-43-2 ருத்ரன் என்னும் சிவனின் மருந்துகள் பற்றிப் பேசுகிறது
1-43-4-Rudra, the possessor of healing remedies. Prayer for health and wealth. 1-43-4 ருத்ரனிடம் குணப்படுத்தும் மருந்துகள் உண்டு என்று சொல்கிறது. மேலும் ஆரோக்கியம் வேண்டும் என்றும் கோருகிறது.
வேதம் முழுதும் ஏராளமான மந்திரங்கள் 100 ஆண்டுக்கால ஆரோக்கியமான வாழ்வு வேண்டும் என்றும் பிராரத்னை வருகிறது
இது ஒரு எடுத்துகக்கட்டு. இது போல நிறைய எடுத்துக்கட்டுகள் உள்ளன
Xxxx
ரிக் வேதத்துக்கு அடுத்தாற்போல் வருவது யஜுர் வேதம் இதிலுள்ள ருத்ரம்- சமகம் என்ற பகுதியில்தான் சைவர்களின் தாரக மந்திரமான ‘ஓம் நம சிவாய’ வருகிறது. அதில் சிவன், பவன், ருத்ரன் முதலிய அத்தனை பெயர்களும் ஒரே இறைவனைக் குறிக்கிறது என்பது தெளிவாகிறது. தமிழ் தெரியாத வெள்ளைக்காரர்கள் சிவன் வேறு, ருத்ரன் வேறு என்று உளறிக்கொட்டினார்கள். ருத்திரன் என்பது வேத காலத்திலேயே இப்படி இரண்டு பெயர்களில் (ருத்ரன்- சிவன்) என்று பரவியது. தமிழிலும் சிவன் என்பது 1500 ஆண்டுகளுக்கு முன்னர்வந்த பெயர்தான். சங்க இலக்கியம், தொல்காப்பியயத்தில் சிவன் என்ற சொல் கிடையாது. ரிக்வேதம் போலவே முக்கண்ணன்(திரயம்பகன்), நீல கண்டன் முதியன உண்டு. சுருங்கச் சொல்லின் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இடத்தலும் ஒரு பெயர் சிறப்பிடம் பெறுகிறது. இப்போதும் கூட பார்வதி தேவியை பகவதி முதல் பவானி வரை ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் வழி படுகிறார்கள்
இந்தப் புகழ் மிகு ருத்ரத்தில் கடவுளை– சிவ பெருமானை – பேஷஜ ம்,பிஷக் — மருந்து , மருத்துவன் என்று போற்றுகின்றனர்.
பிற்காலத்தில் வந்த விஷ்ணு ஸஹஸ்ர நாமம் முதலியவற்றிலும் பேஷஜம், பிஷக், வைத்ய என்ற சொற்களால் இறைவனைப் போற்றுகின்றனர். ஆயினும் ஆதி சங்கரர் போன்ற உரை ஆசிரியர்கள் பிறவி என்னும் நோய்க்கு — அதாவது மீண்டும் பிறவாத நிலைக்கு — மருந்து கொடுக்கும் டாக்டர் இறைவன் என்று உரை எழுதினார்கள். இதை ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களிலும் காண்கிறோம்.
xxxx
தமிழன் கண்ட பசிப்பிணி மருத்துவன்
தமிழ் நாட்டில் ஊர் தோறும் வைத்தியர்கள்/ மருத்துவர்கள் இருந்திருக்க வேண்டும். இதனால்தான் வள்ளுவனும் மருந்து என்று ஒரு அத்தியாயமே எழுதிவிட்டார். புறநானூற்றுப் புலவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடிய பாடலில் பசிப்பிணி மருத்துவன் என்று சிறுகுடி பண்ணன் கிழானைப் பாடுகிறார்.
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே — புறம் 173
என்று பாடுகிறார்.
xxx
மேலும் சில யஜுர் வேத கருத்துக்கள்
மனிதர்கள் மட்டுமன்றி பிராணிகளும் நலமுடன் வாழ வேண்டும் என்று யஜுர் வேதம் வேண்டுகிறது.
வயது முதிர்ந்தோர் வரை பிறந்த குழந்தைகள் வரை ந லமுடன் வாழவும் முனிவர்கள் வேண்டுகின்றனர்.
இந்திரன் என்ற சொல் ஆயிரத்துக்கும் மேலான இடங்களில் ரிக் வேதத்தில் மட்டுமே வருகிறது. அங்கு சுமார் 10,000 மந்திரங்கள்தான் . இது தவிர மற்ற மூன்று வேதங்களில் இன்னும் 10,000 மந்திரங்கள் உள்ளன. இந்திரன் என்றால் தலைவர், தலையாய சக்தி, இறைவன், மன்னன் என்ற பல பொருட்கள் உண்டு. தமிழிலும் கூட இறைவன், கடவுள் என்பதை மன்னனுக்கும் பயன்டுத்துகிறோம். இடி, மழைக்கு அதிதேவதை இந்திரன். அவனுடைய மகன் மருத் Marut ; அதாவது காற்று , மின்னல் .மருத் என்னும் கடவுள் பற்றியும் பல துதிகள் உள்ளன. அவரையும் “கடல் , மலை மீதுள்ள மருந்துகளைக் கொண்டுவருமாறு வேத முனிவர்கள் வேண்டுகின்றனர். பிற்காலத்தில் மாருதி என்னும் அனுமன் மருந்து கொண்டுவருவதற்கான பீடிகை போலும் இது!
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,567 Date uploaded in London – – 16 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
One should go on giving when fortune is favourable, because Lord is the supplier. One should give away even when fortune is not favourable, because (fate) is going to take away (everything).
அநுகூலமான காலத்தில் ஒருவன் இருக்கும் போது அவன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் ஹரி தான் கொடுப்பவன். அநுகூலமில்லாமல் ப்ரதிகூலமாக காலம் இருக்கும் போதும் ஒருவன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் விதி அனைத்தையும் எடுத்து விடப் போகிறது. * ஸ்தான ப்ரஷ்டா ந ஷோபந்தே தந்தா: கேஷா நகா நரா: | இதி விஞாய மதிமான் ஸ்வஸ்தானம் ந பரித்யஜேத் ||
Teeth, hair, nails and men do not look graceful if they abandon their respective place. Knowing this a wise person should not leave his place.
பற்கள், தலைமுடி, நகம், மற்றும் மனிதர்கள் தங்களது உரிய இடத்தை விட்டு அகன்றால் சோபிக்க மாட்டார்கள். இதை அறிந்து புத்திசாலியான ஒருவன் தனது ஸ்தானத்தை விட்டு ஒரு போதும் அகலக் கூடாது. (தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை என்ற திருக்குறளை இங்கு ஒப்பு நோக்கலாம். குறள் எண் 964) * பரோக்ஷே கார்யஹந்தாரம் ப்ரத்யக்ஷே ப்ரியவாதினம் | வர்ஜயேத்தாத்யஷம் மித்ரம் விஷகும்பம் பயோமுகம் ||
One should abandon a friend who causes harm (to one’s work) behind one’s back and speaks sweet words in front of one, like a pitcher filled with poison, containing milk, only on the surface.
ஒரு குடத்தில் விஷத்தை நிரப்பி மேலே மட்டும் பால் இருப்பது போல, முன்னால் சிரித்த வண்ணம் இருந்து பின்னால் ஒருவனது வேலைக்கு தீங்கு இழைக்கும் நண்பனை ஒருவன் துறந்து விட வேண்டும். * ருணஷேஷச்சாக்னிஷேஷ: சத்ருஷேஷஸ்ததைவ ச | புன: புன: ப்ரவர்தந்தே தஸ்மாச்சேஷம் ந ரக்ஷயேத் ||
The debt that is left (unpaid), the remains of (unextinguished) fire, and the surviving enemies always grow again. Therefore the remains of such things should not be protected.
கொடுக்காமல் பாக்கி வைத்திருக்கும் கடனும், முழுவதுமாக அணைக்காமல் விட்டு விட்ட நெருப்பும், இன்னும் இருக்கும் எதிரிகளும் மீண்டும் வளர்ந்து விடுவர். ஆகவே மீதமிருக்கும் படி அவற்றை விட்டு விடக் கூடாது. **