பாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு, பாரதியார் நூல்கள் – 57 (Post No.5549)

WRITTEN BY S NAGARAJAN

Date: 17 October 2018

Time uploaded in London – 5-43 AM (British Summer Time)

Post No. 5549

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 57

சா.தாசன் : பாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு

ச.நாகராஜன்

 

பாரதி ஆர்வலர் சா.தாசன் (தமிழ் விரிவுரையாளர், கிறித்தவக் கல்லூரி, மார்த்தாண்டம்) கேரளப் பல்கலைக் கழகம் தந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி எழுதிய திறனாய்வு நூல் பாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு.

1970ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல் 188 பக்கங்களைக் கொண்டது.

தோற்றுவாய்,உரைநடையில் பாஞ்சாலி சபதம், படைப்பின் நோக்கம், கவிதையும் பொருளும், விடுதலை உணர்வு, புதுமைக் கருத்துக்கள், பாரதியும் பரம்பொருளும், பழமை மறவாப் புதுமை, இறுவாய் ஆகிய ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட இந்த நூல் பாஞ்சாலி சபதத்தை மிக நுணுக்கமாக ஆராய்கிறது.

முதலில், பாஞ்சாலி சபதத்தை அப்படியே உரைநடையாகத் தருகிறார் நூலாசிரியர்.

 

வியாச முனிவர் எழுதிய பாரதம், பன்னீராயிரம் பாடலைக் கொண்ட பெருந்தேவனாரின் பாரதம், வில்லி பாரதம், அரங்கநாத கவிராயர் இரண்டாயிரத்து ஐநூறு செய்யுள்களில் பாடிய பாரதம் (பிற்பகுதி பாடப்பட்டது) நல்லாபிள்ளை எழுதிய பதினோராயிரம் பாடல்களைக் கொண்ட நல்லாப்பிள்ளை பாரதம் ஆகியவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடும் தாசன், பாரதியார் பாஞ்சாலி சபதத்தைப் புதுமையான நடையில் படைத்த காரணத்தை அழகுற விளக்குகிறார்.

“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம்,பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்” என்று இப்படி எழுதிய பாரதியார் பாஞ்சாலி சபதத்தை இயற்றி புதிய உயிரை தமிழுக்கு அளித்து விட்டார்.

நூலில், பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் அமைத்துள்ள வெவ்வேறு சிந்து நடை விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சிந்து நடை தவிர பிறவகைச் செய்யுள்களையும் நூலாசிரியர் ஆராய்வதோடு சிலப்பதிகாரத்தையும் கம்ப ராமாயணத்தையும் பாரதியாரின் வரிகளோடு ஒப்பிட்டு பாரதியாரின் ஆழ்ந்த புலமையை வியந்து பாராட்டுகிறார்.

துரியோதனன் கட்டிய  மண்டபத்தைப் பற்றி பாரதியார் கூறுகையில்,

“வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும்

வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்…

சொல்லை யிசைத்துப் பிறர் செய்யுமாறே

சுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார்”

என்கிறார்.

கட்டிடத்தையும் காவியத்தையும் இணைத்துப் பார்க்கும் அற்புதமான இந்த உவமையை நூலாசிரியர் விவரித்து மகிழ்கிறார்; நம்மையும் மகிழ்விக்கிறார்.

பாரதியாரின் உவமை நயம் உலகின் உன்னதக் கவிஞர்களின் உவமை நயத்துடன் ஒப்பிட்டு மகிழக் கூடிய ஒன்று.

அதை இந்த நூலாசிரியர் அழகுற விளக்குகிறார்:

“வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமோ! – இவ்

வேந்தரை நாம் வெல்லலாகுமோ!”

“மாமலையைச் சிறு மட்குடம்  – கொள்ளச்

சொன்ன தோர்  நூல் சற்றுக் காட்டுவாய்”

“குன்றின் மேலே  ஏற்றி வைத்த  விளக்கைப்போல

குவலயத்திற் கறங்காட்ட தோன்றினாய் நீ”

“தீபத்தில் சென்று கொளுத்திய – பந்தம்

தேசு குறைய எரியுமோ!”

“ஞாயிறு நிற்பவும் மின்மினிதன்னை

நாடித் தொழுதிடும் தன்மைபோல்”

“தின்ன வருமோர் தவளையைக் கண்டு

சிங்கஞ் சிரித்தருள் செய்தல் போல்”

“பேயினை வேதம் உணர்த்தல் போல் – கண்ணன்

பெற்றி உனக்கெவர் பேசுவார்?”

கல்லிடை நாருருப் பாருண்டோ – நினைக்

காரணங் காட்டுத லாகுமோ !

“நாயொன்று தேன் கலசத்திலே – எண்ணித்

துன்று  முவகையில் வெற்றுநா-வினைத்

தோய்த்துச் சுவைத்து மகிழ்தல் போல்”

“செருப்புத் தோல் வேண்டியே – இங்குக் கொல்வரோ

செல்வக் குழந்தையினை”

இப்படிப் பல உவமைகளை அடுக்கடுக்காக எடுத்துக் காட்டுகிறார் இந்நூலாசிரியர்.

அடுத்து பாரதியாரின் பாஞ்சாலி சபதம் விடுதலை வேட்கையின் அடிப்படையில் எழுந்த ஒரு காவியமே என்று ஆணித்தரமாக உரைக்கும் நூலாசிரியர் அதை இப்படி ஒப்பிட்டுக் காட்டுகிறார்:

பாஞ்சாலி   – பாரத அன்னையாகவும்

தருமன்     –  பாரதத்தை ஆண்ட பண்டைய மன்னருள் ஒருவனாகவும்

துரியோதனன்  – ஆங்கிலேய ஆட்சியாளனாகவும்

வீமன்   – விடுதலை வேட்கை கொண்ட ஓர் இந்திய வீரனாகவும்

பாரதியாரால் கற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் – தருமம்

மறுபடியும் வெல்லும்” என்று பாடி பாரதியார் தமது விடுதலை வேட்கையைப் புலப்படுத்துகிறார்.

அடுத்து, பாஞ்சாலியைப் புதுமைப் பெண்ணாக பாரதியார் சித்தரிப்பதை எடுத்துக் காட்டுகளுடன் நூல் விளக்குகிறது.

‘நடப்பது நடந்தே தீரும்; நீ உன் கடமையைச் செய்’ என்ற பாரதியாரின் திடமான கருத்தை அவரின் பாடல்கள் மூலமாக ஆசிரியர் விளக்குகிறார்.

அடுத்து சர்வமத சமரஸ மனப்பான்மை கொண்ட பாரதியார் ஏசு கிறிஸ்து,அல்லா, புத்தன் என அனைவரையும் போற்றிப் பாடியதோடு,

“தெய்வம் பலபல சொல்லிப் – பகைத்

தீயை வளர்ப்பவர் மூடர்;

உய்வ தனைத்திலும் ஒன்றாய் – எங்கும்

ஓர் பொருளானது தெய்வம்”

என்று கூறியுள்ளதை விவரிக்கிறார்.

நூலின் முடிவுரையாக ஆசிரியர் தான் கண்ட ஆய்வு முடிவை இப்படி கடைசி பாராவில் விளக்குகிறார்:

 

 

Draupadi derobing sculptures posted by Lalgudi Veda

  “பாஞ்சாலி சபதத்தில் ஒளிர்வன பாரதியாரின் எண்ணங்கள் அல்ல, பாரதியாரே, எண்ணங்களின் நுண்ணிய வடிவில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றார். பாஞ்சாலி சபதத்தைக் காண்பவர் உண்மையில் பாரதியாரையே காண்கிறார்கள் – முழுமையாகக் காண்கிறார்கள்”

நூலாசிரியர் சா. தாசனின் இந்த முடிவை நமது முடிவாக ஏற்றுக் கொள்வதில் ஆட்சேபணை யாருக்கும் இருக்கப் போவதில்லை. அவரது முடிவே அனைவரது  முடிவும் தான்!

சிறந்த திறனாய்வு நோக்கில் அரிய பல கருத்துக்களை ஒருங்கிணைத்து ஒப்பிட்டு இந்த நூல் தருகிறது.

பாரதி ஆர்வலர்கள் படித்து மகிழ வேண்டிய நூல் இது!

***

SWAMI HINDU CROSSWORD PUZZLE No.3 AND SOLUTION TO PUZZLE 2 (Post No.5548)

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 October 2018

Time uploaded in London – 17-25

(British Summer Time)

Post No. 5548

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

1 X 2 X X X X X 3
4 X X X 5
X 6 X X X X
X X X 7 8
X X 9 X X X X X X
X X X X X
10 X X X X X X X X X X
11 X X X
X X X 12 X X X X
X X 13 X X X X X X X
X 14 X X X X X X X X
15 X X X X X X X
16 X X X X N 17 X

ACROSS

1.FAMOUS EPIC

5.VEDIC GODDESS; DAUGHTER OF MANU AND SRADDHA

6.CELESTIAL MUSICIAN

9.STRONGEST OF THE PANDAVA BROTHERS

  1. A SAINT WHOSE BODY WAS BENT DUE TO SOUND EFFECT

12.BOOK CONTAINING FIRE SACRIFICE POCEDURES

14..KRISHNA’S DEAREST FRIEND

15.ANOTHER NAME OF SUN

16.WIFE OF INDRA

DOWN

2.LONGEST EPIC IN THE WORLD

3.OLDEST BOOK IN THE WORLD

4.ONE OF THE THREE BOOKS CALLED PRASTHANA TRAYA

6.SIVA AND VISHNU

7.LIFE STORY OF KRISHNA; ONE OF 18 PURANAS

8.HOLY BOOK MEANING KNOWLEDGE

11.SHORT AND PITHY FORMULA; SUFFIX OF MANY BOOKS

13.NAME OF GODDESS MEANING WAVE

  1. GOD’S NAME; SUFFIX OF SIVA

XXXX

SOLUTION TO PUZZLE 2

PUZZLE 2

ACROSS

1.YAYATI—SON OF KING NAHUSA; EARLY ANCESTOR OF KURU DYNASTY

7.URVASI–ENCHANTING  APSARAS OF HEAVEN

9.RAMA–BROTHER OF LAKSHMANA

11.AKALI–SIKH TERM; SIKH POLITICAL GROUP

12.BALI–DEMON KING KILLED BY VAMANA

13.Kali–GODDESS OF DESTRUCTION

14.ojas–MIGHT, POWER

15.anga–A MLECHA KING; ALSO COUNTRY RULED BY KARNA

DOWN

2.amrita—HEAVENLY ELIXIR

3.ambalika—DAUGHTER OF KASI RAJA; SISTER OF AMBA

4.agni–GOD OF FIRE

5.drona—TEACHER OF PANDANAS AND KAURAVAS

6.rishi–SEER

8.apsaras—-HEAVENLY BEAUTIES

10.rohini—MOON’S FAVOURITE WIFE; ALSO NAME OF BALARAMA’S MOTHER

14.om—PRIMORDIAL SOUND MANTRA

16.shibi–GREAT KING WHO GAVE HIS FLESH TO A BIRD

–subham—

Mother, Do you remember me? (Post No.5547)

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 October 2018

 

Time uploaded in London – 9-14 AM

(British Summer Time)

 

Post No. 5547

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.


Children Anecdotes

A mother was reproving her little girl one day in the presence of Degas, for making mistakes in spelling.

Why do mistakes in spelling matter? The child protested.
Why do they matter? Because they do, and it is very naughty in a little girl to make them, isn’t it Monsieur Degas?
Very naughty, agreed Degas .
Then when the mother had left them, Degas said to the child,

“Which would you like the best , to know how to spell or have a box of candy ?”
Candy! cried the little girl without hesitation.
Well, so would I, replied Degas.

 

Who is Degas?

from wikipedia

Edgar Degas (US/deɪˈɡɑː/ or UK/ˈdeɪɡɑː/; born Hilaire-Germain-Edgar De Gas, French: [ilɛːʁ ʒɛʁmɛ̃ ɛdɡaʁ də ɡɑ]; 19 July 1834 – 27 September 1917) was a French artist famous for his paintings, sculptures, prints, and drawings. He is especially identified with the subject of dance; more than half of his works depict dancers.[1] He is regarded as one of the founders of Impressionism, although he rejected the term, preferring to be called a realist.[2] He was a superb draftsman, and particularly masterly in depicting movement, as can be seen in his rendition of dancers, racecourse subjects and female nudes. His portraits are notable for their psychological complexity and for their portrayal of human isolation.[3]
Xxx

Remember me?

In animated conversation, the adults of the family and their guests around the dinner table had completely forgotten for the time being the presence of four year old Dorothy, who had been automatically excluded.
After a time she tentatively plucked at her mothers sleeve, and asked,
“Remember me?”

Xxx

Mark Twain Drowned!

Mark Twain used to tell a pathetic story of his childhood. It seems, according to the story, that Mark was born twins. He and his twin looked so much alike, that no one, not even their mother, could tell them apart.
One day, while the nurse was bathing them, one of them slipped in the bathtub and was drowned. No one ever knew which twin it was that was drowned— And therein, says Mark, was the tragedy. Everyone thought that I was the one that lived, but I wasn’t. It was my brother who lived. I was the one that was drowned.

Xxx

Naked Biblical Adam

A certain small boy had tumbled into bed, leaving his room in a characteristic state of disorder. His mother, coming in to bid him Good Night, chided gently, saying,
Now I wonder who it was who didn’t hang up his clothes before going to sleep.
Adam, said the little boy, and promptly pulled the covers over his head.

Xxxx subham xxx

யானை பொம்மை பற்றிய ‘மூட நம்பிக்கை’! (Post No.5546)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 October 2018

Time uploaded in London – 7-04 AM

(British Summer Time)

Post No. 5546

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

யானை பொம்மை பற்றிய ‘மூட நம்பிக்கை’! (Post No.5546)

மூட நம்பிக்கைகள் பற்றிய ஒரு ஆங்கிலப் புஸ்தகம் லண்டன் பல்கலைக் கழக லைப்ரரியில் கிடைத்தது. அதில் பல விநோத நம்பிக்கைகள். ஒன்று யானை பற்றியது. நான் இதுவரை கேள்விப் பட்டத்தில்லை. லண்டனில் என் வீட்டிலும் நிறைய மர யானை பொம்மைகள்  உண்டு. அவை ஒவ்வொன்றும் நவக் கிரஹங்கள் போல ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றன. இப்படி நிற்கக் கூடாதாம். வெள்ளைக்காரர்கள் சொல்கிறார்கள்.

“மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை”

என்னும் திருமூலர் பாடலின் தத்துவம் பற்றி காஞ்சி பரமாசார்யார் சொல்லிவிட்டார். அதற்கு மேல் நாம் சொல்ல என்ன இருக்கிறது?

இருந்த போதிலும் திருமூலர் காலத்திலிருந்து மர யானை பொம்மைகள் தமிழ் நாட்டில் இருந்தது தெரிகிறது. எங்கள் மதுரையில் புகழ்பெற்ற கல் யானை கூட உண்டு. ஆண்டுதோறும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி வந்து கல்யானைக்கு கரும்பு கொடுத்த திருவி  ளையாடல் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

யானையின் அபார ஞாபக சக்தி, பழி வாங்கும் குணம், உ.வே.சாமிநாத ஐயர், காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொன்ன யானக் கதைகள், சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பெண்ணின் பாடலுக்கு மயங்கி தானியக் கதிர்களைச் சாப்பிடாமல் நின்ற யானை, புத்தர், மஹாவீரர் ஆகிய பெரியோர்களின் தாய்மார்களின் கனவில் தோன்றிய

யானைகள், புத்தர் முன் மண்டியிட்ட யானை, யானை லத்தி காப்பிக் கொட்டை ஸ்பெஷல் காப்பி, கஜ சாஸ்திரம், கோவில்களில் கஜ பூஜை, யானைக்கு உள்ள பல பெயர்கள்– என்று நூற்றுக் கணக்கான யானை புராணங்களை எழுதிய எனக்கு நேற்று ஆங்கிலப் புஸ்தகத்தில் படித்த செய்தி வியப்பு அளித்தது.

அதாவது வீட்டில் யானை பொம்மையோ, வரைபடமோ, காலண்டரோ எது இருந்தாலும் அது வாசல் கதவை நோக்கிய வண்ணமாக இருக்க வேண்டுமாம்! அப்படியில்லாவிடில் துரதிர்ஷ்டமாமம்!!!

 

ஒரு லண்டன் வாசி எழுதுகிறார்,

என் வீட்டில் மர யானை பொம்மைகள் உண்டு. நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு வந்தார். நான் சொன்னேன்; நான் சரியான அதிர்ஷ்டக் கட்டை. ராமே ஸ்வரம் போனாலும் சனைஸ்சரன் விட மாட்டான் என்ற பழமொழி போல எனக்கு யானை பொம்மை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லை. உடனே என் ஆங்கில நண்பர் சொன்னார்:– அட, உங்களுக்குத் தெரியாதா? யானை பொம்மையை வாசலை நோக்கி வரவேற்பது போல வைக்க வேண்டும் என்று.

அன்று முதல் யானை பொம்மையை வாயில் திசை நோக்கி வைத்தேன். பின்னர், ஒரே அமோகம் தான்.

 

யானை முடி தாயத்து!

இன்னொரு பெண்மணி எழுதுகிறார்– யானை பொம்மை, யானை முடி தாயத்து– இவை எல்லாம் அதிர்ஷ்டச் சின்னங்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? ஆனால் பொம்மை வாசலை நோக்கி இருக்க வேண்டும்.

இன்னொரு பெண்களுக்கான பத்திரிக்கையில் ஒரு குறிப்பு:

எனது அப்பா திடீரென்று இறந்து போனார். பின்னர்தான் தெரிந்தது. எதேச்சையாக யாரோ கை பட்டு எங்கள் வீட்டு யானை பொம்மை திசை மாறித் திரும்பி இருந்தது என்று. அதாவது அவர் மரணம் அடையப் போவதை, யானை முன்னரே தெரிந்து கொண்டுவிட்டது.

இன்னொரு அன்பர் பத்திரிக்கையி     எழுதுகிறார்; அவர் கிண்டல் செய்கிறாரோ, உண்மையைச் செப்புகிறாரோ; துப்பு எதுவும் கிடைக்கவில்லை. அவர் மப்புடன் எழுதியது இதுதான்:

உங்களுக்குத் தெரியாதா?

யானைக்கு என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டால் மதம் பிடித்துவிடும். ஆகையால் வாயிற் கதவுகளை நோக்கி வையுங்கள்.

 

மற்றொரு பெண்மணி யானை முடி தாயத்து  அதிர்ஷ்டம்

அளிக்கும் என்கிறார். நான் குருவாயூர்

அருகில் உள்ள யானை முகாமுக்கு சென்றிருந்தேன். அங்கு 50, 60 யானைகளைப் பராமரிக்கிறார்கள்.

சிலர் யனைப் பாகனுடன் ‘கிசு கிசு’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன என்று கேட்ட போது தமிழும் மலையாளமும் அறிந்த ஒருவர் எனக்கு விளக்கினார். யானை முடி வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டுமாம். அவர் கண்ணுக்கு முன்னால் யானையின் வால் முடியைப் பிடுங்கி நமக்குக் கொடுப்பாராம். எனக்கு அதிர்ஷ்டமும் வேண்டாம்; யானை முடியைப் பிய்த்து அதைக் கொடுமைப் படுத்திய பாவமும் வேண்டாம் என்று சொல்லி விட்டு நைஸாக நகர்ந்து விட்டேன்.

இதில் வேடிக்கை என்ன வென்றால், யானையை உலகிற்குக் காட்டியவனே இந்தியந்தான். ஆப்பிரிக்கவின் புகழ்மிகு எகிப்திய ஓவியங்களில் யானையே இல்லை. தென் கிழக்காஸிய நாடுகள் முழுதும் இந்திரனின் அதிர்ஷ்டக்கார வெள்ளை யானை ஐராவதம்தான் சி   லைகளிலும், கொடிகளிலும்!!! தாய்லாந்து போன்ற நாடுகளின் அரசாங்க சின்னங்களிலும் உளது.  தமிழ்நாட்டுக் கோவில்களில் பூமியைக் காக்கும் அஷ்ட திக் கஜங்கள் என்னும் எட்டு யானைகள் கர்ப்பக்கிரஹத்தைச் சுற்றிலும் உள. சங்க இலக்கியப் பாடல்களில் யானைக் குறிப்புகள் பற்றி ஒரு ஆராய்ச்சி புஸ்தமே உளது. ஸரஸ்வதி மஹால் லைப்ரரி (தஞ்சாவூர்) யில் கஜ சாஸ்திரம் இருக்கிறது.

ஸிந்து-ஸர்ஸ்வதி நாகரீக முத்திரையில் யானைப் படம் உளது; ஆயினும் ஆப்பிரிக்காவில் தந்த சிற்பங்கள் உள. யானைப் படமோ சிலையோ இல.

யானை என்னும் பிராணி வெப்ப மண்டல நாட்டுப் பிராணி. அது ஐரோப்பியா சென்றது 2000 ஆண்டுகளுக்கு முன்னர்தான். டேரியஸ், அலெக்ஸான்டர் ஆகியோர் படை எடு  , ப்புக்கு முன்னால் அவர்கள் யானையைப் பார்த்தது இல்லை. மாமூத் போன்ற யானையின் மூதாதையர் இருந்ததோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி இருந்தும் யானை பொம்மை பற்றி இவ்வளவு நம்பிக்கைகள் எப்படிப் பரவின என்பது ஆரய்ச்சிக்குரிய விஷயம்.

(யானை பற்றிய என்னுடைய ஆங்கிலக் கட்டுரையில் வெள்ளைக்காரர்களின் பெயர்களையும் புஸ்தகம், பத்திரிக்கைகளின் பெயரையும் கொடுத்துள்ளேன்)

“பொம்மையில் மறைந்தது மாமத யானை

பொம்மையை மறைத்தது மாமத யானை”– ஆங்கிலத் திருமூலர்.

யானைகள் வாழ்க!!

–SUBAHM–

ஹிந்துக்களின் தர்ம சிந்தனை! (Post 5545)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 16 October 2018

 

Time uploaded in London – 6-33 AM (British Summer Time)

 

Post No. 5545

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

இது தான் இந்தியா

ஹிந்துக்களின் தர்ம சிந்தனை!

ச.நாகராஜன்

 

ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் 6, மார்ச், 1948 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை – ‘தர்மத்தின் பால் பக்தி

 

‘ஸ்டெல்லா அஜுரா என்ற இத்தாலிய சரக்குக் கப்பல் ஒன்று பம்பாயிலிருந்து வெனிஸுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் புறப்பட்டது. 48 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் நாராயண்தாஸ் என்ற 18 வயது இளைஞன் கப்பலில் சரக்கு அறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனுக்கு வேலை வேண்டும். பாஸ்போர்ட் இல்லாததினால் ஏடனிலோ அல்லது சூயஸிலோ கப்பலிலிருந்து அவனை இறக்கி விட முடியாது. கப்பல் வெனிஸை அடைந்தது. சரக்குகள் இறக்கப்பட்டன. கப்பலில் ஒரு காவலாளியும் நாராயண்தாஸும் தான் இருந்தனர்.

 

அதிகாரிகளுக்கு ஒரு பிரச்சினை – அவன் வேலை பார்க்க விரும்பினான், ஆனால் கொடுப்பதற்கோ அவர்களிடம் வேலை ஒன்றும் இல்லை. கப்பலிலிருந்து இறக்கி விடவும் முடியாது. அவனுக்கு உணவு அளிக்கப்பட்ட போது அவன் அதை ஏற்க மறுத்தான். ஏதேனும் வேலை கொடுத்தால், அதைச் செய்ததற்குப் பிறகு தான் சாப்பிடுவேன் என்றான் அவன். அதிகாரிகள் அவனுக்குப் பெயருக்கு ஒரு வேலை கொடுத்தார்கள்.

அங்குள்ள டெஸ்கை நாளுக்கு இருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என்பது தான் அந்த வேலை.

 

தர்மத்தை – தனது மதத்தின் கொள்கையை – இப்படி வழுவாது பார்ப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? நாராயண்தாஸ் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு லட்சியவாதி!

 

*

ஒரு சமயம் அயோத்யா மஹாராணி ஸ்ரீ கனக பவனில் உள்ள இறைவனான, ஸ்ரீ பிஹாரிஜியின் சேவைக்கென ஒரு குதிரையை அளித்தார். சில வருட சேவைக்குப் பின்னர் அந்த குதிரைக்கு வயதானது. அது சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டது. அது ஒரு கிராமத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதற்குப் பதிலாக சேவைக்கென புதிய இளம் குதிரை ஒன்று தரவழைக்கப்பட்டது.

வயதான குதிரை இயல்பாகவே அமைதியானது. அது, தான் அயோத்யாவிலிருந்து அனுப்பப்படப்போவதைத் தெரிந்து கொண்டது. தரையில் அது உறுதியாகப் படுத்து விட்டது. யாரும் அதை அசைக்கக் கூட முடியவில்லை.

 

குதிரையைப் பாதுகாப்பவர், “ அதை அனுப்பப்போகிறோம் என்று சொன்ன நாளிலிருந்து அதன் கண்களில் கண்ணீர் பொழிந்து கொண்டே இருக்கிறது. கொள்ளைக் கூட அது தின்பதில்லை.” என்றார். அதை வலுக்கட்டாயமாக குதிரை லாயத்தில் அடைத்தனர்.

மோஹந்தாஜி என்பவர் குதிரையைப் பார்த்துப் பரிதாபம் அடைந்தார். அவர் மஹாராணியிடம் சென்று குதிரையைப் பற்றிச் சொல்லவே, மஹாராணி, “அதை இதுவரை அனுப்பவில்லையெனில், மீண்டும் இங்கு கொண்டு வாருங்கள்” என்றார்.

 

மோஹந்தாஜி ரயில் நிலையத்திற்கு விரைந்தார். ஸ்டேஷன் மாஸ்டரிடம் அதை விடுவிக்குமாறு வேண்டினார். ஸ்டேஷன்மாஸ்டரோ, “அது ஏற்றப்பட்ட வாகன் ஏற்கனவே கிளம்பி விட்டது” என்றார். மோஹந்தாஜி, ‘ரயில் வாகன் ஸ்டேஷனில் இன்னும் இருப்பதை நான் பார்த்தேன்’, என்றார். ஸ்டேஷன்மாஸ்டர் விசாரித்த போது அந்த வாகனை ரயிலில் இணைக்க கார்டு மறந்து விட்டார் என்பது தெரிய வந்தது.

 

வேறு ஒருவரும் அந்தக் குதிரைக்கான முயற்சி எதையும் எடுக்காமல் இருந்த போது எல்லாம் வல்ல இறைவனான ஸ்ரீ பிஹாரிஜியே அந்தக் குதிரை மீது கருணை மிகக் கொண்டு அருள் பாலித்தார்!

மீண்டும் தனது இடத்திற்கு வந்த அது, இறக்கும் வரை குதிரை லாயத்திலேயே இருந்தது. இறந்த பின்னர், அதன் உடல் புனித சரயு நதியில் விடப்பட்டது

 

ஆதாரம் :28-9-18 ட்ரூத் ஆங்கில வார இதழ் தொகுதி 86; இதழ் 24

 

ஆங்கில மூலம் கீழே தரப்பட்டுள்ளது :

 

Noble Righteous Hindus: Righteous Thinking

Devotion to Dharma :  6th March,1948 published in Hindustan Standard

A cargo ship of Italy named “Stella Azura” set sail for Venice from Bombay almost couple of months ago. 48 hours later a 18 year old stow away was found named Narayandas. He wanted to work. He could not disembark at Aden or Suez as he did not possessed passport. The ship reached Venice. The cargo was offloaded. Only a guard and Narayandas remained in the ship. The authorities got into trouble with this guy as he wanted to work but there was no work. He cannot disembark either. If he was offered food, he refused to take food without work. His religion forbids him. If he is given some work , then only he can take food. Authorities finally forced to give him a token work of cleaning the deck twice a day.

 

How many people obeys the religion in this way? Narayandas should be our ideal.

Once the Maharani of Ayodhya put a horse into service of Sri Bihariji in Sri Kanak Bhavan.After few years of service it turned

 

old and it was released from service.It was to be sent to a village and a young horse was brought instead.

 

The old horse was peaceful in nature. Now she realized that she was being transferred from Ayodhya.It started lying on the ground firmly, nobody could remove her. The stable keeper said “Since the day it was decided to move her, it is in tears.It is not taking fodder.” Then it was forcefully put into horse box.

Mohantaji had sympathy for her. He told the Rani and she said “ If it is not already despatched, then bring her back.”

 

Mohantaji rushed to railway station and went to the station master to release her. The station master said “ It has already departed”. Mohantaji said “I just saw the wagon still in station”. On enquiry station master found that the guard forgot to attach the wagon. The Lord Almighty Bihariji Himself bestowed grace on her as no one else took interest for her.I rushed to the stable of the temple till its demise. After its demise its body was put in holy Sarayu river.

 

Courtesy : Truth Weekly Vol 86 Issue 24 dt 28-9-2018

 

****

யானை பொம்மை பற்றிய ‘மூட நம்பிக்கை’! (Post No.5546)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 October 2018

 

Time uploaded in London – 7-09 AM

(British Summer Time)

 

Post No. 5546

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

யானை பொம்மை பற்றிய ‘மூட நம்பிக்கை’! (Post No.5546)

மூட நம்பிக்கைகள் பற்றிய ஒரு ஆங்கிலப் புஸ்தகம் லண்டன் பல்கலைக் கழக லைப்ரரியில் கிடைத்தது. அதில் பல விநோத நம்பிக்கைகள். ஒன்று யானை பற்றியது. நான் இதுவரை கேள்விப் பட்டத்தில்லை. லண்டனில் என் வீட்டிலும் நிறைய மர யானை பொம்மைகள்  உண்டு. அவை ஒவ்வொன்றும் நவக் கிரஹங்கள் போல ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றன. இப்படி நிற்கக் கூடாதாம். வெள்ளைக்காரர்கள் சொல்கிறார்கள்.

 

“மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை”

 

என்னும் திருமூலர் பாடலின் தத்துவம் பற்றி காஞ்சி பரமாசார்யார் சொல்லிவிட்டார். அதற்கு மேல் நாம் சொல்ல என்ன இருக்கிறது?

 

இருந்த போதிலும் திருமூலர் காலத்திலிருந்து மர யானை பொம்மைகள் தமிழ் நாட்டில் இருந்தது தெரிகிறது. எங்கள் மதுரையில் புகழ்பெற்ற கல் யானை கூட உண்டு. ஆண்டுதோறும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி வந்து கல்யானைக்கு கரும்பு கொடுத்த திருவி  ளையாடல் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

யானையின் அபார ஞாபக சக்தி, பழி வாங்கும் குணம், உ.வே.சாமிநாத ஐயர், காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொன்ன யானக் கதைகள், சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பெண்ணின் பாடலுக்கு மயங்கி தானியக் கதிர்களைச் சாப்பிடாமல் நின்ற யானை, புத்தர், மஹாவீரர் ஆகிய பெரியோர்களின்

தாய்மார்களின் கனவில் தோன்றிய

யானைகள், புத்தர் முன் மண்டியிட்ட யானை, யானை லத்தி காப்பிக் கொட்டை ஸ்பெஷல் காப்பி, கஜ சாஸ்திரம், கோவில்களில் கஜ பூஜை, யானைக்கு உள்ள பல பெயர்கள்– என்று நூற்றுக் கணக்கான யானை புராணங்களை எழுதிய எனக்கு நேற்று ஆங்கிலப் புஸ்தகத்தில் படித்த செய்தி வியப்பு அளித்தது.

 

 

அதாவது வீட்டில் யானை பொம்மையோ, வரைபடமோ, காலண்டரோ எது இருந்தாலும் அது வாசல் கதவை நோக்கிய வண்ணமாக இருக்க வேண்டுமாம்! அப்படியில்லாவிடில் துரதிர்ஷ்டமாமம்!!!

 

ஒரு லண்டன் வாசி எழுதுகிறார்,

என் வீட்டில் மர யானை பொம்மைகள் உண்டு. நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு வந்தார். நான் சொன்னேன்; நான் சரியான அதிர்ஷ்டக் கட்டை. ராமே

ஸ்வரம் போனாலும் சனைஸ்சரன் விட மாட்டான் என்ற பழமொழி போல எனக்கு யானை பொம்மை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லை. உடனே என் ஆங்கில நண்பர் சொன்னார்:– அட, உங்களுக்குத் தெரியாதா? யானை பொம்மையை வாசலை நோக்கி வரவேற்பது போல வைக்க வேண்டும் என்று.

அன்று முதல் யானை பொம்மையை வாயில் திசை நோக்கி வைத்தேன். பின்னர், ஒரே அமோகம் தான்.

 

 

யானை முடி தாயத்து!

 

இன்னொரு பெண்மணி எழுதுகிறார்– யானை பொம்மை, யானை முடி தாயத்து– இவை எல்லாம் அதிர்ஷ்டச் சின்னங்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? ஆனால் பொம்மை வாசலை நோக்கி இருக்க வேண்டும்.

 

இன்னொரு பெண்களுக்கான பத்திரிக்கையில் ஒரு குறிப்பு:

எனது அப்பா திடீரென்று இறந்து போனார். பின்னர்தான் தெரிந்தது. எதேச்சையாக யாரோ கை பட்டு எங்கள் வீட்டு யானை பொம்மை திசை மாறித் திரும்பி இருந்தது என்று. அதாவது அவர் மரணம் அடையப் போவதை, யானை முன்னரே தெரிந்து கொண்டுவிட்டது.

 

இன்னொரு அன்பர் பத்திரிக்கையி     எழுதுகிறார்; அவர் கிண்டல் செய்கிறாரோ, உண்மையைச் செப்புகிறாரோ; துப்பு எதுவும் கிடைக்கவில்லை. அவர் மப்புடன் எழுதியது இதுதான்:

 

உங்களுக்குத் தெரியாதா?

யானைக்கு என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டால் மதம் பிடித்துவிடும். ஆகையால் வாயிற் கதவுகளை நோக்கி வையுங்கள்.

 

மற்றொரு பெண்மணி யானை முடி தாயத்து  அதிர்ஷ்டம்

அளிக்கும் என்கிறார். நான் குருவாயூர்

அருகில் உள்ள யானை முகாமுக்கு சென்றிருந்தேன். அங்கு 50, 60 யானைகளைப் பராமரிக்கிறார்கள்.

 

 

சிலர் யனைப் பாகனுடன் ‘கிசு கிசு’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன என்று கேட்ட போது தமிழும் மலையாளமும் அறிந்த ஒருவர் எனக்கு விளக்கினார். யானை முடி வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டுமாம். அவர் கண்ணுக்கு முன்னால் யானையின் வால் முடியைப் பிடுங்கி நமக்குக் கொடுப்பாராம். எனக்கு அதிர்ஷ்டமும் வேண்டாம்; யானை முடியைப் பிய்த்து அதைக் கொடுமைப் படுத்திய பாவமும் வேண்டாம் என்று சொல்லி விட்டு நைஸாக நகர்ந்து விட்டேன்.

 

இதில் வேடிக்கை என்ன வென்றால், யானையை உலகிற்குக் காட்டியவனே இந்தியந்தான். ஆப்பிரிக்கவின் புகழ்மிகு எகிப்திய ஓவியங்களில் யானையே இல்லை. தென் கிழக்காஸிய நாடுகள் முழுதும் இந்திரனின் அதிர்ஷ்டக்கார வெள்ளை யானை ஐராவதம்தான் சி   லைகளிலும், கொடிகளிலும்!!! தாய்லாந்து போன்ற நாடுகளின் அரசாங்க சின்னங்களிலும் உளது.  தமிழ்நாட்டுக் கோவில்களில் பூமியைக் காக்கும் அஷ்ட திக் கஜங்கள் என்னும் எட்டு யானைகள் கர்ப்பக்கிரஹத்தைச் சுற்றிலும் உள. சங்க இலக்கியப் பாடல்களில் யானைக் குறிப்புகள் பற்றி ஒரு ஆராய்ச்சி புஸ்தமே உளது. ஸரஸ்வதி மஹால் லைப்ரரி (தஞ்சாவூர்) யில் கஜ சாஸ்திரம் இருக்கிறது.

ஸிந்து-ஸர்ஸ்வதி நாகரீக முத்திரையில் யானைப் படம் உளது; ஆயினும் ஆப்பிரிக்காவில் தந்த சிற்பங்கள் உள. யானைப் படமோ சிலையோ இல.

யானை என்னும் பிராணி வெப்ப மண்டல நாட்டுப் பிராணி. அது ஐரோப்பியா சென்றது 2000 ஆண்டுகளுக்கு முன்னர்தான். டேரியஸ், அலெக்ஸான்டர் ஆகியோர் படை எடு  , ப்புக்கு முன்னால் அவர்கள் யானையைப் பார்த்தது இல்லை. மாமூத் போன்ற யானையின் மூதாதையர் இருந்ததோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி இருந்தும் யானை பொம்மை பற்றி இவ்வளவு நம்பிக்கைகள் எப்படிப் பரவின என்பது ஆரய்ச்சிக்குரிய விஷயம்.

 

(யானை பற்றிய என்னுடைய ஆங்கிலக் கட்டுரையில் வெள்ளைக்காரர்களின் பெயர்களையும் புஸ்தகம், பத்திரிக்கைகளின் பெயரையும் கொடுத்துள்ளேன்)

“பொம்மையில் மறைந்தது மாமத யானை

பொம்மையை மறைத்தது மாமத யானை”– ஆங்கிலத் திருமூலர்.

 

யானைகள் வாழ்க

–SUBAHM–

 

Elephants are Lucky (Post No.5544)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 15 October 2018

 

Time uploaded in London – 19-54

(British Summer Time)

 

Post No. 5544

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

In India people believe seeing elephants in person or in dream is a lucky sign. In Kerala,hair from elephant tail is used as a talisman. Mothers of Buddha and Mahavira dreamt of elephant before the great people were born. Elephant is an auspicious symbol.

It is very interesting to see the beliefs of European’s though it is a tropical animal native of Asia and Africa.

 

Here are some excerpts from magazines and books:-

1953 Folklore (Westmorland) says,
Elephants are lucky.
1957 Folklore says,
I was once at a marriage in Morecambe, Lancashire, when the bride groom met such a beast as he drove to church and afterwards received numerous congratulations on his singular good fortune.

1974 D Scannel, Mother knew Best, says,
Everyone knew that an elephant’s hair bracelet was lucky.

1957, Woman’s Own 4 April,
I have two small ebony elephants which I kept on the mantelpiece, but they did not bring any luck. Then a friend told me that elephants should always face the door. I moved them the next day and our happiness, health and luck really seem to have changed for better.


1969 Folklore,
If you own a drawing or a carving of an elephant, it must always be so placed in the room that its head is facing the door.

1970 Folklore,
It is a superstition in my family (East London/Essex ) that any ornament that has a face should be so placed that it is facing the door by which one would normally enters the room…..it was suggested that the death of my father in 1967 was affected or portended by an ornament being accidentally turned round some weeks earlier.

1984 Woman (Hawk Hurst, Kent),
I know people who have elephants in the room always face them to the door as they get wild if they do not know what is going on.

Elephants came to Europe only 2000 years ago but they knew about the elephants even before that due to Persian and Greek invasions.

It is strange to read how the belief or superstition about elephant toys spread there .

Elephant has positive symbolic associations.

A white elephant announced the birth of Gautama Buddha. Hindus worship elephant headed Ganesh before venturing into new business.
Elephant seals are discovered in Indus- Saraswati River civilisation .

In the Christian imagery of Physiologus of late antiquity, the elephants chastity is celebrated . It will procreate only after eating Mandrake root. The same sources say that female elephants give birth in marsh lands and the male elephants protect them from snakes.

 

The ancient Chinese also lauded the chastity of the elephants.

White elephants are considered lucky because they were the vehicles of Vedic god Indra. In the old Thailand/ Siam white elephant was used in the royal emblem. Indra’s elephant is called Airavata.
South Indian Hindu temples have eight elephants sculpted around the sanctum sanctorum. Those eight elephants guard the earth in eight directions.
The Chinese phrase ‘to ride on an elephant’ means Happiness.

Indian Folklore and anecdotes about the amazing memory of elephants are well known. ( I have already umpteen anecdotes about the Memory of Elephants)

Xxx Subham xxx

SWAMI HINDU CROSSWORD PUZZLE 2 AND SOLUTION TO PUZZLE 1 (Post No.5543)

 

 

SWAMI HINDU CROSSWORD PUZZLE 2 AND SOLUTION TO PUZZLE 1 (Post No.5543)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 15 October 2018

 

Time uploaded in London – 15-09

(British Summer Time)

 

Post No. 5543

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

PUZZLE 2

ACROSS

1.SON OF KING NAHUSA; EARLY ANCESTOR OF KURU DYNASTY

7.ENCHANTI APSARAS OF HEAVEN

9.BROTHER OF LAKSHMANA

11.SIKH TERM; SIKH POLITICAL GROUP

12.DEMON KING KILLED BY VAMANA

13.GODDESS OF DESTRUCTION

14.MIGHT, POWER

15.A MLECHA KING; ALSO COUNTRY RULED BY KARNA

 

DOWN

2.HEAVENLY ELIXIR

3.DAUGHTER OF KASI RAJA; SISTER OF AMBA

4.GOD OF FIRE

5.TEACHER OF PANDANAS AND KAURAVAS

6.SEER

8.HEAVENLY BEAUTIES

10.MOON’S FAVOURITE WIFE; ALSO NAME OF BALARAMA’S MOTHER

14.PRIMORDIAL SOUND MANTRA

16.GREAT KING WHO GAVE HIS FLESH TO A BIRD

 

SOLUTION PUZZLE 1

 

ACROSS

 

1.SUBANU-TWO WORDS: NAME OF SUN, BRIGHT/SHINING

NAMES OF SATHYABAMA’S CHILDREN

2.KAMA-HINDU CUPID

3.VARUNA, RNA-TWO WORDS—LORD OF OCEAN, DEBT (T PITR, DEVA ETC)

4.ASVIN–VEDIC TWIN GODS

5.UMA-SIVA’S WIFE

6.INDRA- LORD OF HEAVEN, CHIEF VEDIC GOD

7.YAMA, NIYAMA–TWO WORDS- GOD OF DEATH, RESTRICTION/CONTROL

8.VALI– KILLED BY RAMA WHILE FIGHTING WITH SUGREEVA

9.AGASTYA–SEER WHO DRANK OCEAN

  1. YAGA–FIRE CEREMONY

11.SISTER OF AMBIKA AND AMBALIKA

12.MITRA–VEDIC GOD WHOSE CULT SPREAD TO ROME

DOWN

13.USHAS–GODDESS OF DAWN

14.YOGA–CONTROLLING BODY AND MIND TOGETHER

15.KRISHNA–DRIVER OF ARJUNA

16.SITA–FAMOUS WOMAN OF MITHILA

17.AYU–SON OF KING PURURUVA AND URVASI

18.RAVI–ANOTHER NAME OF SUN

  1. RAMA–SON OF DASRATHA

20.ANU–SECOND SON OF YAYATI AND SHARMISHTA

21.LINGAM–FORMLESS SHIVA

22.AUM–PRANAVA MANTRA

 

u M A       S U B A N U
S     K A M A       N    
H     R       V A R U N A
A S V I N               U
S     S   S       M     M
      H   I N D R A      
      N   T     A     L  
N I Y A M A     V A L I  
    O       U   I     N  
  A G A S T Y A   Y A G A
    A       A         A  
  A M B A     A R T I M  
S W A M I ­­C R O S S W O RD

 

 

அதர்மம் செய்பவன் குடும்பதோடு அழிவான்- மநு பயங்கர எச்சரிக்கை! (post No.5542)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 15 October 2018

 

Time uploaded in London – 8-39 am

(British Summer Time)

 

Post No. 5542

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மநு நீதி நூல்- PART 29

மநு என்பவர் வேத காலத்தில் வாழ்ந்தவர் என்பது ரிக் வேத துதிகள் மூலம் தெரிகிறது. அப்படியானால் இற்றைக்குக் குறைந்தது 3500 ஆண்டு முதல் 8000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும். ஆயினும் இன்று நம்மிடம் இருக்கும் மநு தர்ம சாஸ்திரம் பல முறை மாறுதல்களுக்கு, இடைச் செருகல்களுக்கு, உள்ளாக்கப்பட்டுள்ளது. 2600 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ள மநு தர்ம நூலில் 40 + ஸ்லோகங்கள் சூத்திரர்களுக்கு எதிராக உள்ளது. திராவிடங்களும் மார்கஸீயங்களும், யாரும் பின்பற்றாத இந்த மநு நூலை வைத்துக் கொண்டு அவ்வப்போது கூச்சல் போடுவது நகைப்பை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்ல அந்தக் கும்பல்களுக்கு பணம் கொடுக்கும் பேர்வழிகள், மதம் மாற்றக் கும்பல்கள் யார் என்பதையும் வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. பெண்களைப் பாராட்டி மநு எழுதிய ஸ்லோகங்களை வெளி உலகிற்குக் காட்டாமல் மறைப்பதால் இவர்கள் பெண்களை எதிர்க்கும் அயோக்கியக் கும்பல் என்றும் புரிகிறது. 2600+ ஸ்லோககங்களில் இடைச் செருகலாக வந்த ஸ்லோகங்களைப் பார்க்கையில் உலகம் கண்டறியாத மஹா ‘ஜீனியஸ்’ மநு என்றும் புரிகிறது.

 

அது மட்டுமல்ல. பிராஹ்மணர் அல்லாத எல்லோரையும் சூத்திரர் என்று திராவிடங்களும் மார்கஸீயங்களும் முத்திரை குத்தி இந்தியாவிலுள்ள நூறு கோடிப்பேரை சூத்திரர் என்றும் காட்டி வருகிறது. வெள்ளைக்காரன் எழுதிய புத்தகங்களில் ‘ஆர்ய’ என்ற சொல்லை இனச் சொல்லாகக் காட்டப்பட்டுள்ளது. ‘படித்தவர்கள்’, ‘பண்பாடு உடையவர்கள்’ என்ற உரிச்சொல்லை இனப் பெயர்ச் சொல்லாக பயன்படுத்தி மக்களை திசை திருப்பியுள்ளனர். ஆக ஒவ்வொருவரும் 2600 ஸ்லோகங்களையும் படித்து அதில் இக்காலத்துக்கு உரிய விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

சொல்லப்போனால்  அடிமைகளையும் பெண்களையும் ஐரோப்பியர்கள் மிருகங்களாக நடத்திய காலத்தில்—(நமது காலத்திலேயே தென் ஆப்ரிக்காவிலும், அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் கறுப்பர்களையும் பழங்குடி மக்களையும்– மிருகங்களாக நடத்தியதை நாம் அறிவோம்). —அப்படியில்லாமல் 2500 அல்லது 8000 ஆண்டுகளுக்கு முன் இந்து சமுதாயம் எப்படி இருந்தது  என்பதைப் பார்க்கையில் நாம் வெட்கப்பட எதுவுமே இல்லை. முழு மானவ தர்ம சாஸ்திரத்தையும் படிப்பவர்கள் இதை அறிவர். அரை வேக்காடுகள், தனக்குப் பிடித்த 40, 50 இடைச் செருகல்களைக் காட்டி கூத்தடிப்பர்.

அதர்மம் செய்பவன் குடும்பதோடு அழிவான்- மநு பயங்கர எச்சரிக்கை! (post No.5542)

 

மநுநீதி நூலின் நாலாவது அத்தியாயத்தைத் தொடர்ந்து காண்போம்..

முதலில் சுவையான, முக்கியமான விஷயங்கள்

 

(ஸ்லோகங்கள் 4-154 முதல் காண்போம்.)

 

ஸ்லோகங்கள் 4-156- 158 யார் நீண்ட காலம்   வாழ்வான் என்று கூறுகிறது

ஸ்லோகங்கள் 160-162

வேலையில் எது  இன்பம் தரும்,  எது துன்பம் அளிக்கும் என்றும் விளக்குகிறார்.

எது நல்லது எது கெட்டது என்பதை  விளக்குகையில் மனதுக்கு இன்பம் பயக்கும் எல்லா நல்ல விஷயங்களும் நல்லது என்கிறார்

அடிமை போல வேலை செய்வது நல்லதல்ல; மனச் சாட்சிப்படி நடப்பதே மகிழ்ச்சி தரும் என்று மநு சொல்வதைப் பார்க்கையில் பெரும் அனுபவசாலி, உளவியல் நிபுணன் என்பது புலப்படும்

 

4-166 பிராமணர்களை பிராமணன் கூடத் தாக்கக் கூடாது; அப்படி தாக்கினால் நரகம், 21 பிறவிகள் ஏற்படும் என்பார்.

 

ஸ்லோகம் 172-174 கெட்டது செய்வோரை தெய்வம் நின்று கொல்லும், அதுவும் குடும்பத்தை வேரோடு சாய்த்து விடும். முதலில் நல்லது நடப்பது போலத் தோன்றினாலும் இறுதியில் அழிந்தே போவான் என்று எச்சரிக்கிறார். அரசன் “அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்னும் தமிழ்ப் பழமொழியை நினைவு படுத்துகிறார்.

 

கெட்டது செய்தோர் உலகில் நன்றாகதானே இருக்கிறார்கள்; தருமமே பொய்யோ என்று வியக்கிறோம். இதை மநுவும் அறிவார். பசு புல்லைத் தின்னுவீட்டு உடனே பால் தருவது போல   இல்லை இது. மெதுவாக ஒருவனை அதர்மம் கொல்லும். முதலில் நன்றாக இருப்பது போலத் தோன்றி பரம்பரையோடு அழிவான் என்று  பயங்கர எச்சரிக்கை கொடுக்கிறார்.

இங்கே பசு உவமை போல, பல இடங்களில் பூனை போல நடப்பவனையும் எச்சரிக்கிறார்.

4-178 பெரியோர் போட்ட பதையைப் பின்பற்று என்று கூறுகிறது.

 

4-179 முதல் 4-185 வரையுள்ள ஸ்லோககங்களில் சடுகுடு விளையாடும் சிறுவர் முதல் குடுகுடு கிழவனார் வரை- மனைவி மக்கள், உறவினர், வேலைக்காரர்கள் ஆகியோரை மதிக்கச் சொல்லிவிட்டு யார் யார் என்ன லோகத்துக்கு அதி தேவதை என்றும் பின்னர் மொழிவார்.

4-180, 4-185 வேலைக்கார்களை எப்படி மதிக்க வேண்டும் என்று காட்டும்

4-186 பிராஹ்மணர்களை தானம் பற்றி எச்சரிக்கிறது. அதிக தானம் வாங்கிப் பழகாதே; அதற்கு அடிமையாகிவிடாதே என்று சொல்கிறது.

 

4-196,197 ருத்ராக்ஷப் பூனை,பஞ்ச தந்திர கொக்கு- நண்டு கதைகளைப் போல ஒருவன் இருக்கக்கூடாது என்கின்றது

கொக்கு-நண்டு கதை பஞ்ச தந்திரக்கதைகளில் உள்ளது. ருத்ராக்ஷப் பூனை சிலை மஹாபலிபுரத்தில் அர்ஜுனன் தபஸ் சிற்பத்தில் உளது. மேலும் பல ஸம்ஸ்க்ருத நூல்களிலும் உளது ( முன்னர்

எழுதிய எனது கட்டுரையில் விவரங்கள் உள.

 

4-203, 204-ல் மற்றொருவனுடைய அனுமதியின்றி அவனது கிணறு, கார், வண்டி வாஹனங்கள், தோட்டம், சோஃபா முதலிய ஆசனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது இக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது. அலுவலகத்திலும், பிற இடங்களிலும் இது எவ்வளவு பெரிய சச்சரவுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை நாம் அறிவோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

xxxxxxxxxxxxxxxxxxxxxx

 

 

 

 

வைச்ச பொருள்?! – 2 (Post No.5541)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 15 October 2018

 

Time uploaded in London – 6-33 AM (British Summer Time)

 

Post No. 5541

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

ஆய்வுக் கட்டுரைகளை காப்பி அடித்து தங்கள் பெயரில் போட்டுக் கொள்ள வேண்டாம். சிலர் கட்டுரைகள் வெளியான தளம், எழுதியவர் பெயர் இல்லாமல் நண்பர்களுக்கு அனுப்ப அவர்கள் தங்கள் பெயரில் அனுப்பி வெளியிடுகிறார்கள். எழுதியவர் பெயர், வெளியிட்ட இணையதளமான www.tamilandvedas.comஇன் பெயர் ஆகியவற்றையும் நண்பர்களுக்கு இணைத்து அனுப்புங்கள்.

வைச்ச பொருள்?! – 2

 

.நாகராஜன்

5

பொருள் என்பதைச் செல்வம் என்ற அர்த்தத்தில் வள்ளுவர் கையாளும் போது பல சிக்கல் நிறைந்த விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறார், வெவ்வேறு குறட்பாக்களில்.

அருள், பொருள் ஆகிய இரண்டு வார்த்தைகள் தமிழ் தந்த அரும் வார்த்தைகள். அருள் என்ற வார்த்தைக்கு ஈடு இணையான இன்னொரு வார்த்தை எந்த மொழியிலும் கிடையாது.

 

பால் பிரண்டன் உள்ளிட்ட மேலை நாட்டோர் வியந்து போற்றிய வார்த்தை இது. பொருள் என்பதும் அதே போன்ற அருமையான வார்த்தை.

 

இந்த இரண்டையும் சீர் தூக்கிப் பார்க்கும் வள்ளுவரின் பான்மை வியத்தற்குரியது.

 

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்  பொருட்செல்வம்

பூரியார் கண்ணு முள  – குறள் 241

 

மிகத் தெளிவாக அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் என்றும் பணத்தால் பெறப்படும் சகல சௌகரியங்களும் அற்பர்களிடத்தும் உள்ளன என்கிறார்.

 

ஆனால் அந்தப் பொருளைக் கொண்டே அருளைப் பெறலாம் என்பதும் அவர் முடிபு.

 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு – குறள் 757

அன்பானது பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செவிலித் தாயால் வளரும்.

பெற்ற பணத்தை நல்ல வழியில் செலவழித்தால் அருளை அடையலாம்.

 

பொருளற்றார் பூப்பர் ஒரு கால் அருளற்றார்

அற்றார் மற்றாதல் அரிது   – குறள் 248

பணம் இல்லாவிட்டாலும் கூட ஒருவேளை பின்னால் வரக் கூடும்; ஆனால் அருள் இல்லையெனிலோ ஒன்றுமே இல்லாதவர்கள் தாம் அவர்கள்; அவர்கள் வளத்தைப் பெறுதல் அரிது.

 

ஆனால் அந்த அருள் மறு உலகத்தில் செல்லுபடியாகும் ஒன்று; பொருள் இல்லையெனில் இவ்வுலக வாழ்க்கை இல்லை! அருள் அவ்வுலகிற்குத் தேவை;பொருள் இவ்வுலகத்திற்குத் தேவை!

 

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு   – குறள் 247

 

 

இந்தப் பொருள் இருந்தால் பொருளற்றவர் கூடப் போற்றப்படுவர். பொருளற்றவர் என்றால் இங்கு மதிக்கவே தகாதவர் என்று அர்த்தம்.

 

பொருளற்றவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்  – குறள் 751

அருமையான இந்தக் குறளில் பொருள் என்னும் வார்த்தை பல பரிமாணங்களைக் காட்டுகிறது.

 

உலகியல் ரீதியான பொருள் தான் – பணம் தான் – சிறப்புடைய பொருள். அதுவன்றி வேறு எதுவும் ஒரு பொருள் அல்ல. மதிக்கத் தகாதவரைக் கூட மதிக்கும்படி வைக்கும் ஒரு அற்புதம் செல்வமே.

 

காசே தான் கடவுளடா!

பொருள் என்னும் பொய்யாவிளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று    -குறள் 753

பொருள் மட்டும் இருந்தால் போதும். அதுவே நந்தா விளக்கு. நினைத்த தேசத்திற்கெல்லாம் சென்று வெல்வதோடு இருளை ஒழித்து விடும். இருள் என்பது இங்கு பகை உள்ளிட்ட பல அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது.

 

ஆகவே வள்ளுவரின் கட்டளை ‘செய்க பொருளை

எப்படியாவது பணத்தை சம்பாதித்துக் கொள். பகைவரின் கர்வத்தை அடக்க வல்ல  கூர்மையான வாள் அதை விட வேறில்லை.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரியது இல்     – குறள் 759

 

 

ஆனால் இந்தப் பொருளை நியாயமான வழியில் சம்பாதிக்க வேண்டும்.பிறரை அழவைத்துப் பெற்றால் நீ அழப்போவது நிச்சயம் (குறள் 659)

 

சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்றுகுறள் 660

சலத்தால்கெட்ட வழியால்வஞ்சனையால்பொருளைப் பெற்றால் அது நிலைக்காது; அது பச்சை மண்பாண்டத்தில் நீரை ஊற்றி வைப்பதற்குச் சமம்.

 

சம்பாதித்த பணம் குறையாமல் இருக்க ஒரு வழி உண்டு.

பிறனுடைய கைப்பொருளைக் கைப்பற்றாமல்கவராமல்வஞ்சனையால் அடையாமல் இருத்தல் வேண்டும்.

 

இப்படி வழி காட்டும் குறள் இது:-

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன் கைப்பொருள்  – குறள் 178

ஆனால் இப்படிப் பெரும் செல்வத்தை சம்பாதித்து என்ன பிரயோஜனம்? அதனை நன்கு அனுபவிக்க அல்லவா வேண்டும்?

 

அனுபவிக்காமல் செத்துப் போனால் அந்தச் செல்வத்தைக் கொண்டு செத்தபின் அவன் என்னதான் செய்யப் போகிறான்?

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்   – குறள் 1001

 

சேர்த்த பணத்தால்செல்வத்தால்எல்லாம் அடையலாம் என்று எண்ணி அதைச் சேர்த்து வைத்து யாருக்கும் கொடுக்காமல் செத்தொழிந்தால் அடுத்த பிறப்பு இழிந்த பிறப்பாகவே அமையும்.

 

பொருளானாம் எல்லாம் என்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு   – 1002

அப்பாடா!

தலை சுற்றும் அளவுக்குப் பொருளைப் பற்றிய பொருள் வாய்ந்த குறள்கள் இவை.

செல்வம் என்ற அர்த்தத்தில் எப்படிப் பொருளைச் சேர்க்க வேண்டும், அப்படிச் சேர்ப்பது எவ்வளவு முக்கியம், அதைக் காக்கும் வழி என்ன, அடுத்த பிறவி நல்லதாக அமைய வழி என்ன என்பன உள்ளிட்ட அற்புத உண்மைகளை அள்ளிக் கொட்டுகிறார் வள்ளுவப் பிரான்.

இதில் அப்பர் கூறிய வைச்ச பொருள் பற்றி நமக்குத் தெரியவில்லை.

 

அதற்கு இன்னும் பல குறட்பாக்களை ஆராய வேண்டும்.

ஆராய்வோம்!

                     –தொடரும்

 

 

***