1 It is the Kāligaṅgā River or the western Kāli , which rises in the mountains of Kedāra in Gharwal. It is a tributary of Alakānandā River.
4.Aim, Object in Indian Languages
6.Word, or Speech ←
7.Sanskrit word for Elephant found in Rig Veda and First Thiruppugaz in Tamil
8.Number Three is derived from this word ←
10. Giving or yielding water; forming the essential portion of water (apāṃ sārabhūto rasaḥ). ←
9. Mahatma Gandhi built his last ashram in this town in Maharashtra; Other renowned social activists that lived and worked in this town include Vinoba Bhave, Baba Amte, and Jamnalal Bajaj.
11.World’s first thesaurus; it is in Sanskrit.
Down
1.Madurai Goddess Meenakshi’s father; meaning King with Mountain Flag
2.Sangam Tamil Poet who challenged Lord Shiva in an argument .
5.Goddess worshipped by Saint Sri Ramakrishna Paramahamsa. ↑
3.Name of Indra’s elephant; First Name of famous Tamil Brahmi Epigraphist
12. A house, dwelling; room, covered place.also Amavasya ↑
13.That which is not a metal. ↑
14. shining; bright; having lustre; radiant; brilliant in Sanskrit. Brahmin boys use it in Samidhaadhaanam everyday. ↑
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிட்னி ஆர்ட் காலரியில் டயோஜெனிஸ் ஓவியம்!
ஆஸ்திரேலியாவில் சிட்னி ஆர்ட் காலரிக்குச் (Sydney Art Gallery) சென்றபோது என்னைக் கவர்ந்த ஓவியங்களில் ஒன்று கிரேக்க தத்துவ ஞானி டயோஜெனிஸ் ஓவியம் ஆகும்.
இந்த ஓவியத்தை வரைந்தவர் ஜான் வில்லியம் வாட்டர்ஹவுஸ் (1849-1917)) ஆவார். அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கில ஓவியர் . அவர் கிரேக்க நாட்டு விஷயங்களை ஓவியத்துக்கு எடுத்துக்கொண்டு அதில் நல்ல புகழையும் பெற்றார்; குறிப்பாக டயோஜெனிஸ்
ஓவியம் எல்லோரையும் கவர்ந்தது. அந்த கிரேக்க அறிஞர், சாலை ஓர தண்ணீர் குழாய்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் வசித்தார்; பகல் நேரத்தில் விளக்கினைக் கையில் தூக்கிக் கொண்டு திரிவார்; யாரேனும் ஏன் என்று வினவினால் நல்ல மனிதனைத் தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று விடை பகர்வார் .
Diogenes looking for Good People with a lantern in the Day Time
*****
டயோஜெனிஸ் (412-323 BCE)
டயோஜெனிஸ் (Diogenes) , 2300 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு தத்துவ மேதை. ஒரு டாக்டரும் வழக்கறிஞரும் அவரிடம் சென்று எங்களிடையே ஒரு வாக்குவாதம், சர்ச்சை! யாருக்கு முதல் மரியாதை? வரிசையில் யார் முதலில் செல்ல வேண்டும்? என்று வினவினார்கள்.
தத்துவ வித்தகர் சொன்னார்:
திருடன் (Thief) முதலில் போகட்டும்; அவன் பின்னால் மரணதண்டனையை நிறை வேற்றுபவன் (executioner) செல்லட்டும்!
உடனே வக்கீல் சந்தோஷத்துடன் முதலில் சென்றார். அவரைப் பின் தொடர்ந்தார் டாக்டர்!
****
பட்டப்பகலில் விளக்குடன் போன தத்துவ ஞானி
டயோஜெனிஸ் அலெக்ஸாண்டர் காலத்தில், 2350 ஆண்டுகளுக்கு முன், வாழ்ந்தவர். இப்பொது துருக்கியில் இருக்கும் சினோப் நகர் ஒரு காலத்தில் கிரேக்க காலனியாக இருந்தது. அங்கே பிறந்த டயோஜெனிஸ், கிரேக்க நாட்டின் தலை நகரான ஏதென்ஸ் நகருக்குக் குடியேறினார். ஆண்டிஸ்தெனிஸ் என்ற குருவுடன் சேர்ந்து ‘’ஸினிக்’’ இயக்கத்தைத் துவக்கினார். ‘சினிக்’= எதிலும் குற்றம் காண்பவன், நன்மையில் நம்பிக்கையற்றவன்= என்ற ஆங்கிலச் சொல் இவர்கள் மூலம்தான் வந்தது.
இந்த ‘சினிக்’ இயக்கத்தினர் இந்திய யோகிகள், சித்தர்கள், ஆண்டிப் பண்டாரங்கள் போல வாழ்க்கை நடத்துபவர்கள். டயோஜெனிஸ் ஒரு பெரிய உடைந்த ஜாடியில், தெருவோரமாக வாழ்ந்தார். மாமன்னன் அலெக்ஸாண்டர் அவரைப் பார்க்க வந்தான். “ஐயா, பெரியவரே, உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய வேண்டும்?” என்று பணிவோடு கூறினான். டயோஜெனிஸோ, ‘சினிக்கல்’ ஆக பதில் தந்தார்.
Alexander meeting Diogenes
“ஐயா, மாமன்னரே, சற்றே விலகும், சூரிய வெளிச்சத்தை மறைக்காமல் விலகிப் போங்கள்” என்றார் டயோஜெனிஸ்.
அவர் பகல் நேரத்தில் தெருக்களில் போகும் போது கையில் லாந்தர் விளக்கை எடுத்துச் செல்வாராம். ‘’ஐயா ,உங்களுக்கு என்ன பைத்தியமா? பகலில் விளக்கு எடுத்துச் செல்கிறீர்களே?’’, என்று நகைப்போரிடம், ‘’நான் நேர்மையான ஒரு மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்’’ என்பார்.
****
விளக்குடன் போன குருடர்
இன்னொரு வயதான ஞானி கண் பார்வையற்றவர். அவர் இருட்டு நேரத்தில் போகும் போது ஒரு கையில் கைத்தடியும், மற்றொரு கையில் விளக்கும் கொண்டு செல்வார். எல்லோருக்கும் ஒரே புதிராக இருக்கும். இதைப் பார்த்த ஒரு இளைஞனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘’ஐயா, என்ன உங்களுக்கு பைத்தியமா? கண்ணே தெரியாத உமக்கு விளக்கு ஒரு கேடா? ஒரு வேளை ஏதேனும் கொஞ்சம் தெரிந்துவிடும் என்ற நப்பாசையா?’’ என்றான்.
அந்தக் கிழவனார் அமைதியாக பதில் தந்தார், ‘’அன்பரே, எனக்கு கண் தெரியாது என்பது உண்மையே. உம்மைப் போன்ற பார்வையுடையவர்கள் என் மீது தடுக்கி விழக் கூடாது அல்லவா?’’ என்றார். தமிழ் நாட்டு மஹான் ஒருவர் இதே உதாரணத்தைப் பயன்படுத்தி வேறு ஒரு உண்மையை விளக்கினார். வேதங்கள், இந்து மத சடங்குகளுக்கு அர்த்தம் தெரியாவிடிலும் தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்துவாருங்கள். நீங்கள் பொருள் அறியாத குருடர்களாக இருக்கலாம். எதிர் (காலத்தில்) வருவோருக்கு அது வெளிச்சம் போடும் என்று.
****
பட்ட கட்டையில் பகல் குருடு போகுது பார் !
தமிழ் நாட்டில் பல மறைஞான சம்பந்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் சிதம்பரத்தில் வாழ்ந்தார். திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி போல கண்கட்டி வாழ்ந்தார். அவரது மடத்துக்கு ‘’கண்கட்டி மடம்’’ என்றே பெயர். நிறைய நூல்களை எழுதியவர். மெத்தப் படித்தவர். இருந்தும் மற்றவர்களின் தீய , நன்மையற்ற செயல்களைக் காணக்கூடாது என்று கருதியவர்.
மற்றொரு மறைஞான சம்பந்தரரின் சீடர் உமாபதி சிவாச்சார்யார்.சைவ சமய சந்தான குறவர் நால்வரில் ஒருவர். மாபெரும் அறிஞர். பல ஆதாரபூர்வ நூல்களை எழுதி சைவ சித்தாந்தத்தை நிலை நாட்டியவர். உமாபதி சிவம் , தினமும் கோவிலுக்குப் பல்லக்கில் சென்று வருவது வழக்கம். ஒரு நாள் பூஜையை முடித்துக்கொண்டு வருகையில், பிச்சைக்காரர் வடிவில் வந்த ஒரு ஞானி, உமாபதி சிவத்தின் பல்லக்கைப் பார்த்து, “பட்ட கட்டையில் பகல் குருடு ஏகுது பார்” என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் அவருக்கு ஞானம் உதித்தது. உடனே பல்லக்கில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அன்று முதல் கோவிலுக்கு வந்து போக அவர் பல்லக்கைப் பயன்படுத்தவே இல்லை.
–subham—
Tags– சிட்னி ஆர்ட் காலரி, டயோஜெனிஸ் ஓவியம், டயோஜெனிஸ், உமாபதி சிவம், அலெக்ஸாண்டர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நாரத புராணம் விவரிக்கும் ஒன்பது பக்திகள்!
ச. நாகராஜன்
நாரத புராணம் மஹா புராணங்களில் ஒன்றாக அறிஞர்களால் கூறப்படும் சிறந்த ஒரு புராணம்!
ப்ரஹன் நாரதீய புராணம் என்ற ஒரு நூலும் உள்ளது. ஆனால் இது சிறிய புராணம். இதில் 3600 செய்யுள்களே உள்ளன. இதில் உள்ள அத்தியாயங்கள் 38.
ஆனால் நாரத புராணத்தில் 25000 செய்யுள்கள் உள்ளதாக கூறப்பட்டாலும் நமக்கு இன்று கிடைத்திருப்பவை மொத்தம் 18550 செய்யுள்கள் மட்டுமே தான்!
13144 செய்யுள்கள் பூர்வார்த்த என்று சொல்லப்படும் முதல் பாகத்திலும் 5406 செய்யுள்கள் உத்தரார்த்த என்று சொல்லப்படும் இரண்டாம் பாகத்திலும் உள்ளன.
எல்லா புராணங்களிலும் உள்ளது போல பல ஸ்ருதியும் இதில் உண்டு. அத்துடன் புராணம் முடிவடைகிறது.
பொதுவாக நினைப்பது போல இதை நாரதர் இயற்றவில்லை.
நாரதரின் நான்கு சகோதரர்களான சன்கர், சனாதனர், சனத்குமாரர் மற்றும் சனந்தனர் ஆகிய நால்வருமே இதில் பேசிக் கொள்கின்றனர்.
நாரத புராணம் யோகம் பற்றி நன்கு விளக்குகிறது.
அஹிம்சை, சத்தியம், அன்பு, தியாகம், ஆகிய நற்குணங்கள் யோகத்திற்கு அடிப்படையாகத் தேவை.
இதன் மூலம் பரா மற்று அபரா ஆகியவற்றை உணரலாம்.
இது அஷ்டாங்க யோகம் எனப்படும் எட்டு விதமான யோகத்தின் அடிப்படைகளையும் நன்கு விவரிக்கிறது.
பக்தியைப் பற்றி விவரிக்கும் இந்தப் புராணம் பக்தியை மூன்று விதமாகப் பிரிக்கிறது.
சத்வம், ரஜஸ், தாமஸம் ஆகிய மூன்று வித பக்திகளில் தாமஸ பக்தி அதமம். ராஜஸ பக்தி மத்யமம். சத்வ பக்தி உத்தமம். இந்த மூன்று வகைகளையும் கீழ்க்கண்டபடி இந்தப் புராணம் பிரிக்கிறது.
1)அதம தாமஸ பக்தி : மற்றவர்களை அழிக்க விஷ்ணுவைத் துதிப்பது.
2) மத்யம தாமஸ பக்தி; ஒழுக்கங்கெட்ட ஒரு பெண் தன் கணவனை நேசிப்பது போல விஷ்ணுவின் மீதான பக்தி
3) உத்தம தாமஸ பக்தி: மற்றவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு பொறாமையுடன் பக்தி செலுத்துவது
10) உத்தமோத்தம பக்தி: மிக மிக உயரிய நிலை பக்தி இது. தன்னையே விஷ்ணுவாக உணர்ந்து தன்னுள்ளேயே பிரபஞ்சம் இருப்பதை உணர்வது.
அடுத்த அத்தியாயத்தில் பக்தி வேறு விதமாக மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.
1) ச்ரத்தா பக்தி: தான் உட்பட அனைத்துப் பிரபஞ்சமுமே விஷ்ணு என்பதை பக்தன் உணர்கிறான். விஷ்ணுவே அனைத்துக்கும் ஆதாரம். அவரை விதிப்படி துதிக்க வேண்டும். இது ச்ரத்தா பக்தி.
2) சமதா பக்தி: விஷ்ணு எங்கும் நிறைந்திருப்பவர் அவரையன்றி வேறொன்றுமில்லை என்பதை பக்தன் உணர்வது சமதா பக்தி.
3) சாந்தி பக்தி: பக்தன் தனக்கு என்ன நேர்ந்தாலும் நண்பர்களையும் எதிரிகளையும் சந்தோஷத்துடன் ஒரே விதமாகப் பாவிப்பது என்ற மனநிலையைக் கொண்டிருப்பது சாந்தி பக்தி.
ஆக நாரத புரானம் இப்படி விரிவாகவும் தெளிவாகவும் பக்தி நிலைகளை விவரிக்கிறது.
இது தவிர நாரதர் இயற்றிய நாரத பக்தி சூத்ரம் அருமையான் அருமையான ஒரு நூல். நாரதர் பக்தியைப் பற்றி முற்றிலுமாக விவரிப்பதை இதில் படித்து உணரலாம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(புரந்தரதாசர் பற்றிய 7–வது கட்டுரை இது)
புரந்தரதாசர் கீர்த்தனைகளில் நல்ல ருசி உண்டு; யாராவது அவரது வீட்டுக்குப் போனால் ராமர் பாயசம் தருவார்; அதில் கிருஷ்ணா சர்க்கரையும் இருக்குமாம்; அத்தோடு வாசலில் உள்ள தாம்ப்பாளத் தட்டிலிருந்து கற்கண்டும் எடுத்துக்கொள்ளலாமாம் . இதற்காக அவர் நம்மை வெற்றிலை பாக்கு வைத்து மேள தாளத்துடன் வரவேற்கிறார் . இதோ அவரே சொல்கிறார்
ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே
விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)
ராமா என்னும் பாயசத்தை தயாரிக்க, கிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;
கவனம் (ஒருமுனைப்படுத்தல்) என்னும் கோதுமையைக் கொண்டு வந்து, வைராக்யம் என்னும் கல்லில் போட்டு
அந்த மாவைக் கையில் எடுத்து மெல்லிய இழையாக செய்வீராக (ராம)
ஹ்ருதயவெம்போ மடிகேயல்லி பாவவெம்போ எசரு இட்டு
புத்தியிந்தா பக்வவ மாடி ஹரிவாணலி படிசிகொண்டு
ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு டேகு பந்தாக
ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன நெனெயிரோ (ராம)
இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு
புத்தியுடன் அதை நன்றாக சமைத்து; ஹரி என்கிற பெரிய தட்டில் போட்டு
(சாப்பிட்டபிறகு) ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது
ஆனந்த மூர்த்தி நம் புரந்தர விட்டலனை நினையுங்கள் (ராம)
***
சஜ்ஜிகே – கோதுமை & சர்க்கரையால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பண்டம்.
ஷாவிகே – சேமியா போல் மெல்லிய, நீண்டதாக ஆக்கிக் கொள்ளுதல்
****
தமிழில் கிருபானந்தவாரியார் சுவாமிகளின் உபன்யாசத்தைக் கேட்டவர்களுக்கு ஊறுகாய் போடுவது பற்றி அவர் சொன்னது மறக்காது!
புது வகைப் பழச்சாறுSWEET — வள்ளலார்
வள்ளலார் பாடலுடன் ஒப்பீடு ; சிவன் நாமம் மூன்று பழச் சாறு
தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்து, ஒன்றாய்க் கூட்டி
சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே,
தனித்த நறும் தேன் பெய்து, பசும்பாலும் தெங்கின்
தனிப்பாலும் சேர்த்து, ஒரு தீம் பருப்பிடியும் விரவி,
இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே,
அனித்தம் அறத் திருப்பொதுவில் விளங்கும் நடத்து அரசே,
அடிமலர்க்கு என் சொல் அணியாம் அலங்கல் அணிந்து அருளே!
நூல்: திருவருட்பா; பாடியவர் வள்ளலார்
மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் தனித்தனியே சாறு பிழிந்து, வடிகட்டிச் சக்கைகளை நீக்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து, அந்தக் கலவையில் சர்க்கரையும் கற்கண்டுப் பொடியையும் நிறையச் சேர்த்து, அசுத்தம் இல்லாத நல்ல தேனை அதில் ஊற்றி, பசும்பாலும் தேங்காய்ப் பாலும் சேர்த்து, இடித்த பாசிப்பருப்பைப் போட்டுக் கிளறி, இனிப்பான, நல்ல நெய்யையும் சேர்த்துக் கொதிக்கவைத்து இளம் சூட்டில் இறக்கி ஆறவிட்டுப் பின்னர் அதிலிருந்து ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டால் எப்படி இருக்கும்? அந்தச் சுவைக்கட்டியைவிட அதிகம் இனிப்பான தெள்ளமுது, என் இறைவனாகிய நீ!
நிலையில்லாத பிறவித் துயரம் அறுபடும்விதமாக அம்பலத்தில் ஆடும் நடராஜனே, உன்னுடைய பாத மலர்களை என் சொற்களால் அலங்கரிக்கிறேன், ஏற்றுக்கொண்டு அருள் செய்!
*****
புது வகைக் கற்கண்டு – புரந்தரதாசர்
கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு
கல்லு சக்கரே கொள்ளீரோ
கல்லு சக்கரே சவி பல்லவரே பல்லரு
புல்ல லோசன ஸ்ரீ கிருஷ்ண நாமவெம்ப (கல்லு)
கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு – நீங்க எல்லோரும்
கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு
கற்கண்டை சாப்பிட்டவருக்கே தெரியும் (அது எவ்வளவு இனிமையென்று)
மலர்க் கண்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர் என்னும் (கற்கண்டு)
எத்து ஹேருகளிந்தா ஹொத்து மாருவதல்லா
ஒத்தொத்தி கோணியளு தும்புவதல்லா
எத்த ஓதரு பாடிகே சுங்க இதக்கில்லா
உத்தம சரக்கிது அதி லாப பருவந்தா… (கல்லு)
எருமைகளால் இதை இழுத்துப் போகமுடியாது
எடுத்துப் போட்டு கோணியில் நிரப்பமுடியாது
எங்கு எடுத்துப் போனாலும் இதற்கு வாடகை, சுங்கம் (வரி) கிடையாது
உத்தமமான சரக்கு (பொருள்) இது, அதிகமான லாபம் தரும் பொருளான (கற்கண்டு)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
13-2-25 kalkionline இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
அற்புதமான ரகசியங்களை விளக்கும் அரிய நூல்!
உலக மர்மங்களை விளக்கும் ஒரே நூல் எது?
ச. நாகராஜன்
உலக மர்மங்களை விளக்கும் ஒரே நூல் எது?
மிக மிக முக்கியமான இந்தக் கேள்விக்கு விடை : யோக வாசிஷ்டம்!
எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேளுங்கள் – மனிதன் ஏன் பிறக்கிறான், எப்படி வாழ்கிறான், ஏன் இறக்கிறான், மறு பிறப்பு உண்டா, உருவ வழிபாடு வேண்டுமா, கர்மா என்பது உண்மையா, சொர்க்கம், நரகம் உள்ளதா, நாம் காணும் உலகியல் இன்பங்கள் உண்மையா, பொய்யா – இப்படி எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேளுங்கள்.
சரியான, அருமையான பதில் இந்த நூலில் கிடைக்கும்.
சுவாமி ராமதீர்த்தர் இந்த நூலைப் பற்றிக் கூறுகையில், “சூரியனுக்குக் கீழ் எழுதப்பட்ட நூல்களிலெல்லாம் அற்புதமான நூல் இது; இதைப் படிப்பவர் கடவுள் அநுபூதியை உணராமல் இப்பூவுலகில் இருக்க முடியாது” என்று புகழ்ந்து கூறுகிறார்.
ஶ்ரீ ராமர் கேட்ட கேள்விகளுக்கு வசிஷ்ட மாமுனி கூறும் பதில்கள் இதில் உள்ளன.
இதை இயற்றியவர் வால்மீகி முனிவர்.
ஒரு லட்சம் சுலோகங்கள் ஆதியில் கொண்டிருந்த சம்ஸ்கிருத நூல் இது. இது பின்னர் 27687 முக்கிய ஸ்லோகங்களைக் கொண்டு யோகவாசிஷ்ட சாரமாகத் தொகுக்கப்பட்டது. இதையும் படிக்க முடியாதவர்களுக்காக 2500 ஸ்லோகங்களில் இதன் சுருக்கம் இப்போது கிடைக்கப் பெறுகிறது.
உலக வாழ்க்கை எப்படிப்பட்டது?
பெரிய ஆமை ஒன்று கடற்கரை ஓரம் இருந்த பாறைகள் ஒன்றில் ஒரு துளையில் புகுந்து கொண்டது. அது தன் தலையையும் கால்களையும் வெளியே நீட்டும் போது பெரிய அலைகள் அதன் மீது படும். அப்போது சடக்கென்று அது தன் தலையையும் கால்களையும் உள்ளே இழுத்துக் கொள்கிறது. அந்த அலை கடலுக்குள் உள்வாங்கிய பிறகு மீண்டும் ஆமை தன் தலையை வெளியே காண்பிக்கிறது.
இப்போது இன்னொரு பெரிய அலை! மீண்டும் தலை துளைக்குள்…!
இது தான் மனித வாழ்க்கை!
வாழ்க்கையில் நுழையும் போது பிரபஞ்ச சாகரம் என்னும் அகண்ட சமுத்திரத்திலிருந்து பிறப்பு, இறப்பு என்னும் சுழலில் அவன் சிக்குகிறான்.
ஐம்புலன்களை வைத்துக் கொண்டு அவன் படும் பாடு, சொல்லி முடியாது! ஆமை போல அவன் உலகிலிருந்து வெளியேறும் போது அவனது ஐம்புலன்களும் விடுபடுகிறது. அலைகள் தாம் சந்தோஷம் (அல்லது இன்பம்) மற்றும் துக்கம் (அல்லது துன்பம்).
இன்பம் மறையும் போது துன்பம் தோன்றுகிறது!
இதிலிருந்து விடுபட்டு மெய்யான மெய்யை – உண்மையான உண்மையைக் காண வழி உண்டா?
உண்டு என்கிறது – மர்மங்கள் அனைத்தையும் விளக்கும் யோக வாசிஷ்டம்.
நான்கு வழிகள்!
இந்த உலக இன்ப துன்பங்களைக் கடந்து மெய் ஞானத்தை அடைய நான்கு வழிகள் உண்டு.
சந்தோஷம், சாது சங்கம், விசாரம், சமஸ்தம், அவ்வளவு தான்!
சந்தோஷம்
விஷயங்களில் ஆசையை அகற்றி எப்போதும் சந்தோஷமாக இருக்கும் ஒருவனிடம் மாபெரும் சக்திகள் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும்.
சாது சங்கம் (நல்லோர் இணக்கம்)
மனதில் இருக்கும் இருளைப் போற்றி அகண்டாகாரமான ஒளியைக் காண்பிப்பர் நல்லோர். இதற்கு ஈடான எதையும் மதச் சடங்குகளாலும், விரதங்களாலும் கூடப் பெற முடியாது.
விசாரம்
நான் யார்? ஏன் இந்த பிறப்பு என்ற தோஷம் என்னை வந்து சேர்ந்தது? தர்க்கரீதியாக இப்படி விசாரம் செய்வது அடுத்த வழி!
சமஸ்தம்
அனைத்து உயிர்களையும் நேசித்து நட்புடன் இருப்பது ஆத்மாவைச் சுத்தப்படுத்துவதற்கான வழியாகும். இதுவே சமஸ்தம்!
இதைத் தான் வசிஷ்டர் ராமர் மூலமாக உலகிற்குத் தரும் செய்தியாகச் சொல்கிறார்.
இந்த நான்கு வழிகளையும் மேற்கொண்டால் உலக மர்மங்கள் தானே விடுபடும்! உயர் ஜோதியுடன் ஒன்றாகலாம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
I visited Royal Botanic Garden in Sydney, Australia on 28-2-2025. I found very interesting details about Ferns. They showed that ferns can be used as food. But like mushrooms, there are some poisonous ones as well.
What are Ferns?
Ferns are plants that do not have flowers. Ferns generally reproduce by producing spores. Similar to flowering plants, ferns have roots, stems and leaves. However, unlike flowering plants, ferns do not have flowers or seeds; instead, they usually reproduce sexually by tiny spores or sometimes can reproduce vegetatively, as exemplified by the walking fern.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
2
3
4
5
6
7
8
9
10
11
Across
1.kedarnath is shiva’s shrine; xxxx is Vishnu’s shrine in the Himalaya.
6.water falls in Tirupati- Tirumalai Hills
7.Hindu’s Mysterious Land of Abundance; Yuthisthira got gold from this place for Rajasuya Yaga.
10.Three fold Knoledge or Three Vedas.Trayi
12. oil extracted from the seeds of the “xxxx tree, scientifically known as “Balanites aegyptiaca,” which is a plant commonly used in Ayurvedic medicine, often called the “Desert Date” tree; it is traditionally used to treat various ailments like skin conditions, wounds, and digestive issues due to its potential healing properties. Rishis use the oil of this tree.
Down
1.Duryodana’s wife name.
2. this letter or syllable means Kubera
8.Star is derived from this Sanskrit word
3. One of the nine Varshas or divisions of the known world pr Jambudvipa , comprehending the highest and most centrical part of the old continent.
4. the word means Brahma or goat
9.order in Indian languages
5. “zealous, eager, friend”, or “plotter, adherent, assailant, injurer, enemy”. It can also refer to cotton wool, absorbent cotton, or wadding.
11. refers to the “top” or “peak” of a mountain (giri) according to the second chapter (dharaṇyādi-varga) of the 13th-century Raj Nighantu or Rājanighaṇṭu (an Ayurvedic encyclopedia); also boys’ name. “fire” or “a learned man”
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(புரந்தரதாசர் பற்றிய 6–வது கட்டுரை இது)
சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர், சாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் ஆண்டவனைப் பாடிப் பரவிய அழகினை நாம் அறிவோம். புரந்தரதாசர் பிறப்பில் செட்டி; பணத்தில் கெட்டி; பட்டினத்தார் போல திடீர் ஞானோதயம் ஏற்பட்டு பணத்தைத் துறந்து இறைவனை நாடினார் ; பாடினார்.
ராமனை யமன் என்று வருணித்தார்; அவர் யார் யாருக்கு எமன் என்பதையும் விளக்கினார்.அதே போல இன்னும் ஒரு கீர்த்தனையை, செல்வி லெட்சுமியைப் பார்த்து, அழகிய பெண்ணே நீ யாரைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாய் என்ற தொனியில் கேள்வி கேட்டு ஒரு பட்டியலே தருகிறார் ; கட்டாயம் லெட்சுமி திணறிப் போயிருப்பார்.
பாடலைப் படிக்கும் போதே சுவையாக இருக்கிறது; இதைப் பாடிக்கேட்டால் அமிர்தமாக இனிக்கும்; பக்திப் பரவசத்தோடு பாடினாலோ பெருமாளும் தாயாரும் மகிழ்ந்துபோய் நம்மிடம் வந்துவிடுவார்கள்.
பெருமாளின் பெருமையைச் சொல்வதிலும் எத்தனை வகை, எத்தனை முறை இருக்கிறது என்பதைப் புரந்தரதாசர் காட்டுகிறார்.
இதோ அவரது கீர்த்தனை :
க்ஷீராப்தி கன்னிகே ஸ்ரீ மஹாலக்ஷ்மி
யாரிகே வதுவாகுவே – நீனு யாரிகே வதுவாகுவே
பாற்கடலில் உதித்த கன்னியே ஸ்ரீ மஹாலக்ஷ்மி
யாரை திருமணம் செய்துகொள்வாய் – நீயே..
சாரதி பந்தன ராமசந்திர மூர்த்திகோ
பரமாத்மா அனந்த பத்மனாபனிகோ
சரசிஜனாப ஸ்ரீ ஜனார்த்தன மூர்த்திகோ
உபய காவேரி ரங்க பட்டணத அரசகோ (யாரிகே)
(இலங்கைக்கு) பாலம் கட்டிய ஸ்ரீ ராமசந்திரனையா
பரமாத்மாவான அனந்த பத்மனாபனையா
நாபிக்கமலத்தில் தாமரை மலருடைய ஜனார்த்தனனையா
காவேரிக்கரையில் இருக்கும் ஸ்ரீரங்கத்தின் அரசனையா (யாரிகே)
செலுவ மூர்த்தி பேலூர சென்னிகராயனிகோ
கெலதி ஹேலு ஸ்ரீ உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண ராயனிகோ
இளெயளு பாண்டுரங்க விட்டல ராயனிகோ
நலினாக்ஷி ஹேளம்மா பதரி நாராயணனிகோ (யாரிகே)
அழகே வடிவான பேலூர் சென்னிகிருஷ்ணனையா
உன் நண்பன் கேட்கிறேன், உடுப்பி கிருஷ்ணனையா
அல்லது பாண்டுரங்க விட்டலனையா
தாமரை போன்ற கண்கள் உடையவளே, பத்ரி நாராயணனைய (யாரிகே)
மலயஜகந்தி பிந்து மாதவ ராயரிகோ
சுலப தேவரு புருஷோத்தமனிகோ
பலதாயக நித்ய மங்கள தாயககோ
செலுவ நாசதே ஹேளு ஸ்ரீ வேங்கடேசனிகோ (யாரிகே)
மலையிலிருந்து வரும் நறுமணத்தை கொண்ட பிந்து மாதவனையா
யாவரும் சுலபமாக தொடர்பு கொள்ளக்கூடிய புருஷோத்தமனையா
வரங்களை அருளும் நித்ய மங்களமானவனையா
வெட்கப்படாமல் சொல், ஸ்ரீ வேங்கடேசனையா (யாரிகே)
வாசவார்சித கஞ்சி வரதராஜனிகோ
ஆ ஸ்ரீமுஷ்ணதல்லி ஆதி வராகனிகோ
சேஷசாயியாத ஸ்ரீமன் நாராயணனிகோ
சாசிர நாமதொடய அழகிரீசகோ (யாரிகே)
இந்திரன் வழிபட்ட காஞ்சி வரதராஜனையா
அந்த ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் ஆதி வராகனையா
நாகத்தின் மேல் படுத்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனையா
ஆயிரம் பெயர்களை உடைய அழகிய மலைகளில் வசிப்பவனையா? (யாரிகே)
சரணாகத ரக்ஷக சாரங்கபாணிகோ
வரகள நீடுவ ஸ்ரீநிவாசனிகோ
குரு குலாந்தகனாத ராஜகோபால மூர்த்திகோ
ஸ்திரவாகி புரந்தர விட்டல ராயனிகோ (யாரிகே)
சரணடைந்தவர்களை காப்பாற்றும் சாரங்கபாணியையா
வரங்களைக் கொடுக்கும் ஸ்ரீனிவாசனையா
’குரு’ வம்சத்தை அழித்த ராஜகோபாலனையா
நிரந்தரமாக புரந்தர விட்டலனையா (யாரிகே)
பாடலும் மொழிபெயர்ப்பும் தாசர் சாங்ஸ் .காம் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி உரித்தாகுக.