போஜன குதூகலம் – 2 (Post No.14,164)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,164

Date uploaded in Sydney, Australia – –2 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஹெல்த்கேர் ஜனவரி 2025 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 போஜன குதூகலம் – 2

ச. நாகராஜன் 

நூலில் உள்ள சில அருமையான செய்திகளைக் கீழே காணலாம். முழு விவரத்திற்கும் நூலைப் படிப்பதே சாலச் சிறந்தது.

நெல்

பழைய நெல் எளிதில் செரிக்கும். உடலுக்கு இதமானது.

யவம் (பார்லி)

கருஞ்சிவப்பு கலந்த யவம் இனிப்புள்ளது. குளிர்ச்சியுள்ளது. இது சிறுநீர் சம்பந்தமான நோய்களைப் போக்க வல்லது.

சோளம்

நல்ல வலிமை தரும். வாதம் முதலிய மூன்று குறைகளையும் போக்கும்.

தோலுள்ள தானியம்

பயறு, துவரை, மொச்சை ஆகியவை தோலுள்ள தானியங்கள். இவை மலத்தைக் கட்டும்.  சுவையுள்ளது. காம உணர்ச்சியைத் தூண்டும் தன்மையுள்ளவை.

உளுந்து

உளுந்து பசையுள்ளது. மலத்தை அதிகரிக்கச் செய்வது. வரட்சி தரும்

வீரியத்தை அளிக்கும். உடலில் பளபளப்பையும் நல்ல நிறத்தையும் தரும்.

கடலை

இனிப்புள்ளது. சிறுநீர் பற்றிய நோயையும் வாயுவையும் பித்தத்தையும் வெல்லும்.

புல்வகை தானியங்கள்

தினை, சாமை, வரகு, நிவாரம் முதலிய புல் வகையைச் சேர்ந்த தானியங்கள் குளிர்ச்சி பொருந்தியவை. இலேசானவை. இவற்றால் வாயு அதிகரிக்கும். ஆனால் கபமும் பித்தமும் போகும்.

பத்து வகை காய்கறிகள்

மூலம் (வேர்), பத்ரம் (இலை), கரீரம் (மூளை), அக்ரம் (தளிர்), பலம் (பழம்), காண்டம் (தண்டு),அதிரூடம் (கொழுப்பு), த்வக் (தோல்), புஷ்பம் (பூ), கவசம் (பட்டை) என காய்கறிகள் பத்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

பால்

முற்பகலில் பால் குடித்தால் உற்சாகமும் செரிமானமும் அதிகரிக்கும். நண்பகலில் குடித்தால் வலிமை வளரும். களைப்பு நீங்கும். இரவில் குடிக்கப்பட்டால் பல நோய்களைப் போக்கும். ஆகவே இது எப்பொழுதுமே உட்கொள்ளத் தகுந்ததாகும்.

நதிகளில் ஓடி வரும் நீரின் பயன்கள்

இந்தப் பகுதியில் கங்கை, யமுனை, நர்மதை, சந்திரபாகா, சோணபத்ரா, காவேரி உள்ளிட்ட பல நதிகளின் நீரின் தன்மை தரப்படுகிறது. ஒவ்வொரு நதியின் நீரும் தரும் நன்மைகளும் விளக்கப்பட்டுள்ளது.

நீரைப் பருகுதல்

இரவில் உட்கொள்ளப்படும் வெந்நீர் வாயுவைப் போக்கும். கபத்தை விரைவில் அகற்றும் சுவை இன்மையை நீக்கும். உணவைச் செரிக்கச் செய்யும். செரிமானத்தை அதிகமாக்கும்.

செரிமானத்தை அதிகரித்துக்கொள்ள அடிக்கடி குறைவாக நீர் குடித்தல் வேண்டும். 

உணவுக் கலங்கள்

தங்கப் பாத்திரம் தோஷங்களைப் போக்கிக் கண்ணுக்கு நன்மை தரும்.

வெள்ளி கண்ணுக்கு நன்மை தரும். பித்தம், கபம், வாதம் ஆகியவற்றைப் போக்கும். வெண்கலம் அறிவையும் சுவையையும் தரும். இரத்த நோயையும், பித்தத்தையும் தெளிய வைக்கும்.

பித்தளை வாதத்தையும் உஷ்ணத்தையும் தரும். வரட்சி தரும். கிருமிகளையும் கபத்தையும் போக்கும்

இரும்பு சங்குப் பாத்திரங்களில் உண்டால் செரிக்கும். வீக்கம், பாண்டு ஆகியவற்றையும் போக்கும். வலிமை தரும். காமாலையை அகற்றும்.

வாழை இலையில் உணவு உட்கொண்டால் மனதுக்கு திருப்தி ஏற்படும். சுவை மிகும். காமம் அதிகரிக்கும். வலிமையும் செரிமானமும் தோன்றும். நஞ்சு, களைப்பு வாயு, இரத்த நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு உகந்தது. பாண்டு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரங்களும் அவற்றை உண்ணக் கூடாதென்பதும்.

அசுவினி முதல் உள்ள நட்சத்திரங்களின் வரிசையில் கீழ்க்கண்டவற்றின் தொடர்பைக் கண்டு கொள்க. (அசுவினிக்கு விஷத்ரு, பரணிக்கு நெல்லி என்று வரிசைப்படுத்திக் கொள்க)

விஷத்ரு,  நெல்லி, அத்தி, நாவல், கருங்காலி, பாதிரி, மூங்கில், அரசு, நாகமென்ற பெருமுத்தம், ஆல், பலாசம் எனப்படும் முள்ளுமுருங்கை, பிலட்சம் என்ற கல்லொளி மரம், அம்பஷ்டம், வில்வம், அர்ஜுனம் என்ற மருத மரம், நருமுருங்கை, சுரபுன்னை,எலி, ஆல், தேக்கு, வஞ்சுளம் என்கிற தினிசி மரம், பலா, எருக்கு, வன்னி மரம், கடம்பம், மா, வேம்பு, இலுப்பை ஆகிய மரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரியனவாகும்.

தன் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மரங்களை ஒருவன் கண் மூடித்தனமாக மருந்து முதலியவற்றுக்காக உபயோகப்படுத்தினால் அவனது ஆயுள், செல்வம்,  மனைவி மக்கள் அனைத்தும் அழியும். இவற்றை வளர்த்தல் முதலியன செய்தால் வளரும்., (இங்கு முதலியவற்றுக்காக என்பதற்கு வெட்டுதல், உண்ணுதல் என்று பொருள் கொள்க)

சாப்பிட்ட பின் எப்படி இருக்க வேண்டும்?

சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே இருந்தால் தொந்தி அதிகரிக்கும். படுத்தால் உடல் பருக்கும். நடப்பவனுக்கு ஆயுள் வளரும். ஓடுபவனைக் கண்டு மரணம் ஓடும்.

எப்படிப் படுக்க வேண்டும்?

மல்லாந்து படுப்பவன் எட்டு பங்கு மூச்சையும், வலது புறம் ஒருக்களித்துப் படுப்பவன் அதன் இரண்டு பாகங்களை (பதினாறு மடங்கு) மூச்சை இழக்கிறான். ஆகையால் இரட்டைப் பங்கு மூச்சை செலவாக்கும் வகையில் சுகமாகப் படுக்க வேண்டும். எல்லாப் பிராணிகளுக்கும் தொப்புளுக்கு மேல் இடப்புறத்தில் செரிமானத்திற்குரிய உஷ்ணமுள்ளது. ஆகையால் செரிமானத்தை அதிகரிக்க இடது பக்கத்தில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.

தெய்வ பூஜை செய்வது எப்படி?

தெய்வங்களைப் பூஜித்தல், சாப்பாடு, தூக்கம் ஆகியவற்றை வெளிப்படையாகச் செய்தல் கூடாது. இருட்டிலும், சந்தியா காலங்களிலும் மேல் கூரையற்ற இடங்களிலும் செய்யலாகாது.

சாப்பிடும் முன்

சாப்பிடும் முன் இஞ்சியையும் உப்பையும் உட்கொள்ளுவது மிகவும் நன்மை தரும். உப்பு கடலுப்பாக இருத்தல் வேண்டும்.

உண்ணும் போது நினைக்க வேண்டிய தெய்வங்கள்

உணவு உட்கொள்ளும் போது பிரமன் முதலியோரை நினைக்க வேண்டும்.

உணவு பிரம்மா, அதன் சுவை திருமால் உண்பவன் சிவன் என எண்ணி உண்பவனுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படாது.  திருஷ்டியினால் உண்டாகும் துன்பங்களைத் தீர்க்கும் படி கோரி நான் நினைக்கிறேன் என்று அனுமனையும் நினைக்க வேண்டும்.

இறைச்சி

சைவ உணவு மட்டுமே இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

அசைவ உணவு வகைகள் பற்றிய ஏராளமான விஷயங்களை  இந்த நூலில் காணலாம். மீனிலிருந்து ஆரம்பித்து பன்றி இறைச்சி முடிய அனைத்து இறைச்சி வகைகளையும் பற்றி நூல் அலசி ஆராய்கிறது.

அசைவப் பிரியர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.

முயல் இறைச்சி, மீன் இறைச்சி, லாவக இறைச்சி என்று நூலின் பின்னால் உள்ள உணவுப் பொருள்களின் அகர வரிசைப் பட்டியலில் தேடிப் பார்த்தால் குறிப்பிட்ட பக்கத்தில் அது பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.

அருமையான ஆராய்ச்சி நூல்

இது உணவு வகைகளைப் பற்றிய ஒரு கலைக் களஞ்சியம். கையேடு.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான விஷயங்களை நவீன ஆய்வு உபகரணங்களைக் கொண்டு ஆய்வு செய்து அதில் கிடைக்கும் முடிவுகளை நூல் குறிப்பிடும் பயன்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இதற்காக ஆகும் பொருள் செலவை அரசே ஏற்க முன் வர வேண்டும். இதில் ஈடுபட ஆர்வமுள்ள அறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும். சமூக ஊடகங்கள் இதற்குப் பெரும் முக்கியத்துவம் தர வேண்டும்.

ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்க அறிவுக் களஞ்சியமாகத் திகழும் இந்த நூலையும் இது போன்ற நூல்களையும் தமிழ் உலகம் மனமார வரவேற்க வேண்டும்.

சரஸ்வதி மகால் நூல்நிலையம் போன்ற நிறுவனங்களை ஆதரித்துப் போற்றி அதில் பணியாற்றும் அறிஞர்களை வாழ்த்தி அவர்களுக்கு உரிய விதத்தில் இந்தியத் திருநாட்டின் மக்கள் ஆதரவு தர வேண்டும்.

குதூகலமாக வாழ்வோம் – போஜன குதூகலத்தைப் படித்து!

***

நன்றி : சரஸ்வதி மகால் நூல் நிலையம்

,போஜன குதூகலம்

—subham—-

Tags- ,போஜன குதூகலம், part 2

GNANAMAYAM 2-2-2025 BROADCAST PROGRAMME


GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

பிப்ரவரி இரண்டாம் தேதி

2-2-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

Prayer by Mrs Jayanthi Sundar Team

***

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan speaks on Tamil Saint Abhirami Bhattar

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  Tirukkadavur Temple .

***

Singapore Dr Lakshmi continues her talk on Vaihnavite Saints Alvars

***

Kalyanji  anchoring from India.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

Prayer by Mrs Jayanthi Sundar Team

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – திருக்கடவூர் அம்மன் கோவில்.

***

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு — அபிராமி பட்டர்

***

சிங்கப்பூர் டாக்டர் லெட்சுமி ஆழ்வார்கள் பற்றி சிறப்பு சொற்பொழிவு

****

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

 tags- GNANAMAYAM ,2-2-2025 BROADCAST, PROGRAMME

My Trip to Nelson Bay to Watch Dolphins (Post.14,163)


Written by London Swaminathan

Post No. 14,163

Date uploaded in Sydney, Australia – 1 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Australia has ten thousand beaches and wherever you turn in the Eastern Coast you will see a board leading to a beach. But Nelson Bay has some unique features of watching Dolphins and bathing in the mid sea from inside the ship.

When you buy the ticket for a ferry ride, you spend nearly two hours in the ferry. While you are travelling in the ferry the live commentary will tell you to look at the direction the dolphins appear.  We saw four dolphins during our trip on 31st January 2025. All the passengers were waiting in the three decks to take pictures of the dolphins. But I was not lucky to see the jumping dolphins; I saw only the swimming dolphins.

After going to some distance, the commentator announces that all the passengers who wish to take a dip in the sea, come to the deck. The ship has got a big net attached to the ship. When its lowered it is filled with sea water. One by one jumps into the net where the sea water is over knee deep. They can bathe and swim and remain there for half hour or so. Children are accompanied by elders. The passengers come with swimsuits, extra towels etc for this enjoyable mid sea bathing. It is the Pacific Ocean and the bay is called Nelson Bay.

We hired a house just ten minutes away and stayed there for two days. Every day we went to the nearby Shoal Bay and spent hours on the shore. Children swam, picked up sea -shells and built sandcastles. All the beaches have several restaurants to cater to different tastes. A ticket for a ferry ride will cost you 40 Australian Dollars.

London Swaminathan in Nelson Bay, Australia 

Where is Nelson Bay?

By car, Nelson Bay is conveniently located just two hours and 45 minutes north of Sydney, making it an accessible getaway for travellers. Alternatively, visitors can fly into Newcastle Airport, which is approximately a 30-minute drive from Nelson Bay. Upon arrival, various transportation options are available, including car rentals, limousines, and door-to-door shuttle buses that facilitate easy travel to Port Stephens and its surrounding areas. Bus services also connect Nelson Bay with nearby towns such as Shoal Bay.

The nearest city is Newcastle.

Whale Watching

Dolphin watching is possible all year around. But for watching the whales one must go in specific months.

More than 100 dolphins live in the pristine blue waters of the Port Stephens – Great Lakes Marine Park. Dolphin watching cruises depart all year from the busy marina in Nelson Bay with Imagine Cruises and Moonshadow-TQC Cruises. For a truly unique experience, during the warmer months, you can swim among wild dolphins with Dolphin Swim Australia.

Whale watching boat tours operate between May and November, when thousands of humpback and southern right whales migrate along the NSW North Coast. Just east of Nelson Bay, go snorkeling at Fly Point – Halifax Aquatic Reserve, and discover an underwater world teeming with sponge gardens, soft corals, sea turtles and a colorful array of fish.

—subham—

Tags- My Trip , Nelson Bay , Watch Dolphins, whale watching, ferry trip, mid s

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 18 (Post.14,162)

Written by London Swaminathan

Post No. 14,162

Date uploaded in Sydney, Australia – 1 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 18

டால்பின் பார்க்க வாருங்கள் ;

அது போல ஆனந்தமாக குதியுங்கள்

நெல்சன் வளைகுடாவுக்கு எனது பயணம்

Nelson Bay, Port Stephens –

A vibrant coastal gem in the Port Stephens area, Nelson Bay serves as a launchpad for nature adventures. Port Stephens is home to over 150 bottlenose dolphins that reside in the bay year-round. During the migration season, from May to November, humpback whales make their way along Australia’s east coast, providing spectacular opportunities for sightings.

ஆஸ்திரேலியாவில் பத்தாயிரம் கடற்கரைகள் இருப்பதை முன்னம் ஒரு கட்டுரையில் பார்த்தோம் .கிழக்குக் கடற்கரையை ஒட்டி வசிப்போருக்குத் திரும்பிய இடமெல்லாம் கடற்கரைதான். பசிபிக் மகா சமுத்திரம் அலை வீசும் கிழக்கு கடற்கரையை ஒட்டியே பெரும்பாலான மக்கள் வசிக்கிறார்கள். ஆகையால் இப்பகுதியிலுள்ள கடற்கரைகளை நன்றாக வளர்ச்சி அடைய வைத்துள்ளார்கள்.

ஜனவரி 2025 கடைசி இரண்டு நாட்களில் நாங்கள் சிட்னி நகரிலிருந்து நெல்சன் வளைகுடாவுக்கு Nelson Bay சென்றோம் அங்கு கடலில் சென்று டால்பின்களைப் பார்க்க வசதிகள் உண்டு; இது நிறைய சுற்றுலாப்   பய ணிகளை ஈர்க்கிறது. அத்தோடு கூடுதல் கட்டணம் உடைய பெரி FERRY கப்பலில் ஏறினால் நடுக்கடலில் கப்பலில் இருந்தவாறே கடற்குளியல் செய்யவும் வாய்ப்புகள் கொடுக்கிறார்கள்.

நாங்கள் ஆளுக்கு நாற்பது டாலர் கொடுத்து அத்தகைய கப்பலில் ஏறினோம் . கப்பலை ஓட்டுபவர் நேர்முக வருணனை செய்து கொண்டே வருகிறார். டால்பின்கள் வரும்போது உரத்த குரல் பேசி  நம்மை உற்சாகப் படுத்துவார் அது மூன்று அடுக்கு THREE DECKS  உடைய பெரி; அதில் 200 பேர் வரை ஏறலாம். எல்லா அடுக்குகளிலும் வெயில் அடிக்காத கூரை உடைய இடங்களில்    ஆசனங்கள் உள்ளன. வெளியே நிற்க விரும்பினாலும் நிற்க நிறைய இடம் உண்டு. மேல் அடுக்குக்குப் போனால் முழுவதும் திறந்த வெளி; ஆனால் முழுக்க முழுக்க வெயிலும் அடிக்கும்.

நாங்கள் எங்கள் பயணத்தில் 31-1-2025 அன்று நான்கு டால்பின்களைப் பார்த்தோம். முன்னரே கடற்கரையிலுள்ள ரெஸ்டாரண்ட்டில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஏறினோம். இரண்டு மணி நேரத்துக்குள் கப்பலில் திரும்பி வந்தோம்.

THE DOLPHIN WE SAW FROM THE FERRY

போகும் வழியெல்லாம் அலைவீசும் பசிபிக் சமுத்திரத்தையும் நூற்றுக்கணக்கான கப்பல்களையும் , பெரி FERRY படகுகளையும் பார்த்துக் கொண்டே போனோம். பெரி கப்பல் ஓரிடத்தை அடைந்தவுடன் கடலில் குளிக்க விரும்புவோர் திறந்த வெளி டெக்குக்கு வாருங்கள் என்று  அறிவித்தார்கள் ; எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இளவெட்டுகளும் பேரக் குழந்தைகளும் கடலில் குளிக்க ஆயத்த மாயினர். கப்பலின் பின்புறத்தில் பெரிய வலையைக் கட்டியுள்ளனர். அது மூன்று அடி வேலி உடையது . அதில் குதித்தவுடன் முழங்கால் அளவு கடல் நீர் இருக்கும் ; அதில் ஒரே நேரத்தில் பத்து அல்லது பதினைந்து பேர் இறங்கிக் கொட்டமடிப்பார்கள் . நடுக்கடலில் கப்பலிலே கடல் நீரில் மிதக்க, நீந்த, குளிக்க அற்புதமான ஏற்பாடு! பாதுகாப்புக்காக இரண்டு ஊழியர்கள் அருகிலேயே நிற்பார்கள்[ எல்லோரும் குளித்து முடிந்தவுடன் மேல் டெக்குக்குப் போய் வெய்யிலில் நின்றால் கப்பல் திரும்பும் முன்னர்  நீச்சல் உடைகள் காய்ந்து விடும்.

ஆக ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்!!!

1.பெரி FERRY கப்பல் பயணம் – பசிபிக் மஹா சமுத்திர தரிசனம்

2.டால்பின் என்னும் கடல் வாழ் மிருகங்களின் காட்சி

3.நடுக்கடலில் கப்பலி ல் உள்ள வலைக்குள் குளிக்கும் அரிய வாய்ப்பு

****

நெல்சன் பே என்னும் இடம் எங்கே உள்ளது ?

சிட்னியிலிருந்து புறப்பட்டு 220 கிலோமீட்டர் பயணம் செய்ய இரண்டரை மணி ஆகும்; வழியில் காப்பிக்கு நிறுத்தினால் அரை மணி நேரத்தைக் கூட்டிக் கொள்க . நியூகாஸில் என்னும் நக ரினைக் கடந்த ஒரு மணி நேரத்தில் Nelson Bay நெல்சன் வளைகுடாவில் இருப்போம். நாங்கள் போர்ட் ஸ்டிவன் என்னும் ஊரில் தங்கினோம். பத்து நிமிடத்தில் கப்பல் துறையை அடைந்தோம். போர்ட் ஸ்டிவன்ஸ் ஊரை ஒட்டி நிறைய கடற்கரைகள் உள;  மணிக்கணக்கில் கடல் அலையில் காலை நினைத்தோம் அலைந்தோம்; பேரக் குழந்தைகளும் இளம் சிட்டுகளும் நீச்சல், மணல் வீடு கட்டல், சங்கு கிளிஞல் சேகரித்தல் முதலியவற்றில் இறங்கினர். எதிர்ப்புறமுள்ள காப்பிக் கடைகளில் TAKE AWAY டேக் அவே வாங்கி வாடகை வீட்டில் சாப்பிட்டோம். 

நெல்சன் வளைகுடா வட்டாரத்தில் bottlenose dolphins 150   பாட்டில்னோஸ் டால்பின்கள் வசிக்கின்றன. வருடம் முழுவதும் பார்க்கலாம்.

திமிங்கிலங்களைப் , humpback whales பார்க்க வேண்டுமானால்  மே  மாதம் முதல் நவம்பர் மாதம் வரை  உள்ள சீசனில் போக வேண்டும் அப்போது அவை இடம் விட்டு இடம் போகும் குடியேற்ற காலம் ஆகும்.

LONDON SWAMINATHAN IN NELSON BAY, AUSTRALIA

கடற் குளியல்,   பீச்சில் உலாவுதல், டால்பின்/ திமிங்கில காட்சிகளை விரும்புவோர் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்  நெல்சன் பே.

பையில் கனம் (பணம்)  இருந்தால் பயணம் செய்க.

—subham—

Tags- டால்பின் ,நெல்சன் வளைகுடா, எனது பயணம்,

ஆஸ்திரேலியா, அதிசயம் , பாருங்கள்! Part 18

போஜன குதூகலம்! – 1 (Post No.14,161)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,161

Date uploaded in Sydney, Australia – –1 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஹெல்த்கேர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை 

அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்

போஜன குதூகலம்! – 1 

ச .நாகராஜன் 

போஜன குதூகலம்

நீண்ட காலம் ஆரோக்கிய வாழ்வுடன் வாழ உணவு மற்றும் அதை உண்ணும் முறை பற்றியும் கூடவே வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் முறைகள் பற்றியும் அறிய வேண்டியது அவசியம்.

இதற்கு ஆதாரமாக உள்ள நுட்பமான விஷயங்களை விளக்கும் ஒரு அபூர்வமான நூல் போஜன குதூகலம் என்னும் நூல்.

இதை இயற்றியவர் இரகுநாதஸூரி என்னும் அறிஞர் ஆவார். வடமொழியில் அவர் இயற்றிய நூலின் ஒரு பகுதியான திரவியகுண தகனம் என்னும் பகுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு போஜன குதூகலம் என்ற பெயரில் சரஸ்வதி மஹால் வெளியீடாக வந்துள்ளது.

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர்.

அறச்செயலுக்கு உற்ற தலையாய கருவி உடலே ஆகும் என்றார் கவிஞர் காளிதாஸன்.

உணவுப் பொருள்களின் தன்மைகள், உணவுப் பண்டங்களைச் சமைக்கும் முறை, அவற்றைத் தூய்மைப் படுத்தும் முறை ஆகியவை மிகத் தெளிவாக இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இரகுநாதஸூரி

இரகுநாதஸூரி என்பவர் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் ஆசானாக விளங்கிய ஸ்வாமி ராமதாஸருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். இவர் கிருஷ்ணா நதியின் கிளை நதிகளில் ஒன்றான மான் நதிக் கரையில் ஸ்வாமி ராமதாஸரால் கட்டப்பட்ட ரகுபதி கோவிலின் பொறுப்பாளராகப் பல ஆண்டுகள் இருந்து வந்தார். கி.பி. 1678-ல் ஏகோஜி மன்னரால் தஞ்சாவூரில் மராட்டிய அரசு நிறுவப் பட்ட போது அவர் தஞ்சாவூருக்கு வந்து விட்டார்.

நரகவர்னணம் என்ற மராட்டிய நூலில் மன்னர் ஏகோஜியின் மனைவியான ராணி தீபாம்பிகை என்பவர் தனக்கு உதவி அனைத்தும் செய்து வந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

இவரது தந்தையார் பெயர் ஹரிஹர பட்டர். இவரது ஆசிரியர் அனந்த தேவர். இதை அவரது பிரயோக ரத்தின பூஷா என்ற நூல் மூலம் அறிய முடிகிறது.

இவர் மராத்திய்ல் கார்ஹாடே இனத்தவர் என்றும் இவரது குடும்பத்தின் பட்டப் பெயர் நவஹஸ்தா என்றும் அறிய முடிகிறது.

நூல் தரும் விவரங்கள்

இந்த நூலில்

1) தானியங்கள் 2) தோலுள்ள தானியங்கள் 3) புல் வகை தானியங்கள் 4) தானியங்களின் பொதுத் தன்மைகள் 5) வெந்த உணவு 6) காய்கறிகள் 7) வற்றல் 8) ஊறுகாய் முதலியன 9) மசாலைப் பொருள்கள் 11) நெய் – செயற்கை 12) சர்க்கரை 13) பானகம் 14) கஞ்சி 15) பால் 16) தயிர், மோர் 17) வெண்ணெய் 18) நெய் 19) எண்ணெய் 20) கரும்பு 21) கரும்புச் சாற்றின் மாற்றங்கள் 22) தேன் 23) மது 24) மாமிசம் 25) நீர் 26) நஞ்சுள்ள உணவின் அறிகுறிகள் 27) விரோதமுள்ள பொருள்கள் 28) உணவு மாற்றம் 29) பத்தியத்தையும் அபத்தியத்தையும் மாற்றல் 30) இயல்பாகவே தன்மை தருபவை 31) இயல்பாகவே தீமை தருபவை 32) செயற்கையால் தீயவை 33) சாப்பிடும் வேளை 34) உணவுக் கலங்கள் 35) இலைகள் 36) உண்ணும்போது நினைக்கப்பட வேண்டிய தெய்வங்கள் 37) உண்ணும் முறை 38) உணவுக்குப் பின் 39) வெற்றிலை போடும் முறை 40) அரசர் வெற்றிலை போடும் முறை 41) உண்டபின் மேற்பூச்சு 42) உடை 43) முதற்பகுதியின் முடிவு

ஆகிய அத்தியாயங்கள் உள்ளன.

மேலே கூறப்பட்டுள்ள அத்தியாயத் தலைப்புகள் மூலமாகவே நாம் அறிய வேண்டிய அபூர்வமான விஷயங்களைப் பற்றி அறிகிறோம்.

பிள்ளையார், குரு, தன்வந்தரி ஆகியோரை வணங்கி விட்டு நூலாசிரியர் நூலை ஆரம்பிக்கிறார்.

அவர் தரும் முதல் ஐந்து அத்தியாயங்களில் கூரிய முனையுள்ள தானியங்கள் (நெல்), கோதுமை, பார்லி, சோளம், தோலுள்ள தானியம், உளுந்து, பயறு, கடலை, துவரை, கொள்ளு, மொச்சை, காட்டுப் பயறு, எளி, நாட்டாளி விதை, கடுகு, புல்வகை தானியங்கள், சாமை, வரகு, ஆகியவை பற்றிய நுட்பமான விஷயங்களை விளக்கமாகத் தருகிறார்.

 பொரி, சத்துமாவு, அவல். வெந்த உணவு வகைகள், பால் பாயசம். தேங்காய் பாயசம், பருப்பு. பலகாரங்கள் பற்றிய விளக்கத்துடன் வடை, மோர்க்குழம்பு உள்ளிட்டவற்றைச் செய்யும் முறையும் தரப்படுகிறது.

அடுத்து கறிகாய்கள் என்ற அத்தியாயத்தில் ஆரம்பித்து இறுதி அத்தியாயம் வரை ஏராளமான விஷயங்கள் தரப்படுகின்றன.

700 உணவுப் பொருள்கள்

இறுதியில் அட்டவணையில் சுமார் 700 உணவுப் பொருள்கள் பற்றிய பட்டியலைக் காண்கிறோம். இத்தனை உணவுப் பொருள்களை இந்த நூல் விளக்குகிறது என்பது ஆச்சரியப்படும் விஷயம் தானே!

நூலில் கிரியா சாரம், ஜனார்தன மஹோதயம், தன்வந்தரீய நிகண்டு, பாரிஜாதம், பாவப்ரகாசம், இராஜ நிகண்டு, விஷ்ணு புராணம், ஹ்ருதய தீபம் ஆகிய நூல்களிலிருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன.

கேய தேவர், போஜன், வாக்படர், வ்ருத்த ஸூஸ்ருதர், வியாசர்,

ஸூச்ருதர், ஸுஷேணர், ஜெர்ஜெடர் ஆகிய அறிஞர்கள் மற்றும் மகான்கள் கூறியவையும் தரப்பட்டுள்ளன.

நூலை மொழிபெயர்த்தவர்

264 பக்கங்கள் உள்ள இந்த நூலை சரஸ்வதி மஹால் நூலகம் தனது வெளியீடாக 2005-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. விலை ரூ 90/

இதை மொழிபெயர்த்திருப்பவர் வண்டுவராபதி சக்கரவர்த்தி சே.ந. இராகவன் (மன்னார்குடி) என்பவர். 1974-ல் இந்த மொழிபெயர்ப்பை அவர் செய்திருக்கிறார்.

மிக மிக கடினமான ஒரு பணியை மிக அற்புதமாகச் செய்திருக்கும் இவர் அனைவரது பாராட்டுக்கும் உரியவர். வடமொழியில் தரப்பட்டிருக்கும் அத்தனை உணவுப் பொருள்களையும் தமிழ் வழக்கில் உள்ளபடி தருவது ஒரு கடினமான காரியம். இதை அவர் சிறப்புறச் செய்திருப்பதோடு எளிமையான நடையில் தந்திருப்பதும் பாராட்டுக்குரிய விஷயமாகும். படிப்பதற்குக் குதூகலமான நூல் இது!

இதை சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர்-லிருந்து பெறலாம். அல்லது https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM3kZpy.TVA_BOK_0008542/page/n1/mode/2up

என்ற இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நூலில் உள்ள சில அருமையான பகுதிகளை அடுத்துப் பார்ப்போம்.

–    தொடரும்  

 tags–போஜன குதூகலம்!

Hindu Crossword31125 (Post No.14,160)


Written by London Swaminathan

Post No. 14,160

Date uploaded in Sydney, Australia – 31 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

   1   2
3       
        
        
4    5  
        
6    7  
        
        
8       

Across

3.Spring Season in Indian languages

4.Sita Devi’s Birth Place

6.Gadhiji is called by this word

8.Officer or authority in Indian languages

Down

1.Act of Speaking, Uttering and saying; in Film industry used for Dialogue

2.Girl’s name; born in ocean; wave; slo dialect spoken by sagara.

4.Life in Indian languages (go up)

4.Son in law in Sanskrit

5. You might see this word at the end of a mantra or prayer, essentially asking for divine protection over the person being prayed for. 

7.God of Love; Death, dying. ,Killing, slaying, destroying. . Obstruction, opposition, impediment.  Thorn-apple, (Dhutura metal.)  A name of Kama.  Love, passion.  The devil, the evil one.

A  V1 A S2
V3ASANTAA
E  C N G
E  H A A
J4ANAKP5UR
A  N   I
M6AHATM7AK
A  M A A
T    R  
A8DHIKARI

—Subham—

Tags- Hindu Crossword31125

தமிழ் தெரியுமா31125 ?

written by London Swaminathan

Post No. 14,159

Date uploaded in Sydney, Australia – 31 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

31125

 12 
3   
 4 5
6 7Arrow Symbol Clipart | Free Download ... 

ACROSS

1. லவனின் சகோதரன்; ராமனின் புதல்வன்;

3. கேழ்வரகின் சுருக்கப் பெயர்; 

4. இறைவனுக்குப் படைப்பது ,

6. நிலவின் மறுபெயர்; சிறுவர் பாட்டில் வருவது.

DOWN

1. பேட்டை; மீனவர் வாழும் இடங்கள்

2. அவை என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல் ,

5. யுகங்களில் மோசமானது ,

7. Arrow Symbol Clipart | Free Download ... காடுகளில் வசிக்கும் கொடூரமான விலங்கு; ஐயப்பனின் வாஹனம்  ,

******

விடைகள்

 1குச2ன்
கே3ப்பை 
 ப4லிக5
அ6ம்பு7Arrow Symbol Clipart | Free Download ...லி

–subham—

Tags -தமிழ் தெரியுமா 31125

செரிண்டிபிடி கண்டுபிடிப்பு : லஸ்காக்ஸ் குகை! (Post No.14,158)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,158

Date uploaded in Sydney, Australia – –31 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

14-1-25 kalkionline இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை!

உலகின் அதிசய இடங்கள்

செரிண்டிபிடி கண்டுபிடிப்பு : லஸ்காக்ஸ் குகை!

ச. நாகராஜன்

செரிண்டிபிடி (Serendipity)  என்றால் தற்செயல் கண்டுபிடிப்பு என்று பொருள். இப்படி ஏராளமான கண்டுபிடிப்புகளை வரலாறு சுட்டிக் காட்டுகிறது. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு ஒரு புறம் இருக்க சிறுவர்களும் கூட செரிண்டிபிடி கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

எடுத்துக்காட்டுக்கு ஒன்று – Lascaux Cave  லஸ்காக்ஸ் கேவ் என்னும் லஸ்காக்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள கற்கால குகைகளின் தொகுதி பற்றிய ஒரு கண்டுபிடிப்பாகும். அது பற்றிய சுவையான விவரத்தை இங்கு பார்ப்போம்.

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மாண்டிக்னாக் என்ற நகரில், பக்கத்தில் இருந்த காட்டுப் பகுதியில் விளையாடுவதற்காக நான்கு சிறுவர்கள் சென்றனர்.

தேதி: 12, செப்டம்பர் 1940. கூடச் சென்ற அவர்களின் நாய் ஒரு பள்ளத்தில் விழ அங்கு சென்ற அவர்கள் ஒரு சிறிய துவாரத்தை கண்டனர். ஆவல் மீதூற அந்த துவாரத்தைப் பெரிதாக்கினர். மார்சல் ரவிதத் என்ற பையன் முன்னே செல்ல மற்ற மூவரும் அவனைத் தொடர்ந்து பெரிய துவாரம் வழியே உள்ளே இறங்கினர். ஒரு சிறிய விளக்கை ஏற்றி அந்த குகையின் உள்ளே மறு நாளும் சென்ற அவர்கள் குகையில் வரையப்பட்டிருந்த வண்ண ஓவியங்களைப் பார்த்து மலைத்தனர். தாங்கள் கண்டுபிடித்ததை தங்கள் பள்ளியின்  முன்னாள் ஆசிரியரிடம் சொல்லவே அசந்து போன அவர் கற்கால ஓவியத்தைப் பற்றி ஆய்வு நடத்திவரும் பிரபலமான நிபுணரான அப்பே ஹென்றி ப்ரெயிலுக்கு  (Henry Breuil)  டெலிபோனில் குகை ஓவியங்களைப் பற்றிச் சொல்லி உடனே வருமாறு கூறினார்.

நீண்ட குகையில் சுமார் 600 சித்திரங்கள் இருந்தன. பெரும்பாலானவை மிருகங்களின் சித்திரங்கள் தாம். கிறிஸ்துவுக்கு முன் 17000 வருடங்கள் முதல் 15000 வருடங்கள் வரை உள்ள காலத்தில் இவை தீட்டப்பட்டவை என்பது ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டது. அழகிய அலங்காரங்களுடன் செதுக்கப்பட்ட இன்னும் பல குகைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.  இன்னும் 1400 சித்திரங்கள் வேறு அங்கு கண்டுபிடிக்கப்பட்டது.

செய்தி காட்டுத்தீ போலப் பரவவே கூட்டம் கூட்டமாக மக்கள் திரள் அங்கு குவிந்தது.

அனைவரையும் ஒழுங்குபடுத்தி சிறு சிறு குழுவாக குகைக்குள்ளே அனுப்பி வைத்தனர் அரசாங்க அதிகாரிகள்.  உலகப் போர் முடிந்த பிறகு அந்தப் பகுதியின் நில உரிமையாளரும் அரசாங்கமும் சேர்ந்து அங்கே உள்ளே பாதுகாப்பாகச் சென்று வர வழியை உண்டாக்கினர்.

ஆயிரக்கணக்கில் இதைப் பார்க்க பல்வேறு இடங்களிலிருந்தும் பயணிகள் வந்து குவிந்தனர்.

கூட்டத்தின் காரணமாக குகை ஓவியங்கள் அழிந்து போகாமல் இருக்க அதே போலவே சித்திரங்களின் நகலை எடுத்து அந்த குகைக்குப் பக்கத்திலேயே ஒரு காட்சிக் கூடத்தை ஏற்படுத்தினர். அதில் தான் இப்போதும் மக்கள் சென்று கற்கால குகை ஓவியங்களைப் பார்த்து வியக்கின்றனர்.

பாரம்பரியப் பண்பாட்டு இடங்களில் ஒன்றாக இதை 1976ல் யுனெஸ்கோ அறிவித்தது.

செரிண்டிபிடிக்கு சரியான உதாரணம் லஸ்காக்ஸ் குகை!

***

February 2025 Calendar; Quotations from Saint Tyagaraja Keertanas (Post.14,157)

Written by London Swaminathan

Post No. 14,157

Date uploaded in Sydney, Australia – 30 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Hindu Festival Days in February 2025

02 Sun Basant Panchami; 04 Tue Rath Saptami; 05 Wed  , Bheshma Ashtami , Durga Ashtami Vrat;14 Fri Valentines Day; 19 Wed Shivaji Jayanthi; 26 Wed Maha Shivaratri; 28 Fri            National Science Day;

12/02/2025 Wednesday Purnima;  27 Thu Amavasya; Ekadasi Fasting Days- 8, 23;

Auspicious Days

  • February 3, Monday: Muhurat from 7:08 AM–5:40 PM 
  • February 6, Thursday: Muhurat from 7:29 PM–7:06 AM on February 7 
  • February 7, Friday: Muhurat from 7:06 AM–4:17 PM 
  • February 12, Wednesday: Muhurat from 1:58 AM–7:01 AM on February 13 
  • February 19, Wednesday: Muhurat from 6:56 AM–7:32 PM 
  • February 20, Thursday: Muhurat until 1:30 PM 
  • February 21, Friday: Muhurat from 11:59 AM–3:54 PM 

****

February 1 Saturday

O Lord SrI Rama

I have always believed You alone much;

I had besought all and sundry people, but realised that there is no result;

***

February 2 Sunday

I travelled to distant lands for the sake of filling the stomach (needs) of wife and children, but I came to grief as there is not even a little substance in it; I have realised that this is the kind of result that is obtained in this Ocean of Worldly Existence.

****

February 3 Monday

This victorious Tyagaraja knows the secrets of the treatise ‘Svararnava which Lord Siva conveys to Parvati

***

February 4 Tuesday

O Lord Rama

Why would people never be disgusted with sense objects?

Is this body made of stone (to withstand the effects of sense indulgence)?

***

February 5 Wednesday

O Lord SrI Rama

Devotion to You will sustain (devotees) and bestow emancipation; I say this by swearing in Your Holy presence.

****

February 6 Thursday

Those great personages performed Your worship endowed with the quality of purity (desirelessness); the truth was revealed that You are the means for fording the Ocean of Worldly Existence.

****

Those (so called) great devotees, not having understanding of music, pursuit of true knowledge together with loving devotion, and Supreme Love towards the Lord, are but subject to cycle of birth and death.

****

To that great person whose mind is under self control, what is further need for sacred prayers or mystical formulae?

To him who considers that body is not Self, what is the need to undertake penances?

****

February 7 Friday

Of what avail if the capability of chanting (or reciting) and discoursing of/on epics, Agama, Sastras and Veda accrue to clever persons (devoid of devotion)?

It is like tying a golden turban to a corpse and decorating it with exquisite diamond jewellery on the chest.

****

February 8 Saturday

wisdom will not dawn –

without listening to the words of advice of great devotees;

without partaking the nectar of words of those devotees whose minds are dedicated to the exclusion of everything else than meditation on God;

****

February 9 Sunday

O My Mind!

Why should there be fear of Yama to those who are dedicated to chanting of names of Lord

Why should there be fear of yama –

to those bereft of desires who, beholding in their heart-lotus, the face of Lord Sri Rama, melt with overflowing love while performing worship (of the Lord), and

***

February 10 Monday

O My Mind!

Behold in this place the true meaning of SrImad-bhagavad-gItA and the bliss attained through music;

****

February 11 Tuesday

Without tranquility of mind, there is no comfort.

Without Self attaining quietitude of mind, there is no comfort.

***

February 12 Wednesday

O My Mind! Not considering this illusory worldly existence as belonging to us, try to develop devotion by any means towards the Holy feet of the Lord who rests on the leaf of banyan tree.

****

February 13 Thursday

Why have pride of erudition?

Why should you come in the grip of ignorance?

Why the thought of going to Ayodhya – the town of Lord SrI Rama- the most distinguished

one of the solar race – wouldn’t quickly occur to you?

****

February 14 Friday

Do you feel shy (or ashamed) to chant the name of SrI Rama-? Or is it (chanting the name of SrI Rama-) prohibited?

Can’t you speak? Are you ulcer mouthed?

****

February 15 Saturday

It would be very nice if you do not trespass into quarters of women.

O Fool! Do not trust the body; it is (like) a water bubble.

****

February 16 Sunday

Even amidst enjoyments and fortunes may your association be with true devotees;

meditate well in yourself on Lord SrI Rama- – the benefactor of this Tyagaraja

that is the panacea for the disease called worldly existence.

****

February 17 Monday

O My mind!

That is not chanting of names of Lord.

Thinking something in the mind, and something else happening outside – that is not chanting of names of Lord.

****

February 18 Tuesday

While nurturing desire for greatness and thirst for despicable sense objects, people ostentate by donning many garbs for the sake of approbation; – that is not chanting of names of Lord.

****

February 19 Wednesday

O Lord SrI Ramacandra! Why should we worry?

Having harmonised (various elements of the drama) and holding the strings (of the puppets) of the drama (of Universe) in your hands, to the appreciation of the whole Universe, You make us (Or the Universe) dance without missing even a single beat, isn’t it!

****

February 20 Thursday

Why would it not be properly understood by the people of this kali age that this body is evanescent?

Even after observing limit of (leaving behind at the time of death) –

houses constructed strongly with stones,

super abundant relatives and attendants,

their bellied bodies, well-nourished without sharing and offering to those surrounding true relatives, others’ children and guests, and

boxes of wealth tied in coarse bags –

****

February 21 Friday

why would it not be properly be understood by the people (that this body is evanescent)?

Even after observing all the consequences of –

aggrandising the wealth of others, by telling lies, for the sake of filling one’s stomach pit,

roaming after, all those women with blossom like lips, like puppies, and (consequently),

****

February 22 Saturday

O Lord abiding in the heart of this Tyagaraja! Please listen.

How can the pure hearted people remain separated from You, who causes coolness for the eyes (in beholding You), nectar for the ears (in listening to Your stories), taste for tongue (in chanting Your names), comfort for the mind, and bliss for the body!

****

February 23 Sunday

Is it enjoyable to thump the percussion instrument without even knowing beat and pace? Similarly, it is a piggish behaviour to perform worship without a pure mind.

***

February 24 Monday

Recognising the abodes (in the body) of the splendorous seven svaras is indeed liberation;

It is also liberation to remain becoming a knower (of truth) after many births; but,

one endowed with true knowledge (of/and) music together with innate (co-born) devotion is indeed liberated (while still alive);

***

February 25 Tuesday

O My Mind!

Devotion together with the nectarine juice of svara and raga, is indeed heaven and also liberation.

Of what avail a crane (and/or) a frog flourishing on the Lotus called Supreme Bliss (of Nada)?

Knowing Nada originating from Muladhara is, indeed the blissful liberation;

****

February 26 Wednesday

Chanting the names of the Lord is a fortune.

***

February 27 Thursday

Seven Svaras are the bells (of the bow Kodanda);

sacred Ragais the bow Kodanda

dura, naya, and desya are the three strands of the bow string;

gati – steady pace (tempo) – is (are) the arrow(s);

sangati – sweet thematic variations – are the words (spoken by the Lord) appropriate to the occasion;

****

February 28 Friday

O My Mind!

The nectarine juice called Nada, worshipped by this Tyagaraja, which is the prop of Vedas epics, Agamas and Sastras etc., has assumed a human form here (as Sri Rama)

–Subham—

Tags- Tyagaraja, Quotations, Keertanas, Sayings, Saint, February 2025, Calendar

பிப்ரவரி 2025 காலண்டர்; தியகராஜ கீர்த்தனை   பொன்மொழிகள் (Post No.14,156)

Written by London Swaminathan

Post No. 14,156

Date uploaded in Sydney, Australia – 30 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தெலுங்கு மொழியிலிருந்து அருமையாகத் தமிழில்  மொழிபெயர்த்த அத்தனை பெரியவர்களுக்கும் நன்றி!

****

பிப்ரவரி பண்டிகை நாட்கள்

பிப்ரவரி 2  வசந்த பஞ்சமி ,4 -ரத சப்தமி; 5  பீஷ்ம அஷ்டமி/ துர்கா  அஷ்டமி விரதம், 14 -வாலண்டின்ஸ்  டே/ காதலர் தினம்; 19- சிவாஜி ஜெயந்தி; 26 – மகா சிவராத்திரி; 28 –நேஷனல் சயின்ஸ் டே.

27 –அமாவாஸ்யா; 12–பூர்ணிமா ; ஏகாதசி விரத நாட்கள் – 8, 23

முஹுர்த்த தினங்கள்  (இவை தவிர மேலும் சில முகூர்த்த தினங்களும் உண்டு)

  • February 3, Monday: Muhurat from 7:08 AM–5:40 PM 
  • February 6, Thursday: Muhurat from 7:29 PM–7:06 AM on February 7 
  • February 7, Friday: Muhurat from 7:06 AM–4:17 PM 
  • February 12, Wednesday: Muhurat from 1:58 AM–7:01 AM on February 13 
  • February 19, Wednesday: Muhurat from 6:56 AM–7:32 PM 
  • February 20, Thursday: Muhurat until 1:30 PM 
  • February 21, Friday: Muhurat from 11:59 AM–3:54 PM 

****

பிப்ரவரி 1 சனிக்கிழமை

திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.

கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு ஆகியவற்றினில் திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.

****

பிப்ரவரி 2 ஞாயிற்றுக் கிழமை

ஆதாரமான, ருக், சாம ஆகிய மறைகளிலும்,

புனித காயத்திரி (மந்திரத்தின்) இதயத்திலும்,

வானோர், மற்றும் அந்தணர் உள்ளங்களிலும்,

மங்களம் நிறை இத்தியாகராசனிடமும்

திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.

****

பிப்ரவரி 3 திங்கட் கிழமை

என்னப் பிறப்பிதுவோ இராமா?

என்னப் பிறப்பிதுவோ?

எப்போதும் உன்னை அணுகிப்பேசிட இயலாத

என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

****

பிப்ரவரி 4 செவ்வாய்க் கிழமை

கோடி மாரனும் ஒன்றுசேர்ந்த

அழகையும் விஞ்சிய அழகா, இராமா –

உன்னை அணுகிப்பேசிட இயலாத

என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

*****

பிப்ரவரி 5 புதன் கிழமை

பால் வடியும் முகமும், மணிமுத்து மார்பும்

கண்ணெல்லாம் நிறைந்தும்

மனம் நிறைவெய்யாமல்

என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

****

பிப்ரவரி 6 வியாழக் கிழமை

இசையில் திளைப்பவனும்,

இன்னொருவர் மனதை புரிந்து

புரிந்துகொள்பவனும் ஆன இராமனை

மகிழ்ந்தணைத்து மனநிறைவுகொள்ளா

என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

*****

பிப்ரவரி 7 வெள்ளிக் கிழமை  

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா,

தியாகராஜரால் போற்றப்பட்டவனே,

விரைவில் உன்னை காணத்

துடிக்குதென் இதயம் – திணரும்

என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

****

பிப்ரவரி 8 சனிக்கிழமை

சாமகானத்தினில் திளைப்போனே! மன்மதனின் எழிலோனே! இரகுவரா!

எத்தனையோ பெருந்தகைகள்; அனைவருக்கும் வந்தனம்.

****

பிப்ரவரி 9 ஞாயிற்றுக் கிழமை

மதி முகத்தோனின் எழிலையும், ஒயிலையும், தமது இதயக் கமலத்தினிற் கண்டு,

பேரின்பம் துய்ப்போர் எத்தனையோ பெருந்தகைகள்;

பேறுடைத்த, தலைசிறந்தோர் எத்தனையோ பெருந்தகைகள்;

*****

பிப்ரவரி 10 திங்கட் கிழமை

மனமெனும் வனத்தில் சரிப்போனுடன் சரித்து,

அவனுருவத்தினை நன்கு தரிசிப்போரும்,

அவ்வமயமே, அவனது திருவடிகளில் தனது இதயமெனும் கமலத்தினை சமர்ப்பணம்

செய்வோரும் எத்தனையோ பெருந்தகைகள்;

*****

பிப்ரவரி 11 செவ்வாய்க் கிழமை

வீழ்ந்தோரைப் புனிதமாக்குவோனெனும் பரம்பொருளினைக் குறித்து,

மெய்யறிவு சேர்க்கும் உண்மையான நெறியுடன், களிப்புடன் பாடிக்கொண்டு,

சுரம் மற்றும் லயத்தினில் பிறக்கும் இராகங்களை யறிவோர் எத்தனையோ பெருந்தகைகள்;

****

பிப்ரவரி 12 புதன் கிழமை

அரியின் குணங்களெனும் மணிமயமான சரங்கள், தொண்டையினில் துலங்கும், சீரிய தொண்டர்கள்,

இப்புவியினில், தெருட்சியுடனும், அன்புடனும், கருணை கொண்டு, புவி

யனைத்தினையும், அமிழ்தப் பார்வையினால் காப்போர் எத்தனையோ பெருந்தகைகள்;

****

பிப்ரவரி 13 வியாழக் கிழமை

ஒயில் மிஞ்சும் நடையுடை அழகனை, எவ்வமயமும் கண்ணால் கண்டுகொண்டு,

மெய்ப் புல்லரிக்க, ஆனந்தக் கடலில் களிப்புடன் மூழ்கி, புகழ் பெற்றோர் எத்தனையோ பெருந்தகைகள்;

****

பிப்ரவரி 14 வெள்ளிக் கிழமை  

உயர் பாகவதர்களாகிய சிறந்த முனிவர்கள், சந்திரன், சூரியன், சனகர்,

சனந்தனர், திசை மன்னர்கள், வானோர், கிம்புருடர், இரணியகசிபுவின் மைந்தன், நாரதர்,தும்புரு, வாயு மைந்தன், இளம் பிறையணிவோன், சுகர், மலரோன், உயர் அந்தணர்,

மிக்குத்தூயோர், மேலானோர், என்றுமிருப்போர், பேரின்பத்தினை எவ்வமயமும் துய்ப்போர் – இவர்களன்றியும் எத்தனையோ பெருந்தகைகள்;

*****

பிப்ரவரி 15 சனிக்கிழமை

உனது திருமேனி மற்றும் நாமத்தின் பெருமைகளையும், உனது வீரம் மற்றும்

துணிவினையும், உனது அமைதியான மனம், மற்றும் நீ பகரும் சொற்களின் உறுதி (ஆகிய குணங்களை),

உன்னிடம் நற்பற்று தோன்றுவதற்காக,

தீய கோட்பாடுகளைப் பொய்யாக்கியது போலும் உனதுள்ளத்தினைத் தெரிந்து, மகிழ்வுடன், (உனது) பண்புகளை பத்திக் களிப்புடன் கீர்த்தனங்கள் செய்வோர் எத்தனையோ பெருந்தகைகள்;

*****

பிப்ரவரி 16 ஞாயிற்றுக் கிழமை

பாகவதம், இராமாயணம், கீதை மற்றும் மறைகள், சாத்திரங்கள், புராணங்கள் ஆகியவற்றின் உட்கருத்துக்கள்,

சைவம் முதலான அறு மதங்களின் மருமங்கள், மற்றும்

முப்பத்து முக்கோடி வானோரின் உள்ள இயல்பு, இவற்றினை அறிந்து, உணர்ச்சி, இராகம், தாளம் ஆகியவற்றின் சுகத்துடன்,

நீண்ட ஆயுளுடைத்து, இடையறா இன்பம் நுகர்வோராகி,

தியாகராசனுக்கு இனியோரானோர் எத்தனையோ பெருந்தகைகள்;

*****

பிப்ரவரி 17 திங்கட் கிழமை

காதல் மேலிடும் வேளை, (இறைவனின்) நாமத்தினையெண்ணுவோர்,

இராமனின் தொண்டனாகிய தியாகராசனால் போற்றப் பெற்றோனின் உண்மையான தொண்டரானோர் எத்தனையோ பெருந்தகைகள்;

அனைவருக்கும் வந்தனம்.

*****

பிப்ரவரி 18 செவ்வாய்க் கிழமை

பணிவுடன் கௌசிகரின் பின் சென்ற திருவடிகளைக் காண்பதென்றைக்கோ?

அதன் பின்னர், கல்லைப் பெண்ணாக்கிய சரணங்களைக் காண்பதென்றைக்கோ?

பெருத்த, சிவனின் வில்லை முறித்த பாதங்களைக் காண்பதென்றைக்கோ?

அந்த சனக மன்னன் பாலினால் கழுவிய அந்தக் கால்களைக் காண்பதென்றைக்கோ?

*****

பிப்ரவரி 19 புதன் கிழமை

காதலுடன் சீதைக்குத் தாலி கட்டிய கரங்களைக் காண்பதென்றைக்கோ?

கோபத்துடன், பிருகு மைந்தன் வில் பலத்தைப் பறித்துக்கொண்ட கைகளைக் காண்பதென்றைக்கோ?

வனத்திற்குச் சென்று, விராதனை வதைத்த கைகளைக் காண்பதென்றைக்கோ?

அந்த முனிவர்களையும் கண்டு அபயமளித்த கரத்தினைக் காண்பதென்றைக்கோ?

****

பிப்ரவரி 20 வியாழக் கிழமை

தனக்குத் தானே காக்கையசுரனைக் காத்த அம்பினைக் காண்பதென்றைக்கோ?

நொடியில் எண்ணற்ற தேர்களைப் பொடி செய்த அத்திரத்தினைக் காண்பதென்றைக்கோ?

பெரும் பலவானாகிய வாலியைக் கொன்ற கணையினைக் காண்பதென்றைக்கோ?

அந்த கடலரசனின் மத கருவத்தினை அடக்கிய சாயகத்தினைக் காண்பதென்றைக்கோ?

*****

பிப்ரவரி 21 வெள்ளிக் கிழமை  

அன்புடன் விபீடணனை நோக்கிய கண்களைக் காண்பதென்றைக்கோ?

இராவணனைக் கொன்று, ஏழைக் குரங்குகளெழக் காணும் பார்வையினைக் காண்பதென்றைக்கோ?

வானரர் தலைவனைக் குளுமையாக நோக்கிய நேத்திரங்களைக் காண்பதென்றைக்கோ?

தினமும் இலங்கை செழித்திடக் காணும் கண்களைக் காண்பதென்றைக்கோ?

***

பிப்ரவரி 22 சனிக்கிழமை

சிறந்த புட்பகத்தினில் திகழ்ந்த ஒயிலினைக் காண்பதென்றைக்கோ?

பரதனைக் கண்டு, கைப் பிடித்துக் கொண்டு வந்த வேடிக்கையைக் காண்பதென்றைக்கோ?

தங்க சிங்காதனத்தில் நிலைபெற்ற மாட்சிமையினைக் காண்பதென்றைக்கோ?

உயர் முனிவர்களும், அரசர்களும் குழுமியுள்ள அலங்காரத்தினைக் காண்பதென்றைக்கோ?

****

பிப்ரவரி 23 ஞாயிற்றுக் கிழமை

ஆகமங்கள் போற்றுவோனை, ஆனந்தக் கிழங்கனை, நன்கு காண்பதென்றோ?

பரம பாகவதர்களுக்கு இனியோனின், மாற்றமற்றோனின் வருகையைக் காண்பதென்றோ?

(பாற்) கடற்றுயில்வோனை, கருணைக் கடலினை, வேகமே காண்பதென்றோ?

உயர் தியாகராசன் முதலான தேவதைகள், புகழந்துகொண்ட வகையினைக் காண்பதென்றோ?

**** 

பிப்ரவரி 24 திங்கட் கிழமை

தியாகராசன் போற்றுவோனே!

கண்விழிப்பாய் கருணாநிதீ! கண்விழிப்பாய் தாசரதீ!

பொழுது புலரும் நேரமிது. கண்விழிப்பாய் கருணாநிதீ!

வெண்ணையும், பாலும் பொற் கிண்ணங்களில் நான் வைத்துள்ளேன்;

கருணையுடன் ஏற்றருளி, தெளிந்த கண்களினால் என்னைக் நோக்க கண்விழிப்பாய் கருணாநிதீ!

****

பிப்ரவரி 25 செவ்வாய்க் கிழமை

நாரதாதி முனிவர்கள், வானோர், மலரோன், மதிப் பிறை அணிவோனும் உனது சன்னிதியில், வேண்டி, கொலுவு காத்துள்ளனர். கண்விழிப்பாய் கருணாநிதீ!

மன்னாதி மன்னர், மற்றும் திசை மன்னர்கள் யாவரும் வந்துள்ளனர், அரச நீதி அறிய; என்னக் காக்க கண்விழிப்பாய் கருணாநிதீ!

*****

பிப்ரவரி 26 புதன் கிழமை

இரகுவீரா! சார-சாரமற்ற பொருளே! உதார குணத்தோனே! பல்லுலக ஆதாரமே! வியத்தகு குணங்களோனே!

கார்முகில் நிகருடலோனே! இராமா!

சீதையின் இதயக்கமலத்தின் பகலவனே! வேண்டியவர்களின் பாரிசாதமே! பாவக் கடலின் கலமே! கமல நண்பன் குலத் தோன்றலே! நான்முகனை யீன்றோனே! விரும்பியது அருள்வோனாகிய, சாகேத நகருறைவோனே!

****

பிப்ரவரி 27 வியாழக் கிழமை

முழந்தாள் நீளக் கைகளோனே! ஒளிர்விடும் மதி முகத்தோனே! வானோர் தலைவன் வழிபடும், தியாகராசன் போற்றும், பிறவாதவனே!

வாருமய்யா, என்னையாளுமய்யா.

என்னைத் துன்புறுத்தல் முறையோ?

****

பிப்ரவரி 28 வெள்ளிக் கிழமை  

என்னிடம் நீ தவறுகளை எண்ணாது ஆதரியுமய்யா.

சமுசாரமெனும் அடவியில் உறைவோனாகிய எனக்கு சாரமான (உனது) நாமமே (அதனைக்) கடத்துவிப்பதாகுமய்யா.

காப்பாய். பூமியின் மருகனாகி, எனது துயரறிந்தும், தாமதமேன்?

தாராளமாக வாருமய்யா.

—subham—

Tags- தியகராஜர் , கீர்த்தனைகள், மேற்கோள்கள்,     பொன்மொழிகள், பிப்ரவரி 2025 காலண்டர், மொழிபெயர்ப்பு , அர்த்தம்