தமிழ் தெரியுமா ? 71224 (Post No.13,982)

Written by London Swaminathan

Post No. 13,982

Date uploaded in London – 7 DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள் !

     1 2
    3  
   4   5 6
 7     
       
 8     
       9 
    10  11

குறுக்கே (இடம் வலமாக செல்க)

1 புலவர் என்பதன் ஸம்ஸ்ருதச்சொல்.

7.திருவாரூர் கோவிலில் உள்ள புகழ் பெற்ற குளம்.

8.சுதந்திரம் வாங்கித் தருவதில் முன்னணியில் நின்றவர் .

9.குதிரை; மாணிக்கவாசகர் கதையில் மிகவும் அடிபடும் சொல்.

10.நன்றாக அடிக்க உதவும் .

************

குறுக்கே (வலம் இடமாக செல்க) ←

1. சூரியன் என்பதன் தமிழ்ச் சொல் ←

6. தோழன் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல் ←

10. புகழ் பெற்ற ராமாயணப் புலவன் ←

*************

மேலிருந்து கீழே செல்க

2.தற்காலப் பொருள்- ஆபாசம், காமம் மிகுதியான ;

4.வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் என்னும் பரிதிமாற் கலைஞர் 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நாடகம் 

5.இந்த மூலிகை மருந்தைச் சாப்பிட்டால் எப்போதும் இளமையாக நீடூழி வாழலாம்

7.கால் கருப்புதான் ; ஆனால் இந்தச் சோழனின் புகழோ வானளாவச் செல்லும்

*************

கீழிருந்து மேலே செல்க Arrow Symbol Clipart | Free Download ...

3. நீதிமன்றத்தில் இருதரப்பில், தன் தரப்பில் பேசுபவர் .Arrow Symbol Clipart | Free Download ...

7.சங்க கால குறுநில மன்னன் ; அவன் தலைநகர் விளங்கில் என்று அகநானூறு செப்பும் Arrow Symbol Clipart | Free Download ...

10. அடுப்பெரிக்க உதவும் Arrow Symbol Clipart | Free Download ...

11. ஜகந்நாதர் தேருக்குப் புகழ்பெற்ற ஊர் Arrow Symbol Clipart | Free Download ...

*************

விடைகள்

ன்திக 1வி 2
  வா 3 
 க 4 கா  5ச 6
க 7லாம்
ரி வ    
கா 8ந்தி ல் 
  ரிப   9ரி
ன்ம்க 10ம்பு 11

—-subham—-

Tags- தமிழ் தெரியுமா,   71224

Hindu Crossword 71224 (Post No.13,981)

Written by London Swaminathan

Post No. 13,981

Date uploaded in London – 7 DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1    2 3   
   4     5 
  6        
   7       
8 9 10 11    
           
           
           
 12         
           
13          

Across

1.—He took Rama, Lakshmana to the forest and then to Mithila. (from one corner to another corner across the square.

4. Great King who built Big Temple in Thanjavur in Tamil Nadu.

6. – same. Equal (short sound); music Veda (long sound )

8.- Part of ….. Chit Ananda

11.–Pround , haughty, arrogant; also pride

12. second wife of Pandu; woman from Madra desa.

13. – Demi gods; attendants of Shiva; literal meaning Knowledge Holders.

*****

Down

1.– Dasaratha’s Kula Guru;

2. – many meanings- Brahma, Goat; Indumati’s husband.

3. exhaustion, fatigue, weariness

5. Personal physician to Buddha.

7.-go upward — Vishnu’s short name

9.—Philosophy

10. – Paternal uncle of Pandavas and Kauravas

****

Pandu’s wife; not Kunti Devi

Answers

V1  I A2 S3   
AI R4AJARAJ5A
S S6AMA A E 
I  H7   M E 
S8AT9 V10 G11ARVI
T A IA   A 
H T D M  K 
A V U  I A 
 M12ADRI  T  
    A    R 
V13IDHYADHARA

—subham—

Tags- Hindu CW, 71224

வேதம் சொன்ன எருமை மாட்டுக்கு சமாதி ! (Post No.13,980)

Written by London Swaminathan

Post No. 13,980

Date uploaded in London – 7 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மஹாராஷ்டிரத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு அற்புதம் இது. எருமை மாடு வேதம் சொன்னவுடன் பிராமணர்கள் வாயடைத்துப் போய் மிரண்டு விட்டனர்; பின்னர் அந்த எருமை மாட்டுக்கு மரியாதையாக சமாதி காட்டினார்கள்!

தமிழ் நாட்டில்  ஆழ்வார்களையும்களும் , நாயன்மார்களையும் எப்படி எல்லோரும் அறிவார்களோ தைப் போல மகாராஷ்டிரம் முழுவதும் ஞானதேவர் மற்றும் அவருடைய சகோதர ,சகோதரிகள் , சீடர்கள் பெயர்களை எல்லோரும் அறிவார்கள்  .

குருவின் கட்டளையின் பேரில் ஞானதேவரின் தந்தை, துறவறத்தை விட்டு இல்லறத்திற்கு வந்தார். அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்களை மஹாராஷ்டிர பிராமணர்கள் ஜாதியிலிருந்து ஒதுக்கிவிட்டு எந்த சடங்கினையும் செய்ய மறுத்து வந்தனர். காரணம் ? துறவறத்தில் இருந்தவர் எப்படி இல்லறத்துக்குத் திரும்ப முடியும் ? அதற்கு  சாஸ்திரத்தில் சான்றே இல்லையே!

அந்த வட்டார அரசனுக்கு இது தெரிய வந்தது. உடனே வறுமையில் வாடிய அந்தக் குடும்பத்துக்கு பொன்னும் மணியும் கொடுத்து ஆதரித்தான். ஆயினும் பிராமண குருவிடம் சர்டிபிகேட் வாங்கிவந்தால் நல்லது என்று எண்ணி மந்திரியுடன் ஞானேஷ்வர் குடும்பத்தைப் பைதான் / பிரதிஷ்டான நகருக்கு அனுப்பினான். அந்த பிராமண குரு அவர்கள் வருவதற்கு முன்னாலேயே இவர்களைப் பற்றி அறிந்து இருந்தார்; ஏனெனில் இருபது பிராமணர்கள் புகார் மனு கொடுத்திருந்தனர்; ஆகையால் வந்தவுடன் குடும்பத்தின் மீது வெறுப்பைக் கொட்டினார். ஞானேஸ்வர் சின்னப் பையன்; ஞான சம்பந்தர்   போல இறைவனின் வடிவம்; ஆகையால் முறையான வாக்குவாதம் மூலம் பிராமணன் என்பவன் செயல்களினால் பிராமணனா பிறப்பினால் பிராமணனா என்று அடிப்படைக் கேள்வியை எழுப்பினார்.

பகவத் கீதையிலும் தமிழ் வேதமான திருக்குறளிலும் சொன்ன வாதத்தை முன்வைத்தார்; பிறப்பொக்கும் எல்லா உயிரும், செய்தொழிலால்தான் வேற்றுமை என்ற வள்ளுவர், கிருஷ்ணரின் வாதத்தை எடுத்துரைத்தார்  அவர் கேட்பதாக இல்லை. அந்த நேரத்தில் தண்ணீர் பானைகளை சுமந்து கொண்டு ஒரு எருமை வந்தது.

ஞானேஸ்வர் சொன்னார். உங்களுடன் வாதம் செய்வதைவிட இந்த எருமையுடன் வாதம் செய்யலாம். அதற்குள்ள அறிவில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட உங்களுக்கு இல்லையே என்றார். பிராமண குருவுக்குக் கோபம் பொங்கியது ; அடா! சிறுவா!  ஏது சொன்னாய் ?என்னை எருமையுடன் ஒப்பிட்டாயா? இப்போது அந்த எருமையின் அறிவினைக் காட்டாவிடில் உன்னை இங்கேயே வெட்டிப்போடுவேன் என்று வசனம் பேசினார்

சிறுவனான ஞானேஸ்வர் எருமை அருகில் சென்று, அதன் தலையில் கையை வைத்தான். அது நாலு வேதங்களில் இருந்தும் வேத மந்திரங்களை உச்சரித்தன. இதற்குள் பெரிய கூட்டமும் கூடிவிட்டது.எருமை மேலும் சொன்னது:

ஜன்மநா  ஜாயதே சூத்ரஹ கர்மணா ஜாயதே த்விஜஹ

வேதோ முக்யஸ்து விப்ராணாம் ப்ரஹ்ம ஞானம் து ப்ரஹ்மணாம்

பொருள்

ஒருவன் பிறவியில் சூத்திரனானகப் பிறக்கிறான். செய்யும் தொழிலால்தான் அந்தணன் ஆகிறான். உயர்ந்தவர்களுக்கு வேதத்தின் பொருளை  , அதாவது பிரம்மத்தை, அறிவதே குறிக்கோள்; அதனால்தான் அவனை பிராஹ்மணன் என்கிறோம் .

பிராமணனுக்கு இருபிறப்பாளர் என்று பெயர்; இதை சங்கத் தமிழ்ப் பாடல்களிலும் காணலாம். பிறப்பில் எவரும் பிராமணர் இல்லை; வேதம் கற்றவுடன் அவர்களுக்கு இரண்டாவது பிறப்பு வருகிறது இதே போல அவரவர் செய்யும் தொழிலால் அவர்களுக்கு ஜாதி ஏற்படுகிறது

இதை வள்ளுவர்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.—குறள் 972

இது பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு

चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागश: |
तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम् || 4-13||

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகஸ:|

தஸ்ய கர்தாரமபி மாம் வித்ய கர்தாரமவ்யயம்:|| 4-13

பொருள்:

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களை உண்டாக்கினேன். செயற்கையற்றவனும், அழிவற்றவனுமாகிய நானே அவற்றைச் செய்தவன் என்று உணர்வாய்.4-13

மேற்கூறிய ஜன்மநா  ஜாயதே சூத்ரஹ கர்மணா ஜாயதே த்விஜஹ

ஸ்லோகமும் இதையே சொன்னது.

*****

தாஸி கர்ப்ப ஸமுத் பூதோ நாரதஞ் ச மஹாமுனிஹி

தபஸா ப்ரஹ்மணோத் பூதஹ தஸ்ய ஜாதிம்  ந கல்பயேத்

நாரதர், தாசியின் வயிற்றில் தோன்றியவரே ; ஆயினும் தவம் இயற்றி பிரம்மாவின் குமாரராக ஆனார்; இவருடைய ஜாதி என்ன என்று கற்பனையே செய்ய முடியாது (கூடாது).

****

ஊர்வசீ கர்ப்ப  ஸம்பூதோ வசிஷ்டஸ் ச மஹாமுனிஹி

தபஸா ப்ரஹ்மணோத் பூதஹ தஸ்ய ஜாதிம்  ந கல்பயேத்

ஊர்வசீயின் வயிற்றில் பிறந்த வசிஷ்ட மஹாமுனிவர் தவத்தால் மஹா முனிவர் ஆனார் ;இவருடைய ஜாதி என்ன என்றும் சொல்லவே முடியாது (கூடாது).

****

சுனகீ கர்ப்ப  ஸம்பூதோ செள னககஸ் ச மஹாமுனிஹி

தபஸா ப்ரஹ்மணோத் பூதஹ தஸ்ய ஜாதிம்  ந கல்பயேத்

பெண் நாயின் வயிற்றிலிருந்து தோன்றிய செளனக முனிவர் தவம் செய்து பிரம்ம குமாரர் ஆனார். இவருடைய ஜாதியையும் கற்பனை செய்துவிட முடியாது / கூடாது.

ஒருவன் பிறப்பினால் பிராம்மணன் ஆகிறானா? அல்லது வேதம் முதலிய நூலின்

உண்மைப்பொருளை உணர்ந்து பிரம்மத்தை அறிவதால் பிராம்மணன் ஆகிறானா? என்று ஞானேஸ்வர் கேட்ட கேள்விக்கு மேற்கூறிய நான்கு சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை சொல்லி எருமை மாடு பதில் சொன்னது  எல்லோரும் இந்த அதிசயத்தைக் கண்டு பிரமித்து நின்றனர்

பிராமண குருவின் நற் சான்றிதழ் தேவையில்லாமேயே எல்லோரும் ஞானேஸ்வரரை அங்கீகரித்தனர்; அவர் எழுதிய ஞானேஸ்வரி என்ற பகவத் கீதை விளக்க உரை, பட்டி தொட்டிகள் எல்லாம் முழங்கின. பாமரரும் படித்தோரும் அதை ஒலித்தனர் .

நிவ்ருத்தி -ஞானதேவ்- சோபாந=  முக்தா  பாய்–  ஏக நாத—நாமதேவ்– துக்காராம் ; ஸமர்த்த ராமதாஸ் கீ ஜெய் —என்ற கோஷம் எல்லா பஜனைகளிலும் இன்றும் முழங்குகிறது !

வேதம் சொன்ன  எருமை மாட்டினை பூமியில் புதைத்து சமாதியும் கட்டினார்கள்; அதை இன்றும் காணலாம் என்று சுவாமி சிவானந்தர்  ஞானியர் வரலாறு என்ற நூலில் செப்புகிறார்[  ஸ்ரீ ஞாந  தேவரின் முழு சரித்திரமும்  ஸ்ரீ மஹா பக்த விஜயம் என்ற லிப்கோ நூலிலும் கிடைக்கும்

—subham—-

Tags- எருமை மாடு, வேதம், சமாதி, ஞானேஸ்வர், ஞானதேவ், மகாராஷ்டிரம்

 மஹரிஷி அரவிந்தரிடமிருந்து 4000 கடிதங்களைப் பெற்றவர்! (Post No.13,979)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.979

Date uploaded in London – 7 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

டிசம்பர் 5 : அரவிந்தர் சமாதி தினம்!

 மஹரிஷி அரவிந்தர் ஜனனம் : 15-8-1872

                         சமாதி   : 5-12-1950

அரவிந்தரின் நகைச்சுவை

மஹரிஷி அரவிந்தரிடமிருந்து 4000 கடிதங்களைப் பெற்றவர்!

ச. நாகராஜன்

நிரோத்பரன்

மகத்தான யோக சாதனையைப் புரிந்து உயரிய ஆற்றலை புவிக்குக் கொண்டு வரும் தீவிர சாதனையில் மஹரிஷி அரவிந்தர் புதுவையில் ஈடுபட்டிருந்தார். அதனால் அவரைப் பார்ப்பது வருடத்தில் நிர்ணயிக்கப்பட்ட சில நாட்களில் மட்டுமே முடியும்.

ஆசிரமத்திற்கு வந்து நீண்டகாலம் வசித்த அணுக்கத் தொண்டர் நிரோத்பரன் என்பவர் ஆவார்.

எடின்பரோவில் மருத்துவக் கல்வி கற்ற நிரோத்பரன் பிரபல இசை விற்பன்னரான திலிப் குமார் ராய் மூலமாக (பாரிஸில் இருந்த போது) அரவிந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.1930ஆம் ஆண்டு அரவிந்த ஆசிரமம் வந்து அன்னையை தரிசித்தார். பின்னர் பர்மா சென்று  சுமார் இரு ஆண்டுகள் மருத்துவராகத் தொழில் புரிந்தார். பின்னர் யோகத்தில் ஆர்வம் ஏற்படஅரவிந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார். ஆசிரம டாக்டராகப் பணியாற்றத் துவங்கிய நிரோத் அரவிந்தரை நேரில் பார்க்க முடியாத நிலையில் தன் சந்தேகங்களைக் கடிதம் மூலம் அனுப்பிப் பதிலைப் பெறலானார்.

இப்படியாக சுமார் 4000 அரிய கடிதங்களை அவர் அரவிந்தரிடமிருந்து பெற்றார். சாதாரண அன்றாட வாழ்க்கைக்கான குறிப்பிலிருந்து மிக உயரிய யோக சாதனை ரகசியங்கள் வரை இந்தக் கடிதங்களில் அடங்கியுள்ளதைப் பார்க்கலாம்.

1938ஆம் ஆண்டு அரவிந்தரின் கால் உடையவே நிரோத்பரன் அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க அழைக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்கு அரவிந்தருடனான நெருக்கம் அதிகரித்தது.

நிரோத்பரன் 1903ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். 103 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி மறைந்தார்.

அரவிந்தரின் யோக முறையின் படி வாழப் புகுந்த நிரோத்பரன் பெரும் உயரிய நிலையை அடைந்ததும் ஆச்சரியம் இல்லை; 103 ஆண்டுகள் அவர் வாழ்ந்ததும் ஆச்சரியம் இல்லை.

 12 வருட கால அனுபவங்களை அவர் நினைவு மஞ்சரியாக ‘12 இயர்ஸ் வித் ஸ்ரீ அரவிந்தோ’ (12 years wth sri Aurobindoஎன்ற நூலில் தொகுத்துத் தந்துள்ளார். மஹரிஷியுடன் அவர் பேசிய பேச்சுக்கள் (Talks with Sri Aurobindo) 3 தொகுதிகளாக வெளியாகி உள்ளன. அவரது கடிதப் பொக்கிஷங்களும் கூட (Correspondence with Sri Aurobindo) வெளியாகி உள்ளன.

அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான பணி – அரவிந்தர் போதித்த ஆன்மீக ரகசியங்களை வெளியிட்டது தான்!

இந்தக் கடித பொக்கிஷத்தில் அரவிந்தரின் உயரிய நகைச்சுவை உணர்வைக் காணாலம். மாதிரிக்காக ஒரு சில நகைச்சுவைப் பகுதிகள் இதோ:

1  

நிரோத்பரன் : இந்த யோகா செய்வதற்கு ஒருவருக்கு சிங்கத்தின் இதயமும், அரவிந்தரின் மனமும், நெப்போலியனின் ஆற்றலும் வேண்டும்,

அரவிந்தர்: அட கடவுளே! அப்படியானால் அந்த லிஸ்டிலிருந்து என்னை எடுத்து விடு. ஏனெனில் எனக்கு சிங்கத்தின் இதயமும். கிடையாது, நெப்போலியனின் ஆற்றலும் கிடையாது.

2

நிரோத்பரன் : ஒரு நம்பகமான இடத்திலிருந்து சுப்ரமெண்டல் இறங்கப்போவது மிக சமீபத்தில் நடக்கும் என்று கேள்விப்படுகிறேன். அது உண்மையா, சார்?

அரவிந்தர்: நம்பகமான இடத்திலிருந்து வந்தது என்பதைக் கேட்க நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். எனக்குப் பெரிய ஆறுதலாக இருக்கிறது.

3

நிரோத்பரன்: நேற்று இரவு ஒரு கவிதையை இயற்ற முயற்சி செய்தேன். அது தோல்வியில் தான் முடிந்தது. முதல் இரண்டு அடிகளிலேயே நான் தூங்கி விட்டேன்.

அரவிந்தர்: நீ அதைத் தோல்வி என்று எப்படிச் சொல்லலாம்? (உடனே தூங்கச் செய்யும்) ஒரு புதிய தூக்கமூட்டியை அல்லவா கண்டுபிடித்திருக்கிறாய்!

4

ஜோதிடத்தைப் பற்றி பேசுகையில் டாக்டர் மணிலால் கூறினார் இப்படி: “நான் ஒரு பணத்தைப் பறிக்கும் ஜோதிடரைச் சந்தித்தேன். ஆனால் அவருக்கு நான் சமாளிக்க முடியாத ஒரு முரட்டுப் பேர்வழி என்பது தெரியாது.

உடனே அரவிந்தர் கூறினார்: அவர் உன்னிடம் வருவதற்கு முன்னர் சனி பகவானைக் கும்பிட்டு வந்திருக்க வேண்டும்.

மணிலால் தொடர்ந்தார்: ஆனால் இன்னொரு ஜோதிடர் இருந்தார். நல்ல மனிதர், ஆனால் இறந்து விட்டார்.

அரவிந்தர்: ஆக இப்போது உயிரோடிருப்பவர் கெட்ட மனிதராக்கும்!

5

நிரோத்பரன் : இந்தப் பெண்களையே அழாமல் இருக்கும்படி தொடமுடியவில்லை. இரக்கமற்ற ராக்ஷஸர்கள் என்று டாக்டர்களை அவர்கள் நினைக்கிறார்கள்.

அரவிந்தர்: நல்லது தானே, எப்பேர்ப்பட்ட டார்லிங், ஏஞ்சல் என்று நினைக்காமல் விடுகிறார்களே!

6

நிரோத்பரன்  ஒரு பெண்மணிக்கு கவிதையால் மன அழுத்தம் ஏற்பட்டு அவளது மாதவிடாய் போக்கில் ஒழுங்கற்ற போக்கு ஏற்பட்டு விட்டது என்று அரவிந்தருக்கு எழுதினார்.

அரவிந்தர்: அட கடவுளே! கவிதையாலா இப்படி சீரற்ற மென்ஸஸ் ஏற்படுகிறது?

நிரோத்பரன்: இல்லை, இல்லை. உடல் சோர்வாலும் மன அழுத்தத்தாலும் தான் ஏற்படுகிறது. அந்தக் கவிதையை உங்களிடம் அனுப்ப வேண்டியிருக்கிறது, இங்கிருந்து அங்குபோக வேண்டியிருக்கிறது. இது போதாதா என்ன மன அழுத்தம் உண்டாக?

அரவிந்தர். நல்ல வேளை என் கவலையைப் போக்கினாய்! கவிதை தான் இந்த சீரற்ற மென்ஸஸுக்குக் காரணம் என்றால் நீயும் திலிப்பும் நிஷ்காந்தாவும் என்ன பாடுபடுவீர்கள் என்று நினைத்தேன்.

(இதில் உள்ள ஆழ்ந்த நகைச்சுவையை நினைத்து நினைத்துச் சிரிக்கலாம்இந்த மூன்று ஆண்களுக்கும் ஒழுங்கற்ற மென்ஸஸ் வந்தால் அவர்கள் கதி என்ன ஆகும்!)

7

சம்பக்லால் கூறினார்: எனது கண்களில் எப்போதும் நீர் வடிகிறது.

அரவிந்தர்; வர்ஜிலுக்கும் இதே போலக் கண்களில் எப்போதும் நீர் வடியும். ஹொரேஸுக்கு எப்போதும் மூச்சு விடக் கஷ்டமாய் இருக்கும். பெருமூச்சு விடுவார். அகஸ்டஸ் சீசர் அரசாட்சியில் இந்த இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த இலக்கிய ஜாம்பவானான மிசெனஸ், “நான் கண்ணீருக்கும் பெருமூச்சுக்கும் நடுவில் அமர்ந்திருக்கிறேன்” என்று சொன்னார்.

8

அரவிந்தர் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தார். அவர் அருகே இருந்த பலரும் தங்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று சிரிப்பை அடக்க முடியாமல் சம்பக்லால் எழுந்து அறையை விட்டு வெளியே ஓடினார்.

இதைப் பார்த்த அரவிந்தர், “என்ன தெய்வீக சக்தி இங்கு வந்து இறங்கி விட்டதோ?

என்றார்.

நிரோத்பரன், “சம்பக்லாலுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்து விட்டது” என்றார்.

அரவிந்தர்: ஓஹோ! ஆக விஷ்ணுவின் ஆனந்தம் இங்கு இறங்கி விட்டது!

***

Hindu Crossword Puzzle 6 12 2024 (Post No.13,978)

Written by London Swaminathan

Post No. 13,978

Date uploaded in London – 6  DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Across

1.Largest Democratic country in the world.

2.Illusion (long sound); heavenly architect (short sound)

4.Ground where Krishna did most of his lelas It is called…….Bhumi.

5.Vedic word for water

7.Poular Krishna shrine in Karnataka coastal area

9.Another name of Ujjain; one of the Sapta Puris

****

Up or Down

3. (go upward) Holiest Hindu Shiva Shrine

6. (Go upwards) a concept in Indian philosophy that refers to a false understanding of reality that prevents the soul from achieving release. 

8. (Go upwards) Mahabharata is divided into 18……………

9. (Go upwards) Hindi or Sanskrit name of All India Radio

10. Go upwards)  (Show) mercy 

        
          
   2      
    3     
     4    
      5 6 
   7   8   
          
     10  

Playground of Lord Krishna

Answer

61224 cw

I1 NDIA  A 
 N  S   N 
 M2AYA A 
 AK3 v N 
 T B4RAJ 
 H  A5PA6 
 U7DUP 8I  
 R   R  
A9 VANTIK10A 

—subham—

Tags- Hindu Crossword, 6122024

London Swaminathan’s November 2024 Articles Index (Post No.13,977)

Written by London Swaminathan

Post No. 13,977

Date uploaded in London – 6  DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Index No.144

He who knows does not talk; he who talks does not know (Post No.13,841)1-11-2024

Warnings from Hindu Nostradamus -1 Post No. 13,845 (2/11)

Warnings from Hindu Nostradamus -2  (Post.13,849)3/11

Sixty Thousand Women burnt Alive; Atrocities that White Children don’t know! (Post No.13,852) 4/11

To play the Lute before Buffalo: Chinese Story (Post No.13,859)6/11

Three Architectural Wonders in Rayalaseema: 150 Ramayana Sculptures (Post No.13,869)9/11

South Indian Society’s Drama in London! Let us Celebrate its 30th Anniversary!! (Post No.13,879)12/11

Western Linguists are Frauds- 2 (Post No.13,890)15/11

Tamil Discovery! Do Animals Dream? (Post No.13,872)10/11

Tamil Hindus Explode Freudian Theory on Dreams (Post No.13,893)16/11

Tamil Pepper and Tamil Pearls ruled the Roman World (Post No.13,902)18/11 

Hinduism in Japan; Names of Hindu Deities(Post 13,862)7-11

November 2024 Calendar with Saint Kabir Quotations (Pot No.13,856) 5/11

Ramayana Dates from Valmiki Ramayana (Post No.13,866)8/11

Dreams in Kalidasa Kavyas and Sangam Tamil Literature- Part 2 (Post No.13,880)12/11

Poems on Indian Hunting Dogs on papyrus!  (Post No.13,905) 19/11

Sri Ramakrishna on Chaitanya Mahaprabhu—1 (Post No.13,950)29-11

Sri Ramakrishna on Chaitanya Mahaprabhu—2 (Post No.13,954)30/11

Sri Ramakrishna on Chaitanya Mahaprabhu—3 (Post No.13,958) 1/12

Miracles in the Life of Chaitanya Mahaprabhu (Post No.13,945)28/11

Brahmi Letters from Egypt to South East Asia; Tamil, Sanskrit Names in the Middle East (Post .13,908) 20-11

How did Vedic Poet Vamadeva eat Dog Meat? Sri R K P explains (Post No.13,913)21-11

Krishnan- Kannan Mystery in Tamil Literature! (Post.13,932)25/11

Story of Sanskrit ! How did World’s Oldest Grammar develop in 3000 Years? (Post No.13,936)26/11

December 2024 Calendar; Quotes by Nehru (13,941)27/11

Dreams in Valmiki Ramayana (Post No.13,896)17/11

Dreams in Kalidasa Kavyas and Sangam Tamil Literature- 1

Post No. 13,876) 11/11

Dreams in Tamil Veda Tirukkural and Tamil Proverbs (Post No.13,883)13/11

Western Linguists are Frauds (Post.13,886)14/11

What is my opinion about using Horoscopes in finalising Marriages? Q and A (Post No.13,901) 18/11

Why did Swami Vivekananda, Sankara and Bharatiyar leave the World at Young Age? (Post.13,919) 22/11

HINDU CROSSWORD PUZZLE 23112024; also 20,21, 22, 24,26,27,28,29 November.

LONDON HOSPITAL DIWALI YEAR 2024 (Post No.13,846)2/11

London Swaminathan’s October 2024 Articles Index (Post No.13,863)7-11

Sunday 10-11-2024 Gnanamayam Broadcast

SUNDAY 24-11-2024 GNANAMAYAM BROADCAST FROM LONDON.

Three Day London Radha Kalyan Event Concluded (Post.13,927)24/11

*****

Lifted from Newspapers

American Election Cartoons 7112024

GNANAMAYAM BROADCAST FOR SUNDAY 17TH NOVEMBER 2024

Non-Veg Food at Keir Starmer’s Diwali Party: UK PM’s Office Apologises After Outrage 15/11

“Hindu Dharma is the only Dharma – Why?” (Post.13,889)15/11

***

யஜுர் வேதத்தை மேலை உலகத்துக்கு அளித்த வீபர் (Post.13,839) 1-11-24

இந்திய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசித் தாக்குமா ? (Post No.13,848)

மேலும் 30 பாரதியார் கட்டுரைப் பொன்மொழிகள் நவம்பர் 2024 கா லண்டர் (Post No.13,853) 4/11

ஒரு லட்சம் பெண்களை எரித்துக் கொன்ற மஹா பாவிகள்! (Post No.13,851) 4/11

சீனக் கதை: செவிடன் காதில் சங்கு ஊதியது போல! (Post No.13,858)

நெய்யை உருக்கி, தயிரைப் பெருக்கி சாப்பிட வேண்டும் (Post No.13,861)

காந்திஜி சாப்பிட்டதை நாமும் சாப்பிடலாமே ! (Post No.13,868)9/11

கபிலேஸ்வரம் சிவன் கோவில் Part- 44 (Post No.13,907)20/11

சோமபாலம்/ சோமபால்யம் கோவில்-43 (Post No.13,855)5/11

கனவில் கண்ட சுப சகுனங்கள்:  காளிதாசன் சொல்கிறான் (Post.13,878)12/11

ராமாயணத்தில் தசரதன், பரதன், திரிசடை கண்ட கனவுகள் (Post No.13,892)16/11

கதாசரித் சாகரத்தை வெளியிட்ட  ஹெர்மன் ப்ரொக்கோஸ் (Post No.13,895)17/11

கண்ணன் பெயரில் உள்ள மர்மம் ! 25/11; (Post No. 13,931)

மத்தியக் கிழக்கு நாடுகளில் சுவையான கல்வெட்டுகள் ! (Post No.13,912) 21/11

பீமாவரம் கோவில்கள் – 46 (Post No.13,935) 26/11

பிக்கவோலு விநாயகர் கோவில் -45 (Post No.13,917)22/11

பாரதியார் , சங்கரர் , விவேகானந்தர் இளம் வயதில் மறைந்தது ஏன் ? (Post No.13,923)23/11

QUIZ சைதன்யர் பத்து QUIZ (Post No13,940)27/11

சீனாவில் குமாரவிஜய செய்த சாதனைகள் (Post No.13,926)

24/11

சிலப்பதிகாரத்தில், ஆண்டாள் பாடலில் கனவுகள் (Post.13,888)15/11

QUIZ நிம்பர்கர் பத்து QUIZ  (Post No.13,953)30/11

தொல்காப்பியத்தில் கனவுகள் (Post No.13,882)13/11

திருக்குறள்,  தமிழ்ப் பழமொழிகளில் கனவுகள் (Post No.13,885)14/11

தமிழில் இலக்கிய நோபல் பரிசு யாருக்கு? (Post No.13,900)18/11

டிசம்பர் 2024 காலண்டர்; மீண்டும் பாரதி! (Post No.13,945)28/11

விலங்குகள் கனவு காணும்! தமிழர்கள் கண்டுபிடிப்பு! (Post No.13,875) 11/11

வறுத்த பருப்பை விடாதே , சுட்ட எண்ணெயைத் தொடாதே (Post.13,865) 8/11

QUIZ வல்லபர் பத்து QUIZ (Post No.13,949) 29/11

ரோமாபுரிக்கு அரி, கரி, புலி, கிளி ஏற்றுமதி (Post No.13,904)19/11

ரிக்வேதப் புலவர் வாமதேவ ரிஷி நாய் மாமிசம் சாப்பிட்டதற்கு புது விளக்கம்! (Post No.13,918) 22/11

ரிக் வேதத்துக்கு அகராதி வெளியிட்ட ஹெர்மன் கிராஸ்மான் (Post No.13,871)

ஞானமயம் வழங்கும்உலக இந்து செய்தி மடல் 24-11-2024

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 17-11-2024 (Post No.13,897)17/11

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 10-11-2024 (Post No.13,873)

உலக இந்து செய்திமடல் 1-11-2024 (Post No.13,840) 1/11

தமிழ் தெரியுமா ? CROSSWORD – 20112024, ;also 1, 6, 8, 22,30,

—-subham—

Tags- London Swaminathan’s November 2024 Articles Index ,Index No.144 

தெலுங்கு மொழிக் கவிஞர் போதனாவைத் தெரியுமா ? (Post No.13,976)

Written by London Swaminathan

Post No. 13,976

Date uploaded in London – 6  DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 தெலுங்கு மொழிக் கவிஞர் போதனாவைத் தெரியுமா ? (Post No.13,976)

போதனா (Bammera Pothana (1450–1510)

ஆந்திரத்தின் புகழ்மிகு வேமனா  கதையைக் கண்டோம். போதனா கதையையும் கேளுங்கள்

போதனா யார்? எங்கே ,எப்போது வாழ்ந்தார் ?

தெலுங்கு மொழியில் பாகவத நூலை எழுதி அம்மக்களின் நாவிலும் இதயத்திலும் நீங்காத நினைவு பெற்றவர் போதனா.

ஆந்திரத்தில் கடப்பா மாவட்டத்தில் ஒன்றிவிட்டாவில்  600 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

அவருடைய தந்தையின் பெயர்- கேசனா;

தாயின் பெயர்- லக்ஷ்மியம்மா.

போதனா பிறந்த இடம் , காலம் பற்றி சில கருத்து வேறுபாடுகள் உண்டு  தெலுங்கானாவில் உள்ள பம்மெரா கிராமத்தில் பிறந்த தாவும் சொல்லுவார்கள்

அவர் கால அரசர் – Padma Nayaka king of Rachakonda ராசகோண்டாவின் பத்ம நாயக்க.

அவருடைய குரு யார் ?

அவர் சிறு வயதில் அதிகம் கற்கவில்லை. ஒரு நாள் வயலில் மாட்டு மேய்த்துக் கொண்டிருந்தபோது யோகி ஜிதாநந்தர் அவரைச் சந்தித்து ஞான உபதேசம் செய்தார். அதுமுதற்கொண்டு அவர் ஆன்மீக ஞானம் பெற்றார்.

போதனா என்ன நூல்களை எழுதினார் ?

போதனா தெலுங்கு மொழியில் கவிதை வடிவில் கிருஷ்ணரின் கதை சொல்லும் பாகவதத்தை எழுதினார். அது தவிர நாராயண சதகம், போகினி தாண்டகம், வீரபத்ர விஜயம் ஆகிய நூல்களையும் எழுதினார். ஸ்ரீ சிங்க பூபாலன் என்பவரின் கள்ளக்காதலி மீது இவர் எழுதியது போகினி தாண்டகம்.

இராம பிரானே அவருக்கு தரிசனம் தந்து, பாகவதத்தை எழுதச்    சொன்னார். இதை அவரே கவிதையில் எழுதியுமுள்ளார்

పలికెడిది భాగవతమట

పలికించెడి వాడు రామభధృండట నే

పలికిన భవహర మగునట

పలికెద వేరొండు గాథ పలుకగనేల

PalikeDidhi Bhagavatamata

Palikinchedivadu Ramabhadrundata Ne

Palikina Bhavaharamagunata

PalikedaVerondu Gaatha PalukagaNela

Translated it means : “That which is spoken is the Bhagavatam and the one who made me speak/chant this is Lord Rama. The result of chanting this (Bhagavatamata) is ultimate freedom, the Liberation of soul. So, let me sing it, since there is no other story better than this (Bhagavatam).”

முதல் அற்புதம் என்ன ?

போதனாவின்  உறவினரின் பெயர் ஸ்ரீநாதர். அவர் வட்டார அரசரின் ஆஸ்தானக் கவிஞர்; பெரிய பண்டிதர். போதனாவைக் காண பல்லக்கில் வந்தார். அப்போது போதனா பாவாதம் எழுதிக் கொண்டிருந்தார்; அவருடைய மகன் மல்லண்ணா  , வயலில்  உழுது கொண்டிருந்தார் . ஸ்ரீ நாதர் தனது சக்தியைக் காட்டுவதற்காக முன் பக்கத்திலுள்ள பல்லக்குத் தூக்கிகளை நகரச் சொன்னார். அப்படியும் பல்லக்கு முன்னே நகர்ந்தது . உடனே போதனா, நுகத்தடியிலுள்ள ஒரு மாட்டினை அவிழ் த்துவிடு என்று மகனிடம் சொன்னார். இன்னும் ஒரு மாடு வழக்கம்போல உழுதது. பின்னர் ஸ்ரீ நாதர்  பின்புறமுள்ள பல்லக்குத் தூக்கிகளையும் விலகுங்கள் என்றார்; அப்படியும் பல்லக்கு அந்தரத்தில் ஊர்ந்து வந்தது. உடனே போதனா தன் மகனிடம் இரண்டாவது மாட்டையும் அவிழ்த்து விடு என்றார் அப்படிச் செய்தபின்னரும் ஏர் தானாகவே உழுது கொண்டிருந்தது; உடனே ஸ்ரீ நாதர் பல்லக்கிலிருந்து இறங்கி அவரிடம் மன்னிப்புக் கோரினார்.

இரண்டாவது அற்புதம் என்ன ?

பாகவத நூலை அரசரிடம் சமப்ப்பித்தால் நல்ல வெகுமதியும் புகழும் கிடைக்கும் என்று போதனாவிடம் ஸ்ரீநாதர் சொன்னார். போதனா பதிலே சொல்லவில்லை; ஆனால் ஸ்ரீநாதர், அரசரிடம் போய் , போதனா வரப்போவதாகச் சொல்லிவிட்டார். பல நாட்கள்  ஆகியும் போதனா வராததால் காவலாட்களை ஏவி அவரை இழுத்து வருமாறு அனுப்பினார். ஆனால் அவர்களை பன்றி கள் தாக்கி அழித்தன. வீட்டுக்குத் தீ வைக்கும் படி சேவகர்களை அரசன் அனுப்பினான். ஆனால் மன்னரின் மாளிகையே தீப்பிடித்தது.

மூன்றாவது அற்புதம் என்ன ? 

கோபம் கொண்ட அரசன் போதனாவை கிராமத்திலிருந்தே விரட்டினான்; அரசனுடைய செல்வமெல்லாம் அழியத்  தொடங்கியது; பின்னர் போதனாவை அழைத்து நிறைய செல்வத்தை அளித்து ஆதரித்தான் .

இவ்வாறு வாழ்நாள் முழுதும் இறைவனே வந்து போதனாவுக்கு  உதவினார்.

நான்காவது நிகழ்ச்சி என்ன ?

போதனா எழுதிய பாகவத நூலில் ஒரு தவறு இருப்பது போல ஸ்ரீநாதர் கருத்து தெரிவித்தார் அதாவது கஜேந்திர மோட்சம் அத்தியாயத்தில், விஷ்ணு கையில் சார்ங்கம் இருப்பதாக எழுதவில்லையே என்றார். அவருக்குப் பாடம் கற்பிக்க வேண்டி போதனா ஒரு தந்திரம் செய்தார். ஸ்ரீ நாதரின் மகனை ஓரிடத்தில் பாதுகாப்பாக ஒளித்துவிட்டு , அவர் சாப்பிடும் போது, உங்கள் மகன் பாழுங்கிணற்றில் விழுந்துவிட்டான் என்று போதனா சொன்னார். அவர் பாதி சாப்பாட்டினை நிறுத்திவிட்டுப் பாழுங்கிணற்றுக்கு ஓடிவந்தார். கயிறும், தூக்குவதற்கான கருவிகளும் இல்லாமல் எப்படிக் காப்பாற்றப்போகிறீர்கள்? என்று கேட்டப்போது விழித்தார். பின்னர் மகன் பாதுகாப்பாக இருப்பதைத் தெரிவித்தார்; அப்போது கஜேந்திர மோட்சத்தை விளக்கினார். உங்கள் மகனைக் காப்பாற்ற எந்தவிதக் கருவியும் எடுக்காமல் கிணற்றுக்கு ஒடி வந்தீர்களே ! அதைவிட பக்கதர்களிடையே இறைவனுக்கு கருணையும் அவசரமும் உண்டு; ஆகையால் நான் சார்ங்கம் பற்றிக் குறிப்பிடவில்லை என்றார்.

அவருடைய தெலுங்கு மொழி பாகவதம் அவருக்கு அழியாத புகழை ஈட்டித்தந்தது. பாகவத நூலின் தெலுங்குப் புஸ்தகத்தை ஓடும் கார்ட்டூன் திரைப்படமாக எடுக்க அமெரிக்க நாசா விஞ்ஞானி புட்சா மல்லிக் முயற்சி எடுத்துள்ள செய்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில நாளேட்டில் வெளியானது

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் THE NEW INDIAN EXPRESS

Updated on:

29 Sep 2019, 5:27 am

As part of keeping Telugu’s beloved poet Pothana’s Bhagavata poems alive for generations to come, a retired scientist of NASA Putcha Mallik is planning to make the animated versions of Telugu Bhagavatham.

Putcha Mallik, who was currently living in Houston, was in touch with Sony for bringing the animated Telugu Bhagavatham.

“Mallik is planning to bring animated versions in Telugu, Kannada, Hindi and English. So that pan-India will know about the greatness of Pothana and Telugu Padyam (metered poetry),” said retired IAS officer MVS Prasad, who was organising various programmes locally to promote Pothana’s magnum opus, along with Mallik.

–subham—-

Tags– போதனா , தெலுங்கு மொழி, பாகவதம்,  ஸ்ரீநாதர்.

அதீத உளவியல் விஞ்ஞானிகள் அதிசயித்த பாபா! (Post No.13,975)



WRITTEN BY S NAGARAJAN

Post No. 13,975

Date uploaded in London – 6 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

நவம்பர் 23 ஶ்ரீ சத்யசாயிபாபா ஜெயந்தி

kalkionline தீபம் இதழில் 23-11-2024 அன்று வெளியான கட்டுரை!

அதீத உளவியல் விஞ்ஞானிகள் அதிசயித்த பாபா!

ச.நாகராஜன்

அற்புத அவதாரமான ஶ்ரீ சத்யசாயிபாபா (தோற்றம் 23-11-1926    சமாதி 24-4-2011) தன் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய அற்புதங்கள் ஏராளம், ஏராளம்.

உலகெங்கிலுமிருந்து அவரை தரிசிக்க வந்து அவரது பக்தர்களானோர் அனுபவித்த லீலைகளும் ஏராளம்.

இவர்களில் ஒருவர் பிலிஸ் கிறிஸ்டால். (Phyliis Krystal).

இங்கிலாந்தில் லண்டனில் 1914-ம் ஆண்டு பிறந்த கிறிஸ்டால் இந்திய ஆன்மீக மகான்கள் பால் அளவற்ற ஆர்வம் கொண்டவர். ஒரு நாள் அவர் சத்யசாயிபாபாவின் படத்தைத் தற்செயலாகப் பார்க்கவே, அவரைப் பற்றி அறிய ஆர்வம் கொண்டு 1973ம் ஆண்டு தன் கணவருடன் பங்களூரை வந்து அடைந்தார்.

அவரது கணவர் சிட்னி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரபலமான அட்டர்னி. தம்பதியினருக்கு இரு மகள்கள் உண்டு.

தரிசனத்திற்காக அமர்ந்திருந்த வரிசையில் கிறிஸ்டாலைப் பார்த்த பாபா,  நாளைக்கு காலை 9 மணிக்கு பேட்டி அறைக்கு வா, பேண்டுடன் வா” (bring the band) என்றார். கிறிஸ்டாலுக்கு ஒன்றும் புரியவில்லை. பேண்ட் என்றால்..? அவரது குழப்பத்தைப் பார்த்து குறும்பாகப் புன்னகைத்த பாபா HUS-BAND ஹஸ்பெண்ட் என்றார். அனைவரும் சிரித்தனர்.

இப்படி ஆரம்பித்தது பாபாவினுடனான அணுக்கமான தரிசனங்கள்.

ஒரு நாள் பாபா ஒரு திருமணத்தை நடத்தி விட்டு வந்ததாகச் சொன்ன போது சிட்னி தநது மனைவியுடனான 33வது மணநாள் ஜனவரி 30ஆம் தேதி வரவிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பாபா அன்று அவசியம் அவர்களைப் பார்ப்பதாகத் தெரிவித்தார்.

ஜனவரி 30 வந்தது.

யாரோ ஒருவர் கதவைத் தட்ட யார் என்று பார்த்த கிறிஸ்டாலிடம் ஒருவர், பாபா அவர்களை பார்க்க வரச் சொன்னதாகச் சொன்னார்/ உலகின் ஆகப் பெரும் அதீத உளவியல் விஞ்ஞானிகளான டாக்டர் கார்லிஸ் ஓஸிஸ் மற்றும் டாக்டர் எர்லெண்டர் ஹரால்ட்ஸன் ஆகியோரும் பாபாவால் அழைக்கப்பட்டிருந்தனர்.

கார்லிஸ் ஓஸில் நியூயார்க்கில் உள்ள அமெரிக்க அதீத உளவியல் ஆய்வு மையத்தின் இயக்குநர். (Dr. Karlis Osis Director of the American Society for Psychical Rresearch) ஹரால்ட்ஸன் ரெய்க்ஜவிக்கில் உள்ள ஐஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் உளவியில் பிரிவைச் சேர்ந்தவர்.

தொடர்ந்து பாபாவின் அதீத உளவியல் ஆற்றல்களைப் பற்றி ஒரு பெரும் ஆய்வை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

திடீரென்று பாபா சிட்னி -கிறிஸ்டால் தம்பதியின் 33வது திருமண நாளையொட்டி அவர்களுக்கு வைதீக ரீதியிலான ஆன்மீகத் திருமணம் நடத்தப் போவதாக அறிவித்தார்.

சஷ்டியப்த பூர்த்தி என்றால் என்ன என்று அவர்களுக்குப் பின்னால் சிலர் விளக்கினர்.

சிட்னியை அருகில் அழைத்தார் பாபா. இரு விஞ்ஞானிகளும் மிக அருகில் இருந்து உன்னிப்பாக பாபாவைக் கவனிக்கலாயினர்.

தனது கையை வட்டமாகச் சுழற்றிய பாபா ஒரு தங்க மோதிரத்தை அனைவருக்கும் காட்டி சிட்னியிடம் வழங்கினார். சைகை மூலம் கிறிஸ்டாலை அழைத்த பாபா அதை சிட்னியிடமிருந்து வாங்கி சிட்னியின் இடது கை மோதிர விரலில் அணிவிக்கச் சொன்னார்.

பின்னர் தன் கையை விஞ்ஞானிகளும் இதர அனவரும் பார்க்க அது வெறும் கையாக இருப்பதைக் காண்பித்து விட்டு கையைச் சுழற்றினார். ஆ! என்ன அதிசயம். இப்போது அவரது கையில் ஒரு பெரிய நெக்லஸ் ஜொலித்தது. 32 அங்குல நீளம் உள்ள பெரிய அந்த நெக்லஸ் அனைவரையும் கவர்ந்தது. அதில் நவரத்தினங்கள் எட்டு செட் பதிப்பிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு செட்டும் ஒரு தங்க மணியால் பிரிக்கப்பட்டிருந்தது. ஆக மொத்தம் எல்லாமாகச் சேர்ந்து 81 மணிகள்! நெக்லஸின் கீழே பாபாவின் படம் கொண்ட ஒரு டாலர். அதில் உலகின் ஐந்து பெரும் மதங்களின் அடையாளச் சின்னங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன. கண்களில் நீர் ததும்ப அதைப் பெற்று அணிந்தார் கிறிஸ்டால். அதைப் புடவையின் உள்ளே இருக்கும்படி அணிய வேண்டும் என்று பாபா அறிவுறுத்தினார். அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கலாமா என்று கேட்ட கிறிஸ்டாலிடம்,”, தாராளமாக, இவர்கள் உனது சகோதர, சகோதரிகள் தாம்” என்றார் பாபா. நவகிரகங்களின் பாதுகாப்பைத் தரும் நவரத்தினங்கள் இவை என்றார் பாபா.

ஹிந்து முறைப்படி இது மங்கலசூத்ரம் (அல்லது தாலி) எனப்படும் என்பதை கிறிஸ்டால் தம்பதியினர் விளங்கிக் கொண்டனர்.

நெக்லஸை விஞ்ஞானிகள் பார்த்து பிரமித்தனர். விஞ்ஞானிகளைப் பார்த்த பாபா, “இது எப்படி நடந்தது என்று உங்களால் விளக்க முடியுமா?” என்று கேட்டு அவர்களைச் சீண்டினார்.

முடியாது என்று தலையை அசைத்தனர் விஞ்ஞானிகள்.

அவர்கள் தூய்மையான இதயம் கொண்டவர்கள் என்பதால் அவர்களது ஆய்வுக்காகத் தேவையான அளவு வாய்ப்புகளைக் கொடுத்து வருவதாகக் கூறிய பாபா, தனது சங்கல்பத்தினாலேயே அப்படிப்பட்ட பொருள்களைத் தாம் சிருஷ்டிப்பதாகக் கூறினார்.

இதற்கு அறிவியல் ரீதியாக விளக்கத்தை உங்களால் அளிக்க முடியுமா என்று அந்த இரு விஞ்ஞானிகளும் பாபாவைக் கேட்டனர்.

“உலோகாயத விஞ்ஞானம் ஒரு நாளும் இதை அறிய முடியாது. விஞ்ஞானத்தின் எல்லை குறுகிய ஒன்று. அது படைக்கப்பட்ட உலகைத் தாண்டிச் செல்ல முடியாது. விஞ்ஞானம் சோதனைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆன்மீகமோ அனுபவத்தையும் உள்ளுணர்வையும் அடிப்படையாகக் கொண்டது. ஒரு பெரிய டாக்டரும் கூட சிகிச்சை செய்ய எக்ஸ்ரே உள்ளிட்ட பல சோதனைகளை எடுக்கிறார். ஆனால் எனக்கு எதுவும் தேவையில்லை. நேரடியாக சரியான சிகிச்சையை நான் தந்து விடுவேன்” என்றார் பாபா.

தங்களது சோதனைகள்  மற்றும் விதிகளின் படி கட்டுப்பாடான சூழ்நிலையில் பாபா இதைச் செய்து காட்ட வேண்டும் என்று இரு விஞ்ஞானிகளும் வேண்டினர்.

பாபா பொறுமையை இழந்தார். “இதோ உன் மோதிரத்தைப் பார், “ என்று அவர்களில் ஒருவரிடம் சொன்னார். அவர் தனது மோதிரத்தைப் பார்த்தார். அதில் பதிக்கப்பட்டிருந்த படத்தைக் காணோம். கீழே விழுந்து கிடக்கிறதா என்று தேடலானார். அனைவரும் தேடினர். ஆனால் போனது போனது தான். அந்தப் படம் கிடைக்கவில்லை.

“இது எனது எக்ஸ்பரிமெண்ட்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பாபா.

இரு தினங்கள் கழிந்தன. இரு விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் அழைக்கப்பட, பாபா மோதிரத்தில் படத்தை இழந்தவரைப் பார்த்து, “என்ன படம் கிடைக்கவில்லையா?  அது வேண்டுமா?” என்று கேட்டார். அவரிடமிருந்து மோதிரத்தை வாங்கிக் கொண்ட பாபா அதே படம் தான் வேண்டுமா அல்லது வேறு படம் வேண்டுமா என்று கேட்டார்.

அதே படம் தான் வேண்டும் என்று பதில் வந்தது.

உடனே பாபா மோதிரத்தைத் தன் கையில் மடக்கி வைத்துக் கொண்டு மூன்று முறை ஊதினார். கையைத் திறந்தார். என்ன ஆச்சரியம்!

தொலைந்து போயிருந்த அந்தப் படம் இப்போது பதிக்கப்பட்டிருந்தது. நன்கு பிரகாசமாகத் திகழ்ந்த அந்தப் படத்தில் பின்புலம் மட்டும் இப்போது வேறாக இருந்தது.

இரு விஞ்ஞானிகள் உட்பட அனைவரும் ஓவென்று கத்தினர். உஷ் என்று விரலை உதடுகளில் வைத்த பாபா அவர்களின் கூச்சலை மட்டுப்படுத்தச் சொன்னார்.

விஞ்ஞானிகளுக்கே ஒரு எக்ஸ்பெரிமெண்ட் தந்த பாபாவை கிறிஸ்டாலும் சிட்னியும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தனது அனுபவத்தை சாயிபாபா – தி அல்டிமேட் எக்ஸ்பீரியன்ஸ் என்ற புத்தகமாக  எழுதி கிறிஸ்டால் வெளியிட்டார்.

நீண்ட கால அணுக்கத் தொண்டராக இருந்த கிறிஸ்டால் அமெரிக்காவிலிருந்து லண்டன் சென்று தன் இறுதி நாட்களைக் கழித்தார். சிட்னி 1993-ம் ஆண்டு 85-ம் வயதில் மரணமடைந்தார். கிறிஸ்டால் 102 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்து 2016-ல் டிசம்பர் 10-ம் நாளன்று காலமானார்.

வாழ்நாள் முழுவதும் தொண்டிற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சிட்னி-கிறிஸ்டால் தம்பதி மறைந்த பின்னர் அமெரிக்காவில் நிறுவப்பட்ட சிட்னி அண்ட் பிலிப் கிறிஸ்டால் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு அவர்களது தொண்டைத் தொடர்கிறது. 

***

ஆதாரம் : Saibaba The Ultimate Experience by Phyllis Krystal (Chapter 13)

Interesting Narada, Suka Anecdotes told by Sri Ramakrishna – 2 (Post no 13,974)


Written by London Swaminathan

Post No. 13,974

Date uploaded in London – 5  DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Continued from yesterday’s post.

6

In Jatras depicting the life of Krishna , the play commences with the beating of the drums and the loud singing of O Krishna, Come, Come! Oh Dear!. But the man who plays the part of Krishna pays no heed to the noise and goes on complacently, chatting and smoking in the green room behind the stage. But as soon as the noise ceases, and the pious sage Narada, overflowing with love enters the stage with sweet and soft music and summons Krishna to appear, Krishna finds that he can no longer remain indifferent. Hurriedly he then enters the stage. As long as the spiritual aspirant calls on the Lord with mere lip prayers Come O Lord, the Lord does not appear. when the Lord comes the heart of the devotee melts into divine emotion, and all loud utterances cease for ever. The Lod cannot tarry when his devotee calls on Him from the depth of his heart overflowing with profound love.

7

The breeze that comes from the ocean of Brahman affects every heart on which it flows. The ancient sages Sanaka , Sanantana and others were softened by this breeze. The God intoxicated Narada however obviously got the glimpse of the Divine ocean from a distance; and so forgetting his own self, he had been wandering over the world like a mad man , always singing the praise of Lord Hari. Sukadeva, a born ascetic, only touched the water of that ocean thrice with his hand, and ever since he had been rolling about like a child through the fulness of its ecstasy. And the great teacher of the universe Mahadeva, drank three handfuls of water thereof and has since been lying motionless like a corpse, intoxicated with Divine bliss. Who can fathom the depth, or the mysterious power, of this ocean?

8

For this Kali Yuga, Naradiya Bhakti or communion with God by love, devotion, self surrender as practised and preached by the Rishi Narada in enjoined. There is now hardly any time for Karma Yoga i.e. for doing various ritualistic duties laid on man by the scriptures. Don’t you see that the well known decoction of the medicinal roots known as Dashamula -pachana is not the remedy for fevers of the present day? The patient runs the risk of being carried off before the medicine has had time to take effect. Fever mixture is therefore the order of the day.

9

So, I say, in the beginning there is much fuss of Karma. But the more you proceed towards God, the less will it grow. Finally comes the complete renunciation of work and the attainment of Samadhi. Generally, the body does not remain long after the attainment of Samadhi. But in the case of some it remains for the work of teaching the world. Sages like Narada and Divine Incarnations like Sri Chaitanya are examples of this.

After a well is dug some throw away all the spades and baskets, but others preserve them with the idea that they may be of some use to any of their neighbours. Such great souls are moved with pity at the sight of the sufferings of the world. They are not so selfish as to care only for the attainment of Jnana for themselves.

—subham—-

 Tags- Narada, Suka  Interesting Anecdotes ,by Sri Ramakrishna – part 2 

மலையாள அகராதி தயாரித்த ஹெர்மன் குண்டர்ட் (Post No.13,973)

Written by London Swaminathan

Post No. 13,973

Date uploaded in London – 5  DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஜெர்மானிய அறிஞர்கள் சம்ஸ்க்ருத மொழிக்கு மட்டும் சேவை செய்யவில்லை; தமிழ், மலையாளம் போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் உதவினர்.  ஹெர்மன் குண்டர்ட் என்பவர் வங்காளி, ஹிந்துஸ்தானி, மலையாள, தமிழ் மொழிகளைக் கற்றார். அவர் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவுக்கு வந்தார். கேரளத்திலுள்ள தலைச் சேரியில் தங்கி கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார். அதற்காக மலையாளத்தைக் கற்று பைபிளின் புதிய ஏற்பாட்டு NEW TESTAMENT  பகுதியை மலையாள மொழியில் ஆக்கினார்; அத்தோடு மலையாளம்- ஆங்கில அகராதியையும் தயாரித்தார்.

ஹெர்மன் குண்டெர்ட் 1814- ஆம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள ஸ்டுட்கார்ட் நகரில் பிறந்தார்; துர்பிங்கன் பல்கலைக்கழகத்தில் சமயம் பற்றி கற்றார். கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவுக்குச் செல்ல முடிவு செய்து லண்டனில் ஹிந்துஸ்தானி, வங்காளி மொழிகளைக் கற்ருவியது கேரளத்திலுள்ள தலைச்சேரி நகரில் பேசல் BASEL MISSION  மிஷனில் பணியாற்றினார் .

1836–ஆம் ஆண்டில் முதலில் திருநெல்வேலிக்கு வந்தார் ; அங்கு மதப் பிரசார வேலையில் இருந்த

போது தமிழ் மொழியைக்கற்று பைபிள் /புதிய ஏற்பாடு தொடர்பான சொற்களை வைத்து கிரேக்க- தமிழ் அகராதியை அச்சிட்டார்.

மங்களுருக்குச் சென்று கன்னட மொழியையும் கற்றார் ; அதற்குப் பின்னர் தலைச்சேரிக்கு வந்தார். அவரும் அவருடைய மனைவியும் மலையாள மக்களைப் போல வாழ வேண்டும் என்று எண்ணி ஒரு குடிசையில் வாழ்ந்தனர். அரிசிச் சோற்றினையும் தினை வகைத் தானியங்களையும் உண்டனர். பின்னர் உடல் நலம் குன்றியவுடன் அந்த உணவுவகைகளைக் கைவிட்டு வழக்கம் போல மாமிச உணவுகளுக்குத் திரும்பினார்கள் கன்னட, மலபார்/ மலையாள ஊர்களில் இரண்டு ஆண்டுகளுக்கு அரசாங்கப்  பள்ளி இன்ஸ்பெக்டராகவும் பணிபுரிந்தார். உடல்நலம் குன்றவே 1859 ஆம் ஆண்டில் ஜெர்மனிக்குத் திரும்பினார்.

HERMANN GUNDERT 1814-1893

ஹெர்மன் குண்டர்ட்

பிறந்த தேதி – 4-12-1814

இறந்த தேதி – 25-4-1893

பிறந்த ஊர் – STUDGART ஸ்டுட்கார்ட்

கல்வி கற்ற இடம்  – TURBINGEN UNIVERSITY துர்பிங்கன் பல்கலைக்கழகம்

வேலைபார்த்த இடம் – தலைச்சேரி INDIA AND GERMANY/ஜெர்மனி

எழுதிய  அல்லது மொழிபெயர்த்த நூல்கள்

பைபிள் புதிய ஏற்பாட்டிலுள்ள கிரேக்க- தமிழ் அகராதி

மலையாள இலக்கணம்

மலையாள கவிதைகள், உரைநடைத் தொகுப்பு

மலையாள கிறிஸ்தவ மதப் பத்திரிகைகள்

மலையாள பழமொழிகள்

பைபிளின் மலையாள மொழிபெயர்ப்பு- புதிய ஏற்பாடு மட்டும்

மலையாள பாடப் புஸ்தகங்கள்

மலையாள — ஆங்கில அகராதி

இவை தவிர ஜெர்மன் ஓரியண்டல் சொசைட்டியின் இதழ்களில் கட்டுரைகள் .

சம்ஸ்க்ருதத்தில் உள்ள தமிழ்ச் சொற்கள் என்ற கட்டுரையில் தாவரங்கள் மற்றும் சில பொருட்கள்  எப்படி உரு மாறி வழங்குகின்றன என்று எழுதினார் .

மலையாளிகளிடையே கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காக அதன் இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் பாடல்களையும் எழுதினார்; அதை மலையாள கிறிஸ்தவர்கள் இன்றும் பாடி வருகின்றனர் .

ஜெர்மனிக்குத் திரும்பியவுடன் கிறிஸ்தவத்தைப் பரப்பும் மிஷன் மேகஸின் என்ற பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார். அதிலும் அவர் கட்டுரைகளை எழுதினார் . . அப்போதுதான் அவரது சிறந்த படைப்பான மலையாள -ஆங்கில அகராதி (1872) அச்சானது; கோட்டயத்தில் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1973 ஆம் ஆண்டில் அதன் புதிய பதிப்பினை வெளியிட்டார்கள்.

அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு, 1893 -ஆம் ஆண்டில் இறந்தார்.

அவர் இறந்தாலும் அவருடைய பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் இந்தியத் தொடர்பினை விடாமல் வைத்துக்கொண்டனர். பேரர்களில் ஒருவரான ஹெர்மன் ஹெஸ்ஸே HERMANN HESSE என்பவர் புகழ்பெற்ற ஜெர்மானியக் கவிஞர் ஆவார்.

—-SUBHAM—

TAGS- மலையாள அகராதி , ஹெர்மன் குண்டர்ட், HERMANN GUNDERT