விஷத்தை விஷத்தால் முறிக்கலாம் என்பது சீனா, கொரியா ,ஜப்பான் ,வியட்நாம் முதலிய நாடுகளில் உள்ளது . இதற்கு இணையாக முள்ளை முள்ளால் எடுக்கனும், வைரத்தை வைரத்தால் அறுக்கலாம் என்பதைச் சொல்லலாம் .
இது ஹோமியோபதி தத்துவம், இந்துக்களின் ஆசமனம், பீமனின் மஹாபாரதக் கதையால் உண்டான பழமொழி
கெளவர்களுக்குப் பாண்டவர்கள் மீது அசாத்தியமான பொறாமை; அதிலும் குறிப்பாக பீமன் மீது அவர்களுக்கு காட்டம் அதிகம். அவனை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்று சின்ன வயதிலேயே முயற்சித்தனர். ஒரு முறை இரு தரப்பினரும் விளையாடச் சென்றபோது பீமனுக்கு விஷத்தைக் கலந்து கொடுத்து சாப்பிட வைத்தனர். அத்தோடு நில்லாமல் விஷப் பாம்புகள் உள்ள குளத்தில் அவனைத் தள்ளி விட்டனர் ; அவை பீமனைக் கடிக்கவே விஷம் விஷத்தை முறித்தது; பீமன் அழகாகக் குளித்துவிட்டு வெளியே வந்தான்.
இது கணித பாடத்திலும் நாம் கற்கும் உண்மை ; மைனஸ் என்பதை மைனஸால் பெருக்கினால் பிளஸ் தான் வரும்.
Minus Multiply Minus is Plus. Negative multiplied by Negative is a positive number, which means that the product of two negative integers is always positive.
ஹோமியோபதியும் இந்துக்களின் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததே ; எந்தப் பொருள் உடல் நலத்தைக் கெடுக்குமோ அந்தப்பொருளைச் சிறுகச்சிறுக அளித்தால் அதுவே எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் .
சந்திர குப்த மெளரியனை உருவாக்கி நந்த வம்சத்தைப் பூண்டோடு அழித்த சாணக்கியன், சந்திர குப்தனுக்கு நாள்தோறும் சிறுகச்சிறுக விஷத்தைக் கொடுத்தான் இதனால் அவனுக்கு விஷத்தினால் சாவு ஏற்பட முடியாது.
பிராமணர்கள் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரின் ஆறு, ஏரி, குளம், கிணற்றின் நீரை முதலில் மூன்று முறை கையில் எடுத்து இறைவன் பெயரைச் சொல்லி அருந்துவர்; இதற்கு ஆசமனம் என்று பெயர்.. இதனால் அந்த ஊர்த் தண்ணீரால் அவர்களுக்கு எந்தக் கெடுதியும் வராது
****
புலித் தோல் போர்த்திய பசு ;
புலித் தோல் போர்த்திய கழுதை
என்பன குறள் , பஞ்ச தந்திரக் கதைகளிலும் உள்ளது. இது பைபிள் வரை சென்ற பழமொழி. விலங்குகளின் பெயர்கள் மட்டும் ஆடு, மாடு, புலி, சிங்கம் என்று மாறும். அதாவது வேறு வேறு வேஷம் போட்டு மக்களை ஏமாற்றுவது அல்லது பயமுறுத்துவதை இது எடுத்துக்காட்டும்.
பஞ்ச தந்திரக் கதை பலருக்கும் தெரிந்ததுதான்
சுகுப்தம் ரக்ஷ்யமானோ அபி தர்ஷயன் தருணம் வபுஹு
வ்யாக்ர சர்ம ப்ரதிச்சன்னா நோ வாக்ருதே ராசபோ ஹதஹ
இதன் பொருள் : கழுதையானது புலியின் தோலை அணிந்து வந்து சுகமாக வசித்தது; எல்லா பிராணிகளும் பயந்து ஓடின. அதை பார்த்து சந்தோஷத்தில் கழுதை தனது சுயமான குரலில் கத்தவே எல்லா பிராணிகளும் அதைக் கண்டு அடித்துக் கொன்றது ; கழுதையை அதன் குரலே காட்டிக் கொடுத்துவிட்டது.
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.–குறள் 273:
இதை வள்ளுவன் பசுமாட்டுக்குப் பயன்படுத்துகிறான்
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.- என்பது இதன் பொருள்.
ஒரு குட்டிக் கதை
சீனாவிலும் இந்த விஷயம் ஒரு கதையாகச் சொல்லப்படுகிறது. ஒரு நரியைப் புலி பிடித்துக்கொண்டது ; அதனிடமிருந்து தப்பிக்க நரி ஒரு தந்திரம் செய்தது. நான் யார் தெரியுமா? காட்டு ராஜாவின் பிரதிநிதி; என்னை இறைவனே அந்தப் பதவியில் அமர்த்தியுள்ளார்; நீ வேண்டுமானால் என்னுடன் வந்து பார்; எல்லா மிருகங்களும் என்னைக் கண்டு பயந்து ஓடுவதைப் பார் என்று சொல்லி புலியைக் கூடவே அழைத்துச் சென்றது; உண்மையிலேயே எல்லா விலங்குகளும் பயந்து ஓடி ஒளிந்தன ; நரியைக் கண்டு அல்ல; புலியைக் கண்டு அஞ்சி! அது புலிக்குத் தெரியவில்லை!
கன்பூசியஸ் நூலிலும் இதுபோல ஒரு கதை உண்டு. ஒரு ஆடு புலித்தோலைப் போர்த்திக்கொண்டு காட்டில் திரிந்தது. . ஒரு நாள் ஒரு ஓநாய் வேகமாக வருவதைப் பார்த்தவுடன் பீதி ஏற்பட்டது; தன் புலி வேஷத்தையே மறந்து ஓடத் துவங்கியது .
வேஷம் போடுவோரின் சுய ரூபம் ஒரு நாள் வெளிப்பட்டே ஆகும். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது உண்மையே.
–subham—
Tags- உலகம் முழுதும், தமிழ்ப் பழமொழிகள், பீமன் ,பழமொழி
No one in the world has shown any sympathy to asses or donkeys. They treated the animals as dust. They were considered the lowest in the animal kingdom. They were shown as stupid and lazy. Though human beings treated the dogs the same way, they thanked them at least one or two times for their faithfulness. But donkeys worked harder and yet received only bricks and not bouquets.
Europeans went to the lowest level and asked us to beat them along with women!
A woman, an ass and a walnut tree, the more you beat them, the better they will be. This proverb is in other European languages as well (see page 169, A comparative book of Proverbs, Jerzy Gluski, NY, 1971). But neither Shakespeare nor Hindus asked anyone to beat the donkeys or women.
Shakespeare used only ass but with different meaning. In one play he used ass for working hard and in another play he used it as a rude word (buttocks, backside). In other places as low class animals
In Tamil they were used in the same way. It carried very heavy loads of goods along the forest routes. Merchants followed them in carts. Like King Kharavela of Odisah, Pandya king also ploughed the devastated lands of enemies with the donkeys and sowed sesame seeds and horse gram. It is an insult to the defeated king. And we see donkey curses in the inscriptions as well.
There are lot of Tamil proverbs on donkeys but very few verses. In Sanskrit subhasitas (golden sayings) I came across at least 8 verses.
Let us look at Shakespeare first ,
“I Find the Ass in Compound with the Major Part of Your Syllables” …Coriolanus
Act 2, Scene 1
Here Shakespeare meant buttocks to backside. Even today it is used as a slang.
In Midsummer Night’s Dream , he says
BOTTOM
Nothing, good monsieur, but to help Cavalery Cobweb to
scratch. I must to the barber’s, monsieur, for methinks
I am marvelous hairy about the face. And I am such a
tender ass, if my hair do but tickle me, I must scratch.
TITANIA
[Waking] My Oberon, what visions have I seen!
Methought I was enamored of an ass.
—–A Midsummer Night’s Dream
Act 4, Scene 1
And then
DOGBERRY
74. suspect: malapropism for “respect.” 74 Dost thou not suspect my place? dost thou not
75-76. O that he were here to write me down an ass!: —Dogberry wishes that the Sexton had been there to record, in writing, that Conrade called him an ass, so that Conrade would be sure to be punished for that offense. 75 suspect my years? O that he were here to write me
76 down an ass! But, masters, remember that I am an
77 ass; though it be not written down, yet forget not
78 that I am an ass. No, thou villain, thou art full of
79. piety: malapropism for “impiety.”
79 piety, as shall be proved upon thee by good witness.
80 I am a wise fellow, and, which is more, an officer,
81 and, which is more, a householder, and, which is
82. as pretty a piece of flesh: i.e., as fine a mortal man.
83. go to: —This is an expression of scorn, like current expressions such as “go to hell” or “get out of here.” 84-85. a fellow that hath had losses: —Dogberry thinks he should be respected because he has known hardship. 86. handsome: fitting, impressive. 82 more, as pretty a piece of flesh as any is in
83 Messina, and one that knows the law, go to; and a
84 rich fellow enough, go to; and a fellow that hath
85 had losses, and one that hath two gowns and every
86 thing handsome about him. Bring him away. O that
87 I had been writ down an ass!
Much Ado About Nothing
Act 4, Scene 2
Here Ass meant a hardworking one.
****
Panchatantra Verses
Now we can compare them with Tamil proverbs and Panchatantra slokas/couplets
A dog a cock a hangman, all three
Are equally defiling, so is held.
A camel and especially an ass,
Therefore, avoid any contact with them.
The man who touches an ass knowingly
Or out of ignorance may be
Is instructed to have a ritual bath
Fully clothed, to be rid of defilement
–Pancatantra
*****
Story behind a Tamil Proverb
2253. கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல. Like tying an ass and feeding a sacrificial fire.
This proverb relates to the following story. A certain Maharaja had a barber who had evinced great skill in shaving his royal master when he was asleep. To reward him the King resolved to elevate him in the social scale. The brahmans were called and ordered to make a brahman of the barber. They set to work, kindled a sacred fire and the barber was led round it, whilst the priests uttered the required incantations for accomplishing their purpose. The prime minister being of a somewhat facetious temperament determined to metamorphose an ass. As the proverb intimates he kindled a fire and led the animal round it. When the King saw him thus engaged he asked him what he was doing. The prime minister replied by stating that if the brahmans could make a brahman of a barber he thought an ass might be made into a horse, and he was therefore engaged in the ceremony.
*****
Donkey milk price in 2024
Taakshvi Agri Products has 16 donkeys across three breeds on its farm in Kolar.Credit: Special Arrangement A new company in Bengaluru is delivering donkey milk and milk powder. The former is priced at Rs 3,200 a litre and the latter at Rs 30,000 for … latter at Rs 30,000 for half a kilo.
****
Here are Tamil Proverbs with English translation
1711. ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற்போல.
As a Washerman’s vehicle (a donkey) carries its load.
2850. கெட்ட கழுதைக்குத் துஷ்டபுத்தி.
A vicious donkey has mischievous propensities.
233. அம்பலக் கழுதை அம்பலத்திற் கிடந்தால் என்ன, அடுத்த திருமாளிகையிற் கிடந்தால் என்ன ?
What matters it whether the helpless ass lies in an open place or in the adjoining palace.
சந்தனத்தைச் சுமந்து செல்லும் கழுதைக்கு அதன் சுமை மட்டுமே தெரியும்; அதன் வாசனை தெரியாது. அது போலப் பலர் , நூல்களைக் கற்றாலும், அதன் உட்பொருள் தெரியாமல் விலங்குகளைப் போல அலைகிறார்கள்.
ஒப்பிடுக —
கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி /கற்பூர வாசனை?
Does an ass appreciate the odour of musk?
****
ஏகேனோபி ஸுபுத்ரேண சிம்ஹீ ஸ்வபிதி நிர்பயம்
ச ஏவ தசபிப் புத்ரைர் பாரம் வஹதி கர்த்தபீ.
–சுபாஷித ரத்ன சமுச்சயம்
ஒரு குட்டியை என்ற பெண் சிங்கம் அச்சமின்றி உறங்கும். ஆனால் பத்து குட்டிகளை ஈன்றாலும் கழுதை தனது பாரத்தை தானே சுமக்கவேண்டடிவரும்.
(அவரவர் வினைப்பயன் இது என்பது கருத்து)
****
கழுதையின் தூசி
அஜா ரஜஹ கரா ரஜஹ ததா சம்மார்ஜநீ ரஜஹ
தீப மஞ்சகயோஹா சாயா சக்ரஸ்யாபி ச்ரியம் ஹரேத்
கழுதையின் தூசி , ஆட்டின் தூசி துடைப்பத் தூசி– இவை பட்டாலோ, விளக்கு அல்லது கட்டிலின் நிழல் பட்டாலோ இந்திரனின் செல்வம் கூட அழிந்து விடும் ( நம் மீது பட்டால் நாம் எம்மாத்திரம்?)
****
குயிலும் கழுதையும்
வாங் மாதுர்யாத் சர்வ லோக பிரியத்வம்
வாக் பாருஷ்யாத் சர்வ லோக அப்ரியத்வம்
கிம் வா த்ரவ்யம் கோகிலே நோ பனீதம்
கோ வா லோகே கர்தபஸ்யா (அ) பராதஹ
குயிலின் இனிமையால் அதை எல்லோரும் நேசிக்கிறார்கள்
கழுதையின் குரலால் அதை வெறுக்கிறார்கள்; அதே போல மக்களும் இனிய சொற்களால் மகிழ்கிறார்கள் ; கடும் சொற்கள் பேசுவோரை வெறுக்கிறார்கள்.
எத்தனை நல்லுபதேசம் செய்தாலும் முட்டாள் திருந்த மாட்டான்; எவ்வளவு புண்ணிய நதிநீர்களில் கழுதையைக் குளிப்பாட்டினாலும் குதிரை ஆகாதல்லவா!
****
கழுதைப் பாலின் விலை
கழுதையை எல்லோரும் மட்டம் தட்டினாலும் கழுதைப் பாலின் மகத்துவம் குறையவில்லை. எகிப்திய அழகி கிளியோபாட்றா கழுதைப்பாலில் குளித்த காலத்திலிருந்து இன்று வரை விலை உயர்ந்து கொண்டே போகிறது ; கட்டுரை எழுதும் (2024) நேரத்தில் ஒரு லிட்டர் கழுதைப்பாலின் விலை 3200 ரூபாய். கழுதைப் பால் பவுடர் விலையோ கிலோவுக்கு ரூ.60,000 இது கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் 16 கழுதைகளை வைத்து நடத்தும் பண்ணையின் பால் விலை ஆகும்.
****
Tamil Proverbs on Donkeys and Asses
ஒரு சுவையான கதை!
2253. கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல.
கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல.
இந்தப் பழமொழிக்குப் பின்னால் ஒரு சுவையான கதை உள்ளது.
ஒரு நாட்டினை ஒரு மன்னர் ஆண்டு வந்தார் அவருக்கு முடிவெட்டக்கூட நேரம் கிடைக்காது , அவ்வளவு சுறுசுறுப்பான பேர்வழி. ஆகையால் அந்த ஊரிலுள்ள மிகத் திறமையான நாவிதன், மன்னர் தூங்கும்போதே அழகாக முடிவெட்டி விடுவான்.
இப்படிப் பல வருடங்கள் ஆனபோது மன்னனுக்கு திடீரென நன்றி உணர்வு தோன்றியது . அவனை நாவிதன் என்ற நிலையிலிருந்து பிராமணன் என்ற உயார்நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது உடனேயே சபையிலுள்ள வேதம் அறிந்த பார்ப்பனர்களைக் கலந்தாலோசித்தான். அவர்களும் மன்னரின் யோசனையை ஏற்று அம்பட்டனைப் பிராமணனாக்கி விடுவதற்காக யாகத் தீயை வளர்த்தனர்.
முதலமைச்சருக்கு இந்த நடவடிக்கை முட்டாள்தனமானது என்பது புரிந்தது. ஆயினும் மன்னரிடம் நேரடியாகச் சொல்லாமல் வேறு ஒரு தந்திரம் செய்தார் . அந்தணர்கள் யாகம் வளர்த்த இடத்திற்குப் பக்கத்தில் வேறு ஒரு மண்டபம் கட்டி யாகத்தீயை வளர்த்தார். எதிர்ப் பந்தலில் நாவிதனுக்கு என்ன என்ன சடங்குகளைச் செய்தனரோ அவைகளை இவர் ஒரு கழுதைக்குச் செய்தார். மன்னனுக்கு செய்தி எட்டியது .
எதிர்ப்பந்தலில் நாவிதன் யாகத் தீயை வலம் வரும்போது பிராமணர்கள் உரத்த குரலில் மந்திரம் சொன்னார்கள் . முதலமைச்சரும் அதே போல கழுதையை வலம் வரச் செய்து உரத்த குரலில் மந்திரங்களை முழங்கச் செய்தார். அரசன் அந்த மண்டபத்துக்கு வந்து அமைச்சரே என்ன செய்கிறீர்கள் என்று வினவினான்.
மன்னர் மன்னா ! நீர் ஒரு நாவிதனைப் பிராமணனாக்குவது போல நானும் ஒரு கழுதையைக் குதிரை ஆக்குவதற்காக முயற்சி செய்கிறேன் என்று பதில் தந்தார் ; மன்னனுக்கு அதன் பின்னாலுள்ள கருத்து புரிந்தது. இரண்டும் நடக்க முடியாத செயல் என்று அறிந்து யாகத்தை நிறுத்தி, அந்த நாவிதனுக்கு நிறைய தங்கம், ரத்தினம் முதகலியவற்றைப் பரிசளித்து அனுப்பினான்.
****
1711. ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற்போல.
As a Washerman’s vehicle (a donkey) carries its load.
2850. கெட்ட கழுதைக்குத் துஷ்டபுத்தி.
A vicious donkey has mischievous propensities.
233. அம்பலக் கழுதை அம்பலத்திற் கிடந்தால் என்ன, அடுத்த திருமாளிகையிற் கிடந்தால் என்ன ?
What matters it whether the helpless ass lies in an open place or in the adjoining palace.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
S Nagarajan Article Index September 2024
1-9-24 13615 வம்புச் சண்டைக்கு வருவோரை சமாளிக்க முடியுமா? 2-9-24 13619 ‘குத்தல் மொழி’ எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள்? 3-9-24 13623 ஒரு நாளைக்கு 26 மணி நேரம் ஆக்குவது எப்படி?4-9-24 13627 ராமாயணத்தில் வரங்கள் (2) முனிவர்கள் குச, லவர்களுக்கு
கழுதை -தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன் மொழிகள்- Part 9
தமிழ் மொழியில் கழுதைகள் பற்றிய பாடல்கள் குறைவு ஆனால் பழமொழிகள் அதிகம் .ஸம்ஸ்க்ருத மொழியில் கழுதைகள் பற்றி பாடல்கள் உள்ளன ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் கழுதைகள் பற்றிய விஷயங்கள் அதிகம் இல்லை.
ஆயினும் நாய் போலவே கழுதையும் கீழ்ஜாதி பிராணிதான் ; ஆகையால் திட்டுவதற்கே அவை பயன்படுகின்றன . மூளையே இல்லாமல் சேவை மட்டும் செய்யும் சாதுவான பிராணி. ஆயினும் அதன் ‘பால்’ மிகவும் விலை மதிப்புடையது ; அதை பற்றி அந்தக் காலத்தில் யாருமே கதைக்கவில்லை . பாவம்தான் கழுதைகள்!
பாடகர்கள் கர்ண கடூரமாகப் பாடினால் கழுதையுடன் ஒப்பிட்டு அவமானப்ப டுத்துகிறார்கள்
நாயே! என்று திட்டினால் 100 சதவிகித வசவு; கழுதையே என்று திட்டினால் 50 சதவிகித வசவுதான். காரணம் நாய் போல கடிக்காது; அதற்காகப் பக்கத்தில் போய்விடாதீர்கள் எட்டி உதைத்து விடும்.. நீங்கள் மண்ணைக் கவ்வுவீர்கள்.
முதலில் ஷேக்ஸ்பியர் சொன்ன சில விஷயங்களைக் காண்போம் பின்னர் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களையும் தமிழ்க் கழுதைப் பழமொழிகளையும் காண்போம் .
“I Find the Ass in Compound with the Major Part of Your Syllables” …Coriolanus
Act 2, Scene 1
கொரியலேனஸ் நாடகத்தில் ஆஸ் ASS என்பதை ஷேக் கெட்டவார் த்தையாகப் பயன்படுத்துகிறார் மனிதனின் மல வாய், buttocks , backside என்ற பொருளில் பயன்படுத்துகிறார்
****
BOTTOM
Nothing, good monsieur, but to help Cavalery Cobweb to
scratch. I must to the barber’s, monsieur, for methinks
I am marvelous hairy about the face. And I am such a
tender ass, if my hair do but tickle me, I must scratch.
TITANIA
[Waking] My Oberon, what visions have I seen!
Methought I was enamored of an ass.
—–A Midsummer Night’s Dream
Act 4, Scene 1
மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம் என்ற நாடகத்தில் கழுதைத்தலை அணிந்த கதா பாத்திரம் வருகிறது அதன் மீது காதல் கொண்டதாக ஒரு வசனமும் முகம் முழுதும் முடி வளர்ந்ததால் அவை கிசுகிசு மூட்டுவதாகவும் அதனால் சொரிந்துகொள்ள வேண்டியிருப்பதாகவும் வசனம் வருகிறது
*****
DOGBERRY
74. suspect: malapropism for “respect.” 74 Dost thou not suspect my place? dost thou not
75-76. O that he were here to write me down an ass!: —Dogberry wishes that the Sexton had been there to record, in writing, that Conrade called him an ass, so that Conrade would be sure to be punished for that offense. 75 suspect my years? O that he were here to write me
76 down an ass! But, masters, remember that I am an
77 ass; though it be not written down, yet forget not
78 that I am an ass. No, thou villain, thou art full of
79. piety: malapropism for “impiety.”
79 piety, as shall be proved upon thee by good witness.
80 I am a wise fellow, and, which is more, an officer,
81 and, which is more, a householder, and, which is
82. as pretty a piece of flesh: i.e., as fine a mortal man.
83. go to: —This is an expression of scorn, like current expressions such as “go to hell” or “get out of here.” 84-85. a fellow that hath had losses: —Dogberry thinks he should be respected because he has known hardship. 86. handsome: fitting, impressive. 82 more, as pretty a piece of flesh as any is in
83 Messina, and one that knows the law, go to; and a
84 rich fellow enough, go to; and a fellow that hath
85 had losses, and one that hath two gowns and every
86 thing handsome about him. Bring him away. O that
87 I had been writ down an ass!
Much Ado About Nothing
Act 4, Scene 2
மச் அடோ அபவுட் நத்திங் நாடகத்தில் கழுதை போல உழைப்பவன் என்ற பொருளில் வருகிறது . செருப்புத் தோலாக உழைத்தேன் நான் –என்று சொல்லுவது போன்ற வசனம் இது .
மொத்தத்தில் ஆசனவாய் என்றும் பாரம் சுமப்பவன் போல உழைப்பவன் என்றும் மட்டமான பொருளில்தான் வருகிறது.
******
இதோ சில சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள்
நாய், சேவல், தூக்கில் தொங்கவிடும் வெட்டியான்
மூன்றும் தீண்டத்தகாதன;
ஒட்டகமும் கழுதையும் அப்படியே;
ஆகையால் அவைகளைத் தொடாதே
—பஞ்ச தந்திர ஸ்லோகம்
தெரிந்தும் கழுதையை ஒருவன் தொட்டால்
அறியாமல் தொட்டாலும் சரி
அவன் புண்ணிய ஸ்னானம் செய்தாக வேண்டும்;
ஆடையோடு குளித்தால்தான்
தீட்டு விலகும்– பஞ்ச தந்திர ஸ்லோகம்
*****
கரம் லிம்பாமி கந்தேன புஷ்பய் ராபூஷாயாமி தம்
ருஷ்டஹ ச பத்ப்யாம் மாம் ஹந்தி மூர்கபூஷா பலம் த்விதம்
கழுதைக்கு சந்தனம் பூசுகிறேன்; அதை மலர்களால் அலங்கரிக்கிறேன் என்று போனால் அது கோபத்தால் கால்களைக் கொண்டு எட்டி உதைக்கிறது. முட்டாளை வழிபட்டு அவனை உயர்ந்த இடத்தில் வைப்பவனுக்கும் இதே கதிதான்.
To be continued………………………….
–subham–
Tags- தமிழ் ஸம்ஸ்க்ருதக் கழுதைகள், ஷேக்ஸ்பியர் கழுதைகள் –9, கழுதை ,தமிழ், சம்ஸ்க்ருத, நூல்களில், ஷேக்ஸ்பியர், பொன் மொழிகள்- Part 9,
This proverb is in tamil too. As an anti dote to the poison , mild poisons are given in Indian medical system. விஷத்தை விஷத்தால் முறிக்கலாம்.
Homeopathy principle is also based on this fact. Like cures like. Chanakya gave Chandragupta Maurya poison every day in minute quantity so that no poison will kill him. Brahmins’ Achamana/ taking water in very small quantity — repeating the names of God- is also to cure the germs in a particular water source. They do it whenever they go to a tank or a lake or a sea or a well. The germs or chemicals in that particular water won’t affect them.
Actually it happened during Mahabaharata days. Kaurava brothers under Duryodhana were jealous of Pandava brothers, particularly Bhima was hated by them. So, they gave poison to Bhima and threw him into a lake where there were poisonous snakes. When those snakes bit Bhima his poison was nullified.
In mathematics also it is same;
Minus Multiply Minus is Plus. Negative multiplied by Negative is a positive number, which means that the product of two negative integers is always positive.
****
An ass or sheep or fox in a lion or tiger’s skin.
It is in Sanskrit Panchatantra stories and Tamil Veda Tirukkural.
An ass clad in lion’s hide is in a Panchatantra story.
The ass was safe, but wearing a tiger’s hide became frightening and it was killed later because of its voice. People found out its true form.
The story went around the world and took different forms.
Panchatantra says,
Suguptam rakshyamaano ‘pi darsayam darunam vapuh
Vyaagracamarma pratichanno vaakrte raasabho hatah
Vyaagra= tiger; raasabhah= donkey or ass.
In the story of Zhsn Guo Ce- Sengokusaku , the anecdotes of the warring states, a fox was caught by a tiger. To escape, the fox said, that he had been appointed by the king of the beasts by the heavenly emperor. To prove this he maintained that all animals flee from him. As he went into the woods, followed by the tiger intending to check this statement, all the animals did flee. The tiger did not realise that he has frightened them .
In the Fan Yan= Yoshi Hogen, the Confusian Discourses, we read that a goat clothes itself in a tiger’s skin which he found in the forest. One day seeing a wolf at a distance, began to flee forgetting the tiger’s skin on itself.
In latin we have
Asinus is pelle leonis= an ass in lion’s skin.
Tamil Veda Tirukkural says,
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.–குறள் 273:
As if a steer should graze wrapped round with tiger’s skin, Is show of virtuous might when weakness lurks within.
Or
The pretentious conduct of a man who has not the firmness of mind to direct him in the path of true asceticism is likened to a cow grazing clothed in tiger’s skin.
Or
Aranganatha Mudaliyar translates this as
A sanctimonious humbug who is a veritable thrall to his vile passions like a cow that , in a tiger’s skin, grazes on other men’s meadows.
Or
In Dr S M Diaz’s translation
One who is incapable of mastering himself, trying to put on an air of strength,
Is like a cow grazing on forbidden pasture, under cover of a tiger’s skin.
****
In the Bible we have,
Beware of the false prophets, who come to you in sheep’s clothing, but inwardly they are ravening wolves – Matt.7:15
மஹாளய அமாவாசையின் மஹிமை பற்றியும், பிராமணர்கள் 96 தர்ப்பணங்களை ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என்றும் நான் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு லண்டனைச் சேர்ந்த எனது இனிய நண்பரும் நமது பிளாக்கின் ஆர்வமிக்க வாசகருமான ஸ்ரீ வெங்கடேஸ்வரன் சர்மா கீழ்கண்ட இரண்டு அதிசய சம்பவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
“வார இறுதி நாட்களில் இரண்டு புகழ்பெற்ற உபன்யாசகர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன் அவர்களில் ஒருவர் தென் இந்தியா முழுதும் கீர்த்தி பெற்ற சுந்தர ராம வாஜ்பாயி. இன்னும் ஒருவர் கண்ணா மணி தீட்சிதர்.
இரண்டாமவர் சேங்காலிபுர அனந்த ராம தீட்சிதரின் வழிவந்தவர் ; இருவரின் உரைகளும் சிரார்த்தம் பற்றிய நிறைய செய்திகளைத் தெரிவித்தன. வேத சாஸ்திர தர்ம பரிபாலன சபை இந்த உபன்யாசங்களை ஏற்பாடு செய்திருந்தது.
முதல் அதிசய சம்பவம்
கண்ணா மணி தீட்சிதர் சொன்ன விஷயம் : நான் ஒரு குடும்பத்திற்கு திதி /சிரார்த்தத்தை நடத்திவைக்கச் சென்று இருந்தேன் அந்தக் குடும்ப நபர் அவரது தாயாரின் சிரார்த்தத்தைச் செய்தார். பிராமண போஜன நிகழ்ச்சி வந்தது; அதில் உட்கார்ந்த பிராமணர் வழக்கமான சாப்பாட்டோடு 13 பூரிகளைச் சாப்பிட்டார். அது மட்டுமல்லாமல் ‘மேலும் போடுங்கள்’ என்று சொன்னவுடன் குடும்பத்தினர் தவியாய்த் தவித்தனர் . ஏனெனில் மிச்சம் ஒரு சில பூரிகளே இருந்தன. ஒருவாறாக போஜனம் முடிந்தது . அப்போதுதான் இதன் பின்னுள்ள விஷயம் புரிந்தது. அந்தக் குடும்பத்தில் இறந்து போன தாயாருக்கு பூரி என்றால் மிகவும் இஷ்டமாம். சாப்பிட்ட பிராமணரும், தான் இது போல எங்கும் சாப்பிட்டதில்லை. யாரோ ஒருவர் என் மீது பிரவேசித்து மேலும் மேலும் சாப்பிட்டததாகவே நான் உணர்ந்தேன் என்றும் சொன்னார்.
இதைக் கேட்டவுடன் எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. மெய் சிலிர்த்தது “.
****
இரண்டாவது அதிசய சம்பவம்
சேங்காலிபுரம் வம்சத்தில் வந்த ஸ்ரீ சுந்தர ராம தீட்சிதர் சொன்ன விஷயம்:
“இது ஞானானந்த கிரி சுவாமிகள் தபோவனத்தில் நடந்தது . சுவாமிகளின் பக்தர் ஒருவர் வீட்டில் சிரார்த்தம் செய்யவேண்டிய நாள் வந்தது. ஆனால் அதற்கான பிராமணர் யாரும் கிடைக்கவில்லை . இதனால் முதல் நாளே சென்று ‘யாருமே கிடைக்கவில்லையே சுவாமிஜி, ஒரே கவலையாக இருக்கிறது’ என்று முறையிட்டனர் ; சுவாமிஜியோ ஒரு கவலையும் வேண்டாம்; நாளைக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சொல்லிவிட்டார். மறுநாள் காலை வரை எந்த பிராமணரும் உறுதியாகச் சொல்லாததால் கணவனும் மனைவியும் மீண்டும் அங்கே போய், சுவாமிகளை நமஸ்கரித்து கவலையைத் தெரிவித்தனர். வீட்டுக்குப் போங்கள்; எல்லாம் முறையாக நடக்கும் என்று சொல்லி அனுப்பிவிட்டார். கவலையுடன் திரும்பிய தம்பதிகள், வீட்டு வராண்டாவில் யாரோ ஒரு பிராமணர் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு நீங்கள் யார்? என்று விசாரித்தனர்.
சிரார்த்தத்துக்கு வரவேண்டிய பிராமணர் வரமுடியாததால் தன்னை அனுப்பியதாக அவர் பதில் கொடுத்தார். நெற்றியில் நல்ல பெரிய நாமம்; முகத்தில் புதுப் பொலிவு; சிரார்த்தமும் முறையாக நடந்தது .
அன்று மாலையே சுவாமிகளுக்கு நன்றி தெரிவிக்க இருவரும் ஆச்ரமத்துக்குச் சென்றனர். அவரும் புன்சிரிப்புடன் என்ன ? சிரார்த்தம் எல்லாம் நல்லபடியாக நடந்ததா? என்று கேட்டார். தம்பதிகளோ வியப்புடன் நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். சுவாமிகளும் நான்தான் நாரா யணனைக் கேட்டுக்கொண்டேன்; வந்தவர் வேறு யாருமில்லை; சாட்சாத் நாராயணனேதான் என்றார்”.
****
எனது கருத்து
ராமாயணத்திலும் இறந்துபோன தசரதனை ராமர் சந்தித்த நிகழச்சிகளைக் காண்கிறோம். மதுரை ஆதீனகர்த்தராக இருந்து மறைந்த யாழ்ப்பாண அறிஞர் இதுபோல பல சம்பவங்களை அவருடைய புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.
சிரார்த்தம் என்ற சொல் சிரத்தா= நம்பிக்கை என்ற சொல்லின் அடியாகப் பிறந்ததே இதை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் என்பதே தாத்பர்யம்.
மனு ஸ்ம்ருதி நூலும், சிரார்த்தம் குறித்து மிகவும் கடுமையாகப் பேசுகிறது. அனறைய தினம் கடைப்பிடிக்க வேண்டிய மடி, ஆசாரம் ஆகியன பற்றி அவர் எச்சரிக்கிறார். இந்த சம்வங்களும் மனுவின் எச்சரிக்கயும் நமக்குச் சொல்லும் விஷயம் அன்றைய தினம் இறந்து போன முன்னோர்கள் உண்மையாகவே அந்த வீட்டில் பிரவேசிக்கிறார்கள் என்பதே.
இந்தக் கட்டுரையை எழுதும் இந்நாள் மஹாளய மாவாசை நாள் 2-10-2024 . எல்லா ஜாதியினரும் முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்த கடல், ஆறு, குளம், ஏரிகளுக்கு லட்சக் கணக்கில் செல்கிறார்கள்; கிறிஸ்தவர்கள் கூட இறந்த முன்னோர்களின் கல்லறைக்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று பூக்களையும் படைப்புகளையும் அளிக்கின்றனர்
வெளியே செல்ல முடியாதவர்கள், இறந்துபோன உறவினர்கள் படத்தில் பூக்களை வைத்து அஞ்சலி செய்யலாம். சடங்குகளை விட அவர்களை நன்றியுடன் நினைப்பது மிகவும் அவசியம்.
27 Apr 2023 — Pictures are taken from various sources for spreading knowledge. this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.
27 Apr 2023 — 8 Dec 2021 — Anumati- Divine Grace, personified as a Goddess representing the God’s favourable acceptance of worship and oblations. Though …
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி தினம்.
மகாத்மாவிற்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
காந்திஜியின் வாழ்க்கையில்…!
ச.நாகராஜன்
1
டிக் டிக் பையன்!
ப்ரதாப் ஒரு குழந்தை. ஒரு நாள் பாபுஜியின் வாட்ச் அவர் இடுப்பிலிருந்து தொங்குவதை அவன் கவனித்தான். அவனுக்கு ஒரே ஆவல் அது என்ன என்று தெரிந்து கொள்ள!. தன் தாயாரின் புடவையைப் பிடித்து இழுத்த அவன், அந்த வாட்ச் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தான்.
காந்திஜிக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். என்றாலும் கூட தேவையற்ற விஷயங்களில் குழந்தைகள் பிடிவாதம் பிடித்தால் அதை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். அதை நல்லவிதமாக நயமாகச் சொல்லித் திருத்த வேண்டும் என்பார்.
ஆகவே வாட்சைக் கேட்ட ப்ரதாபின் அருகில் வந்த காந்திஜி அதை அவன் காதுகள் அருகே ஆட்டி, “ இதோ பார்! இது எப்படி டிக் டிக் என்று அடிக்கிறது என்று. ஆனால் இது உன்னுடைய பொம்மை இல்லை. இது என்னுடையது. ஆகவே இது உனக்குக் கிடைக்காது” என்று மெதுவாகச் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அன்றிலிருந்து அந்தப் பையனை காந்திஜி பார்க்கும் போதெல்லாம், இருவரும் டிக் டிக் என்று அழைத்துக் கொள்வார்கள்.
அத்துடன் அந்த விஷயம் முடிந்தது!
2
பொதுமக்கள் பணத்தில் வீண் செலவு கூடாது!
பாபுஜியின் பேரனான காந்திலால் மைசூரில் மெடிகல் காலேஜில் படித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் பாபுஜியின் ஆசிரமத்திற்கு வந்த போது ஒரு பெரிய விவாதம் இருவருக்கும் இடையே நடந்து கொண்டிருந்தது. எப்போது ஆரம்பித்தது என்று தெரியாத நிலையில் அந்த விவாதம் நடக்கும் போது ராம்நாராயண் சௌத்ரி அங்கு சென்று சேர்ந்தார். அவர் இருக்கும் போது இன்னும் 15 நிமிடங்கள் விவாதம் தொடர்ந்தது.
விஷய்ம் வேறொன்றுமில்லை. காந்திலாலுக்கு இன்னொரு வேஷ்டி வேண்டுமாம். அதற்காக அவர் காந்திஜியிடம் அதைக் கேட்க காந்திஜி அது அனாவசியம் உள்ளதே போதும் என்று சொல்லி விட்டார். இதற்காகத் தான் இருவருக்குமிடையே பெரிய விவாதம்!
காந்திஜி தர மாட்டேன் என்று சொல்லவே காந்திலால் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
உடனே ராம்நாராயண் காந்திஜியிடம், “பாபுஜி, உங்கள் நேரம் விலை மதிப்பற்றது. இந்த சாதாரண விஷயத்திற்கா இவ்வளவு பெரிய விவாதம்” என்று சொல்ல ஆரம்பித்தார்; இடை மறித்தார் காந்திஜி.
“நீங்கள் சொல்ல வருவது என்ன என்று எனக்குப் புரிகிறது.விஷயம் சிறிதா பெரிதா என்பது முக்கியம் அல்ல. அதில் அடங்கி இருக்கும் கொள்கை என்ன என்று பார்க்க வேண்டும். நிச்சயம் அவசியம் என்றால் ஆயிரம் ரூபாய் கூட செலவழிக்கலாம். மனிதனின் நிச்சயமான தேவைக்கு முன்னால் பணம் ஒரு பொருட்டே அல்ல. பால்கோபாவின் சிகிச்சைக்கு பணத்தைத் தண்ணீராக நான் செலவழித்தது உங்களுக்குத் தெரியும். அதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவே இல்லை. ஆனால் இன்னொரு வேஷ்டி வேண்டும் என்று காந்தி கேட்கும் போது, அதை எப்படி என்னால் அளிக்க முடியும்?” என்றார் காந்திஜி.
பொதுமக்கள் பணத்தைக் கையாளுவதில் அவர் எவ்வளவு கவனமாக இருந்தார் என்பதற்கு இது போல் ஏராளமான சம்பவங்கள் உண்டு.
3
பாரம்பரியப்படி பெரியோருக்கு மரியாதை!
இந்திய பாரம்பரியத்திற்கு இணங்க பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் காந்திஜிக்கு விருப்பம் அதிகம்.
ரவீந்திரநாத் தாகூரின் அண்ணனான போரா தாதாவைக் கண்டால் அவர் எழுந்து நின்று வரவேற்பார். அவர் விடை பெறும் போதும் நின்று வழி அனுப்பி வைப்பார்.
பண்டிட் மதன் மோகன் மாளவியா இதை நேரில் பார்த்தவர்.
தனக்குப் பிடித்தவர்களின் செல்லப் பெயரைச் சொல்லியே அவர்களை அழைப்பது பாபுஜியின் வழக்கம் – அவர்கள் வயதில் மிகச் சிறியவர்களாக இருந்தபோதிலும் கூட!
காகா, மாமா, குருதேவ் என்று இப்படி காந்திஜி செல்லப் பெயர்களைச் சூட்டுவது வழக்கம்!
**
அற்புதமான வாழ்க்கையில் கணம் தோறும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களை வாழ்ந்து காட்டியவர் மகாத்மா.
செயலில் ஒவ்வொரு கணமும் அதை அவர் செய்து காட்டிய போது ஆசிரமத்தில் அவர் கூட இருந்த அனைவரும் அதை நன்கு கற்றுக் கொண்டனர்.
மேற்கூறிய சம்பவங்கள் அனைத்தும் RAM NARAYAN CHAUDHARY அவர்கள் எழுதிய BAPU AS I SAW HIM என்ற ஆங்கிலப் புத்தகத்தின் சில தமிழாக்கப் பகுதிகளாகும்.