Three Day London Radha Kalyan Event Concluded ; Part three Pictures

PLEASE SEE PART ONE FOR FULL DETAILS

–SUBHAM—

Three Day London Radha Kalyan Event Concluded-2

please read the detaails from part one

–subham—-

Three Day London Radha Kalyan Event Concluded (Post.13,927)-1


Written by London Swaminathan

Post No. 13,927

Date uploaded in London – 24 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Mitraseva organisation has arranged the Radha Madhav Kalyan Event (Divine Wedding) for the fourth consecutive this year in Sattavis Patidar Hall in London. Dr Udaiyalur Kalyanaraman , the top most Sampradaya Bhajan singer in Tamil Nadu, came with his team of musicians. As before, over thousand people attended the event on 22, 23, and 24th November 2024.

As part of this great Bhajan event a lot of local singers and artistes were also invited to give their dance and music performances. We saw tremendous young talents during these days. Teenage singer Sreyas Vishunudas, Violinist Miss Aparna Raghuraman were among the performers. Dance students of Mrs Meena Rajagopalan also staged dance events. Miss Kirti Rajagopalan coordinated the first day events. A big group of volunteers made this FREE event a grand success.

Dr Udaiyalur Kalyanaraman , Brga fame Balasubramaniam and Mrdangist Babu made all the 1000++ singers to recite the divine names. Free meals were served on all the three days.

Bhajan Balasubramaniam of London started the Unjuvarthi two months ago visiting different towns—from Dublin in Ireland to Scotland in UK. Lot of women came in their traditional style sarees with their children.

Mitraseva was started 8 years ago to serve the old age people in London; but now it has widened its activities to cover all the age groups. Mr Ram Kaza and Mr M Rajagopalan explained its weekly activities in London and requested everyone to take part in them.

Radha Madhav Kalyan committee has a dedicated group of volunteers including Mr Rajagopalan and Mrs Uma Rajagopalan, Mr Rajagopalan and Mrs Meena Rajagopalan, Mahesh, Krishnan, Mr Ram Kaza, Mrs Mythili Kaza, Mr Balasubramnyam of Ilford and Mrs Padma Balasubramanyam, Mr Subramanyam  and Mrs Gayathri Subramanyam, Mr Natarajan Ganesan. Over fifty volunteers were honoured with a memento from the hands of Dr Udaiyalur Kalyanaraman.

Some of the pictures are attached here in batches. Here is the first batch of pictures:-

–subham—

Tags- Dr Udaiyalur Kalyanaraman, Mitraseva, London event 2024, Radha Madhav Kalyan,Three Day, London Radha Kalyan Event ,

சீனாவில் குமாரவிஜய செய்த சாதனைகள் (Post No.13,926)

Buddhist Stupe in the desert

Written by London Swaminathan

Post No. 13,926

Date uploaded in London – 24 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சுமார் 1800- ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன. புத்தமதம் எங்கும் பரவியது. தக்லாமகன் என்பது ஒரு பெரிய பாலைவனம். இடையிடையே நீர் ஊற்றுக்கள் உள்ள ஒயஸிஸ் Oasis என்னும் வளமான ஊர்களும் உண்டு. அந்தப் பாலைவனத்தில் மஹாபாரத பழஞ் சுவடிகள் அண்மையில் கிடைத்தன. மஹாபாரதம் தொடர்பான மிகப் பழைய சுவடி இதுதான்!

புத்த மத துறவிகள் மலைப் பாறைகளைக் குடைந்து அஜந்தா குகைப் பாணியில் ஏற்படுத்திய குடைவரை Caves, Rock cut monasteries 

வசிப்பிடங்களும் மத்திய ஆசியா முழுதும் காண ப்படுகின்றன. அதே காலத்தில்தான் Oasis பாலைவன சோலை நகர்களில் புத்த மத துறவிகள் கூட்டம் பெருகியது; கிஸில் , குசா Kizil, Kucha என்னும் இரண்டு இடங்களில் மட்டும்  10,000 துறவிகளும் 236 குடைவரை பாறை வசிப்பிடங்களும் Rock cut monasteries  இருந்தன. மீரான் Miran என்னும் ஊரில் ஜாதகக் கதைகளை சிற்பங்களாக செதுக்கினர். காந்தாரத்திலிருந்து வந்த ஓவியர்கள் குகைகளில் ஓவியம் தீட்டினர். சிங்கியாங் மாகாண மீரான் நகரில் 350-400 CE ஆண்டில் பெரிய பெளத்த மடாலயம்  எழுந்தது. ஓவியத்தை வரைந்தவர் தன்னுடைய பெயரை டைட்டா என்று கையெழுத்திட்டு இருக்கிறார். ஒருவேளை ரோமாபுரியிலிருந்து வந்த Titus டைட்டஸ் என்ற பெயராக இருக்கலாம் என்றும் வரலாற்று அறிஞர்கள் செப்புகிறார்கள்.

இரண்டு பாலைவன –ஒயஸிஸ் — சோலை நகர  ஓவியங்களில் பல விசித்திரங்களை காணமுடிகிறது ; புத்த மத துறவிகள் அந்தரத்தில் மிதக்கிறார்கள்; சித்தர்கள், யோகிகள் செய்யும் இந்த மிதத்தலை ஆங்கிலத்தில் லெவிடேஷன் levitation    என்பார்கள்  பேய், பிசாஸு பூதங்களின் உருவங்களும் காணப்படுகின்றன

குமாரவிஜய Kumaravijaya  யார் ?

குமாரவிஜய Kumaravijaya    344-413 CE என்பவர் ஒரு பிராமணர். அவருடைய தந்தை இந்தியாவில் ஒரு அமைச்சர். அவரது குடும்பத்தினர் சீனாவில் குசா நகரில் இருந்த சிற்றரசரின் அவையில் பணியாற்றினார்கள் .

அவர் பெரிய சம்ஸ்க்ருத அறிஞர். சம்ஸ்க்ருதத்தில் பல நூல்களை எழுதியதோடு நிற்காமல் மஹாயான புத்தமதப் பிரிவின் நூல்களை சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கவும் செய்தார்.

அவர் மொழிபெயர்த்த முக்கிய நூல் தாமரை சூத்திரம் என்று ஆங்கிலத்தில் பிரபலமாகியது அதன் உண்மையான பெயர் சத் தர்ம புண்டரீக சூத்ரம் empathaakum

The Lotus Sūtra (Sanskrit: Saddharma Puṇḍarīka Sūtram, Sūtra on the White Lotus of the True Dharma, Chinese: 妙法蓮華經. புண்டரீகம் என்றால் தாமரை மலர். வியட்நாம் வரையுள்ள எல்லா புத்த மத நாடுகளிலும் இது அந்தந்த மொழியில் கிடைக்கிறது . அந்த நூலின் தெளிவினையும் ஆக்கத்தையும் காண்பவர்கள் இவரது புலமையை வியக்கிறார்கள்.

குசானர்களின் ஆட்சி வீழ்ச்சி அடைந்த பின்னர், சிறிய அரசுகள் எழுந்தன. குசாவில் இருந்த  மன்னரை  குமாரவிஜயவின் தாயார் மணந்தார். அவளது பெருமையை குமார விஜயவின் நண்பர் ஹூயகியாவோ 1600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்துள்ளார்  அவள் அபார அறிவும் கேட்டதையும் படித்ததையும் அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளும் அபூர்வ சக்தியையும் பெற்றவளாம்.  அவளுக்கு இருபது வயதானபோது திருமணம் நடந்தது.  அவளுக்கு கற்காமலேயே ஸம்ஸ்க்ருதப் புலமை ஏற்பட்டது என்றும் நண்பர் எழுதியிருக்கிறார்  குமாரவிஜய பிறந்தவுடன் அவள் புத்தமதத்த துறவி ஆகிவிட்டாள்.

அப்போது குமார விஜயவுக்கு ஏழு வயது . பிட்சுணியான தாயாருடன் அவர் காஸ்மீருக்கு வந்து பந்து தத்தன் என்ற அறிஞரின் கீழ் சமய நூல்களைக் கற்றார்.  தாயார் இறந்தவுடன் குமார விஜய மத்திய ஆசியாவிலுள்ள பல நகரங்களுக்குச் சென்று மஹாயான புத்தமதப் பிரிவு நூல்களை பயின்றார்.  பின்னர் குசா நகருக்குத் திரும்பினார். தனது ஆசிரியரையும் மஹாயான பிரிவுக்கு இழுத்தார்; அப்போது வாக்குவாதம் நடந்தது.

சுவையான உரையாடல்

பந்து மித்ரா ஒரு கதையைச் சொல்லி மஹாயான புத்தமதக் கொள்கைகள் அது  போன்றதே என்றார்; அந்தக்கதை இதோ,

ஒரு பைத்தியக்காரன் ஒரு நெசவு நெய்யும் தொழிலாளியிடம் வ ந்து மிக மெல்லிய சன்னமான நூல் வேண்டும் என்றும் அதில் ஆடை வேண்டும் என்றும் சொன்னான். நெசவாளியும் உயிரைக்கொடுத்து மெல்லிய ஆடை நெய்தான். பைத்தியக்காரன் இது முரட்டுத் துணி என்று சொல்லிவிட்டு அதை விட மெல்லிய நூலால் ஆடை  நெய் என்று ஆர்டர் கொடுத்து விட்டுப் போனான்; இரண்டாவது  முறை செய்த மெல்லிய ஆடையையும் பைத்தியக்காரன் ஏற்கவில்லை. நெசவாளிக்குக் கோபம் வ ந்தது ; அடுத்த முறை வா; நல்ல ஆடை செய்கிறேன் என்றான். மூன்றாவது  முறை  பைத்தியக்காரன்  வந்த  போது  இந்த  ஆடை எப்படி  இருக்கிறது? என்றான். கண்ணுக்கு  ஆடையே  தெரிய வில்லையே  என்றான் ; நெசவாளி   சொன்னான் , உண்மைதான்  இது  கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு  சன்னமான  ஆடை என்றான் . பைத்தியக்காரனும் காசு கொடுத்து அதை வாங்கிச் சென்றான். இது போலத்தான் உன் கொள்கையும் என்றார் குருநாதர்

ஆனால் பிற்காலத்தில் அவரையும் மஹாயானத்தை ஏற்கவைத்தார் குமார விஜய.

அவரது வாழ்வில் இரண்டு முறை குசா நாட்டின்மீது மீது படையெடுத்த எதிரிகளிடம் சிக்கினார்; ஒரு முறை இவரைக் கடத்திச் சென்ற எதிரி அவருக்கு போதை மருந்தைப்  பானத்தில் கலந்து கொடுத்து ஒரு வேசியையும் அவருடன் படுக்க அனுப்பினான். அதில் பயங்கிய குமார விஜய மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பின்னர் தப்பிச் சென்று நாட்டுக்குத்  திரும்பியபோது இரண்டாவது முறை கைதானார். ஆனாலவரது அறிவை மெச்சி விடுதலை செ  தனர். அவர் தலைமையில் மொழிபெயர்ப்புத் துறையை உண்டாக்கிய மன்னன் ஏராளமான அறிஞர்களை  அழைத்து எண்ணற்ற சம்ஸ்க்ருத நூல்களை மொழிபெயர்த்தார். இதனால் சீனாவில் இந்தியாவில் இல்லாத  புத்த  மத நூல்கள் இப்போதும் சீன மொழியில் கிடைக்கின்றன. இது குமார விஜய செய்த மிகப்பெரிய சாதனை. சம்ஸ்க்ருத நூல்களையும், புத்தமத நூல்களையும்  சீன மொழியில் பரப்பியதும் அவர் செய்த பணிகள் ஆகும்

 –subham—

tags—சீனா, குமாரவிஜய,  சாதனைகள்

ஓம் சல்ய தந்திர விசாரதாய நமஹ! (Post No.13,925)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.925

Date uploaded in London – –24 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஹெல்த்கேர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை

ஓம் சல்ய தந்திர விசாரதாய நமஹ! 

ச. நாகராஜன் 

பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்று விட்டால் மட்டும் போதாது; வாழ்கின்ற நாட்களில் ஆரோக்கியமாக வாழ வேண்டும். 

இதற்கான வழிகளைப் பழம் பெரும் வேதமான ஆயுர்வேதம் கூறுகிறது. 

இந்து புராணங்களின் படி மருத்துவத்தின் கடவுளாகப் போற்றப்படுபவர் தன்வந்தரி பகவான். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்ல, தேவர்களுக்கும் மருத்துவராகக் கருதப்படுகிறார்.

 மஹாவிஷ்ணுவின் அவதாரமாகத் தோன்றியவர் தன்வந்தரி.

ஆயுர்வேதத்தை அருளியவர் தன்வந்தரி. ஆகவே இவரை ஆயுர்வேதத்தின் தந்தை என்று குறிப்பிடுகிறோம்.

தன்வந்தரியின் தோற்றம்

புராண வரலாற்றின் படி மரணம் அற்ற அம்ருத நிலையை அடைய தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை எடுப்பதற்காகப் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது ஐப்பசி  மாத தேய்பிறையின் 13வது நாளில் பாற்கடலிலிருந்து தோன்றியவரே தன்வந்தரி. இந்த தினமே தந்தேராஸ் என்று வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளான தன்வந்தரி ஜெயந்தி தினத்தை ஆயுர்வேத தினமாகவும் கொண்டாடுகிறோம். 

பாகவதத்தில் கூறப்படும் 22 அவதாரங்களில் 12வது அவதாரமாகக் கூறப்படுவது தன்வந்தரியின் அவதாரமாகும்.

வால்மீகி ராமாயணத்தில் பால காண்டத்தில் தன்வந்தரியின் தோற்றம் பற்றி விரிவாகக் கூறப்படுகிறது.

நான்கு கரங்களுடன் தோன்றும் தன்வந்தரி,வலது கை ஒன்றில் சங்கையும் மற்றொரு கையில் அமிர்த கலசத்தையும் இடது கை ஒன்றில் சக்கரமும்  மற்றொன்றில் அட்டைப்புழுவும் கொண்டிருப்பதாக நூல்கள் விவரிக்கின்றன.  சில நூல்கள் அவர் ஒரு கரத்தில் ஓலைச்சுவடியைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன.

பாற்கடலிலிருந்து தோன்றியதால் நீரிலிருந்து பிறந்தவர் என்று பொருள்படும் அப்ஜு என்ற சொல்லால் அவர் அழைக்கப்பட்டார்.

 காசியை ஆண்ட காசி மன்னனுக்கு திவோதாஸர் என்பவர் பிறந்தார். இவர் தன்வந்தரியின் அவதாரமாக கருதப்படுகிறார்.

 தன்வந்தரி அஷ்டோத்திரம்

 தன்வந்தரியைக் குறித்த அஷ்டோத்தரத்தை தினமும் ஓதித் துதிப்பது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு மரபாகும்.

108 திருநாமங்களில் தன்வந்தரியைப் பற்றிய அரிய விசேஷ குணங்கள் தரப்படுகிறது.

சல்யதந்திர விசாரதன்

தன்வந்தரி அஷ்டோத்திரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நாமம் ஓம் சல்யதந்த்ர விசாரதாய நமஹ என்பதாகும்.

சல்ய தந்திரத்தில் வல்லோன் என்று இதற்குப் பொருள்.

சல்ய தந்திரம் என்பது அறுவை சிகிச்சையாகும். பண்டைய காலத்தில் அறுவை சிகிச்சை பாரதத்தில் இருந்ததை நம்மால் அறிய முடிகிறது. சுஸ்ருதரின் சம்ஹிதையில் இது பற்றிய விவரங்களைக் காண்கிறோம். மூலிகைகளாலும் மருந்துகளாகும் குணப்படுத்த முடியாதபடி வியாதி இருக்கும் போது சல்ய தந்திரமே அதாவது அறுவை சிகிச்சையே சரியான வழி என்கிறார் சுஸ்ருதர்.

சரகரும் இது பற்றி விரிவாகக் கூறுகிறார். 

ஆயுர் வேத நூல்கள்

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு சரஸ்வதி பண்டார் என, முன்பு பெயர் வழங்கப்பட்டது. கடந்த 1918ல் மன்னர் சரபோஜி பெயரில் ஆய்வு மையமாக இது செயல்பட துவங்கியது. இங்கு, 49,000 சுவடிகளும், 45,000 நூல்களும் உள்ளன.

நோயில்லா நெறி என்பது உள்ளிட்ட பல மருத்துவ நூல்களை சரஸ்வதி மகால் வெளியிட்டுள்ளது.

இது மட்டுமல்ல உலகெங்கும் உள்ள நான்கு கோடி சம்ஸ்கிருத சுவடிகளிலும் மருத்துவ நூல்கள் உள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காசியப சம்ஹிதை என்ற நூலின் சுவடிகளை நேபாளத்தின் ராஜகுருவான பண்டிட் ஹேமராஜ சர்மா என்பவர் அரண்மனை நூலகத்தில் கண்டுபிடிக்க, அதை யாதவ்ஜி த்ரிகம்ஜி என்பவர் பம்பாய் நிர்ணய ஸாகர் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்.

 ஆயுர்வேதக் கல்லூரிகள்

ஆயுர்வேதத்தின் சிறப்பை உணர்ந்த ஆர்வலர்கள் இதை நன்கு பரப்ப வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டனர். இதன் விளைவாக இன்று நாடெங்கும் ஆயுர்வேதக் கல்வி நிலையங்கள் உள்ளன. மங்களூரில் உள்ள சாரதா ஆயுர்வேதக் கல்லூரி 2019-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. பாரம்பரிய இந்திய முறையிலான மருத்துவப் படிப்பை இது வழங்குகிறது. 1100 படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனையும் இங்கு உள்ளது.

 இங்குள்ள மூலிகை வனத்தில் 212 வகை விசேஷ தாவரங்களும் 1108 மருத்துவ மூலிகைகளும் உள்ளன. 30 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள டெமான்ஸ்ட்ரேஷன் அறையும் உள்ளது.

இதே போல ஜபல்பூர், ,காசி, புனே, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லூரிகளில் ஆயுர்வேத மருத்துவம் கற்பிக்கப்படுகிறது.

இது வரவேற்கத் தக்க ஒரு முன்னேற்றமாகும்.

தன்வந்தரி ஆலயங்களும் சிற்பங்களும் 

பாரதமெங்கும் தன்வந்தரிக்கு ஆலயங்கள் உள்ளன; ஏராளமான இடங்களில் வெவ்வேறு சிற்பங்களும் உள்ளன.

வைத்திஸ்வரன் கோவில் ஜீவ சமாதி 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தன்வந்தரி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

பிரதான பிரகாரத்தில் தன்வந்தரி பகவானின் விக்ரஹம் அமைந்துள்ளது.

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் 

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தன்வந்தரி பகவானின் சந்நிதி அமைந்துள்ளது. பெரும் ஆயுர்வேத வைத்தியரான கருட வாஹன பட்டர் இங்கு தன்வந்தரியின் சிலா விக்ரஹத்தை ஸ்தாபித்ததாக வரலாறு கூறுகிறது.

கேரளத்தில் தோட்டுவா

கேரளத்தில் தோட்டுவா என்னும் இடத்தில் தன்வந்தரி கோவில் அமைந்துள்ளது.

வேலூர் வாலாஜாபேட்டை 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் டாக்டர் ஶ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  ஸ்ரீ தன்வந்திரி பீடத்தை ஸ்தாபித்துள்ளார்.

 கோவை அருகில் ராமநாதபுரத்தில் உள்ள தன்வந்தரி ஆலயம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்திரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.

 பல ஆலயங்கள்

இன்னும் திரிசூர் அருகில் நெல்லுவாய்,தெவலக்காடு ஶ்ரீ தன்வந்தரி ஆலயம். திரிசூர் அருகில் ஆனக்கல் தன்வந்தரி ஆலயம்,  கீரங்குளங்கரா ஆலயம், , கேரளாவில்  சேர்த்தலா அருகில் மருத்தோர் வட்டம் ஆலயம், எலந்தூர் ஆலயம், பூத்தகுளம் ஆலயம் மற்றும் மாவேலிகராவில் உள்ள ப்ரயிகரா ஆலயம், உள்ளிட்ட பல கோவில்கள் தன்வந்தரிக்காக அமைக்கப்பட்டுள்ளவையாகும்.

சிற்பங்கள்

திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தில் தன்வந்தரியின் உலோகச் சிலை உள்ளது.

சிவகங்கை கோவிலில் தன்வந்தரியின் சிற்பம் இருக்கிறது.

 இப்படி ஆயுர்வேதத்தின் அடிப்படையிலான ஆரோக்கிய வாழ்வைக் கொண்டதோடு தன்வந்தரியை வழிபட்டு ஆன்மீகச் சிறப்பையும் நம் முன்னோர்கள் பெற்றதை நமது அறநூல்கள் உணர்த்துகின்றன.

 தன்வந்தரியை வழிபடுவோம்; ஆயுர்வேதத்தைப் போற்றி அதை வாழ்வியல் மருத்துவத்தில் கொள்வோம்.

**

HINDU CROSSWORD PUZZLE 23112024 (Post No.13,924)


Written by London Swaminathan

Post No. 13,924

Date uploaded in London – 23 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1 2  3  
      
 4     
      
 5     6
 7     
      
  8   
 9     
      

 HINDU CROSSWORD PUZZLE 23112024

ACROSS

All Sanskrit wordsused  here are known to most of the Indians because they are common words in many languages.

1.      ………….(Trachyspermum ammi[3] (/ˈædʒəwɒn/) —also known as  caraway, వాము (in Telugu),omam (in Tamil), thymol seeds, bishop’s weed, or carom—is an annual herb in the family Apiaceae..

4. Orderly in Sanskrit

7.Human, of Manu in Sanskrit

9. In Buddhism and Jainism, a perfected person (5 lettered word)

DOWN

2.      Old age in Sanskrit

3.      Short also the incarnation of Vishnu as a short boy.

5.to remember, recollect in Sanskrit

6.Holy or wind

8.Earth in Sanskrit

****

Solution

A 1J 2OV 3AN
 A A  
K 4RAMA 
 A A  
S 5  N P 6
M 7ANAVA
A    V
R B 8  A
A 9RHATN
N U  A

–subham—

Tags- Hindu, Crossword, 23112024

SUNDAY 24-11-2024 GNANAMAYAM BROADCAST FROM LONDON.

PLEASE WATCH ON FACEBOOK, YOU TUBE AND ZOOM AT ONE PM LONDON TIME AND 6-30 PM INDIAN TIME. THE BROADCAST IS ON EVERY SUNDAY.

SUNDAY EVENTS 24-11-2024

CHIEF GUEST- DR SHIB NARAYAN SEN, EDITOR, TRUTH MAGAZINE, KOLKATA.

TOPIC – MAYA (ILLUSION)

BENGALURU NAGARAJAN TALK ON ANNAI- THE MOTHER- OF PONDICHERRY

MRS BRAHAN NAYAKI  SATHYANARAYANANA ON THIRUVATHVUR TEMPLE

WORLD HINDU NEWS IN TAMIL BY VAISHNAVI ANAND FROM LONDON.

PLUS DEVOTIONAL SONGS.

JOIN US ON EVERY SUNDAY

—SUBHAM—

பாரதியார் , சங்கரர் , விவேகானந்தர் இளம் வயதில் மறைந்தது ஏன் ? (Post No.13,923)

Written by London Swaminathan

Post No. 13,923

Date uploaded in London – 23 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பெரியோர்கள் பலர் நாற்பது வயதுக்குள் உலகத்தைத் துறந்து சொர்க்கத்துக்குச் சென்று விடுகிறார்கள், சமாதி அடைகிறார்கள். இதற்கு என்ன காரணம்?  இதை ராமகிருஷ்ண பரமஹம்சர் விளக்கியிருக்கிறார் . ஆதி சங்கரர் , சுவாமி விவேகானந்தர்,  ஆண்டாள் , திருஞான சம்பந்தர், தமிழில் புகழ்பெற்ற புலவர் பாரதியார் ஆகிய அனைவரும் நாற்பது வயதுக்குள் உலகத்தினைத் துறந்துவிட்டனர் . ஆனால் மகத்தான காரியங்களை செய்துவிட்டு மறைந்தனர்; இன்றுவரை அவர்களை நாம் நினைவில் வைத்திருப்பதால் அவர்கள் என்றும் வாழ்கின்றனர். அதாவது சாகாவரம் பெற்றுவிட்டனர். 

பிரம்மத்தை அதாவது கடவுளை உணர்ந்தபின்னர், கடவுளைக் கண்ட பின்னர் ஞானிகள் கொஞ்சம் மாயை உடலில் ஒட்டிக்கொண்டிருப்பதால் உலகில் வாழ்கிறார்கள் . மாயையை முற்றிலும் துறந்து விட்டால் அவர்கள் இருபத்தோரு நாட்களுக்கு மட்டுமே உயிர்வாழ முடியும் என்கிறார் ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சர் (ரா.கி.ப).

இதை அவர் உபதேச மஞ்சரியில் விளக்கமாகக் காணலாம். ஆதி சங்கரரும் விவேக சூடாமணியில் இதை விளக்கமாக விளம்பி இருக்கிறார் .

பாரதியார் தன்னை சித்தர் என்று அறிவித்ததோடு சாகாமல் இருப்பேன் என்று பாடினார். அது உண்மையாகி விட்டது; தமிழ் மொழி வாழும் வரை அவரது பெயர் பூமியில் இருக்கும் . நமது தாய் மொழியான தமிழோ கன்னித் தமிழ் ; என்றும் இளமையுடன் வாழும் மொழி . ஆகையால் பாரதியார் சாகாமல் வாழ்வார். இதே போல ஏனையோர் வாழ்வினையும் காண்கையில் அவர்கள் தமது பணிகளை பூர்த்தி செய்த திருப்தியோடு சென்றனர். 

ரா கி ப தான் நிர்விகல்ப சமாதியில் ஆறு மாதம் இருந்த போதும் திரும்பி வந்தது எப்படி என்று விளக்கியிருக்கிறார். நிர்விகல்ப சமாதியில் சென்றோர் உயிருடன் திரும்பி வரமுடியாது. ஆனால் ஆசையை சிறிது வைத்துக் கொண்டால் திரும்பி வரலாம். இதற்கு ரா கி ப ஒரு கதையையும் சொல்கிறார்.

கடவுளைக் கண்டவர்கள் பேசுவதில்லை; இதனால்தான் கண்டவர் விண்டிலர் ;விண்டவர் கண்டிலர் என்று நாம் சொல்கிறோம் ஆயினும் ஒரு சிலர் பிரம் மானந்தக்  கடலைக் கண்டவுடன் அதில் குதிக்காமல் திரும்பி ஓடிவந்து கண்டோம்கண்டோம் கண்ணுக்கினியான கண்டோம் தொண்டீர் எல்லோரும் வாரீர் என்றும், சேர வாரும்  ஜெகத்தீரே என்றும் சொல்லி ஆடிப்பாடி அனைவரையும் அழைப்பார்கள். சிலர் பிரம்மானந்தக் கடலின் ஆழத்தைக் காண அதில் குதிப்பார்கள்; உப்பு பொம்மை கடலுக்குள் குதித்தது போல சில மீட்டர் உள்ளே போவதற்குள் கடலில் கரைந்து விடுவார்கள் .

மத்தைக்க்கு நானதைக்

பாரதி-அறுபத்தாறு

கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்;

…………………………….

அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார்,மடிந்திட்டார்,மண்ணாய் விட்டார்

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!

*****

நான்கு பேர் தோட்டத்தினைப் பார்த்த கதை 

ஓர் இடத்தைச் சுற்றி உயர்ந்த சுவர் எழுப்பப்பட்டிருந்தது . வெளியிலிருந்து ஜனங்களுக்கு அது எப்படிப்பட்ட இடமென்று தெரிந்துகொள்ள  வழியில்லை

ஒரு சமயம் ஏணியை வைத்து ஏறி உள்ளே என்ன இருக்கிறதென்பதைக் காண நான்கு பேர் முடிவு செய்தனர்

முதல் மனிதன் சுவரின் மேல் ஏறி நின்றதும் ஹா ஹா என்று சொல்லிக் கொண்டே மகிழ்ச்சியுடன் உள்ளே குதித்தான். இரண்டாவது , மூன்றாவது மனிதர்களுடன் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே உள்ளே குதித்தார்கள். நாலாவது மனிதன் கடைசியில் ஏறினான்; சுவரின் மேல் ஏறி நின்றதும் அவன் அற்புதமான பழங்கள் நிறைந்த தோட்டத்தினைக் கண்டான் .உள்ளே விழுந்து தோட்டத்திலுள்ள பழங்களை ருசி பார்க்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கும் பலமாக இருந்தது . அதை அடக்கிக்கொண்டு வேகமாக ஏணியின் வழியாகக் கீழே இறங்கி வந்து அந்த தோட்டத்தின் மஹிமை பற்றி எல்லோருக்கும் சொல்லி வாருங்கள் என்று அழைத்தான்.

இதில் பிரம்மம் என்பது அந்த பழம் நிறைந்த தோட்டத்தினைப் போன்றது  பிரம்மத்தைக் கண்டவன் தலை, கால் புரியாமல் அதில் விழுந்து மூழ்கிவிடுகிறான் இத்தகையோர் பரிசுத்தமான மஹான்கள் ஆவர். ஆனால் லோக சம்ரட்சகர்கள் யார் எனில் ஈஸ்வரனைக் கண்ட பின்னரும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொல்லிக்கொண்டு தான் மட்டும் மோட்சம் அடையாது மற்றவர்களுக்கும் உபதேசம் செகிறார்கள்; பிறவித்துன்பங்களை மீண்டும் மீண்டும் பிறந்து அனுபவிக்கிறார்கள்.

பிரம்மத்தைக் கண்டவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை ஆதி சங்கரரும் விவேக சூடாமணியில் பாடியிருக்கிறார்; விவேக சூடாமணி பற்றிய எனது ஆங்கிலக்கட்டுரையில் விவரங்கள் உள்ளன.

–subham—

Tags– பாரதியார் , சங்கரர் , விவேகானந்தர், இளம் வயதில், மறைந்தது ஏன், நிர்விகல்ப சமாதி, 21 நாள், ராமகிருஷ்ண பரமஹம்சர், நாலு பேர் , தோட்டம் , பல மரங்கள் , பிரம்மம்

ஶ்ரீ சத்யசாயிபாபா அருள் மொழிகள் (Post No.13,922)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.922

Date uploaded in London – –23 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஶ்ரீ சத்யசாயி பாபா அவதார தினம் : நவம்பர் 23, 1926

                                   சமாதி : 24-4-2011

ஶ்ரீ சத்யசாயிபாபா அருள் மொழிகள் 

ச.நாகராஜன்

ஶ்ரீ சத்யசாயிபாபாவின் ஜயந்தி தினமான இன்று (நவம்பர் 23ம் நாளன்று) அவரது அருள் மொழிகளில் சிலவற்றைப் பார்ப்போம். 

1)      தியானத்தில் வெற்றி

மனம் துணி போன்றது. அதற்கு எவ்வித சாயம் ஏற்றினாலும் அச்சாயத்தைத் துணி பெற்றிருக்கும். சாத்வீக மனம் வெள்ளை நிறம் கொண்டதாகும். ராஜஸீக குணத்தால் மனம் சிவப்பாகவும் தாமஸீக குணத்தால் கருப்பாகவும் மாறும். மனமென்பது வாசனைகள் நிறைந்த இடமே. அதனால் வாசனைகள் எந்த வகையில் உள்ளனவோ அதே விதத்தில் மனதும் அமையும்.

சிலர் பல வருடக் கணக்கில் தியான சாதனையைக் கடைப்பிடித்திருந்தாலும் தியான பலன் கிடைக்கவில்லை என்று எண்ணக் கூடும். அதற்கு பதில் அவர்கள் வாசனைகளை சரிவர விரட்டவில்லை என்பது தான்.

தியானத்தில் வெற்றி அடைய வேண்டுமானால் மன உறுதியுடன் இருக்க வேண்டும். மலின வாசனைகள் தலை தூக்கும்போது, சாதகன் இன்னும் தீவிரமாக ஜப தியானத்தில் இறங்கி தன் மனோ பலத்தினால் அதை வென்று விடவேண்டும்.

                             தியான வாஹினி பத்தாம் பாகம்

2. வீடு பேற்றை அடைய தேவையான இரண்டு

ஆகாயத்தில் உயரப் பறக்கும் பறவைக்கு இரு இறகுகள் தேவைப்படுகின்றன. கீழே உள்ள பூவுலகில் நடந்து முன்னேறும் மனிதனுக்கு இரு கால்கள் தேவைப்படுகின்றன. மோட்ச மாளிகையை அதாவது வீடு பேற்றை அடைய ஆவலுறும் சாதகனுக்கு பற்றின்மையும் விவேகவும் அதாவது உலக ஆசைகளை விடுவதற்குப் பற்றின்மையும் ஆத்மாவை அறிவதற்கு விவேகமும் தேவைப்படுகின்றன. ஒருகால் உள்ள பறவையால் ஆகாயத்தில் உயர எழும்ப இயலாது. இயலுமா? அதைப் போலவே பற்றின்மை அல்லது விவேகத்தை மட்டும் பெற்ற மனிதனால் பிரம்மம் என்னும் பரமாத்மாவை அடைய இயலாது. ‘எனது’ என்னும் உணர்வு மோகத்தால் ஏற்படும் பற்றுக்குள் தளைப்படுத்துகிறது. ஒருவன் ஒன்றை தனது என்று எத்தனை நாளைக்கு உரிமை கொண்டாட இயலும்? ஒரு நாள் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் விட்டு விட்டு தனிமையில் வெறு கையுடன் அவன் வெளியேறத்தான் வேண்டும். தப்பிக்கவே முடியாத தலைவிதி இது.

   சூத்ர வாஹினி – அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா

3. பார்ப்பதும்உணர்வதும் அடிப்படை உண்மையும்

நாம் ஒரு சுவரைப் பார்க்கிறோம். எவ்வாறு அதனை நாம் சுவர் என்று அழைக்கிறோம்? அது ஒரு தடுப்பாக இருப்பதனாலும், அதனூடே நாம் பார்க்கவும் போகவும் இயலாதிருப்பதனாலும் அதனை நாம் சுவர் என்று அழைக்கிறோம். அதாவது, அது ஒரு தடுப்பாகையால் அதைச் சுவர் என்று அழைக்கிறோம்.

ஆனால் அதனை நாம் ஒரு விஞ்ஞானியின் கண் கொண்டு பார்க்கும் போது அந்தச் சுவரை ஆக்கக்கூடிய அணுக்களுக்கிடையே ஏராளமான இடைவெளி இருப்பதைக் காணலாம். நம் வெற்றுக் கண்களால் பார்க்கும் போது அதனை நாம் சுவர் என்று அழைப்பினும், ஒரு விஞ்ஞானி அதனைப் பார்க்கும் போது – நாம் விண்வெளியில் பார்க்கும் விண்மீன்களுக்கிடையே  மிகுந்த இடைவெளியிருப்பது போலவே – அங்கும், அந்தச் சுவரிலும் ஏராளமான இடம் இருப்பதாகக் கூறுகிறான். இவ்வாறாக, விஞ்ஞானத்தின் உதவியைக் கொண்டு பல பொருள்களைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதற்கு நாம் முற்படுகிறோம். நாம் பார்ப்பது ஒன்றும், உணர்வது மற்றொன்றும், அடிப்படை உண்மை வேறொன்றுமாக உள்ளன. அடிப்படை உண்மையைக் கண்டு கொள்ள வேண்டி நாம் தீவிர முயற்சி செய்ய வேண்டும். அப்படிப்பட்ட அடிப்படை உண்மைகளைப் பறைசாற்றுவதற்காக நாம் மூன்று வழிகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

அவை உலக வழி, ஆன்மீக வழி, தார்மீக வழி முதலியன ஆகும். இன்று உலகத்திலுள்ள அனைத்து அநீதியையும் போக்குவதற்குப் பலர் முயற்சி செய்கின்றனர். ஆனால் அவர்கள் வெற்றி அடைவதில்லை. உண்மையைப் பரவச் செய்து, இந்த அநீதியை ஒழிக்கும்படியாக நீங்கள் ஓர் உறுதியான முயற்சி செய்ய வேண்டும். நம் கண்களால் முற்போக்காகக் காணும் அனைத்தையும் நாம் அடிப்படை உண்மை என்று நினைக்கிறோம். ஆனால், அது அப்படியன்று; நாம் பார்ப்பதன் பின்னால் உண்மை மறைந்து இருக்கிறது.

    நீலகிரியில் நிமல கருத்துரைகள், கருத்துரை 16

(1976ம் வருடம் மே மாதம் நீலகிரியில் கோடை வகுப்புகளில் பாபா ஆற்றிய உரை)

***

Hindu Crossword Puzzle 22112024 (Post No.13,921)

Written by London Swaminathan

Post No. 13,921

Date uploaded in London – 22 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 1 2  3  4
        
    5   
 6       
     7  8 
  9    10  

ACROSS

1.Skanda or Kartikeya’s name; he was born in that pond.

5. Dancer or actor in Sanskrit (root of Natyam, Nataka)

6. Revati’s father; Balarama’s wife; also name of a mountain

7. Flavour, Sentiment, Emotion; Hindus divided it into nine types.

9.Cave in Sanskrit. Vali entered it and Sugreeva blocked it by mistake.

DOWN

1.Planet Venus in Sanskrit

2.Moon’s favourites star in the 27 – star system. Sangam Tamils married on this star day according to Akanauru.

3.Rama’s monkey brigade. Literal translation Forest +Man

4.Indumathi’s husband in Solar dynasty. Dasaratha’s father.

8.(Go up) ………. Chit Ananda (first word)

10. (Go up)  A sanyasi’s or ascetic’s living place.

SOLUTION

S 1AR 2AV 3ANA 4
U O A  J
K H N5ATA
R 6AIVATA 
A N R 7AS 8A
 B 9ILAM 10  

—subham—

Tags- Hindu Crossword, 22112024