தமிழ்  சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்:  பொறாமை-2 (Post No.13,648)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,648

Date uploaded in London – 9 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

இந்தியாவின் இரு பெரும் இதிஹாசங்கள் பொறாமையால் உருவானவை ஆகும்.

திருதராஷ்டிரன் -துரியோதனன் பொறாமையால் உருவானது மஹாபாரதம்;

கைகேயியின் பொறாமையால் உருவானது ராமாயணம்

பொறாமை அல்லது அழுக்காறு அல்லது மாத்சர்யம் அல்லது தொல்காப்பியர் பாஷையில் நிம்பிரி பற்றி ஷேக்ஸ்பியர் மற்றும் தமிழ் சம்ஸ்க்ருதப் புலவர்கள் உரைப்பதை ஒப்பிட்டுப் பார்ப்போம் .

பொறாமை பற்றி ஒரு அதிசய விஷயம் தொல்காப்பியர் ‘நிம்பிரி’ என்னும் சொல்லை பயன்படுத்துகிறார். இது ஸம்ஸ்க்ருதத்திலும் இல்லை; தமிழிலும் வேறு எங்கும் இல்லை!

வள்ளுவன் ஒருவன்தான் பொறாமை பற்றி பத்துக் குறள்கள் பாடி முதலிடம் பிடித்தான் என்று நினைத்தேன். ஆனால் அவனுக்கும் முன்னதாக, அதர்வண வேதப் புலவன் பாடிவிட்டான்.

அதர்வண வேதம்; காண்டம் 6; துதி 18; சூக்தம் 191

தலைப்பு – பொறாமை ; ஈர்ஷ்யா விநாசனம்

1.பொறாமை எண்ணம் முதலில் வந்தவுடனே, அதற்கான மூலத்தை, பொறாமையினால் ஏற்படும் வயிற்று  எரிச்சலை — இருதயக் கனலை – அணைக்கிறோம்

2.பொறாமை மனம் படைத்தவனின் மனது மென்மையாகட்டும் ; பூமிக்கு உணர்ச்சி இல்லை; செத்துப்போனவனை விட உணர்ச்சியற்றது பூமி. அது போல பொறாமை மனது மிருது ஆகட்டும் .

3.உனது பொறாமை என்னும் சூடான காற்று /எரிச்சல், தோல் பையிலிருந்து வெளியேறும் காற்றுப்போல வெளியே செல்லட்டும்- அதர்வண வேதம்

XXXX

அழுக்காறாமை என்னும் அதிகாரத்தில் மேலும் இரண்டு சுவையான விஷயங்களைச் சொன்ன பிறகு அதர்வண  வேதத்துக்குள் நுழைவோம்.

வள்ளுவன் அதி மேதாவி; சம்ஸ்க்ருத மொழியைக் கரைத்துக்குடித்தவன். அதி தீவிர ஹிந்து. ஆகையால் இங்கே ‘பாவி’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் (செய்யவள்/லக்ஷ்மி அக்காள்) மூதேவியையும் குறிப்பிடுகிறான்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும் – குறள் 168

பொறாமை என்னும் கொடிய பாவி செல்வத்தை அழிக்கும்; தீய வழியில் செலுத்தும்.

****

இன்னும் கொஞ்சம் அழகாகச் சொல்கிறான்:

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (170)

பொறாமை உடையோர் உயர்ந்ததும் இல்லை;பொறமை இல்லாதோர் சிறுமை அடைந்ததும் இல்லை.

 பத்து குறட்பாக்களில் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறான்.

‘’அவ்வியம் பேசேல்’’ என்று அவ்வையாரும் இயம்புவார்.

****

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும் – குறள் எண் 167

பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டிவிட்டு விலகி விடுவாள்.

****

ஷேக்ஸ்பியர் ஒதெல்லோ நாடகத்தில் இது பற்றி விரிவாகக் கதைக்கிறார்.

ஆங்கிலத்தில் பொறாமைக்கு ஒரு கலரும் ஒதுக்கியுள்ளார்கள். பச்சை என்பது அழுக்காறு envious or jealous என்பதைக் குறிக்கும்.

Green eyed jealousy

Merchant of Venice 3-2-110

****

O, beware, my lord, of jealousy; It is the green-ey’d monster, which doth mock The meat it feeds on.

William Shakespeare

‘Othello’ act 3, sc. 3, l. 165

****

I am a true laborer: I earn that I eat, get that I wear, owe no man hate, envy no man’s happiness, glad of other men’s good, content with my harm.

William Shakespeare

‘As You Like It’ (1599) act 3, sc. 2, l. [78]

நான் ஒரு உண் மை உழைப்பாளி; நான் சம்பாதிப்பதை வைத்து உண்ணுகிறேன் ; உடுக்கிறேன் யாரையும் கண்டு பொறாமைப்படுவதில்லை மற்றவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுகிறேன் ; பரம திருப்தி — ஆஸ் யூ லைக் இட் நாடகம்

****

The venom clamours of a jealous woman poison more deadly than a mad dog’s tooth.

வெறிபிடித்த நாயின் விஷப் பல்லை விட பொறாமை பிடித்த பெண்ணின் விஷமானது ஆளைக் கொன்றுவிடும் – ஷேக்ஸ்பியர் கவிதை

William Shakespeare (1833). “The plays and poems of William Shakespeare”, p.294

****

How many fond fools serve mad jealousy?
The Comedy of Errors (2.1)

பொறாமை பைத்தியத்துக்கு எத்தனை முட்டாக்கள் சேவகம் செய்கிறார்கள்?

****

When envy breeds unkind division

There comes the ruin, thee begins confusion

Henry VI 4-1-193

கருணையற்ற பிளவுகளை பொறாமை  உண்டாக்குகையில்

அங்கே படு நாசமும் வரும்; குழப்பமும் கூத்தாடும் –

ஹென்றி Vi நாடகம்

****

Jealous souls will not be answered so:

They are not ever Jealous for the cause

But Jealous for they are Jealous. It is a monster

Begot upon itself, born on itself

‘Othello’  act 3, sc. 4, l59


பொறாமைப் பேர்வழிகளுக்கு விளக்கமே இல்லை;

அதற்கு காரணம் என்பதே தேவை இல்லை;

பொறாமை என்பது தானாகவே உதிக்கிறது;

பசப்புக்கு காரணம் கற்பிப்பர்; அந்த பூதம்

தாமாகவே தோன்றி தாமாகவே வளர்கிறது

அதாவது ஒதெல்லோவின் பொறாமைக்கு அதுவே தீனி போடும்.

(துரியோதணனை ஒப்பிட்டுப் பார்க்கலாம் )

இதே போல வால்மீகி ராமாயணத்தில் உள்ள பொறாமை பற்றி ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரி நீண்ட உரை ஆற்றி இருக்கிறார் .

****

Lust or desire for sensual pleasure – काम – Kama காமம்

Anger – क्रोध – Krodha கோபம்

Greed – लोभ – Lobha பேராசை

Attachment – मोह – Moha அதிகப்பற்று

Ego – मद – Mada அஹங்காரம்

Envy or Jealousy – मत्सर्य – Matsarya பொறாமை

இந்து மதத்தில் ஆறு தீய குணங்களின் பட்டியலில் பொறாமையும் ஒன்று ; இது மனிதனை மிருகம் ஆக்குவதோடு இறைவனை நாடாமல் தடுத்துவிடும்.

–subham—

My old article with two stories on Envy

எனக்கு ஒரு கண் போனாலும் போகட்டும்

Tamil and Vedas

https://tamilandvedas.com › என…

·Translate this page

5 Sept 2015 — பொருள்:பொறாமை உடையார்க்கு அழிவினைத் தருவதற்கு வேறு எதிரியே தேவை இல்லை. அவன் கொண்டுள்ள பொறாமையே அந்த ஆளை அழித்துவிடும். தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘எனக்கு ஒரு கண் போனாலும் சரி, எதிரிக்கு இரண்டு கண்களும் போகட்டும்‘ என்று.

–subham—

Tags- தமிழ்  சம்ஸ்க்ருத நூல்களில், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள் , பொறாமை- 2, அவ்வியம், அழுக்காறு, ராமாயணம், மகா பாரதம், ‘எனக்கு ஒரு கண் போனாலும் , அதர்வண வேதம்

Leave a comment

Leave a comment