இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
வ
519.பிள்ளைகள் வயிற்று நோய்க்கு
வசம்பைச் சுட்டுக் கரியாக்கி முலைப்பாலில் இளைத்து நாவில் தடவினால் பிள்ளைகள் வயிற்று நோய் தீரும்.
xxxx
புண்களுக்கு
வல்லாரை இலையைப் பிடுங்கி வந்து பச்சையாகவே நன்றாய் அரைத்து அதை ஈரத்துடன் புண்களின்மேல் வைத்துக் கட்டினால் 2,3 கட்டுகளில் ஆறிப்போகும் .
xxxx
கண்டமாலை- நாள்பட்ட மேகவியாதி -உடம்பு முழுதும் புண் இதுகட்கு
வல்லாரை இலையை வேண்டிய மட்டில் பிடுங்கி வந்து கரணைகளைத் தள்ளி இலையை மாத்திரம் குருக அரிந்து ஒரு பயின்மேல் பரப்பி நிழலில் உலர்த்தி வைத்து முற்றும் நன்றாய் உலர்ந்த பிறகுஇடித்து துணியில் வடிகட்டி வஸ்திரகாயம் செய்து புது கலயத்தில் போட்டு மூடிவைத்துக்கொள்ள வேண்டும் . 5 கிரையன் முதல் 8 கிரையன் வரை கொஞ்சம் வென்னீரிலாவது பசும்பாலிலாவது கலந்து கொடுக்கவும். இப்படி ஒரு தினத்திற்கு மூன்று வேளை கொடுக்கவும். இப்படிக்கொடுத்து வரும்போது மேற்படி பொடியை புண்கள் பேரிலும் தூவிக்கொண்டு வரலாம். இப்படி ஒரே முறையாய் சில வாரங்கள் கொடுத்துவந்தால் வியாதிக்காரன் பல துன்பமும் நீங்கி விசேஷ சுகமடைவான். ஒரு சமயம் உடம்பில் சொரியாவது நமையாவது கானுமாகில் மருந்தை நிறுத்தி ஒரு பேதிக்கு கொடுத்து அதன் பிறகு ஒருவாரம் பொறுத்து மறுபடியும் மருந்து கொடுத்துவரவும். இப்படியே தொடர்ந்து கொடுத்துவந்தால் குறிப்பான குணத்தைக்காணலாம் . இச்சூரணம் செய்யும்போது வெய்யிலில் சூடுகாட்டி உணர்த்தினால் மூலிகையின் சத்து போய்விடும். . ஆகையால் நிழலில் உலர்த்தி சூரணிக்க வேண்டும்.
xxxx
காணாக்கடி சொறி
வன்னி மரத்தின் சமூலத்தைப் பாலில் அரைத்துக் கலக்கியுண்டுவந்தால் வாதம் ஜன்னி தோஷம் காணாக்கடி விஷம் கபம் சொறி இவை தீரும்.
வராகி மூலமென்ற நிலப்பனை கிழங்கை சூரணித்து காய்ச்சிய பாலில் பிரயோகித்து உண்டுவந்தால் விந்து கட்டும் தாது உண்டாகும் ஆண்மை அதிகரிக்கும் தேகம் இருகும் .
xxxx
பல் வலிக்கு
வராகி மூலமென்ற நிலப்பனைக் கிழங்கை குப்பைமேனி சாற்றா ல் அரைத்து நல்லெண்ணெயில் கலக்கிக் காய்ச்சி பல் நோய்க்கு அந்தந்த பாகங்களில் துளித்துளியாய் விட்டால் பல் வலி தீரும் புழுக்கள் சாகும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-6-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது
அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 2
ச. நாகராஜன்
கடை அமைப்பு
சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள கடை அமைப்பு இது: (சான்பிரான்ஸிஸ்கோவில் அடிக்கடி வால்மார்ட் கடைக்குச் செல்வது இந்த கட்டுரை ஆசிரியரின் வழக்கம்)
மிக பிரம்மாண்டமான கடைக்குள் செக்யூரிட்டியைத் தாண்டி உள்ளே செல்லும் போதே தனக்கு வேண்டிய ட்ராலியை எடுத்துக் கொண்டு உள்ளே செல்லலாம். வெவ்வேறு பொருள்கள் அதற்குரிய அடையாள போர்டுடன் மிகச் சிறப்பான முறையில் வாடிக்கையாளர் தானே எடுத்துக்கொள்ளும்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
மளிகைப் பொருள்கள், பால், தயிர், வெண்ணெய் வகை பொருள்கள், கறிகாய்கள், பழங்கள், இறைச்சி வகைகள், எலக்ட்ரிக் சாதனங்கள், கணினிகள் மற்றும் அதன் உதவி சாதனங்கள், போன் வகைகள் என அங்கு இல்லாத பொருள்களே இல்லை என்று சொல்லும் அளவில் அனைத்தும் கிடைக்கும்.
அவற்றை எடுத்துக் கொண்டு பில் போடும் கவுண்டரில் பணத்தைக் கொடுத்து வெளியே பில்லுடன் வரலாம்.
ஒரு பொருளுக்கும் பில் போடாமல் வெளியே வர முடியாது. பில் போடாமல் வரும் பொருளுக்கு, செக்யூரிட்டிக்கு ‘க்விங் க்விங்’ எச்சரிக்கை ஒலியை அது தரும்.
வால்மார்ட் கடைக்குப் போவதில் அனவருக்கும் உள்ள ஒரு கஷ்டம் என்னவென்றால் அங்கு கார் பார்க்கிங்கிற்கு இடம் கிடைக்காது. ஆகவே வரிசையாக நின்று ஒரு கார் போனவுடன் அந்த இடத்தை உடனடியாக “பிடிக்க” வேண்டும்.
ஒரு பொருளை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்றால் அதை அங்கே பில்லை எடுத்துக் கொண்டு சென்று காண்பித்து மாற்றிக் கொள்ளலாம்.
குடும்பம்
1943 பிப்ரவரி 14-ம் நாளன்று வாலண்டைன் தினத்தில் ஹெலன் ராப்ஸன் என்பவரை வால்டன் மணந்தார். அப்போது அவர் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இராணுவப் பணி காலத்தில் மட்டும் அவர் இரண்டு இடங்களில் 16 இடங்களுக்கு மாறி மாறிச் செல்ல வேண்டியிருந்தது. கடைசி பணிக்களமாக அவருக்கு அமைந்தது சால்ட் லேக் சிடி ஆகும். அங்குள்ள நூலகத்திற்கு தினமும் மாலை வேளையில் சென்று சில்லறை வணிகம் சம்பந்தமான அனைத்துப் புத்தகங்களையும் படித்து முடித்தார்.
அவருக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் உண்டு.
வால்டன் தம்பதியினருக்கு சேவை மனப்பான்மை அதிகம். ஆகவே நல்ல காரியங்களுக்கு அவர்கள் தாராளமாக நன்கொடை வழங்க ஆரம்பித்தனர்.
மறைவு
ல்யூகேமியா வியாதியால் பாதிக்கப்பட்ட வால்டன் 1992-ல் ஏப்ரல் மாதம் 5-ம் நாள் தனது 74-ம் வயதில் மறைந்தார். ஒரு வகையான ரத்தப் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு அவர் இறந்த போது வால்மார்ட்டின் முப்பதாவது ஆண்டு விழாவிற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்தன.
மருத்துவ மனையில் இருந்த போதும் கூட படுக்கையில் இருந்தவாறே அவர் தனது விற்பனைத் தரவை மதிப்பீடு செய்து கொண்டிருந்தார்.
அவரது மறைவு உடனடியாக சாடலைட் மூலமாக அனைத்து வால்மார்ட் கடைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
அவர் மறையும் போது வால்மார்ட்டில் வேலை பார்த்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சம். மொத்த வால்மார்ட் கடைகளின் எண்ணிக்கை 1960. அப்போது வருடாந்திர விற்பனை 5000 கோடி டாலரைத் தாண்டி இருந்தது. (ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ 83.34). அவரது 1735 கடைகள், 212 சாம் கிளப்புகள் மற்றும் 13 சூப்பர் சென்டரில் வேலை பார்த்தோர் மட்டுமின்றி உலகமே அவரது மறைவிற்காக வருந்தியது.
அவரது அஸ்தி பெண்டோன்வில்லி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடைமைகள் அவரது மனைவிக்கும் மகன்கள் மற்றும் மகளுக்கும் உரிமை ஆயின.
விருதுகளும் பெற்ற சிறப்புகளும்
1998-ல் டைம்ஸ் பத்திரிகை அறிவித்த 20-ம் நூற்றாண்டில் தலை சிறந்த செல்வாக்கு பெற்றவர்களின் பட்டியலில் வால்டனும் இடம் பெற்றிருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்-ஷிடமிருந்து ‘பிரஸிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ விருதை அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் பெற்றார்.
இது மட்டுமல்ல 1982 முதல் 1988 முடிய அமரிக்காவின் பணக்காரர்களில் முதல் இடத்தை அவர் வகித்திருந்தார்.
வால்மார்ட் அமெரிக்காவில் மட்டுமின்றி 15 வெளிநாடுகளிலும் கடைகளைக் கொண்டிருக்கிறது.
1970-ம் ஆண்டு பங்குச் சந்தையில் தனது பங்குகளை வால்மார்ட் அறிமுகப்படுதியது. அப்போது பங்குகளை பத்தாயிரம் டாலருக்கு வாங்கியோர் இன்று இரண்டாயிரம் லட்சம் டாலராக அது ஆகி இருப்பதைக் கண்டு மலைக்கின்றனர்; சந்தோஷப்படுகின்றனர். அது மட்டுமல்ல டிவிடெண்டாக அவர்களுக்கு நிறைய கிடைத்திருக்கிறது. (இப்போது வருடத்திற்கு 466000 டாலர்கள் என்ற அளவில் உள்ளது)
வால்டனின் கொள்கையும் விதியும்
அவர் தனக்கென வகுத்துக் கொண்ட விதிகளும் கொள்கைகளும் தனி இடம் பெறுபவை.
அவற்றில் முக்கியமானவை சில:
“உங்கள் வாடிக்கையாளர்களை நன்கு அறிந்து கொள்ளுங்கள். குறிப்பாக அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் வகிக்கும் பங்கை நன்கு உணர்ந்து செயலாற்றுங்கள்.”
“நீங்கள் விற்கும் பொருள்களைப் பற்றி நன்கு அறிவதோடு அதை யார் விநியோகிக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு யார் போட்டியாக இருக்கிறார்கள் என்பதை நன்கு அறியுங்கள்.”
“உங்களிடம் வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளரையும் நன்கு மதிப்பதோடு அவர்களுக்கு உரிய பணத்தை சரியாக வழங்குங்கள்.”
“சரியான பொருளை சரியான விலையில் சரியான சமயத்தில் சரியான இடத்தில், சரியான அளவில் விற்பனை செய்யுங்கள். அவர்கள் தரும் பணத்திற்கு உரிய அவர்கள் விரும்பும் பொருள்களை வழங்குங்கள்”
உலகில் வணிகத்தில் வெற்றி பெற விரும்புவோருக்கு வால்டன் கூறும் அன்புரை இது:
சாதாரணமாக எளிய உழைக்கும் வர்க்கத்தில் உள்ள யாருக்கும் சரியான வாய்ப்பு கொடுத்து ஊக்குவிக்கப்பட்டு அவர்கள் செயலுக்கு உரிய ஊக்கப்பரிசும் கொடுக்கப்பட்டால் அவர்கள் முன்னேறுவதற்கு ஒரு எல்லைக்கோடு என்பதே கிடையாது.
கடுமையான உழைப்பு, புதிய உத்திகள், வாடிக்கையாளர் திருப்தி ஆகிய இவையே வால்மார்ட் சங்கிலித் தொடர் கடைகளின் வெற்றிக்குக் காரணம் என்பதில் ஐயமில்லை!
Let us continue with Adi Shankara’s (aadi Sankara) commentary on VS and compare it with the Tamil Veda Tirukkural.
Sumukhah- Word Number in the Vishnu Sahasranama (VS)-456
One who with a pleasant face.
(This is the name of Ganapathy and a mysterious king mentioned in Manu smriti). Or He who, as Rama (raama), bore a pleasant and contented face even when exiled to the forest.
Valmiki Ramayana says,2-19-32
na ca asya mahatiim lakShmiim raajya naasho apakarShati | loka kaantasya kaantatvam shiita rashmer iva kShapaa || 2-19-32
As Rama was a pleasing personality, he was loved by all the people. The loss of kingdom could not diminish such a great splendour of Rama as a night cannot diminish the splendour of the moon.
BG 9.18: I am the Supreme Goal of all living beings, and I am also their Sustainer, Master, Witness, Abode, Shelter, and Friend. I am the Origin, End, and Resting Place of creation; I am the Repository and Eternal Seed.
“ஆசாரக்கோவை நூல் சொல்லும் பயன்படும் ஆரோக்கிய குறிப்புகள்” (Post No.13,300) ஜூன் மூன்றாம் தேதி வெளியானது. இது இரண்டாவது பகுதி
ஆசாரக்கோவை நூல் சொல்லும் மேலும் சிலஆரோக்கிய குறிப்புகளைக் காண்போம்
ஆசாரக்கோவை பாடல்கள்
பாடல் 46 : இல்லம் பொலியச் செய்வன
காட்டுக் களைந்து கலங்கழீஇ இல்லத்தை
ஆப்பிநீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரகம் நிறைய மலரணிந்து
இல்லம் பொலிய அடுப்பிலுள் தீப்பெய்க
நல்ல துறல்வேண்டு வார்.
‘பொருள் :
நல்ல செல்வத்தை அடைய விரும்புபவர், அதிகாலையில் எழுந்து, பாத்திரங்களைக் கழுவி, வீட்டைப் பெருக்கி (பசுஞ்சாணம் தெளித்துத்) தூய்மை செய்து, குடங்களில் நீர் நிறைத்து, மலரணிந்து, இல்லம் விளங்கும்படி அடுப்பில் தீ மூட்டுதல் வேண்டும்.
என் கருத்து
இந்தப்பாடலை உற்று நோக்குவோம் உடலில் சுத்தம் தேவை ; பின்னர் நாம் வாழும் இடம் தூய்மையாக இருக்கவேண்டும் . அதுமட்டுமல்ல நாம் பயன்படுத்தும் பொருட்கள் சுத்தமாக இருக்கவேண்டும் . இது எல்லாவாற்றிற்கும் மேலாக பாசிட்டிவ் வைப்ஸ் positive vibrations இருக்கவேண்டும். ஆகையால் பெண்கள் மலரணிந்து வலம் வருவதோ சமையல் செய்வதோ அவர்களின் சுத்தத்தை அறிவித்து இந்த இடத்தில் நல்லெண்ண உணர்வுகளைப் பரப்பும் .
உலகத்தில் எந்தப்பிராணியின் மலமும் துர் நாற்றத்தை வீசும்; கிருமிகளைப் பரப்பும். ஆனால் பசுமாட்டின் சாணிக்கும் மூத்திரத்துக்கும் கிருமிகளைக் கொல்லும் தன்மை இருக்கிறது. அடுப்பு மற்றும் சமயல் அறையை மெழுகவும் வாசலைச் சுத்தப்படுத்தவும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாட்டுச் சாணத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
xxxx
பாடல் 57 : ஆரோக்கியம் வேண்டுவோர் செய்யக்கூடாது
பாழ்மனையும், தேவ குலனும், சுடுகாடும்,
ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்,
தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்;
நோயின்மை வேண்டு பவர்.
பொருள் :
நோயின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவர் பாழடைந்த வீடு, கோயில், சுடுகாடு, ஊரில்லாத இடத்தில் தனியே இருக்கும் முதுமரம், ஆகிய இடங்களுக்கு தான் மட்டும் தனியே போக மாட்டார். பகலில் உறங்க மாட்டார்.
XXXXX
பாடல் 10 : குளிக்க வேண்டிய பொழுதுகள்
தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலோடு இணைவிழைச்சு கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும் ஐயுறா தாடுக நீர்.
பொருள் :
சந்தேகமின்றி உடனே நீராட வேண்டிய 10 பொழுதுகள் :
இறைவழிபாடு செய்வதற்கு முன்னரும், கெட்ட கனவு கண்டபின்னரும், அசுத்தப்பட்டபொழுதும், வாந்தியெடுத்த பொழுதும், மயிர்களைந்தபின்னரும், உணவுண்ணும் முன்னரும், மாலையில் தூங்கிய பின்னரும், ஆண்-பெண் சேர்க்கைக்கு பின்னரும், தூய்மையற்றவரை தொட்டபின்னரும், மலஜலம் கழித்த பின்னரும் அவசியம் குளிக்கவேண்டும்.
என் கருத்து
இதில் பெரும்பாலோருக்கு ஒப்புதல் இருக்கும். முடி வெட்டுதல் வாந்தி எடுத்தல், அசுத்தமானோரைத் தொடுதல் ஆகியன என்ன கெடுதல்களை உண்டாகும் என்பது கோவிட் என்ற சீன வைரஸ் நோய் உலகம் முழுதும் பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்று குவித்த பின்னர்தான் நமக்குப் புரிந்தது
xxxxx
பாடல் 12 : தவிர்க்க வேண்டிய சில
தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்,
பிறருடுத்த மாசணியும் தீண்டார், செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து.
பொருள் :
தலையில் தேய்த்த எண்ணெயை வழித்து மற்ற உறுப்புகளில் தேய்க்கக் கூடாது. பிறர் உடுத்திய அழுக்கு ஆடைகளை தொடக்கூடாது. அவசரமான செயல் என்றாலும் பிறருடைய காலணிகளை அணிந்துசெல்லுதல் கூடாது.
என் கருத்து
இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் தூசி, புழுதி அதிகம் இருக்கும். தலையில் எண்ணைப் பசை இருப்பதால் அதிக அழுக்கு சேர்ந்து ஒட்டிக்கொள்ளும். எல்லோரும் தினமும் தலை முழுகுவ தும் இல்லை. அந்த சூழ்நிலையில் தலையிலுள்ள எண்ணை உடலில் பட்டால் என்ன நிகழும் என்பது எல்லோரும் அறியக்கூடியதே. இந்தக் காலத்தில் பெண்களுக்கு மட்டும் நீண்ட கூந்தல் உளது; பாடலை எழுதிய காலத்தில் ஆண்களும் நீண்ட சடைகளுடன் இருந்தனர். நிலத்தில் உழும் விவசாயி முதல் கோவிலில் பூஜிக்கும் அர்ச்சகர் வரை எல்லோருக்கும் நீண்ட முடி இருந்தது. கோவிட் நோய் பரவியது முதல் இப்போது செருப்பு, பிறர் துணியினை யாரும் தொடுவதற்கு அஞ்சுவர்.
–subham—
Tags —ஆசாரக்கோவை பாடல்கள், ஆரோக்கிய குறிப்புகள்-2,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-6-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது
அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 1
ச. நாகராஜன்
அமெரிக்காவில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து அன்றாட வாழ்க்கையை நடத்தவே முடியாமல் தவியாய்த் தவித்த ஒருவர் பிரம்மாண்டமான கடைகளை நிறுவி நான்கு லட்சம் பேரை தன்னிடம் வேலைக்கு அமர்த்திய ஒரு அதிசய மனிதராக மாறினார், அவர் யார் தெரியுமா?
அவர் தான் வால்மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்!
பிறப்பும் இளமையும்
ஓக்லஹாமாவில், கிங்ஃபிஷரில் ஆண்டு 1918ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி தாமஸ் கிப்ஸன் வால்டன் என்பவருக்கும் நான்ஸி லீக்கும் சாமுவேல் மூர் வால்டன் மகனாகப் பிறந்தார். விவசாயத்தில் ஈடுபட்ட தந்தைக்கு வருமானம் சரியாக இல்லை. 1923-ல் ஒரு இன்ஶூரன்ஸ் கம்பெனியில் சேர்ந்த அவர் தனது தொழிலைக் கைவிட்டு விட்டு ஒவ்வொரு ஊராகச் செல்ல ஆரம்பித்தார். அப்போது அமெரிக்காவில் ‘க்ரேட் டெப்ரஷன்” என்று அனைவராலும் அறியப்படும் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.
சாப்பிடவே வழியில்லை. குடும்பம் தவித்தது. அன்றாடச் செலவுக்கு பணம் வேண்டுமே! வால்டன் பசுமாட்டின் பாலைக் கறக்க ஆரம்பித்தார்.
கறந்த பாலை வாடிக்கையாளர்களுக்கு ‘டோர்- டெலிவரி’ செய்தார். அன்றாடம் பேப்பர் வாங்குபவர்களுக்கு நாளிதழ்களைக் கொண்டு சென்று கொடுத்தார். எந்த வேலை கிடைத்தாலும் அதைச் செய்ய ஆரம்பித்தார். ஒரு வழியாய் குடும்பச் செலவை சமாளித்தார்.
1929 முதல் 1939 முடிய இந்தப் பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவைப் பெரிதும் பாதித்தது!
ஊர் ஊராகச் சென்ற குடும்பம் இப்போது கொலம்பியாவில் செட்டில் ஆனது. கொலம்பியாவில் தனது படிப்பை முடித்தார் வால்டன். பள்ளியில் , “பல்துறை திறமை வாய்ந்த பையன்” என்று அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்த வால்டன் மிஸௌரி பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். படிப்புச் செலவிற்கு பல்வேறு சிறு சிறு வேலைகளைச் செய்யலானார். டேபிள்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்து பதிலாக உணவைப் பெற்றுக் கொண்டார்.
1940-ல் கல்லூரியில் தேறிய அவரை அனைவரும் நிரந்தர வகுப்புத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அந்த அளவுக்கு அவர் அனைவரிடமும் நல்ல பெயரை எடுத்தார்.
கடை ஆரம்பிக்கும் எண்ணம்
மாதம் 75 டாலர் சம்பளத்திற்கு ஒரு நிர்வாகப் பயிற்சி பெறும் பயிற்சியாளராக அவர் ஐயோவா நகரில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலக மகாயுத்தம் வரவே 1942இல் இராணுவத்தில் சேர்ந்தார்.
அப்போது தான் அவருக்கு ஒரு கடை ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது!
1945இல் இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் தனது மாமனாரிடமிருந்து 20000 டாலரைப் பெற்றார். தனது சேமிப்பாக இருந்த 5000 டாலரையும் சேர்த்து ஒரு கடையை அர்கான்ஸாஸில் நியூபோர்ட் என்ற இடத்தில் வாங்கினார். 26-ம் வயதில் அவர் ஆரம்பித்த முதல் கடை இது!
தனது வியாபாரத்தில் புதுப்புது உத்திகளைத் தொடர்ந்து அவர் புகுத்திக் கொண்டே இருந்தார். கடைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தார்.
அனைத்துப் பொருள்களும் அவர் கடையில் எப்போதும் இருக்கும்! விலை மிகவும் சரியாக இருக்கும்! வாடிக்கையாளர்களை வரவேற்று திருப்திப்படுத்தி அவர் அனுப்புவார்.
இதனால் மூன்றே ஆண்டுகளில் அவரது விற்பனை 80000 டாலரிலிருந்து 2,25,000 டாலராக ஆனது.
தனது கடையை அவருக்கு லீஸுக்குக் கொடுத்திருந்த பெரும் செல்வந்தரான ஹோம்ஸ் வால்டனின் வெற்றியைப் பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்தார் .லீஸை புதுப்பிக்க மறுத்தார். இது வால்டனுக்கு வணிகத்தில் முதல் பாடமாக அமைந்தது. தானே ஒரு சொந்தக் கடையை பெண்டன்வில்லி என்ற இடத்தில் ஆரம்பித்தார்.
ஏராளமான போட்டிகளைச் சமாளிக்க வேண்டி இருந்தது. ஆகவே கடையின் மீது கவனம் செலுத்துவதே அவரது 24 மணி நேர வேலையாக ஆனது.
முதல் வால்மார்ட் கடை
1962, ஜூலை மாதம் இரண்டாம் நாள் அர்கான்ஸாஸில் ரோஜர்ஸ் என்னுமிடத்தில் முதல் வால்மார்ட் கடை அதே பெயருடன் தொடங்கப்பட்டது. ஒரே இடத்தில் அனைத்துப் பொருள்களையும் எந்த வாடிக்கையாளரும் பெற வேண்டும் என்ற கொள்கையுடன் அனைத்துப் பொருள்களையும் அவர் கடையில் அற்புதமான அடுக்கி வைக்கும் முறையைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்தார்.
ஒவ்வொரு சிறு சிறு நகரத்திலும் கடைகளைத் திறக்க ஆரம்பித்தார்.
கடைகளில் பொருள்கள் தீரத் தீர உடனடியாக அதை நிரப்ப நிறைய சேமிப்புக் கிடங்குகளையும் அவர் தொடங்கினார். விலையில் சிறப்புத் தள்ளுபடி முறையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
1977-ல் 190 கடைகள் இருந்தன. அதுவே 1985-ல் 800-ஆக வளர்ந்தது.
இந்த வெற்றியைப் பார்த்த அனைவரும் இதை ‘வால்மார்ட்- எஃபெக்ட்”
(“வால்மார்ட் விளைவு”) என்று கூற ஆரம்பித்தனர்.
ஆறு லட்சம் என்ற பெரும் எண்ணிக்கையில் விற்பனையை அமெரிக்காவில் மட்டும் வால்மார்ட் செய்கிறது. ஒவ்வொரு விற்பனையையும் வாடிக்கையாளர் திருப்தியுறும் வகையில் அது மிக்க மரியாதையுடனும் மதிப்புடனும் செய்கிறது.
இந்த ஆத்மாவை, ஒருவன் காண்தே , வியப்பானது ; இதைப்பற்றி ஒருவன் சொல்லுவதும் ,ஆச்சர்யமானதே ஆச்சர்யமாக எவனோ ஒருவன் கேட்கிறான், கேட்கினும், ஆயினும் இதனை அறிவான் எவனுமிலன்.”
ஆதிசங்கரர் எழுதிய விவேக சூடாமணியிலும் இதை வலியுறுத்துகிறார்
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; அதிலும் ஆண்மகனாகப் பிறத்தல் அரிது;
அதிலும் பிரம்மத்தையே நாடும் பிராமணனாகப் பிறத்தல் அரிது;
அதிலும் வேதம் சொல்லும் தர்மத்தைப் பின்பற்றுதல் அரிது;
அந்த தர்மத்தைப் புரிந்துகொண்டு ஆத்மா எது அதற்குப் புறம்பானது எது என்ற விவேகத்தை அடைவது அரிது.
தியானம் செய்து சொந்த அனுபவத்தினால் பிரம்மா நிலையை அடைந்து முக்தியை அடைவது என்பது
நூறு கோடி ஜன்மத்தில் அடைந்த புண்ணியத்தால் மட்டுமே கிடைக்கக்கூடியது.
XXXXX
சநாத் – நாமத்தின் எண் 896
அநாதியான கால ரூபியாக இருப்பவர் . விஷ்ணு புராணம் 1-2-15 சொல்கிறது,
பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் புருஷஹ பிரமம் த்விஜ
வ்யக்தாவ்யக்தே தாதிவானியே ரூபே காலஸ்ததா பரம்
விஷ்ணு புராணம் – 1-2-15
பொருள்
புண்யவான்களே ! பரம்பொருளின் முதல் தோற்றம் புருஷன் ; பின்னர் அது விவேகமானது விவே கமற்றது என்று பிரிந்தது .மஹாதத்வம் முதலியன இவற்றின் வே றுபாடுகளே ; காலம் என்பதும் அவன் தோற்றுவித்ததே .
காலம் என்பது நம்முடைய நாலாவது பரிமாணம்; அது இல்லாமல் எதையும் பிரித்துப் பேசமுடியாது என்பதை சமீப காலத்தில்தான் ஐன்ஸ்ட்டின் சொன்னார்.அதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்களுக்கு அது தெரியும்.
XXXX
பணஹ — நாமத்தின் எண் 958
பண என்றால் வணிக பரிமாற்றம் .
தைத்ரீய ஆரண்யகம் தரும் ஸ்லோகம் 1-2-7; புருஷ சூக்தத்திலும் உளது
சர்வாணி ரூபாணி விசித்ய தீரஹ
நாமானி க்ருத்வா அபிவதன் யதாஸ்தே –
எல்லா புண்ணிய கர்மங்களையும் பணமாக ஏற்றுக்கொண்டு அவற்றைச் செய்தற்கு உரிய பலனைத் தருபவர்
எல்லாவற்றையும் சிந்தித்த இறைவன் அவைகளுக்குப் பெயர் சூட்டினான்.அதே பெயர்களால் அவை அழைக்கப்டுகின்றன
என் கருத்து
பணம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல் வணிக என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுடன் தொடர்புடையது (ப= வ இடமாற்றம்)
ஆங்கிலத்திலுள்ள மணி (பணம்) என்ற சொல்லும் ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து வந்ததே (ப-ம, ப-வ இடமாற்றம் மொழியியலில் உண்டு)
xxxx
ஸமஹ – நாமத்தின் எண் 581
அனைத்தையும் அடக்குபவர் அல்லது அடக்கத்தை உபதேசிப்பவர் .
யதீநாம் ப்ரஸமோ தர்மோ நியமோ வன வாஸினாம்
தானமேவ க்ருஹஸ்தானாம் ஸுஸ்ருஷா பிரம்மசாரினாம்
பொருள்
சன்யாசிகளுக்கு தர்மம் (கடைபிடிக்கவேண்டிய குணம்)- மன அடக்கம்;
வானப்ரஸ்தம் கடைப்பிடிப்போருக்கு தர்மம் தவம்;
இல்லறத்தாருக்கு தர்மம் தான தர்மம் செய்வதாகும்;
பிரம்மசாரிகளுக்கு தர்மம் பணிவிடை செய்வதே என்று ஸ்ம்ருதி (சட்ட நூல்) சொல்கிறது.
xxxx
விஷ்ணு – 657
எங்கும் வியாபித்து இருப்பவர்
மஹாபாரதம் சாந்தி பர்வம் 350-40-49 சொல்வதாவது,
வியாப்ய மே ரோதசி பார்த்த காந்திர் அப்யதிகா ஸ்திதா
க்ரமனாத் வ்யாபியஹம் பார்த்த விஷ்ணு இதி அபிசம்ஞிதஹ
பொருள்
குந்தீ புத்திரனே ! என்னுடைய ஒளி ஆகாயத்தையும் பூமியையும் வியாபித்து இருப்பதனாலும் என்னுடைய பாதத்தினால் உலகத்தை ஆக்ரமிப்பதனாலும் நான் விஷ்ணுவென்று அழைக்கப்படுகிறேன்.
(விஷ்ணு என்பது சங்கத் தமிழ் இலக்கியத்தில் விண்ணன் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ;
விண்ணந்தாயன் = விஷ்ணு தாசன்; கண்ணந்தாயன் = கண்ணதாசன் )
To be continued……………………………….
Tags-விஷ்ணு சஹஸ்ரநாம ,அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், Part-2, விஷ்ணு
One who takes beings over to the other shore of the ocean of Samsaara.
This is a typical Hindu phrase- crossing the ocean of the Cycle of Birth and Death (Samsara).
Jains and Buddhists and Sikhs also follow this tenet.
Jains use the word Tirthankara for their saints or Gurus.
The word tirthankara signifies the founder of a tirtha, a fordable passage across saṃsāra, the sea of interminable birth and death.
Tiruvalluvar, author of Tamil Veda Tirukkural used the exact wrds of Adi Shankara. Here it is:
None can swim the great sea of births but those who are united to the feet of God.
This is in all Hindu Bhajan songs.
Piravip Perungatal Neendhuvar Neendhaar
Iraivan Adiseraathaar- Kural couplet 10
குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
This is in all Hindu Bhajan songs. Only Hindus call this birth and death a disease. Because of this doctrine
Rudram in Yajur Veda, V.S. part of Mahabharata called God as Bishak/Doctor and the medicine He gives as Besajam.
Adi Shankara (aadi) also mentioned it in his famous hymn Bhaja Govindam :
“Being born again, dying again, and again lying in the mother’s womb; this samsara is extremely difficult to cross over. Save me, O destroyer of Mura, through your infinite compassion.”
One who helps Jiivas to go across the ocean of Samsara. Or it signifies Pranava (Om) with which the deity is one.
xxx
Niyantaa- Word No.864
One who appoints everyone to his respective duties.
When a country elects its Prime Minister or President that person only appoints ministers to different departments knowing their capacity and knowledge. God also gives us what we deserve.
In Hindu literature, in Sanskrit and Tamil, the king is celebrated as God . In fact the word God and his Palace are interchangeable.
Tiru Valluvar also considered the King as God. It is evident in several Kurals. He even talks about miracles in the land of a just king. About allocating duties Valluvar says,
“Having examined and decided that this job could be competently done, with these means
By this person, he may be left free to do it on his own.”
குறள் 517:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.- Kural 517
To be continued……………………………………….
tags- Tamil Veda ,Tirukkural, Vishnu Sahasranama, part -2 , Samsara, ocean, crossing, Punarapi Jananam, allocation of duty, Valluvar
திருமூலர் பெரிய விஞ்ஞானிதான். திருமந்திரத்தில் நிறைய பூதக்கண்ணாடி /லென்ஸ்(MAGNIFYING GLASS) சூரியகாந்தக் கல்,கண்ணாடி/MIRROR பாடல்கள் வருகின்றன. இதிலிருந்து தமிழ்நாட்டில் பல வீடுகளில் முகம் பார்க்கும் கண்ணாடி, லென்ஸ்/ LENS முதலியன இருந்தது தெரிகிறது. . சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆண்டாளும் திருப்பாவையில் தட்டொளி என்று முகம் பார்க்கும் கண்ணாடியை வருணிக்கிறார்.
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய் செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய் செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் உக்கமும் தட்டொளியும்MIRRORதந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீர் ஆட்டுஏலோர் எம்பாவாய்–திருப்பாவை
XXXX
இனி திருமந்திரப் பாடல்களைக் காண்போம்
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.–திருமந்திரப் பாடல்
117: At His Glance, Impurities Vanish
The sunstone sleeps in cotton enclosed,
The sunstone burns not the fragile stuff;
Let but the sun’s rays fall! How it shrivels and flames!
Even so the impure wilts before the Lord’s cathartic glance.
சூரியன் எனும் கதிரவனின் கதிர் ஒளியை ஏற்று வெளியிடும் கல் சூரிய காந்தக் கல். இக்கல் தான் ஈர்க்கும் கதிரொளியை வெளிப்படுத்தி எதிரே உள்ள பொருளை எரிக்கும் ஆற்றல் உடையது. கதிரவன் இதன் முன்னே இல்லாவிட்டால் தானாகவே இக்கல் எதனையும் சுட்டெரிக்க இயலாது. கதிரவன் இல்லாவிட்டால் தன்னைச் சுற்றியுள்ள பஞ்சு போன்ற எளிய பொருளையும் இதனால் சுட இயலாது. இதற்குச் சுடும் ஆற்றலை வழங்குவது கதிரவனே. சூரியனும் பஞ்சு போன்ற எளிய பொருளையும் நேரடியாகச் சுட்டு எரிக்காது.சூரிய காந்தக் கல் அக்கதிரவனின் ஒளியை உள்வாங்கி ஒருமுகப் படுத்தவே அச்சூரிய காந்தக் கல்லின் வழியாகச் சூரியன் பஞ்சினை எரிக்க இயலுகின்றது. இது போன்றே உயிர்களையும் அவற்றைப் பற்றியுள்ள அழுக்குகளான ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் இறைவனையும் திருமூலர் உருவகப் படுத்துகின்றார்.
பசுக்கள் எனப்படும் உயிர்களைச் சூரிய காந்தக் கல்லுக்கும் உயிர்களைப் பற்றியுள்ள அழுக்குகளான ஆணவம், கன்மம், மாயை என்பனவற்றைப் பஞ்சிற்கும் சூரியனை இறைவனுக்கும் ஒப்புமை காட்டுகின்றார்
xxxx
ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே.
Hara Stands Revealed to Truly Learned To them that search the Holy Books, Hara stands revealed; Out of the sublimed Fire, sparks of pure knowledge fly; Those who, thus, the Samadhi’s Moon can reach, To them it’ll be a ladder leading to Wisdom high.
அகத்தே ஆராய்வார்க்கு அரனாகிய சிவபெருமான் அங்கு அப்பொழுதே வெளிப்பட்டருள்வன். அது கதிர்க்கல்லானது (சூரிய காந்தக்கல்)கதிரோன் முன்னிலையில் அக்கதிரை வெளியில் வரச் செய்யும் தன்மையினை யொக்கும். திங்கள் (இளமதி) புருவநடுவிற் காணப்படும் மதிமண்டலமாகும். அம்மண்டலத்தை அங்கண் நின்று கூடற்குரிய பயிற்சி வல்லார்க்கு அந்த மனமே மேலே செல்வதற்குரிய ஏணி ஆகும்.
xxxx
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கிற்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.
603: Look Within in Dhyana Well may they practise Yoga eight-thousand year Still they see not Lord, Sweet as ambrosia And dear unto apple of eye; But if within you seek Him enlightened He within you is, Even unto reflection in the mirror.
8000 ஆண்டுகள் தவம் இருந்தாலும் கண்ணுள் மணியும், அம் மணியுணர் அமிழ்தும் போன்ற சிவபெருமானைக் கண்டறியவொண்ணாது. அகத்தே நாடி அருள் ஒளிபெற்று நோக்கினால் சிவபெருமான் தோன்றுவான். கண்ணாடியைப் பார்க்குங்கால் நாம், நம்மையும் கண்ணை யும் காணலாம் . அதுபோல் ஆருயிர் பேருயிராகிய சிவபெருமானைக் காணும் வாயிலாகவே தன்னையும் காணும். எண்ணாயிரத்தாண்டு என்பது யோக உ றுப்புகள் எட்டினைக் குறிக்கும் .
கண்ணாடிபோல – கண்ணாடியில் தோன்றும் பாவைபோல (ஆடிப்பாவை – நிழலுரு) நெஞ்சத்தில் சிவனை நினைந்தால் சிவன் விளங்குவன்.
ஞாயிற்றின் கதிர்கண்டு அக் கதிரொளியை ஏற்று வெளிப்படுத்துங் கல் சூரியகாந்தக் கல், திங்களின் ககிரையேற்றுக் குளிர்நீரை வெளிப்படுத்துங் கல் சந்திரகாத்தக் எல் எனவும் அறிவோம்., தீயினைக் காண அதன் சதிரை வெளிப்படுத்துங் கல் தீக் கல் எனவும் அறிவோம்.,. இக் கல்லைச் சக்கிமுக்கிக் கல் என்பர், கதிர் கண்டவுடன் கதிர்க்கல் கனலைக் கக்கும் மதி கண்ட வுடன் நிலாக் கல் குளிர்ச்சியைக் கக்கும். தீத்தட்டுங் கருவியாகிய சதியினைக்கொண்ட சக்கி.சாக்கி என்னும் தீக்கல் தீயினைக் கக்கும். மழுவாகிய தீயினை இடத்திருக்கையில் கொண்டருளிய சிவபெருமானை அருள் துணையால் அவன் இயற்கை எழில்வடிவில் காணலாம்.
And nothing they do for the fruits of Karma to drop;
The temptations of the backyard drain, they go after.
இறைவன் அருளால்தான் உண்மையான குருவைப் பெற இயலும். நம்முடைய மனப்பக்குவமே இறைவனுடைய அருளுக்கு எடுத்துக்காட்டாகும். நமது மனமானது மாயையாகிய கண்ணாடி போன்றது. பக்குவம் பெறாதபோது அந்தக் கண்ணாடியானது ஆணவ மலத்தால் பொருள்களைப் பெரிதாகக் காட்டி நம்மை ஏமாற்றும் வஞ்சனை கண்ணாடியாக உள்ளது. கல்வி, கேள்வி இவற்றால் நமது அறிவை வளர்த்துக்கொண்டு இந்த வஞ்சனையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும். பக்குவ உள்ளங்கள் இதை உணர்ந்து கொள்ளும். பக்குவமில்லாத உள்ளங்கள் பிறர் விளக்கிச் சொன்னாலும் இதை ஏற்றுக்கொள்ளா. அந்த நிலையில் உண்மைக் குரு இவர்களுடைய வாழ்வில் திருவடி எடுத்து வைக்க மாட்டார். இவர்கள் இன்னும் வினைப்பயனை அனுபவிக்க வேண்டி உள்ளது.
xxx
உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஓதுங்கிய
விண்நாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில்
கண்நாடி காணும் கருத்ததுஎன் றானே
God is Inward Where the Five Sense Controlled Meet
If you ask,
How the Heavenly Space within the cranium is,
Where the inward looking Five abide,
Verily it is,
Unto gazing upward into a mirror
(Seeing the self-reflected in crystal purity)
At a junction
Where the Five, in control, meet.
ஐம்புலன்களும் உள்நோக்கி சிந்திக்கும்போது,உச்சிவரை செல்லும்.அவ்வாறு நாடும் இடம் அருள்வெளி எனப்படும்.அதை அண்ணாந்து பார்த்தால் மனம் கடந்த ஆனந்த நிலை தோன்றும். அப்பொழுது ஆன்மா, தூய கண்ணாடியில் பார்ப்பது போலத் தெரியும்.
xxxx
2944. பூதக்கண் ணாடியிற் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனன்றே.
He is Seen in the Mind-Mirror
He appears not in the glasses of the fleshly eye;
He is in the Lotus of the Heart;
He appears in the glass of Vedic Jnana;
He is in the mind-glass of the righteous that think of Him,
Him I saw in the glass of songs
Listening to that Divine Music,
I enraptured stand.
சிவனை நாம் பார்க்கும் கண்ணாடியில் உருப்பெருக்கி காண முடியாது. மனக் கண்ணாடியில் காணலாம்.ஞானம் என்னும் வேதக் கண்ணாடியிலும் , அவனை உள்ளத்தே உருகி நாடும் மனக் கண்ணாடியிலும், தத்துவஞானம். என்னும் நீதிக்கண்ணாடியிலும் , இசையால் துதிபாடும் கீதக் கண்ணாடியிலும் , இருதயத் தாமரையிலும் காணலாம்..
பூதக்கண்ணாடி – தூலக்கண் ,
வேதக்கண்ணாடி – ஞானக்கண்.
நீதிக்கண்ணாடி – தத்துவஞானம்.
கீதக்கண்ணாடி – இசை.
–subham—
Tags- பூதக் கண்ணாடி , முகம் பார்க்கும், கண்ணாடி, மாய , திருமந்திரத்தில் லென்ஸூம் கண்ணாடியும், ஆராய்ச்சிக் கட்டுரை- 20
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
29-5-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
விண்ணில் பறந்த முதல் பெண்மணி – வாலண்டினா தெரஷ்கோவா! – 2
ச .நாகராஜன்
விண்வெளிப் பயணத்திற்குப் பின்!
விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பி வந்த முதல் விண்வெளி வீராங்கனைக்கு யாரும் எதிர்பார்க்காத அளவு உலகம் வரவேற்பு கொடுத்தது.
முக்கியமாக பெண்மணிகள் ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி ஆனந்தமாகக் கொண்டாடினர்.
ஏராளமான இசைத் தட்டுகள் வெளியாகின. உலகெங்கிலுமிருந்து அவருக்கு பாராட்டுச் செய்திகள் மலையெனக் குவிந்தன.
டெல்லியில், “பெண்களின் அடிமைத் தளையை உடைக்கப் பிறந்த பெண்மணி” என்று அவர் கொண்டாடப்பட்டார்.
குடும்பம்
வாலண்டினா 1963-ம் வருடம் நவம்பர் மாதம் 3-ம் தேதி ஆண்ட்ரியன் நிலோலயெவ் என்பவரை மணந்தார். திருமணத்திற்கு ரஷிய அதிபர் நிகிதா குருஷேவ் தலைமை தாங்கினார். 1964, ஜூன் எட்டாம் தேதி எலினா என்ற பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். ஆண்ட்ரியனும் விண்வெளி வீரர் என்பதால் விண்வெளி தம்பதிகளுக்குப் பிறந்த முதல் குழந்தை என்ற பெருமையை இந்தக் குழந்தை பெற்றது.
1977-ல் திருமண உறவு ஒரு முடிவுக்கு வர 1982இல் ஆண்ட்ரியனை விவாகரத்து செய்தார் வாலண்டினா. தனது கணவரைப் பற்றி விவாகரத்து ஆனதற்குப் பின்னர் ஒரே ஒரு முறை தான் அவர் விமரிசனம் செய்து கூறினார் இப்படி : “வேலையில் அவர் தங்கம்; வீட்டில் அவர் சர்வாதிகாரி!”
பின்னர் யூலி ஷபோஷ்னிகோவ் என்பவரை மணந்தார். 1999-ல் யூலி மறைந்தார்.
அரசியல் பிரவேசம்
1966-ல் அவர் அரசியல்வாதியாக ஆனார். சோவியத் பெண்கள் கமிட்டிக்குத் தலைவராக ஆணார். ரஷிய சுப்ரீம் கவுன்சிலுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது உடை அணியும் பாணியும், அவர் அணிந்து கொள்ளும் உடைகளும் அனைத்துப் பெண்மணிகளையும் கவர்ந்தன. உலகெங்கும் அவர் செல்ல வேண்டி இருந்ததால் ஆங்காங்குள்ள பெண்மணிகள் ஆடைகள் பற்றி அவரிடம் டிப்ஸ் கேட்டு வாங்கி மகிழ்ந்தனர்.’
அறக்கட்டளை
1966-ல் அவர் உலக அமைதிக் குழுவில் ஒரு உறுப்பினராக ஆனார்.
தொடர்ந்து பல முக்கிய பொறுப்புகள் அவருக்கு வந்தன; கூடவே ஏராளமான விருதுகளும் வந்து குவிந்தன.
2015-லிருந்து அறக்கட்டளைப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். பென்ஷன் பெறும் வயது வரம்பை உயர்த்த அவர் 2018-ல் பாடுபட்டார்.
அரசியல்சட்டத் திருத்தம்
2020-ல் ரஷிய ஜனாதிபதி தேர்வு சம்பந்தமாக ரஷிய அரசியல் சட்டத்தில் சில மாறுதல்களை அவர் கொண்டுவர பரிந்துரை செய்தார். இது ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் இறுதியில் அது நிறைவேறியது. 85 வயதிலும் கூட ரஷிய சட்ட மாமன்றமான ‘டுமா’வில் (DUMA) அவர் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
ரஷிய அதிபர் புடினின் பாராட்டு
வாலண்டினாவும் ரஷிய அதிபர் புடினும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு பாராட்டுபவர்கள். வாலண்டினா மீது பெரும் மதிப்பு கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் 2017-ல் வாலண்டினாவின் பிறந்த நாள் அன்று, “ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல, வாலண்டினா, “ நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். நன்றி” என்று பதில் கூறினார்.
புடின், “நமது தந்தையர் நாட்டிற்கு நீங்கள் ஆற்றிய பணி மிகவும் மகத்தானது. நீங்கள் எப்படி நம் நாட்டை நேசுக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று நீண்ட பாராட்டைத் தெரிவித்தார். அத்தோடு ரஷிய உயரிய விருதான ‘ஆர்டர் ஃபார் ஸர்வீசஸ் டு தி ஃபாதர்லேண்ட்’- ஐ அவருக்கு அளித்தார்.
வாலண்டினாவின் செய்தி
வாலண்டினா தனது விண்வெளி அனுபவத்தின் மூலமாக உலக மக்களுக்கு ஏராளமான செய்திகளைத் தந்துள்ளார்.
“விண்வெளிக்குச் சென்று ஒருவர் சிறிது நேரம் கழித்தால் கூடப் போதும் அவர் விண்வெளியை ஆயுள் முழுவதும் நேசிப்பார். வானம் பற்றிய எனது இளமைக் கால கனவை நான் சாதித்து விட்டேன்”
“விண்வெளிக்கு நீங்கள் சென்று விட்டீர்கள் என்றால் பூமி எவ்வளவு சிறியது, சுலபமாக நொறுங்கக் கூடியது என்பதை அறிவீர்கள்”
“பெண்கள் ரஷியாவில் ரயில் தண்டவாளம் அமைப்பதில் பணி செய்கிறார்கள் என்றால், அவர்கள் ஏன் விண்வெளிக்குச் செல்லக் கூடாது?” என்று கேட்டார் அவர்.
பெண்களுக்கு அவர் கூறும் முக்கிய செய்தி இது:
ஒரு பெண்ணானவள் என்றுமே பெண்ணாகவே இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவள் நான். பெண்மையைப் போற்றும் எதுவும் அவளுக்கு அந்நியமாக இருக்கக் கூடாது. அதே சமயம் விஞ்ஞானத்திலோ, பண்பாட்டுத்துறையிலோ எதில் அவள் ஈடுபட்டிருந்தாலும் சரி எவ்வளவு கடுமையாக, தீவிரமாக அதில் அவள் உழைத்தாலும் சரி,, அது அவளது புராதனமான பழம்பெரும் ஆச்சரியகரமான உயரிய குறிக்கோளான “அன்பு பாராட்டு; அன்பைக் கொள் – என்ற அவளது தாய்மைக்காக ஏங்கும் ஆனந்தத்திற்கு முரணாக அமைந்து விடக் கூடாது.
பெண்மையைப் போற்றி உலகப் பெண்மணிகளுக்கு ‘வானளவு’ நம்பிக்கையைத் தந்த வாலண்டினா ‘விண்ணளந்த வீராங்கனை’ என்ற சிறப்புப் பெயருக்கு உரியவர் தானே!
Tirukkural in Tamil with 1330 couplets(Kural) was written by great Tamil poet Tiruvalluvar 1500 years ago. The poets who sung in praise of Tirukkural say it is equal to Vedas. It is very true like the Four Vedas, all that is said by Valluvar is accepted by the Hindus.
When one reads the commentary of Aadi Shankaraa on Vishnu Sahasranama (VS), one would find amazing similarities.
My research in the VS found out the following similarities:
Ksaminaam Varah- Word No. in the VS 919
The greatest among the patient ones, because He is more patient than all Yogis noted for patience; and also because He is most noted among those who patiently bear the weight of the earth and all heavenly bodies.
Vaalmiiki says about Raama ‘ksamayaa Prithvi samah– He is equal to earth in the matter of patience.
Or though He bears all the three worlds, He does not feel their heaviness like the earth. As He is thus superior to the in the quality of patience , He is called the greatest among the patient beings. Or the word Ksamii can mean the strong one. As the Lord is omnipotent and is capable of doing everything He is called by that epithet.
xxx
All Hindu scriptures compare Earth with Patience. And Tiru Valluvar is a great Hindu, he also used the simile.
Here is the relevant Kural/Couplet:
Just like the earth which supports the men who dig it
Men of virtue bear with thse who heap scorn on them-Kural 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.- 151
A patient man is compared to the Goddess Earth.
Robert Browning’s line
Good to forgive, best to forgive conveys the same idea.
xxx
Bhuumi Suuktam (Hymn to Mother Earth) in the Atharva Veda says,
I call to earth, the purifier
The patient earth growing strong through spiritual might
May we recline on thee O Earth
Who bearest power, plenty, our share of food and molten butter- Suukta 29
xxx
Kalidasa (kaalidaasa) also in his Raghuvamsa Kavya says,
That king puNDarIka whose bow was never ineffectual made his son kshema-dhanva, who was fully endowed with forgiveness and was ever on the alert about the welfare of the subjects accept the sovereignty of the earth; and being himself capable of great endurance puNDarIka undertook ascesis after retiring into the forest. [18-9]
Here earth is used for patience.
18-9. amogha-dhanvA saH= of unfailing bow, he that king puNDarIka; prajA kShema vidhAna dakSham= one who is ever on the alert about the welfare of the subjects; kShamayA upapannam= one who is endowed with forgiveness; kShema-dhanvAnam putram= kShema-dhanva named, son; kShmAm lambhayitvA= earth – kingdom, causing to take care of it; kShAm tataraH = being himself capable of great endurance; vane tapaH cacAra= in forest, ascesis, he undertook.
We find such comparisons throughout Sanskrit and Tamil literature.